Wednesday, December 26, 2012

தரையிறங்கும் இறகு! - அ.வெண்ணிலா - சிறுகதை


தரையிறங்கும் இறகு!

.வெண்ணிலா

வயது தசை மரமாக முதிர்ந்து உடலெங்கும் கிளை பிடித்து ஓடியது முத்துலட்சுமிக்கு. முத்துலட்சுமின்னா யாருக்குத் தெரியும்? ‘கூனி கெழவிதான் இப்ப அவ பேர்.
மொதமொதல்ல தனக்கு வெள்ள முடி வரும்போது கூட முத்துலட்சுமிக்கு மனசுல கிலேசம் இருந்தது கிடையாது. ஆனா, ‘ கெழவின்னு பிள்ளைங்க கூப்பிட ஆரம்பிச்சதும்தான், முத்துலட்சுமிக்கு மனசுக்குள் கிலி பிடித்த மாதிரி இருந்தது.
சின்னப் பிள்ளையில, கூடப் படிக்கிற பிள்ளைங்க யாராவது முத்துன்னு சுருக்கமா கூப்பிட்டாலே அப்பாவுக்குப் பிடிக்காது அதென்ன பேர் வைக்கறது ஒண்ணு, கூப்பிட்றது ஒண்ணுன்னு கோபப்படுவார். முத்துலட்சுமின்னு பளிச்சின்னு கூப்பிடுவார்.
நெனச்சா செத்துப் போறதுக்கு என்ன வழின்னு தெரியல. அந்தக்காலத்துல சீராட்டியும், பாராட்டியும் வாழ்ந்ததெல்லாம், இன்னிக்கு இந்தத் துண்டு, துக்கடா பசங்ககிட்ட சீரழியத்தான் போலிருக்கு.
வீடு விழித்தெழத் தொடங்கியிருந்தது. காலை நேரத்துக்கே உண்டான சின்னச் சின்ன ஒலிகளுடன் வீடு அந்தந்த இடத்தில் உயிர்த்திருந்தது. தன் பெண்ணைத் தேடி கண்களால் துழாவினாள். சமையலறைக்குள் புடைவை நுனி பறந்து பறந்து கண்ணில் பட்டது. சமையலைத் தொடங்கி விட்டிருப்பாள். டிஃபன், சாப்பாடு, டீ. காபி, பால்.... என்று வகைவகையாகச் சமையலறை அவளை விழுங்கி இன்னும் இரண்டு மணி நேரத்துக்கு வெளியே விடாது.
மருமகப் பிள்ளையைக் காணோமே? தன் வீட்டுக்காரரை நினைத்துக் கொண்டாள். ஒரு வேலைக்கும் முழுமையாக உதவ மாட்டார். இருப்பினும், வீட்டில் ஒரே இடத்தில் அவரால் முடங்கிவிட முடியாது. வீடு முழுக்கச் சுற்றுவார். சமையலறைக்கு வருவார். காய்கறி நறுக்குவார். தோட்டத்துக்குப் போவார். செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவார். பிள்ளைகளை எழுப்பி பல் தேய்த்து விட்டுக் குளிக்க வைப்பார்.
மருமகன் நேர் எதிர். அவர் உட்கார்ந்த இடத்துக்குப் பேப்பர் போக வேண்டும். டீ. சாப்பாடு...எல்லாம்... சாப்பிட்டு தட்டிலேயே கை கழுவி, தட்டை ஒரு அங்குலம் முன்னால் நகர்த்தி விட்டு, அப்படியே கட்டையைச் சாய்ப்பார். நேரம் ஆகுதான்னு பார்த்துக் கிட்டே இருந்து சட்டையை மாட்டிக்கிட்டுப் பறப்பார். அதிகபட்சம் அவர் வீட்டில் நடமாடும் தூரமே 10 அடி, 15 அடிதான்.
இரண்டு பிள்ளைகளும் அச்சு அசல் அப்பாதான். அவர்கள் செய்யும் ஒரே வேலை, முத்துலட்சுமியுடன் சண்டை போடுவதுதான். அவர்களுக்கு பாட்டி ஒரு வேஸ்ட். தேவையில்லாத தொண தொணப்பு. முடிஞ்சுப்போன நோட்டுப் புத்தகத்தைத் தூக்கிப் போடுவதைப்போல், இந்தக் கெழவியையும் தூக்கிப் போட்டுவிட வேண்டும். வீட்டுக்குள்ள யார் வந்தாலும், போனாலும் யாரு என்னன்னு கேள்வி கேட்டுத் தொணதொணக்கிற கேள்விக் கொலைகெழவி.
ஓடி ஓடி உழைத்த உடம்பு. முத்துலட்சுமியால் சும்மாவே உட்கார்ந்திருக்க முடியாது. எல்லா வேலையையும் உடனுக்குடன் முடிக்க வேண்டும். ஊற வைத்துக் கிடக்கும் துணியைப் பார்த்தாலும், காய்ந்து கிடக்கும் பாத்திரங்களைப் பார்த்தாலும், கை, கால்கள் பரபரக்கும். கால்களில் தூசி ஒட்டினால், தொடப்பம் எடுத்து உட்கார்ந்து கொண்டாவது பெருக்கி விடுவாள்.
வீடு ஒரு கால இயந்திரம்போல் வேலைகளை உண்டு பண்ணிக் கொண்டே இருக்கும். வேலையற்று இருக்கும் வீடுகளைப் பார்க்கவே முடியாது. பூட்டிய வீடுகளைக் கூட தொலைபேசி அழைப்புகள் அசைத்துக் கொண்டே இருக்கின்றன. அலமேலுவுக்கு வீட்டுக்குள் நுழைந்தாலே சோர்வு வந்துவிடும். தன்னைத் தன்னுடைய ஆற்றலை விழுங்குவதற்காகவே காத்திருக்கும் வீட்டைக் கண்டாலே எரிந்து விழுவாள். இதில் ஓயாமல் அம்மாவின் தொண தொணப்பு வேறு. இந்த வேலை முடிந்ததா? அந்த வேலை முடிந்ததா? துவைத்தாயா, தேய்த்தாயா, படித்தாயா, என்று கேள்விகள்.... கேள்விகள். அம்மாவுக்கு என்ன, மேனேஜர், பைல், பஸ்னு எந்த டென்ஷனாவது இருந்ததா என்ன.
முதுகை வளைத்துக் கொண்டு கைகளைக் கீழே ஊன்றி, சமையலறையை நோக்கி அம்மா வருவது தெரிந்தது. காய் நறுக்கிட்டனாஎன்னன்னு பார்க்க வரும். கண் பார்வையும் மங்கிப்போச்சு. காலுக்குத் தெரிகின்ற நிதானத்தில் நடமாடிக் கொண்டிருக்கிறது.
குழந்தை..."
என்னம்மா...?"
என்ன சாம்பாரு? வெங்காயம்ல்லாம் அரிஞ்சிகிட்டயா?"
நான் பாத்துக்கிறேன் எல்லாம். இந்தா, இந்த டீயைக் குடிச்சுட்டு, வெளிய போய் காத்தாட உட்காரு."
டீயை நீட்டினாள்.
வாங்கி பக்கத்துல வைத்துவிட்டு, அரிவாள்மணை பக்கத்துல இருந்த வெங்காயம், காகறிகளை நகர்த்தி வைத்துக் கொண்டு அரிய ஆரம்பித்தாள் முத்து லட்சுமி.
பொண்ண எழுப்பி விட்றதுதானே?"
ஆமா.. என்ன கொழந்தன்னு சொல்லு, பேத்திய பொண்ணுன்னு சொல்லு. நல்லாருக்கு கேட்க."
போற வீட்லயும் இப்படித்தான் தூங்குவா, சீக்கிரம் எழும்ப பழக்கு."
நான் மட்டும் விடிய விடிய தூங்கல, இப்ப என்ன செய்யாமயா போய்ட்டேன். செக்குல போட்ட பிறகு, எல்லாம் எண்ணெய்யா போத்தான் செய்யும்."
அயோ, அம்மா...முத்துலட்சுமியின் கைகளில் இருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.
வேணான்னு சொன்னேன், கேட்டியாம்மா, சாண புடிச்ச அரிவாமனை. வேண்டாத வேலையெல்லாம் ஏம்மா செய்யற" ஈரத்துணியால் விரலைச் சுற்றினாள் அலமேலு.
காய் அரியறது வேண்டாத வேலையா?"
ஆமா, நிதானந் தெரியாதப்ப பேசாம உட்காரணும்."
எவ்ளோ நேரந்தான் உட்கார்ந்து இருக்கிறது."
ஏன், ஓடிப்போய்த்தான் ஓடி வாயேன். "
என்னை ஓடிப்போய்வான்னு சொல்ற அளவுக்கு கேவலமாய் போய்ட்டேன்..." முத்துலட்சுமி வலியை மறந்து முணங்கிக் கொண்டே பின்னால் நகர்ந்தாள். பக்கத்தில் குடிக்காமல் வைத்திருந்த டீ, அவள் கைபட்டுச் சாய்ந்தது.

டீயைக் குடுத்தா, வாங்குனம்மா, குடிச்சம்மான்னு இருக்கணும். அங்க வைக்கிறது, இங்க வைக்கிறதுன்னு.... ஏம்மா, இருக்கிற வேலையில நீ வேற?"
முத்துலட்சுமி ஒன்றும் சொல்லாமல் கரித்துணியை எடுத்து டீயைத் துடைத்தாள். பிறகு தண்ணீரைத் தெளித்து தரையைத் துடைத்துவிட்டாள்.
நீ வெளியே போய் உட்காரும்மா, நான் வேற டீ போட்டுக் கொண்டாறேன்." முத்துலட்சுமி வெளியே நகர்ந்தாள்.
அவள் வெளியே வரவும் பேரன் ஓடி வரவும் சரியாக இருந்தது. ஓடி வந்தவன் வேகத்தைக் குறைக்க முடியாமல், பாட்டியின் மேல் மோதினான்.
அயோ, கொன்னானே, கொன்னானே...வயிற்றைப் பிடித்துக் கொண்டு, அழுகையுடன் கேவினாள்.
வேகத்துக்கு மடங்கிய முட்டி பாட்டியின் வயிற்றைப் பதம் பார்த்தது.
முத்துலட்சுமியின் கேவல் அதிரவைத்தது. இருப்பினும் தன் நியாயத்தை விட்டுக் கொடுக்க முடியவில்லை. இந்தக் கெழவி எங்கனா மூலையில ஒக்காருதா, குறுக்கும் நெடுக்கும் வந்துகிட்டிருந்தா கால் படத்தான் செய்யும்சமாதானத்துடன் வெளியேறினான்.
முத்துலட்சுமிக்கு தலை கிறுகிறுவென்றிருந்தது. வளைந்த முதுகு இன்னும் உள் வாங்கிவிட்டது. அலமேலுவின் கையைப் பிடித்துக் கொண்டு, தவழ்வது போல் நடந்து வந்தாள்.
சுவரில் சாய்ந்து உட்கார முடியவில்லை. கொஞ்சம் நிமிர்ந்தாலும் வயிறு இழுத்துப் பிடித்தது. உட்கார்ந்திருப்பதே உடம்பைப் புண்ணாக்கியிருந்தது. எவ்வளவு நேரந்தான் உட்காருவது! தரையும் சதையும் உராய்ந்து உராய்ந்து, அனல் தகித்தது. விளக்கு போடாமல் தன் அறைக்குள் அடைந்து கிடப்பதே தேவலாம் போல இருந்தது.
தன் கை, கால்களைக் கட்டிப்போட்டு ஒவ்வொரு வினாடியும் தன்னைக் கடப்பது முத்துலட்சுமிக்கு வேதனையாயிருந்தது. தன் இயலாமையை எதிரில் உட்கார்ந்து கேலி செய்து ரசிப்பது போல் நாட்கள் வெறுப்பூட்டின. தன் குடும்பத்துக்கு தான் தேவைப்படாத நபராகி விட்டபிறகு, வாழ்வதற்கு அர்த்தமென்ன? இதே குழந்தை பிறந்தவுடன் ஆஸ்பிட்டலில் கைகளில் வாங்கியதிலிருந்து.... ஐந்து வயது வரை கீழிறக்கி விட்டதில்லை. இவன் இன்று வளர்ந்து நிற்க எவ்வளவு உழைப்பு, வலி. வளர்ந்து விட்ட காலால் உதைபட வேண்டியிருக்கிறது.
எல்லோருடைய வழியையும் தான் அடைத்துக் கொண்டிருப்பது போல் இருந்தது. நடுக்கூடத்தில் கிளைவிரித்த மரம் போல்தான் நின்று கொண்டிருப்பது எதற்காக? வாழ்ந்து முடிந்த வாழ்வை, தீந்த பண்டம்போல் கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா?
முத்துலட்சுமி உட்கார பிடிக்காமல் எழுந்து வெளியில் வந்தாள்.
அவள் தலை வெளியே தெரிந்ததோ இல்லையோ மாப்பிள்ளையின் குரல் அதிர்ந்தது. ஆமா, எப்ப வண்டிய தள்றேன்னு பாத்துட்டு இருப்பியா - கரெக்டா எதிர்ல வருவியே."
சட்டென்று தலையை உள்ளிழுத்துக் கொண்டாள் முத்துலட்சுமி. பெரிய தப்பு செய்தாற்போல் உடல் கிடுகிடுவென்று நடுங்கியது. பூமி பிளந்து உள்ளிழுத்துக் கொள்ளக் கூடாதா என்ற வெறி வந்தது. சாவு வர்லீயே, சாவு வர்லீயேபொங்கினாள் மனசுக்குள்.
பையை மாட்டிக்கொண்டு அலமேலு பின்னாள் வந்தாள். வெளியில் வண்டி ஸ்டார்ட் செய்கிற சத்தம் கேட்டது.
அம்மா, சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன், சாப்பிடு."
கதவ திறந்து வச்சிருக்காதே, ஜாக்ரதை."
ஏய், சீக்கிரம் வா" - மருமகன் குரல்.
சாயந்திரம் சீக்கிரம் வந்துடுவியா?"
ம்..வர்றேன். நீ போய் கொஞ்ச நேரம் படு. ஒரு வேலையும் செய்ய வேணாம். நான் வந்து பாத்துக்கறேன்," சொல்லிக் கொண்டே வண்டியில் ஏறி உட்கார்ந்தாள்.
வண்டி ஒலி மறைந்தது. கொஞ்ச நேரம் எதையோ யோசித்தபடி இருந்தாள். யார் யாரோ நினைவுக்குள் வந்துபோனார்கள். காலம் முன்பின்னாக அவளுக்குள் புரண்டது. அதன் வெம்மையைத் தாங்க முடியாமல் பெருமூச்சு விட்டாள். கண்ணைத் திறந்து வீட்டைப் பார்த்தாள். என்னவோ நினைவுக்கு வந்தது மாதிரி கைகளை ஊன்றியபடி எழுந்து நின்று தொடப்பம் எடுத்தாள் - பெருக்குவதற்கு.
நிசப்தமான வீடு தன் பெரிய கைகளை விரித்து

நன்றி - கல்கி 

பட்டணப் பிரவேசம். -வான் நிலா நிலா அல்ல; உன் வாலிபம் நிலா - பாடல் உருவான விதம் - எம் எஸ் வி பேட்டி

மீட்டருக்கு மேட்டர் - 5

நாலே நாலுலாதான் பாக்கி!

எம்.எஸ்.விஸ்வநாதன்

டைரக்டர் கே. பாலசந்தர் இயக்கத்தில் உருவான படம்பட்டினப் பிரவேசம்.’ அதற்கான இசை கம்போசிங்குக்காக நானும், கவிஞரும் கே.பி. சாரோடு உட்கார்ந்து விவாதித்துக் கொண்டிருந்தோம். அவர் சொன்ன சிசுவேஷனுக்கு நான் ஒரு மெட்டுப் போட்டேன். அதற்கு கவிஞர் பாட்டு எழுத வேண்டும். ‘விசு! மெட்டை வாசிடா!’ என்று உரிமையோடு சொன்னார் கவிஞர். என் விரல்கள் ஹார்மோனியத்தின் மீது விளையாடிக் கொண்டிருக்க, நான் வாயால் அந்த மெட்டைப் பாடிக் காட்டி னேன். ‘நா...நன்னா...நன்னா... நன்னா...நன்னா.. நான .. நா.’
மடையா! நிறுத்து!’ உத்தரவு போட்டார் கவிஞர். ‘என்னடா! நீ பாட்டுக்கு நா... நன்னான்னு வாயில வந்தபடி சொல்லிக்கிட்டே போறே! எனக்குச் சரியான வார்த்தைகள் வரணுமில்லையா? நீ என்ன பண்ணறே... நல்லதா வேற ஒரு மெட்டுப் போடு!’
எங்கள் உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்த டைரக்டர் கே.பி., ‘அந்த டியூன் ரொம்ப நல்லா இருக்கே. அதையே படத்துல உபயோகிச்சுக்கலாமே!’ என்று சொல்லிவிட்டு, கவிஞரைப் பார்த்து, ‘இந்த டியூனுக்கு உங்களால அற்புதமான வார்த்தைகளைப் போட்டு, அருமையான பாட்டு ஒன்றைத் தர முடியும்என்றார். அடுத்து, கவிஞர் கவனத்தை ஈர்க்காமல், மெதுவாக என்னிடம், ‘டியூன் அபாரம்; கவிஞரை உசுப்பி விட்டு, ஒரு நல்ல பாட்டை வாங்கிடுங்கஎன்று சொல்லி விட்டு, அந்த இடத்திலிருந்து நகர்ந்து விட்டார்.

நான் கவிஞரிடம், ‘நீயெல்லாம் என்னயா பெரிய கவிஞன்? இந்தச் சந்தத்துக்கு ஒரு பாட்டு எழுத முடியாதுன்னு சொல்லறயே?’ என்று ஆரம்பிக்கவும், அவர், ‘இது ஒரு சாதாரணமான சந்தம் தான்! இதுக்குப் போய் என்னால பாட்டு எழுத முடியாதா?’ என்று வெடுக்கென்று கேட்டார். நான் உடனே கொஞ்சம் குழைவான குரலில், ‘இதெல்லாம் உனக்கு ஒரு பெரிய விஷயமா? முயற்சி பண்ணினால் கண்டிப்பாக ஓர் அற்புதமான பாட்டு தானாக வந்து விழும்!’ என்று ஐஸ் வைத்தேன்


 காரணம், கவிஞரை மட்டம் தட்டுவதைப் போல லேசாகத் தாக்கி விட்டு, உடனே, அவரைத் தூக்கி வைத்துப் பேசினால், அவரிடம் காரியத்தைச் சாதித்துக் கொண்டுவிடலாம் என்ற தொழில் ரகசியத்தை நான் ரொம்ப நன்றாகப் புரிந்து வைத்துக் கொண்டிருப்பவன் ஆயிற்றே! அவரது ஈகோவை லேசாகத் தட்டிவிட்டதும், கவிஞர் ஆவேசமாகச் \ செயல்பட ஆரம்பித்தார்.
விசு! எங்கே அந்த டியூனை வாசி!’ என்றார். கவிஞர் மூடுக்கு வந்து விட்டதைப் புரிந்து கொண்டேன் நான். இதுதான் சரியான சந்தர்ப்பம்! இப்போது தூண்டிலை வீசினால் பாட்டு மீன் சிக்கிக் கொள்ளும் என்று முடிவு செய்தேன். சற்று நேரத்துக்கு முன்பு, ‘நா...நன்னா... நன்னா...’ என்று போட்ட டியூனையே, ‘லா...லல்லா..லல்லா...’ என்று மாற்றிப் பாடிக்காட்டினேன். கண்ணை மூடிக்கொண்டு சில வினாடிகள் சிந்தித்த கவிஞரின் வாயிலிருந்து வார்த்தைகள் வந்து கொட்டின. ‘வான் நிலா நிலா அல்ல; உன் வாலிபம் நிலா...’ எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை. பாட்டு வரிகள் தொடர்ந்தன. முதல் சில வரிகள் மட்டுமில்லை. அடுத்தடுத்த வரிகளும் கூடலாவில்தான் முடிந்தன.
அடுத்து கவிஞரைக் கிண்டலடிக்கும் நோக்கத்தோடு, ‘எல்லா லா வும் சொல்லிட்டீங்க. இன்னும் நாலே நாலுலாதான் பாக்கிஎன்றேன். ‘என்னடா சொல்லறே?’ என்றார் கவிஞர் ஒன்றும் புரியாமல். ‘புரியலையா? ஃபாதர் -இன்-லா, மதர் -இன்-லா, பிரதர்-இன்-லா, சிஸ்டர்-இன்-லான்னு இன்னும் நாலே நாலுலாதான் உங்க பாட்டுல வரல!’ என்றதும், கவிஞர் பலமாகச் சிரித்துவிட்டார்.



கண்ணதாசனிடம் ஒரு சாதாரணமான அம்பாசிடர் கார் இருந்தது. ஒரு நண்பர் தான் வைத்திருந்த வெளிநாட்டு காரை விற்கப்போகிறார் என்ற தகவல் அவர் காதில் விழ, அந்த வெளிநாட்டு காரை வாங்க ரொம்ப ஆர்வமாக இருந்தார் கவிஞர். இருவரும் பேசி, காரின் விலையைக் கூட முடிவு செய்து விட்டார்கள். முழுப்பணத்தையும் கொடுத்து வாங்க முடியாத நிலைமையில் இருந்தார் கவிஞர். எனவே, மூன்றில் ஒரு பங்கு பணத்தை மட்டும் உடனே அட்வான்ஸாகக் கொடுப்பது என்றும், பாக்கிப் பணத்தை விரைவில் கொடுத்து விடுவது என்றும் இரண்டு பேரும் பேசிச் சம்மதித்திருந்தார்கள். கவிஞரும் தன்னிடம் வரப்போகும் புது வெளி நாட்டுக்கார் பற்றின கனவுகளில் மூழ்கினார். ஒரு குறிப்பிட்ட நாளில், நண்பரின் வீட்டுக்குப் போய் வெளிநாட்டு காரை எடுத்துக் கொண்டுவர முடிவு செய்திருந்தார்.
ஆனால் அதற்கு முந்தைய நாள் அந்த நண்பரின் சில நண்பர்கள், ‘பண விஷயத்தில் கண்ணதாசன் ரொம்ப மோசம்; அவருக்கு ஊர் முழுக்க நிறைய கடன். இப்போது அட்வான்ஸ் கொடுத்துவிட்டு, காரை எடுத்துக் கொண்டு போய்விடுவார். ஆனால், அதன் பிறகு, அவரிடமிருந்து பாக்கிப் பணம் எப்போது வரும் என்பதற்கு உத்தரவாதமில்லைஎன்று போட்டுக் கொடுக்க, காரை கண்ணதாசனுக்கு விற்க சம்மதித்திருந்த நண்பர், பல்டி அடித்து விட்டார்.

இது தெரியாமல், மறுநாள் காலை, வெளிநாட்டு காரை எடுத்துக் கொண்டு வருவதற்காக தம்முடைய டிரைவரை அழைத்துக் கொண்டு நண்பர் வீட்டுக்குப் போனார் கண்ணதாசன். நண்பரோ மிகுந்த தயக்கத்தோடு, தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டதை நேரடியாகச் சொல்லாமல், ‘இந்த கார் எங்கள் குடும்பத்துக்கு ரொம்ப ராசி! எனவே விற்க வேண்டாம் என்று தன் மனைவி சொல்லுகிறாள். எனவே, தற்போது காரை விற்பதாக இல்லைஎன்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். இது கவிஞரை ரொம்பவே அப்செட் ஆக்கி விட்டது.
அன்று மதியானம், இயக்குனர் ராமண்ணா டைரக்ஷனில் எம்.ஜி.ஆர். நடித்தபணக்காரக் குடும்பம்படத்துக்காக சோகமான சிசுவேஷனில் ஒரு பாட்டு எழுத வேண்டி இருந்தது. கார் வாங்குகிற விஷயத்தில் தமக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தின் தாக்கம் அந்தச் சமயத்தில் அவர் எழுதிய பாட்டில் வெளிப்பட்டது. பாடலை இப்படித் தொடங்கினார் கண்ணதாசன்:
பல்லாக்கு வாங்கப் போனேன் ஊர்வலம் போக - நான்
பாதியிலே திரும்பி வந்தேன் தனி மரமாக’.
தாத்தா கிருஷ்ணனுக்கு திருச்சியிலிருந்து, கேரளாவில் கண்ணனூருக்கு டிரான்ஸ்ஃபர் வந்தது. கண்ணனூரில், விஸ்வநாதனை அவர் ஒரு ஸ்கூலில் சேர்த்தார். ஆனால், விஸ்வநாதனுக்கோ, பள்ளிக்கூட வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்களைவிட, அருகில் இருந்த இசைப்பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்ட இசைமேல்தான் அதிக ஈர்ப்பு.

விஸ்வநாதன் சங்கீதம் படிக்க விரும்பினாலும் வீட்டில் அதற்கு அனுமதி கிடைக்காது என்று தெரியும். அப்படியே அனுமதித்தாலும், மாதாமாதம் மூன்று ரூபாய் டியூஷன் ஃபீஸ் கட்ட வசதி கிடையாது. எனவே, தினமும் நல்ல பிள்ளையா காலையில் வீட்டிலிருந்து புத்தகப் பையோடு கிளம்பும் விஸ்வநாதன் ஸ்கூலுக்கு வந்து, அட்டெண்டன்ஸ் எடுத்ததும், நழுவி விடுவான். ஸ்கூலுக்கு அருகில் நீலகண்ட பாகவதர் என்ற சங்கீத வித்வான் தம் சீடர்களுக்கு சங்கீதம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பார். ஜன்னல் ஓரமாக நின்று அவர் ஸோல்லிக் கொடுப்பதைக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, மாலையில் ஸ்கூல் விடும் நேரத்தில் வீட்டுக்குத் திரும்பிவிடுவது வழக்கம்.
கர்நாடக சங்கீதத்தின் மீது மட்டுமில்லாமல் சினிமாப் பாட்டுக்கள் மீதும் விஸ்வநாதனுக்கு ஆர்வம் ஏற்பட்டது. சினிமாப் பாடல்களை, தானும் பாட வேண்டும் என்ற ஆசையும் உண்டு. ஆனால், பாட்டுகள் கேட்க ரேடியோ கிடையாது. சினிமாப் பாட்டுக்களைத் திரும்பத் திரும்பக் கேட்க ஒரு வழி கண்டுபிடித்தான் சிறுவன் விஸ்வநாதன். அந்த ஊர் டூரிங் டாக்கீஸில் இடைவேளையின் போது சினிமாப் பாட்டுக்கள் ஒலிப்பெருக்கியில் ஒலிக்கும். அங்கே ஒரு கடைக்காரரைப் பிடித்து, இடைவேளையின் போது சினிமாக் கொட்டகையில் வடை, முறுக்கு விற்க ஆரம்பித்தார். கொட்டகைக்குள்ளே கால்கள் நடந்தாலும், கைகள் வியாபாரம் செதாலும் காதுகளின் கவனம் கொட்டகைக்குள் ஒலிக்கும் சினிமாப் பாட்டுக்கள் மீதே இருக்கும். ஆனால் இந்த வடை, முறுக்கு வியாபார யுக்தி நெடுநாள் நீடிக்கவில்லை. ஏன்? அடுத்த வாரம்.
- ராணி மைந்தன்
தொகுப்பு: எஸ்.சந்திரமௌலி

நன்றி - கல்கி , புலவர் தருமி