Wednesday, June 26, 2013

மரியான் - இயக்குநர் பரத்பாலா பேட்டி @ கல்கி

அர்ஜுன்

இயக்குனர் பரத் பாலாவும் .ஆர்.ரஹ்மானும் வந்தே மாதரம், ஜன கண மன சேர்ந்து தூள் கிளப்பி இருந்தாலும் பரத் பாலாவுக்கு இதுவே முதல் தமிழ்ப் படம். தனுஷ் பல படங்களில் நடித்து, தேசிய விருது வாங்கி இருந்தாலும் கூட, அவர் படங்களுக்கு .ஆர். ரஹ்மான் இசையமைத்ததில்லை. இப்போது இந்த மூவர் கூட்டணியில் வெளியாகவிருக்கும் படம்மரியான்யூடியூபில் பாட்டுகளும், விளம்பர டீசர்களும் 26 லட்சம் ஹிட்ஸ் தாண்டி எகிறிக் கொண்டிருக்கிறது.




 டைரக்டர் பரத் பாலாவை அவரது ராஜா அண்ணாமலைபுரம் அலுவலகத்தில் சந்தித்தோம். கவிஞர் குட்டி ரேவதி உள்ளிட்ட மரியான் யூனிட் படு பிசியாக தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பரத் பாலாவின் அறையில், ஒரு பக்கச்சுவர் முழுக்க துண்டுக் காகிதங்களாக ஒட்டப்பட்டிருக்கின்றன. என்னவென்று கேட்டால், படத்தின் ஸ்கிரிப்ட் என்கிறார் பாலா. கல்கிக்கு அவர் அளித்த ஸ்பெஷல் பேட்டி:


 


திடீர்னு எப்படி தமிழ்ப் படம் பண்ணற ஆசை வந்தது?


இருபது வருஷமாய் விளம்பரப் படங்கள், குறும்படங்கள், ஆவணப் படங்கள்னு நிறைய எடுத்தாலும், அது எல்லாத்துலயும் ஒரு விஷயம் கண்டிப்பா இருக்கும். அதுதான் ஹியூமன் எமோஷன்ஸ். இந்தப் படங்கள் எல்லாமே மொழியைத் தாண்டி மக்களோடு உணர்ச்சிபூர்வமான ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திச்சு. ஏற்கெனவே ஹிந்தியில டைரக்ட் பண்ணின என்னோட முதல் படமும் அது மாதிரிதான்



 இப்போ படத்துக்கு எடுத்துக்கிட்டிருக்கிற சப்ஜெக்ட் ரொம்ப ஸ்டிராங்கான ஹியூமன் எமோஷன். நான் உலகம் முழுக்க சுத்தி இருக்கேன் என்றாலும், என் வேர் மைலாப்பூர். அதனால, இந்தக் கதையை தமிழ்ல சொன்னாத் தான் சரியா இருக்கும்னு நினைச்சேன். என் முதல் தமிழ்ப்படம்மரியான்உருவான பின்னணி இதுதான்."
 




மரியான் ஒரு நிஜ கேரக்டராமே?


ஆமாம்! ரெண்டு வருஷங்களுக்கு முன்னால பேப்பர்ல நான் படிச்ச நியூஸ்தான்மரியான்கதைக்கு ஆரம்பப் புள்ளி. கேரளா, மும்பை, பஞ்சாப்ல இருந்து வேலைக்காக ஆஃப்ரிக்காவில் சூடானுக்குப் போன மூணு இளைஞர்கள் அங்கே பட்ட கஷ்டங்கள்தான் கதைக்கு அடித்தளம். அதுல ஒருத்தனோட காதல் அவனுக்கு எத்தனை உடல் ரீதியான, மனோரீதியான பலத்தைக் கொடுக்குது? அதை வெச்சு அவன் எப்படி எல்லா கஷ்டங்களையும் எதிர்த்துப் போராடி ஜெயிக்கறான்னு படிச்சுத் தெரிஞ்சுக்கிட்டபோது, ரொம்ப ஆச்சர்யமாய் இருந்தது.  


அந்த இளைஞர்களைப் பத்தி முழு விவரங்களையும் தெரிஞ்சுக்கிட்டபோது அதுல ஆழமான ஹியூமன் எமோஷன் இருக்கிறது புரிஞ்சுது. அதை வெச்சு ஒரு பவர்ஃபுல் ஸ்கிரிப்ட் பண்ணலாம்னு தோணிச்சு."

 



தனுஷ் எப்படி?

ரெண்டு வருஷம் முன்னால, தேசிய விருதுக்கான நடுவர் குழுவுல நான் இருந்தப்போ தனுஷ் நடிச்சஆடுகளம்பார்த்து, அவரோட நடிப்புல ரொம்ப இம்ப்ரஸ் ஆயிட்டேன். இந்த ஸ்கிரிப்ட்ல நடிக்க தனுஷ்தான் பொருத்தமா இருப்பாருன்னு முடிவு பண்ணினேன்


 தனுஷுக்குக் கதையைச் சொன்னதும், அவருக்கு ரொம்பப் பிடிச்சுப் போய், உடனே சரின்னு சொல்லிட்டார். இதுதான் கதை, தனுஷ் நடிக்கிறாருன்னு ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவிசந்திரனிடம் சொன்னதும், உடனே படத்தை புரொடியூஸ் பண்ண .கே. சொல்லிட்டார். படத்துல தனுஷ் மண்டைக்காடு பக்கத்துல இருக்கிற நீரோடிங்கிற கிராமத்து மீனவ இளைஞர். அவர் வேலை செய்ய சூடான் போகும் போது நடக்கிற வாழ்க்கைப் போராட்டம்தான் கதை."




 
பூபடத்தோட சாஃப்ட் பார்வதிக்குக் கூட ரொம்ப பவர்ஃபுல் ரோலாமே?


இந்தப் படத்துக்காக அவங்களுக்கு படத்துல வருகிற ஐந்தாறு சீன்களைக் கொடுத்து நடித்துக் காட்டச் சொன்னேன். முதல் சீனை நடிக்கும்போதே நான் அங்கே பார்வதியைப் பார்க்கலை; பனிமலரைத்தான் பார்த்தேன்."


ரஹ்மானை படத்துக்கு இசையமைக்க வைப்பதில் உங்களுக்கு சிரமம் இருந்திருக்காதே?


(சிரிக்கிறார்) நாங்க ரெண்டு பேரும் ஸ்கூல் நாள்ல இருந்தே ஃப்ரெண்ட்ஸ். முன்னாலயே நாங்க சேர்ந்து ஒர்க் பண்ணின வந்தே மாதரம், ஜன கண மன இரண்டுக்கும் அகில இந்திய அளவுல எந்த மாதிரியான வரவேற்பு கிடைச்சுதுன்னு உங்களுக்கே தெரியும். நான் கேட்டேன்



 அவரும் உடனே சம்மதிச்சார். மறுபடியும் ரெண்டு பேரும் சேர்ந்து ஒர்க் பண்ண ரொம்ப சந்தோஷமாய் இருந்தது. காதல், பிரிவு, வலி, உறுதி, எழுச்சின்னு அஞ்சு விதமான எமோஷன்ஸ் படத்துல இருக்கு. அதுக்கு ஏத்த மாதிரி பாட்டுகள் வேணும்னு சொன்னேன். வாலி தொடங்கி தனுஷ், கபிலன், குட்டி ரேவதி, ரஹ்மான்னு எல்லாரும் பாட்டு எழுதி இருக்காங்க. மரியான் தமிழைத்தாண்டி, உலக அளவில் ரசிகர்களை ஈர்க்கிற ஒரு சினிமாவாய் இருக்கும் என்பது நிச்சயம்."




 
படத்தோட கேமராமேன் ஒரு ஃப்ரெஞ்சுக்காரராமே?



ஜானி மை டாக்னு ஒரு படம் பார்த்திட்டு, அதன் கேமராமேன் மார்க்தான் நம்ம படத்துக்கும் கேமரான்னு தீர்மானிச்சு, அவரைத் தேடிப் பிடிச்சுக் கேட்டதும் .கே. சொல்லிட்டார். அவர் இதுக்கு முன்னால இந்தியாவைப் பார்த்ததில்லை. அவர் கோணத்துல இந்தியாவைப் பார்க்கிறபோது, நமக்கே தெரியாத புதுப்பார்வை படத்துல இருக்கும். சீன்கள் எல்லாம் ரொம்ப நல்லா வந்திருக்கு. கதை சூடான்ல நடக்குது. ஆனா, அந்த சீன்களை நாங்க எடுத்தது நமீபியாவுல. ‘ஜானி மை டாக்படத்துல நடிச்சிருக்கிற சில ஆஃப்ரிகன் ஆக்ஷன் நடிகர்களை நடிக்க வெச்சிருக்கேன்."


படத்தோட கடைசி சீன்ல ஷூட்டிங்கை ஆரம்பிச்சு, முதல் சீன் வரைக்கும் ரிவர்ஸ்ல படத்தை எடுத்தீங்களாமே. என்ன காரணம்?


முதல் சீன்ல ஆரம்பிச்சு வரிசையா சீன்களை எடுத்திருந்தா படம் எடுத்து முடிக்க ரெண்டு வருஷம் ஆகி இருக்கும். அந்தத் தாமதம் வேணாம்னுதான் மாத்தி ரிவர்ஸ்ல எடுத்தோம்."


ஆழ்கடல் சீனெல்லாம் எடுத்திருக்கீங்க. ஆனா தனுஷுக்கு நீச்சலே தெரியாதாமே?

ஆமாம். மன உறுதியும், உடல் பலமும் கொண்ட மீனவ இளைஞர் மரியான். எல்லோரும் வலை வீசி மீன் பிடிச்சா, இவன் ஆழ்கடலுக்குப் போய், பெரிய மீனை கூரிய ஆயுதத்தால் நேரடியாகக் குத்திப் பிடிப்பான். நீச்சல் தெரியாது போனாலும், தனுஷ் காட்டின தைரியமும், ஈடுபாடும் வாவ்! கிரேட்!"


thanx - kalaki 





Monday, June 24, 2013

ஃபுக்ரே(தினமலர் விமர்சனம்)



தில் சாத்தா ஹை,  டான் (ஷாருக்கான்), டான் 2, லக்ஷ்யா முதலிய பல வெற்றிப் படங்களை இயக்கியவர் ஃபரான் அஃக்தர். ராக் ஆன், கார்த்திக் காலிங் கார்த்திக், ஜிந்தகி நா மிலேகி துபாரா முதலிய படங்கள் மூலம் நல்ல நடிகர் என்ற முத்திரை பதித்த இவர், பாடகர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களை திரைத்துறையில் எடுத்துள்ளார். ஃபரான் அஃக்தர் தயாரிப்பில் வெளிவரும் காரணத்தால் பாலிவுட்டில் ஃபுக்ரே திரைப்படம் கொஞ்சம் எதிர்பார்க்கப்பட்டது.

ஹன்னி (புல்கிட் சாம்ராட்), சூச்சா (வரூன்) இருவரும் படிப்பில் ஞானசூன்யங்கள், ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள். இருவருடைய ஆசையும் ஒரு பெரிய கல்லூரியில் சேர வேண்டும், காரணம் அங்குள்ள மாடர்ன் கேர்ள்சை மடக்க வேண்டுமென்ற இலட்சியம்.  அடிக்கடி எதையாவது தொலைத்துக் கொண்டே இருக்கும் லாலி. தன் காதலியும் கல்லூரிக்குச் சென்று தன்னை கண்டுகொள்ளாமல் போக, எப்படியாவது தானும் காலேஜில் சேர வேண்டுமென்ற இலட்சியம் லாலிக்கு. ஹன்னி, சூச்சாவுடன் லாலியும் இணைகிறான். இவர் இருவர்களின் ஆசான் தில்லு முல்லு செய்பவர்களின் முழு பயோ டேடாவை அறிந்த பண்டிட் (பன்கட் திரிபாதி).



காலேஜில் லெக்சுரராக இருக்கும் விஷாகாவிடம் லாலி ட்யூஷனுக்கு செல்கிறான். இசை தான் தன் வாழ்வின் இலட்சியம், இசைக்குப் பின் தான் காதல் என்று அலி பாசல் கூற, விஷாகா அலி மீதுள்ள காதலைத் துறக்கிறார். அலியின் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இவருக்கு நிறைய காசு தேவைப்படுகிறது.  ஹன்னி, சூச்சா, லாலி ஆகிய இம்மூவர் கல்லூரியில் சேர்வதற்கும் நிறைய காசு தேவைப்பட , ஹன்னி கூறும் வழியில் லாட்டரியில் சூது செய்து குறுக்கு வழியில் பணம் சேர்க்க இந்நால்வரும் திட்டம் போடுகின்றனர்.  இவர்களின் சூதில் பார்ட்னராக ஐம்பது சதவீதம் பணம் தருவதாகக் கூறி தாசிகளின் பாஸ்ஸாக வரும் ரிச்சா சத்தாவை நாடுகின்றனர்.  இவர்களின் திட்டம் புஸ்வாணமாகி வெடிக்க, இந்நால்வரும் ரிச்சாவிடம் வசமாக மாட்டிக் கொள்கின்றனர். கடைசியில் ரிச்சாவிற்கு மிளகாய் தூவி ஹன்னி, லாலி சூச்சா இம்மூன்று மிடில் கிளாஸ் பசங்களும் பந்தாவான கல்லூரியில் சேர்வது தான் மீதிக் கதை.

கண்ணா லட்டு தின்ன ஆசையா என்று ஈர்க்கும் விஷாகா சிங், மறுபுறம் நம்ம எதிர் நீச்சல் ப்ரியா ஆனந்த். ஒன்றிற்கு இரண்டு லட்டு நாயகிகள் இருந்தும் போலிபஞ்சாபியாக வரும் ரிச்சாவிற்குத் தான் அதிக முக்கியத்துவம்.



ராம் சம்பத்தின் இசையில் பாடல்கள் யாவும் இனிமை. பின்னணியும் திரைக்கதையிலிருந்து நழுவாது அமைந்திருந்த விதம் சிறப்பிற்குரியது.

சூச்சா என்ற தன் கதாபாத்திரத்தின் நகைச்சுவை பெயரிற்கேற்றார் போல் வரூண் செய்யும் காமெடி வெள்ளந்தித்தனம் நிறைந்த விடலைத்தனம்.  லாலியாக மன்ஜித் சிங்கும் , ஹன்னியாக புல்கிட் ஷர்மாவும் தங்கள் கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார்கள்.

விபுல் விகி, ரிக்தீப் சிங் லம்பாவின் திரைக்கதை கொஞ்சம் சுமார் ரகம் தான். கதைக்களத்தை விட கதாபாத்திரங்களின் நடிப்பு தான் பெரிதாக ஈர்த்துள்ளது.

மொத்தத்தில்: இந்த இளமைப் பட்டாளத்தின் அழகான நடிப்பு படத்தை தொய்வுத் தருணங்களின்றி நகர்த்திச் செல்கிறது. கதாபாத்திரங்களின் கண்கவர் நடிப்பிற்காகவும், ராம் சம்பத்தின் உயிரோட்டம் நிறைந்த இசைக்காகவும் ஃபுக்ரேவை கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.



 நன்றி - தினமலர்

Sunday, June 23, 2013

சாந்தி முகூர்த்தத்துக்கு குறிச்ச நல்ல நேரம் ரொம்ப கம்மியா இருந்தா என்ன பண்ணனும்?

1. மேத்ஸ் மிஸ் மேனகா - 29 ல 7 போயிடுச்சுனா மீதி எவ்ளவ் இருக்கும்? 



லொள் மாணவன் - கேப்டன் மனசுல கொஞ்சம் பயம் இருக்கும்




------------------------------


2. கேப்டன் நடிக்கும் புதிய பட டைட்டில் என்னவா இருக்கும் ? 


 மாப்பிள்ளை இனி மப்பில்லை




-------------------------



3. அத்தான்.என் கூட சண்டை போட்டுட்டு எதுக்கு எங்கம்மா வீட்டுக்கு போனீங்க? 



நீ தானே கோபமா "கோ டூ ஹெல்" னே? 




---------------------------


4. சாமியார் - மங்களம் உண்டாகட்டும். 



மாசமான மங்களம் - ஆல்ரெடி 4 டைம் உண்டாகிட்டேன்.ரொம்ப குண்டாகிட்டேன்.செம காண்டாகிட்டேன்.கலைக்கனும் சாமி 



-----------------------


5. நீ உன் கூட படிக்கற பொண்ணுக்கு லவ் லெட்டர் குடுத்தியாமே?



,அவங்கம்மா கிட்டே தரச்சொல்லிக்குடுத்தேன்.அவளே வெச்சுக்கிட்டா 


-------------------------

6. இங்கே பாரம்மா யார் என்ன கேள்வி கேட்டாலும் சரிங்க னு சொல்லி எல்லாம் சமாளிக்கக்கூடாது.பதில் சொல்லனும்.OK?



 அரட்டை கேர்ள் - சரிங்க ;-)) 


-------------------------


7. உன் பேரென்ன ?


 சவுமி . 



அடுக்குத்தொடர்க்கு ஒரு உதாரணம் சொல்லு.


 சவுமி சவுமி 


--------------------------

8. டியர். கிராமத்துல இருந்தும் ஸ்விமிங் தெரியாது எனக்கு.



 நீச்சல் கத்துக்கனும்னா தண்ணீர்ல இருந்தா போதும்.கிராமமோ நகரமோ 





--------------------


9. மேடம்.நீங்க லவ் மேரேஜ் பண்ணிக்குவீங்ளா? அரேஞ்ஜ்டு மேரேஜ் பண்ணிக்குவீங்க்ளா? 



நடிகை = இப்டி 1 அப்டி 1 பண்ணிக்கிட்டா போச்சு.என்ன இப்போ? 



---------------------------


10. டியர்.கூந்தலுக்கு ஏன் ப்ளூகலர் டை அடிக்கறே?



 நீளமான கூந்தல்காரினு பேர் எடுக்க முடியல.அட்லீஸ்ட் நீலமான கூந்தல்காரினாவது பேர் எடுப்பமே் 



------------------------------


11. ஸ்விம்மிங் போக இங்கே இன்னும் வெதர் வர்ல. 


ஆத்துல தண்ணி வந்தா போதாதா? வெதர் எதுக்கு மெனக்கெட்டு வரனும்? 



------------------------


12. அஜித் ரசிகன் - உன் கூட குப்பை கொட்டறதுக்கு நரகத்து வாசக்கதவை தட்டலாம்.



விஜய் ரசிகை - ஐ ஆம் வெயிட்டிங் ;-) 



-------------------------

13. பொண்ணு அஜித் ரசிகையா இருக்கலாம்.அதுக்காக மாப்ளை பார்க்க வந்த பொண்ணு " அஜித் மாதிரி 6 கிமீ நடந்து காட்டுங்க"னு சொல்றது ஓவர்



----------------------


14. சாரி.நம்ம காதல் தான் முறிஞ்சிடுச்சே? 



டியர். 2 மணி நேரப்படத்தையே ரீமேக் பண்றப்ப இத்தனை வருடக்காதலை ரீமேக்கினா என்ன தப்பு? 


-----------------------


15. கமல் ரசிகை - டியர்.நீங்க உத்தம வில்லனா இருக்கனும் .



 ரஜினி ரசிகன். - பின் பாதி ஓக்கே.முன் பாதி சிரமம் ;-) 


----------------------------


16. ஆதாம் - உன்னைத்தவிர வேற எந்த பிகரையும் என் மனசால கூட நினைச்சதில்ல. 



ஏவாள் - ரொம்ப சீன் போடாத.உனக்கும் எனக்கும் தான் சாய்சே கிடையாதே? 


-----------------------


17. டேமேஜர் - ஆபீஸ்க்கு டெய்லி 10 நிமிஷம் லேட்டா வர்றே.ஏன் ? 



காலங்காத்தால வேலையைப்பார்க்காம வாட்சைப்பார்த்துட்டே இருந்தா எப்டி சார்? 


----------------------


18. இடுப்பு வலிக்கு மூவ் தடவி விட்டதால குழந்தை பார்ம் ஆகிடுச்சு டாக்டர்.



என்னய்யா உளர்றே? 



மனைவி க்கு மூவ் தடவும்போது கை கொஞ்சம் மூவ் ஆகிடுச்சு 



--------------------------


19. சாரி மிஸ்டர்.உங்க காதலை கண்டிப்பா ஏத்துக்க முடியாது. 



விடாக்கண்டன் விமல்ராஜ்  - அப்போ அன்பா ஏத்துக்கங்க



---------------------


20. சாந்தி முகூர்த்தத்துக்கு நேரம் குறிச்சாச்சு.நல்ல நேரம் நைட் 9 டூ 10, 



அப்பாவி மாப்ளை - ஒரு மணி நேரம் தானா ஜோசியரே? 


----------------------------------

Saturday, June 22, 2013

லேடி நாராயண சாமி பிரேமலதா பராக் பராக்

1. கூட்டணி தேவையில்லை..கேப்டன் தனியாகத்தான் நிற்பார்: பிரேமலதா # அண்ணி.நீங்க கூட நில்லுங்க.அவருக்கும் தெம்பா இருக்கும்



-------------------


2. பெண்களிடம் ரகசியம் சொல்லாதீர் .் தனக்கு நெருக்கமான. நெருக்கமில்லா ,அறிமுகமே இல்லாத ஆளிடம் கூட ஏதேனும் ஒரு தருணத்தில் சொல்லக்கூடும்



------------------------


3. தலைவா ( ஒருவேளை) ஹிட் ஆகிட்டா விஜய் ன் அடுத்த பட டைட்டில் முதல்வா?


--------------------


4. ட்விட்டரில் தமிழில் ட்வீட் போடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது :)""ஏன்னா எனக்கு தேன்மொழியைத்தவிர வேற மொழி தெரியாது .



----------------------


5. அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது # போஸ்ட்மேன் 9 மணிக்கு தானே வருவாரு?



------------------------


6. உன்னை சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை.தந்து விட்டேன் என்னை # 1, எப்பவுமே நமக்கு சிந்திச்சு பழக்கம் இல்லை 2,தர்றக்கு பைசா எதுவும் இல்ல



------------------------


7.இழந்த் மார்க்கெட்டை பிடிக்க சிம்பு - ஹன்சிகா காதல் புரளியை சிம்புவே கிளப்பினார் - மாலைமலர் # அப்போ 2 பேரும் மார்க்கெட்டுகெதர் பங்க்ஷன்?



---------------------------


8. பொது சொத்துக்களை சேதப்படுத்தியதால் பாமக வுக்கு ரூ 50 கோடி அபராதம் - ஜெ.# 2016 ல் சி எம் ஆகி சம்பாதித்து கட்டுவேன் - டாக்டர் அய்யா



--------------------------


9. ஆத்தா நான் டென் த் லபாஸாயிட்டேன் லஷ்மி மேனனின் மகிழ்ச்சி # இனி லட்சுமி மே (ல்படிப்பு)ணன் ?



------------------------


10. மீண்டும் நடிக்க வருகிறார் விஜயகாந்த் # டைட்டில் - ஏழுக்குப்பின் ஏழரை ?



---------------------


11. 2015 உலகக் கோப்பையில் ஆடுவேன் - ஸ்ரீசாந்த் # ஜெயில்ல இருப்பீங்க்ளே?்


--------------------------


12.  கையறு நிலை் என்பது ஈழத்தமிழரைத்திட்டமிட்டுப்பழி வாங்கிய ,பலி கொடுத்த காங்கிரஸ் கட்சிக்கு வரப்போகும் தேர்தலில் ஏற்பட இருக்கும் நிலைதான்"



----------------------------


13. ஜப்பானுடன் நெருங்கிப்பழகினால் இந்தியாவுக்குத்தான் ஆபத்து - சீனா # தீப கர்ப்ப நாடா ஆகிடுமா?



-------------------------


14. ஆண் தன்னோட சுயத்தை,தன்மானத்தை தொலைத்துவிட்டு மனைவி் பிள்ளைகளின் விருப்பதுக்காகவே வாழ்கிறாள்.




--------------------------


15. அன்பாக நடப்பதுன்னா எங்கே போனாலும் காதலியின் உள்ளங்கையைப்பற்றியபடி நடப்பதா?



--------------------------


16. ஆபீஸ் டைம் க்கு கால் மணி நேரம் முன் கூட்டியே வந்தால்



1 டேமேஜரிடம் நல்ல பேர் கிடைக்கும்


 2 ரிசப்சனிஸ்ட் டிடம் கடலை போடலாம்


--------------------------


17. பேக்குப்பையா என காதலி கொஞ்சினால் புளகாங்கிதம் அடையாதீர்.அவங்க என்ன செலவு செஞ்சாலும் PAY க்குப்பயல் நீ தான் என அர்த்தமாகவும் இருக்கலாம்



----------------------------


18. எனக்கு கொயந்த மனசு...னு சொல்ற ஆண்களை பொண்ணுங்க நம்பறதில்ல.குழந்தை குடுக்கற வயசுன்னு தெரிஞ்சு வெச்சிருக்காங்க



-------------------------


19. வரப்போகும் வாழ்க்கைத்துணை சமந்தா மாதிரி அழகா வேணும்னு மட்டும் நினைக்காதீங்க.சமத்தா சமைக்குமா?னும் கேட்டுக்குங்க



--------------------------


20. தேமுதிக எம் எல் ஏக்கள் தாவலுக்கு இன்னும் 15 நாள் ல முடிவு கட்டுவார் கேப்டன் - பிரேமலதா # மேடம்.இப்போ மப்புல இருக்காரா? தெளியனுமா?



----------------------------

Friday, June 21, 2013

இச் சை செயல் VS அனிச்சைச்செயல்

1. செல்லக்கோபத்தில் " உன்னை ஒரு கை பார்த்து விட்டுத்தான் மறுவேலை" என்றேன்.இன்னொரு கை பூ பறிக்கப்போய் இருக்கா? என்றாய் எகத் தாளமாய்




------------------------


2.  ஆபீசில் என்ன சமாச்சாரம் நடந்தாலும் என்ன? ஏது? என தோண்டித்துருவி துளைத்தெடுக்கும் சம்சாரம் நீ!



----------------------------


3. எடையில் என்னில் பாதி நீ ! சாப்பாட்டிலும் ! ஆனால் என்னை அடிக்கும்போது மட்டும் உனக்கு இரு மடங்கு பலம் வந்து விடுகிறதே?



-------------------------


4. சனிக்கிழமை (ஒரு வேளை நீ ) குளித்தால் " ஹனி சனி நீராடுது"



-------------------------


5. இன்று உலக காற்று தினம். உன் மூச்சுக்காற்றை உணர நினைக்குது மனம்




-----------------------------


6. நீ உம்மா குடுத்தால் உள்ளதடி சொர்க்கம்.கொடுக்கவில்லை எனில் இருக்கவே இருக்கு சினிமா தியேட்டர் பக்கம்



-----------------------------


7. நீ சுயநலமாய் இருந்தாலும் நலமாய் இருந்தால் அது போதும் எனக்கு



--------------------------


8. எப்போதும் மணக்கும் ரசம் நீ! குடிக்கும் வரை அதில் இருக்கும் கறிவேப்பிலை நான்.




--------------------------


9. அன்பே! இப்போதான் உன்னைபத்தி நினைச்சேன்.கனவில் வந்துட்டே.உனக்கு 100 ஆயுசு. 36 28 36 கூட்டிப்பார்த்தாலும் 100 வருதே.அடடே




----------------------------


10. அன்பே! உன்னால் எனக்கு தூக்கம் கெட்டதுதான் மிச்சம்.நீ அருகில் இருந்தால் கிறங்கிக்கிடக்கத்தான் முடியுது.உறங்கிக்கிடக்க முடியல



-------------------------


11.  அன்பே! இன்னைக்கு ரத்த தான நாள்.அதை முத்த தான நாளாக மாற்றுவோம்.வா




----------------------------


12. அன்பே!நீ மாசம் ஆனாய்.நான் மோசம் ஆனேன்.நல்ல நாள்லயே நீ ஒரு வேலையும் செய்ய மாட்டே ;-



-----------------------


13. 24 மணி நேரத்தில் எனக்காக நீ ஒதுக்கும் நிமிடங்களே என் தங்க தருணங்கள்.



------------------------


14. சொல்லித்தெரிய வேண்டியதில்லை உனக்கு என் பரிவை. அறிமுகப்படுத்தவே தேவை இல்லை எனக்கு உன் பிரிவை




---------------------------


15. உன் உடையாக மாற ஆசைப்படுகிறேன்.காரணம் நீ நினைக்கும் அதுவல்ல.சும்மா உடைக்குப்போடும் உடையே 10,000 ரூபாய்க்கு எடுத்துடறியே



-----------------------------


16. என் வாழ்வின் எல்லா சிறந்த பட்டியலிலும் நீ ! நான் பெற்ற சி றந்த அவமானம் கூட நீ தந்ததுதான்



---------------------------


17. அன்பே! உன் இதயக்கதவைக்கூட லேட்டா திறந்துக்க.ஆனா உன் ஜாக்கெட் ஜன்னலை மூடி விடு.போறவன் வர்றவன் எல்லாம் பார்த்துட்டுப்போறான்



-------------------------


18. அன்பே! உன் அறிமுகம் கிடைத்த பின் குப்புறப்படுத்து தூங்கும் பழக்கத்தை அப்புறப்படுத்தி விட்டேன்



-----------------------------


19. உன்னை அடிக்கடி பார்க்க நினைப்பது இச்சைசெயல்.பார்க்கும்போதெல்லாம் உதட்டில் சிரிப்புபொங்குவது அனிச்சைச்செயல்


---------------------------

20. உலகமே உயிர் இல்லாத காற்றை சுவாசிக்கும்போது காதலர்கள் மட்டுமே காதலியின் அன்பை சுவாசிக்கிறார்கள்


--------------------------------

Thursday, June 20, 2013

சிந்து குளிக்கிறாள்

1. அன்பே ! நீ ஒரு டபுள் டெக்கர் ஸ்டார் பிஷ்.ஏன்னா ் ஃபிஷ்க்கு மூளை கிடையாதாம், கிகி


------------------

2.அன்பே! ஒரே ஒரு இதழ் ஒத்தடம் தந்தால் நாணயமாக நேர்மையாக கந்து வட்டியுடன் திருப்பித்தரப்படும்

----------------------------------

3.அன்பே ! செவ்வாயில் வாங்கும் செல்வம் செழிக்குமாம்.உன் உதட்டில் ஒரு முத்தச்செல்வத்தை டெபாசிட் செய்யவா?

----------------------------

4.அன்பே! என் வாழ்WIN உச்சம் நீ ! உன் அன்பின் மிச்சம் நான்

---------------------------

5.காதலி உங்களைப்பார்த்து பச்சை மண்ணு டா நீ என கொஞ்சினால் டேய் மண்ணாங்கட்டி என அர்த்தமாம்


------------------------

6.என் முதல் காதலி எனக்களித்த பரிசு இரண்டாம் காதலி.கி கி


----------------------------

7.ஆங்கிலேயரும் ,சம்சாரமும் 1 தான்.முதல்ல வாழவந்தவங்க பின் ஆள வந்தவங்கள் போல் நடந்து நம்மை அடிமை ஆக்கிட்டாங்க

-------------------------

8.யாரோ யாரையோ கண்ணு ,டீக்கடை பண்ணு ,டாப்ஸி பொண்ணுனு கூப்டா நமக்கு ஏன் கடுப்பாகுது?கி கி ;-))

----------------------------

9.எப்போ பாரு பொண்ணுங்களை கலாய்ச்சு ஓட்டிட்டு இருப்பவர் பிகர் ஜாக்கி?

-------------------------

10.நெட்ல பொண்ணுங்களுக்கு பசங்க ஈ ஈ னு காலை வணக்கம் சொன்னா அது தான் ewishes ?

------------------------

11.இந்திய பிகர் தர வரிசை
    1 ஹைதராபாத் 
    2 குஜராத் 
    3 காஷ்மீர்
    4 மும்பை
    5 டெல்லி 

-----------------

12.தமிழக பிகர் தர வரிசை
    1 கோவை 
    2 ஈரோடு 
    3, சென்னை 
    4 மதுரை 
    5 சேலம்

-----------------------

13.விஜய் நடிக்கும் ஹாலிவுட் பட டைட்டில் = HEAD COME ? ( தலைவா டப் )

----------------------

14.அன்பே! உனக்கு அலங்க் காரம் தேவை இல்லை .நீ தான் ஸ்வீட்டி ஆச்சே?


-----------------------
15. இந்த சம்சாரங்க நம்மளை டைனிங் டேபிள் ல உட்கார வெச்சு அவங்க சமையல் ரூம் ல சமைச்சுக்கிட்டே சாப்புட்டுடறாங்க ;-)



---------------------------


16. அன்பே ! உன் முதுகு தான் என் பர்சனல் டைரி.கி கி ;-))



------------------------


17. காதலி வாத்து மாதிரி நடந்தா நாம கேட்க வேண்டியது - இதான் உன் டக் கா?



-------------------------


18. காதலி என்ன திட்டினாலும் கொஞ்சம் கூட வெட்கமே படாதவன் கூச்சம் அடையான்



----------------------------


19. நறுமுகையே நறுமுகையே ! நறுக் என கிள்ளினாயே # சும்மா


-------------------------


20. சிந்துபாத் = சிந்து குளிக்கிறாள் # சபாஷ் துபாஷ்



-----------------------------

Wednesday, June 19, 2013

MAN OF STEEL -சினிமா விமர்சனம் ( தினமலர் )

தினமலர் விமர்சனம்


2012ம் ஆண்டு ஜுலை மாதம் ‘டார்க் நைட் ரைசஸ்’ திரைப்படம் வெளியான போது திரையரங்குகளில் ‘மேன் ஆஃப் ஸ்டீல்’ டீசர் வெளியானது. அன்று தொடங்கி ஏறத்தாழ ஒரு வருடமாக மேன் ஆஃப் ஸ்டீல் ஏகோபித்தமாக எதிர்பார்க்கப்பட்டது. காரணம் ‘300’ இயக்கிய ஜாக் ஸ்நைடரின் இயக்கத்திலே வெளிவரும் படம் என்பதனால் மட்டுமல்ல, இயக்குனர் க்ரிஸ்டோபர் நோலானின் கதை தயாரிப்பில் வரும் படம் என்பதாலும் தான்.

காமிக்ஸ் புத்தகங்களின் தலைமகனாகிய டி.சி.காமிக்ஸ் புத்தகங்களில் அங்கம் வகிக்கும் பிக்ஷ்னல் கிரகம் தான் க்ரிப்டான். க்ரிப்டான் கிரகத்தில் வசிக்கும் விஞ்ஞானி ரசூல் க்ரௌ.  கிரகம் அழியப்போகும் நிலைவர க்ரிப்டானின் ஜெனரல் மைக்கேல் ஷனான் அனைவரையும் அழிக்கத் துவங்குகிறார். இந்நிலையில் ரசூல் க்ரௌ தன் சிறிய குழந்தையை ஒரு ஸ்பேஸ் கிராஃப்டில் போட்டு பூமிக்கு அனுப்பி வைக்கிறார். மைக்கேல் ஷெனான் மானுட உலகத்தை அழிக்க நினைக்க இதைத் தடுக்கப் பார்க்கும் ரசூல் க்ரௌவைக் கொலை செய்கிறார்.

க்ரிப்டான் கிரகத்தின் ஒரே வம்ச விருக்ஷமான கால்-எல் என்று பெயரிடப்பட்ட ரசூல் க்ரௌவின் மகன் பூலோகத்தில் தன் வளர்ப்புப் பெற்றோர்களால் க்ளார்க் கென்ட் என்று பெயர் சூட்டப்படுகிறார். சிறு வயதிலேயே சூப்பர் நேச்சுரல் சக்திகள் பெற்றிருப்பதை அறியும் க்ளார்க் (ஹென்றி காவில்) பல உயிர்களைக் காக்கிறார்.  தன் உண்மை அடையாளத்தை மறைப்பதற்காக பல்வேறு இடங்களில் நாடோடி போல் பயணிக்கிறார். 
 


இவர் அனுப்பப்பட்ட ஸ்பேஸ் கிராப்டை கண்டறியும் வில்லன் மைக்கேல், ஹென்றியைக் கைப்பற்றி உலகத்தை அழிக்கப்பார்க்கிறார்.  ஸைன்டிஸ்டாகிய ரசூல் க்ரௌ ஹோலோகிராம் இமேஜாக ஹென்றி முன் தோன்றி தன் மகனின் பிறப்பின் ரகசியத்தைக் கூறுகிறார். இதன் பின் என்ன??? சூப்பர்மேன் வீரதீர சாகஸம் செய்து வில்லனிடமிருந்து உலகத்தைக் காப்பாற்றுவதுதான் மீதிப் படம்.

படத்தின் முக்கிய ஹைலைட்டே சண்டைக் காட்சிகள்தான்.  கடைசி அரை மணிநேரத்தில் பிரமாண்டத்தில் வியந்து, பிளந்த வாய் படம் முடியும் வரை மூடப்படவில்லை.  அப்பப்பா எத்தனை பில்டிங் எத்தனை செலவு.  சண்டைக் காட்சிகளில் காணப்பட்ட பிரம்மாண்டம் ஒரு புறம் வியக்க வைக்க, மறுபுறம் க்ரிப்டான் கிரகம் அமைக்கப்பெற்ற கலையம்சம். ‘சக்கர்பஞ்ச்’, ‘300’, ’வாட்ச்மேன்’ படங்களில் விஷுவல் எபெக்டில் சக்கைப்போடு போட்ட ஜாக் ஸ்நைடர் ‘மேன் ஆஃப் ஸ்டீலிலும்’ ஒரு கலக்கு கலக்கியுள்ளார்.

சூப்பர் ஹீரோ படம் என்பதாலோ என்னவோ!! நாயகன் நாயகிக்கு நடுவில் வரும் ரொமான்ஸ் டிராக்கில் கவனம் செலுத்தப்படவில்லை. நடிப்பிலும் ஹீரோவைத் தவிர வேறு யாரும் பெரிதாக ஈர்க்கவில்லை. ஹான்ஸ் ஸிம்மரின் ,இசை படத்தின் உயிர்நாடி. 
 


என்னதான் ஆஹா ஓஹோ என்று படமாக்கப்பட்டிருந்தாலும் மேன் ஆஃப் ஸ்டீல் முழு திருப்தி தரவில்லை. பேட்மேன் ஸீரிசில்  காணப்பட்ட கெத்தான வசனங்களும், கிளாஸிக் ஃபீல் இதில் குறைவு, ஸ்பைடர் மேன் அயன் மேன் படத்தில் காணப்பட்ட மசாலா அம்சங்களும் இதில் கிடையாது.

மொத்தத்தில்: சூப்பர்ஹீரோ படங்களுக்குத் தேவையான ஹீரோயிசம் இதில் கொஞ்சம் மிஸ்ஸிங். இருப்பினும் விஷுவல் எபெக்டில் சக்கைப் போடு போடும் "மேன் ஆஃப் ஸ்டீல்"  ‘சூப்பர் மேன்’ படம் என்றாலே மொக்கை என்னும் எண்ணத்தை உடைத்து வரும் நாட்களில், இந்த ஸீரிஸை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளலாம் என்ற எண்ணத்தை வித்திட்டுள்ளது.
  • நடிகர் : ஹென்றி காவில்
  • நடிகை : எமி ஆடம்ஸ்
  • இயக்குனர் :ஜேக் ஸ்நைடர்



உத்தம வில்லன்

இனிய காலை வணக்கம் நண்பர்களே...
1. அன்பே! இன்னும் 30 வருசம் மட்டுமே உனக்கு சமைச்சுப்போடுவேன்.அதுக்குப்பிறகு நம்ம பையன் சமைக்கட்டும் ;-))



-----------------------


2. அடிக்கடி மனதை மாற்றிக்கொள்ளும் பெண்ணின் அன்பைப்பெறுவதே வாழ்வின் பெரிய பலம் என்று நம்புவதே ஆணின் ஆகப்பெரிய பலவீனம்்



---------------------------


3. முறுக்கு சாப்பிடும்போது மேல் உதட்டில் கொஞ்சம் ஒட்டிக்குச்சுன்னா முறுக்கு மீசை ஆகிடாது



-------------------------


4. உன்னால நான் கெட்டாலும் என்னால நீ கெடலை.ஏன்னா எப்பவும் நாம ஒன்லி கடலை



-----------------------------


5. கமலின் அடுத்த படத் தலைப்பு 'உத்தம வில்லன்?' # முத்தம வில்லன்னு வைங்க.பொருத்தமாவும் இருக்கும்.இத சாக்கு வெச்சு14 ரீலும் கிஸ்



------------------------------





6. வைகோ தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும்-தமிழருவி மணியன் # ஜோக் அருவி மணியன் ?


-------------------------


7. லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டி: ஜெ # கூந்தலுள்ள மகராசி அள்ளி முடியலாம் - மு க ்


--------------------------


8. ட்விட்டரில் ஹிலரி க்ளிண்டன்– ஒரே நாளில் ஒரு லட்சம் ஃபாலோயர்ஸ்! # மோனிகா லெவின்ஸ்கி ஓப்பன் பண்ணா 2 லட்சம் வந்துடும்



----------------------


9. அனைத்து முதல்வர்களுக்கும், முதல்வராக ஜெ திகழ்கிறார்: நாக.முருகுமாறன் எம்எல்ஏ # எல்லா ஜிங்க் ஜக்கையும் மீறிய ஜிங்க் ஜக்யா



---------------------------


10. இலங்கை பிரச்சனையில் ஜெ போடாத இரட்டை வேடமா?:முக # 1000 தான் இருந்தாலும் தலைவர் போல வருமா?மலையுடன் மடுவை ஒப்பிடுவது தகுமா?


--------------------------


11. அத்வானி ராஜினாமா!-செய்தி # சாங்க் டெடிகேட்டட் - வா நீ தேனி வானி


----------------------


12. நல்ல வழிகாட்டல் என்பது அடர்ந்த இருண்ட வனத்தில் சின்ன விளக்கு போல.முழுதாக எல்லாத்தையும் காட்டாவிட்டாலும் அடுத்த ஸ்டெப்க்கு உதவியாக



----------------------

13. காதலிக்கையில் சக்கர வள்ளிக்கிழங்கு மாதிரி தெரிந்தவள் கல்யாணத்துக்குப்பின் நம்மையே தாக்கற வில்லி ஆகிடுவா(றா)



-----------------------


14. எக்ஸ்பிரஸ் பஸ் ,LSS பஸ் = வழில எந்த ஸ்டாப்பும் நிக்காதுன்னு ஒவ்வொரு ஸ்டாப்பிங்க்லயும் சொல்லிச்சொல்லி பயணிகளை ஏற்றிச்செல்லும் பஸ்


------------------------

15. வணக்கத்துக்குரிய காதலியே.வடச்சட்டில (வாணலி) கீரையை வணக்குவதற்க்குக்கூட( வதக்குவதற்கு) உனக்குத்தெரியலையே !


------------------------


16. இதயம் ஒரு வித்தியாசமான சிறை.இங்கே குற்றம் செய்பவர்கள் மாட்டிக்கொள்வதில்லை.உண்மையான அன்பு வைப்பவரே மாட்டிக்கொள்கிறார்கள்


-------------------------


17. படப்பிடிப்பு நேரத்தில் பாய்பிரண்ட்ஸ்களுடன் கும்மாளமிடும் காஜல். இயக்குனர்் டென்ஷன். # சாங் டெடிகேட்டட் - 1,2,3,4,5,6 எந்த ஊரு என்ன பேரு?


---------------------


18. கவிதாவுக்கு காதல் வந்தா கவிதா இனி கவிதாயினி # அடடே கவிதா கவிதா



----------------------


19. பெண்ணின் வண்டியை ஓவர்டேக் பண்ணத்துடிப்பவன் அவசரக்காரன்.பின்னால் கேப் விட்டு தொடர்பவன் வசியக்காரன்



---------------------

20. அமெரிக்காவில் மாணவிக்கு பதிலாக பள்ளிக்கு செல்லும் ரோபோ # ரோபோன்னு தெரியாம எத்தனை ரோமியோக்கள் ,கிஸ் குடுக்கப்போறானுங்க்ளோ?



------------------------------

Tuesday, June 18, 2013

கில்மா நடந்தாலே தம்பதிதானா? கோர்ட் தீர்ப்பு - காமெடி கலாட்டா

சட்டப்படியான வயது நிரம்பிய ஆணும், பெண்ணும், உடல் ரீதியாக தொடர்பு வைத்திருந்தால், அவர்கள், கணவன் - மனைவி என கருதப்படுவர்; அது, செல்லத்தக்க திருமணம்' என, சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

கோவையைச் சேர்ந்த, பாத்திமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு:எனக்கும், அன்வர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும், முஸ்லிம் வழக்கப்படி, 1994ம் ஆண்டு, திருமணம் நடந்தது. எங்களுக்கு, இரண்டு குழந்தைகள். 1999ம் ஆண்டு, எங்களை விட்டு விட்டு, அன்வர் சென்று விட்டார். 



 அவர், வியாபாரம் செய்து வருகிறார். மாதம், 25 ஆயிரம் ரூபாய், சம்பாதிக்கிறார்.ஜீவனாம்சம் கேட்டு, கோவை, குடும்ப நல கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தேன். என் கணவர் தாக்கல் செய்த பதில் மனுவில், "பாத்திமா, என் மனைவி அல்ல; குழந்தைகள் எனக்கு பிறக்கவில்லை; முஸ்லிம் வழக்கப்படி, திருமணம் நடந்திருந்தால், ம‹தியில் உள்ள, அதற்கான பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும். மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும்' என, கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த, குடும்ப நல கோர்ட், "இரண்டு குழந்தைகளும், ஜீவனாம்சம் பெற உரிமை உள்ளது. ஆவண சாட்சியங்கள் மூலம், திருமணம் நிரூபிக்கப்படவில்லை. எனவே, ஜீவனாம்சம் பெற, பாத்திமாவுக்கு உரிமையில்லை' என, உத்தரவிட்டது. குடும்ப நல கோர்ட் உத்தரவை, என்னைப் பொருத்தவரை, ரத்து செய்ய வேண்டும். ஜீவனாம்சம் பெற, எனக்கு உரிமையுள்ளது என, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த, நீதிபதி கர்ணன் பிறப்பித்த உத்தரவு:திருமணம் தொடர்பாக, அனைத்து சடங்குகளையும் பின்பற்றினால் தான், அது, செல்லத்தக்க திருமணம் என்கிற பொருள் அல்ல. இந்த வழக்கைப் பொருத்தவரை, பாரம்பரிய சடங்குகள் பின்பற்றப்படவில்லை; ஆனால், இரண்டாவது குழந்தை பிறக்கும் போது, அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் தெரிவித்து, மருத்துவமனை ஆவணங்களில், கணவர் கையெழுத்திட்டுள்ளார்


.எனவே, குழந்தைகள், முறைதவறி பிறந்தது என்கிற கேள்வி எழவில்லை. ஏனென்றால், இரண்டாவது குழந்தை பிறப்பின் போது, அறுவை சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டு, கணவர் கையெழுத்திட்டுள்ளதால், பாத்திமா தனது மனைவி என்பதை, கணவர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். திருமண சடங்குகள் என்பது வெறும் சம்பிரதாயம்; கண்டிப்பு இல்லை.

ஒரு பெண், 18 வயதை அடைந்து, 21 வயது நிரம்பிய ஆணுடன், செக்ஸ் உறவு கொண்டு, அதன் மூலம், கர்ப்பமுற்றால், அந்தப் பெண்ணை, மனைவி என்றும், ஆணை, கணவன் என்றும் கருத வேண்டும். அந்தப் பெண், கர்ப்பம் அடையவில்லை என்றாலும் கூட, அவர்களது உறவுக்கான ஆவண சாட்சியம் இருந்தால், கணவன், மனைவி என்றே அவர்கள் கருதப்படுவர்.உடல் ரீதியான தொடர்புக்குப் பின், அவர்கள் கருத்து வேற்றுமையால் பிரிந்து விட முடிவெடுத்தால், கோர்ட் மூலம் விவாகரத்து பெறாமல், வேறு திருமணம் செய்ய முடியாது. தாலி கட்டுவது, மாலை, மோதிரம், மாற்றிக் கொள்வது, அக்னி ”சுற்றி வருவது, திருமணத்தை பதிவு செய்வது, இவை எல்லாம், சமூகத்தை திருப்திபடுத்த, ஒவ்வொருவரும் தங்கள் மத வழக்கப்படி செய்து கொள்பவை



.இருந்தாலும், எந்த ஜோடியும், சட்டப்படி திருமண வயதை எட்டிய பின், உடல் ரீதியான தொடர்பில் ஈடுபட்டால், அதை, செல்லத்தக்க திருமணம் என கருத வேண்டும். அவர்களை, கணவன், மனைவி என, கருத வேண்டும்.மத வழக்கப்படி, சடங்குகளை பின்பற்றி நடத்தப்படும் திருமணங்களிலும், உடல் ரீதியான தொடர்பு நடக்கவில்லை என்றால், அந்த திருமணம் தோல்வியடைந்து, ரத்தாகும் நிலை ஏற்படும். 



எனவே, செல்லத்தக்க திருமணத்தில், சட்ட ரீதியான முக்கிய அம்சம், கணவன், மனைவிக்கு இடையேயான, உடல் ரீதியான தொடர்பு.இந்த வழக்கைப் பொருத்தவரை, மனுதாரருக்கு, ஜீவனாம்ச தொகை, மாதம், 500 ரூபாய், 2000ம் ஆண்டு முதல், வழங்கப்பட வேண்டும். மூன்று மாதங்களுக்குள், பாக்கித் தொகையை, கணவர் வழங்க வேண்டும். அதன்பின், மாதம் தோறும், வழங்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி கர்ணன் உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து 


1. நீதிபதி அவர்களே சம்ப்ரதாயம் சடங்கு ஆகியவை உங்கள் சட்டங்களால் எழுதப்படாமல் காலம் காலமாய் நடைமுறையில் உள்ளது. அதை உங்கள் தீர்புக்களில் கொண்டு வராமல் வர்ணனைக்கு அப்பால் இருந்து இந்த கேசுக்கு தீர்ப்பு கொடுத்திருக்கலாம். Anyhow standards differ person to person



2. தீர்ப்பு சரிதான். கணவன் மனைவி என்ற கோணத்தில் பார்க்க வேண்டும்.. வாசக பெருமக்கள் உடனடியாக வெறுப்பாகி விடுகிறார்கள் ... உடனே லாட்ஜ்,, அது இது என்றெல்லாம் பாடுகிறார்கள்... தீர்ப்புக்கள் வாதத்தின் அடிப்படையில் சட்ட நுணுக்க எங்களுடன் சொல்ல வேண்டும்... எதிரி எனக்கே ஆயிரம் தான் கிடைக்கிறது நானும் ஏழை என்றெல்லாம் சொல்லியிருக்கலாம்...அதனால் தான் மாதம் 500 கொடுக்கச்சொல்லி இருக்கலாம். என்னவோ மனிதாபிமான அடிப்படையில் தீர்ப்பு பாராட்டுக்குரியதே...



3. நீதிபதி இந்த வழக்கில் தீர்ப்பு மட்டுமே சொல்லியிருக்கிறார். சட்டம் இயற்றவில்லை. ஆகையால் வரிக்கு வரி இதை சட்டம் என்று நினைக்கக் கூடாது. கணவன் மனைவி என்ற நம்பிக்கையில் சேர்ந்து வாழபவர்கள் அவர்கள் எல்லா திருமண சடங்குகளையும் கடைப் பிடிக்காமல் இருந்தாலும் அவர்கள் கணவன் மனைவி என்று கருதப்படுவார்கள். இது இந்த வழக்கு அல்லது இது போன்ற வழக்குகளுக்கு மட்டுமே பொருந்தும். விதண்டாவாதமாக விலை மாதர்களிடம் உறவு கொள்வதையும், வெறும் உடல் பசிக்காக சேர்ந்து வாழ்வதையும், திருமணத்தை தாண்டிய சட்ட பூர்வமற்ற உறவுகளையும் இதனுடன் ஒப்பிட்டு வாதம் செய்யக்கூடாது. 



4.  திருமணம் என்பது வேண்டுமானால் அவரவர் முறைப்படி நடக்கட்டும், ஆனால் ரெஜிஸ்ட்ரேஷன் என்பது அரசு அலுவலகத்தில் தான் நடை பெற வேண்டும். நீதியரசரே, நீங்க என்ன மாண்டேக் சிங் தம்பியா? மாதம் 500 அப்படீன்னா டெய்லி 16 ரூபாய், கொஞ்சம் கண்ணை திறந்து உலகத்தையும் பாருங்க, அதோட குடும்ப நல கோர்டுக்கு, அங்கு அன்வருக்கு சாதகமாய் தீர்பளித்த கேவலமான "பிறவி"க்கு கொஞ்சம் சொல்லி கொடுங்களேன். இல்லை மண்டையில் ஏற வில்லையா, ஒன்னாம் கிளாஸ் முதல் மீண்டும் படித்து வர வேண்டும் என்று தீர்ப்பு சொல்லுங்களேன்.


5. அதெப்படி ? அந்தப் பெண், கர்ப்பம் அடையவில்லை என்றாலும் கூட, அவர்களது உறவுக்கான ஆவண சாட்சியம் இருந்தால், கணவன், மனைவி என்றே அவர்கள் கருதப்படுவர் ? அப்போ ஒரு பெண் மறைமுக வீடியோ எடுக்க வேண்டுமா ? நிருபிப்பதற்கு ? ஒரு ஆணை பழிவாங்க கூட இனிமேல் பலபெண்கள் வீடியோ ஆதாரத்துடன் நீதிமன்றம் வருவார்கள். அதை நீதிபதிகள் கண்டு மகிழுங்கள் ..இந்திய சட்டங்களையும் தீர்ப்பையும் நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது. இந்த 500 ரூபாயை வைத்து பல் துலக்க பேஸ்டும் பிரசும் தான் வாங்க முடியும் .

thanx - dinamalar