Wednesday, July 08, 2020

TALVAR -2015( HINDI)- சினிமா விமர்சனம் (இன்வெஸ்டிகேஷன் க்ரைம் த்ரில்லர்)- 2008 நொய்டா இரட்டைக்கொலை வழக்கு சம்பவம்

TALVAR ( HINDI)- சினிமா விமர்சனம் ( க்ரைம்  இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்)- 2008  நொய்டா  இரட்டைக்கொலை வழக்கு சம்பவம்

வழக்கமா ஸ்கூல்ல பசங்க சரியா படிக்கலைன்னா  வாத்தியார்  அடிக்கறதைத்தானே  நாம பார்த்திருப்போம்,? என் வாழ்க்கைலயே முதல்  முறையா  ஒரு  போலீஸ்  ஆஃபீசர்  ஒரு கொலைக்கேசை  சரியா விசாரிக்கலைனு சிபிஐ ஆஃபீசர்  லத்தியால  பெரேட்  எடுக்கறதை  இந்தப்படத்துல தான்  பார்த்தேன்,  அதே மாதிரி  ஹீரோ இன்வெஸ்டிகேட்  பண்ணது  சரி இல்லை, வேற  ஒரு ஆஃபீசர்  இந்த  கேசை  டீல் பண்ணட்டும்னு ஹீரோவை  மட்டம்  தட்ன  சீனையும்  பார்த்ததில்லை

இந்தப்படத்தை  நீங்க  சுவராஸ்யமா  பார்க்கனும்னா  2  கண்டிஷன் 1  கூகுள் ல சர்ச்  பண்ணி அந்தக்கொலைக்கேஸ்  தீர்ப்பு என்ன? விபரம்    சரி  பார்க்கக்கூடாது  2  விருமாண்டி  படத்துல  ஹீரோ ,வில்லன்  இருவரும் அவங்கவங்க  கோணத்துல  கதை சொன்ன  பாணி  உங்களுக்குப்பிடிச்சிருக்கனும், புரிஞ்சிருக்கனும்,  அப்போதான்  இந்தப்படம்  பிடிக்கும், 


ஒரு கொலைக்கேசை  போலீஸ்  தரப்பில்  முதலில்  எப்படி  பார்க்கப்படுது?  சிபிஐ  எப்படி பார்க்குது என 2  வெவ்வேற  கோணங்களில்  ஒரே சம்பவம்  வருவதால்   அதை  எல்லா தரப்பு  மக்களும்  ரசிப்பாங்கனு சொல்லிட முடியாது. இந்த  டெக்னிக்கை  ரோஸோமான்  எஃபக்ட்னு சொல்வாங்க . பட்டர் ஃபிளை  எஃபக்ட்  மாதிரி  இதுவும் ஃபேமஸ் .


 முதன் முதலா இந்த  டெக்னிக்கை பயன்படுத்திய அகிரா குரோசாவா  ரோசோமான் எனும் சைக்கோ க்ரைம்  த்ரில்லர்ல ( 1950) இந்த  டெக்னிக்கை  யூஸ்  பண்ணி  திரைக்கதை  அமைச்சதால  அதுக்குப்பின்  இதே  மாதிரி    ஒரு சம்பவத்தை  இரு வேறு  பார்வைல  , இரு கோணங்களில்  அணூகுவதற்கு ரோசோமான்  எஃபக்ட்னே பேர்  வந்துடுச்சு 

 சரி  , கதைக்கு  வருவோம்..டாக்டர்களான  கணவன் , மனைவி   இருவர் , அவங்க  14  வயசுப்பொண்ணு , 45  வயசு  வேலைக்காரன் ( அவங்க  வீட்லயே  தங்கி வேலை  பார்ப்பவன் ) ஒரு நாள் காலைல  6 மணிக்கு  எந்திரிச்சுப்பார்த்தா  மகள்    பெட்ரூம்ல  கொலை  செய்யப்பட்டுக்கிடக்கறா . வேலைக்காரனைக்காணோம்

 போலீஸ்  வந்து  விசாரிக்குது. அவங்க  கோணத்துல  ஒரு கதை  ரெடி  பண்ணி  இதான் நடந்ததுனு  ரிப்போர்ட்  தர்றாங்க , இது  மீடியாவில்  பரபரப்பா  பேசப்படுது  

பிறகு சிபிஐ  க்கு கேஸ்  மாறுது, ஹீரோ  அவர்  ஒரு கோணத்துல  விசாரணை  பண்றார்


அதுவும்  தப்புனு  ஹையர்  ஆஃபீசர்   வேற  ஒரு கோணத்துல  கேசை  டீல் பண்றார், கோர்ட்  என்ன  தீர்ப்பு சொல்லுச்சு என்பது சஸ்பென்ஸ், இது  15  கோடி செலவில்  எடுக்கப்பட்ட  இந்தப்படம்  30 கோடி சம்பாதிச்சுது. பிரம்மாண்டமான  செட்கள்  இல்லை , தேவையற்ற ஆடம்பரங்கள்  இல்லை.


ஹீரோவா இர்ஃபன்கான். மனுசன்  அசால்ட்டா  பண்ணி  இருக்கார் . போலீஸ் ஆஃபீசரை  மடக்கும் காட்சிகள் , அவரையே  லத்தியால  அடிக்கும் காட்சிகளில்  எல்லாம்  தியேட்டர்ல விசில்  பறந்திருக்கும். பொதுவாவே  சைக்காலஜிக்கலா  நம்ம ஜனங்க  மனசுல  போலீஸ்னாலே  ஒரு இனம்  புரியாத  வெறுப்பு  வரும். அவங்களுக்கு  ஒரு பிரச்சனைன்னா  இவங்க  சந்தோஷப்படுவாங்க . இந்த   சைக்காலஜி  தெரிஞ்சு தான்  பல படங்கள்ல  போலீசை  வில்லனா  காட்றாங்க 


அந்தப்பெண்ணோட  அப்பாவா  நீரஜ்  நல்லா  பண்ணி  இருக்கார் .தோற்றம் பரிதாபமாவும் இருக்கனும், சில  இடங்களில்  இவர்  மேல  தப்பு  இருக்குமோ  என சந்தேகிக்கும்  விதத்திலும்  இருக்கனும் . அதை  ரொம்ப  பிரமாதமா ஹேண்டில்  பண்ணி  இருக்கார் 

 வேலைக்காரனாக  தெரிந்த  முகத்தைப்போட்டிருக்கலாம், அதே  போல்  அவன் நண்பர்களாக  வரும்  3  பேரும் புதுசா  இருக்காங்க. இந்த  மாதிரி  முக்கியக்கேரக்டர்கள்ல  தெரிந்த  முகங்களைப்போடுவதுதான் நல்லது  சபாஷ்  டைரக்டர் 1   ஏசி  ரூம்ல இருந்ததால  வெளியே நடந்தது  என்ன? என்பதை  அறிய  முடியலை  என்ற  பெற்றோர்  ஸ்டேட்மெண்ட்டை  உடைக்க  இன்ஸ்பெக்டர்   கையாளும்  உத்தி   ஃபோர்  அடிச்சது மாதிரின்னா   அதே  சிச்சுவேஷனை  ஹீரோ  ஹேண்டில்  பண்ணி  பெற்றோர்  ஸ்டேட்மெண்ட்  உண்மை  தான்  என நிறுவுவது  பிரமாதம்


2  இந்தப்படத்தின்  எடிட்டிங்க்கு டபுள்  சம்பளம்  தந்திருக்கனும். அவ்ளோ அழகான  கட்டிங் , ஒட்டிங். ஒளிப்பதிவு , இசை  கன கச்சிதம், பிஜிஎம் இன்னும்  நல்லா  பண்ணி  இருக்கலாம்னு  தோணுது . ஒவ்வொரு படத்துக்கும் இளையாராஜா  மாதிரியே இருக்கனும்னு நாம  எதிர்பார்க்கறதும் நம்ம  தப்பு தான் 


3  உண்மை  கண்டறீயும்  சோதனைல   பெற்றோர்   ஜெயிப்பது  பெரிய  விஷயம்  இல்லை , ஏன்னா  இருவருமே  டாக்டர்கள்  என்ற  பாய்ண்ட்டை  அவர்கள்  முன் வைக்கும்  விதம்  அருமை 


 நச்  டயலாக்ஸ் 


1   ஒரு  வயசான ஆளு  இப்படிப்பட்ட  தப்பை பண்ணி  இருப்பாரா?

 ஏன்? தாத்தாக்களுக்கு  அந்த  மாதிரி ஆசை  வராதா? 


2    கொலைகாரன்  புத்திசாலித்தனமா  செயல்பட்டிருக்கான்


 அப்போ  போலீஸ்  நாம  முட்டாள்தனமா செயல்படறமா? 3   சாரி  சார் , அந்த  கை ரேகை  விஷயத்தை ஃபார்ன்சிக்  டிபார்ட்மெண்ட்க்கு அனுப்ப மறந்துட்டேன் 

 சரி  , பரவால்ல , அடுத்த  டைம் இதே  மாதிரி  கொலை  கேஸ்  டீல் பண்றப்ப  வாவது  மறக்காம  செய்ங்க 


4   நீதி  தேவதை  கைல  தராசு இருக்கறதைத்தான்  பொதுஜனங்கள்  கவனிச்சிருப்பாங்க , அதனோட  இன்னொரு  கைல  கத்தி  இருக்கும்.,  அதை பலர்  கவனிச்சிருக்க  மாட்டாங்க , அந்த  இன்னொரு  கத்தி தான்  போலீஸ் .


5   ஹி  வில்  டேக்  ஓவர்  த கேஸ்

பட்  ஹி வில்  நெவர்  ஓவர்  டேக்  மீ 

6   உண்மையை  ஒத்துக்கறியா? கோர்ட்ல  சொல்வியா?

 சரிங்க   ஆமாங்க 

  ஓகே   ஷூட்  ஹிம்

 சார்!!!!!!!!!!!!!!!!!


 யோவ்  துப்பாக்கி ல  சுடச்சொல்லலை , கேமரால  ஷூட்  பண்ணச்சொன்னேன்,  ஒப்புதல்  வாக்குமூலம்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


 1   ஓப்பனிங்  சீன்ல  வர்ற  இன்ஸ்பெக்டர்  ஒவ்வொரு  தடயத்தையும் அங்கே  இருக்கற  இன்னொரு ஆள்  சொல்லிதான்  கண்டு பிடிக்கறாரு , அவரா  ஒண்ணு கூட  ரெடி  பண்ணலை , அவ்ளோ  தத்தியாவா  ஒரு போலீஸ் ஆஃபீசர்  இருப்பாரு ?

2    வட நாட்டில்  எப்படியோ தமிழகத்தில்  திதி  குடுக்கும்போது இறந்தவரின்  பெயர் , பெற்றோர் , தாத்தா  பாட்டி  பேரு  குலதெய்வம் பேரு  இதான் கேட்பாங்க , திதி செய்யும்  புரோகிதர்கள்  இதில் புதுசா  இறந்த  நேரம்  கேட்கறாங்க   (  அந்த  டைம்  சொன்னா  ஒரு  ட்விஸ்ட்  இருக்கு ) .  அப்டி  எல்லாம்  டைம்  கேட்கற  பழக்கம்   இருக்கற  மாதிரி  தெரியல . பிறந்த  நேரம்  தெரிஞ்சு   ஜாதகத்தைக்கணிப்பது  உண்டு . இறந்த  நேரம்   திதி  குடுக்க  எதுக்கு ? 

3   இந்த  சம்பவத்தில்  போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்  மிக  முக்கியம். அந்தப்பெண்  ரேப்  செய்யப்பட்டிருந்தாரா?  அல்லது  விரும்பியே  உறவு வைத்திருந்தாரா?  இந்த  விபரம்  சொல்லப்படவில்லை  ( ஆனால் நிஜ  வழக்கில்  ரேப்  இல்லை  எனவும்  கொலை செய்யப்பட்ட ஆரூஷியின்  அந்தரங்க  உறுப்பு இறப்புக்கு  பின் தடயத்தை  மறைக்க கழுவப்ப்ட்டிருக்கலாம்  எனவும் டாக்டர்  ரிப்போர்ட் இருக்கு )  சி.பி  ஃபைனல்  கமெண்ட் -    இன்வெஸ்டிகேஷன்  க்ரைம்  த்ரில்லர்   விரும்பிகள்  அவசியம்  பார்க்கலாம் . நெட்  ஃபிளிக்சில்  கிடைக்குது  . ரேட்டிங் 3.25  / 5 


Directed byMeghna Gulzar
Produced byVineet Jain
Vishal Bhardwaj
Written byVishal Bhardwaj
StarringIrrfan Khan
Konkona Sen Sharma
Neeraj Kabi
Music byScore:
Ketan Sodha
Songs:
Vishal Bhardwaj
CinematographyPankaj Kumar
Edited byA. Sreekar Prasad
Production
company
VB Pictures
Distributed byJunglee Pictures
Release date
  • 14 September 2015 (TIFF)
  • 2 October 2015 (India)
Running time
133 minutes[1]
CountryIndia
LanguageHindi
Budget₹15 crores[2]
Box officeest.₹30 crores[3]

0 comments: