Tuesday, October 16, 2012

ஓ பக்கங்கள் ஞானியின் சாட்டையடி டூ கலைஞர் @ கல்கி

பக்கங்கள்

கல்வியாளர்களுக்கு இரு பாடங்கள்!

ஞாநி

இந்திய சினிமாவில் புரட்சிகரமாக எதுவும் நிகழ்வதில்லை. கொஞ்சம் வித்தியாசமாக ஏதாவது நடந்தாலே அதை மகாபெரிய புரட்சி என்று ஊதிக் காட்டுவது மட்டும்தான் நடக்கும்.



ஹிந்தி சினிமாவில் மல்ட்டிப்ளெக்ஸ் படங்கள் என்று ஒரு வகையேனும் அண்மைக் காலத்தில் உருவாகியிருக்கிறது. வெகுஜன அளவில் செல்ல முடியாவிட்டாலும் படித்த நடுத்தர உயர் நடுத்தர வகுப்புப் பார்வையாளரை மட்டும் நம்பி எடுக்கப்படும் படங்கள் இவை. ஹிந்தி சினிமாவின் பெரிய ஹீரோக்களாகக் கருதப்படும் ஆமிர்கான், ஷாருக்கான், அபிஷேக் பச்சன் போன்றவர்கள் கூட இந்தப் படங்களில் நடிக்க முன்வருகிறார்கள். ஆமிர்கான் தானே அப்படிப்பட்ட படங்களைத் தயாரிக்கிறார்.



தமிழில் இப்படிப்பட்ட முயற்சிகள் சாத்தியப்பட வில்லை. இங்கே மல்ட்டிப்ளெக்ஸ் எனப்படும் பல திரைக் கொட்டகைகள் இன்னும் பரவவில்லை. எனவே அவற்றை மட்டும் நம்பிப் படம் எடுப்பது இயலாது. வெகுஜன அளவில் வித்தியாசமான முயற்சிகளைச் செய்ய முற்படும்போது, வணிகம் சார்ந்த ரசனைக்கும், படத்தின் கருத்து சார்ந்த அழகியலுக்கும் சமரசம் செய்ய வேண்டிய சிக்கல் ஏற்படுகிறது. இந்தச் சமரசத்தைத் தயாரிப்பாளருக்குப் புரியவைத்து, படம் எடுக்கச் செய்ய இயக்குனர் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்


 அப்படி எடுத்த படத்தை பார்வையாளர்களில் எல்லா பிரிவினரும் ஆதரித்தால்தான் வசூலில் தப்பிக்கும் என்ற சிக்கலைச் சந்தித்தாக வேண்டும். மிக முக்கியமாக இங்கே ஆமிர்கான், ஷாருக்கான்களுக்கு நிகரான அந்தஸ்தில் இருக்கும் ஹீரோ நடிகர்கள் ஒருபோதும் அப் படிப்பட்ட படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள்.


இந்தப் பின்னணியில்தான் அண்மையில் வந்தசாட்டைபட முயற்சியை நான் முக்கியமான முயற்சியாகப் பார்க்கிறேன். சமூகத்தின் எரியும் பிரச்னைகளைப் படத்தின் கருவாக எடுத்துக்கொள்ள எப்போதுமே தமிழ் சினிமா மிக மிகத் தயங்கும். ‘தண்ணீர் தண்ணீர்மூலம் மறைந்த கோமல் சுவாமிநாதன் நாடகத்தில் கொஞ்சம் முயற்சி செய்ததை பாலசந்தர் படமாக்கினார். அதன்பின்னர் அப்படிப்பட்ட படங்கள் கூட அபூர்வமாகிவிட்டன. அண்மையில் அப்படிப்பட்ட முயற்சிகளாக வந்த படங்களில்அங்காடித்தெரு’, ‘வாகை சூடவாவரிசையில் சாட்டையை வைக்கலாம்.


சாட்டை இதுவரை வந்த படங்களிலிருந்து முற்றிலும் விலகி நிற்பது அது எடுத்துக்கொண்ட பொருளில்தான். ‘பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன்,’ என்பான் பாரதி. அவனுடைய மேற்கோளோடே தம் படத்தைத் தொடங்கும் இயக்குனர் அன்பழகன், முதல் படத்திலேயே முக்கியமான சமூகப் பிரச்னையை எடுத்துக் கொண்டிருக்கிறார். படத்தைத் தயாரிக்க முன்வந்த இயக்குனர் பிரபு சாலமன் தம் இயக்குனர் மீது வைத்த நம்பிக்கையும் கொடுத்த ஆதரவுமே இதைச் சாத்தியமாக்கி இருக்கிறது.



லட்சக்கணக்கான ஏழை மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகளில் பெரும்பான்மையான ஆசிரியர்கள் தங்கள் பொறுப்பைச் செய்யாமல், அந்த மாணவர்களின் எதிர் காலத்தையே வீணாக்கிக் கொண்டிருப்பதைப் பற்றி எந்த அரசியல் கட்சியும் வாயைத் திறப்பதில்லை. அந்த ஆசிரியர்களின் ஊதிய உயர்வுக்கும் இடமாற்றல் கோரிக்கைகளுக்கும் குரல் எழுப்பும் சங்கங்கள், அவர்கள் தம் அடிப்படைக் கடமைகளையே செய்யாமல் திரிவதைச் சரிசெய்ய முயற்சிப்பதே இல்லை. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்தப் பிரச்னையைத் தீர்க்க முன்வருவதே இல்லை. எல்லாவற்றுக்கும் காரணம் வோட்டு பயம்.


 எதிர்காலமே பாழாக்கப்படும் ஏழை மாணவர்களின் குடும்ப வோட்டுகளை இலவசங்கள் மூலம் கைப்பற்றிக் கொள்ளலாம். ஆனால் ஆசிரியர்கள் மீது கை வைத்தால் சிக்கல். வோட்டுக்கும் ஆபத்து. தேர்தல் வாக்குச் சாவடிகளை நிர்வகிப்பதிலும் அவர்களுக்குக் கணிசமான பங்கிருக்கிறது என்ற பயம் அரசியல் வாதிகளை ஆட்டுகிறது.


இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அன்பழகனின் சாட்டை வீசப்பட்டிருக்கிறது. குட்டிச்சுவராக இருக்கிற ஓர் அரசுப் பள்ளியை, மனசாட்சியும் கடமை உணர்ச்சியும், சிறுவர்கள் மீது அன்பும் உடைய ஒரு நல்லாசிரியர் எப்படி மாற்றி அமைக்கிறார் என்பதை சுவாரஸ்யமாக சொல்ல முற்பட்டிருக்கிறார். அவருக்கு பெரிய பலமாக அமைந்திருப்பது அந்தப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குனர் சமுத்திரக்கனி. கூடவே வெவ்வேறு ஆசிரியர் பாத்திரங்களை ஏற்ற ஒவ்வொரு நடிகரும், மாணவர்களாக நடித்த ஒவ்வொரு இளம் நடிகரும் ஒளிப்பதி வாளரும், எடிட்டரும், கலை இயக்குனரும் கச்சிதமாக தங்கள் வேலையைச் செய்திருக்கிறார்கள்



 (இது பட விமர்சனம் அல்ல என்பதால் நான் ஒவ்வோர் அம்சத்தைப் பற்றியும் இங்கே எழுதவில்லை.) படத்தில் சின்னச் சின்னதாகப் பல குறைகள் இருக்கின்றன - பள்ளியின் மொத்த ஆசிரியர்களும் பொறுப்பற்றவர்கள் என்ற மிகை உட்பட. ஆசிரியர்களின் தவறுகளைச் சொல்லும் படம் - அடுத்த நிலையில் அதற்குப் பொறுப்பான கல்வித்துறை, அரசு பற்றிச் சொல்லவில்லை என்பது ஒரு குறை. வெகுஜன பார்வையாளருக்காக வைத்திருக்கும் பாடல்கள், ஆட்டங்கள் எல்லாம் இந்தக் கதைக்கு ஒட்டாமல் இருக்கின்றன. அரசுப் பள்ளிகளை நம்பி இன்னமும் வரும் லட்சக் கணக்கான குழந்தைகளின் சமூகப் பொருளாதார நிலை இந்தப் படத்தில் அசலாக இருப்பதை விடச் சற்றே மேலாகச் சித்திரிக்கப்பட்டிருப்பது ஒரு குறை. இந்தக் குறைகளை மீறிப் படம் எடுத்துக் கொண்ட செய்தியை உரக்க அழுத்தமாக நம் மனத்தில் பதிய வைக்கிறது.



இன்று ஒவ்வொரு பள்ளியிலும் முக்கியமான பிரச்னைகளில் ஒன்று வளர் இளம் பருவத்தினரிடையே சினிமாக்களின் தாக்கத்தால் ஊட்டி வளர்க்கப்பட்ட பொய்யான காதல் உணர்ச்சி. இயக்குனர் அன்பழகன் அதை இந்தப் படத்தில் சுட்டிக் காட்டி விவாதித்திருக்கிறார். மோதல், சண்டை, ஒருதலைக் காதல், வீட்டார் எதிர்ப்பு போன்ற பிரச்னைகளுக்குப் பிறகு இளம் டீன் ஏஜ் ஜோடியைச் சேர்த்து வைக்கும் வழக்கமான தமிழ் சினிமா களவாணித் தனத்தைச் செய்யாமல், படிக்கும் வயதில் படிப்புதான் முக்கியம் என்பதை மாணவர்கள் உணரும் விதத்தில் அன்பழகன் சொல்லியிருக்கிறார்.


இந்தப் படத்தை தமிழ்நாட்டுக் கல்வியாளர்கள் பார்க்க வேண்டும். கல்வித்துறை அதிகாரிகள் பார்க்க வேண்டும். ஆசிரியர் சங்கங்களின் தலைவர்கள் பார்க்க வேண்டும். இதில் காட்டி இருப்பதில் அது தவறு, இது இப்படியில்லை, இது கற்பனை என்றெல்லாம் சொல்லி தங்கள் தரப்பை நியாயப்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக, இந்தப் படம் சுட்டிக்காட்டும் பிரச்னைகளை, அவற்றுக்கு முன்வைக்கும் தீர்வுகளை, திறந்த மனத்துடன் விவாதிக்க முன்வரவேண்டும். ஏனென்றால் இந்தப் படம் முன்வைக்கும் பிரச்னை, கற்பனை அல்ல; அசலானது. லட்சக்கணக்கான தமிழ்க் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியது.


சாட்டை படத்தில் ஒரு காட்சியில் குறிப்பிடப்படும் பிரச்னையே ஹிந்தியில் ஒரு முழுப்படமாக வந்திருக்கிறது. அதுதான்இங்கிலீஷ் விங்கிலீஷ்’. இது சாட்டை முயற்சியிலிருந்து வேறுபட்டது. மல்ட்டிப் ளெக்ஸ் பார்வையாளர்களை நம்பி எடுக்கப் பட்டிருக்கும் படம். சுமார் 14 வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீதேவி நடிக்கிறார் என்பதே இந்தப் படத்துக்கான பெரிய பப்ளிசிட்டி.


இந்தப் படமும் இயக்குனருக்கு முதல் படம் தான். இயக்குனர் கௌரி விளம்பரப் படங்கள் எடுத்து வந்தவர். அவர் கணவர் தமிழர் பால்கியும் விளம்பரப் பட இயக்குனர். இதற்கு முன் பால்கி எடுத்த இரு படங்களிலும் கௌரியும் பணியாற்றினார். அந்தப் படங்களும் வித்தியாசமான கருப்பொருள் உடையவை. ‘சீனி கம்’, முதிர் வயதில் காதல் வசப்படுவது பற்றியது. அடுத்த படம்பாசிறு வயதிலேயே வயது ஏறாமலே உடல் மட்டும் 


 முதுமையாகி விடும் அபூர்வமான நோயால் தாக்கப்பட்ட சிறுவனைப் பற்றியது. இரண்டிலும் அமிதாப் பச்சன்தான் ஹீரோ. பாதிக்கப்பட்ட சிறுவனாக அற்புதமாக நடித்த அமிதாபுக்குச் சிறந்த நடிகர் விருது தரப்படாதது அரசியல் தான். கௌரி எடுத்திருக்கும் படத்திலும் அமிதாப் நட்புக்காக இரண்டு சீனில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் தமிழ் வடிவத்தில் அந்த ரோலில் அஜித். (நியாயமாக ரஜினி நடிக்க முன்வந்திருக்க வேண்டும்.)


இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் மேல்தட்டுக் குடும்பத்தில் ஆங்கிலம் தெரியாத குடும்பத் தலைவி சசியைப் பற்றியது. அம்மாவுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதை அவள் மகளே அவமானமாகக் கருதுகிறாள். அம்மா சுவையான லட்டுகளை வீட்டிலேயே தயாரித்து விற்று கணிசமாக பணம் சம்பாதிக்கும் பெருமையைவிட, அவளுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதுதான் மேட்டுக்குடி குடும்பத்துக்கு உறுத்தலாக இருக்கிறது.


ஒரு முக்கிய உறவினர் திருமணத்தில் உதவுவதற்காக முன்கூட்டியே சசி தனியாக அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டி இருக்கிறது. அங்கே சசி நான்கு வாரங்களில் ஆங்கிலம் பேசக் கற்றுத் தரும் வகுப்பில் ரகசியமாகச் சேர்ந்து ஆங்கிலம் கற்றுக் கொண்டு திருமண விழாவில் ஆங்கிலத்தில் பேசி தம் கணவன், உறவினர்கள் எல்லாரையும் அதிர வைப்பது தான் முடிவு. ஸ்ரீதேவியின் திறமையை ஹிந்தி சினிமாவும் தமிழ் சினிமாவும் பெருமளவில் வீணடித்திருக்கின்றன என்பதை இந்தப் படம் அதைப் பயன்படுத்தியதன் மூலம் இன்னொரு முறை பளிச்சென்று சொல்லி இருக்கிறது. எவ்வளவு நல்ல பாத்திரங்களை எல்லாம் ஸ்ரீதேவிக்கு அவர் இளமையாக இருந்தபோதே கொடுத்திருக்கலாம் என்ற ஏக்கம்தான் வருகிறது. பால்கி தயாரிப்புகள் அனைத்திலும் இருக்கும் செய் நேர்த்தி இந்தப் படத்துக்கும் ஒரு பலம்.



இயக்குனர் கௌரி இந்தப் படத்தில் இரண்டு நுட்பமான விஷயங்களை அலசியிருக்கிறார். மேல்தட்டுக் குடும்பங்களில் ஆங்கில மோகம் எந்த அளவு ஊறியிருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுவது ஒன்று. ஆங்கிலம் அறியாத ஒரு பெண்ணின் இதர திறமைகள் என்னவாக இருந்தாலும் புகுந்த வீட்டில் அவை மதிக்கப்படாததைப் பேசுவது இரண்டு. ஒரு பெண்ணுக்கு அன்பு மட்டுமல்ல, மரியாதையும் தரப்பட வேண்டும் என்பதே செய்தி.


நம் சமூகத்தில் ஆங்கிலம் தெரியாதவர்களின் நிலை என்ன என்பதை நாம் விவாதிப்பதற்கான ஒரு வாய்ப்பாக இந்தப் படத்தைக் கருதவேண்டும். படத்தை எடுத்தவர்கள் ஆங்கிலம் பேசத்தெரிந்த மேட்டுக்குடி பார்வையாளர்களுக்காக இதை எடுத்திருப்பது ஒரு கிண்டல்தான். வெகுஜன அளவிலும் இதே போல இன்னொரு படம் எடுப்பதற்கான அவசியமும் சாத்தியமும் இருக்கிறது.  


மேட்டுக்குடியல்லாத சாமான்யக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனோ யுவதியோ ஆங்கிலம் தெரியாததால் படும் அல்லல்கள் இன்று நம் சமூகத்தில் நம் கவனத்துக்குரியவை. அந்தப் பற்றாக்குறை அவர்களின் இதர திறமைகள் எல்லாவற்றையும் மறைத்தும் வீணடித்தும் விடுகின்றது. இந்த நிலை எங்கிருந்து தொடங்கி எப்படி மாற்றப்படவேண்டும் என்பதும் நம் கல்வியாளர்கள் விவாதிக்க வேண்டிய விஷயங்கள்.



இரண்டு படங்கள் நம் கல்வியாளர்களுக்கான இரண்டு பாடங்களாக வந்திருக்கின்றன. இந்தப் பாடங்களைப் படிக்காமல் விட்டால் இழப்பு சமூகத்துக்குத்தான்.


இந்த வார வருத்தமும் ஆறுதலும்


அடுத்த சபாநாயகரைத் தேர்வு செய்யும் உரிமை ஆளும் கட்சிக்கு உண்டென்றாலும், எதிர்க்கட்சிகளுடன் ஆலோசிக்கும் ஜனநாயக மரபை முதலமைச்சர் ஜெயலலிதா பின்பற்றாமல் கட்சி விசுவாசி தனபாலுக்குப் பதவியைக் கொடுத்தது வருத்தம். முதல் தலித் சபாநாயகர் என்ற விஷயம் மட்டும்தான் ஒரே ஆறுதல்.


இந்த வாரப் பூச்செண்டு

கோவில்களை விடக் கழிப்பறைகள் முக்கியம் என்று அதிரடியாகச் சொல்லி ஒரு முக்கிய பிரச்னையை விவாதத்துக்குக் கொண்டு வந்ததற்காக மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்கு .வா.பூ.

உங்களுக்குத் தெரியுமா?

தங்கள் வீட்டுப் பிள்ளையை இரண்டு மாதங்களாகக் காணவில்லை என்றால் கொஞ்சம் கூடப் பதறாமல், போலீசில் புகார் செய்யாமல் இருக்கும் அப்பாவையும் தாத்தாவையும் உங்களுக்குத் தெரியுமா?
அப்பா பெயர் : மு.. அழகிரி, தாத்தா பெயர்: கலைஞர் கருணாநிதி, பிள்ளையோ பிள்ளை: துரை தயாநிதி.


நன்றி - கல்கி , ஓ பக்கங்கள் ஞானி



அரசுப்பள்ளி -சாட்டை அடி வசனங்கள் ...

http://www.adrasaka.com/2012/09/blog-post_6323.html

 

ENGLISH VINGLISH - சினிமா விமர்சனம் | அட்ரா ...www.adrasaka.com/2012/10/english-vinglish.html

 

 


நவ ராத்திரிக்கு ஆஃபீஸ்ல 9 நாள் லீவ் குடுத்தா.....

1. நாம் உடனடியாக கை கழுவ வேண்டியவர்கள்

1. காங்கிரஸ்

 2. காசுக்காக நம்மிடம் பழகும் நபர்


3 . கூட இருந்தே குழி பறிக்கும் நம்பிக்கைத்துரோகி




-------------



2. மசாலாப் பொருட்கள் காம உணர்வைத் தூண்டக்கூடியவை. -சுவாமி நித்தியானந்தா!# அடடா! தாங்க்ஸ் சுவாமிஜி.இனி மசாலா பாலா குடிச்சுடறேன் 



-------------------------


3. டியர் ,மேரேஜ் முடியும் வரை நமக்குள் ரொமான்ஸ் எதுவும் நடக்கக்கூடாது. 



ஓஹோ.என் டவுட் எதுக்கு நடக்கனும்? படுத்தா போதாது?



------------


4. A M ,P M வேறுபாடு இல்லாமல் எப்போதும் எங்களை இருட்டில் வைத்திருக்கும் தமிழகCM இந்தியாவின் PM ஆக ஆசைபடலாமா? 



-----------------------------------


5. சோதனை male சோதனை 



----------------



இதே மாதிரி ஜெயில்லயும் ஊட்டி விடுவாங்க...
இதே மாதிரி ஜெயில்லயும் ஊட்டி விடுவாங்கன்னு மதுரை போலீஸ் அறிவிச்சா ஒரு வேளை சரண்டர் ஆவாரோ....


6. உங்களுக்கு கவிதை எழுதத்தெரியுமா? 


எழுதுவேன்.கரண்ட் இருந்தா தெரியும் 



---------------------


7. டெங்கு காய்ச்சல் பயம் எனக்கில்லை.ஏன்னா என் சம்சாரம் சொந்தக்காரங்களையே உள்ளே விடமாட்டாங்க.காய்ச்சலை மட்டும் விட்ருவாங்ளா? 



----------------------


8. அத்தான்.ஆபீஸ்ல வேலை செய்யும்போது என் நினைவு வருமா?


 ம் ம் வேலை செஞ்சா நினைவு வரும் 



--------------------


9. மிஸ் நீங்க FB ல இருக்கீங்களா?


 10 டூ 6 ஆபீஸ்ல இருப்பேன்.ஆபீஸ்ல இருந்தா பேஸ்புக்லதான் இருப்பேன் 


-------------------


10. மிஸ்டர் ரியாஸ்.நீங்க ஒரு பல் டாக்டரா? 


 ராங்க் இன்பர்மேஷன்.32 பல்லுக்கும் நான் தான் டாக்டர் 


----------------------



Beautiful!

WHAT'S not to love about this photo? In one fell swoop it inverts the reputation of a much-feared invertebrate. For the defenceless newborns sitting under the vicious sting are the scorpion's own offspring, tended by their mother until they are big enough to survive on their own.

It's not just me who likes the shot - it has won German photographer Ingo Arndt the Fritz Pölking award for the second time.

There's a good reason why scorpions are one of the few instantly recognisable invertebrates: that bulb at the end of the abdomen is full of deadly venom. What is less well known is that unlike most other arachnids they are viviparous: rather than laying eggs they give birth to live young. The juveniles are unable to feed or defend themselves, or regulate their moisture levels - they need their mother's protection. It's all really quite cute.


11. கைல பிரம்போட ஒரு பொண்ணு இருந்தா அது ஸ்கூல் மிஸ்னு சொல்லத்தேவை இல்லை.வாய்ல கிராம்போட எபபவும் இருந்தா பல் டாக்டரிடம் செல்லத்தேவை இல்லை 



----------------------

12. தமிழக மக்களை என்னால் சந்தோசமாக வைத்திருக்க முடியும்.- விஜயகாந்த் # காமெடிதான் உங்களுக்கு வராதே? நானே ராஜா நானே மந்திரி மொக்கை படம் 



----------------------

13. நல்ல ஸ்டோரி வெச்சிருக்கீங்களா..? அழைக்கிறார் செல்வராகவன் # அடுத்தவன் நல்லதா ஒண்ணு வெச்சிருந்தா இவருக்கு பொறுக்காது போல




-------------------------


14. தன் வாயில் இருந்து லிங்கம் எடுத்தா அவர் சாதா சாமியார், ஆசி வாங்க வந்த பொண்ணு வாய்ல இருந்து லிங்கம் எடுத்தா ஸ்பெஷல் சாமியார்



---------------------


15.  நீங்க என்ன மாடல் காரை வெச்சிருக்கீங்க? என கேட்பதில்லை யாரும், இந்த காரை இதுக்கு முன்னால யார் வெச்சிருந்தாங்க? என்றுதான் கேட்கிறார்கள் 



---------------------




16. டெங்கு காய்ச்சலால் பீதியடைய வேண்டாம் - ஜெ # பாம்பை பார்த்து பயப்படாதீங்க, நான் பாதுகாப்பா இருக்கேன்னு சொல்ற மாதிரி இருக்கு 



--------------------------


17. நவ ராத்திரிக்கு ஆஃபீஸ்ல 9 நாள்  லீவ் குடுத்தா எப்படி இருக்கும் ? 




------------------------------


18. எல்லா சினிமா நாளிதழ் வி்ளம்பரங்களிலும் “ டோண்ட் மிஸ் இட்”னு சொல்றாங்க, ஆனா கடைசி வரை அந்த மிஸ்சை  காட்றதே இல்லை :(((





-------------------------


19. அன்பே! நீ கவரி மான் ஜாதியா? சவுரி மான் ஜாதியா? 



-----------


20. சொப்பன சுந்தரின்னா தூங்கிட்டே இருக்கும் சுந்தரியா? நம்ம சொப்பனத்தில் எப்போதும் வந்து தொந்தரவு தரும் அளவு அழகுள்ள சுந்தரியா? 



------------------------


டுடே டைம் பாஸ் @ டி வி




Monday, October 15, 2012

அப்பாவின் வேஷ்டி – பிரபஞ்சன் - சிறுகதை

http://www.noolulagam.com/book_images/3266.jpg

அப்பாவிடம் ஒரு பட்டு வேஷ்டி இருந்தது. அப்பாவிடம் வெண்பட்டும், பொன்னிறப் பட்டு வேஷ்டிகளும் நிறைய இருந்தாலும் கூட, குழந்தைகளாகிய எங்களுக்கு அவருடைய சிவப்புப் பட்டு வேஷ்டியே அற்புதமானதாகத் தோன்றியது.


சிவப்பென்றால் சுத்தச் சிவப்பும் இல்லை. குங்கும வண்ணமும் இல்லை. செப்புப் பாத்திரத்தைப் புளிபோட்டு விளக்கிப் படிக் கல்லில் வைத்து விட்டுக் குளிப்பார்களே. அப்போது பார்த்திருக்கிறீர்களா? நீங்கள்! உதயகாலத்துச் சூரிய ரேகைகள் பட்டுத் தகதகக்குமே, அந்தச் செப்புப் பாத்திரம் – அது மாதிரியான வேஷ்டி அது.


முழுதும் செப்புக் கலரும் இல்லை. கரை பச்சை நிறம். நாலுவிரல் அகலம். கரையில் சரிகை வேலைப்பாடுகள். சரிகை வேலைப்பாடு என்ன என்கிறீர்கள்? வாத்துகள் ஒன்றன்பின் ஒன்றாய் அணிவகுத்துச் செல்கிற சித்திரம். அவை வாத்துகள் அல்ல; அன்னப்பறவைகள் என்றாள், அம்மா. நாங்கள் அன்னப்பறவைகளை நிறத்தில் பார்த்ததில்லை. அந்த வேஷ்டியின் கரையில்தான் பார்த்திருக்கிறோம். எதுவானால்தான் என்ன? உயிருள்ள ஜீவராசிகள்.



அந்த வேஷ்டி சாதாரணமாகக் கண்களில் காணக் கிடைப்பதில்லை. அப்பா, அதை அவருடைய ஆளுயர, மிக அகலமான அலமாரியில் வைத்திருப்பார். அந்த மாதிரி அலமாரிகள் எல்லாம் இப்போது கிடைப்பதில்லை. ஒற்றை ஆள் அகலம்தானே இப்போதைய அலமாரிகள். அதுவோ மூன்று அலமாரிகளை பக்கம் பக்கமாக நிறுத்தி வைத்ததுபோல் இருக்கும்.



அப்பா அலமாரியில் இருந்து, அதை எடுக்கப்போகும் நேரம் எங்களுக்குத் தெரியும். எனக்கும் என் தங்கை ராஜேஸ்வரிக்கும். பண்டிகை, மற்றும் தாத்தாவுக்கு தெவஷம் முதலான நாட்களில்தான் அது வெளிவரும். அந்த நாட்கள்தான் எங்களுக்கு முந்தியே சொல்லப்பட்டிருக்குமே! அப்பா குளித்துவிட்டு வந்து அந்த வேஷ்டியைத்தான் எடுத்து உடுத்துவார். அப்பா எப்போது குளித்து விட்டு வருவார் என்று தவம் கிடப்போம், அலமாரிக்கு முன்னால்.



அப்பாவுக்குக் குளிக்க ஒரு மணி நேரம் அவசியப்படும். அநியாயத்துக்கு ஏன் அவர் தாமதம் பண்ணுகிறார் என்று இருக்கும். அது குழந்தைப் பருவம். கேள்விகளால் மட்டுமே ஆன பருவம். இப்போது தெரிகிறது. குளிப்பது அழுக்குப் போகவா? அழுக்குப் போகக் குளித்தது யார்? குளிப்பது ஒரு சுகம். உச்சந்தலையில் விழுந்த குளிர்ச்சி வழிந்து வழிந்து பாதத்துக்கு வருகிற இன்பத்துக்குத் தானே குளிப்பது… குளித்த பின் ஏற்படுகிற புத்துணர்ச்சிக்குத்தானே குளிப்பது? அப்பா ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்டது நியாயம் என்றே தோன்றுகிறது.



சரி! குளித்ததும் சட்டுப் புட்டென்று வந்து வேஷ்டியை எடுப்பார் என்றா நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. குளித்தும், கோமணத்தோடு வாசலுக்கு வந்து நின்று விடுவார். ஈரத்தைப் பாதி தானும், மீதி சூரியனும் துடைக்க வேணும். நாங்கள் அப்பாவையே பார்த்துக் கொண்டு இருப்போம். நீர் முத்துக்கள் அவர் முதுகில் கோடு கிழித்துக் கொண்டு இறங்குவதைப் பார்க்க வியப்பாய் இருக்கும். அவர் முதுகே ஒரு பெரிய தாமரை இலையாகவும், நீர்த்துளிகள் முத்துக்களாகவும் தோணும். நிதானமாகவும், அங்குலம் அங்குலமாகவும் துடைத்து ஈரம் போக்குவார். அப்பாவின் உடம்பு சிவந்து போய்விடும். ஏற்கனவே அவர் சிவப்பு. குளித்தபின், உடம்பு பழுத்துவிட்டது மாதிரி இருக்கும்.



‘மணியாகுது.. சீக்கிரம் வந்து படைச்சா என்ன?’ என்பாள் அம்மா. இதைக் கோபமாகவும் குற்றச்சாட்டாகவும் சொல்வாள் என்கிறீர்களா! இல்லை! இன்னும் கொஞ்ச நேரம்தான் ஆகட்டுமே என்று அப்பாவைத் தட்டிக் கொடுப்பதுபோல் இருக்கும். கூரை எரவானத்தில் ஒரு கையை வைத்துக் குனிந்து, வாசலில் நிற்கும் அப்பாவைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு அம்மா இதைச் சொல்கையில் எங்களுக்குக் கோபம் கோபமாய் வரும்.



அப்பாடா! ஆச்சு… ஒரு வழியாகக் குளித்து முடித்துத் துவட்டிய துண்டை இடையில் கட்டிக்கொண்டு, கோமணத்தை உருவிப் பிழிந்து, பத்துத் தடவை ஈரத் தூசி பறக்க உதறி உதறி வாசலில் கட்டியிருக்கும் கொடியில் காயப்போடுவார். அது காற்றில் பறந்து விடாமல் இருக்க, முனைகள் இரண்டையும் பிடித்து முடிச்சுப் போடுவார். அப்புறம் தலைமுடியை, தலையைக் கவிழ்த்துத் தட்டித் தட்டி ஈரம் போக்குவார். தெறிக்கும் நீர்த்தூசுகள், சின்னஞ் சிறு கொசுக் கூட்டம் மாதிரி இருக்கும்.



அப்புறம் கூடத்துக்கு வருவார், அப்பா. சடாரென்று வந்தால் தேவலையே! அதுதான் இல்லை. கூடத்து மிதியடியில் காலை இப்படி அப்படிப் புரட்டிப் புரட்டி நன்கு மணல், மண்போகத் துடைப்பார். காலில் ஒரு துளி அழுக்கு இருக்காது. அழுக்கு அவரது ஜென்மப் பகை ஆச்சே! எங்களுக்குத் தெரியுமே. அப்புறம்தான் அலமாரியைத் திறப்பார், அப்பா.



அந்தக் கணம் ஓர் அபூர்வமான கணம். கதவைத் திறந்ததும், குபீரென்று பச்சைக் கற்பூர வாசனை வந்து தாக்குமே, சிலிர்க்க அடிக்குமே உடம்பை, அந்தக் கணம் அதற்காகத்தானே காத்திருக்கிறோம். இத்தனை நாழி காத்திருக்கிறோம். நாங்கள் மூக்கு, வாய் இரண்டையும், கரை மீன் திறப்பது போலத் திறந்து திறந்து மூடி அந்த வாசனையை அனுபவிப்போம். அலமாரிக்குள் ஒரு சின்ன ஜாதிக்காய் பெட்டி வைத்திருப்பார். 



அந்தப் பெட்டிக்குள் என்ன இருக்கும்? ஒருநாள், ’அப்பா… அப்பா… அந்தப்  பெட்டியை எனக்குக் காட்டுப்பா!’ என்றேன். அப்பா சிரித்துக்கொண்டே என்னைத் தூக்கிப் பெட்டியண்டைக் காட்டினார். ஒரு வெள்ளைத் துண்டில் சுற்றி வைக்கப்பட்ட வேஷ்டி, சுருள் சுருளாகச் சுற்றி வைக்கப்பட்ட காகிதம், (பத்திரங்கள் என்று பின் நாளில் தெரிந்து கொண்டேன்) ராணி, ராஜா படம் போட்டு நோட்டுகள், தங்கக் காசுகள், அப்பாவுடைய சிவப்புக்கல், வெள்ளைக்கல் மோதிரங்கள் எல்லாம் இருந்தன. ராஜி பொறுத்துக் கொள்வாளா என்ன? ’நானும் பார்க்கணும்பா…’ என்றாள். அப்பா அவளையும் பெட்டித் தரிசனம் பண்ணி வைத்தார்.



அப்பா இப்போது அந்தப் பெட்டியைத் திறந்தார். ஜாக்கிரதையாக அந்தச் சிவப்பு வேஷ்டியை எடுத்துக்கொண்டு அறைக்குள் போனார். துவைத்துக் காயப்போட்ட அன்டிராயர்கள் அப்பா அறையில், கொடியில் தொங்கும். அவைதாம் எவ்வளவு பெரியவை! ஒன்றை வெட்டி ராஜிக்கு பாவாடையும், சட்டையும் தைக்கலாம் என்று இருக்கும். அப்பா முட்டிவரை நீளும். அந்த அன்டிராயரைப் போட்டுக்கொண்டு, அதன் மேல் வேஷ்டியைக் கட்டிக் கொண்டால் தான் அப்பாவுக்கு நிற்கும்!



அப்பா வேஷ்டியைக் கட்டிகொண்டு வெளியே வருவார். அடடா… நெருப்பைச் சுற்றிக்கொண்டு  வருவதுபோல் அல்லவா இருக்கும். அந்த வேஷ்டியில் தான் அப்பா எவ்வளவு அழகாகத் தெரிந்தார். அவரால் அந்த வேஷ்டிக்கு மகிமையா, அல்லது அந்த வேஷ்டியாலா? அப்பாவை அப்போது கட்டிக்கொள்ள வேண்டும் போல் இருக்கும். கட்டிக் கொள்வேன். பச்சைக் கற்பூரத்தின் வாசனையோடு, அந்தப் பட்டு சில்லென்று குளிர்ச்சியாய், பாப்பாவின் கன்னம்போல மிருதுவாய் இருக்கும். அதைத் தடவித் தடவிச் சந்தோஷம் கொள்வேன்.



அந்த வேஷ்டியோடுதான் பண்டிகை மற்றும் விசேச நாட்களில், தெவஷத்தின்போது அப்பா பூஜை எல்லாம் செய்வார். பூஜை என்றாலே எனக்கு நினைவில் நிற்பவை இரண்டு விஷயங்கள்தாம். ஒன்று சாப்பாடும் அன்றைக்கு சீக்கிரம் ஆகாது, தாமதம்  ஆகும்.  வடை, பாயசம் என்று பட்டியல் நீள்வதால் அப்படி. ரெண்டாவது, அந்த நாட்களில் இனிப்புப் பட்சணங்கள் கட்டாயம் இருக்கும். தவிர சொந்தக்காரர்கள் நிறையப்பேர் வருவார்கள்.



 மரம் ஏறிய கையோடு குடுக்கையும், வடமுமாகச் சிலர் வருவார்கள். தென்னை மரத்தைத் தேய்த்து ஏறிய காரணமாகவும், கள்ளுக்குப் பானை சீவியதன் காரணமாகவும், அவர்கள் மேல் கள்நெடி அடிக்கும். கள் வாசனை, பூவைப்போலவே நல்ல வாசனைதான். சாப்பிட உட்காருவதற்காகக் குடுக்கையைச் சுவர் ஓரம் சாய்த்து வைப்பார்கள். அதில் உள்ள அரிவாளின் பளபளப்பு என்னைக் கவர்ந்த ஒன்று. அதைக் கையில் எடுத்துப் பார்க்கும் தைரியம்தான் இன்று வரை ஏற்படவில்லை. அந்த அரிவாளின் கூர்மையும் பட்டின் பளபளப்பும் சமம்.



இளமைக்காலத்தில் எனக்குள் ஒரு லட்சியம்தான். பெரியவர்கள், ‘நீ பெரியவன் ஆனதும் என்ன செய்யப் போகிறாய்?’ என்று  கேட்பார்கள். டக்கென்று பதில் சொல்வேன். ‘நான் டாக்டராவேன்’ – இல்லையெனில், ‘நான் இன்ஜீனியர் ஆவேன்’ என்று சமயத்தில் ஞாபகத்துக்கு வந்ததைச் சொல்வேன். கேட்டவர்கள் திகைத்துப் புருவத்தை மேலே உயர்த்தி என்னைப் பார்ப்பார்கள். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பெருமை நிலை கொள்ளாது.



ஆனால், இந்த டாக்டர் பெருமையும், இன்ஜினீயர் பெருமையும் என் மனசுக்குள் இல்லை. பெரியவர்களுக்கு முன் நான் பொய்தான் சொன்னேன். இந்தப் பொய் ரசிக்கத்தக்க பொய். பெரியவர்கள் துண்டமாக்கிக் கொடுத்திருந்த இதை அவர்களிடமே திரும்பவும் நான் வீசினேன். சந்தோஷமாக வாலை ஆட்டிக் கொண்டு அவர்கள் அதை விழுங்கிக் கொண்டார்கள்.



இதைச் சொல்ல வெட்கம் என்ன? எனக்குப் பெரியவன் ஆனதும் அப்பாவின் வேஷ்டியைக் கட்டிக் கொள்ளவேண்டும்! இதுவே என் லட்சியமாக இருந்தது. நான் பெரியவன் ஆக ஆசைப்பட்டது இதற்காகத்தான். பெரியவன் ஆனால் அப்பாவைப் போல மீசை முளைக்குமே! மார்பில் சுருள் சுருளாக முடி முளைக்குமே.. முக்கியமான விசேஷ நாட்களில், அந்தச் சிவப்புப் பட்டு வேஷ்டியைக் கட்டிக்கொண்டு நான் சாமி கும்பிடுவேனே… நான் பெரியவன் ஆக வேண்டுமே!



மடித்தே வைக்கப்பட்டுக் கிடந்ததால், அந்த வேஷ்டி எப்போதும் மடிப்புக் குலையாமல் இருக்கும். மடிப்புகள் பிரிக்க முடியாதனவாக இருக்கும். கடைசி வரை அன்னங்கள் முழுமையாகவே இருந்தன. சரிகைக்கரை இற்று விழவில்லை. நெசவு நேர்த்தி அப்படி. அது  அந்தக் காலத்துக் கை வேலைத் திறன். அவசர வாகன யுகம் தோன்று முன்பே தோன்றிய ஒரு நெசவுக் கலைஞனின் கை நேர்த்தி அப்படி உருவாகி இருந்தது.


 ‘இதை எங்கு வாங்கியது?’ என்று அப்பாவிடம் கேட்டு வைத்துக் கொள்ளவில்லை நான். காவிரிக்கரையில், சோற்றுக்குப் பஞ்சம் இல்லாத, வெற்றிலை பாக்குப் போட்டு சிவந்த வாயுடன், உடம்பில் இளஞ்சூடு பரவிய திருப்தியில் ஒரு மனிதன் தன் மனைவியோடு சேர்ந்து நெய்த வேஷ்டியாக இது இருக்க வேண்டும். மாயவரம், கூரைநாடு, திருபுவனம் என்று ஏதாவது ஒன்றாய் இருக்கக் கூடும். பிறப்பிடம், மூலம் எதானால் என்ன? பிறந்த பயனை? கர்மாவைக் குறைவற, பரிபூரணமாகச் செய்தது அது என்பது சத்தியம்.



எனக்குக் கல்யாணங்களுக்குப் போவதில் அந்தக் காலத்தில் பெருத்த ஆர்வம் இருந்தது. காரணம் இதுதான். மாப்பிள்ளை பட்டுடுத்திக் கொண்டு இருப்பார். பட்டு வேஷ்டியைப் பார்ப்பதே இன்பமான அனுபவமாக இருக்கும். எத்தனை, எத்தனை வகையான பட்டுடுத்திப் பெண்கள் கல்யாணங்களுக்கு வருகிறார்கள்! பட்டுப் புடவைகளை வைத்துக்கொண்டு கல்யாணங்களுக்கு ஏங்குகிறார்கள் பெண்கள். கல்யாணங்களே உலகில் இல்லாது போனால், இந்தப் பெண்கள் கண்ணீர் வடிப்பார்கள். பட்டுடுத்தி யாரிடம் காட்டிப் பரவசப் பட்டுக் கொள்வது?



என் கனவுகள் கூட அந்தக் காலத்தில் பட்டாய் இருந்தன. கனவுகளில் அன்னப்பறவைகள் அணிவகுத்து வரும். ஆகாயம் செம்புக் கலரில், கத்தியாய் மின்னும். அந்தச் செம்பு ஆகாயத்தின் ஊடே, பச்சை நிறத்தில் ஒரு நீளமான ஆறு. அந்த ஆற்றில் அந்த அன்னங்கள் நீந்தின.



அந்த வேஷ்டியை அப்பா துவைத்து நான் இரண்டு முறை பார்த்திருக்கிறேன். குழந்தைப் பாப்பாவைக் குளிப்பாட்டுவது மாதிரி இருக்குமே! அதற்குச் சுடு தண்ணீர் ஆகாது. பச்சைத் தண்ணீரில் தான் அதைக் குளிப்பாட்டுவார். சவுக்காரம் அதற்கு ஆகாதாம். ஆகவே சந்தன சோப்பைத்தான் அப்பா உபயோகிப்பார். அப்பா குளித்தது மைசூர் சந்தன சோப்பில். அதற்கும் முந்தி கதம்ப சோப்பில். பிரான்சில் இருந்து வந்த கதம் சோப். நாங்கள் கதம்ப சோப் என்போம். இறக்குமதி நின்று போனவுடன் மைசூர்ச் சந்தன சோப். அதைத்தான் இதற்கும் போடுவார். சோப் போடுவது தடவிக் கொடுப்பது மாதிரி இருக்கும். 



அம்மா எங்களுக்கு எண்ணெய் தேய்த்து விடுகிற முரட்டுத் தனம் இருக்காது. அவ்வளவு மெது. கசக்கிப் பிழிய மாட்டார். மெதுவாக நீரில், அகலவாக்கில் வேஷ்டியின் முனைகளைப் பிடித்துக்கொண்டு அலசுவார். பிறகு,  தண்ணீர்த் துளி எங்கள் மேல் தெறிக்க, உதறுவார். ரொம்பவும் உதறக்கூடாது. நாள்பட்ட துணி, கிழித்துவிடக் கூடும். உதறும்போது. மழைச் சாரலில் நிற்பதுபோல் இருக்கும், எங்களுக்கு. அப்புறம் நிழலில் காயப்போடுவார். 



வெயில் பட்டால் நிறம் வெளுக்கக்கூடும். காய்ந்ததும் அப்பாவுக்குச் சொல்ல வேண்டியது எங்கள் பொறுப்பு. நாங்கள் மாற்றி மாற்றி அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு முறை துணியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டே இருப்போம். காய்ந்து விட்டதா என்று பார்ப்பதற்காகத்தான். எங்களுக்கு இது ஒரு சாக்கு. அந்தச் சாக்கில் வேஷ்டியைத் தொட்டுப் பார்த்துக்கொண்டே இருக்கலாமே!



சாயங்காலம் வாக்கில் வேஷ்டி காய்ந்து விட்டிருக்கும். அப்பாவிடம் சொல்ல ஓடுவோம். அப்பாவே வந்து, நிதானமாக அதைக் கொடியில் இருந்து எடுத்து, மூலை பிசிறில்லாமல் இழுத்து மடித்து, மீண்டும் அந்தப் பெட்டிக்குள் வைத்துவிடுவார். இனி அதன் உபயோகம் அடுத்த நல்ல நாளில்தான்.



நாளடைவில் எனக்குல் மீசை முளைத்தது. ஒரு சிநேகிதனின் சகோதரிக்கு லவ் லட்டரும் கொடுத்தேன். உதை வாங்கினேன். நியாயம் தானே! அப்புறம் கல்லூரிக்குச் சென்றேன். என்னமோ படித்தேன். என் மூளையை ஆக்கிரமித்துக் கொள்ள எவ்வளவோ விஷயங்கள் இருந்தன.



என் கவனத்தைக் கவர எவ்வளவோ நிகழ்ச்சிகள், நடப்புகள், உலகம் ஜீவத் துடிப்போடு ஒவ்வொரு கணமும் அல்லவா பிறந்து இறந்து,  தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. என் மனசில்தான் எத்தனை ஆவாகனங்கள்…. கம்பன்; கதை சொல்லிகள்; கொடி மரத்து மூலை வக்கீல் ஜெகந்நாதையர் மகள் உமா மகேஸ்வரி எல்லோரும் சேர்ந்து என்னை உருமாற்றி அடித்து விட்டார்களே, கம்பியை நகையாக்குவது போல…! இடையிடையே அந்தச் செப்புப் பட்டு வேஷ்டியும் என் நினைவில் ஆடும். நீ எங்கு, எவ்வாறு இருக்கிறாய்?



அதைப் போற்றிக் கொண்டாடி, பயன் துய்க்க அப்பா இல்லை. பெட்டியுள் இருக்கும் பாம்பென உயிர்த்துக் கொண்டிருக்கும் அது என்பது எனக்குத் தெரியும். ஆண்டுகள் பல கழிந்து சொந்த ஊருக்கு வந்தபோது ஒரு சம்பவம் நிகழ்ந்தது.



அப்போது விநாயக சதுர்த்தி வந்தது. நன்றாக நினைவு இருக்கிறது. ராஜி, கல்யாணம் செய்துகொண்டு போய்விட்டிருந்தாள். நான்தான் பிள்ளையார் வாங்கி வந்தேன். அச்சுப் பிள்ளையார்தான். மூக்கும், முழியும் கன கச்சிதம். இந்தச் சாமிதான் என்ன அழகான கற்பனை! என்னையே படைக்கச் சொன்னாள், அம்மா.



மனசுக்குள் ஒரு படபடப்பே எனக்கு ஏற்பட்டுவிட்டது. அந்தப் பெட்டிக்குள் இருக்கும் வேஷ்டியை நினைத்துத்தான். சுய நினைவின்றித்தான் குளித்தேன். ஈரம் போகாமல் துவட்டிக்கொண்டு, அப்பாவின் அலமாரியைத் திறந்தேன். அந்தப் பச்சைக்கற்பூர வாசனை இன்னும் இருந்தது. வாசனை போகாது போலும்! அனுபவித்தேன். உடன் ராஜி இல்லையே என்று வருத்தமாய் இருந்தது. ஜாக்கிரதையாகப் பெட்டியையும் திறந்தேன். அப்பாவின் மோதிரங்களைத் தவிர மற்றவை அனைத்தும் அங்கு இருந்தன. மோதிரங்கள், என் கல்லூரிக் கட்டணமாகவும், சாப்பாட்டுச் செலவாகவும் ஏற்கனவே மாற்றம் அடைந்திருந்தன.



வேஷ்டியை வெளியே எடுத்தேன். அதன் மேல் சுற்றிய துண்டை நீக்கினேன். அதே குழந்தையின் மென்மை. அதே கத்தியின் பளபளப்பு. அதே வாசனை. கொஞ்சம் கூட நிறம் மங்கல் இல்லை.



இடுப்பில் சுற்றிக் கொண்டேன். மனசு அப்பாவை நினைத்துக் கொண்டது. மயிர்க் கால்கள் குத்திட்டு நின்றன. வாழை இலையைச் சுற்றிக் கொண்டது போல் இருந்தது. அவ்வளவு மழமழப்பு.



மனைப் பலகையை எடுத்துப் போட்டுக்கொண்டு பிள்ளையாருக்கு முன் அமர்ந்தேன். ஓர் ஓசை, முனகலோடு வேஷ்டி உயிரை விட்டது. என் பின் பக்கத்து மடிப்புகள் தோறும் நீளம் நீளமாகக் கிழிந்திருந்தது. எழுந்து நின்று கொண்டேன். இருட்டில் குழந்தையின் கையை மிதித்து விட்டாற்போல் இருந்தது.


அடுப்பங்கரையிலிருந்து அம்மா, கொழுக்கட்டைப் பாத்திரத்தோடு வந்தாள்.
”என்னடா, கிழிஞ்சு போச்சா… போவட்டும்… அப்பா காலத்து வேஷ்டி! உனக்கு எப்படி உழைக்கும்…. போயி, உன் வேஷ்டியைக் கட்டிக்கிட்டு வந்து காரியத்தைப் பாரு!” என்றாள் அம்மா.



நான் என் டெரிகாட்டன் வேஷ்டியை எடுத்துக் கட்டிக்கொண்டு, பிள்ளையாருக்கு முன் உட்கார்ந்தேன். டெரிகாட்டன் வேஷ்டிதான் எனக்குச் சரி என்று பட்டது. ஆனாலும் மனசுக்குள் எங்கோ வருத்தமாகத்தான் இருந்தது.


 நன்றி -பிரபஞ்சன் ,ஜெயமோகன் ,தமிழ் சிறுகதைகள்

 http://www.uyirmmai.com/Images/AuthorImages/Prabanchan.jpg

BHOOT RETURNS - சினிமா விமர்சனம்

http://cdn.koimoi.com/wp-content/new-galleries/2012/10/Bhoot-Returns-Review.jpg

ஹீரோ ஒரு ஆர்க்கிடெக் இஞ்சினியர், அவருக்கு ஒரு சம்சாரம், ஒரு தங்கச்சி, ஒரு பையன், ஒரு பொண்ணு. இந்த ஃபேமிலி ஒரு புது வீட்டுக்கு குடி போகுது. சீப் ரேட்ல கிடைச்சதால சரியா விசாரிக்காம வாங்கிட்டாங்க.. அந்த வீட்டுக்குள்ளே தான் மொத்தப்படமுமே. இந்த 5 கேரக்டர்கள் தான். சம்பள செலவும் மிச்சம், அவுட்டோர் ஷூட்டிங்க் செலவும் மிச்சம்.// நமக்கு தலை வலி தான் மிச்சம்


அந்த வீட்டுக்குள்ளே நைட் மட்டும் சில அமானுஷ்ய சத்தம் கேட்குது. டொக் டொக்னு கதவு தட்டும் சத்தம் , யாரோ கத்தும் சத்தம். இருக்கற மின் வெட்டு பிரச்சனை பத்தாதுன்னு மின்சாரக்கட்டணத்தையும் , டீசல் விலையும் உயர்த்துன கதையா  ஹீரோவோட மகள் கூட ஒரு ஆவி பழகுது. அது எப்பவும் கைல ஒரு பொம்மையை வெச்சிருக்கு.

 ஆல்ரெடி நாம பல படங்கள்ல பார்த்த அதே கதை, சம்பவங்கள் தான் என்பதால் சலிப்பு.. 

ஹீரோவா சக்ரவர்த்தி , இவர் முகம் பூரா தாடி என்பதால் உணர்ச்சிகளை காட்டலைன்னு எவனும் குறை சொல்ல முடியாது, ஏன்னா தாடி மறைச்சிடுச்சுன்னு சமாளிக்கலாம். வந்தவரை ஓக்கே.


 ஹீரோயின் மணிஷா கொய்ராலா .நிமோனியா வந்த பேஷண்ட் மாதிரி இளைச்சு பாப் கட்டிங்க் எல்லாம் பண்ணி கன்றாவியா இருக்கார்.குச்சி குச்சி ராக்கம்மா  தேறாது.. நடிப்பு நளினி , ஜீவிதா ரேஞ்சுக்கு எல்லாம் இல்லை.


மதுஷாலினி . பொட்டு வைக்காத முகம். அதுலயே பாதி மார்க் போயிடுது. ஏனோதானோ நடிப்பு 


 அந்த குழந்தைக்குத்தான் காசு . செம க்யூட் பேபி . அண்ட் கரெக்டான நடிப்பு . அந்தப்பையன் நடிப்பும் ஓக்கே


http://kaw.stb.s-msn.com/i/95/5CAF10409DE5A9332277A6D85168.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. ராம் கோபால் வர்மான்னா ஒரு பிராண்ட் நேம் இருக்கு. அதை நல்லா மிஸ் யூஸ் பண்ணிக்கிட்டது. எப்படி இருந்தாலும் நமக்குன்னு ஒரு ரசிகக்கூட்டம் இருக்கு. எப்படி படம் குடுத்தாலும் பார்ப்பாங்கன்னு அசட்டு துணிச்சல். அதனால எந்த ரிஸ்க்கும் எடுக்காம ஜஸ்ட் 40 நாட்களில் முடித்த படம். டோட்டல் செலவே  50 லட்சம் தாண்டி இருக்காது, அள்ளுனது 5 கோடி ம் ம் நல்லா வருவீங்க.. 



2. மதுஷாலினி கண்ணாடி முன் நிற்பது பின் நகரும்போது அந்த பிம்பம் கண்ணாடியிலேயே அப்படியே இருப்பது ஆல்ரெடி பல திகில் படங்களில் வந்தாலும் பார்க்க டெரராத்தான் இருக்கு. அந்த சீனில் பின்னணி இசை கலக்கல். படம் முழுவதுமே ஆர் ஆர் கவனிக்க வைத்தது 



3. ஒளிப்பதிவு , ஒலிப்பதிவு இரண்டும் சராசரிக்கும் மேலே. 3 டி எஃபக்ட்  கூட சுமார்தான் என பார்த்தவங்க சொன்னாங்க. ஈரோட்டில் 3 டி இல்லை


http://static.ibnlive.in.com/ibnlive/pix/sitepix/10_2012/bhootreturnsreview.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்


1. புது வீட்டுக்குள் போக சிலர் பொறுத்திருப்பதில்லை, சில வீடுகள் புது ஆட்கள் உள்ளே வருவதை விரும்புவதில்லை 



2. டாடி, என் பொம்மை ஷப்பு எங்கே இருக்கு? காணோமே? 


தெரில 


பொய் சொல்லாதீங்க டாடி. அதை நீங்க தானே எடுத்து ஒளிச்சு வெச்சீங்க? 


உனக்கு யார் சொன்னது?

 பொம்மை ஷப்பு


3.  உங்களுக்கு யாராவது எதிரி இருக்காங்களா? 


 இல்லை


 உங்களையா கேட்டேன்? அவங்க 2 பேரையும் கேட்டேன் 


 இன்ஸ்பெக்டர், அவங்க 2 பேரும் என் ஃபேமிலி மெம்பர்ஸ் தான்..நாங்க எல்லாரும் 1 தான் 


 அப்டி இருக்க முடியாது, போலீஸ் கண்ட்ரோல்ல வந்துட்டா ஃபேமிலி மெம்பர்ஸ்னாலும் தனித்தனி  கருத்து இருக்குமே/


 http://blog.bookmyshow.com/wp-content/uploads/image/BMS%20Reviews/BHOOT%20RETURNS/bhoot%20returns1.jpeg

இயக்குரிடம் கோபமாய் சில கேள்விகள்



1. நடுராத்திரில யாரோ கதவை தட்டறாங்க. அது புது வீடு. அந்த பயம் பொதுவா இருக்கும். என்னதான் பொண்டாட்டிங்க புருஷன் பேச்சை மதிக்காம இருந்தாலும் இந்த மாதிரி சிக்கலான நேரங்கள்ல என்னங்க? ஏதோ சத்தம் வருது என்னன்னு பாருங்கன்னு நம்மைதான் பொண்ட்டாட்டிங்க மாட்டி விடுவாங்க.. ஆனா மனீஷா மிட் நைட்ல தட தடன்னு சத்தம் கேட்டதும் தான் தனியா எந்திரிச்சு தெனாவெட்டா போறாங்களெ? அவங்க என்ன விஜய சாந்தியா?


2.  பொம்மையால தான் குழப்பம், அதுதான் பேய்னு கிட்டத்தட்ட முடிவான பின் காலுக்குதவாத செருப்புன்னு அதை தூக்கி வெளில கடாசாம அந்த பொம்மையை ஏன் பரண்ல வைக்கனும்? அது தட்டு முட்டுச்சாமானா? அரிதான பொருளா? என்ன தான் காஸ்ட்லியா இருந்தாலும் யாராவது ராஜ நாகத்தை உள் பாக்கெட்ல வைப்பாங்களா? 


3. ஒரு சீன்ல பேய் மதுஷாலினி போர்த்தி இருக்கும் போர்வையை ஸ்டெப் ஸ்டெப்பா உருவுது, அப்போ அவர் 4 இஞ்ச் இறக்கம் உள்ள ஒரே ஒரு ஷார்ட்ஸ் தான் போட்டிருக்கார், ஆடியன்ஸ்க்கு கிளு கிளுப்புத்தான், ஆனா பாருங்க நாங்க கிளூ கிளுப்பை விட லாஜிக்கை தான் பார்ப்போம். அந்த பேய் ஒரு பெண் குழந்தை பேய்னு சூசகமா சொல்லப்படுது. அது ஏன் அப்படி போர்வையை உருவனும்? அது என்ன நம்பியாரா? பி எஸ் வீரப்பாவா? மன்சூர் அலிகானா? போர்வையை உருவி ரேப்பா பண்ணப்போகுது?


4. பொதுவா பொண்ணுங்க நைட்ல தூங்கும்போது நைட்டி அல்லது லூஸ் சுடி தான் போட்டு படுப்பாங்க ( இந்த ஜெனரல் நாலெட்ஜை  என் சம்சாரம் மூலம் தெரிஞ்சுக்கிட்டேன், மற்றபடி பல பெண்கள் தூங்குனப்போ போய் எல்லாம் பார்க்கலை )  அப்படி இருக்கும்போது மது ஷாலினி நைட் டைம்ல கூட ஷார்ட்ஸ் சர்ட் எல்லாம் போட்டு இன் பண்ணி பெல்ட் போட்டிருக்கு.. 



5. இந்த வீட்டுக்கு குடி வரவேணாம், எனக்கு பிடிக்கலைன்னு நேரடியா பேய் ஒரு வார்த்தை சொல்லாதா? அதுக்கு இன்டைரக்ட் ஸ்பீச் தான் பிடிக்குமா?


6. ஆல்ரெடி பேய் பயம் இருக்கு. தம்பதிகள் தங்கள் குழந்தைகளோட ஒரே ரூம்ல இருக்கவேண்டியதுதானே? எதுக்கு குழந்தைகள் 2 பேரையும் தனித்தனி ரூம்ல வெச்சிருக்காங்க.. கில்மா ரொம்ப முக்கியமா? அப்படி தேவைன்னா குழந்தைகளை தூங்க வெச்சுட்டு அந்த பூஜை புனஸ்காரத்தை வெச்சுக்க முடியாதா? ஒரு சத்தம் கேட்டா உடனே எல்லா ரூமுக்கும் போய் போய் செக் பண்ணிட்டிருக்கற தண்ட வேலைக்கு நான் சொல்லும் ஐடியா பெஸ்ட் ஆச்சே? 


http://www.zorsebol.com/wp-content/uploads/2012/10/Bhoot-Returns-movie-stills.jpg


7. நடு ராத்த்ரி , ஏதோ சத்தம் கேட்டு  3 பேரும் எந்திரிக்கறாங்க. 3 பேரும் தனித்தனியா போய் தேடறாங்க. 3 பேரும் ஒரே புள்ளியில் சந்திக்கும்போது டெரர் ஆகி கத்தறாங்க.. இதுவரை ஓக்கே.. பார்க்க நல்லா இருந்துச்சு.. ரசிக்கும்படியான திகில் காட்சி. ஆனா அதுக்குப்பின் 3 பேரும் கவுண்டமணி காமெடி சீன் பார்த்த மாதிரி கெக்கே பிக்கேன்னு எதுக்கு சிரிச்சுக்கறாங்க? டெரர் டெம்போவே அவுட் ஆகுதே?காமெடி இல்லாத குறையை போக்குவதா நினைப்பா?



8. ஹீரோவோட தங்கச்சியா வர்ற மதுஷாலினியை ஹீரோயின் தங்கச்சியா காட்டி இருந்தாலாவது மச்சினி கிளுகிளுப்பாவது மிச்சம் ஆகி இருக்கும். அதுக்கும் வழி இல்லை.. படத்துல ஒரு கிளுகிளுப்பே இல்லையே? ( ரண களத்துலயும் தமிழன் கிளுகிளுப்பு எதிர்பார்ப்பான் )


 9. தன் சொந்தக்குழந்தை பேய் கிட்டே மாட்டி இருக்கு. ஒரு அப்பாவா ஹீரோ என்ன பண்ணனும்? அந்த கண்ணாடியை பக்கத்துல இருக்கும் ஸ்டூலால் உடைச்சு ரூமுக்குள்ளே போகனும். அதை விட்டுட்டு ஹீரோ கதவை சும்மா தட்டிட்டு இருக்காரே? எஸ் கம் இன் அப்டினு அந்த பேய் வந்து கதவை திறந்து விடும்னு நினைப்பா?


10. ஒரு குழந்தை செத்ததும் டக்னு அந்த வீட்டை விட்டு கிளம்பவேணாம்?  படம் முடியும் வரைக்கும் அதே வீட்ல தான் இருக்கனுமா?



11. கடைசி வரை அந்தப்பேய் யாரு? எதுக்கு அந்த கொலை பண்ணுச்சு, ஏதாவது நிறைவேறாத ஆசை இருந்துச்சா? எந்த ஃபிளாஸ் பேக் கதையும் சொல்லவே இல்லையே?

12. ஒரு சீன்ல அந்த பெண் குழந்தை பேயா மாறி அல்லது பேயால் ஆட்கொள்ளப்பட்டு தன் சொந்த அப்பாவையே கத்தியால் தாக்குது. அப்போ முதல் ஷாட்ல பாப்பா கண்ணுக்கு கீழ் ஏகப்பட்ட கரு மை அப்பி பேய் எஃபக்ட் காட்டி இருக்காங்க. அடுத்த ஷாட்ல மை இல்லை.. அதுக்கு அடுத்த ஷாட்ல லைட் ஷேடுல மை இருக்கு..  எடிட்டிங்க் ஃபால்ட்டா? 


13. போலீஸ் ஆஃபீசர் வீடு தேடி வந்து புகார் வாங்கிட்டு போவாரா? அவர் என்ன போஸ்ட் மேனா? போலீஸ் ஸ்டேஷன் போய் இவங்க புகார் தந்து அவர் இங்கே விசாரணைக்கு வருவது தானே வழக்கம்? வேலைக்காரன் கொலை செய்யப்பட்டது தெரிஞ்சதும் போலீஸ் இவங்க கைரேகை எல்லாம் எடுத்து ஏன் செக் பண்ணலை?



http://akamai.maastars.com/wp-content/uploads/2012/07/madhu_shalini_hot_gallery023.jpg



சி.பி கமெண்ட் - இந்த கேவலமான குப்பையை ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் பார்த்தேன். யாரும் போய் பார்க்க வேணாம், பார்க்கவும் முடியாது , ஏன்னா வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆன இந்த பாங்குப்பை  2 நாளில் அதாவது இன்னைக்கு எடுத்தாச்சு ஹி ஹி ..