Thursday, July 16, 2020

DARK CHOCOLATE (2016- BENGALI)- சினிமா விமர்சனம்( க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் )2015  மே  மாதம்  நிகழ்ந்த  நடிகை ஷீனா  ரோபா  கொலை  வழக்குதான்  இந்தப்படம். கோர்ட்  வழக்கு  தீர்ப்பு  எல்லாம்  வந்த  பிறகு ., கொலைகாரன்  யார் என மீடியாக்களால்  தெரிந்த  பிறகு அதை  சுவராஸ்யமாக  கொடுப்பது  ஒரு சவால்  தான். 

ஆள்  அரவமே  இல்லாத  காட்டுப்பகுதில  ஒரு பொண்ணோட  டெட்  பாடி  புதைக்கப்பட்டதை  போலீஸ்  கண்டுபிடிக்குது.  பிரபல நடிகையின் அம்மாவோட கார்  டிரைவரை  கைது  பண்றாங்க


, அவர்  கொடுத்த  ஸ்டேட்மெண்ட்டை  வெச்சு   நடிகையோட அம்மாவைக்கைது பண்றாங்க 

 பிறகு நடக்கும் இன்வெஸ்டிகேஷன்  தான் படம்


 படத்தோட  திரைக்கதையை விளக்கும்  முன்  வடிவேல் பண்ண  காமெடி  டிராக்கை  ஞாபகம்  வெச்சுக்குங்க . ஒரு படத்துல  ஒரு பொண்ணு ஒரு ஆள்  கூட ஓடிப்போய்டும், போலீஸ்ல  விசார்னை  பண்றப்போ அவளோட  4 புருசன்களும், 3 கள்ளக்காதலர்களும்  லைன் கட்டி  நிப்பாங்க . என்கவுண்ட்டர்  ஏகாமபரமா  வரும் வடிவேலுவின்  மீசையைப்பார்த்து  அந்த  லேடி  அவர்  மேலயும் ஆசைபப்டும் 


நடிகை  ஷீனாவோட அம்மாவோட 2 வது  புருசன்  கிட்டே இவ தன்  மகள்  என்பதை  மறைச்சு  தங்கச்சி  என  அறிமுகம்  பண்றா. அதுக்குக்கேவலமான  விளக்கம்  வேற ., அதாவது அம்மா, மகள்  இருவரையும் பாலியல்  வன்முறை செஞ்சவன்  ஒருத்தன்  தான். அந்த  கணக்குப்பிரகாரம்  தங்கையாம்

 அம்மாவோட  தற்கால  புருசனுக்கு  2 பசங்க. ஏகப்பட்ட  சொத்து  இருக்கு . நடிகை  ஷீனா  சொத்துக்கு  ஆசைப்பட்டு  அம்மாவோட  2 வது  புருசன்  கிட்டே  நெருக்கமா  பழகுது. பிறகு  சொத்துக்கு  வாரிசுகள்  2 பேரு இருக்காங்கனு உணர்ந்து  அவங்க  2 பேர்  கூடவும்  நெருக்கமா  பழகுது. இப்போ தான்  கர்ப்பமா  இருப்பதா  மிரட்டுது


இப்போ  சொத்துக்காக  இத்தனை  வேலைகள்  செய்த  நடிகை  ஷினா வை கொலை  செய்தது

  1  ஷீனாவின் அம்மாவா?  
2 ஷீனாவின்  அம்மாவின் முதல்  புருசனா? 
3 ஷீனாவின் அம்மாவின் 2 வது புருசனா?  
 4  ஷீனாவின் அம்மாவின் 2 வது  புருசனின் முதல்  மகனா? 
5 ஷீனாவின் அம்மாவின் 2 வது  புருசனின் 2வது  மகனா?

இக்கேள்விக்கு  விடை  தெரிய  இந்தக்கேவலமான  படத்தை  பாருங்கள் 


நடிகையா நடிச்சது நம்ம  ஊர்  தாஜ்மகால்  ரியாசென் . அதிக  வேலை  இல்லை  வந்தவரை  பரவால்லை , நடிகையின் அம்மாவாக  மஹிமா சவுத்ரி . வில்லித்தனமான  நடிப்பு . நடிகையின் அம்மாவின்  முதல்  புருசனா  வருபவர்   2ம் தரமான  நடிப்பையும் 2 வது  புருசனா  வருபவர்  முதல்  தர  நடிப்பையும் வழங்கி இருக்காங்க சபாஷ்  டைரக்டர் 

1  திரைக்கதைக்கு  அதிகம் மெனக்கெடாம   செய்தித்தாள்   ல வந்த  விபரங்களை வெச்சே  ஒப்பேற்றிய  விதம் 


2  இது  எப்படியும்  மொக்கைப்படமாதான்  வரும், ரெண்டரை  மணி  நேரம்  எல்லாம் எடுத்தா  தாங்காது  என   உணர்ந்து   90 நிமிடங்களில்  படத்தை முடித்தது


3    ரோஷோமான்  எஃபக்ட்  எனப்படும்  அவரவ்ர்  கோணங்களில்  கதை  சொல்லும் விருமாண்டி  பட  திரைக்கதை  உத்தியை  பயன்படுத்தியது 


 நச்  வசனங்கள்

1    டெய்லி பணம்  வேணும்  பணம்  வேணும்னு நச்சரிக்கிறியே? நான் என்ன பணம்  பிரிண்ட்  பண்ற மிஷினா   வெச்சிருக்கேன்?

 ஆனா  எனக்கு  பேபி  மிஷின் பட்டம்  மட்டும் கொடுக்கலாமா? வரிசையா குழந்தை


2   இந்த  பொண்டாட்டிங்க  தேவையை  தீர்த்து  வைக்க    நாட்டில்  இருக்கும்   மொத்த  ஸ்டேட்  பேங்க்கும் பத்தாது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ்


1   தான்  கர்ப்பமா  இருப்பதா  நாயகி சொன்னதும்  அவ  கூட தொடர்பு  உள்ள  3 பேரில்  ஒருவர் கூட டாக்டர்  கிட்டே  கூட்டிட்டுப்போய் செக்  பண்ணி  கன்ஃபர்ம்  பண்ணனும்னு தோண்லை?


2   படத்தில்  வரும்  அனைத்துக்கதாபாத்திரங்களும்  வெட்டியாதான் இருக்காங்க .  நோ ஜாப்  . அப்போ எப்படி  அவங்க  குறிப்பிட்ட  ஆளோட  தனிமைல  வீட்டில்  இருக்க முடியும் ? எல்லாமே  வீட்ல தானே  இருக்காங்க ? 


3   பிர்பல  நடிகை  பற்றிய  விபரங்கள்  அனைத்து  மீடியாக்களிலும்  வந்திருக்கும்   அப்றம் எப்படி  நடிகையின் அம்மா  தன் மகளை  தன் தங்கை  என 2 வது  புருசனிடம்  பொய் சொல்ல  முடியும் ?

4  ஹையர்  ஆஃபீசர்   சீக்ரெட்டா  அவங்களை  ஃபாலோ பண்ணுங்க அப்டிங்கறாரு  எஸ் சார்னு  சொல்ற  தத்திங்க  யூனிஃபார்ம்  போட்டுட்டு  போலீஸ்  ஜீப்ல  மேல ரெட்   அலெர்ட்  லைட் சைரனை  அலற  விட்டுட்டு ஃபாலோ பண்றாங்க 


 சி.பி கமெண்ட் -   இந்தக்காமெடியான க்ரைம் த்ரில்லரை   நெட் ஃபிளிக்சில்  கண்டு  மகிழுங்கள் ., ரேட்டிங்   1 / 5 

  
Directed byAgnidev Chatterjee
Based onSheena Bora murder case
StarringMahima Chaudhry
Riya Sen
Mumtaz Sorcar
Shataf Figar
Music byShubhayu
Release date
  • 2 September 2016
CountryIndia
LanguageBengali
Hindi

0 comments: