Thursday, August 15, 2013

ஆதலால் காதல் செய்வீர் - சினிமா விமர்சனம்

 

அமரர்  எழுத்தாளர்  சாவி  எடிட்டோரியல் மீட்டிங்கில் அடிக்கடி சொல்வது போல் ஒரு நல்ல தொடர்கதை என்பது படிக்கும்  வாசகனை  இன்னும் சில வாரம் வராதா என ஏங்க வைக்கனும் , அடடா , அதுக்குள்ளே  முடிஞ்சிடுச்சா? எனகேட்க வைக்கனும் . அதே போல்   ஒரு நல்ல சினிமா என்பது   பார்ப்பவர் மனதில், அதுக்குள்ளே முடிஞ்சிடுச்சா ? என  ஆச்சரியப்பட வைக்கனும் . அப்படி  ஆச்சரியப்படுத்தியபடம்  தான்  இது 


ஹீரோ ஒரு சுமாரு  மூஞ்சிக்குமாரு . ஹீரோயின்   ஒரு  மாநிற   தேவதை ஃபிகரு . 2 பேரும்  லவ்வறாங்க.  வாலிப வயசுல எல்லா லவ்வர்சும் பண்ற தப்பை பண்றாங்க .  ஹீரோ மேல  நேசமா இருந்த   ஃபிகரு   மாசமா ஆகிடுது . வீட்டுக்கு மேட்டர்  தெரிஞ்சு பெரிய பஞ்சாயத்து ஆகுது .  அதுக்குப்பின் என்ன ஆகுது என்பதே கதை . தர்மபுரி இளவரசன்  , சேரன் மகள் காதல் மேட்டர் பர பரப்பா பேசப்படும் கால கட்டத்தில்  இந்த மாதிரி ஒரு படம் வர்றது பெரிய பிளஸ்..   


ஹீரோ சந்தோஷ்  . இவர்  புது முகம் என்ற  எண்ணமே  எழாதவண்ணம்    ஆங்காங்கே  அமர்க்களப்படுத்தி ஆங்காங்கே படுத்தி இருக்கிறார். ஓக்கே . பின் பாதியில்   அவர் முகம்  வில்லன்மாதிரி ஆகி விடுவது   கேரக்டர் மற்றும்  திரைக்கதை அமைப்பால் . வெல்டன்  இயக்குநர் 


ஹீரோயின்  மனீஷா யாதவ் . . வழக்கு எண் ஹீரோயின். நந்திதாதாஸ் -ன் ஸ்கின் டோன்  , சிம்ரனின்  உதடு சாயல் , சோனியா அகர்வாலின்  இடை  சாயல் எல்லாம்  கலந்த  கலவை  ( முக சாயல்மட்டும்  பார்த்தா போதாதா? எல்லா சாயலும் பார்க்கனுமா? ராஸ்கல்ஸ் ) . காதல் வயப்படுவது ,  வீட்டில்  திருட்டுத்தனமாய்  ஃபோன் செய்வது , மெசேஜ் அனுப்பவது , வாமிட் எடுக்கும்போது  அம்மாவிடம் பம்முவது  , கர்ப்பம் கலைக்க மாட்டேன் என உறுதியாய் நிற்பது என  இவர் சிக்சர் அடிக்கும்  காட்சிகள்  18 . சபாஷ்  மனீஷா  .






 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்  


1. நீண்ட  இடைவெளிக்குப்பின்  ஜஸ்ட்   110  நிமிடங்கள்  மட்டுமே ஒடக்கூடிய   ஒரு தமிழ்வெற்றிப்படம் தந்தது  .


2. எங்கே செல்வராகவன் தான் முன் பாதியை  இயக்கிக்கொடுத்தாரோ    என  எண்ணும்  வகையில்  முன் பாதி காதல் எபிசோடில்   கலக்கியது , மிக இயல்பான காதல்  காட்சிகள்  ரசிக்க வைத்தது 



3. ஓப்பனிங்க்  சாங்க்  கில் பாலே டேன்ஸ் பாணியில்   டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் கலக்கல்  ரகம் . பேக் டிராப்பும்   அருமை . பின்னணி இசையும்


4,. பர்த் டே விஷ் பண்ண வரும்   தோழிகளில் அந்த  ஸ்கை  ப்ளூ  டி சர்ட்  தோழி   செம டைட் டிரஸில் வந்து ஆடியன்சை    5 நிமிஷம் டைட் ஆக்கியது   


5.  சன்  மியூசிக்கில்  பர்த்  டே விஷ் பண்ணிய பாய்  ஃபிரண்டை   அம்மாவுக்கு    நாயகி அறிமுகப்படுத்த   அதை பார்க்க த் தவற  விட்ட அம்மா  இன்னொரு டைம்  வராதா   என ஏக்கமா கேட்பது செம அப்பாவித்தன்ம்


6.  வாக்கிங்க்   போகும்   ஹீரோ  - ஹீரோயின்   லவ்  எக்ஸ்போசிற்குப்பின்  கோபித்து   செல்லும் இடத்தில்     தோழி மட்டும் விரைப்பாக  செல்ல  நாயகி   நாயகனை   ஏக்கத்துடன் பார்க்கும் காட்சி செம அப்ளாஸ் தியேட்டரில்  ( பார்த்து ப்பார்த்து  புளித்துப்போன காட்சி தான் என்றாலும்)


7.  ஹீரோவின்  குடும்பம் , ஹீரோயின் குடும்பம்  இரு தரப்பையும் மிக எதார்த்தமாய்  காட்டியது அழகு, .சினிமாத்தனம்  ஒரு சீனில்   கூட இல்லை  , குட்  .  பூர்ணிமா பாக்யராஜ்   நாயகனின் அம்மா வாக  வரும்  சில காட்சிகள் கூட குட் 




8.  தனிமை வாய்ப்பு கிடைக்கும்போது  வீட்டில்  கடலை போடும்  லவ் ஜோடி ஆண்ட்டி  வீட்டுக்கு வருவதாக அம்மா  ஃபோன் பண்ணியதும்   டக் என கொரியர் பாய் போல   லவ்வர்  மாறுவது  செம  



 9 மாமல்லபுரம்   கில்மா    ஹோட்டல் காட்சி   என்னதான்செல்வராகவன் -ன் 7ஜி ரெயின் போ   காலணி  உட்பட பல படங்களில் பார்த்திருந்தாலும்   செம கிக் 



10 . காதல் மேட்டர்    தெரிந்ததும் இரு தரப்பு பெற்றோருக்கு இடையே  நடக்கும் மீட்டிங்க்  விவாதங்கள்    செம  யதார்த்தம் 

11. அனைத்துக்கும்  சிகரம்  வைத்தாற்போன்ற   க்ளைமாக்ஸ் காட்சி , ஆடியன்ஸ்   செமகிளாப்ஸ் . லவ்வர்ஸ்பாட்டுக்கு   ஹேரே போச்சுன்னு  லவ் பண்ணி குழந்தை  பெத்து  அதை   அநாதையா விட்டுட்டுப்போய்டுவாங்க , அவங்கவங்க  வாழ்க்கைல   வேறவேற ஆள்  கூட செட்டில் ஆகிடுவாங்க  , அந்த  குழந்தையின் கதி? என கேட்டு ஒரு பாடல்  வைத்த இயக்குநரின்  தைரியத்துக்கு  ஒருஷொட்டு


12.  ஹீரோயின்  வாமிட் எடுக்கும் காட்சி , அப்போ அம்மா படும்  பதட்டம் , அப்பாவுக்கு  ஃபோன் பண்ணி வரவைச்சு    வீட்டுல் ஒரு இறுக்கமான சூழல் , பதட்டம் அப்போ வரும் பி ஜி எம் எல்லாம்  அருமை


13, போஸ்டர்  டிசைன் , விளம்பர  க்ளிப்புங்குகள் , மார்க்கெட்டிங்க் டெக்னில்  அருமை


14.   ஹீரோயின்  தோழியாக  வரும் சிடு சிடு முக  சில்பான்சி நடிப்பும் , ஹீரோவின் அக்காவாகவரும் ஃபிகரும்  வெரிகுட்  நடிப்பு


15.  யுவன்சங்கர்ராஜாவின் பின்னணி இசை  அருமை, பாடல்களில் 2பாட்டு ஆல்ரெடி ஹிட்டு , ஒவ்வொரு பாட்டு ஓப்பன் ஆகும்போதும்  வரும்  பிஜி எம்  நல்ல உத்தி



இயக்குநரிடம்  சில  கேள்விகள்



1. ஹீரோ  தோழிக்கு  ஹீரோயின் லவ் பிடிக்கலை . அவங்க   2 பேரும் பேசும்போது , எனக்கு கால் போட்டு  ஃபோனை  ஆன் ல  வெச்சிரு. நான்  உங்க   2 பேர் பேச்சையும்  கேட்கறேன் அப்டினு  ஹீரோ சொன்னபடி  ஹீரோயின்  கேட்கறா . ஆனா  அந்த  ஃபோனை  ஹேன்ட் பேக்கில் வைக்காம ஏன்  தோழியின்  கண்ணில் மானிட்டர்  தெரியும் படி  முன்னாலயே வைக்கனும் ? அட்லீஸ்ட் ஒரு புக்கில் மறைச்ச மாதிரி வெச்சிருக்கலாமே?


2.  ஹீரோயின் தோழி ஹீரோயினின் அம்மாவிடம் போட்டுக்குடுக்க நினைப்பவள்  இருவரையும்  பார்க்கில் பார்த்தப்பவே சொல்லி  இருக்கலாமே?   எதுக்கு   ஹீரோயின்  வீட்டுக்கு  வரும் வரை வெயிட்பண்ணனும்?  


3.  கலைக்க  ஹாஸ்பிடல்   போகும்  லவ்வர்ஸ்   அறிமுகம்  இல்லாத   ஹாஸ்பிடல்  தான் போறாங்க. ஆனா  எதுக்காக காதலனின்  நண்பனை  காதலியின் கணவனாக டாக்டரிடம்   நடிக்க வைக்கனும் ? இதுக்கு எந்தப்பெண்ணும்   ஒத்துக்க மாட்டாளே? 




4.  டாக்டரிடம்    போய் பேசும்   ஜோடிக்கப்பட்ட லவ் ஜோடி   முதல்லியே ரிகர்சல் பார்த்துக்க மாட்டாங்களா?  மேரேஜ் ஆகி  எத்தனை    வருசம் ஆச்சு என்ற எதிர்பார்க்கப்பட்ட   ஒரு  சாதா   கேள்விக்குக்கூட   இருவரும்  முன்னுக்குப்பின்  முரணான பதிலை  அளிப்பாங்க்ளா?  


5.  கருவைக்கலைக்க   ஹீரோவிடம்  பணமில்லை .  அக்கா விடம்  , நண்பர்களிடம்   கடன் கேட்கிறான் .  ஆனா ஹீரோவிடமே   புது பைக்  75, 000 ரூபா மதிப்புள்ளது  இருக்கு ,அதை ஏன்  அடமானமா வைக்கலை ? மூன்றில் ஒரு பங்கு காசு  கூடவா  கிடைக்காது?  அது பற்றி  ஹீரோயின்   ஏன் எந்தகேள்வியும் கேட்கலை  ? 


  6. ஹீரோயின்   கருவைக்கலைக்க    தோடு , மோதிரம் , செயின் என  3 பவுன்  கொண்டுவந்து  தர்றா.  ஒரு பவுன்  22,000 ரூபாய்க்கு விக்குது,  பழைய நகை என்பதால்  18,500  ரூபாய்க்குப்போகும்னு கணக்கு  வெச்சாலும் ஒண்ணே கால் அல்லது ஒன்றரை பவுன்போதுமே> 


7.   வீட்டுக்கு   லவ் மேட்டர்   தெரிஞ்சபின்னும் எப்ப்படி   ஹீரோயினால் சர்வசாதாரணமா   40  பவுன் நகையை வீட்டில்  இருந்து எடுத்துட்டு வர முடியுது ? இந்தக்கால பெற்றோர்கள்  உஷாரா  இருக்க மாட்டாங்களா?



8. லவ்வர்ஸ்  கில்மா  பண்றது தற்செயலா நடக்கலை, உணர்ச்சி வசப்பட்டு  திடீர்னு  நடக்கலை . 2பேரும்  பிளான் பண்ணி மகாபலிபுரம்  போய்  மேட்டர்முடிக்கலாம்னு பேசிட்டே தான் போறாங்க . பாதுகாப்பா   இருக்க 2 பேரும்  யோசிக்கவே இல்லையா?  அப்போ தான்  பாதுகாப்பா  இல்லைன்னா அதுக்குப்பின்  கூட   அதை கண்டுக்காம  இருப்பது எப்படி ?




9.  ஹீரோயின்   கர்ப்பமா  இருப்பது தெரிஞ்சதும் ஹீரோவின் அம்மா  ஹீரோவிடம்   அது ஒரு எவிடென்ஸ் ஆகி   சட்ட சிக்கல் வரும்  , பிரச்சனை ஆகும் , கலைச்சுடச்சொல்லுங்கறாங்க. .  கலைக்கும் முன்   டி என் ஏ  டெஸ்ட்  எடுத்து  ஆதாரம்  வெச்சுக்கிட்டாலும் மாட்டிக்குவாங்களே? 


10 . பொண்ணோட   லவ்  மேட்டர்  பிரச்சனை வரும்போது   பையன் வீட்டுக்குப்போகும்போது பாதிக்கப்பட்ட பொண்ணை கூட்டிட்டுப்போக மாட்டாங்களே?  எல்லாரும்  வேடிக்கை பார்ப்பாங்கன்னு  தெரியாதா?


 11.கதை  உணர்த்தும்  நீதி அழகு . ஆனால் அதை  சொல்லும்  விதத்தால்    ஆதலால் காதல் செய்யாதீர்  என்று தானே   டைட்டில்  இருக்கனும் ?



மனம் கவர்ந்த வசனங்கள்


1. பைக் வேணும்  பைக் வேணும் னு கேட்கறியே ,உனக்கு  முதல்ல பைக்  ஓட்டத்  தெரியுமா? பைக் பின்னால  உக்கார வெச்சு கூட்டிட்டு போவியா?


 படுக்க வெச்சுக்கூட கூட்டிட்டுப்போவேன்



2.  எவரெவர் பிகருக்கு எவரெவரோ அவரவர் பிகருக்கு அவரவரே




3. எப்பவும் ஏதாவது பிராப்ளம்ஸ் FACE பண்ணிட்டே இருப்பவன் தான் தலைவன்



4. தான் காதலிக்கும் ஆணுடன் பைக்கில் உலா போக எல்லா பொண்ணுங்களும் விரும்புவாங்க.அதனால பொண்ணை கரெக்ட் பண்ண நினைக்கறவங்க முதல்ல பைக் வாங்கனும்



5  .FACE TO FACE ,EYE TO EYE ,LIP TO LIP லவ்வை சொல்லிட்டா நல்லது.அதான் பொண்ணுங்களுக்குப்பிடிக்கும்



6.  டென்னிஸ் சம்பந்தமா என்ன டவுட்வேணாலும் கேளு.நான் சொல்லிடுவேன்.



ஓஹோ.நெட் ல எத்தனை ஓட்டை ?



7.லவ்வர்சை பிரிக்க நினைச்சா ஸ்ட்ராங் ஆகிடுவாங்க.அப்டியே விட்டா அவங்களுக்குள்ளே பிரச்சனை வந்து அவங்களா பிரிஞ்சுடுவாங்




8 லவ் பண்றப்ப சுத்தி இருக்கறவங்க எல்லாம் முட்டாளாத்தான் தெரிவாங்க.ஆனா ஏமாந்த பின் தான் நாம முட்டாள்னு தெரியும்



9. ஏய்.மகாபலிபுரம் போலாமா?



 ம் ஆனா லிமிட் தாண்டக்கூடாதுடா.



 ம்க்கும் ,நீ தாண்டாம இருந்தா சரிடி



. அடிங்



10. தப்பு பண்ற வயசுல வாய்ப்பைத்தவற விடாம ,மாட்டிக்காம தப்பு பண்ணுனா எதுவும் தப்பில்லை





11. FRESH பொண்ணுங்களை லவ் பண்ணனும்னு நான் நினைக்கலை.லவ் பெய்லியர் பொண்ணுங்கதான் என் டார்கெட்.இருட்டுல இருப்பாங்க.சின்ன வெளிச்சமா நாம  இருந்துட்டா போதும்



12. லவ்வை சொல்லலாம்னு கிட்டே போனாலே கை நடுங்குதுடா. இப்ப இதுக்கே இப்டி நடுங்குனா மத்த எல்லாத்துக்கும் இனி என்னடா பண்ணப்போறே



13. இந்தப்பசங்களை நம்பவே முடியாதுடி.நம்ப வெச்சு கழுத்தை அறுத்துடுவானுங்க




14. டேய்.மச்சி.உன் அக்காவுக்கு குழந்தை பிறந்திருக்காம்.நீ மாமா ஆகிட்டேடா.



கூடிய சீக்கிரம் அப்பாவே ஆகப்போறான்.அவன் ஆள் கர்ப்பம்



15. அப்போ எங்க கேங்க்ல நீ சேர்ந்ததே ஸ்வேதாவை கரெக்ட் பண்ணத்தானா?



16.  உனக்காக   உயிரை விடவும்  தயாரா  இருக்கேன்  , ஆனா  உன் ஃபேமிலிக்காக எல்லாம்   உயிரை  விட  முடியாது



17.  செத்தாலும்  பரவாயில்லை, இந்த  மாதிரி  ஒரு செல்ஃபிஷ்ஷோட   வாழமுடியாது


18.  என்னது? கருவைக்கலைக்க       25,000   ரூபாயா? ஜாஸ்தி


 உங்க  காலேஜ் அப்டிங்கறதால தான்ப்   இந்த   ரேட்.  வேறன்னா  ரேட் ஜாஸ்தி  , இப்போக்கூட உங்க காலேஜ்   பொண்ணுங்க  3 பேரு  கலைச்சுட்டுத்தான்  போனாங்க



19.  எனக்கு ஏன்  இந்த லவ் மேட்டர்   சொல்லலை?

 இது என்ன ஒண்டே மேட்சா?   எல்லாருக்கும்    அறிவுச்சுட்டு பண்ண



20 . நீ லவ் பண்ற  பொண்ணை  விட உன்னை லவ் பண்ற பொண்ணை....


 டேய் சும்மாநிறுத்து  இங்கே  என்னமோ  க்யூகட்டிட்டு பொண்ணுங்க    நிக்க ற   மாதிரி





21   தோளுக்கு மேல வளர்ந்துட்டா பர்மிஷன்   கேட்க இப்படி பம்மக்கூடாது  .  கேட்கும்   விதத்தில்   கேட்டா   எல்லாம் கிடைக்கும்



22  இவன்   6 மாசமா  உங்க பின்னாலயே வந்திருக்கான் , உங்களூக்கு தெரியாதா?

 நான் முன்னால போனப்ப அவன் பின்னால வந்தா  எப்படிங்க   தெரியும்?



23. சரி  , விடுங்க, ஃபாலோபண்ணத்தெரியாம   ஃபாலோவிட்டான் . லவ்விடுங்க

 சாரி ,   அண்ணா , நான்  அவர் ஃபிரண்டைத்தான் லவ்வறேன், நீங்க தான் சேர்த்து வைக்கனும்


24.,  நான்  4 மாசம் வெயிட் ;பண்ணட்டா?


 உங்க  ஜெனரேஷனுக்கு அவ்ளவ் பொறுமை கிடையாது டா, 2 மாசத்துல   பதில்  வர்லை ஆள் மாத்திட்டுப்போய்ட்டேஇருப்பாங்க


25,. என் லவ் பிரேக்கப் ஆகிடுச்சுடா


 அடப்பாவி , போன வாரம் தானே பிக்கப்பே பண்ணே?

 இப்பவெல்லாம் பிரேக் ஃபாஸ்ட் சாப்பிடற  மாதிரி    பிரேக்கப்பும் ஆகிடுச்சுடா






 






ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-   43



 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் -ஓக்கே


ரேட்டிங் =   3.25  / 5


சி பி கமெண்ட்- செல்வராகவன் பாணியில் சுசீந்தரன் -ன் ஆதலால் காதல் செய்வீர் -ஹைக்கூ -விகடன் மார்க் - 43 -  , ஏ பி  செண்ட்டரில் ஹிட் . காதலர்கள்  , பெற்றோர்கள் அனைவரும்  நிச்சயம் பார்க்க வேண்டிய படம் . ( சி  செண்ட்டரில்  சுமாராப்போய்டும்) ஈரோடு தேவி அபிராமியில்  படம் பார்த்தேன் .


a







ஆகஸ்ட் 15- சுதந்தர தின ஸ்பெஷல் - சினிமா- வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 15 8 2013 ) 4 படங்கள் முன்னோட்ட பார்வை

1.சுசீந்திரனின் ஆதலால் காதல் செய்வீர்!

suseenthirans next Aadhalal Kadhal Seiveer
வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, ராஜபாட்டை படங்களை இயக்கிய சுசீந்திரன், இப்போது ஆதலால் காதல் செய்வீர் என்ற புதியபடத்தை இயக்கி வருகிறார. 


இப்படத்தில் போக்கிரி தயாரிப்பாளர் ரமேஷ் மகன் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஹீரோயினாக வழக்கு எண் 18/9 பட நாயகி மனீஷா யாதவ் நடிக்கிறார். இந்தபடம் பற்றி டைரக்டர் சுசீந்திரன் சொல்லும்போது, என் தந்தை நல்லு பெயரில் தயாரிப்பு கம்பெனி தொடங்கியுள்ளேன். என் தம்பி சரவணனை தயாரிப்பாளராக ஆக்கியுள்ளேன்.


 ஒரு கல்லூரி பின்னணியில் நடக்கும் காதல் கதை. இது வரை சொல்லாத கதை அல்ல. ஆனால் நான் கொஞ்சம் புதிய முயற்சி எடுத்துள்ளேன். ஏற்கனவே குறுகிய பட்ஜெட், அதிக பட்ஜெட் என்று வொர்க் பண்ணிய அனுபவம் இருக்கு, எனவே சரியான திட்டமிடல் மூலம் சரியான முறையில் இப்படத்தை எடுத்து வருகிறேன் என்றார்.

கொலிவுட்டில் அறிமுக நாயகன் சந்தோஷ், மனிஷா இணைந்து நடித்துள்ள ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ளார்.
இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி, தன்னை மிகவும் பாதித்ததாக யுவன் ஷங்கர் ராஜா குறிப்பிட்டுள்ளார்.
நானும் சுசீந்திரனும் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படம் இது. சில காரணங்களால் நான் இந்தப்படத்தை தயாரிக்க முடியாமல் போனது.


இன்றைய தலைமுறை காதலர்கள் என்ன நினைப்பில் பயணிக்கிறாங்கன்னு திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் சுசீந்திரன்.


முதல் முறை காதல் வரும்போது எப்படி இருக்கும் அந்த அணுகுமுறையை இதில் எனது இசையின் மூலம் முயற்சித்துள்ளேன்.


இந்தப்படத்துல முக்கியமானது க்ளைமாக்ஸ். ஒரு அதிர்வை நிச்சயம் உண்டாக்கும் என்று யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

ஈரோடு  தேவி அபிராமி  , ஆனூர் -ல் ரிலீஸ் 

 
2. THE COLONY - Forced underground by the next ice age, a struggling outpost of survivors must fight to preserve humanity against a threat even more savage than nature.2.7.4 of 10. Saw this close to Oblivion and preferred Colony. Both are solid dystopian sci-fi, with this having the far more solid science behind it, which helps with the believability and immersion. The only other qualities they share involves isolation and some annoying narration by the lead character.

Colony has a strong horror aspect to it, including an answer to the question of what might be the middle-ground between human and zombie. There's very little tech involved, contrary to what those seeing Lawrence Fishburne in it might expect. The action, however, is almost entirely fight related, with some connected to the extreme climate conditions and the decaying nature of the cities they're using for shelter.

Outside of a forced end kill and gaps in how the enemy creatures manage to get to certain places, there are no horrible or weak scenes. Budget issues are more evident in undeveloped story elements than the FX.



Director:

Writers:

(screenplay), (additional writer), 4 more credits »

Stars:

, , |ஈரோட்டில் ரிலீஸ் இல்லை

 

3. once upon a time in mumbaai 2
இன்று  வெளியாக  இருக்கும்  “ ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மும்பை” ஹிந்திப்படத்தில் நாயகிகங்கணா ரன்வத்க்கு 12 வேடங்களாம்# டஜனாவதாரம்
Kangna''s 12 wigs cost Rs 20 lakh!
தாம்‌தூம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை கங்கனா ரனவத். அந்த படத்திற்கு பிறகு பெரிய அளவில் வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் மீண்டும் மும்பைக்கே சென்று விட்ட கங்கனா... இந்தி சினிமாவின் முன்னணி நாயகிகளில் ஒருவராக திகழ்கிறார். 
 அவர் ஒன்ஸ் அப்பான் ய டைம் இன் மும்பை என்ற படத்தில் கங்கனாவுக்கு 12 வித்தியாசமான வேடங்களாம். ஒவ்வொரு கெட்-அப்பையும் வித்தியாசப்படுத்தி காட்டுவதற்காக 12 விக்களை தயாரித்துள்ளனர் படக்குழுவினர். அனைத்து விக்களும் அட்டகாசமாக இருப்பதாக கூறும் கங்கனா, கண்டிப்பாக எனது 12 வேடங்களும் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த கெட்-அப்களுக்காக மட்டும் ரூ.20 லட்சத்திற்கும் அதிகமான பணம் செலவிட்டிருக்கின்றனர் என்பது கூடுதல் தகவல். 

 ஈரோடு சீனிமாசாவில்  ரிலிஸ்
 

4.  பாசமலர்- படம் புதிய தொழில் நுட்பத்தில் மீண்டும் வருகிறது. இப்படம் சிவாஜி கணேசன், சாவித்ரி அண்ணன், தங்கையாக நடிக்க 1961–ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. ஜெமினி கணேசனும் முக்கிய கேரக்டரில் நடித்து இருந்தார். பீம்சிங் இயக்கினார்.

இப்படத்தில் இடம்பெற்ற வாராயோ தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ என்ற பாடல் இப்போதும் திருமண வீடுகளில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. மலர்களை போல் தங்கை உறங்குகின்றாள், மயங்குகிறாள் ஒரு மாது, பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன், எங்களுக்கும் காலம் வரும், மலர்ந்தும் மலராது பாதிமலர் போல போன்ற இனிமையான பாடல்கள் இடம்பெற்று உள்ளன.

இப்பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதி இருந்தார். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்து இருந்தார். இது சிறந்த படத்துக்கான தேசிய விருதையும் பெற்றது. பாசமலர் படம் தற்போது நவீன தொழில் நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. டி.டி.எஸ். சவுண்ட் சிஸ்டம், ஆர்.டி.எக்ஸ், கலர் சினிமாஸ் கோப் என மெருகேற்றப்பட்டு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15–ந்தேதி வெற்றி சினி ஆர்ட்ஸ் சார்பில் கே.வி.பி. பூமிநாதன் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறார்.

ஈரோடு கிருஷ்ணா வில்  ரிலீஸ்

காதலி " படவா ராஸ்கல்" னு திட்டுனா இன்னா மீனிங்க் ?

Sriviji Vijaya added a new photo.


1. தலை யை கிண்டல் பண்ணவங்க எல்லாம் இப்போ தலை வா னு கூப்பிட வேண்டிய சூழல்.கிகி # அஜித்   விஜய்  ரசிகர்கள்



-------------------------


2. ஹோட்டல்ல பேமிலி ரூம்ல இருக்கறவங்க எல்லாம் ஒரெ பேமிலி கிடையாது
------------------------
3 சிங்கம் 2 படத்தை ஏ வி எம் எடுத்திருந்தா படம் ஓடும் தியேட்டர் வாசல்ல தலா 2 சிங்கத்தை கட்டி வெச்சிருப்பாங்க # அண்ணே ஒரு விளம்பரம்
---------------------------
4. ட்விட்டர்ல டி எம் ல ஸ்பாம் மெசேஜா வந்தா நீங்க இன்னா செய்யனும்னா லவ்வரை மாத்தற மாதிரி அடிக்கடி பாஸ்வோர்டை மாத்தனும்
---------------------------
5. அமலா நமக்கு சீனியரா இருந்தாலும் ,அமலாபால் நமக்கு ஜூனியரா இருந்தாலும் வயசு வித்தியாசம் பார்க்காம சைட் அடிப்போம் # அது
---------------------------



நண்பர்கள் அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்து சொல்வதற்கு முன்னால் ...
ஒரு அன்பான ஆதங்கத்தை பதிவுசெய்ய விரும்புகிறேன் ...
நாளை சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட உள்ள வேளையில் , முகநூலிலும் அது கலைகட்டியுள்ளது ...
இந்த தருணத்தில் சில நண்பர்கள் நான் இந்தியன் அல்ல தமிழன் . இந்த சுதந்திர தினத்தை கொண்டாடும் அனைவரும் இன துரோகிகள் என்றெல்லாம் வீரவசனம் வீசுகிறார்கள் . அந்த நண்பர்களுக்கு என் அன்பான வேண்டுகோள்
நம் இனம் இன்று உள்ள சில அரசியல் தலைவர்களால் வதை செய்யப்பட்டு இருக்கலாம் . அதற்காக இந்திய சுதந்திரத்தை பழிப்பது நியாயம் அல்ல . காரணம் இந்த இந்திய சுதந்திரமானது இன்றுள்ள அரசியல் தலைவர்களால் பெறப்பட்டது அல்ல . வீரபாண்டிய கட்டபொம்மன் , தீரன் சின்னமலை , கொடிகாத்த குமரன் , பாரதி போன்ற எத்தனையோ தமிழன தலைவர்களும் உயிர் கொடுத்து வாங்கி வந்தது இந்த சுதந்திரம் . ஆதலால் அவர்களில் ஆத்மா குளிரவாவது சுதந்திர தின வாழ்த்து கூறிக்கொள்வோம் . அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள் .
6.சாதாரண பிகரையும் அசாதாரண பிகராகக்காட்டும் வல்லமை மூக்குத்திக்கு உண்டு
-------------------------
7. ஆகஸ்ட் 15 கொடி ஏத்த வரும் ஜனாதிபதியை ஜனங்களின் தலைவா கொடி ஏற்ற வா னு கட் அவுட் வைக்காம இருந்தா சரி
--------------------------
8. சேல்ஸ்கேர்ளா ஒர்க் பண்ற பொண்ணு பேரு வித்யாவா இருந்தா டேமேஜர்க்கு கேள்வி கேட்க ரொம்ப ஈசி # வித்யா வித்தியா?
----------------------
9. இந்திய ரூபாய் நோட்டுகளில் இருக்கும் சிங்கம் குறியீட்டுக்கு எங்களிடம் தான் காப்புரிமை பெற வேண்டும் - சூர்யா அதிரடி.அரசு திகைப்பு # சும்மா
-------------------------
10.தலைவா தியேட்டர் ட்ரெய்லர் பார்த்தேன்.விஜய்க்கு திடீர்னு சி எம் ஆசை வந்துடுச்சு போல.படம் தேறாதுன்னு பட்சி சொல்லுது
--------------------------



31 States,
1618 Languages,
6400 Castes,
6 Religion,
6 Ethnic Groups,
29 Major festivals
& 1 Country!
Be Proud to be an Indian!
Happy Independence Day
11. காதலர்களுக்கு அரசு ஊக்கம் தரவேண்டும் -ஆர்.நல்லகண்ணு #லவ்வர்ஸ்க்கு இன்சென்ட்டிவ்.ஆகா.கரும்பு தின்ன போனஸ்
----------------------
12. மேட்ச் த பாலோயிங் = பாலோ பண்றவங்களை இணை ஆக்கிக்கோ # சபாஷ் துபாஷ்
-------------------------
13. நாட்ல எந்தப்பிரச்சனை வந்தாலும் 24 மணி நேரத்துல அதை மறந்துட்டு அடுத்த பிரச்சனையை பார்க்க கிளம்புபவன்தான் மறத் தமிழன்
----------------------------
14. கோபம் உள்ள இடத்தில்தான் டேமேஜரோ ,நம்ம சொந்த சம்சாரமோ் இருக்கும் :-)"
-----------------------------
15. உலக சனத்தொகை தினம் இன்று. இதுதான் சாக்குன்னு யாரும் ஆக்கப்பூர்வமா ஆபீஸ்க்கு லீவ் போட்டுட்டு களத்தில் இறங்கிடாதீங்கய்யா
-------------------------


ஆடுவோமே, பள்ளி பாடுவோமே ..............
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று

- மகாகவி பாரதி 

நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் ...........-----ஸ்வர்ண யாழினி தேவி
16. உன் வாழ்வு இன்றே கடைசி என முன் அறிவிப்பு வந்தால் பாதிப்பேருக்கு பயத்திலேயே பாதி உயிர் போய்விடும்
----------------------------
17. காதலிக்கு சிறந்த பரிசு சேலை்.நம்மால் தொட முடியாத தூரத்தில் அவள் இருந்தாலும் கட்டிக்கொள்கையில் எல்லாம் நம் பரிசு தொட்டுக்கொண்டிருக்கும்
------------------------------
18. காதலி " படவா ராஸ்கல்" னு திட்டுனா நோ கவலை.அர்த்தம் " என் மேல பட வா ராஸ்கோலு"
-------------------------
19. அவள் ஒரு தொட ர் க(வி)தை
------------------------
20. பஸ்,ரயில்களில் விழி ஒளி இழந்தவர்கள் விற்கும் பொருள்கள் உங்களுக்குத்தேவைப்படவில்லை எனினும் வாங்கிக்கொள்ளுங்கள்
-------------------------------




Wednesday, August 14, 2013

கார்ட்டூன் போட்டி - கமெண்ட்ஸ் போட்டி -பட்டாசு



படப்போட்டிக்கான விதிமுறைகள்...

1. #Hiline என்ற டாக் ஒவ்வொரு கீச்சிலும் இருக்க வேண்டும்.

2. அறிவிக்கப்படும் வெற்றியாளார்கள், தங்கள் தொலைபேசி இலக்கத்தை [email protected] ற்க்கு அனுப்பினால் அடுத்து வரும் ஞாயிற்றுக் கிழமைக்குள் 500 ரூபாய் டாப் அப் செய்யப்படும்.

3. படத்திற்கு கவிதை, துணுக்கு, ஜோக் எதுவாக இருந்தாலும் ஒரு கீச்சுக்குள் எழுதலாம். டுவீட் லாங்கர் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.


4. ஒருவர் எத்தணை முறைகளும் முயற்சிக்கலாம்.

5. அநாகரீகமாக நடந்து கொள்பவர்கள் உடனேயே ப்லாக் செய்யப்படுவார்கள்.
6. 07/08/13 அன்று இந்திய நேரம் மாலை 6 மணிக்கு போட்டி முடிவடைகிறது.. 



1. அனியத்திப்புறா ங்கற கவித்துவமான டைட்டிலை அனி அத்தையின் பிரா -னு டைட்டில் மாத்தி டப் பண்ணியது நீதானே? ராஸ்கல்ஸ்





---------------------------


2. தலைவா" என்ன லுக்கு? இது சும்மா " ஆரம்பம்" தான் 



----------------------


3. சுறாவைக்கூட துணிச்சலா தியேட்டர்ல தனியா பார்த்த ஆள் நீ! புறாவைப்பார்த்து ஏன் இப்படி பம்முறே? 



------------------------


4. லவ் பேர்ட்ஸ் னு எங்களைப்பாத்து யாரோ பாடுனாங்கன்னு  ராம்தாஸ் அய்யா எங்களைத்துரத்திட்டு வர்றார்.காப்பாத்துங்க


--------------------------



5. பறவைகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் னு பாடிட்டு சிக்கன் சாப்டடு சாப்ட்டு எங்க இனத்தை அழிக்கும் இனம் நீ


------------------------------



6. புறாவுக்கே பெல் அடிச்சவன்னு பஞ்ச் டயலாக் பேசுனியே.ஏன் டல் அடிச்சவன் போல் இன்னும் எழாம இருக்கே?



--------------------


7.டேய்.பறக்கா வெட்டி.6 அறிவு உள்ளவன்னு அலம்பல் பன்றியே? எங்களை மாதிரி வானில் பறக்க முடியுமா? உன்னால்?


-------------------------------


8. மணிப்புறா, மாடப்புறா, கடல் புறா -னுசொல்லி எல்லாம் சேல்ஸ் பண்ண முடியாது, விஸ்வரூபம்ல நடிச்சபுறானு சொல்லுங்க  "



---------------------------



9. அமாவாசைன்னா காக்காவுக்கு சோறு வைக்கறீங்க , பவுர்ணமிக்கு  எங்களுக்கு வெச்சா என்னவாம் ? குறைஞ்சா போவீங்க?    "



--------------------------



10.   புறவழிச்சாலைமாதிரி  புறா வழிச்சோலை  உருவாக்கித்தரும் வரை  எங்கள் போராட்டம் தொடரும்  "




-------------------------


11. சிக்கனமாக்கட்டுன வீட்டைஎல்லாம் புறாக்கூ(ண்)டு மாதிரி இருக்குன்னு  சொல்லி எங்க இனத்தை கிண்டல் பண்றீங்களே நியாயமா?   "



-----------------------------


12.  தானத்துக்கு உதாரண புருஷனாய் கர்ணன் இருக்கும்போது , , சமாதானத்துக்கு  உதாரண பொண்டாட்டியா நாங்க இருக்கக்கூடாதா?   "




---------------------------


13. தன் துணையைத்தவிர வேறு  இணை  தேடாத  ஒரே இனம் எங்க புறா இனம் தான் தெரியுமா? "



-------------------------


14. புறாவைப்பார்த்ததுக்கே  இப்படிபயப்படறியே, சுறாவை 70 MMல க்ளோசப்ல  தனியா தியேட்டர்ல பார்த்திருந்தா  108 தான் வரனும்  "



-------------------------


15. புற நானூறுதான் படிக்கலை , புறா நானூறாவது பாரு  "




----------------------


16. புற முதுகிட்டு ஓடியவன்  கோழைன்னா  புறா முதுகில் இட்டவனை என்னசொல்ல?   "



----------------------


மேலேஉள்ளவை நான்   எழுதுனது , வெற்றி  பெற்றவர்  நம்ம நண்பர்


நாங்க இருந்த மரத்தைவெட்டி அந்த இடத்துல வீடுகட்டி மரத்துமேல நீ படுத்தா நாங்க எங்க போறது.. ""
Reply to

திருமணம், கற்பு என்ற கோட்பாடு -சிவகாமி ஐ.ஏ.எஸ்.

கடைசிப் பக்கம்

இந்தப் புள்ளியிலிருந்து!

சிவகாமி ..எஸ்.

1. திருமணம் என்பது யார் விருப்பம்?
இளவரசன் கோர மரணம் தமிழ்ச் சமுதாயத்துக்குப் பல செய்திகளை வழங்கியிருக்கிறது. தமிழ்ப் பண்பாடு என்று பெருமை பொங்கக் கூறிவந்தவற்றின் மீது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இளவரசன்-திவ்யாவுக்கு முன்னதாக சாதி மறுப்புத் திருமணங்கள் எதிர்ப்புகளுக்கு இடையில் நடந்து உறுதியான குடும்ப வாழ்க்கையில் தம்பதியினர் ஈடுபட்டிருந்தாலும்கூட, இன்னும் அத்தகைய திருமணங்கள் மனதார ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதும் இத்திருமணங்களுக்கு எதிரான அரசியல் பிரசாரங்களே தருமபுரி வன்முறைக்கும் இளவரசனின் மரணத்துக்கும் காரணமாக அமைந்தன என்பதும் நாடறிந்த உண்மை. நடந்த நிகழ்வுகள் யாவுமே தலித் சமூகத்தைக் கடுமையாகப் பாதித்ததென்பது உண்மைதான். எனினும் தலித் மக்கள் வாழும் இத்தமிழ்ச் சமுதாயமும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் உணர வேண்டும்.


திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்கள். அதாவது இது இரண்டு மனங்கள் அல்லது இரண்டு குடும்பங்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வு மட்டுமன்று. ஆயிரமாயிரமாண்டு காலமாக சமூகம் அரசு ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டது என்பதையே இக்கூற்று நிரூபிக்கிறது. திருமணம் ஓர் அரசியல் நிகழ்வு இல்லையென்றால், சாதிக்குள்ளாகவேதான் திருமணம் நடக்க வேண்டும் என்பது நடை முறைக்கு வந்திருக்குமா அல்லது ஆணின் வயது பெண்ணின் வயதைவிடக் கூடுதலாக இருக்கவேண்டும், திருமணத்தைப் பதிவு செய்தல், விவாகரத்து, ஜீவனாம்சம் போன்ற விஷயங்கள் சட்டமாகியிருக்க முடியுமா
 இவ்வளவு விஷயங்களை உள்ளடக்கிய நமது சட்டங்கள், அவ்வுறவுக்குள் புகும் ஆண்-பெண் விருப்பத்தைப் பற்றிப் பேசுகிறதா? பண்டைய தமிழர் பண்பாட்டில் காதல்-களவுத் திருமணங்களுக்கு அளிக்கப்பட்ட மதிப்பு தற்போது அளிக்கப்படுகிறதா? தற்போதைய திருமணங்கள் அரசியல் வரையறைக்குள்தான் நடக்கின்றன என்றால், வயது வந்த ஆண்-பெண் விருப்பத்துக்கு இடமில்லை அல்லது திருமணம் குறித்த சுதந்திரம் தனி மனிதருக்கு இல்லை என்றே நிரூபணமாகிறது.



தங்கள் பிள்ளைகளின் மேல் அக்கறை; அவர்களின் நலன் ஒன்றே குறிக்கோள் என்ற அடிப்படையில் வயது வந்த தமது பிள்ளைகளின் உரிமைகளில் தலையிடும் பெற்றோருக்குச் சில கேள்விகள்!


ஊழல் மிகுந்த இச்சமுதாயத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஊழலில் ஈடுபடும் பெற்றோர், தமது பிள்ளைகளைப் பற்றி நினைத்துப் பார்க்கின்றனரா? ஒருவேளை அதையும் தமது பிள்ளைகளின் நலனுக்காகவே தான் செய்கின்றோம் என்று சொல்வார்களோ?

குடிப்பழக்கம் தேசியக்குறியீடாகி வரும் இக்காலத்தில் நமது பெற்றோர்கள் குடிப்பது கூட பிள்ளைகளின் நன்மைக்குத்தானோ?

ஆணாதிக்கம் நிறைந்த இச்சமுதாயத்தில் பெண்ணை இழிவுபடுத்துவதும், தான் பெற்ற பெண்ணை மனத்தில் வைத்துதானோ?

வேறுபாடுகளும் அதனடிப்படையில் அமைந்த ஒடுக்குமுறைகளும் கொண்ட இச்சமுதாயத்துக்கும் பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று கூட வாதாடுவார்களோ?
திருமணம், கற்பு என்ற கோட்பாடுகளின் மீது கடைந்தெடுத்த அரசியலும், பெற்றோரின் சுயலாபமும் கலந்திருப்பதை நாம் கண்டு கொள்ளாவிட்டால் ஒரு நல்ல எதிர்காலத்தை நம் குழந்தைகளுக்குத் தர முடியாது. சிந்திப்போம் இந்தப் புள்ளியிலிருந்து...

Thanks-Kalki

. திரிசங்கு சொர்க்கம் VS திரிஷா அங்கு சொர்க்கம்

1. உன் கூந்தல் பட்டுப்போல் மெத் மெத்னு இருக்கே? எந்தக்கடையிலே நீ சவுரி வாங்குறே?




------------------------


2. உன்னை அணைக்க முனைகையில் என்னை தடுத்து ஆட்க்கொண்டவள் நீ!




------------------------------



3. திரிசங்கு சொர்க்கம் எதுன்னு எனக்குத்தெரியாது.திரிஷா எங்கே இருக்கோ அங்கு சொர்க்கம் இருக்குன்னு் தெரியும்



---------------------



4. கடித்ததில் பிடித்தது உன் உ தடு


--------------------


5. நான் உன்னை ஆளப்பிறந்தவன்.ஆனால் ஆராதிக்கவே நேரம் சரியாக இருக்குது



------------------------



6. காதலி வீட்டில் இருக்கிறாள் = ஸ்வீட்டில் # சுருக்கி வரைதல்




------------------------



7. உன்னைப்பார்த்தா யோகம் வரும்னு ( உங்க சொந்த ) பொண்டாட்டி கிட்ட சொல்லிடுங்க.உள் குத்து புரியாம பெருமைப்பட்டுக்குவாங்க




--------------------------


8. டியர்.உன் முகம் ரம் மியமா ரம்மி யமா இருக்கு ;-)) # சீட்டாடும் குடிகாரனின் வர்ணிப்பு



--------------------------


9. காதலை வெளிப்படுத்த தக்க சமயம் காதலி அருகில் இருக்கும் எல்லா சமயமும்



-------------------------


10. ஒரு பெண் உன்னை ஜி என அழைத்தால் அவர் அஜித் ரசிகையாகவும் இருக்கலாம்.சேட்டு வீட்டு பொண்ணாவும் இருக்கலாம்


---------------------


11. காதலின் கல்தூண் ,அஸ்திவாரம் எல்லாம் பரஸ்பர நம்பிக்கையில்




-----------------------


12. தான் நல்லவன் என்று காட்டிக்கொள்ள அடுத்தவனைப்பற்றி அவதூறாகப்பேசுவது ,பரப்புவது நம்மாளுங்க பழக்கம் போல



----------------------


13. அடுத்த இளைய தளபதியா வரனும்னு நினைக்கும் புரட்சித்தளபதி சின்னத்தளபதி ரேஞ்சுக்கு போய்டுவார் போல # பட்டத்து யானை படுத்துக்கிச்சாம்


-----------------------



14. வாக்கிங் போகிற குணவான் களே! இன்று ஆடி வெள்ளி.கோயில் பக்கமா ஒதுங்குனா பிகர் தரிசனம்.,பிரசாதம் கிடைக்கும்




----------------------


15. பவுர்ணமி வெளிச்சத்திலேயே சுமார் பிகர்தான் நீ! அமாசாசை இருட்ல எப்டி இருப்பியோ? அய்யய்யோ;-)



-----------------------


16. தாலி கட்ன பொண்டாட்டிக்கு அடிமையான பின் வேறு யாருக்கும் அடிமையாக முடிவதில்லை!!"



---------------------



17.  ஏற்கனவே ஆள் ரெடி ஆகிட்டா = ALREADY


---------------------


18. மாப்ளை விஜய் மாதிரி இருக்கார்னு சொல்லி நான் கேள்விப்பட்டதே இல்லை.ஆனா மனசுக்குள்ளே பெரிய அஜித் னு நினப்பு என பொண்ணுங்க கேட்டிருக்காங்க



---------------------------



19. அஜித் ன் படங்களில் ஹீரோயிசம் இல்லாமல் ரசிக்க வைத்த படம் முகவரி.வில்லனிசம் இருந்தும் ரசிக்க வைத்த படம் வாலி


------------------------


20. அஜித் ரசிகன் ன் மேரேஜ் அன்னைக்கு -,இன்று முதல் இரவு ஆரம்பம்



-----------------------