ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஐ டி கம்பெனியில் வேலை செய்பவன். வாரா வாரம். தன் நண்பர்களுடன் சேர்ந்து டூர் போய் சரக்கு அடித்து விட்டு வருபவன்
இந்த முறை ஒரு மாறுதலுக்காக விலை மாது ஒருவரை அழைத்துக்கொண்டு செல்லலாம் என முடிவெடுத்து கூகுளில் (!!) தேடி போன் நெம்பர் கண்டுபிடித்து போன் செய்கிறான்.
நாயகி ஒரு விலை மாது.தன் அம்மாவுடன் வசித்து வருபவர்.அம்மா தான் புரோக்கர்.இப்படிப்பட்ட நல்ல குடும்பத்தில் பிறந்த நாயகி நாயகன் + அவனது நண்பர்கள் உடன் காம்போ பேக்கேஜ் ரேட் பேசப்பட்டு அனைவரும் ஊட்டி போகின்றனர்.
நாயகன் திடீர் என நாயகி மீது காதல் வசப்படுகிறான்.நண்பர்களுக்கு சரக்கு ஊற்றிக்கொடுத்து அவர்களை மட்டை ஆக்கி நாயகியுடன் ஊர் சுற்றுகிறான்.
2 நாட்கள் எதுவும் நடக்கவில்லை.திடீர் என நாயகியின் முன்னாள் கஸ்டமர் வந்து நாயகியிடம் தகறாரு செய்கிறான்.
அடுத்த நாள் நாயகி காணாமல் போகிறாள்.நாயகனின் நண்பன் ஒருவன் கொலை செய்யப்பட்டுக்கிடக்கிறான்.
போலீஸ் வருகிறது.என்ன நடந்தது?யார் குற்றவாளி? என்பதைக்கண்டுபிடிப்பதுதான் மீதிக்கதை.
நாயகன் ஆக ஸ்ரீகாந்த் ரோஜாக்கூட்டம் காலத்து ஆள் போலவே யங்க் ஆக இருக்கிறார்.நாயகியிடம் உருகும்போது நல்ல நடிப்பு.
நாயகி ஆக சிருஷ்டி டாங்கே இளமை அழகுடன் வருகிறார்.நடிக்க அதிக வாய்ப்பில்லை.
போலீஸ் ஆபீசர் ஆக ஜான் விஜய் வழக்கம் போல் ஓவர் ஆக்டிஙக் செய்கிறார்.
நண்பர்கள் ஆக வருபவர்கள் எடுபடவில்லை
எஸ் மணிபாரதி தான் திரைக்கதை ,இயக்கம்.
தாஜ் நூரின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்.பின்னணி இசை எடுபடவில்லை.
ஒளிப்பதிவு கோகுல் நாயகிக்கு க்ளோசப் ஷாட் வைப்பதில் பாஸ் மார்க்.
2 மணி நேரம் படம் ஓடுகிறது.
சபாஷ் டைரக்டர்
1 சி செண்ட்டர் ஆடியன்சைக்கவர்வது போல போஸ்டர் டிசைன்,டைட்டில் ரெடி செய்தது
2 நாயகியின் அழகை நம்பி திரைக்கதையில் கோட்டை விட்டது
ரசித்த வசனங்கள்
1 இந்த கேக் எனக்குப்பிடிக்கும்னு உங்களுக்கு எப்படித்தெரியும்?
நமக்குப்பிடிச்சவஙகளுக்கு என்ன பிடிக்கும்னு பிடிச்சவஙகளுக்குத்தெரியாதா?
2 குடியும் குடித்தனமுமா இருந்தோம்,இனி குட்டியும் ,குடித்தனமுமாய் இருப்போம்
3 மாவு ருசியா இருந்தா பணியாரமும் ருசியா இருக்கும்.அம்மா நல்லாருந்தா பொண்ணு நல்லாருக்கும்
4 பர்ஸ்ட் நைட்ல ஏன் ஸ்வீட் வைக்கறாங்க தெரியுமா? ஸ்வீட் சூட்டைக்கிளப்பி விடும்
5 வாவ்..தூக்குது
என்னது?
வாசனை
6 காதலுக்காகக்காத்திருப்பதும் ,காமத்துக்காகக்காத்திருப்பதும் தனி சுகம்
7 கூகுள் இப்போ மாமா வேலை எல்லாம் பார்க்குதா?
8 ஐ டி கம்பெனில ஒர்க் பண்றியா?ஐட்டம் கம்பெனில ஒர்க் பண்றியா?
9 குடிக்கறதுக்காக குடிச்சுக்கிட்டே ஒரு பிளானா?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஓங்கி ஒரே அறை விட்டதும் நாயகி இறப்பது சினிமாக்களில் தான் சாத்தியம்
2;நாயகி இறந்து பல நாட்கள் ஆகியும் புது டிரசுடன் அழகாக இருப்பது எப்படி?மேக்கஒ கூட கலையலை
3 பாரஸ்ட் ஆபீசரை ஜான் விஜய் மரியாதை இல்லாமல் பேசுவது எப்படி?
4 ஹாலிவுட் படமான பிரட்டி விமன் பாதிப்பில் எடுத்தாலும் ஆடியன்சுடன் கனெக்ட் ஆகவில்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - டி வி ல போட்டாக்கூடப்பார்க்க முடியாத டப்பாப்படம்.விகடன் மார்க் யூகம் 38.குமுதம் ரேங்க் சுமார்.ரேட்டிங்க் 1.5/5
