Tuesday, June 30, 2020

Kavaludaari ( KANNADAM - சினிமா விமர்சனம் ( இன்வெஸ்டிகேஷன் க்ரைம் த்ரில்லர்)ஹீரோ டிராஃபிக் டிபார்ட்மெண்ட்ல  சப் இன்ஸ்பெக்டரா இருக்கார், பல டைம் க்ரைம் பிராஞ்ச்க்கு மாற  ட்ரை பண்றாரு , ஆனா நடக்கலை .ஒரு நாள்   இவரு ட்யூட்டி பார்த்துட்டு இருக்கும்போது  சாலை  விரிவாக்கப்பணில    ஒரு இடத்துல  குழி தோண்டறாங்க , அங்கே  3  எலும்புக்கூடுகள்  கிடைக்குது. இதுல பெரிய  மர்மம் இருக்குனு ஹீரோ நினைக்கறாரு. ஆனா டிபார்ட்மெண்ட் ல ஹையர் ஆஃபீசர்  பெருசா அதை கண்டுக்கலை , அலட்டிக்கலை . ரிப்போர்ட்  வருது . 40 வருடங்களுக்கு முன் காணாமப்போன  ஆர்க்கியாலஜி  டிபார்ட்மெண்ட்டை சேர்ந்த  ஒருவரும் அவர் மனைவி , குழந்தை  இவங்க 3 பேரோட  எலும்புகள்  தான் அவை 


 ஹீரோ ஆர்வம்  மேலிட  இந்த கேசை டீல் பண்ண  நினைக்கறாரு , ஆனா  ஹையர் ஆஃபிசர்   இது  க்ரைம் பிராஞ்ச்  பார்த்துக்குவாங்க , நீ உன் வேலையை மட்டும் பாருங்கறாரு   ஆனா  ஹீரோ அதைக்கேட்காம  செல்ஃப் இண்ட்ரெஸ்ட் எடுத்து அந்த  கேசை  துப்பு துலக்கறாரு , பல  அதிர்ச்சிகரமான  உண்மைகள்  வெளி வருது 

மிகக்குறைந்த  பட்ஜெட்ல எடுக்கப்பட்ட  கன்னட படம் 12/4/2019ல்  ரிலீஸ் ஆச்சு, இந்தப்படம்  செம  ஹிட் ஆச்சு . இதை தெலுங்கு , தமிழ்ல ரீமேக் பண்னாங்க , சிபி ராஜ் நடிச்ச கபடதாரி இந்தப்பட  ரீமேக் தான். மலையாளம், ஹிந்தில யும் ரீமேக்கப்படுது. முக்கியமான  காரணம்  திரைக்கதை  பக்காவா அமைஞ்சதுதான்


ஹீரோவா  ரிஷி . நம்மா ஊர் சேரன்  மாதிரி மிக யதார்த்தமான   நடிப்பு . ஓவர் பில்டப்போ ஓவர் ஆக்டிங்க்கோ இல்லை  நாயகி  ஹோம்லி லுக் . லவ் , டூயட் , மொக்கை காமெடி எல்லாம் எதுவும்  கிடையாது


 டீசண்ட்டான  க்ரைம் த்ரில்லர் , அமேசான் பிரைமில்  கிடைக்குது


  சபாஷ் டைரக்டர் 

1   40 வருடங்களுக்கு  முன்  அந்த  கேசை  டீல் பண்ணுன  போலீஸ் ஆஃபீசரை  அணுகுவதும்  அவரை தனக்கு உதவ சம்மதிக்க வைக்கவும்  ஹீரோ எடுக்கும் முயற்சிகள் , தந்திரங்கள்   குட் 


2  நக்கீரன் , ஜூ வி மாதிரி இன்வெஸ்டிகேசன் ஜர்னலிச  மேகசின் ரிப்போர்ட்டர்  அவர்  மகள்  இவர்களுடனான  பாண்டிங்  கதைக்கு  ஸ்பீடு கொடுத்தது 

3    கொலையாளி யார் என்பதை  க்ளைமாக்ஸ்க்கு 40   நிமிடங்கள்  முன்பே  காண்பிச்ட்டாலும்  த்ரில்  குறையாம  திரைக்கதையை அமைச்சது

4  ஹீரோ   கேஸ் சம்பந்தமான  ஃபைலை படிக்கும்போது  ரூமில் 50 பேரைக்காட்டுவதும்  ஒவ்வொரு ஆள் பற்றி தெரிஞ்ச  பின் அவங்க் அந்த ரூமை  விட்டு வெளியேறுவதும்    ஹீரோவின் கற்பனையில்  நமக்கு  ஒரு தெளிவைக்காட்ட  பயன்படுத்தப்பட்ட  அந்த  யுக்தி அபாரம் 


நச்  டயலாக்ஸ்


1  ஒரு கொலைக்கேஸ்ல  இறங்கும்போது  முதல் வேலையா ஏதாவது திருடு  போய் இருக்கா?னுசெக் பண்ணனும்


2   இன்ன தேதி  , இன்ன நேரம்  அப்டினு இறப்பு ந்டைம் குறிச்சு வெச்சு யாருக்கும் வராது 


3   எமர்ஜென்சி  கால கட்டத்தில் தான் ( 1975)   ரவுடிங்க , பொறுக்கிங்க   அரசியலுக்கு வந்தது


4  நாம  ரியாலிட்டியை விட்டு  ரொம்ப தூரம் வந்துட்டோம்னா   தீர்வுகள்  நம்ம கையை விட்டுப்போகுதுனு அர்த்தம்


5  காத்திருத்தல் , பொறுமை  இந்த  இரண்டுமே   போலீஸ்  லைஃப்ல முக்கியமானது


6  சிங்கத்தை நாம நெருங்கும்போதே  அதுக்கு நம்ம  வாசனை  காட்டிக்கொடுத்துடும்


7   பெரிய   பெரிய  கனவுகளோட  இருக்கறவங்களை  நாம  தவறா  வழி நடத்துவது  ஈசி 


8  எப்பவுமே  ஏழைகள்  பெரிய கனவுகளோட தான்  காத்துக்கிட்டு இருப்பாங்க்ச்


9 ரொம்ப   கஷ்டமான  கனவு பிராஜெக்டை  செஞ்சு முடிக்க  குறுக்கு வழி தான் சிறந்ததுனு சிலர் தவறா  நினைக்கறாங்க 


10  நம்ம வாழ்க்கையை விட நம்ம கனவுகள்  பெருசு என்பதால் அதை  டேலி பண்ண நாம கத்துக்கனும்


11  பணக்காரன் ஆகனும்கற சாதா ஆசை மட்டும் தான் எனக்கு இருந்துச்சி, ஆனா பணக்காரன் ஆனதும்  அரசியல்வாதி ஆகனும்னு ஆசை வந்துடுச்சு 


12   யாரும்  தொட முடியாத  உயரத்தை அடையனும்னு  நான்  முடிவு செஞ்சது  யாரும்  நினைச்சுப்பார்க்க முடியாத  வயசுல 


13  கண்னாடியை  உடைக்க  சின்ன கல் போதும்

14   இம்பெர்ஃபெக்டா  இருக்கறதுல யும் ஒரு அழகு  இருக்கு 


15   இந்த சமூகம் நல்லவங்களை ஆதரிக்காதப்ப  சமூக சேவை செய்வதிலும் , நல்லவனா இருப்பதிலும் என்ன பயன் இருக்க முடியும்?  


லாஜிக்  மிஸ்டேக்ஸ்


1  பிரபலமான  புகழின்  உச்சத்தில்  இருக்கும் ஒரு நடிகை   தன்னை  விசாரிக்க  வந்த  போலீஸ் ஆஃபீசரை வலியனா போய் மயக்க நினைபப்து ஏன்? பேசிக் இன்ஸ்டிங்க்ட் ல  ஹீரோயின் அந்த  மாதிரி செஞ்சான்னா அவ மேல  தப்பு இருந்ததால  அதை மறைக்க அப்டி செஞ்சா . நடிகை மேல  தப்பே இல்ல , ஏன் தப்பா நடந்துக்க  ட்ரை பண்றா?


2   மேடையில்  மாநில  முதல்வருக்கு    பானத்தில்  விஷம் கலந்த  கப்பை எல்லாம் அவ்ளோ சர்வசாதாரணமா    எல்லாம்  தந்துட முடியாது , ஏகபப்ட்ட  செக்யூரிட்டி இருக்கும்  


3  க்ளைமாக்ஸ் ல  வில்லனுக்கு  தரப்பட்ட அதே  விஷத்தை தான் இன்னொரு  சின்ன  வில்லனும் தானே சாப்பிட்ட்தா சொல்றான், ஆனா அவன் மட்டும்  முதல்  வில்லனை விட அதிக  நேரம்   உயிரோட  இருப்பது  எப்படி?

4  ஹீரோவான டிராஃபிக் எஸ் ஐ  மேலிட  உத்தரவை  மீறி  இன்வெஸ்டிகேஷன்  பண்றார். ஆனா மேலிடத்துக்கு  அந்த  தகவல்கள்  எதுவுமே தெரியாம்  இருக்கே ? எப்படி?  யாருமே  போட்டுத்தர்லையா?  பொதுவா  எல்லா ஆஃபீஸ்லயும்  ஒருத்தனை போட்டுக்குடுக்க  எட்டப்பன்கள் இருப்பான்களே? 


 சி.பி  ஃபைனல்  கமெண்ட் -  பிரமாதமான  படம்  என சிலாகிக்க  முடியாவிட்டாலும் இது ஒரு நல்ல  க்ரைம்  த்ரில்லர்  மூவி என்ற    வகையில்  பார்க்கலாம் . ரேட்டிங்  3 / 5   அமேசான்  பிரைம் ல கிடைக்குது 


Directed byHemanth Rao
Produced byAshwini Puneeth Rajkumar
Screenplay byHemanth Rao
Starring
Music byCharan Raj
CinematographyAdvaitha Gurumurthy
Edited byJagadeesh
Production
company
PRK Productions
Distributed bySri Vajreshwari Combines
Release date
  • April 12, 2019
CountryIndia
LanguageKannada

0 comments: