2023ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ரிலீஸ் ஆன ஜெயிலர் படம் ஓடுமா?ஓடாதா?என்று ரசிகர்கள் பயத்துடன் தான் இருந்தனர்.காரணம் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படம் பெய்லியர்.அதனால் ஜெயிலர் படம் தொடங்கும்போதே டைரக்டரை மாற்றி விடுங்கள் என்று ரசிகர்கள் குரல் கொடுத்தனர்.
அதற்கு முக்கியமான காரணம் நெல்சன் காமெடிக்கு முக்கியத்துவம் தருபவர்.என்னதான் காமெடிப்படம் ஹிட். ஆனாலும் வசூலை அள்ள முடியாது.
தம்பிக்கு எந்த ஊரு ஹிட் படம் தான் என்றாலும் ரஜினியின் பாட்ஷா ,படையப்பா ,மன்னன் மாதிரி ஆக்சன் படங்களைத்தான் ரஜினி ரசிகர்கள் கொண்டாடி இருக்கிறார்கள்.ரிப்பீட் ஆடியன்சும் ஆக்சன் படத்துக்குத்தான் இருக்கும்.
ஆனால் ரஜினி டைரக்டரை மாற்றவில்லை
நெல்சன் தான் டைரக்டர் என்பதில் உறுதியாக இருந்தார்.படம் ரிலீஸ் ஆனது.220 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஜெயிலர் படம் 650 கோடி ரூபாய் வசூலித்து ரெக்கார்டு படைத்தது.
இதற்கு முன் தமிழ் சினிமாவின் ஹையஸ்ட் ரெக்கார்டு கலெக்சன் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கமல் நடிப்பில். வெளிவந்த விக்ரம் படம் தான் செய்திருந்தது.500 கோடி ரூபாய் வசூலைப்பெற்ற முதல் தமிழ்ப்படம் அது.2022 ல் கமல் படைத்த ரெக்கார்டை 2023ல் ரஜினி முறியடித்தார்.
இப்போது 2026ல் ரஜினியின் ஜெயிலர் 2 படம் ஜெயிலர் 1 படத்தின் வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சன் பிக்சர்சின் தயாரிப்பு என்பதால் சன் டி வி யின் ஷேர் மதிப்புகள். ஷேர் மார்க்கெட்டிப் குபு குபு என கடந்த இரு வாரங்களில் 40% உயர்ந்தது.
ஜெயிலர் 2 படத்தில் முதல்வர் விஜயை நேரடியாகவோ ,மறைமுகமாகவோ தாக்கும் வசனங்கள் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.அப்படி இருந்தால் அது படத்துக்கு நெகடிவ் பிரமோஷனைத்தரும்
பான் இண்டியா படமாக இது வர முன்னணி ஹீரோக்கள் ஒவ்வொரு மொழியிலிருந்தும். புக் செய்திருக்கிறார்கள்.ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷன்,மிதுன் சக்ரவர்த்தி ஜாக்கி ஷெராப் ,மலையாளத்தில் சுராஜ் வெஞ்சாரமூடு,மோகன்லால் ,தமிழில் எஸ் ஜே சூர்யா,விஜய் சேதுபதி ,யோகிபாபு ஆகியோர் நடிக்கிறார்கள்
ரஜினியின் மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.அவர் போக வித்யா பாலன் ,முக்கிய ரோலில் நடிக்கிறார்.
அனிரூத்தின் இசை முதல் பாகம் போலவே இரண்டாம் பாகத்திலும் கலக்கும் என எதிர்பார்க்கலாம்.
ஜெயிலர் படத்தில் தமனாவின் காவாலா பாட்டு செம ஹிட்டடித்தது. அந்தப்பாட்டு ஹிட்டானதால் தமனா வி ஐ பி களின் இல்லத்திருமண விசேஷங்களில் அதே பாட்டுக்கு நடனமாட 4 கோடி ரூபாய் சார்ஜ் செய்தார்.கிட்டத்தட்ட 40 க்கும் மேற்பட்ட விசேஷங்களில் ஆடி 160 கோடி ரூபாய் சம்பாதித்தார் தமனா.
ஜெயிலர் 2 படத்தில் பூரணாவின் அல் பெல்லோலோ பாட்டு டான்ஸ் கலக்கல் ரகம்.அதைப்பார்த்தவர்கள் 2 குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கும் 37/வயதான பூர்ணா இந்த அளவு டான்சில் கலக்க முடியுமா?என பிரமித்தார்கள்.
15/10/2026 ரிலீஸ்.ஐ மேக்ஸ் திரையரங்குகளிலும் ரிலீஸ் ஆகிறது.
ஜெயிலர் 2 ரசித்த வசனங்கள்
1. வில்லி - காபியா?டீயா?
ஹீரோ- வேண்டாங்க
வில்லி- காபியா?டீயா?இதுல தான் உன் சாய்ஸ்.குடிப்பியா?மாட்டியா?என் ற சாய்ஸ் இல்லை.
2. நண்பன்- கல்பா கூட்டத்தைப்பத்தித்தெரியாதா?யா ரையும் வாழ விட மாட்டானுங்க.
ஹீரோ -அய்யய்யோ,தெரியாதே?பார்த்துடலா மா?
3 வில்லன்,-. என்னடா?பயம் காட்றியா?
4 வில்லன் - அவனை சாகடிக்கறதை விட ,அவன் கத்திக்கதறி சாகறதை நான் இங்கேத் தெளிவா என் கண்ணால பார்க்கனும்.
5 ஹீரோ -இங்கே பாருங்க கைஸ்..இந்தக்கேமரா வைக்கறது,கேப்மாரித்தனம் பண்றது,ஆள் அனுப்பறது,ஆவாஸ் காட்றது,எதிர் வீட்டை எட்டிப்பார்க்கறது,பக்கத்து வீட்டை சுத்துப்போடறது இதெல்லாம் உங்க டாடி காலத்து ஸ்டைல்...இந்தக்கால ஸ்டைல்....எதிரிங்களை எல்லாம் ஒரே இடத்துக்கு வர வெச்சு அந்த இடத்துக்கே பாம் வைக்கறது..
6 காமெடியன் - பேசஞ்சர்சை எல்லாம் கொன்னுட்டுக்காரைத்துடைக்கறே?, நல்லாத்துடை...
7. வில்லன் - இந்த ரெண்டு மாசத்துல இதைப்பண்ணவனைப்பத்தி ஏதாவது உனக்குத்தெரிஞ்சிருக்குமில்ல? அது என்ன?
அவனை என்னால மட்டும் இல்லை,உன்னாலயும் கண்டு பிடிக்க முடியாது.
8 யார்றா அவன்?
யார்றா?
ஹீரோ - டைகர். டைகர் முத்து வேல் பாண்டியன்.
9 வில்லன் - டேய்,அவனைக்கண்டு பிடிச்சீங்களா?இல்லையாடா?
10 காமெடியன் - எட்டு மணிக்கு வரச்சொன்னா ஏழு மணிக்கு வர்றே?ச்சே. போ..
11 யோவ்..போய்யா.ட்ராபிக்லயா போறோம்?சீட் பெல்ட் போடுன்னு சொல்லிட்டு இருக்கே?இன்னமும் குழந்தைப்பையனாவே இருக்கே...
12. வில்லன் - நாம நினைக்கற மாதிரி அவன் வர்மனைக்கொண்னுட்டு எங்கேயும் மறைஞசு போய் வாழலை...
என்னடா சொல்றே?
13. வில்லன் -ஏன்?அந்த ஜெயிலர் மட்டும் தான் ஸ்னிப்பர் வைப்பாரா?நாங்க வைக்க மாட்டோமா?
14. வில்லன் இண்ட் ரோ - டேய்..அவரோட பேராவது என்ன?னு. தெரியுமா?போதி கல்பக்
15 வில்லன் - சும்மா ரெண்டு மூணு பேரை உள்ளே இறக்கிட்டா நீ மொத்தமா முடிச்சு விட்டுடுவியா?
16 இங்கே இருக்கறவங்களில் எத்தனை பேர் எனக்காக உயிர் கொடுக்க ரெடியா இருக்காஙக?னு தெரியுமா?உனக்கு ?
ஹிட் சாங்கஸ்
1 ஒரு தலைவன் தான்
2. அல பெல்லோ
3 வேற மாதிரி
ட்ரெய்லர் பார்த்தபோது ஓவர் ஹைப் இல்லாமல் மீடியமாக இருப்பதும் நல்லது தான்.ஏனெனில் சமீபத்தில் வந்த பிரம்மாண்டப்படங்களான. டாக்சிக் ,பேரடைஸ் எல்லாம் பிளாப் ஆகி விட்டன.ரஜினி ரசிகர்கள் இப்போதிருந்தே கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.இன்னமும் 10 நாட்கள் காத்திருக்க வேண்டும்
கதை என்னவாக இருக்கும்?
முதல் பாகத்தின் முடிவில் வில்லன் "என்னை நீ அழிக்கலாம்,ஆனா எனக்குப்பின் ஒரு நெட் ஒர்க்கே இருக்கு" என்பான்.வினாயக் கேரக்டரின் அண்ணன் தான் சுராஜ் வெஞ்சார மூடாக இருக்கலாம்.மெயின் வில்லன் எஸ் ஜே சூர்யாவாக இருக்கலாம்.ஏகப்பட்ட வில்லன்கள் இருப்பதால் படம் ஆக்சன் அதகளமாக இருக்கும் என்று நம்பலாம்