Wednesday, June 24, 2020

MANU ( TELUGU) 2018 - சினிமா விமர்சனம் ( சஸ்பென்ஸ் த்ரில்லர் )




பொதுவா சினிமாவுக்கு விமர்சனம் எழுதறவங்க 2  வகை . கதை என்ன?னு சொல்லாம  படத்தின்  பிளஸ் , மைனஸ்களை  பட்டியலிட்டு  பார்க்கலாமா? வேண்டாமா?  என ஃபைனல் கமெண்ட்  குடுக்கறவங்க  முதல் வகை.இவங்களுக்குதான் அதிக மரியாதை .  கதை , திரைக்கதை ., வசனம் உட்பட எல்லாத்தையும் அவுட் பண்ணி படம் பார்க்கும் சுவராஸ்யத்தை  தருபவர்கள் / கெடுப்பவர்கள்   அடுத்த வகை .  நான் எப்பவும் 2 வது வகைதான். ஆனா இந்தப்படத்துக்கு மட்டும்  முதல் வகைல  சேர விரும்பறேன்

ஏன்னா இந்தப்படத்தோட பிரமாதமான திரைக்கதை, எடிட்டிங்  ஸ்டைலை நீங்க அனுபவிக்கனும்னா படத்தோட  ஒன் லைன்  என்ன? என்பதை  தெரியாமல்  பார்த்தாதான் சுவராஸ்யம்

 தமிழ்ல இதை ரீமேக் பண்ணினா தனுஷ் , அல்லது சிம்பு  பொருத்தமா இருப்பாங்க 

முதல் 50  நிமிடங்கள் படம் பார்த்துட்டு  இந்த சீன் நல்லாலை , இது தேவையே இல்லாத ஆணி அப்டினு ஒரு சீன்  கூட நீங்க சொல்லிட முடியாது , அதே சமயம்  இந்தப்படத்தோட கதை என்னவா இருக்கும்? அப்டினு யூகிக்கவும் முடியாது . அதுதான் இயக்குநரின் சாமார்த்தியம்/


 அடுத்த 60  நிமிடங்கள் படம் பார்த்ததும்  கதை எதை நோக்கிப்போகுதுனு ஓரளவு  யூகிக்க முடிஞ்சாலும் இதுக்கான க்ளைமாக்ஸ் என்னவா இருக்கும்?   என  யோசிக்க வைக்கும்


மொத்தம்  ஓடும் 3 மணி நேரப்படத்துல  இயக்குநரே  தான்  எடிட்டிங் ஒர்க்கையும் பார்த்திருக்கிறார்  என்பதால்   மிகப்பிரமாதமான  கட்டிங்க் ஒட்டிங்


படத்தோட  இசை அருமை . ஒளிப்பதிவும்  குட் . படம் பூரா வரும் ஒரு தீம் ம்யூசிக்  ரொம்பவே ரசிக்க வெச்சுது

சபாஷ் டைரக்டர்


1  தூங்காதே தம்பி தூங்காதே படத்தில் கமல் ஒரு பெஞ்ச் ஃபைட் பண்ணுவார். இதுவரை  வந்த தமிழ் சினிமாக்களில் அப்படி ஒரு ஃபைட்  இதுவரை வந்ததில்லை. அது போல  இதில்  ஒரு ஃபைட் சீன் இருக்கு . சுத்தியல், ஆணி , டேபிள்  ஃபைட்.,  ரொம்ப ஸ்டைலிஷா  இருக்கும் 


2  ஹீரோயினை கவர்வதற்காக  அவரோட சொந்தங்களுக்கு  ஹீரோ உதவும் காட்சிகளைப்பார்த்திருக்கோம். ஆனா ஹீரோயினோட அப்பானு தெரியாமயே  ஹீரோ உதவுவார்.  கடைசி வரை அந்த  உதவி பற்றி  ஹீரோயினுக்கு  தெரிஞ்சிருக்காது 


3  ஒரு பிரமாதமான எடிட்டிங்  திறமையால  கட் பண்ணி கட் பண்ணி  மாற்றி மாற்றி கதை சொன்னதால  இது பிரமாதமா பேசப்படும் படமா ஆகி இருக்கு. இதே கதையை  ஒரு டைரக்டர்  கிட்டே கொடுத்து  எந்த  டெக்னிக்கும் இல்லாம நேரடியா  கதை சொல்லனும்னு டாஸ்க்  கொடுத்தா  இது சராசரிப்படம் ஆகி இருக்கும் 


4 ஹீரோ  ஒரு  ஓவியர்  என்பதையும்  ஹீரோயின் ஒரு  சயின்ஸ் ஸ்டூடண்ட் என்பதையும் எந்த அளவு திரைக்கதைல யூஸ் பண்ணிக்கிட்டாங்க என்பது  பிரமிப்பு




 நச்  வசனங்கள்



1   பொண்ணுங்க எப்பவுமே  ஷார்ட் டெம்ப்பர் வகையறாக்கள்  தான்


2  இந்த ,மாதிரி முட்டாள்தனத்தை கற்பனைல  மட்டும் தான்  என்னால செய்ய முடியும்


3  ஒவ்வொரு கலரும் ஒவ்வொருவருவருக்கு  பிடிக்கும், ஒருவருக்கு பிடிக்கும்  கலரை  வெச்சு  அவங்க  குணத்தை  சொல்ல  முடியும்


4  ஜெயிக்கறமோ , தோக்கறமோ போட்டில பங்கெடுக்கனும்

5   பிரச்சனைகளுக்கான  தீர்வைக்கண்டறிவதுதான் என்னோட பயத்தைப்போக்கிக்கொள்ள உதவுது 

6 ந்  அடிப்படைல நான் ஒரு நார்ட்டிஸ்ட்  என்பதால் சின்ன சின்ன விஷயங்கள்  எல்லாம் என் கவனத்தைக்கவரும்


7   என்  முகத்தைக்காட்டலைனு என் மேல  உங்களுக்கு கோபம் வர்ல?


 நம் முகத்தில் இருக்கும் கண்கள் இரண்டும் ஒன்றை ஒன்று பாத்துக்கிட்டதில்லை, ஆனாலும் ஒற்றுமையாதானே கண்ணீர்  விடுது?


8   உங்க பேரு மானு, அதுக்கு என்ன அர்த்தம்  தெரியுமா? 

 சஸ்பென்ஸ் ஆஃப்  லைஃப்

லாஜிக் மிஸ்டேக்ஸ்னு நினைச்ச சில  விஷயங்கள் எல்லாம்  பின் பாதில அர்த்தம்  இல்லாம  போய்டுது.


  சி.பி. ஃபைனல் கமெண்ட் -  கூகுள் சர்ச் பண்ணி  இந்தப்படத்தோட   கதை என்ன? என்பதை  அறியாமல் படம் பார்த்தால் ஒரு சுவராஸ்யமான சஸ்பெ ன்ஸ்  த்ரில்லரைப்பார்த்த திருப்தி கிடைக்கும் 

 ரேட்டிங் - 3/ 5 

0 comments: