Showing posts with label MEMORIES(2023) மெமரீஸ் - தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label MEMORIES(2023) மெமரீஸ் - தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts

Sunday, May 14, 2023

MEMORIES(2023) மெமரீஸ் - தமிழ் - சினிமா விமர்சனம் ( சைக்கலாஜிக்கல் த்ரில்லர்) @ அமேசான் பிரைம்

 


  எட்டு  தோட்டாக்கள் , ஜீவி  பாகம் 1  , பாகம்  2 ,ஆகிய  படங்களில்  நடித்த  நடிகர்  வெற்றி  நாயகனாக  நடித்த  தமிழ்ப்படம்  இது.மலையாளப்பட   இயக்குநர்களான ஷ்யாம்  &  பிரவீன்  தான்  இயக்கி  உள்ளனர். ஃபேஸ்புக்  பதிவர் அஜயன்  பாலா  தான்  வசனம் . 2023  மார்ச்  10  அன்று  திரை  அரங்குகளில்  வெளியான  இப்படம்  வசூலில்  தோல்வியையே  கண்டது , அளவுக்கு  மிஞ்சினால்  அமிர்தமும்  நஞ்சு  என்ற  பழமொழிக்கு  ஏற்ப   ஏகப்ப்ட்ட  ட்விஸ்ட்கள் வைத்து  அதுவே  பேக்  ஃபயர்  ஆன  படம்  இது , இப்போது  அமேசான்  பிரைம்  ஓ டி  டி  யில்  காணக்கிடைக்கிறது

 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  உடைய  அப்பா  ஒரு  சயிண்ட்டிஸ்ட் , மனிதனின்  மூளையில்  நினைவுகளை  அழித்து  புதிய  நினைவுகளை பதிக்க  வைப்பதில்  முயற்சி  செய்து  வருபவர் . 24  மணி  நேரமும்  இவருக்கு  ஆராய்ச்சி  நினைவுதான். குடும்பத்தைப்பற்றி  கவலைப்படவில்லை . ஆனால்  நாயகன்  அப்பா  மீது  பாசமாக  இருக்கிறார்


அளவு  கடந்த  பாசத்தை  அப்பா  மீது  வைத்திருக்கும்  நாயகன்  ஒரு  நாள்  வீட்டுக்கு  வரும்போது  கண்ணாடி  முன்  நின்று  அப்பா  பேசிக்கொண்டிருப்பதைப்பார்க்கிறார். மகன்  எல்லாம்  எனக்கு  ஒரு  பொருட்டே  இல்லை , எனக்கு  ஆராய்ச்சிதான்  முக்கியம், அதற்கு  இடையூறாக  இருக்கும்  மகன் , பாசம்  இவை  மீது  எனக்கு  வெறுப்பு  என்கிறார்.


 இதனால்  கடுப்பான  நாயகன்  சொந்த  அப்பாவையே  போட்டுத்தள்ளி  விடுகிறான், இப்போது   நாயகன்  தன்  அப்பா  செய்த  ஆராய்ச்சியே  கதி  என  இருக்கிறார். இவரது  வாழ்வில்  நாயகி  உள்ளே  வருகிறார். இவரும்  ஒரு  டாக்டர் தான், நாயகன்  தன்  காதலை நாயகியிடம்  வெளிப்படுத்தும்போது  நாயகி  அதை  ஏற்றுக்கொள்ளவில்லை.இதனால்  கோபம்  கொண்ட  சைக்கோ  ஆன  நாயகன்  நாயகியின்  வீட்டுக்கே  வந்து நாயகியின்  அம்மா, அப்பா , நாயகியின்  வருங்கால  மாப்பிள்ளை , நாயகி  என  நால்வரையும்  கொலை  செய்து  விடுகிறார்


 இந்த  நான்கு கொலைகளில் இருந்து  தப்பிக்க  நாயகன்  ஒரு  குறுக்கு  புத்தி  வேலை  செய்கிறான். வேறு  ஒரு  நபரின்  மூளையில்  இந்த்  மெமரீஸ்  எல்லாம்  பதிய  வைத்து  அந்த  4  கொலைகளையும்  செய்தது  அவன்  தான்  என்பதாக  நம்ப  வைக்கிறார்.


அப்பாவி  ஆன  அவன்  ஜெயிலில்  10  வருடங்களாக  தண்டனை  பெற்று  வருகிறான். இந்த  வழக்கில்  சந்தேக,ம்  கொண்ட  ஒரு  ஆஃபிசர்  நாயகன்  தான்  குற்றவாளி  என்பதை  அறிந்து  நாயகனின்  பாணியிலேயே  எப்படி  கேசில்  சிக்க  வைக்கிறார்  எனப்தே மீதிக்கதை 


இப்போது  நான்  சொன்ன  கதை  படத்தின்  கடைசி  10  நிமிட  கதை . மீதி   முன்னே  வரும்  அனைத்து  திரைக்கதையும்  தலையை  சுற்ற  வைப்பவை. 


நாயகனாக  வெற்றி , சைக்கோ  டாக்டர்  ஆக , போலீஸ்  ஆஃபீசர்  ஆக  (மெமெரீஸ்  ஃபீடிங்) , வெங்கி  ஆக  என  பல  கெட்டப்கள் . ஒரு  கம்லோ  விக்ரமோ  செய்ய  தகுதியான  பவர்  ஃபுல்  ரோல் . கச்சிதமாக  செய்து  இருக்கிறார்.


நாயகி   ஜானகி  ஆக  பார்வதி  அருண் . அழகான  குடும்பக்களை  உள்ள  பாந்தமான  தோற்றம், ஆனால்  அதிக  காட்சிகள்  இவருக்கு  இல்லை  


சான்  லோகேஷ்  தான்  எடிட்டிங். 2  மணி  நேரம்  படம்  ஓடுமாறு  டியூரேஷன்  வைத்து  கட்  பண்ணி  இருக்கிறார், கவாஸ்கர்  அவினாஷின்  இசை  ஓக்கே  ரகம் , பின்னணி  இசையில்  விறுவிறுப்பைக்கூட்டி  இருக்கலாம். ஒளிப்பதிவு கச்சிதம் 


ஷ்யாம், பிரவீன்  என  இரண்டு  மலையாளப்பட  இயக்குநர்கள்  தான்   படத்தை  இயக்கி  இருக்கிறார்கள் . தலைசுற்ற  வைக்கும்  திரைக்கதை 


சபாஷ்  டைரக்டர்


1  இந்தபடத்தை  எடிட்டருக்கு  சொல்லி  புரிய  வைத்து  கச்சிதமாக  கோர்த்து  விட்டு  நம்மிடம்  கோர்த்து  விட்ட  லாவகம்


2  இந்தக்கதையை  நம்பி  தயாரிப்பாளரை  முதலீடு  செய்ய  வைத்த  சாமார்த்தியம்


3     கமர்ஷியலாக  ஹிட்  படங்களை  மட்டுமே  தொடர்ந்து  கொடுத்து  வந்த  வெற்றியை  இந்தக்கதை  உங்களுக்கு  பெரிய  பெயர்  வாங்கித்தரும்  என  அடித்து  விட்டு  படத்தில்  புக்  செய்த  சாமார்த்தியம்



  ரசித்த  வசனங்கள்  ( அஜயன்  பாலா) 


1  கோமா வில்  இருக்கும்  கோமாளி  மாதிரி  பண்றே.


2  மாட்டைத்தின்ன  மலைப்பாம்பு  மாதிரி  என்னடா  பார்க்கறே? 


3  கார்டியன்   ஏஞ்சல்னா  யார்னு  தெரியுமா?  கஷ்டப்படறவங்களைக்காப்பாத்த  கடவுள்  யாரையாவது  அனுப்புவாரு 


4  உங்க்ளுக்குத்தேவை  பணம், எனக்குத்தேவை  பிணம் . இந்த நாட்டில்  தினசரி 4000  கொலைகள்  நடக்குது 


5  இந்த  உலகத்தில்  அறிவுரையைத்தவிர  வேறு  எதுவுமே  இலவசமா  கிடைக்காது 


6  இந்த  உலகத்தில்  நடக்கும்  எல்லாத்தப்புக்குமே  காரணம்  பெண்ணின்  அழகுதான் 


7   இந்த  உலகத்துல  நடக்கற  எல்லா  விஷயங்களுக்கும்  இன்னொரு  பக்கம்  இருக்கும், ஆனா  பொய்யை  மட்டுமே  நம்பும்  உலகத்துக்கு  அது  பற்றிக்கவலை  இல்லை 


8  காக்கிச்சட்டைக்கும்,  கறுப்புச்சட்டைக்கும்  உண்மைங்கறது  பேதி  மாத்திரை  மாதிரி , பிடிக்கவே  பிடிக்காது 


9  ரைட்டர்  ஸ்டீஃபன்  க்ரைன்  சொன்ன  விஷய்ம்  என்னான்னா  இந்த  உலகத்தில்  நடக்கும் எல்லா  க்ரைம்க்குப்பின்னாடியும்  ஒரு  பெண்  இருப்பாள் 


10  இந்த  உலகத்தில் நடக்கும்  எல்லாக்கொலைகளுக்கும் பின்னால  100  கைகள்  காட்டப்படும், ஆனால்  கடைசில  தண்டிக்கப்படுவது  குற்றம்  செய்த  ஒரே ஒருவனை  மட்டும்தான்  என  ரைட்டர்  ஸ்டீஃபன்  க்ரைன்  சொல்றார்


11  நாம  போகும்  பாதை  தவறான  பாதைனு  தெரிய  வந்தா  புதுப்பாதையைக்கண்டு  பிடிக்கத்தெரியனும்,அதை  விட்டுட்டு  பழைய  பாதையையே  சுத்தி  சுத்தி  பார்த்துட்டு  இருக்கக்கூடாது


12உண்மை  எப்ப்வுமே  கற்பனையை  விட  பயங்கரமானது 


13   ஃபெய்லிங்க்  ஈஸ் ஆல்வேஸ்  நாட்  ஃபெய்லியர்


14  மெம்மரி  எரேசிங்  அண்ட்  பிளேண்ட்டிங்  ஆராய்ச்சியில்  இதுவரை  2%  பேர்தான்  ஜெயிச்சிருக்காங்க 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  ஓப்பனிங்  சீன்ல  போலீஸ்  ஜீப் ல  4  போலீஸ்  ஹீரோ  போற  காரை  10  நிமிசமா  துரத்தறாங்க , பிடிக்க  முடியலை . கார் டயரை  ஷூட்  பண்ண  முயற்சி  கூட  பண்ணலை 


2  ஹீரோ  கொலைகாரன்  என  சொல்லும்  அவர்து  நண்பன்  என்ன  தைரியத்தில்  போலீசால்  தேடப்படும்  ஆளை  பைக்கில்  அழைத்து  வருகிறார். ஹெல்மெட்  கூட  போடலை . வழில  போலீஸ்  பிடிச்சா  என்ன  ஆகும் ? 


3  நாயகனோட  காதலி  ஒரு  நாள்  நாயகனிடம்  எனக்கு  ஒரு  தங்கச்சி  இருக்கா , அஞ்சு  வயசு  சின்னவ  என்னை விட  அப்டினு  மச்சினிக்கு  இண்ட்ரோ  கொடுக்குது. அது  கூட  தெரியாமயா  லவ்  பண்ணிட்டு  இருந்தாரு ? 


4  போலீசால்  தேடப்படும்  நாயகன்  அசால்ட்டா  ஹோட்டல்ல  டிஃபன்  சாப்பிட்டுட்டு  இருக்கார் , அவர்  தான்  கொலைகாரன்னு  பேப்பர்ல  ஃபோட்டோ  எல்லாம்  வந்திருக்கு , அட்லீஸ்ட்  நண்பன்  பார்சல்  வாங்கிட்டு  வந்து  நாயகனுக்கு  தருவது  போல்  காட்சி  அமைத்திருக்கலாம் 


5  நாயகனை  பழைய  வீட்டில்  அடைச்சு  வைக்கும்  ஆள்  அந்த  வீட்டில்  உள்ள  இத்துப்ப்போன  அந்தக்காலக்கதவை  பார்த்துமா  நாயகனை  கை  காலை  கட்டாம  விட்டுட்டுப்போவார்? 


6  நாயகன்  வில்லனின்   மனைவியை  கொலை  பண்ணிட்டு  வெளில  வரும்போது  வில்லன்  ஃபோன்  பண்ணி  மர்டர்  அப்டேட்  கேட்டுட்டு  இருக்கான், சைபர்  க்ரைம்  போலீஸ்  நாயகனோட்  ஃபோன் கிராஸ்  செக்  ப்ண்ணினா  வில்லன்  மாட்டிக்குவானே? அது  வில்லனுக்குத்தெரியலையா?


7  நாயகன்  பொறுப்பே  இல்லாத  பருப்பா  இருக்கான். சுத்தியலால  ஒரே  ஒரு  அடி  தலைல  அடிச்ட்டு  கிளம்பறான். மூச்சு  இருக்கா? நின்னுடுச்சா?னு  செக்  பண்ணக்கூட  இல்லை . ஒரு   கொலையைக்கூட  உருப்படியா  செய்யத்தெரியல 


8  வில்லன்  பீரோவில்  இருக்கும்  நகைகளைத்தான்  திருடச்சொல்றான், ஆனா  நாயகன்  ஓவர்  டைம்  டியூட்டியா வில்லனோட  சம்சாரம்  டெட்  பாடில  இருக்கும்  நகைகளையும் எடுக்கறாரு , அதை  வில்லன்  சொல்லவே  இல்லையே? 




சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  உங்களுக்குப்பிடிக்காதவங்க்  யாராவது  இருக்காங்க , அவங்களைப்பழி  வாங்கனும்னா  நைசா  இது  நல்ல  படம்னு  நம்ப  வெச்சு  பார்க்க  வைக்கலாம், ரேட்டிங் 2 / 5 




Memories
Memories Poster.jpeg
Theatrical release poster
Directed bySyam
Praveen
Written byVipin Krishnan
Syam Praveen
Produced byShiju Thameens
StarringVetri
Parvathy
Dayyana
Ramesh Thilak
CinematographyArmo
Kiran Nupital
Edited bySan Lokesh
Music byGavaskar Avinash
Production
company
Shijuthameen's Film Factory PVT LTD
Distributed byPVR Pictures
Release date
  • 10 March 2023
CountryIndia
LanguageTamil