Monday, September 12, 2011

சம்சாரம் காணாம போனா மொத ஸ்டெப்பா என்ன பண்ணனும்?

Photographer Nelleke Pieters
Photographer Nelleke Pieters
1. ஒருகொசுவர்த்தி சுருளின் புகை 100 சிகரெட்டுகளின் புகைக்கு சமம் - டாக்டர் சந்தீப் சால்வி # அய்யய்யோ!கேன்சர் கன்ஃபர்மா?

-------------------------------

2. உள்ளாட்சித்தேர்தலில் திமுகவுக்கு வெற்றிவாய்ப்பு கருணாநிதி # ஓவர்கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு ஆகாதுன்னு தல மங்காத்தால சொன்னதுஉங்களுக்குத்தானா?

------------------------------

3. ரூ.5 கோடி வீடு ஆக்கிரமிப்பு: மன்னர் பரம்பரையைச் சேர்ந்த 2 பேர் கைது  # இன்னொரு பெரிய பரம்பரை கைது எப்போன்னு தெரியல

---------------------------

4. ஊதியத்துக்காக நிறுவனங்களை மாற்றாதீர் : ஐ.பி.எம்., அதிகாரி அறிவுரை # அடிமாட்டு சம்பளத்துலயே காலம் தள்ளச்சொல்றீங்களா?

------------------------

5. காஞ்சிபுரம்-மனைவியைக் காணவில்லை, எனக் கணவர் போலீசில் புகார்  # ஜவுளிக்கடைகள்ல முதல்ல தேடிப்பாருங்க, மே பி சேலை செலக்டிங்க்

---------------------




6. சென்னையில் 19 சதவீத வீடுகளை வாங்க ஆளில்லை # ரொம்ப பெரிய வீடா இருந்திருக்கும், இப்போ எல்லாம் ”சின்ன வீட்டு”க்குத்தான் டிமாண்ட் ஜாஸ்தி

-------------------

7.உலகில் கவிஞர்களை உருவாக்குவதும் வாழவைப்பதும் பெண்கள்தான், படைப்பாளிகளை ரசிப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்களே.

------------------------

8. பொய் சொல்லி விடுப்பு எடுப்பதில் இந்தியர்கள் இரண்டாமிடம்! # ச்சே! தமிழர்கள் இருந்துமா முதல் இடத்தை பிடிக்க முடியல?

----------------------------

9. மங்காத்தா முதல் நாள் கலெக்‌ஷன் எந்திரன் கலெக்‌ஷனை மிஞ்சியது - த்ரிஷா ட்விட்டரில் # ராணால சான்ஸ் இல்லங்கறதுக்காக இப்படியா ரீல் விடறது?

-------------------------

10. சிறுவயது நண்பரை மணக்கிறார் மம்தா மோகன்தாஸ்!! #  ரொம்ப சின்ன வயசா இருக்கப்போகுது!ஓஹோ அவரு சின்னவயசுல அவருக்கும் சின்ன வயசா ? அப்போ சரி!

-----------------




11.டர்ட்டி பிக்சர்ஸ்-வித்யாபாலன் கிளுகிளு ஸ்டில்ஸ் வெளியீடு # நோ டர்ட்டி, ஒன்லி பியூட்டி & கிளாரிட்டி. சபாஷ்!சில்க் ஸ்மிதாஆத்மசாந்திஅடைக!

-----------------------------

12. திருப்பதியில் யுவனின் 2வது திருமணம் முடிந்தது  #  ஓக்கே, யுவனின் 3 வது திருமணம் முடிவாகும் வரை 2 வது பெண்ணை மொட்டைஅடிச்சுட்டுஇருப்பாரா?

----------------------------

13.  ஒரு ஆண் இன்னொரு ஆணிடம் பேசும்போது அவன் நோட்டம் போடுவது அவன் அருகில் இருக்கும் ஃபிகரை

------------------------

14. உங்க பொண்ணுக்கு டிரஸ்ஸிங்க் சென்ஸ் ஜாஸ்தின்னு சொன்னீங்க? ஆனா மிடி போட்டு கிளாமரா ஊர் சுத்துதே? ஹி ஹி டிரஸ் கம்மி,சென்ஸ் ஜாஸ்தி

-------------------------

15. காதலர்கள் கல்யாணம் செய்து கொண்டால்  அது தெய்வீகக்காதல் ஆவதில்லை, அதனால் தான் பல காதல்கள் தோல்வியில் முடிகின்றன போலும்

-----------------------------------




16. சிடுமூஞ்சி என பெயர் எடுத்த மேனேஜர் ஆஃபீசுக்கு யாராவது ஃபிகர் வந்தால் மட்டும் சிரபுஞ்சி ஆகிறாரே அது எப்படி? # ச்சே. பையனா பொறந்தது தப்போ?

----------------------------

17. மேனேஜர் ரூம்ல இருந்து எல்லாரையும் நோட் பண்றார்.. ஆனா அவர் ரூம்ல என்ன நடக்குதுன்னு நம்மால நோட் பண்ண முடியல.. #திங்க் பண்ணு..

-------------------------------

18.நான்தான் உன்னைபிடிக்கலைன்னு சொல்லிட்டனே, இன்னும் ஏன்என்னையேசுத்திவர்றே? மிஸ். பொண்ணு பிடிக்கலைன்னு சொன்னா பிடிச்சிருக்குன்னு அர்த்தமாமே?

-------------------------------

19. குறும்பு பண்ணாம இருந்தா அது குழந்தையே இல்லை, குறும்புத்தனம் பண்றது பிடிக்கலைன்னா அது நல்ல ஃபிகரே இல்லை # ரீ மிக்ஸ்

----------------------

20.தண்டனை இல்லா குற்றம் இந்த உலகில் ஒன்றுதான், பெண்ணின் இதயத்தை களவாடுவது

----------------------------





21. டியர், நீங்கதானே ஆஃபீஸ்க்கு வர்றப்ப சேலை கட்டி வான்னு சொன்னீங்க?

அடிப்பாவி , அதுக்காக முதல் மரியாதை ராதா மாதிரியா வர்றது?

---------------------------

22. டியர்,உன்னைப்பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கு..

ஏன்?

என்னை மாதிரி செம பர்சனாலிட்டியான ஆள் உனக்கு லவ்வரா கிடைச்சிருக்கே?

---------------------------

23. கல்யாண மண்டபங்களில் பெண்கள் விதவிதமான நகைகளை அணிந்துவந்து அனைவரையும் கவர்கின்றனர்,ஆண்கள் புன்னகையை மட்டும் வைத்து கவர்கிறார்கள்

---------------------------

24. கல்யாணமான பெண்ணால் அவள் கணவனுக்கு மட்டுமே இம்சை, கன்னிப்பெண்ணால் கணக்கற்ற இளைஞர்களுக்கு இம்சை # நீதி - ஆணால் யாருக்கும் இம்சை நோ

--------------------------

25. நீ உதைத்தால் நான் பந்தாவேன்.. அணைத்தால் அஃறிணை தாண்டி உயர்திணை ஜந்தாவேன் # ட்வீட் அந்தாதி

---------------------------------------

Sunday, September 11, 2011

12 ராசிகளுக்கான செப்டம்பர் மாத ராசி பலன்கள் பை பிரபல ஜோதிடர்

ராசிபலன்! - 'ஜோதிடரத்னா' கே.பி.வித்யாதரன்






நன்றி - சக்தி விகடன்

Saturday, September 10, 2011

மிடில் கிளாஸ் மக்களுக்கான டாப் 10 லோ பட்ஜெட் கார்கள் - ஒரு அலசல் கட்டுரை

http://www.ridelust.com/wp-content/uploads/booth-pros-of-paris.jpg 
 
டாப் 10 சிக்கனகார்கள்
 
'என் வருமானத்துக்கு ஏற்ற சிறந்த கார்’ என்கிற தேடலில்தான் பலர் ஷோ ரூம் ஷோ ரூமாக ஏறி இறங்குகிறார்கள். விலை குறைவான ஹேட்ச்பேக் கார்களுக்குத்தான் நம் நாட்டில் டிமாண்ட் அதிகம்!

காரின் விலையை மட்டும் பூதக் கண்ணாடி கொண்டு அலசி ஆராய்ந்து வாங்கினால் போதுமா? காரை வாங்கிய பிறகு பெட்ரோல், சர்வீஸ், இன்ஷூரன்ஸ் என்று எவ்வளவு செலவு வைக்கும் என்பதையும் அலச வேண்டாமா? இந்தியாவில் தற்போது அதிகமாக விற்பனையாகும் விலை குறைவான 10 கார்களை இப்படி அலசி ஆராய்ந்தோம்.


'காஸ்ட் ஆஃப் ஓனிங் தி கார்’ விவரங்களைக் கணக்கிடுவதற்கு, பொதுவாக மூன்று ஆண்டுகளுக்கு இன்ஷூரன்ஸ் செலவு எவ்வளவு ஆகும் என்பதையும் உத்தேசமாகக் கணக்கிட்டு இருக்கிறோம். இந்த மூன்று ஆண்டுகளில் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் எதுவும் இல்லை என்றால், முதலாண்டு பிரீமியத் தொகையில் இருந்து 20 சதவிகிதமும், இரண்டாவது ஆண்டு தொகையில் இருந்து 25 சதவிகிதமும் இன்ஷூரன்ஸ் பிரீமியம் குறையும்.


பொதுவாக, புதிய காருக்கு எக்ஸ் ஷோ ரூம் விலையிலிருந்து 5 சதவிகிதம் கழித்து 'ஐடிவி’ அதாவது Insured Declared Value தொகை நிர்ணயிக்கப்படும். அதனால், முதல் வருட இன்ஷூரன்ஸ் இல்லாமல் ஆன்-ரோடு விலையைக் கணக்கிட்டுள்ளோம். அதேபோல், காரின் பெட்ரோல் செலவைக் கணக்கிட... ஆண்டுக்கு 10,000 கி.மீ பயணம் செய்வோம் என்ற யூகத்தின் அடிப்படையில், இன்றைய தேதியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 67.50 என கணக்கில் கொண்டு காருக்கான பெட்ரோல் செலவைக் கணக்கிட்டுள்ளோம்!


 1. மாருதி ஆல்ட்டோ

நகரம், நெடுஞ்சாலை என இரண்டு விதமான சாலைகளிலும் பயணிக்கும்போது, ஆல்ட்டோ பொதுவாக லிட்டருக்கு 15.2 கி.மீ மைலேஜ் தரும். ஆண்டுக்கு 10,000 கி.மீ தூரம் பயன்படுத்துவோம் என்ற வகையில், மூன்று ஆண்டுகளுக்கு பெட்ரோலுக்காக மட்டும் நாம் செலவிடும் தொகை 1,33,221 ரூபாய். ஆல்ட்டோ காரை வாங்கும்போது நாம் செலுத்தும் இன்ஷூரன்ஸ் தொகை 8,678 ரூபாய். மூன்று ஆண்டுகளுக்கு இன்ஷூரன்ஸுக்காக நாம் செலவு செய்யும் தொகை மொத்தம் 22,129 ரூபாய்.
மாருதியைப் பொறுத்தவரை மூன்று இலவச சர்வீஸ் உண்டு. முதல் சர்வீஸை கார் வாங்கியதில் இருந்து 1 மாதம் அல்லது 1000 கி.மீ-க்குள் செய்ய வேண்டும். இது பொதுவாக சாதாரண செக்-அப்பாக மட்டுமே இருக்குமே தவிர, காரில் எதையும் மாற்ற மாட்டார்கள்.

இரண்டாவது சர்வீஸ், 6 மாதங்கள் அல்லது 5000 கி.மீ-க்குள் செய்ய வேண்டும். ஆயில் மற்றும் ஆயில் ஃபில்டரை மாற்ற 1,800 ரூபாய் செலவாகும். மூன்றாவது சர்வீஸ், 10 ஆயிரம் கி.மீ அல்லது ஒரு ஆண்டுக்குள் சர்வீஸ் செய்ய வேண்டும்.  மூன்றாவது சர்வீஸ் 1 ஆண்டு அல்லது 1000 கி.மீ இடைவெளியில் சர்வீஸ் செய்ய வேண்டும். இதற்கும் சுமார் 1,800 ரூபாய் செலவாகும். அடுத்தடுத்த 10,000 கி.மீ சர்வீஸ்களில் பெரிய பிரச்னைகள் எதுவும் இல்லாமல் சர்வீஸ் செய்வதற்கு 3,000 ரூபாய் செலவாகும். அப்படிப் பார்க்கும்போது, 3 ஆண்டுகளில் மாருதி ஆல்ட்டோ காருக்காக நீங்கள் செலவிடும் தொகை 1,64,950 ரூபாய்!

2. மாருதி ஸ்விஃப்ட் 


இந்தியாவில் அதிகமாக அனைவராலும் விரும்பி வாங்கப்படும் கார், மாருதி ஸ்விஃப்ட். இது பொதுவாக, லிட்டருக்கு 11.5 கி.மீ  மைலேஜ் தருகிறது. ஆண்டுக்கு 10,000 கி.மீ கணக்கின்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஸ்விஃப்ட் காருக்கு பெட்ரோல் நிரப்ப 1,76,086 ரூபாய் செலவு செய்கிறோம். ஸ்விஃப்ட்டைப் பொறுத்தவரை முதல் சர்வீஸ் 1 மாதம் அல்லது 1,000 கி.மீ; இரண்டாவது சர்வீஸ் 6 மாதங்கள் அல்லது 5,000 கிமீ; மூன்றாவது சர்வீஸ் 1 ஆண்டு அல்லது 10,000 கி.மீ என்பதுதான் சர்வீஸ் இடைவெளி. ஆனால், அதன் பிறகு ஸ்விஃப்ட்டில் இருப்பது 'கே-சீரிஸ்’ இன்ஜின் என்பதால், பத்தாயிரம் கி.மீ அல்லது ஆண்டுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்தால் போதுமானது. ஆயில் மற்றும் ஆயில் ஃபில்டர்களை மாற்ற 2,000 ரூபாயும், பத்தாயிரம் கி.மீ-க்கு ஒருமுறை ஜெனரல் சர்வீஸ் செய்ய அதிகபட்சமாக 5,000 ரூபாயும் செலவாகும். இதன்படி காரின் பராமரிப்புச் செலவுகளுக்காக மட்டும் நீங்கள் செலவு செய்யும் தொகை சுமார் 12,000 ரூபாய். இதன்படி மூன்று ஆண்டுகளுக்கு நீங்கள் ஸ்விஃப்ட் காருக்காகச் செலவு செய்யும் தொகை 2,20,446 ரூபாய்!


3. டொயோட்டா எட்டியோஸ் லிவா 

டொயோட்டா அறிமுகப்படுத்தி இருக்கும் சின்ன கார் எட்டியோஸ் லிவா. இது பொதுவாக, லிட்டருக்கு 14 கி.மீ மைலேஜ் தருகிறது. இதன்படி மூன்று ஆண்டுகளுக்கு இன்றைய விலையின்படி நீங்கள் 1,44,642 ரூபாய் பெட்ரோலுக்காகச் செலவிடுவீர்கள்.

எட்டியோஸ் லிவாவை வாங்கியதில் இருந்து 1 மாதம் அல்லது 1000 கி.மீ-க்குள் முதல் சர்வீஸ் செய்ய வேண்டும். இது இலவச சர்வீஸ் என்பதோடு, ஆயில் மற்றும் ஆயில் ஃபில்டர் எதுவும் மாற்றமாட்டார்கள் என்பதால், சர்வீஸ் செலவு எதுவும் இருக்காது. அடுத்து நேராக 10,000 கிமீ அல்லது 1 ஆண்டில்தான் சர்வீஸ் செய்ய வேண்டும். 10,000 கி.மீ-க்கு ஒருமுறை ஆயில் மற்றும் ஆயில் ஃபில்டர் மாற்ற வேண்டியிருக்கும். இதற்கு 2,000 ரூபாய் வரை செலவாகும். மூன்றாவது சர்வீஸ் 2 ஆண்டுகள் அல்லது 20,000 கி.மீ-க்குள் செய்ய வேண்டும். மூன்று இலவச சர்வீஸ் உண்டு என்பதால், இப்போதும் ஆயில் மற்றும் ஆயில் ஃபில்டர் மாற்றும் செலவு மட்டும்தான்.

மூன்றாவது சர்வீஸ் 30,000 கி.மீ-ல் செய்ய வேண்டியிருக்கும். இதற்கு உத்தேசமாக, ஜெனரல் சர்வீஸ் என்றால் 5,000 ரூபாய் செலவாகும். ஆக மொத்தம், நீங்கள் மூன்று ஆண்டுகளில் எட்டியோஸ் லிவாவுக்காகச் செலவு செய்யும் மொத்தத் தொகை 1,94,845 ரூபாய்!

4. ஹூண்டாய் ஐ10

மாருதி கார்களுக்கு மாற்றாக, வேறு பிராண்ட் கார் தேடுபவர்களின் முதல் சாய்ஸ் ஹூண்டாய் ஐ10. இது லிட்டருக்கு பொதுவாக 14 கி.மீ மைலேஜ் தரும். அதன்படி மூன்று ஆண்டுகளுக்கு பெட்ரோலுக்காகச் செலவிடப்படும் தொகை 1,44,642 ரூபாய். ஹூண்டாய் ஐ10 காரைப் பொறுத்தவரை, முதல் சர்வீஸ் 2 மாதங்கள் அல்லது 2,000 கி.மீ இடைவெளியில் செய்ய வேண்டும். இரண்டாவது சர்வீஸில் இருந்து பணம் செலுத்திதான் சர்வீஸ் செய்ய வேண்டும். இதன்படி ஆறு மாதங்கள் அல்லது 5,000 கி.மீ-க்குள் செய்ய வேண்டும். அடுத்தடுத்த சர்வீஸ்கள் 10,000 கி.மீ இடைவெளிகளில் சர்வீஸ் செய்ய வேண்டும். இதன்படி பணம் செலுத்தி செய்யப்படும் ஜெனரல் சர்வீஸுக்கு 5,000 ரூபாய் வரை செலவாகும்!


5. டாடா நானோ

இந்தியாவின், உலகின் விலை குறைவான கார் டாடா நானோ. இது பொதுவாக லிட்டருக்கு 17.3 கி.மீ மைலேஜ் தருகிறது. இதன்படி மூன்று ஆண்டுகளுக்கு பெட்ரோலுக்காக நாம் செலவு செய்யும் மொத்தத் தொகை 1,17,051 ரூபாய். இன்ஷூரன்ஸுக்காக மூன்று ஆண்டுகளுக்கு க்ளெய்ம் எதுவும் செய்யாமல் இருந்தால், உத்தேசமாக 13,191 ரூபாய் செலவு செய்வோம். டாடா நானோவை 1,000 கி.மீ அல்லது 1 மாத இடைவெளிக்கு முதல் சர்வீஸ் செய்ய வேண்டும். இதன் பிறகு 6 மாதங்கள் அல்லது 5000 கி.மீ-க்கு சர்வீஸ் செய்ய வேண்டும். 5000 கி.மீ-க்கு ஒருமுறை ஆயில் மற்றும் ஆயில் ஃபில்டரை மாற்ற வேண்டும். இதற்கு 1,200 ரூபாய் செலவாகும். மூன்று சர்வீஸ்களுக்குப் பிறகு ஜெனரல் சர்வீஸ் செய்ய 3,000 ரூபாய் செலவாகும். அதன்படி மூன்று ஆண்டுகளுக்கு டாடா நானோவுக்காக நீங்கள் செலவு செய்யும் உத்தேசமான தொகை 1,44,642 ரூபாய்!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhD-CH78tf-3RGNkqHW7UTzp2Z4MsbmXuq85AO4HBzWuIQw1TnJEB9nJINcZ1c5QYAIwUhM8umhGR1MrGAazE46Ty11Gnxen8cA_CSLWqi_Zxzoq-NQh7QVDkUUMzsQVLaQsvrF4I8xLReH/s1600/woman+driving.jpg


6. மாருதி வேகன்-ஆர்

வேகன்-ஆர் காரிலும் கே-சீரிஸ் இன்ஜின்தான். மாருதியின் இந்த கார் லிட்டருக்கு, பொதுவாக 14.7 கி.மீ மைலேஜ் தரும். ஆண்டுக்கு 10,000 கி.மீ கணக்கின்படி மூன்று ஆண்டுகளுக்கு 1,37,754 ரூபாய் பெட்ரோலுக்காகச் செலவிடுகிறோம். மாருதி ஸ்விஃப்ட்டின் அதே சர்வீஸ் ஷெட்யூல்தான் மாருதி வேகன்-ஆர் காருக்கும் பொருந்தும். ஆனால், வேகன்-ஆர் காரை பணம் செலுத்தி சர்வீஸ் செய்ய (பெய்டு சர்வீஸ்) அதிகபட்சமாக 4,000 ரூபாய் செலவாகும். இதன்படி மூன்று ஆண்டுகளுக்கு காரை சர்வீஸ் செய்ய 10,000 ரூபாய் செலவாகும். இதன்படி மாருதி வேகன்-ஆர் காரின் மூன்று ஆண்டுகளுக்கான மொத்தச் செலவு 1,75,878.


7. ஃபோர்டு ஃபிகோ

ஃபோர்டு நிறுவனத்தின் மார்க்கெட்டைத் தூக்கி நிறுத்தியிருக்கும் கார் ஃபிகோ. இந்த பெட்ரோல் கார் பொதுவாக லிட்டருக்கு 13.15 கி.மீ மைலேஜ் தரும். இதன்படி மூன்று ஆண்டுகளுக்கு பெட்ரோல் செலவு 1,53,992 ரூபாய் செலவாகும். இன்ஷூரன்ஸ் செலவுகளைப் பொறுத்தவரை மூன்று ஆண்டுகளுக்கு சுமார் 36,516 ரூபாய் செலவாகும். ஃபோர்டு ஃபிகோவின் புத்தம் புதிய இன்ஜினை அடிக்கடி சர்வீஸ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. முதல் சர்வீஸ் 2,500 கி.மீ அல்லது 3 மாதங்கள் இடைவெளியில்தான் செய்ய வேண்டும். அதேபோல், ஆயில் மற்றும் ஆயில் ஃபில்டர்களை 10,000 கி.மீ இடைவெளியில்தான் மாற்ற வேண்டும். ஃபிகோவில் 20,000 கி.மீ அல்லது இரண்டு ஆண்டுகள் இலவச சர்வீஸ் சலுகை உள்ளது. இதன்படி மூன்றாவது ஆண்டில் இருந்துதான் பெய்டு சர்வீஸ் செய்ய வேண்டும். ஆயில் சர்வீஸுக்கு 2,500 ரூபாயும், ஜெனரல் சர்வீஸுக்கு அதிகபட்சம் 5,000 ரூபாயும் செலவாகும். ஆக மொத்தம், மூன்று ஆண்டுகளுக்கு 2,00,508 ரூபாய் செலவாகும்!


8. ஹூண்டாய் சான்ட்ரோ

ஹூண்டாயின் விலை குறைவான சின்ன கார் சான்ட்ரோ. இந்த காரைப் பொருத்தவரை பொதுவாக, லிட்டருக்கு 15.2 கி.மீ மைலேஜ் தரும். இதன்படி மூன்று ஆண்டுகளுக்கு சான்ட்ரோவுக்கான பெட்ரோல் செலவு ரூ.1,33,221. மூன்று ஆண்டுகளுக்கான இன்ஷூரன்ஸ் செலவு உத்தேசமாக 32,154 ரூபாய். ஹூண்டாய் ஐ10 காரைப் போலவேதான் ஹூண்டாய் சான்ட்ரோவின் சர்வீஸும். ஆயில் மற்றும் ஆயில் ஃபில்டர் செலவுகளைப் பொறுத்தவரை சுமார் 1,500 ரூபாயும், ஜெனரல் சர்வீஸ் செய்ய 3,500 ரூபாயில் இருந்து 4,000 ரூபாயும் செலவாகும். இதன்படி மூன்று ஆண்டுகளுக்கான சர்வீஸ் செலவு 10,000 ரூபாயைத் தாண்டும். பெட்ரோல், இன்ஷூரன்ஸ், சர்வீஸ் செலவுகளைச் சேர்த்து மூன்று ஆண்டுகளுக்கான செலவு மொத்தம் 1,75,375 ரூபாய்!


9. செவர்லே பீட்

மூன்று ஆண்டுகள் இலவச சர்வீஸ் என்ற உத்திரவாதத்துடன் விற்பனையாகும் கார் செவர்லே பீட். இது பொதுவாக லிட்டருக்கு 13.4 கி.மீ மைலேஜ் தரும். இதன்படி மூன்று ஆண்டுகளுக்கான பெட்ரோல் செலவு சுமார் 1,51,114 ரூபாய். இன்ஷூரன்ஸ் மூன்று ஆண்டுகளுக்கு சுமார் 35,797 ரூபாய். சர்வீஸைப் பொறுத்தவரை கார் வாங்கும்போதே மூன்று ஆண்டுகள் இலவச சர்வீஸ் சலுகைக்காக 16,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இதன்படி 3 ஆண்டுகள் அல்லது 45,000 கி.மீ-க்கு ஆயில், ஆயில் ஃபில்டர் உள்பட அனைத்து செலவுகளையும் இலவசமாகவே செய்து கொள்ளலாம்!


10. டாடா இண்டிகா

டிராவல்ஸ் மார்க்கெட்டில் மட்டுமல்ல, பயணிகள் கார் மார்க்கெட்டிலும் இண்டிகா அதிகமாக விற்பனையாகும் கார். பயணிகள் கார் மார்க்கெட்டைப் பொறுத்தவரை பெட்ரோல்தான் அதிகமாக விற்பனையாகும் கார். டாடா இண்டிகா ஸெட்டா, பொதுவாக லிட்டருக்கு 14 கி.மீ மைலேஜ் தரும். இதன்படி மூன்று ஆண்டுகளுக்கு 1,44,642 ரூபாய். இன்ஷூரன்ஸுக்காக மூன்று ஆண்டுகளுக்கு உத்தேசமாக 26,574 ரூபாய். டாடா இண்டிகாவை முதல் சர்வீஸ் 1 மாதம் அல்லது 1000 கி.மீ-க்குள் செய்ய வேண்டும். அடுத்த சர்வீஸ் 5000 கி.மீ அல்லது 6 மாதங்களில். அடுத்து 1 ஆண்டு அல்லது 10,000 கி.மீ-ல் சர்வீஸ் செய்ய வேண்டும். ஆயில் மற்றும் ஆயில் ஃபில்டர் மாற்ற சுமார் 1,500 ரூபாயும், ஜெனரல் சர்வீஸ் செய்ய 3,000 ரூபாயும் செலவாகும். இண்டிகாவைப் பொறுத்தவரை 4 இலவச சர்வீஸ்கள் உண்டு. நான்காவது சர்வீஸுக்கு 3,700 ரூபாயும், ஐந்தாவது ஜெனரல் சர்வீஸுக்கு 5,000 ரூபாயும் செலவாகும். இதன்படி மூன்று ஆண்டுகளுக்கு 14,000 ரூபாய் சர்வீஸுக்கென்று செலவாகும். மூன்று ஆண்டுகள் முடிவில், நீங்கள் காருக்காகச் செலவு செய்த தொகை 1,85,216 ரூபாய்!

thanx - nanayam vikatan

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzP10nJqiBzgd_e7qUqumF219-kbcnD_1_t0G79vwvx-9e_xfCe7xzE2oNPT4Ky24w6WYq9OkT80kmXKDElXEj3ChYgalaTyQl79udwuwmVj0B22r2Q6_MnHrLOzki-1Pksb1P0QBbsNmK/s1600/Beautiful+car+and+a+Beautiful+Women+In+Automotive+Cars.jpg

விஜய்காந்த் கட்சி எனக்கு பாடம் நடத்த தேவை இல்லை- ஜெ ஆவேசம் @ சட்டசபை இன் ஜூ வி கட்டுரை - காமெடி கும்மி

மிஸ்டர் கழுகு: பஞ்சர் ஆகிறதா ஸ்பெக்ட்ரம்?


''இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான்... உறவும் வரும் பிரிவும்
வாழ்க்கை ஒன்றுதான்...'' - ஹம்மிங்கோடு வந்தார் கழுகார். அ.தி.மு.க. - தே.மு.தி.க. உரசல் பற்றிய செய்திகளோடு வருகிறார் என்பது நமக்குப் புரிந்துவிட்டது.  


சி.பி - அவங்க உரசிக்கறாங்களோ இல்லையோ பிரஸ்காரங்க அப்டி ஆக்கி விட்டுடுவாங்க போல... ,



''கடந்த இதழுக்கு, 'கூட்டணியை உலுக்கும் உள்ளாட்சி நிலவரம்... விஜயகாந்த்தை கழற்றிவிட நினைக்கிறாரா ஜெ.?’ என்ற தலைப்பில் நான் கொடுத்த கவர் ஸ்டோரி, கிட்டத்தட்ட நடக்கத் தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது. இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையே இருக்கும் கொதிநிலை நாளுக்குநாள் கூடிக்கொண்டே போகிறது.

சி.பி - பாலிடிக்ஸ் தெர்மா மீட்டர் வெச்சு பார்த்தீங்களா?

'தே.மு.தி.க. எங்களுக்கு அரசியல் பாலபாடம் நடத்த வேண்டாம்’ என்று சட்டசபையில் ஜெயலலிதா சீறியது... அந்தக் கட்சியின் மீதான கோபத்தை வெளிக்காட்டியிருக்கிறது!'' என்ற கழுகாரிடம்,



சி.பி -புரட்சித்தலைவர் சொல்லியே கேட்காதவர் புரட்சிக்கலைஞர் சொல்லி கேப்பாரா? யார் கிட்டே? ராஸ்கல்ஸ்.. அம்மாவா? கொக்கா?மத்தவங்க எல்லாம் மக்கா?


''அவையில் என்னதான் நடந்தது?'' என்றோம்.


''தே.மு.தி.க. எம்.எல்.ஏ. அருண் சுப்பிரமணியம், புதன்கிழமை அன்று பேசினார். 'சிறையில் அடைக்கப்​பட்டு இருக்கும் தி.மு.க-வினர் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி சுகவாசம் அனுபவிக்க அனுமதிக்கக் கூடாது. சிறைவாசம் சுகவாசமாக மாறிவிடக்கூடாது’ என்று ஆட்சியாளர்கள் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்தார்.

சி.பி - வனவாசம் அனுபவிக்கும் தி முக சிறைவாசம் அனுபவிப்பதில் தப்பில்லை,சுகவாசமாக இருக்க அவர்கள் சகவாசம் ஒரு காரணம், பல பெரிய அதிகாரிங்களை கைக்குள்ள போட்டிருக்காங்க போல.. 


அதாவது, கைதாகிறவர்களைக் கறாராக நீங்கள் கவனிக்கவில்லை என்பதுதான் அதனுடைய உட்பொருள்.


 சி.பி - நிருபர் மேஜர் சுந்தர்ராஜன் தம்பி போல, தமிழ் டூ தமிழ் ட்ரான்ஸ்லேட்டிங்க்.

உடனே ஜெயலலிதா, 'எந்தக் கைதிக்கு அப்படி வசதி செய்து தரப்பட்டது என்று சொல்லுங்கள். நடவடிக்கை எடுக்கிறோம். பொத்தாம்பொதுவாகச் சொல்லக்கூடாது’ என்றார்.

 சி.பி - அம்மாவை யாருன்னு நினைச்சீங்க? ஃபிங்கர் டிப்ஸ் ஃபிலோமினா!! தெரியுமில்ல? ஆதாரத்தை காட்டு.அப்புறம் பாரு

அதற்கு விளக்கம் தராத தே.மு.தி.க. எம்.எல்.ஏ. அடுத்த சப்ஜெக்ட்டுக்குத் தாவினார்.


சி.பி - ஹலோ மிஸ்டர் சமாளிஃபிகேஷன் சண்முக ராஜ்!! ஜெவை அசரடிக்கனும்னா கைல சரியான ஆதாரம் வேணும்,இல்லைன்னா பப்பு வேகாதுடி.


'திருத்தணி முருகன் கோயில் அறுபடை வீடுகளில் ஐந்தாவது வீடு...’ என்று சொல்லி அந்த இடத்தில் இருக்கும் பிரச்னையை அவர் சொல்லத் தொடங்க, உடனே ஜெயலலிதா எழுந்துவிட்டார். 'முதன்முறையாக இப்போதுதான் தே.மு.தி.க. அவைக்குள் நுழைந்து இருக்கிறார்கள். அதனாலேயே அவர்கள் எங்களுக்குப் பாலபாடம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். இதேபோலதான் மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. பேசும்போது, மேட்டூரில்தான் மேட்டூர் அணை இருக்கிறது என்றார். அறுபடை வீடுகளில் ஐந்தாவது வீடு திருத்தணி கோயில் என்பதெல்லாம் நீங்கள் சொல்லாவிட்டால் எங்களுக்குத் தெரியாதா?’ என்று கோபத்தைக் காட்டினார். இப்படியரு ரியாக்ஷன் வரும் என்று தே.மு.தி.க. கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!'' 

சி.பி - அம்மாக்கு வணக்கம்னு பேச வாயை திறந்தாலே பிடிக்காது, சைகைல பம்பிட்டே கும்பிடு போடனும், யார் கிட்டே? ஹே ஹே ஹேய்



''கோபத்துக்குக் காரணம், உள்ளாட்சித் தேர்தல் இடஒதுக்கீடு பிரச்னைதானே?''


சி.பி - அரசியல்ல இருக்கற எல்லா நாய்ங்களையும் இந்த சீட் பிரச்சனை எப்படி எல்லாம் ஆட்டுவிக்குது? கூட்டணி, கொள்கை ஒரு வெங்காயமும் எவனுக்கும் கிடையாது, பச்சோந்திப்பரதேசிப்பசங்க..



''10 மாநகராட்சிகளில் நான்கு மேயர்களைக் குறிவைத்துக் கோரிக்கை வைத்திருப்பதை, கடந்த இதழிலேயே உம்மிடம் சொல்லியிருக்கிறேன். நகராட்சித் தலைவர் பதவிகளில் 40-க்கும் மேற்பட்ட பதவிகளையும் அதோடு மொத்த இடங்களில் 30 சதவிகிதத்துக்கு அதிகமான இடங்களையும் தே.மு.தி.க. கேட்கிறதாம்.



சி.பி - பொதுத்தேர்தல்ல 13% இடம்தானே வாங்கினீங்க?அதுக்குள்ள எதுக்கு பேராசை?

'சட்டசபைத் தேர்தலிலேயே குறைந்த இடங்களைத்தான் நாம் வாங்கி இருக்கிறோம். எப்படியாவது உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களை வாங்கிவிட வேண்டும்’ என்று தே.மு.தி.க. முன்னணியினரே சொல்லி வருகிறார்கள். ஆனால், அந்த அளவுக்குக் கொடுக்க முடியாது என்பதில் அ.தி.மு.க. விடாப்பிடியாக இருக்கிறது.

 சி.பி - விடாக்கண்டன், கொடாக்கண்டன்

எப்படியாவது தொகுதிப் பங்கீட்டை சீக்கிரமே முடித்துவிட வேண்டும் என்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் இருந்து விருப்ப மனுவை முதன் முதலில் கேட்டது அ.தி.மு.க.! அதோடு கூட்டணிக் கட்சிகளுடன் பேசுவதற்காக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன் அடங்கிய தொகுதிப் பங்கீட்டுக் குழுவையும் அமைத்துவிட்டார் ஜெயலலிதா. அ.தி.மு.க. ஒதுக்கும் இடங்களை வாங்கிக்கொண்டு தே.மு.தி.க. போட்டியிடுமா என்பது சந்தேகமே. சட்டசபைத் தேர்தலில் 41 இடங்கள் ஒதுக்கப்பட்டாலும், கேட்ட தொகுதிகள் கிடைக்காததால் கூட்டணிக் கட்சிக¬ளை எல்லாம் அழைத்துத் தனது அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதையும் அதன்பிறகு விடிய விடியப் பேச்சுவார்த்தை நடத்தித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். அதனால் தே.மு.தி.க. என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது இதுவரை சஸ்பென்ஸ்தான்!''


சி.பி - கேப்டன் ஆட்சியை விமர்சனம் பண்ணாம இருக்கறதுக்குக்காரணமே உள்ளாட்சித்தேர்தல்தான், அதனால குட்டையைக்குழப்பாம  பம்மிக்கிட்டே கிடைச்ச சீட்டை வாங்கிக்குவாரு பாருங்க. 


''ஓகோ!''

''கேப்டன் கோபத்தைக் காட்டினாலும் பண்ருட்டி ராமச்சந்திரன் அ.தி.மு.க-வோடு ஆதரவாகத்தான் போய்க்கொண்டு இருக்கிறார். 'பாலபாடம் நடத்த வேண்டாம்’ என்று ஜெயலலிதா அவையில் சொன்னதற்கு இரண்டு நாட்கள் முன்பு விளையாட்டுத் துறை மேம்பாட்டுக்கென பல்வேறு திட்டங்களை ஜெயலலிதா அவையில் அறிவித்தார். அதற்காக நன்றி தெரிவித்துப் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், 'அரசியலில் போட்டி இருக்கலாம், பொறாமை இருக்கக் கூடாது’ என்று அப்போது சொன்னதற்கு அர்த்தம் உண்டு என்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு மானிய கோரிக்கை மீது விவாதம் சட்டசபையில் நடந்து வருகிறது. இந்த விவாதத்தில் முதலில் எதிர்க்கட்சியான தே.மு.தி.க. உறுப்பினர்கள்தான் பேசுகிறார்கள். அவர்கள் பேசும்போது, ஜெயலலிதா அவையில் இருப்பதில்லை. பணிகள் காரணமாகத்தான் அவர் வெளியே செல்கிறார் என்று சொல்லப்பட்டாலும், தே.மு.தி.க. இதனை ரசிக்கவில்லை. மொத்தத்தில், உரசல் நாளுக்குநாள் அதிகமாகிறது!'' என்ற கழுகார் அடுத்த சமாசாரத்தை அவிழ்த்தார்...


சி.பி - உள்ளாட்சித்தேர்தல் மட்டும் முடியட்டும். கேப்டன் சரக்கோட சட்டசபை வந்து கலக்கப்போறாரு.. செம காமெடி சீன்ஸ் அரங்கேறும் , வெயிட் & ஸீ..


''தி.மு.க-வின் முப்பெரும் விழா வழக்கமாக செப்டம்பர் 15-ம் தேதிதான் நடக்கும். இம்முறை செப்டம்பர் 18-ம் தேதி வேலூரில் நடக்கும் என்று அறிவித்து இருந்தார்கள். திடீரென தேதியும் இடமும் மாறி இருக்கிறது.  30-ம் தேதி சென்னையில் முப்பெரும் விழா நடக்கும் என்று தலைமைக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15ம் தேதிதான் ஸ்பெக்ட்ரம் வழக்கில் மூன்றாவது குற்றப் பத்திரிகை தாக்கல் ஆகிறது. அந்த சமயத்தில் முப்பெரும் விழா நடத்துவதை தி.மு.க. விரும்பவில்லை. அன்றைய தினம் சி.பி.ஐ. ஏதாவது சொல்லிவிடக் கூடாது என்ற பயம் இருக்கிறது.

மூன்றாவது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துவிட்டால் கனிமொழிக்கு ஜாமீன் கிடைப்பது எளிது என்று சில மூத்த வழக்கறிஞர்கள் கருணாநிதிக்குச் சொல்லி இருக்கிறார்கள். மகளும் இருந்தால் நல்லதுதானே என்றும் கருணாநிதி நினைக்கிறார். 15-ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் ஆகிவிட்டால், 30-ம் தேதிக்குள் கனிமொழிக்கு ஜாமீன் வாங்கி அழைத்து வந்துவிடலாம் என்று துடிக்கிறாராம் கருணாநிதி. அதற்காகத்தான் இந்த தள்ளி வைப்புகள்!''


''ஸ்பெக்ட்ரம் வழக்கு குறித்து பிரசாந்த் பூஷண் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு பலத்த சர்ச்சையைக் கிளப்பி உள்ளதே?''

சி.பி - ஆஹா என்ன பொருத்தம் , நமக்குள் இந்தப்பொருத்தம்? ஊழல் எனும் மாளிகையில் லஞ்ச லாவண்யங்கள் சுகமே!!!!!!!!! ( இது ஃபோட்டோ கமெண்ட் அல்ல! ஹி ஹி )

''ஸ்பெக்ட்ரம் வழக்கு கொஞ்சம் கொஞ்சமாக பஞ்சர் ஆகி வருவதாக டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் சொல்கின்றன. டெல்லி வட்டாரத்தில் பலமாகப் பேசப்படும் விஷயங்களை நான் உமக்குச் சொல்கிறேன். மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் எனப்படும் 'டிராய்’ சமீபத்தில் வெளியிட்ட அறிக்கைதான் இந்த சந்தேகங்களுக்கு அடிப்படைக் காரணம். '2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் மத்திய அரசுக்கு எந்தவிதமான இழப்பும் ஏற்படவில்லை’ என்று சொல்கிறது அந்த அறிக்கை.

 சி.பி - மக்களுக்குத்தானே இழப்பு? மத்திய அரசுக்கு எப்டி இழப்பு? அவங்களும் பங்கு வாங்கி இருப்பாங்க!!


ஏலத்தில் விடாமல் முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்று கொடுத்ததால் அரசுக்கு 1.75 லட்சம் கோடி இழப்பு என்று மத்திய கணக்குத் தணிக்கை அறிக்கை சொன்ன பிறகுதான் நாட்டில் இந்த விஷயம் தீயாய் கிளம்பியது. சி.பி.ஐ. இந்த விஷயத்தைக் கையில் எடுத்து விசாரித்தது. இதில் முகாந்திரம் இருப்பதாக நம்பிய பிரதமர், அன்றைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவை ராஜினாமா செய்யச் சொன்னார்.

 சி.பி - ஒரு ஸ்மால் கரெக்‌ஷன் சொல்லலை, கெஞ்சுனாரு..அய்யா ராசா தயவு செஞ்சு ராஜினாமா பண்ணிடுங்கன்னு ஹிந்தில கெஞ்சிங்க். 



இதில் கலைஞர் டி.வி. சம்பந்தப்பட்டு இருப்பதாகச் சொல்லி, கனிமொழியும் கைதானார். தயாநிதி மாறன் மீது புகார் கிளம்பியது. அவரையும் ராஜினாமா செய்யச் சொன்னார் பிரதமர். 14 பேர் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். பாட்டியாலா கோர்ட்டுக்கு வந்து போய்க் கொண்டு இருக்கிறார்கள். நீதிபதி சைனி, குற்றச்சாட்டுகளை பதிவு செய்யும் காரியத்தில் மும்முரமாகி உள்ளார். இப்படிப்பட்ட நிலைமையில்தான் டிராய், 'ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் இழப்பு எதுவும் ஏற்படவில்லை’ என்று சொல்கிறது. ஆ.ராசா ஆதரவு வட்டாரத்தின் முகத்தில் இப்போதுதான் கொஞ்சம் சிரிப்பு மலர ஆரம்பித்துள்ளது!''


சி.பி - இந்தியாவுல எந்த வழக்காவது இதுவரை முறையா  நடந்து பெரிய அரசியல் தலைவர் மாட்டி இருக்காரா? என்னமோ நடந்துடுது திரை மறைவுல


''டிராய்... தடுமாறுவது ஏன்?''

சி.பி - அதான் ராசா கோர்ட்ல பிரைம் மினிஸ்டர், ப. சிதம்பரம் டிராயரை கழட்டிட்டாரே? அதான் டிராய் பம்புது...


''எல்லாம் ப்ளாக் மெயில் பாலிடிக்ஸ்தான் என்று சொல்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள். பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அன்றைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகிய இருவர் மீதும் ஆ.ராசாவும் கனிமொழியும் சிறப்பு நீதிமன்றத்தில் வைத்த நேரடியான தாக்குதல்தான் டிராயின் இந்த வழுக்கலுக்குக் காரணமாம். 'அவர்கள் இருவருக்கும் தெரியாமல் நான் எதையும் செய்யவில்லை’ என்று ராசா சொன்னார். அதையே கனிமொழியும் சொன்னார்.


சி.பி - நல்லவேளை அவங்களுக்கு பங்கு கொடுக்காமல் எந்த ஊழலும் பண்ணலைன்னு உண்மையை உடைக்கலை.. 

மன்​மோகன், சிதம்பரம் இப்போதைய தொலைத் தொடர்​புத் துறை அமைச்சர் கபில்சிபல் ஆகிய மூவரையும் சாட்சிகளாகச் சேர்க்க வேண்டும் என்று இவர்களது தரப்பு வழக்கறிஞர் சுஷில்குமார் சொல்லி மேலும் டென்ஷனை அதிகப்படுத்தினார். இதைத் தொடர்ந்துதான் காங்கிரஸ் மேலிடம் தனது சுருதியை மெள்ளக் குறைக்க ஆரம்பித்துள்ளதாம்...''

சி.பி - ஆல்ரெடி காங்கிரஸ்க்கு எல்லா மாநிலங்கள்லயும் சுதி இறங்கித்தான் இருக்கு. 


''ஆனால் சி.பி.ஐ.?''


''அரசாங்கம் தகவல்களை முறையாகக் கொடுத்து விசாரணைக்கு ஒத்துழைப்பும் தந்தால்தானே வழக்கை முறையாக நடத்த முடியும்? என்னதான் நேர்மையான அதிகாரிகள், வளைந்து கொடுக்காத அதிகாரிகள் இருந்தாலும் பெரிய இடத்துப் பொல்லாப்பை எவ்வளவு காலம்தான் சமாளிக்க முடியும்? இதை எல்லாம் வைத்துப் பார்த்தால் ஸ்பெக்ட்ரம், லேசாக கலர் மங்க ஆரம்பித்து இருப்பதாகவே சொல்கிறார்கள்.


இந்த நேரத்தில்தான் பிரசாந்த் பூஷண் மனுவும் தாக்கல் ஆகி உள்ளது. 'தயாநிதி மாறனின் பங்குகள் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த உண்மைகளை சி.பி.ஐ. கண்டு கொள்ளவில்லை. எனவே அவரிடம் முறையான விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடவேண்டும்’ என்று சொல்கிறது பிரசாந்த் பூஷணின் மனு. டிராய் கொடுத்த அறிக்கையை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த 6-ம் தேதி ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்துள்ளனர். அதாவது உள் குழப்பம் ஆரம்பம் ஆகிவிட்டது. இது இந்த வழக்கை ஊத்தி மூடுவதற்கான முஸ்தீபுகளாகத்தான் தெரிகிறது''


''உச்ச நீதிமன்றம் சும்மா இருக்காதே?''


''அவர்களது மேற்பார்வையில்தான் வழக்கே நடக்கிறது. எனவே அவர்களும் இதை உன்னிப்பாகத்தான் கவனிக்கிறார்கள். டிராய் அறிக்கை வெளியானதற்கு மறுநாள் சுப்ரீம் கோர்ட்டில் ஸ்வான் இயக்குநர் வினோத் மற்றும் யுனிடெக் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா ஆகியோரது ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வந்தன. நீதிபதிகள் சிங்வீ, டாட்டூ ஆகியோர் அடங்கிய பெஞ்ச்தான் இதை விசாரித்தது. வினோத், சஞ்சய் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, 'ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று டிராய் சொல்லி இருக்கிறது’ என்பதை ஜாமீன் வழங்குவதற்கான ஆதாரமாகக் காட்டினார்.

அப்போது குறுக்கிட்ட சி.பி.ஐ. வக்கீலும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான ஹரீன் ரவால், 'டிராய் அறிக்கை, மத்திய அரசுத் துறைகளுக்கு இடையிலான தகவல் பரிமாற்றம்தான். அது ரகசியமானது’ என்றார். 'பத்திரிகையில் வெளியான பிறகு என்ன ரகசியம்? இந்த அறிக்கை பற்றி நாங்கள் விசாரிக்கிறோம்’ என்றார்கள் நீதிபதிகள். எனவே உச்ச நீதிமன்றம் சும்மா விடாது என்றே தெரிகிறது. ரகசியமான அறிக்கையை பத்திரிகைக்கு யார் லீக் பண்ணியிருக்க முடியும்.. என்பதும் தெரியாத ரகசியம் அல்ல!'' என்றபடி கழுகார் விட்டார் ஜூட்!



ரேஸில் முந்தும் ஜூனியர்


காலியாக இருக்கும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பதவி வளம் கொழிக்கும் அட்சயப் பாத்திரம் என்பதால், கடும் ரேஸ் நடக்கிறது.  கடந்த தி.மு.க. ஆட்சியில் சீனியர்களை நியமிக்கும் சம்பிரதாயம் காற்றில் விடப்பட்டது. இப்போதும் ஏழாவது இடத்தில் உள்ள ஜூனியர் ஒருவர் ரேஸில் முந்திவிட்டதாகச் சொல்கிறார்கள்.

சகாயம் முன் ஆஜராவாரா அழகிரி?

திருமங்கலம், சிவரக்கோட்டையில் அழகிரிக்குச் சொந்தமான தயா இன்ஜினீயரிங் கல்லூரி உள்ளது.  இந்தக் கல்லூரி அந்தப்பகுதியின் நீராதாரமான கரிசல்குளம் கண்மாயையும், கமண்டல நதியையும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருப்பதாக விவசாயி ராமலிங்கம் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இது தொடர்பாக, கடந்த மாதம் 19-ம் தேதி வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தார்கள்.  ஆனாலும், 22-ந்தேதி கலெக்டர் சகாயம், மாவட்ட வருவாய் அதிகாரியோடு திடீரென மறுஆய்வு நடத்தியவர், கண்மாயின் 4-வது மடை இடித்து அடைக்கப்பட்டிருப்பதையும், நீராதாரப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதையும் உறுதி செய்தார்.


இதைத் தொடர்ந்து 8-ந்தேதி, அழகிரிக்கும், காந்தி அழகிரிக்கும்  நோட்டீஸ் அனுப்பினார். 'நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தடுப்புச் சட்ட’த்தின் கீழ் அனுப்பப்பட்ட  நோட்டீஸில், வருகிற 16-ம் தேதி  காலை அழகிரியும், காந்தி அழகிரியும் கலெக்டர் அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கலெக்டர் சகாயம் முன்னிலையில் அவர்கள் ஆஜராவார்களா?

 சி.பி - முதல்ல அழகிரியோட சம்சாரம் பேரை  மாத்தனும், காந்தியாம் காந்தி.

THANX - JU VI

Friday, September 09, 2011

இளவரசி - ரீமா சென்னின் கில்மா ???- சினிமா விமர்சனம்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4-TaN6EKTlEKqyeuWYBhSGc7fU0lyp7owkqR07i8fotm9fNEfJNGg8NOgpoYAhjG7IwLNu1v6FmjXYAyWuY7I7Wp6p8YlVBD2Zhcm3KQ3qsuwdeBEkaKap56_q3_o14NYfo4zQaNAod5Z/s1600/Ilavarasi-Movie-Poster-Reema-Sen-Ninja+Romeo.jpg 

பொதுவா நல்ல படத்துக்கு அவார்டு குடுத்துப்பார்த்திருப்பீங்க... ஃபிலிம் ஃபேர் அவார்டு, நேஷனல் அவார்டு, ஆஸ்கார் அவார்டுன்னு பல அவார்டுகள்.. ஆனா ஒரு சினிமா விமர்சனத்துக்கு ஜனாதிபதி  அவார்டு குடுக்கறதைப்பற்றி கேள்விப்பட்டு இருப்பீங்களா? டிஸ்கில டீட்டெயில் சொல்றேன்.. இப்போ படத்துக்கு விமர்சனம்.

ரீமா சென் நடிச்ச கில்மாப்படம்கறதால செம கல்லா கட்டலாம்னு  நினைச்ச படத்தோட புரொடியூசர் ஆசைல மண்ணள்ளிப்போடற மாதிரி  ரீமா சென் சமீபத்துல ஒரு பேட்டி குடுத்தாங்க.. அதுல இந்தப்படம் 12 வருசத்துக்கு முன்னே வந்த படம். ஆனா ஏதோ சீன் படம் கணக்கா போஸ்டர்ல என்னை அவமானப்படுத்திட்டாங்க.. அப்டினு ஒரே அழுகாச்சி.. இதுலயே மக்களுக்கு  பாதி கிக் போயிடுச்சு.. 

சரி.. அதை  எல்லாம் விடுங்க.. படத்தோட கதை என்ன?



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNIiQiNoAfvFGM-ja_GqYsDCdanq-WjEIZ37TZWy4KyggTiIZZjpulMvcnvaEenggD-IKbB7M_uRWr2IYjHjHIwtYdsks2qLbeC6cNdYrcmxZnRbm3YcPVFeDVSnoqjgYIQno7sNMWfsJm/s320/reema-sen1.jpg

ஒரு ஆசிரமத்துல கமலி கமலின்னு ஒரு ஃபிகரு.. ( நோ 2 பேர், ஒன்லி ஒன் )பார்க்க பவுனு பவுனுதான் ரோகினி மாதிரி ஆனா வைதேகி காத்திருந்தாள் ரேவதி  கெட்டப்ல...அப்புறம் தேவதாசியா நம்ம (!!!) ரீமா சென்..

தகர டப்பாவுக்கு பவுடர் அடிச்ச மாதிரியும் , சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே புகழ் பாபா ராம் தேவுக்கு ஷேவிங்க் செஞ்ச மாதிரியும் ஒருத்தர் வர்றார், அவர் தான் ஹீரோவாம். அடங்கோ..... 

10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத டப்பா முகத்தை வெச்சிருக்கற அந்த கேவலமான ஆளை தேவதைகள் மாதிரி இருக்கற இந்த 2 ஃபிகருங்களும் லவ்விங்... 

இரண்டு பேரையும் ஏமாத்திட்டு ஹீரோ ( நல்ல ஹீரோக்கள் மன்னிக்க) டபுள் கேம் ஆடறாரு.. என்ன நடக்குதுங்கறது தான் மீதிக்கதை... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்/.....

http://www.bollywoodbilli.com/wp-content/uploads/2011/02/reema-sen-hot-photos.jpg

படத்தில் ஆங்காங்கே நடந்த காமெடி கலாட்டாக்கள்...

1. படத்துல அடிக்கடி ( அநேகமா 8 இடங்கள்ல) ரீமா சென் தோழிகளிடம் , “ பெட்ரூமை ரெடி பண்ணு என்கிறார்.. ( அதுல ரெடி பண்ண என்ன இருக்கு?)   அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....( ஆனா கடைசி வரை பெட்ரூமையே காட்டலை... )

2.  அந்த தகர டப்பா தலை ஹீரோவுக்கு ஒரு தடவை சாதா காய்ச்சல் வந்துடுது, அவரை பார்க்க வரும் டாக்டரிடம் ரீமா சென் “ டாக்டர்.. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை.. அவரை காப்பாத்திருங்க” அப்டிங்கறாங்க.. ஏம்ப்பா டைரக்டர். உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா?

3. நான் தெரியாம ( சீன் எதுவும் தெரியாம) தான் கேட்கறேன், இந்தப்படத்தை 8 வயசுப்பையன் கூட பார்க்கலாமே? எதுக்கு சென்சார் U/A சர்ட்டிஃபிகேட் கொடுத்தாங்க? பணம் விளையாடி இருக்குமோ?


4. படத்துல 4 இடங்கள்ல ஒரிஜினல் பாட்டை கட் பண்ணிட்டு ஃபேம்ஸான தமிழ் ஹிட் சாங்கை சிச்சுவேஷனுக்கு தகுந்த மாதிரி போட்டு கொடுமை பண்ணி இருக்காங்க.. 1. அந்தி மழை பொழிகிறது 2. மார்கழித்திங்கள் அல்லவா? 3.  பாண்டியா ஆட்டமும் ஆட..  4. உஅமுனை ஆற்றிலே... 
அந்தப்பாடல்கள் வரும்போதெல்லாம் ரசிகர்கள் கொதிப்படைந்து சீட்டை கிழிக்கறாங்க.. 

http://www.bestactress.info/wp-content/uploads/2011/07/reema-sen-hot-spicy-cleavage.jpg

கேவலமான இந்தப்படத்துல சுமாரான வசனங்கள்

1. காதலுக்கும், காமத்துக்கும் வித்தியாசம் தெரியாத அந்த  வயசுல நான் என்னை தொலைச்சுட்டேன்... ( ஏம்மா நீ தொலைச்சதுக்கு ஏன் எங்களை பழி வாங்கறே? )

2.  ஒருத்தர் மனசு எப்படி?ங்கறது அவரது முகத்துல தெரிஞ்சிடும்..  ( யோவ் டயலாக் ரைட்டரே. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் பழமொழியோட உல்டா தானே இது? அடிங்கொய்யால.. )

3.மனம் பக்குவம் அடைஞ்சுட்டா உயிரும் பக்குவம் அடைஞ்சுடும்,அதுக்குப்பிறகு எதுக்கும் பயப்படத்தேவை இல்லை.. ( மகா ஜனங்களே!.. ஏதாவது புரியுதா? ரைட்டர் பின் நவீனத்துவம்னு நினைச்சு எழுதி இருப்பாரோ? )

4. எல்லார் கிட்டேயும் உடம்பை கொடுத்தேன்,உன்கிட்டே மட்டும் தானே மனசை கொடுத்தேன்?உனக்கு என் உடம்பு தான் வேணும்னா சொல்லு, காசை உன் கிட்டே வாங்கிட்டு அதையும் தந்துடறேன், காட்டிடறேன்..  ( அப்பவும் காசுல குறியாவே இருக்கீங்களே?)

5. உடம்பை வித்து காசாக்கறவ கிட்டே கற்பை பற்றி பேசறது தப்பு.. ( டேய் நாயே, காசு குடுத்து உடம்பை வாங்குனியே உனக்கு மட்டும் கற்பு இருக்காடா? )

6. ஆம்பளை மட்டும் பல பெண்கள்ட்ட போலாம்? அதை பெருமையா சொல்லிக்குவீங்க. பெண்கள் அப்படி போனா தேவதாசியா?  

7. ஆம்பளைங்க சுகத்தை மட்டும் அனுபவிப்பீங்க? சொந்தம் ஆக்கிக்க தயக்கம்?

8.  டியர்.. அதெப்பிடி? ஆசை வந்தாலும் உனக்கு அதிகமாவே வருது? கோபம் வந்தாலும் உனக்கு அதிகமாவே வருது? 


http://www.southgossips.in/wp-content/uploads/2010/01/reema-sen-in-aayirathil-oruvan7.jpg
 9. சுகம் 5 நிமிஷம் தான் ,அதுக்குப்பிறகு திரும்பிக்கூட பார்க்க மாட்டீங்களே?

10. நீ ஒரு தேவதை. 

நிஜமாவா?

ம்....

எல்லாரும் இப்படி பொய்யா வர்ணிச்சுத்தான் வாழ்க்கைல நான் ஏமாந்தேன்.. 

11.  பட்டுப்போன இந்த ரோஜாவை பட்டு ரோஜா ஆக்கிட்டீங்களே? ( இந்த சீன்ல பட்டு வண்ண ரோஜாவாம், பார்த்த கண்ணு மூடாதாம் பாட்டு ஒலிக்கிது கொடுமை.. )

12. ஆம்பளைங்களை நம்ப முடியாது.. 

13. நேசிக்கிறவங்க கிட்டே மட்டும் தான் அன்பை தர முடியும்?

14.  டைரில என்ன எழுதிட்டு இருக்கீங்க?

பர்சனல்.. 

டோண்ட் ப்ளே...

இது ஒண்ணும் பெட்ரூம் இல்ல..

அப்போ தனியா படுத்துக்குங்க.. 

இவளுக்கு வாழ்க்கைல எல்லாமே பெட்ரூம் தான் போல.. 

15. எங்கே போய்ட்டு வர்றீங்க?

உனக்குத்தான் பூ வாங்க போனேன்..

எங்கே பூ?

நிறைய இடம் தேடியும் கிடைக்கலை.. 

16. என் கிட்ட இல்லாதது அவ கிட்டே என்ன இருக்கு?

தெரில.. 




http://moviegalleri.net/wp-content/gallery/ilavarasi-movie-reema-sen-hot-pics/reema_sen_hot_pics_ilavarasi_001.jpg
படம் மொத்தமே 90 நிமிஷம் தான்...

செம கடி .. படம் சாரி.. நமக்கெல்லாம் ஒரு பாடம்.. 

ஒரு சீன் கூட கிடையாது.. 

ஈரோடு தேவி அபிராமில இந்தப்படம் பார்த்தேன்.. 
நான் பார்த்ததிலேயே மிக மோசமான குப்பைப்படம் இதுதான்... 

http://lh4.ggpht.com/_561gP6TDhvA/S2slvRPfb0I/AAAAAAAAgT0/qY0ELSwWeaY/actor_actress_actress.karthi_andrea-jeremiah_reema-sen.aayirathil-oruvan-audio-launch-006.jpg

டிஸ்கி - 1. போர்க்காலத்துல, தீ விபத்துல, வெள்ளம் வரும் டைம்ல ஒரு ஊரை காப்பாத்துனா அந்த ஆளுக்கு ஜனாதிபதி அவார்டு தர்றாங்க..  என் சாதா போஸ்ட் 200 பேர் ப்[அடிச்சா, சினிமா விமர்சனம் 2000 பேர் படிக்கறாங்க. அப்போ இந்தப்பட விமர்சனமும் 2000 பேரால் படிக்கப்படும்.. அவங்க யாரும் போக மாட்டாங்க.. அவங்களை காப்பாத்தி இருக்கேன்.. இதுக்காக பாராட்டி ஜனாதிபதி அவார்டு கொடுப்பார்னு எதிர்பார்க்கறேன்.. ஹி ஹி

டிஸ்கி - 2 - இங்கே போடப்பட்டிருக்கும் ஸ்டில்ஸ் சும்மா உங்களை ஆசுவாசப்படுத்த.. படத்துல அதெல்லாம் கிடையாது..

அமரர் சுஜாதா நாவல்களை 10 பைசா செலவில்லாம ஓ சி ல படிக்க ஒரு ஐடியா & லிங்க்

Significant Flexibility

1. எல்லாப்பொருட்களையும் நம்மால் குறைக்கப்பட்ட விலையில் வாங்க முடியும் - நிம்மதி தவிர்த்து

--------------------------

2. குரலாக இரு,எதிரொலியாக இருக்காதே! ( BE A VOICE NOT AN ECHO)

(சொந்தமா யோசி, அடுத்தவங்க சொல்றதை நீயும் சொல்லாதே. அப்டினு அர்த்தம்னு நினைக்கிறேன்)

---------------------------------


 3.  பெற்றோரை விட பெரிய கடவுள் யாரும் இல்லை,அதனால உடனடியா மேரேஜ் பண்றோம், பெற்றோர் ஆகறோம், என்ன நான் சொல்றது?

------------------


4. மனிதர்களின் மனம் என்ன நினைக்கிறது என கணக்கிட ஆரம்பித்தால் நம்மால் யாரையும் நேசிக்க முடியாமல் போய் விடும்

---------------------------

5.  உனக்கு என்னென்ன பிடிக்கும் என்ற பட்டியலை நான் ரெடி பண்ணிட்டேன். அதுல என் பேரை சேர்க்கலாமா?

-----------------------


Nature Blooms.........
www.deshow.net.jpg

6.  நீ விரும்பிய அனைத்தையும் நானும் விரும்பினேன், நீ வெறுத்த அனைத்தையும் நானும் வெறுத்தேன் # எஸ், ஐ ஹேட் மை செல்ஃப் டியர்

----------------------------



7. தட்டிக்கொடுப்பதை டைம்லைனிலும், தட்டிக்கேட்பதை DM இலும் செய்தால் நோ பிராப்ளம்

---------------



8.  அழவைப்பாய் என்பது தெரிந்தும் உன்னைக்காணவே ஏங்குதே என் முட்டாள் கண்கள்

------------------------

9. மிஸ்.. ஐ லவ் யூ..

இரு. பிரின்சிபால்ட்ட போய் இதை அப்டியே சொல்றேன்..

அட லூஸாடி.. நீ, அவருக்கு ஆல்ரெடி மேரேஜ் ஆகிடுச்சு

------------------------------

10. காதல் என்பது பவர் ஸ்டார் படம் போல .பார்க்காதவன் பார்க்கக்கூடாது என துடிப்பான், பார்த்தவன் சாகத்துடிப்பான்

--------------------------


Beautiful Cinemagraphs (Moving Photography)
11. அத்தான், தினமும் நீங்களே வீடு கூட்டிடறீங்களா?

நீ ஏன் இப்போ ஏழரையை கூட்டறே?இந்த வேலை கூட நீ செய்ய மாட்டியா?

---------------------------

12.  டியர், என் மேல கோபமா?

ஆமா, ஏன்? சமாதானப்படுத்தப்போறீங்களா?

ம்ஹூம்,கோபமா இருந்தா நீ என் கிட்டே 10 நாள் பேசமாட்டே, ஐ ஜாலி

-----------------------------

13. தலைவருக்கு அரசியல் ஞானம் பூஜ்யம்னு எப்படி சொல்றே?

அன்னா ஹசாரே அறிஞர் அண்ணா பரம்பரைல வந்தவரா?ன்னு கேட்கறாரே?

-------------------------

14. தலைவரே! சிறை நிரப்பும் போராட்டம் பண்ணப்போறதா சொல்றீங்களே? ஆல்ரெடி அம்மா அதைத்தானே பண்ணிட்டு இருக்காங்க?ஜாமீன் வாங்கற வழியைப்பார்ப்போம்

---------------------------------

15. நண்பன் கஷ்டத்துல இருந்தா அவன் கூப்பிடாமயே போ, அவன் சந்தோஷத்துல இருந்தா கூப்பிட்டா மட்டும் போ

-----------------------------


16. DR,எனக்கு 20 வயசாகியும் இன்னும் மீசை வளரலை,என்ன பண்ண?

ஒரு மொக்கை ஃபிகரை லவ் பண்ணு,அவ உனக்கு அல்வா குடுப்பா, மீசை என்ன? தாடியும் வ(ள)ரும்

----------------------------

17. சாக்லெட் தர்றேன்,இந்த லெட்டரை உன் அக்காட்ட குடுக்க முடியுமா?

மாமா,நான் உங்களுக்கு பீர் வாங்கித்தர்றேன் இந்த லெட்டரை உங்க தம்பிட்ட குடுக்க முடியுமா?

-----------------------------

18. உடல் அளவில் கற்பு அசாத்தியம் அல்ல, மனதளவில் கற்பு சாத்தியமே அல்ல

-------------------------

19. ஒரே ஒருவரை மட்டும் மனதால் நினைப்பதே கற்பு என்றால் இந்த உலகத்தில் சீதை,கண்ணகியைத்தவிர  கற்புள்ள ஆண், பெண் யாரும் கிடையாது

-----------------------------

20. பொதுவா பொண்ணுங்களை விட பசங்க ஹைட்டா இருக்க காரணம் ஃபிகரை கட்டிப்பிடிக்கறப்ப அவளுக்குப்பின்னால இருக்கும் ஃபிகரை  ஈஸியா சைட் அடிக்க

----------------------------


21. வெர்ஜினிட்டி டெஸ்ட் என்பது ஆண்களிடம் செல்லுபடி ஆகாது என்பது இயற்கை பெண் இனத்துக்கு செய்த துரோகம்

------------------------

22. ராவா குடிச்சவனும்,ராப்பகலா படிச்சவனும் உருப்பட்டதா சரித்திரம் இல்லை, சோ சுமாரா படிங்க, சோடா ஊத்தி அடிங்க # மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்

--------------------------

23. FAILURE ESTABLISHES ONLY THAT OUR DETERMINATION TO SUCCEED WAS NOT STRONG ENOUGH

-----------------------------

24. லைஃப்ல ஜாலியா இருக்க நீ லவ்வற பொண்ணை நேசி, ஜாலியே லைஃபா அமைய உன்னை லவ்வற பொண்ணை நேசி # வள்ளி ரஜினி ரீ மிக்ஸ் டயலாக்

-------------------------------

25. அமரர் எழுத்தாளர் சுஜாதா ரசிகர்களுக்கு ஒரு செம சான்ஸ்.. அவரது சில படைப்புகளை ஓ சி யில் டவுன்லோடு பண்ணி படிக்க http://www.tamiltel.in/2011/09/0609.html




a

டிஸ்கி -1  இன்றி ரீமா சென்னின் இளவரசி எனும் கில்மா படம், மதி கெட்டான் சாலை எனும் காதல் கதை படம், காசே தான் கடவுளடா எனும் காமெடி படம்  என 3  ரிலீசிங்க், நான் எந்தப்படம் முதல்ல போவேன்னு கண்டு பிடிப்பவர்களுக்கு கெஸ்ஸிங்க் ஸ்டார் பட்டம் அளிக்கப்படும் .. ஹி ஹி

டிஸ்கி 2 - இன்று ஓணம் பண்டிகை.. கேரளா ஃபிகர்ஸ் யாராவது என் பிளாக் படிக்க வந்தா அவர்களுக்கு வாழ்த்துக்கள்..  படிக்க வர்லைன்னா.? படிக்க வர்றவங்க அவங்களுக்கு உள்ள ஃபிரண்ட்ஸ்க்கு என் சார்பா வாழ்த்து சொல்லவும்.. 

Thursday, September 08, 2011

சிங்கம் மாதிரி கர்ஜிக்கும் சீமான் ஜெவிடம் மட்டும் சிறு நரி போல் பம்முவது ஏன்? விகடன் பேட்டி - காமெடி கும்மி

http://www.cinesnacks.in/tamil-movies/actress/Vijayalakshmi-Photos/boss-engira-baskaran-vijaylakshmi-008.jpg 
அடுத்த பிரதமரை அம்மாதான் அடையாளம் காட்டுவார்!

சிலிர்க்கிறார் கொ.ப.செ. சீமான்
நீங்கள் இறந்த பிறகு, உங்களுடைய உடலை யாரிடம் ஒப்படைப்பது?’ - தூக்குத் தண்டனைக்கு நாள் குறிக்கப்பட்ட பிறகு, இப்படி ஒரு கேள்வி எழுவது சிறைத் துறை சம்பிரதாயம். பேரறிவாளன், 'என் தாயிடம் ஒப்படையுங்கள்’ என எழுதிக் கொடுத்தார்.

ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்தபடி இருந்த முருகனும் சாந்தனும், 'எங்கள் உடல்களை அண்ணன் சீமானிடம் ஒப்படையுங்கள்!’ என எழுதிக் கொடுத்தார்கள். மரண மேகமாகச் சூழ்ந்த இந்தக் கொடூர நிகழ்வுகளை, சட்டப் போராட்டமும் சட்டமன்றத் தீர்மானமும் சுக்குநூறாக நொறுக்கிவிட்ட நிலையில், சீமானுடன் ஒரு சந்திப்பு...


1.  ''நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை... சட்டமன்றத்தில் தீர்மானம்... இந்த இரட்டிப்பு வெற்றி எப்படிச் சாத்தியமானது?''

சி.பி - தமிழகம் முழுக்க எழுந்த பிரம்மாண்டமான மக்கள் எழுச்சிதான் காரணம். எந்த ஒரு தனி நபரும் இதற்கு  சொந்தம் கொண்டாடிட முடியாது.. 




''முழுக்க முழுக்கப் பெண்களாலேயே நிகழ்த்தப்பட்ட சாதனை இது!


தூக்குக் கயிற்றை அறுத்து எறியும் இந்த அறப் போரை முன்னின்று நடத்தியவர்கள் பெண்கள். 21 வருடங்களாகப் பல தளங்களிலும் கண்ணீரைச் சுமந்தவர் எங்கள் தாய் அற்புதம் அம்மாள்.

அவருடைய கண்ணீரில் கருவான எழுச்சி, தங்கைகள் கயல்விழி, சுஜாதா, வடிவாம்பாள் அக்கா ஆகிய மூன்று வழக்கறிஞர்கள் நடத்திய பட்டினிப் போராட்டத்தில் பன்மடங்காக வீரியம் பூண்டது. தங்கை செங்கொடியின் மரணத்தில், ஒருமித்த எழுச்சித் தீயாக வெடித்தது.


தாய் உள்ளத்தோடு முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தபோது, தமிழர்களின் எழுச்சி வென்றது. ஒரு தாயின் கண்ணீர், இன்னொரு தாயாலேயே துடைக்கப்பட்டது. கட்சிப் பாகுபாடு பார்க்காத அத்தனை தலைவர்களும் இதற்கு பக்க பலமாக நின்றார்கள்!''

சி.பி - ஆரம்பத்துல அம்மா “நான் எதுவும் இதுல செய்யறதுக்கில்லை”ன்னு எஸ் ஆகப்பார்த்தாரு... ஆனா தமிழகம் முழுக்க எழுந்த எதிர்ப்பு அலை  உள்ளாட்சித்தேர்தல்ல பாதிப்பு ஏற்படுத்தும் என உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்த பின் சுதாரித்து அடுத்து உருப்படியான முடிவு எடுத்துட்டார்.. 

http://www.koodal.com/cinema/koodal_reel/2011/Seeman-Viji-reel-02.jpg


2. ''போர்க் குணத்தோடு போராடும் வழக்கம் உடைய நீங்கள், தூக்குத் தண்டனை விவகாரத்தில் ரொம்பவே அடக்கி வாசித்தீர்களே?''


சி.பி - அண்ணன் ஆல்ரெடி விஜயலட்சுமி மேட்டர்ல அம்மாகிட்டே இருந்து அழைப்பு வந்து விளக்கம் கேட்டா என்ன சொல்றது?ன்னு பம்பிட்டு இருந்தாரு, இந்த மாதிரி சூழ்நிலைல அம்மாவை எதிர்த்து அரசியல் பண்ண வேண்டாம்னு நினைச்சார் போல..  




''தொட்டதற்கெல்லாம் சட்டையைப் பிடிக்கிற ஆள் நான் இல்லை. சிங்கள அரசின் போர்க் குற்றங்களைக் கண்டித்து தீர்மானம் கொண்டுவந்த முதல்வர், நிச்சயம் மூன்று பேர் தூக்கு விவகாரத்திலும் அக்கறை காட்டுவார் என உறுதியாக நம்பினோம். ஈழத்தில் போர் தீவிரமானபோது கண்ணீர் உகுத்தால்கூட கைது நடவடிக்கையைப் பாய்ச்சினார் கலைஞர்.

தம்பி முத்துக்குமாரின் தீக்குளிப்பு தமிழ்நாடு முழுக்கத் தகித்தபோது, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து இளைய சமுதாயக் கைகோப்பை ஒடுக்கினார். ஆனால், மூன்று பேர் தூக்கைத் தடுக்க, மனிதச் சங்கிலி, மத்திய அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம், தொடர்வண்டி மறியல், கவர்னர் மாளிகை முற்றுகை, தங்கை செங்கொடியின் உடலைவைத்து காஞ்சி முழுக்க ஊர்வலம் என எத்தனையோ போராட்டங்கள் நடந்தன. இதில் எதற்காவது அரசு அனுமதி மறுக்கப்பட்டதா? போராட்டங்களுக்காக யாராவது சிறையில் அடைக்கப்பட்டார்களா? அடக்குமுறைச் சட்டங்கள் பாய்ச்சப்பட்டனவா?

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் அரசாங்கத்தை எதற்காக நாங்கள் எதிர்க்க வேண்டும்? 'ராஜீவ் கொலையாளிகள் தண்டிக்கப்படுவதில் என்ன தவறு?’ என, தங்கபாலு, சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டவர்கள் சொல்வதைப்போல் முதல்வரும் சொல்லி இருந்தால், நம்மால் என்ன செய்திருக்க முடியும்?

சி.பி - அப்படி அம்மா சொல்ல 1% கூட சான்ஸ் இல்லை, காங்கிரஸ் கூட கூட்டு கிடையாது,வைக்கும் ஐடியாவும் அம்மாவுக்கு இல்லை, அப்படி இருக்கும்போதுதேவை இல்லாம சோனியாவுக்கு ஏன் ஜால்ரா அடிக்கப்போறாங்க? 



அப்படி ஒரு வார்த்தை வந்துவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு நொடியும் தவிப்பும் பதற்றமுமாக நாங்கள் தத்தளித்துக்கிடந்தோம். தன் எழுச்சியான மக்கள் போராட்டம்தான் மகத்தான மாற்றத்தை உருவாக்கியது. எவ்வித சாயமும் இல்லாமல் உயர்நீதிமன்றத்தில் திரண்ட தலைவர்களாகிய நாங்களே ஆச்சர்யப்பட்டோம். மக்களின் பின்னால் தலைவர்கள் அணிவகுக்கும் காலம் வந்துவிட்டது.


'தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து...’ என்கிற வார்த்தைகளைத் தீர்மானத்தில் முதல்வர் அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார். கோரிக்கைகள் பலிக்காத இடத்தில்தான் கொந்தளிப்பு தேவை. பக்குவம் பழகியவர்களுக்கு இது புரியும்!''


சி.பி - அண்ணே, என்ன தான் சப்பை கட்டு கட்னாலும் குரலை உயர்த்திப்பேச முடியாட்டாலும் பம்மிக்கிட்டேவாவது அம்மா கிட்டே நீங்க இது பத்தி பேசி இருந்தா உங்க இமேஜ் டேமேஜ் ஆகாம இருந்திருக்கும்./.


http://telanganabuzz.com/upload/news/17767/vijayalakshmi-case.jpg

3. ''உங்கள் மீதான வழக்குகளுக்காகப் பயந்துதான் நீங்கள் அமைதி காத்ததாகச் சொல்லப்படுகிறதே?''

சி.பி - நிருபர் நேரடியா அட்டாக் பண்ணிட்டாரு.. இப்போ பாருங்க பெனால்டி கோல் எதிர்கொள்ளும் கோழி மாதிரி பார்ட்டி பம்மும் பாருங்க.. 


''வழக்குகளுக்குப் பயந்து அல்ல; என் இலக்குகளுக்குப் பயந்து! சிறையில் என் தம்பிகளின் தவிப்பை அருகே இருந்து அறிந்தவன் நான். வேலூர் சிறைக்குள் நான் இருந்தபோது, ரஜினி என்கிற வழக்கறிஞர் ஒரு விவகாரத்தில் சிக்கி உள்ளே வந்தார். மூன்று தம்பிகளின் தூக்கு குறித்து அவர் பேசியபோது, 'நான் செத்தால்தான், அவங்களைத் தூக்கில் போட முடியும்’ எனச் சொன்னேன்.


அந்த வார்த்தைகளைக் காக்க வேண்டியவனுக்கு, யாரையும் தாக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் தம்பிகள் இருவர் தீக்குளித்தபோதுகூட, 'உயிர் வேண்டாம்; உணர்வு போதும்’ என்றுதான் வலியுறுத்தினேன். வலிய போராட்டங்களையும் வன்முறைகளையும் நிகழ்த்திப் பெயர் வாங்குவது பெரிது அல்ல. ஆனால், மூன்று உயிர்களின் நம்பிக்கையைப் பொய்யாக்கி, அரசியல் செய்கிற ஆள் நான் இல்லை. எங்களுடைய நோக்கம் எதிர்க் கட்சி அரசியல் அல்ல; எதிர்கால அரசியல்!

சி.பி - என்னது எதிர்கால அரசியலா? அப்படி ஒரு நினைப்பு வேற அண்ணனுக்கு இருக்கா?அப்போ அண்ணி விஜயலட்சுமிதான் கொள்கை பரப்பு செயலாளரா? அவ்வ்வ்வ்வ்வ்வ்

சிறை ஒருபோதும் என்னைச் சிதைக்காது; செதுக்கவே செய்யும். வழக்குக்குப் பயந்தவனாக இருந்திருந்தால், மாதச் சுற்றுலா போவதுபோல் கடந்த ஆட்சியில் சிறை வலம் வந்திருப்பேனா? காலம் முழுக்கச் சிறையில் அடைத்தாலும் சிறைக் கம்பியோடு கம்பியாக இந்தத் தம்பி இருப்பானே தவிர, வாய் பொத்தி நிற்பவர்களின் வரிசையில் நிற்க மாட்டான்!''


சி.பி - அண்ணன் இங்கே, மேடைல எல்லாம் சீற்றமாத்தான் பேசறாரு.. ஆனா அம்மா முன்னே போய் நிக்கும்போது மட்டும் பம்முறாரு.. அது ஏன்?


http://reviews.in.88db.com/images/stories/vijyalakhmi.jpg


4. ''நீங்கள் அடுத்தடுத்து பாராட்டு மழை பொழிவதைப் பார்த்தால், அ.தி.மு.க-வின் அறிவிக்கப்படாத கொ.ப.செ. ஆகிவிடுவீர்கள் போலிருக்கிறதே?''

சி.பி - அதுக்கு ஒரு பட்டியலே இருக்கே? இவரு இப்போ வந்தவர் தானே? போற போக்கைப்பார்த்தா கேப்டன் தான் அதிமுக வோட கொ ப செ ஆவார் போல..!!!!!!!!!!


''போரைத் தடுக்க கடந்த ஆட்சியில் எந்த அளவுக்குப் போராடினோம் என்பது தெரிந்தால், இப்படிக் கேட்க மாட்டீர்கள். கலைஞரை நாங்கள் போராடச் சொல்லவில்லை. அவர் அமைதியாக இருந்திருந்தால், எங்களின் போராட்டங்களாலேயே ஈழப் போரைத் தடுத்திருப்போம்.


கூடினால் குற்றம், சீறினால் சிறை எனச் சகிக்க முடியாத அரக்கத்தனங்களை அவிழ்த்துவிட்டு, ஒருமித்த தமிழர் எழுச்சியை கலைஞர் முடக்கியதை மறக்க முடியுமா? மூவரைக் காக்க தீக்குளித்த தங்கை செங்கொடிக்கு முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் இரங்கல் தெரிவித்து இருக்கிறார். ஆனால், ஈழத் துயரங்களைத் தடுக்கக் கோரி உயிர்விட்ட தம்பி முத்துக்குமார் பெயரை சட்டமன்றத்தில் மொழிய கடந்த ஆட்சியாளர்களுக்குத் துணிவு இருந்ததா? காங்கிரஸுக்குக் கை கட்டி, வாய் பொத்தி இனத்தையே பலி கொடுத்த கலைஞர், 'அன்றைய நிலை வேறு; இன்றைய நிலை வேறு’ என வியாக்கியானம் பேசுகிறார்.


 சி.பி - ஆமா , அன்றைய நிலை தமிழகம் முழுக்க வளைச்சு போட்டாரு, இன்றைய நிலை தமிழகம் முழுக்க கோர்ட் , ஜாமீன்னு அலையறாரு..


20 வருட இறுக்க நிலையை இந்த இரண்டு வருடங்களில் உடைத்தவர்கள் நாங்கள். கலைஞரின் துரோகங்களுக்கு ஆளாகியவர்களுக்குத்தான் இப்போதைய ஆட்சியின் மகிமை புரியும்!''



http://www.southdreamz.com/wp-content/uploads/2010/04/vijayalakshmi.jpg

5. ''அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நீங்கள் கலந்துகொள்ளாதது சர்ச்சை ஆனதே?''


''அனைத்துக் கட்சிக் கூட்டம் என்பது சாத்தியமே இல்லை. அனைத்துக் கட்சிகளும் திரண்டால், தமிழகத்தால் தாங்க முடியுமா? அனைத்துக் கட்சிகளும் கைகோக்கும்என்கிற நம்பிக்கை இற்றுப்போய், ஒவ்வொருவர் பின்னாலும் ஓடிக் களைத்துத் திரும்பிய என்னையே அந்த சாத்தியமற்ற சங்கமிப்பில் இணையச் சொல்கிறீர்களே... ஒரு சாதாரணக் கட்சியின் மாநாட்டுக்குக்கூட லட்சக்கணக்கில் தொண்டர்கள் திரள்கிறார்கள்.

ஆனால், ஈழப் போரைத் தடுக்க நடந்த அனைத்துக் கட்சிப் போராட்டத்தில் திரண்டவர்கள் எத்தனை பேர்? எங்கள் கட்சி தேர்தலுக்கானது அல்ல; இனத்தின் தேறுதலுக்கானது. இங்கே தமிழர்களை இணைப்பது எளிது. ஆனால், தலைவர்களை இணைப்பது கடினம். ஒன்றாக நிற்க இங்கே எல்லோரும் தயார். ஆனால், யார் முன்னால் நிற்பது என்கிற அக்கப்போருக்குப் பதில் இல்லையே?''

 சி.பி - அண்ணன் வார்த்தை ஜாலத்துல அடி பிண்றாரு.. ஆனா செயல்ல அந்த அளவு புத்திசாலித்தனம் இல்லையே?





6. ''மாநில அரசின் தீர்மானம் குடியரசுத் தலைவரைக் கட்டுப்படுத்தாது என மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் சொல்லி இருக்கிறாரே?''


''சோனியா சொன்னால் கேட்கிற சட்டம், எங்கள் முதல்வர் சொன்னால் கேட்காதா?




சி.பி - அண்ணன் சந்தடி சாக்குல எங்கள் முதல்வர் சொன்னால் அப்டின்னு ஒட்டி உறவாடறார் பாருங்க, அநேகமா அண்ணன் உள்ளாட்சித்தேர்தல்ல கூட்டணி போட்ருவாரு போல



முறையாகத் தேர்தலில் நின்று வெல்ல முடியாதவர்களால் எங்களைக் கொல்ல மட்டும் முடியுமா? அமெரிக்காவில்கூட குடியரசுத் தலைவரை மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், தலையாட்டும் தகுதி மட்டுமே கொண்டவர்களை முதல் குடிமகனாகத் தேர்ந்தெடுப்பது இந்தியாவின் நடைமுறை ஆகிவிட்டது.


மக்களாட்சி என்கிற பெயரில் சர்வாதிகாரப் போர்வையோடு அலைகிறது இந்தியா. திட்ட அமைச்சரையும் சட்ட அமைச்சரையும் நிர்மாணிக்கும் சக்தியாக எங்கள் முதல்வர் சீக்கிரமே உருவெடுப்பார். அடுத்த பிரதமரை அடையாளம் காட்டப்போவதும் அவர்தான்!

சி.பி - அடுத்து வரப்போவது பி ஜே பி தான், ஆனா அன்னா ஹசாரே தான் பி எம்னு ஒரு பேச்சு அடிபடுது பார்ப்போம், அத்வானிக்கு மக்கள் செல்வாக்கு இல்லை.. 

http://filmreviews.bizhat.com/wp-content/uploads/2011/07/seeman-vijayalakshmi-affair-photo-3.jpg
இது தெரியாமல் தமிழக முதல்வரோடு மத்திய அரசு மோதினால், அன்றைக்குத்தான் தெரியும் தமிழர்களின் ஒருமித்த உணர்வு எத்தகையது என்று. அதுவரை அந்த சட்ட அமைச்சர் தன் கொட்டத்தை அடக்கிக்கொண்டால் சரி!''

சி.பி - சரி, அதெல்லாம் போகட்டும்னே, விஜயலட்சுமிக்கும் , எனக்கும் எந்த தொடர்பும் இல்லைனு சொன்னீங்க, ஆனா நீங்க பாப்பா பர்த்டே பார்ட்டில கேக் ஊட்டுன ஃபோட்டோ எல்லாம் அக்கா ரிலீஸ் பண்ணீட்டாங்க.. அதை எப்படி டீல் பண்ணுனீங்க?பிரபு தேவா மாதிரி பைசல் பண்ணுனீங்களா?

 thanx - vikatan