Wednesday, May 17, 2023

MRS CHATTERJEE VS NORVEY (2023) -ஹிந்தி - சினிமா விமர்சனம் ( கோர்ட் ரூம் டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்

   


2011 ல்  நிகழ்ந்த  ஒரு  உண்மை  சம்பவத்தை  திரைப்படமாக  எடுத்துள்ளனர் . சாக்ரிகா  பட்டாச்சார்யா  என்பவரின்  வாழ்வில்  நிகழ்ந்த  சம்பவம் 47  நாட்கள்  என்ற  படத்தில் வெளி நாட்டு  மாப்பிள்ளையைக்கல்யாணம்  செய்து  கொண்டு  போகும்  இந்தியப்பெண்  படும்  கஷ்டங்களை  சொன்ன படம். அது  போல இந்தப்படமும், ஆனால்  அதில்  நாயகன்  நாயகியை  ஏமாற்றுகிறான் , இதில்  வெளிநாட்டின்  சட்டதிட்ட்ங்கள் , சந்தர்ப்ப  சூழ்நிலை  ஆகியவை  வில்லன்கள்  ஆகின்றன. வெளிநாட்டு  மாப்பிள்ளை  மோகத்தில் இருக்கும்  பெணகள்  அவசியம்  காண  வேண்டிய  விழிப்புணர்வு  திரைப்பட்ம் இது    


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி  ஒரு  பெங்காலி . அவருக்கு  நார்வே  யில்  ப்ணி  புரியும் நபருடன் பெற்றோரால்  நிச்சயிக்கப்பட்ட  திருமணம்  நடக்கிறது . இந்த  தம்பதிக்கு  2  குழந்தைகள் 

நம்  நாட்டு  சட்டதிட்டங்கள்  வேறு , நார்வே  நாட்டு சட்டதிட்டங்கள்  வேற

.அம்மா  தன்  குழந்தைக்கு  தன்  கரங்களால்  உணவு  ஊட்டுதல்  நம்  நாட்டில்  சரி  நார்வே  நாட்டில்  தவறு . இரவில் குழந்தைகள்  பெற்றோருடன்  தூங்குதல் நம்  நாட்டில்  சரி  நார்வே  நாட்டில்  தவறு .. குழந்தைகள்  அதீத  குறும்பு  செய்தால்  கண்டிப்பது , திட்டுவது   நம்  நாட்டில்  சரி  நார்வே  நாட்டில்  தவறு . 


இந்த  விஷயங்கள்  எல்லாம்  நாயகிக்குத்தெரிந்தாலும்  பெரிதாக  அலட்டிகொள்ளவில்லை . நார்வே  நாட்டு  சட்டப்படி  குழந்தைகள்  நலம்  காக்கும்  அமைப்பு   ஒன்று   இரு  பெண்களை  நாயகி  வீட்டுக்கு  அனுப்பி  அங்கேயே  தங்கி  சில  நாட்கள்  குழந்தைகள்  முறைப்படி  வளர்க்கப்படுகின்றனவா? என  கண்காணிக்கிறது


இறுதியில்  தரப்படும்  ரிப்போர்ட்படி  1   நாயகிக்கு  கணவன்  வீட்டில்  கூட  மாட  ஒத்தாசை  செய்வதில்லை  2  கணவன்  குடும்பத்தை  சரியாக  கவனிப்பதில்லை  3 குழந்தை  பராமரிப்பு  சரி  இல்லை . 


இதனால்  2  குழந்தைகளையும் அரசாங்கம்  அந்த  தம்பதியிடமிருந்து  பிரித்து  அழைத்துக்கொண்டு  போகிறது . நாயகி  சட்ட  ரீதியாக  இந்தப்பிரச்சனையை  எப்படி  எதிர்கொள்கிறாள்? இதனால் அவளுக்கு  ஏற்படும்  மன  உளைச்சல்கள்  என்ன? இந்தியா  போன்ற  ஏழை  நாடுகளின்  குழந்தைகளை அபகரித்து  வாரிசு  இல்லாத  கோடீஸ்வர  நார்வே  தம்பதியினருக்கு  விற்கப்படுதல்   போன்ற  பிரச்சனைகளை  எல்லாம்  நாயகி  எப்படி  எதிர்கொண்டு  வெற்றி  பெறுகிறாள்  என்பதே  கதை   


நாயகியாக  ராணி  முகர்ஜி   அந்த  கேரக்டராகவே  வாழ்ந்திருக்கிறார். அவர்  ஃபிரேமில்  வரும்  ஒவ்வொரு  காட்சியிலும்  மற்ற  அனைவரையும்  நடிப்பில்  ஓரம்  கட்டுகிறார். முழு  திரைப்படத்தையும்  இவரது  நடிப்பு  தான்  தாங்கிப்பிடிக்கிறது 


கணவனாக அனிர்பன்  பட்டாச்சார்யா. இவரது   கேரக்டர்  ஸ்கெட்ச்  கொஞ்சம்  குழப்பமானது . சில  நேரம்  மனைவியிட ம்  அன்புள்ளவர்  போலும், சில  சமயம்  என்ன  நடந்தாலும்  சரி  நம்  வேலைக்கோ  நாட்டுக்குடியுரிமைக்கோ  ஆபத்து  வராமல்  இருந்தால்  சரி  என்னும்  சுயநலத்துடனே  இருக்கிறார். க்ளைமாக்சில்  வில்லனாகவே  மாறுகிறார்


 நார்வே  நாட்டில்  நாயகிக்கு  ஆதரவாகவும், இந்தியாவில்   நாயகிக்கு  எதிராகவும்  வாதிடும்  வக்கீலாக  ஜிம் சர்ப்   பிரமாதமாக  நடித்திருக்கிறார். அவர்  உடல்  மொழி , முக  பாவனைகள்  எல்லாம்  அற்புதம் 


நீனா  குப்தா  கெஸ்ட்  ரோலில்  வருகிறார், ஒக்கே  ரகம் 


சமீர்  சஹிஜா , ராஹூல்  ஹேண்டா  இருவருடன்  இணைந்து  திரைக்க்தை  எழுதி  படத்தை  இயக்கி  இருப்பவர்          ஆஷிமா  சிப்பர் . பெண்களின்  நுட்பமான  உணர்வுகளை  கச்சிதமாக  வடிவமைத்து  இருக்கிறார். 


கோர்ட்  ரூம்  காட்சிகள்  அனல்  பறக்கின்றன மெலோடிராமா  வகையைச்சேர்ந்த  திரைக்கதை  என்றாலும்  விறுவிறுப்பாகவே  படம்  நகர்கிறது                                     

சபாஷ்  டைரக்டர்


1  நாயகி  தரப்பு  வக்கீல்  கொல்கத்தா  கோர்ட்டுக்கு  10  நிமிசம்  லேட்டாக  வரும்போது  கோபப்படும்  ஜட்ஜ்  இடம்  வக்கீல்   சொல்லும்  டயலாக்  செம . நான்  10  நிமிசம் லேட்டா  வந்ததையே  உங்களால  பொறுத்துக்க  முடியலையே? இந்த  கேசை  2  வருசமா  இழுத்துட்டு  இருக்கீங்களே? குழந்தைகளைப்பிரிந்து  அந்த  அம்மா  எவ்ளோ  ஸ்ட்ரெஸ்க்கு  ஆளாகி இருப்பாங்க  என  ஜட்ஜை  , மடக்கும்  காட்சி  அடிபொலி 


2  நாயகி  தன்  குழந்தைகளைத்தேடி  செல்லும் இடத்தில்  பொம்மை  ஒலி  எழுப்பி அதே  போல்  ஒலி  வரும்  திசையில்  நகர்வது  புத்திசாலித்தனமான  மூவ் 


3 புரொடக்சன்  டிசைன் , ஆர்ட்  டைரக்சன்  அற்புதம், குறிப்பாக  நார்வே  போலீஸ்  ஸ்டேஷன்  , கோர்ட்  செட்டப் எல்லாமே  கனகச்சிதம் 


4  அமித் த்ரிவேதியின்  பின்னணி  இசை  படத்தை  உயிர்ப்புடன்  எடுத்துச்செல்கிறது, ஆல்வ்ரின்  ஒளிப்பதிவு  அருமை 


  ரசித்த  வசனங்கள் 


1  நீங்க  அடிக்கடி  ரிலாக்ஸ்  ரிலாக்ஸ்  அப்படினு  சொல்லும்போதுதான்  எனக்கு  டென்சன்  ஏறுது 


2  கணவன்  , மனைவி  இருவருக்கு  இடையே  மத்தியஸ்தம்   பண்ண  வெளீயாள்  யாரையும்  விடக்கூடாது . தம்பதிகளே  உணரனும் 


3  வளர்ப்புப்பெற்றோர்  குழந்தைகளின்  நிஜ  பெற்றோரை  விட  அதிக  அக்கறை , அன்புடன்  கவனித்துக்கொள்வார்க்ளா? அதற்கு  நீங்கள்  உறுதி  அளிக்க  முடியுமா? 


4  நான்  நல்ல  அம்மாவா?  மோசமான  அம்மாவா? சொல்லத்தெரியலை , ஆனா  நான்  அம்மாதான், அம்மா  எப்போதும் அம்மாதான் 


5  இந்த  கோர்ட்  மட்டுமில்லை  எந்த  கோர்ட்டுக்குப்போக  நேர்ந்தாலும்  என்  குழந்தைகளை  பெற  சண்டை  போடுவேன் , எனக்கான  நீதி  கிடைக்கும்  வ்ரை  உலகைன்  எந்த  மூலையில்  இருந்தாலும்  போராடுவேன் 


6  குழந்தைகளுக்காக  அவர்களின்  உரிமைக்காகப்போராடுவதுதான்  அம்மாவுக்கு  சரியான  சாய்சாக  இருக்க  முடியும் ? 


7  அம்மாவுடன்  இருந்தால்  ,மட்டும்தான்  குழந்தைகளால்  சந்தோஷமாக  இருக்க  முடியும், வசதி  இருக்கு  இல்லை  அது பாய்ண்ட்  இல்லை 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  தாய்ப்பாலை  பாட்டிலில்  பிடித்து தருவது  வேஸ்ட், குழந்தைக்கு  நீங்க  தந்து  விடும் தாய்ப்பாலை  அவர்கள்  தருவ்தில்லை  என  வீடியோ  ஆதாரத்துடன்  நிரூபித்த  பின்னும்  நாயகி  ஏன்  தொடர்ந்து  தாய்ப்பால் பாட்டிலில்  எடுத்து  தந்து  கொண்டே  இருக்கிறாள் ?


2 குழந்தைகளை  அவர்கள்  டார்ச்ச்ர்  செய்வதை  அவர்கள்  அம்மாவுக்காக  அழுவதை  வீடியோ  எடுத்த  லேடி  அதை  நாயகியிடம்  காட்டுகிறார் . அப்போதே  அந்த  வீடியோ  க்ளிப்பை  நாயகி  தன்  ஃபோனுக்கோ  தன்  கணவன்  ஃபோனுக்கோ  தன்  வக்கீல்  ஃபோனுக்கோ  ஃபார்வார்டு  செய்திருந்தால்  அதை  எவிடென்சாக  ஆக்கி  இருக்கலாம். போலீஸ்  அந்த  வீடியோ  எவிடென்சை  அழித்து  விட்டார்கள்  என  கோர்ட்டில் லேடி  சொல்லும்போது  இவர்களிடம்  இருந்து ஆதாரம்  காட்டி  இருக்கலாம்  


3  என்  மனைவி  ஒரு  பைத்தியம், குழந்தைகளை  வளர்க்க  தகுதியற்றவர்  என  கணவர்  சொல்லும்  சாட்சி  எப்படி  செல்லுபடி  ஆகும் >  மனவியல்  நிபுணர்கள்  செக்  பண்ணி  தரும்  டிப்போர்ட் தானே  செல்லும் ? 


4   க்ளைமாக்ஸில்  நார்வே    தரப்பு  லாயரையே  சாட்சிக்கூண்டில்  ஏற்றும்  ஜட்ஜ்  நாயகி  தன்  தரப்பு  வாத்த்தை  உன்  வைக்க  எழும்போது  சாட்சிக்கூண்டில்  ஏறி  பதில்  சொல்லுமாறு  சொல்லவில்லை ,அவர்  இருந்த  இடத்தில்  இருந்தேதான்  பேசுகிறார்


5   க்ளைமாக்ஸ்  கோர்ட்  சீனில்  ஜட்ஜ்  என்  பிரைவேட்  சேம்ப்பர்ல  குழந்தைகளை  சந்திக்க  விரும்புகிறேன்னு  சொல்லிட்டுபோறார். அங்கே  குழந்தைகளை  அவர்  சந்திக்கும்போது  ஜட்ஜைக்கண்டுக்காம  அம்மா  விடம்  ஓடி  வருகின்றனர்  குழ்ந்தைகள், அதை  என் அ திர்ச்சியுடன்  ஜட்ஜ்  பார்க்கிறார்? முன்னே  பின்னே  பார்த்தே  இராத  ஜட்ஜை  அங்கிள்னு  ஓடி  வந்து  கட்டிக்கும்னு  எதிர்பார்த்தாரா? சும்மா  கை  தட்டல்  பெற  வைக்கப்ப்ட  சீன்  அது , அம்மாவைபார்த்ததும்  குழந்தைகள்  ஓடி  வ்ருவது  இயற்கை 


6  ஜட்ஜ் கோர்ட்டில்    தீர்ப்பு  சொன்னதும்  ஆடியன்ஸ் , வக்கீல்  எல்லோரும்  எழுந்து  நின்னு  கை  தட்டுவது  எல்லாம்  ஓவர்


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன்  யூ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -    அனைத்துப்பெண்களும் காணவேண்டிய  படம் . லீகல்  டிராமா,  கோர்ட்  ரூம்  டிராமா  ரசிகர்கள்  பார்க்கலாம், ரேட்டிங் 3 / 5 




Mrs Chatterjee Vs Norway
Mrs Chatterjee Vs Norway film poster.jpg
Theatrical release poster
Directed byAshima Chibber
Written bySameer Satija
Ashima Chibber
Rahul Handa
Produced byMonisha Advani
Madhu Bhojwani
Nikkhil Advani
StarringRani Mukerji
Anirban Bhattacharya
Neena Gupta
Jim Sarbh
CinematographyAlvar Kõue
Edited byNamrata Rao
Music byAmit Trivedi
Production
companies
Distributed byZee Studios
Release date
  • 17 March 2023
Running time
144 minutes[1]
CountryIndia
LanguageHindi
Budgetest.30 crore[2]
Box officeest.36.53 crore[3][4]

Tuesday, May 16, 2023

AIR(2023) - ஆங்கிலம் - சினிமா விமர்சனம் ( பயோகிராஃபிக்கல் ஸ்போர்ட்ஸ் டிராமா) @ அமேசான் பிரைம்

 


    பூஸ்ட் ஈஸ்  சீக்ரெட்  ஆஃப்  மை  என்ர்ஜி  என  பூஸ்ட்  விளம்பரத்தில்  சச்சின் டெண்டுல்கர்  தோன்றியதை  நாம்  எல்லோரும்  பார்த்திருக்கிறோம், ஆனால்  அந்த  விளம்பரத்தால்  சச்சினுக்கு  எவ்வளவு  வருமானம் ? சச்சினால்  பூஸ்ட்  கம்பெனியின்  சேல்ஸ்  எவ்வளவு  எகிறி  இருக்கும் ? சக  போட்டி  கம்பெனிகளை  தாண்டி  சச்சினை  அது  எப்படி ஒப்பந்தம்  செய்து  இருக்கும்? என்றெல்லாம்  நாம  யோசித்திருக்கிறோமா?   இல்லை , அபபடி  யோசித்தவர்கள்தான்  இந்தப்படத்தை  தயாரித்து  இருக்கிறார்கள் 


படத்தில்  நாயகி இல்லை , காதல்  இல்லை , டூய்ட்  இல்லை , காமெடி  டிராக்  இல்லை , ஆக்சன்  சீக்வன்ஸ்  இல்லை , அம்மா , அப்பா செண்ட்டிமெண்ட்  காட்சிகள்  இல்லை , ஆனாலும்  பரபரப்பான  கமர்ஷியல்  படங்களுக்கு  உண்டான  அனுபவத்தை  இப்படம்  தருகிறது. தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆனபோது  84  மில்லியன்  டாலர்  வசூலித்த  இப்படம்  பாசிட்டிவ்  விமர்சனங்களைப்பெற்றது . இப்போது  அமேசான்  பிரைம்  ஓ டி  டி  யில்  ரிலீஸ்  ஆகி  உள்ளது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


இது  உண்மை  சம்பவத்தை  அடிப்படையாக  வைத்து  எடுக்கப்பட்ட்  படம் ., கதை  நிக்ழும்  கால  கட்டம் 1984. NIKE என்னும்  ஷூ  கம்பெனி பேஸ்கட்  பால்  பிளேயர்ஸ்க்கான  ஷூ  சேல்சில்  மிகவும்  இறக்கம்  கண்டு  வந்த  கால  கட்டம் . அப்போது  அடிடாஸ்  ஷூ  கம்பெனி  தான்  டாப்  சேல்சில்  இருந்த்து 


 நைக்  கம்பனி  போர்டு  மீட்டிங்கில்  இதற்கு ஒரு  தீர்வு  காண  வேண்டும், அல்லது  அந்த  டிபார்ட்மெண்ட்டை  இழுத்து  மூடவேண்டும்  என  முடிவு  எடுக்கப்படுகிறது


நாயகன்  நைக்  கம்பெனியின்  ஊழியர் . அவர்  அந்த  காலகட்டத்தில்  கம்பெனியின் விருப்பப்பட்டியலில் மூன்றாவது  தர  வரிசையில்  இருந்த  மைக்கேல்  ஜோர்டான்  என்னும்  பேஸ்கட்  பால்  பிளேயரை   விளம்பர  தூத்ராக  நியமிக்க  முயற்சிகள்  எடுக்கிறார்


 ஆனால்  ஜோர்டான்  அடிடாஸ்  கம்பெனியில்  டை  அப்  வைத்துகொள்ளவே  விரும்புகிறார். ஏனெனில்  அவர்  அடிடாஸ்  ஷூ  ரசிக்ர். ஆனால்  ஜோர்டனின்  அம்மா  சொன்னால்   கேட்பார்  என்ற  தகவல்  அறிந்த  நாயகன் அம்மா  இருக்கும்  ஊருக்கு  ஃபிளைட்  பிடித்து  நேரில்  போய்  ச்ந்திக்கிறார்


 ஆனாலும்  பாசிட்டிவ்  பதில்  கிடைக்கவில்லை . பார்க்கலாம்  என்ற  பொத்தாம்பொதுவான  பதிலே  கிடைக்கிறது . ஏர்  ஜோர்டன்  என்ற  பிராண்ட்  பெயர்  இடப்பட்டு  ஸ்பெஷல்  ஷூ  தயார்  ஆகிறது. அடிடாஸ்  கம்பெனி  உட்பட  அனைத்து  ஷூக்களும்  51%   வெள்ளை  நிற  ஆக்ரமிப்பில்  தான்  இருக்க வேண்டும்  என்ற  விதி  இருக்கிறது . அந்த  விதியை  மீறி  சிவப்பு  நிறத்தில்  ஷூ  உருவாகிறது . இந்த  விதியை  மீறினால் ஜோர்டன் விளையாடும்  ஒவ்வொரு  மேட்சிலும்  அபராதம்  கட்ட  வேண்டும், அந்த  அபராதத்தை  கம்பெனியே  ஏற்கும்  என  அறிவிக்கிறது 


கம்பெனி  மீட்டிங்க்கிற்கு  தன்  அம்மா, அப்பா  உடன்  வரும்  ஜோர்டான்  மனம்  கவருமாறு  செண்ட்டிமெண்ட்டாக  அற்புதமான  ஒரு  உரை  நிகழ்த்துகிறார்  நாயகன்

டீல்  ஓக்கே  ஆகிறது  ஆனால்  ஜோர்டனின் அம்மா  விதிக்கும்  நிபந்தனை  கேட்டு  நாயகன்  உட்பட  அனைவரும்  அதிர்ச்சி  அடைகின்றனர் . இரண்டு  லட்சத்து  ஐம்பதாயிர  டாலர்கள்  இந்த  விளம்பரத்துக்கு  சம்பளம், அது  போக விற்கும்  ஒவ்வொரு   ஏர்  ஜோர்டன்  ஷூவிற்கும் லாபத்தில்  பங்கு தர  வேண்டும்  என்ற  நிபந்தனை  தான்  அது 


 அதுவரை  ஸ்போர்ட்ஸ்  வீர்ர்களுக்கு  இப்படி லாப  சத வீதம்  தந்ததில்லை . ரிஸ்க்  இதற்குப்பின்  கம்பெனி  எடுத்த  முடிவு  என்ன? விளம்பரம்  என்ன  ஆனது ? என்பது  க்ளைமாக்ஸ் 


நாயகனாக  நடித்த  மாட் டாமன்  உட்பட  அனைவர்  நடிப்பும்  யதார்த்தம். சம்பவத்தை  நேரில்  பார்ப்பது  போலவே  இருக்கிறது


இது  ஒரு  பீரியட்  டிராமா  என்பதால்  ஆர்ட்  டைரக்சன்  முக்கியப்பங்கு  வகிக்கிறது, ஒளிப்பதிவு  , இசை  போன்ற  டெக்னிக்கல்  அம்சங்கள்  தரம். இரண்டு  மணி  நேரம்  படம்  ஓடுகிறது . ஒரு  காட்சியில்  கூட  சோர்வோ , தொய்வோ  ஏற்படவில்லை 

 பார்க்க  வேண்டிய  இப்படம்  அமேசான்  பிரைம் ல  கிடைக்கிறது 


சபாஷ்  டைரக்டர்


1  நாயகன் ஜோர்டானின்  திறமையை  வீடியோ  கிளிப்பிங்கில்  அறியும்  தருணமும்  அதைப்பற்றி  மீட்டிங்க்கில்  செய்யும்  டிஸ்கஷன்  சீனும்


2  கம்பெனியில்  அனைவரின்  எதிர்ப்பையும்  மீறி  ஜோர்டனின்  அம்மாவை  சந்திக்க  பய்ணப்படும்  காட்சியும் இருவருக்கு  இடையே  நிகழும்  அந்த  கான்வோ  காட்சி யும்


3  போர்டு  மீட்டிங்கில் நாயகன்  பேசும்  உணர்ச்சி  மிகு  உரை 


ரசித்த  வசனங்கள் 


1  நம்முடைய  கம்ப்பெனியின்  சிறப்பு  என்ன  தெரியுமா?  தோல்வியின்  விளிம்பிலும்  நாம்  நாமாத்தான்  இருப்போம்


2 ஒரு  விஷயத்தைப்பற்றி  முழுசா  தெரிஞ்சுக்காம  எல்லாம் தெரிஞ்ச  மாதிரி பேசறவங்களை  நான் சகிச்சுக்க  மாட்டேன் 


3   ஒரு  கம்பெனி  அல்லது  ஒரு  பிராண்ட்  சக்சஸ்ஃபுல்லா  இருக்கும்போதுதான்  செலவு  பண்ணுவாங்க , ஆனா  நாம  இப்போ  இருப்பது  ஃபெய்லியர்  பொசிஷன் 


4  நாம  தோற்றுக்கொண்டிருக்கிறோம்  என்பதற்காக எதிரி  நம்மை  விட  பெஸ்ட்னு  சொல்லிட  முடியாது 


5  உங்கள்  குறைகளை  சுட்டிக்காட்டும்  ஒரு  விமர்சகர்  உங்களுக்குக்கிடைத்தால்  அவரை  ஒரு  புதையல்  மேப்பை  ஃபாலோ  பண்ணுவது போல  ட்ரீட்  செய்யலாம் 

6  இது  பணம்  சம்பந்தப்பட்ட  விஷயம்  இல்லைனு  ஒருத்தர்  சொன்னாலே  அவங்களுக்கு  பணம்  தான்  முக்கியம்னு  அர்த்தம் 


7  பர்ஃபெக்சன் தான்  முக்கியம்னா  என்  கதை  எப்பவோ  முடிஞ்சிருக்கும் 


8 விரக்தில  எடுக்கும்  முடிவும் , விரக்தில  பார்க்கும்  பார்வையும் ஒன்றாக  இருக்க  முடியாது 


9  உன்னோட  குரல்  கண்டதையும்  யோசிக்கச்சொல்லும், என்னோட  குரல்  வரலாற்றில்  இடம்  பிடிக்கச்சொல்லும்


10  எனக்கு  எப்பவுமே  நோ  என்கிற  பதில்  பிடிக்காது 

11   குடும்பத்துக்காக  நம்ம  வாழ்க்கை  பூரா  கொடுத்துட்டே  இருப்போம், ஒரு  கட்டத்துல  கொடுக்கறதுக்கு  எதுவுமே  இல்லைன்னாக்கூட  அவங்களுக்காக  உழைச்சுக்கிட்டே  இருப்போம்


12   நாம  மனசுல  இருக்கறதை  எதிராளிக்கு  சொல்லனும்னு  நினைக்கறது  தப்பில்லை , அதுக்கான  வாய்ப்பு  வராதப்ப  அதுக்கான  முயற்சியை  மட்டும்  விட்டுடவே  கூடாது 


13  நான்  மனித  உருவத்தில்  இருக்கும்  மான்ஸ்டர் 


14  வாழ்க்கைல  எதுவும்  இலவசமா  கிடைக்காது , ரிஸ்க்  எடுத்துத்தான்  ஆகனும் 


15  பொதுவாகவே  ஒரு  விஷயம்  ஒண்ணு  அழகா  இருக்கனும், அல்லது பிராக்டிக்கலா  இருக்கனும், எப்பவாவதுதான்  இது  ஒண்ணு  சேரும்


16  நாம  தயாரிக்க்கப்போகும் சாம்ப்பிள்  ஷூ  தனி  நபர்  உபயோகிக்கும்  மாடலா  இருக்கனும், அதை பல்லாயிரக்கணக்கான  மக்கள்  ஃபாலோ  ப்ண்ணப்போறதாவும்  இருக்கனும்


17  ஷூ ல  51%  ஒயிட்  கலர்தான்  இருக்கனும், மீறுனா  ஃபைன்  போடுவாங்க 


18   நான்  இந்த  கம்பெனியின் சி ஈ ஓ, மீட்டிங்க்கு  வேணும்னே  லேட்டா

 எல்லாம்  வர  முடியாது


  நீ  பிசியானவன்னு  காட்டிக்க  வேண்டிய்  தேவை  இருக்கு , அதனால  நீ  லேட்டாதான்   வரனும்   ( கலைஞர்  பேசும்   கலைஞர்  பேசும்  மீட்டிங்க்குகளில் எம் ஜி ஆர்  இந்த  ஃபார்முலாவைத்தான்  கடைப்பிடித்தார் -  இருவர்  பட  ரெஃப்ரென்ஸ்)


19   சாம்ப்பிள்  ஒண்ணே  ஒண்ணு  போதும்  ஒரு விஷயத்தை  நிறைய  செஞ்சா  அதனோட  வேல்யூ  குறைஞ்சிடும் 


20  உன்  வேலையை  பூர்த்தி  செய்து  முடிக்கும்  வரை  உன்  வேலை  முடிவதில்லை 


21  சில  நேரங்களில்  நம்மால  எது  முடியுமோ  அதை  மட்டும்  செஞ்சா  போதும் 


22   எல்லாருக்கும்  ஒருத்தரைப்பிடிக்கனும்னா  அவரு  கிரேட்டாவும்  இருக்கனும், நியூ  வாகவும்  இருக்கனும்


23  எல்லோரும்  எதிர்பார்க்கும்  பேட்டர்ன்  என்னன்னா இருப்பதிலேயே  அதிக  உயரத்துக்கு  உங்களைக்கொண்டு  போய்  பிறகு  பழையபடி  கீழே கொண்டு  வ்ந்து  விட்டுடுவாங்க 


24  நிறைய  பேரால உச்சத்தைத்தொட  முடியும், ஆனால்  கீழே  விழும்போதுதான்  உடைஞ்சு  போய்டுவாங்க 


25    ரூல்சை  பிரேக்  பண்றவங்களைத்தான்  எல்லாரும்  ஞாபகம்  வெச்சுக்குவாங்க 


26  நாம  பண்ண  வேண்டிய  டீலை  கரெக்டா  பண்ணி  முடிச்சுட்டா  பணம்  ஆட்டோமேடிக்கா  கொட்டிட்டே  இருக்கும் 


27  வேற  யாருமே  அந்த  கண்டிஷனுக்கு  தயாரா  இல்லை , ஆனா  கிடைக்கற  வாய்ப்பை  வெச்சு  ஒருத்தரை  யூஸ்  பண்ணிக்கற  டெக்னிக்  உனக்கு  கை  வரப்பெற்றிருக்கு 

28  நீ துரத்தறதுக்கு  கம்ப்பெனில  இனி  எந்த  முயலும்  இல்லை 


 முயலைக்குறைச்சு  எடை  போடாதே , ஏன்னா  முயல்  நிறைய  குட்டி  போடும், தெரியுமில்ல?  


29  நான் ஒரு  ஏஜெண்ட் , எனக்கு  நண்ப்ர்கள் யாருமே  இல்லை , எல்லாருமே  க்ளையண்ட்ஸ்தான்


30  நான்கு  எழுத்துபெயர்  ஒரு  பிராண்டுக்கு  வைத்தால்  அது  மக்களுக்குப்பிடிக்கும்னு  கன்சல்ட்டண்ட்ஸ்  சொன்னதாலதான்  அப்படி பெயர்  வைத்தேன்


31  நீ  பெரிய  திறமைசாலி , தைரியசாலியும்  கூட , இந்த  கம்பெனிக்கு  இதுதான்  தேவை 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - சுய  முன்னேற்ற  புத்தகங்கள் , கட்டுரைகள்  விரும்பிப்படிப்போர்    பார்க்க  வேண்டிய  நல்ல  படம் , ரேட்டிங் 3 / 5 



Air
AirFilmPoster.png
Theatrical release poster
Directed byBen Affleck
Written byAlex Convery
Produced by
Starring
CinematographyRobert Richardson
Edited byWilliam Goldenberg
Production
companies
Distributed by
Release dates
  • March 18, 2023 (SXSW)
  • April 5, 2023 (United States)
Running time
112 minutes[1]
CountryUnited States
LanguageEnglish
Budget$70–90 million[2][3]
Box office$85.5 million[4][5]

Monday, May 15, 2023

சொப்பன சுந்தரி (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( பிளாக் ஹ்யூமர் காமெடி மெலோ டிராமா) @ டிஸ்னி ஹாட்ஸ்டார் ப்ளஸ்

 


 2020 ல்  ரிலீஸ்  ஆன  லாக்கப்  எனும்  மிஸ்ட்ரி  த்ரில்லர்  படத்தை  இயக்கிய     எஸ் ஜி  சார்லஸ்  இப்போது  காமெடி  படம்  ஒன்றை  எடுத்திருக்கிறார். 2023   ஏப்ரல்  14  அன்று  திரைக்கு  வந்த  இப்படம்  இப்போது டிஸ்னி+ ஹாட் ஸ்டார்  ரிலீஸ்  ஆக  வந்துள்ளது. படத்தின்  டைட்டில் கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி  காமெடி  டிராக்  ஆன  காரை  வெச்சிருந்த  சொப்பன  சுந்தரியை  இப்போ  யாரு  வெச்சிருக்காங்க  என்ற  வரியிலிருந்து  உருவானது . இது  போக  சொப்பன  சுந்தரி  நாந்தானே  சொப்பன  லோகத்தில்  தேன்  தானே ( வீர  சிவாஜி)  செம  ஹிட்  பாடல்  வரியிலும்  வருகிறது 

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி  தன்  அம்மா, அக்கா , நோய்வாய்ப்பட்டு படுக்கையில்  வீழ்ந்திருக்கும்  அப்பா  உடன்  வசித்து  வருகிறார் அண்ணன்  லவ்  மேரேஜ்  பண்ணி  தனிக்குடித்தனம்  போய்  விட்டான். குடும்பத்தைக்காப்பாற்றும்  பொறுப்பு  நாயகிக்கு  இருக்கிறது .ஒரு  நகைக்கடையில் வைத்த   போட்டி  கூப்பன்    மூலம்  நாயகிக்கு  10  லட்சம்  ரூபாய்  மதிப்புள்ள    கார்  கிடைக்கிறது


கார்  கைக்கு  கிடைத்ததும்  அக்காவுக்கு  ஒரு  வரன்  அமைகிறது . மாப்பிள்ளை  வீட்டாரின்  வரதட்சனைக்கோரிக்கையாக  அந்த  கார்  டார்கெட்  செய்யப்படுகிறது. இந்த  சூழ்நிலையில்  நாயகனின் அண்ணன்  மூலம்  பிரச்சனை  வருகிறது 


 மாப்பிள்ளை  அவர்தான் , ஆனா  அவர்  போட்டிருக்கும்  சட்டை  என்னுது  என்ற  படையப்பா  பட  காமெடி போல  கூப்பனில்  நாயகி  பெயர்  தான்  இருக்கிறது , ஆனால்   நகையை  வாங்கியது  நாயகியின்  அண்ணன். அதுவும்  அவருக்காக  வாங்க  வில்லை , கமிஷனுக்கு  ஆசைப்பட்டு  வேறு  ஒருவருக்கு  வாங்கித்தந்தது


அக்காவின்  மாப்பிள்ளை  ஒரு  ரைடு  போய்ட்டு  வரலாம்னு  காரில்  போகும்போது  ஒரு  விபத்து  ஏற்பட்டு  அடிபட்ட  ஆள்  டெட் பாடி  காரில்  டிக்கியில்  மறைக்கபப்டுகிறது.


போலீஸ்  ஸ்டேஷனில்  கார்  இருக்கிறது. இந்தப்பிரச்சனைகளை  எல்லாம் நாயகி  எப்படி சமாளிக்கிறார்  என்பதே  மீதி கதை 


நாயகியாக ஐஸ்வர்யா  ராஜேஸ்   காமெடி , செண்ட்டிமெண்ட்  என  எல்லாக்காட்சிகளிலும்  அசத்துபவர் க்ளைமாக்ஸில்  ஆக்சன்  சீக்வன்சிலும்  புகுந்து  விளையாடி  இருக்கிறார்


நாயகியின்  அக்காவாக லட்சுமிப்ரியா  சந்திரமவுலி  அமைதியாக  வந்து  போகிறார். வாய்  பேச  முடியாத  மாற்றுத்திறனாளியாக  வரும் இவர்  முக  பாவனைகள் , கண்களாலேயே  பேசி  விடுகிறார்

 அம்மாவாக  தீபா  சங்கர்  லொட  லொட  என  வாய்  பேசும்  வாயாடிக்கேரக்டரில்  அதகளம்  பண்ணி  இருக்கிறார்


அண்ணனாக  கருணாகரன்  அடக்கி  வாசித்து  இருக்கிறார். இவரின்  மச்சானாக  வரும்  மைம்  கோபிக்கு  வில்லன்  ரோல், ஓக்கே  ரகம் 


ரெடின்  கிங்க்ஸ்லி  காமெடி  ரோலில்  களை  கட்ட  உதவுகிறார்


நடிக்ர்கள்  தேர்வும்  அவர்களது  கச்சிதமான  நடிப்பும்  படத்தின்  வெற்றிக்கு  முக்கியக்காரணங்கள் . கோல  மாவு  கோகிலா  படம்  போல  தர  வேண்டும்  என்ற  முனைப்பு  இயக்குநரிடம்  தெரிகிறது


விஷால்  ச்ந்திர  சேகர்  இசையில்  2  பாடல்கள்  ஓக்கே ரகம்,  அஜ்ம்ல பின்னணி  இசையில்  கலக்கி  விட்டார்


கே சரத்  குமாரின்  எடிட்டிங்கில்  2  மணி  நேரத்துகு  3  நிமிடம்  குறைவாக  டைம்  டியூரேஷன்  வரும்படி  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்

பால  முருகன் , விக்னேஷ்  கோபாலன்  இருவ்ரும் ஒளிப்பதிவில்  தங்கள்  பங்களிப்பை  சரியாக  செய்திருக்கின்றனர்  


சபாஷ்  டைரக்டர்


1  பின்னணி  இசை  பிரமாதம், ஒரு  த்ரில்லர் படத்துக்குத்தேவையான  மூட்  பிஜிஎம் மில்  நல்லாவே  கிடைக்கிறது 


2   திருடனுக்குக்கூட   கல்வி  அறிவு  முக்கியம்  என  உணர்த்தியபாங்கு 


3   நாயகியின்  அம்மா  கேரகடர் , கிங்க்ஸ்லீ  கேரக்டர்  இரண்டும்  ப்டத்தில்  காமெடி  களை  கட்ட  முக்கியக்காரணங்கள் 


  ரசித்த  வசனங்கள் 


1  நான்  வாங்குன  காசையே  திருப்பித்தர  மாட்டேன் , இவன்  என்னடான்னா  வட்டிக்காசை  கேட்கறான்


2   யார்  கூப்ட்டாலும்  பிசியா  இருக்கற மாதிரி  காட்டிக்கனும்னு நீதானே  சொன்னே?


 அதுக்காக போலீஸ்  ஸ்டேஷன்ல எதுக்கோ  கூப்ட்டு விட்டிருக்காங்க , இன்ஸ்பெடரை  வெய்ட் பண்ணச்சொல்லுங்க , வேலையை  முடிச்ட்டு வர்றோம்னு  சொல்றதா? 


3 நான்  சொல்லப்போகும்  விஷயத்தைக்கேட்டு  ஷாக்  ஆகிடாதே


 ஆ


 மச்சான்  நான்  இன்னும்  சொல்லவே  இல்லை 


4    கார்  எங்கே? காணோம் ?


 அதுவாக்கிங்  போய்  இருக்கு 


5  எதுக்கும்மா  இப்போ  தலைல  முக்காடு  போடறே?


 போலீஸ்  ல  மாட்டாம  இருக்க  மாறு  வேஷம் 


4   டேய்  எதுக்குடா  வீடு  புகுந்து  திருடுனே?


 கார்  பில்லை  எடுக்க  போனேன்  சார்., பில்  இருந்தாதான்  கார்  தருவேன்னு  ஒரு   கூமுட்டை  சொன்னானாம்


 யோவ், அந்த  கூமுட்டை  இந்த  இன்ஸ்பெக்டர்தான் 

 அய்யய்யோ 


5   அவன் ஒரு நாள்தான்  இங்கே   இருக்க  முடியும், அவன்  ஊருக்குபோகனும், அவன்  ஆயா  செத்துப்போச்சு 


 எனக்குதான்  ஆயாவே  இல்லையே? 


 உனக்கு  ஆயா  இருந்துச்சு  , இப்போ  செத்துப்போச்சு 


 ஓ, நீ  அப்படி  வர்றியா? 


6   எலெக்சன்  வர  இன்னும்  நாலு  வருசம்  இருக்கே? அதுக்குள்ளே பணம்  கேட்டா  எப்ப்டி ?


 அட்வான்சா  தரலாமில்ல> ‘

  ஜனங்களை  ரொம்ப  கெடுத்து  வெச்சிருக்காங்க 


7  பொண்ணுங்க  அப்பாவை  நம்பி  மட்டும்  வாழ்றதில்லை , அண்ணன், தம்பி  எல்லாரயும்  நம்பி தான், இது  உனக்கு  புரிஞ்சா  சரி  


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் \


1  பொதுவாக  ஒரு  நிறுவனம்  நடத்தும்  பரிசுப்போட்டியில்  அதில்  பணி புரியும்  நபர்கள்  கலந்து  கொள்ள  முடியாது . நகைக்கடையில்  பணி ஆற்றும்  நாயகிக்கு  பரிசு எப்படி  விழுந்தது ?


2  ஓப்பனிங்  ஷாட்டில்  நகைக்கடை  ஊழியர்  நாயகிக்கு  பரிசு  விழுந்த  தகவலை  தெரிவிக்க  நாயகியின்  வீட்டுக்கு  வரும்போது  விசாரித்துத்தான்  வருகிறார். சக  ஊழியரை  அவருக்கு ஏன்  அடையாளமே  தெரியவில்லை ? 


3   நகை  வாங்கியது  அண்ணன் , ஆனால்  பரிசுக்கூப்பனை  ஃபில்லப்  செய்து  அனுப்பி  பரிசு  பெற்றது நாயகி . இந்தக்குழப்பத்தில் பரிசு  தரும்போது  பில்  கேட்கனுமே?  கேட்கவே  இல்லை , பிறகுதான்  பில்  பிரச்சனை  வருகிரது . கார்  பரிசு  தரும்போதே பில் கேட்டிருக்க  வேண்டும் 


4  நாயகியின்  அண்ணனின்  மச்சினன் நாயகியை  நடு  ரோட்டில்  பளார்  என  அடிக்கிறார். டொமெஸ்டிக்  வயலென்ஸ்  கேசில்  உள்ளே  போடலாமே? ஏன்  புகாரே  தரவில்லை ?


5 கார்  டிரைவிங்  பழகுபவர்கள்  பழைய  காரில்  தான்  பழகுவார்கள் , பரிசாக  விழுந்த  புத்தம்புது  காரில்  பழகி  காரைகண்டம்  பண்ணுவாங்களா? 


6  பில்  ஒரிஜினல் நகை   ஒனரிடம்  இருக்கும், ஆனால்  பில் காப்பி  கடைல  இருக்குமே?  அந்தப்பேரும்,  கூப்பன்  பேரும் ஒரே  பேரா?னு  செக்  பண்ண  மாட்டாங்களா? 


7  கார் ஒரு  விபத்து  ஏற்படுத்துனா  ஒண்ணா  அதை  போலீஸ்ல  இன்ஃபார்ம்  பண்ணனும், அல்லது  நைசா  ஓடிப்போய்டனும், இதுதான்  ரெகுலரா  செய்வது . யாராவது  கார்  இடிச்ச  ஆள் இறந்துட்டான்னு  அவன்  டெட்  பாடியை  அதே  காரில்  உள்ளே  வைப்பார்களா? 


8   வீடு  புகுந்து  கார்  பில்லை  தேடி  திருடுவது  தேவை  இல்லாத  ரிஸ்.க் அதுக்கு  ஓனர்ட்ட  ஏதாவது  பொய்யைச்சொல்லி  பில்லை  நேரடியாவே  வாங்கி  இருக்கலாம் 


9  பில்லை  திருடும்போது  அதை  கசக்கி  உருண்டை  ஆக்கி  தூக்கிப்போட்டுட்டு  மீண்டும்    கிங்க்ஸ்லீ  கைல  பில்  அயர்ன்  பண்ணின    அரிசி  மாதிரி  இருப்பது  எப்படி ?


10  பக்கவாத  நோயால்  பாதிக்கப்பட்டு  கிடையில்  கிடக்கும்  ஒரு  குடிகாரனின்  கிட்னியை  எப்படி  விற்க  முடியும் ? ஆல்ரெடி  குடிகாரன்  கிட்னி  சட்னி  ஆகி இருக்குமே? 


11   அவசர  பனத்தேவை  உ:ள்ள  நாயகியை  அடைய  நினைக்கும்  போலீஸ்  ஆஃபீசர்  ரூ  ஒரு  லட்ச  ரூபாயை  நாயகி  கையில்  கொடுத்து    நீ  கேட்டதை  நான்  கொடுத்துட்டேன், நான்  கேட்டதை  நீ  எனக்கு  தா  அப்டினு  கெஞ்சிட்டு  இருக்கார். நினைத்தபடி  இணங்கினால்தான்  ப்ணம்னு  மிரட்டுவதுதானே  போலீஸ்  வழக்கம் ?


12  போலீஸ்  ஆஃபீசர்   முன்  நாயகி  ஆதாரம்  உள்ள  செல்  ஃபோனைக்காட்டி  இதை  பிரஸ்க்கு  அனுப்பிடுவேன்னு  மிரட்றாரே? அவர்  அதை  பிடுங்கி இருந்தால்  என்ன  ஆகும் ? 


13  என்னதான்  காமெடிக்கு  என்றாலு ம்  நாயகியின்  அப்பாவின்  கிட்னியை  விற்பதும்   அதை  வைத்து  மொக்கை  காமெடி  பண்ணுவதும்  கோபம்  வர்ற  மாதிரி  காமெடி  பண்ணாதீங்க  என  சொல்ல  வைக்கிறது 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  லாஜிக்  மிஸ்டேக்ஸ்  எல்லாத்தையும்  மறந்துட்டுப்படம்  பார்த்தா  2  மணி  நேரம்  டைம்  பாஸ்  மூவி . சீரியல்  பார்க்கும்  பெண்கள்  தவிர  அனைவருக்கும்  பிடிக்கும்  ரேட்டிங்  2.75 / 5 





Soppana Sundari
Soppana Sundari.jpg
Theatrical release poster
Directed bySG Charles
Written bySG Charles
Produced by
  • Balaji Subbu Vivek
  • Ravichandran
Starring
Cinematography
  • Balamurugan
  • Vignesh Rajagopalan
Edited byK. Sarath Kumar
Music by
Production
companies
Release date
  • 14 April 2023

Sunday, May 14, 2023

MEMORIES(2023) மெமரீஸ் - தமிழ் - சினிமா விமர்சனம் ( சைக்கலாஜிக்கல் த்ரில்லர்) @ அமேசான் பிரைம்

 


  எட்டு  தோட்டாக்கள் , ஜீவி  பாகம் 1  , பாகம்  2 ,ஆகிய  படங்களில்  நடித்த  நடிகர்  வெற்றி  நாயகனாக  நடித்த  தமிழ்ப்படம்  இது.மலையாளப்பட   இயக்குநர்களான ஷ்யாம்  &  பிரவீன்  தான்  இயக்கி  உள்ளனர். ஃபேஸ்புக்  பதிவர் அஜயன்  பாலா  தான்  வசனம் . 2023  மார்ச்  10  அன்று  திரை  அரங்குகளில்  வெளியான  இப்படம்  வசூலில்  தோல்வியையே  கண்டது , அளவுக்கு  மிஞ்சினால்  அமிர்தமும்  நஞ்சு  என்ற  பழமொழிக்கு  ஏற்ப   ஏகப்ப்ட்ட  ட்விஸ்ட்கள் வைத்து  அதுவே  பேக்  ஃபயர்  ஆன  படம்  இது , இப்போது  அமேசான்  பிரைம்  ஓ டி  டி  யில்  காணக்கிடைக்கிறது

 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  உடைய  அப்பா  ஒரு  சயிண்ட்டிஸ்ட் , மனிதனின்  மூளையில்  நினைவுகளை  அழித்து  புதிய  நினைவுகளை பதிக்க  வைப்பதில்  முயற்சி  செய்து  வருபவர் . 24  மணி  நேரமும்  இவருக்கு  ஆராய்ச்சி  நினைவுதான். குடும்பத்தைப்பற்றி  கவலைப்படவில்லை . ஆனால்  நாயகன்  அப்பா  மீது  பாசமாக  இருக்கிறார்


அளவு  கடந்த  பாசத்தை  அப்பா  மீது  வைத்திருக்கும்  நாயகன்  ஒரு  நாள்  வீட்டுக்கு  வரும்போது  கண்ணாடி  முன்  நின்று  அப்பா  பேசிக்கொண்டிருப்பதைப்பார்க்கிறார். மகன்  எல்லாம்  எனக்கு  ஒரு  பொருட்டே  இல்லை , எனக்கு  ஆராய்ச்சிதான்  முக்கியம், அதற்கு  இடையூறாக  இருக்கும்  மகன் , பாசம்  இவை  மீது  எனக்கு  வெறுப்பு  என்கிறார்.


 இதனால்  கடுப்பான  நாயகன்  சொந்த  அப்பாவையே  போட்டுத்தள்ளி  விடுகிறான், இப்போது   நாயகன்  தன்  அப்பா  செய்த  ஆராய்ச்சியே  கதி  என  இருக்கிறார். இவரது  வாழ்வில்  நாயகி  உள்ளே  வருகிறார். இவரும்  ஒரு  டாக்டர் தான், நாயகன்  தன்  காதலை நாயகியிடம்  வெளிப்படுத்தும்போது  நாயகி  அதை  ஏற்றுக்கொள்ளவில்லை.இதனால்  கோபம்  கொண்ட  சைக்கோ  ஆன  நாயகன்  நாயகியின்  வீட்டுக்கே  வந்து நாயகியின்  அம்மா, அப்பா , நாயகியின்  வருங்கால  மாப்பிள்ளை , நாயகி  என  நால்வரையும்  கொலை  செய்து  விடுகிறார்


 இந்த  நான்கு கொலைகளில் இருந்து  தப்பிக்க  நாயகன்  ஒரு  குறுக்கு  புத்தி  வேலை  செய்கிறான். வேறு  ஒரு  நபரின்  மூளையில்  இந்த்  மெமரீஸ்  எல்லாம்  பதிய  வைத்து  அந்த  4  கொலைகளையும்  செய்தது  அவன்  தான்  என்பதாக  நம்ப  வைக்கிறார்.


அப்பாவி  ஆன  அவன்  ஜெயிலில்  10  வருடங்களாக  தண்டனை  பெற்று  வருகிறான். இந்த  வழக்கில்  சந்தேக,ம்  கொண்ட  ஒரு  ஆஃபிசர்  நாயகன்  தான்  குற்றவாளி  என்பதை  அறிந்து  நாயகனின்  பாணியிலேயே  எப்படி  கேசில்  சிக்க  வைக்கிறார்  எனப்தே மீதிக்கதை 


இப்போது  நான்  சொன்ன  கதை  படத்தின்  கடைசி  10  நிமிட  கதை . மீதி   முன்னே  வரும்  அனைத்து  திரைக்கதையும்  தலையை  சுற்ற  வைப்பவை. 


நாயகனாக  வெற்றி , சைக்கோ  டாக்டர்  ஆக , போலீஸ்  ஆஃபீசர்  ஆக  (மெமெரீஸ்  ஃபீடிங்) , வெங்கி  ஆக  என  பல  கெட்டப்கள் . ஒரு  கம்லோ  விக்ரமோ  செய்ய  தகுதியான  பவர்  ஃபுல்  ரோல் . கச்சிதமாக  செய்து  இருக்கிறார்.


நாயகி   ஜானகி  ஆக  பார்வதி  அருண் . அழகான  குடும்பக்களை  உள்ள  பாந்தமான  தோற்றம், ஆனால்  அதிக  காட்சிகள்  இவருக்கு  இல்லை  


சான்  லோகேஷ்  தான்  எடிட்டிங். 2  மணி  நேரம்  படம்  ஓடுமாறு  டியூரேஷன்  வைத்து  கட்  பண்ணி  இருக்கிறார், கவாஸ்கர்  அவினாஷின்  இசை  ஓக்கே  ரகம் , பின்னணி  இசையில்  விறுவிறுப்பைக்கூட்டி  இருக்கலாம். ஒளிப்பதிவு கச்சிதம் 


ஷ்யாம், பிரவீன்  என  இரண்டு  மலையாளப்பட  இயக்குநர்கள்  தான்   படத்தை  இயக்கி  இருக்கிறார்கள் . தலைசுற்ற  வைக்கும்  திரைக்கதை 


சபாஷ்  டைரக்டர்


1  இந்தபடத்தை  எடிட்டருக்கு  சொல்லி  புரிய  வைத்து  கச்சிதமாக  கோர்த்து  விட்டு  நம்மிடம்  கோர்த்து  விட்ட  லாவகம்


2  இந்தக்கதையை  நம்பி  தயாரிப்பாளரை  முதலீடு  செய்ய  வைத்த  சாமார்த்தியம்


3     கமர்ஷியலாக  ஹிட்  படங்களை  மட்டுமே  தொடர்ந்து  கொடுத்து  வந்த  வெற்றியை  இந்தக்கதை  உங்களுக்கு  பெரிய  பெயர்  வாங்கித்தரும்  என  அடித்து  விட்டு  படத்தில்  புக்  செய்த  சாமார்த்தியம்



  ரசித்த  வசனங்கள்  ( அஜயன்  பாலா) 


1  கோமா வில்  இருக்கும்  கோமாளி  மாதிரி  பண்றே.


2  மாட்டைத்தின்ன  மலைப்பாம்பு  மாதிரி  என்னடா  பார்க்கறே? 


3  கார்டியன்   ஏஞ்சல்னா  யார்னு  தெரியுமா?  கஷ்டப்படறவங்களைக்காப்பாத்த  கடவுள்  யாரையாவது  அனுப்புவாரு 


4  உங்க்ளுக்குத்தேவை  பணம், எனக்குத்தேவை  பிணம் . இந்த நாட்டில்  தினசரி 4000  கொலைகள்  நடக்குது 


5  இந்த  உலகத்தில்  அறிவுரையைத்தவிர  வேறு  எதுவுமே  இலவசமா  கிடைக்காது 


6  இந்த  உலகத்தில்  நடக்கும்  எல்லாத்தப்புக்குமே  காரணம்  பெண்ணின்  அழகுதான் 


7   இந்த  உலகத்துல  நடக்கற  எல்லா  விஷயங்களுக்கும்  இன்னொரு  பக்கம்  இருக்கும், ஆனா  பொய்யை  மட்டுமே  நம்பும்  உலகத்துக்கு  அது  பற்றிக்கவலை  இல்லை 


8  காக்கிச்சட்டைக்கும்,  கறுப்புச்சட்டைக்கும்  உண்மைங்கறது  பேதி  மாத்திரை  மாதிரி , பிடிக்கவே  பிடிக்காது 


9  ரைட்டர்  ஸ்டீஃபன்  க்ரைன்  சொன்ன  விஷய்ம்  என்னான்னா  இந்த  உலகத்தில்  நடக்கும் எல்லா  க்ரைம்க்குப்பின்னாடியும்  ஒரு  பெண்  இருப்பாள் 


10  இந்த  உலகத்தில் நடக்கும்  எல்லாக்கொலைகளுக்கும் பின்னால  100  கைகள்  காட்டப்படும், ஆனால்  கடைசில  தண்டிக்கப்படுவது  குற்றம்  செய்த  ஒரே ஒருவனை  மட்டும்தான்  என  ரைட்டர்  ஸ்டீஃபன்  க்ரைன்  சொல்றார்


11  நாம  போகும்  பாதை  தவறான  பாதைனு  தெரிய  வந்தா  புதுப்பாதையைக்கண்டு  பிடிக்கத்தெரியனும்,அதை  விட்டுட்டு  பழைய  பாதையையே  சுத்தி  சுத்தி  பார்த்துட்டு  இருக்கக்கூடாது


12உண்மை  எப்ப்வுமே  கற்பனையை  விட  பயங்கரமானது 


13   ஃபெய்லிங்க்  ஈஸ் ஆல்வேஸ்  நாட்  ஃபெய்லியர்


14  மெம்மரி  எரேசிங்  அண்ட்  பிளேண்ட்டிங்  ஆராய்ச்சியில்  இதுவரை  2%  பேர்தான்  ஜெயிச்சிருக்காங்க 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  ஓப்பனிங்  சீன்ல  போலீஸ்  ஜீப் ல  4  போலீஸ்  ஹீரோ  போற  காரை  10  நிமிசமா  துரத்தறாங்க , பிடிக்க  முடியலை . கார் டயரை  ஷூட்  பண்ண  முயற்சி  கூட  பண்ணலை 


2  ஹீரோ  கொலைகாரன்  என  சொல்லும்  அவர்து  நண்பன்  என்ன  தைரியத்தில்  போலீசால்  தேடப்படும்  ஆளை  பைக்கில்  அழைத்து  வருகிறார். ஹெல்மெட்  கூட  போடலை . வழில  போலீஸ்  பிடிச்சா  என்ன  ஆகும் ? 


3  நாயகனோட  காதலி  ஒரு  நாள்  நாயகனிடம்  எனக்கு  ஒரு  தங்கச்சி  இருக்கா , அஞ்சு  வயசு  சின்னவ  என்னை விட  அப்டினு  மச்சினிக்கு  இண்ட்ரோ  கொடுக்குது. அது  கூட  தெரியாமயா  லவ்  பண்ணிட்டு  இருந்தாரு ? 


4  போலீசால்  தேடப்படும்  நாயகன்  அசால்ட்டா  ஹோட்டல்ல  டிஃபன்  சாப்பிட்டுட்டு  இருக்கார் , அவர்  தான்  கொலைகாரன்னு  பேப்பர்ல  ஃபோட்டோ  எல்லாம்  வந்திருக்கு , அட்லீஸ்ட்  நண்பன்  பார்சல்  வாங்கிட்டு  வந்து  நாயகனுக்கு  தருவது  போல்  காட்சி  அமைத்திருக்கலாம் 


5  நாயகனை  பழைய  வீட்டில்  அடைச்சு  வைக்கும்  ஆள்  அந்த  வீட்டில்  உள்ள  இத்துப்ப்போன  அந்தக்காலக்கதவை  பார்த்துமா  நாயகனை  கை  காலை  கட்டாம  விட்டுட்டுப்போவார்? 


6  நாயகன்  வில்லனின்   மனைவியை  கொலை  பண்ணிட்டு  வெளில  வரும்போது  வில்லன்  ஃபோன்  பண்ணி  மர்டர்  அப்டேட்  கேட்டுட்டு  இருக்கான், சைபர்  க்ரைம்  போலீஸ்  நாயகனோட்  ஃபோன் கிராஸ்  செக்  ப்ண்ணினா  வில்லன்  மாட்டிக்குவானே? அது  வில்லனுக்குத்தெரியலையா?


7  நாயகன்  பொறுப்பே  இல்லாத  பருப்பா  இருக்கான். சுத்தியலால  ஒரே  ஒரு  அடி  தலைல  அடிச்ட்டு  கிளம்பறான். மூச்சு  இருக்கா? நின்னுடுச்சா?னு  செக்  பண்ணக்கூட  இல்லை . ஒரு   கொலையைக்கூட  உருப்படியா  செய்யத்தெரியல 


8  வில்லன்  பீரோவில்  இருக்கும்  நகைகளைத்தான்  திருடச்சொல்றான், ஆனா  நாயகன்  ஓவர்  டைம்  டியூட்டியா வில்லனோட  சம்சாரம்  டெட்  பாடில  இருக்கும்  நகைகளையும் எடுக்கறாரு , அதை  வில்லன்  சொல்லவே  இல்லையே? 




சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  உங்களுக்குப்பிடிக்காதவங்க்  யாராவது  இருக்காங்க , அவங்களைப்பழி  வாங்கனும்னா  நைசா  இது  நல்ல  படம்னு  நம்ப  வெச்சு  பார்க்க  வைக்கலாம், ரேட்டிங் 2 / 5 




Memories
Memories Poster.jpeg
Theatrical release poster
Directed bySyam
Praveen
Written byVipin Krishnan
Syam Praveen
Produced byShiju Thameens
StarringVetri
Parvathy
Dayyana
Ramesh Thilak
CinematographyArmo
Kiran Nupital
Edited bySan Lokesh
Music byGavaskar Avinash
Production
company
Shijuthameen's Film Factory PVT LTD
Distributed byPVR Pictures
Release date
  • 10 March 2023
CountryIndia
LanguageTamil

Saturday, May 13, 2023

யாத்திசை (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஹிஸ்டாரிக்கல் ஆக்சன் டிராமா) @ அமேசான் பிரைம்

 


  பாகுபலி  2  பாகங்களாக  வெளிவந்து  அள்ளிக்குவித்த  வெற்றிதான் மணிரத்னத்தை  பொன்னியின்  செல்வன் படம்  எடுக்கத்தூண்டுகோலாக  அமைந்தது .இந்த  இரண்டுமே  பெரிய  பட்ஜெட்  படங்கள் , ஆனால்  மிகக்குறைந்த  முதலீடு, ஆனால் மிகத்தரமான  படம்   என்ற  ஃபார்முலாவில்  வெளிவந்திருக்கும்  யாத்திசை  தமிழ்  சினிமா  உலகில்  ஒரு  புது  முயற்சி , முற்றிலும்  புது  முகங்களை  வைத்து  தன்  மேக்கிங்கில்  மிரட்டி  இருக்கும்  இயக்குநர்  தரணி ராஜேந்திரனுக்கு  ஒரு  பூங்கொத்து. 2018 ஆம்  ஆண்டு  ரிலீஸ்  ஆன  ஞானசெருக்கு  என்னும்  படம்  தான்  இவரது  முதல்  படம் . திரை  அரங்குகளில்  வெளியாகும்  முன்பே  பல  திரைப்பட  விழாக்களில்  விருதுகளைக்குவித்தது  அவரது  முதல்  படம் ,  இந்த  இரண்டாவது  படமான  யாத்திசை  கமர்ஷியலாகவும்  ஹிட்  ஆகி   விமர்சன  ரீதியாகவும்  பாராட்டுக்களைப்பெற்று  வருகிறது 

ஏழாம்  நூற்றாண்டில்  நிகழும்  கதை  என்பதால் அந்தக்காலத்தமிழில்  வசனங்கள்  இருக்கும். ஒரு  தமிழ்ப்படத்துக்கு  தமிழிலேயே  சப் டைட்டில்  போட  வேண்டிய  நிலை  கொண்ட  படம். ஆனாலும் அந்தக்காலத்தமிழைக்கேட்பதில்  ஒரு  சுகம்  தான். 2023 ஏப்ரல்  21  அன்று  திரை  அரங்குகளில்  ரிலீஸ்  ஆன  இப்படம்  இன்று ( 12/5/2023)  அமேசான்  பிரைம்  ஓ டி டி    தளத்தில்  வெளியாகி  உள்ளது 


10  கோடி  ரூபாய்  பட்ஜெட்டில்  உருவான  இப்படம்  ரிலீஸ்  ஆன  10  நாட்களிலேயெ  20  கோடி வசூலைப்பெற்றுள்ளது . இது  போக  ஓடி டி உரிமம், டி வி ரைட்ஸ்  உரிமம்  லாபம்  தனி 


  ஸ்பாய்லர்  அலெர்ட்


சேர , சோழர்களை  வென்று  சோழ  நாட்டில்  பாண்டிய நாட்டுக்கொடியைப்பறக்க  விட்டு  ஆட்சி  செய்யும்  பாண்டிய  மன்னன்  ரணதீர   பாண்டியன்  எதிரிகளுக்கு  சிம்ம  சொப்பனமாக  விளங்கினான். சேரர்கள் , சோழர்கள்  போன்ற  பெரிய  தலைகளையே  வென்ற  பாண்டியனை  எய்னர்  என்னும்  ப்ழங்குடி  இனத்தினர்  தலைவன்  கொதி  என்பவன்  எதிர்க்கிறான்


1000  படை  வீரர்கள்  மட்டுமே  வைத்திருக்கும்  கொதி  தஞ்சைக்கோட்டையைக்கைப்பற்றுகிறான். வேறு  ஒரு  நாட்டுக்கு  படைகளுடன்  பாண்டியன்  ரணதீரன்  சென்றிருந்தபோது  இந்த  சம்பவம்  நிகழ்கிறது 


திரும்பி  வரும்  பாண்டியன்  ரனதீரன் பெரும்பள்ளிகள்  என்னும்  கூட்டத்திடம் உதவி  கேட்கிறான். இதுதான்  சாக்கு  என  அந்தக்கூட்டத்துப்பெண்ணை  மணம்  முடித்தால்  வரதட்சணை  போல்  படைகளை  அளிப்பதாக  அவர்கள் கூற  அதற்கு  பாண்டியன்  சம்மதிக்கிறான்


இறுதியில் பெரும்  உயிர்  இழப்பைத்தவிர்க்க  பாண்டியன்  ரணதீரன் , கொதி  இருவரும்  சோலோ  ஃபைட்  போடுகிறார்கள் . இருவரில்  யார்  வெற்றி பெற்றார்கள்  என்பது  க்ளைமாக்ஸ் . இதன் இரண்டாம்  பாகமும்  வர  உள்ளது


 கொதி  எனும்  வேடத்தில்  புதுமுக  நடிகர் சேயோன்  ஜிம்  பாடி  உதவியுடன்  கம்பீரமாக  நடித்திருக்கிறார். பதவி  ஆசை , அவரது  கண்களில்  கொப்புளிக்கிறது  , இடைவேளை  வரை  இவர்தான்  நாயகன்


இடைவேளைக்குப்பின்  தான்  பாண்டியன் ரணதீரன்  கேரக்டர்  வருகிறது இந்த  கேரக்டரில்  அறிமுக  நடிகர்  சக்தி  மித்திரன்  நடித்திருக்கிறார். உருவத்தில் , கம்பீரத்தில் , கெத்தில்  கொதி  கேரக்டரை  விட  ஒரு  மாற்று  குறைவாகவே  இவரது  கேரக்டர்  இருக்கிறது, ஆனாலும்  ஒரு  அரசனுக்குரிய  கம்பீரம்  க்ளைமாக்ஸ்  காட்சியில்  காட்டி  இருக்கிறார் 


தேவரடியார்களாக  ராஜலட்சுமி , வைதேகி  இருவரும்  அழகாக  வந்து  போகிறார்கள் , இவர்களுக்கான  ஆடை  வடிவமைப்பு ,  நகைகள்  அனைத்தும்  அருமை 


எய்ன்ர்  இன  பூசாரியாக  ஒரே  ஒரு  காட்சியில்  குரு  சோமசுந்தரம்  அசத்தி  இருக்கிறார்

பெரும்பள்ள  இன  மணப்பெண்ணாக  வரும்  அழகி  நல்ல  முக  லட்சணம் 


ஆர்ட்  டைரக்சன்  முக்கியப்பங்கு  வகிக்கிறது ரஞ்சித் குமார்  வெல்டன்  குமார் ,ஒளிப்பதிவாளர்  அகிலேஷ்  காத்த  முத்து  போர்க்களக்காட்சிகள்  , லாங்க்  ஷாட் , ஏரியல்  ஷாட்களில்  தன்  முத்திரையைப்பதிக்கிறார்


சக்கரவர்த்தியின்  பின்னணி  இசை  ஒரு  சரித்திரப்படத்தின்  பிஜிஎம்  எப்ப்டி  கெத்து  காட்ட  வேண்டும்  என  படிப்பிக்கிறது 


ஆக்சன்  சீக்வன்சை ஓம்  சிவப்பிரகாஷ்  நேர்த்தியாக  செய்து  இருக்கிறார். எடிட்டர்   மகேந்திரன்  கணேசன் கனகச்சிதமாக  2  மணி  நேரப்படமாக  தந்திருக்கிறார்


சபாஷ்  டைரக்டர்


1  செந்தமிழ்  வசனங்கள்  ஒரு  ஆச்சரிய  பிளஸ். அந்தக்காலத்தமிழை  அறியாதவர்களுக்கு  ஒரு  கோனார் நோட்ஸ்  பட  வசனங்கள் , அதே  போல்  ஏரியல்  ஷாட்  காட்சிகளில்  இயற்கை அழகைக்காட்டிய  விதம் 


2  போருக்கு  செல்லும்போது  அந்தக்கால  படைகள் களத்தில்  ஆடு , எருமை  , மனிதன்  என  பலி கொடுப்பது  வழக்கம், அதைக்காட்சிப்படுத்திய  விதம் 

3  நடன  தாரகைகளின்  ஆடை வடிவமைப்பு, அழகு , நடனம் 


4  பின்  பாதியில்  வரும் போர்க்களக்காட்சிகளில்  தீப்பந்தங்களுடன்  வுரும் வீரர்கள்  ஏரியல்  வ்யூ  ஷாட்டில் அழகாகதோன்றும்  காட்சி 


5  பாண்டியன் ரணதீரன்  போருக்கு  ஆதரவு  திரட்ட  ஒரு  திருமணம்  செய்ய  வேண்டிய  சூழலை  காட்டிய  விதம் 


6  கிளாமர்  காட்சிகள்  எடுக்க வாய்ப்பிருந்தும்  பெண்களை  கண்ணியமாகக்காட்டிய  விதம் 




  ரசித்த  வசனங்கள் 


1   ஆட்சிக்கு  அடிப்படை  அதிகாரம்  மட்டுமே


2  பெரும்  குடிகளுக்கு  இடையே  நிகழும் போர்  சிறு குடிகளை  அழித்து  விடும் 

3  காமமே  நம்  இளமைக்குக்காரணம் 

4     என்  பெற்றோரிடம்  நான்  கேட்ட  அதே  கேள்விகளை என்  பிள்ளைகள் என்னிடம்  கேட்க  விடக்கூடாது

5  அந்தணர்  என்கிறீர் ஆனால்  கையில்  காப்பு  கட்டி  உள்ளது , முறுக்கேறிய  தசைகள் , வீரத்தழும்புகள் .. எப்படி ?


 சேர  அந்தணர்கள்  பரசுராமர்  வழி  வந்தவர்கள் 


6  மூன்று  லட்சம்  படை  வீரர்கள்  கொண்ட  ஒரு  அரசை  1000 வீரர்கள்  கொண்ட  ஒரு  சிறு  படை  எதிர்க்கத்துணிந்தால்  அவனே  வீரன் , அந்த  வீரனுக்கு  வீர  சுவர்க்கத்தைப்பரிசளிப்போம் 


7  என்  இசையில்  உன்  அழிவு  தெரிகிறது 


 பெண்ணும் , இசையும்  ஆணின்  விருப்பங்கள் , அழிவுகளல்ல


8  ரணதீரன் ஒரு வீரன், ஒரு சில  நூறு  வீரர்களை எதிர்க்க  பல  ஆயிரம்  படை  வீரர்களுடன்  வருகிறான்


9    மதம்  கொண்ட  யானை  தானே  நிலை  சேரும் , அதுவரை  நாம்  காத்திருப்போம் 


10   நீ  உயர்ந்தவன் , உன்னோடு  இணைவதால்  நானும்  உயர்ந்தவன்  ஆகிறேன் 


11   என்    மகன்  ஒரு  நாள்  அரசனாகவே  பிறப்பான் 


12  ரணதீரன்  மட்டுமல்ல , எல்லா  மன்னர்களும்  அதிகாரத்துக்கு  பயந்தாங்க , இங்கே  அதிகாரம்  மட்டுமே  நிலையானது , அரசர்களோ , அரசுகளோ  நிலையானது  இல்லை 


13  அரசர்கள்  அவர்களது  அதிகாரத்தைத்தக்க  வைக்கவே  எல்லாப்போர்களையும்  நிகழ்த்தினார்கள் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  பரத  நாட்டியம்  ஆடும்  மங்கைகள்  தொப்பை  போட்டு  இருக்கிறார்கள் , இடுப்புச்சதை  தனியாகத்தெரிகிறது . போர்  வீரர்களை தேர்வு  செய்யும்போது  பிரமாதமாக  ஜிம் பாடி  ஆட்களை  நியமித்தவர்கள்  நடன  தாரகைகள்  தேர்வில்  கோட்டை  விட்டு  விட்டார்கள் , அந்தக்கால  பெண்களில்  யோகா  செய்பவர்கள்  , பரத நாட்டியம்  கற்றவர்கள்  பாடி ஃபிட்டாக  இருக்கும் 


2   வெறும்  ஆயிரம்  ப்டை  வீரர்கள்  மட்டுமே  வைத்திருக்கும்  கொதியை  நாயகன் ஆக  பிரமோட்  செய்து  விட்டு  பாண்டியன் ரனதீரனை பில்டப் இல்லாமல்  காட்டிய  விதம், அதே  போல்  அவன்  கொதிக்கு  பயப்பது  போல்  காட்டியது  ஏனோ ?


3  போர்க்காட்சிகள்  நீளம்  அதிகம், கொடூரம்  கோரம்  குறைத்து  இருக்கலாம். கொற்றவை  பலி  காட்சிகள் , பாண்டிய  மன்னன் , மணப்பெண்  தரப்பு  பேச்சு  வார்த்தைக்காட்சிகள்  படத்தின்  வேகத்துக்கு  ஸ்பீடு  பிரேக்கர்ஸ் 


4   இரு  நாயகர்களுக்கு ம்  ஜோடி  உண்டு  ஆனால்  காதல்  காட்சிகள்  இல்லை , இது  பெரும்  குறை 


5 போர்க்களக்காட்சிகள்  பிரமாதம், ஆனால்  ஒரு  காட்சியில்  ஒருவன்    ஒருவனுடன் போரிட்டுக்கொண்டிருக்கும்போது  இன்னொருவன்  அவனை  பின்னால்  இருந்து  தாக்கிக்கொல்கிறான், இது  வீரனுக்கு  அழகில்லையே? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்- 18 +  காட்சிகள் எதுவும்  இல்லை , ஆனால்  குழந்தைகள் , கர்ப்பிணிப்பெண்கள்  தவிர்க்க  வேண்டிய  வன்முறைக்காட்சிகள்  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   சரித்திரப்பட  விரும்பிகள்   அவசியம்  காண  வேண்டிய  ஆக்சன்  டிராமா . ரேட்டிங்  3 / 5 



Yaathisai
Yaathisai poster.jpg
Theatrical release poster
Directed byDharani Rasendran
Written byDharani Rasendran
Produced byK. J.Ganesh
Starring
CinematographyAkilesh Kathamuthu
Edited byMahendran Ganesan
Music byChakravarthy
Production
companies
  • Venus Infotainment
  • Six Star Entertainment
Distributed by
Release date
  • 21 April 2023
Running time
121 minutes
CountryIndia
LanguageTamil
Budget7-10 Crores
Box office20 Crores