Wednesday, January 30, 2013

ஜெ VS கமல் - மோதல் - உண்மையான காரணம் என்ன?ஜு வி யின் அலசல்

விஸ்வரூப அரசியல்!

சேட்டிலைட் நிழல் யுத்தம்... சென்சார் சண்டை... கோலிவுட் மோதல்
 
'யார் என்று புரிகிறதா
 இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே
சரித்திரம் படைத்தவன்

ஞாபகம் வருகிறதா’ - 'விஸ்வரூபம்’ படத்தில் வரும் பாடல் வரிகள் இவை. தடைகளைத் தாண்டி கமல் எப்படி வெல்லப்போகிறார் என்பதை தமிழகமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. விஸ்வரூப விவ காரத்தில் திரைக்குப் பின்னால் நடக்கும் சில விஷ யங்கள் இங்கே..


பிரச்னைக்குக் காரணம், தி.மு.க. நெருக்கமா?


''சென்சார் போர்டில் அசன் முகம்மது ஜின்னா என்ற முஸ்லிம் ஒருவரே படத்தைப் பார்த்து ஓகே செய்து இருக்கிறார். அப்படி இருக்கும்போது படத்தை எதிர்ப்பது எந்த வகையில் நியாயம்?’ என்று கமல் தரப்பில் கேட்கிறார்கள். இந்த ஜின்னா யார் தெரியுமா? கடந்த சட்டசபைத் தேர்தலில் ஆயிரம் விளக்குத் தொகுதியில் வளர்மதியை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர்.


மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ-வான ஜவாஹிருல்லா, ''முஸ்லிம்களுக்கு எதிரானகாட்சிகள் 'விஸ்வரூபம்’ படத்தில் இருப்பதாக செய்தி வந்ததும் அதற்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளி யிட்டோம். உடனே, கமல் சார்பில் என்னிடம் பேசியவர் ஜின்னாதான். 'படத்தின் டிரைலரைப் பார்த்து விட்டு எதிர்க்க வேண்டாம். கமல் பேசத் தயாராக இருக்கிறார்’ என்றார். படத்தை சென்சார் செய்வதோடு ஜின்னாவின் வேலை முடிந்து விட் டது. அவர் எதற்காக கமலுக்கு ஆதரவாகப் பேச வேண்டும்? அப்படிப்பட்டவர் எப்படி படத்தை சென்சார் செய்திருப்பார்?'' என்கிறார்.


தி.மு.க-வுடன் கமல் காட்டிய நெருக்கம்தான் விவ காரம் விஸ்வரூபம் எடுக்கக் காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ''படத்தின் சேலம் உரிமத்தை உதயநிதி ஸ்டாலின் வாங்கி இருக்கிறார். சென்சார் போர்டில் தி.மு.க-வைச் சேர்ந்த ஜின்னா, ப.சிதம்பரம் நூல் வெளியீட்டு விழாவில் கருணாநிதியோடு கமல் மேடை ஏறியது, இவற்றை எல்லாம் ஆளும் கட்சி ரசிக்கவில்லை. அதன்பிறகுதான், கமலுக்குப் பிரச்னைகளும் ஆரம் பம் ஆனது'' என்கிறார்கள்.



ஜின்னா என்ன சொல்கிறார்? ''எந்த மதத்தின் உணர்வும் புண்படுத்தப்படுவதை தணிக்கைத் துறை விதிமுறைகள் அனுமதிப்பது இல்லை. வழி காட்டும் முறைகளின்​படிதான் தணிக்கை நடக்கிறது. சமுதாயத்தின் அமைதியைக் குலைக்கக்கூடிய வகை யிலோ, உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலோ, வக்கிரம் மற்றும் ஆபாசம் நிறைந்த​தாகவோ காட்சிகள் இருப்பின், அவை நீக்கப்படுகின்றன. ஒரு படத்துக்கான தணிக்கை முறைகளில் அதில் பங்கு பெறும் உறுப்பினர்களின் பெரும்பான்மை முடிவே இறுதியானது. நான் என் கடமையில் இருந்து ஒரு போதும் தவறியது இல்லை, இஸ்லாத்துக்கு எதிராக மட்டுமல்ல, எந்த மதத்துக்கும் எதிரான தவறான உள்நோக்கம் கொண்ட சித்திரிப்புகளை பலமாகவே எதிர்த்து இருக்கிறேன்'' என்கிறார்.  


சேட்டிலைட் நிழல் யுத்தம்!


'விஸ்வரூபம்’ சேட்டிலைட் உரிமம் முதலில் ஒரு  டி.வி-க்கு விற்கப்பட்டது. அதன்பிறகுதான், டி.டி.ஹெச்-ல் 'விஸ்வரூபம்’ வெளியாகும் என்பதை கமல் அறிவித்தார். 'இதை நீங்கள் முன்பே சொல்லி இருந்தால், நாங்கள் இன்னும் விலையைக் குறைத்துக் கேட்டு இருப்போம்’ என்று  டி.வி. தரப்பில் இருந்து சொல்லப்பட்டதாம். விலையைக் குறைக்கச் சொல்லி பேரம் நடந்து இருக்கிறது. 



கமல் தரப்பிலோ, 'இதைவிட அதிக விலைக்கு வாங்க வேறு சேனல் தயாராக இருக்கிறது. உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் விடுங்கள்’ என்று சொன்னதோடு, வேறு சேனலுக்கும் படத்தை விற்று விட்டாராம். இந்த நடவடிக்கை அந்த டி.வி. தரப்பை கொந்தளிக்க வைத்து விட்டதாம். ''சேட்டிலைட் உரிமத்துக்கான நிழல் யுத்தமே, 'விஸ்வரூபம்’ படத்துக்கு எழுந்த தடை'' என தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் பகிரங்கமாகவே சொல்லி இருக்கிறார்.



'விஸ்வரூபம்’ பிரச்னை நீதிமன்றத்துக்குப் போனதும் நீதிபதி வெங்கடராமன் படத்தைப் பார்க்க முடிவு செய்தார். இதற்காக பிரசாத் ஸ்டுடியோவில் 'விஸ்வரூபம்’ ஸ்பெஷலாகத் திரையிடப்பட்டது. சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களும் நீதிபதிகளுடன் படம் பார்த்தனர். வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு அதிகாரிகளுடன் கமலைப் பேசச் சொன்னது நீதிமன்றம். அநேகமாக, இந்த இதழ் உங்கள் கைகளில் தவழும்போது நீதிமன்றத் தீர்ப்பு வந்திருக்கும்.


''நாங்கள் தேசத் துரோகிகளா?''


'விஸ்வரூபம்’ படத்துக்கு முஸ்லிம் அமைப்புகளின் எதிர்ப்பை அடுத்து கமல் வெளியிட்ட அறிக்கையில், ''நியாயமான தேசப்பற்றுமிக்க முஸ்லிம் யாரும் இந்தப் படத்தைப் பார்த்தால் பெருமைப்படுவார்கள்'' என்று சொல்லி இருக்கிறார். இதுவும் முஸ்லிம் கூட்டமைப்பினரை கொதிக்க வைத்திருக்கிறது. ''சிறு குழு எனச் சொல்லி எங்களை தேசப்பற்று இல்லாதவர்களைப்போல் சித்திரித்து இருக்கிறார். கூடங்குளம் தொடங்கி தர்மபுரி கலவரம், எல் லையில் இந்திய வீரர்கள் தலை துண்டிக்கப்பட்ட விவகாரம் வரை குரல் கொடுக்கும் நாங்கள் தேசத் துரோகிகளா?'' என கேள்வி எழுப்பும் அவர்கள், ''படத்தில் ஹெலிகாப்டரில் இருந்து அமெரிக்கப் படை தாலிபான்களை சுடும் காட்சி வரும்.



 அதில் அப்பாவியான பெண் ஒருவர் பலியாவார். இதற்காக அமெரிக்க வீரர்கள் பரிதாபப்படுவார்கள். தாலிபான்கள் அமெரிக்காவின் தாக்குதலுக்குத் தப்பி ஓடும் காட்சியில் மனைவி, பிள்ளைகளை விட்டுவிட்டு ஓடுவார்கள். அப்போது ஒரு தாலிபான், 'குடும்பத்தினரையும் அழைத்துக்கொண்டு தப்பிச் செல்லலாம்’ என்பார். அதற்கு இன்னொரு தாலிபான், 'அமெரிக்கர்கள் பெண்களை குழந்தைகளை கொல்ல மாட்டார்கள்’ என டயலாக் பேசுவார். இப்படி படம் முழுவதும் அமெரிக்காவுக்கு வக்காலத்து வாங்குவதுபோல காட்சிகளை அமைத்து இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது'' என்றனர்.


சினிமா மோதல்!
கமலுக்கு ஆதரவாக திரையுலகத்தினரும்அரசியல் கட்சியினரும் குரல் கொடுக்கின்றனர். ரஜினி, பாரதிராஜா, பார்த்திபன், அஜித் ஆகியோர் கமலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், பா.ம.க-வும் 'விஸ்வரூபம்’ படத்தின் மீதான தடையை நீக்க வேண்டும் என்று குரல் கொடுக்கின்றன. தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவர் அமீர் ''யாரும், தனிப்பட்ட கருத்துக்களை வெளியிட்டு பிரச்னையை பெரிதுபடுத்த வேண்டாம். நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு கருத்து தெரிவிக்கலாம்'' என்று சொல்லி இருப்பதை கோலிவுட் ரசிக்கவில்லை.



'கமலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு திரையுலகம் மௌனமாக இருப்பது ஏன்?’ என்று பாரதிராஜா கேள்வி எழுப்பி இருக்கிறார். இதற்கு இன்னொரு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றன. ''ஈழத் தமிழர்களின் வலியைச் சொல்லும் 'காற்றுக் கென்ன வேலி’ படத்துக்கும் இதேபோல் தடை வந்த போது அந்தப் படத்தின் இயக்குநர் புகழேந்தி தங்கராஜும் தயாரிப்பாளர் வெள்ளையனும் மட் டுமே போராடினர். அப்போது, இந்த பாரதிராஜா எல்லாம் எங்கே போனார். மார்க்கெட் வேல்யூ உள்ள நடிகர்களுக்கு மட்டுமே குரல் கொடுப்பது அநியாயம்'' என்று குமுறுகிறது கோலிவுட்டின் ஒரு பிரிவு.


''இது கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது!''


கமல் ரசிகர்களும் கருத்து சுதந்திரத்தை ஆதரிப் பவர்களும் சொல்லும் வாதம் இதுதான்...


''நடப்பு விஷயத்தை படமாக எடுக்கும்போது தாலிபான் தீவிரவாதிகளை வேறு மதத்தின் அடையாளமாக எப்படிக் காட்ட முடியும். ஆப்கானிஸ்தானில் நடக்கும் விவகாரத்தை இங்கே இருக்கிற முஸ்லிம்கள் தங்களோடு ஏன் தொடர்பு படுத்திக் கொள்கிறார்கள்? ஆப்கானிஸ்தான் மற்றும் தாலிபான் தீவிரவாதம் பற்றி எத்தனையோ ஆங் கிலப் படங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்தக் காட்சிகள் எப்படி அனுமதிக்கப்பட்டதோ, அதே அடிப்படையில்தான் இந்தப் படத்துக்கும் சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது. 




படத்தை தடை செய்வதைவிட, அந்தப் படத்தைப் பார்க்காமல் புறக்கணிப்பது அதைவிட பெரிய தண்டனைதான். அந்த வழியில்தான்  முஸ்லிம்கள் படத்தை எதிர்த்து இருக்க வேண்டுமே தவிர, தடை செய்யச் சொல்வது சரி அல்ல. பேச்சுரிமையும் எழுத்துரிமையும் ஆங்கில அரசு பறித்ததால்தான், சுதந்திரப் போராட்டமே நடந்தது. அப்படிப்பட்ட தேசத்தில் கருத்து சுதந்திரத்துக்கு எதிராக போர்க்​கொடி தூக்குவது ஜனநாயகம் அல்ல'' என்கிறார்கள்.



நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு நடக்கும் விஷயங்​கள் என்ன அதிர்வலைகளை உண்டாக்கப்​போகிறதோ?


- ஜூ.வி. டீம்





மதச்சார்பற்ற மாநிலத்தை தேடுவேன்: கமலஹாசன் குமுறல் 
 
 
Posted Date : 11:45 (30/01/2013)Last updated : 18:08 (30/01/2013)
சென்னை: விஸ்வரூபம் படத்திற்காக தமது சொத்துக்கள் அனைத்தையும் விற்று படமெடுத்துள்ளதாக கூறியுள்ள நடிகர் கமலஹாசன்,படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய்க்கொண்டிருந்தால், கடன் கொடுத்தவர் வசம் தமது சொத்துக்கள் சென்றுவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

இப்படம் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல என்று சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய கமல்,  " இந்த படத்திற்காக நான் மிகுந்த பொருட் செலவு செய்துள்ளேன். நான் நின்று கொண்டிருக்கும் இந்த வீடு உட்பட என்னுடைய அனைத்து சொத்துக்களையும் இந்த படத்திற்காக அடமானம் வைத்திருக்கிறேன்.
படம் ரிலீஸ் தேதி தள்ளிப்போகப் போக நான் நிற்கும் இந்த கட்டடம் கூட எனக்கு சொந்தமில்லாமல் போகும். அநேகமாக இதுவே கூட நான் இங்கிருந்து அளிக்கும் கடைசி பேட்டியாக அமையலாம்.

நாட்டின் ஒற்றுமையா இல்லை என்னுடைய சொத்தா என்ற கேள்வி வரும் போது, நாட்டின் ஒற்றுமையே முக்கியம் என நான் கருதுகிறேன். நாட்டின் ஒற்றுமைக்காக சொத்துக்களை இழக்கத் தயாராக இருக்கிறேன். எனக்கு பணம் முக்கியமல்ல. நாட்டின் ஒற்றுமையே முக்கியம்.


எனக்கு கிடைக்க வேண்டிய நீதி தாமதப்பட்டதாக கருதுகிறேன்.தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும்.  இருப்பினும் எனக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன்.


எனது திரைப்படத்திற்கு தடை, தடைக்குதடை என தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் நான் தமிழகத்தை விட்டு வெளியேறவும் தயாராக இருக்கிறேன். மதச்சார்பற்ற மாநிலமாக தமிழகம் இல்லாமல் போனாமல் வேற மதச்சார்பற்ற மாநிலத்தை தேடுவேன். தமிழகம் முதல் காஷ்மீர் வரை வேறு மதச்சார்பற்ற மாநிலம் இல்லை என்றால் மதச்சார்பற்ற நாட்டை தேடிச் செல்வேன்.


விழுந்தாலும் விதையாக விழுவேன், எழுந்தால் மரமாக எழுவேன். தனி மரம் தோப்பாகாது என்று நினைக்கலாம். இந்த மரத்தில் பல பல சுதந்திரப் பறவைகள் வந்து அமரும். சோலைகள் உருவாகும். மீண்டும் விதைகள் பல உருவாகும். ஆனால் அந்த முதல் விதை நான். எனக்கு மதம், அரசியல் சார்பு இல்லை. ஆனால் என் திறமை என்னுடன் இருக்கும்.


விஸ்வரூபம் படம் நடக்கும் களம் அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான். இது இஸ்லாமியர்களை கேலி செய்யும் படமல்ல. எனக்கு மதம் இல்லை. மனிதம்தான் உண்டு" என்றார்.

விஸ்வரூபம்: குரான் காட்சியை நீக்க கமல் சம்மதம் 
 
 
 
Posted Date : 15:32 (30/01/2013)Last updated : 16:13 (30/01/2013)
சென்னை: விஸ்வரூபம் படத்தில் குரான் சம்பந்தப்பட்ட காட்சியை நீக்க நடிகர் கமலஹாசன் சம்மதம் தெரிவித்துள்ளார். 


சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமது இல்லத்தில் இன்று மதியம்  செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர், வேறு ஏதேனும் பிரச்னை ஏற்பட தாம்  காரணமாக இருக்க விரும்பவில்லை என்றார்.

விஸ்வரூபம் பட தடை விவகாரத்திற்கு பிறகு கமல் இன்று காலை பேட்டி அளித்தார்.  அவருடைய பேட்டி தமிழகத்தில் பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது. கமலை  அடுத்தடுத்து வி.ஐ.பி.கள் சந்தித்து வருகின்றன.  காங்கிரஸ் எம்.பி. ஆரூண், தேசிய லீக்  கட்சி தலைவர் பஷீர் ஆகியோர் கமலை சந்தித்தார்.


 பின்னர் அவர்களுடன் சேர்ந்து மீண்டும் பத்திரிகையாளர்களை சந்தித்தார் கமல். அப்போது  'விஸ்வரூபம் படத்தில் குரான் உள்ளிட்ட இஸ்லாமியர்கள் தொடர்பான சில காட்சிகளை  நீக்க முடிவெடுத்துள்ளதாகவும்,  'ஆட்சேபகரமான காட்சிகள் நீக்கப்படும் என்றும்  தெரிவித்தார்.

படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்  22 முஸ்லிம் கட்சிகள் அமைப்புகளின் கூட்டமைப்பு   நிர்வாகிகள் யாரும் கமலை சந்திக்காத நிலையில் ஆருணும் பஷீரும்  சந்தித்திருக்கிறார்கள்.

இதுபற்றி கூட்டமைப்பில் உள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர்  ரீபாயி ''படத்தை தடை செய்ய வேண்டும் என்கிற எங்கள் கோரிகையில் உறுதியாக  இருக்கிறோம். தமிழக அரசின் முடிவை ஆதரிக்கிறோம். அரசு மேல் முறையீடு  செய்திருக்கிறது. அதனை வரவேற்கிறோம். ஆருணும், பஷீரும் கமலை பார்த்ததற்கும்  எங்கள் கூட்டமைப்புக்கும்  எந்த தொடர்பும் இல்லை" என்றார்.

ஆருண் பேசும் போது, காட்சிகள் நீக்கப்படும் என்கிற கமலின் முடிவை கூட்டமைப்பிடம்  தெரிவித்து அவர்களின் ஒப்புதலை பெறுவோம்" என்றார்.



விஸ்வரூபம் படத்திற்கு மீண்டும் தடை; உச்ச நீதிமன்றத்தை நாட கமல் முடிவு! 
 
 
Posted Date : 15:53 (30/01/2013)Last updated : 16:48 (30/01/2013)
சென்னை: விஸ்வரூபம் படத்தின் மீதான தமிழக அரசின் தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்ற பெஞ்ச் அறிவித்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தை நாட நடிகர் கமலஹாசன் முடிவெடுத்துள்ளார்.


விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கமல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் அரசு பிறப்பித்த தடையை நீதிபதி வெங்கடராமன் நேற்றிரவு நிறுத்தி வைத்ததார். 

இதனால் இன்று படம் வெளியாகும் என்கிற சுழ்நிலையில் விஸ்வரூபம் தடை நீக்கத்தை எதிர்த்து தமிழக அரசு இன்று காலை மேல் முறையீடு செய்தது. அரசு அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன், நீதிமன்றம் தொடங்கியதும்  முதல் வழக்காக ப‌திவு செய்தார். மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தலைமை நீதிபதி (பொறுப்பு) எலிப்பி

அருணா ஜெகதீஷன் அடங்கிய பெஞ்ச், பிற்பகல் 2.30 மணிக்கு வழக்கை விசாரிப்பதாகக் கூறியுது.

இதன்படி வழக்கு விசாரணைக்கு வந்ததும் தமிழக அரசின் கோரிகையை ஏற்று தனி நீதிபதி வெங்கட்ராமன் பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்ற பெஞ்ச் இடைக்கால தடை விதித்தது.வருகிற திங்கட்கிழமைக்குள் தமிழக அரசு பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம்,  பிப்ரவரி 6 ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்தது.


இதனால் படம் வெளியாவது மேலும் தாமதம் ஆகியிருக்கிறது
இந்நிலையில் இந்த தடை உத்தரவை எதிர்த்து கமலஹான உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய கமலஹாசன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


காவல் துறை கெடுபிடி: பாதியிலேயே நிறுத்தப்பட்ட விஸ்வரூபம்! 
 
 
Posted Date : 12:26 (30/01/2013)Last updated : 12:27 (30/01/2013)
சென்னை: நீதிமன்றம் தடையை நீக்கி உத்தரவிட்டபோதிலும், காவல்துறை மற்றும்  வருவாய்த்துறை அதிகாரிகளின் கெடுபிடி காரணமாக தமிழகத்தின் பல இடங்களில்  இன்று காலை திரையிடப்பட்ட விஸ்வரூபம், பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் ஏற்படுத்தியுள்ள சர்ச்சைகள் தமிழகத்தில்  விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கி உள்ளது.

விஸ்வரூபம் திரைப் படத்திற்கு தமிழக அரசு விதித்திருந்த தடையை நேற்று சென்னை  உயர் நீதிமன்றம் நீக்கியது. இதையடுத்து தமிழகத்தில் இன்று பல இடங்களில்  விஸ்வரூபம் காலையிலேயே திரையிடப்பட்டது. ஆனால், படம் ஓடத் தொடங்கிய சில  நிமிடங்களில் அங்கு வந்த காவல் துறையினர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள்  படத்தை நிறுத்த சொல்லி தியேட்டர் உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டனர். மேலும்  அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டதால்,தியேட்டர் உரிமையாளர்கள்  படத்தை நிறுத்தினர்.

தூத்துக்குடி, கோவை, ஈரோடு மற்றும் நாகை மாவட்டங்களில் பத்து நிமிடத்திலேயே  விஸ்வரூபம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து கடும் ஆத்திரம் அடைந்த கமல் ரசிகர்கள்  சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்தின்  பல இடங்களில் பதற்ற நிலை ஏற்பட்டு உள்ளது.

அதேபோல் திரைபடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சிலர், சென்னை தேவி தியேட்டர் எதிரில்  வைக்கப்படிருந்த விஸ்வரூபம் பேனரை தீ வைத்து எரித்தனர்.

கோவையில் ஒரு இடத்தில் பெட்ரோல் குண்டுகள் கைப்பற்றப்பட்ட நிலையில்,  விஸ்வரூபம் திரையிட இருந்த தியேட்டர்களில் வீச பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா? என்ற  கோணத்தில்; காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



நன்றி - விகடன்


Kamal hasan's emotional speech - Ananda Vikatan 

 

 

 மக்கள் கருத்து



1.இங்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்....ஜெயா செய்துள்ளது அப்பட்டமான மிரட்டல் வேலை. ஆனால், அதே சமயம் பாட்சா, ரஜினி .... விஸ்வரூபம், கமல் ........வாய்ஸ் வரும் அதை வைத்து ஏதாவது செய்யலாம் என்று கணக்கு போட வேண்டாம். ஏற்கனவே, இந்த மாதிரி வாய்ஸ் கொடுக்கப் போய்தான் தி.மு.க. திரும்ப ஆட்சிக்கு வந்து.........டில்லி வரைக்கும் கொடி கட்டி பறந்து, லட்சம் கோடிகளில் ஊழல் என்று புதிய பரிணாமத்தை அரசியல் வானில் புகுத்தினர்.........ஜெயா செய்த தவறுக்கு, இந்த லட்சம் கோடிகளில் புரளும் கேடிகளை திரும்பவும் வாழ வைக்க வேண்டாம். தவிர, கமல் என்ற கலைங்கனை பிடிக்கும் தமிழக மக்களுக்கு, கமல் என்ற தனிப்பட்ட மனிதனை, அவரின் குழப்பத்தனமான சிந்தனைகளை அறவே பிடிக்காது.

 

2. இந்த தீர்ப்பு விஸ்வரூபத்திற்கு கிடைத்த வெற்றி, கமலஹாசன் என்ற தனி மனிதனுக்கு கிடைத்த தோல்வி.

 

 3.உண்மையிலேயே ஜாதி மதம் மொழி என்று எதையாவது இழிவு படுத்தினால் தடை செய்யலாம் அமெரிக்கா விற்கு கமல் வக்காலத்து வாங்கினால் நம்ம ஊரு பாயுக்கு ஏன் வலிக்குது?

 

4. ஜெஜெ இந்த விஸ்வரூபம் படத்தால் தமிழ் சினிமாவை பகைத்துக்கொண்டார். தமிழ் இனிமாவை பகைதவர்களின் கதி ... கஸ்டம் தான். ஜெஜெவின் துவேசம் இதில் தெறிகிரது.இதுவே இவருக்கு தோல்வியை தரும். 

 

 

5. உயர்நீதிமன்றம் தேவையில்லாத தாமதத்துக்கு பிறகு தடையை நீக்கி இருக்கிறது. முதலில் தணிக்கைக்குழு சான்று வழங்கிய படத்தை ஏன் நீதிபதி பார்க்க வேண்டும் என்பதே புரியவில்லை. போகட்டும்.

முஸ்லிம்கள் மனம் புண்படுகிறது என போராடும் இவர்கள் முஸ்லிம்களின் பிரதிநிதிகளா? ஏன் அனைத்து மசூதிக்கூட்டங்களிலும் இவர்களைப் போல யாரும் முடிவுகள் அறிவிக்கவில்லை? இவர்கள் மனம் எதனால் புண்பட்டது என்பதை படம் வெளியிட்ட பின் நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்து அதற்கு தடை வாங்க வேண்டியதுதானே. அதை விட்டுவிட்டு மதத்தை அரசியலோடு கலந்து செயல்படுவது ஏன்?

எதிர்ப்பதற்கு என்ன காரணம் சொல்கிறார்கள்? "பேர்ள்" என்ற பத்திரிகை நிருபரை கட்டிவைத்து குரான் வாசகம் படிக்கும்போதே கழுத்தை அறுத்து அதை வீடியோ எடுத்து காட்டி தங்கள் வீரத்தை ஒளிபரப்பியது உண்மைதானே. அமெரிக்க இரட்டை கோபுரத்தை தகர்த்து 4000 பேரை கொலை செய்யும் முன் குரான் ஓதிவிட்டு சென்றது உண்மைதானே. பம்பாயில் வந்து இறங்கி துப்பாக்கி சூடு நடத்தி நூற்றுக்கணக்கானவரை கொன்றவர்கள் குரானை ஓதியபின் தானே அதை செய்தார்கள்? அவர்களை கொடூரர்களாக காட்டினால் இங்கே உள்ளவர்கள் ஏன் கவலை கொள்கிறார்கள், கொதிக்கிறார்கள்? இவர்களும் அவர்களோடு தொடர்பு உடையவர்களா?

பல டி.வி.சேனல்களில் விலை கொடுத்து வாங்கி மதப்பிரச்சாரம் செய்யும் இவர்கள் அந்த நேரங்களில் ஒரு முறையாவது தாலிபான் செயல்பாடுகள் தவறானவை என சொல்லி இருப்பார்களா? எங்கோ இருந்த ஒரு பாழ்மண்டபத்தை இடித்ததற்காக அது இருக்கும் இடம் கூட தெரியாத இவர்கள் நாடு முழுதும் வன்முறையில் இறங்கவில்லையா? இவை எதையேனும் இவர்கள் கண்டித்ததுண்டா?


மொத்தத்தில் தங்களுக்குள்ள 15 சதவீத ஓட்டு வங்கியை வைத்து இந்திய அரசையே பணியவைக்க முடியும் என நம்புவதாலேயே இவர்கள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

இதில் "வெளியிட்டால் விபரீதமாகும்" என அரசுக்கே எச்சரிக்கை வேறு. வன்முறையை கையாள வக்கில்லாத ஒரு அரசு இவர்களுக்கு ஆதரவு. காரணம் பண வெறி.

முஸ்லிம்கள் ஓட்டு கிடைக்கும் எனவும் கமல்ஹாசன் படத்தை வாங்கிய மற்றையோர் நஷ்டமடைய வேண்டும் எனவும் கணக்கு போடும் ஜெயலலிதா தனக்கு இந்து வோட்டுக்கள் கணிசமாக குறைந்தால் என்ன நடக்கும் என சீக்கிரமே தெரிந்துகொள்வார். 

 

 6.காற்றில்லாமல் புகையாது. முஸ்லீம தப்ப சித்தரிக்கிக்கராங்க அப்படின்ர காரனாத்துக்காக இவ்வளவு முஸ்லீம் பிரமுகர்கள் போராட்டம் பண்ரபோது அரசு சும்மா இருக்க முடியாது. முன்பு சண்டியர்ன்னு ஒரு படத்துக்கு பேர் வைச்சதுனால தலித் பிரச்சனை பண்னங்க அது மாதிரி தான் இதுவும். டிவிக்கு படம் தரலை அது இதுன்னு வெட்டியான காரணம். அது இலவசமா டிவில் காட்டரதுக்கான உரிமை விளம்பரங்கள் மட்டும்தான் வருமானம். ட்டிஎச்ல 1000 ரூபா குடுத்து எவ்வளவு பேர் பாப்பாங்க. இது அந்த டிவிக்கு தெரியாத என்ன (நமக்கே தெரியும்போது)

7. இந்தப் படத்தை எதிர்க்கும் இஸ்லாமியர்கள், உண்மையான இஸ்லாமியர்கள் யாரும் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டாம் என்று அறிக்கை கொடுத்திருக்க வேண்டும். அதை விடுத்து, படத்தையே தடை செய்ய சொல்வது அறமல்ல.. 

 

 

8
விஸ்வரூபம்’ சேட்டிலைட் உரிமம் முதலில் ஒரு டி.வி-க்கு விற்கப்பட்டது. அதன்பிறகுதான், டி.டி.ஹெச்-ல் 'விஸ்வரூபம்’ வெளியாகும் என்பதை கமல் அறிவித்தார். 'இதை நீங்கள் முன்பே சொல்லி இருந்தால், நாங்கள் இன்னும் விலையைக் குறைத்துக் கேட்டு இருப்போம்’ என்று டி.வி. தரப்பில் இருந்து சொல்லப்பட்டதாம். விலையைக் குறைக்கச் சொல்லி பேரம் நடந்து இருக்கிறது. கமல் தரப்பிலோ, 'இதைவிட அதிக விலைக்கு வாங்க வேறு சேனல் தயாராக இருக்கிறது. உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் விடுங்கள்’ என்று சொன்னதோடு, வேறு சேனலுக்கும் படத்தை விற்று விட்டாராம்

படத்தை வீடு, வாசல் விற்று செலவிட்டு எடுத்தவன் எங்கு அதிக விலைக்கு விற்கலாம் என்று தானே பார்ப்பான். காய்கறி விவசாயி ஒரு கடையை விட அடுத்த கடை கூட விலை தருகிறேன் என்றால் அங்கு தான் விற்பான், 90 கோடி செலவழித்தவர்க்கு அந்த உரிமை இல்லையா? அர்சாங்கம் தன் கையிலிருக்கு என்பதால் அடி மாட்டு விலைக்கு கொடுக்கனும்னு சட்டமா?

 

 

9. தி.மு.க-வுடன் கமல் காட்டிய நெருக்கம்தான் விவ காரம் விஸ்வரூபம் எடுக்கக் காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்

ஆக பாட்டியே லெட்டர்பேடு ஆட்களை கூப்பிட்டு தூண்டியுள்ளது அப்பட்டமாக தெரிகிறது, இதன் விளைவுகள் நாடாளுமன்ற தேர்தலில் தெரியும், இதிலே பாட்டி பிரதமர் கனவு வேறே

 10.தலைமை நீதிபதியிடம் ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கியிருக்கிறார்கள், காலை 10.30 வரை திரையிடக் கூடாதென்று... தற்போது உண்மை வெளி வந்து விட்டது.

இது ஜெயலலிதாவின் பழிவாங்கல் நடவடிக்கை, பகடைக்காயாக்கப்பட்டிருக்கிறது முஸ்லிம் சமூகம்.

அப்பாவிகளிடையே பிளவைத்தூண்டி அரசியல் குளிர் காய்வது கட்சிகளின் வழக்கம் என்பது மறுபடியும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

டேவிட் படம் மார்னிங் ஷோ மேட்னி ஷோ மட்டுமே .நைட் ஷோ நோ.ஜட்ஜ் அதிரடி உத்தரவு

1. சரிநிகர் சமமாய் சரக்கு அடிக்கும் டப்பு உள்ள மப்பு தம்பதி பாரில் ஆர்டர் செய்தபோது பின்னணி பாடல் - நீ பாதி நான் பாதி ஜின் னே




----------------------------



2. ஒரு டூயட்ல கமல் ஆண்ட்ரியா செம கில்மா வாம்.சென்சார்ல கட்டாம்.நக்கீரன் தகவல். # கமலா? கொக்கா? ஆனா நமக்கு வட போச்சே



------------------

3. ஒருவரின் பர்சனல் மேட்டரை சம்பந்தம் இல்லாமல் இழுக்கக்கூடாது.கமல்,புரட்சித்தலைவர்கள் ,தலைவிகள் அனைவர்க்கும் இது பொருந்தும்




-----------------------



4. சுஹாசினி க்கு கமல் சித்தப்பா முறை .சினிமாதானே? ஒரு படத்துல ஜோடியா நடிச்சா என்ன என கே பி யே கேட்டபோதும் அது தவறு என மறுத்தவர் கமல்.




-----------------------


5. டியர்.உன் இடுப்பு வெல்வெட் மாதிரி இருக்கு.




 ம்க்கும் நீ கை வெச்சிருக்கறதே வெல்வெட் சேலைதான். 



-----------------------



6. காதல் உறவைக்காத்த கிளியே! உன் முகம் பார்க்கும்போதெல்லாம் எனக்கு கிலியே!




----------------------



7. ஸார்.உங்க படத்தை முத நாள் முத ஷோவே பார்த்துடுவேன்.


 ஏன்? அவ்ளவ் ஆர்வமா?

ஏன்னா டக்னு படத்தை தியேட்டரை விட்டே  எடுத்துடறாங்க. 



-------------------------



8. யுவர் ஆனர்.நாங்க கேரளா போய் படம் பார்ப்பதா? தமிழ்நாட்லயே பார்த்துக்கலாமா? என முடிவு எடுப்பது உங்க கைலதான.பார்த்து பண்ணுங்க்



--------------------------



9. ஜட்ஜ் - ஓ ஸி ல படம் காட்ன நன்றிக்காகவாவ்து சாதகமா தீர்ப்பு சொல்லிடனும்





--------------------------



10. விஜயின் தலைவா பட அறிவிப்புக்குப்பின் அஜித் ரசிகரான சிம்பு தன் பட டைட்டிலை வாலுபோ என மாற்றினார் # சும்மா




-----------------------


11. அன்பே.உனக்கு பொஸஸிவ்னஸ் ஜாஸ்தி.அதை விட போஸ் ஜிவ் நெஸ் இன்னும் ஜாஸ்தி



------------------


12. 3 பேர் 3 காதல் டைட்டில் கலாச்சார சீர்கேடு.க்ரூப் லவ்வா? க்ரூப் ஸ்டடி பண்ண ஒரு கூட்டம் கிளம்பும் பாருங்க






-----------------------



13. நமீதாவுக்கு சேலை கட்டத்தெரியாது.மீறி யாராவது கட்டி விட்டா நமக்கு ஏதும் தெரியாது




---------------------------


14. திருச்சி சிவா மகள் திருமணத்தில் கருணாநிதி- விஜயகாந்த் சந்திப்பு...# கருப்பு எம் ஜி ஆரும் ,எம் ஜி ஆருக்கு கறுப்புக்கொடி காட்னவரும்





------------------



15. முதல்வராக இருந்த கலைஞரை திட்டினேன்,இப்போது முதல்வராக இருக்கும் ஜெவை திட்டுகிறேன் -விஜயகாந்த்# திட்டுப்பாறை கேப்டன் பாறைகள்




-------------------------


16. இறைவனின் திருப்பெயரால் விஸ்வரூபம் திரைப்படம் எங்கும் ஓடாது -த.நா தவ்ஹீத் ஜமாஅத் # அல்லா! இவரை மன்னித்து விடு.நம்மவர் தான் - கமல்



-------------------------


17. நீங்க சந்தோஷமா இருக்கீங்கன்னா, உங்க தோஷ்மா இருக்கும் உங்க சம்சாரம் ஊர்ல இல்லைனு அர்த்தம் :-)




-------------------


18. ஜட்ஜ் - எப்படியோ இந்த வருச்ம் வாரம் ஒரு புதுப்படம் டியூட்டி டைம்ல பார்த்துக்கலாம்.ஐ ஜாலி




-----------------------------



19.  அமீரின் ஆதி பகவானுக்கு எதிரா புகார் # விஜய் நடிச்ச ஆதியே அடி வாங்கிடிச்சு




-------------------


20. ஜட்ஜோட சம்சாரம் - யோவ்.ஊருக்கு நீதிபதி.ஆனா எனக்கு நீ பதி.என்னை விட்டுட்டு நீ மட்டும் எதுக்காக சினிமா பார்த்தே?2 மாசம் திண்ணைல படு




---------------------



21. ரஜினி - நல்லவேளை ஜக்கு பாய் டிராப் ஆச்சு.நம்மளை ஜக்கு தூக்க வெச்சிருப்பாரு ரவிக்குமார்



----------------------------



22. ஹீரோவுக்கு சாதியே கிடையாது.எதுக்கு வம்பு? அவ்ளவ் ஏன்? அவருக்கு பொஞ்சாதியும் கிடையாது





----------------------------



23. டேவிட் படம் மார்னிங் ஷோ மேட்னி ஷோ மட்டுமே .நைட் ஷோ நோ.ஜட்ஜ் அதிரடி உத்தரவு விட்




---------------------



26. சீடன் படத்துல தனுஷ் முருகப்பெருமானா நடிச்சது நல்ல வேளை முருகனுக்கு இன்னும் தெரியலை





-----------------------



27. ஜட்ஜ் - மொத்தமா உனக்கு எத்தனை சம்சாரம் ?



 எசமான்.மொத்தமா.1 ஒல்லியா 2 ஆக மொத்தம் 3 




-------------------



28. ரஜினி அடிக்கடி மந்த்ராலயா போறாரே? மந்த்ரா வுக்கு கட்ன ஆலயமா ? # இதுவும் சும்மா




-------------------


29. ரஜினி அடிக்கடி மந்த்ராலயா போறாரே? மந்த்ரா வுக்கு கட்ன ஆலயமா ? # இதுவும் சும்மா




-----------------------


30. ஜட்ஜ் - பிரச்சனையை பேசித்தீர்க்க முடியாதா ?



,யுவர் ஆனர்.பிரச்சனையே என் சம்சாரம் என் கிட்டே பேசமாட்டேங்கறா அப்டினுதான் 



----------------------------






24. சார்.கடல் ஹிட் ஆகிடுமா ? 




ரிலீஸ் ஆனா ஹிட் ஆகிடும்.ஹி ஹி 



------------------------



25. சீடன் படத்துல தனுஷ் முருகப்பெருமானா நடிச்சது நல்ல வேளை முருகனுக்கு இன்னும் தெரிய




---------------------------------------

Tuesday, January 29, 2013

படத்தின் தடைக்கு கமல் மீது ஜெ வின் பகை காரணமா? மக்கள் அலசல்

Posted Date : 16:32 (29/01/2013)Last updated : 16:42 (29/01/2013)
பெங்களூரு: விஸ்வரூபம் படத்தைத் திரையிட, கர்நாடக அரசு அனுமதி வழங்கியுள்ளது.முழுப் பாதுகாப்புக்கு அம்மாநிலக் காவல்துறை உத்தரவாதம் அளித்துள்ளது.

இதுகுறித்து கர்நாடக திரைப்பட வினியோகஸ்தர் ஹெச்.டி. கங்காரஜூ அளித்த பேட்டியில், "பெங்களூருவில் உள்ள 17 தியேட்டர்கள் உள்பட கர்நாடகாவில் 40 திரையரங்குகளில் விஸ்வரூபம் இன்று மேட்னி ஷோ முதல் வெளியாகியுள்ளது. அனைத்துத் தியேட்டர்களிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக உள்ளது.

கர்நாடகாவில் விஸ்வரூபம் திரையிடப்பட்டுள்ள அனைத்துத் திரையரங்கிலும் முழுப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று காவல்துறை உறுதியளித்துள்ளது" என்றார் அவர்.


 மக்கள் கருத்து

1. கடைசியாக செய்தது கமலின் படத்தை பார்க்க விரும்பாதவர்களையும் பார்க்க வைத்த ஒன்று மட்டுமே! படத்தின் வசூல் 300 கோடியைத் தாண்டப் போகிறது.




2. இந்த படத்தைற்கு ஏ.ஆர்.ரஹமான் இசை அமைத்திருந்தால் முஸ்லிம்கள் போராடுவார்களா???????????





3. அருமை..... இப்போது புரியுதா??? தப்பு படத்துல இல்ல. கேடுகெட்ட மதவாத அரசியலில் உள்ளது...



----------


விஸ்வரூபம் வழக்கில் இன்று இரவு 8 மணிக்குத் தீர்ப்பு
Posted Date : 13:56 (29/01/2013)Last updated : 18:13 (29/01/2013)
சென்னை: விஸ்வரூபம் படத்துக்கான தடையை நீக்கக் கோரும் வழக்கில் இன்று இரவு 8 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்.
இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், நீதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
விஸ்வரூபம் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கியது சட்டப்படியாக நடைபெறவில்லை என்றும், தணிக்கைச் சான்றிதழ் வழங்கியது நிறைய முறைகேடுகள் நடந்துள்ளது என்றும் சென்சார் போர்டு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார்.

விஸ்வரூபம் படம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது, ராஜ் கமல் ஃபிலிம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், "தமிழகத்தில் 31 கலெக்டரும் ஒரே நாளில் தடை உத்தரவு போட்டனர். இதற்கு யாராவது புகார் அளித்தார்களா?" என்று வாதிட்டார். அதற்குப் பதிலளித்த அரசு வழக்கறிஞர், "இத்தகைய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் உண்டு" என்றார்.

பின்னர் பேசிய ராமன், "கேரளாவில் அதிகம் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் விஸ்வரூபம் வெளியாகியது. அங்கு எவ்வித பிரச்னையும் இல்லை. அமைதியானச் சூழல் அங்கு நிலவுகிறது" என்று வாதிட்டார். அதற்கு, "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்புண்டு" என்று அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.

மேலும், "விஸ்வரூபம் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கியதில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளது. சினிமாட்டோகிராஃபி சட்ட விதிகளுக்கு உட்பட்டு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. அதுபற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று தமிழக அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த விசாரணை உணவு இடைவேளைக்குப் பிறகு தொடரும் என்று அறிவித்தார். இந்த விசாரணை 2.30 மணியளவில் மீண்டும் தொடங்கியது.



அரசு புதிய வாதம்...


அப்போது, கமல்ஹாசன் தனது விஸ்வரூபம் படத்தை வினியோகஸ்தர்களுக்கு விற்றுவிட்டதால், அவருக்கு வழக்குத் தொடரும் உரிமை இல்லை என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.



இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு, விஸ்வரூபம் படத்துக்கான தடையை நீக்கக் கோரும் வழக்கில் இன்று இரவு 8 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.

முன்னதாக, நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 25) திரையிடப்படுவதாக இருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் பல காட்சிகள் உள்ளதாகக் கூறி இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் அடிப்படையில் 2 வார காலத்துக்கு இந்தத் திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர்கள் தடை உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.

இதனைத் தொடர்ந்து இந்த தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான எஸ். சந்திரஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீது கடந்த வியாழக்கிழமை விசாரணை நடத்திய நீதிபதி கே.வெங்கட்ராமன், வழக்கின் விசாரணையை திங்கள்கிழமைக்கு (ஜனவரி 28) ஒத்திவைத்தார். இதற்கிடையில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் ஏதேனும் உள்ளனவா என்பது பற்றி ஆராய்வதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் விஸ்வரூபம் படத்தை கடந்த சனிக்கிழமை நீதிபதி பார்த்தார்.

இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை காலை நீதிமன்றம் கூடியதும், சந்திரஹாசன் தரப்பைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞர் பி.எஸ். ராமன் நீதிபதி வெங்கட்ராமனிடம் ஒரு முறையீட்டை முன் வைத்தார். விஸ்வரூபம் படத்துக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-ஆவது பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பித்ததை எதிர்த்தும், தடை உத்தரவு பிறப்பித்த எல்லா மாவட்ட ஆட்சியர்களையும் பிரதிவாதிகளாகச் சேர்த்தும் கூடுதலாக மனுக்களை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அவரது முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கூடுதல் மனுக்களை தாக்கல் செய்ய அனுமதி அளித்தார். அதே நேரத்தில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிபதி சில அறிவுரைகளை வழங்கினார்.

இந்தப் பிரச்னையில் மனுதாரர் தரப்பினரோ அல்லது எதிர் தரப்பினரோ மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையும் நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பதாக ஆகி விடக் கூடாது. தனி மனித உரிமையை விட நாட்டின் ஒற்றுமைதான் மிகவும் முக்கியம். கவே, இந்தப் பிரச்னையில் பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண்பதற்கான எல்லாவித வாய்ப்புகள் குறித்தும் சம்பந்தப்பட்டவர்கள் முயற்சிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதி, மனு மீதான விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.



 மக்கள் கருத்து


1. சகிப்பு தனமை தெவை. ஓரு படத்தால் ஒரு மதம் பாதீக்க படும் என்றால் அது அந்த மதம் சார்ந்த பிரஷனை. நான் என்ன படம் பார்க்க வேண்டும் என்பதை அடுதவர் முடிவு செய்வது கூடது. இது ஒரு தவறான முன்னுதாரனம் .எந்த மதமும் அவர் அவர் வீடு மட்றும் வழிபாடு செய்யும் இடத்தோடு இறப்பது நலம்.




2. எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. தலிபான், அல் கொய்தா, லஷ்கர் எ தொய்பா போன்றவை தீவிரவாத கூட்டம் இல்லை என்று வாதிடுகிறார்கள? அவை தீவிர வாத கூட்டம் என்று ஒத்து கொள்ளும் பட்ச்சத்தில், அவர்களுக்காக வக்காலத்து வாங்குவது ஏன்? விடுதலை புலி பற்றி இம்மாதிரி படம் எடுத்தால், இங்குள்ளோர் ஏற்று கொள்வார்களா என்று ஒரு ஜீவி கேட்டுள்ளார்.




அதை பற்றி எடுத்தால், எதிர்பவர்கள் விடுதலை புலிகளை தீவிரவாதிகள் என்று ஒத்து கொள்வதே இல்லை - அதை போல் இவர்களையும் மேற் கூறிய கூட்டம் தீவிரவாத கூட்டம் இல்லை என்று வாதிட சொல்லுங்கள். இதில் தேவை இல்லை ஜாதியை நுழைத்து கொண்டு... இவர்கள் ஆட்சேபிக்கும் அத்தனை விஷயமும் அந்த தீவிரவாதிகள் செய்வது தான் - செய்வதை செய்வதாக சொன்னால், என்ன தவறு?




3,. . அமைப்பினரிடம் பேசியும் பயனில்லை, அரசிடம் பேசியும் பயனில்லை என்றுதான் நீதிமன்றத்திடம் கமல் வந்தார். தீர்ப்பு சொல்ல வேண்டிய நீதிபதிகளோ மறுபடியும் அரசிடமும், அமைப்பினரிடமும் பேச சொல்வது புரிந்த புதிர்...




அய்யா கமல் அவர்களே! உங்களால் முடியும் என்றால் விஜய் டீவியிடம் இருந்து ஜெயா டீவிக்கு கொடுத்துவிட்டு வழக்கை முடித்து விடுங்கள்... அவங்கள மறுபடியும் பழைய மாதிரி ஆக்கிடாதிங்க... இதை சொல்வதற்க்கு கேவலமாதான் இருக்கு..



4. எம்.ஜி.ஆர் சமாதியில் வைத்தது குதிரை இரக்கை என்பது உன்மை எனில் முறைகேடுகள் நடந்துள்ளது என நம்பலாம். இதில் இருந்தே தெரிகிறது போகாத ஊருக்கு வழி சொல்லுகிற பாடம், அம்மாவின் கன்னசைவில் நடக்கும் வேலை. பாவம் இஸ்லாமியர்கள்





5. இந்தப் பிரச்னையில் மனுதாரர் தரப்பினரோ அல்லது எதிர் தரப்பினரோ மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையும் நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பதாக ஆகி விடக் கூடாது. தனி மனித உரிமையை விட நாட்டின் ஒற்றுமைதான் மிகவும் முக்கியம். கவே, இந்தப் பிரச்னையில் பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண்பதற்கான எல்லாவித வாய்ப்புகள் குறித்தும் சம்பந்தப்பட்டவர்கள் முயற்சிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதி,




6. ஜெயலலிதா இதற்குக் காரணம் என்றால், வெட்கித் தலை குனிய வேண்டும்.. அவரல்ல.. அவருக்கு ஓட்டுப் போட்டு அரியணையில் அமர்த்திய நாம் தான்... ஜெயலலிதா மக்கள் ஓட்டுப் போட்டுத்தான் நாம் பூனைப்படை புடை சூழ வலம் வந்து கொண்டிருக்கிறோம் என்று உணர வேண்டும்... முதலமைச்சருக்கு எத்தனையோ பணிகள் இருக்கையில், ஓர் நடிகனின் படத்தைத் தடை செய்து ரசிக்கும் குரூர மனப்பான்மை மிகுந்த அதிர்ச்சியை விளைவிக்கிறது...




7. இந்தியாவை அவமானப்படுத்திய எத்தனை ஹாலிவுட் படங்கள் இந்தியாவில் சக்கை போடு போட்டிருக்கிறது! இது ஆப்கானை பற்றிய படம். இதை பற்றி இந்தியர்கள் ஏன் கவலைபட வேண்டும்? மதவாதம் தேசவாதத்தால் தோற்கடிக்கபட வேண்டும்.( இனவாதம் தேசவாதத்தால் தோற்கடிக்கபட்டது போல்).சினிமாவில் கொலை செய்வதற்கு முன் குரான் படிப்பதை கேள்வி கேட்பவர்கள் ஆப்கானிலும் சென்று கேள்வி கேட்க வேண்டும்.




8. சென்சார் போர்ட் அனுமதித்த பிறகு ஏதவது அமைப்புக்கள் தடை உத்தரவு கோரினால்.. அந்த படம் தடை செய்யப்படும் நாட்களுக்குரிய வருமானத்தை அவ் அமைப்புக்கள் கொடுக்க வேண்டும். இந்த சட்டத்தை அமல்படுத்த தமிழக அரசுக்கு கோர்ட் உத்தரவிடவேண்டும்.




9. இதுல ஜெயலலிதாவ ஏன் குற்றம் சொல்ராங்க? இவ்வளவு முஸ்லீம்கள் வந்து முறையிடும்போது நடவடிக்கை எடுத்துத்தான் ஆகணும். ஆனா ஆப்கானிஸ்தான்ல உள்ள் தாலிபன், அல் கைடா கும்பல பத்தி படம் எடுத்தா இங்க ஆம்பூர், காயல் பட்டினத்தில் உள்ல் முஸ்லீம்களுக்கு ஏன் கோவம் வருதிங்கரதுதான் புரியாம இருக்கு. சதாம் உசேன துக்கில போட்டதுக்கும் போராட்டம் இங்க லெப்பைகுடிகாடு, வாணியம்பாடில பண்ணினாங. ஏன்னு கேட்டா சதாம் ஒரு முசுலீமாம் ஒரு முசுலீம கொன்னது தப்பாம். சதாம் உசேன் எத்தனை முஸ்லீம்களா வீஷ வாயு போட்டு கொன்னிருக்கான்னு தெரியுமா இவிகளுக்கு? அட இந்த தாலிபன் கும்பல் எத்தனை முஸ்லீம்களை கொன்னிருக்காங்கன்னு தெரியுமா?



10. நிறைய முறைகேடுகள் நடந்துள்ளதா. என்ன அபாண்டமா பொய் சொல்கிறார். நிருபிக்க முடியுமா இவரால்.


11. படம் அருமை! ஒவ்வொரு சீனும் உலகத்தரம்! இந்திய முஸ்லிமின் நாட்டுபற்று யாருக்கும் குறைந்தது அல்ல என எடுத்துகாட்டும் தரமான படம்!



12. தனி மனித உரிமையை விட நாட்டின் ஒற்றுமைதான் மிகவும் முக்கியம்.<< இந்த படத்தினால் நாட்டின் ஒற்றுமைக்கு ஒன்றும் ஆகிவிட போவதில்லை. தமிழகத்தை தவிர அனைத்து இடங்களிலும் படம் வெளியாக ஓடிக்கொண்டிருக்கிறது. அங்கே படம் பார்த்த அனைத்து இந்து, முஸ்லீம் சகோதரர்களும் எந்த தவறையும் செய்யவில்லை, அமைதிக்கு எந்த குந்தகமும் விளைவிக்க வில்லை. பரபரப்புக்காகவும், பஞ்சம் பிழைக்கவும் இந்த அமைப்புகள் தண்டால் எடுத்துள்ளன.



நன்றி - விகடன்



டிஸ்கி - கடைசியாக வந்த தகவல் படி தீர்ப்பு @ 10 PM

விஸ்வரூபம் வழக்கின் தீர்ப்பு இன்று இரவு 10 மணிக்கு தள்ளிவைப்பு


சென்னை: விஸ்வரூபம் படத்துக்கான தடையை நீக்கக் கோரும் வழக்கில் இன்று இரவு 10 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்.


இந்த வழக்கில் இன்று காலை 11 மணி தொடங்கி மாலை 6 மணி வரை நீண்ட நேரம் வாதங்கள் நடைபெற்றதால், இருதரப்பு வாதங்களையும் அலசி ஆராய்வதற்காகவே தீர்ப்பை 10 மணிக்குத் தள்ளிவைத்திருக்கிறார், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி.


முன்னதாக, விஸ்வரூபம் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கியது சட்டப்படியாக நடைபெறவில்லை என்றும், தணிக்கைச் சான்றிதழ் வழங்கியது நிறைய முறைகேடுகள் நடந்துள்ளது என்றும் சென்சார் போர்டு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார்.

விஸ்வரூபம் படம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது, ராஜ் கமல் ஃபிலிம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், "தமிழகத்தில் 31 கலெக்டரும் ஒரே நாளில் தடை உத்தரவு போட்டனர். இதற்கு யாராவது புகார் அளித்தார்களா?" என்று வாதிட்டார். அதற்குப் பதிலளித்த அரசு வழக்கறிஞர், "இத்தகைய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் உண்டு" என்றார்.

பின்னர் பேசிய ராமன், "கேரளாவில் அதிகம் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் விஸ்வரூபம் வெளியாகியது. அங்கு எவ்வித பிரச்னையும் இல்லை. அமைதியானச் சூழல் அங்கு நிலவுகிறது" என்று வாதிட்டார். அதற்கு, "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்புண்டு" என்று அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.

மேலும், "விஸ்வரூபம் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கியதில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளது. சினிமாட்டோகிராஃபி சட்ட விதிகளுக்கு உட்பட்டு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. அதுபற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று தமிழக அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த விசாரணை உணவு இடைவேளைக்குப் பிறகு தொடரும் என்று அறிவித்தார். இந்த விசாரணை 2.30 மணியளவில் மீண்டும் தொடங்கியது.



அரசு புதிய வாதம்...


அப்போது, கமல்ஹாசன் தனது விஸ்வரூபம் படத்தை வினியோகஸ்தர்களுக்கு விற்றுவிட்டதால், அவருக்கு வழக்குத் தொடரும் உரிமை இல்லை என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு, விஸ்வரூபம் படத்துக்கான தடையை நீக்கக் கோரும் வழக்கில் இன்று இரவு 8 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார். பின்னர், தீர்ப்பு இரவு 10 மணிக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 25) திரையிடப்படுவதாக இருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் பல காட்சிகள் உள்ளதாகக் கூறி இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் அடிப்படையில் 2 வார காலத்துக்கு இந்தத் திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர்கள் தடை உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.

இதனைத் தொடர்ந்து இந்த தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான எஸ். சந்திரஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீது கடந்த வியாழக்கிழமை விசாரணை நடத்திய நீதிபதி கே.வெங்கட்ராமன், வழக்கின் விசாரணையை திங்கள்கிழமைக்கு (ஜனவரி 28) ஒத்திவைத்தார். இதற்கிடையில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் ஏதேனும் உள்ளனவா என்பது பற்றி ஆராய்வதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் விஸ்வரூபம் படத்தை கடந்த சனிக்கிழமை நீதிபதி பார்த்தார்.

இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை காலை நீதிமன்றம் கூடியதும், சந்திரஹாசன் தரப்பைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞர் பி.எஸ். ராமன் நீதிபதி வெங்கட்ராமனிடம் ஒரு முறையீட்டை முன் வைத்தார். விஸ்வரூபம் படத்துக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-ஆவது பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பித்ததை எதிர்த்தும், தடை உத்தரவு பிறப்பித்த எல்லா மாவட்ட ஆட்சியர்களையும் பிரதிவாதிகளாகச் சேர்த்தும் கூடுதலாக மனுக்களை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அவரது முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கூடுதல் மனுக்களை தாக்கல் செய்ய அனுமதி அளித்தார். அதே நேரத்தில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிபதி சில அறிவுரைகளை வழங்கினார்.

இந்தப் பிரச்னையில் மனுதாரர் தரப்பினரோ அல்லது எதிர் தரப்பினரோ மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையும் நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பதாக ஆகி விடக் கூடாது. தனி மனித உரிமையை விட நாட்டின் ஒற்றுமைதான் மிகவும் முக்கியம். கவே, இந்தப் பிரச்னையில் பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண்பதற்கான எல்லாவித வாய்ப்புகள் குறித்தும் சம்பந்தப்பட்டவர்கள் முயற்சிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதி, மனு மீதான விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.

விஸ்வரூபம் - கோர்ட் வாத விவாதங்கள்

விஸ்வரூபம் விசாரணை நீடிப்பு: சென்சார் போர்டு மீது தமிழக அரசு குற்றச்சாட்டு

சென்னை: விஸ்வரூபம் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கியது சட்டப்படியாக நடைபெறவில்லை என்றும், தணிக்கைச் சான்றிதழ் வழங்கியது நிறைய முறைகேடுகள் நடந்துள்ளது என்றும் சென்சார் போர்டு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார்.

விஸ்வரூபம் படம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது, ராஜ் கமல் ஃபிலிம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், "தமிழகத்தில் 31 கலெக்டரும் ஒரே நாளில் தடை உத்தரவு போட்டனர். இதற்கு யாராவது புகார் அளித்தார்களா?" என்று வாதிட்டார். அதற்குப் பதிலளித்த அரசு வழக்கறிஞர், "இத்தகைய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் உண்டு" என்றார்.

பின்னர் பேசிய ராமன், "கேரளாவில் அதிகம் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் விஸ்வரூபம் வெளியாகியது. அங்கு எவ்வித பிரச்னையும் இல்லை. அமைதியானச் சூழல் அங்கு நிலவுகிறது" என்று வாதிட்டார். அதற்கு, "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்புண்டு" என்று அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.

மேலும், "விஸ்வரூபம் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கியதில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளது. சினிமாட்டோகிராஃபி சட்ட விதிகளுக்கு உட்பட்டு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. அதுபற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று தமிழக அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த விசாரணை உணவு இடைவேளைக்குப் பிறகு தொடரும் என்று அறிவித்தார். இந்த விசாரணை 2.30 மணியளவில் மீண்டும் தொடங்கி, பின்னர் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 25) திரையிடப்படுவதாக இருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் பல காட்சிகள் உள்ளதாகக் கூறி இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் அடிப்படையில் 2 வார காலத்துக்கு இந்தத் திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர்கள் தடை உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.

இதனைத் தொடர்ந்து இந்த தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான எஸ். சந்திரஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீது கடந்த வியாழக்கிழமை விசாரணை நடத்திய நீதிபதி கே.வெங்கட்ராமன், வழக்கின் விசாரணையை திங்கள்கிழமைக்கு (ஜனவரி 28) ஒத்திவைத்தார். இதற்கிடையில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் ஏதேனும் உள்ளனவா என்பது பற்றி ஆராய்வதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் விஸ்வரூபம் படத்தை கடந்த சனிக்கிழமை நீதிபதி பார்த்தார்.

இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை காலை நீதிமன்றம் கூடியதும், சந்திரஹாசன் தரப்பைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞர் பி.எஸ். ராமன் நீதிபதி வெங்கட்ராமனிடம் ஒரு முறையீட்டை முன் வைத்தார். விஸ்வரூபம் படத்துக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-ஆவது பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பித்ததை எதிர்த்தும், தடை உத்தரவு பிறப்பித்த எல்லா மாவட்ட ஆட்சியர்களையும் பிரதிவாதிகளாகச் சேர்த்தும் கூடுதலாக மனுக்களை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அவரது முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கூடுதல் மனுக்களை தாக்கல் செய்ய அனுமதி அளித்தார். அதே நேரத்தில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிபதி சில அறிவுரைகளை வழங்கினார்.

இந்தப் பிரச்னையில் மனுதாரர் தரப்பினரோ அல்லது எதிர் தரப்பினரோ மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையும் நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பதாக ஆகி விடக் கூடாது. தனி மனித உரிமையை விட நாட்டின் ஒற்றுமைதான் மிகவும் முக்கியம். கவே, இந்தப் பிரச்னையில் பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண்பதற்கான எல்லாவித வாய்ப்புகள் குறித்தும் சம்பந்தப்பட்டவர்கள் முயற்சிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதி, மனு மீதான விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.



விஸ்வரூபம் சான்றிதழில் முறைகேடு: தமிழக அரசு

சென்னை: விஸ்வரூபம் திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் போது பேசிய தமிழக அரசின் வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன், விஸ்வரூபம் திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், திரைப்பட தணிக்கைத்துறை சட்டப்படி சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. 



அமெரிக்கா, இங்கிலாந்தில் விஸ்வரூபம் வசூல் சாதனை...!!

Vishwaroopam hit in US and UKஇந்தியாவில் விஸ்வரூபம் படத்திற்கு சிக்கல் எழுந்துள்ள நிலையில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் விஸ்வரூபம் வசூல் சாதனை படைத்து வருகிறது. கமல் நடித்து, இயக்கி, 3 மொழிகளில் தயாரித்துள்ள படம் விஸ்வரூபம். இப்படம் கடந்த 25ம் தேதி ரிலீஸ் ஆனது. ஆனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இப்படம் ரிலீஸ் ஆகவில்லை. காரணம் இப்படத்தில் முஸ்லிம் மதத்தவரை தவறாக சித்தரிப்பதாக கூறி முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்து தெரிவித்தன. இதனையடுத்து சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு இப்படத்தை தடை செய்தது தமிழக அரசு. ஆனால் இப்படத்தை தடை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கமல் தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று(29.01.13) வர இருக்கிறது. இதற்கிடையே தமிழகத்தில் உதித்த இந்த எதிர்ப்பு இப்போது மற்ற மாநிலங்களிலும் உருவாகியுள்ளது. இதனால் விஸ்வரூபம் படம் இந்தியாவில் பெரும் சிக்கலை சந்தித்துள்ளது. இதனால் படத்தின் வசூல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் ரூ.30 கோடி இழப்பீடு ஏற்பட்டதாக ஒரு சர்வே தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் இப்படம் முடங்கி இருந்தாலும் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இங்கிலாந்தில் சுமார் 19 தியேட்டர்களில் வெளியான விஸ்வரூபம் படம் ரூ.81.23 லட்சம் வசூல் செய்துள்ளது. அதேபோல் அமெரிக்காவில் 44 தியேட்டர்களில் ரிலீஸான இப்படம் ரூ.3.43 கோடி வசூல் செய்துள்ளது. தொடர்ந்து அந்நாட்டு மக்கள் இடையே இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் இப்படம் இன்னும் வசூல் சாதனை படைக்கும் என்று கூறப்படுகிறது. 
 
 
 
நன்றி - விகடன் , தினமலர்




ஜாதி அரசியல்-ஜதி அரசியல்-கீழ் மட்டத்தொண்டர்கள் ( ஜோக்ஸ்)

1.உன் மனைவி லைன்ல இருக்காங்க, ஏன் ஃபோனை அட்டெண்ட் பண்ணலை? 

இப்போ தான் டேமேஜர்ட்ட டோஸ் வாங்குனேன், கொஞ்சம் கேப் வேணாமா?


-------------------------------

2.  தவறான கேள்வி - உங்களுக்கு அறிவு இருக்கா?

அதற்கான சரியான பதில் - ஹி ஹி இல்லை, ஏன், நீங்க தரப்போறீங்களா?


--------------------------------------

3. மேத்ஸ் நாலெட்ஜ் இல்லாதவங்களைத்தான் உயர் பதவில அமர்த்தனுமா? ஏன்?

அப்போதான் நாம ஏதாவது ஊழல் பண்ணுனாக்கூட இவ்ளவ் ஊழல் நடந்ததுன்னு கணக்கு போட்டு சொல்ல மாட்டாங்க.

.
----------------------------------
4.  செயல்படாத தலைவர்னு என்னை யாரும் சொல்லிட முடியாது.. ஏன்?

யோவ், நான் தான் டெயிலி 3 வேளை சாப்பிடறேனே? அது செயல் இல்லையா?

-------------------------------------

5. ஆண்கள்க்கு கன்னி ராசின்னா எனக்கு புரியுது, அதுவே பொண்ணுக்கும் அதே ராசின்னா இன்னா அர்த்தம்? டவுட் டேவிட்

-------------------------------




6.  தலைவர் செம டேலண்ட்னு எப்படி சொல்றே?

தன் பையனுக்கு மேத்ஸ் வர்லைன்னு தெரிஞ்சதும் ரஷ்யாவில் பகவத் கீதைக்கு தடை விதித்தது போல் இங்கே அல்ஜீப்ராவை தடை செய்யனும்னுட்டாரே?

-------------------------------------

7. ஹூம், எல்லாம் கெட்டதா நடக்குது, எனக்கு ராசியே இல்லை போல..

கதை விடாதீங்க தலைவரே< உங்களூக்கு மீன ராசிதானே?

----------------------------------------------

8. தலைவர் ஒரு சந்தர்ப்பவாதினு எப்டி சொல்றே?

கடல்ல தூக்கிப்போட்டா கட்டு மரமா மாறி எஸ் ஆகிடுவேன்கறாரே?

--------------------------------

9. தலைவரே, புழல் ஏரி பற்றி கேட்டா ஏன் வாயை திறக்க மாட்டேங்கறீங்க?

சாரி, புழல் சிறை பற்றி கேளூங்க பக்கம் பக்கமா எழுதறேன்

-----------------------------

10. ALL IS WELL -இதுதான் படத்தோட கான்செப்ட் # அந்த ஆள் தான் கிணறுங்கறாங்களா?

---------------------------




11. கட்சிக்கு கெட்ட பேர் வர்ற மாதிரி யாரும் நடந்துக்கக்கூடாது..

ஓக்கே  தலைவரே, இனிமே ஆல் இன் ஆல் நீங்களே பார்த்துக்கறீங்களா? டன்

-------------------------------

12. தலைவரே, அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரானவர்..

விடுய்யா விடுய்யா அரசியல் வாழ்க்கைன்னு வந்துட்டா  எதிர் நீச்சல் போட்டுத்தான் முன்னேற முடியும்..

---------------------------------------

13. மிஸ், உங்க இதயச்சிறைல எனக்கு ஒரு அடைக்கலம் குடுங்க..

ஓஹோ, அப்புறம் ஜாமீன்ல கூட வெளில வர முடியாது , ஓக்கேவா?

---------------------------------------

14. விஜய் தன் வாழ்க்கையில் யாரையும் அடிக்காத ஒரே படம் நண்பன் # அதுதான் புரொடியூசர்ஸ், டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் வயிற்றில் அடிச்சுட்டாரே?

---------------------------------

15. இனி எக்காலத்திலும் யார் கூடவும் கூட்டணி இல்லை, இது என் குல தெய்வம் மீது சத்தியம்.# அரசியல் மேட்டர்ல ஏன் சம்சாரத்தை இழுக்கறீங்க?

-

-------------------------------

16. இண்ட்டர்வியூவுக்கு வந்த 650 பேருக்கும் ஒரு பொண்ணு ஃபேஸ் வாஷ் பண்ணி விடுதே, ஏன்?

நடப்பது எல்லாம் ஒரு EYE WASHனு சிம்பாலிக்கா சொல்லுதோ?

-----------------------------------

17. ஹீரோயின் பின்னால ஹீரோ படம் பூரா லோ லோ-னு அலையறாரே, ஏன்?

ஏன்னா ஹீரோயின் லோ கட் -ல லோ ஹிப்ல  உலா வர்றாங்களே?

--------------------------------

18. லேடி- என்னை ஒரு சுவாமி ஃபாலோ பண்றார்

.போலீஸ் - ஆள் அடையாளம் சொல்லுங்க..

லேடி - தெரில சார், அவர் டி பி ல ஃபோட்டோ போடலை

----------------------------------

19.  தலைவருக்கு தமிழும் புரியலை,  அரசியலும் தெரில

எப்படி சொல்றே?

கீழ் மட்டத்தொண்டர்கள்னா மேடைக்கு கீழே உக்காந்திருக்கற மட்டமான தொண்டர்களா?னு தலைவர் - கேட்கறாரே?

---------------------------------------

20.  ஜாதி அரசியல் தலைவருக்கு பிடிக்காதாமே?

ஆமா, அவர் எது சொன்னாலும் ஜிங்க் சக் அடிக்கற ஜதி அரசியல் தான் அவருக்கு பிடிக்கும்

------------------------------------





டுடே டைம் பாஸ் @ டி வி

Monday, January 28, 2013

விஸ்வரூபம்- கோர்ட் அப்டேட்

விஸ்வரூபம் விவகாரம்: தீர்ப்பு செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைப்பு
 
 
Posted Date : 11:02 (28/01/2013)Last updated : 14:00 (28/01/2013)
சென்னை: விஸ்வரூபம் விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.


நடிகர் கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகக் கூறி எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து, படத்தை தமிழகத்தில் திரையிட மாநில அரசு தடை விதித்தது.


தடைக்கு எதிராக நடிகர் கமல்ஹாசன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து, நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான குழு நேற்று முன்தினம் விஸ்வரூபம் படத்தை பார்த்து ஆய்வு செய்தது. இதில், தயாரிப்பு நிறுவனம், ரசிகர்கள் மற்றும் மனுதாரர்கள் தரப்பிலும் பிரதிநிதிகள் அந்தப் படத்தை பார்த்தனர்.


இந்நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் தீர்ப்பை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதால், தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.


புதிய  மனு...


விஸ்வரூபம் பிரச்னையில் இன்று காலை கமல்ஹாசன் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் சதீஸ் பராசரன், பி.எஸ்.ராமன் ஆகியோர், விஸ்வரூபம் படத்துக்கு மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்துள்ள‌ 144 தடை உத்தரவை நீக்கக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக நீதிபதியின் முன்பு தெரிவித்தார்கள்.

அதை கேட்ட நீதிபதி கே.வெங்கட்ராமன், "ஏற்கெனவே இது தொடர்பாக ஒரு வழக்கு உள்ளது. ஆகவே அதே விஷயம் தொடர்பாக இன்னொரு மனு மீது தனியாக உத்தரவிட முடியாது. எனவே நாளை அந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது இந்த மனுவையும் அதனுடன் சேர்த்து தாக்கல் செய்யுங்கள்" என்று அறிவுறுத்தியதுடன், 'இந்த பிரச்னை சட்டம் ஒழுங்கு, சமூக ஒற்றுமை, கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு ஆகியவை தொடர்புடையது. எனவே அரசுத் தரப்புடன் சுமூகமான பேச்சுவார்த்தை நடத்தி, இதில் ஒரு உடன்பாட்டுக்கு வருவது, நாளை வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் பயனுள்ளதாக இருக்கும்'' என்றும் தெரிவித்தார்.

ஏற்கெனவே விஸ்வரூபம் படத்துக்கான தடை மீதான தீர்ப்பு நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய மனுவும் நாளை தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, இன்று நீதிமன்றத்துக்கு வந்த கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன், 'ஜனநாயக நாட்டில் ஒரு குடிமகன் தன் பிரச்னைகளுக்காக சட்டப்பூர்வமான வழியில் முறையிட இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று அரசிடம் முறையிடலாம். மற்றொன்று நீதிமன்றத்தில் முறையிடலாம். நாங்கள் இரண்டு வழிகளிலும் முயற்சிக்கிறோம்" என்று பத்திரிகையாளர்களிடம் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு நாளும் புதிய வழக்குகள் சூழும் நிலையில்... விஸ்வரூபம் சர்ச்சைகள் தொடர்கின்றன.

விஸ்வரூபம் பிரச்னை: கமல் நாளை புதிய மனு தாக்கல்
 
 
Posted Date : 11:54 (28/01/2013)Last updated : 13:40 (28/01/2013)
சென்னை:  விஸ்வரூபம் பிரச்னையில் இன்று காலை கமல்ஹாசன் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் சதீஸ் பராசரன், பி.எஸ்.ராமன் ஆகியோர், விஸ்வரூபம் படத்துக்கு மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்துள்ள‌ 144 தடை உத்தரவை நீக்கக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக நீதிபதியின் முன்பு தெரிவித்தார்கள்.



அதை கேட்ட நீதிபதி கே.வெங்கட்ராமன், "ஏற்கெனவே இது தொடர்பாக ஒரு வழக்கு உள்ளது. ஆகவே அதே விஷயம் தொடர்பாக இன்னொரு மனு மீது தனியாக உத்தரவிட முடியாது. எனவே நாளை அந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது இந்த மனுவையும் அதனுடன் சேர்த்து தாக்கல் செய்யுங்கள்" என்று அறிவுறுத்தியதுடன், 'இந்த பிரச்னை சட்டம் ஒழுங்கு, சமூக ஒற்றுமை, கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு ஆகியவை தொடர்புடையது. எனவே அரசுத் தரப்புடன் சுமூகமான பேச்சுவார்த்தை நடத்தி, இதில் ஒரு உடன்பாட்டுக்கு வருவது, நாளை வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் பயனுள்ளதாக இருக்கும்'' என்றும் தெரிவித்தார்.

ஏற்கெனவே விஸ்வரூபம் படத்துக்கான தடை மீதான தீர்ப்பு நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய மனுவும் நாளை தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, இன்று நீதிமன்றத்துக்கு வந்த கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன், 'ஜனநாயக நாட்டில் ஒரு குடிமகன் தன் பிரச்னைகளுக்காக சட்டப்பூர்வமான வழியில் முறையிட இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று அரசிடம் முறையிடலாம். மற்றொன்று நீதிமன்றத்தில் முறையிடலாம். நாங்கள் இரண்டு வழிகளிலும் முயற்சிக்கிறோம்" என்று பத்திரிகையாளர்களிடம் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு நாளும் புதிய வழக்குகள் சூழும் நிலையில்... விஸ்வரூபம் சர்ச்சைகள் தொடர்கின்றன.


thanx - vikatan

நான் ஏன் ட்விட்டருக்கு வர்லை? - மு க ஸ்டாலின் பேட்டி

விகடன் மேடை - ஸ்டாலின்




எஸ்.அங்கயற்கண்ணி, காரைக்கால்.


 ''ஒரு சில நண்பர்களைக்கூட அரசியல் பிரிக்கிறதே... இதற்குக் காரணம் என்ன?''


''நட்பை அரசியல் கண்கொண்டு அணுகுவதால்தான்!''


கே.அருண், வந்தவாசி.


''தி.மு.க-வில் இளைஞர் அணிக்கு மட்டும் ஏன் கூடுதல் முக்கியத்துவம்? நீங்கள் அதன் பொறுப்பாளராக இருப்பதால்தானே?''


''அப்படி இல்லை. தி.மு.க-வைப் பொறுத்த வரை இளைஞர் அணியைப் போலவே மகளிர் அணி, தொழிலாளர் அணி, நெசவாளர் அணி, வழக்கறிஞர் அணி என அனைத்து அமைப்புகளுமே சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. எந்த ஓர் இயக்கத்திலும் மற்ற பிரிவுகளைவிட, இளைஞர்கள் அதிகமாக இருப்பார்கள். அதனால், அந்த அணிக்கு முக்கியத்துவம் இயல்பாகவே கிடைத்துவிடும்.


இளைஞர் அணியை மதுரை ஜான்சி ராணி பூங்காவிலே தொடக்கிவைக்கும்போது தலைவர் கலைஞர், 'இது தி.மு.கழகத்துக்குத் துணை நிற்குமே தவிர, இணை அமைப்பு அல்ல’ என்று கட்டளை இட்டார். அந்தக் கோட்டைத் தாண்டாமல்தான் இளைஞர் அணி இதுவரை செயல்பட்டு வந்தது... இனியும் அப்படித்தான் செயல்படும்!''


க.மோகன், மங்கலம்.


 ''கல்லூரி நாட்களில் காதல் அனுபவங்கள் உண்டா?''


''அந்தப் பருவத்திலேயே பொதுப்பணி உணர்வுகள் மேலோங்கி இருந்தன. அதனால், அப்போது காதலிக்க நேரம் இல்லை!''



இரா.கமலக்கண்ணன், சித்தோடு.


''விஜயகாந்தின் அரசியல், திரைப்படச் செயல்பாடுகள்பற்றி உங்களது பார்வை..?''


''கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அவர் ஒரு வரலாற்றுப் பிழையைச் செய்துவிட்டார். அந்தப் பிழையினால் ஏற்பட்ட பின்னடை வுகளை அவர் கண்கூடாகக் கண்டு வருகிறார். எனவே, அந்தப் பிழையைத் திருத்தும் பரிகாரத்தைத் தேடும் பண்பட்ட மனநிலையிலே அவர் இருந்துவருகிறார்.
திரைத் துறையைப் பொறுத்தவரையில், அவர் நடித்த 'சின்னக்கவுண்டர்’, 'கேப்டன் பிரபாகரன்’, 'ரமணா’ ஆகிய படங்கள் எனக்குப் பிடித்தவை!''


பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.



''தி.மு.க-வை விமர்சித்து கேலி, கிண்டல், நையாண்டி செய்து விகடனில் விமர்சனங்கள் வருகின்றன. ஆனால், அதிலேயே வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முன்வரும் உங்கள் பண்பு, தமிழக அரசியல் சூழலில் ஆச்சர்யம் அளிக்கிறதே?''



'' 'செவி கைப்பச் சொற்பொறுக்க’ வேண்டும் என்பது அய்யன் வள்ளுவரின் அறிவுரை. உள்நோக்கம் அற்ற யதார்த்தமான அனைத்து விமர்சனங்களும் வரவேற்கப்பட வேண்டியவையே. ஆனால், சிலர் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்தோடு செயல்படும்போது கண்டிக்க வேண்டியிருக்கிறது. விகடனில் விமர்சனங்கள் வரும்போது அவற்றின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, நம்மை நாமே பார்த்துக்கொள்ள அவை உதவுகின்றன. வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்வது, அவர்களுடன் நேசத்தை வளர்த்துக்கொள்ளவும் விளக்கம் அளித்து ஒளியேற்றவும் பயன்படுகிறது!''


ஆ.கமலக்கண்ணன், புதுச்சேரி.


''இசைமுரசு நாகூர் ஹனீபா... பெயரைச் சொன்னதும் உங்களுக்கு நினைவு வருவது எது?''


'' 'ஓடி வருகிறான் உதயசூரியன்...’

  'அழைக்கின்றார்... அழைக்கின்றார்... அண்ணா...’

'கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே...’

'இறைவனிடம் கையேந்துங்கள்... அவன் இல்லையென்று சொல்லுவதில்லை...’

'வளர்த்தகடா மார்பில் பாய்ந்ததடா...’


- என்று கணீர்க் குரலுடனும் கம்பீர வரிகளுடனும் நாகூர் ஹனீபா அவர்கள், திராவிட இயக்கத்தை எட்டுத் திசைக்கும் கொண்டுசேர்த்த 'தனிமனித வானொலி’. அவர் குரலுக்கு மனதைப் பறிகொடுத்த அனைவரும் இயக்கத்துக்குள் இணைந்து இரண்டறக் கலந்துவிட்டார்கள். திராவிட இயக்கம் இருக்கும் வரை அதன் செவிகளில் தூரத்து இடி முழக்கமாக இசைமுரசுவின் எக்காளப் பேரொலி எதிரொலித்துக்கொண்டே இருக்கும்!''


வி.குமரேசன், தூத்துக்குடி.


''நீங்கள் மறக்க முடியாத மனிதர் யார்?''


 ''மறக்க முடியாத என்பதைவிட, மறக்கக் கூடாத மனிதர் ஒருவரைச் சொல்கிறேன். அவர்... சிட்டிபாபு!



என் மீது விழுந்த அடிகள் அனைத்தையும் தன் மீது தாங்கிய மனிதர். அன்று அவர் தோள் கொடுக்காமல் போயிருந்தால், இன்று நான் உங்களின் இந்தக் கேள்விக்குப் பதில் அளித்திருப்பேனா 
 என்பதே சந்தேகம்தான்!



அவசரநிலைப் பிரகடனம் இந்தியாவில் அமலான நேரத்தில் அதனை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் அன்றைய முதல்வர் கலைஞர். சுமார் 38 ஆண்டுகளுக்கு முன்பு, நெருக்கடி யான அந்தக் காலகட்டத்தில் நடந்த சிறைக் காட்சியை இப்போது நினைத்துப் பார்த்தாலும் அடிவயிற்றில் நெருப்பு பரவும். நான் சொல்வதை விட அண்ணன் சிட்டிபாபு தன்னுடைய சிறை டைரியில் இப்படி எழுதுகிறார்...



'தமிழகத்து முதலமைச்சர் மகன் என்று அறிந்திருந்த அந்த அதிகாரி, தன் பூட்ஸ் காலால் அவன் அழகிய முகத்தைச் சுவை பார்க்க உதைத்தான். அடுத்து கொலைகாரன் ஒருவன் ஓங்கிய கோல் அவனது தோள் பட்டையில். காக்கி உடை அணிந்த வார்டன் ஒருவன் அவனது கன்னத்தில் கைநீட்டினான். கண்டேன் காட்சியை! இவர்கள் இவனை அடித்தே கொன்றுவிடுவர் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.



 எனக்கென்று ஒரு துணிவு. திடீர் என்று குறுக்கே பாய்ந்தேன். தடிகள் கழுத்தில் விழுந்தன. அவை அடிகள் அல்ல. உலைக்களத்தில் பழுக்கக் காய்ச்சிய இரும்பினைத் தட்டிப் பதப்படுத்தி உளியாக மாற்றிவிடும் சம்மட்டி அடிகளாக எனக்கு அமைந்தன. கழுத்தில் அத்தனையையும் தாங்கிக்கொண்டேன்’ என்று கதறக் கதற எழுதி இருப்பார் சிட்டிபாபு. இத்தகைய விழுப்புண்களைத் தாங்கி விண்ணுயர இயக்கத்தை வளர்த்தவர்கள் தி.மு.க-வின் வீரர்கள். அத்தகைய தீரர்களில் ஒருவர் சிட்டிபாபு!''


அ.கணேசன், காஞ்சிபுரம்.


''ஊடகங்களால் (நாடகம், திரைப்படம், இதழ்கள்) வளர்ந்த இயக்கம் தி.மு.க. ஆனால், இந்நாளைய ஊடகங்களான (இணையம், ஃபேஸ்புக், ட்விட்டர்) ஆகியவற்றை நீங்கள் சரிவரப் பயன்படுத்திக்கொள்ளவில்லையே?''



''இணையம், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றைப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறோம். மேலும், அதை வலுப்படுத்திக்கொள்வது தொடர்பான ஆலோசனையில் இருக் கிறோம். எனினும் இதழ்கள், திரைப் படம், நாடகம் போன்று அனைத்துத் தரப்பு மக்களையும் இவை எளிமை யாகவும் வலிமையாகவும் நெருக்க மாகவும் சென்றடைந்திட முடியுமா என்பது இன்னும் தெளிவுபடுத்தப்பட வில்லை.''



கோ.பகவான்,  பொம்மராஜுபேட்டை.


''நீங்கள் கடைசியாக அழுதது எப்போது? எதற்காக?''
''சேலம் மாவட்டக் கழகச் செயலாளராக இருந்த அண்ணன் வீரபாண்டியார் அவர்கள் மறைந்தபோது ஆற்றாது அழுதேன். சேலம் மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகக் கழகத்தைக் கட்டிக்காத்தவர். சோதனைகள் பல வந்தபோதும் குன்றென நிமிர்ந்து நின்றவர். சாதனைகள் பலவற்றைச் செய்துகாட்டியவர். அவர் பழக்கத்தில் சேலத்து மாங்கனி. பகையை அழிப்பதில் சினங்கொண்ட சிங்கம்.



'தி.மு.கழகத்தின் தூண்களில் ஒன்று சாய்ந்துவிட்டது. சேலத்துச் சிங்கமான எனது தளபதியை இழந்த துக்கம் என்னை வாட்டி வதைக்கிறது’ என்று தலைவர் கலைஞர் அவர்கள் தேம்பித் தேம்பி அழுதபோது, நானும் துக்கம் தாளாமல் கண்ணீர்விட்டு அழுதேன்!''


அடுத்த வாரம்...


திருத்தம்: கடந்த இதழில் குறிப்பிடப்பட்ட 'எங்கள் திராவிடப் பொன்னாடே’ பாடல் கவிஞர் கண்ணதாசனாலும், 'கா... கா... கா... ஆகாரம் உண்ண’ பாடல் கவிஞர் உடுமலை நாராயண கவியாலும் எழுதப்பட்டவை.


- இன்னும் பேசுவோம்...



நன்றி - விகடன் 


டிஸ்கி - 1 அழகிரி உங்களுக்குப்போட்டியா ? ஸ்டாலின் பேட்டி ( பாகம் 1)

http://www.adrasaka.com/2012/12/blog-post_27.html


டிஸ்கி 2 - -கட்சிக்காக உழைச்ச யாரையும் மதிக்க மாட்டேங்கிறீங்க...? ஏன்? மு க ஸ்டாலின் பேட்டி பாகம் 2   http://www.adrasaka.com/2013/01/blog-post_1472.html


ிஸ்கி - 3 ிராவிடக்கட்சிகள் நாட்டை குட்டிச்சுவர் ஆக்கியா? மு க ஸ்டாலின் பேட்டி பாகம் 3 http://www.adrasaka.com/2013/01/2016.html


டிஸ்கி - பாகம் 4 - எனது உடல்நிலைகுறித்து ஊகமான விபரீத வதந்திகள் - மு க ஸ்டாலின் பேட்டி @ விகடன்

http://www.adrasaka.com/2013/01/blog-post_17.html



diSki பாகம் 5 -

எம் ஜி ஆர் VS கலைஞர் நட்பு - மு க ஸ்டாலின் பேட்டி

http://www.adrasaka.com/2013/01/vs_31.html


மதுவை ஊற்றிக் கொடுத்து கெடுத்து விட்டனர் அ.தி.மு.க. ஆட்கள்”.- விஜயகாந்த்

1. விஜய் ரசிகருக்கு ஒற்றைத்தலைவலி.அஜித் ரசிகருக்கு ரெட்டை தல வழி! 



-----------------------


2. ரெட்டை ஜடை வயசு ,ரெட்டை சுழி 2ம் ஊத்திக்கிட்டாலும் ரெட்டை தல தலையெழுத்தை மாத்தும் # சும்மா சொல்லி வைப்போம் 



-------------------------



3. எந்தப்பிரச்சனையையும் அசால்ட்டா ஊதித்தள்ளும் ஒபாமாவாகவே நீ இருந்தாலும் பாமா ருக்மணி பிரச்சனைல மட்டும் மாட்டாதே!



---------------------------



4. டக் இன் சர்ட் பண்ணி இருக்கும் டீசண்ட்டான ஆள் சட்டையை எடுத்து விட்டா அவன் டவுன் பஸ்சில் கூட்ட நெரிசலில் முன்னேறிட்டு இருக்கான்னு அர்த்தம்




------------------------


5.  ஜூனியர் ஹார்லிக்ஸ் குடிச்சா நாம யூத்னு காட்டிக்கலாம்்




-----------------------




6. கேப்டன் - நான் வந்து பேசுனா பிரச்சனை சரி ஆகிடுமா?



கமல் - தெரில , ஆனா தெறிச்சு ஓடிடுவாங்க




----------------------


7.  மணிரத்னம் - யுவர் ஆனர் , ரம்யாகிருஷ்ணன் 13 வயசுலயே ஸ்விம்மிங்க் டிரஸ்ல நடிச்சார்,தெரியுமா?



ஜட்ஜ் - எது? முதல் வசந்தமா? ஐ ஜாலி



--------------------------


8. ஜட்ஜ் - 15 வயசுப்பொண்ணு கிஸ் சீன்ல நடிக்கலாமா?



 மணிரத்னம் - துளசியோட வயசு 15ன்னு சொன்னது சும்மா மார்க்கெட்டிங்க்கு, ஆக்சுவலி 19



--------------------------------


9. வைணவர்கள் புண்ணிய தீர்த்தத்தில் துளசி (பெருமாள் கோவில்களில் )தர்றாங்க , அந்த பேரை கெடுக்கும் விதமா துளசி கிஸ் சீன்ல நடிச்சிருக்கு#கடல்



--------------------------


10. அடுத்து ஒரு குரூப் கடல் படத்துக்கு தடை விதிக்கனும், 15 வயசுப்பொண்னு கிஸ் அடிக்குதுன்னு கிளம்பும் பாருங்க




------------------------


11. பொண்ணுங்க இப்போதெல்லாம் மஞ்சள் தேய்ச்சுக்குளிப்பதில்லை, இயற்கை முக அழகுக்கு ஆண்கள் இனி மஞ்சள் தேய்ச்சுக்குளிச்சா என்ன? # டவுட் டே விட்




--------------------------

12. இன்று கொடியேற்று விழா - அன்னக்கொடிப்ரியன்




------------------------


13. வேதாளத்திற்கும் முருங்கை மரத்திற்கும் என்ன தொடர்பு?




 வேதாளம் விக்ரமாதித்தன் தோள் ல ஏறிட்டா அவ்ளவ் சீக்கிரம் இறங்காது. FILL in the blanks



----------------------------


14. விஸ்வரூபம் 158 நிமிடங்கள் ஓடியும் கிஸ்வரூபம் ஒரு நிமிடம் கூட இல்லை.கமல் பழசெல்லாம் மறந்துட்டாரா?





-----------------------------



15. 1,ஆன்ட்ரியாக்கு ஏன் கிஸ் தர்லைனு உலகத்துக்கே தெரியும் 2 லட்சுமிராய் எட்டலை ஓக்கே 3 பூஜா குமார்க்கு ஏன் தர்லை? ஐ வான்ட் டூ நோ த ரீசன்




----------------------



16. படத்தில் 3 ஹீரோயின் இருந்தும் கமல் தன் கடமையை சரி வரச்செய்யவில்லை என்பதில் எமக்கு வருத்தமே


-----------------------


17. யுவர் ஆனர், இன்னுமா படம் பார்க்கறீங்க?



இப்போதான் 3 டைம் பார்த்து முடிச்சிருக்கேன், பாதி புரிஞ்சுது , வெயிட் டில் 2 டேஸ்


-----------------------------



18. படத்தில பாடல் காட்சி இல்லை-த.மு.மு.க# எங்காளு சும்மா நின்னுட்டிருந்தாலே கிஸ் அடிச்சுடுவாருய்யா.டூயட் சாக்கு தேவை இல்லை





-----------------------------



19. டேமேஜர் -டியூட்டி டைம்ல சினிமாக்கு போறேன்கறியே,யாராவது அப்டி பார்ப்பாங்களா?



 போங்க சார், ஹை கோர்ட் ஜட்ஜே இன்னைக்கு பார்க்கறார்




---------------------------------

 20. அஜித்க்கு அடுத்த ரஜினி ஆகனும்னு ஆசை வந்துடுச்சு போல # அவர் விட்ட அறிக்கையும் புரியல , ஹி ஹி




---------------------------



21. டியர், உன் தங்கச்சி வயசுக்கு வந்ததுக்கு ட்ரீட் வேணும்.



 ட்ரீட்னா என்ன?



 உன் ஏ டி எம் கார்டைக்குடு சொல்றேன்



-------------------


22.  ரஜினி - படம் பார்த்தேன், பாதிதான் புரிஞ்சுது .



 கமல் - உங்க அறிக்கையை படிச்சேன், முழுசும் புரியல


-----------------------------


23. யாராவது ஏதாவது கருத்து சொன்னா அதுக்கு வரி விதிக்கனும், ஹி ஹி




-------------------------



24. டெல்லி அப்பளம் = திருவிழாக்களில் கிடைக்கும் , பெருசா இருக்கும் , ஷேர் ஆட்டோ மாதிரி ஷேர் பண்ணிக்கலாம்




-------------------------


25.  டேவிட் படம் போட்டுக்காமிக்கனும்னு கிறிஸ்டியன்ஸ் யாரும் கிளம்பலையா? # பொய்யல்ல போட்டுக்குடு




----------------------


26. மதுவை ஊற்றிக் கொடுத்து கெடுத்து விட்டனர் அ.தி.மு.க. ஆட்கள்”.- விஜயகாந்த் # கேப்டன்! நைட் டைம்ல பஸ்ல போகாதீங்க





-------------------------

27. அஜித் அறிக்கை - தல யும் புரியல வாலும் புரியல # அசல்





----------------------



28. ஜட்ஜய்யா பேர்லயே வெங் கட் ராமன் கட் இருப்பதால் சில காட்சிகளை கட் பண்ணச்சொல்வார் என எதிர்பார்க்கலாம்




----------------------------


29. விஸ்வரூபம் - இன்று நீதிபதி வெங்கட்ராமன் பார்க்கிறார் # படத்தை ரிலீஸ் பண்ணச்சொல்லிட்டா ராமன், இல்லைன்னா ராவணன், வெங்கட்ராமா கோவிந்தா





-----------------------------



30. பவர் ஸ்டார் பெயரில் இயங்கி வரும் ட்விட்டர் அக்கவுண்ட் போலி - தினகரன் -ல் உதயநிதி ஸ்டாலின் ( அவர்ட்டயே ஃபோன்ல பேசி கன்ஃபர்ம்டாம்)



--------------------------------