Monday, December 17, 2012

ராஜ் தாக்கரே vs பூனம் பாண்டேஏஏஏ




1.திண்ணை, மொட்டை மாடி, கயிற்றுக்கட்டில் ,பத்தமடை பாய் # படுத்ததில் பிடித்தது 




------------------------


2. நம் மனசுக்குப்பிடித்தவர்களிடத்தில் நீயா? நானா? ஈகோ பார்க்கத்தேவை இல்லை , அப்படித்தேவைப்பட்டால் அது உண்மையான அன்பில்லை 



--------------------

3. கல்யாணமான ஆண்களின் தேடலில் முதலில் இருப்பது..கல்யாணமான பெண்களே ! # எ கீ 



---------------------

4. தமிழ் மக்களை மறக்க முடியாது: ஸ்ரீதேவி #  ஏம்மா  பெருசு, நீ யாரு? எதுக்கு இப்டி கூவிக்குனு இருக்கே? இன்னா மேட்டரு? - தமிழ் மக்கள் 





------------------------------

5. உன் மீதான என் கரிசனங்கள் பெரிதாக பெரிதாக கருத்து வேற்றுமை நூல்  படாரென அறுந்து விடுகிறது. 



----------------------------



Photo: How Many Likes For This Great Mom ♥

6.  ஒரே உதட்டில் கிஸ்ஸானது என் காதல் கவிதைகள்! --



---------------------



7. மிகவும் நன்றி நீ இல்லாமலும் என்னால் சமைக்க முடியும் என எனக்கு கற்றுக்கொடுத்ததற்க்கு!




-----------------


8. அத்தான் .உங்க கனவில் நான் வர்றனா?



 தூக்கக்கலக்கத்துல நான் என் உதட்ட கடிச்சா கனவில் ரிசப்ஷனிஸ்ட்.,பல்லை நற நறனு கடிச்சா கனவில் நீ !



---------------------------------


9. உன்னை நான் இன்றுவரை சண்டை போட்டு பார்த்ததில்லை ஆனாலும் நீ அதுக்கெல்லாம் ஒர்த் இல்லைன்னு தோணுது


----------------------


10. அதிகாலையில் சமைக்க எழுந்தவள் ் அடுப்பை பற்றவைக்கும் முன் என்னை காய் கறி எல்லாம் அரிய வைத்துவிட்டாள்..# அரிய வைத்தாய் தேவி! #





------------------



Photo: நட்பு :--
வெல்லும் வரை தோல்வி,
சிரிக்கும் வரை கண்ணீர் ,
உதிரும் வரை பூக்கள் ,
மறையும் வரை நிலவு ,
மரணம் வரை நம் நட்பு,
தொடர  வேண்டும் நண்பா .....



11. மார்க்கட் உடைந்து போன் நிலாவை கூட மார்க்கெட் உள்ள நட்சத்திரமாக பார்ப்பது தான எஸ் ஜே சூர்யாவின்் நம்பிக்கை.




---------------

12. ஷானாஸ்க்கு புது பட்டம் 'திருமண மோகினி' #சன்நியூஸ் -# திருமண மோகி நீ




-----------------------


13. ராஜதுரோகி = இளையராஜா இசையை குறை சொல்பவர் # கற்றதும் பெற்றதும் @ ட்விட்டர்




--------------------


14. பிடித்ததில் பிடித்தது உன் இடை



--------------


15. அன்பே! அழகு நிலையம் செனறு உன் புருவங்களைத்திருத்திக்கொண்டாய்! #உன்னை மட்டும் என்னால திருத்தவே முடியலையே ஏன்?




-------------------------

மல்லிகை மகள் பெண்கள் மாத இதழில் வந்த ட்வீட்ஸ் 10 ட்வீட்டர்ஸ் ட்வீடஸ்்

16.  இந்தி சேனல்களை மூடுவோம் : ராஜ் தாக்கரே # நீங்கள் மூடு விழா நடத்தும் முன் நான் திறப்புவிழா நடத்திட்டேன்- பூனம் பாண்டேஏஏஏ




-------------------------------


17. பிரதமர் அலுவலகத்தை நினைத்தால் ரத்தக்கொதிப்பு வருகிறது-சுப்ரீம் கோர்ட் # ஏன்? அங்கேதான் உங்க சம்சாரம் ஒர்க்கிங்கா ஜட்ஜ் அய்யா?



----------------------


18. கூடங்குளம் அனுமின் நிலையத்தில் டிரைவர் பணி காலி # போய்யாங்.ஆளே காலின்னு அவனவன் நடுங்கிட்டு இருக்கான்!



---------------------------


19. உப்பினாப்ல இருந்தா பூரி, சப்புனாப்ல அதாவது உப்பு பத்தாம இருந்தா அது சப்பாத்தி



----------------------


20. நிலக்கரியை நாங்கள் ஏலம் விடவே இல்லை-கபில்சிபல் # இப்போ என்ன செய்வீங்க?இப்போ என்ன செய்வீங்க? பிம்ப்பிளிக்கி பிளாப்பி



------------------




Photo: Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ~♥ The Gift of Joy Will Produce Wonders in Your Life! ♥~Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ



21. ரஜினி ய கொடுத்ததுபோல்,காவேரி தண்ணியையும் கொடுங்கள்-அமீர் # வேணும்னா அவரை ரிட்டர்ன் எடுத்துக்குங்க ;-0




------------------------


22. செம்பருத்தி' க்கு பூஜை போட்டப்பவே அண்ணன் ஆர் கே செல்வமணி 'ரோஜா'விடம் காதல் பதியம் போட்டுட்டார் ;-0




------------------------


23. பெண்கள் சிக்கன் ஸ்லீப் ( கோழித்தூக்கம்) தூங்கி விடுவதால் ஆண்கள் சேவலாக மாறி எழுப்ப வேண்டி இருக்கிறது ;-0




--------------



24. என் வாழ்வா” தாரம்” நீ! தாங்கவொண்ணா துய”ரம்” நீ!





-------------------

25. பெரும்பாலும் பெண்கள் பெயர் "ஆ"காரத்திலேயே முடிகிறது,ரம்யா,திவ்யா,ப்ரியா,தீபா,அகிலா,சுகன்யா,காதலர்கள் வாழ்வு சேதாரத்தில்




--------------------------------


 
Photo: -Er.மதன்

Saturday, December 15, 2012

ரஜினி அரசியலுக்கு வர உள்ளூர ஆசைப்படுகிறாரா?

''இனி என்ன செய்ய..?'' தவிக்கும் ரஜினி!

ஜினியின் பிறந்த நாள் என்பது, அவரது படம் ரிலீஸ் மாதிரியே பரபரப்பைக் கிளப்பும். இந்த ஆண்டு 12.12.12 என்ற அபூர்வ தேதியில் வருவதால் ரஜினிக்கே இந்த பிறந்த நாள் செம ஸ்வீட் தினம். பொதுவாக பிறந்த நாள் அன்று எஸ்கேப் ஆகிவிடுபவர், இந்தப் பிறந்த நாள் அன்று போயஸ் தோட்டம் வீட்டுக்கு வந்த ரசிகர்களை நேரில் சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.



 திரைப்படத் துறைக்கு ரஜினிகாந்த் வந்து 36 ஆண்டுகள் ஆகின்றன. அவருக்கு இந்த ஆண்டு 63-வது பிறந்த நாள். ரசிகர்களுக்குத் தேவை இல்லாத சிரமத்தைக் கொடுக்கக் கூடாது என்றுதான், பிறந்த நாள் அன்று ரசிகர்களைச் சந்திப்பதைத் தவிர்த்துவந்தார் ரஜினி. கடந்த ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிறகு ரசிகர்களைச் சந்திப்பதில் அதிக அக்கறை செலுத்தத் தொடங்கினார்.



ஒவ்வோர் ஆண்டும் ரஜினியின் பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடிவந்தாலும், கடந்த ஆண்டுதான் சென்னை மாவட்டத் தலைமை ரஜினிகாந்த் ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி​யின் 62-வது பிறந்த நாள் விழாவை பெரிய அளவில் கொண்டாடினார்கள். இந்த ஆண்டும் வள்ளுவர் கோட்டத்திலேயே விழா எடுக்க, கடந்த மாதமே வேலைகளைத் தொடங்கினர். தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மண்டபத்துக்கு விண்ணப்பத்தோடு வாடகையும் செலுத்தப்பட்டது. கடைசி நேரத்தில், அரசு விழாவுக்கு புக் செய்யப்பட்டுள்ளது என்று காரணம் கூறி, அனுமதி மறுத்துவிட்டனர். அதனால், ரசிகர் மன்ற விழாவை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலுக்கு மாற்றினார்கள்.



கடந்த சில வருடங்களாக டிசம்பர் 12-ம் தேதி பிறந்த நாள் விழா கொண்டாடுவதைத் தவிர்த்துவந்த ரஜினியின் வீடு, இந்தத் தடவை விழாக்கோலம் பூண்டது. போயஸ் கார்டன் வீட்டில் வாழை மரம், மாவிலைத் தோரணங்கள் கட்டப்பட்டன. பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது.  



சென்னையில் ரஜினி இருக்கும் விவரத்தைத் தெரிந்துகொண்ட ரசிகர்கள், அதிகாலை 6 மணிக்கே போயஸ் தோட்டத்தில் குவியத் தொடங்கினர். ரஜினி வீடு இருக்கும் பகுதியில்தான் முதல்வர் ஜெயலலிதாவின் வீடும் இருப்பதால், உடனடியாகப் பாதுகாப்புப் பணியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருக்கவே, ரசிகர்களை ரஜினி சந்திப்பதற்கு ஸ்பெஷல் மேடை தயாரானது. மின்னல் போன்று வீட்டைவிட்டு வெளியே வந்த ரஜினி, ரசிகர்களைப் பார்த்து உற்சாகமாகக் கையசைத்தார்.



'சூப்பர் ஸ்டார் வாழ்க, தலைவர் வாழ்க’ என்று ரசிகர்கள் கோஷம் விண்ணைப் பிளந்தது. பட்டு வேட்டி, பட்டுச் சட்டை, கழுத்தில் ருத்திராட்ச மாலையோடு விறுவிறுவென மேடை ஏறிய ரஜினி, கைகளை தலைக்கு மேல் தூக்கிக் கும்பிட்டார். ரசிகர்களின் வாழ்த்து கோஷமும் விசில் சத்தமும் காதைப் பிளக்கவே... புன்னகையுடன்  ரசிகர்களை அமைதிப்படுத்திய ரஜினி மைக்கில் பேசினார்.  



''அனைவருக்கும் நன்றி. உங்களால் பெருமை அடைகிறேன். உங்களது பூஜை, வேண்டுதல்களால் நான் நலமுடன் இருக்கிறேன். இந்த ஏரியா செக்யூரிட்டி நிறைந்த இடம். முதல்வர் வசிக்கும் இடம். நாம் யாருக்கும் தொந்தரவாக இருக்கக் கூடாது. உங்கள் எல்லோரையும் தனித்தனியாகப் பார்த்து கைகுலுக்கி போட்டோ எடுத்துக்கொள்ள ஆசை. ஆனால் அதற்கு நேரம் போதாது. உங்களது பெற்றோரை, குடும்பத்தை அன்போடு கவனித்துக்கொள்ளுங்கள். அதுதான் எனக்கு மகிழ்ச்சி தரும்'' என்றார்.



ரசிகர்கள் கொண்டுவந்த பிரசாதங்கள், வாழ்த்து அட்டைகள், மலர்க் கொத்துகளை சந்தோஷமாகப் பெற்றுக்கொண்டார். பின்னர், பத்திரிகையாளர்களை வீட்டுக்குள் அழைத்துப் பேட்டி கொடுத்தார். ''இந்தப் பிறந்த நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாள். 'கோச்சடையான்’ படம் இன்னும் இரண்டு மாதங்களில் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருக்கிறது. இந்தப் படம் வெற்றிபெற்றால், 'பொன்னியின் செல்வன்’, 'ராமாயணம், மகாபாரதம் எல்லாவற்றையும் அருமையான படங்களாக எடுக்கும் காலம் மலரும். திரையுலகில் புதிய டிரெண்டை இது உருவாக்கும்'' என்றார்.



''பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு நீங்கள் சொல்லும் மெசேஜ்?''


''நல்லதையே நினைக்கவேண்டும். நல்லதே நடக்கும். நம்பிக்கையோடு காரியங்களில் ஈடுபட​வேண்டும். அனைவரிடமும் அன்பாக இருங்கள்'' என்றவர் மீண்டும் ரசிகர்களைச் சந்திக்க மேடை ஏறினார்.



இந்தச் சந்திப்பு முடிந்த பிறகு, 'ரஜினி வெளியே செல்கிறார்’ என்று சொல்லி, ரசிகர் மன்ற மூத்த நிர்வாகி சத்யநாராயணாவும் போலீஸாரும் ரசிகர்களை அப்புறப்படுத்தினர். அனைவரையும் போயஸ் தோட்டத்தின் நுழைவாயிலான பின்னி சாலை சந்திப்பில் கொண்டுபோய் விட்டனர். அதன் பிறகு வந்த ரசிகர்களை அனுமதிக்காமல், பின்னி சாலை சந்திப்பின் அருகிலேயே போலீஸார் தடுத்து நிறுத்தினார்கள். ஆனாலும், 'ரஜினியைப் பார்த்துவிட்டுத்தான் போவோம்’ என்று ரசிகர்களும் அங்கேயே நின்றனர். இந்தப் பிரச்னையை ரஜினியின் காதுக்கு அவரது ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகள் கொண்டுசென்றனர். 



அதன் பிறகு, 'ரசிகர்களை ரஜினி தொடர்ந்து சந்திக்கிறார். உள்ளே விடுங்கள்’ என்று போலீஸாருக்குத் தகவல் சொல்லப்பட்டது. அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை என்று ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினி. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை. ஆனால், ரஜினியின் பக்கத்து வீட்டு காம்பவுண்ட் சுவரில் ரசிகர்கள் அதிக அளவில் ஏறி நின்றதால், சுவர் இடிந்து விழுந்தது. நல்லவேளையாக யாருக்கும் எந்தக் காயமும் இல்லை.



பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ரஜினி ரசிகர்கள் போயஸ் தோட்டம் பகுதியில் 10-ம் தேதி இரவு போஸ்டர் ஓட்டினார்கள். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீ​ஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி... ஒட்டிய போஸ்டரையும் கிழித்துள்ளனர். 'யாரும் போஸ்டர் ஒட்டக் கூடாது’ என்று எச்சரித்து விரட்டினார்கள். ஏனாம்?


அந்த போஸ்டரில், 'தலைவா, தமிழர்களை ஏமாற்​றும் விதியை மாற்று! தமிழர்களுக்கு ஏற்றம் தரும் கொடியை ஏற்று!’ என்று குறிப்பிட்டு இருந்தனர். அதில் விதி என்ற வார்த்தையில் 'வி’-யை கறுப்பு - சிவப்பு நிறத்திலும், 'தி’-யை கறுப்பு - வெள்ளை - சிவப்பு நிறத்திலும் எழுதி இருந்தனர். இந்த பிரச்னையும் ரஜினி கவனத்துக்குப் போனதாம். அந்த வாசகங்களை திரும்பத் திரும்பப் படித்து சிரித்துக்கொண்டாராம்.



இதையடுத்து 13-ம் தேதி ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் நடைபெற்ற ரசிகர் மன்ற விழாவில் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென கலந்துகொண்டார் ரஜினி. அந்தக் கூட்டத்தில் தனது அரசியல் பிரவேசம் பற்றி பரபரப்பாகப் பேசவும் செய்தார்.



''1996-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற நேரத்தில் பலரும் என்னை அரசியலுக்கு அழைத்தார்கள். நான் அரசியலில் இறங்க விரும்பாமல் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டேன். அப்போதும் என்னை விடவில்லை. நான் வெளிப்படையாக யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்பதை அறிவிக்கவில்லை என்றால் கோழை என்று சொல்வார்கள் என்றார்கள். நான் பிச்சை எடுத்து வாழ்ந்தாலும் வாழ்வேனே தவிர, கோழையாக வாழ விரும்பவில்லை. அந்த சூழ்நிலை காரணமாக என்னுடைய ஆதரவை வெளிப்படையாக அறிவித்தேன். 


அதனால் ஆட்சி மாற்றம் நடந்தது. ஆதரவு கொடுத்துவிட்டேன் என்பதால் அடுத்த ஐந்து ஆண்டுகளும் அமைதியாக இருந்தேன். அதற்குப் பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டேன்.



அரசியல் கட்சி நடத்துவது எளிதல்ல. எந்தத் தலைவரும் சந்தோஷமாக இல்லை. தொண்டர்கள் மட்டும்தான் சந்தோஷமாக இருக்கிறார்கள். அரசியல்வாதிகள் நல்லது செய்ய நினைத்தாலும் முடிவது இல்லை. ஆட்சியில் அமரவைக்கும் தொண்டர்களே... அவர்களைத் தோற்கடிக்கவும் செய்கிறார்கள்.



 ஒரு மனிதனுக்கு எப்படி தலையெழுத்து இருக்கிறதோ அதுபோலவே ஒரு மாநிலத்துக்கும் தலையெழுத்து உண்டு, ஒரு நாட்டுக்கும் தலையெழுத்து உண்டு. யார் ஆளவேண்டும் என்பது சந்தர்ப்ப சூழல்களால்தான் நடக்கும்,  தனிப்பட்ட திறமையால் நடக்காது. நேரம் என்பது முக்கியப் பாத்திரம் வகிக்கிறது. காமராஜரைவிட நல்ல தலைவர் ஒருவர் இருக்காரா? அவரையே தோற்கடித்துவிட்டனர். எல்லாம் காலம்தான்.



நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். தமிழ் மக்கள்தான் எனக்கு எல்லாம். நான் என்ன செய்யவேண்டும் என்பதை கோஷம்போட்டுச் சொல்கிறீர்கள். நான் பொய்யான வாக்குறுதி கொடுக்கத் தயார் இல்லை...'' என்று அரசியல் பேசியவர் அடுத்து 'பாபா’ விவகாரம் குறித்தும் பேசினார்.



''என்னுடைய ஒரு படம் வெளியிடுவதற்கு பிரச்னை செய்தார்கள். சிகரெட் பிடிக்கக்கூடாது என்றார்கள். நான் சினிமாவில் வீம்புக்காகவே சிகரெட் பிடித்திருப்பேன். ஆனால், அவர்கள் சொன்ன விஷயம் நல்லது. ஆனால், அதைச் சொன்னவிதம் சரியில்லை. இப்போது நான் சிகரெட் பிடிப்பதை விட்டுவிட்டேன். சிகரெட் காரணமாகத்தான் என்னுடைய உடல் கெட்டுப்போனது. நான் குணமாகிவந்ததை மெடிக்கல் மிரக்கிள் என்றுதான் மருத்துவர்கள் சொல்கிறார்கள். அந்த மெடிக்கல் மிரக்கிள் என்பது நீங்கள் செய்த பிரார்த்தனைதான்'' என்றவர் ரசிகர்கள் சிகரெட் பிடிக்கவேண்டாம் என்பதை பிறந்த நாள் கோரிக்கையாகவும் வைத்தார்.


ரஜினிக்கு அரசியல் ஆசை இருந்தாலும் பிரச்னைகளுக்குள் எப்போதும் சிக்கிக்கொள்ள அவர் விரும்பியது இல்லை. இப்போது கோர்ட், கேஸ் என்று அலையும் விஜயகாந்த்தின் அரசியல் நிலைமையைப் பார்த்து ரஜினியின் தவிப்பு மேலும் அதிகமாகிவிட்டது. ஆனாலும் இதுவரை அரசியல் பற்றி வெளிப்படையாகப் பேசாத ரஜினி, ரசிகர்கள் மத்தியில் மனம்திறந்து பேசியிருப்பது சோர்ந்துகிடக்கும் ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.



- எம்.குணா, எஸ்.முத்துகிருஷ்ணன்,


அட்டை மற்றும் படங்கள்:


சொ.பாலசுப்பிரமணியன், பா.கார்த்தி


 வெளியே செல்லாத முதல்வர்!


கடந்த மாதம் 11-ம் தேதி சிறுதாவூர் சென்ற முதல்வர் ஜெயலலிதா, அங்கு இருந்தபடியே, தினமும் போயஸ் தோட்டம் வீட்டுக்கு வந்து கோட்டைக்குச் செல்வார். மாலையில் சிறுதாவூர் சென்றுவிடுவார். இந்த நிலையில் கடந்த 10-ம் தேதி கிறிஸ்துமஸ் விழா முடிந்த பிறகு அவர் போயஸ் தோட்டம் வீட்டிலேயே தங்கிவிட்டார். வழக்கமாகக் கோட்டைக்குச் செல்லும் அவர், ரஜினி பிறந்த நாள் அன்று, வீட்டில் இருந்தபடியே பணிகளைக் கவனித்தாராம்.


 ஓ, நண்பனே!


ரஜினிக்கு நெருக்கமான நண்பர்கள் வட்டாரத்தில் முக்கியமானவர் மயிலாப்பூர் காந்தி. இவர்தான், கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தைக் கவனித்துவந்தார். மனதில் பட்டதை ரஜினியிடம் வெளிப்படையாகப் பேசக்கூடியவர். எந்த உதவியையும் ரஜினியிடம் கேட்டது கிடையாது. சிறப்பு தினங்களில் காந்தியின் வீட்டில் இருந்துதான் ரஜினிக்கு மீன் குழம்பு செல்லும். திரைப்படக் கல்லூரியில் படிக்கும்போது இருவருக்கும் இடையே உருவான நட்பு, 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. அத்தகைய நண்பரான காந்தி, கடந்த 10-ம் தேதி இரவு மாரடைப்பால் இறந்துவிட்டார். செய்தியைக் கேட்டு துடிதுடித்துப்போன ரஜினி, பிறந்த நாளுக்கு முந்தைய நாளான 11-ம் தேதி காலை மனைவி லதாவுடன் காந்தி வீட்டுக்குச் சென்று மலர் வளையம்வைத்து அஞ்சலி செலுத்தினார். ரஜினியின் சார்பில் அவரது அண்ணன் சத்தியநாராயண ராவ், கூடவே இருந்து இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளைக் கவனித்துக்கொண்டார்.



 நன்றி = ஜூ வி 



மக்கள் கருத்து 



1. ஹூம்.. செலிபிரட்டிகள் தான் தமிழகத்தை ஆள முடியும்.இதை வேறு சிலர் வக்காலத்து வாங்கு கிரார்கள். என்று மறையும் இந்த செலிபிரட்டி கிரேஸ். 




2. யார் சொன்னது ஜெயல்லிதா துணிச்சல் மிக்கவர் என்று? மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார் எவ்வளவு கோலை என்று. வழக்கமாக கோட்டைக்கு செல்லும் ஜெயலலிதா, ரஜினியின் பிறந்த நாள் அன்று கோட்டைக்கு செல்லாமல், பயந்து வீட்டிலேயே வேலையை செய்துவந்தாராம்!




3. புலி வருது...புலி வருதுன்னு சொல்லியே சம்பாதித்த பணத்தை வைத்து நோகாமல் நோம்பி கும்பிட வேண்டியதுதான். தன்னால் எதையும் செய்ய இயலாது. கடவுள் கட்டளையிடும் நாளுக்காக காத்திருக்கிறேன் என்று சொல்லியே சுய முடிவெடுக்க முடியாமல் தடுமாறிவரும் பயந்தாங்கொள்ளி.



4. அரசியல் கட்சி நடத்துவது எளிதல்ல. எந்தத் தலைவரும் சந்தோஷமாக இல்லை--- ஆம் கொள்ளையடிக்க தலைவன் ஆனவனெல்லாம் சந்தோஷமாக இல்லை. சேவை செய்ய வ்ந்த நல்லகண்ணு போன்றவர்கள் ஏழ்மையிலும் சந்தோஷமாகத் தான் இருக்கிறார்கள். ரஜினி இனி வேஷம் போட வேண்டாம். படம் வரும் போது பில்டப் கொடுத்து ஏமாற்றுவது , கோழைத்தனத்திலும் கீழ்மையானது.


5. பிறந்த நாளன்று, பத்திரிகையாளர்களிடம் தனியாக 'கோச்சடையான்' பற்றி பேச்சு... ரசிகர்களிடம் 'அரசியல்' பற்றி பேச்சு... ம்ம்ம், நடத்துங்க...



கடல் - பாடல்கள் - வரிகள் - யூ டியூப் பாட்டு

கடல் பாடல் வரிகள்-நெஞ்சுக்குள்ளே  ஒம்ம  முடுஞ்சிருக்கேன்

நெஞ்சுக்குள்ளே  ஒம்ம  முடுஞ்சிருகேன்
இங்க  எத்திசையில்  என்  பொழப்பு  விடிஞ்சிருக்கோ 
வெள்ள  பார்வை  வீசிவிட்டீர்   முன்னாடி
இந்த  தாங்காத   மனசு  தண்ணி  பட்ட  கண்ணாடி
வண்ண  மணியாரம்  வலதுக்கை   கெடிகாரம்
ஆணை   புலியெல்லாம்  அடுக்கும்  உண்  அதிகாரம்
நீர்  போன  பின்னும்  நிழல்  மட்டும்  போகலையே  போகலையே
நெஞ்சு  குழியிலே  வந்து  விழுந்திருச்சு

அப்ப  நிமுந்தவதான்  அப்புரம்மா  குனியலயே  குனியலயே 
கொடக்கம்பி  போல  மனம் குத்தி   குத்தி   நிக்குதே

நெஞ்சுக்குள்ளே  ஒம்ம  முடுஞ்சிருகேன்
நெஞ்சுக்குள்ளே  ஒம்ம  முடுஞ்சிருகேன்
இங்க  எத்திசையில்  என்  பொழப்பு  விடிஞ்சிருக்கோ

பட்சி  உறங்கிரிச்சு  பால்  தயிரா  திரஞ்சிரிச்சு 
இச்சி  மரத்து  மேல  இலை கூட  தூங்கிருச்சு
காசநோய் காரிகளும்  கண்னுறங்கும்  வேலையில
ஆச  நோய்  வந்து  மக  அரை   நிமிஷம்  தூங்கலையே

நெஞ்சுக்குள்ளே  ஒம்ம  முடுஞ்சிருகேன்
நெஞ்சுக்குள்ளே  ஒம்ம  முடுஞ்சிருகேன்
இங்க  எத்திசையில்  என்  பொழப்பு  விடிஞ்சிருக்கோ

ஓஹ்  ஒரு  வாய்  இறங்கலயே  உள்நாக்கு  நேனையலயே
ஏழு  எட்டு  நாலா  எச்சில்  முலுங்குலையே 
ஏழ  இலஞ்சிருக்கி  ஏதும்  சொல்ல  முடியலயே
ரப்பர்  வலைவிக்கெல்லாம்  சத்தமிட  வாயில்லையே

நெஞ்சுக்குள்ளே  ஒம்ம  முடுஞ்சிருகேன்
இங்க  எத்திசையில்  என்  பொழப்பு  விடிஞ்சிருக்கோ 
வெள்ள  பார்வை  வீசிவிட்டீர்   முன்னாடி
இந்த  தாங்காத   மனசு  தண்ணி  பட்ட  கண்ணாடி
வண்ண  மணியாரம்  வலதுக்கை   கெடிகாரம்
ஆணை   புலியெல்லாம்  அடுக்கும்  உண்  அதிகாரம்
நீர்  போன  பின்னும்  நிழல்  மட்டும்  போகலையே  போகலையே
நெஞ்சு  குழியிலே  வந்து  விழுந்திருச்சு

நெஞ்சுக்குள்ளே  ஒம்ம  முடுஞ்சிருகேன்
நெஞ்சுக்குள்ளே  ஒம்ம  முடுஞ்சிருகேன்
இங்க  எத்திசையில்  என்  பொழப்பு  விடிஞ்சிருக்கோ 

நன்றி - தமிழ் ஒளி 


 அ








a

Moongil Thottam Official Full Song - Kadal AR Rahman, Mani Ratnam







ரஜினி - பிறந்த நாள் விழா - வீர உரை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzhMmfGhECdKMX7xu48S5aG4Vj0ee10mN0TtvLeooBY86pbLaD0raZUVIvIVUIZcscZke8dWCihtABUFCK4U9JNi8ihW4G87rZMIob_cG8ZEnw1KP603NGWOPM6sgiy7nuNKo-uA5_Z44/s1600/rajinikanth-birthday-special13.jpg'என்னை கோழை என்று நினைத்து விடாதீர்கள்' - ரஜினி

தலைமை ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில், ரஜினியின் 63வது பிறந்தநாள் விழா YMCA மைதானத்தில் நடைபெற்றது.  நடிகர் சங்க தலைவர் சரத்குமார், ராதாரவி, சந்திரசேகர், லாரன்ஸ், கலைப்புலி எஸ்.தாணு, எஸ்.வி.ரம ணன், பாண்டு, நமீதா, உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.


அவ்விழாவில் ரஜினி கலந்து கொண்டு பேசியது :

ஒவ்வொரு வருடமும் என் பிறந்தநாள் அன்று சென்னையில் இருக்க மாட்டேன். இதற்கு முக்கிய காரணம், 22 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு துயரமான சம்பவம்தான், அப்போது நடந்த என் பிறந்தநாள் விழாவுக்கு வெளியூரிலிருந்து வந்த 3 பேர் ஊருக்கு திரும்பிச் சென்றபோது, விபத்தில் சிக்கி இறந்தனர். அதற்குப் பிறகுதான் நான் இந்த முடிவுக்கு வந்தேன்.

என் பிறந்தநாளில் வெளியூருக்கு சென்றுவிடுவேன். அங்கு தனியாக அமர்ந்து, இதுவரை நான் என்ன செய்தேன்? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறேன்? இனி என்ன செய்யப் போகிறேன் என்று நினைத்துப் பார்ப்பேன். என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. அது ஆண்டவன் கையில் இருக்கிறது.

மிகப் பெரிய பிளான் போட்டால், அது நடக்காது. மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்று ஒருவன் நினைத்தால், அப்படியே நடந்து விடாது. அதிகமாக சம்பாதிக்கலாம். அல்லது அதைவிட குறைவாக சம்பாதிக்கலாம். இதிகாசம், புராணங்களில் கூட நினைத்தது அப்படியே நடந்து விடாது.

நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அபூர்வமாக வரும் 12.12.12 அன்று என் பிறந்தநாளில், என் உயிரினும் மேலான ரசிகர்களை சந்தித்தது அதிக மகிழ்ச்சி அளித்தது. ஆனால், இது நடக்குமா என்று சந்தேகமாக இருந்தது. காரணம், என் உயிர் நண்பன், எனக்கு அனுமான் மாதிரி துணையாக இருந்த காந்தி, 10ம் தேதி ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார். 11ம் தேதி உடல் அடக்கம் நடந்தது. மறுநாள் காலையில் என் பிறந்தநாள். 11ம் தேதியே ரசிகர்களுக்கு தகவல் சொல்லியாகி விட்டது. 


ஒரு நானூறு பேர் காலையிலேயே என் வீட்டுக்கு வந்து விட்டார்கள். உடனே நான் குளித்து முடித்து, அவர்களைப் பார்க்க வந்துவிட்டேன். ரசிகர்களைப் பார்த்த பிறகுதான் மகிழ்ச்சி ஏற்பட்டது. காந்தி இறந்த கவலையில் மூழ்கியிருந்த நான், அதிலிருந்து வெளியே வர ஆரம்பித்தேன். ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும், அந்த வலியை தீர்த்திருக்க முடியாது. ரசிகர்களை சந்தித்துப் பேசியபோது, அவர்கள் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டபோது கிடைத்த சந்தோஷம் எல்லாம் ஆண்டவன் செயல்தான்.

சத்யநாராயணாவை நான் மன்றத்தை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டேன் என்றெல்லாம் சொன்னார்கள். அவர் இவ்வளவு நாட்கள் ஓய்வு எடுத்தார். காரணம், உடல்நிலை சரியில்லை. அவர் வந்தால்தான் ரசிகர்களை கட்டுப்பாடாக வைத்திருக்க முடியும் என்று அவரை வரவழைத்தேன். என் ரசிகர்கள் பவர்புல் ஆட்கள் என்பது எனக்கு தெரியும். அரசியல் கடல் மாதிரி. அதுபற்றி நான் பேச விரும்பவில்லை. 



இங்கு அ.தி.மு.க கூட்டணியில் உள்ள சரத்குமார், தி.மு.கவில் உள்ள சந்திரசேகர் எல்லாம் வந்திருக்கிறார்கள். போயஸ் கார்டனும் வந்திருக்கிறது. கோபாலபுரமும் வந்திருக்கிறது. சரத்குமார் ஜெயலலிதா மேடத்திடமோ, சந்திரசேகர் டாக்டர் கலைஞரிடமோ இந்த விழாவுக்கு செல்ல வேண்டும் என்று கேட்டிருந்தால், கண்டிப்பாக அவர்கள் அனுமதிப்பார்கள். காரணம், நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். தமிழ் ரசிகர்கள்தான் என்னை வாழ வைத்தவர்கள். அவர்கள் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும். 1996ல் எனக்கு நடந்த பிரச்னை பற்றி எல்லாருக்கும் தெரியும். அதற்குப் பிறகு என் பெயரையோ, புகைப்படத்தையோ ரசிகர்கள் பயன்படுத்தக் கூடாது என்று சொன்னேன்.

அப்போது இந்தியாவிலுள்ள மிகப் பெரிய அரசியல் தலைவர்கள், அவர்கள் பெயரைச் சொல்ல விரும்பவில்லை, அவர்கள் எல்லாரும், ‘உங்க ஆதரவு யாருக்கு? நீங்க தேர்தல் பிரசாரத்துக்கு வர வேணாம். ஆதரவை மட்டும் தெரிவிச்சா போதும்’ என்று கேட்டுக்கொண்டார்கள். நான் எந்த பதிலும் சொல்லவில்லை. அதற்காக என்னை கோழை என்று நினைத்து விடாதீர்கள். 


நான் செத்தாலும் சாவேனே தவிர, பிச்சை எடுத்தாவது வாழ்வேனே தவிர, கோழையாக மட்டும் சாக மாட்டேன். டாக்டர் கலைஞர் என்னை ஒரு நண்பராக ஏற்றுக் கொண்டவர். அதனால், டாக்டர் கலைஞரை எனது அருமை நண்பர் என்று சொல்லிக்கொள்கிறேன். அவரை பலமுறை சந்தித்துப் பேசியிருந்தாலும், அவர் என்னிடம் அரசியல் பற்றி பேசியதில்லை.

பிறகு ஒருமுறை என் படத்துக்கு ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். அதுவும் ரசிகர்களுக்கு தெரியும். ஆனால், அவர்கள் சொன்ன பாயின்ட் ரொம்ப நல்ல பாயின்ட். அதற்குப் பிறகு நான் நடிக்கின்ற படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சியை வைக்கவில்லை. அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தது வேண்டுமானால் வேறுவிதமாக இருக்கலாம். ஆனால், அவர்கள் சொன்ன கருத்து நல்ல கருத்து.  மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றுதான் ஒவ்வொரு அரசியல் தலைவரும் வருகிறார்கள். 


ஆனால், இங்கு அவர்கள் நினைத்த மாதிரி எதுவும் செய்ய முடியவில்லை. காரணம், இங்கு இருக்கும் சிஸ்டம் அப்படி. அரசியல் கட்சிகளுக்கு மிகப் பெரிய பலமே அதன் தொண்டர்கள்தான். அவர்கள் நினைத்தால், ஒரு ஆட்சியை வரவழைக்க முடியும். அதைக் கவிழ்ப்பதும் அவர்கள்தான். என் குரு சச்சிதானந்த சுவாமிகள், தலையெழுத்து பற்றி அடிக்கடி சொல்வார். ஒரு நாட்டுக்கு யார் தலைவராக வர வேண்டும்? யார் ஆள வேண்டும் என்பது தலையெழுத்துப் படியே நடக்கும். அரசியலில் நேரம் ரொம்ப, ரொம்ப முக்கியம். இல்லை என்றால், காமராஜர் மாதிரி ஒரு நல்ல தலைவர் தோற்றிருக்க முடியுமா?

உடம்பு சரியில்லாமல் இருந்தபோது, நிறைய விஷயங்களை, டாக்டர்களின் ஆலோசனைப்படி என்னிடம் சொல்லாமல் மறைத்து விட்டார்கள். பிறகு சென்னைக்கு வந்தவுடன் எல்லா நியூஸ் பேப்பர்களையும், பேப்பர் கட்டிங்குகளையும் பார்த்தேன். ரசிகர்கள் நான் நலம்பெற வேண்டும் என்று கோயில், கோயிலாகச் சென்று வேண்டியதையும், பிரார்த்தனை செய்ததையும் படித்து தெரிந்துகொண்டேன். அவர்கள் என்மீது கொண்ட இந்த அன்புக்கு எப்படி ரியாக்ட் பண்றது என்று தெரியவில்லை. இங்கே பேசிய ராதாரவி, நான் நலம்பெற ஒரு வாரம் விரதம் இருந்ததாக சொன்னார். அதற்கு என்ன சொல்வதென்று எனக்கு தெரியவில்லை.

‘சந்திரமுகி’க்கு பிறகு ‘சிவாஜி’. அதற்குப் பிறகு ‘எந்திரன்’ படத்தில் நடித்தேன். வேட்டையன் கேரக்டரும், மொட்டை பாஸ் கேரக்டரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றதால், அடுத்து உருவாக்க இருந்த ‘ராணா’ படத்தில் வில்லனாக நடிக்க முடிவு செய்தேன். அப்போது எனக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது. உடனே மருத்துவமனையில்  சேர்ந்தால், தேவையில்லாத வதந்திகள் வரும் என்று தள்ளிப் போட்டுக்கொண்டே வந்ததால் ஏற்பட்ட விளைவு இது.

நான் கண்டக்டராக இருந்தபோது, நிறைய மது அருந்தியதுண்டு. அப்போது சில நண்பர்களின் தூண்டுதலால் இது நடந்தது. சினிமாவில் நடிக்க வந்த பிறகு நல்ல சரக்கு குடித்தேன். பிறகு இடைவிடாத ஷூட்டிங்கில் கடுமையாக உழைத்ததால், மன உளைச்சல் ஏற்பட்டது. அப்போது நடந்தது பற்றியும் ரசிகர்களுக்கு தெரியும். பிறகு லதாவை திருமணம் செய்தேன். மது அருந்துவதை குறைத்தேன். 


யோகா, உடற்பயிற்சி என என் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொண்டேன். ஆனால், அளவுக்கதிமாக சிகரெட் பிடித்தேன். அதனால் வந்த வினை தான், எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. நுரையீரல் பாதிப்பை தொடர்ந்து கிட்னியில் பிரச்னை ஏற்பட்டது. முதலில் சென்னையிலும், பிறகு சிங்கப்பூரிலும் சிகிச்சை பெற்றேன். இந்த நேரத்தில் ரசிகர்களிடம் நான் கேட்டுக்கொள்வது இது தான், தயவுசெய்து சிகரெட் பிடிக்காதீர்கள். அதை இன்றே, இப்போதே விட்டு விடுங்கள். தொடர்ந்து நான் மருந்துகளும், மாத்திரைகளும் எடுத்துக்கொண்டதால், சில மாதங்களாக உடம்பு ‘வீக்’ ஆகிக்கொண்டே வந்தது. உடனே மருத்துவ முறையை மாற்றினேன். இப்போது சொல்கிறேன். கடந்த ஓரிரு மாதங்களாக ரொம்ப நன்றாக இருக்கிறேன். டாக்டர்களே கூட, ‘இது ஒரு மிராக்கிள்’ என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள்.

நான் உடல்நிலை தேறி வந்ததற்கு முக்கியமான காரணம், ரசிகர்களின் அன்பும், பிரார்த்தனையும்தான்.  என் ரசிகர்களாகிய நீங்கள் முதலில் உங்கள் தாய், தந்தையரை கவனியுங்கள். நமக்கு நம் வீடுதான் சொர்க்கம். பெற்றோரை வணங்குங்கள். அவர்களின் காலில் விழுந்து வணங்கி, அவர்களுடைய ஆசிகளைப் பெறுங்கள். எனது பிறந்தநாளை, உங்கள் பெற்றோரை வணங்கும் நாளாக நினைத்தால் அதுவே எனக்குப் போதும் " என்று பேசினார்.


நன்றி - விகடன்



http://timesofap.com/wp-content/blogs.dir/3/files/2012/10/rajinikanth-amitabh-bachchan1.jpg