Monday, February 24, 2014

மதுக் கடைகளைச் சட்டப்படி ஒழிப்பது எப்படி?

மதுவிலக்குக்காகப் போராடிவரும் சசிபெருமாள், ஒவ்வொரு மதுக் கடையின் முன்னாலும் ஒருநாள் உண்ணாவிரதம் இருக்க விரும்பிய கோரிக்கையைக் காவல் துறை மறுத்துள்ளது. பூரண மதுவிலக்குக்கான காலவரையற்ற உண்ணாவிரதத்துக்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தின் கதவை அவர் தட்டியுள்ளார். பொதுவாக, சமூக ஆர்வலர்கள் எல்லோருக்குமே மதுக் கடைகளுக்கு மூடுவிழா நடத்த முடியாதா என்ற ஏக்கம் உண்டு. அரசைத் தாண்டி, இப்படிப் பொதுமக்களுக்குத் தொந்தரவளிக்கும் மதுக் கடைகளை மூடுவதற்குச் சட்டத்தில் இடம் இருக்கிறதா? 



சட்டம் சொல்லும் சேதி


 
அரசியலமைப்புச் சட்டத்தில் 47-வது ஷரத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவது அரசின் நெறிமுறைக் கொள்கையாகக் கூறப்பட்டிருந்தாலும், நடைமுறையில் அது இன்றுவரை சாத்தியம் ஆகவில்லை. 1937-ல் கொண்டுவரப்பட்ட மதுவிலக்குச் சட்டத்தின் கீழ் இயற்றப்பட்ட விதிகளின் அடிப்படையிலேயே தமிழகத்தில் அரசாங்கத்தால் மதுக் கடைகள் நடத்தப்படுகின்றன. இதற்காக அரசு நடத்தும் நிறுவனம்தான் தமிழ்நாடு வாணிபக் கழகம் (டாஸ்மாக்). தமிழ்நாட்டில் இன்றைக்கு உள்ள 7,434 சில்லறை விற்பனை மதுக் கடைகளும் இந்நிறுவனத்துடையதுதான். கடந்த ஆண்டு மட்டும் அரசுக்கு கலால் வரி மூலம் வருமானம் ரூ. 23,000 கோடிகள் என்கிறார்கள். எனில், எத்தனை போத்தல்களைக் குடிமகன்கள் காலிசெய்திருப்பார்கள் என்று தெரிந்துகொள்ளலாம். 



மருத்துவம் தவிர மற்றவற்றுக்குத் தடை 



1937-ல் சென்னை மாகாண முதல்வராக இருந்த ராஜாஜி காலத்தில்தான் முதல் முறையாக மதுவிலக்குச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் மதுக் கடைகள் மூடப்பட்டன. 1950-ல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 47-வது பிரிவில், மருத்துவக் காரணங்களைத் தவிர, வேறு எக்காரணத்துக்கும் போதையூட்டும் பானங்கள் பருகுவதைத் தடைசெய்து பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள `டாஸ்மாக்' மதுக் கடைகள் 2003 தமிழ்நாடு சில்லறை (கடை மற்றும் மதுக்கூடம்) விற்பனை விதிகளின்படிதான் இயங்க வேண்டும். 1937 மதுவிலக்குச் சட்டத்தின் கீழ்தான் இவ்விதிகளும் இயற்றப்பட்டுள்ளன என்பது கொடுமை. மதுவிலக்கு அரசாங்கத்தின் நெறியாளும் கொள்கை என்பதனால், மதுக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது போத்தல்களில் `மது - நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்று லேபிள்களை ஒட்டும்படி அவ்விதிகளில் கூறப்பட்டுள்ளது. 



விற்கக் கூடாது, ஆனால் குடிக்கலாம்


 
2003 விதிகளில் விதி எண் 15-ன் கீழ், 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த வயதினர் மது அருந்துவதைச் சட்டம் தடை செய்யவில்லை. ஆனால், நடைமுறையில் இக்கடைகள் தங்களது தாராள குணத்தின் மூலம் பள்ளி மாணவர்கள்கூட மதுபோதைக்கு ஆளாகும் வகையில் விற்கின்றன. 



காவல் துறையின் புதிய பொறுப்பு


 
மதுக் கடைகளிலும் அதனுடன் இணைக்கப்பட்ட மதுக் கூடங்களிலும் மூக்குமுட்டக் குடித்துவிட்டுக் குடிமகன்கள் போடும் கும்மாளங்களுக்கு அளவில்லை. குடித்துவிட்ட போத்தல்களையும் பிளாஸ்டிக் கோப்பைகளையும் மிஞ்சிப்போன பதார்த்தங்களையும் வீதியிலே வீசிவிட்டுச் செல்வதும், மிதமிஞ்சிய போதையில் சாலையிலேயே வாந்தி எடுத்துச் சரிவதும் அடிக்கடி நடக்கும் தகராறுகளும்... இவற்றைப் பற்றி மக்கள் என்ன புகார் கூறினாலும், காவல் துறை கண்டுகொள்வதில்லை. ஏன்? அந்தக் கடைகளை வருமானம் குறையாமல் பார்த்துக்கொள்ளும் புதிய பொறுப்பு காவல் துறைக்குக் கொடுக்கப்பட்டிருப்பதே இதன் காரணம். 



எப்படிச் சாத்தியமாகிறது?


 
ஆனாலும், மக்கள் போராட்டத்தால், அங்கும் இங்குமாக ஓரிரு கடைகள் இடம் மாற்றப்படும், மூடப்படும் செய்திகளை நாம் பார்க்க முடிகிறது. எப்படிச் சாத்தியமாகிறது இது? 



மதுக் கடைகளை எங்கே வைக்கலாம் என்று முடிவு செய்வது மாவட்ட ஆட்சியர். 2003-ல் மதுவிலக்குச் சட்டத்தின் கீழ் வகுக்கப்பட்ட தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள்) விதிகள், கடைகளை எவ்விடத்தில் வைப்பது என்பதுபற்றிக் கூறப்பட்டுள்ளது. இந்த விதிகளின்படி மதுக் கடைகள், வழிபாட்டுத் தலங்களிடமிருந்தும் கல்வி நிலையங்களிடமிருந்தும் குறிப்பிட்ட தூரத்துக்கு வெளியே வைக்கப்பட வேண்டும் என்றும் கடைகள் வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. நகராட்சி எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 50 மீட்டருக்கு வெளியேயும் மற்ற பகுதிகளில் 100 மீட்டருக்கு வெளியேயும் வைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதே சமயத்தில், வணிகப் பகுதிகளுக்கு இவ்விதிகள் பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது. 



இவ்விதிகளில் உள்ள கல்வி நிறுவனம் என்பது அனைத்து வகையான கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். மதுக் கடைகள், அக்கல்வி நிலையங்களுக்கு அருகில் தடை செய்யப்பட்ட தூரத்தில் இருந்தால், அவற்றை அகற்ற மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கலாம். அம்மனுவின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உயர் நீதிமன்றத்தை அணுகலாம். 



பொதுஇடங்களில் சட்ட விரோதத் தடைகளோ அல்லது தொந்தரவுகளோ ஏற்பட்டால், அதுபற்றி சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரியிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், மாவட்டக் குற்றவியல் நடுவர், அப்படிப்பட்ட தொந்தரவுகளை நீக்க உத்தரவிடலாம் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 133-ம் பிரிவின் கீழ் கூறப்பட்டுள்ளது. இதில் வேதனை என்னவென்றால், மதுக் கடை வைக்க உத்தரவு கொடுப்பவரும் மாவட்ட ஆட்சியரே. தொந்தரவுகளை அகற்ற பிரிவு 133-ன் கீழ் உத்தரவிடும் மாவட்ட நடுவரும் மாவட்ட ஆட்சியரே. எனவே, அவர் அந்தத் தொந்தரவுகளை அகற்ற உத்தரவிடும்வரை காத்திராமல், உயர் நீதிமன்றமே, பொதுமக்களுக்குத் தொந்தரவு அளிக்கும் கடைகளை அகற்ற உத்தரவிட அதிகாரம் உள்ளது. 



நெடுஞ்சாலையில் மதுக் கடைகள்


 
மதுக் கடைகளை வைப்பதனால் தொடர்ந்து சாலை விபத்துகள் நடந்துவருவதனால் நெடுஞ்சாலைகளை ஒட்டி அக்கடைகளை வைப்பது உயர் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறான தடையை, பாலு என்றவர் தொடர்ந்த பொதுநல வழக்கின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அவ்வாறான கடைகளைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அகற்ற உத்தரவிடப்பட்டது. அதையும் மீறி நெடுஞ்சாலையை ஒட்டி ஏதேனும் மதுக் கடைகள் இருந்தாலோ (அ) அமைக்க முற்பட்டாலோ அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு நிவாரணம் கேட்கலாம். இங்கு நெடுஞ்சாலை என்பது தேசிய நெடுஞ்சாலை மட்டுமல்ல, மாநில நெடுஞ்சாலைகளையும் இவ்வரையறைக்குள் கொண்டுவரலாம். 




சமீபத்தில், சென்னை உயர் நீதிமன்றம், “உள்ளாட்சி அமைப்புகள் மதுக் கடைகள் அமைப்பதுகுறித்து எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினால், அதற்கு மாவட்ட ஆட்சியர் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளது. அதன்படி பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் பகுதியில் உள்ள மதுக் கடைகளை அகற்றக் கோரி, சம்பந்தப்பட்ட ஊராட்சி (அ) பேரூராட்சி உறுப்பினர்களை அணுகி, அவர்கள் மூலம் அம்மன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றி, அதை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய பின்னரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உயர் நீதிமன்றத்தை அணுகலாம். 



தங்கள் பகுதியில் உள்ள, சமூகப் பிரச்சினைகளில் ஆர்வமுள்ள வழக்கறிஞர்களை அணுகி வழக்கு போடலாம். இல்லாவிட்டாலும், பொதுநலன் கருதிய வழக்குகள் போடுவதற்குச் சமூக ஆர்வம் கொண்ட வழக்கறிஞர்கள் உண்டு. அவர்களை அணுகி வழக்கு போடவைக்கலாம். தவிர, உயர் நீதிமன்றத்தின் இரு அமர்வுகளிலும் சட்ட உதவிக் குழு செயல்படுகிறது. அக்குழுவை அணுகித் தங்களது வழக்கைப் போடும்படி கேட்டுக்கொண்டால், வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து வழக்குக்கான செலவையும் வழக்கறிஞர் கட்டணத்தையும் அக்குழுவே ஏற்றுக்கொள்ளும். இலவச சட்ட உதவி பெறும் நபருக்கு வருமானத் தகுதி இருக்கிறதா என்பதற்கான விதிகள் உண்டு. ஆனால், பெண்களுக்கும் பட்டியல் இனத்தவருக்கும் அப்படிப்பட்ட வருமான வரையறை இல்லை. 



சாட்சியங்களைத் தக்க வகையில் ஆவணப்படுத்தி, மனுக்களை உரிய அதிகாரிகளிடம் அனுப்பிய பின், வக்கீல்களை அணுகி முறையான உயர் நீதிமன்ற அமர்வுகளில் ரிட் மனுக்களைத் தாக்கல் செய்து, சட்டப்படி மதுக் கடைகளுக்கு மூடுவிழா நடத்தலாம். 


- சந்துரு, ஓய்வுபெற்ற நீதிபதி, சமூக விமர்சகர்.


 
thanx - the hindu
 

ராஜீவ் கொலை வழக்கில் - சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் டி.ஆர்.கார்த்திகேயன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் துப்புதுலக்கி குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்தவர் முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் டி.ஆர்.கார்த்திகேயன். கோயமுத்தூர் நரசீபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் தற்போது அமைதி, நல்லாட்சி, மத ஒருமைப்பாடு இயக்கம் (foundation for good governance) என்ற அமைப்பை நடத்தி நாட்டில் விவசாயிகள் பிரச்சினை, அவர்களுக்கான விழிப்புணர்வு, மனித ஒற்றுமை, சமூக, மத நல்லிணக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் நடக்கும் இயக்கங்களில் பங்கெடுத்து வருகிறார். 




டெல்லியில் இருந்த அவரிடம் ராஜீவ் காந்தி கொலை வழக்கு சிறைவாசிகளின் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது குறித்தும், அது குறித்து தமிழக சட்டப்பேரவையில் விவாதித்து கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று முதல்வர் அறிவித்திருந்தது குறித்தும் `தி இந்து'வுக்காக தொலைபேசி வாயிலாக அவர் அளித்த பேட்டி: 




ராஜீவ் கொலையில் 3 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டிருப்பது குறித்து உங்களின் கருத்து என்ன? 




அந்த வழக்கில் என் கடமை எப்போதோ முடிந்துவிட்டது. ஒரு மர்மமான மரணம் ராஜீவ் மரணம். யார் கொலை செய்தார்கள் என்பது யாருக்குமே தெரியாது. அப்போது எதற்காக அதை செய்தார்கள் என்றுகூட யாராலும் யூகிக்க முடியவில்லை. ஐ.பி. எனப்படும் இந்திய நுண்ணறிவு புலனாய்வுத் துறைக்குக்கூட தெரியவில்லை. இந்த கொலை வழக்கு பெரும்பாலும் ஜான் கென்னடி கொலை வழக்குபோல்தான் துப்புகூட கிடைக்காமல் கண்டுபிடிக்க முடியாமல் போகப்போகிறது என்று புலனாய்வுத்துறை உட்பட பலரும் கருதினர். 




அந்த சூழ்நிலையில்தான் அந்த வழக்கில் துப்பு துலக்க முடியுமா? என்று என்னை அழைத்துக் கேட்டனர். நானும் ஒப்புக்கொண்டு சென்னை வந்தேன். 



ஒரு நாளைக்கு 20 மணி நேரம் இரவு பகல் பாராமல் சரியான தூக்கமில்லாமல், விடுமுறை என்று ஒன்றில்லாமல் கிட்டத்தட்ட ஓராண்டாக பல்வேறு விசாரணைகள் நிகழ்த்தி, கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து வழக்குப் போட்டேன். குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தோம். அனைவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வந்தது.குற்றவாளிகள் அப்பீல் போனார்கள். உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகளே என் விசாரணையையும், ஆதாரங்களையும் ஒப்புக்கொண்டு 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், 4 பேருக்கு தூக்கு தண்டனையும் அளித்தனர். 




பின்னர் அதில் நளினி என்பவரின் தூக்கு தண்டனை கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனையாகக் குறைத்தனர். மீதி 3 பேருக்கு கருணை மனு 11 ஆண்டுகள் நிலுவையில் இருந்த நிலையில், இவர்கள் இத்தனை ஆண்டுகாலம் சிறையில் இருப்பது மனித உரிமைக்கு மீறிய செயல் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து அவர்கள் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்துள்ளது. 



என்னைப் பொறுத்தவரை துப்பே இல்லாத ஒரு வழக்கில் துப்பு துலக்கி ஏராளமான ஆதாரங்களை சமர்ப்பித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்ததோடு என் கடமை முடிந்துவிட்டது. 



ராஜீவ் காந்தி உங்களுடைய நெருக்கமான நண்பர். அவர் இப்போது இருந்திருந்தால் நாடு எப்படி இருந்திருக்கும் என்று கருதுகிறீர்கள்? 




நிச்சயமாக நன்றாக சிறப்பாக இருந்திருக்கும். நாட்டின் மதிப்பையும், தரத்தையும் உலக அரங்கில் மிக பன்மடங்கு உயர்த்தியிருப்பார். மக்களின் அன்பையும், மதிப்பையும் பெற்ற தலைவரான அவர் நல்ல உள்ளம் கொண்டவர். மக்கள் அவரை நேசித்ததைவிட மக்களை அவர் நேசித்தார் என்றுதான் சொல்லுவேன். அவர் ஆட்சியில் சில சின்ன தவறுகள் நடந்திருக்கலாம். மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்திருந்தால் அந்த சிறுதவறுகளைகூட கலைந்து தவறுகளுக்கே இடம் கொடாத ஆட்சி செய்திருப்பார். இந்த மாதிரி நிலையற்ற, திறனற்ற அரசாங்கமாக அது நிச்சயமாக இருந்திருக்காது. 



3 பேருக்கான தூக்கு தண்டனை ஆயுளாகக் குறைக்கப்பட்டதை தமிழக சட்டப்பேரவையிலேயே விவாதப் பொருளாக்கி அவர்கள் 3 பேரையும் சில நாட்களில் விடுதலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறாரே முதல்வர் ஜெயலலிதா? 



எந்த விஷயத்தையும் நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவையிலும் விவாதிக்கலாம். முடிவு எடுக்கலாம். அதில் கருத்து சொல்ல என்ன இருக்கு? 

 
readers views 


  • பேரறிவாளன் வாக்குமூலத்தை மாற்றியதை பற்றி மூச்சே விடவில்லை?ஹிந்துவும் அதை கேட்கவேஇல்லை
    2 days ago ·   (39) ·   (0) ·  reply (0)
    Thamizh  · KUMAR  · RAJ   Up Voted Raja 's comment
  • siva
    if you did the job properly these sort of confusion might have been avoided. Instead capturing the real culprit you capture a passer by who might have sneezed during that event and concluded he is the culprit. Investigation should be based on actual fact not assumption since he sneezed in this case he purchase battery.
    2 days ago ·   (4) ·   (0) ·  reply (1)
    • jaimanikandan from Chennai
      Then why did he go to sri lanka several times illegally dont try to fool the common man . even if you are not an indian atleast be a human
      2 days ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • samy kumara from Paris
    ஐயோ… ஐயோ… ஐயோ… பாக்கப் பாக்கக் கண்களால் சகிக்க முடியவில்லை. கேட்கக் கேட்கக் காதுகளால் முடியவில்லை. நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைக்கையிலே என்று பாடுவதற்கு நானொன்றும் பாரதியார் இல்லை. நான் ஒரு சாமானியன் ஐயா… ஆனால், பொய்யையும் புரட்டையும் எத்தனை நாளைக்குத்தான் பார்த்துக் கொண்டிருக்கலாம்? இதையெல்லாம் பார்த்தால் நிச்சயம் நெஞ்சுக்குத்தோ மாரடைப்போ வந்தே தீரும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்டகாலமாகச் சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன் என்ற மூன்று பேரின் தூக்குத் தண்டனைத் தீர்ப்பு நிராகரிக்கப்பட்ட பிறகு ஆளாளுக்கு ஒவ்வொருவரும் அடிக்கிற கூத்தும் போடுகிற நாடகங்களும் கொஞ்ச நஞ்சமல்ல.
    2 days ago ·   (1) ·   (1) ·  reply (0)
  • raana
    அவருடைய ஆட்சியில் சிறிய தவறுகள் ?.........சீக்கியர்கள் கொல்லப்பட்டதா ?போபார்ஸ் ஊழலா ?போபால் விஷவாயு தாக்குதலின் பொது ஆண்டெர்சனை தந்திரமாக அமெரிக்காவுக்கு அனுப்பியதா ?எது சார் ?நீங்கல்லாம் நல்ல வருவீங்க ........!
    2 days ago ·   (20) ·   (0) ·  reply (1)
    • R.Subramanian from Kumar
      போபோர்ஸ் உழலில் ராஜீவ் காந்திக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று இந்த வழக்கை விசாரித்த ஸ்வீடன் நாட்டு அதிரிகாரி சொல்லியிருக்கிறார் ஆனால் இந்தியாவில் ராஜீவ் காந்தியை சம்பந்தபடுத்தி செய்திகளை போட்ட பத்திரிகைகள் இதை பற்றி பெரிதாக போடவில்லை... ராஜீவ் காந்திக்கு இரண்டு அநிதிகள் இழைக்கபட்டு இருக்கிறது ஒன்று போபோர்ஸ் இன்னொற்று விடுதலை புலிகளால் ராஜீவ் காந்திக்கு நடத்தப்பட்ட கொடுரம்.
      2 days ago ·   (10) ·   (13) ·  reply (0)
      k.p.supramanian  · KUMAR   Up Voted R.Subramanian 's comment
      Mohan Ramachandran · அருள்   Down Voted R.Subramanian 's comment
  • Adhavan Adhavan from Jamnagar
    துப்பு துலக்கிய கார்த்திகேயன், ராஜீவ் காந்தியை ஏன் கொன்றார்கள் என்ற தகவலையும் சொல்லி இருக்க வேண்டும். மீனவ மக்களின் படுகொலைக்கு என்ன தீர்ப்பு? அவர்களும் இந்த நாட்டின் பிரிதி தானே? ராஜீவ் காந்திக்கு ஒரு தீர்ப்பு, ஏழைக்கு ஒரு தீர்ப்பா?
    2 days ago ·   (3) ·   (0) ·  reply (1)
    Adhavan Adhavan  Up Voted Adhavan Adhavan's comment
    • R.Subramanian from Kumar
      அதுவும் நீதிமன்ற விசாரணையில் சொல்லியிருக்கிறார்கள், போய் ராஜீவ் வழக்கை படித்து பாருங்கள்... விடுதலை புலி தலைவரின் விருப்பத்திற்கு இணங்க நடத்த கொடூர தாக்குதல் இது... இந்திரா காந்தியின் உதவியால் வளர்ந்த இயக்கமான விடுதலை புலிகள் இயக்கம், கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் அவரின் மகனையே கொலை செய்ய தயங்கவில்லை, நன்றி கொன்ற பாவிகள் விடுதலை புலிகள்
      2 days ago ·   (3) ·   (2) ·  reply (1)
      Vaidhyanathan Sankar  Up Voted R.Subramanian 's comment
      • Sivasankaran from Morrisville
        Lal Bahadur Sasthri யை யார் எதற்க்காக கொன்றார்கள்? அதன் பின்னர் யார் /எந்த குடும்பம் அதனால் பயனடைந்தது? பதிலை தேடுங்கள் பின்னர் யார் பாவிகள் என்பதை முடிவு செய்யலாம்.
        2 days ago ·   (2) ·   (1) ·  reply (0)
        GowriS   Up Voted Sivasankaran 's comment
        R.Subramanian   Down Voted Sivasankaran 's comment
  • Sivasankaran from Morrisville
    கொஞ்சநாள் கழித்தாவது உங்கள் மனசாட்சியை பேசவிடுங்கள். உங்களுடன் பணியாற்றிய தியாகராஜன் மனசாட்சி இப்போதுதான் பேச ஆரம்பித்துள்ளது. நமது மரணபடுக்கையில் நம்மை உண்மையில் கொல்வது இந்த மனசாட்சிதான் பெரியவரே, யோசியுங்கள்.
    2 days ago ·   (3) ·   (0) ·  reply (0)
  • Sivasankaran from Morrisville
    கொஞ்சநாள் கழித்தாவது உங்கள் மனசாட்சியை பேசவிடுங்கள். உங்களுடன் பணியாற்றிய தியாகராஜன் மனசாட்சி இப்போதுதான் பேச ஆரம்பித்துள்ளது. நமது மரணபடுக்கையில் நம்மை உண்மையில் கொல்வது இந்த மனசாட்சிதான் பெரியவரே, யோசியுங்கள்.
    2 days ago ·   (1) ·   (1) ·  reply (0)
  • Kriti Janarthanan from Bangalore
    துப்பே துலக்க முடியாத விஷயத்தில் இவர் மட்டும் எப்படி உண்மைகளை கண்டறிந்தார்? அப்படி உண்மை என்றல் நெஞ்சை நிமிர்த்தி அவர்கள் குற்றவாளிகள் ; தண்டனை நியாயமானது ஏன் சொல்ல முடியவில்லை? உண்மை என்றால் மாநில அரசிடம் மாட்டி கொள்வார் இல்லை என்றால் மத்திய அரசிடம் மாட்டி கொள்வார். இப்படியே ஒவ்வொருவரும் மழுப்புங்கள்...அரசியல் சக்கர வியூகத்தில் வெளி வர முடியாமல் இன்னும் எத்தனை பேர் அழிந்து கொண்டு இருக்கிறார்கள்....
    2 days ago ·   (1) ·   (1) ·  reply (0)
  • rajesh
    ஐ.பி. எனப்படும் இந்திய நுண்ணறிவு புலனாய்வுத் துறைக்குக்கூட தெரியவில்லை. - அப்பட்டமான பொய்... எப்படி சார் ஜி.கே.மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி, சிதம்பரம் எல்லாரும் அந்த ஸ்பாட்க்கு அன்னிக்கி சரியா பாத்து வரல ? மர்மமா இருக்கே ?
    2 days ago ·   (5) ·   (2) ·  reply (0)
  • isaac from Noida
    உங்க கடமை முடிஞ்சதுன்னு சொல்லிட்டு , யார் தங்கள் கடமையை சரியா செய்யல்ல என்று சூசகமாசொல்கிறீர்கள் ? காங்கிரெஸ்ஸ இல்ல courta
    2 days ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • esspee from Chennai
    ராஜீவ் காந்தியை கொன்றவர்கள் தண்டிக்கபடவேண்டியவர்களே.
    2 days ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • D.Anandaraj from Mumbai
    போபர்ஸ் மூலம் நாட்டின் மதிப்பையும், தரத்தையும் உலக அரங்கில் மிக பன்மடங்கு உயர்த்தி விட்டார் என்பது உண்மை. ஒரு பிரதமரே இன்னொரு பிரதமருடன் பேரம் பேசியது தான் புகழ். இருவருமே மர்மமாக கொலை பட்டனர். இந்துவின் அனைத்து புலனாய்வுகளும் வீண். இவர்களின் ஊழலை மறைக்க பயங்கரவாதம் பயன் பட்டது. கொடுமை. .
    2 days ago ·   (2) ·   (2) ·  reply (0)
    Mohan Ramachandran  Up Voted D.Anandaraj 's comment
  • அ.மயில்சாமி மயில்சாமி தமிழாசிரியர் at தமிழ்நாடு �from Kolkata
    நேரிய சிந்தனை...சிறந்த நோக்கு...சொல்லில் கண்ணியம்...இவரே சிறந்த அதிகாரி......!
    2 days ago ·   (4) ·   (2) ·  reply (0)
    D.Anandaraj   Down Voted அ.மயில்சாமி மயில்சாமி's comment
  • வேந்தன்,புதுக்கோட்டை. from New Delhi
    அது சரி... அப்பாவிகளை மாட்டி விட்டு வழக்கை ஊத்தி மூடிவிட்டார்கள்!!!(காண்க:காவல் அதிகாரி தியாகராசனின் வாக்குமூலம்).
    2 days ago ·   (1) ·   (6) ·  reply (0)
    Sivasankaran   Up Voted வேந்தன்,புதுக்கோட்டை. 's comment
  • CS SUBBURAJ
    சுப்புராஜ், உத்தரகாசி ராஜீவ் தவிர மேலும் இறந்தவர்களுக்கு ஜெயா என்ன பதில் சொல்ல போகின்றார். ஏன் நளினி மனுவை ஜெயா நிராகரித்தார். ஜெயாவின் நாடகத்தை மக்கள் நம்பகூடாது
    2 days ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • முகம்மது jinnah --
    'இவர் தற்போது அமைதி, நல்லாட்சி, மத ஒருமைப்பாடு இயக்கம் (foundation for good governance) என்ற அமைப்பை நடத்தி நாட்டில் விவசாயிகள் பிரச்சினை, அவர்களுக்கான விழிப்புணர்வு, மனித ஒற்றுமை, சமூக, மத நல்லிணக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் நடக்கும் இயக்கங்களில் பங்கெடுத்து வருகிறார். ' உயர்ந்த நோக்கம் . 'யார் கொலை செய்தார்கள் என்பது யாருக்குமே தெரியாது. அப்போது எதற்காக அதை செய்தார்கள் என்றுகூட யாராலும் யூகிக்க முடியவில்லை. ஐ.பி. எனப்படும் இந்திய நுண்ணறிவு புலனாய்வுத் துறைக்குக்கூட தெரியவில்லை. இந்த கொலை வழக்கு பெரும்பாலும் ஜான் கென்னடி கொலை வழக்குபோல்தான் துப்புகூட கிடைக்காமல் கண்டுபிடிக்க முடியாமல் போகப்போகிறது என்று 'புலனாய்வுத்துறை உட்பட பலரும் கருதினர்.' ஒரு நாளைக்கு 20 மணி நேரம் இரவு பகல் பாராமல் சரியான தூக்கமில்லாமல்..', தமிழ்நாட்டில் நிகழ்ந்த கொடுமையை கண்டுபிடிக்க தமிழரிடம் கொடுக்கப்பட்ட பொறுப்பை சிறப்பாக செய்தமைக்கு முன்னாள் இயக்குநர் டி.ஆர்.கார்த்திகேயன் திறம்பட செய்தமைக்கு வாழ்த்துவாம்
    2 days ago ·   (1) ·   (2) ·  reply (0)
  • Nirai Mathi at My Familyfrom Tirupur
    அதுதான் உங்கள் கீழே பணியாற்றிய ஒரு அதிகாரி அவர்களது வாக்குமூலங்கள் மிரட்டி (under duress ) வாங்கப் பட்டன என்று சொல்கிறாரே. பிறகு எப்படி உங்கள் கடமை முடிந்ததென்று மார் தட்டிக்கொள்கிறீர்கள்? இதத்தான் எங்க ஊர் SI வெள்ளத்துரை கூடச் செய்வாரே இதற்கு CBI டைரெக்டர் வேணுமா என்ன?
    2 days ago ·   (1) ·   (1) ·  reply (0)
    Sivasankaran   Up Voted Nirai Mathi's comment
    R.Subramanian   Down Voted Nirai Mathi's comment
  • Shahul Hameed at GRANITES
    வெறும் ஒட்டு வங்கி அரசியல் நடத்தும் கட்சிகள் இந்த நாட்டில் இருக்கும் வரை உண்மை பரண் மேல் தூங்கி கொண்டுதான் இருக்க வேண்டும்.
    2 days ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • சுகந்தி from Flörsheim
    ரஜீவ் காந்தி பற்றிய இவரின் கருத்து இவர் நடுநிலையாக செயல்ப் பட்டிருபாரா என்பதை சந்தேகிக்க வைக்கிறது.
    2 days ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • Vaidhyanathan Sankar at Department Of Agrl.Engg.,Government of Tamilnadufrom Bangalore
    இம்மாதிரியான அலுவலர்களின் திறமை, உழைப்பு மற்றும் சிந்திய வியர்வை யாவும் அரசியல்வாதிகளின் முன் விழலூகு இறைத்த நீர்.
    a day ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • GowriS from Mumbai
    ஒரு முள் காட்டில் ஏன் பிரச்சாரக்க் கூட்டம் நடத்த அன்றைய தமிழ் நாட்டு காங்கிரஸ் தலைவர்கள் தீர்மானித்தனர்...? இந்த இடத்தில பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தி பாதுகாப்பு பற்றி உருதிப்படுதினார்களா..? மாநாட்டுத் திடலுக்கு அன்றைய காங்கிரஸ் மற்றும் கூட்டணி தலைவர்கள் ஏன் வரவில்லை...? விசாரணை அதிகாரிக்கு எந்தெந்த அராசியல்வாதிகள் நெருக்கடி கொடுத்தார்களோ, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதா...? ராஜீவ் அவையில் இருந்த சுப்பிரமணி சாமியே, ராஜீவ் மரணம் குறித்து சோனியா குடும்பத்திற்கு முன் கூட்டியே தெரியும் எனக் கூறியிருக்கிறார்...! நேரு காலத்திலேயே முறைகேடுகள் ஆரம்பிக்கப்பட்டு, இந்திரா காலத்தில் அவரது மூத்த மகனுடன் சேர்ந்து மேன்மேலும் வளர்க்கப்பட்டு, ராஜீவ் காலத்தில் பின்பற்றப்பட்டு, சோனியா காலத்தில் இந்திய வரலாற்றில் விண்ணை முட்டும் அளவுக்கு கொண்டுச் செள்ளப்பட்டுகொண்டிருக்கிறது...!!! கார்த்திகேயன் சொல்வது போல், தேசம் ஒன்றும் சீரிய முறையில் நிச்சயம் இருந்திருக்க முடியாது; தேச நலன் சார்ந்த வளர்ச்சியை கொடுக்கும் அரசாங்கத்தை காங்கிரஸ் என்ற அரசியல் கட்சியினால் கொடுப்பது கனவு மற்றும் கற்பனை மட்டுமே...
    a day ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • [email protected]
    குழப்பமான அறிக்கை இது
    a day ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • KKRISHNASWAMY
    ராஜிவை கொன்றவனின் மகள் லண்டனில் படிக்கிறார் மருத்துவம்,சதரன் பெண்ணுக்கு கிடைக்குமா IN THA VAAIPPU.VISAVUKKU ALAIYUM MAKKAL MATHIYIL IVAR RAJA VALKAI VALAVTHU EAPPADI.KIANAVANAI LONDANIL SANTHIKKA VISAVUKKU ALAYUM MAKKAL MATHIYIL MURUGANUM NALINIYUM VIDUTHALAIKKU PIN LONDAON POKJIRARKALALM?
    a day ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Thirunthungada
    திரு கார்த்தி அவர்களே உங்கள் துறை திரு.தியாகராஜன் அவர்கள் தன்னுடைய தப்பினை ஒப்புக்கொண்டுவிட்டார் நீர் எப்போது???
 thanx - the tamilhindu

143 TIPS

1. வாசன் ஐ கேர் ல இருந்து வரோம்.இலவச கண் சிகிச்சை நடமாடும் முகாம்னு அடிச்சு விட்டு காதலியின் வீட்டில் புகுந்து காதலி கண்ணை க்ளோசப் ல பார்ங்க



====================



2  மஞ்சள் ரோஸ் ,ரோஸ் ரோஸ் ,ரெட் ரோஸ் 3 பூவும் ஒண்ணா கூந்தல்ல வெச்சா தான் காதல் பரிசு



===================




3 காதலை எப்டி சொல்றதுனு தயக்கமா இருக்கா? அந்த பிகர்ட்ட 150 ரூபா கடன் வாங்குங்க.நாளைக்கு 143 ரூபா குடுத்துட்டு நன்றி சொல்லுங்க




=========================


4 காதலி வீட்டுக்கு விடிகாலை 5மணிக்கு போய் வாசல்ல நில்லுங்க.கோலம் போட வரும்போது பே னு கத்துங்க.பயந்து கட்டிக்கும்



======================


5 காதலி நர்சாவோ லேடி டாக்டராவோ இருந்தா ரொம்ப சவுகர்யம்.அவங்க ஹாஸ்பிடல்ல போய் ஹார்ட் அட்டாக்னு (உங்க) நெஞ்சைப்பிடிச்சு படுத்துக்குங்க



======================


6 காதலி வீட்டுக்கு கேபிள் கனெக்சன் எங்கே இருக்குனு விசாரிச்சு அங்கே போய் 100 ரூபா வெட்டி ஒரே லவ் சாங் சேனல் மட்டும் ஒளிபரப்பறமாதிரிசெட்



==========================



7 காதலி வீட்டுவாசல்ல ஐ சப்போர்ட் யூ னு ஒரு பேனர் கட்டி வைச்சு கீழே கேவலமா ஒரு கையெழுத்துப்போடுங்க.பிகர் புரிஞ்சுக்கும்



====================


8 காதலி மெடிக்கல் ஷாப் ல ஒர்க் பண்ற மேனகா வா இருந்தா டெய்லி விக்ஸ் மிட்டாய் வாங்கிட்டே இருங்க.அதை பக்கத்து தெரு பத்மாக்கு குடுங்க



=====================



9 1431 பயோரியா பல் பொடி பாக்கெட் வாங்கி காதலிக்கு குடுக்கும்போது அந்த 1 ஐ கரி பூசி அழிச்சிடுங்க.பிரச்சனை வந்தா சமாளிச்சுக்கலாம்




====================



10 காதலி ஓரளவு படிச்சிருந்தா 70+50-20+43 =? னு கேளுங்க.அது கொலம்பஸ் மாதிரி 143 னு சொல்லும்.டக்னு மீ டூ னு அடிச்சு விடுங்க.


======================



11 காதலி லேடி போலீஸா இருந்தா டெய்லி போலீஸ் ஸ்டேசன் போங்க.நான் ஒரு சமூக ஆர்வலர்.குறும்படம் எடுக்க கேஸ் ஸ்டடி பண்றேன் னு கடலை போடுங்க



=====================


12 காதலி பேரு துளசியா இருந்தா டெய்லி பெருமாள் கோயில் போய் துளசியை வாங்கி பாக்கெட்லயே வெச்சிருங்க.நாளடைவில் துளசியை வெச்சிருக்கான்னு பேர்



===================


13  காதலி அஜித் ரசிகையா இருந்தா அவ வீட்டு தெரு வுல இப்டி ஒருக்கா அப்டி ஒருக்கா நடந்துட்டே இருங்க. செல் ரிங்க் டோன் ல பில்லா தீம் இசை


======================


14 காதலி வீட்டுக்கு 4 மொக்கைப்பசங்களோட போய் ஓட்டு கேளுங்க.சுயேச்சையா நிக்கறேன்.ஆதரவு வேணும் னு சொல்லுங்க.குங்குமச்சிமிழ் குடுங்க



==========================


15 காதலிக்கு நூல் கண்டு ம் மஞ்சள் தூள் 100 கிராம் ம் வாங்கித்தாங்க 1 நூல் விடறீங்க 2 மஞ்சள் ளை நூல் ல தேய்ச்சா தாலிக்கயிறு.ஸிம்பாலிக் டச்



===================












THIGH(தை)ப்பூசத்திருவிழா vs ரம்பா

1. கோழி முட்டை போல் கண் இருக்கும் பிகரை EGGகுத்தப்பான பார்வை உள்ளவர்னு சொல்லிட முடியாது



=====================



2 கூந்தல் உள்ள மகராசி அள்ளி முடியறா.சவுரி உள்ள மகர ராசி கழட்டி ஆணி ல மாட்றா!



=====================



3 அழகழகான (நடிகை) போட்டோவை டி பி யா வெச்சிருக்கும் பெண் ட்வீட்டர்களோட புருசன்மார்க அதைப்பார்க்கும்போது என்ன நினைப்பாங்க?


=======================


4 பஸ்சிலோ ரயிலிலோ போகும்போது இறங்க வேண்டிய ஸ்டாப்பிங்கில் இறங்காமல் 2 ஸ்டாப் தள்ளி இறங்குனா அவர் ட்விட்டர் என அறிக



=====================



5 சம்ரிதா னு ஒரு பேரை சவுரி தா னு படிச்ட்டேன் ;-))


=====================



6 ரம்பாவைப்பொறுத்தவரை காலுக்குப்பவுடர் போடும் நாட்கள் எல்லாமே THIGH(தை)ப்பூசத்திருவிழா தான்


====================



7  வீட்டை விட்டு வெளியே வராம அடம் பிடிக்கும் ஹை க்ளாஸ் பிகருங்க ,வெந்தது ,வேகாதது எல்லோரையும் ஒரு சேரப்பார்க்கும் வாய்ப்பு # காணும் பொங்கல்



========================



8 புருசனையே அடக்கி விடும் பெண்கள் ஜல்லிக்கட்டில் இறங்கி காளைகளை அடக்க தயங்குவது ஏனோ? பெண்ணியவாதிகள் முன் வரவும்



================================


9  பியூட்டிபார்லர் கள் எந்த ஊரில் கல்லா கட்டினாலும் அந்த ஊர் அலங்காரநல்லூர் தான்



=====================
 10 அன்பே! நீ ரெட்டைச்சடை போட்டா அது கூந்தலின் பிரிவினை.ஒத்தைச்சடை போட்டா அழகின் செய்வினை


=====================



11 இந்த பொண்ணுங்க் கிட்டே எனக்குப்பிடிச்சதே கெட்டவன் கிட்டே ஈசியா ஏமாந்துட்டு நல்லவன் கிட்டே " நீ நல்லவன்னு நம்பமாட்டேன்"னு அடம் பிடிப்ப்தே!



=======================



12  மத்த நாள் ல எல்லாம் மாட்டுப்பிரியாணியை வெட்டிட்டு இன்னைக்கு மட்டும் பெருமையா மாட்டுப் பொங்கல்ன்னு சொல்லிக்கிறவன் தான் தமிழன் :))"



=======================
 13. இன்று கூட ( 15 1 14 )  வேலை வைத்து ஆபீஸ் வரச்சொல்லி துன்புறுத்தும் டேமேஜர் , எம் டி ,ஓனர் எல்லோரும் குடும்பத்துடன் ஆரோக்யமாக வாழ வாழ்த்துகிறேன்


======================


14 கூந்தலில் பூச்சரம் வைக்கும் பெண்கள் அதை அப்டியே விட்ருங்க.ஜடையை முன்னால தூக்கிப்போட்டா எந்தப்பூவை ரசிப்பது? என குழப்பமா இருக்கு


===========================


15 4 பேருக்குமுன்திட்டிவிட்டுபின் தனிமையில் அதுக்கு ஒரு சால்ஜாப்பு சொல்லும் ஆண் ஓநாய் டேமேஜர்களிடம் லேடி ஸ்டாfகள் எச்சரிக்கையாய் இருக்கனும்



========================



16 புதுசா படம் ரிலீஸ் பண்ணப்போகும் பட அதிபர்களே! டி வி உரிமையை ஜெயா டி வி க்கே கொடுத்துத்தொலைச்சிடுங்க #,வரி விலக்கு




=========================



17 யூ சான்றிதழ் அளிக்கப்பட்ட இரு தமிழ் ப்பட டைட்டில்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படாதது ஜெ யின் எதேச்சாதிகாரமா? வேறு காரணமா? # ஜில்லா.& வீரம்



========================



18 பொங்கல் ரிசல்ட் நீதி = நல்ல நல்ல தியேட்டர் புக் பண்றதை விட முக்கியம் நல்ல கதை ,திரைக்கதையை தெரிவு செய்வது



=======================


19   வாசல் ல பொங்கல் வைக்கும் எதிர் வீட்டு ஆன்ட்டி கிட்டே பக்கத்து வீட்டு பெருசு " பானை ரொம்பச்சின்னதா இருக்கே" ங்கறார் #,யோவ்.!!


========================



20  வெற்றியைக்கொண்டாடுவது வீரம் இல்லை.அமைதியா அடுத்த பிராஜக்ட்க்கு சத்தம் இல்லாம உழைக்க ஆரம்பிப்பதே வீரம்



============================

Sunday, February 23, 2014

2014-லோக்சபா தேர்தல் -ஏபிபி நியூஸ் கருத்து கணிப்பு - BJP =236 ,காங்கிரஸ் கூட்டணி 92

தே.ஜ.,கூட்டணிக்கு 236 இடங்கள் கிடைக்கும்:கருத்து கணிப்பு




டில்லி:2014-லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 236 இடங்கள் கிடைக்கும்.இதில் பா.ஜ.,வுக்கு மட்டும் 217 இடங்கள் கிடைத்து தனிப்பெருங்கட்சியாக இருக்கும். என ஏபிபி நியூஸ்-நீல்சன் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

காங்கிரஸ் கூட்டணி 92 சீட்கள்: காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணிக்கு 92 சீட்கள் கிடைக்கும். இவற்றில் காங்கிரஸ் 73 இடங்களை பிடிக்கும். ஆம் ஆத்மி 10 இடங்களை பிடிக்கும். 



பிரதமர் பதவிக்கு யார் வேண்டும்:பா.ஜ.க., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு 57 சதவீதம் பேர் ஆதரவாகவும் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுலுக்கு ஆதரவாக 18 சதவீதம் பேர் ஆதரவாகவும் கெஜ்ரிவாலுக்க ஆதரவாக 3 சதவீதம் பேர் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.இது தவிர திரணமூல் காங்கிரஸ் 29 தொகுதிகளிலும், அ.தி.மு.க.,19 இடங்களிலும் பிஜூ ஜனதா தளம் 16 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.



தே.ஜ., கூட்டணி, வடக்கு மற்றும் மேற்கு பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தவில்லை. அதனால்தான் கூட்டணி பலத்துடன் ஆதிக்கம் செலுத்தி 88 சீட்களை பெற முயற்சி செய்து வருகிறது. இப்பகுதிகளில் வடக்கில் ஐ.மு.கூட்டணிக்கு 23ம் மேற்கில் 22 என கணக்கிடப்பட்டுள்ளது. மற்றவர்கள் வடக்கில் மொத்தம் உள்ள 151 சீட்களில் 40 வெற்றி பெற முயற்சிக்கின்றனர்.மேற்கில் உள்ள 116 சீட்களில் 6 இடங்களை பிடிக்க முற்படும் என கருத்து கணிப்பு கூறுகிறது.



தெற்கு பிராந்தியத்தில் 21 சீட்கள் இக்கூட்டணிக்கு கிடைக்கலாம். தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க., கட்சிகளும் ஆந்திராவில் டி.ஆர்.எஸ், தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கர்நாடகத்தில் ஜனதாதளம்(எஸ்) இடது சாரிகள் 15 சீட்களை பெற்று விடும்.தென்னகத்தை பொறுத்த மட்டில் மாநில கட்சிகள் ஆதிக்கம் செலுத்துகிறது. மொத்தம் உள்ள 134 ல் ஐ.மு.,23 இடங்களையும் தே.ஜ.,21 இடங்களை பெறலாம் என்கிறது கருத்து கணிப்பு.


thanx - dinamalar 

readers views 



1. நான் அப்பவும் சொன்னேன் ,,,இப்பவும் சொல்கிறேன் .நாங்கள் கிராமத்தில் வாழ்கிறோம் ..நாங்கள் கிராமத்தில் வாழுபவர்கள் ...சின்ன ,சின்ன கிராமங்கள் வந்து பாருங்கள் .எல்லா கிராமத்திலும் கட்சி வித்தியாசம் பார்க்காமல் ,பெரியோர் முதல் சிறியோர் வரை மோடி படம்,பேனர் வைத்துள்ளார்கள் ..எங்கள் ஊரில் 3 admk விசுவாசிகள் .அந்த 3 பேர் விட்டு கதவிலும் மோடி படம் ஒட்டியுள்ளார்கள்... நாங்கள் எங்கள் வியாபாரத்திற்க்காக ஒரு நாளைக்கு 20 கிராமத்திற்கு போய் வருகிறோம் ...எங்களுக்கு தெரியும்..மோடி அலை என்றால் என்ன என்று ...முன்னாடி மாதிரி கட்சி சண்டை,....கட்சி கொடி சண்டை ,....அவன் அந்த கட்சி என்று சண்டை வரும்,,இப்போது அந்த மாதிரி சண்டை போட ஆளும் கிடையாது ....மற்ற கட்சீ தொண்டர்களுக்கு வயதும் ஆகி விட்டது ,,முன்னாடி மாதிரி கட்சி மிது வேகம் கிடையாது ,. இப்போது அவர்கள் பிள்ளைகள் மோடியை ஆதரிப்பதனால் எல்லா பெரியவர்களும் ,மோடியை ஆதரிக்க தொடங்கி விட்டனர் ,கிராமங்களில் மோடி ,மோடி என்ற ஒலியோசை கேக்க ஆரம்பித்து உள்ளது ... மோடி வரவேற்கும் இளைஞர்களே அதிகம் ...எல்லா கிராமங்களிலும் .இளைஞர்களே ஆளுக்கு 100 ரூபாய் போட்டு த்தான் பேனர் வைத்துள்ளனர் ,,எங்கள் ஊரில் பேனரில் மோடி படம் மேலே ..கிழே 25 பையன்கள் போட்டோ ..கிராமங்கள் எல்லாம் மற்ற கட்சிகளின் கையை விட்டு போகிறது கண்ணுக்கு தெரிகிறது ,,திருச்சிக்கு மோடி வந்த போது ,எங்கள் ஊரை சுற்றி உள்ள இளைஞர்கள ,கை காசை போட்டு திருச்சி கூட்டதிற்கு போய் இருக்கிறார்கள் .,,அந்த வேகம் எந்த கட்சிக்கும் இப்போது இல்லை ..இன்னும் இரண்டு மாவட்டங்களில் மோடி பேச உள்ளார் ..அதன் பிறகு அதன் ஒலி இன்னும் அதிகமாகும் . ......அப்போது திராவிட கட்சிகளின் அலறல் சத்தங்கள் அதிகமாகும் ....கிராமங்களில் திராவிட கட்சிகளின் ஆதிக்கம் குறைந்து கொண்டே வருகிறது ..இது உண்மை..




2 vadivelu72 இடங்களை பிடித்தாலும், காங்கிரஸ் எல்லா சந்தர்பவாத மற்றும் சுயநல மிக்க பரம்பரை கொள்ளையர்களை சேர்த்துக்கொண்டு நிச்சயம் ஆட்சி அமைக்கும்.அவர்களுக்கு அதிகாரத்தில் இருப்பது ஒன்றே குறிக்கோள்.பெரிய ஊழல்களை பரம்பரை கொள்ளையர்கள் கட்சிகள் துணிச்சலோடு செய்யும்.காங்கிரசும் எதுவுமே நடக்காததுபோல் கண்டும் காணாமலும் இருக்கும்.இந்த நாட்டின் தலைவிதி அது.... 




3 என்னது கெஜ்ரிவாலுக்கு மூன்று சதவீத ஆதரவு தானா ? அதாவது தினமலரில் ராம்(ஆம் ஆத்மி) , கார்த்தி(அதிமுக) , மரியா(திமுக) என்ற மூன்று பேரும் ஆதரவு தெரிவிப்பதை போல .....மூணு சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்தால் கூட ஓட்டை தான் விரும்பும் கட்சிக்கு தான் போட போகிறார்கள் . எனவே ஒரு சதவீத ஆதரவு என்பதே சரி....பா.ஜ.க பெரும்பான்மை பெற்று நரேந்திர மோடி எனும் கர்ஜிக்கும் சிங்கம் பிரதமர் ஆவார்...மன்மொஹன் சிங் என்ற பொம்மை கரடி சீட்டை காலி செய்து போகும்....அதற்கு பிறகு பாகிஸ்தான் சீனா எல்லாம் எல்லையில் வாலாட்ட பயப்படும்...பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் கம்முனு பொத்திகிட்டு போவார்கள்...மொத்தத்தில் இந்தியா நன்றாக இருக்கும்...அமெரிக்கா வழிய வந்து சிவப்பு கம்பளம் விரித்து இந்திய பிரதமரை அழைப்பார்கள். 



4 S. ரெகுநாதன் தமிழ்நாட்டில் இருக்கும் கூட்டணி குழப்பங்கள் வடநாட்டு கருத்து கணிப்பு நிறுவனங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை...தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் கட்சிகள் நவக்ரகதை விட மோசமாக உள்ளது...அதிமோக்+கம்யூனிஸ்ட்கள் தவிர உருப்படியாக எந்த அணிகளும் தென்படாத நிலையில் திமுக, காங், தேமுதிக தனிதனி அணியாக போட்டியிட்டு, BJP+மதிமுக+பாமக கூட்டணி வந்தால் ஓட்டு சதவிகித படி அதிமுக அணியே 30-35 இடங்கள் பெற்று முன்னிலை வகிக்கும்..ஒருவேளை திமுக+காங்+தேமுதிக மூன்றும் சேர்ந்து கூட்டணி அமைத்தால் கருத்து கணிப்பில் சொன்ன படி அதிமுக அணிக்கு 20-25 இடங்கள் கிடைக்கலாம்..அப்படி அமைய முதல்வர் அம்மா விடமாட்டார்..

காதலியுடன் செல் போனில் பேசும் முன் ===== # லவ்வாலஜி TIPS

1. சசிதரூர் அஜித் ரசிகராம்.சம்சாரம் விஜய் ரசிகையாம்.எந்தப்படம் முதல்ல பாக்கறதுன்னு தகராறாம் #,அட்ரா சக்க டுபாக்கூர் செய்திகள்



================


2 பசிச்சா கிச்சன் ரூம் போயோ ஹோட்டல் போயோ சாப்பிடாம " எனக்கு பசிக்கி" என ட்வீட் போடுபவனே தமிழன்


=================



3 டைப்ரைட்டிங்கில் லோயர் ,ஹையர் எக்சாம் பாஸ் ஆனவங்கதான் பிரபல ட்வீட்டர் ஆக முடியும் என்பதும் ஒரு வித மூட நம்பிக்கையே!



=================


4  டி எம் ல ஒரு பொண்ணு வந்து " வணக்கம் அண்ணா.எப்படி இருக்கீங்க? னு கேட்டுது.செம கடுப்பா இருக்கேன்ட்டேன் # யார் கிட்டே?



=================



5  நம்ம மேரேஜ் நடக்காதுனு ஆஸ்திரேலியாவில் இருந்து சொன்ன அனுஷ்கா வை அஜித் இந்தியா வில் இருந்தே நடந்து போய் மேரேஜ் பண்றது தான் கதை #55  ajith



===================



6   நல்ல வேளை .பொண்டாட்டி செத்த துக்கம் தாங்காம 4 வது கல்யாணம் உடனே பண்ணிக்கல



======================



7   பொண்டாட்டி செத்தா உடனே தான் ஹார்ட் அட்டாக் வரும்.போலீஸ்க்கு இன்பார்ம் பண்ணி 18 மணி நேரம் கழிச்சு ஸ்லோமோஷன்லயா வரும்?



================



8 மணிரத்னம் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்க இருக்கும் க்ரைம் த்ரில்லர் சசிதரூர் மேட்டரோ?



====================



9 ஐஅம்மி சாரி ஐ மம்மி டி எம் க்கு ரிப்ளை பண்ண ,டெய்லி டி பி மாத்தவே ஒரு ஆளை வேலைக்கு வெச்சிருக்காம்.அடேங்கப்பா .பயங்கர பணக்கார்


==================



10  உங்கள் உடல் புதைக்கப்படும் முன் பார்வை அற்றோர் இமைக்குக்கீழ் விதைக்கப்படட்டும் # கண் தானம்



=================



11   புவி ஈர்ப்பு விசையில் உங்கள் உடல் மண்ணுக்குள் போகும் முன் விழி ஈர்ப்பு விசை தொடர்ந்து பயணிக்க கண் தானம் செய்யுங்கள்



=================



12  ஈரோடு தேவி அபிராமி ல வீரம் எடுத்துட்டு த டவர் னு மொக்கை படம் போட்டிருக்கான்.இந்த மேட்டர் விஜய் ரசிகர்களுக்குத்தெரியாம பாத்துக்கனும் ;-))



================



13    பொதுவா பெண் ட்வீட்டர்கள் யாரும் தன் துணையுடன் இருக்கும் டி பி வைப்ப்தில்லை. இதுக்கு ஏதாவது உளவியல் ரீதியான காரணம் இருக்குமா ??



=================


14  ஆண் ட்வீட்டர்க்ள் ஏன் தன் துணை போட்டோ வைக்கறதில்லைனா ட்வீட்டும் மூடு போய் விடும் என்பதால்


================



15  நமக்கெல்லாம் உடம்பு சரி இல்லைன்னா டாக்டர்ட்டயோ நர்ஸ் கிட்டேயோ போவோம்.டாக்டர்க்கே உடம்பு சரி இல்லைன்னா என்ன செய்வாங்க?


=====================



16 சூரிய திசை நடக்கும் ராசிக்காரர்களுடைய அப்பாவுக்கு ஆபத்தாம்.சாலையில் கவனமா நடக்கவும்.மெடிக்கல் செக்கப் செய்து கொள்ளவும்.


===================


17   மிட் நைட் 12 மணிக்கு குட்நைட் சொல்லிட்டுப்படுத்தவரு அதிகாலை ல 3 மணிக்கு ஹாய் நலமா? னு குசலம் விசாரிச்சா அவர் தமிழன் என்று கொள்க ;-)



===================



18   ட்விட்டர்ல தமிழ் வாத்தியார்ங்க எண்ணிக்கை அதிகம் ஆகிடுச்சு ;-))



=================



19  காதலியுடன் செல் போனில் பேசும் முன் 5 மிளகு சாப்புடுங்க.விக்கல் வரும்.பாத்தியா?எப்பவும் உன் நினப்பு தான் என அள்ளி விடலாம் # லவ்வாலஜி


===================




20    ரூபி தீப்பெட்டில இப்ப 48 தீக்குச்சிகள் தான் இருக்கு.முதல்ல எல்லாம் 75 இருக்கும் # எல்லாத்தையும் எண்ணிப்பார்க்கும் பொழுது போகாத பொம்மு



====================