Wednesday, June 03, 2020

HELEN - (மலையாளம்) - சினிமா விமர்சனம் ( குவாரண்ட்டைன் த்ரில்லர் )

HELEN - (மலையாளம்) - சினிமா விமர்சனம் ( குவாரண்ட்டைன் த்ரில்லர் )



ஒரு வாட்சப் க்ரூப்ல ஒரு விவாதம் ஓடுச்சு. அதுல ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்துக்கு ஹீரோ , வில்லன் முக்கியமா? அவங்க 2 பேர் இல்லாம அப்படிப்பட்ட படம் பண்ண முடியாதா? அப்டினு ஒரு விவாதம் ஓடிட்டு இருந்தது. அப்போ டக்னு எனக்கு ஞாபகம் வந்த படம் தான்  2019 ல சத்தமே இல்லாம ரிலீஸ் ஆகி போட்ட முதலீட்டைப்போல் 3  மடங்கு சம்பாதித்த மினிமம் பட்ஜெட் படமான ஹெலன். இந்தப்படம்  கேரளா- கோட்டயம்- சங்கணாச்சேரி அபினயா வில் பார்த்தேன்


மலையாளப்படங்கள் ல  ஓப்பனிங்ல ஒரு அமைதியான நதியின் அழகான பயணம் போல் எப்போதும் திரைக்கதை , காட்சிகள்  மெதுவாகதான் போகும்.


ஹீரோயின் ஒரு நர்ஸ். அப்பாவுடன் கொச்சில வசிக்கிறா. அப்பாவும் மகளும் நல்லா நண்பர்கள் போல பழகறாங்க , அக்கம் பக்கம் வீடுகள்ல ஒரு நர்சா ஒரு மனுஷியா  பல உதவிகள் செய்யற ஹீரோயினுக்கு அப்பாக்கு தெரியாம காதல், காதலன்  உண்டு . முதல் அரைமணி நேரம் இந்த சூழ்நிலையை விவரிக்கும் வண்ணம் கதை பயணப்படுது

 ஹீரோயின் ஃபாரீன் போய் வேலை செய்ய ஒரு ட்ரெய்னிங் செண்ட்டர்ல படிக்குது. க்ளாஸ் முடிச்ட்டு  மாலை  கே எஃப் சி எனும் கோழிப்பண்டக சாலை  பார்ட் டைம் சேல்ஸ் கேர்ளா வேலை பாக்குது


அந்த கடை ஓனர் ஒரு மார்க்கமான ஆளு . ஒரு நாள் வேலைக்குப்போன பொண்ணு திரும்ப வர்லை . அப்பா போலீஸ்ல புகார் தர்றாரு. போலீஸ்க்கு காதலன் மேலும், கடை ஓனர் மேலும் டவுட் 

அந்தப்பொண்ணுக்கு என்ன ஆச்சு? எப்படி அந்த சிக்கலை ஃபேஸ் பண்ணுச்சு ? உயிரோட மீண்டு வந்ததா? இல்லையா? என்பதை திரையில் காண்க

 ஹீரோயினா அன்னா பென். ஆல்ரெடி கும்பாளிங்கி நைட்ஸ்ல நாயகியா நடிச்சவர் தான். இவர் ஒப்பனை இல்லாத நந்தியாவட்டை மலர் போல மிக இயல்பான முக அழகு  கொண்டவர் . சிரிக்கும்போது மட்டும் இவர் முகம் ரோஜாவைப்போல் அழகு கூடி விடுகிறது . பயத்திலும் , பதட்டத்திலும் முக  வியர்வையுடன் கூடிய பய முகம் நளினி , ஜீவிதாக்களுக்கு சவால் விடுகிறது. ( இத்தனை வருச தமிழ் சினிமாவில் திகில் படங்களில் முக பயத்தை பர்ஃபெக்டா  காட்டியவர்கள் யார்? படத்தில் நூறாவது நாள் ல நளினி யும்  ஹலோ யார் பேசறது ? ஜீவிதாவும் தான் _)


படம்  ஓப்பனிங் சீன்ல நாயகிக்கு என்ன நடக்கப்போகுது என்பதை குறியீடாக அந்த பனிக்கட்டியில் ஊறும் எறும்பை வைத்து 10 நிமிச காட்சி அமைப்பு அபாரமான ஐடியா  




சபாஷ் இயக்குநர்

1  இது ஒரு  உண்மை சம்பவம் , திரை சுவராஸ்யத்துக்காக எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகள் கொஞ்சம்


2   நாயகியை கண்ணியமா , எந்த அளவு அழகா காட்ட முடியுமோ அந்த அளவு  அழகா காட்டி இருப்பது


3  பெரிய ஹீரோ வின் கால்ஷீட்டோ , பிரமாண்டமான லொக்கேஷனோ , செட்டிங்கோ ஒரு திறமையான திரைக்கதை ஆசிரியருக்கு தேவை இல்லை என்பதை ச்மார்த்தியமாக நிரூபித்த விதம் 


4   கோடை கால மழையாய் , மழைக்கால அதிசய வெய்யிலாய் டென்சனை ஏற்றும் திகிலான திரைக்கதையில் ரிலாக்சாக ரசிக்க வைக்கும் ரம்மியமான காதல் காட்சிகள்  அழகு 

5  கதைப்படி நாயகி தனக்குத்தானே சிகிச்சை அளித்துக்கொள்ளும் காட்சிகள் கதைக்கு முக்கியம் என்பதாள் அவரை நர்சாக கேரக்டர் வடிவமைத்த சாமார்த்தியம்  ( நிஜக்கதையில் நாயகி நர்ஸ் அல்ல) 





லாஜிக் மிஸ்டேக்ஸ் 


1  அவ்ளோ பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்ல  சிசிடிவி கேமரா இல்லாம இருக்குமா? போலீஸ்  முதல்ல அதை செக் பண்ணாம விட்டது ஏன்? 

2    செக்யூரிட்டியிடம் நாயகியின்  ஃபோட்டோவைக்காட்டி போலீஸ் ஆரம்பத்திலேயே  விசாரிக்காதது ஏன்? 


3  நாயகியின் காணாமப்போன சம்பவத்துக்கு அவள் காதலன் தான் காரணம் எனில் அவன் எப்படி  ஸ்பாட்ல இருப்பான்? அவன் மேல எதுக்கு டவுட் வருது?


4  ராட்சச ஃபேனை இயங்க வைக்காமல் செய்ய ஆரம்பத்துலேயே நாயகி முயற்சி செஞ்சிருக்கலாம். சும்மா அட்டையை வெச்சு மூடுனாலோ மறைச்சாலோ காத்துக்கு அது தள்ளப்பட்டு விடும் என்பதை நாயகி யூகிக்காதது ஏன்? 


 சி.பி கமெண்ட் =  மிகக்குறைந்த நடிகர்கள் ., மிகக்குறைவான பட்ஜெட்டில் எப்படி ஒரு ஏ செண்ட்டர் ஃபிலிம் எடுப்பது மிக மிக கடினம்., அந்த கடினமான பணியை சர்வசாதாரணமாக  செய்த  அறிமுக இயக்குநர் மாத்துக்குட்டி சேவியர் , தயாரிப்பாளர் வினீத் சீனிவாசன் இருவருக்கும் பூங்கொத்துகள் . பணிக்குச்செல்லும் பெண்கள் அனைவரும் தவற விடாமல் பார்க்க வேண்டிய படம் 

0 comments: