Tuesday, July 28, 2020

VICKY DONOR (HINDI - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி மெலோ டிராமா)

நாயகி  ஒரு பேங்க் ல ஒர்க்  பண்ணுது, நாயகன்  வழக்கம்  போல  வெட்டாஃபீஸ். பேங்க்ல  அக்கவுண்ட்  ஓப்பன்  பண்ண  இண்ட்ரோ  சைன்  யாராவது போடனும், ஏன்? நீங்களே  போடுங்க அப்டினு பிட்டைப்போடறாரு. இப்டியே  அடிக்கடி காரணமே  இல்லாம  தண்டமா  பேங்க்  வந்து  வந்து  இருவருக்கும்  இடையே  பழக்கம்  ஆகுது. ஒரு சுபயோக  சுப தினத்தில்  ஹீரோ  ஹீரோயின்  கிட்டே ப்ரப்போஸ்  பண்றாரு, அதுவும்  ஓக்கே சொல்லிடுது


2 பேரும்  ஜாலியா  சுத்தறாங்க .அஞ்சு  வருசம்  ஆனாலும்  ஆண்  எப்பவும்  ஜாலியா சுத்தறதுல  சலிக்க  மாட்டான், ஆனா  பெண்  எப்பவும்  சேஃபர் சைடு . எப்போ  மேரேஜ்  பண்ணிக்கலாம்னு கேட்குது. எனக்கு  ஒரு நல்ல  வேலை  கிடைக்கட்டும்  அதுக்கப்புறம்  பண்ணிக்கலாம்னு ஹீரோ  சொன்னதும் ஹீரோயின்  கடுப்பாகுது. லவ் பண்ண , ஊர் சுத்த   வெல்லாம்  எதுவும் தேவைப்படலை? மேரேஜ்க்கு  மட்டும் தான்  இது   தேவையா?னு கேட்குது


இந்தக்கதைல  3  ட்விஸ்ட்  இருக்கு . ஒரு ட்விஸ்ட்  ஹீரோ  பார்ட்  டைம் ஜாப்  ஆக  ஒரு வேலை  பண்றார். சட்டப்படி  தவறில்லாத  ஒரு சமூக  சேவை  மாதிரிதான்  அது. ஆனா அந்தக்கால  ஜெனெரேசன்ல வளர்ந்தவங்க  சீக்கரம்  ஏத்துக்க  முடியாத  அல்லது  ஜீரணிச்சுக்க  முடியாத  சம்பவம்  அது. அதை  வெச்சு  ஒரு  20 நிமிசம்   காமெடி  டிராக்  ஓடுது


 2  வது  ட்விஸ்ட்  ஹீரோயினுக்கு  3  வருசம்  முன்பே  மேரேஜ்  ஆகி  டைவர்ஸ்  ஆகிடுச்சு. அதை  ஓப்பனா  ஹீரோ  கிட்டே  சொல்லிடுது, ஹீரோ  அதை  சாதாரணமா  எடுத்துக்கிட்டாலும்  அவர்  குடும்பம் ஜீரணிக்க முடியல .அப்புறம்  அவங்க  எப்படி  ஏத்துக்கறாங்க  என்பதில்  இன்னும் ஒரு சின்ன  ட்விஸ்ட்  இருக்கு , இது ட்விஸ்ட்  2 ல  பி  கேட்டகிரி


3  வது  ட்விஸ்ட்   2  பேருக்கும்  மேரேஜ்  ஆனபின்  ஹீரோயினுக்கு   ஒரு பிராப்ளம், ஒரு குழந்தைக்கு அவரால  நேரடியா  தாய்  ஆக  முடியாத  சூழல்இதை  எல்லாம்  அவங்க  எப்படி ஃபேஸ்  பண்றாங்க?  இறுதியில்  சுபமா? என்பதை  வெண் திரையில் காண்க 


 2012  ல் ரிலீஸ்  ஆன  இந்த  ஹிந்திப்ப்டம்   செம ஹிட்  அடிச்சதால  8 வருசம்  கழிச்சி  2020 ல  தமிழ்ல  ஹரீஷ்  கல்யாணை  வெச்சு   பண்ணாங்க , ஹிந்தி  அளவுக்கு  பிரமாதமா  போகலைன்னாலும்  சுமாராப்போச்சு. 15  கோடில  தயாரான இந்த  ஹிந்திப்படம் பாக்ஸ்  ஆஃபீசில்  67  கோடி  வசூலிச்சது கிட்டத்தட்ட  முதலீட்டைப்போல்  5  1/2  மடங்கு லாபம்


 ஹீரோவா  ஆயுஷ்மான் குரானா . இவர்  நடிச்சு  நான்  பார்க்கும்  3 வது  படம் . முதல்  படம்  அந்தாதூன்,2 வது  படம்          முதல்  2 படங்களும்  க்ரைம்  த்ரில்லர்  என்பதால்  இதில்  காமெடி  , செண்ட்டிமெண்ட் அப்டினு வெரைட்டி  ஆக்டிங்  காட்டி  இருக்கார் . நல்லா  ஒர்க் அவுட்  ஆகி இருக்கு 


ஹீரோயினா  யானி  கவுதம்   இவர்  காதலியா  இருக்கும் வரை  சராசரி  நடிப்பு , மனைவி ஆனபின்  ஆங்காரம், கோபம், சோகம்  என நவரசங்களையும் பிழியும்  நடிப்பு . நல்லா  பண்ணி  இருக்கார் 


 டாக்டரா  வர்ற  ரோல்  மிக  பிரமாதம். ஹீரோ - டாக்டர்  காம்போ  காட்சிகளில் காமெடி  டிராக்  வருவதால்  தனியாக்  காமெடி  டிராக்  தேவைபப்டலை  போல 


 சபாஷ்  டைரக்டர்


1   ஹீரோ  பண்ற  பார்ட்  டைம்  ஜாப்  அடிப்படையாக்கொண்டு  அமைக்கப்பட்ட  காட்சிகள்  இதுவரை  இந்தியா  சினிமாக்களில்,  வராத  அம்சம். கொஞ்சம்  பிசகினாலும்   ஆபத்தான  அம்சம். மிக  சாமார்த்தியமாகக்கையாண்ட விதம்  குட் 


2   என்னைப்பற்றிய உண்மைகளை நான்  மேரேஜ்க்கு  முன்பே  சொன்னேன், ஆனா  நீ ஏன்  உன்னைப்பற்றிய  உண்மைகளை  சொல்லலை? என  நாயகி மடக்கும்  விதம்  பிரமாதம்


3  குழந்தை பிறப்புக்கு  தகுதி  இருக்கா? என்ற  டெஸ்ட்  எனக்கு  மட்டும் தானா? ஏன் நீ  டெஸ்ட்  பண்ணலை? என  நாயகி  கேட்கும்போது  ஒரு ஆத்திரத்தில்  நாயகன்  உடைக்கும்  அந்த  ரகசியம் வெளிபப்டும்  காட்சி   வெரிகுட்  டைரக்சன்


4   நாயகனின் பாட்டி  கேரக்ட்ர்  ஸ்கெட்சை  மாடர்ன்  லேடியாகவும், நாயகனின் அம்மா  கேரக்டரை  அந்தக்கால  சம்பிரதாயங்களில் நம்பிக்கை உள்ளவராகவும்   அமைத்தது , அதை   வைத்து  , அந்த  முரணை  வைத்து  அமைக்கப்ட்ட  காட்சிகள்  அருமை 


5  க்ளைமாக்ஸ்க்கு முன்  வரும்  அந்த  15  நிமிடக்காட்சிகள்  நெகிழ்ச்சி . இந்த  போர்சன்  பெண்களை  மிகவும் கவரும். குறிப்பாக  மேரேஜ்  ஆகி  சில  வருடங்கள்  குழந்தை  இல்லாமல்  சிரமப்பட்ட  தம்பதிகள்  மனம்  விரும்பிப்பார்க்கக்கூடும்

நச்  டயலாக்ஸ்

1  பேங்க்ல  அடுத்தவங்க பணத்தை  எண்ணுவது  எல்லாம் ஒரு வேலையா? நாம சம்பாதிக்கனும், அதை நாம எண்ணனும்

2  மிஸ்!  உங்களுக்கு  பாய் ஃபிரண்ட்ஸ்  யாரும்  இல்லையா?

 ஆமா,  எப்படித்தெரியும்?

 அப்டி இருந்திருந்தா  நாய் மாதிரி  பின்னாலயே  சுத்திட்டு  இருப்பாங்களே? சிங்கிளாத்தானே  இருக்கீங்க?


3   இதுவரைக்கும் நீங்க கேட்ட கேள்விக்கு  எஸ்   சொல்லவே இல்லை

, எஸ்  மிஸ், ஆனா  நோ  கூட தான் சொல்லலை?


4   இது சும்மா  வேஸ்ட்  ஆகப்போறதுதானே? தானமா  தந்தா  என்ன?

 அதுக்காக  சிண்ட்டெக்ஸ்  டேங்க்லயா சேவ்  பண்ணி  வைக்க முடியும்?


5  டாக்டர், அட் லாஸ்ட்  உங்க  அலெக்சாண்டரைக்கண்டுபிடிச்சுட்டீங்க

 ஆமா, அந்த  விஷயத்தை  அவனை உணர  வைக்கனுமே? 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1  ஊர்ல  1008  ஆண்கள்  இருக்காங்க . அவங்களை  எல்லாம்  விட்டுட்டு  டாக்டர்  ஹீரோ பின்னாலயே சுத்திட்டு இருப்பது  ஓவர்  டோஸ். அதுக்கான  காரணங்க்ளை  சொல்லி  சமாளிக்கறாங்க , ஆனா  பலவீனமான  காரணம் 


2  டாக்டரோட   பி.ஏ  ஹீரோவைப்பார்க்க ஆட்டோவில் வர்றார். வாசலிலேயே  இருக்கும் ஹீரோ அவருக்குத்தர வேண்டிய ஒரு பொருளை  தந்து  அனுப்பறார், நாயகி  அதைபபார்த்து  டவுட்  வந்து  அது யாரு? என்ன விஷயம்?னு  3 டைம் கேட்டும் ஹீரோ ஒண்ணும் இல்லைனு சாமாளிக்கிறார். ஏன் பம்மனும்?   தெரிஞ்ச  நண்பர் . ஒரு உதவி கேட்டார் , தந்து  அனுப்பினேன்னு எதுனா சொல்லி சமாளிக்கலாமே?


3  ஹீரோவுக்கு  மார்க்கெட்  நிலவரம் தெரியாது, எதுக்காக  டாக்டர்  அவர்  டிமாண்ட் பர்சன்னு  வாலண்ட்ரியா  சொல்லி ரேட்  ஏற்றி விடுகிறார்?


4   நாயகிக்கு  குழந்தை  பாக்கியம்  இல்லை  என்றதும் ஒரு பரிதாப இமேஜ் ஏற்படுது, ஆனா  ஒரு சீனில்  ஏன் உனக்கு டெஸ்ட்  எடுக்கலை? என சீறூம்போது  வில்லி  இமேஜ்  விழுதே. அந்த  இடத்தில் அவரது  ரீ ஆக்சன் கொஞ்சம்  ஓவர் டோஸ்  மாதிரி  படுது


5  இது  சட்டப்பூர்வமான  சேவை தான்  என  சொல்லும் டாக்டர்  ஆன் லைன்  நெஃப்ட் மூலம்  பணத்தை நாயகன்  அக்கவுண்ட்க்கு மாற்றி விடாமல்    கேஷாக  25  லட்சம்  ஒரு பேக்கில்  போட்டு கொடுத்து  அனுப்புவது ஏன்?  அந்த  சீனில்  போலீசில்  மாட்டும் காட்சிகள்  தவிர்த்திருக்கலா,மே?


6 கிட்டத்தட்ட  25  வருடங்களா  நாயகனின் அம்மா  அழகு  நிலையம்  நடத்தி  வருகிறார், நாயகன் உதவியா  இருக்கார் . நாயகியின் பெற்றோர்  நாயகன் என்ன ஜாப் என கேட்கும்போது  தடுமாறாமல்  அழகு நிலையம் நடத்தறோம்னு சொல்லலாமே?


7  போலீஸ் அந்த   கேஷ்  25 லட்சம்  பிடித்ததும்  அந்தப்பணம்  தவறான  தொழில்  செய்ததால்  கிடைத்ததா?  என கேட்பதும், அக்கம் பக்கம்  வீடுகள்  அவங்களைக்கேவலமாகப்பார்ப்பதும்  நாடகத்தனம், அவங்க  இத்தனை  வருசமா  அங்கே  போனவங்க  தானே? தெரியாதா?


 சி.பி ஃபைனல் கமெண்ட் -   முன்  பாதி காமெடி , ரொமான்ஸ்னு போவதால்  ஆண்களுக்குப்பிடிக்கும், பின் பாதி  செண்ட்டிமெண்ட்  காட்சிகள்  அதிகம் என்பதால்  பெண்களுக்குப்பிடிக்கும்.  நல்ல  ஃபேமிலி டிராமா . ரேட்டிங்  3 / 5 

0 comments: