Thursday, July 12, 2012

பிரம்ம ராட்சஸ் -புதுமைப்பித்தன் -த்ரில்லர் சிறுகதை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilotrbPqGOMBTexEGCdES87YARl6L2EdOo61vyDcVYJ3GGB-_XF7135e2JBtUFhioTnhyphenhypheniIKYvk46emmgvS76ZG2qt8vEEQZfQaVpFHaRZDkGm8LlEUzQVhYTRO12KoPuDEbXrmvPwYGQ/s1600/mahesh.jpg 

நித்தியத்துவத்திற்கு ஆசைப்பட்டு, இடர்ப்பட்டு அழிவுற்றவர்களின் கடைசி எச்சரிக்கையாக இருந்தது அவன் கதை.

அவன் பொன்னை விரும்பவில்லை. பொருளை விரும்பவில்லை. போகத்தை விரும்பவில்லை. மனக் கோடியில் உருவம் பெறாது வைகறைபோல் எழும் ஆசை எண்ணங்களைத் துருவியறியவே ஆசைப்பட்டான். மரணத்தால் முற்றுப்புள்ளி பெறாது, ஆராய்ச்சியின் நுனிக் கொழுந்து வளர வேண்டுமென்ற நினைப்பினால் அவன் ஏற்றுக் கொண்ட சிலுவை அது. அன்று முதல் – ஆம், அது நடந்து வெகுகாலமாகிவிட்டது – இன்றுவரை, ஆசைகள் உந்த, அழிவு அவனைக் கைவிட, மரணம் என்ற விழிப்பற்ற ஒரு சொப்பனாவஸ்தை போல மூல காரணங்களாலும் நியதிகளாலும் எற்றுண்டு, ஜடத்திற்கும் அதற்கு வேறான பொருளுக்கும் உண்டான இடைவெளியில் அவன் அலைந்து திரிந்தான்.

ஆசை அவியவில்லை; ஆராய்ச்சி அவிந்து மடிந்து, நியதியையிழந்து, விபரீதத்தின் தீவிர கதியில் சென்றது. அவன் இப்பொழுது வேண்டுவது முன்பு விரும்பித் துருவிய இடைவெளி ஆராய்ச்சியன்று; சாதாரணமான மரணம். உடல் இருந்தால் அல்லவா மரணம் கிட்டும்! ஜடமற்ற இத்திரிசங்கு நிலையில் சமூகத்தில் அடிபட்டு நசுங்கியவர்கள் ஆசைப்படும் மோட்ச சாம்ராஜ்யம் போல மரண லட்சியம் அவனுக்கு நெடுந் தூரமாயிற்று.


அவன் அப்பொழுது நின்ற இடம், அப்புறத்து அண்டமன்று; கிரக கோளங்கள் சுழலும் வெளியன்று; அது பூலோகந்தான். அவனுடைய வாசஸ்தலமாயிருந்த குகையின் பலிபீடத்தில் அவனுடைய ஆசையின் நிலைக்களமான பழைய தேகம், துகள்களாகச் சிதைவுபட்டுக் கிடந்தது. ஜடத்திலே வெறும் ஆகர்ஷண சக்திபோல், சூட்சுமமான உருவற்ற கம்பிபோல், பார்வைக்குத் தென்படாத ஒளிரேகைபோல் அவ்வுடல் அவனுக்குக் காட்சியளித்து வந்தது. உலகத்தைப் பதனமாகப் பாதுகாக்க அமைந்த ஏழு சஞ்சி போன்ற லோகங்களிலே எங்கு வேண்டுமானாலும் அவன் அலையலாம். ஆனால், அவற்றைத் தாண்டி இடைவெளியிலே செல்ல அவனுக்குச் சக்தியில்லை, நியதியில்லை.


அவன் அப்பொழுது நின்ற இடம் ஜடத்தின் சூட்சும ரூபங்களான வாயுக்களும் செல்லக்கூடாத, வெறும் சக்திகளே முட்டி மோதிச் சஞ்சரிக்கின்ற உலக கோளத்தின் மிகவும் சூட்சுமமான ஏழாவது சஞ்சி.


அவ்விடத்திலே அவனுக்கு வெகு நேரம் நிற்க முடியாது. ஆனால், சூட்சும உடலின் இயற்கையினால் அடிக்கடி அங்கு உந்தித் தள்ளப்படுவான். சக்திகள், பிரளயம் போலக் கோஷித்து, உருண்டு புரண்டு, சிறிய வித்துப்போல் நடுமையத்தில் கிடக்கும் ஜடத்திற்கு உயிர் அணுக்களை மிகுந்த வேகத்தில் தள்ளும். அவ்விடத்திலே, சக்தி அலைகள், நினைவு பிறந்து மடியும் கால எல்லைக்குள், இடைவழித் தேகத்தைக் குழப்பி நசுக்கி, புதிய சக்திகளை அவனது சூட்சும தேகத்தில் ஊட்டி உள்ளே பூமியை நோக்கித் தள்ளிவிடும். புதிய சக்தியூட்டப்பட்ட அவனது சரீரம் ஜட தாதுக்கள் பாசிபோல் உற்பத்தியாகி உரம்பெற்று, கீழ் நோக்கியிறங்கும் இடைச் சஞ்சிகளில் நின்று, செக்கச்செவேலென்று எங்கும் பரந்து, நினைவின் எல்லைக் கோடாகக் கிடக்கும் கிரக கோளங்களின் வானப் பாதைகளை நோக்கும்.



அவனது உருவம் சூட்சும உருவம். அதாவது ஆசையின் வடிவத்தை ஏற்கும் உருவம். அவன் தனது பழைய ஜீவியத்தில் எந்த அம்சத்தைப் பற்றி நினைக்கிறானோ, அச்சமயத்தில் முன் அவனது பூத உடல் பெற்றிருந்த வடிவத்தைச் சூட்சும தேகம் இப்பொழுது பெறும். பூதவுடலிலே பார்ப்பதும், கேட்பதும், உண்பதும், வெளிப்படுத்துவதும் முதலிய காரியங்களைத் தனிப்பட்ட கருவிகள் செய்தன. இப்பொழுது அவனுக்கு உடல் முழுவதுமே வாய்.


அவன் பார்வைகள் வெளியே எட்டினாலும் ஆசைகள் பூமியை நோக்கி இழுத்தன. ஆசையின் ரேகைகள் அவனைப் பலிபீடத்தை நோக்கியிழுத்தன!


அவன் அன்று பூதவுடலை நீங்கி வெளிப்பட்டதும், இவ்வுலகத்தைப் பாதுகாக்கும் ஏழு சஞ்சிகள்போல் உள்ளிருக்கும் வஸ்துவின் விடுதலைக்குத் தடையாக ஏழு இருப்பதையும் உணர்ந்தான். ஒன்றைக் கடந்தால் மற்ற ஆறையும் இறுகப் பிடித்ததுபோல் ஒன்றவைத்து, ஏழையும் நீக்கிப் பாயவேண்டும். இப்பொழுது ஒன்றைவிட்டுப் பிரிந்ததினால், போக்கின்படியாகக் கிடைக்கும் மரணத்தால் விழிப்பையும் இழந்து, சொப்பனாவஸ்தை போன்ற இந்த இடைநிலையில் கட்டுப்பட வேண்டியதாயிற்று.


ஆசைகள் மெதுவாக மரணத்தை நோக்கித் திரும்பின. பழைய நிலைகள் படிப்படியாகப் பரிணமித்து அவனையே விழுங்கிப் பூமியை நோக்கித் தள்ளின.


பலீபீடத்தில் வந்து விழுந்தான். அவனே பிரம்ம ராக்ஷஸ்!


குறிஞ்சிப்பாடியின் பக்கத்திலே சூரங்காடு பெரிய மலைப்பிரதேசம். காலத் தேவனின் தங்கைகள் போன்ற பாறைகள் இயற்கையின் செழிப்பான கானகம் என்ற அந்தப்புரத்திலே மறைந்து கிடந்தன.


சூரங்காடு, மனிதர்கள் பலத்திற்கு நிலைக்களமாக விளங்குவது. அங்கே இருப்பது என்னவென்று ஒருவருக்கும் தெரியாது.

குறிஞ்சிப்பாடியின் சமூகத்தின் திவலை ஒன்று எப்பொழுதோ நெடுங்காலத்திற்கு முன்பு அதில் சென்றது – திரும்பவில்லை; குறிஞ்சிப்பாடியினர் பிறகு அத்திசையில் செல்வதில்லை.


சூரங்காட்டில் கொடிய மிருகங்கள் கிடையா. விஷக் கிருமிகள் கிடையா. அது நிசப்தமும் இயற்கைத் தேவியும் கலக்குமிடமாம். சப்த கன்னிகைகள் திரிவார்களாம். மனிதர்கள் போனால் திரும்ப மாட்டார்கள். இது குறிஞ்சிப்பாடியினரின் எழுதாக் கிளவி.


இந்த வேத வித்திற்குக் குறிஞ்சிப்பாடியில் தோன்றும் மகான்கள் அடிக்கடி பாஷ்யம் விரித்து அதை ஒரு பெரும் சமுதாயக் கட்டுப்பாடாக்கினர்.

அக்காலத்திலே, குறிஞ்சிப்பாடியின் சமூகத்திலே தோன்றி, அதன் வளர்ச்சிக்கும் பிரபலத்திற்கும் பாடுபட்டவன் நன்னய பட்டன் என்ற வாலிபன்.

குறிஞ்சிப்பாடியில் குறுகிய ஆசைகளைப் பலப்படுத்தி வளர்ப்பதே அவனுக்கு ஒரு மகத்தான சேவையாகப் பட்டது. போரிலே மரணத்தை நேருக்கு நேராகப் பார்த்தவன். குறிஞ்சிப்பாடிச் சமூகத்தின் விஷப் பூச்சிகளைச் சித்திரவதை செய்து, மரணக் கதவை மெதுவாகத் திறந்து, அதன் உளைச்சலிலே பயத்தைப் போக்கியவன். அவனுக்கு மரணம் பயத்தைத் தரவில்லை.


விதியின் விசித்திர கதிக்கு அளவுகோல் உண்டா? நன்னய பட்டனுக்கு மரணத்தின் பயத்தை அறிவிக்க மூல சக்திகள் நினைத்தன போலும்.


அவன் மனைவி பெண் குழந்தையைப் பெற்றுக்கொடுத்து அந்த உளைப்பிலே உயிர் நீத்தாள்.

அன்று, நன்னய பட்டன் மரணத்திற்கு எத்தனையோ ரூபங்கள் உண்டு என்று அறிந்தான்.

அதற்கப்புறம் மூன்று வருஷங்கள், வெங்காயச் சருகுபோல் உதிர்ந்துவிட்டன. அந்த மூன்று வருஷங்களும் நன்னய பட்டனுக்கு சமூகத்தின் குறுகிய கால அளவுகோலைக் கடந்து வேறு உலகத்தில் யாத்திரை செய்வதாயிருந்தன. அவன் சக்திகளின் பௌருஷத்தின் எல்லையை நாடினான்.

ஒரு நாள், அந்தி மயங்கும் சமயம், குறிஞ்சிப்பாடி இருவரை இழந்தது. காலம் என்ற அரங்கில் சரித்திரம் மீண்டும் ஒரு முறை பழையபடி நடித்தது.

நன்னய பட்டன் திசையறியாமல் சென்றான். பசியறியாமற் சென்றான். கைக்குழந்தையின் – மூன்று வயதுக் குழந்தையின் – சிறு தேவைகள் அவனுக்குப் பூத உடம்பின் தேவைகளை இடித்துக் கூறும் அளவுகோலாயின. அதன் பசியைச் சாந்திசெய்யும் பொறுப்பு இல்லாவிட்டால் அவனிடம் பசியின் ஆதிக்கம் தலைகாட்டியிராது.


அவன் அன்று ஆசைப்பட்டது எல்லாம் மரணத்தினின்றும் தப்புவதற்கு வழி.

ஏன் மரணத்தினின்றும் தப்பவேண்டுமென்று அவனிடம் யாராவது கேட்டிருந்தால் அவனால் காரணம் கூறியிருக்க முடியாது. ஆனால், பயம் என்று ஒப்புக் கொண்டிருக்க மாட்டான். மரணத்தை வெல்வதே – காலத்தின் போக்கைத் தடைசெய்வதே – ஆண்மை என்று பதில் சொல்லியிருப்பான். பேதை! மரணம் என்பது இல்லாவிடில் நரகம் என்பது எப்படித் தெரியும்!

அப்பொழுது அவனது சிறு மனம் குறிஞ்சிப்பாடிக்கு மேல் விரிந்து, அகில லோகத்தையும் கட்டி ஆள்வதற்கான மூல சக்திகளின் சூட்சுமக் கயிற்றைக் கைக்குள் அடக்க வேண்டும் என்று அறிவுகெட்ட ஆசையால் கட்டுண்டது.


இருண்டு நெடுநேரமாகியும் நடந்துகொண்டேயிருந்தான். கையில் குழந்தை, ஆசையற்று, ஆனால் வித்துக்களான தேவையில் மட்டும் நிலைக்கும் மனநிலையில் கட்டுண்டு, நித்தியத்துவத்திற்கும் மரணப் பாதையின் சுழலுக்கும் மத்தியிலுள்ள பிளவுக் கோட்டின் எல்லை வெளியான இடைவெளியில் நின்று உறங்கியது.

குறிஞ்சிப்பாடியின் வேதம் பொய்யாகும் நிலையை நன்னய பட்டன் நிதரிசனமாகக் கண்டான்.


நெடுநேரம் நடந்த களைப்பு, இருளின் கருவைப் போன்ற ஒரு குகை வாயிலில் சிறிது உட்கார வைத்தது.

உறக்கத்தை அறியாத கண்கள் குகைக்குள் துருவின.

அந்தக் குகைதான் பிரம்ம ராக்ஷஸாகத் தவிக்கும் ஒரு பழைய மனிதனுடைய ஆசையின் பயங்கரமான பலிபீடம்.

வெகு காலமாக அப்பாதையிலே யாரும் வரவில்லை.

மனித தைரியத்தின் உச்ச ஸ்தானமாக இருந்த அந்தக் குகையின் வாசலில் நன்னய பட்டன் உட்கார்ந்ததும் குழந்தை வீரிட்டு அலறத் தொடங்கியது. குழந்தையைத் தேற்றிப் பார்த்தான்; எவ்வளவோ தந்திரங்களைச் செய்து பார்த்தான். குழந்தையின் அலறல் நிற்கவில்லை.


அதைத் தோளில் சாத்திக்கொண்டு, முதுகைத் தட்டிக் கொடுத்த வண்ணம் எழுந்து உலாவி அங்குமிங்குமாக நடக்கத் தொடங்கினான். குகையின் வாசலைவிட்டு அகன்று செல்லும் பொழுது குழந்தையின் அழுகை படிப்படியாக ஓய்ந்தது. ஆனால், திரும்பிக் குகையை அணுகியதுதான் தாமதம், குழந்தையின் குரல் உச்சஸ்தாயியை எட்டியது.


இரண்டு மூன்று முறை இப்படிப் பரீட்சித்த பிறகு, இந்த அதிசயமான செயல் குகையில் என்ன இருக்கிறது என்று பார்க்க அவனுள் ஆசையை எழுப்பியது.


மரத்தடியில் சற்று நேரம் இருந்து குழந்தையை உறங்க வைத்து விட்டு, எழுந்து, குகையை நோக்கி நடக்கலானான்.

காற்றற்று, அசைவில்லாது நிற்கும் மரங்களிடையே ஒரு துயரம் பொதிந்த பெருமூச்சு எழுந்தது.

சற்று நின்று, சுற்றுமுற்றும் கவனித்தான். அவனைத் தவிர வேறு யார் இருக்கப் போகிறார்கள்?

குகை வாயிலின் பக்கம் போனதும் தேக மாத்யந்தமும் காரணமற்றுக் குலுங்கியது. மயிர்க்கால்கள் திடீரென்று குளிர்ந்த காற்றை ஏற்றதுபோல் விறைத்து நின்றன.

நன்னய பட்டன் உள்ளத்தில் இயற்கைக்கு மாறான இக்குறிகளினால் ஆச்சரியம் தோன்றியது.

குகை வாயிலைக் கடந்து உள்ளே சென்று, அவன் இருள் திரையில் மறைந்தான்.

உள்ளே சென்றதும் நன்னய பட்டனுக்குப் புதிய சக்தி பிறந்தது. என்றுமில்லாதபடி அவன் மூளை, தீவிரமாக விவரிக்க முடியாத எண்ணங்களில் விழுந்து, அவற்றைத் தாங்கச் சக்தியற்று, புயலில் அகப்பட்ட சிறு படகுபோலத் தத்தளிக்கிறது. நெஞ்சுறுதி என்ற சுங்கான், மனத்தின் அறிவு கெட்ட வேகத்தைக் கட்டுமீறிப் போகாது காத்ததினால் நிரந்தரமான பைத்தியம் பிடிக்காது தப்பினான்.


இருட்டிலே, இருட்டின் நடுமையம் போல் ஏதோ ஒன்று தெரிந்தது. சிறிது சிறிதாக மனித உருவம் போல் வடிவெடுத்தது. பின்னர் இருளில் மங்கியது. இதைப் பார்த்தவண்ணமாகவேயிருந்தான் நன்னய பட்டன். அதைத் தவிர மற்ற யாவும் மறந்து போயின.

அதைப் பார்த்துக் கொண்டிருக்க இருக்க, இரத்தத்திற்குப் பதிலாக வேறு ஒரு புதிய திரவப் பொருள் புரண்டு புரண்டு ஓடுவது போல் சிறு வலியுடன் கூடிய இன்பத்தைக் கொடுத்தது.

மனத்திலே, குகை மறைந்து வேறு ஓர் உலகம் தென்பட்டது. ஜடத்திலே தோன்றாத விபரீதமான பிராண சக்திகள், பேரலை வீசி எல்லையற்ற சமுத்திரம்போல் கோஷித்தன. அந்தச் சக்திக் கடலின் திசை முகட்டிலே ஒளிச் சர்ப்பங்கள் விளையாடித் திரிந்தன. இதன் ஒலிதானா அந்தக் கோர கர்ஜனைகள்!

நன்னய பட்டனின் பார்வை மங்கியது. மேகப் படலம் போல் ஏதோ ஒன்று கண்களை மறைந்தது. இருட்டையும் நிசப்தத்தையும் தவிர அவன் இந்திரியங்கள் வேறொன்றையும் உணரவில்லை.

எத்தனை காலம் கழிந்ததோ அவனுக்கு உணர்வில்லை. மந்திரத்தால் கட்டுண்டு, பின்னர் அதிலிருந்து விலகிய சர்ப்பம் போல் எழுந்து நடந்தான். கால்கள் தள்ளாடின. குகையின் வெளியில் வருவதற்குள் அவனுக்குப் பெரிய பாடாகிவிட்டது.

இவ்வளவும் ஒரு வினாடியில் நடந்தேறியது என்று சொன்னால் நன்னய பட்டன் நம்பமாட்டான். அவன் குழந்தையின் பக்கம் வந்து தரையிலேயே சோர்ந்து படுத்தான். மனிதனது பலவீனமெல்லாம் இயற்கைத் தாயின் மடியிலே ஒருங்கே தஞ்சம் புகுந்ததுபோல ஆசை வித்தின் ஆரம்ப வடிவமான குழந்தையின் பக்கத்தில் கிடந்தான்.

கானகத்திலும் இருள் மயங்கி மடிய, வைகறை பிறந்தது. குகைக்கு மேல் முகட்டுச் சரிவில் நின்ற மாமரக் கொம்பின் கொழுந்துகளில் பொன் முலாம் பூசப்பட்டிருந்தது. நன்னய பட்டன் எழுந்தான்.

அவனுக்கு முன்பே குழந்தை எழுந்து தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தது.

சூரங்காட்டிலே பசி தீர்த்துக்கொள்ள என்று நெடுந்தூரம் அலைய வேண்டியதில்லை. மா, பலா, முதலியவை சாதாரணமாக வளர்ந்து கிடக்கும். பாறைக் குடைவுகளிலே குளிர்ந்த சுனையூற்றுக்களும் ஏராளம்.

ஆசை அவனை மறுபடியும் குகைக்குள் இழுத்தது. குழந்தையை மரத்தடியில் வைத்துவிட்டு உள்ளே சென்றான்.

குகையின் இருள் திரண்ட ஓரத்திலே கருங்கற் படுக்கை போன்ற ஒரு பாறை. சுற்றிலும், யாரோ ரசவாதியொருவன் எப்பொழுதோ அங்கிருந்து ஆராய்ச்சி நடத்தியதுபோல் மட்பாண்டங்களும் குடுவைகளும் ஓரத்திலே வரிசையாக அடுக்கப்பட்டும், உறி கட்டித் தொங்கவிடப்பட்டும் கிடந்தன.


இவ்வாறு அடுக்கடுக்காய்க் கிடந்த மனித வாசத்தின் அறிகுறிகளுக்கிடையில் ஒரு பொருள் அவன் கவனத்தை இழுத்தது.
அந்தக் கருங்கற் பாறைப் படுக்கையிலே ஒரு எலும்புக்கூடு கிடந்தது.
நன்னய பட்டன் பயம் என்பதை அறியாதவன். மரணத்தையும் பச்சை ரத்தப் பிரவாகத்தோடு தெரியும் மண்டையோடுகளையும் அவன் கண்டு அஞ்சியவனல்லன். ஆனால், அவனுக்கு அதை நெருங்க நெருங்க, முந்திய நாள் இரவு இருட்டிலே குகைக்குள் நுழைந்த சமயம் ஏற்பட்ட, விவரிக்க முடியாத, உள்ளத்தை விறைத்துப் போகச்செய்யும், உணர்ச்சிகள் தோன்றலாயின. ஆனால் அவன் ஒன்றையும் பொருட்படுத்தாது நெருங்கினான்.


அப்பொழுது குகையின் எந்த இடைவெளியிலிருந்தோ ஒரு சிறு சூரிய கிரணம் வந்து எலும்புக்கூட்டின் வலக் கண் குழியில் விழுந்தது. நன்னய பட்டன், முன்னால் ஓர் அடியெடுத்து வைக்க முடியாது, கட்டுண்ட சர்ப்பம் போல நின்று, வெளிச்சம் விழுந்த மண்டையோட்டில் இருக்கும் கண்குழியை நோக்கினான். அதில் ஒரு புழு நெளிவது போலத் தோன்றியது.

அது புழுவா? அன்று.

ஒரு சிறிய கருவண்டு மெதுவாக வெளியேறி, ஒளி ஏணியில் ஏறிச் செல்வதுபோல் சிறகை விரித்து ரீங்காரமிட்ட வண்ணம் பறந்து சென்று முகட்டிலிருந்த இடைவெளியில் மறைந்தது.

மறைந்ததுதான் தாமதம்! அந்தத் துவாரத்திற்கு வெளியே அண்ட கோளமே இற்றுவிழும்படியாகக் காதைச் செவிடாக்கும் இடிச் சிரிப்பு! அது அந்த அமைதியின் நிலையமான சூரங்காட்டையே ஒரு குலுக்குக் குலுக்கியது.

நன்னய பட்டன் உடல் வியர்த்தது. அவனது பூதவுடல் கட்டுக் கடங்காது நடுங்கியது; ஆனால், கண்கள் மட்டிலும் பயப்பிராந்தியில் அறிவை இழக்கவில்லை. அசாதாரண விவகாரத்தில் தூண்டப்பட்டு உண்மையை அறியத் தாவுகிறது என்பதை உணர்த்தும் பாவனையில் எலும்புக்கூடு கிடக்கும் இடத்தையும் வண்டு மறைந்த திசையையும் ஒருங்கே கவனித்தான்.

வெடிபடச் செய்த சிரிப்பு மங்கியதும் சூரிய கிரணம் மறைந்தது. அசாதாரணமாக அமைதி பிறந்தது.

நன்னய பட்டன் குகையைச் சுற்றிப் பார்க்கத் தொடங்கினான்.

கற்பாறைப் படுக்கைக்கு மறுபக்கம் குகையின் ஒரு சுவர். அதன் மேல் இருளிலும் தெரியக்கூடிய ஒளித் திராவகத்தால் சிவப்பாக எழுதப்பட்டது போன்ற யந்திரம். அதன் ஒரு பாகத்தில் தாமரைப்பூ ஒன்று செதுக்கப்பட்டிருந்தது. தாமரை மலரின் இதழ்கள் எலும்புக் கூட்டின் மார்பகத்துக்கு நேராக இரண்டடி உயரத்தில் சுவரின் மேல் இருந்தன.


கற்பலகையில், எலும்புக்கூட்டிற்கும் சுவருக்கும் உள்ள ஒரு சிறு இடைவெளியில், சுவரில் இருப்பதைப் போலவே யந்திரம் செதுக்கப்பட்டு அதன் மையத்திலும் ஒரு செந்தாமரைப் புஷ்பம் செதுக்கப்பட்டிருந்தது. கற்பலகையில் வரையப்பட்ட யந்திரம் இருளில் பொன்னிறமாக மின்னியது. தாமரை மலர் வெண்மையான பளிங்கினால் செய்து பொருத்தப்பட்டதுபோல் இருந்தது.


நன்னய பட்டன் அதன்மீது கையை வைத்துத் தடவிப் பார்த்தான். அது தனியாகச் செதுக்கிப் பாறையில் பொருத்தப்படாத விசித்திரமாக இருந்தது. அது எப்படி அமைக்கப்பட்டது?

எலும்புக்குக்கூடு ஆறடி நீளம். உயிருடன் இருந்தபொழுது அம்மனிதன் ராக்ஷஸன் போல இருந்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

இவ்வாறு நினைத்துக்கொள்ளவே, நன்னய பட்டன் வேறு பக்கமாகத் தலையை நிமிர்த்தி நோக்கினான்.
என்ன ஆச்சரியம்!
ஒரு பிரம்மாண்டமான முதலை வாயைத் திறந்து கொண்டு அந்தரத்தில் தொங்கியது.



இருட்டில் தோன்றும் மயக்கமா?
இல்லை! இல்லை!
இரண்டு சரடுகள் வளையங்கள் போல் உயரேயிருந்து தொங்கவிடப்பட்டு, அவற்றின் உடே இம்முதலை புகுத்தப்பட்டு, உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.
இருட்டின் கூற்றால் முதலில் சரடு தொங்குவது தெரியவில்லை நன்னய பட்டனுக்கு.



மெதுவாக அதை யணுகினான். இருட்டில் கால் இடறியது. ஜோதியாக ஒரு திரவ பதார்த்தம் உருண்ட பானையிலிருந்து வழிந்தோடியது. அதன் பளபளப்பு, கருங்கல் தளத்தைத் தங்க மெருகிட்டதுமல்லாது குகையையே சிறிது பிரகாசமடையச் செய்தது.


லாவகமாகப் பலிபீடத்தின் மீது ஒரு காலை வைத்து ஏறி நின்று, அவன் முதலையின் வாயை நோக்கினான். கண்கள் ஒளி வீசின; வாய் கத்தியால் வெட்டிவைத்த சதைக் கூறுபோல் தெரிந்தது. ஆனால் அதன்மீது சலனம் இல்லை, உயிர் இல்லை.
முதலையின் திறந்த வாயில் ஓலைச் சுவடிகள் போல் கட்டுகட்டாக என்னவோ இருந்தன.
நன்னய பட்டன் அவற்றையெடுத்தான்.


ஓலைச் சுவடிகள் போலில்லாமல் அவை மிகவும் கனமாக இருந்தன.
அவற்றை அப்படியே சுமந்துகொண்டு குகைக்கு வெளியே வந்தான்.
அச்சமயத்தில்தான் நன்னய பட்டனுக்குப் ‘பூலோகத்தில் இருக்கிறோம்’ என்ற உணர்வு ஏற்பட்டது. அத்தனை நேரம், ஜன்னி கண்ட நிலையில், உள்ளுக்குள் போராடும் பயத்தை அமுக்கி அந்தக் குகை இரகசியங்களைத் துருவிக் கொண்டிருந்தான்.


குழந்தை, ஒரு மர நிழலில் தவழ்ந்து விளையாடிக்கொண்டு சிறிது தூரத்தில் இரை பொறுக்கும் மைனாவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது.
நன்னய பட்டனுக்கு சுயப் பிரக்ஞையாக – அதாவது, ஓடித்திரியும் எண்ணக் கோணல்களிலிருந்து யதார்த்த உலகத்திற்குக் கொண்டு வரும் ஒரு துருவ நட்சத்திரமாக – அக்குழந்தை இருந்தது.


அதைத் தூக்கி வைத்துக் கொண்டு கையிலிருந்து ஓலைச் சுவடியை அவிழ்த்தான். வெளிச்சத்தில் பிடித்து ஏடு ஏடாக வாசித்தான்.


முதலில் அவனது கவனம் அந்தச் சுவடிகளின் விசித்திரமான குணத்திலேயே தங்கியது. அப்பொழுதுதான் கருக்கிலிருந்து நறுக்கித் திருத்தப்பட்ட பனை ஓலை மாதிரியே காணப்பட்டது. இளம் பச்சைகூட மாறவில்லை. ஓலையின் ஓடும் மெல்லிய நரம்புகள் கூட வெள்ளையாகத் தென்பட்டன. ஆனால் ஓலைதான் உலோகம் போல் கெட்டியாகவும் கனமாகவும் இருந்தது. அதில் எழுத்துப் பள்ளங்களில் சிறிது பளபளப்பு இருந்தது.


இதென்ன விசித்திரமான ஓலை என்பது பிடிபடாமல் உள்ளிருக்கும் வாசகத்தை உரக்கப் படிக்க ஆரம்பித்தான்:


… காலத்தின் கதியைத் தடைசெய்யும் உண்மையைக் கண்டு பிடித்துவிட்டேன். ஆமாம், அது மட்டிலுமா? வெறும் ஜடத்தை, மூலப் பிரகிருதிகளை, பிராண பக்திகொண்டு துடிக்கும் உயிர்க்கோளங்களாக மாற்றுந் திறமை படைத்துவிட்டேன். நான் தான் பிரம்மா! சேதன அசேதனங்கள் எல்லாம் எனது அறமே! நானே நான்! நான் நானே…


இவ்வாறு சில ஏடுகள், முழுதும் தறிகெட்ட மூளையின் ஓட்டம் போல் வார்த்தைக் குப்பையால் நிறைக்கப்பட்டிருந்தன. நன்னய பட்டனுக்கு இந்தக் கொந்தளித்துச் செல்லும் லிபிகளின் அர்த்தம் புரியவில்லை. மூளை சுழன்றது!
பின்னர்:


இவ்வளவு தூரம் உனக்குப் பொறுமையிருக்கிறதா! இனிமேல் என் இரகசியத்தைக் கேள்!
பிரபஞ்ச இரகசியத்தை அறிய எங்கெல்லாம் சென்றேன், தெரியுமா? மிசிர தேசம் வரை. அக புராணம் வழிகாட்டியது! செமிராமிஸ், காலத்தின் கதியை நிறுத்தும் வித்தையைக் கற்பித்தான். உண்மையில் ஒரு படி அது! அதற்கு மேல் எத்தனை! மூளை குழம்பாது நீ என்னுடன் வருவாயா?


 அப்படியானால்… குகைக்குள் மூலையில் தொங்குகிறதே முதலைக் கூடு, அது ஒடிந்து மண்ணாகி மண்ணுடன் சேராதபடி செய்தவன் அவன் தான். அதை இப்பொழுதும் உயிருடன் எழுந்து நடமாடச் செய்யலாம். அதை யார் அறிவித்தான் என்று உனக்குச் சொல்ல வேண்டுமா? அதைத்தான் சொல்ல மாட்டேன். அது உனக்குத் தெரியலாகாது.


வேண்டுமானால் உண்மையைப் பரிசோதித்துப் பார்.

மூலையில் நீ கொட்டிவிட்டாயே அந்த ஜீவ ரசம், அதை ஒரு துளி எடுத்து, உன் இரத்தத்தில் கலந்து, அதன் மூக்கில் பிடி! அப்புறம் பார்!

எனது எலும்புக் கூட்டிற்கு உடலளித்துப் பின்னர் என் உயிரை அதில் பெய்ய வேண்டும். அப்பொழுதுதான் நான் உனக்கு இரகசியங்களை விளக்கமாகச் சொல்லமுடியும்…

இவ்வாறு வாசித்துக் கொண்டிருந்த நன்னய பட்டனுக்குக் கண் பிதுங்குவது போலிருந்தது. என்ன! ஓலை வெறும் ஓலை. அதிலிருந்த ஓர் எழுத்தைக் கூடக் காணவில்லை. அவ்வளவும் மறைந்து, வெறும் தகடுகளாக, மங்கி மறையும் சூரிய ஒளியில் சுவடிகள் மின்னின.


வாசித்ததெல்லாம் உண்மையா அல்லது வெறும் சித்தப் பிரமையா?
அவன் சொன்னதைப் பரீட்சித்துப் பார்த்தால்? நன்னய பட்டன் மறுபடியும் குகையினுள் சென்றான்.


குகையிலிருந்த சூரியக்கத்தியால் விரலில் சிறிது நறுக்கி இரத்தமெடுத்து மின்னிக்கொண்டிருந்த ஜீவ ரசத்தில் கலந்தான். குகை முழுவதிலும் சுகமான ஒரு பரிமள கந்தம் பரவியது. அவனுடைய உடலையும் உள்ளத்தையும் மோக லாகிரியில் தள்ளியது.
மெதுவாக முதலைக் கூட்டை எடுத்துக் கீழே வைத்து, அதன் மூக்கில் இந்த வாசனைக் கலவையைப் பிடித்தான்.
சிறிது நேரம் ஒன்றும் நிகழவில்லை. பின்னர், ஒளியிழந்து மங்கி ஒரே நிலையில் நின்ற முதலையின் கண்களில் சிறிது பச்சை ஒளி வீசியது. மெதுவாக அதன் உடல் அசைந்தது. திறந்தபடியே இருந்த வாய் மெதுவாக மூடியது. முதலை அவனை நோக்கி நகர ஆரம்பித்து விட்டது.


அதே சமயம் ‘களுக்’ என்ற ஒரு பெண்ணின் சிரிப்பு. ஏறிட்டுப் பார்த்தான் நன்னய பட்டன். எதிரே குகை வாயிலில் தவழுந் தனது குழந்தையின் முன்னால் அழகின் வரம்பைச் சிதற அடித்து, பிறந்த மேனியில் நிற்கும் ஒரு பெண் உருவம் குழந்தையை நோக்கிச் சிரித்தவண்ணம் நின்றது! என்ன அழகு! அப்பெண்ணின் நீண்டு சுருண்ட கறுத்த தலைமயிர் இரு வகிடாக அவளது உடலழகை அப்படியே முழங்கால் வரை மறைத்தது. நன்னய பட்டன் ஸ்தம்பித்து அவளையே நோக்கிய வண்ணம் நின்றான். வைத்த கண் எடுக்க முடியாதபடி அப்படியே நின்றான்.


“பயப்படாமல் அவள் திரும்பும்பொழுது கவனி! பின்பு உன் வேலை!” என்றது அவன் காதருகில் ஒரு குரல். அதற்கு என்ன கம்பீரம், என்ன அதிகாரத் தோரணை!


அப்பெண்ணோ, நெடுநேரம் குழந்தையையே நோக்கி நின்று சிரித்துக் கொண்டிருந்தாள். குழந்தையைத் தன்னிடம் வரும்படி சமிக்ஞை செய்தாள். குழந்தை அசையவில்லை. நெடுநேரம் முயன்றும் குழந்தை அசையவில்லை. மெதுவாக அவள் குழந்தையை ஏறிட்டுப் பார்த்தவண்ணமே, பின்னிட்டு நடந்து வந்தாள். அப்பொழுதும் குழந்தை அசையவில்லை… ஆனால் குழந்தையின் உடல் அவ்விடத்திலேயே கட்டுண்டு கிடப்பதுபோல் பட்டது நன்னய பட்டனுக்கு! ஏனென்றால் அப்படித் தவித்தது குழந்தை அவ்வுருவத்தினிடம் செல்ல! பின்னாகவே அடியெடுத்துவைத்துச் சென்ற அப்பெண்ணுருவத்தின் முகத்தில் சடக்கென்று ஒரு மாறுதல் ஏற்பட்டது. கோபம் தணலாகத் தீப்பொறி பறக்க, முகம் கோரமாகச் சுருங்கி நிமிர்ந்தது. மேலுதட்டின் அடியிலிருந்து புறப்பட்டன இரண்டு மெல்லிய கோரப் பற்கள்!
மின்வெட்டுப் போல் திரும்பியது அவ்வுருவம். அவ்வளவுதான்! என்ன கோரம்! பின்புறம் வெறும் எலும்புக்கூடு! மண்டையோட்டின் கீழ்ப்பாகத்திலிருந்து தொங்கியது ஒரு சிறு சடை!
நன்னய பட்டன்! நன்னய பட்டனா அவன்? அவன் முகமும் உடலும் ஏன் இக்கோர உருப்பெற்றுவிட்டன! கையில் நீண்ட நகம்; தேகத்தில் சடை மயிர், வாயில் வச்சிர தந்தம், உதடுகள் நெஞ்சுவரை தொங்குகின்றன!
பேய்ப் பாய்ச்சலில் சென்று, மறையும் ஒரு பெண்ணுருவின் சடையைப் பிடித்துத் திரும்பி, குகையுள் மறைந்தான். வெளியே என்ன ஆச்சரியம்! குமுறும் இடியும் மின்னலும் எங்கிருந்தோ வந்து குவிந்தன.
குகைக்குள்ளே பேயுருவத்தில் நடமாடுகிறான் நன்னய பட்டன்.
பலிபீடத்தின் மீது இருவரும் எலும்புக்கூட்டின் உட்கலசங்களில் சுருண்டு உலர்ந்திருந்த குடல், ஈரல், இருதயம் இவற்றை எடுத்து வைத்துக் களிமண்ணால் சேர்த்துப் பிணித்துக் கொண்டிருக்கிறான். வெளியே மழையற்று, மின்னல்கள் பிரபஞ்சத்தின் கேலிச் சிரிப்பைப் போல் கெக்கலித்துக் கொண்டிருக்கின்றன.


அந்த உருவத்தின் தலைமாட்டில் குழந்தை சுய அறிவு இழந்தது போல் பிரக்ஞையற்று, விழித்த கண் திறந்தபடி உட்கார்த்தி வைக்கப்பட்டிருக்கிறது.
நன்னய பட்டன் அதன் இதயத்துடன் பெண் உருவிடமிருந்து பிடுங்கிய சடையைக் கட்டி, அதன் மற்றொரு மூலையை உருவத்தின் நாபியில் சேர்க்கிறான்.


அவனது நாக்கு மட்டிலும் சாதாராணமாகத் தொங்குகிறது.
மெதுவாகப் பலிபீடத்தின் தாமரைக் குமிழ்களில் செப்புக் கம்பிகளைப் பின்னி, அவற்றைப் பலிபீடத்தின் மீது வைத்து வளர்த்தப்பட்டிருக்கும் உருவத்தின் கை, கால், தலை, இவற்றுடன் சுற்றி, குகைக்கு வெளியே கொண்டுவந்து ஓர் உயரமான மேட்டில் ஈசான திக்கு நோக்கி யந்திரம் போல வளைத்துப் பதிக்கிறான்.


” உம்! உஷார்! ஜீவ சத்தைக் கண்களில் தடவு!” என்றது ஒரு குரல்.
நன்னய பட்டன் அவ்வாறே தடவினான்.


” கிட்ட நிற்காதே! விலகி நில்!” என்றது நில்.


‘ சட்டச் சடசடா!’ என்று ஆரம்பித்துப் புரண்டு வெடித்தது ஒரு பேரிடி.
மின்னல் வீச்சு, கம்பிகள் வழியாகப் பாய்ந்து குகை முழுதும் ஒரே பிரகாசமாக்கிக் கண்ணைப் பறித்தது.
” தொட்டுப் பார்!” என்றது அக்குரல் மறுபடியும்.
நன்னய பட்டன் அணுகினான்.
பலிபீடத்தின் மீதிருந்த உருவத்தைத் தொட்டான்!
என்ன ஆச்சரியம்! வெறும் களிமண், சதைக் கோளமாக மாறிவிட்டது!
” அதன் நாபியிலும் இதயத்திலும் ஜீவ ரசத்தைத் தடவு!”
நன்னய பட்டன் அப்படியே செய்தான்.



மறுபடியும் ஏற்பட்டது மின்னலும் இடியும்.

” உணர்வு ஏற்பட்டுவிட்டது. தொட்டுப் பார்! இதயம் அடித்துக் கொள்ளும். இனி உயிர்தான் பாக்கி! குழந்தையை அவன் முகத்தில் படுக்க வை!”
நன்னய பட்டன் அப்படியே செய்தான். இதற்குள் அவனது கோர உருவத்தில் செம்பாதி மறைந்துவிட்டது.


” முதலில் அந்த மூலையில் இருக்கும் மருந்தைக் கையில் தடவி, உருவத்தின் கைகளை உன் இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு முதலையின் முதுகில் நில்! ஒரு கையை எடுத்தால் உன் உயிர் போவது நிச்சயம். ஜீவ ரசத்தை எடுத்து இருவர் மீதும் கொட்டிவிட்டு நான் சொன்னதுபோல் செய்!” என்றது அக்குரல்.


நன்னய பட்டன் யந்திரம் போல அவற்றைச் செய்து முடித்தான்.
” உருவத்தின் கண்களையே பார்! வேறு பக்கம் திரும்பாதே!”
மறுபடியும் இடிஇடிக்க ஆரம்பித்தது! கோர இடி, சமுத்திர அலை போல் தனது உள்ளுணர்வைத் தாக்கி உடலில் தங்கொணா வேகத்தில் புரளுவதை அறிந்தான். உருவத்தின் மீது வைத்த கண் மாறவில்லை. உருவத்தின் கண்கள் மெதுவாக அசைகின்றன. அதன் நெற்றியில் சிறு வியர்வை துளிர்க்கிறது. கண்கள் மெதுவாகத் திறக்கின்றன.
அச்சமயம் ‘களுக்’கென்று பெண்ணின் சிரிப்புக் குரல்.


மறுபடியும் அதே உருவமா! பார்க்கவேண்டுமென்ற ஆசை மறுபடியும் அதன் உருவப் பிரமையில் சென்று லயித்தது. மெதுவாகக் கண்ணைத் திருப்பினான்.
அப்பேயுருவம் மெதுவாகப் பலிபீடத்தை அணுகி, சடையை எடுக்க முயன்றது. கட்டளையை மறந்து அதைத் தட்டக் கையெடுத்தான்!


” எடுக்காதே!” என்ற அதிகாரத் தொனியுள்ள குரல்! உருகிய பிழம்புகள் பாதங்கள் வழியாக இதயத்தை நோக்கிப் பாய்வது போல் ஒரு சிறு வினாடி நினைத்தான். அவ்வளவுதான்:


மற்றொரு பேரிடி! நீட்டின கையை மடக்க முடியவில்லை.



நன்றி - புதுமைப்பித்தன், சிறுகதைகள்


புதுமைப்பித்தன் வாழ்க்கைக் குறிப்பு

புதுமைப்பித்தன்

இயற்பெயர்: சொ.விருத்தாசலம் Real Name : So. Viruthasalam

தந்தை பெயர்: சொக்கலிங்கம் பிள்ளை Father Name : Sokkalingam Pillai

DOB: பிறப்பு: 25,ஏப்ரல் 1906

பிறந்தவிடம்: திருப்பாதிரிபுலியூர் ( கடலூர் 1) Birth Place :Near Kadalur

பூர்வீகம்: நெல்லை Native : Tirunelveli

தொடக்கக் கல்வி: செஞ்சி,திண்டிவனம் மற்றும் கள்ளக்குறிச்சி

உயர்நிலைப்பள்ளி: யோவான் பள்ளி,நெல்லை

பட்டம் : இந்து கல்லூரி,நெல்லை -1931 ல் இளங்கலை பட்டம்

திருமணம்: 1932ல்,மனைவி பெயர் கமலா

முதல் வெளியீடு: ஒக்டோபர் 18,1933 - குலோப்ஜாமுன் காதல்

மணிக்கொடி: 1934 ஏப்ரலிலிருந்து மணிக்கொடியில் பல கதைகள்,கட்டுரைகள் வெளிவந்தன

குடிபெயர்தல்: 1934ல் சென்னைக்கு

1935 வரை ஊழியனில் உதவியாசிரியராக பணிபுரிந்தார்.1935 ஜுலை தொடங்கி 1943 செப்டெம்பர் வரை தினமணியில் உதவியாசிரியாரக பணிபுரிதல்.1939ல் உலகத்துச் சிறுகதைகள்,பேஸிஸ்ட் ஜடாமுனி,கப்சிப் தர்பார் ஆகியவை வெளிவந்தன.194ல் முதல் சிறுகதைத் தொகுதி “புதுமைப்பித்தன் கதைகள்” நவயுகப் பிரசுராலயத்தால் வெளியிடப்பட்டது.


1944ல் டி.எஸ்.சொக்கலிங்கம் தொடங்கிய தினசரியில் சேர்ந்து பின் விலகித் திரைப்படத் துறையில் நுழைந்தார்.1946ல் ஜெமினியின் ‘அவ்வை,’காமவல்லி’ படங்களுக்கு பணிபுரிந்த பின் பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.தியாகராஜ பாகவதரின் ராஜமுக்தி படத்திற்காக புனேயில் இருந்த போது காசநோய்க்கு ஆளானார். மே 1948ல் திருவனந்தபுரத்திற்கு திரும்பி,ஜூன் 30 அன்று மறைந்தார்.


ஓமனா என்றால் ஒரு கிளுகிளுப்பு - அது ஏன்? ஹி ஹி


1.  லவ் பண்றப்போ அவளோட கடைக்கண் பார்வைக்காக ஏங்குனேன்


 இப்போ?


 எங்கே கூட்டிட்டுப்போனாலும் கடைப்பக்கம் தான் அவ பார்வை போகுது, செலவு வெச்சுடறா


----------------------


2. எனக்கு கிருஷ்ணரா இருக்கற ஆளை விட ராமரா இருக்கும் ஆள் தான் புருஷனா வேணும்..


ஓஹோ, அப்போ சந்தேகப்படற புருஷன் ஓக்கேவா?




------------------



3. இந்த அரசு ஏழை மக்களுக்கானதல்ல, ஹை க்ளாஸ் மக்களுக்கானதுன்னு எப்ப





----------



4.பீர்க்கங்காய் -இல் இருந்துதான் பீர் தயாரிக்கப்படுகிறதா? டாஸ்மாக் மாக்கானின் சந்தேகம்





---------------


5. கோ எஜூகேஷன் = ஃபிலிம் இன்ஸ்டிடியூட் ஸ்டூடண்ட்ஸ்க்கு ஒரு சக்சஸ் பொலிடிகல் த்ரில்லர் எடுப்பது எப்படின்னு கோ படம் போட்டு சொல்லித்தருதல்?




-----------------------------






6. புரோட்டா கால் = ஆஃபீஸ்ல டென்ஷனோட இருக்கும்போது மனைவி ஃபோன் கால் போட்டு “வர்றப்போ புரோட்டா பார்சல் வாங்கி வா” என சொல்வது


----------------------


7. கோவை செண்ட்ரல் தியேட்டர்ல மட்டும் எந்தப்படம் போட்டாலும் சுல் ஆகிடுதே, எப்படி என மற்ற தியேட்டர் ஓனர் விசாரிப்பது “ செண்டர்ல் பரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் % ஹிந்தில பரோ - நிரப்பு, ஃபுல்



-------------------------


8. ஆடித்தள்ளுபடியை முன்னிட்டு யாராவது கேர்ள் ஃபிரண்ட்சை கழட்டி விடுவதாக இருந்தால் சங்கத்தில் பதிவு செய்யவும் ஹி ஹி



---------------------------


9..  கிராமத்து தாவணி தேவதைகளின் அழகு மறைப்பு + கூடுதல் துப்பட்டா =இரட்டை ஜடை


-----------------------------

10. சைன் தீட்டா, காஸ் தீட்டா, டேன் தீட்டா இதெல்லாம் கணக்கு பாடத்தில் வரும் தீட்டா? # தீட்டு



-------------------------


என்னடா விளையாட்டு இது பிக்காளிப்பசங்களா????? பயமா இருக்குல்ல...............

11. தியேட்டரில் எனக்கு பின் சீட்டில் அமர்ந்திருக்கும் கள்ளக்காதல் ஜோடி முன் வரிசையில் வந்து அமருமாறு கேட்டுக்கொள்கிறேன் # கழுத்து வலிக்குது


--------------------


12. நன்றி உள்ள வளர்ப்புப்பிராணிகளுக்கான குடும்பக்கட்டுப்பாட்டு வாசகத்தை ஏன் நாம படிக்கற நூலகத்தில் எழுதி வெச்சிருக்காங்க? # டோண்ட் மேக் நாய்ஸ்



-------------------

13. போக்குவரத்து விதி - கீப் லெஃப்ட் =  சின்ன வீட்டை உன் இடப்பக்கமா கூட்டிட்டு போ



----------------------


14. டவுன்பஸ்ஸில் ஸ்டேண்டிங்கில் வரும் இறக்க சுபாவம் உள்ள பெண்கள் பின்னால் நிற்கும் உயர ஆண்கள் பிறை நிலாக்களின் தூர தர்ஷன் காணப்பெறுகிறார்கள்



----------------------------------


15. ஓமனா - இந்தப்பேரைக்கேட்டாலே தமிழனுக்கு கிளுகிளுப்பா இருக்கே, என்ன காரணம்? # கேரளா




---------------------





16. முறைப்பெண்ணுக்கு  முத்தம் கொடுக்காத ஆணும்,முறைப்பையனிடம் வம்பு வளர்க்காத பெண்ணும் இந்த உலகத்தில் இல்லை



-----------------


17. .சர்வர், காபில ஈ செத்துக்கிடக்கு..


. சத்தம் போடாதீங்க, கொலைக்கேஸ்ல மாட்டிக்கப்போறீங்க!


-------------------------------

18. . ஆந்திராப்பெண்ணை லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டா சமையல்ல அதி”கார” துஷ் பிரயோகம் பண்ணுவா, பரவாயில்லையா?




-----------------------

19.  ரொம்ப சோம்பேறியா, மெதுவா இயங்கும் ஆமை  200 ஆண்டுகள், சுறுசுறுப்பா இருக்கும் முயல் 15 ஆண்டுகள் ஆயுட்காலம் # நீதி - ஜாலியா இரு,.ஹி ஹி



----------------------------


20.  கர்நாடகா சி எம்மும், நயன் தாராவின் லவ்வரும் 1, அடிக்கடி மாறிட்டே இருக்கும்



-----------------------


நான் மட்டும் அடி வாங்கணுமா.... விட்ருவமா...



21. .காட்டு காட்டுன்னு காட்டிட்டேன் என பஞ்ச் டயலாக் பேச தகுதி உள்ள ஒரே நபர் - பூனம் பாண்டே , பாண்டிய நாட்டுப்புதல்வி?


------------------------------


22. . நித்தியானந்தாவின் COT இலாகா அதிகாரி ஜிஞ்சிதாவா? ஆர்த்திராவா? சி பி ஐ திணறல் - அட்ரா சக்க டுபாக்கூர் செய்திகள்




----------------------




23.  அந்தக்கால ஆள்ங்க தான் பாடி ஸ்ப்ரே மாதிரி  யூஸ் பண்ணுவாங்க, லேட்டஸ்ட் ஆளுங்க ப்ரா ஸ்ப்ரேதானே யூஸ் பண்ணனும்?




------------------------


24. கண்ணியத்தை கட்டிக் காக்கும் இயக்கம் தி மு க - கருணாநி # கன்னியை கட்டறாங்க, சொத்தை காக்கறாங்க,கண்ணியம்னா இன்னா தலைவா?


-----------


25. சிம்பு - என் லைஃப்ல ஒவ்வொரு ஜிகிடியையும் நானே கஷ்டபட்டு செட் பண்ணேன் ,


கவுண்ட மணி - இஷ்டப்பட்டு பண்ணனும்டா நயன் தாரா மண்டையா



------------------------

We do not need magic to transform our world. We carry all of the power we need inside ourselves already.” - J.K. Rowling

Wednesday, July 11, 2012

‘கரகாட்டக்காரன் காமெடி கலக்கலர் குள்ள மணி பேட்டி @ கல்கி

http://www.varietydirectory.com/cinema/photos/kullamani-960.jpg 

கரகாட்டக்காரன்படத்தில் கார் காமெடியில்பழைய ஈயம் பித்தாளைக்குப் பேரீச்சம்பழம், பழைய ஈயம் பித்தாளைக்குப் பேரீச்சம்பழம்என்று கூவி கவுண்டமணியிடம் அடிவாங்கும் நகைச்சுவை நடிகர் குள்ளமணியையும், அந்த காமெடி காட்சியையும் ரசிகர்கள் மறந்திருக்க முடியாது


 பல முன்னணி நடிகர்களுடன் நடித்த அறுபது வயது குள்ளமணியை கே.கே.நகரில் அவரது வீட்டில் சந்தித்தோம். அவரைப் போலவே அவரது வீடும் அநியாயத்துக்கு தக்குனூண்டு. காலம் அவர் தோற்றத்திலும் வறுமை அவரது வீட்டிலும் தங்களது ரேகைகளை ஓடவிட்டிருந்தன.


நமக்கு யாரெல்லாம் வாழ்வு தந்து வழிகாட்டுறாங்களோ அவங்க கடவுளுக்கு இணையானவங்க. எனக்கு வாழ்வு தந்து விளக்கேத்தி வெச்சவர் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர். எனக்குச் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் அரிமலம்.

 நான் இப்படி குள்ளமாகப் பிறந்ததால் எனது தாய்-தகப்பன், சகோதரர்கள், உறவுகள் என நிறைய பேர் வருத்தத்தோடும், அவமானமாகவும் பார்த்தாங்க. பிற்காலத்தில் நான் சினிமாவில் நடிச்சு பிரபலமானப்போமணி நம்ம பையன்னு பெருமையாகச் சொன்னாங்க. இதுதாங்க சினிமாவோட வலிமை"- என பெருமைபொங்கச் சொல்கிறார் குள்ளமணி.


பிழைப்புத் தேடி சென்னை வந்த நான் ஜெய்சங்கரிடம் உதவியாளராய் வேலைக்குச் சேர்ந்தேன். அவர்தான் என்னை சினிமாவில் சேர்த்து விட்டார். ‘சுப்பிரமணியாக இருந்த என்னைகுள்ளமணிஎன பெயரிட்டவரும் ஜெய்சங்கர்தான். அவர் நடித்தநவாப் நாற்காலிஎன்னுடைய முதல் படம். அதன் பிறகு எம்.ஜி.ஆர்., சிவாஜி என ஆம்பித்து கமல், ரஜினி என தொடர்ந்து தனுஷ் வரை நடித்திருக்கிறேன்.


 அனைத்துத் தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தி, ஒரிய மொழிப் படங்களில் கூட நடிச்சுருக்கேன். தெலுங்கில் என்.டி.ஆர்., என்.டி.ஆர். மகன்கள், பேரன் என மூன்று தலைமுறையுடன் நடித்து விட்டேன். திரையுலகில் அனைத்துக் கலைஞர்களும் என்னிடம் அன்பாகத்தான் இன்னைக்கு வரைக்கும் பழகுறாங்க. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நான் இப்ப இருக்கிற வீடு கிடைக்கிறதுக்குக் காரணம்," என்று நன்றியுடன் எம்.ஜி.ஆரை நினைவுகூர்கிறார்.


எனக்குக் கல்யாணம் ஆனதே ஒரு சுவாரஸ்யமான கதை. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒருமுறை உடல்நலக் குறைவால் சிகிச்சை எடுத்துக்கிட்டிருந்தார். நான் நலம் விசாரிக்கப் போனேன். ‘மணி, எனக்கு உடம்பு சுகமில்லாம போனவுடனே, கவனிக்க என் சம்சாரம், உறவுகளெல்லாம் பக்கத்துல இருக்காங்க. உனக்கு இது மாதிரி வேணும், போய்க் கல்யாணம் பண்ணிக்க" என்றார். நான் அவரின் அறிவுரைக்கேற்ப கல்யாணம் பண்ணிக்கிட்டேன். என் மனைவி ராணி நல்ல உயரமாய் இருப்பாங்க. எங்களுக்குள் நெட்டை-குட்டை பேதமெல்லாம் கிடையாது. எனக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு இருக்காங்க.

நான் வழக்கமாக சபரிமலைக்கு மாலை போடுவேன். அப்போ ஒரு சமயம் கருப்புச் சட்டை-வேட்டி கெட்டப்பில் டைரக்டர் என்.கே.விஸ்வநாதன் வீட்டுக்குப் போனேன். நான் போன சமயம் வீட்டில் எல்லோருமே டி.வி.யில் பேய்ப் படம் பார்த்துக் கிட்டிருந்தாங்க. கதவைத் தட்டியவுடன் திறந்து என்னைப் பார்த்தவங்க, ஏதோ டி.வி.யில் பார்த்த பேய்தான் வந்திடுச்சுன்னு நினைச்சு பயந்துட்டாங்க.

நீங்க பயப்படும் மாதிரி நான் பேய் கிடையாது சாமி - அய்யப்ப சாமின்னு சொல்லி பயத்தைப் போக்கினேன்.

அபூர்வ சகோதரர்கள்’, ‘பணக்காரன்’, ‘மைடியர் மார்த்தாண்டன்உட்பட பல படங்களில் இளையராஜாகுள்ளமணின்ற என் பேர் வர்ற மாதிரி பாட்டுக்கு மெட்டு அமைத்திருப்பார். ஒருமுறை ராஜா சாரிடம்ஏன் என் பெயர் பாடலில் வர்ற மாதிரி மெட்டு போட்டீங்கன்னு?’ கேட்டேன். அதுக்கு அவர்,‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும், பொண்ணுதான்ற பாட்டில் ஒரு இடத்தில் உன் பெயர் வருது, கல்யாண வீட்டில் இந்தப் பாட்டைப் போடுவாங்க. மங்களகரமான நிகழ்ச்சிகளில் உன் பெயரைச் சொல்றது நல்ல விஷயம்தானே? ரொம்ப நாளாய் உன்னைத் தெரியும். நீ ரொம்ப நல்லவன். உனக்கு ஏதாவது செய்யணும்னு தோணிச்சு, என்னால முடிஞ்சதைப் பண்ணினேன்என்றார்.


ஒரு நிமிடம் நான் நெகிழ்ந்து போயிட்டேன். இந்த மாதிரி பெரியவங்களோட அன்பும், ஆசீர்வாதமும்தான் என் சொத்து.

நான் தற்சமயம் அறிமுக இயக்குனர்கள் மற்றும் மன்சூர் அலிகான் படங்களில் நடிக்கிறேன். தவிர, ஸ்டார் நைட் என்ற பெயர் ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளைப் பல்வேறு ஊர்களில் நடத்துகிறேன். சினிமாவில் உழைப்பு, திறமையைவிட, நேரம் ரொம்ப முக்கியம். எனக்கு புரட்சித் தலைவியின் கையால் கலைமாமணி விருது கிடைத்தால் சந்தோஷப்படுவேன்.


ஷூட்டிங் நடக்கிற சமயத்தில் என் உருவத்தைப் பார்த்து ரசிகர்கள் சிரிப்பாங்க. கிண்டல் பண்ணுவாங்க. நடிகர்களின் காதல் கிசுகிசு பத்தி தெரியுமான்னு கேட்பாங்க. பதில் சொல்லலைன்னா அடிக்க வருவாங்க. இதுகூடப் பரவாயில்லை. ஷூட்டிங்குக்காக, பயணம் செய்யும் போது, ரயிலில் என்னால் வேகமாக ஏற முடியாது. உடனே படக்குழுவினரில் ஒரு சிலர் கிண்டல் பண்ணுவாங்க. கோபப்படுவாங்க. இந்தச் சூழ்நிலைகளில் மனசுக்கு ரொம்பக் கஷ்டமாய் இருக்கும். உங்களைச் சிரிக்க வைக்கும் என்னைப் போன்ற குள்ளர்களை வார்த்தைகளால் காயப்படுத்தாதீங்க," என்கிறார்.

http://i.ytimg.com/vi/EBtZGxQcHaM/0.jpg


நன்றி - கல்கி, புலவர் தருமி
படங்கள்: .சுந்தர்ராஜன்

THE TAKING OF PELHAM 123 - ஹாலிவுட் ஆக்‌ஷன் த்ரில்லர் - - சினிமா விமர்சனம்

http://5wordmoviereviews.files.wordpress.com/2012/01/pelham-123.jpgநியூயார்க்ல Manhattan பகுதில இருக்கற சப்வே ரயில் ஒண்ணை 4 பேர் ஹை ஜாக் பண்ணிடறாங்க.. என்னமோ வீரப்பன் ராஜ்குமாரை கடத்துன மாதிரி எப்படி அவ்வளவு சுலபமா அதை அவனால செய்ய முடிஞ்சது? அதுக்கு எல்லாம் விடை படத்துல இருக்கு.. 4 பேர்ல மெயின் வில்லன் பேரு ரைடர்.. அவன் ரயிலை ஹை ஜாக் பண்ணிட்டு முதல் வேலையா டிபார்ட்மெண்ட்டுக்கு ஃபோனை போட்டு அவனோட டிமான்ட்ஸ் என்ன?ங்கறதை சொல்றான்.. 

100 கோடி ரூபா கேட்கறான்.. அவன் கைல 37 பயணிகள் பணயக்கைதியா இருக்காங்க.. வில்லன் கிட்டே பேச்சு வார்த்தை நடத்துபவர் தான் ஹீரோ.. இவர் என்ன போஸ்ட்ல இருக்கார்னா கவர்மெண்ட் யார் கிட்டே ரயிலை வாங்கலாம்னு அப்ரூவல் தர்ற அதிகாரி.. டிசைடிங்க் அத்தாரிட்டியே அண்ணன் தான்.. ஆனா அவர்  ஆல்ரெடி ஆ ராசா மாதிரி சாரி அவர் லெவலை விட கம்மியா 50 லட்சம் ரூபா லஞ்சம் வாங்குன வழக்குல சிக்கி விசாரணை நடந்துட்டு இருக்கு.. ஆனாலும் அண்ணன் டியூட்டில தான் இருக்கார்..


வில்லன் முதல் கட்ட பேச்சு வார்த்தைல அவ்ளவ் பணம் கேட்டதும் அந்த நகரத்தை மேய்க்கற மேயர் அங்கே ஆஜர் ஆகறார்.. இனிமே பேச்சு வார்த்தையை நான் பார்த்துக்கறேன்.. நீ கிளம்புன்னு டகார்னு ஸ்ருதி கமல்  சித்தார்த்தை கழட்டி விட்ட மாதிரி கழட்டி விட்டு அனுப்பிடறார்.. 


மேயர் வில்லன் கிட்டே பேச்சு வார்த்தை நடத்தும்போது வில்லன் எனக்கு பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும்கறான்.. அதாவது ஹீரோ கிட்டே தானே ஆல்ரெடி பேசினேன்.. அவர் கிட்டேதான் பேசுவேன்.. குறுக்கால எந்த நாயும் வரக்கூடாதுன்னு மேயரை கேவலமா திட்டிடறான்.. 


 அவசர அவசரமா ஹீரோவை போய் கூட்டிட்டு வந்து அவன் கூட பேச விடறாங்க.. இதுல என்ன பிரச்சனைன்னா வில்லன் முன் கோபக்காரன்.. ஆன்னா ஊன்னா பயணிகள்ல ஒரு ஆளை ஷூட் பண்ணி மிரட்றவன்.. அதனால அவன் சொல்றதை கேட்டுத்தான் ஆகனும், வேற வழி இல்லை.. காங்கிரசை பகைச்சுக்கிட்டா சி பி ஐ நெருக்கும்னு கலைஞர் பயந்துக்கறாரே, அது மாதிரி./.. 
 
 
ஹீரோவும், வில்லனும் பேச்சு வார்த்தை நடத்தறதை  மேயர் டேப் பண்ணி கவனிக்கறார்.. அவருக்கு என்ன டவுட்னா ஊர்ல இத்தனை பேர் இருக்கும்போது வில்லன் ஏன் ஹீரோவை பேச்சு வார்த்தைக்கு கூப்பிடறான்னு.. வில்லனுக்கு தேவை பணம்.. அதை குடுத்தா சரி.. பேச்சு வார்த்தை யார் செஞ்சா என்ன? ஹீரோவும் இந்த கடத்தல்ல பங்கு வகிச்சிருக்காரா? இதான் அவர் டவுட். 
 
 
http://goodfilmguide.co.uk/wp-content/uploads/2010/01/Pelham-123-Denzel-Washington.jpg

 ஹீரோ வீட்டுக்கு ரெயிடுக்கு ஆள் அனுப்பறார்.. ஹீரோ கிட்டே தகவல் சொல்லிடறார் மேயர்.. ஹீரோ அவர் மனைவிக்கு ஃபோன் பண்ணி ரெயிடு வருது, கோ ஆபரேட்  பண்ணுங்கறார்.. 


பேச்சு வார்த்தைல சம்பந்தமே இல்லாம வில்லன் ஹீரோ கிட்டே ஹீரோ லஞ்சம் வாங்குன வழக்கு பற்றி விசாரிக்கறான்,.. லஞ்சம் வாங்குனதை ஒத்துக்கோங்கறான்.. கோடிக்கணக்குல ஊழல் பண்ணுன பெரிய தலைங்க எல்லாம் கமுக்கமா இருக்கும்போது ஊழலே பண்ணாம பண்ணுனேன்னு எப்படி ஒத்துக்க? ஹீரோ தான் எந்த லஞ்சமும் வாங்கலைங்கறார்.. 

 உடனே வில்லன் இப்போ உண்மையை சொல்லலைன்னா பயணி ஒருவரை ஷூட் பண்ணிடுவேன்கறான்.. உடனே ஹீரோ  உண்மையை ஒத்துக்கறதா சொல்லி பொய்யா தான் லஞ்சம் வாங்குனதா சொல்றார்..  மாற்றுத்திறனாளியா இருக்கும் தன் மகனுக்கான ஆபரேஷன் செலவுக்காக அந்த லஞ்சத்தை வாங்குனதா சொல்றாரு.. 


 இப்போ ஆடியன்ஸுக்கும், மேயருக்கும் டவுட்  வந்துடுது.. நிஜமாவே ஹீரோ லஞ்சம் வாங்குனவரா?


ரயில்ல பயணக்கைதில நம்ம கடலை மன்னன் கட்டதுர மாதிரி ஒரு ஆள் அவன் லவ்வர் கிட்டே லேப் டாப்ல கடலை போட்டுட்டு இருக்கான்.. சேட்டிங்க் நடக்கறப்ப இந்த ஹைஜாக் நடக்கறதால ரயில்ல என்ன நடக்குதுன்னு வெப் காமரா மூலம் அரசுக்கு தெரிய அந்த கடலை ராணி ஹெல்ப் பண்றா - நீதி - கடலை வறுப்பதிலும்  நாட்டுக்கு உபயோகம் உண்டு..  
 
 
வில்லனை பற்றி விசாரிக்கறப்ப  தெரிய வரும் உண்மைகள் - வில்லன் ஆல்ரெடி 200 கோடி ஊழல் வழக்குல மாட்டினவன்.. கோர்ட்ல 100 கோடி திருப்பி கொடுத்து மீதி 100 கோடியை பதுக்கிட்டான்.. அதுக்கு ஜெயில் தண்டனை அனுபவிக்கும்போது அதுல இருந்து தப்பினவன்.. இந்த ரயிலை ஹை ஜாக் பண்ணுனதால  ஷேர் மார்க்கெட் எல்லாம் பயங்கரமா டவுன் ஆகிடுது..அவன் பிளான் என்னன்னா விட்ட 100 கோடியை இதுல பிடிக்கலாம்னு.. 


 உதாரணமா ஒரு ஷேர் விலை ரூ 100 அப்டின்னா  இந்த ஹைஜாக்கால அதன் விலை ரூ 50 ஆகும்.. எல்லா பணத்துக்கும் , அதாவது 100 கோடிக்கும் அந்த ஷேரை வாங்கிப்போட்டா மீண்டும் ஷேர் ரேட் ஏறும்போது அவன் விட்ட 100 கோடி கிடைச்சுடும்.. பணயத்தொகை மிச்சம்.. போனஸ் மாதிரி.. 

 இதான்  வில்லன் பிளான்


பணயத்தொகையான ரூ 100 கோடியை நானா இருந்தா டி டியா வாங்கி இருப்பேன், அல்லது என் அக்கவுண்ட் நெம்பர் சொல்லி அதுல பணம் போடச்சொல்லி இருப்பேன் ஹி ஹி .. ஆனா வில்லன் கேஷா வேணும்கறான்..


 அந்த பணத்தை எடுத்துட்டு ஒரு வேன் கிளம்புது.. அதுக்குப்பாதுகாப்பா 6 பைக் , 2 போலிஸ் ஜீப்.. இதைத்தான் எங்க ஊர்ப்பக்கம் தண்டம் வேற முட்டுக்கோல் வேறம்பாங்க.. அதாவது அந்த நாய்க்கு 100 கோடி கொடுக்கறதே  தண்டம் தான்.. இதுல  செக்யூரிட்டி செலவு வேற.. 


 பணம் கொண்டு போற வழில ஆக்சிடெண்ட்.. பட்ட காலிலே படும், கெட்ட ஃபிகரே மேலும் மேலும் கெடுவாள்னு சொல்ற மாதிரி  விபத்து நடந்த வேன் கவிழ்ந்து கிடக்கு.. இந்த வில்லன் அதை புரிஞ்சுக்காம  என்னை ஏமாத்த பார்க்கறீங்க.. எந்த போலீசும் வேணாம்.. பணத்தை ஹீரோ கிட்டே கொடுத்து அனுப்புங்கறான்.. 


 எல்லாருக்கும் டவுட்.. ஹீரோ மேல.. பார்ட்னர்னு நினைக்கறாங்க.. ஆனாலும் வேற வழி இல்லை..  ரிஸ்க் எடுத்து தான் ஆகனும்/./  அதனால பணத்தை ஹீரோ கிட்டே கொடுத்து அனுப்பறாங்க.. என்ன நடக்குது? என்பது க்ளைமாஸ்ல.. படம் மொத்தம் ஒண்ணே முக்கால் மணி நேரம் ஓடுது.. விறு விறுப்புதான்.. ஆனா பெரிய பிரமாதமான படம்னு சொல்லிட முடியாது.. 
 
 
http://mimg.ugo.com/200906/9874/pelham-123-review-2.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்


1. என்னப்பா, ஒரு ஃபிகரை கரெக்ட் பண்ணூனியே எ, என்னாச்சு?
 
  அவ மேட்டர் முடிஞ்சதும் பணம் கேட்டா.. அப்போதான் அவ ஒரு மேட்டர்னே எனக்கு தெரிஞ்சது
 
 
2. கண்டக்டர் ( டி டி ஆர்?)  கிட்டே ஃபோனைக்குடம்மா.. உன் பேர் என்ன?
 
 ரேஜினா ( நல்ல வேளை.. ஹி ஹி )
 
 
நீ எதா வேணாலும் இருந்துட்டுப்போ .. நான் சொல்றதை  கவனமா கேட்டுக்கோ.. 



3. சரி.. உன் பேர் என்ன?
 
 ம்.. உங்கம்மாவோட புருஷன்.. 
 
 
 
4.  நீ சொல்ற படி பணத்தை அடுத்த வியாழக்கிழமைக்குள்ளே குடுக்கவா?
 
 வாரக்கணக்குல  அவகாசம் கேட்டா எப்படி? மணிக்கணக்குல சொல்லு



5. இருக்கறதுலயே பெரிய சுகம் பதவி சுகம் தான்.. என் பதவி காலாவதி ஆகி புது மேயர் வந்தா அவன்  நல்லவனா இருந்தா என் சாயம் வெளுத்துடும்.. 
 
 ஏன் அவ நம்பிக்கையா பேசறீங்க? நீங்க அடுத்த மேயரா வர மாட்டீங்களா? 
 
 மக்களுக்கு ஏதாவது செஞ்சு இருந்தாத்தானே?


6.  குடும்பம், குட்டி இருக்கறவன் தான் சாவைப்பற்றி கவலைப்படுவான்.. நான் ஏன் கவலைப்படனும்?



7. வில்லன் -இங்கே இருக்கும் பயணிகள் எல்லாரும் இப்போ என் பணயக்கைதிகள்... அவங்களுக்கு நான் தான் ஃபாதர்.


 ஓ! நீ கத்தோலிக் கிறிஸ்டினா?



8. உன் பேரென்னா?


 ரைடர் 

 ஓட்டறவனா? ( RIDER?)


 நோ, RYDER
 
 
9.  சார்.. ஹைஜாக்கர் ரொம்ப பிரில்லியண்ட்டா இருக்கான்.. 
 
 
 அப்படி பிரில்லியண்ட்டா இருந்தா ஏன் முட்டாளான உன் கிட்டே பேசனும்?


10. உங்க மேயர் வேஸ்ட்./. எங்காவது போய் மேய்ஞ்சுட்டு வரச்சொல்லு
 
http://0.tqn.com/d/movies/1/0/L/b/T/pelhampic3.jpg



11. இந்த உலகத்துல தப்பு பண்னாதவன் மனுஷனே இல்லை.. 


12. நான் செத்துடுவேனோன்னு பயமா இருக்கு 


 ஓவர் கற்பனை உடம்புக்கு ஒத்துக்காது



13.  ஒரு வருஷம் மேயரா இருதுட்டு வெறும் ஒரு ரூபாய் தான் சம்பளம் வாங்கிக்கறியாமே?இவ்வளவு காஸ்ட்லி கோட் போட்டிருக்கியே? இதுக்கு பக்கத்து வீட்ல கடன் வாங்குனியா? 


14. நான் என் மனைவி மேல உயிரையே வெச்சிருந்தேன்.. அவளும் உயிரை வெச்சிருந்தா.. ஆனா வேற ஒருத்தன் மேல 


15. என்னைப்பொறுத்த வரை பணம் தான் உலகம்


16. அரசியல்வாதிங்க தப்பு பண்ண காரணமே  அரசாங்கம் தான், தப்பு பண்ணுனவன், ஊழல் பண்ணுனவனை  நிக்க வெச்சு சுடாம விசாரனை,  வழக்கு கோர்ட்னு  இழுத்தா அவன் நெஞ்சு வலின்னு போய் படுத்துக்கறான்


17.  மாமு.. எனக்கே வைக்கனும்னு நினைக்காத பாமு


18. ஒரு தனி மனுஷன் பணத்துக்காக  ஒரு கவர்மெர்ண்ட்டையே ஆட்டிப்படைச்சுட்டு இருக்கான்.. என்னய்யா பண்றீங்க?


19.. டேக் திஸ் கன் ஃபார் யுவர் செக்யூரிட்டி 

 சப்போஸ் அவங்க செக் பண்ணா?

 மேலே போய்ச்சேர வேண்டியதுதான்
 
 
http://carlosdev.files.wordpress.com/2009/11/the_taking_of_pelham_1_2_3_19.jpg?w=500


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. ஹீரோவுக்கும், வில்லனுக்கும் இடையே நடக்கும் டெலிஃபோன் கான்வர்சேஷன் கலக்கல்.. ஹீரோ எகிறும்போது வில்லன் இறங்கி வருவதும், வில்லன் கோபமாக பேசும்போது ஹீரோ பம்முவதும்.. நல்ல காம்பினேஷன்


2. வில்லன் கிட்டே ஹீரோ தான் ஊழல் வாதி என பொய்யா ஒத்துக்கும் சீன்.. அதனால தான் வில்லன் இவன் நம்ம இனம் என நம்பி ஹீரோவை வர சொல்வது,,. அந்த ஐடியா சூப்பர்.. 


3. ஒண்ணே முக்கால் மணி நேரப்படத்துல  விறு விறுப்பு குறையாம படம் ஸ்பீடா போகுது.. வன்முறை, ரத்த தெறிப்பு எல்லாம் இல்லாம.. 


4. படத்துல முக்கியமான கேரக்டர்கள் மொத்தமே 5 பேர் தான்.. ஹீரோ, வில்லன், மேயர், ஹீரோ மனைவி,மகன்.. கனகச்சிதமான பங்களிப்பு..
 
 
http://collider.com/wp-content/image-base/Movies/T/Taking_of_Pelham_1-2-3/Movie_Images/The%20Taking%20of%20Pelham%20123%20movie%20image%20(5).jpg



இயக்குநரிடம் சில கேள்விகள்



1. ஹீரோ டியூட்டி முடிஞ்சு கிளம்பிடறார்.. அடுத்து டியூட்டிக்கு வர்ற ஆள் பேச்சு வார்த்தை யை டீல் பண்றார்.. ஆனா அதுக்கு வில்லன் ஒத்துக்கலை.. ஹீரோட்ட தான் பேசுவேன்னு அடம் பிடிச்சு தன் கருத்தை வலியுறுத்த, மற்றவர்களை பயமுறுத்த பயணிகள்ல ஒரு ஆளை ஷூட்  பண்ணிடறார்.. அதுக்கு என்ன ரீசன்? அதை கடைசி வரை சொல்லவே இல்லையே?


2. வில்லன் எதுக்காக ஹீரோ கிட்டே தேவை இல்லாம கடலை போட்டுட்டு இருக்கான்? ஹீரோ பேசறதுல ஒரு அர்த்தம் இருக்கு.. டைம் பாஸ்.. இன்னும் டைம், கெடு டைம் வாங்க பேசறார்.. வில்லன் அதுக்கு ஈடு கொடுத்து பேச என்ன அவசியம்?


3. லேப்டாப்ல கடலை போடும் பார்ட்டி தன் ஃபிகர் கிட்டே நியூஸ் சேனல்ல கனெக்ட் பண்ணுனு சொல்றான்.. அவ அப்படியே செய்யறா.. லேப் டாப் ஓப்பன் பண்ணுன பொசிஷன்லயே இருக்கு.. அதை கிராஸ் பண்றப்போ 4 தத்திங்கள்ல ஒருத்தனுக்குக்கூட டவுட் வராதா?


4. ஒரு பணயக்கைதி வில்லன் கிட்டே மாட்டறார்.. ஆம்பளையா இருந்தா நீ ஷூட் பண்ணி பாரு என வம்பை விலை கொடுத்து வாங்கறார்.. அது ரொம்ப செயற்கையான சீனா இருக்கு.. இந்த மாதிரி கிரிட்டிக்கல் சிச்சுவேஷன்ல யாரா இருந்தாலும் பம்முவாங்க.. அவன் ஏன் வாயைக்கொடுத்து உயிரை விடனும்?

5. 100 கோடி பணத்தை முதல்ல ஒரு ஜீப்ல கொண்டு வர்றாங்க.. விபத்து நடந்ததும்  அதை ஹீரோ ஒரே ஆளா தூக்கிட்டு வர்றார்.. வில்லனும் அதை வாங்கறான்.. 100 கோடி ரூபாயை ஒரு ஆள் தனியா தூக்க முடியுமா?



 http://images.starpulse.com/pictures/2009/06/06/previews/Aisha%20Tyler-SGG-087809.jpg

Director:

Tony Scott

Writers:

Brian Helgeland (screenplay), John Godey (novel)

Stars:

Denzel Washington, John Travolta and Luis Guzmán
 
 
 
 
 

Box Office

Budget:

$100,000,000 (estimated)

Opening Weekend:

$23,373,102 (USA) (14 June 2009) (3 Screens)

Gross:

$65,247,655 (USA) (16 August 2009) 
 
 
சி.பி கமெண்ட் - ஆக்‌ஷன் த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம் .2009ல ரிலீஸ் ஆச்சு
 
 
http://i.ytimg.com/vi/BuHSJDS07gI/0.jpg