Wednesday, June 03, 2020

ஊரடங்கு முடிந்தபின் நாம் எதெல்லாம் மிஸ் பண்ணியதாக உணர்வோம்?

1  ஆஃபீஸ்ல வேலை செய்யாம வேளா வேளைக்கு வீட்ல சாப்ட்டு , டி வி பார்த்துட்டு இருந்த சொகுசான வாழ்வை மிஸ் பண்ணுவேன்


=============

2 கங்கை நதி உட்பட அனைத்து நீர் நிலைகளும் சுத்தமா இருந்ததை மிஸ் பண்ணுவேன்

==============


3 ஒரு காலத்துல சினிமா தியேட்டர்கள் எல்லாம் என்னமா ஆட்டம் ஆடுனாங்க . பிரபல ஹீரோக்களின் படம் ரிலீஸ் ஆனா முதல் ஷோ டிக்கெட் 500 ரூபா 1000 ரூபா அந்த கொட்டம் 4 மாசமா அடங்கி இருந்தது.. இனி மீண்டும் பழைய ஜிகிடி கதவைத்திறடினு ஆரம்பிக்கும் . அதை மிஸ் பண்றேன்

===========

4 காய்கறிகள் எல்லாம் கடைல தான் வாங்குவோம், இந்த ஊரடங்கில் ரோட்டோரமா வேன்ல வெச்சு குறைஞ்ச விலைக்கு வித்துட்டு இருந்தாங்க , கடை வாடகை இல்லை , போலீஸ் மாமுல் இல்லை , அதனால கம்மி விலை , இனி அது கிடைக்குமா தெரில , அதை மிஸ் பண்றேன்

==========

5 பார்க்ல , பீச்ல எங்கே பார்த்தாலும் நல்ல காதல் , கள்ளக்காதல் ஜோடிகள் சுத்தும், கொஞ்ச நாட்களா அவங்க ரவுசு இல்லாம இருந்துது. இனி எப்டி தெரில


=============

6 விகடன் ல லாக் டவுன் சிறுகதை 10 செகண்ட் கதை டைப் எபிசோடு முடிவுக்கு வந்துடுமே? அதை மிஸ் பண்றோம்

==============


7 பெட்ரோல் , டீசல் புகை இல்லாம காற்றுமண்டலமே சுத்தமா இருந்தது , அதை இனி பாக்க முடியுமா?

===============

8 நம் வீட்டுக்குழந்தைகள் , அக்கம் பக்கம் உள்ள குழந்தைகளுடன் குழந்தையோட குழந்தையாய் குதூகலாம்ய் விளையாடி மகிழ்ந்த அந்த தங்க தருணங்களை...மிஸ் பண்றோம்


=============

9 ஹவுஸ் ஓனர் 3 மாசமா வாடகையே கேட்கலை , இனி கேட்பாரே? சால்ஜாப் சொல்ல முடியாதே? அதை மிஸ் பண்றோம்

===========

10 தினசரி 4 காட்சிகள்னு சினிமா தியேட்டர் கணக்கா அமேசான் ப்ரைம், நெட் ஃபிளிக்ஸ் -னு கலந்து கட்டி சினிமா பார்த்தோம் ,அதை மிஸ் பண்றோம்

============

11 பக்கத்து வீட்டு ஆண்ட்டிகளோட தாயக்கரம் , பல்லாங்குழி விளையாடிட்டு இருந்தோம் , இப்போ ஆஃபீஸ் போய்டுவாங்க . ச்சே , வாழ்க்கையே சூன்யம் ஆகிடுச்சு , அதை மிஸ் பண்றோம்

==============

12 வின்னர் வடிவேலு மாதிரி லுங்கி கட்டிக்கிட்டு ஜாலியா ஃப்ரீயா வீட்ல பெப்பெரெப்பேனு கிடந்தோம்,அதை மிஸ் பண்றோம்


============

13 இது இரவா? பகலா? அப்டினு பாட்டு வருமே , அது மாதிரி கால நேரம் தெரியாம தூங்கிட்டு இருந்தோம், அதை மிஸ் பண்றோம்

==============

14 நாம என்னமோ நாட்டையே தாங்கிட்டு இருந்த மாதிரி தினசரி 12 மணி நேரம் நியூஸ் சேனலையே பார்த்து செய்திகளை அப்டேட்டா ஃபிங்கர் டிப்ஸ்ல வெச்சுட்டு இருந்தோமே , அதை மிஸ் பண்றோம்

==============

15 எந்தெந்த அபார்ட்மெண்ட்ல என்ன என்ன டைம்ல ஆண்ட்டிகள் கோலம் போட வெளில வருவாங்க , ஊர்க்கதை பேச எப்போக்கூடுவாங்க அப்டினு ஒட்டுக்கேட்டுட்டு , ஒட்டு பார்த்துட்டு இருந்ததை மிஸ் பண்னப்போறேன்


=============

16 கொரோனாவை சாக்கா வெச்சுக்கிட்டு ஃபேஸ் புக் தோழிகளுக்கு ஃபோன் போட்டு ஜாக்கிரதை தோழி , கவனம் தோழி , மாஸ்க் இல்லாம வெளில போகாதீங்க தோழினு விழிப்புணர்வு கமெண்ட்ஸ் போட்டுட்டு இருந்தோம், அதை மிஸ் பண்றோம்

==========

17 சலூனுக்குப்போக வழி இல்லாம செல்ஃப் கட்டிங் பண்ணிய காமெடிக்கூத்துகள் அக்கம் பக்கம் நடந்ததை வேடிக்கை பார்த்த அனுபவங்கள் ,அதை மிஸ் பண்றோம்

===========

18 நைட் படுக்கும்போது காலைல இத்தனை மணிக்கு எந்திரிக்கனும்னு அலாரம் வைக்கற அவசியமே இல்லாம டென்சன் இல்லாம தூங்கின அந்த கோல்டன் மெம்ரீஸ் அதை மிஸ் பண்றோம்

==============
19    ஆஃபீஸ்ல 12 மணி நேரம் ஜவ்விழுப்பு இழுத்த வேலைகளை ஒர்க் ஃப்ரம் ஹோம் சாக்குல 6 மணி நேரத்துல முடிச்ட்டு அப்றம் அப்றம் அப்டினு அலாவுதீன் விளக்கு பூதம் மாதிரி தெனாவெட்டு காட்டின தருணங்கள் அதை மிஸ் பண்றோம்


=============

20 வாக்கிங் , ஜாகிங் , யோகா, ஜிம் இதுக்கெல்லாம் டைம் ஒதுக்கி நல்லா உடம்பை மெயிண்ட்டெய்ன் பண்ணியாச்சு , இனி அது முடியாது

====================

0 comments: