Sunday, October 18, 2026

ஏழு கடல் ஏழு மலை (2026)-தமிழ் - சினிமா விமர்சனம் (பேண்ட்டசி டிராமா)

 


பெத்லேகம் குடும்ப யூனிட் என்ற 300 கோடி வசூல் படத்தில் நாயகனாக நடித்த நிவின் பாலி +  மண்டாடி என்ற 150 கோடி வசூல் படத்தில் நாயகனாக நடித்த சூரி இருவரும் இணையும் படம் இது.2024லேயே ரெடியான படம் இப்போது தான் தியேட்டரில் ரிலீஸ் ஆகி இருக்கிறது.



15/5/2024ல் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுப்பெரும் பாராட்டுக்களைப்பெற்ற இந்தப்படம் கமர்சியல் சக்சஸ் ஆனதா?ஆகுமா?என்பதைப்பார்ப்போம்.


கற்றது தமிழ் (2007),தங்க மீன்கள் (2013),தரமணி (2017),பேரன்பு (2019) ,பறந்து போ(2025). என்று 5 தரமான படங்களைக்கடந்த 19 வருடங்களில் இயக்கிய ராம் ஆறாவதாக  இயக்கி இருக்கும் இந்தப்படம்  விருதுக்கான படமா?மக்களுக்கான படமா?என்பதைப்பார்ப்போம்.



ஸ்பாய்லர் அலெர்ட்


காமெடியன் கடந்த எட்டு வருடங்களாக துபாயில் பணிபுரிந்து விட்டு இப்போது சொந்த ஊருக்கு வந்திருக்கிறான்.துபாய் போகும்போது மனைவி 6 மாத கர்ப்பிணி.குழந்தையையும் ,மனைவியையும் பார்க்கும் ஆவலில் வந்திருக்கிறான்.


நாயகன் ஒரு மான்ஸ்டர்.8822 வருடங்களாக சாவே வராத அபூர்வப்பிறவி.எல்லா உயிர்களும் சமம் தான்... மனித உயிர் ஆறறிவு ,விலங்குகள் ஐந்தறிவு என்ற பாகுபாடு எல்லாம் இல்லை.அனைத்து உயிர்களுக்கும் சம அளவு அன்பும்,மரியாதையும். தர  வேண்டும் என்று நினைப்பவன்.


இவர்கள் இருவரும் தீபாவளி தினத்தன்று ஒரு ரயிலில் சந்திக்கிறார்கள்.இவர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல்களும் ,இருவருக்கும் நடக்கும் வாத விவாதங்களும் தான் மொத்தக்கதை.


கிட்டத்தட்ட அன்பே சிவம் மாதிரி கதை.60% கதை ஓடும் ரயிலில் நடக்கிறது.


நாயகனாக நிவின் பாலி கச்சிதமாக நடித்திருக்கிறார்.அவரது கெட்டப்பில் இன்னமுமே மெனக்கெட்டு இருக்கலாம்.

நாயகியாக அஞ்சலி ,அழகுப்பதுமையாக வருகிறார்.

காமெடியனாக சூரி.விடுதலை பாகம் 1 ஷூட்டிங் நடந்தபோது எடுக்கப்பட்ட படம் என்பதால் அந்தப்பட கெட்டப்பில் சூரிய ரசிக்க  முடிகிறது.


அந்த சின்னப்பையனின் நடிப்பும் அருமை.

யுவன் சங்கர் ராஜா இசையில்  3 பாடல்கள் ஓக்கே ரகம்.பின்னணி இசை கச்சிதம்.என் கே ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் உலகப்பட தரத்தில் வந்துள்ளன.

படத்தின் ரன்னிங்க் டைம். 135 நிமிடங்கள்.


கதை ,திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் ராம்.



சபாஷ் டைரக்டர்

1 நாயகன் ,காமெடியன் ,நாயகி,ஒரு சின்னப்பையன் ,எலி என மொத்தமே 5 கேரக்டர்களை வைத்து ஓடும் ரயிலில் முக்கால்வாசிப்படத்தை எடுக்க ஒரு கெத்து வேண்டும்.இயக்குநரிடம் அது நிறையவே இருக்கிறது.

2 சின்னப்பையனுடனான காமெடியன் காம்பினேசன் ஷாட்டில் அந்தப்பையன் நடிப்பில் கலக்கி விட்டான்.

3 நாயகியை ஒரு தேவதையாக உருவகப்படுத்திய விதமும்.அவரது அழகும் ரசிக்க வைக்கின்றன.

4 நாயகனுக்கு  நாயகியைப்பற்றித்தெரியாத ஒரு உண்மையை க்ளைமாக்சில் ஆடியன்சுக்கு விளக்கும் இடம் அருமை.

5 நாயகன் ஒவ்வொரு 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாயகியை சந்திப்பது,தன்னைப்பற்றி விளக்குவது ,காதலிப்பது கவிதையான காட்சிகள்.


6 கதைக்குள் கதையாக வரும் முதலை ,முயல் கதை ரசிக்க வைத்தது


ரசித்த வசனங்கள்


1 நம்ம நாட்டில் மாட்டுக்கறி தான் சாப்பிடக்கூடாது,ஆனால் மாட்டின் பால் ,வெண்ணெய் ,தயிர் இதை எல்லாம் சாப்பிடலாம்

2 அனைத்து மக்களையும் உன் மக்களாக நினை.

3 இங்கே நான் மனுசன்,அது எலி என்பதெல்லாம் நம் பார்வையில் தான்.இந்தப்பிரபஞ்சத்தைப்பொறுத்தவரை எல்லா உயிர்களும் ஒன்று தான்.

4 ஒரு தாயுடைய இழப்பை இன்னொரு தாயால் மட்டுமே ஈடு கட்ட முடியும்.

5 எங்கேயோ இருந்து வர்ற இந்தத்தண்ணீர் உன் காலில் பட்டு என் காலிலும் படுகிறது.

6   பையனுக்கு வாங்கி வெச்சிருந்த பிஸ்கெட்டை எலிக்குக்கொடுக்கிறான் ,ராஸ்கல்.


7 எலியோ ,யானையோ ,மரமோ ,புல்லோ எல்லாம் உயிர் தான்.மூத்தோரின் ஆன்மா தான்..


8  ஒரு சாதா நபர் ,மரணமற்ற மனிதர் இருவரும் சந்தித்தார்கள்


9   மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்.... சொல்டா


மாமலை போற்றுதும்

ழ நல்லா சொல்லு

சார்.மதுரைக்காரனுக்கு ல அவ்ளோ தான் வரும்.


10  உனக்கு என்ன வயசு ?

32 சார்

எனக்கு 8822

11   நாற்பது வயசு வரை வாழ்ந்தவங்களுக்கே மனசுக்குள்ளே என்னென்னெமோ ஓடுமில்ல?8000 + வருசம் வாழ்ந்தவங்க மனசில் என்னென்ன ஓடுமோ?

12    1441 ல் அமேசான் ல இருந்தியா?இல்லையா?

கிமு வா?கி பி யா?சார்

டேய்

சார் ,நான் அமேசான்ல ஆர்டர் கூடப்பண்ணலை சார்.



லாஜிக் மிஸ்டேக்ஸ்


1 படத்தில் எந்தக்கேரக்டருடனும் நமக்கு எமோஷனல் கனெக்ட்டே ஆகவில்லை.காமெடியன் உயிர் தப்பிக்க வேண்டுமே என்ற பதைபதைப்பு ஆடியன்ஸ் மனதில் உருவாகவே இல்லை.நாயகன் ,நாயகியைக்கண்டுபிடித்து சேர்ந்துவிட வேண்டும் என்ற பரிதவிப்பும் எழவில்லை.

2 படத்தில் வரும் ஒரு கேரக்டர் அம்மாவிடம் கதை பற்றிக்கவுண்ட்டர் அட்டாக் செய்கிறார். எல்லா டைம்லைன்லயும் ஒரு கேரக்டர் எப்போப்பாரு தூங்கிட்டே இருந்தா அந்தக்கதை எப்படி சுவராஸ்யமாக இருக்கும் ? அதே கேள்வியை நாம் டைரக்டரிடம் கேட்கலாம்.

3 கற்றது தமிழ் படத்தில் தமிழ் மொழியின் பெருமைகளை சொன்ன இயக்குநர் டைட்டிலையே இலக்கணப்பிழையோடு வைத்திருப்பது எப்படி ?ஏழு என்பது பன்மை.கடல் என்பது ஒருமை.முறைப்படி டைட்டில் ஏழு கடல்கள் ,ஏழு மலைகள் என்று தானே வர வேண்டும் ?

4 நாயகனுக்கு சாகா வரம் கிடைத்தது எப்படி?,8822 வருடங்களாக உயிர் வாழ்வது  எப்படி?என்பதற்கான பதில் இல்லை.

5 இண்ட்டர்வல் பிளாக்கில் வரும் ஆக்சன் சீக்வன்ஸ் வலியத்திணிக்கப்பட்டிருக்கிறது.

6. இயற்கையைப்பற்றிப்பேசும் இந்தப்படத்தில் செயற்கை ஏ ஐ அதீதமாகப்பயன்படுத்தப்பட்டது துருத்தி நிற்கிறது.


7 என்னதான் தீபாவளி அன்று ரயிலில் கூட்டம் இல்லை என்றாலும் அவ்ளோ பெரிய ரயிலில் ஒரே ஒரு அன் ரிசர்வ்டு கம்ப்பார்ட்மெண்டில் இரண்டே நபர்கள் பயணிப்பது நம்ப முடியவில்லை.இயக்குநர் அன் ரிசர்வ்டு கம்ப்பார்ட்மெண்ட்டில் புளி மூட்டை மாதிரி திணிக்கப்படும் மக்களைக்கண்டதில்லை போல 





அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 16+



CPS கமெண்ட்- இயக்குநர் ராம் படங்களை ரசிப்பவர்களால்,உலகப்படங்களை ரெகுலராகப்பார்ப்பவர்களால் மட்டுமே பார்க்க முடியும். எல்லாத்தரப்பு ரசிகர்களாலும் பொறுமையாகப்பார்க்க முடியாது.ரேட்டிங்க் 2.5/5