Showing posts with label DRIVE(2025)- தெலுங்கு/தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label DRIVE(2025)- தெலுங்கு/தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts

Thursday, January 08, 2026

DRIVE(2025)- தெலுங்கு/தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் ஆக்சன் ரிவஞ்ச் திரில்லர்)@அமேசான் பிரைம்

                 

        மிருகம்,அரவாண் புகழ் ஆதி நடித்த தெலுங்குப்படமான இது    12/12/2015 முதல் திரை அரஙகுகளில் வெளியாகி இப்போது அமேசான் பிரைம் ஓடி டி யில் காணக்கிடைக்கிறது


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு மல்ட்டி மில்லியனர்.மிகப்பெரிய மீடியா நெட் ஒர்க் வைத்திருக்கிறார்.திருமணம் ஆகி ஒரே ஒரு சம்சாரம் ,ஒரு குழந்தை இருக்கு.இவர் தன் அப்பாவின் சொத்தைப்பராமரிக்கிறார்.


இவரோட மொத்த நெட் ஒர்க் பிஸ்னெஸ்சையும் வேறு ஒருவருக்கு விற்க  ஏற்பாடுகள் எல்லாம் பண்ணிட்டார்.அந்த டீலிங்க் முடிந்தால் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் அவருக்கு.

இப்போது நாயகனுக்கு ஒரு போன் கால் வருகிறது.வில்லன் நாயகனை மிரட்டுகிறான்.நான் சொல்றபடி எல்லாம் நீ கேட்கனும்.இல்லைன்னா நடப்பதே வேற.உன் போன் ,லேப் டாப் எல்லாத்தையும் ஹேக் பண்ணி வெச்சிருக்கேன்.

நீ ஒரு பெண்ணுடன் அந்தரங்கமாக இருந்த போட்டோஸ் கை வசம் இருக்கு.நீ டீலிங்க் பேசுன நெட் ஒர்க் பிஸ்னெஸ் கை மாற்றும் விஷயம் வெளில வந்தா என்ன ஆகும்?

என மிரட்டுகிறான்.நாயகனால் எதுவும் செய்ய முடியவில்லை.நாயகன் என்ன செய்தாலும் வில்லனுக்குத்தெரிந்து விடுகிறது.


வில்லன் யார்? நாயகனை எதற்காகப்பழி வாங்குகிறான்?நாயகன் வில்லனை எப்படி டீல் செய்கிறான் என்பதே மீதிக்கதை


நாயகன் ஆக ஆதி ஜம் என்று இருக்கிறார்.கோட் சூட் டை + கனடா லொக்கேசன் என கலக்குகிறார்.எதுவும் செய்ய முடியாத கையறு நிலையை முகத்தில் நன்கு வெளிப்படுத்துகிறார்.

நாயகி ஆக  மடோனா செபாஸ்டின் அதிக வேலை இல்லை.

படம் பூரா மாஸ்க் போட்டு வருவதால் வில்லனுக்கும் முகம் கடைசி வரை இல்லை.பாகம் 2 க்கான லீட் இருப்பதால் க்ளைமாக்சில் காட்டுகிறார்கள்.

நடித்த மற்ற அனைவர் நடிப்பும் கச்சிதம்.

நாகா சாய் திரைக்கதை எழுத ஜெனுஸ் மொஹமத் இயக்கி இருக்கிறார்.

ஒளிப்பதிவு அபினந்தன் ராமானுஜம்.முழுக்க முழுக்க பாரீன் லொக்கேசன் என்பதால் நல்ல கிளாரிட்டி.

இசை ஓசோ வெங்கட்.பின்னணி இசை டெம்ப்போ ஏற்றுகிறது.

பிரவீன் படி யின் எடிட்டிங்கில் படம் 128 நிமிடஙகள் ஓடுகிறது.


சபாஷ்  டைரக்டர்

1 தொய்வே இல்லாமல் படம் முழுக்க நாயகன் ஓடிக்கொண்டே இருப்பதால் போர் அடிக்கவில்லை

2 பிளாஸ்பேக் போர்சனில் வில்லன் பக்கம் இருக்கும் நியாயம் நாயகனை வில்லன் ஆக்கும் ட்விஸ்ட்


  ரசித்த  வசனங்கள் 

1  சட்டத்துக்குப்புறம்பாகப்பொருளாதாரக்குற்றம் புரிந்தால் ஓடி ஒளியப்பாதுகாப்பான இடம்  லண்டன் தான்.அதான் விஜய் மல்லய்யா,லலித் மோடி எல்லாரும் அங்கே எஸ்கெப்

2  நான் ஒருத்தன் இருக்கறப்போ உனக்கு எதுக்கு  இத்தனை எதிரி?

3 கடவுளைப்பிரார்த்திப்பது என்றால் இப்பவே செஞ்சுக்கோ.ஏன்னா பின் அதுக்குக்கூட உனக்கு டைம் கிடைக்காது.


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 வில்லனின் பிளாஸ்பேக்கில் ஸ்கூல் ஸ்டூடண்ட் ஆன வில்லனின் தம்பி நாயகனால் கேலி ,கிண்டலுக்கு ஆளாகி தற்கொலை செய்வதை இன்னமும் அழுத்தமான  காட்சியில் காட்டி இருக்க வேண்டும்


2 வில்லனின் அப்பாவை. நாயகனின் போலீஸ் நண்பன் ரவுண்ட் அப் பண்ணி லாக் செய்வதை விஷூவலாகக்காட்டவில்லை


3 வில்லனின் பக்கம் நியாயம்  இருப்பதால் நாயகன் ஜெயிக்க வேண்டும் எனற எமோஷனல் கனெக்ட். ஆடியன்சுக்கு ஏற்படவில்லை

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  டி வி ல போட்டி பார்க்கலாம்.சுமார் ரக திரில்லர். ரேட்டிங் 2/5