Friday, July 03, 2020

WILD TALES - சினிமா விமர்சனம் ( ஆந்தாலஜி ரிவஞ்ச் த்ரில்லர் ) 6 சிறுகதைகள்


Amazon.com: Watch Wild Tales | Prime Video

பழிவாங்குதல் , பழிக்குப்பழி  வாங்குதல் , ஆத்திரத்தை தீர்த்துக்கொள்தல் ., தனக்கு ஒரு கண் போனாலும் எதிரிக்கு 2 கண்ணும்  போகனும்  என்கிற எண்ணம் எல்லாம்  காலம் காலமா  மனிதனின் மனதில் அடங்கிக்கிடக்கும்  உணர்வுகள்  தான். பல்லாண்டு வாழ்க  படத்தில்  எம்ஜியார்  கைதிகளை  திருத்தறதோ ,  இவண்  படத்துல  இரா பார்த்திபன்  க்ளைமாக்ஸ்ல பேசியே வில்லன்களை  மனம் மாற  வைப்பதோ  பார்க்க , கேட்க வேணா நல்லாருக்கும் , நடைமுறையில்  சாத்தியம்  ரொம்ப  கம்மி 


இந்தப்படத்துல  வர்ற  6  வெவ்வேற  கதைகள்  எல்லாமே  நீங்க கற்பனை  பண்ணி பார்த்திடாத கோணங்களில்   கதை  சொல்லப்பட்டிருக்கும். வழக்கமா  தமிழர்கள்  ஃபுல் மீல்ஸ்  சாப்பிட்டுதான்  திருப்தி ஆவாங்க . அவங்களுக்கு  முழு நீளப்படம்  ரெண்டரை மணி நேரம்  பார்த்தாதான்  ஓக்கே . அவங்க  கிட்டே  5 அல்லது  6   ஷார்ட்  ஃபிலிம்  ஒரு படமா  கட்றோம்னா  கண்டுக்க மாட்டாங்க , ஆனா  இது அந்த  ஃபார்முலாவை  உடைச்சிருக்கு 


1   ஏரோ “ பிளான்”   = ஃபிளைட்  போய்க்கிட்டு  இருக்கு , ஜன்னல்  ஓரத்துல  ஒரு பொண்ணு  உக்காந்திருக்கு எதிர்  சீட் ஆள் அந்த  லேடிக்கு  பேக்  வைக்க  உதவி செஞ்சுட்டு  நைசா  பேச்சுக்கொடுக்கறார். தன்  முன்னாள்  காதலன் ஒரு கவிஞன், ஆனா  கதைக்காகதவன் ( சிறுகதை  எழுத  முடியாதவன்னு அர்த்தம் அல்ல) அதனால  விலகிட்டேன் அப்டிங்கறா ( இதுவரை ஆடியன்ஸ்  அந்த லேடியை  கரெக்ட் பண்ற  ஒரு ஜொள்  பார்ட்டியின்  கதை அப்டினு  நினைக்கறப்போ )அவரும் ஆமா அவனை எனக்கு தெரியும் , என் கிட்டே சான்ஸ்  கேட்டு  வந்தான் . ஆனா நான் அவனுக்கு  வாய்ப்பு தர்ல , அவனுக்கு என் மேல  கோபம்கறார்

அப்போ அருகில்  இருப்பவர் நான் ஒரு சைக்கோ டாக்டர் , என் கிட்டே அவன் ட்ரீட்மெண்ட் க்கு வந்தான் நான் ஒருன் கட்டத்துல  என்  ஃபீசை  அதிகரிச்ட்டேன், அப்ப இருந்து என்னை பார்க்க வர்றதில்லை அப்டிங்கறார். இப்போ ஃபிளைட் ல  இருக்கற  ஒவ்வொருவரும்  எதோ ஒரு விதத்தில்  அவனை  அவாய்டு பண்ணி   இருக்காங்க  என்பது  தெரிய  வருது . இவங்க எல்லாரும்  எப்படி  ஒரே  ஃபிளைட்டில்  வந்தாங்க ? தற்செயலா? திட்டமிட்ட சதியா? பின் என்ன நடந்தது ? என்பது சஸ்பென்ஸ் 


ஃபுட்  ஃபாய்சன் =  ஒரு ரெஸ்ட்டாரண்ட் . ஒரு லேடி தான் ஓனர் ,  ம்ற்றும் ஒரு லேடி தான் புரோட்டா  மாஸ்டர் , ஒரு கஸ்டமர்  வர்றார். சீட்ல உக்காந்து  மெனு பார்த்துட்டு  இருக்கார் . அப்போ நாயகி   சொல்லுது “ இந்த ஆள் தான் என் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான ஆளு , அம்மாவை  பாலியல்  ரீதியா  துன்புறுத்தினான். என்னையும் கொடுமை செய்யப்பார்த்தான் , நான் எஸ்  ஆகிட்டேன் . எனக்கு அவனை அடையாளம்  தெரிது , அவனுக்கு என்னை அடையாளம்  தெரில   அப்டிங்கறா


 அப்போ நம்ம கிட்டே  இருக்கற  எலி மருந்தை   கலந்து  கொடுத்துடுவோம்னு மாஸ்டர்  சொல்றா , ஆனா   ஓனருக்கு அதில் உடன்பாடு  இல்லை  அதை விட  தைரியம் இல்லை, ஆனா  ஓனருக்கு  தெரியாம  மாஸ்டர்   விஷம்  க்ஜலந்துடறா . வில்லன்  சாப்ட்டுட்டு  இருக்கும்போது    அவனோட  பையன் அங்கே  வந்துடறான், அவனும் அதை எடுத்து  சாப்பிட முயலும்போது நாயகி பதறுகிறா . அப்பா  பண்ணுன தப்புக்கு மக்னை ஏன்  தண்டிக்கனும்?கறா  அப்றம்  என்ன ஆச்சு? என்ப்து  சஸ்பென்ஸ் 


ஓவர் டேக் இட் ஈசி  பாலிசி  -  ஹீரோ  காரில்  ஹை வேல  போய்க்கிட்டு  இருக்கார் , முன்னால  ஒரு  தறுதலை  வில்லன்  இவரை  முன்னால  போக விடாம  , ஓவர் டேக் பண்ண  விடாம இடமும் வலமுமா மாத்தி மாத்தி  வண்டி ஓட்டி  கடுப்படிக்கறான், ஒரு கடத்துல  சாமார்த்தியமா  ஓவர்  டேக்  பண்ணி   போகும்போது  வில்லனைப்பார்த்து  ஹீரோ  கெட்ட  வார்த்தை  ஒண்ணு  சொல்லிட்டு போய்டறார். ஆனா அவரோட  கெட்ட நேரம்   கார்  டயர்  பஞ்சர்  ஆகிடுது . இவரே  வண்டியை  நிறுத்தி  ரெடி  பண்ணிடறார். 


 கரெக்டா  இப்போ   வில்லன்  வந்து   ஹீரோவைக்காரை  விட்டு இறங்க  விடாம   அழிச்சியாட்டியம்  பண்றான்.  சாதா  பகை  ஜென்மப்பகை   மாதிரி ஆகுது . இருவ்ரும்  மாறி மாறி  கேப்  விட்டு  விட்டு  தாக்கிக்கறாங்க , முடிவு என்ன ஆச்சு?


4   நோ   பார்க்கிங்  =  ஹீரோ நோ பார்க்கிங்  ஏரியாவில்  காரை  நிறுத்தி இருப்பதால்   ஃபைன் போடறாங்க . ஹீரோ அங்கே  நோ பார்க்கிங்னு போர்டே  இல்லை அப்டிங்கறார். ஆனா  போலீஸ் ஒத்துக்கலை . வாக்குவாதம்  முற்றுது  பேசிக்கலா  அவர்  ஒரு எஞ்சினியர் , எப்படி  பழி  வாங்கினார்  என்பது   சஸ்பென்ஸ்  டிரைவிங் லை   சென்ஸ்  = ஒரு கோடீஸ்வரோட   மைனர்  மகன்  ஒரு கார் விபத்து  ஏற்படுத்தி  ஒரு  கர்ப்பிணிப்பெண்  இறப்புக்கு காரணம்  ஆகிடறான். அவனை  காப்பாத்த  அப்பா தன்  கிட்டே  15 வருசமா  கார்  டிரைவரா  இருந்தவன்  கிட்டே  டீலிங்  பேசறார். உன் குடும்பத்தை நான்  பார்த்துக்கறேன்,  உனக்கு தேவையான  பணம்  தர்றேன், நீ  விபத்து ஏற்படுத்துனதா சரண்டர்  ஆகிடுங்கறார்.   ஃபேமிலி  லாயர்   கிட்டே  1  மில்லியன்  டாலர்  தர்றேன்  , நீ ஃபீலிங்கை  முடிங்கறார். விசார்ணைக்கு வர்ற  போலீஸ் ஆஃபீசருக்கு  தர்னும், அவங்களுக்கு  தரனும் , இவங்களுக்கு  தரனும் னு லாயர்  ஓவரா  பேரம்  பேசறார், கடுப்பான  கோடீஸ்வரர்  ஆணியே  புடுங்க  வேணாம் , ஃபீலிங்  கேன்சல் ம் என் மகனே சரண்டர்  ஆகட்டும்கறார். இப்போ லாயர்  இறங்கி  வர்றார் , ஆனா..... 6   மேரேஜ் பார்ட்டி. அப்போதான் மேரேஜ்  நடந்த  ஒரு ஜோடி    டான்ஸ்  பண்ணிட்டு இருக்கு , மனைவி  கணவன் கிட்டே  கேட்கறா . அந்த  லேடி  யாரு? உன் ஆளா?  கணவன்  பம்மறான், கனெக்சன்  இருந்ததா? சே எஸ்  ஆர்  நோ அப்டிங்கறா. ஆமானு கணவன் ஒத்துக்கறான்.  உடனே அழுதுட்டே  மொட்டை  மாடிக்கு  போறா, அவ  விபரீதமான  முடிவு  எடுத்துடக்கூடாதுனு  கணவன்  துரத்திட்டு வர்றான் .. ஒரு ட்விஸ்ட் . கே பாலச்சந்தர்  பட நாயகி  கூட இதுவரை  எடுக்காத  ஒரு முடிவை எடுக்கறா. இந்த  மாதிரி  பழி   வாங்குனா  ஊர்ல  ஒரு பய  மனைவிக்கு துரோகம் செய்ய மாட்டான். எப்படிப்பட்ட  பழி  வாங்கல்? என்பது  சஸ்பென்ஸ் 

  சபாஷ் இயக்குநர் 


1  அமரர்  சுஜாதா  டச்  இருப்பது  போல  முதல்  கதை   மாறுபட்ட  உணர்வை  தந்த  விதம்


2   ராஜேஷ்  குமார்  கதை யில்  வருவது  போல  ஒரு ட்விஸ்ட் . வில்லனை  வெறுத்தாலும்  வில்லனின் மகன்  மேல்  பரிதாபம் கொள்ளும்  செண்ட்டிமெண்ட்

3    சுபா  கதையில் வருவது  போல  ஈகோ  கிளாஸ்    ரோட் சைட்  ட்ராவலிங்  ஸ்டோரி லைன் 


4    பிகேபி  கதையில் வருவது  போல   பிளான் பண்ணி சம்பவம்  பண்ணும்  ஹீரோயிசம் 


5  புஷ்பா  தங்க  துரை  கதையில் வருவது  போல  உயிரோட்டமான  சம்பவங்கள்


6   ராஜேந்திர  குமார்  கதையில் வருவது  போல  மாறுபட்ட  திரைக்கதை  எதிர்பாராத  க்ளைமாக்ஸ் 

நச்   டயலாக்ஸ்


1    இந்த  உலகத்தை ஆள்வது  எப்பவுமே கெட்டவர்கள்  தான்


2   எலி   விஷம் பாக்கெட்ல  எக்ஸ்பயரி  டேட்  போட்டது  தாண்டிடுச்சே , இப்போ அந்த  விஷம் காலாவதி ஆகுமா? அல்லது  விஷத்தின் வீரியம் அதிகரிக்குமா? மில்லியன் டாலர் கேள்வி 

3  அப்பா  மாதிரி தான் மகனும் இருப்பான் , கேரக்டர்ல  , தோற்றத்துல  , நடவடிக்கைல 


4   கணவனால் ஏமாற்றப்படும்  முதல் பெண்  நீங்க  இல்லை. இந்த  உலகம் பூரா  ஆண்கள்  தங்கள்  மனைவியை  ஏதாவது  ஒரு விதத்துல  ஏமாத்திட்டு தான் இருக்காங்க 


 சி. பி. ஃபைனல்  கமென்ட்ஸ்-    மாறுபட்ட  கதைகளை  விரும்பிப்பார்க்கறவங்க  இதைப்பார்க்கலாம்.   அமேசான் பிரைம்ல  கிடைக்குது . ரேட்டிங்   3. 5 / 5 . இந்த  தொகுப்புல  5 வது  கதை மட்டும்  க்ரூப்ல டூப், ஆனா  அதுவும் நல்லாருக்கு 

0 comments: