Wednesday, June 10, 2020

96 பாகம் 2 - சிறுகதை - சென்னிமலை சி.பி. செந்தில்குமார் @ குமுதம் 17/6/2020 ஒரிஜினல் ஸ்க்ரிப்ட் உடன்

Image may contain: 1 person, text

96 பாகம் 2 

ராம் க்கு . சிங்கப்பூரில் இருந்த ஜானுவிடம் இருந்து  மெயில் வந்தது , மெயிலின் சாராம்சம் “ நான் என் கணவருடன் அடுத்த வாரம் இந்தியா வருகிறேன்.கம்பெனி விஷயமாக  ஒரு மீட்டிங் அட்டெண்ட் பண்ண கணவருக்கு பணிக்கப்பட்டிருக்கிறது. ஹோட்டல்  ரெசிடென்சி, ரூம் நெ 143 , திருவனந்தபுரம், கேரளா. நான் இந்தியா வந்ததும்  தொடர்பு கொள்கிறேன்

 மெயிலைப்படித்ததில் இருந்து ராம்க்கு இருப்புக்கொள்ளவில்லை. மீண்டும் ஒரு தங்க தருணம். முன்னாள் காதலி நம் முன்னால்  வரப்போகும் பொன் நாள் 


முதல் முறை ஜானு இந்தியா வந்த போது  அவள் தன்னை வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தியது நினைவுக்கு வந்தது .   அப்போதைக்கு தான் மறுத்தாலும்  பின் காலத்தின் கட்டாயத்தால் , பெற்றோரின் வற்புறுத்தலால்  வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்தது ஜானுவுக்கு தெரியாது , ஏனோ சொல்லத்தோன்றவில்லை.  தன்னை ஒரு தியாகியாகவே முன் நிறுத்திய பாங்கு அப்படியே தொடரட்டும் என விட்டு விட்டான்


இந்த முறை நேரில் பார்க்கும்போது உண்மையை சொல்லலாமா? வேணாமா? மனைவியின்  ஃபோட்டோவை எடுத்துப்போய் காட்டலாமா? எனறு குழம்பினான். பிறகு ஒரு தீர்மானத்துக்கு வந்தான் , தன் செல் ஃபோன் கேலரியில் இருந்த  திருமணம் சம்பந்தப்பட்ட ஃபோட்டோக்கள் , வீடியோக்களை அழித்தான். ஜானு வரப்போகும் நாளுக்கு காத்திருந்தான். 


அந்த நாளும் வந்தது. ராம் பரபரப்பானான்.  அலை பேசி உபயோகிக்க வேண்டாம் என ஆல்ரெடி சொல்லி இருந்ததால்  அவன் மெயிலில் மட்டும் தொடர்பு கொண்டான். காலை 11 மணிக்கு அவர் வெளியே போறார், நீ 12 மணிக்கு வந்துடு


 சொன்னபடி ஷார்ப்பாக 12 மணிக்கு ரூம் எதிரில் வந்து நின்று  பெல் அடித்தான், திறந்த ஜானுவின் கண்களில் கண்ணீர் . அது ஆனந்தக்கண்ணீர் மாதிரி தெரிய வில்லை. தன்னைக்கண்ட சந்தோஷத்தை விட  தான் அவளிடம் காணாத ஏதோ ஒரு துக்கம் அவள் கண்களில் குடி இருந்ததைக்கண்டான்


ராம், இதை எப்படி சொல்றதுனு தெரியலை. அவருக்கு இந்தியாவில் ஒரு முன்னாள் காதலி இருக்கா . அதை அவர் டைரி படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன், அவளைப்பார்க்கதான் கம்பெனி ஒர்க் இருக்குனு பொய் சொல்லி இங்கே வந்திருக்கார்னு தோணுது. இப்போ என்ன பண்ண? சொல்லிய ஜானு தன் செல் ஃபோன் கேலரியிலிருந்து ஒரு ஃபோட்டோவைக்காட்டினாள். அதைப்பார்த்த ராம் தலை சுற்றி கீழே விழுந்தான். அது அவனது மனைவி  ஃபோட்டோ, கல்லூரி காலத்தில் எடுத்தது.




0 comments: