Tuesday, October 15, 2013

கௌதம் மேனன் VS சூர்யா குற்றம் நடந்தது என்ன?






பாலாவும், கௌதம் மேனனும் இல்லையென்றால் இன்று சூர்யா வீட்டில் சும்மா  இருந்திருப்பார் ஜோதிகாவும் சூர்யாவுக்கு கிடைத்திருக்க மாட்டார்.  ‘நந்தா’ படத்தின் மூலம் சூர்யாவை கௌரவத்துக்குரிய நடிகராக மாற்றிக் காட்டினார் பாலா. அதன்பிறகு பாலாவின் நண்பரான அமீர், மவுனம் பேசியதே மூலம் மீண்டும் சூர்யாவுக்கு உயிர் கொடுத்தார். ஆனால், நந்தா, மௌனம் பேசியதே ஆகிய இரண்டு படங்களுமே மண்ணைக் கவ்விய படங்கள். பணம் போட்டத் தயாரிப்பாளர்கல் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு போனார்கள். இந்த நேரத்தில்தான் ‘காக்க காக்க’ படத்தின் மூலம் பாக்ஸ் ஆபீஸ் ஹீரோவாக சூர்யாவை மாற்றிக் காட்டினார் கௌதம் மேனன். 



சூர்யா, ஜோதிகாவை காதலிக்கிறார் என்பதை அறிந்து, அவரையே காக்க காக்க படத்தில் கதாநாயகி ஆக்கி, இருவரும் மேலும் நெருங்கிப் பழக காரணமாக இருந்தது மட்டுமல்ல… தனது அப்பா, பத்திரிகைகளில் கிசுகிசுக்களை படித்து தெரிந்து கொண்டபோதெல்லாம், தைரியாமாக அவரிடம் தனது காதலைச் சொல்லாத சூர்யாவுக்கு உதவும் விதமாக, “ சூர்யா , ஜோதிகாவை காதலிக்கிறார்!” என்று கௌதம் மேனன் சிவகுமாரிடம் சொல்ல, அவர் என் வீட்டுக்குள் எந்த நடிகையையும் அனுமதிக்க மாட்டேன் என்று குதிக்க, அந்த நேரத்தில் சூர்யா, வீட்டுக்குப் போகாமல் 2 மாத காலம், கௌதம் மேனனில் பெசண்ட் நகர் கடற்கரை குடியிருப்பில் தங்கியிருந்தாராம்.



பிறகு கௌதம் மேனன் தனது அம்மாவுடன் சென்றே சிவகுமாரையும், அவரது மனைவியையும் சமாதானம் செய்தாராம்.. சூர்யாவின் வாழ்க்கைக்கு மட்டுமல்ல… அடுத்து கஜினி என்ற மிகப்பெரிய படம் சூர்யாவுக்கு கிடைக்க காரணமாக இருந்தவரும் கௌதம் மேனன்தான். தீனாவுக்கு பிறகு தமிழில் ரமணாவையும் தெலுங்கில் ஸ்டாலின் என்ற படத்தையும் மட்டுமே இயக்கியிருந்த முருகதாஸ், அடுத்து தனது ‘கஜினி’ படக்கதையை விக்ரமிடம் கூறினார். ஆனால் விக்ரமுக்கு ஏனோ கதை பிடிக்கவில்லை.



அந்த நேரத்தில் சூர்யா -விக்ரம் இடையே பூசல் இருந்து வந்தது. இதை திரையுலகில் இருந்தவர்களும் கொம்பு சீவி விட்டு வந்தனர். இந்த நேரத்தில் கஜினி படத்தை விக்ரமின் எதிரியாக பார்க்கப்பட்ட, சூர்யாவை வைத்து இயக்கி வெற்றி கொடுத்து , விக்ரம் முகத்தில் கரியைப் பூசவேண்டும் என்று நினைத்தார் முருகதாஸ். இந்தநேரத்தில், கௌதமின் டிஸ்கசன் குழுவில் இருந்த நாகராஜ் என்ற உதவியாளர் மூலம், கௌதம் மேனனை சந்தித்து , கஜினியின் கதையைச் சொன்னார் முருகதாஸ். கௌதம் மேனனுக்கு கதை பிடித்து விட்டதால், உடனடியாக சூர்யாவை, சூட்டிங் ஸ்பாட்டிலேயே கதை கேட்க வைத்தது மட்டுமல்லாமல் ,இந்தப் படத்தை மிஸ் பண்ண வேண்டாம் என்று சொல்லி ‘கஜியில்’ சூர்யா நடிக்க காரணமாக இருந்ததும் கௌதம் மேனன்தானாம். அதன்பிறகு ’வாரணம் ஆயிரம்’ படத்தில் சூர்யாவை மறுபடியும் கௌரவப்படுத்தினார் கௌதம் மேனன்.



ஆனால் வாரணம் ஆயிரம் படத்துக்கு பிறகு கௌதம் மேனன் தயாரிப்பில் குதித்தபோதுதான் தலைவலி ஆரம்பித்தது. , வெப்பம், அழகர்சாமியின் குதிரை, நடுநிசி நாய்கள் என பல தோல்விப்படங்களைதயாரித்து கடனில் சிக்கிக்கொண்டார். கௌதம் மேனன் தொடங்கிய போட்டான் கதாஸ் நிறுவத்தின் பங்குகளை வால் ஸ்ரிட் பங்குச்சந்தையில் பட்டியல் இட்டபிறகு கௌதமுக்கு மேலும் நெருக்கடிகள் ஆரம்பித்தன. இதற்கிடையில் சிம்பு – த்ரிஷா நடித்த, ’வின்னத்தாண்டி வருவாயா’ படம் கௌதம் மேனனை கொஞ்சம் காப்பாற்றியது. ஆனால் பொன்வசந்தம் கௌதம் மேனனை 25 கோடி ரூபாய்க்கு கடனாளி ஆக்கியது. இந்த நேரத்தில் கடனில் இருந்து மீண்டு வர, பாக்ஸ் ஆபீஸில் 55 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகும் சூர்யா கால்ஷீட் கொடுத்தால் மீண்டு வந்துவிடலாம் என்று எண்ணி, சூர்யாவிடம் போய் நின்றார் கௌதம்.



துப்பறியும் ஆனந்த் கதையைக் கேட்ட சூர்யா, இதை சிங்கம் படம்போல ஆக்‌ஷன் கதையாக மாற்றுங்கள். “ இத்தனை ஷட்டிலாக நான் இனி நடிக்க முடியாது!” என்றாராம். ஆனால் கௌதம் “ என்ன நம்புங்கள்.. காக்க காக்க, கஜினி போல உங்களுக்கு இந்தப் படம் பெயர் வாங்கித் தரும்” என்று சொல்லியிருக்கிறார். ஆனால் சூர்யாவோ “ கதையை மாற்ற 6 மாதம் எடுத்துக் கொள்ளுங்கள். அதற்குள் நான் லிங்குசாமி படத்தில் நடித்துவிட்டு வந்து விடுகிறேன்!” என்றார். இதற்கிடையில் துருவநட்சத்திரம் பூஜை போடப்பட்டதும், கௌதம் மேனனுக்கு 20 கோடி ரூபாய் விநியோகஸ்தர்கள் மற்றும், தியேட்டர் உரிமையாளர்களிடம் இருந்து அட்வான்ஸ் கிடைத்தது. இதில் 5 கோடியை மட்டும் வைவசம் வைத்துக் கொண்டு, 15 கோடியை கடனாக அடைத்தார் கௌதம் மேனன். இதை கேள்விப்பட்ட சூர்யா, கதையை மாற்றுவதை விட்டுவிட்டு கடைனை அடைக்கும் வேலைகளில் இறங்கிவிட்டீர்களே..? இந்தப் புராஜெக்ட் டேக் ஆஃப் ஆகவில்லை என்றால் என்ன செய்வீர்கள்? உடனடியாக வாங்கிய அட்வான்ஸ் அத்தனையையும் செட்டில் செய்யுங்கள் என்று நெருக்கடி கொடுத்தாராம். இதில் நொந்துபோன கௌதம், சூர்யாவா இப்படி மாறிப்போனார் என நொந்துபோய், தனது பெசண்ட் நகர் கடற்கரை வீட்டை விற்றுவிட்டு, துருவநட்சத்திரம் படத்துக்காக வாங்கிய, அத்தனை அட்வான்ஸ்களையும் செட்டில் செய்தவர், மனம் வெறுத்துப் போய் தனது தொலைபேசி எண்ணையும் மாற்றி விட்டு, மும்மைக்கு சென்று விட்டார் என்கிறார்கள்.



காரணம் பிரபல பத்திரிகையாளரும், சினிமா விமர்சகரும், சினிமா தயாரிப்பாளருமான சுதிஷ் காமத் தயாரிக்க இருக்கும், ‘எக்ஸ்’ என்ற ஆங்கிலப்படத்தின் ஒருங்கிணைப்பாளராகவும், இணைத்தயாரிப்பாளர்களில் இருவராகவும் இருக்கும்படி கௌதம் மேனனைக் கேட்டுக்கொண்டாராம் காமத். மேலும் எக்ஸ் படத்தின் திரைக்கதையை உருவாக்குவதில் பங்கு வகிக்கும் அதேநேரம், படத்தின் ஒருபகுதியை இயக்கும் பொறுப்பையும் கௌதம் மேனனிடம் ஒப்படைத்தாராம். இந்தப் படம் 12 இயக்குனர்கள் கொண்ட குழுவால் இயக்கப்பட இருக்கிறது.



இதற்கிடையில் கௌதம் மேனன் அட்வான்ஸ் செட்டில் செய்த விவகாரம், சூர்யாவின் ஈகோவை சுரண்டிப் பார்க்க கடுப்பாகிவிட்டாராம். மேலும் இது பற்றி கேள்விப்பட்ட சியான் விக்ரம், மும்மையில் எதிர்பாராமல் கௌதம் மேனனனை சந்தித்து ஆறுதல் சொன்னதோடு, ஒரு படத்தில் நடித்துக் கொடுக்கவும் ஒப்பு கொள்ள, உற்சாக மடைந்த கௌதம் மேனன் இதை, சென்னையில் இருந்த தனக்கு பைனாஸ் உதவி செய்யும் நண்பர்களிடம் சொல்லியிருக்கிறார். இது மெல்ல காட்டுத்தீயாக பரவி, சூர்யா காதுக்கும் போக, கடுப்பாகியிருக்கிறார் இருக்கிறார் நம்ம கஜினி.



நமது பரம எதிரியான விக்ரமை இயக்க ‘ இந்த ஆள் எப்படி ஒத்துக் கொள்ளலாம்’ என்பதுதான் தற்போது நீண்ட அறிக்கை மூலம், கௌதம் மேனன் மீது சேறு பூசியிருக்கும் சூர்யாவின் சுய முகம் என்கிறார் திரையுலகில் வலுவான தொடர்புகளை திரையுலகில் பேணிவரும் நம்ம பரட்டையார்! தற்போது முதுகில் குத்து வாங்கிய கௌதம் மேனன், சூர்யாவின் இந்த எட்டப்பன் மனப்பான்மையை எப்படி எடுத்துக் கொள்வார் என்று தெரியவில்லை. ஆனால் இண்ரு எப்படியும் கௌதம் இதற்கு எதிர்வினையாற்றுவார்!.



முக்கிய குறிப்பு:



இளையதளபதி விஜய், தல அஜித், உலகநாயகன் கமல், சூப்பர் ஸ்டார் ரஜினி உட்பட பாக்ஸ் ஆபீஸின் சக்கரவர்த்திகளாக இருக்கும் இந்த நால்வருக்கும் இதைவிட பெரிய படங்கள் டிராப் ஆன போதெல்லாம், இவர்கள் ; இந்த இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கவில்லை. இந்த இயக்குனருக்கு வேலை தெரியல, கதை சரியில்ல என்று சொன்னதே கிடையாது. இப்படி அறிக்கை விட்டு அசிங்கப்படுத்தியது கிடையாது. சூர்யாவின் இந்த அறிக்கையின் பின்னணியில் அவரது அகந்தையும் பொறாமையும் மட்டுமே பச்சையாகவெளிபடுவதைப் பார்க்க முடியும்.



THANKS


கெளதம் மேனன் படத்திலிருந்து விலகுகிறேன்: சூர்யா




கெளதம் மேனன் இயக்கும் படத்திலிருந்து விலகிக் கொள்கிறேன் என்று நடிகர் சூர்யா அறிவித்துள்ளார்.

சூர்யா - கெளதம் மேனன் இருவருமே இணைந்து படம் செய்தால் அப்படம் மக்களிடையே பெருத்த எதிர்பார்ப்பு கிடைக்கும். இருவரும் இணைந்து 'காக்க காக்க', 'வாரணம் ஆயிரம்' ஆகிய படங்களில் பணியாற்றியிருக்கிறார்கள்.

மீண்டும் ’துருவ நட்சத்திரம்' என்னும் படத்தில் இணைந்து பணியாற்ற இருப்பதாக அறிவித்தார்கள். சூர்யா, பார்த்திபன், சிம்ரன் மற்றும் பலர் நடிக்க கெளதம் மேனன் இயக்கும் 'துருவ நட்சத்திரம்' என்று படப்பூஜை போடப்பட்டு, படத்தின் போஸ்டர்களும் வெளியிடப்பட்டன.

அதற்குப் பிறகு எப்போது படப்பிடிப்பு, யாரெல்லாம் சூர்யாவுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள் என்று எதுவுமே தெரியாமலிருந்தது. இந்நிலையில் தற்போது சூர்யா, தான் கெளதம் மேனன் படத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து இருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கடந்த 2012ம் ஆண்டு ஜுன் மாதம் கெளதம் மேனன் அவர்கள் இயக்கம் மற்றும் தயாரிப்பில், நான் கதாநாயகனாக நடிப்பதாக முடிவானது. இது அனைவரும் அறிந்த செய்தி. பல்வேறு காரணங்களால் இப்போது நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய திரையுலக அனுபவத்தின் அடிப்படையில், நான் நடிக்கும் படத்தின் கதை, மனதிற்கு முழுத்திருப்தி தந்த பிறகே படப்பிடிப்பு செல்வது என்பதை கொள்கை முடிவாக நடைமுறைப்படுத்தி வருகிறேன். ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வதே ஒரு நடிகனாக என்னுடைய முதல் கடமையாக கருதுகிறேன்.

இயக்குநர் கெளதம் அவர்களிடம் என்னுடைய இந்தக் கொள்கை முடிவை முதல் நாளே தெளிவாகச் சொல்லி, அதற்கு அவர் சம்மதித்த பிறகே நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்தோம். இதையே ஒப்பந்தமாகவும் செய்துகொண்டோம். ஆனால், ஒப்பந்தம் செய்து, ஒருவருட காலம் கழிந்த பிறகும், கெளதம் அவர்கள் இன்னும் என்னிடம் முழு கதையை திருப்தி அளிக்கும் வகையில் தரவில்லை.

சிங்கம் 2 படம் முடித்த பிறகு ஆறுமாதங்களாக முழுக்கதையையும் எதிர்பார்த்து காத்திருந்தேன். முதலில் பூஜை போட்டுவிடலாம் என்றார். நட்பின் அடிப்படையில் அதற்கும் ஒத்துழைத்தேன். 'ஒரு டெஸ்ட் ஷுட்' செய்து 'கெட்டப்' மாற்றங்களை முடிவு செய்யலாம் என்றார். தயக்கம் இருந்தாலும், கெளதம் அவர்கள் மீது இருக்கும் நன்மதிப்பின் அடிப்படையில் அதற்கும் ஒத்துழைத்தேன். பல மாதங்களாக ஷுட்டிங் போகாமல், வீட்டில் காத்திருந்தேன். கெளதம் அவர்களிடம் இருந்து, நடிகனாக எனக்கு திருப்தி அளிக்கும் முழுக்கதை கிடைக்கும் என்று இன்றுவரை காத்திருந்தேன். அது நடக்கவில்லை.

முன்பே கெளதம் அவர்கள் 'சென்னையில் ஒரு மழைகாலம்' படத்திற்கு பூஜை போட்டு, ஒரு வாரம் ஷுட்டிங் செய்து, எட்டு மாதங்கள் காத்திருந்தும், கடைசியில் அந்த படம் நடக்கவில்லை. இப்போது இந்தப் படத்திற்கும் அதே அனுபவம் தொடர்ந்து ஏற்படுகிறது.

ஆறுமாத கால காத்திருத்தலுக்குப் பிறகு, இனி காத்திருக்க இயலாத சூழல் எனக்கும் ஏற்பட்டுள்ளது. நானும் கெளதம் அவர்களும் கருத்தளவிலும் எதிரெதில் திசையில் பயணிக்கிறோம் என்று தோன்றுகிறது. இந்நிலையில் நாங்கள் இருவரும் தொடர்ந்து பணியாற்ற இயலாது என்று உறுதியாக நினைக்கிறேன்.

ஒரு திரைப்படம் உருவாவதில் பலரின் பங்கு முக்கியமாகவும், அவசியமாகவும் இருக்கிறது. நடிகனாக நம்பிக்கையில்லாமல் செய்த படங்கள், எனக்கு சரியான பாடங்களைத் தந்திருக்கின்றன். நட்பின் அடிப்படையில் கெளதம் அவர்களுடன் இணைந்து பணியாற்ற என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் எடுத்துவிட்டேன். இனி நாங்கள் இருவரும் இப்படத்தில் இணைந்து பணியாற்ற இயலாது. அதனால் கெளதம் அவர்களின் படத்தில் இருந்து விலகி கொள்கிறேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.


redaers views 

1.காக்க காக்க நடித்ததினால் கிடைத்த நல்ல பெயர் இன்றும் சூர்யாவிற்கு இருக்கிறது. இருவரும் மிக நல்ல நிலையில் இருக்கும் கலைஞர்கள். கௌதமும் இவ்வளவு நாள் தன் கதையை மாற்றி அமைக்க நேரம் எடுத்திருக்கக் கூடாது. என்ன ஆச்சு? இருவரும் சுமூகமாக பேசி கதை விவாதத்தில் பங்கேற்ற்று தேவைப்படும் மாற்றங்களை செய்து படபிடிப்பை துவங்கி இருக்கலாம். இப்படி படத்தில் இருந்து விலகுகிறேன் என அறிக்கை விடும் அளவிற்கு வளர்ந்தது அவர்களின் நட்பிற்கு உகந்ததாக இருக்காது. இருப்பினும், தன் கதையில் மாற்றம் செய்ய மாட்டேன் என நினைக்கும் இயக்குனர் வேறு ஒரு நடிகரை வைத்து அதே கதையை படமாக்கி வெற்றிபெற்று தன் கதையின் பலத்தை உணர்த்தலாம். டீசெண்டா முடிவு எடுத்தாச்சு... இனிமே நிரூபிக்க வேண்டியது கௌதம்தான். பாப்போம், சூர்யா எந்த கதையை நடிக்க முடியாதுன்னு சொன்னாப்ப்லன்னு. படம் எப்படியும் வரும்தானே?!!!



ஒரு நடிகனாக நடிப்பிற்கு தீனி உள்ள படங்களை சூர்யா நடித்தவை மிக குறைவே. அவ்வரிசையில் நந்தா, காக்க காக்க, மௌனம் பேசியதே, பிதாமகன், கஜினி, வாரணம் ஆயிரம், 7ஆம் அறிவு மட்டும் தான் அவருடைய பெயரை இன்றும் நிலை நாட்டி கொண்டு இருக்கின்றன. மற்ற ஆறு, அயன், சிங்கம் 1,2, மாற்றான் - இவை எலாம் சுமார் படங்கள் தான் என்பது சூர்யாக்கு நன்றாய் தெரியும். சிங்கம் படத்துக்கு ஒரு 6 மாசம் வேலைசெஞ்சு நேரத்தை வீண் செய்த சூர்யா இதனை பெரிதாய் பார்க்க வேண்டாம். அதே சமயம் நீ தானே பொன்வசந்தம் வந்தே 10 மாசம் ஆகுது. சூர்யா போன்ற நல்ல நடிகர்களின் நாட்களை வீண் செய்ய கூடாது என்று கௌதம் இப்போது நன்கு உணர்ந்து இருப்பார் இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு. இவர் எமக்கு இத்தனை அன்பு உடையவர்; நாமும் இவர்க்கு இப்படியே என்று ஒருவரை ஒருவர் அலங்காரமாகப் பாராட்டிச் சொன்னாலும் நட்பு அற்பமானதாகப் போய்விடும்.


3  என்ன ஆச்சு கௌதம்? சூர்யாவை விட நல்ல ஹீரோ கிடைப்பார்....உங்கள் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகும்...எனக்கு உங்க மேல பயங்கர நம்பிக்கை இருக்கிறது. எல்லாம் நன்மைக்கே......


 thanks - the hindu

இரண்டாம் உலகம் - அனிரூத் ,ஆண்ட்ரியா

1. திரைப்பட விழாவில் விஜய்க்கு கடைசி ரோ வில் இடம்...செய்தி# இதனால் பேர் ரிப்பேர் ஆனது ஜெ வுக்குத்தான்.விஜய்க்கு அல்ல




-------------------------


2 சினிமா நூற்றாண்டு விழாவில் ஜெ செய்த இரு இமாலயத்தவறுகள்


 1 கலைஞருக்கு உரிய மரியாதை செய்யாதது


2 விஜய்க்கு அவ மரியாதை செய்தது


---------------------------


3  பொசசிவ்னெஸ் = தனதெனப்பேணல் ( தனக்கு மட்டுமே சொந்தம் என உரிமை கொண்டாடுதல் ) # தூய தமிழ் மொழிபெயர்ப்பு


------------------


4  அடக்குமுறை என்பதின் முதல் கட்டம் மச்சினியை பார்க்கவிடாமல் மனைவி நம்மைக்கண்டிப்பதே # அங்கே என்னய்யா பார்வை?



------------------------


5  மேடம்.கலைஞர் மு க ,பாலுமகேந்திரா ,விஜய் இவங்க 3 பேரையும் வேணும்னே அவமானப்படுத்துனீங்களா?



ஜெ - இல்ல.வேணாம்னு தான்



------------------------




6  கிச்சன் ரூமில் இருந்து டைனிங்க் ஹால்க்கு புரோட்டாவை வீசி எறிந்தாய்! சாதா புரோட்டா வீச்சு புரோட்டா ஆனது, அடடே!




------------------------


7  எல்லா  ஹீரோயின்கள் முகமும் நல்லா பரிச்சயம் ஆனாக்கூட பொண்ணுங்க டி பி ல இருக்கும் நடிகை யாருன்னு அந்த பொண்ணு கிட்டேயே கேட்பான் தமிழன்


--------------------------


8  பிறந்த ஆண் குழந்தைக்கு ராஜான்னு பேர் வெச்சா மட்டும் அந்த பொண்ணு கிங்க் மேக்கர் ஆகிடாது




----------------------


9 ஒரு பெண்ணின் கண்ணீருக்கு பின் ஆணிடம் ஏகப்பட்ட கோரிக்கைகள் மறைந்து நிற்கும்




------------------------


10 ஒவ்வொரு பெண் குழந்தை பிறந்ததும் யாரோ ஒரு ஆணை ஆளப்பிறந்தவள் என்று பெருமைப்படலாம்




---------------------

11  பி ஜே பி யின் இப்போதைய ஹீரோ மோடி ,வில்லன் அத்வானி ,காமெடி சுப்ரமணியம் சுவாமி



------------------------


12  ஆரம்பம் ல ஆர்யா உங்களை ஓவர் டேக் பண்ணிடுவாரோ?



அஜித் - பைக்ல பேக் சீட் ல உக்காந்திருப்பவர் டிரைவிங் பண்றவரை முந்த முடியுமா?



--------------------------


13 ஆரம்பம் ஹிட் ஆகிட்டா சில்வர் கலர் ஹேர் ஸ்டைல் வெச்சா படம் சில்வர்ஜூப்ளின்னு ஒரு ட்ரெண்ட் உருவாகும் பாருங்க



----------------------


14 தேர்த்திரு விழா வில் தேர் மீது உப்பும் ,மிளகும் தூவுவாங்க.சால்ட் & பெப்பர் லுக் என்பது அதில் தான் ஆரம்பம்



---------------------------


15  கொதிக்கும் எண்ணெயில் போட்ட கடுகாய் பொண்டாட்டி பொரியும்போது ஜெ முன் பம்மும் ஓ பி எஸ்சாய் புருசன் அமைதி காக்கனும்



-------------------------

16  உலகத்துலயே பயங்கர புத்திசாலிங்க பொண்ணுங்கதான்.இது ல சோகம் என்னான்னா அவங்கதான் ஆம்பளைங்க கிட்டே ஏமாந்தும் போறாங்க



-----------------------


17  உன் துப்பட்டாவாக இருக்க ஆசை என்றேன்! இப்போது நீ துப்பட்டாவே போடுவதில்லை



---------------------------


18  அன்பே! நீ என் மீது காட்ட வேண்டிய அன்பு ஆதார் அடையாள அட்டை போல . காட்டினால் நல்லது . காட்டியே ஆகவேண்டும் என்று கட்டாயம் இல்லை



----------------------------


19  இரண்டாம் உலகத்துக்கு அனிரூத் பின்னணி இசை மட்டும் அமைக்க ஒப்புக்கொண்டதின் பின்னணி ஆண்ட்ரியாவுக்கு மட்டுமே தெரியும் 



-------------------------------



20 பின்னால நடப்பதை முன்னாலயே யூகிக்க முடியாதவர் அஜித்தின்  அம்மா,அப்பாவாகக்கூட இருக்கலாம்



-----------------------------


Some People Sell Happiness While They Don't Taste Any Of It... என்னை சிந்திக்கவைத்த படம்.. நானும் இப்படிதானோ..
Some People Sell Happiness While They Don't Taste Any Of It... என்னை சிந்திக்கவைத்த படம்.. நானும் இப்படிதானோ..

Monday, October 14, 2013

Gravity (2013) - சினிமா விமர்சனம்


தினமலர் விமர்சனம்


நிகழ்விற்கும் கனவிற்கும் பாலமிடும் விஷுவல் மீடியா தான் சினிமா.  சினிமாவை கனவுத் தொழிற்சாலை, ட்ரீம் ஃபாக்டரி இப்படி பல வார்த்தைகளை கொண்டு வர்ணனை செய்வதும் உண்டு. சமீபகாலத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே காமெடி, காதல் டிராமா, ஆக்ஷன், த்ரில்லர், ஹாரர் இப்படி பல வகையில் வெளிவந்தன. பொதுவாக நாம் வாழ்வில் கண்ட மனிதர்கள், காணக் கூடிய நிகழ்வுகள், அமானுஷ்யங்கள், அடல்ட் நய்யாண்டி, ஹீரோயிசம் இப்படி பல அடித்தட்டில் கதைக்களங்கள் அமைந்திருந்தன. இப்படி பல வகையில் பல படங்கள் வெளிவந்தும், திரையரங்கின் தேவையை உணர்த்திய படங்கள், விரல் விட்டு எண்ணக் கூடியதாகத்தான் அமைந்திருந்தது.  இந்த வரிசையில் முக்கிய அங்கம், ஏன் முதன்மையான அங்கம் என்று கூட கூறும் அளவிற்கு அமைந்திருந்த ஒரு படம் தான் கிராவிட்டி.

படத்தின் கதையை இருவரிக்குள் அடக்கிவிடலாம். இன்ஜினியர் சாண்ட்ரா புல்லக், விண்வெளி வீரர் ஜார்ஜ் க்ளூனி இருவரும் விண்வெளியில் விபத்துக்குள்ளாகின்றனர். விண்வெளியிலிருந்து தப்பித்து இவர்கள் தரை இறங்கினார்களா என்பது தான் கதை.

கதையை கூட சாதாரணமாக சொல்லிவிடலாம். ஆனால், அக்கதை அமைந்திருந்த கட்டமைப்பு தான் பிரமிக்க வைக்கிறது. வானம் சுழல்வது போன்ற காட்சி, வானை நோக்கி ஓர் சிறிய கல் வருவது போல் தோன்றுகிறது. அருகே வர வர, கல் ஒரு மனிதனாகவும் வானம் உலகமாகவும் மாறி காட்சியளிக்கிறது. இருக்கையின் நுனியில் வரவழைத்துவிட்டது முதற்காட்சியின் பிரம்மாண்டமே.

சினிமாவில் ஒலிவடிவம் எத்தனை முக்கிய அம்சம் என்பதை கிராவிட்டி அற்புதமாக உணர்த்தியது.  விண்வெளியில் ஸ்பேஸ் விண்கலத்திற்குள் அமர்ந்திருக்கும் பெண் கத்துவது வெளியே எப்படி கேட்கும், அடைக்கப்பட்டுள்ள அறையில் அமைந்திருக்கும் அமைதியையும், வேகமாகச் சுழலும் காற்று எற்படுத்திய சலசலப்பையும் கிராவிட்டி அற்புதமாக பதிவு செய்திருந்தது.

நிறைய காட்சிகள் வியக்கத்தக்க வகையில் அமைந்திருந்தது. சாண்ட்ரா புல்லக் சிந்தும் கண்ணீர் துளியில் அவர் முகத்தை பிரதிபலித்திருந்த விதம், விண்களத்தில் மிதக்கின்றவர் மண்ணிற்கு வருகையில் நடக்கத் திணரும் காட்சி நேர்த்திக்கு ஒரு சான்றாகத் தோன்றியது.

விண்கல உடையுடன் நடிகர்கள் சுழன்று கொண்டே இருக்கும் பொழுது கூட அத்தனை வியப்பாக தோன்றவில்லை. ஒரு காட்சியில் சாண்ட்ரா புல்லக், விண்கல உடையின்றி ஸ்பேஸ் ஷட்டில் விசையினால் தொடர்ந்து சுழன்று கொண்டே இருப்பார். எப்படித்தான் இதைப் படமாக்கியிருப்பார்களோ!!!  விந்தை.

ஜார்ஜ் க்ளூனி, சாண்ட்ரா புல்லக் படத்தில் இவ்விரண்டு நடிகர்கள் தான்.  வெறும் இருவரை வைத்து படம் டாக்குமென்டரி போல்தான் பிரயாணிக்கும் என்று எதிர்பார்த்தால் திரைக்கதையில் வரும் அசாத்திய திருப்பங்கள் சாமான்ய ரசிகனைக் கூட ரசிக்க வைக்கிறது.

ஸ்டீவன் ஸ்பீல்பர்க், ஜேம்ஸ் காமரோன் இப்படி ஹாலிவுட்டின் பல ஜாம்பவான்கள் பாராட்டியது சும்மா இல்லை என்பதை படம் பார்க்கும் அனைத்து ரசிகர்களாலும் உணர முடியும்.

ப்ளைண்ட் ஸைடில் சாதாரண கதாபாத்திரத்திற்கே நடிகை ஸாந்திரா புல்லக் ஆஸ்கர் பெற்றார். இந்தப்படத்திற்கெல்லாம் சொல்லவா வேண்டும்!!!  

‘எங்கே போகுதோ அங்கே போகிறோம் நாமும்’ என்ற வைரமுத்துவின் வரிகளை மெய்ப்பித்துள்ளது இப்படம். விண்வெளி பற்றி படித்திருப்போம், விண்வெளி ஆராய்ச்சியாளர் பற்றி கேள்விப்பட்டிருப்போம் விண்வெளிக்கே போய் பார்க்கும் வாய்ப்பை இப்படம் ஏற்படுத்தித் தந்துள்ளது.  மாணவர்கள் இப்படத்தை விரும்பிப் பார்ப்பார்கள்.

மொத்தத்தில் ‘‘கிராவிட்டி’’ - ‘‘க்ரியேட்டிவிட்டியின் உச்சம்’’. குமுதா மட்டுமில்லிங்கோ குடும்பமே ஹேப்பி.  

thanx -  dinamalar


  • நடிகர் : ஜார்ஜ் க்ளூனி
  • நடிகை : சாண்ட்ரா புல்லக்
  • இயக்குனர் :அல்போன்சா கவுரான்

நோபல் பரிசு பெற்ற அலிஸ் மன்றோவின் காலச்சுவடு பேட்டி

நேர்காணல்: அலிஸ் மன்றோ
காத்திராப்பிரகாரம்
சந்திப்பு: அ. முத்துலிங்கம்
டொரன்டோவில் ஒரு நாள் மாலை 'பென் கனடா' என்ற அமைப்பு ஒரு கூட்டத்தை ஒழுங்கு பண்ணியிருந்தது. கனடிய ஆங்கில எழுத்தாளர்களுக்கான கூட்டம் அது. ஏறத்தாழ எல்லா எழுத்தாளர்களும் அன்று வந்திருந்தார்கள். ஒவ்வொரு எழுத்தாளராக மேடையில் தோன்றிப் பேசினார்கள்; சிலர் வாசித்தார்கள். சுருக்கமான பேச்சு. ஒருவர்கூடக் கொடுத்த நேரத்துக்கு மேல் எடுத்துக் கொள்ளவில்லை.
கடைசியாக ஓர் உருவம் மேடையை நோக்கி நடந்தது. பார்த்தால் அது அலிஸ் மன்றோ; கனடாவின் மிகப் பிரபலமான எழுத்தாளர். இவரைத்தான் நான் இரண்டு வருடங்களாகத் தேடித்தேடிக் களைத்துப்போயிருந்தேன். அந்த நேரம், அந்தக் கணம் என் மனத்தில் ஒரு வார்த்தை வந்து விழுந்தது. காத்திராப்பிரகாரம். ஐம்பது வருடங்களாக அழிந்துபோன அந்த வார்த்தைதான் என்னுடைய அந்த நேரத்து உணர்வைப் படம் பிடிப்பதாக இருந்தது.
அலிஸ் மன்றோவின் பேச்சு நிதானமாகவும் அழகாகவும் சுருக்கமாகவும் அமைந்தது. ஒரு புத்தகம் அச்சில் இருப்பதாகவும் அது வெளிவந்ததும் தான் எழுதுவதை நிறுத்திவிடப் போவதாகவும் அறிவித்தார். அரசியல்வாதிகள் இப்படி அறிவிப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், ஓர் எழுத்தாளர் ஒய்வு பெறப்போவதாக அறிவித்ததை நேரிலே கண்டது எனக்கு அன்று தான் முதல் தடவை.
அலிஸ் காரணத்தைச் சொன்னார். 'எழுத்து எழுத்து என்று அலைந்தே வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. என் நண்பர்களுக்கோ உறவினர்களுக்கோ வேறு உதவி கேட்டு வரும் பொதுநலத் தொண்டர்களுக்கோ என்னால் நேரம் ஒதுக்க முடியாமல் போய்விட்டது. முன்பு சாதாரணமாகச் செய்த சிறிய காரியங்களும் இப்போது எனக்கு மலைபோலத் தெரிகின்றன. வயது 75 ஆகிறது. மாதக் கடைசியில் பில்களுக்குப் பணம் கட்டுவது, அந்த வாரக் குப்பையை அகற்றுவது, தேக அப்பியாசம் செய்வது, மருந்துகள் சாப்பிடுவது என்று எல்லாமே பெரிய சுமையாக மாறிவிட்டன. இனிமேல் கொஞ்சம் மற்றவர்களுக்கும் வாழ்வது என்று முடிவுசெய்திருக்கிறேன்' என்றார்.
நான் திகைத்துப்போன அளவுக்கு மற்றவர்களும் திகைத்திருக்க வேண்டும். பேச்சு முடிந்ததும் அவரைச் சுற்றிப் பலரும் சூழ்ந்துவிட்டார்கள். இந்தக் கும்பலில் போய் இவரை எப்படிச் சந்திப்பது என்ற குழப்பம் எனக்கு ஏற்பட்டது.
இரண்டு வருடங்களாக இவரைச் செவ்வி எடுப்பதற்காக நான் அலைந்திருந்தேன். ஒரு நாள் அதிகாலையில் என்னை அழைத்துப் பேட்டி தருவதாகச் சொன்னவர் மறுபடியும் என்னைத் தொடர்புகொள்ளவேயில்லை. பீட்டர் மத்தீஸன் என்ற எழுத்தாளர் நேபாள மலைகளில் பல வருடங்கள் பனிச் சிறுத்தையைத் தேடி அலைந்து கடைசிவரையும் அதைக் காணவில்லை. ஆனாலும் அவர் 'பனிச் சிறுத்தை' என்று ஒரு புத்தகம் எழுதி, அது ழிணீtவீஷீஸீணீறீ ஙிஷீஷீளீ கிஷ்ணீக்ஷீபீ பெற்றது. அதுபோல நானும் அலிஸ் மன்றோ பற்றி அவரைச் சந்திக்காமலே ஒரு கட்டுரை எழுதி அது பிரசுரமாகியிருந்தது.
அலிஸ் மன்றோவைச் சுற்றி இன்னும் கூட்டம் சேர்ந்துகொண்டிருந்தது. இதுதான் கடைசி. இந்தச் சந்தர்ப்பத்தைவிட்டால் இனிமேல் இவரைப் பிடிக்க முடியாது. இவரை நோக்கி நடந்தேன். அப்போது ஓர் அதிசயம் நடந்தது. மோசேக்குச் செங்கடல் பிளந்தது போலக் கூட்டம் வழிவிட்டது. காரணம் வேறு ஒன்றுமில்லை, என்னுடைய வயதும் நிறமும்தான். என் பெயரைச் சொன்னேன். அவர் வாழ்க்கையில் எத்தனை அப்பாத்துரை முத்துலிங்கங்களைச் சந்தித்திருப்பார். என்னை ஞாபகம்வைத்திருந்தார். எனக்குத் தருவதாகச் சொன்ன செவ்வி பற்றி வினவினேன்; உடனே சம்மதித்தார். அரை மணித்தியாலம் என்றார். நான் சரி என்றேன். மீண்டும் 'அரை மணித்தியாலம் மட்டுமே' என்றார். அதற்கும் சரி என்றேன். அவர் 200 மைல் தூரத்தில் இருப்பதால் என்னால் அவ்வளவு தூரம் வர முடியாது என்று சொன்னேன். தொலைபேசி மூலம் செவ்வி பதிவானது. அதுவே கீழே.
நீங்கள் ஒருமுறை அயர்லாந்துக்குப் பயணம் செய்து அங்கே ஆறு மாத காலம் தங்கி 70 பக்கச் சிறுகதை ஒன்றை எழுதியிருந்தீர்கள். ஆனால், அதைத் திரும்ப வாசித்தபோது அதன் tone சரியாக அமையாததால் அதைத் தூக்கி எறிந்துவிட்டதாகக் கூறியிருக்கிறீர்கள். அது என்ன tone?
இதற்கு நான் எப்படிப் பதில் சொல்வது? சிறுகதையில் அடிநாதம் என்று ஒன்றிருக்கிறது, அது சரியாக அமையவில்லை. படிக்கும்போது நெருடலாக இருந்தது. கண்ணால் பார்க்க முடியாத ஒன்று சிறுகதையின் சமநிலையைக் குலைத்துப்போட்டுவிட்டது. திரும்பப் படித்துப் பார்த்தபோது அது என்னுடைய கதையாகவே தோன்றவில்லை. என்னுடைய வசனங்கள்கூட இல்லை. என் மனத்தில் இருந்த கதையும் பேப்பரில் பதிந்த கதையும் வேறு வேறாகத் தெரிந்தன. சொல்லப்போனால் என் மூளையில் இருந்தது பேப்பரில் வரவேயில்லை.
இன்னொரு காரணமும் இருக்கலாம். கதாநாயகியின் பெயரை மேரி என்று மாற்றியிருந்தேன். மேரி என்பது அயர்லாந்தில் மிகவும் பொதுவான ஒரு பெயர். நூற்றுக் கணக்கான அயர்லாந்துச் சிறுகதைகளை நான் படித்திருக்கிறேன். என்னையறியாமல் கதையில் அந்தச் சாயல் வந்து விழுந்துவிட்டது. என் கையை மீறி ஏதோ ஒன்று நிகழ்ந்திருந்தது. அதுதான் ஆறுமாத உழைப்பை ஒரு கணத்தில் குப்பையில் வீசிவிட்டேன்.
அது எப்படி உங்களால் முடிந்தது? அவ்வளவு சுலபமாகத் தூக்கி எறிய முடியுமா?
நான் எறிவேன். எனக்குப் பிரச்சினையே இல்லை. உண்மையில் எனக்கு அப்படி எறிந்துவிட்ட பிறகு பெரிய ஆசுவாசமாக இருந்தது. நிம்மதி பிறந்தது. இதை வைத்து என்ன செய்வது என்று திணறிக்கொண்டு இருந்தபோது அதை வீசி எறிந்தது என் பிரச்சினைக்குத் தீர்வாக இருந்தது. உண்மையில் நான் சந்தோஷமாக இருந்தேன்.
அதன் பிறகு வேறு கதை எழுதினீர்களா?
அயர்லாந்து விடுமுறையில் எழுதவில்லை. அங்கே எழுதியது அவ்வளவுதான். ஆறுமாத கால எழுத்து இப்படியானவுடன் எனக்குப் பயம் பிடித்தது. எழுத்து எனக்குச் சரிவரவில்லை, இனிமேல் என்னால் எழுத முடியாதோ என்ற கிலி என்னை ஆட்டியது. அதுதான் அதைத் தூக்கி எறிந்தவுடன் ஒரு சந்தோஷம் வந்து சூழ்ந்துகொண்டது.
ஆனால், திரும்பவும் டொரன்டோ வந்த பிறகு வேறு ஏதோ தேடிக்கொண்டிருந்தபோது இதே கதையின் பழைய பிரதி ஒன்று கிடைத்தது. படித்துப் பார்த்தபோது நன்றாக இருந்தது. அதையே கொஞ்சம் திருத்தி நேர்த்தியாக்கி விற்றுவிட்டேன். அதன் தலைப்பு 'The Love of a Good Woman;.
நீங்கள் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறீர்கள். அவற்றை நான் அவ்வப்போது படித்து வந்திருக்கிறேன். ஆனால் அவை ஒன்றும் புத்தகமாக வரவில்லையே?
இந்த செப்டம்பர் மாதம் ஒரு புத்தகம் வெளிவரும். அதில் நீங்கள் சொன்ன கட்டுரைகள் இருக்கும். எல்லாம் சேர்ந்த கலவை என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒரு விடுதியில் இளம் பணிப் பெண்ணாக வேலைசெய்த அனுபவங்களைப் பதிந்தது இந்தக் கட்டுரைகளில் மட்டும்தான். பல அனுபவக் கட்டுரைகளை இந்தத் தொகுப்பில் சேர்த்திருக்கிறேன். அவை கட்டுரைக்கும் சிறுகதைக்கும் இடையேயான வெளியை நிறைத்து நிற்கும். இது ஒரு புது வகையான இலக்கியம். இதில் உண்மையும் புனைவும் கலந்து இருக்கும். இடத்தையோ காலத்தையோ கதை மாந்தரையோ மாற்றி எழுத முடியாது. ஆனால் சுவாரஸ்யத்தைக் கூட்ட ஒரு மரத்தை உண்டாக்கலாம், மலையை வர்ணிக்கலாம்.
இன்னும் பல கட்டுரைகளில் ஆன்டரியோவின் நிலவியல் பற்றியும் நான் கண்டுபிடித்த ஒரு நூதனமான நிலவறைப் புதைவிடம் பற்றியும் எழுதியிருக்கிறேன். என் பிள்ளைகள் பற்றி நான் வழக்கமாக எழுதுவதில்லை. ஆனால் இதில் என் மகள் ஒரு நாள் நீச்சல் குளத்தில் மூழ்கிக் கிட்டத்தட்ட இறந்துபோன ஒரு சம்பவத்தையும் எழுதியிருக்கிறேன்.
நான் ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது கையில் ஒரு பென்சிலைப் பிடித்து அதில் வரும் அழகான வசனங்களுக்கு எல்லாம் அடிக்கோடு இடுவேன். ஆனால், நீங்கள் எழுதிக்கொண்டுபோகும்போது ஓர் அழகான வசனம் வந்தால் அதை வெட்டி எறிந்துவிடுவதாகச் சொல்லியிருக்கிறீர்கள். அது உண்மையா?
அழகான வசனம் அல்ல. கெட்டிக்காரத்தனமான வசனம் அல்லது திரும்பத் திரும்ப மினுக்கவைக்கப்பட்ட அலங்காரமான வசனம். அவை என் எழுத்தில் தலை காட்டினால் நான் அவற்றை அகற்றிவிடுவேன். என் பெற்றோர் என்னை அடக்கமானவளாக வளர்த்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஆடம்பரம் பிடிக்காது, அடக்கம்தான் பிடித்த குணம். ஆகவே என்னை விளம்பரப்படுத்துவதுபோல வரும் வசனம் எனக்குப் பிடிக்காது.
நான் ஒரு கதையைச் சொல்லும்போது அந்தக் கதைதான் எனக்கு முக்கியம். ஓர் அலங்காரமான வசனம் வாசகரைத் திசை திருப்புகிறது. கதையின் மையத்திலிருந்து அவருடைய கவனம் வேறெங்கோ போய்விடுகிறது. வாசகரைக் கதையை ரசிக்கவைப்பதுதான் என் முதல் நோக்கம். அதற்கு இடைஞ்சலாக வரும் வசனங்களை, அவை எவ்வளவு நேர்த்தியாக அமைந்திருந்தாலும், நான் வெட்டிவிடுவேன்.
ஆனால், கதை முடிவை நோக்கி செல்லும்போது வசன அமைப்பு முக்கியமாகிவிடுகிறது. அந்த வசனம் சொல்வது அதில் உள்ள வார்த்தைகளின் சேர்க்கையிலும் பார்க்க அதிகமாக இருக்க வேண்டும். அதை வரவேற்பேன், வெட்டி எறியமாட்டேன். அந்த வசனம் அது சொல்லவந்ததிலும் பார்க்கக்கூடச் சொல்ல வேண்டும். ஆனால் embroidery, வன்ன வேலை எனக்குப் பிடிக்காது.
ஓர் உதவி செய்ய முடியுமா? நீங்கள் அப்படி வெட்டியெறிந்த வசனங்களை எல்லாம் என்னிடம் தர முடியுமா?
(உரக்கச் சிரிக்கிறார்)
இப்பொழுதெல்லாம் பலர் புனைவு இலக்கியம் படிப்பதில்லை. புனைவு சாராத படைப்புகளைத்தானே படிக்கிறார்கள்?
என் முதல் கணவருடன் நான் ஒரு புத்தகக் கடை நடத்தியிருக்கிறேன். அப்பொழுது அங்கே புத்தகம் வாங்க வந்தவர்களில் பலர் என்னிடம் தாங்கள் புனைவு இலக்கியம் படிப்பதில்லை என்பதைக் கூறியிருக்கிறார்கள். இன்னும் சிலர், ஒரு கனடிய எழுத்தாளரைக்கூடப் படித்ததில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். வேறு சிலர் பெண் எழுத்தாளர்களைப் படித்தது கிடையாது. நானோ புனைவு இலக்கியம் படைக்கும் ஒரு கனடியப் பெண் எழுத்தாளர். எனக்கு எப்படி இருந்திருக்கும்?
இவர்கள் எல்லோரும் தீவிர வாசகர்கள். இவர்கள் ஒரு புனைவுப் படைப்பைப் படிக்கும்போது அதன் ஊடாக வெளிப்படும் உண்மைகளைக் கண்டுகொள்வதில்லை. நான் நேற்று இரவு March of Folly என்ற புத்தகத்தைப் படித்தேன். ட்ரோஜன் போரில் கிரேக்கர்கள் பயன்படுத்திய மரக் குதிரையில் இருந்து நூல் ஆரம்பிக்கிறது. எதிரி விட்டுச்சென்ற மரக் குதிரையை எதற்காக இவர்கள் கோட்டைக்கு உள்ளே இழுத்துச் சென்றார்கள்? எல்லோரும் கூத்தாடினார்கள். ஒரேயொரு குருட்டு மதகுருதான் அதன் உள்ளே ஆபத்து ஒளிந்திருக்கிறது என்று கத்தினான். யாரும் அவன் பேச்சைச் சட்டை பண்ணவில்லை. தன் அழிவை நாடிப்போவது மனித இயல்பு. புனைவு படிக்கும்போது இப்படியான பெரும் உண்மைகளைக் காணத் தவறிவிடுகிறோம்.
நோபல் பரிசு புனைவு இலக்கியத்துக்கு மட்டும்தானே கொடுக்கிறார்கள்? அது அவ்வளவு முக்கியமானதா?
நான் புனைவு இலக்கியம்தான் படிப்பேன். அது முக்கியமானது. நல்ல இலக்கியத்தைத் திரும்பத் திரும்பப் படிக்கத் தயங்கமாட்டேன். அவற்றில் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. செக்கோவை நான் எப்பொழுது வேண்டுமானாலும் படிப்பேன். சமீபத்தில் தல்ஸ்தோயின் War and Peace நாவலை இன்னொரு தடவை ஆரம்பத்திலிருந்து ஆற அமரப் படித்து முடித்தேன். இது ஒரு தடவை படித்துவிட்டு மூடிவைக்கும் சமாச்சாரம் அல்ல. புனைவு படிப்பதுதான் என்னுடைய மூளைக்கு வேலை கொடுக்கிறது. என்னை ஆசுவாசப்படுத்த, மனநிலையைத் தளரவைக்க மட்டும் நான் non-fiction படிக்கிறேன்.
ஆதிகாலத்திலிருந்து இன்றுவரை மனிதன் புனைவு இலக்கியத்தில்தானே நாட்டம் செலுத்தியிருக்கிறான். தலைமுறை தலைமுறையாகப் புனைவுக் கதைகள்தானே சொல்லியிருக்கிறான். பழம்பெரும் இதிகாசங்கள் எல்லாம் புனைவுதானே.
Barbara Tuchman என்ற எழுத்தாளரின் கட்டுரை இலக்கியம் எனக்குப் பிடிக்கும். அவர் முப்பது வருடங்களுக்கு முன் பிரபலமானவர்; இரண்டு புலிட்ஸர் பரிசுகள் பெற்றவர். இவருடைய Guns of August என்ற நூலை ரசித்துப் படித்திருக்கிறேன். ஆனால், தீவிரமான படிப்புக்கு நான் எப்போதும் நாடுவது புனைவு இலக்கியத்தைத்தான்.
காலத்தை மாற்றிப்போடுவது (time shift) உங்களுக்கு நிரம்பப் பிடிக்கும். அநேகக் கதைகளில் இந்த உத்தியைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள். உதாரணமாக, A view from Castle Rock மற்றும் Tricks. இன்னும் சொல்லப்போனால் Hateship, Friendship கூட இதுதான். இது உங்கள் தனிப்பட்ட உத்தியா?
நான் அதைப் பற்றி அதிகம் அலட்டிக்கொண்டது கிடையாது. வயது கூடி முதுமை வரும்போது இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் பார்க்கும் ஆசை வரும்போலும். அதனால் நிகழ்காலத்தையும் முடிந்துபோன காலத்தையும் பின்னிப் பின்னிச் சொல்லிக்கொண்டுவருவேன். அது ஒரு புதிர்த் தன்மையைக்கூடக் கொடுக்கிறது.
(இந்த இடத்தில் அலிஸ் மன்றோ 'நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?' என்றார். சரி என்றேன். 'என்னுடைய சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்ப்பது சிரமமாக இருக்குமா?' என்றார். 'இல்லையே, உங்கள் வசன அமைப்பு மொழிபெயர்ப்பதற்கு இலகுவானது. ஆனால், பிரச்சினை உங்கள் கதைகள் நீண்டுபோய் இருப்பதுதான். பத்திரிகைகளில் பிரசுரிக்க இயலாது. நான்கூட உங்கள் சிறுகதை ஒன்றை மொழிபெயர்த்திருக்கிறேன்' என்றேன்.
'தமிழ் ஒரு பழமையான மொழி அல்லவா?' 'ஆமாம், 2000 வருடங்களுக்கு மேலான செவ்விலக்கியங்கள் தமிழில் இருக்கின்றன. நீங்கள் படித்தால் அசந்துபோவீர்கள்.'
'அப்படியா? நான் நம்புகிறேன், நான் நம்புகிறேன்' என்றார்.)
Hateship, Friendship கதையை எடுத்துக்கொள்வோம். அந்த முடிவு உங்களுக்கு எப்படித் தோன்றியது?
அதை நான் யோசித்துப் பார்த்தபோது எனக்கே புரியவில்லை. கதை எங்கேயெல்லாமோ போய் இறுதியில் அந்த இளம்பெண் பள்ளிக்கூடப் பாடப் புத்தகத்தைத் தூக்கிவைத்து லத்தீன் மொழிபெயர்ப்பைச் செய்வதோடு முடிகிறது. கதையை எழுதிக்கொண்டு போனபோது திடீரென்று இந்த எண்ணம் எனக்குத் தோன்றியது. இப்பொழுது மறந்துவிட்டது. ஆனால், குறைந்தபட்சம் மூன்று விதமான முடிவுகளை நான் ஆராய்ந்திருப்பேன்.
ஒரு சிறுகதையை எழுதுமுன்பு நீங்கள் எவ்வளவு நேரம் ஆராய்ச்சியில் செலவிடுவீர்கள்? உதாரணத்துக்கு A view from Castle Rockஇல் நிறைய ஆராய்ச்சி...
அது என்னுடைய சொந்தக் கதை. என்னுடைய மூதாதையர் 1818ஆம் ஆண்டு ஸ்காட்லாந்திலிருந்து ஒரு பாய்மரக் கப்பலில் புறப்பட்டுக் கனடாவின் ஒரு பகுதியாகிய க்விபெக்குக்கு வந்து சேர்ந்தார்கள். அந்தப் பயணம் முடிவுக்குவர ஆறு வாரங்கள் எடுத்துக்கொண்டது. என் மூதாதையர் வறியவர்கள்; யாருமே திரும்பிப் பார்க்காத சாதாரண மனிதர்கள். எனக்கு அதிர்ஷ்டம் இருந்தது. என்னவென்றால் அந்தக் கப்பலில் பிரயாணம் செய்த 17 வயது இளம் வாலிபன் ஒருவன் ஓர் அருமையான நாட்குறிப்பைப் பயணம் முழுக்க எழுதிவந்தான். அந்த டயரி விலைமதிக்க முடியாத பரம்பரைச் சொத்து. அது என்னிடம் இருக்கிறது. ஆகவே நான் அந்தக் கதையில் எழுதியது எல்லாமே உண்மைதான்.
ஆராய்ச்சி ஒன்றுமே செய்யவில்லையா?
சிறிது செய்ய வேண்டியிருந்தது. எப்படியான கப்பல் அது, எந்தப் பாதையைத் தெரிவுசெய்து அவர்கள் புறப்பட்டார்கள் என்பதற்கெல்லாம் ஆராய்ச்சி தேவைப்பட்டது. ஆனால் கப்பலில் நடக்கும் நடனமும் இன்னும் சில சம்பவங்களும் கற்பனையில் உதித்தவை. எனக்கு இன்னொரு அதிர்ஷ்டமும் கிட்டியது. அந்தக் காலத்தில் ஸ்காட்லாந்தில் வாழ்ந்த ஜேம்ஸ் என்ற நாவலாசிரியர் எழுதிய எழுத்துக்களிலிருந்தும் சில தகவல்களை என்னால் பெற்றுக்கொள்ள முடிந்தது.
அந்தக் குழந்தையின் சாவு?
ஓ, அதைச் சொல்ல மறந்துவிட்டேன். நான் சமீபத்தில் அந்தக் குழந்தை புதைக்கப்பட்ட மயானத்தைப் பார்வையிட நேரிட்டது. மிகக் கொடூரமான அந்தக் கப்பல் பயணத்தை முடித்த குழந்தை, கனடாவில் கால் பதித்த ஒரு மாதத்தில் இறந்துபோயிருக்கிறது. அந்தக் கல்லறையைப் பார்த்தபோதுதான் எனக்கு இதை ஒரு கதையாக்கலாம் என்று தோன்றியது. அதுதான் உருக்கமான இடம். கடைசியில் பார்த்தால் அந்தக் கதை முழுக்கக் குழந்தையின் சாவை நோக்கி நகர்ந்திருக்கிறது.
இதை எழுத வேண்டும் என்று முன்பே தோன்றவில்லையா?
இதுதான் எனக்கும் ஆச்சரியம். குழந்தையின் சாவைக் கண்டுபிடித்த பிறகுதான் அந்த எண்ணம் உருவானது. நீண்ட காலமாகப் பொக்கிஷம்போல அந்த டயரி என்னிடம் இருந்தாலும் இந்த எண்ணம் தோன்றவில்லை. நான் இள வயதாயிருந்தபோது என்னைப் பற்றியும் என்னைச் சுற்றியுள்ளவர்களைப் பற்றியுமே என்னால் நினைக்க முடிந்தது. வயது போகப் போக முன்னோரைப் பற்றி நினைக்கத் தோன்றுகிறது. இது எல்லோருக்கும் நடப்பதுதான். அப்பொழுதுதான் இதைக் கதையாக எழுதலாம் என்று பட்டது.
உங்களைப் பலர் செக்கோவுடன் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார்கள். அவர் ஆறு பக்கத்தில்கூட அருமையான சிறுகதை எழுதியிருக்கிறார். ஆனால் உங்கள் சிறுகதைகள் மிக நீண்டவை. 40 பக்கம், 60 பக்கம் என்று அவை நீண்டுகொண்டே இருக்கும். ஆறு பக்கத்தில் உங்களால் ஒரு சிறுகதை எழுத முடியாதா?
எனக்குச் சரிவராது. செக்கோவுடன் என்னை அவர்கள் ஒப்பிடுகிறார்கள் என்றால் அவர் சிறுகதைகளாக எழுதிக் குவித்தவர். நானும் வாழ்நாள் முழுக்கச் சிறுகதைகளை மட்டுமே எழுதிவருகிறேன். அந்தக் காரணமாக இருக்கலாம். ஆனால், அவரைப் போல் சிறுகதை எழுதுவது என்னால் முடியாது. என்னுடைய சிறுகதை, நாவல் வடிவத்தை நோக்கி நகர்வது. எனக்குப் பின்னணி முழுக்கச் சொல்ல வேண்டும்; மூலை முடுக்கிலிருந்து எல்லாம் விஷயத்தைக் கூட்டி எடுக்க வேண்டும். என் பாதை வேறு. எனக்கு இதுதான் சரிவருகிறது.
இந்த வருடம் நீங்கள் கில்லெர் பரிசுக் குழுவில் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறீணர்கள். போன வருடம் நீங்கள் விழாவுக்கே வரவில்லை. ஏன் இதை ஒப்புக்கொண்டீர்கள்? உங்களுக்கு எங்கேயிருந்து நேரம் கிடைக்கும்?
இந்தக் கோடை காலம் முழுவதையும் நான் இதற்காக ஒதுக்கிவைத்துவிட்டேன். எழுத்தாளருக்கு ஒரு கடமையும் இருக்கிறது. இதுவே என் வாழ்நாளில் இப்படியான ஒரு சேவை செய்வதற்கு எனக்குக் கிடைத்த கடைசி வாய்ப்பு. நான் 38 புத்தகங்களைப் படித்து முடித்து விட்டேன்.
முன் அட்டையிலிருந்து கடைசி அட்டைவரை படித்தீர்களா?
நிச்சயமாக. படிக்க வேண்டும். மிகச் சாதாரணமாகத் தொடங்கும் நாவல் மூன்றாவது அத்தியாயத்தில் வேகம் பிடித்து உன்னதமாக மாறலாம். அதில் நான் கற்றுக்கொள்வதற்கும் நிறைய இருக்கிறது.
நீங்கள் கொடுத்த நேரம் முடிந்துவிட்டது. ஆனால் நான் சொல்வதற்கு ஒன்றிருக்கிறது, சொல்லலாமா?
தாராளமாக.
நான் உங்களைப் பற்றி ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதி வெளியிட்டிருக்கிறேன். இரண்டு வருடங்களாக நான் எடுத்த முயற்சிகள், உங்கள் அதிகாலைத் தொலைபேசி, நீங்கள் சுற்றுலா போனது, செவ்வி அப்படியே தள்ளிப்போனது இதையெல்லாம் பற்றி எழுதியிருக்கிறேன்.
இதில் என்ன சுவாரஸ்யம்?
நான் எழுதிய கட்டுரைக்கு 'ஆயிரம் பொன்' என்று தலைப்பு கொடுத்திருந்தேன். 'யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்' என்று ஒரு பழமொழி எங்கள் நாட்டில் வழங்குகிறது. அதுபோல உங்களைச் சந்தித்தால் எனக்கு ஒரு கட்டுரை லாபம், சந்திக்காவிட்டாலும் ஒரு கட்டுரை என்ற மாதிரிக் கூறியிருந்தேன்.
அவர் கல்லென்று சிரித்தார். 'அப்ப நான் ஒரு செத்த யானை.'
'இல்லை. இல்லை. நீங்கள் உயிருடன் இருக்கும் யானை. சிரிக்கும் யானை.'
என்னிடம் இன்னும் பல கேள்விகள் இருந்தன. அதிலே முக்கியமான ஒரு கேள்வியைக் கேட்பதற்குள் நேரம் முடிந்துவிட்டது. அந்தக் கேள்வி இதுதான்.
'உங்களுடைய சிறுகதைகளில் எனக்கு மிகவும் பிடித்தது Tricks. ஒரு சிறு சம்பவம் அந்தக் கதையில் வரும் இளம் பெண்ணின் வாழ்க்கையை அடியோடு மாற்றிவிடுகிறது. அதுபோலவே உங்கள் வாழ்க்கையிலும் 19ஆம் வயதில் ஒரு சம்பவம் நடக்கிறது. மாணவன் ஒருவன் கடிக்கும்போது தெறித்து விழுந்த இனிப்புத் துண்டை எடுத்து நீங்கள் சாப்பிட்டீர்கள். அந்தக் கணமே காதல் வயப்பட்டு, படிப்பைத் துறந்து, அந்த மாணவனை மணமுடித்து 22 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்து பிறகு மணவிலக்குப் பெற்றுக்கொண்டீர்கள். எப்போதாவது அதை நினைத்துத் துக்கப்பட்டதுண்டா?'
அவர் இதற்கு என்ன பதில் சொல்லியிருப்பார்? தெரியவில்லை. காத்திராப்பிரகாரமாக மீண்டும் ஒரு முறை அவர் எங்காவது ஒரு கூட்டத்தில் என்னிடம் சிக்கக்கூடும். 'அப்போது பார்த்துக்கொள்ளலாம்' என்று நினைத்துக்கொண்டேன்.

மோடி வரும் முன்னே லேடி செல்லும் பின்னே


1. ஆண்டி மடம் டூ ஜெயங்கொண்டம் ல ஆனந்தவாடி னு ஒரு ஊரு.ஆனந்திவாடி அல்லது ஆனந்திவாயாடி தான் மருவி அப்டி ஆகி இருக்குமோ?


==================


2 காதலி உனக்கு அல்வா குடுத்தா விட்டுத் தள்ளு அல்லது தள்ளி விட்டுடு # ஊட்டி தொட்டபெட்டா சிந்தனைகள்்



====================


3  தொட்டபெட்டாவில் காதலி = டியர்.எங்க வீட்ல நம்ம காதலுக்கு ஒத்துக்கலை.அடுத்த ஜென்மத்துல தான் நாம சேரமுடியும் போல.


 ம் .சரி போய்ட்டு வா குட்பை


===================


4  நெத்தில திருநீறு வைச்சவங்கள்ளாம் நல்லவங்களும் இல்ல.வகிடு மத்தில குங்குமம் வெச்சவங்க எல்லாம் பொல்லாதவங்களும் இல்ல


===================


5 போக்குவரத்து விதிகளை நீங்கள் மதிப்பவர் எனில் உங்கள் கள்ளக்காதலியை இடது உள்ளங்கையை கோர்த்து இடது பக்கமாக ஓரங்கட்டேய் # கீப் லெப்ட்


=====================


6 ஹனி ஐ ஸ்ரங்க் த கிட்ஸ் ரீமேக் ல நமீதா நடிச்சாக்கூட பெருசாதான் தெரிவார் போல


================


7 எல்லோர் மனதிலும் ஒரு காதல் உண்டு.ஆனால் எல்லோர் அருகிலும் அவரவர் காதலி இருப்பதில்லை.பெரும்பாலான பயணங்கள் காதலியை சந்திப்பதில்


====================


8 எப்போதும் அடிக்கற கை உன்னுது.அணைக்கிற கை என்னுது.அடிக்கிற கைதான் அணைக்கும் என்பது பொய்யது!



==================


9  வாடா மல்லிக்கலர்ல பொண்ணு லிப்ஸ்டிக் போட்டிருந்தா மரியாதை இல்லாம எல்லாரையும் வாடா போடான்னு கூப்பிடுமாம் -சென்னிமலைச்சித்தர் அருள் வாக்கு


==========


10  ஸ்பிரிங்க் ரோல்னா ஸ்பிரிங்க் கை மாவுல நனைச்சு எண்ணெய்ல போடுவதா? வயித்துக்கு ஒண்ணும் ஆகாதா?


=================


11 பொண்டாட்டி கண்ணை மூடிட்டா ( தூங்கற மாதிரி நடிப்பு ) பூலோகம் இருண்டுடும்னு நினைப்பு, நாங்களே எல்லா வேலையும் டன் -டான்



======================


12  முதல்வன் ல் ரஜினி நடித்திருந்தால் ரஜினியின் மார்க்கெட் வேல்யூ ,அரசியல் இமேஜ் ,தனிப்பட்ட செல்வாக்கு எல்லாம் எங்கேயோ போய் இருக்கும்



====================


13 700 கோடியில் உருவாகிறது பேஸ்புக் டவுன்!!! # அப்படியே  ஃபேஸ்புக் வில்லேஜ்ம் ஓப்பன் பண்ணுங்க






======================




14  ஆந்திரத்தைப் பிரிப்பதை எதிர்த்து சந்திரபாபு நாயுடு டெல்லியில் திங்கள்கிழமை  உண்ணாவிரதம் #  “திங்க”க்கிழமை திங்காத கிழமை ஆகப்போகுதா?




====================




15 குஷ்பூவோட  உடன் பிறப்பு ஆரம்பிச்சதுதான்  குஸ்கான்னு  யாரும் இன்னும் கிளம்பலையா?



=====================


16 கே பாக்யராஜ்  டூ லட்சுமிமேனன் - ஏம்மா நான் கூடத்தேவலை , ஓடி ஆடி எக்சசைஸ் செஞ்சேன், நீ ஏம்மா நின்ன இடத்தை விட்டு அசையாம ஆடறே?




======================




17  பெண்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநியாயம்,கல்யாணம் ஆன உடனே அவங்க புகுந்த வீட்டை மதிப்பாங்கனு எதிர்பார்க்கறது தான்.






======================


18 வாழை மரம் போல பெண்ணின் குடும்பத்துக்கு, பெண்ணுக்கு உழைப்போம்  , கருவேலமரம் போல்  அவர்கள் இருப்பார்கள்






=================




19 அரசியலில் இருந்து அடுத்த ஆண்டு ஓய்வு : சோனியா # மோடி வரும் முன்னே லேடி செல்லும் பின்னே


======================


20 கூகுள் ல போய்த்தேடுனா எல்லாமே கிடைக்கும்னு தெரிஞ்சும் லிங்க் குடுங்க என கேட்பவனே தமிழன்


====================

Sunday, October 13, 2013

ஷாலினி அஜித்தும் , பிரியா சிவா வும்,பேட்மிட்டன் தோழிகளா? -வணக்கம் சென்னை சிவா பேட்டி

'அஜித் சொன்னா நடக்கும்!' - சிவா பேட்டி



பத்தாவது படமான 'வணக்கம் சென்னை' வெளியான உற்சாகத்தில் இருக்கிறார் சிவா. அதனாலேயே தனது காய்ச்சலையும் பொருட்படுத்தாமல் பேசத் தொடங்கினார்.


'சென்னை -28', 'வணக்கம் சென்னை' இந்த சென்னை உங்களை விடாது போலிருக்கே?


“இந்தப் பேர் பொருத்தமே ரொம்ப சந்தோஷத்தை கொடுக்குது. எல்லாருக்கும் இப்படி அமையுமான்னு தெரியலை. எனக்கு வாழ்க்கையையும் நிறைய நண்பர்களையும் கொடுத்தது இந்த நகரம்தான். எனக்குப் பிடித்த இந்த ஊரின் பெயர் என் படங்களின் தலைப்பாக வருவதில் ரொம்ப சந்தோஷம்.”


தமிழ்ப்படம் மாதிரியான படங்களை தொடர்வீங்களா?


“அந்த மாதிரி படங்களை அடிக்கடி பண்ணமுடியாது. இதுவரைக்கும் வந்த என் படங்களின் பார்முலாவிலிருந்து மாறி புதுவிதமான முயற்சிகளில் இனி படம் பண்ணப் போகிறேன்.”



சென்னை 28, சரோஜா குழு நண்பர்கள் எல்லாம் அடிக்கடி சந்தித்துக்கொள்வீங்களா?


“சந்தோஷமான, எதாவது பிரச்சினையான நேரங்கள்ல எல்லோரும் கண்டிப்பா ஒண்ணா இருப்போம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையில் இப்போ பிஸியாயிட்டாங்க. வெங்கட்பிரபு, ஜெய் எல்லாரையும் பார்க்கமுடியலைன்னாலும் அப்பப்போ போன் பண்ணி பேசிடுவோம். எல்லோரும் சேர்ந்து திரும்பவும் படம் பண்ணணும்னு ஆசையா இருக்கு. பார்ப்போம்”



உங்க மனைவி பிரியாவும், ஷாலினி அஜித்தும் பேட்மிட்டன் தோழிகளாமே?


“ஆமாம். இப்பவும் ரெண்டு பேரும் அவ்ளோ ஆர்வமாக விளையாட்டுல கவனம் செலுத்துறாங்க. அஜித்தும் என்னை அவரோட சகோதரராதான் எங்கேயும் அறிமுகப்படுத்துவார். நான் நல்லா வளரணும்னு நினைக்கிற மனிதர் அவர். சென்னை 28 படத்தை முதல் நாளே பார்த்துட்டு வாழ்த்தினார். இப்போ, வணக்கம் சென்னை பாட்டு கேட்டுட்டு.. 'இந்த படம் உனக்கு புது கலர் கொடுக்கும். இனி நல்லா வருவே'னு பாராட்டினார். அவர் சொன்னா நடக்கும்.


கிருத்திகா உதயநிதி, ஜஸ்வர்யா தனுஷ், நடிகர் விஷ்ணு மனைவி ரஜினி இப்படி பலரும் படம் இயக்கத் தொடங்கிட்டாங்களே? உங்க மனைவிவையும் எதிர்பார்க்கலாமா?



“அவங்க ஆர்வம் எல்லாம் பேட்மிட்டன்ல மட்டும்தான்.”


கிருத்திகா உதயநிதியின் முதல் படம் இது. எப்படி பண்ணியிருக்காங்க?


“கதை சொல்லும்போதே கேட்க புதுசா இருந்துச்சி. படத்தில் எமோஷனல் பகுதி எல்லாம் ரொம்பவே அழகா நகர்த்தி யிருக்காங்க. விஸ்காம் படிச்சுட்டு சினிமால எவ்வளவு ஆர்வமா இருந்திருக்காங்கனு படப்பிடிப்பில் தெரிந்துகொள்ள முடிந்தது.”



பாடலாசிரியர், பாடகர்னு உங்களுக்குள்ளே இருக்கிற மற்ற திறமைகளை மறைத்தே வைத்திருக்கீங்களே?


“படம் இயக்குறதுதான் எனக்கு ரொம்ப இஷ்டம். அது சரியான நேரத்தில் வெளிப்படும். 'வா' படத்தின் ஷூட்டிங்ல திடீர்னு ஒரு பாட்டு தேவைப்பட்டுது. அதுதான் அப்போ எழுதினேன். ரேடியோ சேனலில் வேலைப்பார்க்கும்போது நிறைய பாட்டு எழுதியிருக்கேன். நேரம் கிடைக்கும்போது எல்லாமும் செய்வோம்! கடவுள் இருக்கார். நம்பிக்கையும் இருக்கு!”


thanx - the tamil hindu


'வணக்கம் சென்னை' படத்திற்கு வரி விலக்கு கிடையாது என்று தமிழக அரசு அறிவிப்பு.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த், சந்தானம் மற்றும் பலர் நடித்த படம் 'வணக்கம் சென்னை'. உதயநிதி ஸ்டாலின் இப்படத்தினை தயாரித்திருந்தார்.
படத்தினைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'U' சான்றிதழ் அளித்திருந்தார்கள். அதற்கு பிறகு வரி விலக்கிற்கு தமிழக அரசிற்கு படம் திரையிடப்பட்டது. ஆனால் படத்திற்கு வரிவிலக்கு கிடைக்கவில்லை.
ரெட் ஜெயண்ட் நிறுவனம் வரி விலக்கு இல்லாவிட்டாலும் படம் வெளியாகும் என்று அறிவித்து படத்தினையும் வெளியிட்டுவிட்டார்கள்.
இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், “'வணக்கம் சென்னை' படத்திற்கு எதிர்பார்த்தது போலவே வரிவிலக்கு கிடைக்கவில்லை. வரிவிலக்கு கொடுக்கலாம் என்று கையெழுத்திட்ட அதிகாரியை பணியிட மாற்றம் செய்துவிட்டார்கள். ரெட் ஜெயண்ட் நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன். “ என்று ட்விட்டியுள்ளார்.

சந்தானம் காமெடி டயலாக்ஸ் @ வணக்கம் சென்னை

1.  டேய் , நீ  மாட்டுக்கே  இப்படி பயப்படறியே , சென்னை  போனா  எப்படி பயப்படுவியோ ? 

 பயப்பட மாட்டேன் , ஏன்னா நான் பஸ் ஏறி  சென்னை போயிடுவேன் , ஆனா  மாடு பஸ் ஏறி சென்னை வந்துடாதே ? 


----------------------------


2 ஹவுஸ்  ஓனர் சொல்ற கண்டிஷன்ஸ் எல்லாம் நல்லா கேட்டுக்குங்க  சுவத்தில ஆணி அடிக்கக்கூடாது , ஃபேன் ல  தூக்கு போட்டு சாவக்கூடாது , பால்கனி ஜன்னல்வழியா  கீழே  குதிச்சுத்தற்கொலை எல்லாம் செஞ்சுக்கக்கூடாது  , கேஸ் சிலிண்டர் ஓப்பன் பண்ணி விட்டு தீக்குளிச்சுக்கக்கூடாது


------------------


3  அவ அஞ்சாங்கிளாஸ்ல  இருந்து என்னை லவ் பண்றாளாம் , நீ அவளை மூணாங்கிளாஸ்ல  இருந்துதானே லவ் பண்றே?  டேக் இட் 


 ஹாய் , நீயும் அஞ்சு ,ம் ஃநானும்  அஞ்சு , 2 பேரும் சேர்ந்தா  பத்து , என்ன சொல்றே? 


 பளார் . எண்ணிப்பார்த்துக்கோ 15  இருக்கும்  


====================


4    இது என் வீடு   புரியுதா? 


 ம்க்கும் ,  வீட்டு பாத்ரூம் ல 2  ஜன்னல்  இருக்கு, அது  கூட உனக்குத்தெரியல, இது உன் வீடா?


===================


5   இந்தியாவுக்கு நான்  எதுக்கு வந்தேன் தெரியுமா? 


 என்  உயிரை வாங்க   



========================


6  இதெல்லாம் நீ ஸ்கூல் ல  படிக்கும்போதே  சொல்லித்தர்லையா? 


 ஐ திங்க் ஐ ஆம் சஃப்ஃபரிங்க் ஃப்ரம் ஃபீவர்  தட் டைம் , ஹி ஹி 


===================


7  ஆர்த்தி , ஏம்மா , நீ என்ன ஓணத்துக்கு சிங்காரிச்ச  யானை மாதிரி  இருக்கே? 



=========================


8   லவ்   சொல்லீட்டா வரும் ?



====================


9  நான்  லவ் பண்றது அவளுக்கே  தெரியாதுடா  .


 அதை  விடு , அவ அப்பாவுக்குத்தெரியுமா? 



=====================


10  கையிலுள்ள  மீனும்  , சொல்லாத காதலும் ஒண்னு . சீக்கிரமே கையை விட்டு நழுவிடும்



=====================


11  இன்னுமா இந்த பூட்டை நம்பறே?  அது எப்படி எல்லா  பூட்டுக்காரங்களும்  இன்னும்  முட்டாளாவே இருக்காங்க ? 



====================


12  நீ எல்லாம்  செருப்பு தொலைஞ்சாலே கண்டு பிடிப்[பது கஷ்டம் , எப்படி என்னைக்கண்டு பிடிச்சே? 


=================


13  ஏர்ப்போர்ட்டுக்கு ஏன் போனே? 


 ஏரோப்ளான் வாங்க, கேட்கறான் பாரு கேள்வி 


======================


14 கடப்பாக்கல்லு மாதிரி  இருந்துட்டு  கரீனா கபூர் கேட்குதா? 


================


15   உன்  ஆள்  அஞ்சலிக்காக  எனக்கு  இறுதி அஞ்சலி செலுத்திடாதே 



====================


16  உனக்கும்  , அவளுக்கும்  ஏணி வெச்சாமட்டும்  இல்லை , ஹெலிகாப்டர் வெச்சாலும் எட்டாது 


================


17  ஒரு பொண்ணை எத்தனைபேர் வேணாலும் லவ்  பண்ணலாம் , ஆனா அவ யாரை லவ் பண்றா?ங்கறதுதான்  முக்கியம் 


====================


18   பாடுபடாம பலாச்சுளை கிடைக்காது

================



 19   பேய்ப்படத்துக்கு தியேட்டர்ல எத்தனை லவ் ஜோடிங்க பார்த்தியா? பேய் வந்தா பயத்துல கட்டிப்பிடிச்சுக்கலாம்.எல்லாரும் பேய்க்காகத்தான் வெயிட்டிங்


==================


20   எவ்ளவ் காஸ்ட்லி கேமராவா இருந்தாலும் லவ் FEELING கை படம் பிடிச்சுட முடியாது


====================


21  நீ சொன்ன மாதிரி அவ 1ம் அவ்ளவ் குண்டு  இல்லையே?


====================



22  உன் பொண்டாட்டிக்குப்பக்கத்துல அர்னால்டே நின்னாலும் அனிரூத் மாதிரி தான் தெரியும்


===========================


23 ஒருத்தனைப்பார்த்ததுமே அவன் நல்லவனா? கெட்டவனா?னு பொண்ணுங்க கண்டுபிடிச்சுடுவாங்க.அவங்க அவ்வளவு ஷார்ப் 


--------------------------------



24   எப் ஐ ஆர் = FEMALE INFORMATION REPORT ,அதாவது பொண்ணுங்க சொல்றதைத்தான் போலீஸ் நம்பும் 


================================

அறிவுக்கொழுந்தியா

1. நீண்ட இடைவெளிக்குப்பின் நீ சின்ன"தாய்"்ப்புன்னகைத்"தாய்!'


===============


2 டேமேஜரைக்கடுப்படிக்க எளிய வழி அவரை விட நீட்டாக டிரஸ் பண்ணிட்டு ஆபீஸ் போவதே"


=================


3 நீ செய்யும் அலும்பை சகித்துக்கொள்ள கடுமையான சகிப்புத்தன்மை ,பொறுமை தேவைப்படுகிறது


================


4 தினமும் காலையில் நீ ஸ்கூட்டி எடுத்து ஊர் சுற்றுகிறாயே! ஒரு நாளாவது வீட்டை ,வாசலை கூட்டிச்சென்றாயா?


===============


5 எல்லாரும் ஹேவ் எ குட் டே தான் சொல்லனுமா? ஹேவ் எ மில்க் பிக்கீஸ் பிரிட்டானியா டே,டைகர் பிஸ்கெட் டே சொல்லக்கூடாதா?


================


6 நம்மிடம் பேசும்போது நமக்கு ஆதரவாகவும் ,எம் டி யிடம் பேசும்போது நம்மைப்பற்றி அவதூறாகவும் போட்டுக்குடுக்கும் பச்சோந்தி தான் டேமேஜர் என்பவர்


==================


7 நேர்படப்பேசுன்னு காதலி சொன்னா இதுதான் சாக்குன்னு மேல உரசிட்டே பேசனும்


=================


8 நேத்து இன்ட்டர்வ்யூக்கு ஒரு மேரீடு லேடி தன் புருசனோட வந்திருந்தது.கண்காணிப்பாம்.ரிஜக்ட்டட்


=================


9  ஒரு பொண்ணு தன் அம்மாவோட வந்திருந்தது.டேமேஜர் 20,நிமிசம் பேசிட்டிருந்தார் # பொண்ணை விட மம்மி கும் மி


=================


10 ஒரு பொண்ணு எம் ஸி ஏ 92% மார்க்.டேமேஜர் ரிஜக்ட்டட் ஹெர் . # அவரே 76% தானாம்


=================


11  டெய்லி மெஸ் ல சாப்ட்டா மெஸ்மரிஸ் வாய்ஸ் வந்துடுமா?


=====================


12  அன்பே! என் வாழ்வின் ஆதாரம் நீ! ஆதார் அடையாள அட்டை உன் தங்கை.வேணும்னா வெச்சுக்கலாம்.கட்டாயம் இல்லை

=================


13  காதலி உங்களை மறக்காம 24 மணி நேரமும் உங்களையே நினைச்சுட்டு இருக்க குறுக்கு வழி - ஒரு லட்சமாவது கடன் வாங்கவும்


=================

 14  ரசிகர்கள் போலீசில் புகார் - நய்யாண்டியில் நஸ்ரியா சீன் காணவில்லை


===============



15 சச்சின் TEN டுல்கர் ரிட்டயர் ஆன தேதி பாருங்க. 10 10 2013


=================


16 ஆழம் தெரியாமல் கால் விட்டாலும் தப்பிக்கலாம்.ஈழம் பற்றித்தெரியாமல்் கைக்கு வாக்களித்தால் தப்பிக்கவே முடியாது


================


17 டோனி - பினிஷிங் டச் நான் தான் குடுப்பேன் னு சொன்னேனே.ஏன் வழி விடலை?



 யுவராஜ் - ஓ.என் கிட்டே சொன்னீங்ளா? வேற யார்ட்டயோ செல்லுல பேசறதா திங்க்


=================


18 நீங்க எடுக்கற லீவ் எல்லாம் வெள்ளிக்கிழமையாவே இருக்கே? ஆன்மீகப்ரியரா?னு டேமேஜர் கேட்காரு.ஹய்யோ அய்யோ

====================

19 மச்சினி ஒரு புத்திசாலிப்பொண்ணு = அறிவுக்கொழுந்தியா # கற்போம் தினம் ஒரு புது தமிழ்ச்சொல்



=================

20 நய்யாண்டில நஸ்ரியா இடுப்பு உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவா தெரியுதாம்.இதுக்குத்தான் இத்தனை பில்டப்பா? # அய்யய்யோ பாத்துட்டேன்



=========================