Tuesday, April 18, 2023
Monday, April 17, 2023
கண்ணை நம்பாதே (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( மெடிக்கல் க்ரைம் த்ரில்லர்) @ நெட்ஃபிளிக்ஸ்
ஸ்பாய்லர் அலெர்ட்
சம்பவம் 1 - வில்லி சின்ன வயசுலயே தன் அம்மா தன்னை கவனிக்காம அவர் நிர்வகித்த அனாதை இல்ல குழந்தைகளைத்தான் கவனிக்கறார் என்ற கடுப்பில் அனாதைக்குழந்தைகள் சாப்பிடும் உணவில் விஷம் கலந்து கொடுத்து அந்த விஷயம் அம்மாவுக்குத்தெரிந்து போலீஸ்க்கு தகவல் கொடுக்கப்போறப்ப வேற வழி இல்லாம அம்மாவையே போட்டுத்தள்ளியவர் . அம்மா கவனித்த அனாதை இல்லத்தை இவர்தான் கவனிக்கிறார்.
கர்ப்பிணிப்பெண்கள் ஆறாவது மாதம் அவர்கள் உடலில் சுரக்கும் ஒரு திரவத்தை வைத்து ஊக்க மருந்து தயாரிக்கும் பணியில் வில்லி ஈடுபடுகிறார். இவருக்குத்துணையாக ஒரு மினிஸ்டர் , ஒரு வில்லன் இருக்கிறார்கள்
சம்பவம் 2 - நாயகன் நாயகியை ஒரு இடத்தில் பார்த்துப்பழக்கம் ஆக அவர் வீட்டு காம்பவுண்டிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்குகிறார். இருவரும் காதலிக்கின்றனர் ., இந்த விஷயம் நாயகியின் அப்பாவுக்குத்தெரிய வர கெட் அவுட் என்கிறார். இப்போது நாயகன் உடனடியாக ஒரு புது வீட்டில் குடியேற வேண்டிய கட்டாயம்
சம்பவம் 3 - நாயகியின் சித்தப்பா ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் .அவருக்கு ஒரு தறுதலை மகன். ரெகுலரா ஒரு பொண்ணை ஃபாலோ பண்ணிட்டே இருந்துட்டு ஒரு தங்க தருணத்தில் அந்தப்பெண்ணைக்கடத்துகிறார்
சம்பவம் 4 - நாயகனின் புதிய ரூம் மேட் தன் காதலியை ஃபோன் பண்ணி சல்லாபத்திற்கு அழைக்கிறார். அவர் வரவில்லை . ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பது போல காதலிக்கு ஆல்ட்டர் நேட்டிவாக வேறு ஒரு பெண்ணை முறைகேடாக அடைய முயற்சிக்கையில் அந்தப்பெண் பிணம் ஆக பிணத்தை நாயகன் காரில் ஏற்றி அவரை சிக்க வைக்கிறார்
மேலே கூறிய நான்கு சம்பவஙகளுக்கும் என்ன தொடர்பு ? நாயகன் தனக்கு எதிராக 2 வில்லன்கள் , ஒரு வில்லி , போலீஸ் இவர்க்ளை எல்லாம் எப்படி சமாளித்தார் என்பது மீதிக்கதை
கதையின் நாயகனாக உதய நிதி ஸ்டாலின் அமைதியான ஓவர் ஆக்டிங் இல்லாத இயல்பான நடிப்பு. க்ளைமாக்ஸ் ஃபைட் தவிர வேறு சினிமாத்தனம் எதுவும் இல்லை
அவருக்கு ஜோடியாக ஆத்மிகா, இவருக்கு அதிக வேலை , பேருக்குத்தான் நாயகி . வந்தவரை ஓக்கே
வில்லன் நெ 1 ஆக பிரசன்னா. கச்சிதமான நடிப்பு , சாக்லெட் ஹீரோவாக ஃபைவ் ஸ்டாரில் நடித்தவர் இப்போதெல்லாம் வில்லன் ரோலில் கலக்குகிறார்
வில்லன் நெ 2 ஆக ஸ்ரீ காந்த். இவருக்கு வில்லன் முகம் சரியாக பொருந்தவில்லை . அல்லது பிரசன்னா லெவல் இல்லை . இருந்தாலும் சமாளிக்கிறார்
வில்லி ஆக பூமிகா , ரோஜாக்கூட்டம் படத்துக்குப்பின் நீண்ட இடைவெளிக்குப்பின் ஸ்ரீகாந்த்க்கு ஜோடி ஆகிறார். இவருக்கும் வில்லி முகம் செட் ஆக வில்லை
காமெடிக்கு சதீஷ் , ஆனால் அதிக வேலை இல்லை , கைவசம் புது ஜோக்சும் இல்லை
ஜலந்தர் வாசனின் ஒளிப்பதிவில் மழைக்காட்சிகள் குட் ., பின் பாதிக்காட்சிகள் , க்ளைமாக்ஸ் காட்சிகளை இன்னும் நன்றாகப்படம் ஆக்கி இருக்கலாம். இசை சித்து குமார் , பிஜிஎம் ஓக்கே ரகம்
சபாஷ் டைரக்டர்
1 இரண்டு மணி நேரப்படத்தில் 25 ட்விஸ்ட்ஸ். போதுமா ? இன்னும் கொஞ்சம் வேணுமா> எனக்கேட்பது போல போட்டுத்தாக்கி இருக்கிறார்
2 அனாதை இல்லங்களில் நடக்கு தில்லு முல்லுக்ளை சொல்லும் சமூக சீர்கேடுகளை தோல் உரிக்கும் கதையை எடுத்ததற்கு சபாஷ்
3 களவாடிப்போன என்ற பாட்டு அருமை . வாய்ப்பிருந்தும் அதிக டூயட்கள் , பாடல் காட்சிகள் வைக்காதது குட்
ரசித்த வசனங்கள்
1 சாப்பிடப்போலாமா?
ம்
சரக்கு அடிச்ட்டு சாப்பிடலாமா?
எனக்குப்பழக்கம் இல்லீங்களே?
எது>? சாப்பாட்டுக்கு முன்னே சரக்கு அடிப்பதா?
இல்லை , சரக்கு அடிக்கறதே பழக்கம் இல்லை
2 ஒரு கட்டத்துல இவன் வேலைக்குப்போறதையே மறந்து அவளை பிக்கப் பண்றதே ஒரு வேலையா ஆக்கிட்டான்
3 அருண் , உங்க்ளை எம் டி கூப்பிடறாரு
மிஸ் வழக்கமா அவரு உங்களைத்தானே கூப்பிடுவாரு ?
4 என்னது ? நீங்க டைரக்டரா? எப்படியும் படத்துல ஒரு ஐட்டம் சாங் வைப்பீங்க , என் கிட்டே ஒரு ஐட்டம் இருக்கு , வேணுமா?
5 பணக்காரன் கிட்டே வேலை மட்டும் பார்த்துட்டு இருந்தா நாம எப்போ பணக்காரன் ஆவது?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகன் தன் ரூமுக்குப்போய் படார்னு கதவை அடைச்சு தாழ் போட்டுட்டு படுத்து தூங்கறார், ஆனால் அடுத்த ஷாட்டில் பிரசன்னா அந்த ரூம் கதவை திறந்து நாயகன் டேபிள் மேல் இருந்த கார் சாவியை எடுத்துட்டுப்போறார், எப்படி ?
2 பிரசன்னா பூமிகா வீட்டுக்கு கொட்டும் மழையில் காரில் பொகிறார். பூமிகா வீடு வாசல் கேட் கதவை பூட்டாமல் அட்லீஸ்ட் தாழ் கூட போடாமல் வீட்டுக்கதவை தாழ் போடாமல் ப்ட் ரூம் கதவை தாழ் போடாமல் யாரவது வரட்டும் என்று பெப்பரப்பேனு எல்லா கதவுகளையும் திறந்து வெச்சுட்டு தூங்கறாரு
3 கொட்டும் மழையில் காரை விட்டு இறங்கிய பிரசன்னா சட்டை , பேண்ட் முழுவதும் நனைய உள்ளே போகிறார், அடுத்த ஷாட்டில் கொஞ்சம் கூட நனையாத சட்டையில் இருக்கார் , ட்ரையர்ல காய வெச்சிருப்பரோ?
4 போதையில் இருக்கும் பூமிகாவை மயக்கடைய வெச்சுட்டு பிரசன்னா தன் நோக்கத்தை நிறைவேற்றி இருக்கலாம், அதை விட்டுட்டு அவரை எழுப்பி விட்டுட்டு பலாத்காரம் பண்ண அப்போ அவர் அடிக்க வரும்போது என்னையே அடிக்கறியா?னு கேட்கறாரே? இவரை அடிக்காம ஆரத்தி எடுப்பாங்களா? என்ன டயலாக் எழுதறாங்க ??
5 நைட் நாயகனுக்குத்தெரியாமல் பிரசன்னா காரை எடுத்து ஓட்டி இருக்கிறார், பழையபடி அதே இடத்தில் நிறுத்தினாலும் டயர் மார்க்கை வைத்து காரை எடுத்து இருப்பது தெரியுமே? ஏன் நாயகனுக்கு டவுட் வர்லை ?
6 நாயகனை ஃபாலோ பண்ணி சில ஃபோட்டோக்கள் எடுக்கும் ஒரு அடியாள் செல் ஃபோன் கூட வாங்க வசதி இல்லாதவன் போல பவம், ப்ரொஃபஷனல் கேமரா வெச்சு ஃபோட்டோ எடுக்கறான், அதெல்லாம் 2010 உடன் வழக்கொழிஞ்சு போச்சே?
7 போலீஸ் விசாரணை முடிஞ்சதும் அந்தப்பொண்ணு டேபிள் மேல இருந்த துப்பட்டாவை எடுத்துக்கிட்டு கிளம்புது . போலிஸ் விசாரணை நடக்கும்போது லேடி துப்பட்டா போட்டிருக்கக்கூடாதுனு ரூல் இருக்கா??
8 நியூஸ் பேப்பர் எல்லாம் நைட் 12 மணி டூ 1 மணிக்குள் பிரிண்ட்டிங் ஒர்க் முடிஞ்சிடும். விடியற்காலை 3 டூ 4 எல்லா ஊர் பஸ் ஸ்டேண்டிலும் கிடைக்கும், ஆனா நாயகன் நைட் விட்டுட்டு வந்த டெட் பாடி பற்றிய நியூஸ் அடுத்த நாள் காலை நியூஸ் பேப்பர்ல வந்திருக்கா?னு தேடறார்
9 ஸ்ரீகாந்த் ஒரு மீட்டிங்க்ல இருக்கும்போது அவருக்கு நாயகனிடம் இருந்து கால் வருது . அப்போ மீட்டிங்ல உட்கார்ந்திருந்த அனைவரையும் வெளில போங்கனு அனுப்பறார். அதுக்கு ஈசியா அவர் வெளில வந்து ஃபோன் பேசி இருக்கலாமே?>
10 கிட்டத்தட்ட 20 அடி உயரம் உள்ள பாலத்திலிருந்து ஒரு டெட் பாடியை கீழே போட்டா சிந்தாம சிதறாம அப்படியே இருக்கும்னு டைரக்டர் நினைக்கறாரா? அட்லீஸ்ட் ரத்தம் கூட தெறிக்காதா?>
11 ஸ்ரீகாந்த் 30 லட்ச ரூபாய் பண்டிலை கொண்டு வந்து ஒரு இடத்துல வைக்கிறார். 2000 ரூபா கட்டா இருந்தாலும் 15 கட்டு இருக்கனும், அந்த பண்டில்ல 10 கட்டு கூட இருக்காது , சின்ன கட்டு
12 யாராவது தன் காத்லிக்கு ஃபோன் பண்ணி ஒரு பெண்ணை ரேப் பண்ண ட்ரை பண்ணப்போ அவ இறந்துட்டா, இப்போ என்ன பண்ண என ஐடியா கேட்பாங்களா? பிரசன்னா கேட்கறார்
13 கன் பாயிண்ட்ல வில்லன் ஹீரோவை மிரட்டும்போதே போட்டிருக்கலாம், அதை விட்டுட்டு 2ஒ நிமிசம் ஃபி;ளாஸ்பேக் கதையை வெட்டியா சொல்லிட்டு இப்போ இவனை முடிச்சுக்கட்டு அப்டினு ஒரு இண்ட்ரோ எல்லாம் குடுக்கறாரு
14 நாயகி தன் சித்தப்பாவான போலீஸ் ஆஃபீசருக்கு பல டைம் கால் பண்றா, அவர் ஃபோனை எடுக்கலை , விஷயத்தை வாய்ஸ் மெசேஜா வாட்சப்ல அனுப்பி இருக்கலாமே?
15 வில்லனோட ஆக்டிவிட்டீசை ரக்சியமா செல் ஃபோன் கேமரால படம் ( வீடியோ) பிடிக்கும் ஹீரோ அதை சைலண்ட் மோடில் வைக்க மாஃப்ஃபாரா? கால் வந்தால் காட்டிக்கொடுக்கும் என தெரியாதா?
14 ட்வின்ஸ் சிஸ்டர்ஸ்ல இருவருக்கும் வெவ்வேறு கை ரேகைகள் இருக்கும். கொலை செஞ்சது ஒருத்தி , குற்றத்தை ஒத்துக்கிட்டது வேற ஒருத்தி . கை ரேகை காட்டிக்கொடுத்திருக்குமே?
15 க்ளைமாக்சில் பிரசன்னா போலீஸ் ஆஃபீசரை சுடும்போது தவறுதலாக அவரது காதலி மீது குண்டுபடுகிறது. உடனே அதிர்ச்சி ஆன பிரசன்னா கீழே அமர்ந்து என்ன ஆச்சு எனபார்க்கிறார். அந்த டைமில் போலீஸ் ஆஃபீசரோ, ஹீரோவோ பிரசன்னாவை தாக்கி இருக்கலாமே?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ படம்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - க்ரைம் த்ரில்லர் ரசிகர்களுக்கு விருந்து தான் இந்தப்படம். பார்க்கலாம் . ரேட்டிங் 2. 5 / 5
| Kannai Nambathey | |
|---|---|
![]() Poster | |
| Directed by | Mu. Maran |
| Written by | Mu. Maran |
| Produced by | V. N. Ranjith Kumar |
| Starring | |
| Cinematography | Jalandhar Vasan |
| Edited by | San Lokesh |
| Music by | Siddhu Kumar |
Production company | Lipi Cine Crafts |
| Distributed by | Red Giant Movies |
Release date |
|
| Country | India |
| Language | Tamil |
Sunday, April 16, 2023
A MAN CALLED OTTO (2023) -( அமெரிக்கன் )- சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா) @ அமேசான் பிரைம்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் 63 வயதானவர். மனைவியை இழந்த தனிமரம். மனைவி மீது கொண்டிருந்த தீராத காதலால் அவரது இழப்பை ஜீரணிக்க முடியாமல் இந்த வாழ்க்கையின் மீது பிடிப்போ பற்றோ இல்லாமல் பல முறை தற்கொலைக்கு முயன்று ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியை சந்தித்தவர்
அந்நியன் பட ஹீரோ மாதிரி ரூல்ஸ் ராமானுஜம் ஆக இவர் வாழ்கிறார். யாராவது சின்ன தப்பு செய்தால் கூட இவரால் பொறுத்துக்கொள்ள முடியாது . காரணம் இவரது மனைவி உயிர் இழப்புக்கு ஒரு பஸ் டிரைவரின் அலட்சியமும் அந்த பஸ் கம்பெனியின் பராமரிப்பு அலட்சியமும் தான். அதனால் எல்லாரும் எல்லாவற்றிலும் பர்ஃபெக்ட் ஆக இருக்க வேண்டும் என நினைக்கிறார்
இவர் பணி செய்து வந்த அலுவலகத்தில் திடீர் என் ஒரு நாள் விஆர் எஸ் கொடுத்து அனுப்பி விடுகிறார்கள் . கட்டிய மனைவியும் இல்லை , செய்து வந்த வேலையும் இல்லை , இதனால் கடுப்பாகவே இருக்கிறார்
இப்படிப்பட்ட முசுடு பிடித்த ஆசாமியின் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்கு நாயகி குடி வருகிறார். நாயகிக்கு திருமணம் ஆகி கணவன் , குழந்தைகள் அனைத்தும் உண்டு .எக்ஸ்ட்ரா லக்கேஜாக இப்போது கர்ப்பமாக இருக்கிறார்
நாயகியின் வரவுக்குப்பின் நாயகனின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்ன? என்பதுதான் திரைக்கதை
நாயகனாக டாம் ஹேங்க்ஸ் இரும்பு முகம் ,பலாப்பழவெளிப்பக்க தோல் போல ,முரடாக இருப்பவர் இன்னொரு இன்முகம் காட்டும் காட்சிகளில் உணர்ந்து நடித்திருக்கிறார்
நாய்கியாக மரியானா ட்ராவினோ குடும்பப்பாங்கான குழந்தை முகம் . ஆத்திரக்காரனைக்கூட அமைதிப்படுத்தும் சாந்த சொரூபி முகம் , நம்ம ஊச் சிரிப்பழகி சினேகாவுக்கு நிகரான புன்னகை அழகி. நாயகன் எரிந்து விழும்போதெல்லாம் சிரிப்பாலேயே சிக்சர் அடிக்கிறார்.
காமெடி சீக்வன்ஸ்சிலும் சரி எமோஷனல் மொமெண்ட்ஸ்லயும் சரி கலக்கலான பர்டார்மென்ஸ்
நாயகன், நாயகி , நாயகனின் ஃபிளாஸ்பேக் சீனில் வரும் நாயகன், அவர் மனைவி என நான்கு முக்கியமான கேரக்டர்கள் ஆக்ரமிக்கும் திரைக்கதை இது
சபாஷ் டைரக்டர்
1 நாயகனாக நடித்திருக்கும் டாம் ஹேங்க்ஸ் க்கு இது ஒரு கம் பேக் படம் , கேஸ்ட் அவே , டெர்மினல் படங்களுக்குப்பின் அவருக்கு ஒரு பேர் சொல்லும் படம்
2 நாயகன் தற்கொலைக்கு முயலும்போது ஒரு ரயில்வே டிராக்கில் நிற்பார். அப்போது அருகில் ரயில் டிராக்கில் ஒருவர் உயிரைக்காப்பாற்றுவார். அந்தக்காட்சி முடிந்ததும் மீடியாக்கள் அவரைப்புகழ்ந்து தள்ளும். ஆனால் அவர் கண்டுக்காமல் இருப்பார்.செண்ட்டிமெண்ட்டுக்கு செண்ட்டிமெண்ட். அதைத்தொடர்ந்து அவர் நிற்கும் டிராக்கில் ரயில் வராமல் அருகில் இருக்கும் டிராக்கில் ரயில் போகும். காமெடிக்கு காமெடி
3 நாயகன் நாயகிக்கு கார் ஓட்டக்கற்றுக்கொடுக்கும் காட்சியும். அப்போது இருவருக்கும் இடையே நிகழும் கான்வர்சேஷன்களும்
4 நாயகன் தன் ஃபிளாஸ்பேக் காட்சியில் தன் மனைவியுடன் ஹோட்டலில் சாப்பிடப்போகும்போது மனைவி ஏதோதோ சாப்பிட அவர் அதிகம் சாப்பிடாமல் இருப்பார். ஏன்> என காரணம் கேட்கும்போது நீ சாப்பிடற அளவுதான் கைல காசு இருக்கு எனும் சீன் டச்சிங்
5 மிகவும் ட்ரையான காட்சிகள் வரும்போது இடையிடையே பாலைவனச்சோலையாய் ஃபிளாஸ்பேக் லவ் போர்சன் பிளேஸ் செய்திருந்த விதம் அட்டகாசம்
6 நாயகன் கார் ஷெட்டில் வந்த பூனையைத்துரத்த முயலும்போது பூனை அவர் பேண்ட்டை பிடித்து விடாமல் பின் தொடரும் காட்சி
ரசித்த வசனங்கள்
1 டின்னர் சாப்பிட ரெஸ்டாரண்ட் வரச்சொல்லிட்டு நீங்க ஏன் வீட்ல ஆல்ரெடி சாப்பிட்டுட்டு வந்திருக்கீங்க ?
ஏன்னா அப்போதான் நீ ஆர்டர் பண்ணுனதை எல்லாம் வாங்கித்தர முடியும், என் கிட்டே காசு கம்மியாதான் இருக்கு
2 நீங்க சிரிக்கும்போது எங்க அப்பா சிரிக்கற மாதிரியே இருக்கு
ஓஹோ, ஆனா நான் சிரிக்கவே இல்லையே?
அதான் நானும் சொன்னேன், எங்க அப்பாவுக்கு புன்னகை கிலோ என்ன விலைனு கேட்பவர்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஃபீல் குட் மூவி , மனதை பாதிக்கும் நல்ல படம் பார்க்கும் ஆடியன்ஸ் தவற விடக்கூடாத படம் . அமேசான் பிரைம் ல கிடைக்கிறது ரேட்டிங் 3 / 5
| A Man Called Otto | |
|---|---|
Theatrical release poster | |
| Directed by | Marc Forster |
| Screenplay by | David Magee |
| Based on | |
| Produced by | |
| Starring |
|
| Cinematography | Matthias Koenigswieser |
| Edited by | Matt Chessé |
| Music by | Thomas Newman |
Production companies |
|
| Distributed by | Sony Pictures Releasing |
Release date |
|
Running time | 126 minutes |
| Country | United States |
| Language | English |
| Budget | $50 million[1] |
| Box office | $109.1 million[2][3] |
Saturday, April 15, 2023
HUNGER (2023)(தாய்லாந்து) - சினிமா விமர்சனம் ( மோட்டிவேஷனல் மெலோ டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ் 18+
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி ஒரு டிகிரி முடிச்சுட்டு வாழ்க்கைல ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற லட்சியக்கனவுடன் இருப்பவர். இவரது குடும்பம் நடத்தும் ஒரு சின்ன ஹோட்டலில் இவர்தான் சமையல் இன்சார்ஜ். ஃபிரைடு ரைஸ் , நூடுல்ஸ் செய்வதில் இவர் ஸ்பெஷலிஸ்ட். என்னதான் சுவையாக இவர் சமைத்தாலும் தினமும் ஒரே மாதிரி வாழ்க்கை வாழ்கிறோமே என நாயகிக்கு போர் அடிக்கிறது
இப்படி இருக்கும்போது ஒரு நாள் கடைக்கு வந்த ஆள் ( நாயகன் ) நாயகியின் சமையலை ருசி பார்த்து வியந்து நாயகியிடம் ஒரு விசிட்டிங் கார்டைக்கொடுத்து இங்கே வந்து பாருங்க என சொல்லி விட்டு செல்கிறான்
அந்த விசிட்டிங் கார்டு வில்லன் உடையது .அவர் அந்த ஏரியாவிலேயே பெரிய சமையல்காரர் . அவர் ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலிலோ , வேறு எங்கோ வேலை பார்ப்பவர் அல்ல . பெரிய பெரிய கோடீஸ்வரர்கள் கலந்து கொள்ளும் பர்த்டே பார்ட்டி , பேச்சிலர் பார்ட்டி போன்றவற்றில் ஸ்பெஷல் ஆர்டர் எடுத்து சமையல் செய்து சம்பாதிப்பவர் ., இவரது கைப்பக்குவம் செம ஃபேமஸ்
நாயகி வில்லனின் இடத்துக்குப்போகிறார். அங்கே சமையல் வேலைக்கு சேர்கிறார், ஆனால் அவ்வளவு சீக்கிரம் வில்லனிடம் நல்ல பெயர் வாங்க முடியவில்லை , என்னதான் பிரமாதமாக சமைத்தாலும் ஏதாவது குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார்
நாயகியை வில்லனுக்கு அறிமுகப்படுத்திய நாயகன் உட்பட பலர் அங்கே வேலை செய்தாலும் நாயகி தான் சமையலில் இப்போ நெ ஒன்.ஒரு கோடீஸ்வர்ர் பர்த் டே பார்ட்டியில் நாயகியின் சமையல் சிலாகிக்கப்படுகிறது. ஆனால் வில்லனுக்கு அதில் விருப்பம் இல்லை
அடுத்த முறை சமையலில் நாயகியை இருட்டடிப்பு செய்கிறார் வில்லன்.மெயின் சமையல் வேலைக்கு அவரை நியமிக்காமல் எடுபுடி வேலைக்கு நியமிக்கிறார். இதனால் நாயகிக்கு வருத்தம், அவமானம்
ஒரு பார்ட்டியில் வேறு ஒருவர் நாயகியை சந்தித்து நீங்க இருக்கும் ரேஞ்சுக்கு தனியாக உங்க ஆட்களுடன் சேர்ந்து சமையல் செய்தால் பெரிய ஆளாக வரலாம், எத்தனை நாட்களுக்குத்தான் ஒருவரிடம் வேலைக்கு இருப்பீர்கள் என்கிறார்
ஆனால் நாயகனுக்கு நாயகியுடன் பணி செய்ய தயக்கம், நாயகி தனியே களமாட வேண்டிய நிர்ப்பந்தம். நாயகி வில்லனை மீறி சாதித்தாரா? நாயகன் - நாயகி காதல் நிறைவேறியதா? என்பது தான் மீதி திரைக்கதை
வில்லன் செஃப் பால் ஆக நடித்தவர் அடி பொலி நடிப்பு . உங்கள் ஒவ்வொருவரின் முதலாளி அல்லது பாஸ் அலல்து எம் டி யை நினைவுபடுத்துவார். அவரது உடல் மொழியும் நடிப்பும் அட்டகாசம்
நாயகியாக நடித்தவர் மேல் நமக்கு ஒரு பரிதாபம் வருவது அந்த கேரக்டர் டிசைனுக்குக்கிடைத்த வெற்றி . அவரது முகமே பால் வடியும் அப்பாவி முகமாக இருப்பது பெரிய பிளஸ்., எப்படியாவது அவர் ஜெயிக்க வேண்டுமே என்ற எண்ணம் ஆடியன்ஸ் மனதில் பற்றிக்கொள்ளும் விதமான நடிப்பு
நாயகனுக்கு அதிக வேலை இல்லை . சில காட்சிகள் . படம் முழுக்க ஆக்ரமித்து இருப்பது வில்லனும், நாயகியும் தான் . இருவருக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள் தான் திரைக்கதை
படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இரண்டு அம்சங்கள் ஆர்ட் டைரக்சன் , புரொடக்சன் டிசைன் டீம் ஒர்க் , ஒளிப்பதிவு அனைத்தும் அருமை . குறிப்பாக ருமாலி ரொட்டி சமைப்பது போல கடாயில் நெருப்பில் சமைக்கும் காட்சி கலக்கல் ரகம்
சபாஷ் டைரக்டர்
1 வில்ல்னின் கேரக்டர் டிசைன் வடிவமைக்கப்பட்ட விதம் அருமை . ஒரு படம் அல்லது கதை ஜெயிக்க வேண்டும் எனில் அதில் வில்லன் ரோல் கச்சிதமாக , பலமாக டிசைன் செய்திருந்தாலே போதும், இப்பேர்ப்பட்ட ஆளை எப்படி நாயகன் வெற்றி பெறப்போகிறான் என்ற ஆர்வம் ஆடியன்சுக்கு தொற்றிக்கொள்ளும்
2 நாயகி மற்றும் வில்லன் சமைக்கும் ஒரு ஒரு காட்சியும் கலக்கல் ரகம் .
ரசித்த வசனங்கள்
1 பசித்து இருப்பவர்களுக்கே வெற்றி கிடைக்கும்
2 ஒவ்வொரு நாள் காலையில் நான் எழும்போதும் ஏழையாகவே எழுகிறேனே என்ற வருத்தம் உண்டு
3 கைவசம் பணமே இல்லாம இங்கே ஜெயிக்கனும்னா ரொம்ப கஷ்டம்
4 சாமான்யர்கள் சந்தோஷமா இருக்க உரிமை கூட இல்லை
5 சாமான்யனாக இருப்பதில் திருப்தி அடைகிறவரா? நீங்கள் ? இல்லை , சம்திங்க் ஸ்பெஷல் என இருக்க ஆசைப்படுபவரா?
6 முறைப்படி , சிஸ்டமேடிக்கா கல்வி பயின்றவர்களிடம் கற்பனைத்திறனோ. க்ரியேட்டிவிட்டியோ இருக்காது
7 யாருக்காக சமைக்கிறோமோ அவங்க மேல அன்பு அதிகமா இருந்தா சமையல் ருசியா இருக்கும்னு சொல்வாங்க, ஆனா எனக்கு அதில் நம்பிக்கை இல்லை , ஒரு நல்ல சமையல்காரன் தன் சமையலில்தான் கவனமா இருக்கனும், அன்பில் அல்ல
8 நீ என்ன சாப்பிடுகிறாயோ அதுதான் உனது சமூக அந்தஸ்தை பிரதிபலிக்கிறது
9 ஏழை எப்போதும் தன் பசி அடங்குவதற்காகத்தான் சாப்பிடுகிறான், ஒருபோதும் அவன் ருசியை நினைத்து ஏங்குவதில்லை
10 கிச்சன் கேபினெட் ல ஜனநாயகம்,சமத்துவத்துக்கு எல்லாம் இடம் இல்லை , ஆர்டர் போடனும், கீழ்ப்படியனும்
11 நீ யார் கிட்டே தொழில் கத்துக்கிட்டியோ அவங்க பாணியை அப்படியே காப்பி பண்ணனும்னு அவசியம் இல்லை
12 உன் கனவுப்பயணத்தை தொடர ம்ஜுடியாமைக்கும், லட்சியத்தை அடைய முடியாமைக்கும் காரணம் உன் கிட்டே போதிய அளவு பசி இல்லை
13 அவனை மாதிரி லட்சக்கணக்கான திறமைசாலிகள் உலகம் முழுக்க இருக்கா ந்க, ஆனா உன்னை மாதிரி ஒரு நல்ல கேரக்டர் உள்ளவங்களாலதான் ஜெயிக்க முடியும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நெருப்புக்காயத்துடன் நாயகி தன் இரு கைகளையும் பார்க்கும்போது இரு கைகளிலும் ஏராளமான தழும்புகள் தெரிகின்றன, ஆனால் அடுத்தடுத்த காட்சிகளில் கைகள் இரண்டும் மொழு மொழு வென இருக்கின்றன, தழும்பு இருந்த சுவடே இல்லை
2 காயப்படாமல் நாம் ஜெயிக்க முடியாது என சொல்லும் வில்லன் கைகளில் எந்த ஒரு தழும்பும் இல்லை
3 ஒரு கட்டத்தில் வில்லன் கத்திக்குத்து பட்டு படுத்திருக்கும்போது நாயகி அவர் மேல் காட்டும் கரிசனம், அவருக்கு சொந்தம் என யாரும் இல்லையா? எனக்கேட்பது இதையெல்லாம் பார்க்கும்போது இவர் காதலிப்பது நாயகனையா? வில்லனையா? என்ற கேள்வி எழுகிறது
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - நாயகி குளிப்பது போல ஒரு காட்சியும், காதலனுடன் நெருக்கமாக இருப்பது போல் ஒரு காட்சியும் உண்டு , பரிபூரண சைவ விரும்பிகள் இந்தப்படத்தை தவிர்ப்பது நல்லது , படம் முழுக்க அசைவ சமையல் க்ளோசப்ல வரும் .
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஒரு சாதாரண கதை . ஆனால் திரைக்கதை மற்றும் காட்சிப்படுத்தலில் அசத்தி இருக்கும் படம் நெட் ஃபிளிக்சில் ரிலீஸ் ஆகி உள்ள படம் , ரேட்டிங் 2.75 / 5




