Friday, June 02, 2023

RAGHAVENDRA STORES ( 2023)- கன்னடம் - சினிமா விமர்சனம் ( காமெடி மெலோ டிராமா) @ அமேசான் பிரைம்

 


 தமிழில்  இந்த  காமெடிp  படம்  ரீமேக்  செய்யப்பட்டால்  கே  பாக்யராஜ்  அல்லது எஸ் ஜே  சூர்யா  அல்லது  லிவிங்க்ஸ்டன்  நடித்தால்  மேட்ச்  ஆக  இருக்கும். டைட்டிலை  நான்  முதலில்  ராகவேந்திரா ஸ்டோரீஸ்  என  தவறாக  உச்சரித்து ஏதோ ஸ்ரீ  ராகவேந்திரர் ஸ்வாமிகள்  நீதி  போதனைக்கதையோ  என  ஸ்கிப்  செய்து  விட்டேன், ஆனால்  இது  முழுக்க  முழுக்க  ஒரு  காமெடி  எண்ட்டர்டெய்னர் , அடல்ட்   காமெடி டயலாக்ஸ்  இருப்பதால் சிறுவர்கள்  தவிர்க்கவும் 


  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் 40 +  வயதான  முரட்டு  சிங்கிள் . அவரது  அப்பா  நடத்தும்  ஹோட்டலில் சமையல் காரராக  இருக்கிறார். இவருக்கு  இன்னும்  திருமணம்  ஆகவில்லை . பல  பெண்கள்  பார்த்தும்  ஏதோ  சில  காரணங்களால்  இவருக்கு  திருமணம்  தள்ளிப்போய்க்கொண்டே  இருக்கிறது 


நாயகி 35+  வயதான  முதிர்  கன்னி . இவருக்கு  வேறு  ஒரு  சொட்டைத்தலையனுடன்  மேரேஜ்  ஃபிக்ஸ்  ஆகிறது. அந்த  மேரேஜ்  ஃபங்க்‌ஷனில்  நாயகன்  அண்ட்  கோ  தான்  குக்  இன் சார்ஜ், அந்தத்திருமணம்  திடீர்  என  நாயகியின்  சம்மதம்  இன்மையால்  நின்று  போகிறது 


 நாயகனுக்கும், நாயகிக்கும் பல  சிரமங்களுக்கு  இடையே  திருமணம்  ஆகிறது . ஆனால்  அதில்  ஒரு  சிக்கல் . நான்கு  நாட்கள்  தோஷம்  இருப்பதால்  சாந்தி  முகூர்த்தம்  தள்ளிப்போகிறது . அடுத்து  நாயகிக்கு  3  நாட்கள்  லீவ், அடுத்த  தடை  நாயகியின்  அம்மாவுக்கு  உடல்  நிலை  சரி  இல்லாமல்  ஹாஸ்பிடல்  அட்,மிட்  ஆக  நேரிடுகிறது. இது  மாதிரி  தொடர்  பிரசனைகளால்  துக்கப்பட்டு , துயரப்பட்டு  படம்  முழுக்க நாயகன்   படும் அல்லல்கள்  தான்  முழுக்கதையே 


நாயகன்  ஆக  ஜக்கேஷ் ஒரு  முதிர் கண்ணனின்  பிரச்சனைகளை   காமெடியாக  வெளிப்படுத்தும்  இடங்களில்  கைதட்டல்  பெறுகிறார் இவரது  டயலாக்  டெலிவரியும், முக  பாவனைகளும் , சேஷ்டைகளும்  அருமை 


நாயகி  ஆக   ஸ்வேதா பாத்திரத்தின்  தன்மை  உணர்ந்து  காமெடி  க்ளப்பில்  சேர்ந்து  விட்டார்.கண்னாடி  அணிந்திருக்கும்போது  இது  நம்ம  ஆளு  ஷோபனா  நினைவில்  வருகிறார்


ஹோட்டல்  பணியாள்:ஆக  வரும்   மித்ரா வின் காமெடி  டிராக்  கலக்கல்  ரகம். அரசியல்வாதியாக  வரும்  அச்யூத்  குமார்  படத்தில் தேவை  இல்லாத  ஆணி 


2  பாடல்கள்  கேட்கும்படி  இருக்கின்றன.104  நிமிடங்கள்  ஓடும்  இப்படம் முதல் 75  நிமிடங்கள்  நான்  ஸ்டாப்  காமெடியாகப்போகிறது . திடீர்  என  டிராக்  மாறி  நாயகிக்கு  குழந்தை  பிறக்க  வாய்ப்பில்லை , வாடகைத்தாய் , தத்து  என  சீரியஸ்  லைனுக்கு  திரைக்கதை  போகிறது. க்ளைமாக்சில்  தேவை  இல்லாமல்  அரசியல்  ட்ராக்  வேறு  வருவது  எரிச்சல் 


சபாஷ்  டைரக்டர்

1  வாய்  பேச  முடியாத பணியாளரின் பெண்  பாக்கும்  வைபவத்தில்  நாயகன்  மீடியேட்டராக  மாப்பிள்ளை - பெண் இருவருக்கும்  நடுவே  அமர்ந்து  துபாஷ்  ஆக  வேலை  பார்க்கும்  காமெடி  டிராக்  கொஞ்சம்  டபுள்  மினிங் ஆக  இருந்தாலும்  ரசிக்க  வைத்தது 

2  பெண்  பார்க்கப்போன  இடத்தில்  கரண்ட்  கட்  ஆக  மெழுகுவர்த்தியுடன்  வரும்  பெண்ணை  மாப்பிள்ளை  டீல்  செய்யும் காமெடி  சீன் 

3  ஹாஸ்பிடலில்  படுத்திருக்கும்  மாமியார்  மாப்ளையிடம்  மாப்ளை  என்னால  உங்களுக்கு  சிரமம் தானே? சாரி  என  அடிக்கடி  சொல்லி  கடுப்பேற்றும்  காட்சி  காமெடி  கலக்கல் 

4 ஹாஸ்பிடலில்  எம்ப்ட்டி  வார்டு  இருக்கு , நீங்க  இங்கே  வந்துடுங்க  என  நர்ஸ்  தன்  கணவனுக்கு  ஃபோன்  பண்ணியதைக்கேட்ட  நாயகன்  அந்த  எம்ப்ட்டி  வார்டை  தேடி  அலையும்  காட்சி  ரசித்த  வசனங்கள் 


1  சமையல்  வேலையைக்கேவலமா  நினைச்சா  அம்மா  சமைச்சதுக்கு  அர்த்தமே  இல்லாம  போயிடும் 


2  புருசன்  உயிரோட  இருக்கும்போது  சம்சாரம்  அழுதா அங்கே  புருசன்  வில்லன்னு  அர்த்தம் , புருசன்  செத்த  பின் சம்சாரம்  அழலைன்னா  இங்கே  சம்சாரம்  வில்லினு  அர்த்தம்


3  நான்  அந்த  விதவைக்கு  வாழ்க்கை  கொடுக்கலாம்னு  இருக்கேன்


 டூ லெட்  அங்கெ  பந்தியைப்பாரு,அவளுக்கு  ஒருத்தன்  வாழைப்பழம்  கொடுத்துட்டான் 


4  அந்தாளோட  வாய்ஸ்...

அது  வாய்ஸ்  இல்லை , நாய்ஸ்  (noise)


5   நான்  மேரெஜ்  ஆகாதவன் தான், ஆனா  மேரேஜ்  ஆனவன்  கஷ்டம்  தெரிஞ்சவன்


6   மாப்ளைக்கு  வாய்  பேச  வராதுனு  எப்படி   எப்படி  யோ  பொண்ணு  கிட்டே  சொல்ல  ட்ரை  பண்ணுனேன், ஆனா  அவளுக்குப்புரியல 


 எப்படிப்புரியும்,? பொண்ணுக்குக்காது  டமாரம் 


7   ஒரு  மகன்  தன் அப்பா  கிட்டே பைக்  வாங்கிகொடு , கார்  வாங்கிக்கொடுனு  கேட்கலாம், பொண்ணு  பார்த்து  கட்டி  வைனு  கேட்க  முடியுமா? 


8  ஜோசியரே! இவனுக்கு  இன்னும்  மேரேஜ்  ஆகலை, மேரேஜ்க்குப்பின்  இவன்  சந்தோஷமா  இருப்பானா?


 மேரேஜ்  பண்ணிக்கிட்ட  எந்த  ஆம்பளை  சந்தோஷமா  இருந்திருக்கான் ? 


9  பொண்ணுக்கு  எந்த  சீரும்  மாப்ளை  செய்யத்தேவை  இல்லை , பொண்ணோட  குழந்தையை  மட்டும்  நல்லாப்பார்த்துக்கிட்டாப்போதும்

 ஹலோ, தரகரெ!  பந்தக்கால்  நான்  போடற  மாதிரி  இடம்  பாருங்க , ஆல்ரெடி கட்டுன  பங்களா  எனக்கு  வேண்டாம் 


10 மாமா ,  எனக்கு  இந்தப்பொண்ணு  ஓக்கே 


 யோவ் , இது  பொண்ணோட  அத்தை 


11  கெட்டிச்சட்னி  வேணுமா?  காரசட்னி  வேணுமா?


கெட்டிச்சட்னி 


கெட்டிச்சட்னி   இல்லை,காரசட்னி  தான்  இருக்கு 


 டீ  வெணுமா? காஃபி  வேணுமா?


 டீ 

  சாரி , காஃபி தான்  இருக்கு 


12  100%  பர்ஃபெக்ட்  ஆன  ஆண்  இந்த  உலகத்துலயே  இல்லை , அப்படி  பர்ஃபெக்ட்  ஆன  ஆள்  கூடத்தான்  மேரேஜ்னா  உனக்கு  லஃப்  லாங்க்  மேரேஜே  நடக்காது 


13   டியர் , உங்களைப்பார்த்தா  வயசான  ஆள்  மாதிரியே  தெரியல . யங்காதான்  இருக்கீங்க 


 நீ கூட  பார்க்க  36  வயசு  ஆன  பெண்  மாதிரி  இல்லை . 35  ஆன  மாதிரி தான் இருக்கே 


14  லேட்டா  மேரேஜ்  ஆகறது தப்பில்லை . முன்  கூட்டியே  மேரேஜ்  ஆகி   சீக்கிரமா  டைவர்ஸ்  ஆவதுதான்  தப்பு 

15  ஹலோ , மாப்ளையா? கல்யாண  முகூர்த்தத்துக்கு  வர  முடியலை , வாழ்த்து  சொல்ல  சாந்தி  முகூர்த்தத்துக்கு  கரெக்ட்  டைம்க்கு  வந்துடறேன்


அய்யோ

 சும்மா   தமாசு 


16    எனக்கு  மேரேஜ்  ஆகி  2  நாட்கள்  முடிஞ்சுது , நாலு  நாள்  எதுவும்  கிடையாதுனு  சொல்லிட்டாங்க . உனக்கு  மேரேஜ்  ஆகி  2  மாசம் தான்  ஆகுது , ஆனா  மூணு  மாசம்   கர்ப்பம், இது  எப்படி ? குற்றம்  நடந்தது  என்ன? 


17   உனக்கு  ஆல்ரெடி  40  வயசு  க்ராஸ்  ஆகிடுச்சு, இனி  என்ன  செய்யப்போறே?


 அவனவன்70  வயசுல  கூட  பர்ஃபார்ம்  பண்றான்

 அப்போ  70  வயசு  ஆகும் வரை  வெயிட்  பண்ணப்போறியா?

18   நம்ம  ஹோட்டலுக்கு  3  நாட்கள்  லீவ்  விட்டுட்டேன் , எப்பூடி 


 சாரி , நானும்  மூணு  நாள்  லீவ்


19  ஹலோ ,  மாப்ளையா? எல்லாம்  முடிஞ்சுதா?


 ஸ்கெனிங்  நடந்துட்டு  இருக்கு 


 இன்னுமா?

 அடேய், மாமியாருக்கு  உடம்பு  சரி  இல்லை , அந்த  ஸ்கேனிங்


20  லொக்  லொக்


 ஏதோ  சத்தம்  கேட்குதே?

  தெரு  நாய்  தான்  குலைக்குது


 இல்லையே , எங்கம்மா  இருமற  மாதிரி  இருக்கு ?


 ஓ  அந்த  நாயா? 


21   டேய்.. நீ  ஹனிமூன்  க்கு  அங்கே  போகப்போறதை  ஏன்  என் கிட்டே  சொல்லலை ?


 ஸ்கூலில்  படிக்கும்போது  ஸ்கூல்  சரி  இல்லைன்னா  ட்யூஷன்  படிக்க  வைங்கனு  கேட்கலாம் , ஹனிமூன்க்கு  வீடு   சூட்  ஆகலை , ரூம்  புக்  பண்ணிக்கொடுங்க , ஹோட்டலுக்குப்போய்  பார்த்துக்கறோம்னு  எப்படி  சொல்ல  முடியும் ?


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகி  திருமண  மேடையில்  மணப்பெண்  அலங்காரத்துடன்  வந்து  தன்  அம்மாவிடம்  எனக்கு  இந்த  கல்யாணத்தில்  இஷ்டம்  இல்லை எனக்கூறி பளார்  என  அறை  வாங்கும்  காட்சி  டி வி  சீரியல்  பார்ப்பது  மாதிரி  செயற்கையா  இருக்கு, ஏன்  முதலிலேயே  அதைக்கூறவில்லை ? 

2 முழு  நீள  காமெடிப்படம்  போல்  எடுத்திருந்தால்  செம  ஹிட்  அடிச்சிருக்கும்,. தேவை  இல்லாமல்  பின்  பாதியில்  செண்ட்டிமெண்ட்ஸ்  சீன்களை   வலுக்கட்டாயமாகத்திணித்தது  பின்னடைவு


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-  கிளாமரான  காட்சிகள்  இல்லை  என்றாலும்  கண்ட்டெண்ட் , வசனங்கள்  18+சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   முதல்  ஒன்றே   கால்  மணி  நேரம்  ஜாலியாகப்போகும் ,  கடைசி  25  நிமிடங்கள்  இழுவை ரேட்டிங் 2.75 / 5

0 comments: