Friday, February 14, 2014

ஜிகிடி -ஒரு ஹவுஸ் ஓனரின் பிரேம கதா

1. நான் போடும் ட்வீட்கள் யாரையாவது சந்தோசப்படுத்தவே! மீறி யாரையாவது அது படுத்தினால் நிர்வாகம் பருப்பல்ல.சாரி.பொறுப்பல்ல



========================


2 காலை ல ஆபீஸ் வந்ததும் கூந்தலில் சூடிய பூச்சரத்தை கேன்ட்டீன் பிரிட்ஜ் ல வெச்சு டோக்கன் போட்டுட்டு மாலை மீண்டும் தலையில் சூடிக்குது ்


======================


3 பொண்ணுக்கு வாய் நீளமா இருந்தா ஐ மீன் வாயாடியா இருந்தா நீளா னு பேர் வைக்கலாமோ?



=====================


4 முன் தினமே லீவை முறைப்படி சொல்பவனை விட திடீர்னு போன் பண்ணி இழவு விழுந்துடுச்சுன்னு பொய் சொல்லி எடுப்பவனைத்தான் நம்பும் சமூகம் இது



==============================



5 1 கிமீ வாக்கிங் போய்ட்டு வந்து ஈரோடு ஆக்ஸ்போர்டு ஹோட்டல் ல 4 உருளைக்கிழங்கு போண்டா வித் கார சட்னி ,சாம்பாரோடு வளைச்சு அடிக்கறவன் டமிழன்




===========================



6 பழகுன தோஷத்துக்காக தனதுமொக்கைக்கு ஏதோ ஒரு பெண் போனா போகுதுன்னு சிரிச்சாக்கூட " இது 1ம் அவ்ளவ் பெரிய காமெடி இல்லயே" என கலாய்ப்பான் தமிழன்




============================



7 சாதாத்தமிழன் பசிச்சவுடன் சாப்பிடுவான். ஹைக்ளாஸ் தமிழன் என்ன சாப்பிடறானோ(ளோ) அதை ஃபோட்டோ எடுத்து FB ஸ்டேட்டஸ் போட்டுட்டு சாப்டுவான்




=============================



8 குளிக்கும்போது சிகைக்காய்த்தூள் போட்டதால கண் சிவந்திருந்தாக்கூட லேடி ஸ்டாஃப் கிட்டே “ நைட் விசேசமா?” எனக்கேட்டு கடுப்பேத்தும் டேமேஜர்கள்




===============================



9 என்ன டைட்டில் இது ? தெகிடி -ன்னு.தமிழன் புரிஞ்சிக்கத்தடுமாற மாட்டானா? ஜிகிடி -னு வெச்சிருக்கலாம்



=============================



10 பஸ் ல ஒரு பொண்ணுக்கு 30 நிமிசத்துல 18 போன் கால் ( பர்சனல்) வந்துடுச்சு.18ம் வெவ்வேற எண்( ரிங்க் டோன் மூலம் ) இந்தியா எப்டி வல்லரசு ஆகும்?




==============================



11 வசதி வாய்ப்புக்காக வெளிநாட்டில் சொகுசா செட்டில் ஆகிட்டு ஐ மிஸ்டு் இந்தியா னு FB ஸ்டேட்டஸ் போட்டு அனுதாபம் தேடிக்குவான் இந்தியன்




=======================


12 10 வருடம் முன் என் (சொந்த)சம்சாரம் மாசமா இருக்கும்போது ஒத்தாசைக்கு பாத்திரம் துலக்கினேன்.இன்னைக்கு வரை நான் தான் # நீதி - ஆண்கள் ஜாக்கிரதை




===========================




13 உக்காந்தமா ? தியானம் ,பிராணயாமம் பண்ணமா? ன்னு இல்லாம FB ல வந்து " நான் மெடிட்டேசன் பண்றேன்.யாரும் டிஸ்டர்ப் பண்ணவேணாம்" என்பாள் தமிழச்சி




====================================



14 என் வீட்டை வந்து பார் என்னைப்பிடிக்கும் என்றேன்.வந்தாய்! பார்த்தாய்! வீட்டுக்கு சொந்தக்காரரைப்பிடித்தாய்!# ஒரு ஹவுஸ் ஓனரின் பிரேம கதா



===============================




15 வணக்கம் வைக்கும்போது கூட தனக்குப்பிடிச்ச ஹீரோவின் ரசிகர்களுக்கு மட்டும் மென்சன் போட்டு க்ரூப் பிரிப்பான் தமிழன்




==========================



16 மாமா பொண்ணுஅத்தை பொண்ணை அடிக்கடி நாம கலாய்ச்சுட்டே இருந்தா நம்மை முறைப்பொண்ணு ஹேட்டர்ஸ்னு யாரும் சொல்ல மாட்டாங்க # ஆனா விஜயை கலாய்ச்சா




==============================




17 பொண்ணுங்களை சைட் அடிச்சமா வந்தமா? மறந்தமா?ன்னு இல்லாம குரல் சரி இல்ல ,அது சரி இல்லைனு நுனை நாட்டியம் பேசுபவன் தான் தமிழன்



=================================




18 வாயு உள்ள பிள்ளை GAS ட்ரபுள்னு ஹாஸ்பிடல் போகும்




===============================




19 தன் சொந்த முகம் அழகா இருந்தாலும் தன் அபிமான நடிக , நடிகை முகத்தை தன் அடையாளமா சமூக வலைத்தளங்களில் வைத்துக்கொள்வான் தமிழன் # DP



============================


20 வான்டடா யாராவது நம்மை வம்பிழுக்கும்போது கேப்டன் மாதிரி கண் சிவக்கப்போராடாம சினேகா மா ஒரு ஸ்மைலி போட்டு தப்பிச்சுக்கனும்




==================================

Thursday, February 13, 2014

பாலுமகேந்திரா : அது ஒரு கனா காலம்

தமிழ் சினிமா மறக்க முடியாத படைப்பாளி இயக்குநர் பாலுமகேந்திரா இன்று மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 74. 



அவர் 1939ம் ஆண்டு இலங்கையில் பிறந்து வளர்ந்தார். புகைப்படம் எடுப்பதில் இளவயது முதலே ஆர்வம் மிகுதியாக இருந்ததால், அவரது தந்தை ஒரு கேமிரா பரிசாக அளித்தார். அதனைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக புகைப்படங்கள் எடுத்து வந்தார். லண்டன் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்து விட்டு, பூனேவில் ஒளிப்பதிவாளர் பிரிவில் படித்து, அதில் தங்கப் பதக்கம் வென்றார். 


திரைத்துறையில் நுழைந்த பின், ஒளிப்பதிவில் பாலுமகேந்திரா காலம் ஆரம்பித்தது. மலையாளத் திரையுலகில் 'நெல்லு', 'ராஜஹம்சம்', 'மக்கள்', 'ராகம்' என தொடர்ச்சியாக இவரது ஒளிப்பதிவு பேசப்பட்டது. 'நெல்லு' படத்தில் பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவிற்காக தேசிய விருது மற்றும் கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதினை வென்றார். 



ஒளிப்பதிவினைத் தொடர்ந்து பாலுமகேந்திரா தன்னை இயக்குநராக வெளிப்படுத்திய கன்னடப் படம் 'கோகிலா'. தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகி இங்கும் வெள்ளி விழா கண்டது. 



தமிழில் பாலுமகேந்திரா இயக்கிய முதல் படம் 'அழியாத கோலங்கள்'. அதனைத் தொடர்ந்து இயக்குநராக தமிழில் பல படங்களை இயக்கினார். 'மூடுபனி', 'மூன்றாம் பிறை', 'நீங்கள் கேட்டவை', 'உன் கண்ணில் நீர் வழிந்தால்', 'ரெட்டை வால் குருவி', 'வீடு', 'சந்தியா ராகம்', 'வண்ண வண்ண பூக்கள்', 'மறுபடியும்', 'சதிலீலாவதி', 'ராமன் அப்துல்லா', 'ஜுலி கணபதி', 'அது ஒரு கனா காலம்' மற்றும் 'தலைமுறைகள்' ஆகிய படங்கள் தமிழில் பாலுமகேந்திரா இயக்கிய படங்கள். இவர் இயக்கத்தில் கமல் நடித்த 'மூன்றாம் பிறை' படம் தான் கமலுக்கு சிறந்த நடிகராக முதல் தேசிய விருதினை பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது. 



தமிழில் படங்கள் இயக்கியது மட்டுமன்றி மலையாளம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் படங்கள் இயக்கியிருக்கிறார். படங்கள் இயக்குவது மட்டுமன்றி, பல்வேறு இயக்குநர்கள் படங்களுக்கு ஒளிப்பதிவும் செய்து வந்தார். 



எப்போதுமே படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யும் போது, விளக்குகள் உபயோகிக்கவே மாட்டார் பாலுமகேந்திரா. என்ன வெளிச்சம் இருக்கிறதோ அதை வைத்தே காட்சிப்படுத்துவார். இவரின் இந்த திறமையை பார்த்து பல்வேறு இயக்குநர்கள் இவரிடம் பணியாற்ற முன்வந்தனர். இவரது படங்களில் கறுப்பு நிற நாயகிகள் தான் இருப்பார்கள். கறுப்பு தான்பா நம்ம ஊர் கலரு என்பார் செல்லமாக.பல்வேறு பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதே கருத்தை கூறியிருக்கிறார். 



பாலுமகேந்திரா இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் 'தலைமுறைகள்'. அத்திரைப்படத்தின் மூலமாக இயக்குநர், ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா தன்னை ஒரு நடிகராகவும் முன்னிருத்திக் கொண்டார். அது மட்டுமன்றி, முதன் முறையாக பாலுமகேந்திரா டிஜிட்டல் கேமிராவில் ஒளிப்பதிவு செய்த படம் 'தலைமுறைகள்'. தன்னுடைய இறுதி காலத்திலும் படத்தில் நடித்து, இயக்கி, ஒளிப்பதிவு செய்து, எடிட்டிங் என தனது பட வேலைகள் அனைத்தையும் தானே செய்தார். 



'தலைமுறைகள்' படத்தின் மூலமாக யாரும் தமிழை மறக்காதீர்கள் என்ற கருத்தை முன்வைத்தார். அப்படத்தில் மரணம் அடையும் போது பேரனை அழைத்து “தமிழை மறந்துடாதீங்கப்பா...! இந்த தாத்தாவையும் மறந்துடாதீங்கப்பா...!” என்பார். அதுவே அவர் தமிழ் திரையுலகிற்கு கூற விரும்பியது எனலாம். 



படத்தின் பத்திரிக்கையாளர் காட்சிக்கு வந்திருந்த பாலு மகேந்திரா, "உண்மையில் கிராமத்தில் தான் தமிழ் இருக்கிறது. தமிழை யாரும் மறக்க கூடாது" என்று கண் கலங்கினார். காட்சி முடிந்தவுடன் பல்வேறு பத்திரிக்கையாளர்கள் அவருடன் இணைந்து புகைப்படம் எடுக்க விரும்பினார்கள். சில நேரம் கழித்து, "ஏம்பா.. நான் சாக மாட்டேன். கவலைப்படாதீங்க.. இன்னும் 5 கதைகள் வைச்சிருக்கேன் இயக்குவதற்கு. " என்றார். அவர் இயக்குவதாக வைத்திருந்த கதைகள் அனைத்துமே கண்டிப்பாக தமிழுக்காக மட்டுமே இருந்திருக்கும்.



நேற்று தன்னுடைய உதவியாளர்களை அழைத்து அனைவருடனும் புகைப்படம் எடுத்திருக்கிறார். 



இயக்குநர் பாலா, ராம், வெற்றிமாறன், சீனு ராமசாமி என தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் பலரும் இவரது பட்டறையில் தொழில் கற்றவர்கள் தான். இது வரை பாலாவின் எல்லா படங்களின் இசையையும் வெளியிட்டது பாலு மகேந்திரா தான். 



இன்று பாலுமகேந்திரா மறைந்தாலும், ஒளிப்பதிவில் அவர் செய்த சாதனைகள் தமிழ் சினிமா சரித்திரத்தில் மறையாது. பல்வேறு ஒளிப்பதிவாளர்கள் தற்போது இருந்தாலும், இருக்கிற வெளிச்சத்தை வைத்து சிறப்பாக ஒளிப்பதிவு செய்ய தெரிந்த ஒரே ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா. 



பாலு மகேந்திரா என்னும் திரைச்சிற்பி இருந்த இடம் இன்று வெறுமையாகியிருக்கிறது. அந்த இடத்தை நிரப்ப நிறைய இயக்குநர்கள் முன்வருவது தான் பாலுமகேந்திராவுக்கு நாம் கொடுக்கும் சிறந்த வழியனுப்புதலாக இருக்கும். 


 a



thanx - the hindu 


தமிழ் சினிமாவை புதிய பரிணாமத்திற்கு அழைத்து சென்ற பாலுமகேந்திரா காலமானார் - கமல், பாரதிராஜா கண்ணீர் அஞ்சலி!!



தமிழ் சினிமாவின் ஒப்பற்ற ஒளிப்பதிவாளரும், தலைசிறந்த இயக்குநருமான பாலுமகேந்திரா இன்று(பிப்ரவரி 13ம் தேதி) மாரடைப்பால் காலமானார். சென்னை, சாலிகிராமம், இந்திராநகரில் உள்ள தனது வீடடில் தூங்கிக் கொண்டிருந்த பாலு மகேந்திராவிற்கு இன்று அதிகாலை 4.30 மணியளவில் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலு மகேந்திராவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை பரிசோதித்த டாக்டர்கள், பாலு மகேந்திராவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மூச்சுதிணறல் ஏற்பட்டதாக கூறினர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது, இருப்பினும் சிகிச்சை பலனின்றி பாலு மகேந்திராவின் உயிர் பிரிந்தது.

பாலுமகேந்திராவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேதியறிந்து அவரிடம் உதவியாளர்களாக பயின்ற இயக்குநர்கள் பாலா, ராம், பாலாவின் உதவியாளர் சீனு ராமசாமி, நடிகர் கருணாஸ் மற்றும் ஏராளமான உதவி இயக்குனர்கள் பலர் மருத்துவமனைக்கு வந்தனர்.

இலங்கையின் பட்டிகலோயா பகுதியில் 1939ம் ஆண்டு பிறந்த இவர் 1971ம் ஆண்டு நெல்லு என்ற மலையாள படத்தில் கேமிராமேனாக திரைஉலகிற்கு அறிமுகமானார். தனது தந்தையால் கேமிரா மீது ஆர்வம் கொண்ட இவர், இந்திய சினிமாவில் டைரக்டர், வசனகர்த்தா, எடிட்டர், ஒளிப்பதிவாளர் என பல பரிமாணங்களில் வலம் வந்தவர். இலங்கையில் பள்ளி படிப்பை முடித்த இவர், லண்டன் பல்கலைக்கழகத்தில் பட்டபடிப்பை முடித்தார். பின்னர் புனேயில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கழகத்தில் ஒளிப்பதிவு பயின்ற இவர், அதற்காக தங்க பதக்கமும் பெற்றுள்ளார்.

இயற்கை வெளிச்சத்தில் எளிமையான, அதே சமயம் பிரமிக்க வைக்கும் அழகை காட்டி படம் எடுப்பதில் பாலு மகேந்திரா கைதேர்ந்தவர். இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய முதல் படமான நெல்லு படத்திற்காக கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதினை பெற்றார். தென்னிந்திய சினிமாவை குறிப்பாக தமிழ் சினிமாவை புதிய பரிணாமத்திற்கு அழைத்து சென்றவர்களில் பாலுமந்திரா குறிப்பிடத்தக்கவர்

சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய இவர், 1979ம் ஆண்டு ஆழியாத கோலங்கள் படம் மூலம் தமிழ் திரையுலகில் அடிஎடுத்து வைத்தார். மூடுபனி, மூன்றாம் பிறை, நீங்கள் கேட்டவை, ரெட்டைவால் குருவி, வீடு, சந்திய ராகம், வண்ண வண்ணப் பூக்கள், மறுபடியும், சதிலீலாவதி, ராமன் அப்துல்லா, ஜூலி கணபதி, அது ஒரு கனாகாலம் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். கடைசியாக அவர் இயக்கிய தலைமுறைகள் படம் சமீபத்தில் ரிலீஸாகி அனைவரின் பாராட்டை பெற்றது. மேலும் இதுநாள் வரை ஒரு இயக்குநராகவும், ஒளிப்பதிவாளராகவும் இருந்த வந்த அவர் முதன்முறையாக இப்படத்தில் நடித்து தன்னை ஒரு சிறந்த நடிகனாகவும் நிரூபித்தார்.

டைரக்டராகவும், ஒளிப்பதிவாளராகவும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய திரைஉலகில் மட்டுமின்றி இந்தியிலும் பல படங்களை இயக்கியவர் பாலு மகேந்திரா. 74 வயதாகும் பாலுமகேந்திராவுக்கு அகிலேஷ்வரி என்ற மனைவியும் கெளரி சங்கர் என்ற மகனும் உள்ளனர். இவரும் ஒளிப்பதிவாளராக இருக்கிறார். ஸ்ரேயாஸ் என்ற பேரன் ஒருவரும் உள்ளார். பாலு மகேந்திரா 5 தேசிய விருதுகளையும், 3 தென்னிந்திய பிலிம்ஃபேர் விருதுகளையும், 2 நந்தி உள்ளிட்ட பிற மாநில விருதுகள் பலவற்றையும் பெற்றுள்ளார்.

பாலுமகேந்திராவின் திடீர் மரணம் திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அவரது உடல் வடபழனியில் உள்ள அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பாலுமகேந்திரா கிறிஸ்தவ மதத்தில் உள்ள ரோமன் கத்தோலிக் இனத்தை சேர்ந்தவர் என்பதால் நாளை(பிப்ரவரி 14ம் தேதி) நண்பகல் 12.00 மணிக்கு அவரது உடல் முறைப்படி அடக்கம் செய்யப்படுகிறது.

கண்ணீர் விட்டு அழுத பாரதிராஜாபாலுமகேந்திராவின் மறைவை கேட்டு ஏராளமான திரையுலகினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இயக்குநர் இமயம் பாரதிராஜா, கண்ணீர் விட்டு கதறி அழுது தன் அஞ்சலியை செலுத்தினார். இயக்குநர்கள் விக்ரமன், ராம், பாலா, நடிகர்கள் சந்திரசேகர், மனோஜ், நடிகை வீடு அர்ச்சனா, பாண்டியராஜன், அவரது மகன்கள், மோகன், அர்ச்சனா, ஈஸ்வரி ராவ், கேயார், கே.எஸ்.ரவிக்குமார், ரமேஷ் கண்ணா, பொன்ராம், பி.சி.ஸ்ரீராம், ஜீவன், செழியன், பிரியன், பாலசுப்ரமணியம், உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

பாரதிராஜா பேசுகையில், இந்திய சினிமாவின் மிகப்பெரிய சொத்தை இழந்து விட்டோம் என்று கண்ணீர் விட்டப்படி கூறினார்.

சினிமாவின் தந்தையை இழந்துவிட்டேன் என நடிகர் மோகன் கூறினார்.

தமிழ் சினிமாவின் நடமாடும் பல்கலைக்கழகம் பாலுமகேந்திரா, அவரை நாம் இழந்துவிட்டோம் என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் கூறினார்.

பெற்றதற்கு நன்றி சொல்லணும் - கமல்

பாலுமகேந்திரா உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், பாலுமகேந்திரா இழந்ததற்கு இறப்பை சொல்வதை விட, பெற்றதற்கு நன்றி சொல்வது முக்கியம். பாலுமகேந்திரா அளித்த கொடை மிகப்பெரியது. இங்கே நன்றி சொல்லுதல் என்று கூட சொல்லலாம். பாலு ரொம்ப திறமையானவர், அறிய மனிதர், உலக சினிமா கொண்டாடியவர், ஏற்கனவே வேறுயொரு பேட்டியில் சொல்லியிருந்தேன், இன்னும் நிறைய படங்கள் செய்யாமல் போனது, எனக்கு திகைப்பு அல்ல, வருத்தமே. தமிழ் சினிமா நன்றியுடன் பார்க்கிறது. சீடர்களை தந்திருக்கிறார். அவரை வழியனுப்பும் நேரத்தில் அவருடைய சீடர்களையும் வரவேற்க வேண்டும். நன்றி பாலு!

இயக்குநர்கள் சங்கம் சார்பில் சிறப்பு அலங்கார ஊர்தி

பாலுமகேந்திராவின் உடல் நாளை அடக்கம் செய்யப்பட உள்ளது. அப்போது அவரது உடலை இயக்குநர்கள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு அலங்கார ஊர்தியில், ஊர்வலமாக கொண்டு செல்லப்பட இருக்கிறது. இந்த இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட திரைபிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

படப்பிடிப்புகள் ரத்து :
பாலுமகேந்திராவின் மறைவையொட்டி, நாளை(பிப்ரவரி 14ம் தேதி) தமிழ் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாலுமகேந்திரா இன்று நம்மை விட்டு மறைந்தாலும் அவர் கட்டிய வீடு, அழியாத கோலங்கள், சந்தியா ராகம் போன்றவை என்றும் நீங்காமல், நீங்கள் கேட்டவையாக இருக்கும்.


thanx - dinamalar  



Cine Vila a






Cine Vila a







Cine Vila a





Cine Vila a







Cine Vila a






Cine Vila a







Cine Vila a






Cine Vila a





Cine Vila

கோச்சடையான்-10 கோடி கொடுத்து சுட்டி டி வி ரைட்ஸ்

1. குழப்பவாதிகளுக்கு அரசியலில் இடமில்லை - கெஜ்ரிவால் # குழப்பமா இருக்கே உங்க ஸ்டேட்மெண்ட்.இப்போ தெளிவா சொல்லுங்க.விலகப்போறீங்களா?்




========================



2 இலங்கை பிரச்சினையில் காங்கிரஸின் கொள்கையே எங்கள் கொள்கை -சுஸ்மா ரொம்ப கஷ்டம் மா



=============================



3 பாலா படத்தில் கரகாட்டக்காரியாக வரும் ஸ்ரேயா! # கரகம் ஆடும் கிரகமே! உடல் மொழியில் விரகமே!



============================




4 இது கதிர்வேலன் காதலுக்கு வரிவிலக்கு கொடுங்க! - உதயநிதி ஸ்டாலின் வழக்கு # ரைட்டு.படம் சொன்ன தேதிக்கு ரிலீஸ் ஆன மாதிரி தான்




==============================



5 ஆன்மீகத்தில் இறங்கினார் வீணா மாலிக்! # வாம்மா , மின்னல், நித்யானந்தா ஆசிரமத்துக்கு எதித்தாப்பிடி இறங்குங்க . 2 பேருக்கும் சவுகர்யம்


========================




6 டி டே ஹிந்திப்படத்தில் ஸ்ருதி கமல் பாலியல் தொழிலாளியாக கிளாமரா நடித்துள்ளார் # அதாவது “படு” கவர்ச்சி யா?



==========================


7 DMK கூட்டணியில், கேப்டன் சேர்ந்தால், அவர்களை திருச்சி மாநாட்டிற்கு அழைப்போம்,- ஸ்டாலின் # திரிச்சி திரிச்சி அழைச்சாலும் வர மாட்டார்



==========================



8 D-DAYஹிந்திப்படத்தை தமிழில் டப் செய்து வெளியிட அதன் நாயகி ஸ்ருதி கமல் எதிர்ப்பு # டாடி , ஒரு டவுட்டு,இது மார்க்கெட்டிங்க் டெக்னிக்கா?



===========================




9 த்ரிஷ்யம் ரீ மேக்கில் கமல் ஜோடியாக மீனா வே நடிக்க பேச்சு வார்த்தை - செய்தி # இதுக்கு எங்க தலைவர் கமல் ஒத்துக்க மாட்டார்.மார்க் மை வோர்டு



==========================



10 நயன்தாரா, ஆண்ட்ரியா வேண்டாம்.ஹன்சிகா தான் வேணும் - சிம்பு # புது பைக் மார்க்கெட்க்கு வந்தா ஆல்ரெடி ஓட்டிட்டு இருந்த பைக் பிடிக்காது




============================



11 தேர்தல் முடிவை பொறுத்து ராகுலின் பதவியை பரிசீலிப்போம்- காங்கிரஸ்
# படு தோல்வியா? சுமாரான கவுரவமான தோல்வியா? னு கணிக்க முடியல




==============================




12 ஜெ பிரதமரானால் சந்தோசம்! - கருணாநிதி # அதை ஏன் பல்லைக்கடிச்ட்டே சொல்றீங்க? சிரிச்சா மாதிரி முகத்தை வெச்சுக்கிட்டு சொல்லுங்க




==============================



13 சிங்கப்பூர் - என் காதலி கூட பேசுவியா: 65 வயது தாத்தாவுடன் மோதிய 80 வயது தாத்தாவுக்கு சிறை, ஃபைன் # இந்த வயசுல பேச மட்டும் தான் முடியும்.



=========================



14 2ஜி வழக்கில் தற்போது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை : கலைஞர்
# தலைவா! நீங்களாவது உண்மையை சொல்லலாமே?



==========================



15 செல்வராகவன் ன் சிந்துபாத் தில் தனுஷ் ஹீரோ # சாதா சிந்துபாத்ங்களா? சைக்கோ சிந்துபாத் தா?



==========================



16 திமுக அணியில் யாராவது சேர்ந்தால் கலைஞர் அறிவிப்பார்-ஸ்டாலின்# கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அழகிரி தவிர வேறு யாரும் இல்லைங்ணா



===========================



17 கெஜ்ரிவால் பங்களா கேட்டார்-பரபரப்பு புகார் # நல்ல வேளை சின்னதா வீடு கேட்கலை.சின்ன வீடு கேட்டார் னு அள்ளி விட்டிருப்பாங்க


=======================


18 2G ஊழல் கருணாநிதிக்கு பங்கு உண்டு. பிரஷாந்த் பூஷன் விளக்கம் # என்னது? சிம்ரனுக்கு கல்யாணம் ஆகிடுச்சா? சொல்லவே இல்ல?



==========================



19 10 மொழிகளில் வெளியாகிறது கோச்சடையான்.# 10 கோடி கொடுத்து சுட்டி டி வி ரைட்ஸ் வாங்கி இருக்குமே?




==========================




20 காங்கிரஸ்-தே.மு.தி.க. இல்லாமல் தனியாக தேர்தலை சந்திக்கும் தி.மு.க.-செய்தி # தனியே தன்னந்தனியே நான் காத்துக்காத்து நின்றேன்



=============================

பாலுமகேந்திராவுக்கு அஞ்சலி : மவுனிகாவால் சலசலப்பு...!!இயக்குநர் பாலாவால் ,பெரும் பரபரப்பு

 

பாலுமகேந்திராவின், ''வண்ண வண்ண பூக்கள்'' படத்தால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை மவுனிகா. அதனைத்தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அந்தப்படத்தில் இருந்தே பாலுமகேந்திராவுக்கு பிடித்தமான நடிகையாக மாறினார் மவுனிகா. அதன்பிறகு பாலுமகேந்திரா கதை நேரம் என்று டி.வி. சீரியல் எடுத்தபோது மவுனிகாவே அதில் பிரதான நாயகியாக நடித்தார். மேலும் மவுனிகாவின் குடும்ப நண்பராகவும் பாலுமகேந்திரா இருந்து வந்தார் என்றும், இதனால் பாலுமகேந்திராவின் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகை மவுனிகா, பாலுமகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்த வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை கேட்ட இயக்குநர் பாலா, அங்கு ஒரு பெரும் பிரச்னையே செய்துவிட்டார். மவுனிகாவை உள்ளே விடக்கூடாது, அதை நான் அனுமதிக்க மாட்டேன் என்று சத்தம் போட்டு ரகளை பண்ணிவிட்டார். இதனால் பாலுமகேந்திராவின் இல்லத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாலுமகேந்திராவின் சீடர்களில் பாலா மிகவும் முக்கியமானவர். கிட்டத்தட்ட அவரின் வளர்ப்பு மகன் என்று கூட சொல்லலாம், தன் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் அவருடன் தான் பகிர்ந்து கொள்வார். இந்தநிலையில், மவுனிகா வரக்கூடாது என்று பாலா எதற்கு தடுத்தார் என தெரியவில்லை. 


thanx - dinamalar 


இயக்குநர் பாலுமகேந்திரா உடல்நலக் குறைவால் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மரணமடைந்தார். அவருக்கு வயது 74. 




' மூன்றாம் பிறை’, 'அழியாத கோலங்கள்', 'வீடு', 'சந்தியா ராகம்', 'மறுபடியும்', ’சதி லீலாவதி’ என தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத படங்களை இயக்கியவர் பாலு மகேந்திரா. இவர் ஒரு சிறந்த ஒளிப்பதிவாளரும் கூட. தனது படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தது மட்டுமன்றி, பல்வேறு இயக்குநர்களின் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மகேந்திரன் இயக்கிய 'முள்ளும் மலரும்' படத்தின் ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா தான்.
சமீபத்தில் இவர் இயக்கத்தில் 'தலைமுறைகள்' வெளியானது. இயக்குநர் சசிகுமார் தயாரித்திருந்தார். விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 



இந்நிலையில் இன்று காலை பாலு மகேந்திராவிற்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் சென்னை விஜயா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் காலமானார். 



சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த படம் என ஐந்து முறை தேசிய விருது வென்றவர் பாலு மகேந்திரா. தேசிய விருது மட்டுமன்றி கேரளா மற்றும் கர்நாடக மாநில அரசுகளின் விருதுகளையும் வென்றிருக்கிறார். இயக்குநர் பாலா, ராம், வெற்றிமாறன் உள்ளிட்ட பல முன்னணி இயக்குநர்கள் இவரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலு மகேந்திரா மறைவிற்கு தமிழ் திரையுலகினர் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். 


thanx - the hindu 

Rustle over mounika at Balaumahendra homage

ஐ VS முதல்வன்

1. "வரலாறு" தெரியாதவர்கள் குஜராத்தை ஆள்கிறார்கள் -ராகுல் # அஜித் நடிச்ச படம் எல்லாமே அவர் பாத்துட்டாராம்.அப்போ நீங்க?



======================



2 என் பெயரில் போலி ட்விட்டர் பக்கங்கள் - சிம்பு # முதல்ல ஹன் சிகா வுக்கு தகவல் சொல்லுங்க பாஸ்.அவன் பாட்டுக்கு டி எம் ல ்கடலை போட்டுடபோறான்


=======================



3 மக்களை முட்டாளாக்குபவர்களை மதிக்க கூடாது -ராகுல் #ஏப்ரல்fool ஆக்குனாலெ இந்தியன் தாங்கிக்கமாட்டான்.ever fool ஆக்கலாம்னு 10 வருசமா நினைச்சா?



========================


4 விமானம் வாங்க நிதி இல்லை-அந்தோணி# மானம் கப்பல் ஏறிப்போயாச்சு ,கஜானாவை சுத்தமாகத்துடைச்சாச்சு கண்ணம்மா


============================



5 இந்துக்களும் முஸ்லீம்களும் வளர்ச்சி ரதத்தின் இரண்டு சக்கரங்கள்!: மோடி # ரதம்னா 4 சக்கரம் ஆச்சே? மீதி 2 க்கு கணக்கு சொல்லுங்க


=======================


6 அனைத்து வீட்டிற்க்கும் ஒருபேங்க் அக்கவுன்ட்டாவது இருப்பது அவசியம் - சிதம்பரம் # ஜீரோ பேலன்ஸ் தான் மெயின்டெய்ன் பண்ண முடியும்.ஓக்கே் வா?



=====================



7 பாலின வன்கொடுமைகள் குறித்து பெண்கள் துணிந்து புகார் அளிக்க வேண்டும்: நீதிபதி எஸ்.அல்லி #அன்புள்ள அல்லி! நாட்டு நடப்பு தெரியாம பேசாதீங்க


===========================



8  நடிகை அசின் தொழில் அதிபருடன் காருக்குள் உல்லாசம் -மாலை மலர் ஹெட் நியூஸ் # ஏன் ? வீரம்,ஆரம்பம் டிவிடி கிடைக்கலையா?,உல்லாசம் பழசாச்சே?



=========================


9  ரயிலில் மகளிர் பெட்டிகளுக்கு தனி நிறம் பூச வேண்டும்- நாடாளுமன்ற நிலைக்குழு # திருடன் தடுமாறாம அதுல ஏறிக்குவான்.நீங்களும் உங்க யோசனையும்



==================



10 பட்டேல் கொள்கை பற்றி மோடிக்கு தெரியாது:ராகுல் # அவசரப் "படேல்"்.தேர்தல் முடிவு வரட்டும்்



==================


11  டில்லியில் ரிங்ரோடு பைபாஸ் அமைக்கும் திட்டத்தில் ரூ.184 கோடி ஊழல் # 7ம் அறிவு - ஓ ரிங்கா ரிங்கா ரிங்கா 184 கோடி ஸ்வாஹா



======================



12 நாட்டை காப்பாற்ற காங்கிரசுக்கு விடை கொடுக்க வேண்டும்: மோடி# தேர்தல் முடிவு வந்ததும் அய்யய்யோ வடை போச்சேனு காங் புலம்பும்


=================


13 காந்தி கனவுகளை நினைவேற்றுகிறார் மோடி எனவே அவரும் ஒரு காந்திதான் -பச்சமுத்து # நல்ல வேளை ,காந்தி உயிரோட இல்லை.என்னா வேணா பேசிக்கலாம்



===================


14   யுவன் சங்கர் ராஜா மதம் மாறினார் - செய்தி # சாங்க் டெடிகேட்டட் - மாறுகோ மாறு கோ மாறுகையே ஜோருகோ ஜோருகோ ஜோருகையே.



====================



15  குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி வேண்டும்: ராகுல் # நீங்களும் கடைசில கட்சி மாறிட்டீங்க்ளா?


=====================


16  நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது: வைகோ # அலை அடிக்குது அலை அடிக்குது மோடியை சுத்தி அலை அடிக்குது


===================



17   நாட்டிற்கு அதிகம் படித்தவர்கள் தேவை: சிதம்பரம்# அதிகமா படிச்சவனெல்லாம் அமெரிக்கா ஆஸ்திரேலியா னு ஆஸ்தி சேர்க்கப்போயிடறான் எஜமான்



====================


18   டில்லியில் ரிங்ரோடு பைபாஸ் அமைக்கும் திட்டத்தில் ரூ.184 கோடி ஊழல்! # ச்சீ LAW தீட்சித்து விளையாட்டா?



===================


19 மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்: வண்டலூர் ல்் மோடி || அடுக்கு மல்லிகை.இது ஆள் புடிக்குது



===================


20   ஆம் ஆத்மி தன் பாதையில் இருந்து விலகிவிட்டது! - பாபா ராம்தேவ் # முதல்வன் ரூட் ல போனாங்க.இப்போ ஐ ரூட்டாம்.வெயிட்



=====================