Friday, September 02, 2011

மீட் மை ஃபேமிலி நர்ஸ்... ஹி ஹி ஹி!!!!



Sun at horizon at sea
1.மேரேஜ்க்குப்பிறகு பொண்ணு ரொம்ப பொறுப்பு ஆகிடுது, பையன் பருப்பு ஆகிடறான் # அவ்வ்வ்

--------------------------

2. புருஷன் - பொண்டாட்டிக்கு நடுவே சண்டை எதனால வருதுன்னு கண்டுபிடிச்சுட்டேன் # டைவர்ஸ் பண்ணாம இருக்கறதால!

-------------------------

3. மதுரைக்குப்போனா ஜாஸ்மின் ஞாபகம், கேரளா போனா மீரா ஜாஸ்மின் ஞாபகம் # ஒவ்வொரு ஊர்லயும் ஒவ்வொரு ஃபீலிங்க்ஸ்

---------------------

4. புருஷன் தலை ஈரமா இருந்தா அவன் மனைவி அவனை பிரெயின் வாஷ் பண்ணிட்டான்னு அர்த்தமா? டவுட்டு

-------------------------
5.அப்பாவி லவ்வர்ஸ் என்பவர்கள் யார்? தியேட்டரில் நுழைந்ததும் ரைட்கார்னர்சீட்டில் காதலன், லெஃப்ட்கார்னர் சீட்டில்காதலி என தனித்தனியே அமர்வது

-----------------------




6. பசங்க வயசை மட்டும் அல்ல ,மனசையும் மறைக்க மாட்டாங்க!பொண்ணுங்கதான் வயசு,மனசு எல்லாவற்றையும் மறைப்பதும்,மாற்றுவதும்

-------------------------

7. காதலில் விழுந்தால் அடிபடுமோ?இல்லையோ?காதலி மடியில் விழுந்தால் அடி படாது #  SO SLIP ON LOVER

----------------

8. தாமதமாக எடுக்கப்படும் சரியான முடிவு கூட தவறாகிவிட வாய்ப்பு இருக்கிறது

---------------------

9. கண்களை மூடினால் இமைக்கதவின் வாயிலில் அருவமாய் நீ! கண்கள் திறந்தால் இதயக்கோயிலில் தெய்வமாய் நீ!

------------------------


10. அதிர்ஷ்ட தேவதை வலது காலை தூக்கும்போதே என் வாழ்வில் துர் அதிர்ஷ்ட தேவதை இடது காலை வைத்து விடுகிறாள்

------------------------




11. அல்சர் இருப்பதால் காரம், உப்பு சேர்த்தாமல் சாப்பிடும் சூப்பர் ஃபிகரை சப்பை ஃபிகர் என்றழைத்தால் அது சாமி குத்தமா?

-------------------------

12. எனக்குள் நீ குடி வந்த பிறகு நல்ல எண்ணங்களை மட்டுமே மனதில் ஏற்ற வேண்டிய கட்டாயம் எனக்கு

--------------------------

13. டெயிலி 1, 2, 3 என எண்களை எண்ணுபவன் தான் ”எண்”கவுண்ட்டர் ஏகாம்பரமா?

-----------------------

14.  மூளை சொல்படி கேட்டு நடப்பவன் காதலிக்க மாட்டான்.காதல் மூளையை மழுங்க வைத்து விடுகிறது, ஆனாலும் அதை விரும்புகிறோம்

-------------------------

15.  எதை எழுதினாலும் பிள்ளையார் சுழி போட்டு எழுதும் பழக்கத்தை சுலபமாக மாற்றிவிட்டது உன் காதலும், உன் பெயரும்

------------------------

Hammock Boat


16.  நமக்குப்புரிஞ்சதைத்தான் கவிதையா எழுதனும்னு அவசியம் இல்லை, பெரும்பாலும் நிறைய பேருக்குப்புரியாம இருப்பதே கவிதைக்கான இலக்கணம் ஆகிவிடுகிறது

-----------------------------

17. பொண்ணு பார்க்க வெளில கிளம்பறப்ப செம ஃபிகர் எதிரே வந்தா அது நல்ல சகுனமா? டவுட்டு

----------------------------

18. நீ அருகில் இருந்தால் எனக்கு தூக்கம் வருவதில்லை, பிரகாசமான வெளிச்சத்தில் தூங்கி எனக்கு பழக்கம் இல்லை # ஃபிகரு டியூப்லைட்

-----------------------

19. அவளை மறக்க நினைக்கும்போது மனம் கேட்கிறது.. “ ஏன்? அவ தங்கச்சிக்கு என்ன குறைச்சல்?” # SMS

--------------------------

20. ஹை க்ளாஸோ. மிடில் க்ளாஸோ ஃபேமிலி டாக்டர் வெச்சுக்கறாங்க, ஆனா ஃபேமிலி நர்ஸ் வெச்சுக்கறதில்லை ஏன்? டவுட் பை லோ க்ளாஸ் பையன்

-------------------

 

21.எடிட்டர் சார்! சன்மானம் கம்மியா அனுப்பிஇருக்கீங்க? 

யோவ், பவுன் விலை ஏறிடுச்சுங்கறதுக்காக நீ அனுப்பற பொன்மொழிக்கெல்லாம் ரேட் ஏத்தமுடியாது

---------------------------------

22. என் மனைவியோட பர்சனல் பீரோ கோயில் மாதிரி. 

நிஜமாவா? 

ஆமா! திறந்து பார்த்தா ஏகப்பட்ட நகைங்க!

----------------------------

23. டிராஃபிக் எஸ் ஐ - யோவ், டிரைவிங்க் லைசன்சை எடு. 

ஓக்கே சார், இப்போத்தானே சொல்லி இருக்கீங்க? எடுத்திடறேன்

--------------------

24. டைரக்டர் சார், கதைக்கும், ஹீரோயினுக்கும் சம்பந்தமே இல்லையே? 

ஹி ஹி , எனக்கும் ஹீரோயினுக்கும் சம்பந்தம் இருக்கே?

-----------------------------

25. ஜெயில்ல முதல்வகுப்பு வேணாம்னு தலைவர் சொல்லீட்டாராமே? 

ஏற்கனவே அஞ்சாங்கிளாஸ் வரை படிச்சவரை மறுபடி முதல் வகுப்பு போங்கன்னா கோபம் வராதா?

-----------------------------


26. கடைசியில் எல்லாம் சரி ஆகி விடும் என நம்புங்கள்,சரி ஆகவில்லை என்றால் இது கடைசி அல்ல என நம்புங்கள்
----------------------

27. உனக்கு சயின்ஸ் கொஞ்சம் கூடப்பிடிக்காதுன்னே!ஆனா சயின்ஸ் டீச்சரை கல்யாணம் பண்ணி இருக்கியே? 

ஹி ஹி  பாடி கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிடுச்சு

--------------------------

28. உங்க கவிதைல ஏதும் உள் குத்து இருக்கா? 

ஆமாங்க, என் லவ்வரோட அண்ணன் உள்ள கூட்டிட்டுப்போய் செம குத்து குத்திட்டான்,அந்த சோகக்கவிதைதான்

----------------------------

29. ஒரு பெண்ணுக்கு காதல்மூடு வர மழை,ரீசன், சீசன்,எமோஷன், எல்லாம் வேணும், ஆனா ஒருஆணுக்கு மூடு வர ஒரு பெண் இருந்தால்போதும்# நீதி -ஆண் எளியோன்

---------------------

30.  ஆஃபீஸ்ல இருந்து லேட்டா வீட்டுக்கு வந்தா என் மனைவி தாளிச்சுடுவா! பொய் சொல்லாதே? அவளுக்குத்தான் சமைக்கவே தெரியாதே?


-----------------------------

Thursday, September 01, 2011

விஜய்-ன் நண்பன் 3 இடியட்ஸ்ஸை ஓவர்டேக்குமா? இயக்குநர் ஷங்கர் பேட்டி - காமெடி கும்மி

http://flicksbuzz.com/Assets/Images/Kollywood/Kollywood-News/Nanban-Ileana-Latest-Photos-Pictures-Wallpapers-Nanban-Girl-Ileana-Stills-Nanban-Ileana-Photos.jpg 
 
இந்தியன் பார்ட் 2 ஹீரோ அண்ணா ஹஜாரே!

சர்ப்ரைஸ் ஷங்கர்
 
ப்போதும் ஷங்கர்... 'நண்பன்’தான். இப்போது இன்னும் பிரத்யேக நட்புடன் புன்னகைக்கிறார். மிஸ்டர் பெர்ஃபெக்ட், மிஸ்டர் பிரமாண்டம்... 'நண்பன்’பற்றிப் பேசுகிறார் உற்சாகமாக!

சி.பி - சொந்தப்படம்னா லோ பட்ஜெட், அடுத்தவன் தயாரிப்புன்னா மெகா பட்ஜெட் , நல்ல கொள்கை.. 


1. '' 'த்ரீ இடியட்ஸ்’ உங்க பிராண்ட் படமே இல்லை. அதை ரீ-மேக் செய்கிற முடிவை எப்படி எடுத்தீங்க?''

சி.பி - அநீதியை தட்டி கேட்கும் வெட்டி ஹீரோ கான்செப்டையே எத்தனை நாளுக்கு எடுக்கறது?அண்ணனுக்கே போரடிச்சிருக்கும்.. 

http://www.kollytalk.com/wp-content/uploads/2011/02/Anuya-the-mystery-woman-in-Nanban.png


'' 'எந்திரன்’ ஷூட்டிங்கின் பரபர டென்ஷனுக்கு இடையில்தான் 'த்ரீ இடியட்ஸ்’ படம் பார்த்தேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமப் போய்ப் பார்த்த படம், ஸீனுக்கு ஸீன் அப்படியே மெஸ்மரிசம் பண்ணிருச்சு. படம் பார்த்துட்டு வெளியே வந்தா... மனசு அவ்வளவு ஃப்ரெஷ்ஷா இருந்தது. உடனே, என் மனைவிகிட்ட 'படத்தை மிஸ் பண்ணாம பாரு’னு போன்ல சொன்னேன். அவங்க திரும்பத் திரும்ப குடும்பத்தோட மூணு தடவை பார்த்தாங்க. சிம்பிள் சினிமா... ஆனா, கிரேட் ஃபிலிம். படத்தை எஸ் ஃபிலிம்ஸ் சார்பாக பண்ணிரணும்னு தீர்மானிச்சேன். ஆனா, டைரக்ட் பண்ற வாய்ப்பும் கடைசியில் என் கைக்கே வந்தது ஆச்சர்யம்.


சி.பி - ஹிந்திப்படத்தையே 3 தடவை பார்த்துட்டாங்களா? சுத்தம்,அப்புறம் உங்க தமிழ் ரீமேக் பார்க்கறப்ப போர் அடிக்குதும்பாங்களே?

'எந்திரன்’ மாதிரி ஒரு படம் பண்ணிட்டு, அதுக்குச் சம்பந்தமே இல்லாமல்... வேறு கலரில், யூத் வெர்ஷனில் ஒரு படம் பண்ண நினைச்சிருந்தேன். இப்போ எடிட்டிங் டேபிள்ல ரஷ் பார்க்கிறப்போ, 'த்ரீ இடியட்ஸ்’ படத்தை நான் ரீ-மேக் பண்ண எடுத்த முடிவு சரின்னு தோணுது!''


சி.பி - எடிட்டிங்க் டேபிள்ல மட்டும் இல்ல உங்க பட ஓப்பனிங்க்கும் செம ரஷ்தான்.. 


2. ''நீங்க அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்தப்போ பார்த்த விஜய்... இப்போ இல்லை. அவரை இயக்கிய அனுபவம் எப்படி இருந்தது?''

சி.பி - அப்போ ஸ்ரீவித்யாவுக்கு சோப்பு போட்டுட்டு இருந்திருப்பாரு, (ரசிகன்) இப்போ அவரோட ரசிகர்களுக்கே அரசியலுக்கு வர வேண்டி சோப் போட ரெடி பண்ணிட்டு இருக்காரு. 




''விஜய் இப்போ செம புரொஃபஷனல். பக்கா டிசிப்ளின். எந்த நேரம், எந்த ஸீன் எடுக்கணும்னு சொன்னாலும்... கச்சிதமா வந்து நிற்பார். இந்த மாதிரி ஒரு ஆர்ட்டிஸ்ட் கிடைச்சா, ஒரு டைரக்டர் எவ்வளவு பெரிய கேன்வாஸுக்கும் கற்பனைகளை விரிக்கலாம். நான் அசிஸ்டென்ட் டைரக்டரா அவரைப் பார்த்ததைவிட, இப்போ அவர்கிட்ட அபாரமான வளர்ச்சி. அவரை இந்தப் படத்தில் எல்லாருக்கும் பிடிக்கும். என் படங்களுக்கு முதல் ரசிகன் நான்தான். நான் ரசிச்ச விஷயத்தை அப்படியே சொல்றேன்!''

சி.பி - கிராஃபிக்ஸ் மட்டும் கொஞ்சம் குறைச்சுக்குங்க, பல டைம் அது ஓவர் டோஸ் ஆகி ஒரிஜினிலை, ஒரிஜினாலிட்டியை குறைச்சுடுது. 

3. '' 'நண்பன்’ ஆரம்பிச்ச சமயத்தைக் காட்டிலும் இப்போ ஜீவாவுக்கு இமேஜும் மார்கெட் வேல்யூவும் எகிறி இருக்கு. அவரது பெர்ஃபார்மன்ஸ் எப்படி இருக்கு?''

சி.பி - எகிறவெல்லாம் இல்லை. கோ பட ஹிட்டால கே வி ஆனந்துக்குத்தான் வேல்யூ ஏறி இருக்கு, ரவுத்திரம் ஓடாததால ஜீவா கோ படத்தால கிடைச்ச மார்க்கெட்டை கொஞ்சம் இழந்திருக்கார். 

''ஜீவாவின் நடிப்பு துல்லியம். மீட்டர் அவ்வளவு கச்சிதமா இருக்கும். ஒரு பாயின்ட் அதிகமா இருக்காது, குறைவா இருக்காது. முதல் ஸீனில் இருந்து கடைசி வரை ஒரே அளவுதான். 'நீங்க மோகன்லால், மம்முட்டி சேர்ந்த குட்டிக் கலவை’னு அவர்கிட்ட சொன்னேன். இப்போதைய டிரெண்டுக்கு என்ன தேவையோ, அதைக் கொடுக்கிறார். ஆக்டர்னு துளி பந்தா கிடையாது. ஏதோ கார்பரேட் ஆபீஸ் போற மாதிரி இருப்பார். ஸ்வீட் பாய்!''

சி.பி - அவர் நடிப்பெல்லாம் கரெக்ட் தான், ஆனா ஆக்‌ஷன் ஹீரோ ஆக இப்பவே அவசரப்படறார், அதன் மைனஸ்.. 

4. ''இந்த செட்டில் ஸ்ரீகாந்த்... ஆச்சர்யமா இருந்தது...''


''கேரக்டருக்கு அவ்வளவு பொருத்தம். ஜாலியான - ஆனால், அப்பாவுக்குப் பயந்த பிள்ளையா, காலேஜ் படிக்கிற குழந்தை மாதிரி நடிச்சிருக்கார் ஸ்ரீகாந்த். முதல் ஸீனில் இருந்தே இந்த த்ரீ இடியட்ஸ் பின்னாடி டிராவல் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க!''

சி.பி - நேச்சுரலி அவர் பொண்டாட்டிக்கு பயந்த புள்ள ஆச்சே?

5. '' 'சிங்கிள் சிங்கம்’ ஹீரோக்களை வெச்சுதான் உங்கள் மாஸ்டர் ஹிட் படங்கள் கொடுத்து இருக்கீங்க. இந்த மல்ட்டி ஹீரோ சப்ஜெக்ட் உங்களை சிரமப்படுத்துச்சா?''

சி.பி - சம்பளம்தான் படுத்தி இருக்கும்... மற்றபடி ஒண்ணும் பெரிய எக்ஸ்ட்ரா ஒர்க் இருந்திருக்காது. 


''முன்னாடி பண்ண படங்களைக் காட்டிலும் இது ரொம்பவே ஈஸியா இருந்தது. அவங்க மூணு பேரை மட்டும் பார்க்காதீங்க. படத்தில் நடிச்ச ஒவ்வொருவருமே ஒரு ஸ்டார்தான். 'சிவாஜி’, 'எந்திரன்’ ரெண்டு படத்துக்கும் சத்யராஜ் சார்கிட்ட போனேன். அவரால் நடிக்க முடியலை. இந்தப் படத் துக்கு கேட்டதும் உடனே ஒப்புக்கொண்டார். எஸ்.ஜே.சூர்யா. இரண்டே ஸீன் வந்தாலும் பரபரக்கவைப்பார். இலியானாவுக்கு எவ்வளவு பெரிய கிரேஸ் இருக்குன்னு தெரியும். இவங்க எல்லாரும் உங்க முன்னாடி அழகழகா வந்து நிப்பாங்க!''


சி.பி - எஸ் ஜே சூர்யா நடிக்கறாரா? அய்யய்யோ அப்போ ஏ படமா? இலியானாவுக்கு நீங்க சொல்ற அளவு அவ்வளவு பெரிசெல்லாம் இல்லையே? ஓ ,யூ மீன் கிரேஸ்.. அப்போ சரி.


6. ''விஜய் கேரக்டருக்கு சூர்யா, சிம்புனு ஆரம்பத்தில் பெரிய மியூஸிக்கல் சேர் விளையாட்டே நடந்ததே... என்ன பிரச்னை?''

சி.பி - எல்லாம் சம்பளப்பிரச்சனைதான், அண்ணன் அடிமாட்டு சம்பளம் பேசி இருப்பாரு. அவங்க உஷாராகி இருப்பாங்க, அணில் மாட்டிக்குச்சு.. 


''பொதுவா எல்லாப் படத்துக்கும் அப்படி வர்றதுதானே! சில நடிகர்களைப் பரிசீலிப்போம். அவங்க கால்ஷீட், சம்பளம் எல்லாம் பொறுத்துத்தானே ஃபிக்ஸ் பண்ண முடியும். எனக்கு எல்லாமே செட் ஆகணும். அதுக்கு கொஞ்ச நேரம் எடுத்துக்கிட்டாலும் பிரச்னை இல்லை. ஆனா, படம் ஆரம்பிச்சுட்டு பிரச்னைன்னா... கஷ்டம். இப்போ, ஆல் இஸ் வெல்!''


சி.பி - அய்யோ எல்லாரும் கிணத்துக்குள்ளயா இருக்காங்க? ஓ! நல்லா இருக்குன்னு சொல்ல வர்றீங்களா? அப்போ சரி.. 

7. ''ஒரிஜினலில் நடிச்ச மாதவன், 'தமிழில் த்ரீ இடியட்ஸ் எடுத்தால் அஜீத், விஜய், விக்ரம் நல்ல சாய்ஸ்’னு விகடன் பேட்டியில் சொல்லி இருந்தார். அது இன்னும் நல்லா இருந்திருக்குமோ?''

சி.பி - உங்களுக்கென்ன ஈஸியா கேட்டுட்டு போயிடுவீங்க, சம்பளம் யாரு தருவா? அப்புறம் அண்ணன் தலைல துண்டு போட்டுக்கனும்.. 


''சரிப்பட்டு வர்றதைத்தான் யோசிக்கணும். இத்தனைக்கும் நானே 'ஒய் நாட்?’னு கேட்டு முடிவு எடுக்கிற ஆளு. சில விஷயங்களை யோசிக்கவே கூடாது. அது, பேச நல்லா இருக்கும், எழுத நல்லா இருக்கும். ஆனா, யதார்த்தத்துக்குச் சரி வராது!''

சி.பி - பதார்த்தமா சம்பளத்தைத்தான் யதார்த்தம்னு அண்ணன் சொல்றார். ப்ளீஸ் அண்டர்ஸ்டேண்ட்.. 

8. ''ரீல் 'இந்தியன் தாத்தா’ ரியல்ல வந்த மாதிரி அண்ணா ஹஜாரே தூள் கிளப்பிட்டு இருக்கார். இப்போ 'இந்தியன் பார்ட் 2 எடுக்கலாமே..?''

 சி.பி - அன்னா ஹசாரே கதையை எடுத்தா கடத்தல், கொலை எதையும் காட்ட முடியாதே? வெறும் உண்ணா விரதத்தை மக்கள் பொறுமையா உக்காந்து பார்ப்பாங்களா?

''ஆமாங்க... அண்ணா ஹஜாரேவை 'இந்தியன் தாத்தா’னு விகடனில் எழுதி இருந்தாங்க. சந்தோஷமா இருந்தது. அண்ணா ஹஜாரே அலைக்குப் பின்னாடி 'இந்தியன் பார்ட் 2’ எடுக்கலாமேனு கேட்கிறாங்க. நானே அப்படி நினைச்சேன். இப்போ இன்னும் நல்லா இருக்கும்னு தோணுது. ரத்னம் சார் 'ஆரம்பிங்க’னு சொல்லிட்டே இருக்கார். 'நண்பன்’ ரிலீஸ் ஆகட்டும். சான்ஸ் எப்படின்னு பார்க்கலாம்!


இந்தியா எப்படி இருக்கணும்னு ஒவ்வொரு குடிமகனும் கண்ட கனவை அண்ணா நனவாக்கப் போராடுறார். அது அவரோட லட்சியமாக மட்டும் இருக்கக் கூடாது. நம்ம எல்லோருடையதாகவும் மாறணும். பக்கத்தில் இருக்கிற சிங்கப்பூர் சுபிட்சமா இருக்கும்போது... நாம ஏன் முயற்சிக்கக் கூடாது?''

 சி.பி - ஏ எம் ரத்னம் பாவம், மாட்னாரு.. 


http://hothotbuzz.com/wp-content/gallery/ileana/lrg-8082-illiana-029.jpg

9. ''தமிழ் சினிமாவின் இப்போதைய டிரெண்ட் எப்படி இருக்கு?''


''திடீர்னு வசந்தபாலன் எஸ்.எம்.எஸ். பண்ணினான், 'ஆரண்ய காண்டம் மிஸ் பண்ணாதீங்க’னு. இப்பல்லாம் ஒரு படம் ஹிட் ஆகணும்னா... 'பெஸ்ட் ஆஃப் தி பெஸ்ட்’ ஆக இருக்கணும். எல்லாருக்கும் பிடிக்கணும். ஏதோ ஒண்ணு குறைஞ்சாலும் இடிக்குது. 'ஆரண்ய காண்டம்’ இன்னும் ஓடி இருக்கணும். ரூம் போட்டு யோசிச்சாக்கூட, ஜனங்களின் மனசு புரியலை. சுஜாதா அடிக்கடி சொல்ற மாதிரி... அது ஒரு தங்க விதி. இவ்வளவு வருஷமா இங்கே இருக்கேன். எனக்கும் இப்போ வரை எதுவுமே புரியலை!''


சி.பி - ஆரண்ய காண்டம் ஓடாததுக்கு முக்கிய காரணம் பெண்கள் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் ஓவர். நீங்க பண்ணுன பாய்ஸ் மாதிரி. பல பிளஸ்களை சில மைன்ஸ் கள் அடிச்சு கரை சேர்க்க விடாம பண்ணிடுச்சு.


10. ''ரஜினி உடல்நிலை பத்தி விசாரிச்சீங்களா?''


''ஒருநாள் திடீர்னு ஐ.எஸ்.டி. நம்பர்ல இருந்து கால். ரஜினி சாரா இருக்குமோனு நினைச்சு அட்டெண்ட் பண்ணா... ரஜினியேதான்!

'நல்லாயிட்டேன் ஷங்கர். ஃப்ரீயா சந்திக்கலாம். 'நண்பன்’ பார்க்க ஆசையா இருக்கேன்’னு சொன்னார். 17-ம் தேதி போன் பண்ணி 'ஹேப்பி பர்த் டே’ சொன்னார். அவர் சௌகரியமாகி, அவருக்கு சௌகரியமா இருக்கும்போது... பார்க்கலாம்!''


சி.பி - அப்படியே ராணாக்குப்பிறகு  2 பேரும் சேர்ந்து பண்ண ஒரு பிராஜக்ட்கு பிட் போட்டு பாருங்க

thanx - vikatan

ஜெவின் 100 நாள் ஆட்சி - பிளஸ்ஸும், மைனஸூம் விகடன் கட்டுரை

ஜெ. அரசு மார்க்! 48/100



நூறாவது நாளைக் கடந்த அ.தி.மு.க. அரசுக்கு, அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து ஐஸ் மழை பொழிந்தனர். அதில் திளைத்தெழுந்த ஜெயலலிதா, ''இந்தப் பாராட்டுகளைக் கேட்கிறபோது எனக்கு மகிழ்ச்சி என்பதைவிட, என்றுமே என் வாழ்க்கையில் தோன்றாத ஓர் அச்ச உணர்வு இப்போது தோன்றி உள்ளது. இந்தப் பாராட்டு தொடர்ந்து நீடிக்க வேண்டுமே என்ற அச்ச உணர்வுதான் அது!'' என்று சொன்னது, அவரது மனதில் ஏற்பட்டுள்ள மாறுதல் என்றால், வரவேற்போம். ''மாற்றத்தைக் கொண்டுவந்த தமிழக மக்களுக்கு ஏற்றத்தைத் தருகின்ற அரசு!'' என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு முழுமையான காரியங்கள் 100 நாளில் முடிந்திருக்க முடியாதுதான். ஆனால், அதற்கான முன்னோட்டமாவது ஒழுங்காக இருக்கிறதா?

 அள்ளிக் கொடுத்த அம்மா!
'வருந்தாதே ஏழை மனமே
வருங்காலம் நல்ல காலம்
மனம்போல இன்பம் நேரும்
திருநாளும் வந்து சேரும்!’
- இது சட்டசபையில் நின்றபடி பொதுமக்களுக்காக ஜெயலலிதா பாடிய பாட்டு. அப்படிப்பட்ட ஏழை மக்களுக்கான இலவசத் திட்டங்களைத் தேர்தல் வாக்குறுதிகளாக அள்ளிவிட்டார். அவை அனைத்தையும் இந்த ஆண்டுக்கான கவர்னர் உரையில் சேர்த்துவிட்டது நம்பிக்கையான செய்தி. கருணாநிதி கொடுத்த ஒரு ரூபாய் அரிசிக்கான விலையில் அந்த ஒரு ரூபாயையும் கழித்தது மட்டும் அல்ல, 'அதற்கு விலை இல்லா அரிசி’ என்று புதுப் பெயர் சூட்டியது நல்ல விஷயம்.

இலவச மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டர், கறவை மாடுகள், ஆடுகள், மடிக் கணினிகள், தாலிக்கு 4 கிராம் தங்கம்... எனச் சொன்னது எல்லாவற்றையும் செப்டம்பர் 15-க்குள் காப்பாற்ற வேண்டும். பெண் ஊழியர்களுக்கு ஆறு மாதம் மகப்பேறு விடுப்புக் கொடுத்ததற்குப் பெரும் வரவேற்பு. அரசு கேபிள் திட்டத்தைக் கொண்டுவந்து மாதம் 50 ரூபாய்க்குள் எல்லா சேனல்களையும் ஜெயலலிதா திறந்துவிட்டால், அவரை ஜெயிப்பதே இனி சிக்கல் ஆகிவிடும்!


சறுக்கிவிட்ட சமச்சீர்க் கல்வி!
ருணாநிதி, தனிப்பட்ட மனிதர்களைப் பகைத்துக்கொள்வார். ஜெயலலிதா, கூட்டம் கூட்டமாகப் பகைப்பார். முந்தைய ஆட்சியில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் என்றால், இந்த ஆட்சியில் கோடிக்கணக்கான மாணவ - மாணவிகள்! ஜூன் 4-ம் தேதி பள்ளிக்கூடம் போய் பாடங்களைப் படித்திருக்க வேண்டிய பிள்ளைகளை அப்படியே தடுத்து நிறுத்தி, ஆகஸ்ட் 12-ம் தேதி வரைக்கும் மூலையில் முடக்கிவைக்கும் காரியமாக, சமச்சீர்க் கல்வித் திட்டத்தை ரத்து செய்த வர், கடைசியில் 'தீர்ப்பு என்ன வந்தாலும் நான் ஏற்பேன்’ என்று இறங்கி வரும் நிலை. 'கருணாநிதி கொண்டுவந்ததை ஒழிக்கிறேன்’ என்ற ஒரே நோக்கம்தான் தெரிந்தது. போகட்டும்!

கல்வித் துறையில் பெரும் மாறுதலைச் செய்வதற்கான சில முயற்சிகளை ஜெயலலிதா தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைப்பது முதல் உள்கட்டமைப்பு வசதிகள் வரை அவர் சொன்னது மாதிரி கவனம் செலுத்தினால், சமச்சீர்க் கல்விச் சறுக்கலைச் சரிசெய்யலாம்!

பதவிகள் பந்தாட்டம்!

'அதிகாரிகளையும் அமைச்சர்களையும் மாற்றுவது ஒரு முதலமைச்சரின் தனிப்பட்ட விருப்புரிமை. மறுப்பதற்கு இல்லை. ஆனால், ஓர் அதிகாரிக்கோ, அமைச்சருக்கோ, குறிப்பிட்ட கால அவகாசம்கூடத் தரப்படாத நிலையில், அவரது தகுதியைத் தராசில்வைத்து நிறுத்து, தடாலடியாகத் தூக்கி எறிவது சரியா’ என்று ஒரு தரப்பும், 'தவறு செய்துவிட்டார் என்று தெரிந்தும் ஒருவரை அந்தத் துறையின் அமைச்சராக வைத்திருப்பது சரியா’ என்று இன்னொரு தரப்பும் விவாதிக்கும் நிலை நீடிக்கிறது.

கருணாநிதி காலத்தில் சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ராஜேந்திரனை சிறைத் துறைக்குத் தூக்கி அடித்துவிட்டு, மறுநாளே அவரை உளவுத் துறை பொறுப்புக்கு நியமித்ததும்; மின் வாரியத் தலைவராக ஸ்வரண் சிங்கை உருட்டி உருட்டி விளையா டியதும், உள் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்ட அடுத்த வாரமே ஷீலா ராணி சுங்கத்தைத் தூக்கி 'பொம்மை’ பார்க்க அனுப்பிவைத்ததும்... அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதில் இருந்த குழப்பத்தையே காட்டுகிறது. இசக்கி சுப்பையா தவறான மனிதர் என்று அமைச்சரான சில வாரங் களில்தான் தெரியும் என்றால், அமைச்சர் ஆக்கப்படுவதற்கு முன்பு சொக்கத் தங்கமாக இருந்தாரா? அல்லது அவ்வாறு முதல்வர் நம்பவைக்கப்பட்டாரா?


யாரோ பரிந்துரை செய்வதால் நம்புவதும், யாரோ குறை சொல்வதால் நிராகரிப்பதும் தொடர்வதால்தான் இந்தக் குழப்பங்கள்!

   ஈழத் தமிழனுக்குக் கண்ணீர்!

து கருணாநிதியைக் குப்புறத் தள்ளியதோ, அதைத் தனக்குச் சாதகமானதாக ஆக்கிக்கொண்டார் ஜெயலலிதா. தமிழக சட்டமன்றத்தில் ஈழத் தமிழர் பிரச்னையை மையமாகவைத்து, ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானம் தமிழகத்தில் மட்டும் அல்ல... உலகத்தின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களையும் மனம் குளிரவைத்தது. மத்திய காங்கிரஸ் அரசு அதிர்ச்சி அடைந்தது. பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர், முதல்வரைச் சந்திக்க ஓடி வந்தார்.

'போர்க் குற்றவாளி யாரோ... அவரைத் தண்டிக்க வேண்டும். இலங்கைக்கு இந்திய அரசாங்கம் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்’ என்ற தீர்மானத்தைப் பார்த்து, இலங்கைத் தூதர் பதறினார். கொழும்பில் இருந்தபடி கோத்தபய ராஜபக்ஷே, ஜெயலலிதாவைச் சீண்டினார். அதற்கும் மறு நாளே சட்டமன்றத்தில் அறிக்கை படித்து அதிர்ச்சியைக் கிளப்பினார் ஜெ. 'இலங்கைத் தூதரை அழைத்து இந்தியா கண்டிக்க வேண்டும்’ என்பதும் அவரது கோரிக்கை. அதோடு, அமைதியாகிவிடாமல், தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளுக்கு தலா 1,000 ரூபாயை உதவித்தொகையாக அறிவித்தது, அந்த மக்களது உள்ளத்தில் பால் வார்த்தது. மொத்தத்தில், ஈழத் தமிழர் பிரச்னையை உதாசீனப்படுத்திவிட முடியாது என்பதை உணர்ந்தவராக ஜெயலலிதா தன்னைக் காட்டிக்கொண்டார்.

அவரை அமைதியாக்க வேண்டும் என்பதற்காகத்தான், பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்குத் தண்டனையை காங்கிரஸ் அரசு விரைவுபடுத்தியதாக தமிழ் உணர்வாளர்கள் சந்தேகப்படுவதிலும் உண்மை இல்லாமல் இல்லை!


கருணாநிதியை மறந்துவிடுங்கள்!

'பூனையைவிட புலி வலிமையானது என்பதை எலிகள் ஏற்றுக்கொள்வது இல்லை’ என்பார்கள். தனக்குத் தெரிந்தவன் தானே அதிக பலசாலி. அப்படித்தான் ஜெயலலிதாவை கருணாநிதி பிம்பம் ஆட்டிப் படைக்கிறது. கருணாநிதி செய்ததற்கு எல்லாம் எதிர்ப்பதமாகச் செய்வது என்பது ஒரு நல்ல தலைவருக்கு அழகு அல்ல.

சமச்சீர்க் கல்வியை அறிமுகப்படுத்தினாரா... அதை ரத்து செய். புதிய தலைமைச் செயலகம் கட்டினாரா... அதற்குள் நுழைய மாட்டேன். தமிழ்ப் புத்தாண்டு சித்திரை என்பதை தை மாதம் ஆக்கினாரா... பஞ்சாங்கப்படி அது தவறு என்பது. கலைஞர் காப்பீட்டுத் திட்டமா... நான் அதை வேறு மாதிரி ஆக்குகிறேன்.

கலைஞர் வீடு கட்டும் திட்டமா... அதன் விதிமு¬றையை மாற்றி வேறு வீடு கட்டும் திட்டம். செம்மொழி உயர் ஆய்வு நிறுவனமா... அது எதற்கு? இலவசத் தொலைக்காட்சிப் பெட்டியா... இனி டி.வி. தர மாட்டேன். இப்படி ஏட்டிக்குப் போட்டியாகவே நடந்தால், 'வந்தது கருணாநிதியின் தீர்ப்புகளைத் திருத்துவதற்கு மட்டும்தானா?’ என்று பொதுமக்கள் நினைக்க மாட்டார்களா?


கருணாநிதி செய்ததில் பல்வேறு தவறுகள் உண்டு. அதில் கொள்ள வேண்டியதைக் கொண்டு... தள்ள வேண்டியதைத் தள்ளியவர் ஜெயலலிதா என்ற பெயரை வாங்க இனியாவது ஜெயலலிதா முயற்சிப்பாரா!


துணிச்சலான கைதுகள்!


போலீஸ், வருவாய்த் துறை, பத்திரப் பதிவு மூன்றையும் கையில்வைத்துக் கொண்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் ஏராளமான நிலப் பறிப்புகள் நடந்ததாக அப்போதே தகவல்கள் பரவின. சிலர் மட்டுமே வெளியில் வந்து புகார்கள் சொன்னார்கள். மற்றவர்கள் வெளியில் வரப் பயந்தார்கள். பலம் பொருந்தியவர்கள் சம்பந்தப்பட்டு இருந்ததால்தான், அந்த பயம். ஆட்சி மாறியதும் அவர்கள் புகார்கள் கொடுக்கப் புறப்பட்டு வந்தார்கள். இதுவரை தமிழகம் முழுவதும் 8,947 புகார்கள் வந்துள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

இதில் 462 புகார்கள் மட்டுமே வழக்குகளாகப் பதிவாகி உள்ளன. 419 பேர் கைது செய்யப்பட்டுஉள்ளனர். 415 கோடியே 48 லட்சம் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டு, நிலத் தின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுஉள்ளது. பறிகொடுத்த நிலத்தை மீண்டும் பெற்றுக்கொண்டதும் ஆனந்தக்கண்ணீர் விட்டுக் கொண்டாடியவர்கள் முகங் களைப் பார்த்தபோதுதான், அரங்கேற்றப் பட்ட மோசடியின் கொடூரம் தெரிகிறது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்பால் உறுதிமொழி எடுத்துக்கொண்ட முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் முதல் மதுரையின் அடாவடிப் பேர்வழிகள் வரை தி.மு.க-வின் நிழலில் பதுங்கிச் செய்த காரியங்களை வழக்கு மன்றத்தில் நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் ஜெயலலிதாவுக்கு இருக்கிறது. பொதுமக்களுக்கு இந்தக் கைதுகள், இந்த ஆட்சி மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தி உள்ளன!


எதிர்காலத் திட்டம் என்ன?


ந்த ஓர் ஆட்சியாக இருந்தாலும், அது எந்த நோக்கத்தில் செயல்படப்போகிறது என்பதே மிக முக்கியமானது. மக்கள் நலத் திட்டங்கள் அனைத்து ஆட்சிக்கும் அடிப்படையானவை. ஒருத்தர் யானை கொடுத்தால்... இன்னொருத்தர் குதிரை கொடுக்கலாம்.

ஆனால், கொள்கை சார்ந்த விஷயங்களில், எதிர்கால வளர்ச்சிக்கான திட்டங்களில் ஒரு மாநில முதலமைச்சர் தன்னுடைய சிந்தனையைச் செலுத்தியாக வேண்டும். 'தமிழகத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு 2025 தொலைநோக்குப் பார்வைத் திட்டம் தயாரிக்கப்போகிறோம்’ என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது எதை நோக்கிய திட்டம், என்ன மாதிரியான மாற்றங்களை எதிர்கொள்ளப் போகிறோம் என்பதில் தெளிவு வேண்டும்.

கடந்த தி.மு.க. ஆட்சியில் மிகப் பெரிய சிக்கலாக இருந்த மின் வெட்டைத் தீர்ப்பதற்கான திட்டமிடுதலும் இல்லை. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் அவசர முயற்சியும் இல்லை!


ஊழல் பற்றிய மௌனம்!

ன்று ஊழலுக்கு எதிரான யுத்தம் இந்தியா முழுவதும் நடக்கிறது. வளர்ச்சித் திட்டங்கள் மக்களைச் சென்றடையாமல் போவதற்கும், ஒரு மாநிலத்தின் நிர்வாகம் செல் அரித்துக்கிடப்பதற்கும் ஊழல் மட்டுமே முக்கியக் காரணம். அதற்கு எதிரான நடவடிக்கைகளில் ஜெயலலிதா இறங்கவே இல்லை. வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக அவர் மீதான வழக்கு பெங்களூரூ நீதிமன்றத்தில் நடக்கிறது.

அதை சட்டரீதியாக எதிர்கொள்வதில் இருந்து ஜெயலலிதா இதனைத் தொடங்க வேண்டும். கர்நாடக எடியூரப்பாவும் ஆந்திர ஜெகன்மோகன் ரெட்டியும் துடிப்பதைப் பார்த்தால், இனி ஊழல் அரசியல்வாதிகள் தப்பிப்பது சிரம திசையாகத்தான் இருக்கும். எனவே, லோக் ஆயுக்தா அமைப்பை தமிழகத்தில் தொடங்கி, ஊழல், முறைகேடுகளைக் குறைப்பதற்கான காரியங் களைத் தொடங்கியாக வேண்டும். அதுவே கடந்த காலக் கசப்புகள் கற்றுக் கொடுத்த பாடமாக இருக்கும்!


சட்டசபையில் ஜேஜே!


ட்டசபை நடவடிக்கைகளில் பங்கேற்பது என்பது வெறும் ஜனநாயகக் கடமை மட்டும் அல்ல. தன்னளவில் ஆர்வமும் இருந்தால் மட்டுமே உத்வேகமாகச் செயலாற்ற முடியும். கருணாநிதி முதல்வராக இருக்கும்போது ஒரு நாள்கூட வரத் தவற மாட்டார். அதைவிட முக்கியமாக கடைசி வரைக்கும் இருப்பார். ஜெயலலிதாவும் இம்முறை இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்.

எல்லா நாட்களும் சபையில் இருக்கிறார். அனைத்து மானியக் கோரிக்கை விவாதங்களையும் கவனிக்கிறார். யார் எந்தக் குற்றச்சாட்டுகள் சொன்னாலும் குறித்துக்கொள்கிறார். உடனடியாக எழுந்து பதில் சொல்கிறார். அமைச்சர்களுக்கு அறிவுரை சொல்கிறார். ஏன், அவைத் தலைவருக்கே திருத்தம் கொடுக்கிறார். உடல் உபாதைகளையும் தாண்டி, ஜெயலலிதா இப்படி நடந்துகொள்வது உண்மையில் மெச்சத் தக்கது!


நடமாடும் நிழல் மனிதர்கள்!


ந்த ஐந்து பேர் பெயர்களை இந்த இடத்தில் சொல்லப்போவது இல்லை! கோட்டையில், போயஸ் கார்டனில், குறிப்பாக முதல்வரிடத்தில் செல்வாக்குப் படைத்தவர்களாகவும் 'நாங்கள் சொல்வதைத்தான் முதல்வர் கேட்பார், இங்கே நாங்கள் வைத்ததுதான் சட்டம்’ என்றும் அந்த மனிதர்கள்... அதிகாரிகளிடம், அமைச்சர்களிடம் நடந்துகொள்கிறார்கள். இது அதிகார மட்டத்தில் வலம் வரும் அனைவருக்கும் பச்சையாகத் தெரிந்த சமாசாரம். இது முதல்வருக்குத் தெரியாமல் இருக்காது. தெரியாது என்றால், அது அதைவிட அதிர்ச்சிக்குரியது.

உண்மையில் அவர்கள் தகுதியானவர்கள், திறமையானவர்கள் என்றால், அரசு அங்கீகாரம் பெற்ற பொறுப்புகளில் அமரவைத்து அவர்களைச் செயல்பட வைக்கலாமே தவிர, 'சூப்பர் சுப்ரீம்’களாக அவர்களை அங்கீகரிப்பது இந்த ஆட்சிக்கு ஆபத்து!

'நாங்கள் எதைச் செய்தாலும் உள்ளச் சுத்தியுடன் செய்கிறோம். மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் எங்களிடம் கிஞ்சித்தும் இல்லை’ என்று ஜெயலலிதா சொல்வது உண்மையானால், இந்த நிழல் மனிதர்களின் நடமாட்டம் உடனடியாகக் கட்டுப்படுத் தப்பட வேண்டும்!

thanx - vikatan


டிஸ்கி -

மங்காத்தா - மீடியம் ஹிட்டா? மெகா ஹிட்டா? - சினிமா விமர்சனம்

Wednesday, August 31, 2011

மங்காத்தா - மீடியம் ஹிட்டா? மெகா ஹிட்டா? - சினிமா விமர்சனம்

http://www.thangameen.com/Images/ContentImages/admin/mangatha-016.jpg 

பொறி பறக்கும் ஒன் லைன்  ஸ்டோரி, மாஸ் ஓப்பனிங்க் ஹீரோ,கிளாமர் குயின்ஸ்ஸாக கட்டுடல் கன்னிஸ் 3 முத்தான ஃபிகர்ஸ் , சூப்பர் ஹிட் ஸாங்க்ஸ் 4 இத்தனையையும் கையில் வைத்துக்கொண்டு வெங்கட் பிரபு சிக்ஸர் அடிப்பார் என்று பார்த்தால் ஃபோர் அடிக்கவே தட்டு தடுமாறி இருக்கிறார்..

ஏற்கனவே மணிரத்னம் திருடா திருடா படத்தில் எடுத்த ஒன் லைன் தான்.. 500 கோடி பணம் , அதை அபேஸ் பண்ண அந்தப்படத்தில்  3 கேங்க் , இந்த படத்தில் 2 கேங்க்,ஒரே வித்தியாசம் இந்தப்படத்தில் போலீஸ் ஆஃபீசர்ஸே வில்லன் வேலையை செய்கிறார்கள்.. 

அஜித்துக்கு கொஞ்ச நாள் கேப்க்கு பிறகு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு.. ஆண்ட்டி ஹீரோ..ஆனால் அதற்காக அவர் 40 வயசு கேரக்டருக்கு 50 வயசு மாதிரி ஓவரா நரை முடி காட்டி இருக்க தேவை இல்லை.. டான்ஸ் காட்சிகளில் புது சுறு சுறுப்பு, சில மெனக்கெடல்கள்,வாக்கிங்க் போறதை எல்லாம் குறைச்சு ,இடைவேளை ட்விஸ்ட்டின் போது வாலி சிரிப்பு சிரித்து பல புதிய நடிப்பின் பரிமாணங்களை தொட முயற்சி செய்துள்ளார்.. வரவேற்கலாம்..

திரிஷா விண்ணைத்தாண்டி வருவாயா, பீமா படங்களோடு ஒப்பீடு செய்கையில் இதில் அவர் மேக்கப் , கெட்டப், நடிப்பு எல்லாம் சுமார் தான்.. பாடல் காட்சிகளில் கூட அவரால் சோபிக்க முடியாமல் போனது சோகமே... 


http://www.southdreamz.com/wp-content/uploads/2011/08/Mankatha-trisha-hot.jpg

லட்சுமிராய் ஆள் செம ஹைட் என்பதால் வில்லி ரோலுக்கு நல்ல பொருத்தம்,அவரை முடிந்த அளவு “யூஸ்” பண்ணிக்கொண்டது இயக்குநரின் சாமார்த்தியம்.

அங்காடித்தெரு அஞ்சலிக்கு தம்மாந்தூண்டு கேரக்டர்.... ஆண்ட்ரியாவுக்கும் அதே..

ஆக்‌ஷன் கிங்க் அர்ஜூன் கிழடு தட்டிப்போன முகத்துடன் வருகிறார்.. படத்தில் வரும் எல்லா போலீஸ் கேரக்டர்களும் கிராப்பை குறைத்து க்ளோஸ் கட்டிங்க்கில் வரும்போது இவர் மட்டும் ஹிப்பி தலையுடன் ஃபங்க் முடியுடன் வருவது இவரது கேரக்டர் ஸ்டடிக்கு கிடைத்த அடி.. 

http://www.cinespot.net/gallery/d/82031-1/Lakshmi+Rai+Hot++Photos.jpg

 படத்தில் ரசிக்க வைத்த வசனங்கள்

1.  XQS  மீ மிஸ்.. நீங்க யாரு..?

அடப்பாவி.. நைட் பூரா என் கூட இருந்துட்டு இப்போ கேள்வியைப்பாரேன்?

சாரி. மப்பு.. 

2. நேத்து நான் தப்பா நடந்துக்கிட்டேனா?

நேத்து சரியாதான் நடந்துக்கிட்டே.. இப்போதான் தப்பா நடக்கறே.. கண்டுக்க மாட்டேங்கறே....

3.  பசங்க சும்மா இருந்தாலும் இந்த பொண்ணுங்க சும்மா இருக்க விட மாட்டாங்களே...

4.  உங்க வயசு என்ன?

அப்பா.. அவர் கிட்டே ஏன் வயசை கேட்கறீங்க?

பொண்ணுங்க கிட்டே தானே வயசை கேட்கக்கூடாது,..?

பொண்ணுங்க இருக்கறப்பவும் வயசை கேட்கக்கூடாது...

 5. ஹாய். குடிக்கவா வந்தீங்க..?

என்னைப்பார்த்தா குடிகாரன் மாதிரியா தெரியுது?

6. நானும் எவ்வளவு நாள் தான் நல்லவன் மாதிரியே நடிக்கறது?

7.  எனக்கு அந்த ஃபிகர்  வேணாம்.. 

நீயே நினைச்சாலும் அது உனக்கு செட் ஆகாது. நீ அதுக்கு லாயக்கில்லை.. 

8.  லைட் போட்டூட்டு வண்டி ஓட்டலாம், லைட்டா போட்டுட்டு வண்டி ஓட்டக்க்கூடாது...டைட்டா இருக்கனும் சரக்கு உள்ளே.. 

9.  நான் ஏன் வேலைக்கு போகனும்?நான் நினைச்சா எனக்கு கீழே 80 பேர் வேலை செய்வாங்க. 

அதுக்கு ரொம்ப செலவாகுமே..? 


http://hothubshot.com/hothub_files/2010/04/lakshmirai-bath-hot-hub.jpg

10. ஏய்.. நீ எப்படி இங்கே வந்தே.?

டார்லிங்க்.. எப்படி வந்தேன்னு கேக்காதே..? எதுக்கு வந்தேன்னு கேளு.. 

தண்ணி அடிச்சிருக்கியா?

ம்..

வீட்டுக்குத்தெரியுமா?

வீட்டுக்கு ஏன் தெரியனும்?அம்மா, அப்பாவுக்கு தெரிஞ்சா போதாதா?

ஆனா ஒண்ணு மட்டும் உண்மை ஆணோ, பொண்ணோ தண்ணி அடிச்சா எப்படி இந்த மாதிரி மொக்கை ஜோக்ஸா சொல்ல முடியுது?

11.  யார் எவ்வளவு சரக்கு அடிச்சிருந்தாலும் அவங்கவங்க வீட்டுக்கு போகும்போது கொஞ்சமாவது மப்பு தெளிஞ்சிடும்....

12.  பல் துலக்கிட்டு வீட்டுக்குள்ள போ.. அம்மா கண்டு பிடிக்க மாட்டாங்க. 

13.  வாங்க மாப்ளை.. மாப்ளைக்கு குடிக்க ஏதாவது கொண்டு வாம்மா..

வேணாங்க.. இப்போதான்... 

14.  என்ன வந்ததுல இருந்து சீரியஸாவே இருக்கீங்க?

காமெடி பண்ண நான் என்ன சந்தானமா?

15.  சிக்னல் ஓப்பன் பண்ணப்போறோம். நீ ரெடியா இருந்துக்க. 

பிறந்ததுல இருந்தே நான் ரெடி தான்.. 

16.  ஹூம்.. இவ்வளவு பணம் இருந்து என்ன? சுகர் பேஷண்ட் மாதிரி எதையும் அனுபவிக்க முடியல.. 

17.  அதென்னவோ தெரியல.. மப்பானாலே இளையராஜா பாட்டெல்லாம் ஞாபகத்துக்கு வந்துடுது. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwmFxhW-0NSMJEqhevRJe4yFU8pRCr2PA9uiMVJLc4dLMNN92EhzhG51-iA1q8Mw6m33Ra0GduM_FJGbQa0fZ157_6-kfWI83R8jFYTsT5ICXnDImDcGBZzQ3HWx0p37TJZdyNKDhDSbg/s1600/Anjali_In_Saree_00.jpg

இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்

1. இடைவேளை வரை செம ஸ்பீடான திரைக்கதை. க்ளைமாக்ஸில் சொல்லப்படும் சஸ்பென்ஸ்.. 

2.  பணத்துடன் செல்லும் டிரக்வேனை டிராஃபிக்கில் பாடியை மட்டும் அலாக்காக மாற்றுவது.. அதை நம்பும் வகையில் காட்டியது. 

3. லட்சுமிராய்  பிரேமை சுடாமல் திடீர் என ஆள் மாற்றி சுடும் சீன் நல்ல ட்விஸ்ட்.. 

4. கிரிக்கெட் சூதாட்டம் என ட்ரெண்டுக்கு தக்க வகையில் திரைக்கதையில் அதை நுழைத்த விதம்.. 

5. ஏகப்பட்ட கேரக்டர்கள் படத்தில் இருந்தாலும் முடிந்த வரை குழப்பம் வராத அளவு கதை சொல்ல முயன்றது. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheY-DGZozoCU69Bdj4V29yGkl2amHGYo2fz-rf1Gfig6c4m0YH7tOqfEzhLjhqv4wLGyMT3TLCgPZlK8RW5nOycfMDdYp9nJaU3Yg3PE2lG-GdQWc5YahTuf5YXVTOBURKfF_L_yuw_hE/s1600/andrea08.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள், சில சந்தேகங்கள், சில ஆலோசனைகள்

1.  செம டெம்ப்போ பாட்டான விளையாடு மங்காத்தா பாட்டை அஜித்தே பாடுவது போல் காட்டாமல் பேக் டிராப்பில் பாடல் மட்டும் ஒலிக்க அஜித்தை சும்மா டான்ஸ் மட்டும் பண்ணுவது போல் காட்டி இருக்கலாம். இன்னும் கெத்தாக இருந்திருக்கும்..

2.  ஏமாற்றி காதலிப்பதாக நடிக்கும் அஜித்தை விட உண்மையாக காதலிக்கும் த்ரிஷா முகத்தில் காதல் ரசமே சொட்டவில்லையே ஏன்?த்ரிஷாவின் காதல் உண்மையாக பதிவு செய்யப்பட்டால்தான் அஜித் அவரை ஏமாற்றும்போது அதன் எஃபக்ட் எடுபடும்?

3. என்னதான் ஒருவன் பணத்தின் மேல் ஆசை உள்ளவனாக இருந்தாலும் காதலியின் அல்லது காதலி என நம்பவைத்து ஏமாற்றும் பெண்ணின் தந்தையை அப்படியா ஓடும் காரிலிருந்து வீசி எரிவார்கள்?வில்லன் இமேஜை வலிய அஜித் மேல் திணிப்பது போல் இருக்கே?பெண்கள் இந்த காட்சியை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்களே?

4. ஓப்பனிங்க் சாங்கில் அஜித் முதலில் லட்சுமிராய் உடன் டான்ஸ் ஆடுகிறார்.. பின் அங்கே வரும் த்ரிஷாவுடன் ஆடுகிறார்.. ஆனால்  அடுத்த ஷாட்டில் அஜித்தின் வீட்டுக்கு திடீர் விசிட் அடிக்கும் த்ரிஷாவிடம்  அஜித் லட்சுமிராய் அட்ரஸ் கேட்டு வந்த பெண் என பொய் சொல்லும்போது அவர் லராயை தெரிஞ்ச மாதிரியே காட்டிக்கலை.. எப்படி?

5.  போலீஸ் டிபார்ட்மெண்ட்டே ஒரி போலீஸ் ஆஃபீசரை தற்கொலை செய்தது போல் செட் பண்ணுகிறது , ஆனால் அதே ஆஃபீசரை எந்த கெட்டப்பும் மாற்றாமல் பேரை மட்டும் மாற்றி அதே கேசில் நடமாட விடுகிறதே . எப்படி?

6.  பணத்தை யாராவது தனியே வந்து எடுத்தால் கூட்டாளிகள் செல்ஃபோனுக்கு அலாரம் அடிப்பது போல் செட் செய்த பிரேம் பின் எப்படி அவர்களை ஏமாற்றுகிறார் என்பதை காட்டவே இல்லையே?

7. பணத்தை அடைவதையே குறியாக இருக்கும் அஜித் ஏன் பிரேமை யூஸ் பண்ணி அலாரம் கொலாப்ஸ் செய்ய முயற்சியே எடுக்கவில்லை?

8. இந்தப்படத்தை அஜித் ரசிகர்கள், பெண்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளூம்படி இன்னும் பாலிஷாக செய்திருக்கலாம்... பண விஷயத்தில் மட்டும் அஜித் கெட்டவர் என காட்டி.. காதலி, தோழி எல்லோரையும் பணத்துக்காக கொலை செய்யக்கூட அஞ்சாதவர் என காட்டி இருக்க தேவை இல்லை. அதை பலரால் ஜீரணிக்க முடியாது. 

http://s4.hubimg.com/u/1248939_f520.jpg

ஏகன், அசல், ஆஞ்சநேயா போன்ற தோல்விகளால் துவண்டு கிடந்த  அஜித் ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமான படமே , ஆனால் வாலி, பில்லா ரேஞ்சுக்கு இல்லை..

 ஏ செண்ட்டர்களில் 75 நாட்கள், பி  செண்ட்டர்களில் 50 நாட்கள்.,  சி செண்ட்டர்களில் 20 நாட்கள் ஓடும்.. 

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 42 

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட் - ஆக்‌ஷன் பிரியர்கள், அஜித் ரசிகர்கள் பார்க்கலாம்

ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன்.

ஃபிகரு அவனோட லவ்வரா? சம்சாரமா?ன்னு எப்படி கண்டுபிடிப்பது?







1. என் சம்சாரம் செய்யும் சமையலை சகிக்க முடியல.

மாப்ளே.. உன் பாடு எவ்வளவோ தேவல,என் சம்சாரத்தையே என்னால சகிச்சுக்க முடியலையே?

---------------------------

2. ஸ்ருதிஹாசன் பாய்ஸ் சித்தார்த்தை லவ்பண்றது கமல்க்கு பிடிக்கலையே,ஏன்?

ஆமா இவர் பாட்டுக்கு புத்தர் மாதிரி பாதிலயே கழட்டுவிட்டுட்டுபோய்ட்டா?

----------------------

3. குதிரை சவாரி செய்தபோது நித்யானந்தா தவறி விழுந்தார் #அண்ணனுக்கும் சவாரிக்கும் ராசி இல்லை போல,ஒண்ணு கேமராவுல விழுந்துடறாரு,அல்லது கீழே

----------------------------

Litoral Argentino



4. இன்ஸ்பெக்டர் சார்,என் சம்சாரம் என்னை அடிச்சுட்டா.

விடய்யா ,நான்கூட நேத்து என் மனைவிகிட்டேஅடிவாங்குனேன்,புகாரா குடுத்தேன்?#வீ .வீ . வாசப் படி

-----------------------------------

5. தலைவருக்கு ஜி கே கம்மின்னு எப்படி சொல்றே?

காஜல் அகர்வால்,சோனியா அகர்வால் 2 பேரும் அகர்வால் ஸ்வீட்ஸ் கடை ஓனர்ஸா?ன்னு கேட்கறாரே?

-------------------------------




6. சதீஷ்,நாம 2 பேரும் லவ் பண்ணி 3 வது நாள்லயே  எம் மேல சந்தேகப்படறீங்களே?

ஜெயந்தி,விளையாடாதே,அதுக்குள்ள 3 மாசம் முழுகாம இருக்கறதா சொல்றியே?

-------------------------------

7. நீ என் எதிரே நிற்கும்போது என் நிழல் உன் மீது விழுந்தது,பூமியில் ஒரு சந்திர கிரஹணம் நிகழ்ந்தது#நீ செக்கச்சிவப்பு,நான் கட்டக்கறுப்பு

--------------------------

8. உன் காதலியை எதுக்கு ஆத்துல தள்ளி விட்டே?

எப்போ பார்த்தாலும் நான் முழுகாம இருக்கேன்னு ஒரே டார்ச்சர்,அதான் போய் முழுகுன்னு தள்ளி விட்டேன்.

---------------------

9. பைக்ல பின்னால உட்கார்ந்துட்டுபோற பொண்ணு 2 சைடும் கால் போட்டுட்டு ஒட்டி உறவாடுனா அது அவன் லவ்வரா இருக்கும்,பட்டும் படாம அமர்ந்தா மனைவி!!

-----------------------

10. புராணங்களில் சொல்லப்படும் ஒருயுகம் என்பது 43,20,000 வருடங்களாம்,உனக்காக ஒரு யுகம்வரை காத்திருப்பேன்னு எவனாவது கதை விட்டா ஃபிகரே !நம்பாதே!

--------------------------------

a

11.வெற்றியாளன் அடிக்கடி தன்னை புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும், காதலன் தன் காதலைப்புதுப்பிக்கவேண்டும், காதலியை அல்ல

----------------------------

12. நல்ல வெயிட்டான இடமா பாருங்கன்னு சொன்னீங்களே?

தரகரே! கடுப்பைக்கிளப்பாதீங்க!மாப்ளைக்கு 62 கேஜி வெயிட், பொண்ணுக்கு 120 கேஜி வெயிட்

----------------------------

13. இந்தப்படத்துல கதைப்படி ஹீரோயினை கடைசி வரை தொடாம லவ் பண்றீங்க!

சாரி சார், எனக்கு கதை பிடிக்கலை!

-------------------------

14. டியர், எனக்கு செவ்வாய் தோஷம் இருக்கு.

இவ்வளவ் தானே? லிப்ஸ்டிக் போடாதே!

---------------------------

15. ஏய் மிஸ்டர், உனக்கு எவ்ளவ் தைரியம் இருந்தா என் கிட்டேயே என்னை லவ் பண்றதா சொல்வே?

லூசாம்மா நீ? உன்னை லவ் பண்றதை உன் தங்கச்சிட்டயா சொல்ல?

------------------------------


16. ஆண்ட்டி ஹீரோ கேரக்டர் ஏன் வேணாம்னு சொல்றீங்க?

ஹீரோயினா 40 வயசு ஃபிகரை போட்டு உயிரை எடுப்பானுங்க!

--------------------------

17. தலைவருக்கு பல குடும்பங்கள் இருக்காம்.

எப்படி கண்டுபிடிச்சாங்க?

182 ரேஷன்கார்டுகள்ல குடும்பத்தலைவர் பெயரா அவர் பேரு இருந்துச்சாம்

--------------------------

18.பொண்ணு கூட தனியா பேச மாப்ளை ஆசைப்படறார்.

இந்தாங்க பொண்ணோட செல் நெம்பர், அந்த ரூம்ல யாருமே இல்லை, போய் பேசிட்டு வாங்க!

------------------------------------

19. ரொம்ப மென்மையான காதல் கதை என்பதால் நத்தை என டைட்டில் வெச்சேன்.

அதான் படம் இவ்ளவ் ஸ்லோவா போகுதா?

-------------------------

20.  ஒருமித்த போராட்டங்கள் இது வரை நமக்கு கற்றுக்கொடுத்த நீதி மக்கள் எழுச்சியுடனும் விழிப்புடனும் இருந்தால் இறுதி வெற்றி மக்களுக்கே என்பதே

-------------------------


21. 56 நாட்கள் கூடுதல் ஆயுள் தான் என்றாலும் அந்த மூவர் மன நிலையும் ரொம்பவே கொடூரமானது,மரணபயத்தை உள்ளடக்கியது

-------------------------------

22. தூக்குத்தண்டனையை சட்டப்புத்தகத்தில் இருந்தே தூக்கு!மனித நேயம் மலர தூக்குத்தண்டனையை நீக்கு!

----------------------------

23. பக்கத்து வீட்டு பரமேஷ்க்கு என்மேல் ஒரு கண்ணுடி.

ம்க்கும், அவனுக்கு உன் தங்கச்சி மேல இன்னொரு கண்ணு,ஜாக்கிரதைடி..

--------------------------

24. கடவுளை நம்பினோர் கைவிடப்படார்!தமிழர்களை நம்பினோர் தூக்கிலிடப்படார்

-----------------------------

25. தூக்குத்தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது என்பதெல்லாம் பழைய சாக்கு.மனம் இருந்தால் மார்க்கமுண்டு என்பதே புதிய நோக்கு

---------------------------


26. நிருபர் - மேடம், உங்க புருஷனை ஏன் டைவர்ஸ் பண்ணீட்டீங்க?

      நடிகை - அடிக்கடி என் பர்சனல் மேட்டர்ல தலையிடறாரு!

----------------------------


27. ஷூட்டிங்க் கிளம்பற அமலாபாலை தலைவர்  “ வாங்க மேடம்”னு வரவேற்கறாரே? ஏன்? 

ஏற்கனவே லோக்பாலை வரவேற்கலைன்னு அவருக்கு கெட்ட பேராம்.!

---------------------------


28. மாப்ளைக்கு கோபம் வநதா அடிச்சுடுவாரு,ஜாக்கிரதை! 

ஹா ஹா பொண்ணுக்கு கோபம் வந்தா கடிச்சுடுமாம், டபுள் ஜாக்கிரதை

------------------------------


29. ஹாஸ்பிடலை பார்த்ததும் சாமியார்க்கு ஏன் மூடு வந்ததாம்?

அங்கே 500 பெட் இருந்ததே?

---------------------


30. மிஸ்!உங்களை நான் இன்னைக்கு சாயங்காலம் 5 மணில இருந்து லவ்பண்ணப்போறேன்,ஏன்னா அதுதான் நல்லநேரம்.

அட லூசுப்பையலே!இனிதாண்டா உனக்கு கெட்டநேரம்

---------------------------------------