Saturday, July 25, 2020

Dil Bechara ( HINDI-2020) - சினிமா விமர்சனம் ( எ ஃபீல் குட் மூவி )

கண்ணீர்  கூட தித்திக்கிறதே  என  ஒரு  பாடல்வரி இருக்கும். அழுகை , சோகம்  இதெல்லாம்   பெண்களுக்கான  டிபார்ட்மெண்ட்  என நான் ஒதுங்கியே இருந்தேன், சோக  முடிவுள்ள  படங்களைப்பார்ப்பதில்லை  என எழுதப்படாத வைராக்யத்தை  மூன்றாம்  பிறை  பார்த்து  விரதம்  முடித்தேன்
ஆர். சுந்தர்ராஜன்  இயக்கி  விஜயகாந்த் நடித்த தழுவாத கைகள் ( 1986 ) பார்த்து  மனசு கொஞ்சம்  பாரம் ஆச்சு . ஜாலியான  படங்கள்  எடுக்கும்  மணிரதனம் இயக்கிய  தெலுங்கு கீதாஞ்சலி   தமிழில்  மொழி மாற்றம்  செய்யப்பட்டு 10/5/1989   அன்று  இதயத்தை திருடாதே  என  வந்து  செம ஹிட் ஆச்சு . அந்த  வரிசைல  இந்தப்படமும்  ஒரு கிளாசிக்  மூவியா  உருவாகி இருக்கு 

ஹீரோ , ஹீரோயின்  இருவரும்   மரணத்தை  எதிர் நோக்கி  காத்திருக்கும்  கேன்சர்   பேஷண்ட்ஸ் .  இருவருக்குமான  ரசனைகள்  வெவ்வேற . இவர்கள்  இருவரும்  சந்தித்து  காதல்  வயபப்டுவதும்  அதற்குப்பின் நிகழும்  நிகழ்வுகளும்  தான்  படம் 


 ஹீரோவா சுசாந்த் பிரமாதமான  நடிப்பு , நம்ம  ஊர்  மவுன  ராகம்  கார்த்திக்  போல . இதயத்தை  திருடாதே  பார்த்தப்ப  ஹீரோ ஏன் எப்பவும்  உம்மணாம்மூஞ்சியாகவே இருக்கார் ? என நினைத்தது  உண்டு . ஆனா இந்தப்படத்துல்  படம்  பூரா  ஒரு உற்சாகத்துள்ளலுடனேயே வருகிறார். அவர்  வரும் காட்சிகளெல்லாம் இள்மை  பொங்கி    வழிகிறது  க்ளைமாக்ஸ்  காட்சியில்  பின்னிப்பெடல்  எடுத்துட்டார்


 ஹீரோயினா  சஞ்சனா சங்கி . மெழுகில்  வார்க்கப்பட்டது  போன்ற  அழகிய  முகம், இவர்  அந்த  கேரக்டராகவே  வாழ்ந்திருக்கிறார்னு சொல்லலாம். தைராய்டு  கேன்சர்  பேஷண்ட்டாக  வருவதால்  நாசி  துவாரங்கள்  இரண்டிலும்  ட்யூப் செருகி இருக்கும் கெட்டப்பில் படம் பூரா  வருவது  மட்டும்  லேசா  உறுத்துது. அதுவும்  சில  காட்சிகளில்  செட் ஆகிடுது. இவர்   ஆரம்பத்தில்  ஹீரோவை  அசால்ல்டாக  பார்ப்பதும், பின் தன் கண்களில்  பொழியும்  காதலை  மறைக்க  மெனக்கெடுவதும்  அழகிய  தருணங்கள் 

படத்தின்  மிகப்பெரும்  பலம்  ஒளிப்பதிவும்  இசையும்,  ஏ ஆர்  ரஹ்மான்   பிஜிஎம்மில்  சுமார்தான்  என  சிலர்  சொல்வதை  பொய்ப்பிக்கும்  வகையில்  இருவர்  படத்துக்குப்பின்  முழு  வீச்சில் இறங்கி  ஏறி அடித்திருக்கிறார்

 ஒளிப்பதிவு ஒவ்வொரு  ஃபிரேமிலும்  உள்ளேன் ஐயா  என்கிறது. ஆர்ட் டைரக்டர்  பல  இடங்களில்  சபாஷ்  போட வைக்கிறார்.  எடிட்டர் கனகச்சிதமாக  ஒன்றே  முக்கால் மணி  நேரபப்டமாக  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்


சபாஷ்  இயக்குநர்

1   ஹீரோ  ஒரு ரஜினி ரசிகர்  என்பதை  படம் பூரா   யூஸ்  பண்ணி  இருக்கார்  ரஜினி ரெஃப்ரன்ஸ்  படம் பூரா  ஆங்காங்கே   தூவப்பட்டிருக்கு , ஹீரோயின்  ஒரு  குறிப்பிட்ட  இசைக்கலைஞர்  ரசிகை  என்பதும்  அவரை  சந்திக்க பாரீஸ்  போகும்  நிகழ்வும்  திரைக்கதைக்கும் வேகத்துக்கும், துணை


2   லவ்  சப்ஜெக்ட்  படங்களுக்கே  உரித்தான்   ப்ரப்போசல்  சீன்,  ஊடல்  சீன்  சோகம் எல்லாம்   கனகச்சிதமாக  அமைக்கப்ப்ட்ட  விதம் 


3  ஹீரோவின்  நண்பன் கேரக்டர்  ஸ்கெட்ச் கதைக்கு  தேவை இல்லாதது என்றாலும்  வெரிகுட் ஆக்டிங் 


4  காதல் கதையில் ஏற்கனவே  நோய்  எனும் வில்லன்  இருக்க  எக்ஸ்ட்ரா  வில்ல ந் எதற்கு என  ஒதுங்கிய  விதம்  . நாயகியின்  பெற்றோர்  நாயகியை  ஹேண்டில்  செய்யும்  விதம்
 திரைக்கதையில் சில  நெருடல்கள் 


1   நாயகியின்  காதலுக்கு  எதிர்ப்பு  தெரிவிக்காத  பெற்றோர்  பாரீசுக்கு  நாயகியை  தனியே  காதலனுடன்  அனுப்ப  மறுக்க  சொல்லும் காரணம்  1980 களின்  அரதப்பழசான  காரண்ம். கன்னித்தன்மையை இழந்து விட்டால் என கேட்பது  நகைக்க  வைக்கிறது


2  பேரன்பு  படத்துல மம்முட்டி  தன் மகள்  குணம்  ஆக மாட்டாள்  என்பது தெரிந்து  தான் இருக்கும்போதே  அவள்  தாம்பத்ய  சுகம் பெற  வேண்டும்  என அதற்கு  ஆள்  ரெடி  பண்ணியது  ஓவர் டோஸ்  என  சிலரால்  விமர்சிக்கப்பட்டது . இந்தக்கதைல  வில்லன் இல்லை . விரைவில் இருவரும்  இறக்க  இருக்கையில் இதில்  என்ன  தப்பு  கண்டார்கள்?  சம்பிராதயமா  ஒரு மேரேஜ் பண்ணி  அனுப்பி இருக்கலாமே? 


3  பாரீசில்  அம்மா உடன்  வருவது  தவிர்க்க முடியாதது  என்றாலும்  இருவரும்  தனிமையில் இருக்க  ஒரு சந்தர்ப்பத்தை  உருவாக்கிய  பின்  அம்மா அவர்களை  கிராஸ்  கொஸ்டீன்  கேட்டு  அவர்களை  மட்டக்குவதும்  பத்தாம்  பசலித்தனம்

 சி.பி ஃபைனல்   கமெண்ட் -  பெண்களுக்கு மிகவும்  பிடிக்கும்  ஒரு அழகிய  காதல்  கதை . காதல்  வசப்பட்ட  ஆண்களும்  பார்க்கலாம்.  ரேட்டிங்  3.5  / 5
டிஸ்னி ஹாட் ஸ்டார் ல  ரிலீஸ் ஆகி இருக்கு . சப்ஸ்க்ரைப்  பண்ணாதவங்களும்  ஓசில பார்க்கலாம் 

 இதன் நாயகன் சமீபத்தில்  தற்கொலை  செய்ததாக  தகவல்  வந்தாலும்  அது கொலை  விசாரிக்கனும் என  அவர் மாமா  முறையிட்டிருக்கிறார்.

 இதன் ஒரிஜினல்  வெர்சன்  ஆன 

The Fault in Our Stars ( 2012)  கூட பின்  பாதியில்  கொஞ்சம்  போர் என  சிலர்  சொன்னாங்க . இதில்  அப்படி இல்லை ரசித்த  வசனங்கள்


1  கதைல  , சினிமா ல  வர்றது  மாதிரி   வாழ்க்கை ல  மகிழ்ச்சியான  முடிவு  கிடைக்கும்னு சொல்ல முடியாது


2  ஸ்வீட்  சாப்பிட்டா  தைராய்டு  கேன்சர்  என்னைக்கொண்டு போகும்  முன் சர்க்கரை  வியாதி  என்னை  கொன்னுடும்

3  மிஸ், உங்க  பேரு கிஸ் சி தானே? கிஸ் மீ  இல்லையே. நீங்க  எந்த   கிரகத்தில் இருந்து  வந்த  தேவதைனு சொன்னா  தெரிஞ்சுக்குவேன்

4  ஹீரோ ஆகனும்னு  யாரும்  முயற்சி செய்ய  வேணாம், என்னைப்பொறுத்த  வரை  பக்கத்து வீட்டுப்பையன்  போன்ற  தோற்றத்தில்  இருப்பவரும் ஹீரோ தான்


5   இழப்பால் , இறப்பால்  பாதிக்கப்பட்ட  யாரைக்கண்டாலும் அவங்களை  அரவணைச்சு  ஆறுதல்  சொல்லனும்னு எனக்கு  தோணும்

 ஓஹொ அப்போ என்னை  கட்டிப்பிடிச்சு  ஆறுதல்  சொல்லேன்


6   ஆண் சிங்கம் காட்டுக்கே  ராஜான்னு புகழப்பட்டாலும் பெண்  சிங்கம் தான்  கெத்து. வெட்டைக்கும் அதுதான் போகும். அந்த உறவு விஷயத்துலயும் அதுதான்  கெட்டி .  தொடர்ந்து 30 டைம் கூட கேப்  விடாம  உச்சம்  பெற  முடியும்


7  இதே  ரஜினி  ஸ்டைலை , ஜிம்மிக்சை  ஹாலிவுட்ல  யாராவது செஞ்சா  வாவ்  அப்டிம்பீங்க ,  கோலிவுட்னா இளக்காரம்


8   டாடி  உங்களுக்கு  டான்ஸ்  ஆடத்தெரியுமா?

 ஒய் நாட்? ஐ ஆம் ஏன் எஞ்சினயரிங்  ஸ்டூண்ட்,  எஞ்சினயரிங்    தவிர  மற்ற எல்லாமே தெரியும் 


9   , முதல்  முத்தம் ரொம்ப  ஸ்பெஷல்னு  சொல்வாங்களே? நிஜமா?

 ஆமா, இதுவரை  பல  பொண்ணுங்க  கிட்டே  முதல்  முத்தம்  வாங்கி  இருக்கேன்


10   என்னை  தவிர்ப்பதால் மட்டும் என் உணர்வுகளை  நீ மாத்திட முடியாது


11   முட்டாள்தனமா  நடந்துக்கறதுலயும்  சில  சமயம்  சந்தோஷம்  கிடைக்கும்

12   முற்றுப்பெறாத ஆசைகள்  கூட ஒரு  ஃபீலிங் தான்

Directed byMukesh Chhabra
Screenplay byShashank Khaitan
Suprotim Sengupta
Based onThe Fault in Our Stars
by John Green
StarringSushant Singh Rajput
Sanjana Sanghi
Music byA. R. Rahman
Production
company
Distributed byDisney+ Hotstar
Release date
  • 24 July 2020[1]
Running time
101 minutes
CountryIndia
LanguageHindi
  

0 comments: