Wednesday, July 01, 2020

Birbal Trilogy (2019) - kannada movie -சினிமா விமர்சனம் ( இன்வெஸ்டிகேஷன் க்ரைம் த்ரில்லர் )சாத்தான் குளம் , தூத்துக்குடி  சம்பவங்கள் எல்லாம்  காவல் துறையின் அதிகார துஷ்பிரயோகம், அத்து மீறல் என பல  தவறான முன்னுதாரணங்களை இந்த  சமூகத்துக்கு வழங்கிச்சென்றிருக்கின்றன. இது இங்கே மட்டும் அல்ல, உலகம் முழுக்க நடக்குது. தென் கொரியா வில்  அப்டி ஒரு சம்பவம் 2008 ல்  நடந்தது. அந்த  உண்மை சம்பவத்தை  அடிப்படையா  வெச்சு 2017 ல்  A NEW TRIAL அப்டினு ஒரு தென்  கொரியன்  மூவி  ரிலீஸ் ஆச்சு. அந்த்கக்கதையை  இன்ஸ்பிரேஷனா  வெச்சு  எடுக்கப்பட்ட கன்னடப்படம்  தான்    'Birbal Trilogy Case 1: Finding Vajramuni' 

 மிட் நைட் ல ஒரு  16 வயசுப்பையன் டூ வீலர்ல போய்க்கிட்டு  இருக்கான். அவன் அம்மா கிட்டே செல் ஃபோன்ல  பேசிட்டு வர்றான். திடீர்னு  ஒரு விபத்து . இவனுக்கு எதுவும்  பெரிய காயம் இல்லை . ஆனா அங்கே  நிக்கற  வாடகை டாக்சில  ஒரு கொலை நடந்ததைப்பார்க்கறான். உடனே  பொறுப்பா போலீஸ்க்கு  தகவல் தர்றான், வ்ந்த  போலீஸ்  அவனையே  குற்றவாளி ஆக்கி  அடிச்சு உதைச்சு  ஒப்புதல்  வாக்கு மூலம் வாங்கி கோர்ட்ல நிறுத்தி  ஆயுள்  தண்டனை  வாங்கிக்கொடுத்துடுது


10  வருடங்கள்  கழித்து அந்தப்பையன்  பரோல்ல வர்றான். பணம்   கொடுத்து கேஸ் நடத்த முடியாத  ஏழை மக்களுக்கு உதவ ஒரு தொண்டு நிறுவனம்  இந்த  கேசை  கையில்  எடுத்து  ஒரு வக்கீல் கிட்டே  பொறுப்பை  ஒப்படைக்குது. அந்த  வக்கீல் அந்த  கேசை எப்படி  இன்வெஸ்டிகேட்  பண்ணி  உண்மையான  குற்றவாளியைக்கண்டு பிடிக்கிறார்  என்பதே  கதை 

வக்கீலா வர்ற  ஹீரோ தோற்றத்தில்  விளையாட்டுப்பையன் மாதிரி  இருக்கார் , அதனால  ஒரு மெச்சூரிட்டி  லுக்குக்காக கண்ணாடியை  மாட்டி விட்டுட்டாங்க போல . சமாளிக்கிறார்

 நாயகியா  வருபவர்  பரவால்ல . நல்ல நடிப்பு நண்பனாக  வருபவர்  நம்ம  ஊர் சந்தானம்,  சூரி   மாதிரி அப்பப்ப  கவுண்ட்டர்  டயலாக்ஸ்  அடிச்சு  காமெடி  கொண்டு வர்றார்

ஒளிப்பதிவு  இசை  , எடிட்டிங்  எல்லாம் நல்லா  இருக்கு


 கடைசி  20 நிமிடம்  படம் செமயா   ஸ்பீடா  போகுது க்ரைம்  த்ரில்லர்  படங்களுக்கு தேவையே இல்லை என  நான் தனிப்பட்ட  முறையில் கருதும்  காதல், டூயட்  , செண்ட்டிமெண்ட்  காட்சிகள்  இதில் உண்டு , அவற்றை எல்லாம்  கட்  பண்ணி  ட்ரிம் பண்ணுனா  ரெண்டே  முக்கால் மணி நேரப்படத்தை   ரெண்டே  கால் மணி நேரப்படமா  சுருக்கி  இருக்கலாம்


 சபாஷ்  டைரக்டர் 

1  க்ளைமாக்ஸ் ல வில்லனைப்பிடிக்க  ஒரு ஐடியா  பண்ணி  அவன் மாட்டுன  வீடியோ காட்சி உள்ள  மெமரி கார்டை  ஒப்படைக்க  ஒரு கோடி  பேரம்  பேசி பப்ளிக் பிளேஸ்க்கு வர சொல்றாங்க . வில்லனும்   வ்ர்றான். பர்தா  போட்டுக்கிட்டு . அவன் முகம்  அதுவரை  யாருக்கும்  தெரியாது. இப்டி  தனியா  வந்து  லூஸ் மாதிரி  மாட்டிக்கப்போறானா?   என நாம் அசால்ட்டாக நினைக்கும்போது  வில்லன்  தப்பிக்க  பயன்படுத்து,ம்  உத்தி அபாரம், ரத்தம் இல்லை ஃபைட்  இல்லை , ஷூட்டிங் டமால்  டுமீல் இல்லை, பிரமாதமா தப்பிக்கும் அந்த  ஐடியா  விஷூவல்  ட்ரீட். இந்த  சீனுக்கெல்லாம்  தியேட்டர்ல கை தட்டல்  அள்ளி  இருக்கும்


2  வில்லன்  இந்த  மாதிரி தப்பிச்சா எப்படி  அவனை  பிடிப்பது என முன் கூட்டியே  யூகித்து  போலீஸ்  மற்றும் ஹீரோ   செஞ்ச  ஐடியா வும்  அதையும்  வில்லன்  கண்டு பிடிச்சு  முறியடிப்பதும்  பக்கா 


3    ஹீரோ - ஹீரோயின்  இருவருக்குமான  கெமிஸ்ட்ரி  நல்லா  இருந்தது . ஹீரோயின்  ஒரு கட்டத்தில்  ஸ்லிப் ஆவதும்  பின் நாயகனிடம்  மனம்  வருந்துவதும்  டச்சிங்  சீன்


4   கொலை நடந்த  போது   ஃபோன்  பேசப்பட்ட  சம்பவம்  இருப்பதால் அந்த  நெம்பரை ட்ரேஸ் அவுட்  பண்ண  நினைக்கும்போது அந்த டைம்ல ஆக்டிவா  இருந்த  நெம்பர்ஸ்  890  இருக்கு அதுல ஆண்  நெம்பர்  மட்டும் எடுக்கலாம்னு ஃபில்டர்   பண்ணினா  650  வருது/.. இனி எப்படி  ஃபில்டர்  பண்ண  என யோசிக்கும்போது  ஹீரோ நண்பன்  கொடுக்கும் ஐடியா  .. கொலை நடந்த அடுத்த நாள்  ஸ்விட்ச் ஆஃப் ஆன நெம்பர்  எது?னு  பார்த்தா  அதான் கொலை காரன்  நெம்பர் . அது  ஒர்க் அவுட் ஆகுது. இந்த  சீன் விஷூவலா  காட்டும்போது பிஜிஎம்முடன்  நல்ல பிரசண்ட்டேஷன்


நச்  டயலாக்ஸ்


1   ஆண்களும் சரி , ஒயினும் சரி  பக்குவப்படம்  டைம் எடுக்கும்


2   துரதிர்ஷ்டவசமான   சூழ்நிலைகளில்  கூட அதிர்ஷடவசமானவன் நான்

3   நல்லவங்களுக்கு நல்லதுதான் நடக்கும் , கெட்டவங்களுக்கு கெட்டது நடக்கும்னு யார் சொன்னது? சொன்னவனைக்காட்டுங்க ஒரு சம்பவம் பண்ணனும் 

4   எந்த விதமான உள் நோக்கமும் இன்றி யாரும் வசதி இல்லாத ஏழைகளுக்கு உதவுவதில்லை 


5   அந்தப்பொண்ணைக்கண்டுபிடிச்சா  முதல்ல என்ன கேட்பே?


 மேரேஜ் ஆகிடுச்சா?


6   லாயர்  , டாக்டர் , போலீஸ்  இந்த  3 பேரும்  காரணம்  இல்லாம   யாரையும்  சந்திக்க  மாட்டாங்க 


7 எல்லா பிரச்சனைகளுக்கும்  தீர்வு பணம்  தான்


8  அருவி  ஆரம்பிக்கும் இடத்தில் ஆர்ப்பாட்டமா  இருக்கும், ஆழத்துக்குப்போனா அமைதியா இருக்கும் , அது மாதிரி தான் மனுசனும் , முதல்ல இளமைல  ஆர்ப்பரிப்பா இருப்பான், முதுமைல அமைதி ஆகிடுவான் 

9   ரேஸ் ல முதல் ஸ்டெப் முதல்ல எடுத்து வெச்சவனை  ஜெயிச்சவன்னு சொல்ல மாட்டாங்க, வின்னிங் பாய்ண்ட்டை முதல்ல கிராஸ் பண்றவனைத்தான்  ஜெயிச்சதா சொல்வாங்க  ( வல்லவன்  சிம்பு பஞச்)


10   சார் , இந்த  கேஸ்  ரொம்ப ரிஸ்க்னு தெரிஞ்சும்  ஏன்  எடுத்துக்கிட்டீங்க?

 மேரேஜ் பண்ணினா  குழந்தை  ரெடி பண்றது ரிஸ்க்னு யாராவது கர்ப்பமான  பெண்ணைக்கட்டுவாங்களா? கேஸ்னா ரிஸ்க்  இருக்கத்தான் செய்யும் 

11  ஒரு பலசாலி சாதகமான சூழ்நிலை வரும்போது  ஜெயிப்பான், ஆனா புத்திசாலி   எந்த  சூழலையும் தனக்கு சாதகம் ஆக்கி ஜெயிப்பான் 


 சி.பி ஃபைனல்  கமெண்ட் - வழக்கமான மசாலா படங்கள்  போல  ஹீரோ பஞ்ச் டயலாக் , கொஞ்சம்  மொக்கை காமெடி , டூயட்  என  சில  மைனஸ்  இருந்தாலும் கடைசி 20 நிமிட  கலக்கலான காட்சிகளுக்காக  பார்க்கலாம் 


0 comments: