Sunday, January 11, 2026

பராசக்தி (2026)- தமிழ்- சினிமா விமர்சனம் (ஹிஸ்டாரிக்கல் பொலிட்டிக்கல் ட்ராமா)

                 

       10/1/2026 அன்று முதல் திரை அரங்குகளில் வெளியாகி இருக்கும் இந்தப்படம் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது.பொள்ளாச்சி படு கொலை சம்பவம் ,ஹிந்தி மொழித்திணிப்பு எதிர்ப்புப்போராட்டம் ஆகிய உண்மை சம்பவங்களைக்கொஞ்சம் கற்பனை கலந்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.


இயக்குநர் சுதா கொங்கரா இயக்குநர் மணிரத்னத்திடம் பணியாற்றியவர்.இவரது முதல் படம் துரோகி (2010) சரியாகப்போகவில்லை எனினும் வித்தியாசமான படம்.இறுதிச்சுற்று(2016) கமர்சியல் ஹிட்,சூரரைப்போற்று (2020) நேரடி ஓடிடி ரிலீஸ்,அனைவரது பாராட்டையும் பெற்ற படம்.மேக்கிங்கில்   இவருக்கு என்று தனித்தரம் இருக்கும்


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன் கல்லூரி மாணவர்.மொழிப்போராட்டத்தில் அதாவது ஹிந்தி எதிர்ப்புப்போராட்டத்தில் ஒரு  ரயிலுக்கு மாணவர்களுடன் சேர்ந்து தீ வைக்கிறார்.அந்தப்போராட்டத்தில் அவரது நண்பர் இறந்து விடுகிறார்.இதனால் மனம் வெறுத்த நாயகன் இந்தப்போராட்டம் எல்லாம் வேண்டாம் என ஒதுஙகி  குடும்பத்தை கவனிக்கிறார்.


நாயகனின் தம்பி சில வருடங்கள் கழித்து மாணவர்களுடன் சேர்ந்து அதே போலப்போராட்டம் செய்கிறான்.ஆரம்பத்தில் தம்பியை எதிர்த்த நாயகன் ஒரு கட்டத்தில் அவனும் களத்தில் இறஙகுகிறான்.


இந்தப்போராட்டத்தில்  நாயகனின் இழப்புக்கள் என்ன?அவர் வெற்றி அடைந்தாரா? என்பது மீதி திரைக்கதை.


நாயகன் ஆக சிவகார்த்திகேயன் ஆக்ரோசமாக நடித்திருக்கிறார்.நல்ல பண்பட்ட நடிப்பு.

நாயகனின் தம்பியாக அதர்வா அட்டகாசமாக நடித்திருக்கிறார்.அவர் வரும் காட்சிகள் எல்லாம் உயிரத்துடிப்பானவை.

வில்லன் ஆக ,ஸ்பெசல் ஆபீசர் ஆக ஜெயம் ரவி செம வில்லத்தனத்துடன் பட்டையைக்கிளப்பி இருக்கிறார்.

நாயகி ஆக  ஸ்ரீலீலா அழகாக இருந்தாலும் அவரது கேரக்டர் டிசைன் ,நடித்த விதம் சரி இல்லை.இது இயக்குனரின் தவறா?இவர் கிட்டெ சரக்கே அவ்ளவ் தானா? தெரியவில்லை.நடகத்தனமான நடிப்பு 

பாட்டியாக  வரும் கொலப்புளி லீலா கச்சிதம். அறிஞர் அண்ணாவாக வரும் சேத்தன் கெட்டப் அசத்தல்.கலைஞர் ஆக கெஸ்ட் ரோலில் குரு சோமசுந்தரம் வருகிறார்.

கேமியோ ரோலில் ராணாவும் ,பசீல் ஜோசப்பும் கச்சிதம்


ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு அருமை.பல காட்சிகளில் இருவர் ,ஆய்த எழுத்து பாதிப்பு  தெரிகிறது.

இசை ஜி வி பிரகாஷ குமார்.பாடல்கள் 3 செம ஹிட்.பின்னணி இசை முறுக்கேற்றுகிறது.

சதீசு சூர்ய வின் எடிட்டிஙகில்  150 நிமிடஙகள் ஓடுகிறது.பின் பாதி இழுவை.முதல் பாதியில் லவ் போர்சன் ஸ்பீடு பிரேக்கர்.

அர்ஜூன் நடேசன் ,கணேசா ஆகியோருடன் இணைந்து திரைக்கதை எழுதி தனியாக இயக்கி இருக்கிறார் சுதா கொங்கரா.இருவர் ,ஆய்த எழுத்து, சாயல் ஆங்காஙகே தெரிகிறது. நாயகனுக்கான காட்சிகளில் தளபதி. நினைவு  வருகிறது.


சபாஷ்  டைரக்டர்

1 மொழிப்போராட்டத்தைப்பதிவு செய்த முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையைப்பெறுகிறது.

2  வெறும்  ஹிஸ்டாரிக்கல் டிராமாவாக எடுத்தால் டாகுமெண்ட் ரி ஆகி  விடும் என்ற பயத்தில் கமர்ஷியல் அயிட்டங்கள் சேர்த்திருப்பது புரிகிறது

3 இக்கதைக்கு பெஸ்ட் சாய்ஸ் சூர்யா தான்.அது தான் இயக்குநரின் முதல் சாய்ஸ்.ஆனால் சூர்யா மறுத்ததால் சி.கா.

4  படத்தில் வசனஙகள் செம.பல இடஙகளில் கை தட்டலை அள்ளுகிறது.


செம  ஹிட்  சாங்க்ஸ்

1 நமக்கான காலம்

2 முத்தாரமே

3 நெஞ்சுக்குழி

4 ரத்னமாலா


  ரசித்த  வசனங்கள் 


1 தமிழ் தவிர மற்ற எல்லா மொழிகளும் எங்களுக்கு அந்நிய மொழிகள் தான்

2  யூ மஸ்ட் பி எ பிரில்லியண்ட்

வில்லன் பஞ்ச் - ஐ ஆம் வாட் ஐ ஆம்

3  ஹிந்தித்திணிப்புக்குத்தான் நாங்க எதிரானவங்க ,ஹிந்தி பேசறவஙகளுக்கு எதிரானவங்க இல்லை

4  நாங்க தமிழை மொழியாத்தான் பார்க்கிறோம்,அவஙக தான் மொழி வெறியரா மாத்தறாங்க

5  எதிர் வீட்டுக்குப் போறப்பக்கூடக்குளிச்சுட்டுப்போறான்,அப்போ நிச்சயம் லவ் தான்.

6  அரசியலமைப்பையே எரிக்கப்போறீஙகளா?

நெருப்பால உருக்கப்போறோம்

7  பிறந்ததுல இருந்தே ஹிந்தி பேசறவஙகளுக்கும் ,பின் பழகிப்பேசுபவர்களுக்கும் வித்யாசம் இருக்கு 

8  கறுப்புக்கொடி காட்டினாக்கைது பண்ணுவீஙகளா?எங்க தலை முடி கூடக்கறுப்பு தான்.

9  குடியரசு தினத்தன்னைக்குப்போராடினா தேச விரோதம்.அடுத்த நாள் போராடினா அது நமக்கான ஜனநாயக உரிமை.

10  சூதானமா இருப்பது பயம் இல்லை.

11 அண்ணனா சொல்லி இருந்தாக்கேட்டிருக்க மாட்டேன்.தலைவனா சொன்னதால கேட்கிறேன்

12 ஊர்வலம் நடத்த இவஙகளே பர்மிஷன் கொடுத்துட்டு 144 தடை உத்தரவும் இவஙகளே போடறாஙக.இவஙக பைத்தியமா?நாம பைத்தியமா?

13 வெறும் ஒன்றரை லட்சம் போலீசை வைத்து கோடிக்கணக்கான இந்தியர்களை பிரிட்டிஷ்காரன் எப்படி ஆண்டான் தெரியுமா?துப்பாக்கியால ஒரு தடவை சுட்டா ஒரு கோடிப்பேருக்குக்கேட்கும்படி சுடுவான்

14  நம்மாளுஙக பிரியாணியைப்பார்த்தா தன்மானத்தை விட்டுடுவாங்க

15  தெலுங்குல அவ என்ன பேசிட்டுப்போறா?

அவ எல்லா மொழிகளிலும் கெட்ட வார்த்தைதான் பேசுவா

16  சாப்பாடுன்னா மதுரை தான்

17  ஒரு மனிதன் சிந்திக்கத்தேவைப்படும் மிகச்சிறந்த கருவி மொழி

18 எங்க ரத்தத்தில் மொழி உணர்வு கலந்துட்டதாலதான் எங்களை ரத்தம் சிந்த  வைக்கறீங்களா?


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 மொழிப்போராட்டத்தை நடத்தும் நாயகன் பின் அவனே ஹிந்தி கற்றுக்கொண்டு ரயில்வே பணி நேர்முகத்தேர்வுக்குப்போய் அதில் தேர்வு பெறாததால் மீண்டும் ஹிந்தியை எதிர்ப்பதாகக்காட்டி இருப்பது கேரக்டரில் சறுக்கல்.நாயகனின் தம்பி கேரக்டர் டிசைன் பக்கா

2. நாயகியின் நடிப்பு படு செயற்கை.அந்த லவ் போர்சன் எடுபடவில்லை

3  மணிரத்னம் இயக்கிய ஆய்த எழுத்து ,இருவர் ஆகிய ஒரு படங்கள் ஓடாதவை.அதிலிருந்து இன்ஸ்பிரேசன் ஆகி சில காட்சிகளை வைத்தது ஏனோ?

4  ரயில் பொதுமக்கள் சொத்து.அதை எரிப்பதால் நமக்குத்தானே நட்டம்? தீவிரவாதி இமேஜ் தானே வரும்?

5  எந்த மகனும் அம்மாவைப்பார்த்து சொல்லக்கூடாத வார்த்தையை வில்லன் சொல்வது கொடூரம்

6  டூயட் சீனில் எதுக்கு நாயகனுக்கு திமுக யூனிபார்ம்?

7  இரும்புப்பெண்மணி ஆன இந்திராகாந்தி கேரக்டருக்கு அந்தபெண் சரி இல்லை.அந்த கேரக்டர் டிசைனும் சரி இல்லை.பாரதப்பிரதமர் கெத்து வேண்டும்

ஒரு எம் எல் ஏ ரேஞ்சுக்குக்கூட அமையலை.

8 பின் பாதியில் ஒரே வன்முறை ,அழுகை,மரணஙகள் சலிப்பு ஏற்படுத்தும்

9 சிவாஜி நடித்த பராசக்தி படத்தைப்பார்ப்பது போல் ஒரு சீன் இருப்பதைத்தவிர டைட்டிலுக்கும் ,படத்துக்கும் சம்பந்தமே இல்லை


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இது எல்லோருக்குமான படம் இல்லை.திமுக வினர் பார்க்கலாம்.சி.கா ரசிகர்கள் பார்க்கலாம்.. விகடன் மார்க் யூகம் 42._குமுதம் ரேங்க்கிங்க். ஓக்கேஏற்படுத்தும்


 2.5 /5


Parasakthi
Theatrical release poster
Directed bySudha Kongara
Screenplay bySudha Kongara
Arjun Nadesan
Ganeshaa
Dialogues by
Story byMathimaran Pugazhendhi
Produced byAakash Baskaran
Starring
CinematographyRavi K. Chandran
Edited bySathish Suriya
Music byG. V. Prakash Kumar
Production
company
Dawn Pictures
Distributed byRed Giant Movies
Release date
  • 10 January 2026
Running time
162 minutes[1]
CountryIndia
LanguageTamil
Budget150–250 crore[2][3][4]
Box office₹0.70 crore[5]

Saturday, January 10, 2026

HIS AND HERS (2026)-ஆங்கிலம்/தமிழ் -வெப் சீரிஸ் விமர்சனம் (க்ரைம் திரில்லர்)@நெட் பிளிக்ஸ்

               

      8/1/2026 முதல் நெட் பிளிக்சில் வெளியான இந்த மினி வெப் சீரிஸ் மொத்தம் 6 எபிசோடுகள் கொண்டது.ஒவ்வொரு எபிசோடும் சராசரியாக 40 நிமிடங்கள் (39-42)ஆக மொத்தம் 240 நிமிடங்கள்.4 மணி நேரம் தேவைப்படும்.பெண்கள் விரும்பிப்பார்க்கும் அளவு க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் செண்ட்டிமெண்ட்டுடன் இருக்கும்     


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு டிடெக்டிவ்.நாயகி ஒரு டி வி சேனலில் ரிப்போர்ட்டர்.இருவருக்கும் ஒரு குழந்தை இருக்கிறது.நாயகனுக்கு ஒரு தங்கை இருக்கிறாள்.நாயகிக்கு அம்மா இருக்கிறார்.அல்சைமர்  நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் அவரை  நாயகனும் , நாயகியும் அவ்வப்போது வந்து பார்த்து விட்டு  செல்வார்கள்.

ஒரு நாள் இரவு நாயகியின் ஸ்கூல் மேட் கொலை செய்யப்படுகிறாள்.40 முறை கத்தியால் குத்தப்பட்டு பிணமாக இருக்கிறாள்.இவ்வளவு கோபமாகக்கொலை செய்ய வலுவான காரணம் இருக்கும் என போலீஸ் சந்தேகிக்கிறது.


இந்தக்கேசை நாயகன் ஒரு பக்கம் விசாரிக்கிறான். தன் டி வி சேனல் டி ஆர் பி எகிற நாயகியும் இன்னொரு பக்கம் விசாரிக்கிறார்.


நாயகி தன் உடன் பணியாற்றும் சக ஊழியருடன் கள்கத்தொடர்பு வைத்திருக்கிறார்.காரணம் நாயகியின் கணவன் ஆன நாயகன் நாயகியின் தோழியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதால்.


இது ஒரு வித்தியாசமான பழி வாங்கும் கதையாக இருக்கிறதே என நினைக்கும்போது  மேலும் ஒரு ட்விஸ்ட். அந்தத்தோழி கொலை செய்யப்படுவதற்கு சில மணி நேரம் முன்பு  தான் நாயகன் அவளுடன் நெருக்கமாக இருந்திருக்கிறான்.


இதனால் நாயகி நாயகனை சந்தேகப்படுகிறாள்.நாயகனோ இறந்து போன பெண்ணின் கணவனை சந்தேகப்படுகிறான்.


கதையில் அடுத்த ட்விஸ்ட் இன்னும் ஒரு கொலை நடக்கிறது.இவளும் நாயகியின் இன்னொரு ஸ்கூல் மேட் தான்.இப்போது நாயகன் நாயகியை சந்தேகப்படுகிறான்.

அடுத்த ட்விட்ஸ்ட் நாயகனின் தங்கையும் ,நாயகியும் முன்னாள் ஸ்கூல் மேட்.அவளும் கொலை செய்யப்படுகிறாள்.

இந்தக்கொலைகளை செய்யும் சீரியல் கில்லர் யார்?  என்பதை நாயகனின் அசிஸ்டெண்ட் ஆன லேடி போலீஸ் ஆபீசர் கண்டு பிடிக்கிறார்.அது தான் மீதித்திரைக்கதை


நாயகன் ஆக டிடெக்ட்டிவ் வேடத்தில்  ஜான் பெர்ந்தால் சிறப்பான நடிப்பு.நாயகி ஆக டிவி ரிப்போர்ட்டர் கேரக்டரில் தேசா தாம்சன் கலக்கி இருக்கிறார்.நாயகியின் இளமைப்பருவத்தில் டீன் ஏஜ் பெண்ணாக கிரிஸ்டன் மேக்ஸ்வெல் கெஸ்ட் ரோலில்  வருகிறார்.

நாயகியின் அம்மாவாக கிரிஸ்டல் பாக்சின் நடிப்பு அபாரம்.

மேக் க்வாலே தான் இசை.பின்னணி இசை நல்ல விறுவிறுப்பு.

திரைக்கதை அலைஸ் பீனி..இயக்கம் வில்லியம்


சபாஷ்  டைரக்டர்

1 நாயகன் ,நாயகி இருவருக்கும் என்ன  பிரச்சனை என்பதை நான் லீனியர் கட்டில் சொன்னது


2 நாயகியின் ஸ்கூல் போர்சன் கதை தமிழில் வந்த விசில்,சினேகிதியே ஆகிய படஙகளை நினைவுபடுத்தினாலும் அதில் ஒரு ட்விஸ்ட் அபாரம்

3  கொலைகாரன் இவன் என போலீஸ் கைது செய்த பின் அரை மணி நேரம் கழித்து வரும் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் அபாரம்.


4 பிரமாதமான வசனஙகள் பெரிய பிளஸ்

5 நாயகி அவளது தோழிகள் ஐவர் அனைவரையும் விட நாயகனின் அசிஸ்டெண்ட் ஆக வரும் லேடி போலிஸ் ஆபீசர் அபார அழகு.இந்திய சாயல்

  ரசித்த  வசனங்கள் 

1.  எல்லாக்கதைகளுக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கு.யாரோ ஒருவர் பொய் சொல்வார்

2 என்னது?டிடெக்டிவை உனக்குத்தெரியுமா?எப்படி

அவன் தான் என் புருசன்

3  செலிபிரிட்டியின் மனைவி க்குக்கிடைக்கும் புகழ் கூட ஒரு சிறை தான்.எங்கே போனாலும் மக்கள் சூழ்ந்துக்குவாங்க

4  மனைவியைக்கூடக்கண்டுபிடிக்க முடியாத டிடெக்ட்டிவ் நீ

5  முன் பின் பழக்கமில்லாதவஙக கூட உறவு வைத்துக்கொள்வதுதான் நல்லது.பாதுகாப்பானது.

6 காணாமப்போன பெண் கொலை ஆகி விட்டால் முதல் சந்தேகம் அவள் கணவன் மீதோ ,காதலன் மீதோ தான் வரும்


7  உலகத்துக்கு நாம் காட்டும் முகத்துக்குப்பின்னால தான் நம் உண்மையான முகம் மறைஞசிருக்கும்


8  கெட்ட விஷயம் நடக்கும்போது அதெல்லாம் தானாத்தான் நடக்குதுன்னு நினைப்போம்.ஆனா நமக்கு அவை ஒரு பரிமாணத்தைக்கொடுத்திருக்கும்


9.நமக்குக்கெட்டது நடக்கும்போது நாமும் மத்தவங்ககுக்கெடுதல் செய்யனும்னு தோணும்


10 எல்லாருக்கும் எப்பவாவது உதவி தேவைப்படலாம்

11  காலம் எல்லாக்காயங்களையும் ஆற்றி விடும் என்பதை நம்பாதீஙக,அது சில சமயம் மேலும் மோசமாக்கும்.


12 நாம் செய்யும் ஆபத்தான விஷயமே  மத்தவங்க கிட்டேயும் ,நம்ம கிட்டேயும் நாம் சொல்லும் பொய்கள் தான்

13  நம்ம வாழ்க்கையை முழுசா வாழ  கடந்த காலத்தை நாம் சமாதானப்படுத்தி இருக்கனும்


14  அவஙக எதிர்காலத்திட்டம் தெரிய அவஙக கடந்த காலம் தெரிஞ்சிருக்கனும்


15 கோபம் யாருக்குப்பிடிச்சிருக்கோ அவஙகளை அது காயப்படுத்தும்


16  நாம ஏதாவது செய்யனும்னு நினைச்சு வெச்சிருந்தா அதை செஞ்சு முடிச்சிடனும்

17ஒரு விஷயத்தை த்தொடர்ந்து செஞ்சுட்டு இருந்தா அது நமக்குப்பழக்கம் ஆகிடும்


18 கோபம் சில சமயம் உங்களைப்பாதுகாக்கவும் செய்யும்


,19 உழைக்கும் வர்க்கத்தைப்பலர் மறப்பது போல் வயோதிகர்களையும் மறப்பாங்க

20 உண்மை நம்ம கண்ணுக்கு முன்னால இருந்தாலும்  நாம் பார்க்க விரும்புவதுதான் நம் கண்ணுக்குத்தெரியும்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 நாயகனின் தங்கை கொலை செய்யப்படும்போது பாத் ரூம் கதவு உள் பக்கம் தாளிடப்பட்டிருக்கு.நாயகன் கதவை உடைத்துத்தான் வருகிறான்.கொலைகாரன் எப்படி வெளியேறினான்?

2  உண்மையான கொலையாளியை போலீஸ் கைது செய்யவில்லை.தவறாகப்பிடிக்கப்பட்டவன் உண்மை சொல்லி இருப்பானே?


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்:-18+ முதல் எபிசோடில் மட்டும்



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மிஸ்ட்ரி திரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம் ,பெண்களுக்கும் பிடிக்கும்,ரேட்டிங்க்பிளஸ்


His & Hers
Release poster
GenreMystery thriller
Based onHis & Hers by Alice Feeney
Developed byWilliam Oldroyd
ShowrunnerDee Johnson
Starring
Music byMac Quayle
Country of originUnited States
Original languageEnglish
No. of episodes6
Production
Executive producers
Cinematography
  • Ante Cheng
  • Doug Emmett
Editors
  • William Henry
  • Daniel Valverde
  • Adam Epstein
Running time39–47 minutes
Production companies
Original release
NetworkNetflix
ReleaseJanuary 8, 2026


Friday, January 09, 2026

People We Meet On Vacation (2026)-ஆங்கிலம் /தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் ட்ராமா)@நெட் பிளிக்ஸ்

           

     9/1/2026 முதல் நெட் பிளிக்சில் நேரடியாக வெளியாகி இருக்கும் இந்தப்படம் தமிழ் டப்பிங்கிலும் இருக்கிறது.

2021 ஆம் ஆண்டில் எமிலி ஹென்றி எழுதிய இதே டைட்டிலைக்கொண்ட நாவலைத்தழுவி திரைக்கதை எழுதப்பட்டது           


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்,நாயகி இருவரும் பிரியாத வரம் வேண்டும் பட ஜோடிகள் போல நண்பர்கள்.ஒருவர் மீது ஒருவர் நேசம் கொண்டிருந்தாலும் நண்பர்கள் தான் என அவர்களை அவர்களே ஏமாற்றிக்கொண்டு இருப்பவர்கள்.


பறவைகள் பல விதம் படத்தில் வருவது போல குறிப்பிட்ட ஒரு நாளில் வருடா வருடம் சந்திப்பது என்பது இவர்களுக்குள் இருக்கும் ஒப்பந்தம்.


நாயகி சந்தோஷ் சுப்ரனணியம் பட  ஜெனிலியா போல செய்யும் அசட்டுத்தனஙகள் நாயகனுக்குப்பிடிக்கும்.சார்லி மலையாளப்பட நாயகன் துல்கர் சல்மான் போல நாயகி அடிக்கடி எங்காவது பிரயாணம் செய்ய வேண்டும்,பல புது மனிதர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆசை கொண்டவள்.


நாயகன் கொஞ்சம் கூச்ச சுபாவம் கொண்டவன்.இவனுக்கு ஒரு காதலி உண்டு.அவளுடன் அவ்வப்போது பிணக்கு வருவதும் ,பின் சேர்வதும் வழக்கம்.

நாயகிக்கும் ஒரு காதலன் உண்டு.அது தனியாக ஒரு டிராக்கில் போய்க்கிட்டு இருக்கு.


நாயகனின் சகோதரனுக்குத்திருமணம்.அதற்கு நாயகியை நாயகன் அழைக்கிறான். இது தான். படத்தில் ஓப்பனிங சீன்.கடந்த 8 வருடங்களாக இவர்கள் நட்பு பற்றிய காட்சிகள் நான் லீனியரில் கட் பண்ணி நிகழ்காலம் ,கடந்தப்காலம் என மாறி மாறிப்பயணிக்கிறது.


ஒரு கட்டத்தில் நாயகன் தன் காதலியுடன் தனக்கு மேரேஜ் பிக்ஸ் ஆக இருக்கிறது என்பதை நாயகன் சொல்கிறான்.அப்போது நாயகி தன் காதலனால் தான் கர்ப்பம் ஆனதைப்பற்றி சொல்கிறாள்.

இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான்  மீதி திரைக்கதை.


நாயகன் ஆக டாம் பிளைத் நம்ம ஊர் சித்தார்த் போன்ற சாயலில் அருமையாக நடித்திருக்கிறார்.இவ்வளவு கண்ணியமான ,அப்பாவி ஆன ஆண் உண்டா?என வியக்க வைக்கும் கேரக்டர் டிசைன்.


நாயகி ஆக எமிலி பேடர் சிறந்த அழகி இல்லை எனினும் நம் மனதைக்கவர்ந்து விடுகிறார்.

இவர்கள் இருவர் தாம் முக்கியக்கேரக்டர்கள்.மற்றவர்கள் எல்லாம் சும்மா வந்து போகிறவர்கள் தான்.நாயகனின் காதலி ,நாயகியின் காதலன் எல்லாம் சரியாக வடிவமைக்கப்படாத கெஸ்ட் ரோல் கேரக்டர்ஸ்

ஒளிப்பதிவு,இசை,எடிட்டிங போன்ற  டெக்னிக்கல் அம்சங்கள் தரம்

5 பேர் கொண்ட குழு திரைக்கதை எழுத இயக்கி இருப்பவர் பிரட் ஹெலி


சபாஷ்  டைரக்டர்


1 விமானப்பயணத்தின் மீதி அச்சம் கொண்ட நாயகன் அதைப்பற்றி விவரிக்கும்போது நாயகியின் அப்பா நாயகன் தாம்பத்யத்தில் தான் அச்சம் என்பதாகப்புரிந்து இருவரும் நடத்தும் உரையாடல் கிரேசி மோகன் டைப் கலக்கல் காமெடி

2  நாயகிக்குக்காய்ச்சல் என்றதும் தன் வெளியூர் ட்ரிப்பையே கேன்சல் செய்து விட்டு அவரைப்பார்த்துக்கொள்ளும் காட்சி டச்சிஙக்

3  இருவரும் இணைவார்களா?மாட்டார்களா?என்ற பதை பதைப்பைக்கிளப்பும் உணர்ச்சி மிக்க கிளைமாக்ஸ்


  ரசித்த  வசனங்கள் 


1 விடுமுறை.உங்களிடம் இருக்கும் இன்னொரு முகத்தை உங்களுக்கே காட்டும்

2 சாமி கிட்டே வேண்டிக்கிட்டதை வெளியில் சொன்னா அது நிறைவேறாது

3 சாக்சபோன் இசையில் வந்த ஒரு பாடல் கூட நல்லாருந்ததில்லை

4 சின்ன ஊர் அல்லது  ஒரு கிராமத்தில் நம்மைப்பற்றி ஒரு முடிவு எடுத்துட்டா  அதை மாத்தவே முடியாது.

5. நண்பர்கள் எப்பவும்  கை கொடுத்துக் க மாட்டாங்க (ஷேக் ஹேண்ட்ஸ்)

6 நான் தனியா தான் சாகப்போறேனோ?


நாம 2 பேரும் சேர்ந்து தனியா சாகலாமா?


7  வீடு திரும்புதல் கூட ஒரு பயணம் தான்.

8 பயணத்தின் சிறப்பே அதன் முடிவில் அவரவர் வீடு திரும்புவதுதான்

9 எனக்கு இப்போ அன்பான வாழ்க்கை தேவைப்படுது,அதுக்காக என் லட்சியத்தை விட்டுட்டேன்.

கிடைத்ததே போதும்னு இருக்கேன்னு சொல்லு

10 உன் கூட இருக்கும்போது என் சந்தோசம் டபுள் ஆகுது. சோகம் பாதியாக்குறையுது


11தேடுவதற்கும்,விலகி ஓடுவதற்கும் நூல் அளவு தான் வித்தியாசம்

12   வீட்டில் மட்டும் தான் நாம் நாமளா இருப்போம்

13. நீங்க நேசிக்கறவஙக உங்க வீட்டில் இருந்தா எப்பவும் நீங்க வீட்டிலேயே தான் இருப்பீஙக

14 உன்னைப்பார்த்தா நாய்களுக்கு நடுவே சிக்கிய பூனை மாதிரி இருக்கு 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 நாயகனின் சகோதரன் இன்னொரு ஆணைத்தான் திருமணம் செய்து கொள்கிறான்.மெயின் கதைக்கும் ,இதற்கும் சம்பந்தமே இல்லை.

2 நாயகன் தன் காதலியை எப்படி சமாளித்தான்?நாயகி தன் காதலனை எப்படி சம்மதிக்க வைத்தாள் என்பது விளக்கப்படலை


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -18+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  தமிழ் சினிமா பார்ப்பது போலவே இருக்கு.நெட் பிளிக்ஸ்  தயாரிப்பு என்பதால் 18+ எதிர்பார்த்துப்பார்க்க வேண்டாம்.ரேட்டிங்க் 2.5/5



Thursday, January 08, 2026

DRIVE(2025)- தெலுங்கு/தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் ஆக்சன் ரிவஞ்ச் திரில்லர்)@அமேசான் பிரைம்

                 

        மிருகம்,அரவாண் புகழ் ஆதி நடித்த தெலுங்குப்படமான இது    12/12/2015 முதல் திரை அரஙகுகளில் வெளியாகி இப்போது அமேசான் பிரைம் ஓடி டி யில் காணக்கிடைக்கிறது


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு மல்ட்டி மில்லியனர்.மிகப்பெரிய மீடியா நெட் ஒர்க் வைத்திருக்கிறார்.திருமணம் ஆகி ஒரே ஒரு சம்சாரம் ,ஒரு குழந்தை இருக்கு.இவர் தன் அப்பாவின் சொத்தைப்பராமரிக்கிறார்.


இவரோட மொத்த நெட் ஒர்க் பிஸ்னெஸ்சையும் வேறு ஒருவருக்கு விற்க  ஏற்பாடுகள் எல்லாம் பண்ணிட்டார்.அந்த டீலிங்க் முடிந்தால் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் அவருக்கு.

இப்போது நாயகனுக்கு ஒரு போன் கால் வருகிறது.வில்லன் நாயகனை மிரட்டுகிறான்.நான் சொல்றபடி எல்லாம் நீ கேட்கனும்.இல்லைன்னா நடப்பதே வேற.உன் போன் ,லேப் டாப் எல்லாத்தையும் ஹேக் பண்ணி வெச்சிருக்கேன்.

நீ ஒரு பெண்ணுடன் அந்தரங்கமாக இருந்த போட்டோஸ் கை வசம் இருக்கு.நீ டீலிங்க் பேசுன நெட் ஒர்க் பிஸ்னெஸ் கை மாற்றும் விஷயம் வெளில வந்தா என்ன ஆகும்?

என மிரட்டுகிறான்.நாயகனால் எதுவும் செய்ய முடியவில்லை.நாயகன் என்ன செய்தாலும் வில்லனுக்குத்தெரிந்து விடுகிறது.


வில்லன் யார்? நாயகனை எதற்காகப்பழி வாங்குகிறான்?நாயகன் வில்லனை எப்படி டீல் செய்கிறான் என்பதே மீதிக்கதை


நாயகன் ஆக ஆதி ஜம் என்று இருக்கிறார்.கோட் சூட் டை + கனடா லொக்கேசன் என கலக்குகிறார்.எதுவும் செய்ய முடியாத கையறு நிலையை முகத்தில் நன்கு வெளிப்படுத்துகிறார்.

நாயகி ஆக  மடோனா செபாஸ்டின் அதிக வேலை இல்லை.

படம் பூரா மாஸ்க் போட்டு வருவதால் வில்லனுக்கும் முகம் கடைசி வரை இல்லை.பாகம் 2 க்கான லீட் இருப்பதால் க்ளைமாக்சில் காட்டுகிறார்கள்.

நடித்த மற்ற அனைவர் நடிப்பும் கச்சிதம்.

நாகா சாய் திரைக்கதை எழுத ஜெனுஸ் மொஹமத் இயக்கி இருக்கிறார்.

ஒளிப்பதிவு அபினந்தன் ராமானுஜம்.முழுக்க முழுக்க பாரீன் லொக்கேசன் என்பதால் நல்ல கிளாரிட்டி.

இசை ஓசோ வெங்கட்.பின்னணி இசை டெம்ப்போ ஏற்றுகிறது.

பிரவீன் படி யின் எடிட்டிங்கில் படம் 128 நிமிடஙகள் ஓடுகிறது.


சபாஷ்  டைரக்டர்

1 தொய்வே இல்லாமல் படம் முழுக்க நாயகன் ஓடிக்கொண்டே இருப்பதால் போர் அடிக்கவில்லை

2 பிளாஸ்பேக் போர்சனில் வில்லன் பக்கம் இருக்கும் நியாயம் நாயகனை வில்லன் ஆக்கும் ட்விஸ்ட்


  ரசித்த  வசனங்கள் 

1  சட்டத்துக்குப்புறம்பாகப்பொருளாதாரக்குற்றம் புரிந்தால் ஓடி ஒளியப்பாதுகாப்பான இடம்  லண்டன் தான்.அதான் விஜய் மல்லய்யா,லலித் மோடி எல்லாரும் அங்கே எஸ்கெப்

2  நான் ஒருத்தன் இருக்கறப்போ உனக்கு எதுக்கு  இத்தனை எதிரி?

3 கடவுளைப்பிரார்த்திப்பது என்றால் இப்பவே செஞ்சுக்கோ.ஏன்னா பின் அதுக்குக்கூட உனக்கு டைம் கிடைக்காது.


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 வில்லனின் பிளாஸ்பேக்கில் ஸ்கூல் ஸ்டூடண்ட் ஆன வில்லனின் தம்பி நாயகனால் கேலி ,கிண்டலுக்கு ஆளாகி தற்கொலை செய்வதை இன்னமும் அழுத்தமான  காட்சியில் காட்டி இருக்க வேண்டும்


2 வில்லனின் அப்பாவை. நாயகனின் போலீஸ் நண்பன் ரவுண்ட் அப் பண்ணி லாக் செய்வதை விஷூவலாகக்காட்டவில்லை


3 வில்லனின் பக்கம் நியாயம்  இருப்பதால் நாயகன் ஜெயிக்க வேண்டும் எனற எமோஷனல் கனெக்ட். ஆடியன்சுக்கு ஏற்படவில்லை

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  டி வி ல போட்டி பார்க்கலாம்.சுமார் ரக திரில்லர். ரேட்டிங் 2/5

Wednesday, January 07, 2026

சல்லியர்கள்(2026)-போர் மருத்துவர்கள் -தமிழ் - சினிமா விமர்சனம் (வார் டிராமா)@ஓடிடி பிளஸ்

                   

    தமிழில் நமக்குப்பரிச்சயம் ஆகாத பல வார்த்தைகள் இருக்கின்றன போல.சல்லிப்பயல் என்றால் ஒன்றுக்கும் உதவாதவன் என்று அர்த்தம்.இது நமக்குப்பரிச்சயமான,பழகிய தமிழ் வார்த்தை.ஆனால் சல்லியர்கள் என்றால் போர்க்களத்தில் பணியாற்றும் மருத்துவர்கள் என்பது இதுவரை அறியாத தகவல்


மேதகு பாகம் 1 ,பாகம் 2 ஆகிய இரு படங்களைக்கொடுத்த இயக்குனர் கிட்டு இயக்கிய படம் இது.


பொங்கல் ரிலீஸ் ஆக ஜனநாயகன்,பராசக்தி ஆகிய படங்கள் வருவதால் 1/1/2026 முதல் திரை அரங்குகளில் வெளியாகி இருக்கும் படத்திற்கு சரியான தியேட்டர்கள் கிடைக்கவில்லை.இப்போது. ஓடிடி பிளஸ் சேனலில் காணக்கிடைக்கிறது  


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி ஒரு டாக்டர்.இலங்கையில் பணிபுரிகிறார்.சிறுமியாக இருந்தபோது போராளிகளுக்கு ரத்த தானம் ஏற்பாடு செய்து தந்ததற்காக நாயகியின் அப்பா ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்படுகிறார்.நாயகி பெரியவள் ஆனதும் டாக்டர் ஆகி போர்க்களத்தில் பணி புரிகிறார்.


போர்க்களத்தில் காயம் அடைந்தவர் போதாளிகள் ஆக இருந்தாலும் ,ராணுவ வீரர் ஆக இருந்தாலும் சிகிச்சை அளிப்பது தான் இவரது கடமை.


இராணுவத்தளபதி இந்த போர்க்களத்தில் இருக்கும் மருத்துவ சிகிச்சை முகாம்களை (மெடிக்கல் பங்கர்) வெடி வைத்துத்தகர்க்க திட்டம் இடுகிறார்கள்.


நாயகி டாக்டர் ஆகப்பணியாற்றும் அந்த மெடிக்கல் பங்கரில் ஒரு சிங்கள ராணுவ வீரன் போர்க்காயத்துடன் அனுமதிக்கப்பட்டிருக்கிறான்.நாயகி ஆன டாக்டர் அவனுக்கு சிகிச்சை அளிக்கிறார்.

 இதற்குப்பின் நடக்கும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை.

தெரிந்த முகஙகள் யாரும் இல்லை.நாயகியின் அப்பாவாக வரும் கருணாஸ் மட்டும் தெரிந்த முகம்.மற்றவர்கள் புதுமுகங்கள்.

அனைவரது நடிப்பும் அருமை.

ஒளிப்பதிவு ,இசை,எடிட்டிங போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் ஓக்கே ரகம்.

சபாஷ்  டைரக்டர்


1 யாருக்கும் தெரியாத போர்க்கள மருத்துவர்கள் பற்றி பதிவு செய்த ஐடியா

2 போர்க்களத்தில் காயம் அடைந்த வீரர்களுக்கு ரத்த தானம்  செய்ய  சேகரித்த ரத்த ப்பாக்கெட்டுக்களை ராணுவ வீரர்கள் வீணாக்கும் சீன்

3 கருணாஸ் இறக்கும் முன் பேசும் வீர வசனம்



  ரசித்த  வசனங்கள் 

1  உயிர் மேல பயம் வரனும்னா உயிரைக்காப்பாற்றும்  ஆட்களை முதலில் அழிக்கனும்

2 இந்த மண்ணைக்காப்பாற்ற உன் உசுரைப்பற்றிக்கூடக்கவலைப்படாம போர்க்களத்துக்குப்போகும் நீ தான் பேரழகன்

சரி.நீ எப்போ பேரழகி ஆகப்போறே?


3 இந்த உசுரு போனா இந்த மண்ணுக்காகத்தான் போகனும்

4  மெடிக்கல் பங்கர் சாமி மாதிரி


5 நம்மைக்காப்பாற்றும் சாமியை நாம காப்பாற்றுவதில் என்ன தவறு?

6 உனக்குக்கடவுள் நம்பிக்கை இருக்கா?

தலைவர் மீது நம்பிக்கை இருக்கு


7 சம்பளத்துக்காகக்களத்தில் நிற்பவனுக்கும் ,விடுத்தலைக்காகக்களத்தில் நிற்பவனுக்கும் வித்யாசம் உண்டு

8 போர்க்களத்தில் தேவை இரண்டு தான் 1 உயிர் 2 ஆயுதம்


9 எப்படியும் நம்மை சுடப்போறாங்க.சாகும்போது கூட தலை குனியக்கூடாது

10 உசுரை விதையா விதைக்கிறோம்.அது வெடிச்சு வெளியே ஒரு நாள் நிச்சயம் வரும்


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   இலஙகைத்தமிழர்கள் வரலாறு தெரிந்தவர்கள் பார்க்கலாம்.இது ஜனரஞசகப்படம் அல்ல.விகடன் மார்க் யூகம் 41.குமுதம் ரேங்க்கிங் ஓக்கே .ரேட்டிங்க் 2.5 /5

Tuesday, January 06, 2026

THE BED (2026)-தமிழ்- சினிமா விமர்சனம் (க்ரைம் ட்ராமா)

                     

    2/1/2026 முதல் திரை அரங்குகளில் ரிலீஸ் ஆன இந்தப்படம் ஸ்ரீகாந்த்- சிருஷ்டி டாங்கே ஜோடியின் நடிப்பில் வெளியாகி இருக்கும் ரொமாண்டிக் க்ரைம் திரில்லர் என போஸ்டர் சொல்கிறது.  


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஐ டி கம்பெனியில் வேலை செய்பவன். வாரா வாரம். தன் நண்பர்களுடன் சேர்ந்து  டூர் போய் சரக்கு அடித்து விட்டு வருபவன்


இந்த முறை ஒரு மாறுதலுக்காக விலை மாது ஒருவரை அழைத்துக்கொண்டு செல்லலாம் என முடிவெடுத்து கூகுளில் (!!) தேடி போன் நெம்பர் கண்டுபிடித்து போன் செய்கிறான்.

நாயகி ஒரு விலை மாது.தன் அம்மாவுடன் வசித்து வருபவர்.அம்மா தான் புரோக்கர்.இப்படிப்பட்ட நல்ல குடும்பத்தில் பிறந்த நாயகி நாயகன் + அவனது நண்பர்கள் உடன் காம்போ பேக்கேஜ் ரேட் பேசப்பட்டு அனைவரும் ஊட்டி போகின்றனர்.

நாயகன் திடீர் என நாயகி மீது காதல் வசப்படுகிறான்.நண்பர்களுக்கு சரக்கு ஊற்றிக்கொடுத்து அவர்களை மட்டை ஆக்கி நாயகியுடன்  ஊர் சுற்றுகிறான்.

2 நாட்கள் எதுவும் நடக்கவில்லை.திடீர் என நாயகியின் முன்னாள் கஸ்டமர் வந்து நாயகியிடம் தகறாரு செய்கிறான்.

அடுத்த நாள் நாயகி காணாமல் போகிறாள்.நாயகனின் நண்பன் ஒருவன் கொலை செய்யப்பட்டுக்கிடக்கிறான்.


போலீஸ் வருகிறது.என்ன நடந்தது?யார் குற்றவாளி? என்பதைக்கண்டுபிடிப்பதுதான் மீதிக்கதை.


நாயகன் ஆக ஸ்ரீகாந்த் ரோஜாக்கூட்டம் காலத்து ஆள் போலவே யங்க் ஆக இருக்கிறார்.நாயகியிடம் உருகும்போது நல்ல நடிப்பு.


நாயகி ஆக சிருஷ்டி டாங்கே இளமை அழகுடன் வருகிறார்.நடிக்க அதிக வாய்ப்பில்லை.

போலீஸ் ஆபீசர் ஆக ஜான் விஜய் வழக்கம் போல் ஓவர் ஆக்டிஙக் செய்கிறார்.

நண்பர்கள் ஆக வருபவர்கள் எடுபடவில்லை

எஸ் மணிபாரதி தான் திரைக்கதை ,இயக்கம்.

தாஜ் நூரின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்.பின்னணி இசை எடுபடவில்லை.

ஒளிப்பதிவு கோகுல் நாயகிக்கு க்ளோசப் ஷாட் வைப்பதில் பாஸ் மார்க்.

2 மணி நேரம் படம் ஓடுகிறது.


சபாஷ்  டைரக்டர்

1 சி செண்ட்டர் ஆடியன்சைக்கவர்வது போல போஸ்டர் டிசைன்,டைட்டில் ரெடி செய்தது

2 நாயகியின் அழகை நம்பி திரைக்கதையில் கோட்டை விட்டது



  ரசித்த  வசனங்கள் 

1  இந்த கேக் எனக்குப்பிடிக்கும்னு உங்களுக்கு எப்படித்தெரியும்?

நமக்குப்பிடிச்சவஙகளுக்கு என்ன பிடிக்கும்னு பிடிச்சவஙகளுக்குத்தெரியாதா?


2 குடியும் குடித்தனமுமா இருந்தோம்,இனி குட்டியும் ,குடித்தனமுமாய் இருப்போம்

3  மாவு ருசியா இருந்தா பணியாரமும் ருசியா இருக்கும்.அம்மா நல்லாருந்தா பொண்ணு நல்லாருக்கும்

4  பர்ஸ்ட் நைட்ல ஏன் ஸ்வீட் வைக்கறாங்க தெரியுமா? ஸ்வீட் சூட்டைக்கிளப்பி விடும்

5  வாவ்..தூக்குது

என்னது?

வாசனை

6 காதலுக்காகக்காத்திருப்பதும் ,காமத்துக்காகக்காத்திருப்பதும் தனி சுகம்

7  கூகுள் இப்போ மாமா வேலை எல்லாம் பார்க்குதா?

8 ஐ டி கம்பெனில ஒர்க் பண்றியா?ஐட்டம் கம்பெனில ஒர்க் பண்றியா?

9 குடிக்கறதுக்காக குடிச்சுக்கிட்டே ஒரு பிளானா?







 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 ஓங்கி ஒரே அறை விட்டதும் நாயகி இறப்பது சினிமாக்களில் தான் சாத்தியம்

2;நாயகி இறந்து பல நாட்கள் ஆகியும் புது டிரசுடன் அழகாக இருப்பது எப்படி?மேக்கஒ கூட கலையலை

3 பாரஸ்ட் ஆபீசரை ஜான் விஜய் மரியாதை இல்லாமல் பேசுவது எப்படி?

4 ஹாலிவுட் படமான பிரட்டி விமன் பாதிப்பில் எடுத்தாலும் ஆடியன்சுடன் கனெக்ட் ஆகவில்லை


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  டி வி ல போட்டாக்கூடப்பார்க்க முடியாத டப்பாப்படம்.விகடன் மார்க் யூகம் 38.குமுதம் ரேங்க் சுமார்.ரேட்டிங்க் 1.5/5

Monday, January 05, 2026

HAQ (2025)-ஹிந்தி -சினிமா விமர்சனம் (பேமிலி கோர்ட் ரூம் ட்ராமா)@நெட் பிளிக்ஸ்

             

          இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம்.ஒரு பெண் தன்னந்தனியாக 10 வருடங்கள் சட்டத்திடம்  போராடி ஜெயித்த கதை.ஒரு சமூகத்துக்கே புதிய நீதியைப்பெற்றுத்தந்த கதை. 


ஹக் என்றால் உரிமை என்று அர்த்தம்.7/11/2025 அன்று திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம்  2/1/2026 முதல் நெட் பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது.


45 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப்படம்  பாக்ஸ் ஆபீசில் 28 கோடி மட்டுமே வசூலித்தது.ஆக்சன் குப்பைகளையும் ,டப்பாப்படங்களையும் ஹிட் ஆக்கும் ரசிகர்கள் தரமான படத்தைக்கண்டு கொள்ளாததில் ஆச்சரியம் இல்லை.ஆனால் நெட் பிளிக்சில் வெளியான 2 வது நாளே டாப் 2 இடத்தைப்பிடித்து விட்டது   


ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லன் ஒரு வக்கீல் .நாயகி ஒரு முஸ்லீம்.நாயகனைப்பார்த்ததும் காதல் கொள்கிறாள்.இருவருக்கும் திருமணம் ஆகிறது.இரு குழந்தைகள் பிறக்கின்றன.முதல் 6 வருடங்கள் வாழ்க்கை ஜாலியாகப்போகிறது.


வில்லன் திடீர் என்று வேலை விஷயமாகப்பாகிஸ்தான் போகிறேன்.3 வாரஙகளில் திரும்புவேன் என்று சொல்லி விட்டுப்போகிறான்.ஆனால் 3 மாதஙகளாக வரவில்லை


பிறகு வருகிறான்.வரும்போது வில்லியுடன் வருகிறான்.வில்லனின் அத்தை மகள் திடீர் என்று விதவை ஆகி விட்டாள்.அவளுக்கு வாழ்க்கை கொடுத்தேன் என்கிறான்.


நாயகிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.மாமியார் வேற வில்லனுக்கு சப்போர்ட்.என் மகனுக்கு விருப்பமே இல்லை.நான் தான் கட்டாயப்படுத்தினேன் என்கிறார் மாமியார்.

வேறு வழி இல்லாமல் நாயகி சகித்துக்கொண்டு வில்லி ஆன சக்களத்தியை வீட்டுக்குள் அனுமதிக்கிறாள்.


ஒரு கட்டத்தில் வில்லி சொன்ன உண்மை நாயகியை சுடுகிறது.வில்லன் சின்ன வயதிலேயே வில்லியை விரும்பியவன்.வில்லிக்கு  வேறு ஒருவருடன் திருமணம் நடந்ததால் தான் வில்லன் நாயகியைத்திருமணம் செய்து கொண்டான்.


நாயகி வில்லி சொன்னது உண்மையா?என வில்லனிடம் கேட்கிறாள்.வில்லன் பம்முகிறான்.நாயகி கோபத்துடன் தன் வாரிசுகளை அழைத்துக்கொண்டு  தன் அம்மா வீட்டுக்குப்போய் விடுகிறாள்.


மாதா மாதம் பராமரிப்பு செலவுக்கு ரூ 400 மட்டும் கேட்கிறாள்.ஆரம்பத்தில் தந்த  வில்லன் பின் அதைக்கூட தரவில்லை.


நாயகி ஜீவனாம்சம் கேட்டு கேஸ் போடுகிறாள்.வில்லன் கோபம் ஆகி 3 முறை தலாக் சொல்லி விடுகிறான்..


அப்போது எல்லாம் (1985) தலாக் சொன்னால் பிரியலாம்.நாயகி கோர்ட்டில். வாதாடி எப்படி ஜெயிக்கிறார் என்பதே மீதிக்கதை.


நாயகி ஆக யாமி கவுதம் பிரமாதமாக நடித்திருக்கிறார். அவரது கண்களும் ,புருவமும் கொள்ளை அழகு.

வில்லன் ஆக இம்ரான் ஹஸ்மி கச்சிதமான வில்லத்தனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

வில்லி ஆக வர்த்திகா  சிங்க் அருமை.

நாயகிக்காக வாதாடும் வக்கீல் ஆக ஷீபா சத்தா அட்டகாசமான நடிப்பு.


விஷால் மிஸ்ராவின் இசையில் 6 பாடல்கள்.3 அருமை.பின்னணி இசை கச்சிதம்

பிரத்தம் மேத்தாவின் ஒளிப்பதிவில் வில்லி ,நாயகி இருவருக்குமான க்ளோசப் ஷாட்கள் அருமை

நீனத் கனோல்கரின் எடிட்டிஙகில் படம் 136 நிமிடஙகள் ஓடுகிறது.

ரேஷு நாத் திரைக்கதை எழுத  சுபார்ன் வர்மா இயக்கி இருக்கிறார்


சபாஷ்  டைரக்டர்


1  கோர்ட் ரூம் சீன்களில் ஜட்ஜ் ,வக்கில்,நாயகி மூவரும் போட்டி போட்டு நடித்த விதம்

2  நாயகி ,வில்லி இருவருக்கும் மனஸ்தாபம் வரும் காட்சிகள்

3  பெண்களைக்கவரும் வகையிலான காட்சி அமைப்புகள் ,வசனஙகள்



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 ஆம்பளைஙக புத்தி பத்தி நாயகிக்குத்தெரியாதா?3 மாசமா ஆள் வர்லைனதும் உஷார் ஆக வேண்டாமா?

2 மாதாமாதம் வெறும் 400 ரூபாய் தர வில்லனுக்குக்கசக்குதா? கோர்ட் கேஸ் என ஏன் அலையனும்?


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்:16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பெண்களைக்கவரும் பிரமாதமான படம்.பின் பாதி முழுக்க கோர்ட் சீன்கள்.பொறுமை தேவை.ரேட்டிங்க் 3/5

Haq
Theatrical release poster
Directed bySuparn Verma
Written byReshu Nath
Produced byVineet Jain
Vishal Gurnani
Juhi Parekh Mehta
Harman Baweja
StarringYami Gautam Dhar
Emraan Hashmi
Vartika Singh
Sheeba Chaddha
CinematographyPratham Mehta
Edited byNinad Khanolkar
Music byVishal Mishra
Production
companies
Distributed byJunglee Pictures
Release date
  • 7 November 2025
Running time
136 minutes[1]
CountryIndia
LanguageHindi
Budget₹40–45 crore[2]
Box officeest. ₹28.68 crore[3]

Sunday, January 04, 2026

சிறை(2025)-தமிழ்-சினிமா விமர்சனம்( ஆக்சன் திரில்லர்)@ஜீ5

                 

          இயக்குநர் தமிழ் + விக்ரம் பிரபு கூட்டணியில் 2022 ல் டாணாக்காரன் ரிலீஸ் ஆகி பலரது பாராட்டுக்களைப்பெற்றது.அந்த இயக்குநர் தமிழ் கதை திரைக்கதை எழுத இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கிய படம் தான் இது.வருடக்கடைசியில் வந்திருக்கும் முதல் தரமான படம்.25/12/2025 கிறிஸ்துமஸ் ரிலீஸ் ஆக வெளியான இந்தப்படம் 20/1/2026 முதல் ஜீ 5 ஓ டி டி யில் வெளிவர இருக்கிறது.

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு முஸ்லீம்.தன் அம்மா உடன் வசித்து வருகிறான்.


நாயகி ஒரு இந்து.இருவரும் ஒரே ஊரைச்சேர்ந்தவர்கள்.இருவரும் ஒரே தெருவில் தான் குடி இருக்கிறார்கள்.


நாயகி தன் அம்மா,அப்பா ,அக்காவுடன் வசிக்கிறாள்.அக்காவுக்குத்திருமணம் ஆகி விட்டது.ஆனால் குழந்தை இல்லை.அக்கா கணவர் ஒரு குடிகாரன்.


காதல் விஷயம் தெரிந்ததும் நாயகியின் அப்பா வுக்கும் ,நாயகனுக்கும் கை கலப்பு நிகழ நாயகன் நாயகியின் அப்பாவைப்பிடித்துத்தள்ளி விடும்போது அவர் கல்லில் தலை பட்டு ஸ்பாட் அவுட்.


கொலைக்கேசில் நாயகன் சிறைக்குப்போகிறார்.சிறையிலிருந்து கோர்ட்டுக்கு அழைத்து செல்லும் ஒரு போலீஸ் காரர் நாயகனுக்கு உதவி செய்கிறார்.


நாயகன்,நாயகி காதல் நிறைவேறியதா?நாயகன் ரிலீஸ் ஆனாரா?என்பது க்ளைமாக்ஸ்


நாயகன் ஆக எல் கே அக்சய் குமார் அப்பாவித்தனமான முகத்துடன் அருமையாக நடித்திருக்கிறார்.

நாயகி ஆக அனிஷமா அற்புதமாக நடித்திருக்கிறார்.அவரது பால் மணம் மாறாத முகம் படத்துக்குப்பிளஸ்


நாயகனுக்கு உதவும் போலீஸ் ஆக விக்ரம் பிரபு கச்சிதமாக நடித்திருக்கிறார்.நல்ல போலீசை சினிமாவிலும் சரி ,வாழ்க்கையிலும் சரி நாம் பார்த்ததில்லை என்பதால் அந்தக்கேரக்டர் உயர்ந்து நிற்கிறது.


விக்ரம் பிரபுவின் மனைவியாக வரும்  அனந்தா தம்பிராஜா கெஸ்ட் ரோல் தான் என்றாலும் பெஸ்ட் ரோல்.ஜட்ஜ் ஆக வரும் தேனப்பன் நடிப்பு அருமை.நாயகியின் அக்கா கணவர் ஆக வரும் ரகு வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.

மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு அருமை.ஆர்ட் டைரக்சன் செம.கோர்ட்,போலீஸ் ஸ்டேஷன்,கிராமம் எல்லாமே பர்பெக்ட்.


இசை ஜஸ்டின் பிரபாகரன்.நீலோத்தி செம ஹிட் மெலோடி.பின்னணி இசையில் பல இடஙகளில் மிரட்டி இருக்கிறார்.


பிலோமின் ராஜின் எடிட்டிஙகில் படம் 124 நிமிடஙகள் ஓடுகிறது.நல்ல விறுவிறுப்பு.



சபாஷ்  டைரக்டர்

1 திருச்சியில் 1987ல் நடந்த உண்மை சம்பவம் தான் கதை என்பதால் உண்மைக்கு நெருக்கமான காட்சிகள் மனதைத்தொடுகின்றது.


2 மெயின் கதையை விட ஆயுதப்படை போலீஸ்,சிறைக்காவலர் சம்பந்தப்பட்ட காட்சிகள் கை தட்டல் பெறுகிறது


3  திரைக்கதை ஆசிரியர் ஆன செந்தில் முன்னாள் போலீஸ் என்பதால் அவர் எழுதிய போலீஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாம் நம் கண் முன் நடப்பது போல அப்படி ஒரு யதார்த்தம்


4 பிரமாதமான இண்ட்டர்வெல் பிளாக் சீன்

5 முஸ்லீம்களை உயர்த்திப்பிடிக்கும் அந்த  போலீஸ் ஸ்டேசன் சீன்


செம  ஹிட்  சாங்க்

1. நீலோத்தி

2 மின்னும் வட்டப்பூச்சி

3 மன்னிச்சிரு


  ரசித்த  வசனங்கள் 

1 ஒவ்வொரு காவலருக்கும் குறைந்த பட்ச அதிகாரம் இருக்கும்,அதை யாருக்காக அவர் பயன்படுத்தறார் என்பது ரொம்ப முக்கியம்

2 போலீஸ் குற்றவாளியைத்தப்பிக்க விட்டாலும் அவன் மேல என்கொயரி,என்கவுண்ட்டர் ல போட்டாலும் அவன் மேல் கேஸ்

3  போலீஸ் வேலை என்பது முட்டில கட்டிய தாலி மாதிரி,எப்போ வேணா அவிழும்

4 அப்பாவோட போட்டோ பிரேம் எப்படிம்மா உடைஞ்சுது?

அவரை என்னைப்பார்க்க ஆசைப்பட்டு போட்டோ பிரேமை விட்டு வெளில வந்தப்போ உடைஞ்சது

5 கல்யாணக்கேசட் கொடு

யாரோட கல்யாணக்கேசட்?

டேய்,கல்யாணத்துக்கு அப்புறம் நடக்கறதக்காட்டுவாங்க இல்ல?அந்தக்கேசட்


6 ஒரு கைதி போலீஸ்க்கு ஜாமீன் போடறான்

7 பசஙகளுக்குத்தான் பொண்ணுங்களைப்பிடிக்கக்காரணம் வேணும்,ஆனாப்பொண்ணுஙகளுக்குப்பசங்களைப்பிடிக்கக்காரணமேத்தேவை இல்லை.பிடிச்சிருந்தாலே போதும்

8 நீ பேசாம இருந்தா உன்னை யாரும் கண்டுக்க மாட்டாங்க,உன்னோட குரல் தான் உனக்கு பலம்

9 நீ சாமி கும்பிடல?


இந்த சாமி எனக்கு எந்தப்பிரச்சனையும் தந்ததில்லை,எதுக்கு அதை வீணாத்தொந்தரவு செய்யனும்,?


10  இங்கே இருக்கும் சட்டங்கள் எல்லாம் எளிய மக்களுக்கு எதிராத்தான் இருக்கு.

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 பிரபு சாலமன் இயக்கத்தில் வந்த மைனா(2010) மெகா ஹிட் படத்தின் உல்டா வெர்சன் தான் இது.தமிழின் திரைக்கதை தான் காப்பாற்றி இருக்கிறது

2  போலீஸ் அத்தனை சட்டம் பேசி விட்டு குடித்து விட்டு வண்டி ஓட்டுவது ஏன்?

3 கிராமத்து இளைஞன் வாய்க்காலில் ,ஆத்தில் குதித்து நீந்தும்போது லுங்கி கட்டி இருக்க மாட்டான்.அது நீச்சலுக்கு இடைஞசல்.டிராயர் தான் போட்டிருப்பான்

4 நாயகனின் அம்மா செத்ததுக்குக்கூட ஜாமீன் கிடைக்காதா?

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மைனா படம் பார்த்தவர்களும் மாறுபட்ட திரைக்கதைக்காகப்பார்க்கலாம்

விகடன் மார்க் யூகம் 44.குமுதம் ரேங்க்கிங்க் நன்று.ரேட்டிங்க். 3/5


Sirai
Theatrical release poster
Directed bySuresh Rajakumari
Screenplay by
  • Tamizh
  • Suresh Rajakumari
Story byTamizh
Produced bySS Lalit Kumar
Starring
CinematographyMadhesh Manickam
Edited byPhilomin Raj
Music byJustin Prabhakaran
Production
company
Release date
  • 25 December 2025
Running time
124 minutes[1]
CountryIndia
LanguageTamil

Saturday, January 03, 2026

EKO (2025) -மலையாளம்/ தமிழ் - சினிமா விமர்சனம் (க்ரைம் டிராமா )@நெட் பிளிக்ஸ்

                             

5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 50 கோடி ரூபாய் வசூலித்த தரமான படம்.மாஸ் ஹீரோ இல்லை,பிரம்மாண்டம் இல்லை.திரைக்கதையை நம்பிக்களம் இறஙகிய படம்.


கிஷ்கிந்தா காண்டம்(2024) இயக்கிய  தினிஜித் அய்யத்தன் இயக்கிய படம் இது.பலராலும் பாராட்டப்பட்டாலும் கிஷ்கிந்தா காண்டம் பர்சனலாக எனக்குப்பிடிக்கவில்லை.ஏன் எனில் வில்லன் பலமானவன் இல்லை.பரிதாபமாய் இருந்தது.ரொம்ப ஸ்லொ.ஆனால் இந்தப்படம் ஒரு மிஸ்ட்ரி திரில்லர் படத்துக்கு உண்டான விறுவிறுப்பைக்கொண்டிருந்தது



ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி ஒரு மலேசியாப்பெண்,வில்லன் நாயகியைக்கல்யாணம் பண்ணி இந்தியா கூட்டிட்டு வர்றான்.கிட்டத்தட்ட வீட்டு சிறையில் வைத்து அவளைக்காவல் காக்கிறான்.வீட்டை விட்டு வெளியே போனால் வில்லனின் வேட்டை நாய்கள் நாயகியைக்கடிக்கும்


நாயகன் நாயகியைக்காப்பாற்றுகிறான்.ஆனால் அவனும் வில்லன் மாதிரி தான் நாயகியை நடத்துகிறான்.


வில்லன் கொலை செய்யப்படுகிறான்,நாயகன் தலை மறைவு ஆகிறான்.நாயகனைத்தேடி போலீஸ் டீம் வருகிறது.அதற்குப்பின் நிகழும் எதிர்பாராத திருப்பஙகள் தான் மீதிக்கதை


நாயகி ஆக பியானா மொமின் பிரமாதமாக நடித்திருக்கிறார்.நாய்களால் கடிபடும் காட்சியில் பரிதாபத்தை அள்ளுகிறார் க்ளைமாக்சில் அவரது ட்ரான்ஸ்பர்மேசன் செம.

வில்லன் ஆக வினித்தின் நடிப்பும் ,கெட்டப்பும் அருமை.

நாயகன் ஆக சவுரப் சச்தேவா நடிப்பு கனகச்சிதம்.

நாயகிக்கு பாடிகார்டாக வரும் அந்தப்பையன் ஆக சந்தீப் அருமையான நடிப்பு.

நாயகியின் இள வயது கேரக்டரில் சிம்லீ அழகு தேவதை.

முஜீப் மஜீத்தின் இசை அருமை.பின்னணி இசை மிரட்டுகிறது.

பாகுல் ரமேசின் ஒளிப்பதிவு கானகத்தின் அழகைக்கண் முன் நிறுத்துகிறது.

சூரஜின் எடிட்டிஙகில்  படம் 125 நிமிடஙகள் ஓடுகிறது.


ஒளிப்பதிவாளர் பாகுல் ரமேஷ  திரைக்கதை எழுத இயக்கி இருப்பவர்  தினிஜித் அய்யத்தன்




சபாஷ்  டைரக்டர்

1 வேட்டை நாய்களைக்க்ளோசப்பில் காட்டும்போது ஒரு நடுக்கம் வரவைப்பது போல பிஜி எம் அமைத்துப்படமாக்கிய விதம்

2 நாயகியின் க்ளைமாக்ஸ் நடிப்பு

3 நாயகனுக்கு என்ன ஆனது என்ற க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்



  ரசித்த  வசனங்கள் 


1 குடும்பத்தில் நம்பிக்கை தேவை

2 பாதுகாப்பாப்பார்த்துக்கறது ,தடை விதிப்பது இரண்டுக்கும் வித்யாசம் இருக்கு

3 தெரிஞ்சவஙக தான் ,ஆனா  நல்லாத்தெரிஞசவங்க இல்லை


4  வீட்டில் இருக்கும் பெண்ணும் ,நாயும் ஒண்ணு.இரண்டையும் கூண்டில் தான் வைக்கனும்

5 ஒவ்வொரு விஷயத்தையும் சொல்ல ஒரு முறை இருக்கு.

6  இவ என் சம்சாரம்,என் மகளைப்போலப்பார்த்துக்கறேன்


ஏன்?சம்சாரத்தை சம்சாரம் மாதிரி பார்த்துக்க மாட்டீங்களா?


7 சாப்பாடு போடுவது கூட ஒரு வகைல உரிமை கொண்டாடத்தான்



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


பர்பெக்ட் 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மிஸ்ட்ரி திரில்லர் ரசிகர்கள் ,பெண்கள் பார்க்கலாம்.ரேட்டிங்க் 3/5



Eko
Theatrical release poster
Directed byDinjith Ayyathan
Written byBahul Ramesh
Produced byMRK Jhayaram
Vipin Agnihotri
StarringSandeep Pradeep
Vineeth
Narain
Saurabh Sachdeva
Binu Pappu
Biana Momin
CinematographyBahul Ramesh
Edited bySooraj E. S.
Music byMujeeb Majeed
Production
company
Aaradyaa Studio
Distributed byAnnapurna Studios
Dream Warrior Pictures
DreamZ Entertainment
Lighter Buddha Films
Prathangira Cinemas
Black Ticket Entertainments
DMY Creations
Singapore Coliseum
Wanderblust Films
Release dates
  • 21 November 2025
  • 31 December 2025 (Netflix)
Running time
125 minutes[1]
CountryIndia
LanguageMalayalam
Budget₹5 crore[2]
Box office₹50 crore[3]

Friday, January 02, 2026

சாயாவனம் (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் (க்ரைம் டிராமா )

                             



 தமிழ்  நாட்டில் அதிக மழை பொழியும்  இடம் சிரபுஞ்சி ,  என்பது நமக்குத்தெரியும் , அங்கே தினசரி   மழை  பெய்யுமாம் , இப்படத்தின் பட ப்பிடிப்பு  சிரபுஞ்சி யில்  நடந்ததாம் , மலையாளத்தில் 40  படங்கள்  இயக்கிய   இயக்குனர் முதன் முதலாக தமிழில் இயக்கி இருக்கிறார் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லன் ஒரு பெரிய பணக்காரரிடம் இருந்து நகை,பணம் கொள்ளை அடிக்கிறான்.கொள்ளை அடித்த பணத்துடன் எஸ்கேப் ஆகும்போது நாயகனிடம் அதை  ஏமாந்து பறிகொடுத்து விடுகிறான்


நாயகன் வீட்டுக்கு அந்தப்பணப்பையைக்கொண்டு வந்து வீட்டில் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்கிறான்.


நாயகனுக்கு அப்போதுதான் திருமணம் ஆகி இருக்கிறது.குடி இருப்பது வளர்ப்புத்தாய் வீட்டில்.

இரண்டு நாட்கள் மட்டுமே மனைவியுடன் இருந்த நாயகன் வெளியே போக வேண்டி இருக்கிறது.சில தினஙகளில் வந்து விடுவேன் என்று சொல்லி விட்டுச்செல்கிறான்

போனவன் போலீசில்மாட்டி ஜெயிலுக்குப்போகிறான்.


இந்த விபரஙகள் எதுவும் நாயகனின் மனைவி ஆகிய நாயகிக்குத்தெரியாது

விடியல் வரும் விடியல் வரும்  என்று மக்கள் காத்திருப்பது போல நாயகியும் 3 வருடங்களாகக்காத்திருக்கிறாள்.


நாயகனிடம் பணப்பையைத்தொலைத்த வில்லன் இப்போதுதான் நாயகன் இருப்பிடம் அறிந்து அங்கே வருகிறான்.நாயகனின் வளர்ப்புத்தாய் ஒரு மருத்துவச்சி.

அதனால் வேண்டும் என்றே பாம்புக்கடி பெற்று ஆபத்து என்று அந்த வீட்டில் தங்குகிறான்.


நாயகி தனிமையில் இருப்பதால் அந்த ஏரியா காட்டிலாகா அதிகாரி நாயகி மேல் கண் வைக்கிறான்.

இரண்டு வில்லன்கள் ,நாயகன் ஆகியோரிடமிருந்து நாயகி  தப்பித்தாளா?என்பது மீதித்திரைக்கதை.



நாயகன் ஆக சவுந்தர் ராஜன் நடித்திருக்கிறார்.கெஸ்ட் ரோல் மாதிரிதான்.ஓப்பனிஙகில் 10 நிமிடஙகள் ,க்ளைமாக்சில் 5 நிமிடஙகள் அவ்வளவுதான்.


நாயகி ஆக தேவானந்தா நடித்திருக்கிறார்.இவரது அழகையும் ,இளமையையும் நம்பித்தான் இயக்குநர் படத்தையே எடுத்திருக்கிறார்.


வில்லன் ஆக சந்தோஷ தாமோதரன்  கச்சிதமாக நடித்திருக்கிறார்.இவருக்கு படம் முழுக்க நடிக்க நல்ல வாய்ப்பு.


அழகர் சாமியின் குதிரை புகழ் அப்புக்குட்டி ஒரு ரோலில் வருகிறார்.நல்ல நடிப்பு.

படத்தில்  நாயகன் ,நாயகி,வில்லன் ,ஆபீசர்,அப்புக்குட்டி ,அவர் மனைவி  என மொத்தம் ஆறே கேரக்டர்கள்.


வர்கீஸ் இசையில் பாடல்கள் சுமார் ரகம்.

பின்னணி இசை பரவாயில்லை.ஒளிப்பதிவு ராமச்சந்திரன்.படத்தின்  ஒரே பிளஸ் ஒகிப்பதிவுதான்.அருவி ,கானகம் எல்லாம் ரம்மியம்.

கதை,திரைக்கதை இயக்கம்  அனில் குமார்.


சபாஷ்  டைரக்டர்

1 இந்த டப்பாப்படத்தின் கதையை சொல்லி தயாரிப்பாளரை நம்ப வைத்தது.

2 சர்வதேசப்பட விழாக்களில் இந்தக்குப்பைப்படத்தைத்திரையிட வாய்ப்புப்பெற்றது


 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 நாயகன் பணம் ,நகையை வீட்டிலேயே வைத்து விட்டு வெளியே போகக்காரணம் சொல்லப்படவில்லை.

2 போலீசில் மாட்டிய நாயகனை போலீஸ் நகை எங்கே?என விசாரிக்கவில்லையா? வீட்டுக்கு வந்து செக் பண்ண மாட்டார்களா?

3  வில்லன் ஒரு மாங்கா மடையனாக இருக்கிறான்.ஒரு விஷப்பாம்பை வலிய வந்து கடிக்க வைப்பது ரிஸ்க் இல்லையா?

4 அந்த மருத்துவச்சி தான் பார்க்கும் வைத்தியத்துக்கு யாரிடமும் கட்டணம் வாங்குவதில்லை.பின் வாழ்க்கை நடத்தப்பணம் ஏது?

5 மருத்துவச்சி கொலையான பின் நாயகி சாப்பாட்டுக்கு என்ன செய்கிறாள்?


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சர்வதேசப்பட விழாக்களில் திரையிடப்படும் படஙகள் பெரும்பாலும் டப்பாப்படமாக இருப்பது ஏனோ? ரேட்டிங்க் 2/5