Wednesday, October 10, 2012

சிலிர்ப்பு – தி.ஜானகிராமன் --சிறுகதை

http://www.wecanshopping.com/product_images/r/110/thi.janikiraman-300__02077_zoom.jpg

திருச்சிராப்பள்ளியிலிருந்தே புறப்படுகிற வண்டி அது. மாயவரத்தோடு நின்றுவிடும். பத்தரை மணிக்குத் தொடங்கி மூன்று மணியோடு அதன் வாழ்வு முடிந்துவிடும். மதுரை, மானாமதுரை, ஈரோடு என்று எல்லா வண்டிகளையும் அனுப்பிவிட்டு திருச்சிராப்பள்ளி ஜங்ஷன் புயல் புகுந்து விளையாடின தோப்பைப் போல, ஒரே வெளிச்சமாக ஹோவென்று வெறிச்சிட்டுக் கிடந்தது. வாழைத்தொலி, ஆரஞ்சுத்தொலி, எச்சில் பொட்டணம், தூங்குமூஞ்சிகள்- இவற்றைத் தவிர ஒன்றையும்காணவில்லை. 



வண்டி புறப்பட இன்னும் அரைமணிதான் இருக்கிறது. எஞ்சின், கார்டு, ஒன்றும் வரவில்லை. வண்டிக்கு வண்டி ஒரு பரட்டை, அழுக்கு இப்படி ஏதாவது தூங்கிக் கொண்டிருந்தது. பங்களூர் எக்ஸ்பிரஸில் இறங்கி வந்த குடும்பம் ஒன்று இரண்டாம் வகுப்பில் சாமான்களைப் போட்டுக் காவல் வைத்து எங்கேயோ போய்விட்டது. எக்ஸ்பிரஸ் வண்டி சென்றால் என்ன கூட்டம். வரும்போது என்ன வரவேற்பு, என்ன உபசாரம்! போகும்போது எவ்வளவு கோலாகலம்! இது நாதியில்லாமல் அழுது வழிந்தது. ஷட்டிலும் கேடுகெட்ட ஷட்டில், ரயில் ஜாதியில் கூட ஏழை, பணக்காரன் உண்டு போல் இருக்கிறது.



நான் தனியாக கடைசிப் பெட்டிக்கு முன் பெட்டியில் உட்கார்ந்திருந்தேன். பக்கத்தில் என் பையன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். தலைமாட்டில் கையிலிருந்து நழுவிய ஆரஞ்சு உருண்டு கிடந்தது. அதைப் பார்க்கும்போது சிரிப்பு வந்தது எனக்கு. பையனை பங்களூரிலிருந்து அழைத்து வருகிறேன். மாமா சம்சாரம் ஊருக்கு வந்திருந்தபோது அவனை அழைத்துப் போயிருந்தாள். 



நான் காரியமாக பெங்களூர் போனவன் அவனை அழைத்துக் கொண்டு வந்தேன். பெங்களூர் ஸிட்டி ஸ்டேஷனில் மாமா ரெயிலேற்றி விட வந்திருந்தான். ரெயில் புறப்பட ஐந்து நிமிஷம் இருக்கும்போது ஆரஞ்சுப் பழக்காரனைப் பார்த்து, “”ஆரஞ்சுப்பா, ஆரஞ்சுப்பா” என்று பையன் முனகினான். மாமா காதில் விழாததுபோல அந்தண்டை முகத்தைத் திருப்பிக்கொண்டு விட்டான்.



 பையனைச் சுடுகிறாப்போல ஒரு பார்வை பார்த்தேன். அவன் வாய் மூடிக் கொண்டது. ஆனால், வண்டி புறப்பட்டதுதான் தாமதம்; ஆரம்பித்து விட்டான். ஆறு வயசுக் குழந்தை; எத்தனை நேரந்தான் அடக்கிக் கொண்டிருப்பான்.



“”யப்பா, யப்பா!”
“”ஏண்டா கண்ணு!”
“”பிச்சி மாமாவுக்கு வந்து, வந்து, தொளாயிர ரூபா சம்பளம். பணக்காரர். இவ்வளவு பணக்காரர்ப்பா!” என்று கையை ஒரு கட வாத்திய அளவுக்கு அகற்றி, மோவாயை நீட்டினான் – குறை சொல்லுகிறாற்போல.
“”அதுக்கு என்ன இப்ப?”
“”வந்து, செத்தே முன்னாடி ஆரஞ்சு கேட்டேனோல்லியோ, வாங்கிக் குடுக்காம எங்கேயோ பாத்துண்டு நின்னார்ப்பா.”
“”அவர் காதிலே விழுந்திருக்காது. விழுந்திருந்தா வாங்கியிருப்பார்.”
“”நான் இரைஞ்சுதான்பா சொன்னேன்”.
“”பின்னே ஏன் வாங்கிக் கொடுக்கலை?” கேள்வியை நானே திருப்பிக் கேட்டுவிட்டேன். பையன் திணறினான்.
“”வந்துப்பா, வந்து, பிச்சி மாமாவை வந்து ஒரு மூணு கால் சைக்கிள் வாங்கித் தான்னேன். வந்து, தரேன் தரேன்னு ஏமாத்திப் பிட்டார்ப்பா…”
“”அவர் என்னத்துக்குடா வாங்கணும்? நான் வாங்கித் தரேன்.”
“”நீ எப்படி வாங்கித் தருவியாம்?”
“”ஏன்?”
“”உனக்கு நூறு ரூபாதானே சம்பளம்?”
“”உனக்கு யார் சொன்னா?”
“”வந்து, பிச்சி மாமாதான் சொன்னா.”
“”உங்கிட்ட வந்து சொன்னாரா, உங்கப்பாவுக்கு நூறு ரூபாதான் சம்பளம்னு?”
“”வந்து எங்கிட்ட இல்லேப்பா. மாமிகிட்டச் சொன்னா. நீ வந்து மெட்ராஸ்லேந்து லெட்டர் எழுதியிருந்தே பாரு, புள்ளையார் பூஜையன்னிக்கி; அப்பச் சொன்னா மாமிகிட்ட. வெறுமெ வெறுமே நீ மெட்ராஸ் போறியாம். உனக்கு அரணாக்கொடி வாங்க முடியாதாம்.”
இது ஏதுடா ஆபத்து!
“”சரி நாழியாச்சு. நீ படுத்துக்கோ.”
“”எனக்கு மோட்டார் வாங்கித் தரயா?”
“”தரேன்.”
“”நெஜ மோட்டார் இல்லே. கீ கொடுக்கிற மோட்டார், இவ்வுளூண்டு இருக்குமே, அது.”
“”அதான் அதான். வாங்கித் தரேன்.”
“”யப்பா, ஆரஞ்சுப்பா.”
“”நீ தூங்கு. திருச்சினாப்பள்ளி வந்தவுடனே வாங்கித் தந்துடறேன்.”
“”போப்பா!”
“”இப்ப எங்கடா வாங்கறது, ரெயில் போயிண்டிருக்கிற போது?”
“”அப்பன்னா ஒரு கதை சொல்லு.”
“”அப்படிக் கேளு. நல்ல கதையாச் சொல்றேன். ஒரே ஒரு
ஊரிலே…” பாதிக் கதையில் பையன் தூங்கிவிட்டான்.
“”குழந்தை நல்ல சமத்து ஸôர். ஷ்ரூடா இருக்கான். ஆளை எப்படி “ஸ்டடி’ பண்றான்!” என்று திடீரென்று எதிரே இருந்தவர் மதிப்புரை வழங்கினார்.



“”அதுதான் தலை பெரிசா இருக்கு!” என்று பையனைப் பார்த்தேன். 

தலை சற்றுப் பெரிதுதான் அவனுக்கு. எடுப்பான முகம். மூக்கும் முழியுமான முகம். மொழு மொழு வென்று சரீரம். தளதளவென்று தளிரைப் போன்ற தோல். கன்னத்தில் தெரிந்தும் தெரியாமலுமிருந்த பூனை மயிர் ரெயில் வெளிச்சத்தில் மின்னிற்று. தலைமயிர் வளையம் வளையமாக மண்டி, அடர்ந்து பாதி நெற்றி வரை விழுந்திருந்தது. அழகில் சேர்க்க வேண்டிய குழந்தைதான். நாளை மத்தியானம் அம்மாவைப் பார்க்கத்தான் போகிறான். அதுவரையில்? யாரோ அநாதையைப் பார்ப்பது போல் இருந்தது எனக்கு.


 தாய் பக்கத்தில் இல்லாவிட்டால் குழந்தைக்குச் சோபை ஏது? குழந்தையை இரண்டு மூன்று முறை தடவிக் கொடுத்தேன். கபடமில்லாத இந்தக் குழந்தையை எப்படி ஏமாற்றத் துணிந்தது பிச்சி மாமாவுக்கு. கிருபணன், கிருபணன் என்று வேலைக்குப் போன நாள் முதல் வாங்கின பிரக்யாதி போதாதா? குழந்தையிடங் கூடவா வாங்க வேண்டும்? சரிதான், போனால் போகிறது என்று விட்டுவிடக்கூடிய வலுவும் எனக்கு இல்லை. குழந்தையின் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் துன்பம் கிளர்ந்தது.



 சிறிய அற்பமான நிகழ்ச்சி. ஆனால் எனக்குத் தாங்கவில்லை. பிச்சி மாமா எத்தி எத்திப் பிழைக்கிற வித்தைகள், பிறந்தது முதல் உள்ளும் புறமும் ஒன்றாமல் அவன் நடத்தி வருகிற வாழ்க்கை, பெண்டாட்டியிடங்கூட உண்மையில்லாமல் அவன் குடும்பம் நடத்துகிற “வெற்றி’- எல்லாம் நினைவில் வந்து, திரண்டு சுழல் வண்டுகளைப் போலச் சுற்றிச் சுற்றி வந்தன. ராத்திரி முழுவதும் அதே தியானம். தூக்கமே இல்லை.



திருச்சி வந்ததும் ஆரஞ்சு வாங்கினேன். “”யப்பா, இதை ஊருக்குப் போய்த் திங்கறேம்ப்பா. அம்மா உரிச்சுக் கொடுப்பா கையிலே, வாங்கித் திங்கறேம்பா” என்று கெஞ்சினான்.


“”ஆல் ரைட், அப்படியே செய்.”


வண்டி புறப்பட இன்னும் அரை மணி இருந்தது. தாகம் வறட்டிற்று. இறங்கிப் போய்த் தண்ணீர் குடித்துவிட்டு, வெற்றிலை போட்டுக்கொண்டு வந்தேன்.
திரும்பி வரும்போது யாரோ ஓர் அம்மாள் என் பெட்டியில் ஏறிக்கொண்டிருந்தாள். கூட ஒரு பெண். எதிர்த்த பலகையிலேயே உட்கார்ந்து கொண்டார்கள்.



“”இதுதானே மாயவரம் போகிற வண்டி?”
“”இதேதான்.”
“”எப்பப் புறப்படும்?”
“”இன்னும் இருபத்தைந்து நிமிஷம் இருக்கு.”
“”நீங்கள் எதுவரையில் போறேள்.”
“”நான் கும்பகோணம் போறேன்.”
“”உங்க குழந்தையா?”
“”ஆமாம்”
“”அசந்து தூங்கறானே.”
“”பங்களூரிலிருந்து வரோம். அலுப்பு; தூங்கறான்.”
“”நீயும் படுத்துக்கறயா?”
“”இல்லே மாமி, தூக்கம் வரலே” என்றது அந்தப் பெண்.
“”கொஞ்சம் தூங்குடி குழந்தை. ராத்திரி முழுக்கப் போயாகணும். நாளைக்கு வேறே, நாளன்னிக்கி வேறே போகணுமே.”
“”இல்லே மாமி, அப்பறம் தூங்கறேன்.”



அம்மாளுக்கு நாற்பது வயது இருக்கும். இரட்டை நாடி. ருமானி மாம்பழம் மாதிரி பளபளவென்று இருந்தாள். காதில் பழைய கட்டிங்கில் ஒரு பெரிய ப்ளூ ஜாக்கர் தோடு. மூக்கில் வைர பேஸரி. கழுத்து நிறைய ஏழெட்டு வடம் சங்கிலி. கையிலும் அப்படியே. மாம்பழ நிறப் பட்டுப்புடவை. நெற்றியில் பளீரென்று ஒரு மஞ்சள் குங்கும வட்டம். பார்க்கப் பார்க்கக் கண்ணுக்கு நிறைவான தோற்றம், பக்கத்தில் ஒரு தோல் பெட்டி. ஒரு புதுக் குமுட்டி அடுப்பு.



அந்தப் பெண்ணுக்கு எட்டு வயது இருக்கும்; மாநிறம்; ஒட்டி உலர்ந்த தேகம்; குச்சி குச்சியாகக் கையும் காலும்; கண்ணை வெளிச்சம் போட்டுப் பார்க்க வேண்டியிருந்தது; எண்ணெய் வழிகிற முகம்; தூங்குகிறார்போல ஒரு பார்வை. கையில் ஒரு கறுப்பு ரப்பர் வளை; புதிதாக மொடமொடவென்று ஒரு சீட்டிப் பாவாடை; சிவப்புப் பூப்போட்ட வாயில் சட்டை; அதுவும் புதிதுதான்; கழுத்தில் ஒரு பட்டையடித்த கறுப்புக் கண்ணாடி மணிமாலை. பக்கத்தில் ஒரு சீட்டிப்பாவாடை, கொசுவி முறுக்கிச் சுருட்டிக் கிடந்தது. அதிலேயே ஒரு சட்டையும் திணித்திருந்தது.



அந்த அம்மாளுக்கும் பெண்ணுக்கும் என்ன சம்பந்தம்? எப்படிக் கேட்பது?
வண்டி புறப்படுகிற சமயத்திற்கு ஒரு மலைப்பழக்காரன் வந்தான். ஒரு சீப்பு வாங்கி ஒரு பழத்தை அந்தப் பெண்ணிடம் கொடுத்தேன். பதில் பேசாமல் வாங்கிக் கொண்டது.



“”சாப்பிடு.”
“”சாப்பிடு” என்று அந்த அம்மாள் சொன்னதும் உரித்து வாயில் போட்டுக் கொண்டது.
“”இந்தப் பொண்ணு கல்கத்தாவுக்குப் போறது.”
“”கல்கத்தாவுக்கா!”
“”ஆமாம், நம்ம பக்கத்து மனுஷா ஒத்தர் அங்கே பெரிய வேலையிலே இருக்காராம். அங்கே போறது. ராத்திரி மாயவரத்திலே இருந்து அவாளுக்குத் தெரிஞ்சவா யாரோ போறா. அவாளோட சேர்த்துவிடணும். நல்ல பொண்ணு, சாதுவா, சமர்த்தாயிருக்கு.”
பிறகு நானே கேட்க ஆரம்பித்துவிட்டேன்.
“”உம் பேரு என்னம்மா?”
“”காமாக்ஷின்னு பேரு. குஞ்சுன்னு கூப்பிடுவா.”
“”பேஷ், பேஷ்!”
“”என்ன பெரிய பேஷாப் போடறேள்?” என்று அந்த அம்மாள் சிரித்தாள்; “”இவ எப்படி இரண்டு பேரைச் சுமக்கிறாள்னா!”
எனக்கும் சிரிப்பு வந்தது.



“”அதுவும் சரிதான். ஆனால் நான் நெனைச்சது வேறே. எனக்குக் காமாக்ஷின்னு ஒரு தங்கை இருக்கா. இந்தச் சாயலாத்தான் இருப்பா. நல்ல தெம்பான இடத்துலேதான் குடுத்துது. ஆனா மாப்பிள்ளை ரொம்ப உபகாரி. யாருக்கோ மேலொப்பம் போட்டார் இருபதினாயிரத்துக்கு. அவன் திடீர்னு வாயைப் பொளந்துட்டான். அவர் குடும்பம் நொடிச்சுப் போயிடுத்து. ரொம்பக் கஷ்டப்பட்டார். இன்னதுதான்னு சொல்லி மாளாத கஷ்டம். இப்பத்தான் நாலஞ்சு வருஷமா அவர் ஒரு வேலைன்னு கிடைச்சுப் பிடுங்கலில்லாமெ இருக்கார். அவ கஷ்டம் விடிஞ்சுடுத்து. அவளுக்கு அடுத்தவ இன்னொரு தங்கை. குஞ்சுன்னு பேரு. அவளுக்குக் கல்யாணம் பண்ண அலையா அலைஞ்சோம். கடைசியிலெ எனக்கு அத்தை பொண் ஒருத்தி; அவளுக்குக் குழந்தை இல்லெ. சீக்குக்காரி. தன் புருஷனுக்கே அவளைக் கொடுத்துடணும்னு தலைகீழா நின்னா. அப்படியே பண்ணிட்டார், எங்கப்பா. ஆனா, கல்யாணம் ஆன நாளிலிருந்து அவ பட்ட பாடு நாய் படாது. பத்து வருஷம் கழிச்சு ஒரு புள்ளைக் குழந்தை பிறந்திருக்கு. மூணாம் வருஷம். அதுக்குப் பிற்பாடுதான் அந்த வீட்டிலே அவளும் ஒரு மனுஷின்னு தலை தூக்கி நடமாடிண்டிருக்கா.”




“”ஆயிரம் இருக்கட்டும் பெண்ணிருக்கப் பெண் கொடுக்கலாமோ?”


“”என்ன பண்றது? பிராப்தம். இவ பேரைக் கேட்டவுடனே ஞாபகம் வந்தது. ரெண்டு பேரும் ஒரே இடத்திலே அமைஞ்சிருக்கேன்னுதான் பேஷ் போட்டேன்.”
அந்தப் பெண் எப்படி இந்தப் பேச்சை வாங்கிக்கொண்டது என்று புரிந்துகொள்ள முடியவில்லை. அதே தூங்கும் பார்வையுடன் முகத்தில் ஓர் அசைவு, மாறுதல் இல்லாமல் எல்லாவற்றையும் கேட்டுப் பார்த்துக்கொண்டிருந்தது.
“”குழந்தை, உனக்கு அப்பா அம்மா இருக்காளா?”



“”இருக்கா.”
“”அப்பா என்ன பண்றார்?”
“”ஒண்ணாவது வாத்தியார்.”
“”அக்கா, தங்கை, அண்ணா, தம்பியெல்லாம் இருக்காளா?”
“”இருக்கா… நாலு அக்கா… ரெண்டு அண்ணா, ஒரு தம்பி இருக்கான். அதுக்கப்புறம் ஒரு தங்கை.”
“”அக்காவுக்கெல்லாம் கல்யாணம் ஆயிடுத்தா?”
“”மூணு பேருக்கு ஆயிடுத்து. ரெண்டாவது அக்கா, நாலு வருஷம் முன்னாடி குறைப்பட்டுப் போயிட்டா. எங்களோடே தான் இருக்கா.”
“”அண்ணா என்ன பண்றான்!”
“”பெரிய அண்ணா கிளப்பிலே வேலை செய்யறான். சின்ன அண்ணா சகிண்ட் பாரம் வாசிக்கிறான்.”
“”நீ வாசிக்கிலையா?”
“”இல்லை, அண்ணா ஒருத்தன்தான் வாசிக்கிறான். எங்களுக்கெல்லாம் சம்பளம் கொடுக்க முடியலை, அப்பாவுக்கு.”
“”அதுக்காக நீ வேலைக்குப் போறயாக்கும்?”
“”ஆமாம். மத்தியானச் சாப்பாட்டுக்கே எல்லாருக்கும் காணமாட்டேங்கறது.”
“”உனக்கு என்ன வேலை செய்யத் தெரியும்?”
“”பத்துப் பாத்திரம் தேய்ப்பேன். காபி, டீ போடுவேன். இட்லி தோசைக்கு அரைப்பேன். குழம்பு, ரசம் வைக்கத் தெரியும். குழந்தைகளைப் பாத்துப்பேன். கோலம் போடுவேன். அடுப்பு மெழுகுவேன். வேஷ்டி புடவை தோய்ப்பேன்.”
“”புடவை தோப்பியா! உனக்குப் புடவையைத் தூக்க முடியுமோ?”
“”நன்னாத் தோய்க்கத் தெரியும்.”
“”இதெல்லாம் எங்கே கத்துண்டே?”
“”ராமநாதையர்னு ஒரு ஜட்ஜி இருக்கார். அவாத்துலெதான் கத்துண்டேன்.”
“”ம்ஹ்ம், ஸர்வீஸ் ஆனவளா? அவாத்துலெ எத்தனை வருஷம் இருந்தே?”
“”மூணு வருஷமா இருக்கேன்.”
“”மூணு வருஷமா? உனக்கு என்ன வயசாறது?”
“”இந்த ஆவணிக்கு ஒன்பது முடிஞ்சு பத்தாவது நடக்கிறது.”
“”ஏழு வயசிலேயே உனக்கு வேலை கிடைச்சுட்டுது; தேவலை. என்ன சம்பளம் கொடுப்பா?”
“”சம்பளம்னு கிடையாது. ரெண்டு வேளை சாப்பாடு போடுவா. தீபாவளிக்குப் பாவாடை சட்டை ஒரு ஜோடி எடுத்துக் கொடுப்பா.”
“”இந்தச் சட்டை யார் வாங்கிக் கொடுத்தா?”
“”அவாதான்.”
“”கோலம் போட்டு, அடுப்பு மெழுகி, புடவை தோய்ச்சு, குழந்தையைப் பாத்துண்டு, தோசைக்கு அரைச்சு எல்லாம் பண்ணினத்துக்கு இந்த ஆறணாச் சீட்டிதான் கிடைச்சுதா அவாளுக்கு? கிழிசலாப் பார்த்துப் பொறுக்கி எடுத்துக் கொடுத்திருக்காளே.”
“”…………………..”
“”நீ நல்லதா வாங்கிக் கொடுக்கச் சொல்லிக் கேட்கப் படாதோ?”
“”…………………..”
“”ஜட்ஜ் வீட்டிலெ சாப்பிட்டிண்டு இருந்தேங்கறே. உன் உடம்பைப் பார்த்தா அப்படித் தெரியலியே! பஞ்சத்திலே அடி பட்டாப்பலே, கண்ணுகிண்ணெல்லாம் உள்ளே போயி, ஒட்டி உலர்ந்து, நாய் பிடுங்கினாப் போல இருக்கியே.”




“”பெரிய மனுஷாள்ளாம் தனி ரகம்னு உங்களுக்குத் தெரியாது போல் இருக்கு. அவா வத்தல் குழம்பு, சுட்ட அப்பளாம், மிளகு ரசம் இதைத்தான் பாதிநாள் சாப்பிடுவா. ராத்திரி பருப்புத் துகையலும் ரசமுந்தான் இருக்கும். ஆனா அவா உடம்பு என்னவோ நிகுநிகுன்னுதான் இருக்கும். அது தனி உடம்பு. நம்மைப் போல அன்னாடங் காய்ச்சிகளுக்குத்தான் இதெல்லாம் ஒத்துக்காது. ரெண்டு நாளைக்கு இப்படிச் சாப்பிட்டா, வாய் வெந்து, கண் குழிஞ்சு, சோர்ந்து சோர்ந்து வரும்” என்று அம்மாள் தன்னையும் என்னோடு சேர்த்துப் பேசினாள். மரியாதைக்குத்தான் அப்படிச் சொல்லியிருக்க வேண்டும். உடனே ஏதோ தவறாகப் பேசிவிட்டவன் போல, “”நான் என்னென்னவோ பேசிண்டிருக்கேன்; நீங்க என்ன பண்ணிண்டிருக்கேள்?” என்று கேட்டாள்.




“”பயப்படாதீங்கோ. நானும் அன்னாடங் காய்ச்சிதான். தாலுகாவிலே குமாஸ்தா.”
தஞ்சாவூர் ஸ்டேஷன் வந்துகொண்டிருந்தது.
“”துண்டைப் போட்டுட்டுப் போறேன். கொஞ்சம் இடத்தைப் பார்த்துக்கோங்கோ; சாப்பிட்டு, குழந்தைகளுக்கும் சாப்பாடு பண்ணி அழைச்சிண்டு வந்துடறேன்.”
“”இன்னும் சாப்பிடலியா நீங்க? ஏம்மா, நீ என்ன சாப்பிட்டே காலமே?”
“”பழையது.”
“”எங்கே?”
“”ஜட்ஜியாத்திலே!”
“”பார்த்தேளா, பெரிய மனுஷாள்னா இப்படின்னா இருக்கணும்! ஊருக்குப் போற குழந்தைக்கு, மூணு வருஷம் வீட்டோட கிடந்து உழைச்சிண்டிருந்த பொண்ணுக்கு, கொஞ்சம் நல்ல சாப்பாடாப் போட்டு அனுப்பிச்சாதான் என்ன? ஒன்பதே கால் மணிக்கு, நான் புறப்படறபோது கொண்டுவிட்டா. அதுக்குள்ளே
சமையல் பண்ண முடியாதா என்ன? நல்ல குளிர்ந்த மனசு! பழையது சாப்பிடற ஆசாரம் அத்துப் போயிடப் போறதேன்னு கவலைப்பட்டுண்டு போட்டா போல் இருக்கு. ஏன் குழந்தை, அவாத்துலே யாராவது பழையது சாப்பிடுவாளோ?”



“”நான்தான் சாப்பிடுவேன்.”
“”ம்…ஹ்ம்; சரி. இப்பப் பசிக்கிறதோ உனக்கு?”
“”இல்லை.”
“”ஏதாவது சாப்பிடும்மா.”
“”சரி மாமி.”
“”நீங்க ஒரு பொட்டலம் சாம்பார் சாதமும் ஒரு தயிர் சாதமும் வாங்கிண்டு வாங்கோளேன்.”
“”நானே அழைச்சிண்டு போயிட்டு வரேனே.”
“”ரொம்ப நல்லதாப் போச்சு. இந்தாருங்கோ.”
“”என்னத்துக்குக் காசு? நான் கொடுக்கிறேன்.”
“”வாண்டாம்னு நீங்க எப்படிச் சொல்ல முடியும்? நான்னா அவளை அழைச்சிண்டு வரேன்!”
தர்மசங்கடமாக இருந்தது. வாங்கிக்கொண்டேன். பையனை எழுப்பினேன். அவசரமாகக் கூட்டத்தில் புகுந்து இரண்டையும் இழுத்துச் சென்றேன்.
“”இது யாருப்பா?”
“”இந்தப் பொண்ணு மாயவரம் போயிட்டுக் கல்கத்தாவுக்குப் போறா. உன்னோட இவளும் சாப்பிடறதுக்கு வரா.”
இரண்டு அநாதைகளும் சாப்பிடும்போது எனக்கு இனம் தெரியாத இரக்கம் பிறந்தது. தாயை விட்டுப் பிரிந்த அநாதைகள்! ஆனால் எவ்வளவு வித்தியாசம்! ஓர் அநாதை இன்னும் இரண்டுமணி நேரத்தில் தாயின் மடியில் துள்ளப் போகிறது. இன்னொன்று தாயிடமிருந்து தூர தூரப் போய்க் கொண்டே இருக்கப் போகிறது.



“”ஸ்ஸ்.. அப்பா, அப்பா!” என்று பையன் வீரிட்டான். மிளகாய்!
“”தண்ணியைக் குடி… ம்… ம்.”
அந்தப் பெண் உடனே எழுந்து போய்க் கவுண்டரிலிருந்து கை நிறையச் சர்க்கரையை அள்ளி அவளிடம் கொடுத்தது.
சற்றுக் கழித்து, “”அம்பி, தயிர்சாதம் கட்டி கட்டியாக இருக்கு. இரு பிசைந்து தரேன். அப்புறம் சாப்பிடலாம்” என்று சாப்பிடுவதை விட்டுக் கையை அலம்பிவந்து ரெயில்வே சாதத்தை நசுக்கிப் பிசைந்து பக்குவப்படுத்திக் கொடுத்தது.
அவள் பிசைவதைப் பார்த்துப் பையன் என் பக்கம் திரும்பிப் புன்சிரிப்புச் சிரித்தான்.
“”ஏண்டா சிரிக்கிறே?”
“”அவ பிசைஞ்சு கொடுக்கிறாப்பா!” அதற்கு மேல் அவனுக்குச் சொல்லத் தெரியவில்லை.
அவனுக்குக் கையலம்பி, வாய் துடைத்துவிட்டதும் அவள்தான்.
“”இந்தா, ஜலம் குடி” என்று அவனுக்குத் தண்ணீர் கொடுத்தாள்.
“”வாண்டாம்.”
“”ஜலம் குடிக்காட்டா ஜீரணமாகாது. இதைக் குடிச்சுடு.”
பாடாகப் படுத்துகிறவன், பதில் பேசாமல் வாங்கிக் குடித்துவிட்டான். ஏதோ வருஷக்கணக்கில் பழகிவிட்டதுபோல, அவனைக் கையைப் பிடித்து ஜாக்கிரதையாக அழைத்துக் கொண்டு வந்தது அந்தப் பெண். அவனும் அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வந்து கொண்டிருந்தான்.
“”கல்கத்தாவுக்குப் போறேங்கிறியே. அவாளைத் தெரியுமோ?”
“”தெரியாது மாமா. பெரிய வேலையிலே இருக்காராம் அவர். மூவாயிர ரூபாய் சம்பளமாம். குழந்தையை வச்சுக்கணுமாம். அதுக்குத்தான் என்னைக் கூப்பிட்டிருக்கா.”
எந்தக் குழந்தையையோ பார்த்துக்கொள்ள எங்கிருந்தோ ஒரு குழந்தை போகிறது. கண் காணாத தேசத்திற்கு ஒரு தாய் அந்தக் குழந்தையை அனுப்புகிறாள். அதுவும் ஒரு பாவாடையைச் சுருட்டிக் கொண்டு கிளம்பிவிட்டது.
“”ரொம்ப சமர்த்தும்மா இந்தக் குழந்தை” என்றேன் அம்மாளிடம்.
“”நாதனில்லாட்டாச் சமர்த்துத் தானா வந்துடறது. ஒட்டி ஒட்டிண்டு பழகறது அது. கல்கத்தாவுக்குப் போகாட்டால் நானே இதை வச்சுண்டிருப்பேன். பாருங்களேன் பசிக்கிறது கிசிக்கிறதுன்னு நாமாக் கேட்கிற வரையில் வாயைத் திறந்ததோ? என்னவோ பகவான்தான்காப்பாத்தணும்.”
பையன் ஆரஞ்சை மறுபடியும் கையில் எடுத்து வைத்துக் கொண்டான்.
“”ஏண்டா குழந்தை, உரிச்சுத் தரட்டுமாடா?” என்றாள் அம்மாள்.
“”வாண்டாம். ஊரிலே போய் அம்மாவை உரிச்சுக் குடுக்கச் சொல்லப் போறேன்.”
“”நானும் அம்மாதாண்டா.”
பையன் சிரித்து மழுப்பிவிட்டான். ஒரு நிமிஷமாயிற்று. “”உனக்கென்ன வயசு?” என்று திடீரென்று பையன் குஞ்சுவைப் பார்த்து ஒரு கேள்வி போட்டான்.
“”பத்து.”
“”பத்து வயசா? அப்பன்னா நீ வந்து அஞ்சாவது படிக்கிறியா!” என்று விரலை எண்ணிக்கொண்டே கேட்டான்.
“”இல்லை”
“”ஏண்டா, பத்து வயசுன்னா அஞ்சாவது படிக்கணுமா?”
“”ஆமாம்பா. எனக்கு ஆறு வயசு. ஒண்ணாவது படிக்கிறேன். ஆறு ஏழு எட்டு ஒன்பது பத்து. அவ அஞ்சாவது.”
“”அவ படிக்கலைடா.”
“”நீ படிக்கலை?”
“”வீட்டிலேயே வாசிக்கிறியா?”
“”ம்ஹ்ம்”
“”அவ கல்கத்தாவுக்குப் போறாடா. அதான் படிக்கலை.”
அங்க எதுக்குப் போறாளாம்?”
“”வேலை பாக்கப் போறா?”
“”போப்பா… ஏண்டி, நீ வேலை பார்க்கப் போறியா?”
“”ஆமாம்.”
பையன் அவளையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு நம்பிக்கை வரவில்லை. மீண்டும் கேட்டான்;
“”உனக்கு சைக்கிள் விடத் தெரியுமா?”
அந்தப் பெண் வாய்விட்டுச் சிரித்தது. முதல் முதலில் அது சிரித்ததே அப்போதுதான்.
“”எனக்கு எப்படி சைக்கிள் விடத் தெரியும்? தெரியாது.”
“”அப்படீன்னா எப்படி வேலைக்குப் போவியாம்?”
“”நடந்து போவேன்.”
மறுபடியும் அவளைப் பார்த்து யோசித்துக் கொண்டிருந்தான் பையன். அவன் அப்பா  சைக்கிளில் வேலைக்குப் போகும்போது அவள் மட்டும் எப்படி நடந்து போக முடியும் என்று அவனுக்குப் புரியவில்லை. இரண்டு குழந்தைகளும் வயல்வெளிகளைப் பார்த்துக் கொண்டு வண்டியின் வேகத்தை ரஸித்துக்கொண்டிருந்தன.



“”இந்தப் பொண்ணு யாரை நம்பி இப்படிப் போறது?… போகிற இடம் எப்படி இருக்கோ!” என்று கேட்டேன்.



“”இந்த ஜட்ஜுக்கு ஒன்றுவிட்ட மச்சினராம் அவர். மூவாயர ரூபாய் சம்பளம் வாங்கறாராம் ஏதோ கம்பெனியிலெ. நம்ம பக்கத்துக் குழந்தைன்னு விசுவாசமாத்தான் இருப்பா. என்னதான் இருக்கட்டுமே, நல்ல சாப்பாடு, துணிமணியெல்லாம் கொடுக்கட்டும்; எத்தனை பண்ணினாலும் அது பிறத்தியார் வீட்டுக் குழந்தை, வேலைக்கு வந்திருக்கிற குழந்தைங்கிற நினைவு போயிடுமா அவாளுக்கு? இதுதான் அவாளைத் தாயார் தோப்பனார்னு நெனச்சுக்கமுடியுமோ? ஆனா இது ஒட்டி ஒட்டிண்டு வித்தியாசமில்லாம பழகுறதைப் பாத்தா எங்கேயும் சமாளிச்சுண்டுடும் போல்தான் இருக்கு. இருந்தாலும் பெத்தவாகிட்ட இருக்கிற மாதிரி இருக்க முடியுமா, ஸ்வாமி? நீங்களே சொல்லுங்கோ.”




எனக்கு வயிற்றைக் கலக்கிற்று. நானே முகம் தெரியாத உற்றார் உறவினர் இல்லாத புது ஊருக்குப் போவதுபோல ஒரு சூன்யமும் பயமும் என்னைப் பற்றிக்கொண்டன.



“”கடவுள் இதையுந்தான் காப்பாத்தப் போறான். இல்லாவிட்டால் மனிதர்களை நம்பியா பெத்தவர்கள் இதைவிட்டு விட்டிருக்கிறார்கள்?” என்றேன்.



“”கடவுள்தான் காப்பாத்தணும். வேறே என்ன சொல்லத் தெரியறது நமக்கு? சுத்திச் சுத்தி அதுக்குத்தான் வந்துடறோம். ஆனா, இப்படி அனுப்பும்படியான நிலைக்கு ஒரு குடும்பம் வந்துடுத்தே. அது எப்படி ஏற்பட்டதுன்னு யார் யோசிக்கிறா? அதுக்கு என்ன பரிகாரம் தேடறது? அந்த வாத்தியாரோட குழந்தைகளுக்கெல்லாம் தலைக்கு இத்தனைன்னு பள்ளிக்கூடம் வச்சிருக்கிறவன் படி போட்டிருந்தான்னா இப்படிக் கண்காணாத தேசத்துக்கு இது போகுமா?”



“”அப்புறம் ஜட்ஜு வீட்டுக் குழந்தைகளை யாரு
பாத்துப்பா?”
“”அதுவும் சரிதான்.”
“”வீட்டுக்கு வீடு வாசல்படி. கொடுக்கிறவனும் வாத்தியார் மாதிரி ஆண்டியோ என்னமோ?” என்றேன்.
ஒன்றும் புரியவில்லை.
குழந்தையைப் பார்த்து எல்லார் நெஞ்சமும் இளகிற்று. பக்கத்தில் தஞ்சாவூர், ஐயம்பேட்டை என்று நடுவில் ஏறி உட்கார்ந்து கொண்டவர்களுக்கு அரைகுறையாகக் கேட்டாலும் நெஞ்சு இளகிற்று. அம்மாள் உட்கார்ந்திருந்த பலகையின் கோடியில் உட்கார்ந்திருந்தவர்- ராவ்ஜி மாதிரி இருந்தது. உதட்டைக் கடித்து ஜன்னலுக்கு வெளியே தலையைத் திருப்பிக்கொண்டார். நெஞ்சைக் குமுறி வந்த வேதனையை அடக்கிக்கொண்டு தைரியசாலியாக அவர் பட்ட பாடு நன்றாகத் தெரிந்தது.
கும்பகோணம் வந்துவிட்டது.
“”போயிட்டு வரேம்மா. குழந்தே, போயிட்டு வரட்டுமா?” என்று ஒரு ரூபாயை அதன் கையில் வைத்தேன்.
“”நீங்க எதுக்காகக் கொடுக்கறேள்?” என்று அம்மாள் தடுத்தாள்.
“”எனக்கும் பாத்யமுண்டு. நீங்களும் அழச்சிண்டுதானே போறேள்? இது வாத்தியார் குழந்தைதானே? உங்க குழந்தையில்லையே? நீங்க கொண்டாடற பாத்யம் எனக்கும் உண்டும்மா. நான் என்ன செய்யறது. எனக்குக் கொடுக்கணும் போல் இருக்கு. எனக்கும் இதுக்கு மேலே வக்கில்லை.”
“”ஹ்ம்” என்று இரட்டைநாடிச் சரீரத்தில் ஒரு பெருமூச்சு வந்தது. “”வாங்கிக்கோடிம்மா. உங்களுக்கு ஒரு குறைவும் வராது, ஸ்வாமி” என்றாள் அம்மாள்.
“”யப்பா… இதைக் கொடுத்துட்டு வரேம்பா” என்று என் பையன் ஆரஞ்சைக் காண்பித்தான்.
“”கொடேன்டா, கேட்பானேன்?”
“”வாண்டாண்டா, கண்ணு. குழந்தை, பாவம். அம்மா உரிச்சுக் குடுக்கணும்னு சொல்லிண்டிருந்தது.”
“”யப்பா… வாங்கிக்கச் சொல்லுப்பா” என்று பையன் சிணுங்கினான்.
“”வாங்கிக்கோம்மா.”
பெண் வாங்கிக்கொண்டது.



“”ஸ்வாமி! நல்ல உத்தமமான பிள்ளையைப் பெத்திருக்கேள். வாடா கண்ணு. எனக்கு ஒரு முத்தம் கொடுத்துட்டுப் போ” என்று அம்மாள் அழைத்தாள். பையன் கொடுத்துவிட்டு ஓடிவந்தான்.



என் மெய் சிலிர்த்தது. முகத்தைக் கூடியவரையில் யாரும் பார்க்காமல் அப்பால் திருப்பிக்கொண்டு கீழே இறங்கி அவனைத் தூக்கிக்கொண்டு நடந்தேன். அவனுக்கு நடக்கவா தெரியாது? எனக்கு என்னவோ வாரியணைத்துக் கொள்ளவேண்டும் என்று உடம்பு பறந்தது. தூக்கி எடுத்துத் தழுவிக்கொண்டே போனேன். உள்ளம் பொங்கி வழிந்தது. அன்பையே, சச்சிதானந்தத்தையே கட்டித் தழுவுகிற ஆனந்தம் அது


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhv-rgeTcjOOymkTxBiNhGhyY_sbmI7zy8vooSDmUJ948QjD8vNNzrvaU0khHVwi2c1NMa4Vgvf2kJJybl-nt-RJNa68-gyBpCLcDX91joDtwdNtA73VAb72y0RJtMRSkCYhOhirZ35vfM/



நன்றி - ஜெயமோகன், தமிழ்கதைகள்,ஜானகிராமன்

BODY OF EVIDENCE - சினிமா விமர்சனம் 18+

http://pics.filmaffinity.com/Body_of_Evidence-599069048-large.jpg

ஓப்பனிங்க்லயே ஒரு கொலை. அந்த கொலைக்கேஸ்ல ஹீரோயின் மடோனா மாட்டிக்கறாங்க. ஒரு கேஸே கொலைக்கேசில் மாட்டியதே !அடடே!ன்னு கவிதை எல்லாம் சொல்லக்கூடாது. கொலையான நபர் பெரிய கோடீஸ்வரர். பெரிசு. வயசான கிழ போல்ட்டு. நைட் கடைசியா மடோனா கூட கில்மா பண்ணி இருக்கார். அதுக்குப்பின் தான் செத்திருக்கார். அதனால போலீஸ்க்கு டவுட். மடோனா மேல கொலை கேஸ் நடக்குது.


கொலையான நபர் கொக்கைன் எனும் போதைப்பொருள் உபயோகிச்சதா மெடிக்கல் ரிப்போர்ட் சொல்லுது. மடோனா அதே போல் கொக்கைன் யூஸ் பண்ணின ஆள்னு சில சாட்சிகள் சொல்லுது. இப்போ கோர்ட்ல கேஸ் நடக்கும்போது 3 பேர் மேல டவுட் வருது


 1. கோடீஸ்வரரொட செகரட்டரி கம் பி ஏ கம் அந்தரங்க காரியதரிசி ( என்ன என்ன தரிசிச்சாரோ/)அவளை  6 வருஷமா கோடீஸ்வரர் பி ஏ வா வெச்சிருக்காரு.. பி ஏ வா மட்டும் தான் வெச்சிருந்தாரா? சொப்பன சுந்தரி ஆக்கி வெச்சிருந்தாரா? அப்டினு கண்டு பிடிக்கனும். விசாரிச்சதுல அந்த பி ஏ 2 வருஷத்துக்கு முன்னாடி கோக்கைன் யூஸ் பண்ணிய வழக்குல போலீஸ்ல அரெஸ்ட் ஆன மேட்டர் தெரிய வருது..ஆல்ரெடி தான் இருந்த இடத்துக்கு இன்னொரு லேடி வர்றதா? அப்டினு கோபத்துல , பொறாமைல கொலை செஞ்சிருக்கலாம்



2. கோடீஸ்வரரோட ஃபேமிலி டாக்டர். இவர் என்ன சாட்சி சொல்றார்னா மடோனா கொக்கைன் போதை மருந்து தர்றதை என் கண்ணால பார்த்தேன்கறார். ஆனா மடோனா என்ன சொல்றார்னா அவர் அதாவது அந்த ஃபேமிலி டாக்டர் ஒரு பேமானி டாக்டர், என்னை  ஒருக்கா கூப்பிட்டாரு, நான் உத்தம பத்தினி என்பதால் போகலை. அந்த கோபத்துல எனக்கு  எதிரா பொய் சாட்சி சொல்றார். ஒரு வேளை அவரே  கூட கடுப்புல கொன்னிருக்கலாம் 



3. மடோனாவுக்கு ஒரு முன்னாள் காதலர். அவர் ஒண்ணும் யோக்கியமானவர் இல்லை. நேத்து ஒருத்தரை ஒருத்தரை பார்த்தோம், பார்த்த உடனே மேட்டரை முடிச்சோம் அப்டினு ஒரு கொள்கையோட வாழ்றார். மடோனா இவரைத்தான் முதல்ல வெச்சிருந்தாரு. ஒரு தடவை பெட்ரூம்ல வேற ஒரு ஆள் கூட ஆம்பளை கூட பார்த்து அடச்சே.. அவனா நீனு காரி துப்பி கழட்டி விட்டுட்டு அதாவது அந்த ஆளை கழட்டி விட்டுட்டு  வந்துடறாரு. அந்த கோபத்துல அவர் கூட இந்தக்கொலை செஞ்சிருக்கலாம்


http://ia.media-imdb.com/images/M/MV5BNjMwNTQ3ODc0M15BMl5BanBnXkFtZTcwNTg3NDcyNA@@._V1._SX640_SY428_.jpg


இதுவரைக்கும் பொறுமையா படிச்சவங்க மனசுல என்ன நினைக்கறாங்கன்னா  இது ஏதோ விதி டைப் கோர்ட் ஆர்க்யூமென்ட் படம் போல. க்ரைம் சப்ஜெக்ட் போல அப்டின்னு உச்சுக்கொட்டுவாங்க.. அங்கே தான் நீங்க தப்பு பண்றாங்க. படத்துக்கு திரைக்கதை எழுதுனவர்க்கு தெரியாதா? நாம எடுக்க வந்தது ஒரு கில்மாப்படம். அதை க்ரைம் த்ரில்லர்ங்கற போர்வைல தர்றோம். அட்லீஸ்ட் 4 சீனாவது வைக்கனும்னு தெரிஞ்சு வெச்சிருக்கார். 


 மடோனா சார்பா வாதாடும் வக்கீல் தான் ஹீரோ . படம் போட்ட 37 வது நிமிஷத்துல வக்கீல் மடோனா வீட்டுக்கு டிராப் பண்ண வந்துட்டு திரும்பி போகாம அவர் வீட்ல ஒரு கில்மாவை 44 வது நிமிஷத்துல பண்ணிடறாரு. சீன் நெம்பர் ஒன்.. 


கோர்ட்ல வாதம் எல்லாம் முடிஞ்சு  ரிட்டர்ன் வர்றப்போ லிஃப்ட்ல  கில்மாவுக்கான லீடு கொடுத்து அப்புறம் கார் பார்க்கிங்க் வந்து கார் மேல  ஒரு கில்மா சீன் சீன் நெம்பர் 2 


வக்கீலுக்கும், மடோனாவுக்கும் ஒரு ஊடல். அதாவது மடோனா வேணும்னே  என்ன பண்ணிடறார்னா  தானும், வக்கீலும் கில்மா பண்றப்ப நைஸா  வக்கீல் சம்சாரத்துக்கு ஃபோனை போட்டு ஸ்பீக்கர் ஃபோன் ஆன் பண்ணி வெச்சுடறாரு, சம்சாரம் சரி சண்டை வித் வக்கில்.. நியாயம் கேட்க கோபமா போகும் வக்கீல் சண்டை போடுவார்னு பார்த்தா . அவரு ஹி ஹி அப்போ ஒரு கில்மா சீன், சீன் நெம்பர் 3


 இந்த டீட்டெயிலான 3 சீன்கள் பத்தாதுன்னு கொலை நடந்தப்ப பெட்ரூமில் நடந்தது என்ன? அப்டினு ஒரு வீடியோ டேப் அதிலும் ஒரு கில்மா ,  சீன் நெம்பர் 4


 செத்துப்போன கோடீஸ்வரர்  தன் பி ஏ கூட கில்மா பண்ணின டேப்பை கோர்ட்ல தாக்கல் பண்றாங்க . இதுல செம காமெடி மேட்டர் என்னான்னா ஜட்ஜ் ஒரு லேடி.. அதுவும் பார்க்குது. எங்கே உனர்ச்சி வசப்பட்டு ஜட்ஜ் கூடவும் ஹீரோ வக்கீல் கில்மா பண்ணிடுவாரோன்னு பயந்துக்கிட்டே.. ஒரு ஆர்வமான பயம் தான்.. நல்ல வேளை அப்படி ஏதும் நடக்கலை.. .


Still of Madonna in Body of Evidence


 மனம் கவர்ந்த வசனங்கள்( ஒரு உத்தேசமான மொழி பெயர்ப்பு )


1. நீங்க தான் இந்த தப்பை செஞ்சீங்களா?ன்னு எந்த க்ளையண்டையும் நான் கேட்பது இல்லை , ஏன்னா ஒரு வக்கீலோட வேலை அது இல்லை.. 


2. ஜட்ஜ் - ஏம்மா, கொக்கைன் யூஸ் பண்ணி இருக்கார்னு மெடிக்கல் ரிப்போர்ட் வந்திருக்கே? இப்போ என்ன சொல்றே? 

 அந்த ரிப்போர்ட் பொய் யுவர் ஆனர்.. 


3.  மடோனா - ஏய் , கம் இன்.. 

 ஹீரோ - சாரி.. நான் உங்க வக்கீல். யாராவது பார்த்தா நல்லா இருக்காது


மடோனா - ம்க்கும், யாரும் பார்க்கலை.. அவனவனுக்கு அவனவன் கவலை இது நைட் டைம் , உள்ளே வாங்க.. 


4. இந்த கூட்டத்துல யார்  உங்களுக்கு பிடிச்சமானவர்னு உங்களால சொல்லிட முடியாது ஏன்னா அது யாராலும் சொல்ல முடியாது


5.  ஹீரோ - யூ ஆர் எ ஜீனியஸ்


 மடோனா - அதே மாதிரி உன்னையும் சொல்ல ஆசை , ஆனா முடியலை


6. வக்கீல் - நீங்க அவர் கூட கில்மா பண்றப்ப அவரை அடிப்பீங்களா? ஐ மீன் சாடிசம் உண்டா? 

 அப்ஜெக்‌ஷன் யுவர் ஆனர்..  இது என் கட்சிக்காரரின் அந்தரங்க விஷயம். கேஸ்க்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? 


சம்பவம் நடந்த இடத்துல ஒரு பெல்ட் இருந்திருக்கு. அதால இவர் கையை கட்டிப்போட்டு கில்மா முடிச்சுட்டு கொலை செஞ்சிருக்க வாய்ப்பு இருக்கு.. அந்தம்மாவே கம்முன்னு இருக்கு,. இவர் ஏன்  துள்ளறாரு?


7. மிருகங்கள் கில்மா பண்றதை பார்த்திருக்கீங்களா? 


 ஆமா, அதுக்கு இண்டென்ஷன்னு பேரு


 அந்த சுதந்தரம் கூட மனுஷனுக்கு இல்லை.



Still of Anne Archer in Body of Evidence



 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. விறு விறுப்பான கோர்ட் காட்சிகள் கொண்ட ஒரு மர்டர் த்ரில்லரை கில்மா சீன் கலந்து கொடுத்தது. அதுக்கு ஹீரோயினா மடோனாவை போட்டது


2. கில்மா சீன் வர்ற 4 இடங்களும் இருட்டான இடத்துல நடந்தாலும் தான் பெற்ற  காட்சி இன்பம் பெறுக இவையகம் என்னும் உயர்ந்த நோக்கில் லாஜிக் எல்லாம் பார்க்காமல் ஹீரோயின் மேல் லைட் அடிச்சது ( வெளிச்சம் இருந்தாத்தானே சீன் பார்க்க முடியும்? ) 


3.கோர்ட் சீன் வாதங்கள் பெரும்பாலும் கில்மா மேட்டராகவே இருப்பதால் அது ஒரு கிளுகிளுப்பு. அதை எல்லாம் கவனிக்கும் ஜட்ஜ் ஒரு லேடியாக இருப்பதால் அது தனி கிளு கிளுப்பு.  ( என்னதான் நமக்கு எல்லா ஏ ஜோக்ஸும் தெரீஞ்சாலும் அதை ஆஃபீஸ் லேடி ஸ்டெனோ சொல்லும்போது தனி கிளு கிளு இல்லையா.? )_


Still of Madonna in Body of Evidence


இயக்குநரிடம் ஜாலியாய் சில கேள்விகள்


1. படத்துல வர்ற  லேடி கேர்க்டர்ஸ்  மடோனா, அந்த பி ஏ ,  ஹீரோ வக்கீலின் மனைவி  என எல்லாருக்கும் சீன் இருக்கு. ஆனா லேடி ஜட்ஜ்க்கு மட்டும் சீன் வைக்கலை.. அது ஏன்? கோர்ட் அவமதிப்புல கேஸ் வந்துடும்னா? ரொம்ப சிம்ப்பிள் . அவர் ஜட்ஜா யூனிஃபார்ம்ல இருக்கும்போது கில்மா பண்ற மாதிரி எடுத்தாத்தான் பிரச்சனை.. ஜட்ஜ் வீட்டில் ஹீரோ போய் வாதிடும்போது உணர்ச்சி வசப்பட்டு கட்டிப்பிடிச்ச மாதிரி எடுத்திருக்கலாம்


2. பி ஏ வா நடிச்சிருக்கும் அந்த லேடி செம டொக்கு ஃபிகர்.. வேற ஆளே சிக்கலையா? அதை பார்த்தா பாவமா இருக்கு.. நோ கிளு கிளுப்பு..  ஹீரோயின் , அடிஷனல் ஹீரோயின் எல்லாம் பார்த்தாலே கிக் ஏறனும்.. 


3. அந்த லேடி ஜட்ஜ் முகம் சகிக்கலை..  ஒரு பக்கா ஃபிகரை போடறதுக்கென்ன? இந்த மாதிரி படங்கள்ல திரைக்கதைல சறுக்குனாலும் ஃபிகர் நல்லாருந்தா எவனும் கண்டுக்க மாட்டான் 


4. ஹீரோயின் மடோனா பாப் கட்டிங்க் கெட்டப்ல வர்றதால கிக் கம்மி. சமயங்கள்ல அது பையன் மாதிரி இருக்கு.. அதனால கூந்தல் உள்ள ஏஞ்சல் ஆக்கி இருக்கலாம். 

http://images2.fanpop.com/images/photos/6800000/Body-Of-evidence-madonna-6883543-629-351.jpg



லாஜிக் மிஸ்டேக்ஸ்


1. பி ஏ வுக்கு கொக்கைன் கேஸ் தன் மேல இருக்கு, போலீஸ் விசாரணைல அது தெரிய வந்துடும், எஃப் ஐ ஆர் போட்ட கேஸ் அப்டினு ஆல்ரெடி தெரியாதா? எதுக்கு கோர்ட்ல பொய் சொல்றா? 


2. வக்கீல் ஹீரோ தன் மனைவியின்  ஃபோன் நெம்பரை எதுக்கு மடோனா கிட்டே கொடுக்கறான்? பொதுவா இந்த மாதிரி ஆம்பளைங்க தன் சம்சாரம் நெம்பரை லூஸ் மாதிரி கொடுத்து மாட்டிக்க மாட்டான். சராசரி ஆணே அப்டின்னா ஒரு வக்கீல்? 


3. மடோனா ஒரு சாடிஸ்ட். தன்னுடன் இருக்கும் ஆணை துன்புறுத்தி இன்பம் காண்பவள். முதல் டைம்  உருகும் மெழுகுவர்த்தில தீக்காயம் , தழும்பு பெற்ற ஹீரோ அடுத்த டைமும் கார் ல அத்தனை உடைந்த கண்ணாடி துகள்ல  முதுகை காயம் பண்ணிக்கறது ஏன்? அப்படி என்ன சீமைல இல்லாத சீனிக்கிழங்கு அவ?





சி.பி கமெண்ட் - கில்மா ரசிகர்கள் பார்க்கலாம், ஏமாற்றாது.(1993 )

பிரபாகரன் செய்த மிகப்பெரும் வரலாற்றுத் தவறு - எரிக் சோல்ஹெய்ம் பேட்டி @ BBC

இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான போரில், 2009 ஆம் ஆண்டின் துவக்கத்தில், போரின் இறுதிக் கட்டத்தில் பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்படக்கூடிய மனிதப் பேரவலம் நடக்காமல் தடுக்கும் நோக்கத்தில் சர்வதேச நாடுகள் கூட்டாக ஒரு முயற்சி எடுத்ததாக ஏற்கெனவே செய்திகள் கசிந்திருந்தன.
அந்த முயற்சியில் முக்கிய பங்காற்றிய நோர்வே நாட்டின் முன்னாள் அமைச்சரும், இலங்கையில் அரசுக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவருமான எரிக் சொல்ஹேய்ம், அந்த திட்டம் குறித்து தற்போது வெளிப்படையாக பேசியுள்ளார்.


கடந்த வாரம் லண்டனில் பிபிசி அலுவலகம் வந்திருந்த எரிக் சொல்ஹேய்ம் அவர்களிடம் இந்த திட்டம் உருவான பின்னணி குறித்தும் அது ஏன் செயற்படாமல் கைவிடப்பட்டது என்றும் பிபிசி தமிழோசை மற்றும் சிங்கள சேவைகள் சார்பில் செவ்வி காணப்பட்டது.

அந்த செவ்வியின் முக்கிய பகுதிகளை இங்கு எழுத்துவடிவில் காணலாம்.


இலங்கையின் சமாதானத்துக்காக முன்முயற்சி எடுத்த கொடை நாடுகளான ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நார்வே ஆகிய நாடுகள் இணைந்து 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு யோசனையை முன்வைத்தன. ஐநா மன்றமும் இதன் பின்னணியில் இருந்தது. அன்றைய நிலைமையில் போரின் முடிவு இலங்கை அரசுக்கு ராணுவ ரீதியிலான வெற்றியாக அமையும் என்பது எல்லோருக்கும் தெரிந்த நிலையில், போரின் முடிவில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படும் பேரழிவை தடுக்கும் வகையில் போரை முறையாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்கிற யோசனையை நாங்கள் முன்வைத்தோம்.


அந்த திட்டத்தின் முழுமையான இறுதி வடிவமும் விடுதலைப்புலிகளும் இலங்கை அரசும் ஒப்புக்கொண்டபிறகு தான் முடிவுசெய்யப்பட்டிருக்கும். ஆனால் அதற்கு அடிப்படையாக நாங்கள் தெரிவித்த நடைமுறை யோசனை என்னவென்றால், சர்வதேச அமைப்பு, உதாரணமாக அமெரிக்கா, இந்தியா அல்லது வேறு ஒரு நாடு இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதிக்கு ஒரு பெரிய கப்பலை அனுப்பிவைப்பது என்றும், அதில் ஐநா மன்ற அதிகாரிகளோ அல்லது மற்ற சர்வதேச அமைப்பை சேர்ந்தவர்களோ இருந்து, போரின் இறுதியில் எஞ்சியிருந்த அனைத்து விடுதலைப்புலிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் ஒருவர் விடாமல் கணக்கெடுத்து புகைப்படத்துடன் பதிவு செய்வது என்றும் தெரிவித்திருந்தோம்.


அவர்கள் அனைவரும் கொழும்பு கொண்டு செல்லப்பட்டு அவர்களிடமிருந்த ஆயுதங்களை ஒப்படைத்த பிறகு, விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகிய இருவர் தவிர்த்த மற்ற அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அப்படி நடந்திருந்தால், சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் சர்வதேச அமைப்புக்களால் பதிவு செய்யப்பட்டவர்களை இலங்கை அரசால் நினைத்த மாத்திரத்தில் கொல்லமுடிந்திருக்காது. எங்களின் இந்த யோசனை மட்டும் ஏற்கப்பட்டிருந்தால், இறுதிகட்டத்தில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பேர் இன்று நம்மிடையே உயிருடன் இருந்திருப்பார்கள்.


ஏப்ரல் மாதம் இந்த திட்டத்தின் இறுதிவடிவத்தை முடிவு செய்வதற்காக விடுதலைப்புலிகள் அமைப்பின் சர்வதேச பேச்சாளர் குமரன் பத்மநாதன் ஒஸ்லோவுக்கு வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் பிரபாகரன் அவரை தடுத்துவிட்டார். எங்களின் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பத்திரமாக அழைத்து வருவதற்காக கோலாலம்பூருக்கே சென்றிருந்தனர். ஆனால் இந்தத் திட்டம் தங்களுக்கு ஏற்படையதல்ல என்று எங்களுக்கு செய்தி சொல்லப்பட்டது. எங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை.


எரிக் சொல்ஹேய்ம் மற்றும் பிரபாகரன்
எரிக் சொல்ஹேய்ம் மற்றும் பிரபாகரன்


இந்த திட்டத்திற்கு இலங்கை அரசின் ஒப்புதல் இருந்ததா?


அந்த நாட்களில் நான் இலங்கைக்கு செல்லவில்லை. ஆனால் ஒஸ்லோவில் இருக்கும் இலங்கைத் தூதரகம் மூலமாகவும், மற்ற தூதரகங்கள் மூலமாகவும் இலங்கை அரச தரப்புடன் எங்களுக்கு இருந்த தொடர்புகள் மூலமாகவும் இலங்கை அரசுடன் நாங்கள் நிறைய பேச்சுவார்த்தைகள் நடத்தினோம். அவர்களுடன் பேசியதிலிருந்து முழுமையான ராணுவ ரீதியிலான வெற்றியை பெறுவதே இலங்கை அரசின் பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள் என்கிற உணர்வையே நாங்கள் பெற்றோம். அதேசமயம், விடுதலைப்புலிகள் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியிருந்தால் இலங்கை அரசுக்கு அதற்கு சம்மதிப்பதைத் தவிர வேறு வழி இருந்திருக்காது என்றே எங்களுக்கு தோன்றியது.


இந்த திட்டத்திற்கு இலங்கை அரசு ஒப்புக்கொண்டிருக்கும் என்று எதை வைத்து நீங்கள் நம்புகிறீர்கள்?


அவர்களுக்கு இதில் விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, அவர்கள் இதை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டிய நிலைமையே இருந்தது. காரணம் இந்தியாவும் அமெரிக்காவும் மற்றவர்களும் இதில் உறுதி காட்டியிருப்பார்கள், ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தினரும் இதில் ஒன்றாகவும் உறுதியாகவும் குரல் கொடுத்திருப்பார்கள். இலங்கை அரசில் தயக்கம் இருந்திருந்தாலும் அவர்களுக்கு வேறு வழி இருந்திருக்காது.


அப்படியானால், இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முதன்மையான பொறுப்பு விடுதலைப் புலிகளின் தலைமையை சாரும் என்கிறீர்களா?


போரின் இறுதி முடிவு என்னவாக இருக்கப்போகிறது என்பதை அனைவரும் உணர்ந்த நிலையிலும் போரை ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் முடிக்காமல் கடைசிவரை போராடவேண்டும் என்று பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைமை முடிவெடுத்தது மிகப்பெரிய வரலாற்று தவறு என்றே நான் நினைக்கிறேன். 


அதேசமயம், இதை காரணமாகக் காட்டி இலங்கை அரசு நடத்திய குறிவைத்த தாக்குதல்களை நியாயப்படுத்தமுடியாது. மக்கள் செறிவாக வாழும் பகுதிகள் என்று தெரிந்தே, இலங்கை அரசு தாக்குதல்களை நடத்தியது என்பதற்கான பல சான்றுகள், அறிக்கைகள் வெளிவந்துள்ளன. அதிலும் குறிப்பாக துப்பாக்கிச் சூடுகள் நடத்தமுடியா 'பாதுகாப்பு வலயம்' என்று அரசே ஒரு பகுதியை அறிவிப்பதும் அந்த பகுதிக்கு மக்கள் வந்த பிறகு அங்கே குறிவைத்து தாக்குதல் நடத்துவதுமாக அரசு செயற்பட்டிருக்கிறது என்பதற்கான வலுவான சான்றுகள் கிடைத்திருக்கின்றன.


இந்த திட்டத்திற்கு இந்திய அரசின் ஒப்புதல் இருந்ததா?


விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பாக இந்திய அரசில் கொஞ்சம் கூட அனுதாபம் இல்லை. ராஜீவ் காந்தி கொலை உட்பட பல்வேறு காரணங்கள் இதற்கு பின்னணியில் இருக்கின்றன. ஆனால் அதேசமயம், இறுதிகட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படக்கூடாது என்பது குறித்து அங்கே கரிசனை காணப்பட்டது.


நீங்கள் இறுதியாக முன்வைத்த திட்டத்திற்கு இந்திய அரசின் ஒப்புதல் இருந்ததா இல்லையா?


இலங்கை பிரச்சினையில் நான் ஈடுபட்டிருந்த 10 ஆண்டுகாலங்களில் இந்தியாவுக்கு தெரிவிக்காமல் நான் எந்த திட்டத்தையும் முன்னெடுத்ததில்லை. இந்த திட்டத்தை இந்தியா ஏற்றிருக்கும் என்பதிலும் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசும் இருந்திருக்கும் என்பதிலும் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.


இப்படி ஒரு திட்டம் இருந்ததாக நீங்கள் இப்போது கூறும் கருத்துக்கள் உண்மையா என்பதற்கு என்ன ஆதாரம்?


2009 ஆம் ஆண்டில் நடந்த இந்த விடயங்கள், கொழும்பில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தின் தகவல் பரிமாற்றங்கள் மற்றும் அது தொடர்பான மற்ற ராஜீய தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் விகிலீக்ஸில் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் இருக்கும் தகவல்களை நுணுகிப் பார்த்தால் இந்தக் கூற்றுக்கான ஆதாரங்கள் அதில் இருக்கின்றன.


THANX - B B C

மழை பெய்த ராத்திரி - தம்பதி விளையாட்டு சாட் பூட் த்ரீ 143

1.மனைவி மதிக்காததால் வாலிபர் தற்கொலை முயற்சி # எந்த பொண்டாட்டி புருஷனை மதிக்கறாங்க.இதெல்லாம் ஒரு பிரச்சனையா? 



--------------


2. நிழலின் அருமை வெய்யிலில்தான் தெரியும் என்றபழமொழியை உணர்த்திய புரட்சித்தலைவிக்கு நன்றி # மின்சாரம் 



--------------


3. நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டி: விஜயகாந்த் அறிவிப்பு!# நிதானமா நிதானத்தில் இருக்கும்போது எடுத்த முடிவுதானா? 



----------------------


4. ரூபாய் மதிப்பு பலவீனமடைய, டாலர் மதிப்பு உயர்ந்தது! 1$=52.36 # கூட்டுத்தொகை 7 வருது.இந்தியாவுக்கு ஏழரை தான் 




----------------------


5. ஜெயா டிவி மீது ஸ்டாலின் அவதூறு வழக்குப் பதிவு: #அதானே.151 கோடி நில அபகரிப்புன்னா நம்ப முடியல.ரொம்ப கம்மியா இருக்கே



-------------------



Photo: ஒரு விடைபெறுதலில்
விட்டுச்செல்கிறேன்
என்னை
உன்னிடம்...

-ரேவா


6. திமுக ஆட்சியில் சொல்லிட்டுத்தானே கரண்ட் கட் பண்ணாங்க- தேமுதிக # எனக்கு அப்டி செஞ்சு பழக்கம் இல்லை -ஜெ 



--------------


7. ஜட்ஜ் - அந்தப்பொண்ணை கதற கதற கற்பழிச்சியாமே ?



 கைதி - இல்லீங்க்ளே.மவுன விரதம்னு அந்தப்பொண்ணே எழுதிக்காட்டுச்சு 



-------------------


8. இன்ஸ்பெக்டர்.கேங்க் ரேப்னா என்னனே தெரியாது.என் பேரே சோலோ செல்வாதான்.கொள்ளையிலும் ரேப்பிலும் கூட்டு ஆகாது 



----------------


9. ஜட்ஜ் - நீ ரேப் பண்ணுனதை பார்த்த சாட்சிங்க 69 பேர் இருக்காங்க. 


கைதி -அடேங்கப்பா.தியேட்டருக்கு கூட அவ்ளவ் கூட்டம் வர்றதில்லை 



------------------------


10 ஜட்ஜ் - எதுக்காக அந்த பொண்ணை ரேப் பண்ணுனே? 



கைதி - குழந்தை பாக்யமே இல்லைனு புலம்புனாங்க ;-) 



--------------------



Photo: எல்லோருக்கும் ஏதோ ஒன்று 
மிச்சமிருக்கத்தான் செய்கிறது
மழையில் நனையவும்
மழையை நனைக்கவும்.....


11. அரைகுறையா டிரஸ் பண்றதாலதான் ரேப் பெருகுதுன்னா தமிழகத்துல ரேப் % ஏன் கூடிட்டே இருக்கு? 



-----------------


12.  டாக்டர், என் கணவருக்கு  கொழுப்பு ஜாஸ்தியா இருக்கு 


. இருக்காதுங்களே, பொதுவா மேரேஜ் ஆன லேடீஸ்க்கு தான் அப்டி ஆகும்



--------------------


13. ஒரு பொண்ணு பக்காவா பிளான் பண்ணி ஒரு பையனையோ, பல பசங்களையோ ஏமாத்துனா அவ தான் பக்கி # சஹானாவின் டைரியிலிருந்து ;-0



------------------------


14. டியர் டெமேஜர்.ரிசப்ஷனிஸ்ட் கிட்டே நாங்க பேசுனா உங்களுக்கு ஏன் பொசசிவ்னெஸ் வருது?நீங்க பேசுனா நாங்க எரிச்சலை வெளில காட்டிக்கறோமா?



---------------


15. ஹாய் மிஸ்,ஐ ஆம் ஸப்ரிங்க் ப்ரம் டெம்ப்ரவரி லவ் ஆன் யூ.ப்ளீஸ் டோன்ட் லீவ் மீ அலோன்.சோ ஐ ரெக்வஸ்ட் யூ டூ கிவ் மிசான்ஸ டூ லவ் யூ ்




--------------------





16. பெரிய வெங்காய தோசையை விட சின்னவெங்காய தோசைக்கு ருசி அதிகம்.ஆனா அரிய கஷ்டம் சின்ன வெங்காயம்தான் # நீதி - என் மனைவி கெடுபிடி ,மீ எடுபிடி




---------------------


17. லீவ் லெட்டரை தரும்போது முகத்தை சோகமா வெச்சுக்கனும் .லவ் லெட்டர் தரும்போது முகத்தை பாவமா வெச்சுக்கனும் # லெட்டர் டிப்ஸ்



---------------------------


18. அன்பே என் சம்சாரமே காலை வணக்கங்கள்.இரவில் உனக்கு காலை அமுக்கி விட்டதில் என் கையில் சுணக்க்ங்கள்.சமையல் வேலையை நீயே செய்யவும்.மீ லீவ்.




-----------------------


19. ராபர்ட் வதேரா மீதான புகார் பற்றி விசாரணை இல்லை: ப.சிதம்பரம் # ஆமா.விசாரிச்சா உண்மை எல்லாம் வெளில வந்துடும்.கமுக்கமா மேட்டரை அமுக்கவும்



-------------------


20. மிஸ்.இந்தாங்க லவ் லெட்டர். ஹலோ.எனக்குன்னு ஒரு போஸ்ட் பாக்சே வெச்சிருக்கேன் அதுல போட்டுடுங்க



------------------------


.
Vidiyum Endra



21. இன்று - அக்.9 : உலக அஞ்சல் தினம். எனவே ஆபிஸ் ஸ்டெனோ.ரிசப்ஷனிஸ்ட்க்கு லவ் லெட்டர் தர உகந்த நாள்.அடிக்க வந்தாக்கூட இதை சாக்கு சொல்லலாம்




-------------------


22. பதிவுத் துறை வருவாய் ரூ.612 கோடி அதிகரிப்பு: அமைச்சர் பி.வி.ரமணா: # வலைப்பூ பதிவுக்குத்தான் வருவாயே இல்லை




----------------------


23. அரசு அமைப்புகள் எல்லை மீறக்கூடாது-ஜனாதிபதி # அப்புறம் எப்படி சொத்து சேர்ப்பது?மு க கேள்வி




----------------------


24. தி.மு.க., - அ.தி.மு.க., - காங்கிரஸ் நம்பர் ஒன் பிராடுகள் - விஜயகாந்த் # உன் நண்பனை பற்றி குறை கூறு.அவன் உன் குறைகளை எடுத்துரைக்கட்டும்



----------------------


25. துண்டு இலக்கியம்னா டர்க்கி டவல் கட்டிக்கிட்டு பாத்ரூம்ல எழுதுவதா?




-----------------------



Photo: நேற்று ஒரு புகழ் பெற்ற எழுத்தாளரை சந்தித்து என் புத்தகத்தை நேரில் கொடுக்க சென்றிருந்தேன். அதே போல் விருது பெற்ற எழுத்தாளரிடம் அலைபேசியில் என் புத்தகம் பற்றி கதைத்திருந்தேன்.நான் வாசித்த நேசித்த எழுத்தாளருக்கும் நேரில் கண்ட எழுத்தாளருக்கும் வெகு தூரம் உள்ளது. சில நேரம்  படைப்பாளிகளுக்கும் அவர்கள் படைக்கும் படைப்புகளுக்கும் தொடர்பு இல்லையோ என்றும் தோன்றுகின்றது. இதனால் தான் தமிழகத்தில் எழுத்துடன் ஈடுபாடு குறைந்து வருகின்றதோ?



26. டாடி.உனக்குத்தான் கதை சொல்லத்தெரியாதில்ல?


 ஆமா,சோ வாட்?



அம்மா கிட்டே என்ன குசுகுசுனு ரகசியம் பேசறே?



-----------------------


27. டியர் டேமேஜர்.இங்கே செம மழை.நாளை ஆபீ ஸ் வர 1 மணி நேரம் லேட் ஆகும்.ஏன் எதுக்குன்னு எல்லாம் கேட்கமாட்டீங்கனு நம்பறேன் ;-)



-----------------------


28. என் கனவுகளுக்குத் தொந்தரவு தரும் தட்டு முட்டு சாமான் களின் உருட்டல் ஓசை  நீ! -



-------------------


29. பாப்பா.மழை வருது.நீ போய் பாட்டி வீட்ல படுத்துக்கறியா?



ஓக்கேடாடி.வாம்மா போலாம்



 # அவ்வ்வ்



---------------------


30. மழைக்குளிர்க்கு இதமாக பிரம்மச்சாரிகள் சாலை ஓரக்கடைகளின் மிள்காய் பஜ்ஜியையே நம்பி இருக்கிறார்க்ள்


---------------------


31. மழை பெய்த ராத்திரிகளின் ஒரே நட்டம் மொட்டை மாடியில் தூங்க முடியாது என்பதே


-----------------


32. தி.மு.க. வழங்கிய துண்டு பிரசுரம் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது: கருணாநிதி # இன்று முதல் நீவிர் எழுச்சிக்கலைஞர் ஆகுக)





------------------------



Tuesday, October 09, 2012

அம்மா ஒரு கொலை செய்தாள் – அம்பை - சிறுகதை

http://www.panuval.com/image/cache/data/061-800x1200.jpg

அம்மா என்றதும் பளிச் பளிச்சென்று சில நிகழ்ச்சிகள் மட்டுமே நெஞ்சைக்
குத்துகின்றன. அக்கா கல்யாணி அடிக்கடி மயக்கம் போட்டு விழுந்து கொண்டிருந்தாள்.

புரிந்து கொள்ளும் வயதில்லை எனக்கு. நான்கு வயது.


விடிகாலையில் கண் விழிக்கிறேன். ஏதோ தமுக்கு மாதிரி சத்தம் கேட்கிறது. கதவருகே சென்று பார்க்கிறேன். கல்யாணியைப் பலகையில் உட்கார்த்தி இருக்கிறார்கள். எதிரே எவனோ கொத்து இலையோட நிற்கிறான். ஆ ஊ வென்று சில மாதங்கள் மட்டுமே சிரிப்புக் காட்டிய தம்பிப் பாப்பா நான் இருந்த அறையிலேயே தொட்டிலில் இருக்கிறான்.


“நீரஜாட்சீ, போய்க் கொண்டு வா” என்கிறார்கள் யாரோ.


நான் அம்மாவைப் பார்க்கிறேன்.


கருநீலப் புடவை நினைவில் இருக்கிறது. தலைமயிரை முடிந்து கொண்டிருக்கிறாள். என்
அறையை ஒட்டிய சின்ன அறையில் அம்மா நுழைகிறாள். தலைப்பை நீக்குகிறாள். கையில் இருந்த சிறு கிண்ணியில் மெல்ல தன் மார்பிலிருந்து பால் எடுக்கிறாள். கண்களில் நீர் கொட்டுகிறது.



விடிகாலை இருட்டோடு புதைக்கப்பட்டிருக்கும் தவலைக்கு அடியில் விறகு வைத்து
வெந்நீர் காய்ச்ச அம்மா எழுந்திருக்கிறாள் தினமும்.
ஒருநாள் நான் அவளைப் பார்க்கிறேன். அம்மாவின் தலைமயிர் முடிச்சவிழ்ந்து
தொங்குகிறது. குந்தி உட்கார்ந்திருக்கிறாள் அம்மா. கூந்தல் பாதி கன்னத்திலும்
பாதி காதின் மேலும் விரிந்து கிடக்கிறது. அடுப்பு பற்றிக் கொண்டதும் குனிந்து
பார்த்த அம்மாவின் பாதி முகத்தில் தீயின் செம்மை வீசுகிறது. அன்று அம்மா
சிவப்புப் புடவை வேறு உடுத்தியிருக்கிறாள். உற்றுப் பார்த்துக் கொண்டே
இருக்கையில் ‘டக்’கென்று அவள் எழுந்து நிற்கிறாள். கூந்தல் முட்டுவரை
தொங்குகிறது.



விலகியிருந்த தலைப்பினூடே ஊக்குகள் அவிழ்ந்த ரவிக்கை அடியே பச்சை நரம்போடிய வெளேரென்ற மார்பகங்கள் தெரிகின்றன. எங்கிருந்தோ பறந்து வந்து அங்கே நின்ற அக்கினியின் பெண்ணாய் அவள் தோன்றுகிறாள். அவள் அம்மாவா? அம்மா தானா?



“காளி காளி மகா காளி பத்ர காளி நமோஸ்துதே” என்ற ஸ்லோகம் ஏன் நினைவிற்கு
வருகிறது?
“அம்மா..”
அம்மா தலையைத் திருப்பிப் பார்க்கிறாள்.
“இங்கே என்ன செய்யறாயடீ?”
பேச முடியவில்லை. உடம்பு வியர்க்கிறது.
வீட்டில் ஹோமம் நடக்கிறது. அம்மாவின் உதட்டின் சிவப்பாலோ, குங்குமத்தின்
தீட்சண்யத்தாலோ கொழுந்து விட்டெரியும் ஜ்வாலையின் பிம்பம் அவளாகப் படுகிறது.
“அக்னியே ஸ்வாஆஆஹா..” என்று ஸ்வாஹாவை நீட்டி முழக்கி நெருப்பில் நெய்யை
ஊற்றுகிறார்கள். அந்த “ஸ்வாஹாஆ..” வின்போது பார்வை நெருப்பின் மீதும் அம்மாவின் மீதும் போகிறது.



எண்ணை தேய்த்துக் குளிப்பாட்டுகிறாள் அம்மா. புடவையைத் தூக்கிச்
செருகியிருக்கிறாள். வெளுப்பாய், வழவழவென்று துடை தெரிகிறது. குனிந்து
நிமிரும்போது பச்சை நரம்போடுகிறது.
“அம்மா நீ மாத்திரம் ஏம்மா இவ்வளவு வெளுப்பு? நான் ஏம்மா கருப்பு?”
சிரிப்பு.
“போடி உன் அழகு யாருக்கு வரும்?”
நிகழ்ச்சிகளில் ஒரு சம்பந்தமுமில்லை. அம்மா தான் அவற்றின் ராணி. அசுத்தங்களை
எரித்துச் சுத்திகரிக்கும் நெருப்பு அவள். ஒரு சிரிப்பில் மனத்தில் கோடானுகோடி
அழகுகளைத் தோரணமாட வைப்பவள் அவள். சிருஷ்டி கர்த்தா. அவள் மடியில் தலை வைத்துப் படுக்கும் போது நீண்ட மெல்லிய தண்ணென்ற விரல்களால் தடவி, “உனக்கு டான்ஸ் கத்துத் தரப் போறென். நல்ல வாகான உடம்பு” என்றோ, “என்ன அடர்த்தியடி மயிர்” என்றோ சர்வ சாதாரணமான ஒன்றைத் தான் சொல்வாள். ஆனால் மனத்தில் சில்லென்று எதுவோ மலரும்.



அம்மாவைப் பற்றிய இத்தகைய உணர்வுகளை அம்மாவே ஊட்டினாளா, நானே நினைத்தேனா தெரியவில்லை. என்னுள் பல அழகுகளுக்கு விதை ஊன்றியபோது தன்னுள் அவள் எதை ஸ்தாபித்துக் கொண்டாளோ தெரியவில்லை.



அப்போது பதிமூன்று வயது. பாவாடைகள் குட்டையாகப் போக ஆரம்பித்து விட்டன. அம்மா எல்லாவற்றையும் நீளமாக்குகிறாள்.
அம்மா மடியில் படுக்கும் மாலை வேளை ஒன்றில் எங்கோ படித்த வரிகள் திடீரென்று நினைவுவர அம்மாவைக் கேட்கிறேன்.
“அம்மா பருவம்னா என்னம்மா?”
மெளனம்.
நீண்டநேர மெளனம்.
திடீரென்று சொல்கிறாள்.



“நீ இப்படியே இருடீம்மா பாவாடைய அலைய விட்டுண்டு ஓடி ஆடிண்டு…”
சித்தி பெண் ராதுவைப் பெண் பார்க்க வருகிறார்களாம். அம்மா போய் விடுகிறாள்
அங்கே. அந்த முக்கியமான நாளில் அம்மா இல்லை. கல்யாணி தான் தீபாவளி அன்று
எண்ணெய் தேய்த்துத் தலை மயிரை அலசி விடுகிறாள். குளியலறையின் ஜன்னல் வழியாக இருள் கலையாத வானம் தெரிகிறது.
“கல்லுஸ்.. ரொம்ப சீக்கிரம் எழுப்பிட்டேடீ, பட்டாசு சத்தமே கேக்கலயே இன்னும்”
“உனக்கு எண்ணை தேய்ச்சுட்டு நானும் தேய்ச்சுக்க வேண்டாமா? வயசு பதிமூணு ஆறது.
எண்ணை தேய்ச்சுக்க வராது உனக்கு. குனிடீ”
கல்யாணிக்கு பொறுமை கிடையாது. தேங்காய் நாரை உரிப்பது போல் தலையை வலிக்க வலிக்கத் தேய்க்கிறாள் கல்யாணி.
கத்தரிப்பூ ஸாடின் துணியில் அம்மா எனக்குப் பாவாடை தைத்திருக்கிறாள் அந்த
தீபாவளிக்கு. வழுக்கிக் கொண்டு தையல் மிஷினில் ஓடும்போதே மனம் ஆசைப்பட்டது.
அந்த முறை அளவு எடுத்து பாவாடை தைத்தாள் அம்மா.



“அளவு எடுக்கணும் வாடீ.. ஒசந்து போய்ட்டே நீ” அளவு எடுத்துவிட்டு நிமிர்கிறாள்.
“ரெண்டு இஞ்ச் பெரிசாய்டுத்து இந்தப் பொண்ணு”
கத்தரிப்பூ ஸாடின் பாவாடை மற்ற பாவாடைகள் மாதிரி குட்டையாக இருக்காது.
வழுக்கிக் கொண்டு தரையை எட்டும்.
உலுக்கென்று எழுப்பி நிற்க வைத்துத் தலையத் துவட்டுகிறாள் கல்யாணி. ஷிம்மீஸை
மாட்டிக் கொண்டு பூஜை அறைக்கு ஓட்டம். பலகை மேல் அடுக்கியிருந்த புதுத்
துணிகளில் அப்பா என்னுடையதைத் தருகிறார்.



“இந்தாடி கறுப்பி…” அப்பா அப்படித் தான் கூப்பிடுவார்.
அப்பா அப்படிச் சொல்லும் போது சில சமயம் கூடத்தில் ஹா வென்று தொங்கும் கண்ணாடி முன் நின்றுகொண்டு பார்ப்பேன். அம்மா, காதில் “எத்தனை அழகு நீ” என்று
கிசுகிசுப்பதைப் போல் இருக்கும்.
சரளா வீட்டில் உள்ள கண்ணாடிப் பெட்டியில் உள்ள மீன் மாதிரி வழுக்கிக் கொண்டு
போகிறது பாவாடை. வெல்வெட் சட்டை. பொட்டு இட்டுக் கொண்டு அப்பா முன் போகிறேன்.



“அட பரவாயில்லையே!” என்கிறார் அப்பா.
பட்டாஸை எடுத்து முன் அறையில் வைத்து விட்டு சண்பக மரத்தில் ஏற ஓடுகிறேன்.
நித்தியம் காலையில் சண்பக மரத்தில் ஏறிப் பூப்பறிப்பது ஒரு வேலை. பூக்குடலையில் பூ நிரப்பி அம்மாவிடம் தந்தால், “கொள்ளை பூ” என்று கண்களை விரித்து அம்மா தன் விரல்களை அதில் அளைய விடுவாள். விரல்களே தெரியாது.



ஸாடின் பாவாடை வழுக்குகிறது. உச்சாணிக் கொம்பில் ஏற முடியவில்லை. இருட்டு வேறு. இறங்கும் தறுவாயில் படேர் என்று வெடிக்கிறது யார் வீட்டிலோ ஒரு பட்டாஸ். உடம்பு நடுங்க மரத்திலிருந்து ஒரு குதி. வீட்டினுள் ஓட்டம். மூச்சு வாங்குகிறது.



ஆசுவாசப்படுத்திக் கொண்டு முன் அறைக்கு ஓடி என் பங்குப் பட்டாஸை வெடிக்கிறேன். அப்புறம் தான் பூக்குடலை நினைவு வருகிறது. விடிந்திருக்கிறது. பாவாடையைத் தூக்கிப் பிடித்தவாறே மரத்தினடியில் கிடந்த பூக்குடலையை எடுக்கக் குனிகிறேன். பூக்கள் சில சிதறியிருக்கின்றன. நன்றாகக் குனிந்து எடுக்கும்போது பாவாடை தரையில் விரிகிறது. புதுப்பாவா
டையில் அங்கும் இங்கும் கறைகள். மரம் ஏறியதாலோ?



“கல்லூஸ்..” என்று அழைத்தவாறே உள்ளே வந்து “பாவாடை எல்லாம்
அழுக்காக்கியுட்டேண்டி. அம்மா வைவாளா?” என்று கேட்டுக் கொண்டு பூக்குடலையுடன்
அவள் முன் நிற்கிறேன். கல்யாணி ஒரு நிமிடம் வெறிக்கப் பார்த்துவிட்டு “அப்பா”
என்று கூவிக் கொண்டே போகிறாள்.
கல்யாணியின் பார்வை, பூக்குடலையைக் கூட வாங்காமல் அவள் உள்ளே ஓடியது எல்லாமாக மனத்தில் கம்பளிப் பூச்சி நெளிகிறது. ஸாடின் பாவாடையைப் பார்க்கிறேன். வெல்வெட் சட்டையைத் தடவிப் பார்க்கிறேன். ஒன்றும் ஆகவில்லையே?



பகவானே, எனக்கு ஒன்றும் ஆகவில்லையே? என்னை நானே கேட்டுக் கொள்ளும் போதே தெரிகிறது ஏதோ ஆகிவிட்டதென்று. எங்கும் பட்டாஸ் ஒலிகள் கேட்டவாறிருக்கின்றன. கையில் பிடித்த பூக்குடலையுடன் வேகமாக மூச்சு விட்டவாறு உடம்பு பதற உதடுகள் துடிக்க நிற்கிறேன். ஹோ வென்று அழுகை வருகிறது.



அம்மாவைப் பார்க்க வேண்டும். சின்னாளப்பட்டு உடுத்திய தோளில் தலையை அழுத்திப் பதித்துக் கொள்ள வேண்டும். “பயமா இருக்கே” என்று வெட்கமில்லாமல் சொல்லி அழ வேண்டும். அம்மா தலையைத் தடவித் தருவாள். என்னவோ ஆகிவிட்டதே பயங்கரமாக…
முறுக்குப் பிழிய வரும் மொட்டைப் பாட்டியை எங்கிருந்தோ கூட்டிக் கொண்டு
வருகிறாள் கல்யாணி. பாட்டி அருகில் வந்தாள்.
“என்னடீம்மா அழறே? என்னாய்டுத்து இப்போ? லோகத்துலே இல்லாதது ஆய்டுத்தா?”
பாட்டி சொன்னது ஒன்றும் புரியவில்லை. என் உணர்வு தான் எதையோ புரிந்து கொண்டு பயத்தில் சில்லிட்டதே ஒழிய அறிவுக்கு ஒன்றும் எட்டவில்லை. மனத்தின்
ஆழத்திலிருந்து ஆறாத தாகமாய்க் கிளம்பிய ஒரே ஒரு அழைப்பு… “அம்மா”..
ஐந்து வயதில் ஒருமுறை காணாமல் போய் விட்டதை மீண்டும் நினைக்கிறேன். பெரிய பூங்கா ஒன்றில் நீள் இருள் கவிவது தெரியாமல் நடக்கிறேன். திடீரென்று இருளும், மரங்களும், ஓசைகளும், அமைதியும் மனத்தில் பயத்தை உண்டாக்குகின்றன. அப்பா தான் தேடிப் பிடிக்கிறார். ஆனால் அம்மாவைப் பார்த்ததும் தான் அழுகை பீறிடுகிறது.



அம்மா பக்கத்தில் போட்டுக் கொள்கிறாள். தடவித் தருகிறாள். :ஒன்னும் ஆகலியே.

எல்லம் சரியாப் போயிடுத்தே” என்று மெல்லப் பேசுகிறாள். சிவந்த உதடுகள்
நெருப்புக் கீற்றாய் ஜ்வலிக்க தன் முகத்தை என் முகத்தின் மீது வைக்கிறாள்.
இப்போதும் எங்கேயோ காணாமல் போய் விட்டதைப் போல அடித்துக் கொள்கிறது. கீழே உட்கார்ந்து முட்டங்காலில் தலை பதித்து அழுகிறேன். எதுவோ முடிந்து விட்டது போல் தோன்றுகிறது. தியேட்டரில் ‘சுபம்’ காட்டிய பிறகு எழுந்து வெளியே வருவதைப் போல், எதையோ விட்டுவிட்டு வந்தாற் போல் தோன்றுகிறது. அந்தச் சமயத்தில் உலக
சரித்திரத்தில் எனக்கு ஒருத்திக்கு மட்டுமே அந்த துக்கம் சம்பவித்தது போல்
படுகிறது. அத்தனை துக்கங்களையும் வெல்வெட் சட்டை அணிந்த மெல்லிய தோள்கள் மேல் சுமையாய்த் தாங்குவது போல் அழுகிறேன்.



இருவருமாக இருந்த மாலை வேளைகளில் அம்மா இது பற்றி ஏன் சொல்லவில்லை என்று நினைக்கிறேன். மனத்தை வியாபித்த உணர்வு பயம் மட்டுமே. புதுச் சூழ்நிலையில் புது மனிதர்களிடையே உண்டாகும் சாதாரண பயம் அல்ல. பாம்பைக் கண்டு அலறும் மிரளலில் அரண்டு போய் வாயடைத்துப் போகும் பதைப்பு. மன மூலைகளிலெல்லாம் பயம் சிலந்தி வலைகளாகத் தொங்குகிறது.



வெளுத்த உதடுகள் பிளந்து கிடக்கப் பார்த்த உருவம் மனத்தில் தோன்றுகிறது. மண்டை கல்லில் மோதிவிட்டது. என் முன்னே மென் சிவப்பாய் வழுக்கையாய் நடந்து கொண்டிருந்த தலை திடீரென்று குகை வாயாய்த் திறந்து கரும்சிவப்பாய் ரத்தம் பீறிட்டு வந்தது. நிமிடத்தில் ரத்தம் தலையில் கொட்டியது. ரத்தத்தையே வெறித்துப்
பார்த்தேன். சிவப்பு எங்கும் படந்து கண்களிலேயே பாய்ந்து ஓடுவது போல்
தோன்றியது. மனம் மீண்டும் மீண்டும் அரற்றியது. “ஐயோ எத்தனை ரத்தம், எத்தனை
ரத்தம்” வாயில் ஓசையே பிறக்கவில்லை. ரத்தப் படுக்கை. கிழவன் வாய் திறந்தது,

கண்கள் வெறித்துப் போனது, நெஞ்சில் துருத்திக் கொண்டு நிற்கிறது.




ரத்தம் எத்தனை பயங்கரமானது… உதடுகள் வெளூக்க.. கை கால்கள் அசைவற்றுப் போக..
அம்மா தேவை. இருட்டைக் கண்டு பயந்ததும் அணைத்து ஆறுதல் சொல்வது போல், இந்த பயத்திலிருந்து மீள அம்மா வேண்டும் என்று மனம் ஏங்குகிறது. அம்மா ஜில்லென்று கரத்தைத் தோளில் வைத்து, “இதுவும் ஒரு அழகுதான்” என்கக் கூடாதா?



“எழுந்திரேண்டீ ப்ளீஸ்.. எத்தனை நாழிடீ அழுவாய்?” என்னுடன் கூட உட்கார்ந்து
தானும் ஒரு குரல் அழுத கல்யாணி கெஞ்சுகிறாள்.
“அம்மா..”
“அம்மாதான் அடுத்த வாரம் வராளே. இப்போ தான் இதைப் பற்றி லெட்டர் போட்டேன்.
ராதுவுக்குப் பெண் பார்க்கிறது எல்லாம் முடிஞ்சப்புறம் வருவா. இப்போ நீ
எழுந்திருடீ. சுத்த தலைவேதனை.” கல்யாணிக்கு கோபம் வர ஆரம்பிக்கிறது.
“எனக்கு என்னடீ ஆய்டுத்து?”
“உன் தலை மண்டை ஆய்டுத்து, எத்தனை தடவை சொல்லறது?
“இனிமே எல்லாம் நான் மரத்துலே ஏறக் கூடாதா?”
‘நறுக்’ என்று குட்டுகிறாள் கல்யாணி.
“தடிச்சி! அரை மணியா எழுந்திரு, பாவாடையை மாத்தறேன்னு கெஞ்சறேன். நீ கேள்வி வேற கேக்கறியா? அப்பா இவள் ரொம்பப் படுத்தறாப்பா” என்று அப்பாவுக்கு குரல்
கொடுக்கிறாள்.



அப்பா வந்து “அசட்டுத்தனம் பண்ணக் கூடாது. கல்யாணி சொல்றபடி கேக்கனும்”
என்கிறார்.
முறுக்குப் பாட்டி வேறு, “என்ன அடம்பிடிக்கிறாள்? எல்லாருக்கும் வர தலைவிதி
தானே” என்கிறாள், அப்பா போன பிறகு.
ஏழுநாட்கள். அம்மா வர இன்னும் ஏழு நாட்கள்.ராதுவைப் பெண் பார்த்த பிறகு.
இருட்டில் தடுமாறுவதைப் போல் ஏழு நாட்கள். அடுத்தகத்து மாமி, எதிர்வீட்டு மாமி
எல்லோரும் வருகிறார்கள் ஒருநாள்.



“தாவணி போடலயாடி கல்யாணி?”
“எல்லாம் அம்மா வந்தப்புறம் தான் மாமி. இது அடங்காப் பிடாரி. அம்மா சொன்னால்
தான் கேட்கும்”
“இனிமே எல்லாம் சரியாப் போய்டுவா. இனிமே அடக்க ஒடுக்கம் வந்துடும்”
“ஏன்?” இனிமேல் என்ன ஆகிவிடும்?
தாவணி ஏன் போட்டுக் கொள்ள வேண்டும்? அம்மா சொன்னாளே.. ‘இப்டியே இருடீம்மா..
பாவாடைய அலைய விட்டுண்டு..’ நான் ஏன் மாற வேண்டும்? யாருமே விளக்குவதில்லை.
பொம்மை போல் என்னை உட்கார்த்தி வைத்துப் பேசுகிறார்கள். அப்பா வந்தால்
தலைப்பைப் போர்த்திக் கொண்டு மெதுவாகப் பேசுகிறார்கள்.
ஐந்தாம் நாள் “நீயே எண்ணெய் தேய்ச்சிக்கோடி” என்னிடம் சுடச் சுட எண்ணையைக்
கிண்ணியில் ஊற்றிக் கொடுக்கிறாள் கல்யாணி.



இடுப்பின் கீழ் நீண்ட கூந்தலுடன் அழுதவாறே போராடிவிட்டு ஷிம்மீஸுடன் கூடத்துக்
கண்ணாடி முன் நிற்கிறேன்.
“இனிமே பாத்ரூமிலேயே டிரெஸ் பண்ணிக்கனும் தெரிஞ்சுதா” என்கிறார் அப்பா.
அப்பா போன பிறகு கதவைச் சாத்துகிறேன். ஷிம்மீஸைக் கழற்றிப் போடுகிறேன். கறுப்பு உடம்பை கண்ணாடி பிரதிபலிக்கிறது. முகத்தை விடச் சற்றே நிறம் மட்டமான தோள்கள், கைகள், மார்பு, இடை, மென்மையான துடைகளின் மேல் கை ஓடுகிறது. நான் அதே பெண் இல்லையா? அம்மா என்ன சொல்லப் போகிறாள்?



ஸ்கூல் யூனிபார்ம் போட்டுக் கொள்கிறேன். கதவைத் திறந்ததும் கல்யாணி வருகிறாள்.
“ஸ்கூல்லே ஏன் வரல்லேன்னு கேட்டா என்னடீ சொல்வே?”
கல்யாணியை வெறித்துப் பார்க்கிறேன். கூண்டிலிருந்து விடுபட்ட பட்சி போல்
குதூகலத்துடன் ஸ்கூலுக்கு கிளம்ம்பிக் கொண்டிருந்த வேகம் குறைகிறது.
“ஒன்னும் சொல்லவேண்டாம். சும்மா இரு”
அன்று கேம்ஸ் பீரியடில் விளையாடவில்லை. அகன்ற மரம் ஒன்றின் பின் மறைந்து
கொள்கிறேன். முன்பு ஒரு முறை அப்படி விளையாடாமல் இருந்திருக்கிறேன். மறுநாள்
காலை மிஸ். லீலா மேனன் வகுப்பில் “நேற்று விளையாடாத முட்டாள்கள் யார்?”

என்றாள். நான் எழுந்திருக்கவில்லை.
“நீ ஏன் எழுந்திருக்கவில்லை?” என்றாள்.
“நான் முட்டாள் இல்லையே மிஸ்” என்றேன். ப்ரோக்ரஸ் ரிப்போர்ட்டில் எழுதி
விட்டாள் இம்பர்டினண்ட் என்று.



அன்று மிஸ்.லீலா மேனன் திட்டு பற்றிக் கூட மனம் பயப்படவில்லை. இப்போது எனக்கு ஆகியிருக்கும் ஒன்றைவிட வேறு எதுவும் எப்போதும் என்னை பாதிக்காது என்று படுகிறது. மரத்தடியே உட்கார்ந்து வழக்கம் போல எனிட் ப்ளைடன் படிப்பதில்லை. கீழே வெட்டப்பட்டிருந்த குழியில் உதிர்ந்தவாறிருக்கும் பழுத்த இலைகளிடம் நான் கேட்கிறேன். “எனக்கு என்ன தான் ஆகித் தொலைந்து விட்டது?”



கூண்டிலிருக்கும் கைதி நீதிபதியின் வாயைப் பார்ப்பது போல் அம்மாவின் சொல்
ஒன்றுக்காக மட்டுமே மனம் எதிர்பார்க்கிறது. கண்களைத் தாழ்த்தி என்னைப்
பார்த்தவாறே, “உனக்கு ஆகியிருக்கும் இதுவும் அழகு தான்” என்பாளா அம்மா?
பயமுறுத்திய முறுக்குப் பாட்டி, கல்யாணி எல்லோரையும் புன்னகையின் ஒரு
தீப்பொறியில் அவள் ஒதுக்கித் தள்ளி விடுவாள். அம்மா வித்தியாசமானவள். அவள்
நிற்கும் இடத்தில் வேண்டாதவை அழிந்து வெறும் அழகு மட்டுமே ஆட்சி செலுத்தும்.
அவளுக்கு எல்லாமே அழகு தான்.



அம்மா ரொம்பத் தேவையாக இருக்கிறாள். ஏதோ ஒன்று விளக்கப்பட வேண்டும். கத்தரிப்பூ ஸாடின் பாவாடையை நினைத்தாலே உடம்பு வியர்த்துப் போய் நடுங்குகிறதே. நாக்கு தடித்துப் போய் மரக்கட்டையாய் வாயில் லொட்டென்று படுத்து விடுகிறதே. திடீரென்று இருட்டு கவிந்து கொள்கிற மாதிரியும் திரும்பிப் பார்ப்பதற்குள் ‘ணங்’கென்ற சத்தமும், ரத்தப் பெருக்கும் நீண்டு கட்டையாய்ப் போன உடலும் அந்த இருட்டில் தோன்றுவது போல இருக்கிறதே, அதை மென்மையான வார்த்தைகளால் யாராவது விளக்க வேண்டும்.
நான் யாருமே இல்லாமல் இருப்பது போல் உணர்கிறேன். தோட்டக்காரன் எழுப்பியபின்
மெல்ல வீட்டுக்குப் போகிறேன்.
“ஏண்டீ இவ்ளோ லேட்? எங்கே போனே?”
“எங்கேயும் போகல.. மரத்தடியிலே உட்கார்ந்திருந்தேன்”
“தனியாவா?”
“உம்”
“ஏண்டீ நீ என்ன இன்னும் சின்னப் பொண்ணா? ஏதாவது ஆகிவைத்தால்?”
ஸ்கூல் பையை விட்டெறிகிறேன். முகம் எல்லாம் சூடேறுகிறது. செவிகளைக் கையால் மூடிக் கொண்டு வீறிட்டுக் கத்துகிறேன்.



“நான் அப்படித்தஅன் உட்காருவேன். எனக்கு ஒன்னும் ஆகலை”
ஒவ்வொரு வார்த்தையையும் நீட்டி, அழுத்தி வெறிக்கத்தலாய்க் கத்துகிறேன்.
அப்பாவும் கல்யாணியும் அதிர்ந்து போய் நிற்கின்றனர். நான் கோபித்துக் கொண்டு
மொட்டை மாடிக்குப் போய் உட்காருகிறேன். சண்பக மரத்தின் வாசனையோடு அங்கேயே இருக்கலாம். கல்யாணியும் அப்பாவும் இங்கே வரக் கூடாது. நானும் சண்பக மர வாசனையும் மட்டுமே. ஒன்றும் பேசாத, தொடாத அந்த வாசனை வீட்டு மனிதர்களை விட நெருங்கிய ஒன்றாகப் படுகிறது. இவர்கள் பேசாமல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அம்மா மாதிரி விழிகளை விரித்துச் சிரிப்பு.



அம்மா அப்படி பார்த்தால் நெஞ்சினுள் ஏதோ செய்யும். வாய்விட்டு சிரிக்கத்
தோன்றும். பாடத் தோன்றும். அம்மா சிருஷ்டிப்பவள். ஆனந்தத்தை, உத்ஸாகத்தை, அழகை எல்லாம் தலையைத் திருப்பி ஒரு புன்னகையால் ஜாலம் செய்து வரவழைப்பவள்.
கல்யாணி மேலே வருகிறாள்.




“சாப்பிட வாடீம்மா சின்ன ராணி, அம்மா உன்னைச் செல்லம் கொடுத்து குட்டிச்
சுவராக்கிட்டா”
அலட்சியமாக உதட்டைப் பிதுக்கியவாறே எழுந்து கொள்கிறேன்.
மறுநாள் காலை அம்மா வருகிறாள். டாக்ஸியின் கதவைத் திறந்து கரும்பச்சைப்
பட்டுபுடவை கசங்கியிருக்க, அம்மா வீட்டிற்குள் வருகிறாள்.



“என்ன ஆச்சு?” என்கிறார் அப்பா.
“பொண்ணு கறுப்பாம். வேண்டாம்னுட்டான் கடங்காரன்”
“உன் தங்கை என்ன சொல்றா”
“வருத்தப்படறா பாவம்”
“நமக்கும் ஒரு கறுப்புப் பொண்ணு உண்டு”
மொட்டென்று அம்மா முன் போய் நிற்கிறேன். கல்யாணி லெட்டரில் எழுதியதை விட
விளக்கமாய் நானே சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. மெல்ல அவள் கழுத்துப்
பதிவில் உதடுகள் நடுங்க மென்குரலில் எல்லாவற்றையும் அரற்ற வேண்டும் போல்
படுகிறது. நெஞ்சில் நெளியும் பயத்தைக் கூற வேண்டும் என்று அடித்துக் கொள்கிறது.
ஏதோ மர்மமான ஒன்றை – இரவு படுத்துக் கொண்டதும் தொண்டையை அடைத்துக் கொள்ள வைக்கும் உணர்வை, என் உடம்பே எனக்கு மாறுதலாகப் படும் தவிப்பை – அம்மா விளக்கப் போகிறாள் மெல்ல என்று அவள் முகத்தையே பார்க்கிறேன். 


 வாழைத்தண்டு போல் நீண்ட கரங்களால் அவள் என்னை அணைக்கப் போகிறாள். நான் அழப் போகிறேன் உரக்க. அம்மாவின் கூந்தலில் விரல்களைத் துளைத்துப் பெருத்த கேவல்களுடன் அழப் போகிறேன்.


அம்மா என்னைப் பார்க்கிறாள். நான் ஒரு கணம் அவள் கண்முன் ராதுவாய் மாறுகிறேனா என்று தெரியவில்லை.
“உனக்கு இந்த இழவுக்கு என்னடீ அவசரம்? இதுவேற இனிமே ஒரு பாரம்” சுளீரென்று
கேள்வி.
யாரைக் குற்றம் சாட்டுகிறாள்?



ஒலியில்லாக் கேவல்கள் நெஞ்சை முட்டுகின்றன.
அம்மாவின் உதடுகளும், நாசியும், நெற்றிக் குங்குமமும், மூக்குப் பொட்டும்,
கண்களும் ரத்த நிற ஜ்வாலையை உமிழ்வது போல் தோன்றுகிறது. அந்த நெருப்பில் அவள் மேல் போர்த்தியிருந்த தேவ ஸ்வரூபம் அவிழ்ந்து விழ நிர்வாணமான வெறும் மனித அம்மாவாய் அவள் படுகிறாள்.



 அந்த ஈரமில்லாச் சொற்கள் பட்டாக் கத்தியாய் எழுந்து முன்பு முளைவிட்டிருந்த அத்தனை அழகுகளையும் குருட்டுத் தனமாக ஹதம் செய்கிறது. தீராத பயங்கள் கரும் சித்திரங்களாய் நெஞ்சில் ஒட்டிக் கொள்கின்றன.



அக்னியே ஸ்வாஆஆஹா… அசுத்தங்கள் மட்டும் எரிக்கப்படவில்லை. மொட்டுக்களும்
மலர்களும் கூட கருகிப் போயின.



******
நன்றி: ‘கசடதபற’ ( டிசம்பர் 1971), ஜெயமோகன்,தமிழ்தொகுப்புகள்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSCQ9B4UklJ4eXfSsUFFLxV6Fb2FIPn2pF6Hkw4MFg6xo_R4R6sxWCTrQoUSyY0ftXgilUJPcin2Yrfp84ai3E3pa0KI5-gKi34HPjpaRq0Zjn7nQ4ooDmX_hpgy_ePvxu8qi1Gm6CHHg/s1600/ambai.jpg