Monday, August 24, 2020

GUNJAN SAXENA THE GARGIL GIRL ( HINDI ) 2020 - சினிமா விமர்சனம் ( நெட் ஃபிளிக்ஸ் ரிலீஸ் )

Janhvi Kapoor's Gunjan Saxena gets a release date- Cinema express

 

சின்னவயசுல  ஒவ்வொருவருக்கும்  தான்  என்னவா ஆகனும்? அல்லது  ஆகப்போறோம் என்பதில் ஒரு லட்சியம் இருக்கும், ஆனா பாதிப்பேருக்கும் மேல  நினைச்ச  வாழ்க்கையை  அடையறதை   விட அமைஞ்ச  வாழ்க்கையை  ஏத்துக்கிட்டு  நமக்குக்கொடுத்து  வெச்சது  அவ்வளவு தான் , அடுத்த   ஜென்மத்துலயாவது நாம  நினைச்சபடி  வாழனும்  அப்டினு நினைப்பாங்க , ஆனா வாழ்க்கை  என்பது  ஒரு வரம் , இந்த  ஜென்மத்துலயே  நாம நினைச்சபடி  ஒரு வாழ்க்கையை  வாழனும்னு  மன உறுதியோடு  இலக்கை அடைபவர்கள்  ரொம்பக்கம்மிதான் . அப்படி  தன் இலக்கை  அடைந்து  இந்தியாவுக்கே பெருமை  சேர்த்த  ஒரு பெண்ணின் கதை   இது  

 

 சின்ன வயசுலயே  விமான  ஓட்டியாக  / பைலட் ஆக ஆகனும்னு  நாயகிக்கு ஆசை. ஆனா  அப்பா மட்டும்  தான்  அதுக்கு  ஆதரவு , அம்மா, அண்ணன்  இருவரும்  எதிர்ப்பு . டென்த் ல  ஸ்கூல்  ஃபர்ஸ்ட் ஆக  வந்ததுமே  பைலட்  வேலைக்கு  படிக்க  ஆசைபப்டறா. ஆனா  அதுவரை  10 வது படிச்சா  போதும்  பைலட்  வேலைக்கு  என்று இருந்த  விதி +2  முடிக்கனும்னு புது  ரூல்  கொண்டு  வருது , சரின்னு  +2  முடிச்ட்டு  போனா  இனி டிகிரி/டிப்ளமோ  இருக்கனும்னு மறுபடியும்  புது  ரூல் . சரினு  அதையும்  முடிச்ட்டு  ட்ரெய்னிங்  போனா  எல்லா  டெஸ்ட்ல யும்  பாஸ்  ஆகி  மெடிக்கல்  டெஸ்ட் ல  ரிஜெக்ட்  ஆகுது  பொண்ணு

 

உயரத்துல 1  செமீ  கம்மி, எடைல   6  கிலோ அதிகம். மனசை  தளர விட்ட  நாயகியை  அப்பா  ஜாகிங் , டயட், எக்சசைஸ்னு  வார்ம்  அப் பண்ணி  எடை   7 கிலோ  குறைக்க  வைக்கறார், எடைல  ஓக்கே ,  ஆனா  உயரத்துல  1  செமீ  குறையை  எப்படி  சரி செய்தார்? அது  சஸ்பென்ஸ்

 

இப்போ  அண்ணனு,ம்  ஏர் ஃபோர்ஸ் ல , தங்கையும்  ஏர்  ஃபோர்ஸ்ல  பைலட்.

இதுக்குப்பின்  அவர்  துறை ரீதியா  சில  பிரச்சனைகளை  சந்திக்கிறார். ஆணாதிக்கம்  நிறைந்த  இந்த  சமூகத்தில் எப்படி  எல்லாத்தையும்  தாண்டி  அவர்  ஜெயிச்சார்  என்பது  மிச்ச்ச  மீதி திரைக்கதை   

 

நாயகியா  ஸ்ரீ தேவியின்  மகள்  நடித்திருப்பதால்  படம்  முக்கியத்துவம் பெறுது. கிளாமரின்  அடையாளமாக  காட்டப்பட்ட  நபரின்  மகள்  முதல்  படத்துலயே நல்ல  கேரக்டர்  கிடைத்திருப்பது  அதிர்ஷடமான  விஷயம்  , என்னா  முத  படத்துல  எந்த  மாதிரி  ரோல் பண்றோம்கறது  சினி  ஃபோல்டுல   ரொம்ப முக்கியம்

 

அழகு , தோற்றம்  இரண்டிலும்  அவர் பாஸ்  தான் என்றாலும்  அம்மாவுடன் ஒப்பீடு செய்வதை  தவிர்க்க  முடியாது . முதல்  படம்  என்ற  அளவில்  ஓக்கே ரகம் , இவரது  கேரக்டர்  ஸ்கெட்ச்  அவர்  மேல்  பரிதாபம்  வரும்படி  அமைக்கப்பட்டது  அவருக்கு  ஒரு பிளஸ்

 

 படத்தில்  குறிப்பிட்டுச்சொல்லி ஆக   வேண்டிய  ஒரு முக்கியமான   ரோல் அவரது அப்பா ரோல் . அம்மா   ரோல் ஏனோ தானோ என  நடித்திருக்க  அப்பா ரோல்  பிரமாதமாக  வசிவமைக்கப்பட்டிருபப்து  மகிழ்ச்சி , பொதுவாவே  மகள்  என்றால் அப்பாவுக்கு   செல்லம்  தான்  என்பதால்  அப்பா – மகள்  பாண்டிங்  பிரமாதமாக  ஒர்க் அவுட் ஆகி இருக்கு

 

 இசை , ஒளிப்பதிவு , எடிட்டிங்  போன்ற  டெக்னிக்  அம்சங்கள்  ஓக்கே ரகம்

 

 சபாஷ்  டைரக்டர்

 

1        தன்  பைலட்  ஆசையை  யாருமே  வரவேற்காத  போது அப்பா மட்டும்  ஆதரவாக இருப்பது கண்டு  ஆனந்தக்கண்ணீர் விடும்  மகள்  ஒவ்வொரு முறை  தன் பணீயில் நிகழும்  ஏற்றத்தாழ்வுகளை  அப்பாவிட,ம்  ஃபோன் பண்ணி  பகிரும் இடங்கள்  செண்ட்டிமெண்ட்  டச்

2  பைலட்  ஆக  நாயகி  போகும்போது  அவர்  உடன் பணி  செய்ய  வேண்டிய ஆள்  வேண்டும் என்றே  ஏதோ  ஒரு காரனம் சொல்லி  தவிர்ப்பதும்  அதற்கு அவர்  மேலதிகாரி  உதவி செய்வதும்   ஆணாதிக்க  அம்சங்களின் வார்ப்புகளை  கச்சித,மாக  படம்  பிடித்துக்காட்டியது

 

2        எந்த  ஆஃபீசர்  நாயகியை  மட்டம்  தட்டினாரோ  அவரையே  போர் அபாயத்தில்  உயிரைக்காப்பாற்றி அழைத்து  வருவதும்  அவர்  தவ்றை  உணர்ந்து  கண்ணீருடன் நன்றி  சொல்வதும்  க்ளிஷேவாக  இருந்தாலும்  உருக்கம்

 நச்  டயலாக்ஸ்

 

1        என்  வயசுப்பொண்ணுங்க கூடப்படிக்கற  பசங்களோட  பறந்து  போக ஆசைப்பட்டப்போ  நான் விமானியா  பறக்க  ஆசைபப்டுவது  தப்பா?

2        ஆசைப்படுவதை  வெளில  சொல்லிடனும், மப்னசுக்குள்ளேயே  வெச்சிருந்தா  வாழ்க்கை  பூரா  கஷ்டப்பட  வேண்டியதுதான்

3        நாங்க  எல்லாம்  படிக்கனும்னு ஆசைப்பட்டப்போ  பேரண்ட்ஸ்  கிட்டே  பணம்  இல்லை, ஆனா  இப்போ எந்ங்க கிட்டே  பணம்  இருக்கு, ஆனா  நீ  படிக்க  மாட்டேங்கறே

4        நீங்க  சொன்னதை  அவ  புரிஞ்சுக்கிட்டாளா?

 இல்லை, ஆனா  அவளை  நான்  புரிஞ்சுக்கிட்டேன்

 

5        தன்னம்பிக்கையோட  முயற்சி  செய்யறவங்களை  வெற்றி  தேவதை  கை விடறதில்லை

6     நம்மால  முடியலையேனு வீட்டில் உக்காந்து  கண்ணீர்  சிந்துவதை  விட  களத்தில்  இறங்கி   வியர்வை  சிந்துவது   நல்லது

 

7        துரோகத்துக்கு எதிர்  பதம்  நேர்மை . நேர்மையா  இருக்கறவங்களால  யாருக்கும்  எதுக்கும் துரோகம் செஞ்சுட முடியாது  

8         வாழ்க்கைல ஜெயிக்கனும்னு நினைக்கறவங்க  கூண்டுல  அடைபட்டுக்கிடந்தா  முடியாது . கூண்டை  உடைச்ட்டு  வானில் சிறடிச்சுப்பறக்கனும்

9  எனக்கு  பைலட்  ஆகத்தான்  ஆசையே  தவிர  நாட்டுப்பற்றெல்லாம் இல்லை ,  ஏர்  ஃபோர்ஸ்  மூலம்   பைலட்  ஆனா  அது  நான் நாட்டுக்குச்செய்யற  துரோகம் இல்லையா?

 

9        கண்ணீர்  சிந்தறவங்களுக்கு  இங்கே  வேலை  இல்லை , ரத்தம்  சிந்தறவங்க தான் போர் முனைக்குத்தேவை

10    ஆனை  விட பெண்  உடல் வலிமைல  குறைஞ்சவளா  இருக்கலாம், ஆனா  மனவலிமை  ஒண்ணுதான் , நான் ஃபிளைட்டை ஓட்டத்தானே  போறேன்? தூக்கப்போகலையே?

11    கனவு  நனவாகனும்னு  எத்தனை  நாள்  தான் காத்திட்டு  இருப்பது ?

12    எல்லாருக்கும்  ஹீரோயின்  ஆகத்தான்  ஆசைப்பட்டேன் ,ம் நடக்கலை ,  நமக்குப்பிடிச்ச  ஒருவனுக்கு  ஹீரோயின்  ஆகிடலாம்னு  முடிவு  பண்ணிட்டேன்

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில  நெருடல்கள்

 

1  நாயகியை  உயர்த்திக்காட்டனும்  என்பதற்காக, அவர்  மீது  பரிதாபம்  வரனும்கறதுக்காக  அவர்  இருக்கும் இட்சத்தில்  உள்ள  ஆண்கள்  அனைவருமே மோசம்  என்பதாக சித்தரித்து  இருப்பது  ரொம்பவே  ஓவர்   (  இந்தப்படத்திற்கு ஏர் ஃபோர்ஸ்  விளக்கம்  கேட்டு நோட்டீஸ்  அனுப்பி இருப்பது  தனிக்கதை )

 

2        உடல்  எடை  குறைய  பாகற்காய்  ஜூஸ்  குடிச்சா  போதும்  என்று  ஒரு வசனம்  வருது, பப்பாளிப்பழம்  தினசரி  உட்கொண்டால், அருகம்புல்  சாறு , முருங்கக்கீரை  சாறு  குடித்தாலும்  உடல் எடை  குறையும் . அரிசி உணவை  தவிர்க்கனும்  அல்லது  குறைக்கனும். ஆனா  உடல்  தேர்வில்  செல்க்ட  ஆன  அடுத்த  நிமிசமே  நாயகி  அப்பாவுடன்  அதைக்கொண்டாட  ஐஸ்க்ரீம்  சாப்பிடுகிறார்

3        அப்பாதான்  மகளுக்கு  எல்லாம், மோட்டிவேட்  பண்றார்  ஓக்கே  அம்மா  என்னமோ எதுவுமே  சம்பந்தம்  இல்லாதவர்  போல்.,  சித்தி  போல்  நடந்துக்கறதா  காட்டுறது  டூ மச். ஒரு கேரக்டரை உயர்த்திக்காட்ட  இன்னொரு கேரக்டரை  தாழ்த்திக்காட்டத்தேவை  இல்லை

4  ஒரு பெண்  புதிதாக  பணிக்கு வரப்போறார்  என்பதால்  இனி  எப்படி எல்லாம்  ஆண்கள்  நடந்துக்கனும்னு  விளக்க  உரை  நிகழ்த்தும்  ஆஃபீசர்    நாயகி பாத்ரூம் போக  தனியா  பெண்  டாய்லட்  இல்லை , உடை  மாற்ற  தனி  அறை இல்லை  என்பதை  எல்லாம்  கவனிக்காதது  ஏனோ?

 

 சி.பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   இந்த  மாதிரி  வெற்றி பெற்ற  ஒரு விஐபியின் வாழ்க்கை  வரலாறு  நமக்கு  மனதில்  ஒரு உத்வேகத்தையே தரும்  என்பதால் தாராளமாகப்பார்க்கலாம், பெண்களை  மிகவும்  கவரும்,  ரேட்டிங்   3 /  5


0 comments: