Wednesday, February 19, 2014

குத்துமதிப்பு குருசாமிகள் கவனத்திற்கு

கருத்துக் கணிப்புகள் பொய்யாவது ஏன்?

வாக்காளர்கள் மத்தியில் ஒரு கருத்தைத் திணிக்கவே கருத்துக் கணிப்புகள் பயன்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளைச் சமீப காலமாக அதிக அளவில் கேட்கிறோம். பொதுமக்களுக்கு இந்தத் தேர்தல் கணிப்புகளெல்லாம் பரபரப்புச் செய்திகள்தானே தவிர, வேறெதுவும் இல்லை. ஏனெனில், பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் உண்மை நிலையைப் படம்பிடிப்பதில்லை. 


கருத்துக் கணிப்புக்கும் தேர்தல் முடிவுகளுக்கும் பல சமயங்களில் சம்பந்தம் இல்லாமல் இருப்பதுதான் மக்களின் ஈடுபாட்டின்மைக்குக் காரணம். இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்... இந்தக் கருத்துக் கணிப்புகளுக்குப் பின்னுள்ள கணிதம் என்ன என்பதையும், கருத்துக் கணிப்புகள் நம்புவதற்கு ஏன் சிரமமாக இருக்கின்றன என்பதையும் கொஞ்சம் பார்க்கலாமா? 


ஒரு சோறு பதம்

 
கருத்துக் கணிப்பு என்பது ஒரு கணிப்பு மட்டும்தான். ஒரு தொகுதியில் உள்ள வாக்காளர்களில் ஒருசிலரிடம் மட்டும் கருத்துகளைக் கேட்டு, அந்தத் தொகுதியில் யார் வெற்றிபெறக்கூடும் என்று கணக்கிடுவதுதான் இதன் அடிப்படை. ஒருசிலரிடம் மட்டும் கருத்து கேட்கும் இந்த சாம்பிளிங் முறைதான் முதல் பிரச்சினை. ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது சாம்பிளிங் தத்துவத்தின் அடிப்படை. 


அதாவது, ஒரு பானையில் உள்ள எல்லாச் சோற்றையும் எடுத்துப் பார்த்து, சோறு வெந்திருக்கிறதா என்று பார்க்க வேண்டிய அவசியமில்லை. நல்லது. ஆனால், பானையில் உள்ளது எல்லாம் ஒரே விதமான தானியமாக இருந்தால் ‘ஒரு சோறு பதம் பார்ப்பது’ சரியே. பானையில் அரிசி, கோதுமை, உளுந்து, கம்பு, கேழ்வரகு என்று பலவாக இருந்தால், ஒரு சோற்றைப் பார்த்துப் பதம் சொல்ல முடியுமா? இதுதான் தேர்தல் கருத்துக் கணிப்பிலும் உள்ள சாம்பிளிங் பிரச்சினை. 


ஒரு தொகுதியில் உள்ள வாக்காளர்களின் வயது, வேலை, சாதி, சமூகச் சூழல், இருப்பிடம், கல்வி, அரசியல் சிந்தனை, அரசியல் சார்பு நிலை என்ற பல விஷயங்கள் அவர்களுடைய வாக்குகளைத் தீர்மானிக்கும். எனவே, ஒரு தொகுதியில் ஒரு சாம்பிள் எடுக்க வேண்டும் என்றால், மேலே சொன்ன வகைகளில் ஒவ்வொன்றிலும் ஒரு சிலரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 


இதில் ஒவ்வொரு வகையிலும் எல்லோரும் வாக்களிக்க மாட்டார்கள். மேல்தட்டு மக்கள் வாக்களிக்கும் சதவீதம் குறைவாக இருந்தால், சாம்பிளில் அவர்கள் குறைவான எண்ணிக்கையில் இருக்க வேண்டும். இதுபோன்ற நடைமுறைகளையெல்லாம் பின்பற்றாமல், கண்ணில் படுபவர்களிடம் எல்லாம் கருத்து கேட்டால், அது சரியான சாம்பிளாக இருக்காது. எனவே, கருத்துக் கணிப்பில் முதல் கோணல், சாம்பிளிங் தவறுகள்தான். 


உண்மையும் பொய்யும்

 
இரண்டாவது பிரச்சினை, கருத்து கேட்பது. நாம் கேட்பது ஒன்றாகவும், அதனைப் புரிந்துகொண்டு பதில் அளிப்பது வேறாகவும் இருப்பது மற்றுமொரு பிரச்சினை. நீங்கள் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்டால், அதற்கு எல்லோரும் உண்மையைக் கூறுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இதில் கணிசமானவர்கள் பொய் கூறினால், கருத்துக் கணிப்பே தவறாகிவிடும். 


சில நேரங்களில் கேட்கப்படும் கேள்வியே தவறாகப் புரிந்துகொள்ளப்படும். உதாரணமாக, ‘யார் வெற்றிபெறக்கூடும்?’ என்ற கேள்விக்கு, தங்களுடைய அபிமான வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என்று அவர்கள் பதிலளித்தால், கருத்துக் கணிப்பு தவறாகிவிடும். இதுபோன்ற தவறுகளை ‘நான்சாம்பிளிங்’ தவறுகள் என்பார்கள். 


சிக்கலான கணிதம்

 
அடுத்த பிரச்சினை, கருத்துக் கணிப்பில் ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த வாக்குகளைச் சீட்டுகளாக மாற்றுவது. பொதுவாக, ஒரு மாநிலம் முழுக்கக் கருத்துக் கணிப்பு நடத்தப்படும். இதில் சாம்பிளிங் அளவு குறைவாக இருப்பதால், ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் எடுக்கப்பட்ட சாம்பிள் அளவு மிகமிகக் குறைவாக இருக்கும். 


எனவே, ஒவ்வொரு தொகுதியிலும் யார் வெற்றிபெறுவார்கள் என்பதைக் கணிப்பதற்குப் பதில், மாநிலத்தில் எந்தக் கட்சிக்கு அல்லது கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று கணிப்பதுதான் வழக்கம். 



ஒவ்வொரு கட்சிக்கும் கிடைக்கும் வாக்குகளை எப்படி மக்களவை அல்லது சட்டமன்றச் சீட்டுகளாகக் கணக்கிடுவது? ஒரு தேர்தலில் இரண்டு வேட்பாளர்கள் மட்டுமே இருந்தால், எவரொருவர் 50%-க்கும் அதிகமாக வாக்குகளை வாங்குகிறாரோ, அவரே தேர்ந்தெடுக்கப்படுவார். இரண்டுக்கும் மேல் வேட்பாளர்கள் இருந்தால், வாக்குகளைச் சீட்டுகளாக மாற்றுவது கடினமாகிறது. 


மூன்று வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர் என்று வைத்துக்கொள்வோம், மூவருமே சமமான பலத்துடன் இருந்தால், எவரொருவர் 33.3% மேல் வாக்குகளைப் பெறுகிறார்களோ, அவரே வெற்றி பெறுவார். ஆனால், ஒருவர் 10% வாக்குகளைப் பெற்றால் மற்ற இருவரில் யார் 45%விட அதிகமாகப் பெறுகிறாரோ அவர் வெற்றிபெறுவார். எனவே, ஒருவருடைய பலம் மாறமாற யார் எவ்வளவு வாக்குகளைப் பெறுவார், யார் வெற்றிபெறுவார் என்று கணிப்பது கடினம்தான். 


இதுவே, வேட்பாளரின் எண்ணிக்கை அல்லது கூட்டணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது வாக்குகளைச் சீட்டுகளாக மாற்றும் கணிதம் கடினமாகிறது. 


ஒரு தேர்தலில் பல வேட்பாளர்கள் இருக்கும்போது, அதில் முனைப்பாக எவ்வளவு வேட்பாளர்கள் உள்ளனர் என்பதைக் கண்டறிய வேண்டும். இதற்கு ஒரு கணித சூத்திரம் உண்டு. உதாரணமாக, 10 வேட்பாளர்கள் உள்ள தொகுதியில், இருவர் 45%, மற்றும் 40% வாக்குகளையும் மற்ற எட்டு வேட்பாளர்களும் சேர்ந்து 5% வாக்குகளையும் பெற்றால், இதில் இரண்டு அல்லது மும்முனைப் போட்டி உள்ளது. 


இதுபோல் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போதும், அதில் ஒரு சிலர் மட்டும் அதிக வாக்குகளையும், வேறு பலர் குறைந்த வாக்குகளையும் வாங்கும்போது, எத்தனை முனைப் போட்டி என்று கணிப்பது சற்று சிரமம்தான். இது உறுதியாகத் தெரிந்தால்தான், கருத்துக் கணிப்பில் கிடைத்த வாக்குகளைச் சீட்டுகளாக மாற்றிப் பார்க்க முடியும். 



அதேபோல் மற்றொரு சிரமமும் உண்டு. ஒரு தொகுதியில் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, வெற்றி பெறுவதற்குத் தேவைப்படும் வாக்குகளின் எண்ணிக்கை குறையும். ஆனால், எவ்வளவு குறையும் என்பது தெரியாது. மேலே உள்ள உதாரணத்தில், மும்முனைப் போட்டியில், மூவரும் சமமான பலத்துடன் இருந்தால் 33.3% விடச் சற்று அதிக வாக்குகள் பெற்றால் போதும்; ஒருவர் சற்றுக் குறைந்த பலத்துடனும், மற்ற இருவர் சமமான பலத்துடனும் இருந்தால், வெற்றிபெற 33.3% விட மிக அதிகமான வாக்குகள் தேவை. 



ஒவ்வொரு தொகுதியிலும் பலர் போட்டியிட்டாலும், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு சில கூட்டணிகள் மட்டுமே பிரதானமாக இருப்பதால், சில அனுமானங்கள் அடிப்படையில் கருத்துக் கணிப்பில் பெற்ற வாக்குகளை ஒவ்வொரு கூட்டணியும் பெறும் பிரதிநிதித்துவ இடங்களாகக் கணக்கிட முடியும். ஆனால், பிரதானக் கூட்டணிகளைக் கண்டறிந்தாலும், ஒவ்வொரு தொகுதியிலும் கூட்டணியில் இல்லாத சில சிறிய வேட்பாளர்கள் மற்ற பெரிய வேட்பாளர்களைவிட அதிக வாக்குகள் வாங்கி, நமது கணக்குகளை எல்லாம் பொய்யாக்கிவிட முடியும். 



2009-ம் ஆண்டு பொதுத்தேர்தலில், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணிகளில் இருந்த கட்சிகளைவிடச் சிறிய கட்சியாக இருந்தாலும், தே.மு.தி.க. தமிழக அரசியலில் குறிப்பிடத் தக்க மாற்றங்களுக்கு வழிவகுத்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 


ஆக, சாம்பிளிங் குழப்பங்கள், நான்சாம்பிளிங் தவறுகள், வாக்குகளைச் சீட்டுகளாக மாற்றும் கணிதக் குழப்பங்கள் எல்லாம் சேர்ந்து, கருத்துக் கணிப்பின் நம்பகத்தன்மையைக் குறைத்துவிடும். இதையெல்லாம் மீறிக் கருத்துக் கணிப்பின்படியே தேர்தல் முடிவுகளும் இருந்தால், அது மகா அதிசயம்தான்! 


- இராம. சீனுவாசன், இணை பேராசிரியர்,

சென்னைப் பல்கலைக்கழகம்,

தொடர்புக்கு: [email protected]
 
 
நன்றி - த ஹிந்து
 
 
Thillai Arasu Professor&Head/Chemistry at Kalasalingam University
சாம்பிளிங் குழப்பங்கள், நான்சாம்பிளிங் தவறுகள், வாக்குகளைச் சீட்டுகளாக மாற்றும் கணிதக் குழப்பங்கள் எல்லாம் சேர்ந்து, கருத்துக் கணிப்பின் நம்பகத்தன்மையைக் குறைத்துவிடும். இதையெல்லாம் மீறிக் கருத்துக் கணிப்பின்படியே தேர்தல் முடிவுகளும் இருந்தால், அது மகா அதிசயம்தான்! -- முற்றிலும் உண்மையா
a day ago ·   (2) ·   (1) ·  reply (0) Prassannasundhar
கருத்துக் கணிப்பு... எனக்கு வந்தா ரத்தம்... உனக்கு வந்தா தக்காளிச் சட்னி...
 

குக்கூ' -சினிமாவில் நாவல் தன்மை - கமல்ஹாசன்

சினிமாவில் நாவல் தன்மையின் அவசியத்தைச் சொல்கிறது 'குக்கூ': நடிகர் கமல்ஹாசன்

 

 

ராஜுமுருகன் இயக்கத்தில் தினேஷ், மாளவிகா நடிப்பில் உருவாகியிருக்கும் 'குக்கூ' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. 



'குக்கூ' படத்தின் இசையை நடிகர் கமல்ஹாசன் வெளியிட நடிகர் சூர்யா பெற்றுக் கொண்டார். படத்தின் டிரெய்லரை எழுத்தாளர் வண்ணதாசன் வெளியிட இயக்குநர் லிங்குசாமி பெற்றுக் கொண்டார். 


இயக்குநர்கள் சேரன், வெற்றிமாறன், பாண்டிராஜ், அட்லீ, கார்த்தி சுப்புராஜ் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் படக்குழுவிற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தார்கள். 


அவ்விழாவில் படத்தின் இசையை வெளியிட்டு நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது, 


"நான் உழைப்பிலும், சிந்தனையிலும் அதிகளவு நம்பிக்கை உடையவன். அந்த உழைப்பையும், சிந்தனையும் நான் பார்த்த காட்சியிலே பார்க்கிறேன். கதை புலப்படுகிறது. கதாபாத்திரங்களுக்கு கண் தெரியவில்லை என்றாலும், அவர்கள் காட்சியை நோக்கி நமக்கு கண் திறக்கிறது. 


நாவல்களில் மட்டுமே பார்க்க கூடிய விஷயங்கள் சினிமாவிற்கு வர வேண்டும் என்று குரல் எழுப்பி கொண்டிருந்த கூட்டம் இருந்தது. நானும் அந்த கூட்டத்தை சேர்ந்தவன் தான். பெரிய தயாரிப்பாளர்கள் காதில் விழாவிட்டாலும், நல்ல சிந்தனையாளர்கள் காதில் விழத்தான் செய்திருக்கிறது. அதற்கான அடையாளம் தான் 'குக்கூ' 


வைக்கம் முகம்மது பஷீர் பற்றி ராஜுமுருகன் பேசியதில் இருந்தே எனக்கும் அவரை பிடித்துவிட்டது. இன்னும் நல்ல படங்களை ராஜுமுருகனிடம் எதிர்பார்க்கலாம். 'உத்தம வில்லன்' படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்வதற்காக வடநாட்டிற்கு சென்றுவிட்டு வந்ததால் தாமதமாக வந்து சேர்ந்தேன். 



என் ஊரில் என் தம்பிமார்கள் இதே போன்ற சினிமாக்களை எடுத்து வருவது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்து கோவிலில் சிலுவை போட்டவனிடம் விபூதி அடிக்கும் பூசாரி முதலில் எனது மனதில் தங்கிவிட்டார். அதைப் போல நிறைய காட்சிகள் இருக்கிறது. கண் இல்லாதவர்கள் காற்றைத் தொட்டு பார்க்கும் காட்சி அதற்கு சான்று. அதைப் பார்க்கும் போது வைரமுத்து கவிதை தான் ஞாபகம் வருகிறது. ”உங்களுக்கு எல்லாம் ரெண்டு கண்கள். எங்களுக்கு எல்லாம் இருபது கண்கள். இருபது நகக் கண்கள்” என்று எழுதியிருப்பார். தினேஷ் அவர்களின் பயிற்சி, தேடல் எல்லாம் மாறுபட்டு நடிக்க வேண்டும் என்று மாறுக்கண்ணோடு நடித்தது உட்பட. தினேஷிற்கு என் வாழ்த்துகள். 


முக்கியமாக ராஜுமுருகனிடம் தொடங்கி தொழில்நுட்பக் குழு, நட்சத்திரங்கள் என்பது கிடையாது என்பது தான் உண்மை என்றாலும் வர்த்தகம் நட்சத்திரங்களை உருவாக்குகிறது. அப்படி உருவானது தான் நாங்கள் எல்லாம். ஆனால் உண்மை இதன் அடிநாதம் என்று பார்க்கும் பொழுது உண்மையான திறமையும், தொழில்நுட்பமும் தான் என 100 வருட திரையுலகம் நிரூபத்து வருகிறது. அந்த திறமைக்கு தான் சூர்யா வணங்கினார். அவர் வணங்கியது போன்று எல்லாருமே வணங்க வேண்டும். 

 

சூர்யாவை பொறுத்தவரை எனக்கு ரெட்டை வேஷம் தான். சித்தப்பாவும் நான் தான், அண்ணனும் நான் தான். அப்பா சிவக்குமார் இருந்தார்ன்னா சித்தப்பாவா மாறிடுவேன். இல்லன்னா அவருக்கு கோபித்துக் கொள்வார். நான் தானே அண்ணன், நீ எப்போ எனக்கு மகன் ஆனே.. என் வயசை எதற்கு கூட்டுறனு கோபிச்சுகுவார். அதனால ரெண்டுமே நான் தான். சூர்யாவின் முயற்சியையும் நான் பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். ரசித்துக் கொண்டு இருக்கிறேன். 



தகுதியானவர்களுக்கு கிடைத்த வெற்றி எல்லாம், அதிர்ஷ்டத்தால் கிடைத்தது அல்ல என்று ஒரு பழமொழி உண்டு. இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம், டிரெய்லரைப் பார்க்கும் போதே ரசிகர்கள் மனதில் உருவாக்கும் என்று நான் எண்ணுகிறேன். இப்போது எல்லாம் நல்ல நல்ல தமிழ் படங்கள் வருகிறதாமே என்று என்னிடம் மத்திய பிரதேசத்தில் கேட்டார்கள். அந்த பெருமையை சேர்த்த கூட்டத்தில் நீங்களும் ஒருவர் ராஜுமுருகன். 


இங்கு வந்திருப்பவர்கள் அனைவருமே என் மீது மிகுந்த அன்பு உடையவர்கள். என் தகுதிக்கு சற்று மேலாக தான் என்னை பாராட்டுவார்கள். அதற்கு நன்றி சொல்வதோடு, அதற்கு என்னை தகுதியுள்ளவனாக என்னை இனிமேல் தான் ஆக்கி கொள்ள வேண்டும் என்று நான் புரிந்து வைத்திருக்கிறேன். தமிழ் திரையுலகம் இன்னும் செழுமையான பாதையை நோக்கி நடைபோட வேண்டும். பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இன்னும் நிறைய தமிழ் படங்களை தயாரிக்க வேண்டும். நல்ல திறமைகளை ஊக்குவிப்பது புதிய பழக்கமல்ல. பல மாகாணங்களாக அதை ஹாலிவுட்டில் செய்து கொண்டு இருக்கிறார்கள். அதை இங்கேயும் செய்வது நமக்கு பெருமை. தென்னகத் திறமைகள் உலகை நோக்கி பயணிக்கும் நேரம் நெருங்கி விட்டதாக நான் உணர்கிறேன்." என்று பேசினார். 



விழாவில் பேசிய இயக்குநர் ராஜுமுருகன், "'குக்கூ' படத்தின் கதைக்கு எனக்கு மிகவும் உதவிய முருகேசனுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் " என்று கூறி அவரை மேடையில் அழைத்து மரியாதை செய்தார். அதுமட்டுமன்றி இளங்கோ, நந்தினி என்ற இரண்டு நிஜமான பார்வையில்லாத மாற்றுத் திறனாளிகளை முக்கிய பாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார். 

 

இவ்விழாவில் பேசிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் ”2014ம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படம் 'கோலி சோடா' தான்.” என்று கூறினார். 


'கண்ணு இருக்குற ஆம்பள எல்லா இடத்துலயும் இருக்கான். மனசு இருக்குற ஆம்பள எல்லா இடத்துலயுமா இருக்கான்?' உள்ளிட்ட டிரெய்லரில் இடம்பெற்ற வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. 

THANX - THE HINDU 


READERS VIEWS 

  • Manjoor ராசா from Duluth
    எழுத்தாளராக, நிருபராக இருந்து இப்பொழுது இயக்குனராக மாறியிருக்கும் ராஜு முருகனின் “குக்கூ” வெற்றியடைய வாழ்த்துகள்.
    about 20 hours ago ·   (6) ·   (0) ·  reply (0)
  • usha
    ராஜு முருகனின் எழுத்துக்களை ஆனந்த விகடனில் படித்து ரசித்திருக்கிறேன். அவரின் இந்த அடுத்த முயற்சி வளர்ந்து பெருக வாழ்த்துக்கள்.
    about 5 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • selvanayaki Ram at Studentfrom Coimbatore
    இந்த திரை படத்தின் ட்ரைலரை பார்த்து நான் வியந்து போனேன் படம் பார்க்க தூண்டுகின்றன ....

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை: அரசின் முழு அறிக்கை

ராஜீவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 


இது குறித்து சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வாசித்த அறிக்கையின் முழு விபரம் பின்வருமாறு: 


"முன்னாள் பாரதப் பிரதமர், ராஜிவ் காந்தி, 21.5.1991 அன்று, ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற, தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், கலந்து கொள்ளவந்தபோது, படுகொலை செய்யப்பட்டார். 


இந்தக் கொலை குறித்த வழக்கு, பூந்தமல்லி தடா நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தடா நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். 


இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், நளினி, ஸ்ரீஹரன் என்கிற முருகன், சுதேந்திர ராஜா என்கிற சாந்தன், பேரறிவாளன் என்கிற அறிவு ஆகிய நான்கு பேரின் தூக்கு தண்டனையை உறுதி செய்தும் ; 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தும், மீதமுள்ள 19 பேரை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தது. 


இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 நபர்களும் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தனர். இந்த மறு ஆய்வு மனுவினை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதனை தள்ளுபடி செய்து 8.10.1999 அன்று தீர்ப்பளித்தது. 


இதனைத் தொடர்ந்து, மேற்கண்ட தூக்கு தண்டனை கைதிகள் மேதகு தமிழக ஆளுநர் அவர்களுக்கு 17.10.1999 அன்று கருணை மனுக்களை சமர்ப்பித்தார்கள் . இந்த கருணை மனுக்கள் 27.10.1999 அன்று மேதகு தமிழக ஆளுநர் அவர்களால் நிராகரிக்கப்பட்டன. 



தமிழக ஆளுநர் அவர்களின் ஆணையினை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை கைதிகளால் வழக்குகள் தொடுக்கப்பட்டன. இவற்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுதாரர்கள் தொடுத்த வழக்கு களை ஏற்று, கருணை மனுக்களை நிராகரித்த ஆளுநரின் ஆணையை தள்ளுபடி செய்ததோடு, அமைச்சரவையின் ஆலோசனையைப் பெற்று புதிய ஆணை பிறப்பிக்குமாறு ஆளுநருக்கு 25.11.1999 அன்று உத்தரவு பிறப்பித்தது.
சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி, அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி தலைமையில் 19.4.2000 அன்று நடைபெற்ற அமைச்சரவை க் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவு எடுக்கப்பட்டது:- "தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நான்கு கைதிகளில் ஒருவரான நளினியின் பெண் குழந்தை அனாதையாகி விடும் என்று முதலமைச்சர் அவர்கள் தெரிவித்த கருத்திற்கிணங்க, நளினி ஒருவருக்கு மட்டும் கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்றும் ; மற்றவர்களைப் பொறுத்த வரையில் அவர்களது கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை முடிவெடுத்தது." 



கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் முடிவிற்கு ஆளுநர் 21.4.2000 அன்று ஒப்புதல் அளித்தார். அதன்படி தூக்கு த ண்டனை விதிக்கப்பட்ட 4 நபர்களில், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 



கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை முடிவினால் பாதிக்கப்பட்ட சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூன்று பேரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அளித்தனர். இந்த கருணை மனுக்களை 28.4.20 00 நாளிட்ட கடிதத்தின் வாயிலாக தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. 28.4.2000 அன்று தமிழக அரசால் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் மீது 11 ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பின்னர், 12.8.2011 நாளிட்ட கடிதத்தின் மூலம், இந்தியக் குடியரசுத் தலைவர் இந்த கருணை மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்த மத்திய உள் துறை அமைச்சகம், இந்தத் தகவலை மேற்கண்ட கைதிகளுக்கு தெரியப்படுத்துமாறு தமிழக அரசை கேட்டுக் கொண்டது. இதன் அடிப்படையில், இந்தக் கடிதத்தின் விவரம் சம்பந்தப்பட்ட கைதிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. 



இந்தச் சூழ்நிலையில், பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகிய மூன்று பேரையும் தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தின. தனது மகன் பேரறிவாளனை விடுவிக்குமாறு, அவரது தாய் அற்புதம் அம்மாள் அவர்கள் என்னை கடிதம் வாயிலாக கேட்டுக் கொண்டார். 



மேற்படி மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க முடியாது என்று தனது தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்த முன்னாள் முதலமைச்சர் திரு. கருணாநிதியும், சட்ட நுணுக்கங்களை ஆராயாமல், இவர்களை காப்பாற்ற நான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்திரிகைகள் வாயிலாக வேண்டுகோள் விடுத்தார். 



29.8.2011 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தில், கருணாநிதியின் இரட்டை வேடத்தை நான் தோலுரித்துக் காட்டினேன். மேலு ம், உச்ச நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு மேதகு ஆளுநரோ அல்லது மேதகு குடியரசுத் தலைவரோ தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மன்னிப்பு அளிக்க முடியும் என்பதையும் ; இவர்களுக்கு மேதகு ஆளுநர் அவர்கள் மன்னிப்பு அளிக்க வேண்டும் எனக் கருதப்பட்டிருந்தால், 2000-ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தான் அதற்கான முடிவு எடுத்திருக்க முடியும்; எடுத்திருக்க வேண்டும் என்பதையும் ; அமைச்சரவையின் அறிவுரைப்படி மேதகு ஆளுநர் அவர்களால் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, பின்னர் குடியரசுத் தலைவர் அவர்களாலும் மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் , தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கோ, நிறுத்தி வைப்பதற்கோ மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதையும் எடுத்துக் கூறினேன். 



அதாவது, குடியரசுத் தலைவரால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதே பொரு ள் தொடர்பான கருணை மனுவை மாநில ஆளுநர் பரிசீலிக்க வேண்டும் என மாநில அர சு 3 கோர முடியாது என 1991 ஆம் ஆண்டே மத்திய அரசு தெளிவுரை வழங்கி உள்ளதையும் எடுத்துக் கூறினேன். 


இந்திய அரசமைப்புச் சட்ட பிரிவுக் கூறு 257 உட்பிரிவு (1)-ன்படி, கருணை ம னு இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுக் கூறு 72-ன்கீழ் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட பின், அதே பிரச்சனையை மாநில ஆளுநர் இந்திய அரசமைப்பு ச் சட்டப் பிரிவுக் கூறு 161-ன்படி எடுத்துக் கொள்ள முடியாது என்றும் , மீண்டும் குடியரசுத் தலைவர் தான் கருணை மனுவை மறுபரிசீலனை செய்ய இயலும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டு இருந்ததையும் சுட்டிக் காட்டினேன். 


இந்திய அரசமைப்புச் சட்டப்படி எனது அரசின் இயலாமையை சுட்டிக்காட்டிய நான், இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ; எனக்கு வரப் பெற்ற பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில், ""தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன், மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து, அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேதகு இந்தியக் குடியரசுத் தலைவரை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது"" என்னும் தீர்மானத்தினை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நானே முன்மொழிந்தே ன். என்னால் முன்மொழியப்பட்ட இந்தத் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 


இந்தத் தீர்மானத்தின்மீது இரண்டரை ஆண்டுகளாக மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையால் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் வரை, அதாவது மார்ச் 2013 வரை மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் தி.மு.க. அங்கம் வகித்தது. இதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு திரு. கருணாநிதி மத்திய அரசை வலியுறுத்தினாரா ? இல்லை ! வலியுறுத்தவில்லை ! மத்திய அரசும், அதனைத் தாங்கிப் பிடித்திருந்த திரு. கருணாநிதியும் எந்த நடவடிக்கையையும் எடுக்கமாட்டார்கள் என்று தெரிந்த திருவாளர்கள் சாந்தன், ஸ்ரீஹரன் மற்றும் பேரறிவாளன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். 



இந்த மனுக்களில், தங்களுடைய கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க 11 ஆண்டு காலதாமதம் ஏற்பட்டதைக் கருத்தில் கொண்டும், கடந்த 23 ஆண்டுகளாக சிறையில் இருப்பதைக் கருத்தில் கொண்டும் ; தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர். பின்னர் இந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டன. இது குறித்த விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற போது , இவர்களின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கூடாது என்று மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் சார்பில் ஆஜரான மத்திய தலைமை வழக்குரைஞர் எடுத்துரைத்தார். 



இருப்பினும், இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களுடைய தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 18.2.2014 அன்று தீர்ப்பளித்ததோடு, ஆயுள் தண்டனை என்பது வாழ்நாள் முழுவதும் சிறைவாசம் என்றும் ; எனினும் குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 432 மற்றும் 433 ஹ -ன்படி, அரசு எடுக்கும் தண்டனை மாற்றுதல் அல்லது தள்ளுபடி செய்தல் நடவடிக்கைக்கு உட்பட்டது என்றும் தெரிவித்துள்ளது. 



உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வெளிவந்தவுடன், இதுகுறித்து உடனடியாக நான் விரிவாக விவாதித்தேன். இந்த விரிவான விவாதத்திற்குப் பின், இன்று, 1 9.2.2014, காலை எனது தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்ட த்தில் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோர் 23 ஆண்டுகளாக சிறைச்சாலையில் இருந்து வருவதைக் கருத்தில் கொண்டு, குற்ற விசாரணை முறைச் சட்டம் 432-ல் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், அவர்களை உடனடியாக விடுதலை செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது. 



இதேபோன்று, ஏற்கெனவே ஆயுள் கைதியாக 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் திருமதி நளினி , ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரையும் விடுதலை செய்யலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. 


இருப்பினும், இந்த வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பினால் புலனாய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் தடா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய ப்பட்டு தண்டனை வழங்கப்பட்டதால், குற்ற விசாரணை முறைச் சட்டம் 435-ன்படி, தமி ழ்நாடு அமைச்சரவையின் முடிவு குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டும். 


எனவே, மத்திய அரசின் கருத்தினைப் பெறும் வகையில், திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கி ற அறிவு, திருமதி நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்ற தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும். 
 முருகன், பேரறிவாளன், சாந்தன்


மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், இந்திய அரசமைப்புச் சட்டம் 432-ல் மாநில அரசுக்கு அளிக்கப் பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, திருமதி நளினி , ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்படுவார்கள் என்பதை இந்த மாமன்றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


thanx - the hindu

ஹவுஸ் லோன் வாங்குவோர் கவனத்திற்கு

வீட்டுக்கடன் தவணை: சீக்கிரம் கட்டி முடிப்பது நல்லதா?​​

இன்று வீட்டுக்கடன் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்தியாவில் மொபைல் போன் எண்ணிக்கைக்கு அடுத்தது வீட்டுக்கடன் வைத்திருப்பவர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. 


வேலைக்குச் சேர்ந்தவுடன் எல்லோரும் தவறாமல் செய்வது வீட்டுக்கடன் வாங்குவது. வீட்டுக்கடன் பொதுவாக 20 வருடம் என எடுத்துக்கொண்டால், ஒரு லட்சத்திற்கு மாதம் 1,000 ரூபாய், 10.5% வட்டி விகிதத்தில் வரும். வட்டி மேலும் கீழும் சென்றாலும் சராசரியாக 10% நீண்ட கால அடிப்படையில் வரும்.
இது நம்முடைய அசலையும் சேர்த்து 2.5 மடங்கு. 50 லட்சம் ரூபாய்க்கு நாம் 120 லட்சம் ஏறக்குறைய கட்டுவோம். அவ்வளவு வட்டி எதற்கு தரவேண்டும் என்று பலர் 7 முதல் 10 வருடங்களில் கட்டி முடித்துவிடுவார்கள். அப்படியே பழக்கப்பட்டவர்களுக்கு அதிலி ருந்து வெளியே வருவது கடினம். பொதுவாக எல்லோரும் சொல்வது நான் நிறைய வட்டி கட்ட விரும்பவில்லை அதனால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்கவேண்டும். 


மேலும் சிலர் எனக்குக் கடன் இருந்தால் சரியாகத் தூக்கம் வராது. ஆனால் அவர்கள் சீக்கிரமாக கட்டி முடித்தவுடன் செய்யும் முதல் காரியம் முந்தைய வீட்டைவிட பெரிய வீடாக வாங்குவது. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் EMI என்பது ஒரு போதை! முதல் சில மாதங்களுக்கு கடினமாக இருக்கும், பின்பு பழகிவிடும். நாம் அதிலிருந்து வெளியே வராதபடி நம் வீட்டின் கதவை எதாவது ஒன்று தட்டி கொண்டே இருக்கும். 

 
முதலீடு என்று வரும்போது நாம் உணர்ச்சிவயப்படக் கூடாது. உணர்ச்சி என்பது நமக்குத் தானே தவிர பணத்திற்கு எப்போதுமே இருந்ததில்லை. உணர்ச்சி இல்லாத பணத்தைக் கையாளும்போது நாமும் முடிந்தவரை உணர்ச்சி வயப்படாமல் இருக்க வேண்டும். 


இன்று எல்லோருக்கும் சவாலான விஷயம் வீட்டுக் கடனை சீக்கிரம் முடிப்பது நல்லதா அல்லது கடைசிவரை கட்டுவதா? நிறைய பேர் ஆலோசனை சொல்வது சீக்கிரம் கட்டுவது நல்லது என்பதே. நமக்கு எதிலாவது சந்தேகம் வந்தால் அதில் சிறிது நேரம் செலவிட்டு,ஒப்பிட்டுப்பார்த்தால் நம்மால் ஓரளவிற்கு தெரிந்து கொள்ள முடியும். இது அப்படிப்பட்டஒரு முயற்சியே. இதில் ஒரே ஒரு கண்டிஷன் உணர்ச்சிவயப்படாமல் இருப்பது! 


நாம் அனுமானமாக எடுத்து கொள்வது. 


1. 49,919 EMI 2. 10.5% 3. 20 வருடம் 


அடுத்தது முன்பணம் கொடுத்தவுடன் குறையக்கூடிய பணத்தை PPFல் முதலீடு செய்வது. 8.7% வட்டி என்பது தற்போதய நிலை. வீட்டுக்கடன் முடிந்தவுடன் அந்த பணத்தை 20 வருடம் வரை PPFல் முதலீட்டை தொடர்வது.
மற்றொன்று அந்த முன்பணத்தை அப்படியே ​மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது. சென்செக்ஸ் கடந்த 34 வருடங்களில் 17% கூட்டுவட்டி கொடுத்துள்ளது. டிவிடெண்டை எடுத்துக்கொண்டால் இன்னும் 2% வரை வரும். 


​மியூச்சுவல் ஃ​பண்ட்​

 
முதலீடு கடந்த 20 வருடங்களில் நிறைய ஃபண்ட் 20% மேல் கூட்டு வட்டி கொடுத்துள்ளது. அதனால் 15% கூட்டு வட்டி எதிர்பார்ப்பது என்பது ஒரு மிதமான எதிர்பார்ப்பு. உங்களால் அதைகூட நம்பமுடியாது என்றால் 12% எடுத்துகொள்ளுங்கள். 

 
அட்டவணையைப்பற்றி


 
ஒருவர் வீட்டுக்கடன் வாங்கிய இரண்டாம் வருடத்தில் இருந்து, ஒவ்வொரு வருடமும் 5லட்சம் முன்பணமாக கட்டுகிறார், 6ஆவது மற்றும் 7ஆவது ஆண்டில் 8 லட்சம், பின்பு கடைசியில் மீதமுள்ள 3.68 லட்சம். 8 வருடத்தில் முடிந்துவிடும். 8 வருடத்தில் அவர் கட்டிய பணம்மொத்தமாக 73.32 லட்சம். இதை செய்பவருக்கு மிக்க மகிழ்ச்சி ஏனெனில் கொஞ்சம்தான் வட்டி கட்டுகிறோம் என்று. 


1. பணத்தை வீட்டுக் கடன் கொடுக்கும் வங்கிக்கு கொடுத்து EMI குறைத்த பணத்தை முதலீடுசெய்யும்போது நமக்கு ஏறக்குறைய 2 கோடி கிடைக்கிறது.



2. அதற்கு பதிலாக அந்த பணத்தை முதலீடு செய்யும்போது 12% கூட்டு வட்டியில் 2.67கோடியும், 15% கூட்டு வட்டியில் 4.08 கோடியும் கிடைக்கிறது. 



சாராம்சம்: வீட்டுக்கடன் வட்டி என்பது நமக்கு கிடைக்கும் கடன்களில் மிகக்குறைந்த மற்றும் நீண்ட கால கடன். நீண்ட கால கடன் என்கிறபோது நாம் கட்டக்கூடிய பணமும்அதிகம், அதே சமயம் நமக்கு வருமானமும் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும்போது நம்மால் கடனை எளிதாக கட்டமுடியும். வருங்காலங்களில் நமக்கு வருமானம் கூடும் என்ற ஒரு நம்பிக்கையில் தான் எல்லோரும் கடன் வாங்குகிறோம் என்பது உண்மை. மேலும் முதலீட்டில் நாம் செய்யும் முதலீட்டின் அளவை விட எவ்வளவு சீக்கிரம் தொடங்குகிறோம் என்பது மிக முக்கியம். 



அட்டவணைப்படி பார்க்கும்போது ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். 


1.வீட்டுக்கடனை சீக்கிரம் முடிப்பது சரியான ஒரு முடிவு கிடையாது. 


2.வீட்டுக்கடன் வாங்கும்போது நமக்கு எவ்வளவு தருகிறார் களோ அவ்வளவு லோன் எடுக்கவேண்டும். 


3.இன்று வீட்டுக் கடன் பொதுவாக 20 ஆண்டுகள். சிலர் 25 ஆண்டுகள் வரை தற்போது கொடுக்கிறார்கள். நாம் எப்போதுமே எவ்வளவு அதிக ஆண்டுகள் நமக்கு தருகிறார்களோ அவ்வளவு எடுத்துக்கொள்வது நல்லது. 


4.நான் வீட்டுக் கடனில் கிடைக்ககூடிய சலுகை களை பற்றி இங்கு எடுத்துக்கொள் ளவில்லை. இந்தக் கட்டு ரையின் முயற்சி ஒருவர் வீட்டுக் கடன் வாங்கும்போது அதை சீக்கிரம் கட்டலாமா கூடாதா என்பதே. 


வீட்டுக்கடன் சீக்கிரம் முடிப்பது என்பது தவறான முடிவு என்றால் மிகையாகாது! 



thanx - the hindu 


மக்கள் கருத்து 


  • Raghu from New York
    Dear padmanaban sir - Dont highlight wrong points. Now a days jobs are stateless and cost of the houses is very high. As you have mentioned Mutual funds markets will not yield very good profits. When you have money, its better to close all your debts as soon as possible that is wise option at current level of economy. Always closing a home with 6 to 7 years is very good idea instead of dragging it to 20 to 25 years. if I drag the loan for next 20 years, I will be paying four times the amount of my principle drawan according to the interest rates level. Instead invest on property and try to get returns as rent.
    a day ago ·   (22) ·   (0) ·  reply (0)
  • BALAMBIGAINATHAN.E from Bangalore
    கடன் கட்டுரைக்கு கடன் பட்ட்வுள்ளேஎன்
    a day ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • Raghu Sudha from Sharjah
    பத்மநாபன் சார் நீங்கள் கூறும் கருத்து மக்களுக்கு அல்லாமல் வங்கிக்கு கடன் நிறுவனத்திற்கும் லாபம் தருவதாக உள்ளது.. ஒருவர் எவ்வளவு சீக்கிரம் கடனை அடைக்க முடிகிறதோ., அடுத்து அவர் சேகரிக்க முடியும்., 50 லட்ச ரூபாய் வட்டிக்கு வாங்கி அதற்கு ஒரு கோடி வரை திருப்பி செலுத்துவதை காட்டிலும் அதனை சீக்கிரம் அடைத்து வருங்காலத்தை சிறப்பாக்க வேறு எதிலாவது முதலீடு செய்யலாம். தவிர நமது பொருளாதாரம் ஒன்றும் அவ்வளவு உயர வில்லை மந்தமான நிலையில் தான் உள்ளது. அந்த பொருளாதார கொள்கையை அடிப்படையாக கொண்டே வங்கிகளும் கடன் வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளன. பின்னர் அது எப்படி லாபகரமானதாக அமையும்.
    a day ago ·   (11) ·   (0) ·  reply (0)
    Raghu  · AamIndian   Up Voted Raghu Sudha's comment
  • jeeva from Milan
    A middle class family needs funds for construction of house, maintenance of health , children education, purchase of vehicles,retirement planning etc., So, it is wise to foreclose the housing loan only when you have fulfilled the other needs.
    a day ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • raghs
    not an accepted article, if you are a government servant with job guarantee , this may go well, but for a private sector employee where his job is always on stake, keeping loan for long period will only increase his stess levels and he will become a patient very soon at young age
    a day ago ·   (2) ·   (0) ·  reply (0)
  • Mac from Bentonville
    Dude you are damn wrong.. When I bought the house @40L which will be 1.5 Cr (min) after 7-8 yrs hence If i close the loan by paid around 80L still it is profit for me.
    a day ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • AamIndian
    சீக்கிரம் கட்டி முடித்தால் உங்களுக்கு நல்லது, இல்லையென்றால் வங்கிக்கு நல்லது.
    a day ago ·   (2) ·   (0) ·  reply (0)
  • முத்து from Kumar
    பத்மநாபன் அவர்களே, தங்களின் கருத்தோடு உடன்பட முடியவில்லை. இன்றைய சூழல் கடன் வாங்குவது தவிற்க இயலாத ஒன்றாக இருக்கலாம், ஆனால் கடனோடே வாழவேண்டிய அவசியமில்லை.
    about 23 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Manikandan from Bangalore
    சரியாக புரியவில்லை. அட்டவணை குழப்பமாக உள்ளது. தவிர தனியார் கம்பெனி இல் வேலை செய்பவர்கள் வேலை நிரந்தரமற்றது. அதனால் எவ்வளவு சீக்கிரம் கடனை அடைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அடைப்பது சாலச்சிறந்தது
 

காபி வித் அனு VS டீ வித் மோடி

1. இந்தப்பொண்ணுங்க எல்லாம் அழகான கூந்தல் பின்னால இருந்தா நாம ரசிக்க முடியாதுன்னு முன்னால எடுத்துப்போட்டுக்குவாங்க



===================



2 பஸ்ல ஒரு பிகரு நெத்தி ல பொட்டு வைக்க மறந்து வந்துடுச்சு.சொல்லலாமா? னு பக் சீட் ஆள் யோசிச்சிட்டு இருந்தான்.நான் 1 பொட்டு அட்டையே குடுத்தாச்




======================


3 பம்பரமா சுத்தி வேலை செஞ்சேன்னு பொண்ணு சொன்னா அம்மா வீட்ல இருந்து விருந்தாளிங்க வந்திருக்காங்கன்னு அர்த்தம்


=====================


4 பொண்ணு லட்சணமா குடும்பப்பாங்கா இருந்தா பணக்காரப்பசங்க பவுன் போட்டு கட்டிட்டுப்போய்டறாங்க.சாதா தமிழனுக்கு பொண்ணு எப்டி கிடைக்கும்?



=========================


5 ஆபீஸ் ல அவனவன் வேலையை ஒழுங்கா செய்ங்கடான்னா தமிழன் கேட்கமாட்டான்.அடுத்தவனைப்போட்டுக்குடுக்கவே நோட்டம் போட்டுட்டு இருப்பான்



=======================



6 பஸ் ல பொண்ணுங்க சிரிக்கனும் அல்லது முறைக்கனும்.இங்க ஒரு ஆளே இல்லைங்கற மாதிரி அலட்சியமா இருந்தா நெஞ்சு வலிக்குது



=====================


7 பிஜேபி ,காங் 2 கட்சியும் கேப்டனை சேர் ல உக்கார வெச்சு ஏலம் கூறிட்டு இருந்த மாதிரி கனா கண்டேன்



=====================


8 என்னமோ வயலட் கலர் ல எல்லாரும் லிப்ஸ்டிக் போடறமாதிரியும் தான் மட்டும்தான் சிவப்புக்கலர் ல லிப்ஸ்டிக் போடறமாதிரியும் பில்டப் கொடுக்கறாங்ளே ?



===================


9 ஆனானப்பட்ட சுப்ரமண்யம் சாமியே காலங்காத்தால யாரோ ஒரு தெய்வானை கிட்டே கடலை போட்டுட்டு இருக்கும்போது சராசரித்தமிழன் என்ன செய்வான்?



=====================


10 கிரவுன்ட் வெறிச்சோடிக்கிடக்கு.வாக்கிங் போற பயலுக ஒருத்தரையும் காணோம்.நேத்து என்னடா நடந்துது?



==================


11 பொண்டாட்டி சேலைகளை வைக்க 3 பீரோவே பத்தலை.நம்ம துணிகளை ஒரு சின்ன டிரங்க்பொட்டில அடக்கியாச்



=======================


12 10 வருசமா உடுத்தாமயே பீரோல வெச்சிருந்த 2 சேலையை அழகா பேக் பண்ணி ( என் சொந்த) சம்சாரத்துக்கு கிப்டா கொடுத்துட்டேன் # தமிழேண்டா


=================


13 10 மணி கதைகள் வரிசையில் தெரியாமல் ஒரு கொலை யைத்தொடர்ந்து புரியாமல் அறியாமல் ஒரு ரேப் னு யாரும் எழுதல?




====================


14 காதலர் தினத்தன்று சி எம் போஸ்ட்டை ரிசைன் பண்றார்னா ஏதாவது லேடீஸ் மேட்டரா? வாக்கு குடுத்துட்டாரா? #கொளுத்திப்போடு



======================



15 சன் டி வி சீரியலில் ஒரு லேடி - என் மானத்தை அடமானம் வெச்சாவது அவனை பழி வாங்கியே தீருவேன் # சபாஷ் தமிழச்சீய்



=====================



16  தமிழன் எங்கே போனாலும் தெரிஞ்சோ தெரியாமயோ அடுத்தவருக்கு ஆப்பு வெச்ட்டுத்தான் வருவான் # கேப்டன் டெல்லி பயணம் ,டெல்லி CM ராஜினாமா


====================


17 இன்னைக்கு என் கண் ல ஒரு கள்ளக்காதல் ஜோடி கூட மாட்டலை.தட்டுப்படலை.தமிழன் திருந்திட்டானா?



=====================


18 காபி வித் அனு வை உல்டா பண்ணி டீ வித் மோடி ரெடி பண்ணிட்டாங்க பிஜேபிகாரங்க



==============================



19  ஒரு தலைக்காதல் கதை உள்ளவங்க தன் டி பி ல ஒரு பக்கமா சாய்ஞ்சமாதிரி போஸ் குடுப்பாங்களாம் # ட்விட்டர் கிசுகிசு



=========================



20 காதலுக்கு ஜாதி மதம் தடையாக இருக்கக்கூடாது எனும் வசனம் வரும் சந்திரா ( ஸ்ரேயா) ப்டத்தின் இயக்குநர் பெயர் டைட்டிலில் " ரூபா ஐயர்"




==============================

Tuesday, February 18, 2014

இது நமக்கு மானப்பிரச்னை

1. ஊரில் ஏகப்பட்ட பெண் குயின் கள் உலா வந்தாலும் பென்குயின் உன்னுடன் உலா போவதுதான் என்னை கிங் ஆக்குகிறது



========================



2 பள்ளி ,கல்லூரி பருவத்தில் கடைசி நாள் எது என்பது தெரிவது போல் காதலியுடன் இருக்கும் கடைசி நாள் இது என தெரிந்து விட்டால் கதறி அழுதுவிடலாம்



==========================



3  திருச்சி மாநாட்டில் லைவ் ரிலே ஓடுவதால் யாரும் யார் இடுப்பையும் கிள்ளி மாட்டிக்கொள்ள வேண்டாம் - பை நெஞ்சத்தைக்கிள்ளாதே ரசிகர் மன்றம் ஈரோடு



=======================



4 ஜமீன்தார் வீடுகளில் தாத்தா க்கள் போட்டோ மாட்டி இருப்பது போல் நடிகை வீட்டிலும் அவங்க கணவர்கள் போட்டோ மாட்டி வெச்சா செமயா இருக்கும்



=====================


5 கோபித்துக்கொள்தல் ,முகத்தைத்திருப்பிக்கொள்தல் ,குப்புறப்படுத்தல் என கோபத்தின் பல நிலைகளை பெண் இனம் தான் அறிமுகப்படுத்தி இருக்கும்



========================



6 ரயில் பயணங்களில் அருகருகே அமர்ந்தால் நேருக்கு நேர் பார்வைப்பரிமாறல்கள் அசாத்தியம் என்பதால் எதிர் எதிரே அமர்வோம்



======================



7 கர்நாடகா வில் மங்களூர் அருகே் சிருங்கேரி ( SRINGERI) எனும் ஊரில் 365 நாட்களும் 3 வேளையும் அன்னதானம் உண்டாம்.பொன்னி அரிசி




======================


8 நிர்தாட்சண்யம் இல்லாமல் நீ என்னை நிராகரித்து விட்டாலும் என் அன்பு உன் மாற்றத்துக்காக என்றும் காத்திருக்கும்



========================



9 நாம் யாரிடம் அன்பு கொள்கிறோமோ அவர் அதே அளவு அன்பை ,நம்பிக்கையை நம்மிடம் செலுத்தி விட்டால் இந்த உலகில் யாருக்கும் இதய வலியே இருக்காது




=======================



10  பொண்ணுங்க மாதிரி பசங்க ஏட்டிக்குப்போட்டி பண்றதில்லை.உதாரணமா பசங்க ஹை ஹீல்ஸ் செப்பல் போடறதே இல்லை



=======================


11  கேப்டன் = தமிழ் ல எனக்குப்பிடிச்ச ஒரே வார்த்தை கூட்டணி. 



பிரதமர் - மொழில எனக்குப்பிடிக்காத ஒரே அம்சம் பேசுவது 



=======================


12  ஹாட்ரிக் ஹிட் நாயகன் தனுஷ் ன் வேலை இல்லா பட்டதாரி பாட்டு செம ஹிட்டாம்.3 படம் போலவே உலகம் பூரா அடி தூள் கிளப்பிடும் போலயே!


=====================


13 வலியனா (தானா) வந்து எந்தப்பெண்ணாவது டி எம் ல மாத்லாடுனா உஷார்.உங்க சம்சாரமோ,காதலியோ உளவு பார்க்க செஞ்ச ஏற்பாடா இருக்கும்



========================



14 ஆபீஸ் ல வெயிட் பாக்கற மிஷின் புதுசா வந்தாலும் வந்துச்சு காலைல ஒருக்கா சாயங்காலம் ஒருக்கா வெயிட் பாத்து விளையாடிட்டு இருக்காங்க்



=========================


15 என்னயா இது .நேத்து வந்த ஜீபா சோபா க்கெல்லாம் பேன் கிளப்.சாரி FAN க்ளப்.நாமும் 1 ஓப்பன் பண்ணுவோம்.கவுரவப்பிரச்னை


====================



16 என்ன கோபமா இருந்தாலும் ஆண் கொட்டித்தீர்த்துடுவான்.பொண்ணுங்க என்ன மேட்டர்னே சொல்லாம கமுக்கமா பேசாம இருப்பாங்க



=====================



17 ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார்னு வருதே.சிங்கிள் காட் டா? டபுள் காட்டா?



====================


18 ஆபீஸ் ல ஒரு பொண்ணு சிஸ்டத்துல சீட்டு விளையாடிட்டு இருக்கு # இந்தியா எப்டி வல்லரசாகும்?



======================


19 இனிமே பொண்ணுங்க டிபி நல்லா இருந்தா நல்லாவே இல்லைனு சொல்லி கடுப்பேத்திடலாம்னு இருக்கேன்



=======================


20 இன்னைக்கு முத வேலையா ஏதோ ஒரு கார் ல உக்காந்திருக்கற மாதிரி போட்டோ பிடிக்கறோம்.டிபி மாத்தறோம் # இது நமக்கு மானப்பிரச்னை ;-))



===========================

டி.கே. பட்டம்மாளின் பேத்தி நித்யஸ்ரீ மகாதேவன்
 பேட்டி

குடும்பத்தின் ஆதரவு ஏராளமாக உள்ளது: நித்யஸ்ரீ மகாதேவன்


கர்நாடக இசை உலகின் ஜாம்பவான்கள் நிறைந்த இசைக் குடும்பத்தில் பிறந்த நித்யஸ்ரீ, தனது பதினாறாவது வயதில் செம்மொழி இசை இளைஞர் சங்கத்திற்காக வாய்ப்பாட்டுக் கச்சேரியை மேடையில் அரங்கேற்றினார். வாய்ப்பாட்டு இசையில் மிகப் பிரபலமான டி.கே. பட்டம்மாளின் பேத்தி என்பது பாரம்பரியத்திற்கும் பிரபலமாவ தற்கும் உதவியது என்றாலும், அவரது பெயரைக் காப்பற்றும் வகையில் பாட வேண்டும் என்ற சவாலும் அவருக்கு இருந்தது.



 தன் தாயும் குருவுமான லலிதா சிவக்குமார் அளித்திருந்த சிட்சையே நித்யஸ்ரீயை இசை உலகில் தடுமாறிவிடாமல் காப்பாற்றியது. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா என உலகம் முழுவதும் கச்சேரிகள் நிகழ்த்தி, தமிழ் இசையின் பெருமையைப் பரப்பியிருக்கிறார். சினிமா ரசிகர்களையும் கவர்ந்த அவர், இசைக்கு அடையாளமான திருவையாறில் பிறந்தவர். 



மேற்கூறிய அனைத்தும் சிந்தனையில் ஓட, பேட்டிக்காக அவரது இல்லத்திற்குச் சென்றபோது, பேட்டி கொடுத்துக்கொண்டே அனைத்து வீட்டு வேலைகளையும் சுற்றிச் சுழன்று தானே செய்தார். மேடையில் காணப்படும் அதே கம்பீரத்துடன், அநாயசமாக சமையலும் செய்கிறார். அப்படியே நம் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்: 



சுவையான கச்சேரி அனுபவங்கள் பற்றி... 

 
 
முன்பெல்லாம் குருவோடவே கச்சேரி செய்து, குருகுல வாசம் செய்து தனிக் கச்சேரி பண்ணிப் பிரபலமான இடத்தைப் பிடிக்க வேண்டும் என்றால் முப்பத்தைந்து வயதாகிவிடும். சின்ன சின்ன குக்கிராமம் என்றால் கூடக் கார்ல போய்க் கச்சேரி பண்ணுவோம். ஆந்திராவில பாலக்குல்லு என்ற ஒரு கிராமத்தில தியாகராஜ உற்சவம். நாள் பூரா கரண்ட் இல்ல. அது மே மாதம் வேறு. சூடு தாங்கலை. இந்தச் சூழல்ல நன்றாகப் பாட்டுக் கச்சேரி செய்ய வேண்டும். இது போன்ற டிமாண்டிங் சூழ்நிலையை இந்தக் காலத்துப் பாடகர்களால் தாங்க முடியுமான்னே தெரியலை. இப்போ தெல்லாம் சின்ன வயசுலேயே ஏசி ரெகார்டிங் தியேட்டர்ல உட்கார்ந்து கச்சேரி பண்ணினா, டிவியில் ஒளிபரப்பாகிப் பட்டி தொட்டியெல்லாம் பரவிவிடுகிறது. 



நீங்க சின்ன வயதில் நாளொன்றுக்கு எட்டு மணி நேரம் சாதகம் பண்ணுவீர்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். பிரபலமான பிறகும் இதைக் கடைபிடிக்க முடிந்ததா? 


 
ஓவ்வொரு கச்சேரியும் நூறு முறை பிராக்டீஸ் பண்ணுவதற்குச் சமானம். கச்சேரிகளைத் தீமிக்காகப் பண்ணும்பொழுது, அந்தத் தலைப்பை ஒட்டி சில பாடல்களைத் தேர்ந்தெடுத்து, பாடாந்தரத்தில் பார்த்துக்கொண்டுவிடுவேன். இது தவிர எந்த ஊருக்குப் போகிறோமோ அந்த ரசிகர்களுக்கு ஏற்பத் தியாகராஜர் கீர்த்தனைகளையோ, அன்னமையா கிருதிகளையோ அதிகமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்வது உண்டு.



 சில சமயம் ஸ்தலங்களுக்குக் கச்சேரி பண்ணப் போவோம். அப்பொழுது முருகன் ஸ்தலமாக இருந்தால் முருகன் பாடல்களை அதிகமாகவும், திருவண்ணாமலை போன்று சிவ ஸ்தலமாக இருந்தால் சிவனைக் குறித்த பாடல்கள் அதிகமாகவும் இருக்கும்படி பார்த்துக்கொள்வேன். இப்பொழுதெல்லாம் இந்த வகையான சாதகங்கள்தான் கை கொடுக்கின்றன. 



சொர்ண சங்கீதம் குறித்து... 


 
பொதுவாக டிவிகளில் சினிமா பாடல்களுக்கு என்று ரியாலிட்டி ஷோக்கள் நிறைய உண்டு. கர்நாடக சங்கீதத்திற்கு என்று மிகக் குறைந்த அளவிலேயே இத்தகைய ஷோக்கள் உண்டு. அதுல முக்கியமா சொல்லணும்னா ராஜ் டிவியின் சொர்ண சங்கீதம் தேர்ட் சிஸன். விஜய் டிவில சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ஐந்து சீஸனாக தேர்வாளரா இருந்திருக்கேன். இப்ப சொர்ண சங்கீதத் திற்கும் சென்னையில் தேர்வாளரா இருக்கேன். 



உங்கள் குழந்தைகள் பாட்டு கற்றுக் கொள்கிறார்களா? உங்களுக்கோ நிகழ்ச்சிகள், பயணங்கள் என நிறைய இருக்கிறது. குழந்தைகளுக்குப்பாட்டு சொல்லிக் கொடுக்க எப்படி நேரம் கிடைக்கிறது? 




ரொம்ப கஷ்டமான விஷயம். வேலைக்குப் போற அம்மாக்களுக்கே உள்ள கஷ்டம்தான். அதுலயும் இந்த மாதிரிக் கர்நாடகக் கச்சேரியைத் தொழிலாக இருந்தால், டூர் அதிகமாக இருக்கும். அப்போ அனுசரணையான குடும்பத்தின் உதவி ரொம்ப முக்கியம். அந்தச் சப்போர்ட் எனக்கு ஏராளமாக இருக்கிறது. எனக்குச் சொல்லிக் கொடுத்த எங்க அம்மாவே, என் குழந்தைகளுக்கும் கர்நாடக சங்கீதம் சொல்லிக் கொடுக்கிறார்கள். நான் ஊருக்குப் போனால் என் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதும் எங்க அம்மாதான். அம்மா பிரமாதமான குரு. 


 

அம்மாவுக்குப் பட்டம்மா பாட்டிதான் குரு. சில கச்சேரிகளில் பாட்டியுடன் பின்பாட்டும் பாடியிருக்கிறார்கள். பாட்டியுடன் பாடிய அனுபவத்தையெல்லாம் நித்யாவிற்கு கொடுக்கிறேன்னு சொல்வார்கள். பாட்டி பாடுவதைப் போலவே பாடுவார் அம்மா. அம்மாவின் அப்பா பிரபல மிருதங்க வித்வான் பாலக்காடு மணி ஐயர். மாமியாரோ பிரபல பாடகி டி.கே.பட்டம்மாள். இந்த சங்கீதச் சூழ்நிலையில் வளர்ந்ததால் அம்மா சாகித்திய கர்த்தாவாக சங்கீதத்தில் புதிய கண்டுபிடிப்புகளைப் பண்ணியிருக்கிறார். அவரது ராகம் தானம் பல்லவியை இன்றும் நான் மேடைக் கச்சேரிகளில் பாடுகிறேன். 



நன்றி - த இந்து 

தி இந்து - பொங்கல் புகைப்படப் போட்டி - முதல் 3 இடங்களைப்பிடித்தவர்கள்

'தி இந்து - பொங்கல் புகைப்படப் போட்டி’யில் வென்றவர்கள்

 

 

தி இந்து' வாசகர்களுக்காக நடத்திய ‘பொங்கல் புகைப்படப் போட்டி’யை அறிவித்தவுடன், பண்டிகைகால நிகழ்வுகளை, மண் மணம் சார்ந்த புகைப்படங்களை மிகுந்த ரசனையோடு ‘க்ளிக்’கித் தள்ளி எங்களுக்கு அனுப்பி, மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துவிட்டார்கள்! 


ஆர்வத்துடன் பங்கேற்று போட்டியை சுவாரஸ்யமானதாக்கிய ஒவ்வொருவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி! 


பல்வேறுகட்ட பரிசீலனைகளைத் தாண்டி ‘தி இந்து பொங்கல் புகைப்படப் போட்டி’யின் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 


வெற்றிக் கோட்டை நூலிழையில் தவறவிட்ட புகைப்படங்கள் பல. அனைவருக்கும் எங்கள் அன்புப் பூங்கொத்து! 


வெற்றி பெற்ற புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு! 

























a




thanx - the hindu

பஞ்ச பூதங்களின் ரெப்ரசெண்டிவ்ஸ் பேட்டி

சூற்றுச்சூழல் சிக்கல்களை நமது மரபு சார்ந்த பார்வையில் ஆராய்ந்து, அவற்றுக்கான தீர்வை நோக்கிப் பயணிக்கும் விழாக்களைப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இந்த உலகின் ஐந்து அடிப்படை அம்சங்களான நிலம், நீர், காற்று, நெருப்பு, விசும்பு (வானம்) ஆகியவற்றைப் பற்றிய ஐம்பூதச் சுற்றுச்சூழல் விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. லயோலா கல்லூரி என்விரோ கிளப் உடன் இணைந்து ஒருங்கிணைக்கப்பட்ட அந்தக் கருத்தரங்கில் துறை சார்ந்த அறிஞர்கள் எளிமையாகவும், ஆழமாகவும் கருத்துகளை முன்வைத்தனர். அதன் தொகுப்பு: 



பேராசிரியர் நெடுஞ்செழியன்: ஐம்பூதங்களின் அடிப்படையில்தான் இந்தப் பூவுலகும், அதில் உள்ள உயிரினங்களும் தோன்றின என்பது தமிழர் கோட்பாடு. இது அறிவியல்பூர்வமானது. தமிழ் மருத்துவமான சித்த மருத்துவம், இதன் அடிப்படையிலேயே இயங்குகிறது. இந்தியத் தத்துவ மரபில் இரண்டு போக்குகளைக் காணலாம். ஒன்று அறிவைப் பரவலாக்குவது, மற்றொன்று அறிவைத் தடை செய்வது. தமிழ் மரபு அறிவைப் பரவலாக்கும் பணியைச் செய்தது. ஐம்பூதங்களின் தன்மையை, இயல்பை ஆராய்ந்த நூல் தொல்காப்பியம். அதனால்தான் தொல்காப்பியருக்கு ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியர் என்று பெயர். மேலும் விசும்பை (வானம்) தமிழ் மரபு மட்டுமே ஐம்பூதமாக ஏற்றுக்கொண்டிருந்தது. 



நிலம் 


 
சூழலியல் எழுத்தாளர் பாமயன்: ஐம்பூதம் என்பது முழுக்கத் தமிழ்க் கொள்கைதான். பூ என்றால் பூத்தல், விரிதல் என்று பொருள். சங்க இலக்கியத்தில் பூ என்ற சொல் 33 இடங்களில் வருகிறது. 



நமது பண்டை இலக்கண நூலான தொல்காப்பியம் முதலெனப்படுவது நிலமும் பொழுதும் என்று கூறியுள்ளது. எனவே, நிலமே அனைத்துக்கும் ஆதாரம். கடந்த நூற்றாண்டில் ஜப்பானிய இயற்கை வேளாண் அறிஞர் மசனாபு ஃபுகோகா கூறிய, உழாத விவசாயத்தைப் பண்டைக் காலத்திலேயே தமிழர்கள் செய்து வந்துள்ளனர். இதை, புறநானூறும் மலைபடுகடாமும் கூறுகின்றன. மழை நீரைச் சேகரிப்பதிலும், நீரை வேளாண்மைக்குப் பங்கிட்டுக் கொள்ளும் தொழில்நுட்பமும் நமது மூதாதையர்களிடம் இருந்திருக்கிறது. தண்ணீர் நிர்வாகம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், தென்னிந்தியா (தமிழகம்) செல்லுங்கள் என்று உலக நீரியல் அறிஞர் சாண்ட்ரா போஸ்டல் கூறியுள்ளார். வைகையில் தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்த காலத்தில் அதில் வரும் தண்ணீர் கடலிலேயே கலக்காது, கடைசியாக எஞ்சியுள்ள நீரும் ராமநாதபுரம் பெரிய ஏரிக்கே செல்லும். 



அரச்சலூர் செல்வம், இயற்கை விவசாயி: மண்ணுக்கு மேல்தான் உயிர்கள் வாழ்வதாக நினைக்கிறோம். இது தவறு, மண்ணுக்கு மேல் இருப்பதைப் போல அடியில் 100 மடங்கு நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. ஒரு தக்காளிதான் பூமிப் பந்து என்று வைத்துக்கொண்டால், அதில் கால்வாசி மட்டுமே நிலம், முக்கால் பங்கு கடல். அந்த ஒரு பங்கு நிலப்பகுதியில் மூன்றில் ஒரு பங்கை விவசாயம் செய்யப் பயன்படுத்த முடியாது. எஞ்சிய ஒரு பங்கில், பாதியில் மட்டுமே விவசாயம் செய்ய முடியும். அதிலும் அந்தச் சிறிய பகுதி தக்காளியின் மேல் தோல் அளவுக்கே வளமான மேல் மண் இருக்கிறது. அந்த மேல் மண்ணில்தான் பயிரும், காயும் விளையும். ஆனால், அந்த மேல் மண்ணின் மீதுதான் உரம், பூச்சிக்கொல்லி என்று நஞ்சை தெளித்து வேளாண் உற்பத்தி செய்கிறோம். நஞ்சைத் விதைத்து, நஞ்சையே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். 



நீர் 


 
சூழலியல் எழுத்தாளர் நக்கீரன்: தூய்மையான தண்ணீர் கிடைக்காமல் ஒவ்வொரு 8 வினாடிக்கும் ஒரு குழந்தை இறக்கிறது. ஆமை புகுந்த வீடும், அமினா புகுந்த வீடும் உருப்படாது என்று சொல்வார்கள். அதேபோல உலக வங்கியும், ஐ.எம்.எஃப்பும் (சர்வதேச நிதியம்) புகுந்த நாடு உருப்படாது. ஏனென்றால், அந்த அமைப்புகள் ஒப்பந்தம் போடும்போது தண்ணீர் வியாபாரிகளைக் கொண்டுவந்து விட்டுவிடுவார்கள். நம்முடைய நிலத்தில் இருந்து எடுத்த தண்ணீரை, நமக்கே விற்றுக் கோடி கோடியாகத் தனியார் பெரு நிறுவனங்கள் லாபம் பார்த்து வருகின்றன. 



ஒரு கோழி முட்டையை உருவாக்க 200 லிட்டர் மறைநீர் (Virtual Water) தேவை. ஆனால், அந்நியச் செலாவணிக்காகக் கோழி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இப்படி நம்மிடம் இருந்து நீர் பறிபோகிறது. குடிநீர் விற்பனை செய்யும் நிறுவனங்கள் 10 பைசா கொடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரை வாங்கி, நம்மிடம் 20 ரூபாய்க்கு விற்கின்றன. பாதுகாப்பான, தூய்மையான குடிநீரை அரசு தர வேண்டும் என்ற அடிப்படை உரிமையை மறந்துவிட்டோம். இனியும் தாகம் எடுக்கும்போது பாட்டில் நீரை வாங்கிக் குடித்தால், நாம் உருப்படாமல் போய்விடுவோம். 



பேராசிரியர் சாமுவேல் ஆசிர்ராஜ்: காஞ்சிபுரம், சென்னை ஆகிய பகுதிகளில் பாக்கம் என்ற பெயரில் நிறைய ஊர்கள் உண்டு. பாக்கம் என்றால் நீர் மிகுந்த பகுதி என்று பொருள். ஆனால் இப்போதோ சென்னையில் எங்கும் தண்ணீர் கிடையாது. ஏரியும், ஆறும் இருந்தவரை நமக்கு உணவு பாதுகாப்பு இருந்தது. இன்றைக்கு அது பறிபோய் விட்டது. 



மழைநீர் கடலில் வீணாகக் கலப்பது பற்றி இப்போது பேசப்படுகிறது. மழைநீர் கடலில் கலந்தால்தான் அனைத்து உப்புகளும் கடலில் கலக்கும், அதில் வாழும் பல்லுயிர்கள் நன்றாக இருக்கும், அவையே நமக்கு உணவாகக் கிடைக்கும். சுற்றுச்சூழல் சமநிலையில் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அணைகள் கட்டப்படுவது பற்றியே அனைவரும் பேசுகிறார்கள். ஏரி, குளங்களைப் பாதுகாப்பது பற்றி யாரும் பேசுவதில்லை. 1975க்கு முன்னால் சென்னையில் தண்ணீர் பஞ்சம் இருந்ததேயில்லை. ஆனால், இன்று அந்த நிலைமை மாறிவிட்டது. 



நெருப்பு 


 
பொறியாளர் சி.இ. கருணாகரன்: நாம் இன்றைக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஆற்றல்-எரிசக்தி ஆதாரங்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்தில் தீர்ந்து போகக் கூடியவை. பெட்ரோல் 20-30 ஆண்டுகளிலும், நிலக்கரி 100 ஆண்டுகளிலும் தீர்ந்து போய்விடக்கூடும். இந்தியாவில் மின்சார உற்பத்திக்கு நிலக்கரியையே அதிகம் நம்பி இருக்கிறோம். இது அதிகம் மாசுபடுத்தக்கூடியது. மின்னுற்பத்தியில், நேரடியாக உற்பத்தி செலவு மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. மின்னுற்பத்தி காரணமாக ஏற்படும் மாசுபாடு, அதனால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள், அதற்கான செலவு போன்றவை கணக்கில் கொள்ளப்படுவதில்லை. அந்த வகையில் காற்றாலை மின்னுற்பத்தியில்தான் மின்சாரம் குறைந்த சமூகப் பாதிப்பைக் கொண்டிருக்கிறது. 



திரைப்பட இயக்குநர் ம. செந்தமிழன்:


 
வெப்பம் மனிதர்களுக்கு மிகவும் அவசியம். எப்போது உடலில் வெப்பம் குறைகிறதோ, உடல் சில்லிடுகிறதோ அப்போது மனிதன் இறந்து விடுகிறான். அதனால் வெப்பத்தைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது. அண்டமே பிண்டம்; பிண்டமே அண்டம் என்பதும் இதில் அடங்குவதுதான். 



மரம் பிடிக்கும், அதனால் மரம் வளர்க்கி றேன் என்று சொன்னால்கூடப் பரவாயில்லை. மரம் நட்டால் மழை வரும் என்கிறார்கள். இது தர்க்கம், சுயநலம். உண்மையில் பூமியில் முதன்முதலில் மழை பெய்தபோது மரமே கிடையாது. மனிதர்கள் மரங்களை நடுவதால், தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் நிலையில் இயற்கை இல்லை. அதை மனிதர்களான நாம் புரிந்துகொள்ள வேண்டும். 


காற்று 



கி. வெங்கட்ராமன், தமிழர் உழவர் முன்னணி ஆலோசகர்: நம் அண்டை மாநிலமான கேரளாவில் மணல் எடுக்க முடியாது. ஆனால், தமிழகத்தில் மணல் வியாபாரிகள்தான் அரசியல் கட்சித் தலை வர்களாக உள்ளனர். சுற்றுச்சூழலைக் காக்க மாற்று தொழில்நுட்பம் வேண்டும் என்று மாற்றுக் கருத்து முன்வைக்கப்படுகிறது. சமூக மாற்றம் இல்லாமல் எந்த மாற்றமும் சாத்தியமில்லை. மாற்றம் என்பது வெறுமனே தொழில்நுட்பம் சார்ந்ததாக இருக்க முடி யாது. அது மொழி சார்ந்த மாற்றமாக இருக்க வேண்டும். ஐம்பூதங்களைக் காக்க வேண்டும் என்றால், கையில் அதிகாரமின்றி மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. 



மருத்துவர் பாரதி செல்வன்: ஆறாவதாக ஒரு பூதம் இருக்கிறது. அது முதலாளித் துவப் பூதம். மன்னார்குடி பகுதியில் மீத்தேன் எடுக்கப் பன்னாட்டு நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நிலத்துக்கு அடியில் உள்ள நிலக்கரி படிமங்களுக்கு இடையில் உள்ள மீத்தேனை எடுக்கப் போவதாகக் கூறுகிறார்கள். இதில் மீத்தேனை பிரித்தெடுப்பதற்காக நிலத்துக்குள் பெரும் துளையிடப்பட்டு ரசாயனக் கரைசல் செலுத்தப்படும். இந்த ரசாயனக் கரைசல் மூலம், சுற்றுவட்டார நிலம் முழுவதும் நாசமாகி விடும். அந்தப் பகுதியில் விவசாயமே செய்ய முடியாத நிலை வந்துவிடும். அந்தக் கரைசலில் புற்றுநோயை உருவாக்கக்கூடிய ரசாயனங் கள் உள்ளன. இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டால் டெல்டா பகுதி நாசமாகும். 



விசும்பு (வானம்) 


 
சென்னை வானிலை மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன்: பூமியின் சராசரி வெப்ப நிலை 15 டிகிரி சென்டிகிரேடு. இதில் 2 டிகிரி சென்டிகிரேடு அதிகரித்தாலும் உலகில் பல்வேறு பிரச்சினைகள் வந்துவிடும். அதைத்தான் புவி வெப்பமடைதல் என்கிறார் கள். புவி வெப்பமடைந்தால் என்னவாகும்? துருவப் பிரதேசங்களில் பனிப்பாறைகள் கரைந்து, கடல் நீர்மட்டம் அதிகரிக்கும். கடலோரப் பகுதிகள் நீரில் மூழ்கும். புவி வெப்பமடையக் காரணமாக இருப்பது கார்பன் டை ஆக்சைடு. இதை அதிகமாக வெளியிடும் பெட்ரோலிய வாகனங்களை ஓட்டுவதைத் தவிர்த்து, மெட்ரோ ரயில், பஸ் போன்ற பொது வாகனங்களில் பயணம் செய்து வாகன நெரிசலையும் சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் குறைக்கலாம். 



சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் சி.மா.பிரித்விராஜ்: 1906 முதல் 2006 வரை பதிவு செய்யப்பட்ட வெப்பநிலைகளில் இருந்து, பூமி வெப்பமடைந்து வருவது உறுதியாகிறது. அது மட்டுமில்லாமல் புவி வெப்பமடைவதற்கு ஆதாரமாக 10 அறிகுறிகள் உள்ளன. சுற்றுச்சூழல் குறித்துப் படிப்பது, கருத்தரங்குகளில் பங்கேற்பது மட்டுமில்லாமல், நாம் அனைவரும் இயற்கை வேளாண்மை நோக்கித் திரும்ப வேண்டும். அனைவரும் கிராமங்களை நோக்கிச் செல்ல வேண்டும். ஒரே வரியில் சொல்வதானால், நாம் அனைவரும் இயற்கை நோக்கித் திரும்பினால்தான், இந்தப் பூவுலகம் புவி வெப்பமடைதலால் சந்தித்துவரும் ஆபத்துகளில் இருந்து தப்பிக்க முடியும். 


நன்றி - த ஹிந்து