Showing posts with label HIS AND HERS (2026)-ஆங்கிலம்/தமிழ் -வெப் சீரிஸ் விமர்சனம். Show all posts
Showing posts with label HIS AND HERS (2026)-ஆங்கிலம்/தமிழ் -வெப் சீரிஸ் விமர்சனம். Show all posts

Saturday, January 10, 2026

HIS AND HERS (2026)-ஆங்கிலம்/தமிழ் -வெப் சீரிஸ் விமர்சனம் (க்ரைம் திரில்லர்)@நெட் பிளிக்ஸ்

               

      8/1/2026 முதல் நெட் பிளிக்சில் வெளியான இந்த மினி வெப் சீரிஸ் மொத்தம் 6 எபிசோடுகள் கொண்டது.ஒவ்வொரு எபிசோடும் சராசரியாக 40 நிமிடங்கள் (39-42)ஆக மொத்தம் 240 நிமிடங்கள்.4 மணி நேரம் தேவைப்படும்.பெண்கள் விரும்பிப்பார்க்கும் அளவு க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் செண்ட்டிமெண்ட்டுடன் இருக்கும்     


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு டிடெக்டிவ்.நாயகி ஒரு டி வி சேனலில் ரிப்போர்ட்டர்.இருவருக்கும் ஒரு குழந்தை இருக்கிறது.நாயகனுக்கு ஒரு தங்கை இருக்கிறாள்.நாயகிக்கு அம்மா இருக்கிறார்.அல்சைமர்  நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் அவரை  நாயகனும் , நாயகியும் அவ்வப்போது வந்து பார்த்து விட்டு  செல்வார்கள்.

ஒரு நாள் இரவு நாயகியின் ஸ்கூல் மேட் கொலை செய்யப்படுகிறாள்.40 முறை கத்தியால் குத்தப்பட்டு பிணமாக இருக்கிறாள்.இவ்வளவு கோபமாகக்கொலை செய்ய வலுவான காரணம் இருக்கும் என போலீஸ் சந்தேகிக்கிறது.


இந்தக்கேசை நாயகன் ஒரு பக்கம் விசாரிக்கிறான். தன் டி வி சேனல் டி ஆர் பி எகிற நாயகியும் இன்னொரு பக்கம் விசாரிக்கிறார்.


நாயகி தன் உடன் பணியாற்றும் சக ஊழியருடன் கள்கத்தொடர்பு வைத்திருக்கிறார்.காரணம் நாயகியின் கணவன் ஆன நாயகன் நாயகியின் தோழியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதால்.


இது ஒரு வித்தியாசமான பழி வாங்கும் கதையாக இருக்கிறதே என நினைக்கும்போது  மேலும் ஒரு ட்விஸ்ட். அந்தத்தோழி கொலை செய்யப்படுவதற்கு சில மணி நேரம் முன்பு  தான் நாயகன் அவளுடன் நெருக்கமாக இருந்திருக்கிறான்.


இதனால் நாயகி நாயகனை சந்தேகப்படுகிறாள்.நாயகனோ இறந்து போன பெண்ணின் கணவனை சந்தேகப்படுகிறான்.


கதையில் அடுத்த ட்விஸ்ட் இன்னும் ஒரு கொலை நடக்கிறது.இவளும் நாயகியின் இன்னொரு ஸ்கூல் மேட் தான்.இப்போது நாயகன் நாயகியை சந்தேகப்படுகிறான்.

அடுத்த ட்விட்ஸ்ட் நாயகனின் தங்கையும் ,நாயகியும் முன்னாள் ஸ்கூல் மேட்.அவளும் கொலை செய்யப்படுகிறாள்.

இந்தக்கொலைகளை செய்யும் சீரியல் கில்லர் யார்?  என்பதை நாயகனின் அசிஸ்டெண்ட் ஆன லேடி போலீஸ் ஆபீசர் கண்டு பிடிக்கிறார்.அது தான் மீதித்திரைக்கதை


நாயகன் ஆக டிடெக்ட்டிவ் வேடத்தில்  ஜான் பெர்ந்தால் சிறப்பான நடிப்பு.நாயகி ஆக டிவி ரிப்போர்ட்டர் கேரக்டரில் தேசா தாம்சன் கலக்கி இருக்கிறார்.நாயகியின் இளமைப்பருவத்தில் டீன் ஏஜ் பெண்ணாக கிரிஸ்டன் மேக்ஸ்வெல் கெஸ்ட் ரோலில்  வருகிறார்.

நாயகியின் அம்மாவாக கிரிஸ்டல் பாக்சின் நடிப்பு அபாரம்.

மேக் க்வாலே தான் இசை.பின்னணி இசை நல்ல விறுவிறுப்பு.

திரைக்கதை அலைஸ் பீனி..இயக்கம் வில்லியம்


சபாஷ்  டைரக்டர்

1 நாயகன் ,நாயகி இருவருக்கும் என்ன  பிரச்சனை என்பதை நான் லீனியர் கட்டில் சொன்னது


2 நாயகியின் ஸ்கூல் போர்சன் கதை தமிழில் வந்த விசில்,சினேகிதியே ஆகிய படஙகளை நினைவுபடுத்தினாலும் அதில் ஒரு ட்விஸ்ட் அபாரம்

3  கொலைகாரன் இவன் என போலீஸ் கைது செய்த பின் அரை மணி நேரம் கழித்து வரும் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் அபாரம்.


4 பிரமாதமான வசனஙகள் பெரிய பிளஸ்

5 நாயகி அவளது தோழிகள் ஐவர் அனைவரையும் விட நாயகனின் அசிஸ்டெண்ட் ஆக வரும் லேடி போலிஸ் ஆபீசர் அபார அழகு.இந்திய சாயல்

  ரசித்த  வசனங்கள் 

1.  எல்லாக்கதைகளுக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கு.யாரோ ஒருவர் பொய் சொல்வார்

2 என்னது?டிடெக்டிவை உனக்குத்தெரியுமா?எப்படி

அவன் தான் என் புருசன்

3  செலிபிரிட்டியின் மனைவி க்குக்கிடைக்கும் புகழ் கூட ஒரு சிறை தான்.எங்கே போனாலும் மக்கள் சூழ்ந்துக்குவாங்க

4  மனைவியைக்கூடக்கண்டுபிடிக்க முடியாத டிடெக்ட்டிவ் நீ

5  முன் பின் பழக்கமில்லாதவஙக கூட உறவு வைத்துக்கொள்வதுதான் நல்லது.பாதுகாப்பானது.

6 காணாமப்போன பெண் கொலை ஆகி விட்டால் முதல் சந்தேகம் அவள் கணவன் மீதோ ,காதலன் மீதோ தான் வரும்


7  உலகத்துக்கு நாம் காட்டும் முகத்துக்குப்பின்னால தான் நம் உண்மையான முகம் மறைஞசிருக்கும்


8  கெட்ட விஷயம் நடக்கும்போது அதெல்லாம் தானாத்தான் நடக்குதுன்னு நினைப்போம்.ஆனா நமக்கு அவை ஒரு பரிமாணத்தைக்கொடுத்திருக்கும்


9.நமக்குக்கெட்டது நடக்கும்போது நாமும் மத்தவங்ககுக்கெடுதல் செய்யனும்னு தோணும்


10 எல்லாருக்கும் எப்பவாவது உதவி தேவைப்படலாம்

11  காலம் எல்லாக்காயங்களையும் ஆற்றி விடும் என்பதை நம்பாதீஙக,அது சில சமயம் மேலும் மோசமாக்கும்.


12 நாம் செய்யும் ஆபத்தான விஷயமே  மத்தவங்க கிட்டேயும் ,நம்ம கிட்டேயும் நாம் சொல்லும் பொய்கள் தான்

13  நம்ம வாழ்க்கையை முழுசா வாழ  கடந்த காலத்தை நாம் சமாதானப்படுத்தி இருக்கனும்


14  அவஙக எதிர்காலத்திட்டம் தெரிய அவஙக கடந்த காலம் தெரிஞ்சிருக்கனும்


15 கோபம் யாருக்குப்பிடிச்சிருக்கோ அவஙகளை அது காயப்படுத்தும்


16  நாம ஏதாவது செய்யனும்னு நினைச்சு வெச்சிருந்தா அதை செஞ்சு முடிச்சிடனும்

17ஒரு விஷயத்தை த்தொடர்ந்து செஞ்சுட்டு இருந்தா அது நமக்குப்பழக்கம் ஆகிடும்


18 கோபம் சில சமயம் உங்களைப்பாதுகாக்கவும் செய்யும்


,19 உழைக்கும் வர்க்கத்தைப்பலர் மறப்பது போல் வயோதிகர்களையும் மறப்பாங்க

20 உண்மை நம்ம கண்ணுக்கு முன்னால இருந்தாலும்  நாம் பார்க்க விரும்புவதுதான் நம் கண்ணுக்குத்தெரியும்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 நாயகனின் தங்கை கொலை செய்யப்படும்போது பாத் ரூம் கதவு உள் பக்கம் தாளிடப்பட்டிருக்கு.நாயகன் கதவை உடைத்துத்தான் வருகிறான்.கொலைகாரன் எப்படி வெளியேறினான்?

2  உண்மையான கொலையாளியை போலீஸ் கைது செய்யவில்லை.தவறாகப்பிடிக்கப்பட்டவன் உண்மை சொல்லி இருப்பானே?


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்:-18+ முதல் எபிசோடில் மட்டும்



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மிஸ்ட்ரி திரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம் ,பெண்களுக்கும் பிடிக்கும்,ரேட்டிங்க்பிளஸ்


His & Hers
Release poster
GenreMystery thriller
Based onHis & Hers by Alice Feeney
Developed byWilliam Oldroyd
ShowrunnerDee Johnson
Starring
Music byMac Quayle
Country of originUnited States
Original languageEnglish
No. of episodes6
Production
Executive producers
Cinematography
  • Ante Cheng
  • Doug Emmett
Editors
  • William Henry
  • Daniel Valverde
  • Adam Epstein
Running time39–47 minutes
Production companies
Original release
NetworkNetflix
ReleaseJanuary 8, 2026