Friday, June 02, 2023

RAGHAVENDRA STORES ( 2023)- கன்னடம் - சினிமா விமர்சனம் ( காமெடி மெலோ டிராமா) @ அமேசான் பிரைம்

 


 தமிழில்  இந்த  காமெடிp  படம்  ரீமேக்  செய்யப்பட்டால்  கே  பாக்யராஜ்  அல்லது எஸ் ஜே  சூர்யா  அல்லது  லிவிங்க்ஸ்டன்  நடித்தால்  மேட்ச்  ஆக  இருக்கும். டைட்டிலை  நான்  முதலில்  ராகவேந்திரா ஸ்டோரீஸ்  என  தவறாக  உச்சரித்து ஏதோ ஸ்ரீ  ராகவேந்திரர் ஸ்வாமிகள்  நீதி  போதனைக்கதையோ  என  ஸ்கிப்  செய்து  விட்டேன், ஆனால்  இது  முழுக்க  முழுக்க  ஒரு  காமெடி  எண்ட்டர்டெய்னர் , அடல்ட்   காமெடி டயலாக்ஸ்  இருப்பதால் சிறுவர்கள்  தவிர்க்கவும் 


  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் 40 +  வயதான  முரட்டு  சிங்கிள் . அவரது  அப்பா  நடத்தும்  ஹோட்டலில் சமையல் காரராக  இருக்கிறார். இவருக்கு  இன்னும்  திருமணம்  ஆகவில்லை . பல  பெண்கள்  பார்த்தும்  ஏதோ  சில  காரணங்களால்  இவருக்கு  திருமணம்  தள்ளிப்போய்க்கொண்டே  இருக்கிறது 


நாயகி 35+  வயதான  முதிர்  கன்னி . இவருக்கு  வேறு  ஒரு  சொட்டைத்தலையனுடன்  மேரேஜ்  ஃபிக்ஸ்  ஆகிறது. அந்த  மேரேஜ்  ஃபங்க்‌ஷனில்  நாயகன்  அண்ட்  கோ  தான்  குக்  இன் சார்ஜ், அந்தத்திருமணம்  திடீர்  என  நாயகியின்  சம்மதம்  இன்மையால்  நின்று  போகிறது 


 நாயகனுக்கும், நாயகிக்கும் பல  சிரமங்களுக்கு  இடையே  திருமணம்  ஆகிறது . ஆனால்  அதில்  ஒரு  சிக்கல் . நான்கு  நாட்கள்  தோஷம்  இருப்பதால்  சாந்தி  முகூர்த்தம்  தள்ளிப்போகிறது . அடுத்து  நாயகிக்கு  3  நாட்கள்  லீவ், அடுத்த  தடை  நாயகியின்  அம்மாவுக்கு  உடல்  நிலை  சரி  இல்லாமல்  ஹாஸ்பிடல்  அட்,மிட்  ஆக  நேரிடுகிறது. இது  மாதிரி  தொடர்  பிரசனைகளால்  துக்கப்பட்டு , துயரப்பட்டு  படம்  முழுக்க நாயகன்   படும் அல்லல்கள்  தான்  முழுக்கதையே 


நாயகன்  ஆக  ஜக்கேஷ் ஒரு  முதிர் கண்ணனின்  பிரச்சனைகளை   காமெடியாக  வெளிப்படுத்தும்  இடங்களில்  கைதட்டல்  பெறுகிறார் இவரது  டயலாக்  டெலிவரியும், முக  பாவனைகளும் , சேஷ்டைகளும்  அருமை 


நாயகி  ஆக   ஸ்வேதா பாத்திரத்தின்  தன்மை  உணர்ந்து  காமெடி  க்ளப்பில்  சேர்ந்து  விட்டார்.கண்னாடி  அணிந்திருக்கும்போது  இது  நம்ம  ஆளு  ஷோபனா  நினைவில்  வருகிறார்


ஹோட்டல்  பணியாள்:ஆக  வரும்   மித்ரா வின் காமெடி  டிராக்  கலக்கல்  ரகம். அரசியல்வாதியாக  வரும்  அச்யூத்  குமார்  படத்தில் தேவை  இல்லாத  ஆணி 


2  பாடல்கள்  கேட்கும்படி  இருக்கின்றன.104  நிமிடங்கள்  ஓடும்  இப்படம் முதல் 75  நிமிடங்கள்  நான்  ஸ்டாப்  காமெடியாகப்போகிறது . திடீர்  என  டிராக்  மாறி  நாயகிக்கு  குழந்தை  பிறக்க  வாய்ப்பில்லை , வாடகைத்தாய் , தத்து  என  சீரியஸ்  லைனுக்கு  திரைக்கதை  போகிறது. க்ளைமாக்சில்  தேவை  இல்லாமல்  அரசியல்  ட்ராக்  வேறு  வருவது  எரிச்சல் 


சபாஷ்  டைரக்டர்

1  வாய்  பேச  முடியாத பணியாளரின் பெண்  பாக்கும்  வைபவத்தில்  நாயகன்  மீடியேட்டராக  மாப்பிள்ளை - பெண் இருவருக்கும்  நடுவே  அமர்ந்து  துபாஷ்  ஆக  வேலை  பார்க்கும்  காமெடி  டிராக்  கொஞ்சம்  டபுள்  மினிங் ஆக  இருந்தாலும்  ரசிக்க  வைத்தது 

2  பெண்  பார்க்கப்போன  இடத்தில்  கரண்ட்  கட்  ஆக  மெழுகுவர்த்தியுடன்  வரும்  பெண்ணை  மாப்பிள்ளை  டீல்  செய்யும் காமெடி  சீன் 

3  ஹாஸ்பிடலில்  படுத்திருக்கும்  மாமியார்  மாப்ளையிடம்  மாப்ளை  என்னால  உங்களுக்கு  சிரமம் தானே? சாரி  என  அடிக்கடி  சொல்லி  கடுப்பேற்றும்  காட்சி  காமெடி  கலக்கல் 

4 ஹாஸ்பிடலில்  எம்ப்ட்டி  வார்டு  இருக்கு , நீங்க  இங்கே  வந்துடுங்க  என  நர்ஸ்  தன்  கணவனுக்கு  ஃபோன்  பண்ணியதைக்கேட்ட  நாயகன்  அந்த  எம்ப்ட்டி  வார்டை  தேடி  அலையும்  காட்சி 



 ரசித்த  வசனங்கள் 


1  சமையல்  வேலையைக்கேவலமா  நினைச்சா  அம்மா  சமைச்சதுக்கு  அர்த்தமே  இல்லாம  போயிடும் 


2  புருசன்  உயிரோட  இருக்கும்போது  சம்சாரம்  அழுதா அங்கே  புருசன்  வில்லன்னு  அர்த்தம் , புருசன்  செத்த  பின் சம்சாரம்  அழலைன்னா  இங்கே  சம்சாரம்  வில்லினு  அர்த்தம்


3  நான்  அந்த  விதவைக்கு  வாழ்க்கை  கொடுக்கலாம்னு  இருக்கேன்


 டூ லெட்  அங்கெ  பந்தியைப்பாரு,அவளுக்கு  ஒருத்தன்  வாழைப்பழம்  கொடுத்துட்டான் 


4  அந்தாளோட  வாய்ஸ்...

அது  வாய்ஸ்  இல்லை , நாய்ஸ்  (noise)


5   நான்  மேரெஜ்  ஆகாதவன் தான், ஆனா  மேரேஜ்  ஆனவன்  கஷ்டம்  தெரிஞ்சவன்


6   மாப்ளைக்கு  வாய்  பேச  வராதுனு  எப்படி   எப்படி  யோ  பொண்ணு  கிட்டே  சொல்ல  ட்ரை  பண்ணுனேன், ஆனா  அவளுக்குப்புரியல 


 எப்படிப்புரியும்,? பொண்ணுக்குக்காது  டமாரம் 


7   ஒரு  மகன்  தன் அப்பா  கிட்டே பைக்  வாங்கிகொடு , கார்  வாங்கிக்கொடுனு  கேட்கலாம், பொண்ணு  பார்த்து  கட்டி  வைனு  கேட்க  முடியுமா? 


8  ஜோசியரே! இவனுக்கு  இன்னும்  மேரேஜ்  ஆகலை, மேரேஜ்க்குப்பின்  இவன்  சந்தோஷமா  இருப்பானா?


 மேரேஜ்  பண்ணிக்கிட்ட  எந்த  ஆம்பளை  சந்தோஷமா  இருந்திருக்கான் ? 


9  பொண்ணுக்கு  எந்த  சீரும்  மாப்ளை  செய்யத்தேவை  இல்லை , பொண்ணோட  குழந்தையை  மட்டும்  நல்லாப்பார்த்துக்கிட்டாப்போதும்

 ஹலோ, தரகரெ!  பந்தக்கால்  நான்  போடற  மாதிரி  இடம்  பாருங்க , ஆல்ரெடி கட்டுன  பங்களா  எனக்கு  வேண்டாம் 


10 மாமா ,  எனக்கு  இந்தப்பொண்ணு  ஓக்கே 


 யோவ் , இது  பொண்ணோட  அத்தை 


11  கெட்டிச்சட்னி  வேணுமா?  காரசட்னி  வேணுமா?


கெட்டிச்சட்னி 


கெட்டிச்சட்னி   இல்லை,காரசட்னி  தான்  இருக்கு 


 டீ  வெணுமா? காஃபி  வேணுமா?


 டீ 

  சாரி , காஃபி தான்  இருக்கு 


12  100%  பர்ஃபெக்ட்  ஆன  ஆண்  இந்த  உலகத்துலயே  இல்லை , அப்படி  பர்ஃபெக்ட்  ஆன  ஆள்  கூடத்தான்  மேரேஜ்னா  உனக்கு  லஃப்  லாங்க்  மேரேஜே  நடக்காது 


13   டியர் , உங்களைப்பார்த்தா  வயசான  ஆள்  மாதிரியே  தெரியல . யங்காதான்  இருக்கீங்க 


 நீ கூட  பார்க்க  36  வயசு  ஆன  பெண்  மாதிரி  இல்லை . 35  ஆன  மாதிரி தான் இருக்கே 


14  லேட்டா  மேரேஜ்  ஆகறது தப்பில்லை . முன்  கூட்டியே  மேரேஜ்  ஆகி   சீக்கிரமா  டைவர்ஸ்  ஆவதுதான்  தப்பு 

15  ஹலோ , மாப்ளையா? கல்யாண  முகூர்த்தத்துக்கு  வர  முடியலை , வாழ்த்து  சொல்ல  சாந்தி  முகூர்த்தத்துக்கு  கரெக்ட்  டைம்க்கு  வந்துடறேன்


அய்யோ

 சும்மா   தமாசு 


16    எனக்கு  மேரேஜ்  ஆகி  2  நாட்கள்  முடிஞ்சுது , நாலு  நாள்  எதுவும்  கிடையாதுனு  சொல்லிட்டாங்க . உனக்கு  மேரேஜ்  ஆகி  2  மாசம் தான்  ஆகுது , ஆனா  மூணு  மாசம்   கர்ப்பம், இது  எப்படி ? குற்றம்  நடந்தது  என்ன? 


17   உனக்கு  ஆல்ரெடி  40  வயசு  க்ராஸ்  ஆகிடுச்சு, இனி  என்ன  செய்யப்போறே?


 அவனவன்70  வயசுல  கூட  பர்ஃபார்ம்  பண்றான்

 அப்போ  70  வயசு  ஆகும் வரை  வெயிட்  பண்ணப்போறியா?

18   நம்ம  ஹோட்டலுக்கு  3  நாட்கள்  லீவ்  விட்டுட்டேன் , எப்பூடி 


 சாரி , நானும்  மூணு  நாள்  லீவ்


19  ஹலோ ,  மாப்ளையா? எல்லாம்  முடிஞ்சுதா?


 ஸ்கெனிங்  நடந்துட்டு  இருக்கு 


 இன்னுமா?

 அடேய், மாமியாருக்கு  உடம்பு  சரி  இல்லை , அந்த  ஸ்கேனிங்


20  லொக்  லொக்


 ஏதோ  சத்தம்  கேட்குதே?

  தெரு  நாய்  தான்  குலைக்குது


 இல்லையே , எங்கம்மா  இருமற  மாதிரி  இருக்கு ?


 ஓ  அந்த  நாயா? 


21   டேய்.. நீ  ஹனிமூன்  க்கு  அங்கே  போகப்போறதை  ஏன்  என் கிட்டே  சொல்லலை ?


 ஸ்கூலில்  படிக்கும்போது  ஸ்கூல்  சரி  இல்லைன்னா  ட்யூஷன்  படிக்க  வைங்கனு  கேட்கலாம் , ஹனிமூன்க்கு  வீடு   சூட்  ஆகலை , ரூம்  புக்  பண்ணிக்கொடுங்க , ஹோட்டலுக்குப்போய்  பார்த்துக்கறோம்னு  எப்படி  சொல்ல  முடியும் ?


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகி  திருமண  மேடையில்  மணப்பெண்  அலங்காரத்துடன்  வந்து  தன்  அம்மாவிடம்  எனக்கு  இந்த  கல்யாணத்தில்  இஷ்டம்  இல்லை எனக்கூறி பளார்  என  அறை  வாங்கும்  காட்சி  டி வி  சீரியல்  பார்ப்பது  மாதிரி  செயற்கையா  இருக்கு, ஏன்  முதலிலேயே  அதைக்கூறவில்லை ? 

2 முழு  நீள  காமெடிப்படம்  போல்  எடுத்திருந்தால்  செம  ஹிட்  அடிச்சிருக்கும்,. தேவை  இல்லாமல்  பின்  பாதியில்  செண்ட்டிமெண்ட்ஸ்  சீன்களை   வலுக்கட்டாயமாகத்திணித்தது  பின்னடைவு


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-  கிளாமரான  காட்சிகள்  இல்லை  என்றாலும்  கண்ட்டெண்ட் , வசனங்கள்  18+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   முதல்  ஒன்றே   கால்  மணி  நேரம்  ஜாலியாகப்போகும் ,  கடைசி  25  நிமிடங்கள்  இழுவை ரேட்டிங் 2.75 / 5

Thursday, June 01, 2023

NEELA VELICHAM (2023) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் ஹாரர் டிராமா) @ அமேசான் பிரைம்


வைக்கம்  முகமது  பஷீர்  எழுதிய  நீல  வெளிச்சம்  என்னும்  சிறுகதையைத்தழுவி பார்கவி  நிலையம்  என்னும்  மலையாளப்படம்  1964ல்  ரிலீஸ்  ஆனது , மலையாளத்தில்  ரிலீஸ்  ஆன  முதல்  திகில் படம்  என்னும்  பெருமையைப்பெற்றது . ரிலீஸ்  ஆன  டைமில்  வசூலில்  சக்கை  போடு  போட்ட  படம்  இது.. இதன்  ரீமேக்  தான்  நீல  வெளிச்சம்   


தனது  நீல வெளிச்சம்  சிறுகதையைத்தழுவி  பார்கவி  நிலையம்  என்னும்   படத்துக்கு  திரைக்கதையையும்  அவரே எழுதினார், அப்போது  நிலவு  காணும்போழ்  எனும்  சிறுகதை ,  அனுராகத்திண்டே  தினங்கள்  சுய சரிதை , அனர்கா  நிமிஷம்  ஆகிய  சிறுகதை  அனைத்தில்  இருந்தும் கலந்து  கட்டி  திரைக்கதை எழுதப்பட்டது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு ரைட்டர். தனிமையான  இடத்தில்  தங்கி  கதை  எழுத  ஒரு  கிராமத்துக்கு  வருகிறார். அங்கே  பார்கவி  நிலையம்  என்னும்  வீட்டில்  தங்குகிறார். சாப்பாடு  எல்லாம்    ஹோட்டலில் தான்.


ஊர்  மக்கள்  நாயகனை  விசித்திரமாகவும், பயமாகவும்  பார்க்கின்றனர் ஊர்  மக்கள்  ரைட்டரை  எச்சரிக்கின்றனர். அந்த  வீட்டில்  ஒரு பேய்  நடமாட்டம்  உள்ளது . வேறு  எங்காவது  தங்கிக்கொள்  என்கின்றனர்


 ஆனால்  நாயகன்  கவலைப்படவில்லை . பார்கவிக்குட்டி  என்ற  அந்தப்பெண்ணிடம் ( பேயிடம் ) இவராகப்பேச  ஆரம்பிக்கிறார். முதல்  பாதி  முழுக்க  அந்த அமானுஷ்ய  வீடு , ரைட்டர்  , பூனை , பெருச்சாளி , கதவு  மூடும்  சத்தம்  என  வழக்கமான  பேய்ப்பட  டெம்ப்ளேட்டில்  போகிறது 


ஊர்மக்கள்  சொல்லும்   கதைப்படி  பார்கவி  எனும்  பெண்  ஒருவனைக்காதலித்தாள். ஆனால்  அவன்  அவளை  ஏமாற்றி  விட்டு  ஊரை விட்டே  ஓடி  வேறு  ஒரு பெண்ணைக்கல்யாணம்  செய்து  கொண்டான்  .


ஆனால்  நிஜமான  பார்கவியின்  ஃபிளாஸ்பேக்  கதை . பார்கவி  தன்  வீட்டின்  அருகே  புதிதாகக்குடி  வந்த  நபருடன்  காதல்வசப்படுகிறாள். இருவரும்  காதலிக்கின்றனர். இது  பார்கவியின்  முறை  மாமனுக்குத்தெரிந்து  விடுகிறது . பார்கவியின்  காதலன்  ரயிலில்  சொந்த  ஊருக்குப்போகும்போது  வில்லன்  அவனைக்கொலை செய்து  விடுகிறான்

பிறகு  பார்கவியை  பெண்  கேட்கிறான். பார்கவி  சம்மதிக்கவில்லை ., அவளிடம்  நான் தான்  உன்  காதலனைக்கொன்றேன்  என  சொல்லி  விடுகிறான், ஆனாலும்  பார்கவி பயப்படவில்லை. மணமுடிக்க  சம்மதிக்கவில்லை . கிண்ற்றில்  தள்ளி  பார்கவியைக்கொலை  செய்து  விடுகிறான்  வில்லன்


இதற்குப்பின் வில்லனைப்பழி  தீர்ப்பது  யார்?  நாயகனான  ரைட்டரா? பேய் ஆக  நடமாடும்  பார்கவியா? என்பதுதான்  க்ளைமாக்ஸ் 


நாயகன்  ரைட்டராக  டோவினோ  தாமஸ். கெட்டப்  நன்றாக  உள்ளது, ஆனால்  நடிக்க  பெரிய  வாய்ப்பில்லை . படம்  முழுக்க  தம்  அடித்துக்கொண்டே  இருக்கிறார்

நாயகி  பர்கவியாக  ரிமா  கல்லிங்கல்  அழகு  சிற்பம், தேவதை  என  ஊர்  மக்கள்  கொண்டாடும்  அழகியாக  வருகிறார்.நல்ல  நடிப்பு . ஒரு  சீனில்  கூட  இவர்  பேய்  உருவத்தில்  வராதது  ஆறுதல் 


 பார்கவியின்  முறைமாமனாக  வில்லனாக  ஷைன்  டாம்  சாக்கோ  நல்ல  வில்லத்தனம்  மிக்க  நடிப்பு 


பார்கவியின்  ஃபிளாஸ்பேக்  காதலனாக   ரொஷன்  மேத்யூ  மாறுபட்ட  கெட்டப்பில்  வருகிறார்


கிரிஷ்  கங்காதர்  ஒளிப்பதிவில்  கிணறு  மேலிருந்து  கீழ்  , கீழிருந்து  மேல்  இரு  வகை  ஷாட்களும்  அருமை . இரவில்  நீல  வெளிச்சம்  வரும்  காட்சி  த  அபிஸ்  பட  தாக்கத்தில் எடுத்திருக்கிறார்கள் .சாஜன்  எடிட்டிங்கில்  2  மணி  நேரம் 7  நிமிடங்கள்  படம்  ஓடுகிறது


பேய்ப்படஙளுக்கே  உரிய  திகில்  ஊட்டும்  பின்னணி   இசை நன்றாக  ஸ்கோர்  செய்திருக்கிறார்கள்  இசை  அமைப்பாளர்கள்  இருவரும் 

ஆஷிக்  அபு  இயக்கி  இருக்கிறார். 


  ரசித்த  வசனங்கள் 


1ஒரு ருசியான  சமையலின்  அருமை  சாப்பிட்டவர்களின் பாராட்டில்தான்  தெரிய  வ்ரும்

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 நாயகியை  அடையத்தான்  வில்லன்  அத்தனை  பாடுபடுகிறான், நாயகியின்  காதலனை  கொலை  கூட  செய்கிறான், ஆனால் வீட்டில்  யாரும் இல்லாத  போது  நாயகியை   பலவந்தமாகவோ, மயங்க  வைத்தோ  அடைய  முயலாமல்  நாயகியைக்கொலை  செய்வது  ஏன்?  காதலனுக்கு  விஷம்  கலந்த  பழம்  கொடுக்கத்தெரிந்தவனுக்கு  நாயகிக்கு  அது  போல்  ஏதாவது  கொடுக்கத்தெரியாதா? 

2  கிணற்றில்  நாயகி  விழுந்து  இறந்ததும்  யாரும்  ஏன்  போலீஸ்க்கு  தகவல்  தெரிவிக்கவில்லை ? 

3  முறைமாமன்  வலுக்கட்டாயமாக  பெண்  கேட்டு  தகறாரு  செய்த  சம்பவத்துக்குப்பின்  நாயகியை  வீட்டில்  தனியாக  விட்டு விட்டு  வீட்டார்  ஏன்  வெளியே  சென்றனர் ? 


4  நாயகியின்  காதலன்  வில்லன்  கொடுத்த  விஷம்  கலந்த  பழத்தை  ஏன் சாப்பிடுகிறான்? சந்தேகம்  வராதா?


5   1964 ல்    ரிலீஸ்  ஆன  படத்தை  ரீ  மேக்  செய்யும் போது  இதை  எல்லாம் தூக்கி  சாப்பிட்ட  மணிச்சித்திரதாழ்  மெகா  ஹிட்  ஆனதே , அதே  டைப்  கதை  மீண்டும்  எப்படி  ஒர்க் அவுட்  ஆகும் ?  என  ஏன்  சிந்திக்கவில்லை ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18 +  காட்சிகள்  இல்லை , பேய்  வரும்  சீனும்  இல்லை 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - இது  20  நிமிடகுறும்படமாக  எடுக்க  தகுதி  உள்ள  படம்   ரெண்டு  மணி  நேரம்  ஜவ்வு  இழுப்பு  இழுத்துட்டாங்க . நாயகியின் அழகு , ஒளிப்பதிவு  இரண்டு  மட்டுமே  பிளஸ் .முதல்  பாதி  பொறுமையை  சோதிக்கிறது. பின் பாதி  ஃபிளாஸ்பேக்  கதை  சாதா  காதல்  கதை தான். கடைசி  15  நிமிடங்கள்   மட்டும்  விறுவிறுப்பு . ரேட்டிங்  2 /5 



Neelavelicham
Neelavelicham poster.jpg
Theatrical release poster
Directed byAashiq Abu
Screenplay by
Based onNeelavelicham by Vaikom Muhammad Basheer
Produced by
  • Aashiq Abu
  • Rima Kallingal
Starring
CinematographyGirish Gangadharan
Edited byV. Saajan
Music by
Production
company
OPM Cinemas
Distributed byOPM Cinemas
Release date
  • 20 April 2023[1]
CountryIndia
LanguageMalayalam

Wednesday, May 31, 2023

AYALVAASHI (2023) - -மலையாளம் - சினிமா விமர்சனம் ( காமெடி மெலோ டிராமா ) @ நெட் ஃபிளிக்ஸ்

 


 கும்பாளிங்கி நைட்ஸ் , இளவீளா  பூஞ்சிரா , ரோமாஞ்சம்  உட்பட  பல  படங்களில்  மாறுபட்ட  ரோல்களில்  நடித்த சவுபின் சாஹிர்  நடித்துள்ள  ஒரு  லைட்  ஹார்ட்டட்  ஃபீல்  குட்  காமெடி   மெலோ  டிராமா  வகைப்படத்தில்  நடித்துள்ளார். , இது ஏப்ரல் 21 , 2023  அன்று  திரையரங்குகளில்  வெளியானது . யூ  ட்யூப் பில்  மே 12 , 2023  முதல்  வெளியானது ,, நெட்  ஃபிளிக்ஸ்  ஓ டி டி  யில்  ,மே  19  முதல்  கிடைக்கிறது 

   ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன், அவன்  நண்பன்  இருவரும்  பக்கத்து  பக்கத்து  வீட்டுக்காரர்கள் , நண்பர்கள் . இருவரது  குடும்பமும்  நட்புடன்  பழகி  வருகிறார்கள் நாயகனின்  நண்பன்  ஒரு  அம்மா பிள்ளை. அம்மா  எது  சொன்னாலும்  கேட்டுக்கொள்பவன். இதனால்  மனைவி  கூட  சண்டை . எல்லா  வீட்டிலும்  இருக்கும்  மாமியார்  , மருமகள்  பிரச்சனை 


நாயகனின் தங்கைக்கு  திருமணம். அதற்கான  நிச்சயதார்த்த  விழாவுக்கு  ஃபாரீனில்  இருந்து  நண்பன்  வருகிறான். நண்பனது  ஸ்கூட்டியை கல்யாண  வீட்டில்  யாரோ  எடுத்துச்சென்று விபத்துக்குள்ளாக்கி  ஸ்க்ராட்ச்  ஆன  இடத்தில்  அது  தெரியாதவாறு  ஸ்டிக்கர்  ஒட்டி பழையபடி  கொண்டு  வந்து  நிறுத்தி  விடுகிறார்கள் 


 இது  நாயகனுக்கோ , நாயகனின்  நண்பனுக்கோ  தெரியாது. நாயகனின்  நண்பன் அந்த  ஸ்கூட்டியை  ஆல்ரெடி  விலை  பேசி  அட்வான்ஸ்  எல்லாம்  வாங்கி  விட்டான். ஸ்கூட்டியை  ஓட்டிச்சென்ற   புது  ஓனர்  அதை  திருப்பிக்கொண்டு  வந்து  தந்து  விடுகிறான், சண்டையும்  போடுகிறான், ஸ்கூட்டியில்  ஸ்க்ராட்ச்  இருப்பதை  மறைத்து  விட்டாயா? என்கிறான். பெரிய  அமளி துமளி  ஆகிறது


இதனால்  நண்பர்கள்  இருவருக்கும்  மனத்தாங்கல்  ஏற்படுகிறது . அதை  யார்  செய்தது  என்பதை  நாயகன்  கண்டு  பிடிப்பதுதான்  கதை 


விடுத்லை படத்தில்  ரஜினி  ஒரு  டயலாக்  பேசுவார் .ஃபூ.. இதெல்லாம்  ஒரு  பூட்டா?  அது  போல  இதெல்லாம்  ஒரு  கதையா? என்று  ஒன்லைன்  கேட்டதும்  தோன்றினாலும்  எடுத்துக்கொண்ட  கதையை  எந்த  அளவு  சுவராஸ்யமாக  சொல்ல  முடியுமோ  முடிந்த  வரை  முயற்சி  செய்து இருக்கிறார்


நாயகனாக சவுபின் சாஹிர்  மாமனார்  வீட்டில்  தன்னை  யாரும்  மதிக்கவில்லை  என  மனம்  கலங்குவது , நண்பன்   தன்னை  சந்தேகப்படுகிறான்  என  மனம்  வெதும்புவது  என  குணச்சித்திர  கேரக்டரில்  நன்கு  நடித்துள்ளார், அதே  சமயம்  கேப்  கிடைக்கும்  இடத்தில்  எல்லாம்  காமெடி  செய்யவும்  தவறவில்லை 


நாயகனின்  நண்பனாக  பினு  பாப்பு , அம்மாவுக்கு  பயப்படும்  காட்சி , மனைவியிடம்  பம்மும்  காட்சி  அனைத்திலும்  முத்திரை  பதிக்கிறார்


நாயகனின்  மனைவியாக  லிஜோமோல்  ஜோஸ்  குடும்பப்பாங்கான  நடிப்பு.

நாயகனின்  நண்பனின்  மனைவியாக நிகிலா  விமல்  அதிக  ஸ்கோர்  பண்ண  வாய்ப்பு ,  கச்சிதமாக  3நடித்திருக்கிறார்


லோ  பட்ஜெட்  படத்தில்  வரு ம்  பபிள் கம்  பாட்டு , டான்ஸ்  இரண்டும்  கலக்கல்  ரகம் 


திரைக்கதைஎழுதி  இயக்கி  இருப்பவர்  இர்ஷாத்  பராரி . எடுத்துக்கொண்ட  கதைக்கரு  மிக  சாதாரணம்  என்பது  பலவீனம்  தான்  என்றாலும்  முடிந்தவ்ரை  திரைக்கதையாக  சுவராஸ்யப்படுத்த  முனைந்திருக்கிறார்


ஆனால்  ஸ்கூட்டியில்  ஒரு  ஸ்க்ராட்ச்  ஆன  மேட்டருக்காக  க்ரைம் இன்வெஸ்டிகெஷன்  த்ரில்லர்  பாணியில்  கதையை  நகர்த்துவது  ஓவர் ஒன்றரை  மணி  நேரம்  தான்  படம் , ஆனால்  பொறுமையை  சோதிக்கிறது . ரேட்டிங் 2.25 / 5 


  ரசித்த  வசனங்கள் 


1  என்னோட  அனுபவத்தில் சொல்றேன் , நல்லவங்களோட  வாழ்றது  ரொம்ப  கஷ்டம் ,அது   பக்கத்து  வீட்டுக்காரங்களோ , கூட  வேலை  செய்யறவங்களோ


2  ஓப்பனா  பேச  இப்படி  ஒரு  ஓப்பன்  பிளேஸ்  வேணும்


3  ரெண்டு  கிலோ  வாழக்கா, ஒரு  கிலோ  டால்டா  வாங்கிட்டு  வாங்க ‘’


நர்ஸ் , என்ன  சொல்றீங்க ?


புரியுதுல்ல? இது சந்தைக்கடை  இல்லை , ஹாஸ்பிடல், கொஞ்சம்  அமைதியா  இருங்க 


ஓ , கலாய்க்கறீங்களா? 


4  நல்ல  மனசு  இருக்கறவங்க  சந்தோஷமா  வாழ்வாங்கனு  சொல்வாங்களே? அந்த  மாதிரி  ஒரு  பொய்யை  நான்  கேட்டதே  இல்லை 

5  நான்  ஒரு  உண்மையை சொல்லட்டுமா? இந்த  உலகத்துல 50% பொய்கள்திருடர்களால்சொல்லப்படுதுன்னா  ,மீதி  50%  நேர்மையானவர்களால்  சொல்லப்படுது 


Ayalvaashi
Ayalvaashi poster.jpg
Release poster
Directed byIrshad Parari
Written byIrshad Parari
Produced byAshiq Usman
Muhsin Parari
Starring
CinematographySajith Purushan
Edited bySiddique Hyder
Music byJakes Bejoy
Production
companies
Ashiq Usman Productions
Local Agenda Motion Pictures
Release date
  • 21 April 2023
CountryIndia
LanguageMalayalam








Tuesday, May 30, 2023

KATHAL - A JACKFRUIT MYSTERY (2023) - ஹிந்தி - சினிமா விமர்சனம் ( காமெடி க்ரைம் டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்

 


டைட்டில்  உச்சரிப்பு  எல்லாரும்  நினைப்பது  போல  காதல் அல்ல கட் ஹல் . ஹிந்தியில் கட் ஹல்  என்றால் பலாப்பழம்  என்று  அர்த்தம் . பொதுவாக  மலையாளப்பட  உலகில்தான்  சாதாரண   ஒன் லைன் ஸ்டோரியை  சுவராஸ்யமான  திரைக்கதையால்  ஹிட்  ஆக்குவார்கள், இந்த  முறை  அதைச்செய்திருப்பது  பாலிவுட். 2023  மே  19  அன்று  நெட்  ஃபிளிக்ஸில்  ரிலீஸ்  ஆகி  உள்ளது 

   ஸ்பாய்லர்  அலெர்ட்

 ஒரு  எம் எல் ஏ  வீட்டில்  தோட்டத்தில்  இருந்த  பலாப்பழங்கள் இரண்டு  காணாமல்  போய் விடுகின்றன. அதைக்கண்டு  பிடிக்க  போலீஸ்  டீம்  களம்  இற்ங்குகிறது . காணாமல்  போன  பலாப்பழம்  இருந்த  தோட்டத்தின்  இன் சார்ஜ்  தோட்டக்காரனின்  மகள்  காணாமல்  போகிறாள் , ஆனால்  ஏழை என்பதால்  அந்த  கேஸ்  சீரியசாக  எடுத்துக்கொள்ளப்படவில்லை 


‘ நாயகி  ஒரு  போலீஸ்  இன்ஸ்பெக்டர், அந்த  ஊரில்  இது போல ஏராளமான  ஏழைப்பெண்கள்  காணாமல்  போன  கேஸ்கள்  பல  இருக்கின்றன . எம் எல் ஏ  வீட்டில்  காணாமல்  போன  பலாப்பழத்தைத்திருடியது  தோட்டக்காரனின்  மகள்  தான்  என  பொய்யாக  கேஸ்  எழுதி   அந்தப்பெண்ணைக்கண்டு  பிடிக்க  களம்  இறங்குகிறார்  நாயகி 


நாயகி   இன்ஸ்பெக்டர்  என்றாலும்  இவர்  போலீஸ்  கான்ஸ்டபிளாக  இருந்தபோது  சக  கான்ஸ்டபிளை  காதலித்து  வந்தார் , இப்போது  பிரமோசனில்  நாயகி  போலீஸ்  இன்ஸ்பெக்டர் ..  அவரது  காதலன்  இன்னும்  அதே  கான்ஸ்டபிள்தான் . இதனால்  ஏற்படும்  காமெடி  கலாட்டாகள் ., அந்த  பலாப்பழ  கேஸ்  விசாரனை  என   நாயகி   எப்படி  எல்லாவற்றையும்  டீல்  செய்தாள்  என்பதே  மொத்தக்கதை 


கதை , திரைக்கதை  எல்லாம்  காமெடி  டிராக்கில்  இருந்தாலும்  இயக்குநர்  இந்தக்கதையில்  ஜாதிய  வேறுபாடுகள் , அரசியல்வாதிகளின்  முட்டாள்  தனம் , போலீசின்  அதிகார  துஷ்பிரயோகம்  என  சமூக  அவலங்களை  சாடி  இருக்கிறார்


 நாயகி  ஆக  சான்யா  மல்ஹோத்ரா  போலீஸ்  இன்ஸ்பெக்க்டர்  ஆக படம்  முழுக்க  தன்  நகைச்சுவை  நடிப்பால்  தாங்கிப்பிடிக்கிறார். காதலன்  கூட  யூனிஃபார்மில்  கொஞ்சும்  காட்சிகள்  எல்லாம்  கலக்கல்  ரகம் 


 எம் எல்  ஏ  வீட்டில்  நடக்கும்  காமெடி  கலாட்டாக்கள்  அடி  பொலி. பலாப்பழம்  திருடு போன  கேஸ் க்காக  போலீஸ்  ஃபோர்ஸ்  வெட்டியாக  வேலை  செய்யும்  காட்சிகள்  செம  காமெடி 


இரண்டு  மணி  நேரம்  ஓடும்  அளவு  ஷார்ப்  ஆக கட்  செய்திருக்கிறார்  எடிட்ட்ர்   பிரேமா.


 திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர் ய்சோவர்தன்  மிஸ்ரா

சபாஷ்  டைரக்டர்

1  வீட்டோட  மாப்பிள்ளையாய் இருக்கும்  மானம்  கெட்ட  மாடசாமியை  ஒவ்வொரு  முறை  எம் எல் ஏ  வான  மாமனார்  மட்டம்  தட்டும்போதும்  கைப்புள்ள  மாதிரி  அவன்  பம்முவதும்  ஆள் இல்லாதப்ப  உதார்  விடுவதும் கலக்கல்  காமெடி 


2   நாயகி ஒரு  இன்ஸ்பெக்டர் , அவரது  காதலன்  சாதா  போலீஸ்  கான்ஸ்டபிள் . அடிக்கடி  நாயகி  பப்ளிக்  பிளேசில்  அவரைக்கொஞ்ச  முயல்வதும்  காதலன்  பதறி மீடியா  பார்த்துடப்போறாங்க   என  எஸ்கேப்  ஆவதும்  சுவராஸ்ய  சம்பவக்கோர்வைகள் 


3   சிசிடிவி  காமரா  இருப்பதால்  லஞ்சத்தை  கையால்  வாங்க மறுக்கும்  போலீஸ்  பணத்தை  மரப்பொந்தில்  வைக்கச்சொல்லும்  காட்சி 


4  புகார்  கொடுக்க  போலீஸ்  ஸ்டேசன்  வந்த  தோட்டக்காரனை  லாக்கப்ல  தள்ளி   ஹையர்  ஆஃபீசருக்கு  ஃபோன் பண்ணி  குற்றவாளியைப்பிடிச்ட்டோம்  சார்  , லாக்கப்ல  தள்ளியாச்சு  என  கெத்து  காட்டும்  சீன்

5  மெயின்  கதையான  பலாப்பழ  திருட்டு கேசை  விட  நாயகி - நாயகன்  காதல்  கதை , பதவியால்  ஜாதியால்  காதல்  பாதிக்கப்படும்  காட்சிகள்  மனதைத்தொடுவதாய்  இருந்தது 


6  தோட்டக்காரனின்  மகள்  காணாமல்  போன  கேசை  சாமார்த்தியமாக  நாயகி  திருப்பி  விடுவது . அவள் தான்  பலாப்பழத்தை  திருடி  இருக்க வேண்டும், எனவே  முதலில் அவளைக்கண்டுபிடிப்போம்  என  மீடியாவில்  பேட்டி  கொடுப்பது 


7  சைபர்  கிரைம்  ஆஃபீஸ்ல  நாயகன்  ஒரு  டேட்டா  கலெக்ட்  பண்ணப்போகும்போது  அங்கே  நடக்கும்  காமெடி  கலாட்டாக்கள்  வெடிச்சிரிப்பு 


8  இந்த  கீழ்  ஜாதிக்காரங்களுக்கு  எதையாவது  திருடித்திங்கலைன்னா  தூக்கமே  வராது , சரிதானே  இன்ஸ்பெக்டர்  என  ஒருவன்  கேட்கும்போது நாயகி  நானும்  அந்த  ஜாதிக்காரிதான், ஆனா  திருட்டைக்கண்டு  பிடிக்கும்  போலீஸ்காரி  என  கெத்து  காட்டும் காட்சி 


9  காணாமல்  போன  காரைப்பற்றிப்புலம்பும்  போலீஸ்காரர்  ஒருவர்   எந்த  கேஸ்  வந்தாலும்  இது  என்  திருடு  போன  காரா ? என  கேட்கும்  காமெடி  டிராக்  படம்  நெடுக  வருவது 


10  நாயகி  தான்  விபரம்  தந்ததால் செய்தி  வெளியிட்ட  மீடியா நபரை  கைது  செய்ய  வேண்டிய  சூழல்  வரும்போது  சங்கடத்துடன்  விஷயத்தை  அந்த  ஆளிடம்  சொல்ல   நானும் ரவுடி தான்  ஃபேமஸ்  ஆகப்போறேன்  என  பெருமையுடன் ட் உதார்  விட்டுக்கிளம்பும்  காட்சி  


  ரசித்த  வசனங்கள் 


1  சட்டப்படி  போலீசாகிய  நாம்  இந்தியன்  பீனல்  கோடைதான்  ஃபாலோ  பண்ணனும், ஆனா  யூனிஃபார்ம் போட்டுட்டா இண்டியன்  பொலிடிக்கல்  கோடை ஃபாலோ  பண்றோம்

2  வேட்டை  ஆடுன  பின்  கழுதைப்புலியும், களவாடிய  பின் களவாணிப்பயலும்  கண்டிப்பா  கம்பியை  நீட்டிடுவாங்கனு ட்ரெயினிங்க்ல  சொல்லி இருக்காங்க 

3  பலாப்பழத்தை  திருடன்  தான்  திருடி  இருப்பான்னு  எப்படி  சொல்றீங்க ? பெண்களுக்கு  பலாப்பழம்  பிடிக்காதா? ஒரு  திருடி  அதை  திருடி இருக்கக்கூடாதா? 

பலாப்பழத்துல  ஏகப்பட்ட  கொட்டைகள்  இருக்கும்  சார் . லேடீஸ்க்குப்பிடிக்காது 

4  குயில்  எப்படிக்கூவனும்னு  காக்கா  சொல்லித்தருது 

 என்  கிட்டே  அவ  பருப்பு  வேகாது . நாமெல்லாம்  உயர்ந்த  ஜாதியாக்கும்

5   மாப்ளை , ஏன்  இப்படி  லூஸ்  மாதிரி  நடந்துக்கறிங்க? 

எங்கப்பா  எக்ஸ்  எம் எல் ஏ  . நான்  போய்  பலாப்பழம்  திருடுவேனா? 

 எம் எல் ஏ   அப்படின்னாலே  திருடன் தானே?


6  சார், பலாப்பழத்திருட்டைக்கண்டுபிடிக்க  இவ்ளோ  போலீஸ்  ஃபோர்சை  வீணாக்குவதை விட  நைசா  மார்க்கெட்ல  2  பலாப்பழம்  வாங்கி எம் எல் ஏ  க்கு  கிஃப்ட்டா  குடுத்துட்டா  என்ன?

திருடு  போனது  அரிதான  அங்கிள்   வ்கை  பலாப்பழம், மார்கெட்ல  கிடைக்காது 

7  இந்த  அரசியல்வாதிஙக  எப்பவுமே  இப்படி  முட்டாள்தனமா தான்  ந்டந்துக்குவாங்களா?

மத்துரா   ல  இருக்கனும்னா  ராதே  ராதேனு  கூவித்தான்  ஆகனும்


8  உனக்கும்  எனக்கும்  இடையில்  ஒரு பெரிய  தடுப்புச்சுவர்  இருக்கு , அதைஉடைக்க  நான்  முயற்சி  பண்றேன், ஆனா  நீ? புதுசு புதுசா  ஒரு  செங்கல்லை  அடுக்கிட்டு  இருக்கே


9   சாதா  கேசை  இப்படி  சிக்கல்  ஆக்கிட்டே.. எங்களை  மாதிரி  பெரிய  ஆஃபீசர்ங்க  கிட்டே  கன்சல் ட்  பண்ணி  இருக்கலாமில்ல?


 சார்தான்  சொன்னாரு . லீடர்  மாதிரி  நடந்துக்கனும்னா  நீயே  முடிவெடு 


10  புழு பூச்சியாக்கூட  பிறக்கலாம், ஆனா  இந்த  உலகத்துல  கான்ஸ்டபுளா  இருந்தா  முன்னேறவே  முடியாது 


சதுரங்கத்துல  சாதா  சிப்பாய்  ராஜாவுக்கே  செக்    வைக்கும்  தெரியுமா?


11   மணி  அடிச்சா  சோறு  மாமியார்  வீட்டு  சீரு 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  அப்பாவி  ஏழை  மக்களை  அடிக்கக்கூடாது என  நாயகனான போலிஸ்  கான்ஸ்டபிள் இடம்  கடிந்து  கொள்ளும் நாயகி  பின்  ஒரு  சந்தர்ப்பத்தில்  குற்றவாளிகளிடம்  அடி   வாங்கி  வந்த  நாயகனிடம்  அவங்களை  நீ  ஏன்  அடிக்கலை ? என  கேட்கும்போது  நீதானே  யாரையும்  அடிக்கக்கூடாது  என  அன்று  சொன்னாய்  என  நாயகன்  வெள்ளந்தியாய்  கேட்கும்போது  என்  மேல்  உனக்கு  அவ்வளவ்  அன்பா?    என  நாயகி  உருகுவது  மிஸ்  மேட்ச்  ஆன  ஒரு  செண்ட்டிமெண்ட்  காட்சி .  ஏன்  முட்டாள்  தனமா  நடந்துக்கறே?  அப்பாவிகளைத்தான்  அடிக்க  வேணாம்னேன். கிரிமினல்களை  அடிச்சா  என்ன  என்று  தானே  கோபமாகக்கேட்டிருக்க  வேண்டும் >  


2  மீடியாவிடம்  உண்மையை  சொல்லி விடும்  தோட்டக்காரன்  பின்  நாயகியிடம்  எனக்கு  பொய்  பேச  வராது  என  செண்ட்டிமெண்ட்  ஆகபபேசும்  க்காட்சியும்  மிஸ்  மேட்ச்  தான் .  உண்மையை  சொல்லனும்னா  தோட்டக்காரனின்  மகள்  காணாமல்  போன  கேசை  கண்டு  பிடிக்கனும்னா  பலாப்பழத்தைத்திருடியது  அவள்  தான்  என  கேசை  ஜோடித்தால்தான்  ஆகும் என  முழு  உண்மையையும்  தானே  சொல்லி  இருக்க  வேண்டும் ? அரை  குறையா  என்  பொண்ணு  திருடலை  என்பதை  மட்டும்  சொன்னா  எப்படி ? 


3  போலீஸ்காரரின் காரை திருடிச்சென்ற  ஆள்  நெம்பர்  பிளேட்டை  மாற்றாமல்  ஓட்டிக்கொண்டிருப்பது  எப்படி ? 

4  படத்தின்  பின்  பாதி முழுவதும்  இன்ஸ்பெக்டர் ஆன  நாயகி  ஜீப்  டிரைவரை அருகில்  உட்கார  வைத்து  தானே  ஜீப் ஓட்டுகிறார். எதற்கு ? 

சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இது  எல்லாத்தரப்பு  ரசிகர்களுக்கும்  பிடிக்காது , மொக்கைக்காமெடி , பிளாக்  ஹியூமர்  காமெடிப்படங்கள்  ரசிப்பவர்கள்  மட்டும் பார்க்கலாம் , ரேட்டிங் 3 / 5 


Kathal
Kathal film poster.jpg
Official release poster
Directed byYashowardhan Mishra
Written byAshok Mishra
Yashowardhan Mishra
Produced by
Starring
CinematographyHarshvir Oberai
Edited byPrerna Saigal
Music byRam Sampath
Production
companies
Distributed byNetflix
Release date
  • 19 May 2023
CountryIndia
LanguageHindi

Monday, May 29, 2023

மார்கழி - அக்சய் சுந்தர் -MODERN LOVE CHENNAI (2023) -மாடர்ன் லவ் சென்னை - தமிழ் - வெப்சீரிஸ் விமர்சனம் ( லவ் ஆந்தாலஜி )@ அமேசான் பிரைம்

 பாலாஜி  தரணிதரன்  கதை  எழுத  அக்சய்  சுந்தர்  இயக்கி  இருக்கும் படம்  இது இது  ஒரு  மியூசிக்கல்  லவ்  ஸ்டோரி  எனவும்  சொல்லலாம் , அடலசண்ட்  லவ்  ஸ்டோரி  எனவும்  சொல்லலாம், இசை  சம்பந்தப்பட்ட  படத்துக்கு  இளையராஜா  இசை  என்பது  சாலப்பொருத்தம் 


நாயகி  ஒரு  டீன்  ஏஜ்  மாணவி . இவரது  பெற்றோருக்கு  விவாகரத்து  ஆகி  விட்டதால்  அப்பாவுடன்  வசித்து  வருகிறார். அம்மா  அவரை  ஏற்றுக்கொள்ளவில்லை , இதனால்  சோகத்தில்  இருக்கும்  நாயகிக்கு  ஒரே  ஆறுதல்  இசைதான் , அப்பா  ஒரு  கீ  போர்டு  பிளேயர்  என்பதால்  நாயகிக்கும்  அதில்  ஆர்வம்  பிறக்கிறது 


 ஊரில்  உள்ள  சர்ச்சில் நாயகி இசை  வகுப்புக்கு  செல்கிறாள் , அங்கே  இசை  பயில  வரும்  வெளி  மாநில  மாணவனுடன்  காதல்  வசப்படுகிறாள் . இவர்களது  காதல்  வாழ்க்கை  எப்படி  கழிந்தது  என்பதுதான்  மீதிக்கதை 


 நாயகியாக சஞ்சுலா  சாரதி  தன்  அகண்ட  விழிகளால்  பார்வையாளர்களைக்கவர்கிறார், மாநிற  திராவிட  அழகி. வாய்ப்புகள்  சரியாக  வந்தால்  நல்ல  எதிர்காலம்  இருக்கிறது 


நாயகனாக  ஷூ  கோ செயிங்  நடித்துள்ளார் .  கண்ணியமான  நடிப்பு 


இசை  இளையராஜா 


 நெஞ்சில் ஒரு  மின்னல்  விளையாடும்  செம  மெலோடி .  என்றும்  எந்தன்  நெஞ்சில்  நீ தானே  பாடலும்  அருமை . படத்தின்  பெரிய  பலமே  நாயகியின்  நடிப்பும்  இசையும் , பாடல்களும்  தான் 


 நாயகியின்  தோழிகள்  பேசும்  இரட்டை  அர்த்த  காமெடி  வசனங்கள் அத்து  மீறல் 


சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட்-  திரைக்கதையாக  போதிய  அடர்த்தி  இல்லாதது  மைன்ஸ்  என்றாலும்  நாயகியின்  நடிப்பும் , இசையும்  ஜீவன்  சேர்க்கும்  படம்  ரேட்டிங்  2.5 / 5

Sunday, May 28, 2023

காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்கற எமோஜி MODERN LOVE CHENNAI (2023) -மாடர்ன் லவ் சென்னை - தமிழ் - வெப்சீரிஸ் விமர்சனம் ( லவ் ஆந்தாலஜி )@ அமேசான் பிரைம்


    ரேஷ்மா  கட்டலா  வின்  கதை , திரைக்கதை யை இயக்குநர்   கிருஷ்ணகுமார்  ராம்குமார்  இயக்கி இருக்கிறார். ஹீரோயின் ஓரியண்டட்  சப்ஜெக்ட்  என்பதால்  ஹீரோயின்  கொஞ்சம்  ஓவர்  ஆக்டிங்  பண்ணி  விட்டாரோ  என்னவோ? மலையாளத்தில்  வெளியான  ஜூன் , ஹிந்தியில் வெளியான ஓம்  ஷாந்தி  ஒசானா  படத்தையும்  ஆங்காங்கெ  நினைவூட்டுகிறது

  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  ஒரு  சினிமா  பைத்தியம், எல்லா  ஹிட்  படங்களையும்  பார்த்து  அதில்  வருவது  போல  நமக்குக்காதல்  வர  வேண்டும்  என  நினைப்பவர்.ஸ்கூலில்  படிக்கும்போது  ஒருவனைக்காதலிக்கிறாள் , அவன்  என்னடான்னா  சாப்பாட்டு  ராமனாக  இருக்கிறான், நாயகியைக்கண்டு  கொள்ளவில்லை . 


அடுத்து  காலேஜ்  வாழ்க்கையில்  ஒருவனைக்காதலிக்கிறாள் . அவனும்தான். இருவரும்  காதல்  வானில்  சிறகடித்துப்பறக்கலாம்  என  நினைக்கும்போது  ஒரு  நாள்  தன்  காதலன்  வேறு  ஒரு  பெண்ணுடன்  நெருக்க,மாக  இருப்பதைப்பார்த்து  விடுகிறாள்  நாயகி 


பிரேக்கப்  பண்ணி  விட்டு கொஞ்ச  நாள்  சோகமாக  இருக்கிறாள் . பிறகு  டேட்டிங்  ஆப்  மூலம்  பல  இளைஞர்களை  இண்டர்வ்யூ  எடுத்து  எதுவும்  தேறாமல்  மீண்டும்  சோகம்  ஆகிறாள் 


பெற்றோராகப்பார்த்து  ஒரு  அரேஞ்சுடு  மேரேஜ்  செய்து  வைக்கிறார்கள் . அது  சக்சஸ்  ஆனதா? என்பது  க்ளைமாக்ஸ் 


 நாயகி  ஆக  ரிது  வர்மா . ஸ்கூல் லைஃப் , காலேஜ் லைஃப்  இரண்டு  கால  கட்டங்களிலும்  இவரது  ஹேர் ஸ்டைல்  சகிக்க  வில்லை . பிறகு  ஓரளவு  பரவாயில்லை . பல  இடங்களில்  ஓவர்  ஆக்டிங் 


 இவருக்கு  ஜோடியாக  வரும்  அனிரூத்  கனகராஜன் ,பவன்  அலெக்ஸ் , அகிலன்  மூவரும்  பரவாயில்லை  என்றாலும்  கணவனாக  வரும்  வைபவ்  கலக்கி  விட்டார் . முழுக்கதையில்  ஓவர்  ஆக்டிங்  இல்லாமல்   யதார்த்தமான  நடிப்பு  இவருடையதுதான் 


க்ளைமாக்ஸ்  போர்சன்  கச்சிதம் 


ஜி வி  பிரகாஷின்  இசை  பின்னணி  இசை  கனகச்சிதம் 


 ரசித்த  வசனங்கள் 


1  என்  காதல்  நிறைவேற  எந்த  எக்ஸ்ட்ரீம்  லெவலுக்கும்  போவேன்


 சரி , அவனைக்கல்யாணம்  பண்ணிக்குவியா? மாட்டியா? அதை  சொல்லு 


2  முட்டை  பப்ஸ்ல  பாதி  முட்டைதான்  இருக்கு  என்பதற்காக  அதை  [பாதி  முட்டை  பப்ஸ்னு  சொல்ல  முடியுமா?  அது  மாதிரிதான்  என் காதலும், ஒருதலைக்காதலா  இருந்தாலும்   அது  முழுமையான  காதல்தான் 


3  உன்னை  சரியாத்தெரியாதே? எப்படி  டேட்டிங்  வர ?


  சரியாத்தெரிஞ்சுக்கத்தான்  டேட்டிங் 


4 பொண்ணுங்களுக்கு  லவ்  சாங்க்ஸ்  ஆயிரக்கணக்கில்  இருக்கு , ஆனா பிரேக்கப்  பாட்டு  ஒண்ணு  கூட  இல்லை 


5   மோர்  குடிச்சு  உண்ணும்  விரதத்தை  முடிச்சுக்கறேன் 


6   நான்  ஒரு  கதாசிரியர் , கதை  தான்  வரும்  , என் கிட்டே  கேஷ்  வராது , பில்லை  நீயே  பே  பண்ணிடு 


7  சினிமா  தான் உலகிலேயே  சிறந்த  அழகான  ஃபிராடு 


8  உன்  வெட்டிங்  நைட்  இப்படி  ஆகும்னு  நீ  எதிர்பார்த்து  இருக்க  மாட்டியே?


 மேரேஜ்  ஆகும்னே  எதிர்பார்க்கலை


சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் -  நம்ப  முடியாத  காட்சிகள் , செயற்கைத்தனமான  நடிப்பு , ஓவர்  ஆக்டிங்  எல்லாம்   மைனசாக  இருந்தும்  ரசிக்கும்படி  இருக்கிறது  என்பதுதான்  பிளஸ் . ரேட்டிங்   2.75 / 5






 


Saturday, May 27, 2023

இமைகள் - பாலாஜி சக்திவேல்- MODERN LOVE CHENNAI (2023) -மாடர்ன் லவ் சென்னை - தமிழ் - வெப்சீரிஸ் விமர்சனம் ( லவ் ஆந்தாலஜி )@ அமேசான் பிரைம்


  தனது  முதல்  படமான  காதல்   மெகா  ஹிட்  தந்த  இயக்குநர் பாலாஜி  சக்திவேல்  அதற்குப்பின்  கல்லூரி , வழக்கு எண் 18/9 போன்ற  கவனிக்கத்தக்க  படங்களைக்கொடுத்தார். பிறகு  தன்  கலைப்பயணத்தை  நடிகராகத்தொடர்ந்தவர்  நீண்ட  இடைவெளிக்குப்பின்  இயக்க்நர்  அவதாரத்தை  மீண்டும்  எடுத்திருக்கிறார்  

  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் , நாயகி  இருவரும்  கல்லூரி  மாணவர்கள் . நாயகன்  தன்  காதலை  வெளிப்படுத்தும்போது  தனக்கு  வித்தியாசமான , அபூர்வமான  கண்  பார்வை  தொடர்பான  நோய்  இருப்பதாக  நாயகி  கூறுகிறாள். அதாவது  கொஞ்சம்  கொஞ்சமாக  பார்வை  மங்கி  அடுத்த  10  வருடங்களில்  முழுவதுமாகவே  பார்வை  பறிபோய்விடும்  நோய்/. இதற்கு  சிகிச்சை  இல்லை 


 இருந்தும்  நாயகன்  தன்  காதலில்  தீவிரமாக  இருக்கவே  நாயகி  காதலுக்கு  சம்மதம்  தெரிவிக்கிறாள் . இருவருக்கும்  திருமணம்  நடக்கிறது . ஒரு  குழந்தை  பிறக்கிறது . 


அந்தகுழந்தைக்குத்துணையாக  இன்னொரு  குழந்தை  பெற்றுக்கொள்ளலாம்  என  நாயகன்  சொல்லும்போது நாயகி  அதற்கு  எதிர்ப்பு  தெரிவிக்கிறாள் . பார்வை  சரி  இல்லாததால்  ஒரு  குழந்தையையே  கவனித்துக்கொள்வது  சிரமமாக  இருக்கிறது . இன்னொரு  குழந்தையா? என  மறுக்கிறாள் . இதனால்  இருவருக்கும் இடையே  மன்ஸ்தாபம்  வருகிறது . இதற்குப்பின்  இவர்கள்  வாழ்வில்  நடக்கும்  சம்பவங்கள்  தான்  கதை 


 ஆறு  கதைகளில்  மீதி ஐந்து  கதைகளும்  காதல்  பற்றிப்பேச  இது  மட்டும்  தான்  கல்யாணம், குடும்பம்  என  பேசுகிறது . பிராக்டிகல்  டிஃபிகல்ட்டீஸ்  பற்றி  அலசிஆராய்ந்திருக்கிறார்கள் 


 நாயகனாக  அசோக்  செல்வன். குறை  சொல்ல  முடியாத  நடிப்பு . கோபத்தில்  மனைவியைத்திட்டி  விட்டு  பின்  மனம்  வருந்தி  சாரி  கேட்கும்  காட்சியில்  சைன்  பண்ணுகிறார். ஆனால்  இவரது பர்சனாலிட்டிக்கும்  வயதுக்கும்  சம்பந்தம்  இல்லாமல்  நாயகியின்  தோற்றம்


நாயகியாக பானு.பிளஸ்  டூ  மாணவி   போன்ற  தோற்றம். குழந்தைக்கு  அம்மா  வாக  வயது  முதிர்ந்த  தோற்றத்தில்  100%  பொருந்தவில்லை . அவரது  குரல்  அல்லது  டப்பிங்  குரல்  எடுபடவில்லை . அவரது  அமைதியான  முகத்திற்கும்  குரலுக்கும்  மேட்ச்  ஆகவில்லை 


காலையில்  பள்ளிக்கு  குழந்தையை  ரெடி  பண்ண  கணவன்  உதவவில்லை  என்ற  கோபத்தைக்காட்டுவது  கச்சிதம் , ஆனால்  நாயகன்  நாயகியை  நடுரோட்டில்  கோபத்தில்  விட்டுச்செல்வது  செயற்கை . இருவரது  கேரக்டர்  டிசைனும்  கொஞ்சம்  குழப்படி  தான் 


காதலிக்கும்போது  இருக்கும்  மயக்கம்  கல்யாண  வாழ்க்கையில்  தொடர்வது  சிரமம்  என்பதுதான் இயக்குநர்  சொல்ல  வந்த  கருத்து  எனில்  அதில்  வெற்றி. குடும்ப்ப்பாங்கான   நல்ல  கதை 


யுவன்  சங்கர்  ராஜாவின்  இசை  அருமை  எனில் ஜீவா  சஙகரின்  ஒளிப்பதிவு  அட்டகாசம் 


செம  ஹிட்  சாங்க்ஸ்

1 குக்கூனு  கூவும்  காகம்  நீ

2  பேரன்பே  எனது  கண்ணில்  கிழக்கு  நீதானே?


  ரசித்த  வசனங்கள் 


1   நீ போனதுக்காக  அழலை , ஆனா  நீ  என்னை  விட்டுப்போகமாட்டே-னு  நம்புனேன், அந்த  நம்பிக்கை வீணாப்போயிடுச்சேனு  அழுதேன்

சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் - காதலிக்கும்போது  எல்லாமே  இனிமையாகத்தான்  இருக்கும், குடும்ப  வாழ்க்கையில்  பயணிக்கும்போதுதான்  அதில்  உள்ள  வலிகள்  தெரியும்  என்ற  கருத்தை  முன் வைத்து  எடுக்கப்பட்ட  தரமான  குடும்பப்படம் . ரேட்டிங்  3/5 




Friday, May 26, 2023

பறவைக்கூட்டில் வாழும் மான்கள் - பாரதிராஜா MODERN LOVE CHENNAI (2023) -மாடர்ன் லவ் சென்னை - தமிழ் - வெப்சீரிஸ் விமர்சனம் ( லவ் ஆந்தாலஜி )@ அமேசான் பிரைம்

 


 படம்  முடிந்த  பின்  பாலுமகேந்திராவுக்கு  காணிக்கைனு  டைட்டில்  போட்ட  பின்  தான்  இது  பாலுமகேந்திராவின்  சொந்த  வாழ்க்கை  சம்பவமாக  இருக்கக்கூடும்  என்ற  விஷயம். நடைமுறை  வாழ்வில்  இவ்வளவு  சாத்வீகமான ,  அமைதியான , பொறுமையான  மனைவி  இருப்பது  , வாய்ப்பது  மிகவும்  அரிதுதான். அதனாலேயே  அந்த  மனைவி  கேரக்டர்  மேல்  ஒரு  ஆச்சரியம்  ஒட்டிக்கொள்கிறது   


ஆறு  குறும்படங்களில்  இது  ஐந்தாவதாக  அமைந்தாலும்  தர  வரிசையில்  மூன்றாம்  இடம்  பிடிக்கிறது 

   ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  திருமணம்  ஆனவன் , மனைவி , இரண்டு  குழந்தைகள்  உண்டு . அமைதியாக  வாழ்க்கை  போய்க்கொண்டிருக்கும்போது  நாயகனின்  வாழ்வில்  அடுத்த  காதல்  எட்டிப்பார்க்கிறது . ரயில்  பயணம்  மூலம்  அறிமுகமாகும்  ஒரு  பெண்


 இவளும் திருமணம்  ஆகி  விவாகரத்து  ஆனவள்தன். இருவரும்  பழகி பரஸ்பரம்  காதலை  வெளிப்படுத்திய  பின்  ஒரு  நள்  மாலை  நாயகி  நாயகனின்  வீட்டுக்கு  நாயகனின்  மனைவியின்  அழைப்பின் [பேரில்  வருகிறாள் 


 நாயகன்  தன்  மனைவியை  விவாகரத்து  செய்ய  முடிவெடுத்து  விடுகிறான், இது  சம்ப்ந்தமாக  எதிர்காலம்  பற்றிப்பேச  நாயகனின்  மனைவி  நாயகி  இருவருக்கும்  இடையே  உருவாகும்  உரையாடல்தான்  மீதிக்கதை 


 நாயகன்  ஆக  கிஷோர்  அமைதியாக  நடித்து  தன்  உனர்வுகளை  வெளிப்படுத்தி  இருக்கிறார். ஓப்பனிங்  ஷாட்டில்  மெட்ரோ  ரயில்  பயண  காதலி  சந்திப்புகளை  மாண்ட்டேஜ்  பாடலாக  என்  இனிய பொன்  நிலாவே   பாடலை  பயன்படுத்தி   இருப்பது  அருமை 


நாயகி  ஆக விஜயலட்சுமி  அகத்தியன்  டீச்சர்  போன்ற  கண்ணிய,மான  தோற்றத்தில்  வந்து  மனதில்  இடம்  பிடிக்கிறார்


 நாயகனின்  மனைவியாக  ரம்யா  நம்பீசன்  பொறுமையின்  சிகரமாய்  தன்  குணச்சித்திர  நடிப்பை  பாங்காய்  வெளிப்படுத்தி  இருக்கிறார். நாங்களும்  லவ்  மேரேஜ் தான்  என்ற  ஒரே  வசனத்தில் இயலாமையை  வெளிப்படுத்தும்  இடம்  ஆகட்டும்  டைவர்ஸ்  ஃபார்மாலிட்டி  எல்லாம்  கோர்ட்ல  எவ்ளோ  டைம்  எடுத்துக்குவாங்க  என  எதார்த்தமாய்  கேட்டு  விட்டு  அந்தப்பெண்ணும்  ஆல்ரெடி  டைவர்ஸ்  ஆனவர்  என்பதால்  குத்திக்காட்டுவதாய்  நினைத்து  விடக்கூடாது  என  சாரி  கேட்கும்  இடம்  அட்டகாசம்,


 டெல்லி  கணேஷ்  நாயகனின்  அப்பாவாக  சில  காட்சிகளில்  வந்தாலும்  அனுபவம்  மிக்க  நடிப்பு 


பொதுவாக  இன்னொரு பெண்ணின்  தொடர்பு  இருப்பதாகத்தெரிந்தால் வீட்டையே  அமளி  துமளி  ஆக்கும்  பெண்களையே  பார்த்துப்பழக்கப்பட்ட  நமக்கு  இந்த  அமைதி   ஆச்சரியத்தையும் , வலியையும்  ஒருங்கே  கடத்துகிறது 


ஜீவா  சஙக்ரின்  ஒளிப்பதிவு  அட்டகாசம் , மெட்ரோ  ரயில்  பயணங்கள் , அப்பார்ட்மெண்ட்  வீட்டில்  மெழுகுவர்த்தி  வெளிச்சக்காட்சிகள் , செல்ஃபி  எடுக்கும்  காட்சி  என  படம்  முழுக்க  ஒளிப்பதிவும்  இசையும்  ஜீவனாக  அமைந்திருக்கிறது 


 இளையராஜா  வுக்கு  விடுதலை படத்துக்குப்பின்  இது  மீண்டும்  ஒரு  கம்  பேக்  படம் 


கிராமத்துக்காதலைப்படைப்பதில்  வல்லவரான  பாரதிராஜா  நகரக்காதலை  நாகரீகமாக்சொன்ன  விதத்தில்  மனம்  கவர்கிறார்



சபாஷ்  டைரக்டர்


1  நாயகன்  சிகரெட்  பிடிக்கும்  பழக்கத்தை  நாயகி  தங்கள்  குழந்தைகளிடம் சமாளிப்பாக  சொல்லும்  தண்டனைக்கதை  அருமை . சிலேட்டில்  ஒவ்வொரு  சிகரெட்  பிடித்த  எண்ணிக்கையை  அப்டேட்  பண்ணி  1000  வந்ததும்  நிறுத்துவதாக  சொல்வதை  கதையைத்தாண்டிய  நீதி  போதனஒ 


2   எங்களுக்குள்ளே  இதுவரை சண்டைனு  பெருசா  வந்ததில்லை  என  மனைவி  நாயகியிடம்  ஆதங்கமாக  சொல்லி  விட்டு  உங்களுக்குள்  அப்படி  சண்டை  வந்திருக்கா? என  விசாரிக்கும்  நாசூக்கு  அருமை 


3  டெல்லி  கணேஷ்  நாயகியை  நைசா  தலை  முழுகி விடு  என்ற  போது  நாயகன் இதே  பெண்  உங்க  மகளா  இருந்தா  அப்படி  சொல்லி  இருப்பீங்களா? என  மடக்கும் காட்சி 


4  ,மெட்ரோ  ரயில்  பயணங்களில்  நாயகன்  நாயகி  சந்திக்கும்  அனைத்துக்காட்சிகளிலும்  இளமை  துள்ளுகிறது . மணிரத்னம் , கவுதம்  மேனன்  படங்கள்  போல  காட்சிகளில்  இளமை பூரிப்புகள் 



  ரசித்த  வசனங்கள் 


1   விருந்தாளிங்க  போன  பின் தான்  அவங்க  கொடுத்த  பரிசுப்பொருளை  ஓப்பன்  பண்ணனும், அதான்  ரூல்


2 கதவை  சாத்தினா  போதும், பத்திரமா  இருந்துப்போம்கற  அளவில்  தான்  எங்க  வீடு  இருக்கு 


3  உங்க  இடத்துல நான்  இருந்திருந்தா  இந்த  அளவு  பக்குவமாவும், ஸ்ட்ராங்காகவும்  இருந்திருப்பேனானு  தெரியல


4  [புது மரம்  வளர கிளைய  கட்  பண்ணிதான்  வைக்கறோம், ஆனா வெட்டுவதன்  வலி  இருக்கத்தானே  செய்யும் ?


5  நமக்கு  எப்போ  யாரைப்பிடிக்கும்? எதுக்கு  பிடிக்கும்னு  சொல்ல  முடியலையே?


6  இத்தனை  ஆயிரம்  வருடங்கள்  க்டந்தும்  மனித  மனம்  என்ன  நினைக்கும்? ஏன் அப்படினு  யாரும்  கண்டு  பிடிக்க  முடியலையே? 


7  உங்க  கணவர் , குழந்தைகள் , வீடுனு  எல்லாத்தையும்  எனக்கு  விட்டுக்கொடுத்துட்டிங்க . உங்களுக்குத்திருப்பித்தர  என்கிட்டே  எதுவுமே  இல்லை  , வெறும்  வெறுமை  மட்டும்தான்  இருக்கு 


 அந்த  வெறுமையை  நான்  எடுத்துக்கறேன்



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - பாரதிராஜா  தனது  அடையாளமான  கிராமத்துக்காதலில்  இருந்து வெளியே  வந்து  நகரத்துக்காதலை  நாகரீகமாக  சொன்ன  விதம்  கவிதை . மெட்ரோ  ரயில்  பயணங்களில்  என  டைட்டில்  வைத்திருக்கலாம் . ரேட்டிங்  3.25 / 5 

Thursday, May 25, 2023

லாலாகுண்டா பொம்மைகள் - ராஜூ முருகன் - MODERN LOVE CHENNAI (2023) -மாடர்ன் லவ் சென்னை - தமிழ் - வெப்சீரிஸ் விமர்சனம் ( லவ் ஆந்தாலஜி )@ அமேசான் பிரைம்


ராஜூ முருகன்  ஒரு  பத்திரிக்கையாளர் . ஆனந்த விகடனில்  இவர்  எழுதிய   வட்டியும் , முதலும்  செம  ஹிட்  அடித்தது . இயக்குநர்  என்  லிங்குசாமியிடம் உதவி  இயக்குநராகப்பணிபுரிந்து  3  வருடங்கள்  அனுபவம்  கிடைத்த  பின்  2014 ஆம்  ஆண்டு  குக்கூ  என்ற  படத்தை  இயக்கினார்.2016  ஆம்  ஆண்டு  இவர்  இயக்கத்தில்  வெளி வந்த  ஜோக்கர்  சிறந்த  படத்திற்கான  விருது  பெற்றது . கார்த்தியின்  நடிப்பில்  இப்போது  ஜப்பான்  என்ற  படத்தை  இயக்கி  வருகிறார்


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி   ஒரு  பேக்கரி  கம்பெனில  பேக்கிங்க்  செக்சன்ல  வேலை  பார்க்கிறாள் . ஓப்பனிங்  ஷாட்லயே  அவள்  ஒரு  ஹாஸ்பிடலில்  அபார்ஷன்  செய்ய  வந்திருக்கிறாள் /. யாரிடமோ  ஏமாந்து  விட்டாள் . அவன்  ஒடி  விட்டான். டாக்டர்  திட்டிக்கொண்டே  அவளுக்கு  அபார்ஷன்  செய்கிறார்


 நாயகி  தன்  சித்தி , சித்தப்பாவுடன்  வாழ்ந்து  வருகிறாள் . அவர்கள்  இருக்கும்  ஏரியாவில்  ஒரு   சாமியாரிடம்   நாயகியை  சித்தி  அழைத்துச்செல்கிறாள். அந்த  சாமியார்  உனக்கு  வடக்கன்  ஒருவன்  கணவனாக  வருவான் , ஆனால்  அவன் ஒரு  திருட்டுப்பயலாக  இருப்பான்  என  ஜோசியம்  சொல்கிறான்


 ஆனால்  அதை  நம்பாத  நாயகி  சாமியாரை  திட்டி  விட்டு  வீட்டுக்கு  வந்து  விடுகிறாள் . அவர்கள்  இருக்கும்  ஏரியாவில்  பானி  பூரி  கடை  வைத்திருக்கும் நாயகன்  நாயகி  மீது  ஆசைப்படுகிறான். ஆரம்பத்தில்  முறைத்தாலும்  நாளடைவில்  நாயகியும்  பச்சைக்கொடி  காட்டுகிறாள் 


காதல்  வளர்ந்து  வரும்போது  நாயகன் வேறு  ஒரு  பெண்ணை  கர்ப்பம்  ஆக்கி  விட்டு  ஓடி  விடுகிறான். இதனால்  மனம்  உடைந்த  நாயகி  கொஞ்ச  நாள்  சோகமாக  இருந்து  விட்டு  பின்  அரேஞ்சுடு மேரேஜ்க்கு  சம்மதிக்கிறாள்


திரும்ணத்துக்குப்பின்  இரண்டு  ட்விஸ்ட். கணவனாக  வந்திருப்பது  அந்த   ஜோசியம்  சொன்ன  சாமியார் தான். தாடி  இல்லாத  கெட்டப்பில்  நாயகிக்கு  முதலில்  அடையாளம்  தெரியவில்லை . இரண்டாவது  திருப்பம்  பானிபூரிக்கடைக்காரனான  நாயகனை  நாயகி  தன்   கணவனுடன்  சந்திக்கிறாள் .  இந்த  இரண்டு  ட்விஸ்ட்களிலும்  நாயகி  என்ன  முடிவு  எடுத்தார் என்பதே  க்ளைமாக்ஸ்


 நாயகியாக ஸ்ரீ  கவுரி  ப்ரியா அகலமான  பெரிய  விழிகள் , குடும்பப்பாங்கான  முகம்  என சில  பிளஸ்  பாய்ண்ட்களுட்ன்  நன்றாக  நடித்திருகிறார்


நாயகன்  ஆக  சேட்டுப்பையனாக    வாசுதேவன்  முரளி  காதல்  தேசம்  குணால்  முகச்சாயலில்  இருக்கிறார். நல்ல  நடிப்பு , வசீக்ரமான  சிரிப்பு 


 சாமியாராக  வரும்  பிரசன்னா  ராம்குமார்  கலகலப்பான  நடிப்பு . சித்தியாக  வருபவரின்  டயலாக்  டெலிவரி  அசத்தல் 


 ராஜூ  முருகனுக்கு  கவிதையாக  காதல்  காட்சிகளும்  எடுக்க  வருகிறது . காமெடியும்  இயலபாக  வருகிறது 


  3  பாடல்களில்  2  செம  ஹிட் . வசனங்களில்  இயக்குநர் முத்திரை  பதிக்கிறார்



சபாஷ்  டைரக்டர்


1  வசுந்த்ரா வின்  கேரக்டர்  டிசைன் , நடிப்பு  இரண்டும் அபாரம், நாயகியை விடக்குறைவான  காட்சிகளில்  வந்தாலும்  மனதில்  இடம்  பிடிக்கிறார். கணவனுடன்  சரக்கு  அடிப்பது  ஆண்கள்  பற்றி  டயலாக்  விடுவது  எல்லாம்  செம 


2 ஷான்  ரோல்டனின்  இசை படத்தின்  தரத்தை  ஒரு  படி  உயர்த்துகிறது 


செம  ஹிட்  சாங்க்ஸ்


 1  அவ  பந்தயப்புறா  நான்  சிங்கிள்  சுறா 


2  ஒரு  முறைதான்  மழை  வ்ருமா?  யாரிடம்  கேட்பது ?



 ரசித்த  வசனங்கள் 


1    உணவு  விமர்சகர்  அப்டின்னா  என்ன?


நீ  ஹோட்டலுக்குப்போனா  சாப்பிட்டுட்டுப்பணம்  கொடுத்துட்டு  வருவே , இந்த  ஃபுட் ரிவ்யூவர்  சாப்ட்டுட்டு  பணம்  வாங்கிட்டு  வருவாரு 


2    காதல்  தோல்வியா? கவலைப்படேல், ஓரன்பு  போனா  ஈரன்பு , ஈரன்பு  போனா  பேரன்பு 


3   காதல்  தந்த  காயத்தை  இன்னொரு  காதல்  வந்துதான் ஆத்தும்


4  இடுக்கண்  வருங்கால்  வடக்கன் வருவான்


5  உடம்புல  தழும்பும், மனசுல  பாரமும்  இல்லாத  பெண்  இங்கே  எங்கே  இருக்கா? 


6  குருஜி , கிளம்பி  வாங்க , ஜனங்க  சேர்ந்துட்டாங்க 


 இருடா , இங்கே  இன்னும்  ரம்மி  சேரலை 


7  இந்தக்கால  லவ்  எல்லாம்  என்ன? அட்ராக்சன் , அபார்சன், அதானே? 


8  இந்த  ஆம்பளைங்க   கூட   வாழ  முடியாது  இந்த  ஆம்பளைங்க  இல்லாம  யும்  வாழ  முடியாது


9  இந்தக்காலத்துப்பொண்ணுங்க  அவங்க  இஷ்டப்படிதான்  முடிவெடுப்பாங்க , உங்க  அரிப்புக்கு  எல்லாம்  அவங்க  சொரிஞ்சுக்கிட்டு  இருக்க  முடியாது 


10  பொம்பள  கூட  வாழ  முடியாது , ;பொம்பள  இல்லாமலும்  வாழ  முடியாது , பொம்பள  சிங்குலர்.. புரிஞ்சுதுல்ல? 


சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் - குறும்படமாக  இருந்தாலும்  கவிதை  மாதிரி  தரத்தில்  தர  முடியும்  என  மென்மையாக  நிரூபித்திருகிறார்  ராஜூ  முருகன். ரேட்டிங் 3.5 /5