Wednesday, May 01, 2013

மே தின சிறப்பு சினிமா ரிலீஸ் - ஒரு பார்வை

 

1.மூன்று பேர் மூன்று காதல் - கேளடி கண்மணி, ஆசை, ரிதம், பூவெல்லாம் கேட்டுப்பார், சத்தம் போடாதே போன்ற படங்களை இயக்கிய ‌வஸ்ந்த் சிறிய இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் மூன்று பேர் மூன்று காதல். இதில் அர்ஜுன், விமல் உட்பட மூன்று ஹீரோக்களும், சுர்வின், லாசினி, முக்தாபானு என மூன்று ஹீரோயின்களும் நடிக்கிறார்கள், குறிஞ்சி, மருதம், நெய்தல் என மூன்று நிலபரப்புகளில் நடக்கும் மூன்று கதைகள் இணைந்த படம். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். 


வசந்த் இயக்கும் மூன்று பேர் மூன்று காதல் ஷூட்டிங் முடிந்து வெளிவரத் தயாராகி விட்டது. அர்ஜுன், விமல் இவர்களுடன் தாமிரபரணி பானு நடிக்கிறார். சுர்வீன், லாசினி என்ற இரு புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். யுவன் இசை அமைத்துள்ளார். படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெறுகிறது. இப்போது படத்துக்காக 6வது பாடல் ஒன்றை உருவாக்கி இருக்கிறார் யுவன். இது படத்தின் புரமோஷனுக்கான பாடல். விஜய் டிவியின் லிட்டில் சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்ற ஆஜித் இந்த பாடலை பாடியுள்ளார். "ஸ்டாப் தி பாட்டு..." என்று துவங்கும் இந்தப் பாடல்களை தற்போது ஆன்லைனில் வெளியிட்டுள்ளனர். விரைவில் தொலைக்காட்சியில் காணலாம். படத்தின் காட்சிகளுடன் ஆஜித் பாடுவதும் வீடியோ ஆல்பத்தில் இடம்பெறும்

 ஈரோடு ஆனூரில் ரிலீஸ் 

 

2. சூது கவ்வும் -அட்டகத்தி', 'பீட்சா' போன்ற வரவேற்பு பெற்ற படங்களை தயாரித்தவர் திருக்குமரன் எண்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் 'சூது கவ்வும்'.

விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி நடித்து இருக்கும் 'சூது கவ்வும்' படத்தினை நலன் குமாரசாமி இயக்கி இருக்கிறார். நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர் நலன் குமாரசாமி  என்பது குறிப்பிடத்தக்கது.

'சூது கவ்வும்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் கலந்து கொண்டு படக்குழுவினை வாழ்த்தினார்கள்.

படத்தின் FIRST LOOK TEASER, கானா பாலா பாடியிருக்கும் 'காசு பணம்' பாடல் TEASER மற்றும் Theatrical டிரெய்லர் ஆகியவை திரையிடப்பட்டது. பாடல், டிரெய்லரை பார்த்தவர்கள் அனைவருமே வித்தியாசமாக இருப்பதாக படக்குழுவினை பாராட்டினார்கள்.

'சூது கவ்வும்' படத்தினை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிட இருக்கிறது. திங் மியூசிக் நிறுவனம் இசை உரிமையை வாங்கியுள்ளது.

: விஜய்சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ள படம், ‘சூது கவ்வும்’. மே 1,ம் தேதி வெளிவருகிறது. படம் பற்றி இயக்குனர் நலன் குமரசாமி கூறியதாவது: பார்த்து வந்த வேலையை இழந்த நான்கு பேர், வேலை இல்லாத விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு தவறான காரியத்தில் இறங்குகிறார்கள். ஆனால் அது அவர்களை நல்ல இடத்தில் கொண்டு போய் நிறுத்துகிறது.

தேர்தல் அறிவிப்பு தொடங்கி, தேர்தல் முடிவது வரையில் நடக்கும் சம்பவங்களை கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட கதைதான். ஆனால் அரசியல் படம் அல்ல. சென்னையின் முக்கிய சாலைகளில் துரத்தல் காட்சிகளைப் படமாக்கி இருக்கிறோம். ஆஸ்திரேலியாவில் பின்னணி இசை சேர்த்திருக்கிறோம். விஜய் சேதுபதி 40 பிளஸ் நடுத்தர மனிதராக நடித்திருக்கிறார்.

ஈரோடு ராயலில் ரிலீஸ்


சூது கவ்வும் - சினிமா விமர்சனம்






 


3.  எதிர்நீச்சல்- 3 படத்தில் நடித்த தனுஷ் அடுத்து தனது சொந்த பட நிறுவனமான ஒன்டர்பார் பிலிம்ஸ் சார்பில் ஒரு படத்தை தயாரிக்கிறார். இந்த படத்துக்கு, எதிர்நீச்சல் என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில், தனுஷ் நடிக்கவில்லை. கதாநாயகனாக சிவகார்த்திக்கேயன் நடிக்கிறார். 180, இங்லீஷ் விங்லீஷ் படத்தில் நடித்த பிரியா ஆனந்த் கதாநாயகியாகவும், அட்டகத்தி நாயகி நந்திதா இன்னொரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.

டைரக்டர்கள் பாலுமகேந்திரா, வெற்றிமாறன் ஆகியோரிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்த ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இந்த படத்தின் கதை-திரைக்கதை-வசனம் எழுதி இயக்குகிறார். ஆடுகளம், எங்கேயும் எப்போதும் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஆர்.வேல்ராஜ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்துக்காக தனுஷ் 2 பாடல்களை எழுதியிருக்கிறார். மற்ற பாடல்களை தாமரை, கார்க்கி ஆகிய இருவரும் எழுத, ஒய் திஸ் கொல வெறி புகழ் அனிருத் இசையமைக்கிறார். 

 சிறந்த நடிகர், பாடலாசிரியர் கம் பாடகர் (கொலைவெறி) என பல்வேறு  துறைகளில் கலக்கிவந்த நடிகர் தனுஷ், தற்போது தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். சிவகார்த்தி‌கேயன், பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி வரும் எதிர்நீச்சல் படத்தின் மூலம் தயாரிப்பாளராகியுள்ளார்.இந்த படத்தில் இரு பாடல்களை எழுதியுள்‌ளதோடு மட்டுமல்லாமல் பாடல்களையும் பாடியுள்ளார் தனுஷ். கொலைவெறி பாடல், அனிரூத் இசையமைத்துள்ளார். இந்த கூட்டணியில் வெளி வந்த கொலைவெறி பாடல் சர்வதேச அளவில் ஹிட்டானது. இதையடுத்து  எதிர்நீச்சல் படத்தின் பாடல்களும் ‌மிகப்பெரிய வெற்றியடையும் என்ற நம்பிக்கையில் ஆடியோ உரிமை அதிக விலை கொடுத்து வாங்க சோனி மியூசிக் நிறுவனம் முன்வந்துள்ளது. 


சிவகார்த்திகேயன் நடிக்கும், "எதிர்நீச்சல் படத்தின் படப்பிடிப்பு, தற்போது சென்னையில் துவங்கியுள்ளது. இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, ப்ரியா ஆனந்தும், இன்னொரு கேரக்டரில் தன்சிகாவும் நடிப்பதாக இருந்தது. இப்போது, தன்சிகா வேடத்துக்கு, "அட்டகத்தி நந்திதா ஒப்பந்தமாகியுள்ளார். "அட்டகத்தி பாணியில் இதுவும் காமெடி கலந்த காதல் கதையில் உருவாகிறதாம். ஏற்கனவே, "3 படத்தில் காமெடியனாகவே நடித்த சிவகார்த்திகேயன், "இப்படத்தில் காமெடி கலந்த ஹீரோவாக புதிய கெட்டப்பில் நடிக்கிறார். "இப்படத்திற்கு பிறகு, நல்லதொரு ஜனரஞ்சகமான ஹீரோவாக ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொள்வர் என்கிறார், சிவகார்த்திகேயன்.

தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா இயக்கிய ‘3’ படத்துக்குப் பிறகு வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரிக்கும் படம், ‘எதிர்நீச்சல்’. சிவகார்த்திகேயன், பிரியா ஆனந்த், நந்திதா நடிக்கின்றனர். ஒரு பாடல் காட்சியில் தனுஷ், நயன்தாரா ஆடியுள்ளனர். ஒளிப்பதிவு, ஆர்.வேல்ராஜ். இசை, அனிரூத். பாடல்கள்: தனுஷ், தாமரை, மதன் கார்க்கி. படத்தை எழுதி, இயக்கும் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் கூறியதாவது:

வாழ்க்கையில் எந்த விஷயத்தை அணுகினாலும், அதை பாசிட்டிவ்வாக அணுக வேண்டும். அப்படிச் செய்தால்தான் வெற்றி கிடைக்கும் என்ற கருத்தை மையப்படுத்தி உருவான படம். மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றும் இளைஞனாக சிவகார்த்திகேயன், ஸ்கூல் டீச்சராக பிரியா ஆனந்த், தடகள கோச்சாக நந்திதா நடிக்கின்றனர். நான் எழுதிய ‘சத்தியமா நீ எனக்கு தேவையில்ல’ பாடல் காட்சியில் தனுஷ், நயன்தாரா, சிவகார்த்திகேயன் இணைந்து ஆடியுள்ளனர். நாகர்கோயிலில் ஷூட்டிங் நடந்தது. இந்தப் பாடலை தனுஷ், வேல்முருகன் பாடியுள்ளனர். 


ஈரோடு அபிராமி , அன்னபூரணி  யில் ரிலீஸ்


எதிர் நீச்சல் - சினிமா விமர்சனம்



http://www.adrasaka.com/2013/05/blog-post_2.html 

ஆபீஸ்க்கு வெளில நின்னுக்கிட்டே ரிசப்ஷனிஸ்ட்க்கு சிக்னல் தருவது தப்பா?

1. இன்று உலக புத்தக தினம் என்பதற்காக கேர்ள் ஃபிரண்டுக்கோ , காதலிக்கோ  சரோஜா தேவி புக்கெல்லாம் கொடுக்க ஐடியா வெச்சிருப்பாங்க



---------------------


2. ஏப்ரல் 26: கணித மேதை ராமானுஜம் நினைவு நாள் .பிகரை கணக்கு பண்ண உகந்த நாள்


---------------------


3. அரைவேக்காட்டுத்தனமான விமர்சனங்களை ஜீரணிப்பது கஷ்டமாகிறது.


2 டைம் படிங்க.முழு வேக்காடு ஆகிடும்



-----------------------


4. சென்னிமலை ,வெள்ளோடு ,கவுண்டச்சிபாளையம் 3 ஊர் வாய்க்கால்லயும் தண்ணி திறந்து விட்டுட்டாங்க.பெண்கள் இங்கே வந்து துவைக்கவும்



-------------------------


5. வானொலியின் தந்தை" என அழைக்கப்படும் மார்கோனி பிறந்த தினம்.எனவே பொண்ணுங்க ரேடியோ பூவை கூந்தலிலோ சவுரியிலோ சூடி ஆபீஸ் போகவும்



-------------------------


6. DR்.எனக்கு அடிக்கடி கோபம் வருது.எல்லார் மேலயும் எரிஞ்சு விழறேன்.




ஏண்டா இப்டி இருக்கே? ராஸ்கல்.ஸ்டுப்பிட்.பிளடி இடியட்



--------------------------


7. ட்விட்டர்கள் தங்கள் பயோவில்் இப்போ இருக்கும் ஊர்ப்பெயரை குறிப்பிட்டால் அந்தந்த ஊர் பற்றி தகவல் தேவைப்படுபவருக்கு உதவியாக இருக்கும்



----------------------


8. தூள் திவ்யாவா பிகரு இருந்தாலும் ஹாஸ்டல்ல தங்கி இருந்தா ஹாஸ் டல் திவ்யா தான்்



-------------------


9. தம்பி விஜயகாந்த் கட்சியை அழிக்கப் பார்க்கிறார் ஜெ # அப்போ அழகிரிக்கு கேப்டன் சித்தப்பாவா ?ஹி ஹி


-----------------------


10. சொந்த சரக்கு கைவசம் இல்லைன்னா எதிர்க்கீச்சு போடுங்க.அது ரொம்ப ஈசி.ஒரு சொந்த ட்வீட் போடுவதற்குள்.3 எ கீ போட்டுடலாம்



------------------------


11. பொண்ணுங்க ட்வீட்சை மட்டும்தான் RT பண்றான் கற கெட்ட பேரு வராம இருக்க போனா போவுதுன்னு அப்பப்ப ஆண் ட்வீட்சையும் RT செய்க




-------------------------


12. நம்ம சொந்த ட்வீட் மொக்கையா இருந்தாலும் RT பண்ணும் ட்வீட்ஸ் தரமா இருக்கற மாதிரி பார்த்துக்கிட்டா நம்ம மைனஸ் மறைஞ்சிடும்



---------------------


13. ஒரு நல்ல ட்வீட்டை பார்த்ததும் டக் னு RT பண்ணிடுங்க.பிரபல ட்வீட்டர் RT பண்ணின பிறகு நாம பண்ணுவோம்னு காத்திருக்க வேண்டாம்




----------------------


14. மக்களே! எத்தனை ட்வீட் போட்டோம் என்பதை விட எத்தனை பேரை தூக்கி விட்டோம் , RT செஞ்சோம் என்பதையும் பாருங்க. நாமும் வளர்வோம், வளர்த்துவோம்


----------------------


15. டுடே சச்சின் தெண்டுல்கர் பிறந்தநாள் இன்றைய நீதி - பிகருக்கு வயசு உங்களுதை விட ஜாஸ்தியா இருக்குன்னு தயங்கி பின் வாங்கி விடாதீர்



----------------------


16. கிரவுண்டில் எல்லோரும் வாக்கிங் போகும் திசைக்குஎதிர் திசையில் நீ நடந்தால் ஒரு ரவுண்டுக்கு 2 முறை பிகரை பார்க்கலாம்



---------------------


17. வாக்கிங் போறப்ப பசிச்சா ஒரு ஐடியா.மாடி வீட்டு மைனாக்கள் எந்திரிக்க சோம்பல்பட்டு பால்குண்டா வாசல்ல வெச்சிருப்பாங்க.அதை சுட்டுடலாம்



-----------------------


18. ட்விட்டர் பற்றி அரைகுறை அறிவுள்ள மாலைமலர் நிருபரின் தலைப்பு செய்தி - சபாநாயகர் ஏற்கனவே வெச்சிருந்ததை விட்டுட்டு புதுசா வெச்சிருக்கார்



----------------------


19. பஸ்ல ஜன்னலோரம் சீட் கிடைச்சா செமயாத்தூக்கம் வருதே.பஸ் டிரைவருக்குக்கூட ஜன்னல் சீட் தானே? அய்யய்யோ ;-)



-----------------------


20. அவுட் ஸ்டேண்டிங் பர்பார்மென்ஸ் = ஆபீஸ்க்கு வெளில நின்னுக்கிட்டே ரிசப்ஷனிஸ்ட்க்கு சிக்னல் தருவது




--------------------------

Tuesday, April 30, 2013

3 பேர் 3 காதல் - டைரக்டர் வஸந்த் பேட்டி @ கல்கி

அறிமுகம்

3 பேர் 3 காதல்


ஆனால் காதல் கதையல்ல!

அர்ஜுன்
டைரக்டர் வஸந்த் பேட்டி...

தமிழ் சினிமாவுல புராண, இதிகாசங்கள்ல ஆரம்பிச்சு, இன்னைக்குவரை ஆயிரக்கணக்கான படங்கள்ல காதலைச் சொல்லியாச்சு. சொல்லப் போனா, தமிழ் சினிமா, காதல் என்ற வட்டத்துக்குள்ளேயே உறியடிச்சுக்கிட்டு இருக்கு. அப்படி இருக்கும் போது, உங்களோடமூன்று பேர் மூன்று காதல்படத்துல இதுவரை சொல்லாத எந்தக் காதலை புதுசா சொல்லப் போறீங்க? என்று படு சீரியஸாக டைரக்டர் வஸந்திடம் கேட்டால்...
அவரோ அசராமல், இதுவரை தமிழ் சினிமாவுல சொல்லாத காதல் கதையை நான் இந்தப் படத்துல சொல்லி இருக்கிறதா இதுவரை யார்கிட்டேயும் சொல்லவே இல்லை. ஏன்னா, இது ஒரு லவ் ஸ்டோரி கிடையாது," என்றார்.
என்ன டைரக்டர் சார்! படத்துக்குத் தலைப்பு மூன்று பேர் மூன்று காதல்னு வைப்பீங்களாம்; படத்துல அர்ஜுன், சேரன், விமல்னு மூணு ஹீரோக்களாம். அவங்களுக்கு ஜோடியாக முக்தா பானு, சுர்வீன் சாவ்லா, லாசினின்னு மூணு ஹீரோயின்களாம். ஆனா, ‘இது காதல் படம் இல்லைன்னு ரொம்பத் தான் கலாய்க்கறீங்களே! இது நியாயமா?
நான் பொய் சொல்லலை; நான் சொல்வதெல்லாம் .எஸ்.. தரச்சான்றிதழ் பெற்ற நிஜம்!"
அப்படீன்னா?
இது லவ் ஸ்டோரி இல்லை; ஆனா லவ் பத்தின படம். லவ்வுக்கு இந்த உலகத்துல, மக்கள் மத்தியில எவ்வளவு பவர் இருக்குன்னு காட்டற படம். காதலால இந்த உலகத்துல என்னென்ன எல்லாம் நடக்கலாம்னு காட்டி இருக்கேன். இன்னும் சொல்லணும்னா, ‘இந்த உலகத்துல லவ்வப் போல பைத்தியக்காரத் தனமான விஷயம் வேற ஒண்ணும் இல்லைன்னு விமல் ஒரு டயலாக்கூட பேசுவாரு."
என்னது?
யோசிச்சுப் பார்த்தா, இந்த உலகத்துல லவ்வப் போல பைத்தியக்காரத்தனமான விஷயம் வேற ஒண்ணும் இல்லை. ஆனா நாம யோசிச்சாதானே!’ன்னு விமல் ஒரு டயலாக் சொல்வாரு. அதைத்தான் சொன்னேன்."
அப்ப உங்க பார்வையில லவ்னா என்ன?
காதலை நான் எப்படிப் பார்க்கறேன்னா, பல வார்த்தைகள், உணர்வுகளோட ஒட்டுமொத்த உருவமாத்தான் பார்க்கறேன். அன்புகூட என்னைப் பொறுத்தவரைக்கும் காதல்தான். பெண்ணாசை, மது குடிப்பதால் வரும் பிரச்னைகள், உறவுகளில் வரும் சிக்கல்கள், ரொம்ப நெருக்கமானவங்களோட மரணத்தோட நம்ம வாழ்க்கை முடிஞ்சிடறதில்லைன்னு பல விஷயங்களை நான் என்னோட படங்கள்ல டீல் பண்ணி இருக்கேன். இதுமாதிரியான விஷயங்கள்தான் நான் படம் எடுக்கத் தூண்டுகோலாய் இருக்கு."
சரி! அது மாதிரி இந்தப் படத்துக்கு தூண்டுகோலாய் இருந்தது எது?
காதலைப் பத்தி ரொம்ப நாளா என் மனசுக்குள்ள ஒரு கருத்து இருந்துகிட்டு இருந்துச்சு. யதேச்சையா நா. பிச்சமூர்த்தியோட கவிதையைப் படிச்சேன். அந்தக் கவிதையில, அவரும் நான் நினைச்சுக் கிட்டு இருந்த விஷயத்தையே சொல்லி இருந்தார். எனக்கு அதைப் படித்தபோது கொஞ்சம் அதிர்ச்சியாக்கூட இருந்தது. அதிலிருந்து உருவானது தான் இந்தக் கதை. இந்தக் கதை எல்லாருக்கும் ரொம்பப் பிடிக்கும். ‘ஒரு கதை, நெய்தல் என்கிற கடலும் கடல் சார்ந்த இடத்துலயும், இன்னொண்ணு குறிஞ்சி என்கிற மலையும் மலை சார்ந்த இடத்துலயும், மூணாவது கதை, மருதம் என்கிற வயலும் வயல் சார்ந்த இடத்துலயும் நடக்குது. இன்னொரு விஷயம் என்னன்னா, படத்துல சொல்லி இருக்கிற மூணு பேரோட காதல்ல ஏதாவது ஒண்ணை நிச்சயமா படம் பார்க்கிற எல்லாரும், ‘அட! இது நம்ம லைஃப் கதை மாதிரியே இருக்கேன்னு ஐடென்டிஃபை பண்ணி ரசிப்பாங்க! இந்தப் படம் நிச்சயமா ஜனரஞ்சகமான, குடும்பத்தோடு ரசிக்கக் கூடிய ஒரு படமா இருக்கும்."
அன்று சூர்யா; இன்று வருண்

சூர்யா, சிம்ரன், ஜோதிகா, சுவலட்சுமி, சுர்வீன், லாசினி என்று டைரக்டர் வஸந்தால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் லிஸ்ட்டில் லேட்டஸ்ட்டாகச் சேர்ந்திருப்பவர் ரித்விக் வருண். வஸந்த் தம் டைரக்ஷனிலேயேமூன்று பேர் மூன்று காதல்படத்தில் ஒரு பாடல் காட்சியின் மூலமாக வருணை அறிமுகப்படுத்துகிறார். லயோலா கல்லூரியில் விஸ்காம் முடித்திருக்கும் வருண், மணிரத்னத்திடம் கொஞ்ச நாள் பயிற்சி பெற்றவர்.
மகனை நடிகராக்கும் ஐடியா திடீரென்று எப்படி வந்தது?" என்று கேட்டபோது, மூன்று பேர் மூன்று காதல் படத்தில் ஒரு ஸ்பெஷல் ரோலுக்கு, வருணையே நடிக்க வைக்க முடிவு செய்தேன். அவனிடம் விஷயத்தைச் சொன்னபோது, அவனுக்கு ஆச்சர்யம். உடனே .கே. சொன்னான். காரணம், அவனுக்கும் நடிக்க ஆர்வம் இருந்திருக்கிறது. இந்தப் படம் அவனுக்கு ஒரு நல்ல அறிமுகமாக இருக்கும் என்பது நிச்சயம்" என்றார் வஸந்த்.
மகனை நடிக்க வைப்பது என்று முடிவானதும், தமது குருநாதர் கே. பாலசந்தரிடம் அழைத்துக் கொண்டு போனார் வஸந்த். ‘உன்னுடைய உயரமும், பர்சனாலிடியும் உனக்கு பெரிய பிளஸ் பாயின்ட்என்று சொல்லி வாழ்த்தினார் கே.பி. அடுத்து பாலுமகேந்திராவை சந்தித்தபோது, ‘உனக்கு நல்ல போட்டோஜீனிக் முகவெட்டு இருக்கு!’ என்று சொன்னார். இயக்குனர் மகேந்திரன் தானே வரைந்த சத்யஜித்ரே படம் ஒன்றைப் பரிசளித்து வாழ்த்தினார். பிரசாத் லேப்பில் நடந்த நிகழ்ச்சியில் கே.பி., ரித்விக் வருணை அறிமுகப்படுத்தினார்.

நன்றி - கல்கி

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 11


உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் ஏப்ரல் 2-ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால், அந்த தீர்ப்பு தங்களுக்கு சாதகமானதாக இருக்க வேண்டுமே என்கிற ஆதங்கம் தூத்துக்குடி மக்களிடம் மட்டும் அல்லாமல் இந்த ஆலைக்கு எதிராக குரல் கொடுத்து வரும் அனைத்து சமூக ஆர்வலர்களிடமும் மேலோங்கி இருந்தது.


இந்த சூழ்நிலையில், மார்ச் 23-ம் தேதி மக்கள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார்கள். அப்போது தூக்கத்தில் இருந்தவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. கண் எரிச்சல், தலைவலி, வாந்தி, மயக்கம் என அவதிப்பட்டார்கள். ஏதோ தங்களுக்கு மட்டும் இது போல இருக்கிறது என தூக்க கலக்கத்தில் நினைத்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால், நேரம் செல்லச் செல்ல இந்த தாக்கம் அதிகரிக்க தொடங்கியதால் வீடுகளில் இருந்த குழந்தைகள் மூச்சு விடமுடியாமல் அவதிப்பட்டார்கள். இதனால் குழந்தைகளின் இடைவிடாத அழும் சத்தமும், அலறல் சத்தமும் கூடிக் கொண்டே போனது.



அப்போதுதான் ஏதோ விபரீதம் ஏற்பட்டு விட்டது என்பதை மக்கள் புரிந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் விசாரிக்க தொடங்கினார்கள். வீட்டுக்கு வெளியே வந்தபோது காற்றில் கரும்புகை சூழ்ந்து நிற்பதை பார்த்தார்கள். அதில் அமிலத்தின் நெடி தூக்கலாக இருப்பதையும் அறிந்த பிறகே ஸ்டெர்லைட் ஆலையில் ஏதோ சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டார்கள்.



உடனடியாக மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டவர்களை தூக்கிக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு ஓடினார்கள். எங்கு பார்த்தாலும் பதற்றம் தொற்றிக் கொண்டது. சுவாசிக்க முடியாமல் மூச்சு திணறல் ஏற்பட்டதில் ஐநூறுக்கும் அதிகமானோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வெளி நோயாளிகளாக ஏராளமானோர் முதல் உதவி மட்டும் எடுத்துக் கொண்டு வீடுகளுக்கு திரும்பினார்கள். தனியார் மருத்துவமனைகளிலும் கூட்டம் அலைமோதியது. நச்சுப்புகையின் பாதிப்பு காரணமாக பல இடங்களில் மரங்களின் இலைகள், செடிகள், பூக்கள் நிறம் மாறி கருகிப்போயின. அந்த அளவுக்கு புகையின் தாக்கம் வீரியத்துடன் இருந்தது.




வலுவடைந்த போராட்டம்


ஸ்டெர்லைட் நிறுவனம் அளவுக்கு அதிகமாக கந்தக டை ஆக்சைடு என்ற நச்சுப்புகையை வெளியேற்றியதால் இந்த அளவுக்கு மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பது தெரிய வந்தது. இதனால் மக்களுக்கு ஆலை மீதான அச்சம் அதிகரித்தது. 'காற்றில் சிறிதளவு புகையின் அளவு கூடியதற்கே இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுமானால், ஒருவேளை ஆலையில் பெரிய விபத்து ஏற்பட்டால் தூத்துக்குடி நகரமே காலியாகி விடும் போலிருக்கே' என ஒருவருக்கொருவர் பயத்தை பகிர்ந்து கொண்டார்கள்.



இதனால் இந்த நச்சு ஆலைக்கு தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுவடைந்தது. மீனவ மக்கள் கடலுக்கு செல்லாமல் ஸ்டிரைக்கில் இறங்கினார்கள். வணிகர்கள் கடைகளை அடைத்து அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆலையை சுற்றிலும் இருக்கும் கிராமங்களை சேர்ந்த மக்கள், தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி ஆலைக்கு எதிரான தங்களின் எதிர்ப்பை அரசுக்கு தெரியப்படுத்தினார்கள்.
புகை வெளியேறியதால் ஏற்பட்ட பாதிப்பை நேரடியாக மக்கள் உணர்ந்ததால் இந்த போராட்டத்தில் அனைவருமே உணர்வு பூர்வமாக கலந்து கொண்டனர். அதனால் இது மிகப்பெரிய போராட்டமாக வெடித்தது. ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வந்து சாலை மறியல் செய்தார்கள். தமிழ் அமைப்புகள், கடலோர மக்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட சமூக அமைப்புகள், மீனவ சங்கங்கள், வியாபாரிகள் சங்கம், தமிநாடு வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் ம.தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் மக்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றன. தூத்துக்குடி நகரத்தின் ஒட்டு மொத்த மக்களும் மார்ச் 28-ம் தேதி நடந்த போராட்டத்தில் பங்கேற்றதால் நகரமே ஸ்தம்பித்தது. மக்கள் வன்முறையில் இறங்கிவிடாமல் பாதுகாக்க போலீஸார் திணறினார்கள்.


விழித்துக் கொண்ட தமிழக அரசு



தன் எழுச்சியாக ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற போராட்டத்தில், 'ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்ற ஒரே கோரிக்கை மட்டுமே முதல்வருக்கு முன்வைக்கப்பட்டது. தொடக்கத்தில் அரசு இந்த விசயத்தை மிகச் சாதாரணமாகவே பார்த்தது. மக்கள் போராட்டம் என்பது ஓரிரு நாளில் முடிந்து போகக்கூடிய விசயம் தானே. அதோடு எளிதில் மறந்து போகக்கூடியவர்களும் தானே..? அதுவே அரசியல்வாதிகளை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகிறது.



அதனால் இந்த விசயமும் மக்கள் மனதில் இருந்து சீக்கிரமே நீர்த்து போய் விடும் என அதிகார வட்டாரத்தினர் சாதாரணமாக நினைத்தார்கள்.



அதனால்தான் முதலில் இந்த விவகரம் பற்றி பேசிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், 'ஆலையில் இருந்து நிர்ணயிக்கப்பட்ட அளவையும் விடவும் அதிகமாக வெளியேறிய புகையே மக்கள் பாதிப்பு அடைய காரணம்' என தெரிவித்தார். பின்னர் அதனை மாற்றிக் கொண்டு, 'மக்கள் மயக்கம் அடையும் அளவுக்கு பிரச்னை ஏற்பட காரணம் என்ன என்பதை ஆய்வு செய்து வருகிறோம்' என பட்டும் படாமலும் பேசினார். அதிகாரிகளும் சரி, ஆலை நிர்வாகமும் சரி, நச்சுப்புகையால் ஏற்பட்ட பாதிப்பை சரிக்கட்ட எடுத்த நடவடிக்கைகள் மக்களிடம் ஆத்திரத்தை ஏற்படுத்தியதால் முன்னிலும் வேகமாக போராட ஆரம்பித்தார்கள்.



ஏற்கெனவே, ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்டு இருக்கும் அழிவுகளால் மக்கள் ஆத்திரத்தில் இருந்தனர். கடலுக்குள் ஏற்பட்டு இருக்கும் மாற்றங்கள் மீனவர்களின் வாழ்வாதாரதை பாதிக்க வைத்தது.சுற்றுப்பகுதிகளில் விவசாயம் அழிந்து போனதால் விவசாயிகள் கோபம் அடைந்து இருந்தனர். நிலத்தடி நீர் மஞ்சள் நிறத்துக்கு மாறி,  குடிக்க இயலாமல் போய் இருந்ததால் பொது மக்கள் அவதிப்பட்டனர். இவை அனைத்தும் சேர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களை ஒருங்கிணைத்து மிக்கபெரிய போராட்டத்தில் ஈடுபட வைத்தது. 





ஆலையை மூடக்கோரி மார்ச் 28-ல் பந்த நடக்கும் என போராட்டக் குழுவினர் அறிவிப்பை வெளியிட்டதும், தூத்துக்குடி வரலாற்றிலே முதல் முறையாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. ஆலைக்கு அருகில் ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். நூறு சதவிகித வெற்றியை பார்த்து அரசு நிர்வாகம் மலைத்துப் போனது. இனியும் பொய் தகவல்களை கொடுத்தால் மேலிடத்தின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமென உள்ளூர் நிர்வாகிகள் பயந்தார்கள்.


அதனால் மக்களின் நியாயமான போராட்டத்தையும் அதன் வீரியத்தையும் விவரமாக அறிக்கையாக தயாரித்து முதல்வருக்கு அனுப்பினார்கள். மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் ஆலையிலிருந்து வெளியேறிய நச்சுப்புகை நூற்றுக்கணக்கான மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி மருத்துவ சிகிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளியதை சுட்டிக் காட்டியது. இதை அனைத்தையும் பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா, மார்ச் 30-ம் தேதி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான உத்தரவை பிறப்பிக்க செய்தார்.    




இந்த அறிவிப்பைகேட்டதும் பட்டாசு வெடித்து கொண்டாடிய தூத்துக்குடி மக்களின் சந்தோசம் நீடித்ததா..? நாளை பார்க்கலாம்...



diski - தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 1 , 2 ,3-http://www.adrasaka.com/2013/04/1-2-3.html



 2  -தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 4, 5 -http://www.adrasaka.com/2013/04/4-5.html

3.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 6 , 7-http://www.adrasaka.com/2013/04/6-7.html



தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 8-http://www.adrasaka.com/2013/04/8.html