Wednesday, March 11, 2026

PAVANE(2026)-பவனே-கொரியன் மூவி - சினிமா விமர்சனம் (,ரொமாண்டிக் மெலோ டிராமா ) @நெட் பிளிக்ஸ்

                       

எழுத்தாளர் பார்க் மின் கு எழுதிய Pavane for a dead princess(இறந்து விட்ட இளவரசனுக்கான இசை)என்ற நாவலைத்தழுவி திரைக்கதை அமைக்கப்பட்ட படம்.நமது நாட்டில் பரத நாட்டியத்துக்கு என தனி இசை இருப்பது போல பாவனே என்பது சவுத் கொரியாவில் இருக்கும் புகழ் பெற்ற ஒரு நடனத்துக்காக இசைக்கப்படும் சிறப்பு இசை    .இந்தப்படம் திரை அரங்குகளில் ரிலீஸ் ஆகாமல் நெட் பிளிக்சால் தயாரிக்கப்பட்டு நேரடியாக நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில்  20/2/2026 ல்  வெளியான படம்.தமிழ் டப்பிங்கில் கிடைக்கிறது.குடும்பத்துடன் பார்க்கத்தகுந்த  யு  படம்.


ஸ்பாய்லர்  அலெர்ட்

ஜி வசந்த பாலன் இயக்கிய அங்காடித்தெரு படத்தில் வருவது போலவே நாயகன்,நாயகி இருவரும் ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் பணி புரிபவர்கள்.

நாயகன் நடனத்தில் ஆர்வம் கொண்டவன்.பாடும் வானம்பாடி படத்தில் ஆனந்த்பாபு செய்வது போல தனிமையில் இருக்கும்போது தனக்குத்தானே நடன பயிற்சி கொடுத்துக்கொள்கிறான்.

நாயகி இசையில் ஆர்வம் கொண்டவள்.அப்பா இல்லை.அம்மா மட்டும்.மேலும் இரு உடன் பிறப்புகள்.மொத்தக்குடும்பத்தையும் நாயகி தான் காப்பாற்ற வேண்டும்.இதனால் மற்ற பெண்களைப்போல கேலி,கிண்டல்,ஜாலி செய்யாமல் தனிமை விரும்பியாக ,மவுன விரதப்பாவை ஆக,ஓட்டுக்குள் ஒளிந்து கொள்ளும் நத்தை ஆக நாயகி இருக்கிறாள்.


நாயகனின் ரூம் மேட் ஆக ஒரு நண்பன் அமைகிறான்.இவன் யாருடனாவது ஏதாவது பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவன்.டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஓனரின் மகனே இவன் தான்.ஆனால் அப்பாவுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் வீட்டை விட்டு வெளியேறி ஒரு சாதாரண தொழிலாளியாக அப்பாவின் டிபார்ட்மெண்ட் ஸ்டோரிலேயே வேலை பார்க்கிறான்.


நாயகன்,நாயகி,நண்பன் இந்த மூவருக்கும் ஏற்படும் நட்பு தான் மொத்தத்திரைக்கதையும்.


நாயகன் நாயகியின்  வித்தியாசமான குணத்தால் ஈர்க்கப்பட்டு தன் காதலை வெளிப்படுத்துகிறான்.நாயகிக்கும் சம்மதம் தான்.ஆனால் நாயகன் தன் மீது அதிக அக்கறை காட்டுவது,அதீத அன்பு வைப்பது இதை எல்லாம் பார்த்து சக பணியாளிகள்,தோழிகள் யாராவது கிண்டல் செய்வார்களோ ?என பயப்படுகிறாள்.


நாம் உண்டு ,நம் வேலை உண்டு என்று இருப்போம்.எதற்கு தேவை இல்லாத வம்பு?யாராவது முதலாளியிடம் போட்டுக்கொடுத்தால் உள்ள வேலையும் போய் விடும்,குடும்பத்தைக்காபாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் நாயகி இருக்கிறாள்.


இதை எல்லாம் மீறி நாயகனின் பரிசுத்தமான அன்பு நாயகியைக்கரைக்கிறது.இருவரும் ஒன்றாக இருக்கும் நேரம் தவிர பிரிந்து இருக்கும் நேரஙகள் இருவருக்குமே பெரிய வலியைக்கொடுக்கிறது என்பதை  நாயகி உணர்கிறாள்.இதனால் சொல்லாமல் ,கொள்ளாமல் நாயகி நாயகனைப்பிரிந்து வேறு இடம் போய் விடுகிறாள்.


முதல் 30 நிமிடக்கதை தான் இது.இதற்குப்பின் நடக்கும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை


நாயகி ஆக கோ ஆ சங் நடித்திருக்கிறார்.நம்ம ஊர் பேபி ஷாலினி போல இவர் ஒரு குழந்தை நட்சத்திரமாக இருந்து படிப்படியாக  வளர்ந்தவர்.அபாரமான நடிப்பாற்றல் கொண்டவர்.THE HOST (2006),Thread of lies(2014) ,Resistance (2019)போன்ற படஙகளில் இவர் தன் முத்திரையைப்பதித்திருக்கிறார்.


தலை குனிந்தபடியே எப்போதும் இருப்பது,தாழ்வு மனப்பான்மை,யாருடனும் பழகாத தன்மை என இவர் தனிமரமாய் இருப்பது பரிதாபத்தை அள்ளுகிறது.இவருக்கு சிரிக்கவே தெரியாதோ?என நாம் எரிச்சல் அடையும் தருணத்தில் தான் ஒரு புன்னகை தேவதை என்பதை நிரூபிக்கிறார்.அருமையான நடிப்பு.

நாயகன் ஆக  மூன் சங் மின் நடித்திருக்கிறார்.Under the Queen's umbrella(2022),Wedding Impossible(2024),To my beloved Thief(2026) ஆகிய படஙகளில் நடித்தவர்.சிறந்த புதுமுக நடிகருக்கான விருதை  அண்டர் த க்யூன் ஸ் அம்பர்லா படத்துக்காகபெற்றவர்.இவர் மாடலிஙக் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்.

இவரது அமைதியான நடிப்பு படத்துக்குப்பெரிய பிளஸ்.நாயகன்,நாயகி இருவருக்குமான கெமிஸ்ட்ரி நன்கு ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

நண்பன்  ஆக வரும் பின் யோ ஹா நம்ம ஊர்  மவுனராகம் கார்த்திக் மாதிரி துரு துரு என சுறுசுறுப்பான நடிப்பைக்கொண்டவர்.இவர் வரும் காட்சிகள் எல்லாம். உற்சாகம் தான்.

சக பணியாளர்களாக வரும் மூவரும் ஆர்ப்பாட்டமான அழகுடன் இருந்தாலும் நாயகியின் அடக்கமான அழகுக்கு முன் நிற்க முடியவில்லை.

படத்தில் வில்லன் என யாருமில்லை.

தாள்பலன் என்பவர் தான் இசை.மெலோடி சாங்க்ஸ் உண்டு.ரசிக்கும்படி இருக்கிறது.

கிம் சங்க் தான் ஒளிப்பதிவு.நாயகன்,நாயகி இருவரையும் ஓவியம் போல் அழகாகக்காட்டி இருக்கிறது கேமரா.

சான் மி என்பவருடன் இணைந்து திரைக்கதை எழுதி தனியாக இயக்கி இருக்கிறார். லீ ஜோன் பில்.


சபாஷ்  டைரக்டர்

1 நாயகன் ரோட்டில் ஸ்கேட்டிங் போகும் காட்சி அபாரம்.கேமரா விளையாடி இருக்கிறது.

2 மனோவியல் நிபுணரோ என வியக்கும்படி வசனகர்த்தாவின் வசனங்கள் மனதில் நிற்கின்றன.

3 நாயகனின் நண்பன் ரைட்டர் ஆவது நாயகன்- நாயகி கதையை நாவலாக எழுதுவது க்ளைமாக்சை மற்றும் மாற்றி எழுதுவது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை நினைவுபடுத்தினாலும் கவிதை.



  ரசித்த  வசனங்கள் 

1. ஆழ் மனதில் தீராத வலி உள்ளவர்கள் அதை விட்டு வெளியே வர முடியாது.

2 காதல் இரு ஆன்மாக்களுக்கு உள்ளும் ஒளியைத்தரும்.அது இருவரையும் பேரழகு ஆக்கும்

3 காதல் ஒரு மாயை ,நாம் சேர்ந்தே இருப்போம் என்பதும் ஒரு மாயைதான்.

4 என்றாவது நாம் சந்திப்போம் என்ற நம்பிக்கை இருக்கும் வரை காதலுக்கு அழிவில்லை.

5  நீ ஏன் என்னை லவ் பண்றே?


தண்ணீரில் மூழ்கிட்டு இருக்கறவன் கிட்டே யாராவது நீ ஏன் தண்ணீரில் விழுந்தே?எனக்கேட்பாங்களா?


6  சிண்ட் ரெல்லா கதை யாருக்காவது முழுசாத்தெரியுமா?கல்யாணம் ஆகி ஒரு குழந்தை பிறந்ததும் அவளை விட்டுட்டு ஓடிப்போய்ட்டான்.குழந்தையோடு கஷ்டப்பட்டா

7 காதல் ஒரு மாயை.காதலி ஒரு தனிப்பிறவி என நம்ப வைப்பது காதல்.

8 என்னிடம் ஏன் இவ்ளோ அன்பா இருக்கே?

ஏன் கூடாதா?

இதுக்கு பதிலுக்கு நான் என்ன செய்ய?

இதே மாதிரி அன்பா இரு.போதும்

9  நீ தனிப்பிறவி என்று நினைப்பதை முதலில் நிறுத்து.

10 உலகத்தின் வேகத்துக்கு ஏற்ப ஓடாமல் உங்களால் முடிந்த வேகத்தில் ஓடினால் போதும்

11 வருத்தங்கள் இருந்தாலும் உங்களுக்குப்பிடிக்காததை செய்யாதீங்க

12 அநாவசியமான பாசம்,தேவையற்ற இரக்கம்,அதீதமான பரிதாபம் இவை அனைத்தும் அபாயம்.

13 RAS என்ற ஒரு நோய் இருக்கு.இந்த நோய் வந்துட்டா அவரால் சிரிக்கவோ ,அழவோ முடியாது.மீறி செய்தால் வெடிச்சு செத்துடுவாங்க

14 இளமைக்கு என்றும் அழிவில்லை.


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 நாயகி திடீர் எனப்பிரிவதற்கான அழுத்தமான காரணம் இல்லை.சோகமுடிவுக்காக வேண்டும் என்றே பிரிந்த மாதிரி இருந்தது

2 விளையாட்டுப்பையன் ஆக இருக்கும் நாயகனின் நண்பன் திடீர் என சீரியஸ் ஆவது,ரைட்டர் ஆகி முதிர்ச்சியாய்ப்பேசுவது நெருடுகிறது.

3 நாயகனின் நண்பன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு ஹாஸ்பிடலில் இருக்கிறான் என்ற செய்தியைக்கேட்டு நாயகி  கதறி அழுவது கொஞ்சம் ஓவர் என்றால் அதுவரை அன்பாக இருந்த நாயகன் திடீர் என சைக்கோ போல போதும் நிறுத்து என கத்திப்பேசுவது ஓவரோ ஓவர்

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன் யூ.குடும்பத்துடன் பார்க்கலாம்.இதழ் முத்தக்காட்சி ஒன்று இருக்கிறது



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  விருதுப்படஙகள்,உலகப்படஙகள் பார்த்துப்பழக்கம் உள்ளவர்கள் பார்க்கலாம்.மிக மெதுவாகத்தான் காட்சிகள் நகரும்.ஆனால் A FEEL குட் மூவி.ரேட்டிங்க் 3/5




Pavane
Release poster
Hangul
파반느
RRPabanneu
MRP'abannŭ
Directed byLee Jong-pil
Screenplay by
  • Lee Jong-pil
  • Son Mi
Based onPavane for a Dead Princess
by Kim Min-gyu
Starring
CinematographyKim Sung-an
Music byDalpalan
Production
companies
Distributed byNetflix
Release date
  • February 20, 2026
Running time
113 minutes
CountrySouth Korea
LanguageKorean

Tuesday, March 10, 2026

சீதா பயணம் (2026) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா )

               


               ஆக்சன் கிங்க் அர்ஜூன்   தனது  மகள் ஐஸ்வர்யா அர்ஜூன் நாயகியாக  நடிக்க  கதை , திரைக்கதை , இயக்கம் , தயாரிப்பு  என களம்  இறங்கி  இருக்கும் படம் . ஆக்சன் மசாலாவாக  இல்லாமல்  ஒரு  ரொமாண்டிக் டிராமாவாக   , ஒரு பீல் குட்  மூவியாக எடுக்க முயன்று  இருக்கிறார் , அவரது  முயற்சி  வெற்றி பெற்றதா? என்பதைப்பார்ப்போம் 

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி  மிகப்பெரிய  கோடீஸ்வரரின் மகள் . சிறந்த  சமையல் கலை நிபுணி ஆக பட்டம் பெற்றவர்.. அம்மா  இல்லை , சின்ன வயதில் அம்மா   இறந்ததால்  அப்பா தான்  அவருக்கு எல்லாமே .  அப்பாவை விட்டுப்பிரியக்கூடாது என்பதால் காதல் , கல்யாணம் இவற்றில் எல்லாம் விருப்பம் இல்லாமல் இருக்கிறார் . எப்போது  கல்யாணப்பேச்சை  எடுத்தாலும் அப்போதே  அந்த இடத்தைக்காலி செய்து  விடுவார் .


  வேறு  ஒரு நகரில் நடக்கும் சமையல் கலை  சம்பந்தமான  கான்பரன்ஸ்க்காக  காரில்  பயணிக்கிறார் . அப்போது  முன் பின்  தெரியாத  ஒருவன்  லிப்ட்  கேட் கிறான் . கொஞ்சம்  சந்தேகத்துடன் தான்  நாயகி  அவனுக்கு  லிப்ட்  தருகிறாள் . வழியில் அங்கங்கே   அவள்    பயணம்  தடை  படுகிறது . இதனால்  செல்ல வேண்டிய இடத்துக்குக்கொஞ்சசம்  தாமதமாகத்தான் செல்கிறாள் .ஆனால்  போன உடன் தான்  தெரிகிறது . தாமதமாக வந்தது நல்லதாகப்போயிற்று  என .. ஏன் எனில்  அந்த ஹோட்டல்  மிகப்பபெரிய  தீ விபத்தில்  கருகி விட்டது . தான்  உயிர்   தப்பியதற்கு  தனது பயணத்தில்  குறுக்கீடாக   வந்தவர்கள் தான்  என நினைக்கிறார் . அவர்களுக்கு ஒரு நன்றி  தெரிவிக்கலாம் என நினைக்கிறார் .அந்த  நன்றி   தெரிவிக்கும்  படலத்தில்  லிப்ட்  கொடுத்த  இளைஞனிடம்   காதல்   மலர்கிறது 


ஆனால்  ஒரு கட்டத்தில்   தன   காதலனும் ,  அப்பாவும் ஏற்கனவே  ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் ஆனவர்கள் என்பதை உணர்கிறார் . எல்லாமே  அப்பா  வின்  செட்டப்போ   என சந்தேகிக்கிறார் , இதற்குப்பின்  நிகழும்  சம்பவங்கள் தான்   மீதி   திரைக்கதை 



நாயகி  ஐஸ்வர்யா  அர்ஜூன்  =  தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஸ்ருதிகா + ஜோதிகா  + சோனியா அகர்வால்   மூவரின் முகச்சாயல்  இருக்கிறது , சில காமரா கோணங்களில்  மூவரையும்  தனித்தனியே  நினைவுபடுத்துகிறார் 


 சிரித்த   முகம் , நல்ல  நடிப்புத்திறன்  ஒருங்கே  கொண்டவர் . நல்ல எதிர் காலம் உண்டு . நாயகன் ஆக   நிரஞ்சன்   என்பவர் . எடுபடவில்லை . நாயகியின்  அப்பாவாக சத்யராஜ் , நாயகனின்  அப்பாவாக பிரகாஷ்  ராஜ் இருவரும்  குணச்சித்திர  நடிப்பில்  மிளிர்கிறார்கள் . கோவை  சரளா  கெஸ்ட்  ரோலில்   வருகிறார் . மற்ற   அனைவர்   நடிப்பும்   சிறப்பு . ஆக்சன்  கிங்க் அர்ஜூனும் ஒரு ரோலில்  நடித்து   இருக்கிறார் 


ஜி  பாலமுருகனின்  ஒளிப்பதிவு  பரவாயில்லை ரகம் . அனூப்  ரூபன்சின்   இசையில்  4 பாடல்கள்   சுமார் ரகம் , பின்னணி இசை பரவாயில்லை ரகம் .


 சண்டைக்காட் சிகளை  அர்ஜுனே  வடிவமைத்து   இருக்கிறார் .  படம்  ரன்னிங்க்   டைம் இரண்டரை  மணி நேரம் , இன்னமும்  அரை மணி நேரம் கத்திரி  போட்டிருக்கலாம் 

சபாஷ்  டைரக்டர்

1  நாயகனின்  நண்பன்  தன காதலியிடம்  காதலை சொல்வது எப்படி ? என ஐடியா கேட்க  அவனுக்கு  ஐடியா        கொடுப்பது  போல     அருகில் இருக்கும் நாயகியிடம்  காதலை  வெளிப்படுத்தும் சீன்   கவிதை 

2  சைக்காலஜி  டாக்டர் , சைக்கலாஜிக்கல்  ட்ரீட்மெண்ட் , அவரது அணுகுமுறை எல்லாம் தமிழ் சினிமாவுக்குக்கொஞ்சம் புதுசு 

3  ஏற்கனவே  வெளிவந்த பயணக்கதைகளான  வானம் , பையா , திருடா திருடா  படக்கதைகளிலிருந்து  வேறுபட்டு  வித்தியாசமான  கதைக்கரு வை  எடுத்துக்கொண்டு  திரைக்கதை  அமைத்தது  பாராட்டுக்குரிய விஷயம் 



ரசித்த  வசனங்கள் 


1  நாம  எப்பவும் கத்துக்கிட்டே   இருக்கணும் , அப்போதான் முன்னேற  முடியும் 


2   ஊருக்குள்ளே கோயில்  இருந்தாத்தான்  கலாச்சாரம்  வளரும் ,ஊருக்குள்ளே பள்ளிக்கூடம்  இருந்தாதான்  பகுத்தறிவு வளரும் 


3  நாம  மட்டும்  இல்லை , நம்மை சுத்தி  இருக்கும்  எல்லா ஜீவராசிகளும் நல்லா இருக்கணும்னு நாம நினைக்கனும் 


4  கெட்டதிலும்   நல்லது  இருக்கு , நெகடிவ்ல யும் சில பாசிட்டிவ்ஸ்  இருக்கு 

5  பணக்காரர்களாகிய  நாம்  10 ரூபாய்க்குக்கூட யாரையும்  நம்ப மாட் டோம் , ஆனால்  ஏழையாக இருந்தும்  அவ  100 ரூபாய்  வாங்காம நம்மை நம்பறாளே? 

6   லவ் பண்ண ,  பிரப்போசல்  அவசியம்  இல்லை ,  அதுதான்  மேஜிக் ஆப் லவ் 

7  மவுனமா  இருப்பது எப்பவும் ஒரு முடிவைக்கொடுக்காது , மனம் விட்டுப்பேசனும் 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   தமிழ் ,   தெலுங்கு , கன்னடம் , ஹிந்தி , மலையாளம்  என  5 மொழிகளில்  உருவான   படம்  என பிரமோ    செய்திருந்தாலும் தெலுங்கில்  எடுத்து அனைத்து  மொழிகளிலும் டப்  செய்து  இருக்கிறார்கள் , லிப்  சிங்க்  சரியாக  வரவில்லை       


2  மெயின் கதைக்கு  முக்கியமான  காட்சி  ஆகிய  பைவ் ஸ்டார்  ஹோட்டலுக்கு தீ  விபத்து ஏற்படுவது  சி ஜி  ஒர்க் சரியாக அமையவில்லை 


3 நாயகனின்  முகம்  நமக்கு  சரியாக  செட் ஆகவில்லை . நாயகி அளவுக்கு  மனதில் நெருக்கம் உண்டாகவில்லை 

4    படத்தின்  தயாரிப்பாளர் என்பதால்  மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லா விட்டாலும்  அர்ஜூனின்  கேரக்ட்டருக்கு தந்த  முக்கியத்துவம், அவருக்கான  ஆக்சன் சீக்வன்ஸ்  வலியத்திணிக்கப்பட்டது 

5   ரவுடியாகவே  வாழ்ந்து  பல கொலைகள் செய்த ஆள்  நாயகியின்  ஒரே ஒரு நன்றியில்  மனம் மாறி  திருந்துவது  காதில் பூ 


6  நாயகியின்  பெயர்   சீதா ,   நாயகனின்  சொந்த   ஊர் பெயர்  சீதா புரம் , எதேச்சயாக  அமைந்த  இந்த  ஒற்றுமை பற்றி  நாயகனோ , நாயகியோ வியந்து  சிலாகித்துக்கொள்ளவே இல்லையே ? 

7  க்ளைமாக்ஸ்  சீன்  காதலுக்கு மரியாதை  படத்தையும் , க்ளைமாக்ஸ்   வசனங்கள் பூவே  உனக்காக  பட  வசனத்தையும்  நினைவு படுத்துகிறது 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 13+  குடும்பத்துடன் பார்க்கலாம் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   வித்தியாசமான  ஒரு கதைக்களம் .  பார்க்கலாம் , ஆனால் 2 கே  கிட்ஸுக்குப்பிடிக்காது . சென்ட்டிமென்ட்  சீன்கள் அதிகம் . ரேட்டிங்க்  2.5 / 5 



Tuesday, March 03, 2026

BABY GIRL (2026) -பேபி கேர்ள் - மலையாளம் / தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) @ ஜியோ ஹாட் ஸ்டார்

                              




23/1/2026 முதல் திரை அரங்குகளில் வெளியான இந்த லோ பட்ஜெட் படம் வெளியான முதல் 15 நாட்களில் ஒரு கோடியே 70 லட்சம்  ரூபாய் வசூல்  செய்துள்ளது.இப்போது 13/2/2026 முதல் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடியில் தமிழ் டப்பிஙகில் காணக்கிடைக்கிறது.


தொடர்ந்து நான்கு தோல்விப்படஙகள் தந்த நிவின் பாலிக்கு இது ஒரு எதிர் பாராத வெற்றிப்படம்.சர்வம் மாயா ஹிட்டைத்தொடர்ந்து இதுவும் ஹிட் படமே.


சுரேஷ் கோபி+ பிஜூ மேனன்  நடித்த கருடன்(2023) என்ற வித்தியாசமான க்ரைம் திரில்லர் படத்தைக்கொடுத்த இயக்குநர் அருண் வர்மாவின்   அடுத்த படம் இது.தமிழில் சூரி+எம் சசிகுமார்  நடிப்பில் வந்த கருடன்(2024) தமிழ்ப்படத்துக்கும் ,கருடன்(2023)  எந்த சம்பந்தமும் இல்லை.



ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் கேரளாவின் தலைநகர்  திருவனந்தபுரத்தில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவனனையில் அட்டெண்டர்.ஒரு நாள் அவருடன் பணி புரியும் ஊழியர் அடுத்த நாள் பணிக்குத்தாமதமாக வர இருப்பதாக சொல்கிறார்.


அந்த நாளில் நாயகன் தாமதமாகவே பணிக்கு வருகிறான்.பிறந்து 3 நாட்களே ஆன ஒரு குழந்தை காணாமல் போகிறது.தாமதமாக ட்யூட்டிக்கு வந்ததால் போலீஸ் நாயகனை சந்தேகிக்கிறது ,விசாரிக்கிறது

இதனால் நாயகன் தானாக முன் வந்து காணாமல் போன குழந்தையைக்கண்டுபிடிக்கும் படலம் தான் மொத்தத்திரைக்கதை.


நாயகன் ஆக  நிவின் பாலி அடக்கி வாசித்து இருக்கிறார்.ஹீரோ பில்டப் இல்லாத அவரது அண்டர் ப்ளே ஆக்டிஙக் குட்.

நாயகி ஆக வரும் லிஜோ மோல் ஜோஸ் நாயகனுக்கு ஜோடி இல்லை.ஆனாலும் அவரது நடிப்புக்கு இணை படத்தில் வேறு யாரும் இல்லை.குழந்தை பாசத்தில் தவிப்பது,புகுந்த வீட்டில் சிரமஙகளை எதிர்கொள்வது.,கணவனை துணிச்சலாக எதிர்ப்பது என விருதுக்குத்தகுதியான நடிப்பு .


சங்கீத் பிரதாப் க்கு அருமையான ரோல்.படம் முழுக்க ஓடிக்கொண்டே இருக்கிறார்.நாயகனை விட அதிகக்காட்சிகள் வருகிறார்.நடிப்பும் கச்சிதம்.


போலீஸ் ஆபீசர் ஆக வரும் அபிமன் யு நடிப்பு அருமை.ஜாபர் இடுக்கி ஒரு கெஸ்ட் ரோலில் வருகிறார்

சாம் சி எஸ் இசையில் ஒரே ஒரு பாட்டு ஓக்கே ரகம்.பின்னணி இசை சிறப்பு.

பைஸ் சித்திக்கின் ஒளிப்பதிவு அருமை.சையித் குமரனின்  எடிட்டிஙகில் படம் 124 நிமிடஙகள் ஓடுகிறது

சபாஷ்  டைரக்டர்

1 பாபி-சஞசய் இருவரின் திரைக்கதை அருமை.ஒரு சாதாரண கதைக்கருவை சீட் எட்ஜிஙக் திரில்லராக மாற்றும் வித்தை அவர்களுக்குத்தெரிந்திருக்கிறது(2013ல் வெளியான  மும்பை போலீஸ் என்ற மெகாஹிட் க்ரைம் திரில்லர் படத்தின் திரைக்கதை இவர்கள் தான்)

2  காணாமல் போனது ஒரு குழந்தை தானே?அதைக்கண்டுபிடிக்க நாம் ஏன் இவ்வளவு மெனக்கெடனும் என ஒரு போலீஸ் கேட்கும்போது அதற்கு உயர் அதிகாரி சொல்லும் பதில் டச்சிஙக் ( நாளை அதே குழந்தை சிக்னலில் பிச்சை எடுக்கும் நிலைக்கு வரலாம்.அதைத்தடுக்கும் பொறுப்பு நமக்கு உண்டு.)

3 நாயகி ஆக வரும் லியோ மோல் ஜோசின் பிரமாதமான நடிப்பு பெண்களை மிகவும் கவரும்

4 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் எதிர்பாராதது



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 குழந்தையைக்கட்டைப்பையில் வைத்துக்கடத்தும் காட்சி ஏற்கனவே அதிசா வின் திரைக்கதையில் வெளி வந்த டி என் ஏ (2025) என்ற தமிழ்ப்படத்தில் வந்திருக்கிறது.

2 பின் பாதி திரைக்கதை கொஞ்சம் இழுவை தான் .படமே முடிந்த பின் மீண்டும் 30 நிமிடம் கதையை இழுக்கிறார்கள்.

3 படத்தின் டைட்டில் டிராக் இசை  ஸ்கேம் 1992 எ ஹர்சத் மேத்தா படத்தின் டைட்டில் டிராக்கிலிருந்து சுட்டு இருக்கிறார்கள்.

4 கதை ஒரே நேர் கோட்டில் செல்லாமல் அக்கா-தம்பி, ஒரு தம்பதி,நாயகன் என 3 ட்ராக்குகளில் திரைக்கதை அமைவதால் நாம் யாருடன் பயணிப்பது என்ற குழப்பம் வருகிறது


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-13+ குடும்பத்துடன் பார்க்கலாம்


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   குழந்தைக்கடத்தல் ,அம்மா செண்ட்டிமெண்ட்ஸ் இருப்பதால் பெண்களைக்கவரும் படம் இது.ரேட்டிங் 3/5



Baby Girl
Theatrical release poster
Directed byArun Varma
Written byBobby-Sanjay
Produced byListin Stephen
Starring
CinematographyFaiz Siddik
Edited byShyjith Kumaran
Music bySam C. S.
Production
company
Distributed byMagic Frames
Release date
  • 23 January 2026
Running time
124 minutes[1]
CountryIndia
LanguageMalayalam
Box office₹1.70 crore[2]

Monday, March 02, 2026

EVEN IF THIS LOVE Disappears FROM THE WORLD TO NIGHT (2025) -கொரியன் மூவி-சினிமா விமர்சனம்(ரொமாண்டிக் ட்ராமா)@நெட் பிளிக்ஸ்-

       

                       

டைட்டிலைப்பார்த்ததுமே இவ்வளவு நீளமா இருக்கே?என்று மலைக்க வேண்டாம்.மயிலின் தோகை நீளமாக இருப்பதால் நாம் அதன் அழகை ரசிக்காமலா இருக்கிறோம்?.


24/12/2025 அன்று திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் இப்போது நெட் பிளிக்ஸ் தளத்தில் 6/2/2026 முதல் தமிழ் டப்பிங் கில் காணக்கிடைக்கிறது.குடும்பத்துடன் பார்க்கத்தகுந்த கண்ணியமான காட்சிகள் கொண்ட படம் இது.


இதே டைட்டிலில் கிம் யே யங் என்பவர் எழுதிய நாவலைத்தழுவித்திரைக்கதை அமைக்கப்பட்ட படம்.பொதுவாக ஒரு சிறுகதையையோ,நாவலையோ தழுவி திரைக்கதை அமைந்தால் அதில் செய் நேர்த்தி,கவித்துவும் கூடுதலாக இருக்கும் என்பதை இந்தப்படமும் நிரூபிக்கிறது

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ,நாயகி இருவரும் ஒரே பள்ளியில் ,ஒரே வகுப்பில் படிக்கும் 11 வது படிக்கும் பள்ளி மாணவர்கள்.

சக மாணவர்கள் நாயகனை ரேகிங்க் செய்து நாயகியிடம் நீ என்னுடைய கேர்ள் பிரண்ட் ஆக இருக்கிறாயா?எனக்கேட்க சொல்கிறார்கள்.நாயகனும் அதே போல் கேட்க இருவரும் நண்பர்கள் ஆகிறார்கள்.


ஆனால் நாயகி 3  நிபந்தனைகள் விதிக்கிறாள்.அடிக்கடி பேசி தொந்தரவு செய்யக்கூடாது.பள்ளி வளாகத்தில் ,வகுப்பில் பேச முயற்சிக்கக்கூடாது,காதலிக்கக்கூடாது.

நாயகனுக்குப்புரியவில்லை என்றாலும் அந்த விதிகளுக்குக்கட்டுப்பட்டு நட்பைத்தொடர்கிறான்.

நாயகி எட்டாம் வகுப்புப்படிக்கும்போது ஒரு விபத்தில் தலையில் அடிபட்டு ஆண்ட் ரோ கிரேடு அம்னீசியா என்ற பிரச்சனை ஏற்படுகிறது.அதாவது நாயகி தூங்கி எழுந்தால் அதற்கு முன் தின நினைவுகள் இருக்காது.


கிட்டத்தட்ட கஜினி (மொமெண்ட்டோ) பட நாயகன் மாதிரி.இந்த நிலைமையை சமாளிக்க தினமும் டைரியில் ,செல் போனில் அன்று நடந்த சம்பவங்களை எழுதி வைத்துக்கொள்கிறாள்.

அடுத்த நாள் காலையில் டைரியில்ன்படித்து சந்தித்த நபர்கள் ,சம்பவங்கள் ஆகியவற்றை நினைவு கூர்வாள்.

நாயகனுக்கு அம்மா இல்லை.இறந்து விட்டார்.அப்பா மட்டும் தான்.நாயகன் சிறுவனாக இருக்கும்போதே இதயத்தில் ஒரு சரி செய்ய முடியாத பிரச்சனை இருக்கிறது.இதயத்தைத்திருடாதே(கீதாஞ்சலி)பட நாயகன் போல இறப்பை எந்நேரமும் எதிர் நோக்கிக்காத்திருப்பவன்.

இந்த விஷயம் நாயகிக்குத்தெரியாது.நாயகியின் நோய் பற்றி நாயகனுக்குத்தெரியாது.

இவர்கள் பழகிக்கொண்டிருக்கும்போது நாயகன் நாயகி விதித்த நிபந்தனைகளில் மூன்றாவது விதியை மீறி விடுகிறான்.

அதற்கு நாயகியின் எதிர் வினை என்ன?அதற்குப்பின் நிகழ்ந்த சம்பவங்கள் என்ன?என்பது தான் மீதித்திரைக்கதை.


நாயகன் ஆக ச்சூ யங்க் வூ நடித்திருக்கிறார்.நம்ம ஊர் சித்தார்த் போன்ற முகத்தோற்றம்.அப்பாவுடனான பிணைப்பு,நாயகி உடனான நட்பு ,நண்பர்கள் உடனான கலாட்டாக்கள் என எல்லா ஏரியாக்களிலும் ஸ்கோர் செய்கிறார்.

நாயகி ஆக ஷின் ஷியா அழகுப்பதுமையாக வருகிறார்.அழும்போதும் அழகாக இருப்பவர் தான் நல்ல நாயகி என்ற ஜெயகாந்தன் சொல்லுக்கு ஏற்ப சோகக்காட்சிகளிலும் மிளிர்கிறார்.

படத்தில் நடித்த மற்ற அனைவர் நடிப்பும் கச்சிதம்.

இது மாதிரி ரொமாண்டிக் மூவிகளில் ஒளிப்பதிவு ம் இசையும் முக்கிய அங்கம் வகிக்க வேண்டும்.படத்தில்  பிரமாதமான ஒளிப்பதிவு ஓவியம் போன்ற காட்சிகளால்

கண்களைக்கவர்கிறது.பின்னணி இசை கவிதை.பாடல்கள் 3 இருக்கிறது.


திரைக்கதை எழுதி. இயக்கி இருப்பவர் கிம் யே யங்க்

படத்தின் டியூரேசன் டைம்  106 நிமிடங்கள்

சபாஷ்  டைரக்டர்

1 சமீபத்தில் வெளியான வித் லவ் , தனுஷ நடித்த 3 ஆகிய படங்களில் வருவது போல முதல் 45 நிமிடங்கள் ஸ்கூல் கலாட்டா என்பதால் இளமைக்குறும்புகள் கொப்பளிக்கும் காட்சிகள் அருமை

2  நாயகனுக்கும்,அப்பாவுக்கும் உண்டான பாண்டிங் வெளிப்பட்ட விதம்

3  நாயகியின் தோழியை வில்லி மாதிரி காட்டி பின் எதனால் அப்படி நடந்து கொண்டார் என்ற ட்விஸ்ட்

4 நாயகியை ஒவ்வொரு நாளும் சந்தோஷமாக  வைத்துக்கொள்ள நாயகன் எடுக்கும் முயற்சிகள் கவிதை



  ரசித்த  வசனங்கள் 

1 சிலர் சில நினைவுகளைக்கொஞ்சம் கொஞ்சமா மறக்கிற மாதிரி நான் அவன் நினைவுகளைக்கொஞ்சம் கொஞ்சமா ஞாபகப்படுத்திக்கறேன்.

2 காயஙகள் ,அதனால் ஏற்படும் தழும்புகள் அழிவதில்லை,ஆனால் வலிகள் நிரந்தரம் இல்லை.

3  டேட்டிங்க் ல பொண்ணுங்க சொல்றதை செய்யலைன்னா பிரச்சனை,ஆனா அவஙக சொல்றதை மட்டும் செஞ்சுட்டு இருந்தா அதை விடப்பெரிய பிரச்சனை

4  உலகத்தில் இருக்கற எல்லோரும் நல்லவங்க இல்லை.

5  காலம் போகப்போக நினைவுக்ள் எல்லோருக்கும் மங்கத்தொடங்கும்,ஆனா உன் மனசுல என்ன இருக்கோ அது நிலைத்து நிற்கும்

6 சரியாத்தூஙகலைன்னா நீ நல்லா வளர மாட்டே.

டாடி.இப்பவே நான் உங்களை விட உயரம் தான்

7  ஸ்போர்ட்ஸ் உனக்குப்பிடிக்காதா?ஏன்?


வியர்க்கும்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 நாயகிக்கு வந்திருக்கும் குறைபாட்டின் படி முதல் நாள் நிகழ்ந்த சம்பவங்கள் மறு நாள் மறக்கும் எனில் அவர் எப்படி பரீட்சை எழுதி பாஸ் ஆவார்? நடத்திய பாடம் மறக்குமே?

2  நாயகி எட்டாம் வகுப்புப்படிக்கும்போது ஆர்ட்டிஸ்ட் ஆக இருந்தார் எனவும் இப்போது விபத்துக்குப்பின் அதெல்லாம் மறந்து விட்டது எனவும் கூறுகிறார்.ஆனால் சைக்கிள் ஓட்டுவது மட்டும்  மறக்காமல் இருக்கிறார்.

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 13+ குடும்பத்துடன் பார்க்கலாம்


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - Feel good மூவி பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம்.மிக மெதுவான திரைக்கதை.பொறுமை தேவை.ரேட்டிங்க் 3/5

..

Even If This Love Disappears From the World Tonight
Hangul
^오늘 밤, 세계에서 이 사랑이 사라진다 해도
Literal meaningEven If This Love Disappears Tonight
Directed byKim Hye-young
Based onEven If This Love Disappears From the World Tonight [ko]
by Misaki Ichijo [ja]
Starring
Production
companies
  • Blue Fire Studio
  • Red Ice Entertainment
  • O'FAN House
  • Kadokawa
Distributed byBy4M Studio
Release date
  • December 24, 2025
Running time
106 minutes
CountrySouth Korea
LanguageKorean

Friday, February 27, 2026

தாய் கிழவி (2026)-தமிழ்-சினிமா விமர்சனம் (பேமிலி மெலோ டிராமா)

 


தாய் கிழவி (2026)-தமிழ்-சினிமா விமர்சனம் (பேமிலி மெலோ டிராமா)


கடந்த 10 நாட்களாகவே இந்தப்படத்தின் பிரமோஷன்கள் சோசியல் மீடியா வில் அளவுக்கு அதிகமாகவே கொடுக்கப்பட்டு வருவதால் இது மாதிரி  ஓவர் ஹைப் கொடுத்த படங்கள் எல்லாம் அதீத எதிர்பார்ப்பை ஈடு கட்டமுடியாமல் தோல்வியைத்தழுவி இருக்கிறதே ?என்ற கவலையுடன் தான் படம் பார்த்தேன்.நல்ல வேளை,இயக்குநர் ஏமாற்றவில்லை.


ஒரு பாரதிராஜாவோ,பருத்தி வீரன் அமீரோ,வாழை மாரி செல்வராஜோ காட்டுகின்ற அச்சு அசல் கிராமியக்கதையை பிரமாதமான திரைக்கதை மூலம் தந்து படத்தில் நடித்த அனைத்துக்கேரக்டர்களுக்கும் சம அளவில் வாய்ப்புத்தந்து ஒரு மறக்க முடியாத படத்தைத்தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன்.இவர் விஜய் சேதுபதி நடித்த கடைசி விவசாயி படத்தில் அசிஸ்டெண்ட் டைரக்டர் ஆகப்பணியாற்றியவர்


கதை சாதாரண பீர்பால் டைப் நீதிக்கதை தான்.ஆனால் அதை சொன்ன விதத்தில் கேரக்டர்களுக்கு உயிர் கொடுத்த விதத்தில் தனித்து நிற்கிறார் இயக்குநர்


மதுரை -உசிலம்பட்டி அருகே காடுபட்டி என்று  ஒரு கிராமம்.அதில் 75 வயதான பாட்டி நாயகி பவுனுத்தாயி  வாழ்ந்து வருகிறார்.வைதேகி காத்திருந்தாள் படத்தில் வெள்ளிக்கிழமை ராமசாமி ஆக வரும் ராதா ரவி தெருவில் இறஙகினாலே ஊர் மக்கள் பயப்படுவது மாதிரி நாயகி பவுனுத்தாயி வட்டி வசூல் பண்ணக்கிளம்பினாலே ஊரில் ஆளாளுக்கு நடுங்க ஆரம்பித்து விடுவார்கள்.ஏன் எனில் பவுனுத்தாயி ஒரு பெண் என்றாலும் 10 ஆண்களுக்கு சமம்.அடாவடியாக நடந்து கொள்வாள்.


நாயகிக்கு 3 மகன்கள்,ஒரு மகள்.ஒரு மகனுக்கு 35 வயது கடந்தும் முதிர்கண்ணனாகவே சுற்றி வருகிறார் (முதிர் கன்னிக்கு ஆண்பால் முதிர் கண்ணன் தானே?) மற்ற இரு மகன்களுக்கும் திருமணம் ஆகி தனியே இருக்கின்றனர்.மகளுக்குத்திருமணம் ஆனாலும் வரதட்சணையில் பாக்கி இருப்பதால் நாயகி உடனேயே தனியே இருக்கிறாள்.

நாயகி பவுனுத்தாயியை யாருக்கும் பிடிக்காது.ஊர் மக்களுக்கும் சரி,குடும்ப உறவுகளுக்கும் சரி  உறவினர்களுக்கும் சரி சுத்தமாக இவரைப்பிடிக்காது.இவர் சீக்கிரம் போய்ச்சேர மாட்டாரா?என்று ஏங்குபவர்கள் தான் அதிகம்.

இப்படி இருக்கும் தருணத்தில்  நாயகி பவுனுத்தாயி திடீர் என படுத்த படுக்கை ஆகிறாள்.கிட்டத்தட்ட கோமா ஸ்டேஜ்.ஆனால் ஒரு கை மட்டும் அசைகிறது.ஏதோ சொல்ல வருகிறது.ஆனால் அவர் என்ன சொல்ல வருகிறார்?என்பது யாருக்கும் புரியவில்லை.

உறவினர்கள் பலரும் நாயகியைப்பார்த்து விட்டுப்போக வந்த வண்ணம் இருக்கிறார்கள்.வாரிசுகள் நினைப்போ நாயகி இறந்து விட்டால் அவரது நகைகளைப்பங்கு போட்டுக்கொள்ளலாம் என்றே இருக்கிறது. அவரின் சாவுக்காகக்காத்திருக்கிறார்கள்.

இப்போது தான் கதையில் ஒரு ட்விஸ்ட்.நாயகியைப்பார்க்க வந்த ஒரு நபர் பவுனுத்தாயி நல்லா இருக்கனும்.நான் ஒரு பொற்கொல்லன்.என்னிடம் தான் 190 பவுன் நகை ஆர்டர் செய்து வாங்கிப்போனார் எனக்கொளுத்திப்போடுகிறார்.

ஒரு பவுன் சுமாராக ஒண்ணே கால் லட்சம்.அப்போ மொத்த மதிப்பு  கிட்டத்தட்ட இரண்டே கால் கோடி ரூபாய்.

அவ்வளவு தான்,வாரிசுகளுக்குப்பொறுக்கவில்லை.மொத்த நகைகள் ஒரு புதையல் போல.எங்கே வைத்திருப்பார்?எனத்தேட ஆரம்பிக்கின்றனர்.

இதற்குப்பின் என்ன நிகழ்ந்தது?நாயகி உயிர் பிழைத்தாரா?நகைகளின் கதி என்ன?யாருக்குக்கிடைத்தது?இவை எல்லாம் மீதித்திரைக்கதையின் சுவராஸ்யமான அம்சங்கள்.


நாயகி பவுனுத்தாயி ஆக ராதிகா பிரமாதமாக நடித்திருக்கிறார்.ஒவ்வொரு முறை ஒப்பனை இடும்போது 4 மணி நேரம் ஆனதாம்.தேசிய விருது கிடைக்க வாழ்த்துகள்.


அவ்வை சண்முகி,இந்தியன் ஆகிய படஙகளில் கமலுக்குப்போட்ட மேக்கப் மாதிரி தான்,ஆனால் ஒரு குறை.இந்தியன் படத்தில் சுகன் யாவுக்கான மேக்கப் சரி இருக்காது.துருத்திக்கொண்டு இருக்கும்.அது போல் க்ளோசப் காட்சிகளில்  ஒப்பனை எடுபடவில்லை.முகத்துக்கு மட்டும் மேக்கப் போட்டு விட்டு கை,கால்களை விட்டு விட்டார்கள்.


ஆனால் ராதிகாவின் நடிப்பில் குறை எதுவும் இல்லை.பசும்பொன்,கிழக்குச்சீமையிலே படங்களில் நடித்தது போல் இது  அவருக்கு ஒரு வாழ்நாள் சாதனைப்படம்.

நாயகியின் மகன்களாக  சிங்கம்புலி,அருள் தாஸ்,பால சரவணன் மூவரும் செய்யும் அலப்பறைகள் அருமை.

கமல் ரசிகராக சிங்கம் புலி செய்யும் காமெடிகள் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.ஆட்டோ டிரைவர் ஆக வரும்  அருள் தாஸ் அந்த கேரக்டருடன் ஒன்றி நடித்திருக்கிறார்.பால சரவணனின் காமெடி ஒன் லைனர்கள் சரவெடி.

நாயகியின் மகளாக வரும் ரேச்சல் ரெபாக்கா வசனமே அதிகம் பேசாமல் ஒரு பார்வை ,ஒரு அசைவு ,உடல் மொழி மூலமாகவே கவனம் ஈர்க்கிறார்.

நாயகியின் மருமகனாக வரும் முத்துக்குமார்  வந்த சீனில் இருந்து கடைசி சீன் வரை முத்திரை பதிக்கிறார்.


நாயகி வரும் காட்சிகள் என்று பார்த்தால் முதல் 15 நிமிடஙகள் ,கடைசி 20 நிமிடஙகள் மட்டும் தான்.மொத்தப்படத்தையும் தோளில் தாங்கி நிற்பது படததின் அனைத்துக்கேரக்டர்களும் தான்.

நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் பாடல்கள் பிரமாதம் என்று சொல்ல முடியாவிட்டாலும் ஓக்கே ரகம் ஆக இருக்கின்றன.சிவகார்த்திகேயன் ஒரு பாடல் பாடி இருக்கிறார்.

நாயகிக்குப்போட்ட மேக்கப் பிராஸ்தடிக் மேக்கப் என சொல்லப்படுகிறது. ஆலங்குடி செல்லத்துரை தான் ஒப்பனையாளர்.

ஒளிப்பதிவு விவேக் விஜயகுமார்.கிராமிய அழகைக்கண் முன் நிறுத்துகிறார்.

சான் லோகேசின் எடிட்டிஙகில் படம் முதல் பாதி சுமாராகவும்,பின் பாதி பிரமாதமாகவும் ரசிக்க வைக்கிறது

சபாஷ் டைரக்டர்


1 மதுரை ஏரியாவில் தட்டுவாணி என்ற வசைச்சொல் உண்டு.அதைப்படத்தில் பயன்படுத்திய விதம்.இது தமிழ் சொல்லே இல்லை,அடஙகாத குதிரை என்பதைக்குறிக்கும் மராட்டிய சொல்.இது மாதிரி வழக்குத்தமிழ் சொல்லாடல்களை பயன் படுத்திய விதம் அருமை

2  கமல் ரசிகராக வரும் ஒரு கேரக்டர் தன் கையில் பச்சை குத்தி இருக்கும் கமல் உருவத்தைப்பார்த்து இவரும் ஆண்டவர் தான்,பட்டையை இவருக்கும் போட்ருவோம் என திருநீறு பூசுவது செம

3 இயக்குநர் ஒரு கமல் ரசிகர் என்பதால் படம் முழுக்க கமல் ரெப்ரன்ஸ் ,,கமல் பாடல்கள் என தியேட்டரில் ஆரவாரம்.இது லப்பர் பந்து படத்தில் கேப்டன் விஜய்காந்த்  படப்பாடல்களைப்பயன்படுத்தியது போல

,4 இத்தனை வருடங்களாக நான் சேர்த்து வைத்த பாண்டித்யம் இது தான் என நாயகி வாரிசுகளுக்கு உணர்த்தும் காட்சி அருமை.

5  நகைச்சுவை ,செண்ட்டிமெண்ட் எமோஷனல் சீன்ஸ் என்று கலந்து கட்டி காட்சிகளைக்கோர்த்த விதம்

6 ஒரே ஒரு சீனில் வந்தாலும் இளவரசு செய்யும் அலப்பறை 

7 கடைசி 20 நிமிடங்களில் வரும் செண்ட்டிமெண்ட் சீன்ஸ், பெண்கள் எப்படி வாழ வேண்டும் என்னும் கருத்து சொல்லப்பட்ட விதம்

8 ஒரு திருமணத்தை நான் எப்படிப்பார்க்கிறேன் என்று முனீஷ் காந்த் உருக்கமாகப்பேசும் சீக்வன்ஸ் டச்சிஙக்.

,9 விஸ்வரூபம் டைட்டில் பிஜி எம் மைப்பயன்படுத்திய விதம் ,இடம் அருமை

10 கங்காரு அடிகள் கேரக்டரில் வரும் குடிகார சாமியார் செய்யும் அலப்பறை யில் தியேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸ்.

11 ஜார்ஜ் மரியன் கேரக்டர் சிறியதாக இருந்தாலும் பயன் படுத்திய விதம் பிரமாதம்..

12 பல்லாஙகுழி மேட்டர் ஸ்மார்ட் ஆன ஐடியா

13  ரஜினி படம் பாட்டுப்போடு என சொன்னபோது தேடிக்கொண்டிருப்பவரும் டேய்,தலைவர் 170 படம் நடிச்சிருக்கார்.அப்பாஸ் படத்தைத்தேடற மாதிரி தேடிட்டு இருக்கே? என்று கவுண்ட்டர் கொடுக்கும் சீனில் தியேட்டர் வெடித்துச்சிரித்தது.



ரசித்த வசனங்கள்

1 நம் எதிரே இருப்பவருக்குப்புரியாத மொழியில் பேசுவதால் என்ன பெருமை?

2 பொழுது மட்டுமல்ல,பொண்ணும் போனாத்திரும்பி வராது

3 மனுசன் சந்தோஷமா வாழப்பணம்  தேவையா?என்பது தெரியல.ஆனா மரியாதையா வாழப்பணம் தேவை

4 பணம் எல்லாம் வேணாம் ,காசு தேவை இல்லை என்று ஒருவன் சொன்னால் அவன் 3 தலைமுறைக்கு சொத்து சேர்த்தவன் ஆக இருப்பான்.

5 தைரியத்துக்கும் ,வீரத்துக்கும் ஆண் கடவுள் தான் என்றாலும் கல்விக்கடவுள்,செல்வத்துக்கான கடவுள் பெண் கடவுள்கள் தானே?

6 எந்தப்பெத்தவங்களுமே காசில்லை என்பதற்காக  தான் பெத்த குழந்தைகளைக்கொல்வதில்லை.




லாஜிக் மிஸ்டேக்ஸ்,திரைக்கதையில் சில நெருடல்கள்


1 படத்தின் டைட்டில் ஆக  நாயகியின் பெயர் ஆன பவுனுத்தாயி என்பதையே வைத்திருக்கலாம்.பெண்மைக்குப்பெருமை சேர்ப்பதாக இருந்திருக்கும்.சிவகார்த்திகேயன் படத்தில் ஹிட் ஆன பாடல் வரி என்பதால்  தாய்க்கிழவி என்று வைத்தது என்னமோ மாதிரி இருக்கு.(அதிலும் ஒரு பிழை.செண்ட்டிமெண்ட் கருதி தாய் கிழவி.க் கட்)

2 சின்னக்கவுண்டர் படத்தில் நாயகனின் கேரக்டர் டிசைனை விளக்க ஓப்பனிஙகில் ஒரே ஒரு சீன் வைத்திருப்பார்கள்.கெத்தான சீன் அது.ஓப்பனிஙக் சாங்கில் நாயகி கேரக்டர் டிசைனை விளக்க ஏகப்பட்ட காட்சிகளை வைத்து மொத்தமாக ஒரு பாட்டிலேயே முடித்து விட்டார்கள்.அதனால் அந்தக்கேரக்டரின் சுவராஸ்யம் குறைவு.( மைக்கேல் மதன காமராஜன் படத்தில் டைட்டில் சாங்க் ஆன கதை கேளு பாடலில் மொத்தக்கதையும் சொன்ன மாதிரி)

3  குஷி ரெப்ரன்ஸ் காமெடி எடுபடவில்லை.

4 பின் பாதியில் வரும் பி ஜி எம் காந்தாரா பி ஜி எம் மை நினைவு படுத்துகிறது

5 நாயகி ராதிகாவின் கேரக்டர் ஸ்கெட்ச் புதிதாக இருந்தாலும் சில சீன்களில் அவரது நடிப்பு ஜீன்ஸ் படத்தில் வரும் ராதிகாவின் சுந்தராம்பாள் கேரக்டரை நினைவுபடுத்துகிறது.

6 சீக்கிரமாப்போய் சேரு சீயானுக்குத்துணையா என்ற பாடல் வரும்போது படத்தில் வரும் கேரக்டர்கள் போலவே ஆடியன்சுக்கும் ராதிகா செத்தால் என்ன?பிழைத்தால் என்ன?என்ற எண்ணமே மேலோங்கி இருப்பதால் ஒரு எமோஷனல் கனெக்ட் இல்லை.

அடல்ட் கண்டெண்ட் வார்னிங் - 13+ குடும்பத்துடன்  பார்க்கலாம் (கிராமீய வசவுச்சொற்கள் சில வரும்)


பைனல் கமெண்ட்..அருமையான கிராமத்துக்கதை.முதல் பாதி சுமார் ரகம்,பின் பாதி சுவராஸ்யம்.பெண்களுக்கான படம்.கமர்சியல் ,காமெடி,செண்டிமெண்ட்ஸ் என கலந்து கட்டி அடித்த படம்.ரேட்டிங்க் 3.5 /5. ஏ செண்ட்டர்களில் சுமாராகவும் ,பி & சி செண்ட்டர்களில் பிரமாதமாகவும் ஓடும்


Thursday, February 19, 2026

ஒளிமயமான எதிர் காலம் இருக்கும் டாப் 13 வங்கிப்பங்குகள்

 வங்கிப்பங்குகள்  என்று  பேச்சு  எடுத்தாலே  ஹெச் டிஎட்சி , ஐசிஐசிஐ, எஸ்பிஐ ,  இந்த  மூன்று  பங்குகளைத்தான்  பலரும்  சொல்கிறார்கள் . ஆனால் என்  கணிப்பில்  மிக  வேகமாக  வளர  இருக்கும்  டாப்  13  வங்கிபங்குகள்  பட்டியல்  இதோ 


1   J & K  BANK - 112

2  KOTAK -176

3 KARURVUYSYA -135

4 UJJIVANSFB-57

5 TMB -578

6 CUB -137

7 RBL -245 

8  SOUTHBANK -26

9EQUITAS BANK - 97

10 CSB - 359

11  DCB - 122

12 UTKARSHBANK-57

13  SURYODAY BANK -163

இந்தப்பங்குகளின்  விலை  மேலே  குறிப்பிடப்பட்டிருப்பது கட்டுரை  எழுதிய  நாள் ஆன 16/10/23  அன்று  இருந்த  விலை   இந்தப்பங்குகளை  வாங்குவது  அவரவர்  விருப்பம். நான்  செபி  ரெஜிஸ்டர்டு பர்சன்  கிடையாது . இது  ஒரு  எஜூக்கேசன்  பர்ப்பஸ்க்காக  எழுதப்பட்டது  மட்டுமே. ஷேர்  மார்க்கெட்டில்  முதலீடு  செய்வது  ரிஸ்க்  ஆனது 

Wednesday, February 18, 2026

SORE: A WIFE FROM THE FUTURE (2025)-இந்தோனேசியன் மூவி- சினிமா விமர்சனம் (சயின்ஸ் பிக்சன் ரொமாண்டிக் டைம் லூப் ட்ராமா)@யூ ட்யூப்

              




      திரைப்பட விழாக்களில் திரை இடப்பட்டு 13 விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டு 9 விருதுகளை வென்ற படம்.சிறந்த படம்,சிறந்த நடிகர்,சிறந்த  நடிகை,சிறந்த எடிட்டிங்க் ,சிறந்த திரைக்கதை,சிறந்த இயக்கம்,   சிறந்த பிஜி எம் உட்பட 9 விருதுகளை வென்றது.ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்ட படம்


10/7/2025 முதல் திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் இப்போது 25/1/2026 முதல்   யு ட்யூப்பில் காணக்கிடைக்கிறது


2017ம் ஆண்டு இதே டைட்டிலில் வெப் சீரிஸ். ஆக முதலில் வந்தது.அதை இயக்கிய அதே இயக்குநர் தான் அதே டைட்டிலில் படமாக எடுத்திருக்கிறார்    .ஆனால் வெப் சீரிசில் நாயகி வேறு,படத்தில் வேறு ஒரு நாயகி.  


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன் ஒரு புகைப்படக்கலைஞன்.தான் எடுத்த படங்களில் இருந்து சிறந்ததைத்தேர்ந்தெடுத்து ஒரு ஆல்பம் போல் வெளியிட்டு  கண்காட்சி நடத்தத்திட்டம் இடுகிறான்.


நாயகனுக்கு ஒரு காதலி உண்டு.செல்வச்சீமாட்டி.அவளது அப்பா அவள் பெயரில் ஒரு ஹோட்டல் ஆரம்பித்துக்கொடுக்க இருப்பதாகவும் நாயகன் விரும்பினால் அந்த ஹோட்டலில் வந்து இருக்கலாம் எனவும் தெரிவிக்கிறாள்.ஆனால் நாயகனுக்கு இது பிடிக்கவில்லை.


நாயகனின் அம்மா இறந்து விட்டதால் நாயகனின் அப்பா திடீர் என வேறு ஒரு பெண்ணைத்திருமணம் செய்து கொள்கிறார்.இது நாயகனுக்குப்பிடிக்கவில்லை.அப்பாவை விட்டு விலகியே இருக்கிறான்.

ஒரு நாள்  நாயகன் தன் வீட்டின் படுக்கை அறையில் காலையில் கண் விழிக்கும்போது தன் அருகே ஒரு பெண் அமர்ந்திருப்பதைப்பார்த்துத்திடுக்கிடுகிறான்.அவளை முன் பின் இதற்கு முன் அவன் பார்த்ததே இல்லை.


யார் நீ என்று அவளிடம் கேட்கும்போது நான் தான் உன் மனைவி ,பெயர் சோரே.எதிர் காலத்தில் இருந்து வந்திருக்கிறேன் என்கிறாள்.

நாயகனுக்குப்புரியவில்லை.தன் நெருங்கிய நண்பனுக்கு போன் பண்ணி நீ யாரையாவது அனுப்பினாயா?இதெல்லாம் என்ன விளையாட்டு ?என்கிறான்.ஆனால் நண்பன் மறுக்கிறான்.

பிறகு அந்தப்பெண்ணிடம் நீ தான் என் வருஙகால மனைவி என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்க அவளும் நாயகனைப்பற்றிய அனைத்து விபரங்களையும் சொல்கிறாள்.

அங்க அடையாளங்கள் போதாது என நாயகன் வீட்டில் பீரோவில் வைத்திருக்கும் போட்டோக்களின் விபரஙகளையும் துல்லியமாகக்கூறுகிறாள்.நாயகன் குடும்பத்தில் இருக்கும் அனைவர் பெயரையும் சொல்கிறாள்.


இப்போது நாயகனுக்குக்கொஞ்சம் நம்பிக்கை வருகிறது.சரி,எதற்காக வந்திருக்கிறாய்? எனக்கேட்க உன் வாழ்க்கையில் உன்னை முன்னேற்ற வந்திருக்கிறேன் எனக்கூறுகிறாள்.


நாயகனுக்கு தம் அடிக்கும் பழக்கமும் தண்ணி அடிக்கும் பழக்கமும் உண்டு.அதை விடச்செய்கிறாள்.உடல் பயிற்சி செய்யும் பழக்கமே இல்லை.தினமும் ஜாகிங் போக வைக்கிறாள்.

ஒரு நாள் பேச்சு வாக்கில் நாயகி நாயகனிடம் நீ இன்னமும் எட்டு வருடங்களில் இறந்து விடுவாய்..என்ற ரகசியத்தை சொல்கிறாள்.இதை சொன்னதும் படைப்பு விதியை மீறியதால் நாயகி இறக்கிறாள்


மேலே இதுவரை நான் சொன்னது படத்தின் முதல் 25 நிமிடக்கதை தான்.


இதற்குப்பின் நடக்கும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை

நாயகி ஆக ,வருங்கால மனைவி ஆக ஷீலா தாரா ஐசா பிரமாதமாக நடித்திருக்கிறார்.நாயகனை விட அதிகக்காட்சிகளில் வருகிறார்.ஒரே ஒரு புன்னகை மூலம் எல்லாப்பிரச்சனைகளையும் எதிர் கொள்ளும் லாவகம் அருமை.இவரது சிகை அலஙகாரம் நம்ம ஊர் அம்பிகா போல் இருக்கிறது.


டைம் லூப்பில் மாட்டிக்கொண்டு ஒவ்வொரு முறை கலங்கும்போதும் உருக வைக்கும் நடிப்பு.

எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் தான் உன் மனைவி  என்று சொல்லும் இடங்கள் கவி நயம் மிக்கவை.


நாயகன் ஆக டையான் வீக்கோ நடித்திருக்கிறார்.இவர் முதலில் மாடலிஙக் துறையில் இருந்தவர்.நம்ம ஊர் ஜெமினிகணேசன் போல் தோற்றம்.அப்பாவின் மீது ஏன் வெறுப்பு என்பதை விளக்கும் காட்சியில் நடிப்பு சிறப்பு.

நாயகனின் காதலியாக கெஸ்ட் ரோலில் இரண்டே காட்சிகளில் வருகிறார்  லாரா.

நாயகனின் அப்பா,நண்பர் என படத்தில் வரும் மற்ற அனைத்து சின்ன சின்னக்கேரக்டர்களும் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.


ஒளிப்பதிவு டிமாஸ் பாகுஸ் ட்ரையட்மா.நாயகன் போட்டோகிராபர் என்பதால் ஒளிப்பதிவில் பல பிரேம்களை உலகத்தரத்தில் படம் பிடித்து இருக்கிறார்.


இசை ஓபல் ஒபாஜா சேத்தியவான்.பின்னணி இசையில் மென்மை ,மேன்மை காட்டி இருக்கிறார்.

ஹேண்ட் ரா வின் எடிட்டிங்கில் படம்  119 நிமிடங்கள் ஓடுகிறது

கதை,திரைக்கதை,இயக்கம் யாண்டி லாரன்ஸ்.


சபாஷ்  டைரக்டர்

1 தமிழில் வந்த மாநாடு படம் போல டைம் லூப் கதை என்பதால்  சில காட்சிகள் திரும்பத்திரும்ப வந்தாலும் ஒரு முறை கூட போர் அடிக்கவில்லை.

2  எதிர் காலத்தில் இருக்கும் நாயகி விடும் கண்ணீர் நாயகன்  வைத்திருக்கும் பெயிண்ட்டிங் மீது படுவதைப்பார்த்து மழைத்துளி ஆக இருக்கும் என நாயகன் நினைக்கும் சீன்

3.  நாயகன் நாயகியை முத்தமிட வரும்போது அதெல்லாம் திருமணத்துக்குப்பின் தான் என தமிழ்க்கலாச்சாரத்தை  இந்தோனேசியன் மூவியில் புகுத்திய விதம்

4 நாயகி படம் முழுக்க அணிந்து வரும் ஆடை வடிவமைப்பு மிக சிறப்பு.கண்ணியம்

5 ஒவ்வொரு முறை டைம் லூப்பில் மாட்டி நாயகி ஒரே இடத்துக்குத்திரும்பத்திரும்ப வரும்போது நாயகனுக்கு அது பற்றி எதுவும் தெரியாதது ஏற்றுக்கொள்ளும் விதத்தில் சொன்ன விதம்

6 ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குப்பின்னாலும்  ஒரு பெண் இருக்கிறாள் என்பதை நிரூபிக்கும் விதமாக நாயகி தனக்காக எதுவும் வேண்டாமல் நாயகனுக்காகவே வாழ்வது

7 மொழி புரியாமல் ,வசனம் புரியாமல் பார்ப்பவர்களுக்குக்கூட கதை புரியும் வண்ணம் காட்சிகளிலேயே கதை சொன்ன ஆளுமை

டல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-13+ க்ளீன் யூ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மாநாடு மாதிரி டைம் லூப் படங்கள் பிடிக்கும் என்போர் ,ரொமாண்டிக் மெலோ ட்ராமாவை ரசிப்பவர்கள் அவசியம் காண வேண்டிய படம்.ரேட்டிங்க் 3.5 /5



Sore: A Wife from the Future
Theatrical release poster
Directed byYandy Laurens
Written byYandy Laurens
Based onSore: Istri dari Masa Depan
by Yandy Laurens
Produced bySuryana Paramita
Starring
CinematographyDimas Bagus Triatma
Edited byHendra Adhi Susanto
Music byOfel Obaja Setiawan
Production
companies
  • Cerita Films
  • Slingshot Pictures
  • Imajinari Productions
  • Miles Films
  • Studio Artemis
  • Jagartha
  • Trinity Entertainment
  • Dwidaya Amadeo Gemintang
Release date
  • 10 July 2025 (Indonesia)
Running time
119 minutes
CountryIndonesia
Languages
  • Indonesian
  • Croatian
  • English


Tuesday, February 17, 2026

யோகிடா (2026) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் திரில்லர் )

               

             ஸ்பாய்லர்  அலெர்ட்

வில்லன்  முன்னாள் ரவுடி , இந்நாள் தொழில் அதிபர் . வில்லனின் அண்ணன்  ஆளும் கட்சி   அமைச்சர்   என்பதால் , அரசியல்  பலம் , அதிகார   பலம்  இவற்றால்  எல்லோரையும் விலைக்கு  வாங்கி விடுபவன் .போதைப்பொருள்  கடத்தல்  தொழில்  உட்பட  பல வில்லத்தனங்களை செய்து வருகிறான் 


 நாயகி  ஒரு நேர்மையான  போலீஸ் இன்ஸ்பெக்ட்டர் . துணிச்சல் ஆகவும் ,கண்டிப்புடனும்  லஞ்சம்  வாங்காத  அதிகாரி ஆக இருப்பதால் நாயகி அடிக்கடி பணி  இட  மாற்றம்   செய்யப்படுகிறார் . இப்போது  சென்னையில்  வியாசர்பாடி  ஏரியாவில்  பணி  புரிகிறார் 


போலீஸ்  கமிஷனர்  ஒரு பெண்   தான் , ஆனால் அவர் வில்லனின்  கையாள்  ஆக   இருப்பதால்  நாயகிக்கு அடிக்கடி  இலாகா ரீதியான   குடைச்சலைதருகிறார் 

ஒரு போலியான  விபத்தை செட்   செய்து   வில்லன் நாயகியை  காயப்படுத்துகிறான் . ஹாஸ்ப்பிடலில்  சிகிச்சை பெற்று  சில மாதங்கள் கழித்து  வெளியே   வரும்  நாயகி  வில்லனின்  போதைப்பொருளை கைப்பற்றுகிறாள் . கோடிக்கணக்கான  மதிப்புள்ள சரக்கு பறி போனதால் ஆத்திரம்  அடைந்த  வில்லன்   தன்  அண்ணன்   ஆகிய   அமைச்சர்  உதவியுடன்   நாயகியை  மயக்கப்படுத்தி  பாலியல்  வன் கொடுமை  செய்து விடுகிறார்கள்  இருவரும்.


 நாயகி  வில்லனை  கோர்ட்டில்  சந்திக்கிறாள்  . இதற்குப்பின்   நிகழும்  சம்பவங்கள்   தான் மீதித் திரைக்கதை 


 நாயகி ஆக சாய்  தன்ஷிகா கம்பீரமாக  நடித்திருக்கிறார் . ஆக்சன்  காட்சிகளில்  பொறி பறக்கிறது . டூப்  போடாமல்  பல சண்டைக்காட் சிகளில்  துணிச்சல் ஆக நடித்த அவருக்கு ஒரு சபாஷ் 


வில்லன் ஆக  கபீர்  துகான்  ஆஜானுபாகவமான தோற்றம் .அடிக்கடி  நாயகியுடன் மோதும் சீன்கள்  பரபரப்பு . அமைச்சர் ஆக சாயாஜி  ஷிண்டே  சிரித்த படி  வில்லத்தனம்   செய்கிறார் . இவருக்கு  மெயின் வில்லன் போல்  அதிக வாய்ப்பு இல்லை 

இயக்குனர்  அமரர்  மனோபாலா  போலீஸ்   கான்ஸ்டபிள் ஆக  வருகிறார் . மற்ற   அனைவரும்  அவரவருக்குத்தந்த  வேடத்தை சரியாக செய்து  இருக்கிறார்கள் 


எஸ் கே  பூபதியின்  ஒளிப்பதிவு  சிறப்பு , தீபக் தேவின்   இசையில்  பாடல்கள்  சுமார் ரகம் தான் , பின்னணி இசையும்  சராசரி தரம் தான் . கணேஷ் குமாரின்  சண்டைக்காட் சி வடிவமைப்பு அருமை . ஜி சசிகுமாரின்   எடிட்டிங்கில்  படம்  2 மணி  நேரம்  ஓடுகிறது . கதை , திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  கவுதம் கிருஷ்ணா 



சபாஷ்  டைரக்டர்


1  வைஜெயந்தி ஐ பி எஸ்  மாதிரி  ஒரு படம்  கொடுக்க வேண்டும் என்ற    இயக்குனரின்  முயற்சி  இருக்கிறது . விஜயசாந்தி  மாதிரி ஆக  வேண்டும் என்ற  சாய் தன்ஷிகாவின் உழைப்பு இருக்கிறது . ஆனால்  திரைக்கதை   கை  கொடுக்கவில்லை 


2  தேசியக்கொடி பெருமை பற்றிப்பேசும்  நாயகி  எங்கெல்லாம் , என்ன  காரணங்களுக்காக   எல்லாம்   தேசியக்கொடி  அரைக்கம்பத்த்தில்  பறக்கவிடப்படும் ?  என்ற  விபரங்களைப்பட்டியல் இடும் சீன அமர்க்களம்  


3  விஷால்  கூட  வியக்கும் வண்ணம்  ஆக்சன் ஸீக்வன்ஸ்  சாய் தன்ஷிகா சாகசம் 

4  நாயகிக்கு  ஒரு ஜோடி , டூயட்   என்று  கதையில்   திசை மாறாமல்   பயணித்தது  



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 கெட்ட   பய  சார்   இந்தக்காளி   என்ற   ரஜினியின்   புகழ்  பெற்ற  பஞ்ச் டயலாக்கை  உல்டா  பண்ணி   உபயோகித்தது  


2 போலீஸ்  இன்ஸ்பெக்ட்டரை  பாலியல்   வன் கொடுமை  செய்யும்   வில்லன்   அவருக்கே  போன்  செய்து  வாக்குமூலம்  கொடுத்து   மாட்டுகிறார் .நாயகி  அதை செல் போனில்  ரெக்கார்டு செய்து சாட்சி ஆக உபயோகிப்பார்  என்பதை யூகிக்க முடியாதா?


3  வில்லனிடம்  சவால்  விடும்போது  நாயகி   தம் அடிப்பது ,அந்த  கேரக்ட்டருக்கே பின்னடைவே


4 திரைக்கதை , சம்பவங்களில்  புதுமை இல்லை . ஆல்ரெடி பல  படங்களில்  பார்த்தவை தான் 


5  கோர்ட்டில்  நாயகி டெ லிபோன்  உரையாடலை  ஒப்படைக்கும்போது  ஒரு காப்பி  எடுத்து   வைத்துக்கொள்ள மாட்டாரா? 



அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்- 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - சலித்துப்போன , புளித்ததுப்போன  போலீஸ்  வில்லன்  மோதல்  கதை . சாய்  தன்ஷிகா  நடிப்புக்காக  பார்க்கலாம் . ரேட்டிங்க்  2 / 5

Monday, February 16, 2026

MANA SHANKARA VARA PRASAD GARU (2026)-மன சங்கர வர பிரசாத் காரு - தெலுங்கு /தமிழ் - சினிமா விமர்சனம்

                     

        200 கோடி ரூபாய் பட்ஜெட்டில்  உருவான இந்தப்படம்  12/1/2026 முதல் திரை அரங்குகளில் வெளியாகி  முதல் 32 நாட்களில்  300 கோடி  வசூலித்து  மெகா  ஹிட் ஆகி  இருக்கிறது . ஆக்சன் மசாலா  ஹீரோ ஆன சிரஞ்ஜீவி  தம்பிக்கு எந்த ஊரு  டைப் ரஜினி போல , வின்னர்   வடிவேலு  போல  காமெடி  கலந்து  வித்தியாசமான  ஆக்சன்  மூவியைக்கொடுத்திருக்கிறார் . 11/2/2026  முதல்  ஜீ 5 ஓடிடி  யில்  தமிழ்  டப்பிங்கில்  காணக்கிடைக்கிறது 


அணில் ரவிப்புடி  ,விஜய்  நடிப்பில்  ஹெச்  வினோத் இயக்கத்தில்  உருவான  ஜன நாயகன்  படத்தின் ஒரிஜினல்  வெர்சன் ஆன பகவான் கேசரி படத்தின் இயக்குனர் இவர் தான் .சங்கராந்திக்கு  வஸ்துண்ணம்  என்ற மெகா ஹிட்  படத்தை 2024ல் இயக்கியவரும்  இவர் தான் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  மத்திய  அரசுப்பணி யில்  நேஷனல்  செக்யூரிட்டி  டிபார்ட்மெண்ட்டில் ஹையர் ஆபீசர் ஆக இருக்கிறார் . நாயகி  இந்தியாவில்  இருக்கின்ற  மாபெரும்  தொழில் அதிபர்களில்   ஒருவரின் மகள் . நாயகிக்கு  திருமணம் . மேடையில்  நாயகிக்கு  மாப்பிள்ளையைப்பிடிக்கவில்லை என அறிவித்து திருமணத்தை நிறுத்துகிறார் . தன்னை மதிக்காத , பெண்ணை மதிக்காத ஆள்  கூட  எப்படிக்குடும்பம் நடத்துவேன்? என்கிறார் .. நாயகன்   நாயகியின் துணிச்சலைப்பாராட்டுகிறார் . இதுதான்  நாயகன் - நாயகி  இருவருக்கும் முதல் அறிமுகம் 


அடுத்து   கேரளாவில்  இன்னொரு  திருமண  விழாவில்  நாயகியை நாயகன் சந்திக்கிறார் . இப்போது  நாயகியின் தோழி தான் மணப்பெண் .இது போல  வெவ்வேறு  விழாக்களில்  சந்தித்த  இருவரும்  பரிச்சயம் ஆகிறார்கள் .

 திடீர்   என ஒரு  விழாவில் நாயகி நாயகனிடம் நாம்  இருவரும்  திருமணம் செய்து  கொண்டால் என்ன?  எனக்  கேட் க நாயகனும் சரி சொல்கிறார் . இருவருக்கும்   திருமணம்  நடக்கிறது . ஆனால்   நாயகியின் அப்பாவுக்கு இந்தத்திருமணத்தில்   இஷ்டம் இல்லை . இருந்தாலும்  செல்ல மகளுக்காக அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை .


தம்பதிக்கு  ஒரு மகன் , ஒரு மகள்   என இரு வாரிசுகள்  பிறக்கின்றன 


 ஆரம்பத்தில்  நாயகன்  கம்பெனியில் எம் டி மாதிரி  இருக்கிறான். பின் மாமனாரின் சதியால்  வீட்டு வேலைகளைப்பார்த்துக்கொள்கிறான் . கம்ப்பெனியை நாயகி பார்த்த்துக்கொள்கிறார்  . கம்ப்பெனி  வேலை  விஷயமாக  நாயகி அடிக்கடி வெளிநாடு பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது


 சில சதி  வேலைகள்  செய்து  மாமனார்  நாயகன் - நாயகி  இருவரையும்  பிரித்து விடுகிறார் . டைவர்ஸும் ஆகி விடுகிறது 


இதுவரை  மேலே   சொன்னவை படத்தின்  முதல்  15 நிமிடக்கதை . நாயகன்  எப்படி தனது  குழந்தைகளை , மனைவியை  தன வசப்படுததுகிறான் ? என்பதுதான்  காமெடிக்கலக்களான  மீதி திரைக்கதை 


 நாயகன் ஆக சிரஞ்சீவி  ஜெயிலர்  ரஜினி கெட்டப்பில்    கண்ணாடி , தாடி , மீசை உடன் வருகிறார் . ஓவர் பில்டப் தரும்  ஹீரோ  இன்ட் ரோ  ஆக்சன்  மசாலா  டெம்ப்ளேட்டில்  இருந்து  இறங்கி  வந்து  சிக்ஸர்   அடிக்கிறார் .  வின்னர்  வடிவேலு  மாதிரி  தன்னை தாழ்த்திக்கொண்டு  காமெடி  பண்ணும்  காட்சிகள்  அனைத்தும்  அருமை ,சிரஞ்சீவி  ரசிகர்களுக்கும்   இது   புதுசு 


 நாயகி ஆக  நயன் தாரா . ஆளுமையான  கதாப் பாத்திரம் . மன்னன்  விஜய சாந்தி   மாதிரி  மிடுக்குடன்  வருகிறார் .ஓப்பனிங்  சீன்களில்  நாயகன் அவரைப்பார்த்து   சூப்பர்  என அபிநயம செய்யும்போது  இவர்  காட்டும்  பாவனைகள் அழகு 


நாயகியின்   அப்பாவாக  சச்சின்  கேடெக்கர்  வருகிறார் . அவரது   வில்லத்தனமான  நடிப்பு அருமை . நய வஞ்சகச்சிரிப்பு  கமலின்  சத்யா  பட வில்லன்  கிட்டியை நினைவுபடுத்த்துகிறது 


நாயகனின்  செக்யூரிட்டி  டீமில்  வரும் ஒரு பெண்ணாக கேத்ரீன்  தெரேசா  வருகிறார் . அதிக  வாய்ப்பில்லை ., வந்தவரை ஓகே ரகம் 


வெங்கடேஷ்  கெஸ்ட்  ரோலில்   வருகிறார் 

 படத்தில்  நடித்த மற்ற  அனைவருமே  அவரவர்  பாத்திரத்தைத்திறம்பட  ஏற்று  நடித்திருக்கிறார்கள் 

பீம்ஸ்  செசிரெலியோ  இசையில் பாடல்கள்  ஆல்ரெடி  ஹிட் . பின்னணி இசையும்  நன்று . ஹீரோ  பில்டப் சீன்களில் பி ஜி எம் தெறிக்கிறது 


சமீர்  ரெட்டியின்  ஒளிப்பதிவில்  காட் சிகள்  அனைத்த்தும் பிரம்மாண்டம் . அதே போல் பாடல்  காட் சிகளும்  கலர்புல் கலக்கல் . தம்மி ராஜூவின்  எடிட்டிங்கில்  படம் 165  நிமிடங்கள்  ஓடுகின்றது . ஒரு சீன்  கூட போர் அடிக்காமல்  கலகலப்பான திரைக்கதை 

அமைத்து   இயக்கி  இருப்பவர்  அணில் ரவிப்புடி 


சபாஷ்  டைரக்டர்


1 நாயகன் , நாயகி  இருவருக்குமான  சந்திப்புக்காட் சிகள்  ,  காதல் மலரும் சீன்கள் காமெடி  கம் யதார்த்தம் 


2 நாயகன் திருமணத்துக்குப்பின்  நாயகிக்கு  வீட்டு வேலைக்காரனாக  மாறும் சீன்கள்  கலாட் டா  ரகங்கள் 


3 நாயகன்  தனக்குக்கீழ்  பணியாற்றும்  ஜூனியர்களிடம்  பந்தா  பண்ணி  பின் மொக்கை வாங்கும் இடங்கள் எல்லாமே  கலகலப்பானவை , அந்த சீன்களில் நாயகனின் உடல் மொழி அருமை 


4 நாயகன்  பி டி மாஸ்டர் ஆக  தனது வாரிசுகள் படிக்கும் பள்ளியில்  நுழைவது , அவர்கள் மனம் கவர மடத்தனமாக ஏதாவது செய்து  பல்பு வாங்குவது   அருமை 


5 தன்னை  மட்டம்  தட்டும் மாமனாரிடம்  நாயகன்  செக்யூரிட் டி  ஆபீசர் ஆக  சில டாஸ்க் எல்லாம் கொடுத்து அவரை ட்ரொல்  செய்வது  அருமை 


6  நாயகி  இரண்டாவது  கல்யாணத்துக்குத்தயார் ஆவது , புது  மாப்பிள்ளையை  நாயகன் எதிர் கொள்வது எல்லாமே  திரைக்கதைக்கு சுவாரசியம் 

7  ஓடி பி   என்றால்  ஒன டைம்  பளார்  என விளக்கம்  கொடுக்கும்   இரு  காட் சிகளும்   அருமை



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  வில்லன்  வலிமையானவர் என்பதைக்காட்டிட  எஸ் பி யை  அவரது ஆபீஸிலேயே  கொலை செய்வது எல்லாம் உருட்டோ  உருட்டு  ரகம் 

2  வில்லன்   நாயகியைக்கொலை   செய்ய   எளிமையான பலவழிகள் இருந்தும்  பாதுகாப்பான  பில் டிங்கில் இருக்கும்போது முயற்சிப்பது மடத்தனம் 




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -16 +



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  விசுவாசம்  கதைதான் என்றாலும்   திரைக்கதையில்  ரசிக்கத்தக்க  காமெடிகள்  சேர்த்து இருப்பதால்  பார்க்கலாம் . ரேட்டிங்க்  3/5 


Mana Shankara Vara Prasad Garu
Theatrical release poster
Directed byAnil Ravipudi
Written byAnil Ravipudi
Produced by
Starring
CinematographySameer Reddy
Edited byTammiraju
Music byBheems Ceciroleo
Production
companies
  • Shine Screens
  • Gold Box Entertainments
Release date
  • 12 January 2026
Running time
165 minutes
CountryIndia
LanguageTelugu
Budget₹200 crore[1]
Box office₹297.25 crore[2]