Monday, February 20, 2023

செம்பி (2022) தமிழ் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா) @ டிஸ்னி ஹாட்ஸ்டார் பிளஸ்


 1999ல் அர்ஜூன் - சோனாலி  பிந்த்ரே நடித்த  கண்ணோடு  காண்பதெல்லாம்  எனும்  படம்  தான்  பிரபு  சாலமன் இயக்கிய  முதல்  படம். சரியாகப்போகவில்லை . . 2001ல்  இவர் இயக்கிய  உசிரே  எனும்  கன்னடப்படம்  சேரனின்  பாரதிகண்ணம்மா  தமிழ்ப்படத்தின்  அஃபிசியல்  ரீமேக். ஆனால்  அது  சரியாக  அங்கே  ஹிட்  ஆகவில்லை .பிறகு 2022ல்  கிங்  , என  விக்ரம்  நடிக்கும்  படம்  டைரக்ட்  செய்தார், ஃபிளாப்.

தொடர்  தோல்விகளால் 3  வருடங்க்ள்  வாய்ப்புக்கிடைக்கவில்லை 2006ல்  இயக்கிய  கொக்கி , 2007 ல் இயக்கிய  லீ   2009 ல்  இயக்கிய  லாடம்  இந்த  மூன்று படங்களும்  இவருக்கு  நல்ல  பெயரைப்பெற்றுத்தந்தாலும் 2010ல்  இவரது  இயக்கத்தில்  வெளியான  மைனா  தான்  கமர்ஷியலாக  சூப்பர்  டூப்பர்  ஹிட். இவருக்கு  பெஞ்ச்  மார்க்காக  அமைந்த  படம் . பாடல்கள்  எல்லாம்  செம  ஹிட் 2012ல் இவர் இயக்கிய  கும்கி விக்ரம்  பிரபுக்கு  ஒரு  நல்ல  அறிமுகப்படமாகவும் , மியூச்சிக்கல்  ஹிட்  ஆகவும்  அமைந்தது 


2014ல்  இயக்கிய  கயல்  2016ல்  தனுஷ்  நடிக்க  வெளி வந்த  தொடரி  சுமார்  ரகம்  தான். 2021 ல்  இவர் தமிழ், தெலுங்கு , ஹிந்தி  என  மூன்று  மொழிகளில்  காடன்  எனும்  படம்  இயக்கினார் கும்கி பாகம்  2  இயக்கிக்கொண்டு  இருப்பதாக  தகவல் . இப்போது  செம்பி  வந்திருக்கிறது


ஒவ்வொரு  இயக்குநருக்கும்  சில  செண்டிமெண்ட்ஸ்  இருக்கும். மணிரத்னம்  படம்  என்றால்  மழை , இருட்டு , குதிரை , ரயில்  காட்சிகள்  நிச்சயம்  இடம்  பெறும் அது  போல  மைனா  மெகா ஹிட்டுக்குப்பின்  இவரது  ஃபேவரைட்ஸ்   பஸ் , மலைப்பாங்கான  இடங்கள் , வனம் , தம்பி  ராமய்யா 


 ஸ்பாய்லர்  அலெர்ட்

கொடைக்கானல்  மலைகிராமமான   புலியூர்  எனும்  ஊரில்  வீரத்தாய்  எனும்  பாட்டியும்  பேத்தியும்  வசித்து  வருகிறார்கள் . ஒரு  விபத்தில்  அந்த  பேத்தியின்  பெற்றோர்  இறந்து  விட்டதால்  பாட்டிதான்  கார்டியன்.  பாட்டிக்கு தேன்  கூட்டில்  ம்லைத்தேன்  எடுத்து  விற்பதுதான்  தொழில் .


 ஒரு  நாள்  தேன்  எடுத்து  அதை  பேத்தியிடம்  கொடுத்து  குறிப்பிட்ட  இடத்தில்  டெலிவரி  செய்யச்சொல்கிறார்.  வழியில்  பேத்தி  மூன்று  இளைஞர்களால்  பாலியல்  வன் கொடுமைக்கு  ஆளாகிறார்


பதறிபோன   பாட்டி  போலீசில்  புகார்  கொடுக்கிறார். சம்பவம்  நடந்த  இடத்தில்  கிடைக்கும்   ஆதாரங்கள், சிசிடிவி  ஃபுட்டேஜ்  வைத்துப்பார்த்த  போது   எதிர்க்கட்சித்தலைவரின்  மகனும், அவனது  நண்பர்களும் தான்  குற்றவாளிகள்  என  தெரிய   வர  போலீஸ்  ஆஃபீசர்  பேரம்   பேசி  3  கோடி  ரூபாய்  லஞ்சமாக  வாங்கி  ஆதாரங்களை  அழித்து  விடுகிறார். பாட்டியிடமும்  போய் இது  பெரிய  இடத்து  விவகாரம், கேசை  வாபஸ்  வாங்கிக்கொள்  என  மிரட்டுகிறார்


 மிரட்டிய  போலீஸ்  ஆஃபீசரை  கோபத்தில்  கடுமையாகத்தாக்கி  விட்டு  பாட்டி  தன்  பேத்தியுடன்   ஒரு  பஸ்சில்  ஏறி  விடுகிறார்


 இதற்குப்பின்   பஸ்  சில்  உள்ள  பிரயாணிகள்  சேர்ந்து  அந்த  பேத்திக்கு  எப்படி  நீதி  வாங்கிக்கொடுத்தார்கள்  என்பதுதான்  மீதி  திரைக்கதை 


பாட்டியாக  கோவை  சரளா.  சதி  லீலாவதி படத்தில்  கமலுக்கு  ஜோடியாக  நடித்தபோது  ஆச்சரியப்படாதவர்கள் , பாராட்டாதவர்கள்  யாருமே  இருக்க  முடியாது . கோவை  வட்டார  வழக்கு  கொங்குத்தமிழை  மிகப்பிரமாதமாகப்பேசும்  ஒரே  நடிகை  கோவை  சரளா  தான்  ( மெட்ராஸ்  பஷைக்கு  லூஸ்  மோகன் ) 


இதில்  அவருக்கு  போடப்பட்டிருக்கும்  மேக்கப்  , அவரது  உடல்  மொழி , நடிப்பு  எல்லாமாக  சேர்ந்து  ஏதோ  உலகப்படம்  பார்ப்பது  போன்ற  உணர்வைத்தந்தது. ஆவேசமாக  போலீசை  தாக்கும் போது  அனல்  பறக்கும்  நடிப்பு 


நிலா  எனும்  சிறுமி  பேத்தியாக  நடித்திருக்கிறார். கச்சிதமான  நடிப்பு , க்ளைமாக்சில்  கோர்ட்டில்  குற்றவாளிகளைக்கண்டு  மிரள்வது  பிரமாதம் 


அரசியல்வாதிகளாக  நாஞ்சில்  சம்பத் , பழ கருப்பையா  அருமையாகப்பொருந்தி  விடுகிறார்கள் . 


கண்டக்டராக  தம்பி  ராமய்யா மொக்கை  காமெடி  செய்து  எரிச்சல்  ஊட்டுகிறார். சீரியசான  கதையில்  மடத்தனமான  காமெடி  டிராக்  வைத்தது  இயக்குநர்  பிழை 


 வக்கீலாக  வரும்  அஸ்வின்  கேரக்டர்  டிசைன்  நாடகத்தனம்


 நல்லதோர்  வீணை  செய்தே  நலம்  கெட  அதைப்புழுதியில் விடுவதுண்டோ  எனும்  வரிக்கேற்ப  பிரமாதமான  , இயற்கையான , அருமையான  முதல்  ஒரு  மணி  நேரம்  உலகப்படம்  பார்க்கும்  உணர்வைத்தந்தாலும்   பின்  பாதி  திரைக்கதை  பஸ் சில்  பயணிக்கும்போது  செயற்கையான  சம்பவங்கள். நம்ப  முடியாத  காட்சிகளால்  வீரியம் இழக்கிறது 


 ஜட்ஜ்  ஆக  வரும்  பேராசிரியர்  கு  ஞான சம்பந்தம்  கச்சிதமான  நடிப்பு 


‘நிவாஸ்  கே  பிரசன்னாவின்  பின்னணி இசை  கனகச்சிதம் .,  ஜீவனின்  ஒளிப்பதிவு  அள்ளுகிறது .

சபாஷ்  டைரக்டர்


1  ஹாஸ்பிடலில்  பேத்தி  மயக்கத்தில்  இருக்க  பாட்டி  அங்குமிங்கும்  பதட்டத்துடன்  அலைபாயும்  காட்சி  காண்பவரையும்  பதட்டத்தில்  ஆழ்த்துகிறது 


2   கோவை சரளாவுக்கு அளிக்கப்ப்ட்ட  ஒப்பனை , அவர்து  உடல்  மொழி, நடிப்பு  கனக்ச்சிதம் 


3   கண்ணுக்குக்குளுமையான  ஒளிப்பதிவு 




  ரசித்த  வசனங்கள் 


1    இந்த  பூமியை  ஆட்சி  புரிந்து  கொண்டிருப்பது  கடவுள்  இல்லை ,  பணம்  தான் 


2  மற்ற  குற்ற  வழக்குகளில்  பாதிக்கப்ப்ட்டவர்கள்  தான்  குற்றத்தை  நிரூபிக்க  வேண்டும், ஆனால்  போக்சோ  சட்டத்தில்  குற்றவாளிகள்  தான்  தாங்கள்  நிரபராதிகள்  என  நிருபிக்க  வேண்டும் 


3  உண்மையைப்புரிய  வைக்க  மொழி  தேவை  இல்லை  , வலி  போதும் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  பின்  பாதிக்கதையை  முழுக்க  முழுக்க  கோர்ட்  ரூம்  டிராமாவாக  ஆக்கி இருக்கலாம்,  பஸ்  ட்ராவல்  சம்பவங்கள்  எரிச்சல் 


2   சந்தேகத்துக்கு  இடமான  40  பேரின்  ஃபோன்  நெம்பருக்கு  பஸ்  பயணிகள்  ஃபோன்  பண்ணி  விசாரித்து  உண்மையைக்கண்டு  பிடிக்க  முயல்வது  நம்ப  முடியவில்லை 


3   புதிதாக  குற்றம்  செய்யும்  நபர்களாக  இல்லாமல்  பிளான்  பண்ணி  ரெகுலராக  குற்றம்  செய்பவர்கள்  இப்படித்தான்  சி சிடி வி  கேமரா  பார்க்கும் இடமாக  போவார்களா? 


4  ரேப்  கேசில்  பாதிக்கப்பட்ட  நபரை  பெயரை  ஃபோட்டோவை  வெளியிடக்கூடாது  என  சட்டம்  இருந்தும்   சிறுமியின்  ஃபோட்டோ  எப்படி  வெளியாகிறது ?


5  கம்ப்யூட்டர்  மற்றும்  டெக்னாலஜி  வச்தி  படைத்த  போலீசாலேயே  பஸ்  இருக்கும்  இடத்தைக்கண்டு  பிடிக்க  முடியவில்லை ., தத்தி  வில்லனான  அரசியல்வாதியின்  டம்மி  அடியாட்கள்  பஸ்  இருப்பிடத்தைக்கண்டுபிடிப்பது  எப்படி ? 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  கதைகக்ரு பாலியல்  வன்கொடுமைக்கு  ஆளான  சிறுமியின்  கதை  என்றாலும்  காட்சிகளில்  18+  இல்லை 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்   -  சைல்டு  அப்யூஸ்  எனும்  டெம்ப்ளேட்டில்  முதல்  பாதி  உலகத்தரம்  , பின்  பாதி  அமெச்சூர்  நாடகத்தனம்  என  எடுக்கப்பட்ட  படம் . ரேட்டிங் 2.25 / 5 

Sembi
Sembi poster.jpg
Theatrical release poster
Directed byPrabhu Solomon
Written byPrabhu Solomon
Produced byR. Ravindran
Ajmal Khan
Reyaa
StarringKovai Sarala
Ashwin Kumar Lakshmikanthan
Thambi Ramaiah
Nanjil Sampath
CinematographyM. Jeevan
Edited byBuvan
Music byNivas K. Prasanna
Production
companies
Trident Arts
AR Entertainment
Distributed byRed Giant Movies
Release date
  • 30 December 2022
CountryIndia
LanguageTamil

Sunday, February 19, 2023

47 நாட்கள் (1981) -தமிழ்/தெலுங்கு - சினிமா விமர்சனம் ( சிவசங்கரியின் நாவல்) @ யூ ட்யூப் அண்ட் மெகா டி வி


 சிவசங்கரி  எழுதிய நாவலை மையமாக  வைத்து  கே  பாலச்சந்தர்  தமிழ் , தெலுங்கு  ஆகிய  இரு  மொழிகளில் எடுத்த  படம்  இது ஆந்திர  சூப்பர்  ஸ்டார் சிரஞ்சீவி  கதாநாயகனாக  அறிமுகம்  ஆன  முதல்  படம்  இது. ஆனால்  கம்ர்ஷியலாக  இது அந்தக்காலத்தில்  பெரிய வெற்றி  பெறவில்லை. ஆனால் எழுத்துலகில்  நாவல்  செம  ஹிட். அப்போ  இயக்குநர்  சிகரம்  எதில்  எந்த  இடத்தில்  சறுக்கினார்  என  பார்க்க  ஆவல்  வந்தது. + இதயம்  பேசுகிறது  என்னும்  வார  இதழில்  தொடர் கதையாக  வந்த  போது  ரசிகைகள்  , வாசகிகள்  இடையே  மாபெரும்  வரவேற்பைப்பெற்ற  கதை  என்பதால் வசனம்  எழுதும்  பொறுப்பும்  சிவசங்கரியிடம்  தரப்பட்டது, திரைக்கதை  , இயக்கம்  - கே  பாலச்சந்தர்  , கதை , வசனம்  சிவசங்கரி 

 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  ஒரு  கிராமத்துப்பெண். கல்வி  அறிவு  இல்லை . நான்காம்  வகுப்பு வரை  கூட  படிக்காதவர் , அவருக்கு  ஆங்கில மொழி  தெரியாது . ஒரு  ஃபாரீன்   மாப்பிள்ளை  அவரை  தானாக  முன் வந்து  கல்யாணம்  செய்து  கொண்டு  பாரீஸ்  அழைத்து  செல்கிறார்


ஆனால்  அவருக்கு  ஏற்கனவே  திருமணம்  ஆகி  இருக்கிறது , மாடியில்  முதல்  மனைவி , கீழே  நாயகி . நாயகியை  அவரது  தங்கை  என    நாயகன்  சொல்லிக்கொள்கிறான்  மற்றவர்களிடம் 


 இந்த  உண்மை  நாயகிக்குத்தெரிய  வரும்போது  நான்  அம்மாவைப்பார்க்கனும், எங்க  ஊருக்கே  என்னை  திருப்பி  அனுப்புங்க  என்கிறாள்


இதற்குப்பின்  நாயகி  எப்படி  அந்த  ஆபத்தில்  இருந்து  தப்பிக்கிறாள்  என்பதே  மீதி  திரைக்கதை 


 நாயகனாக  புதுமுகமாக  சிரஞ்சீவி . வில்லத்தனம்  மிக்க   நடிப்பு , கனகச்சிதம்


நாயகியாக  ஜெயப்பிரதா.. செண்ட்டிமெண்ட்  சீன்களில்  உணர்ச்சி  பொங்கும்  நடிப்பு 


சரத்பாபு  கெஸ்ட்  ரோலில்  வழக்கம்  போல ஜெண்ட்டில்  மேன்  ஆக  வருகிறார்


எம் எஸ்  வி  இசையில்  3  பாடல்கள்  மற்றும்  பிஜிஎம்  குட் ,லோக்நாத்தின் ஒளிப்பதிவில்  ஃபாரீன்  லொக்கேஷன்கள்  அழகு . எடிட்டிங்  கச்சிதம் 



சபாஷ்  டைரக்டர்


1  ஒரு  டைரக்டர்  தன்  படத்தில்  தன்  முந்தைய  படத்தின்  ரெஃப்ரன்ஸ்  வைப்பது வழக்கமானதுதான், இதுல  அபூர்வ   ராகங்கள்  படத்தை  பிரமோட்  பண்ணி  இருக்கார் . அது  கச்சிதமா  கதையோட  ஒட்டி  வருது 


2  உள்ளூரில்  இருக்கின்ற  ஏழை  மாப்பிள்ளையே  பெட்டர். ஃபாரீன்  மாப்பிள்ளை  என  நம்பி  ஏமாந்து    பெண்  வீட்டார்   படும்  கஷ்டங்களை  சொல்லும்  கதை  என்பதால்  தனிப்பட்ட  முறையில்  இந்த  கதைக்கரு  எனக்குப்பிடிச்சிருக்கு 


3   ஒரு  இந்தியப்பெண்ணுக்கு  பண  உதவி  செய்யும்  சரத்பாபு “  இந்த  உதவியை  உன்  புத்திசாலித்தனத்துக்காக  செய்யலை, இன்னொரு  இடத்துல  இதே  மாதிரி  பிச்சை  எடுத்து  இந்தியாவோட  மானத்தை  வாங்கிடக்கூடாது  என்பதற்காக  தந்தேன்  எனும்  காட்சி  டைரக்சன்  டச்


4   உயிரே  போனாலும்  இனி  உன்  கூட  படுக்க  மாட்டேன்  என  சபதம்  போடும்  நாயகியை  நாயகன்  மடக்கி  அதற்கு  சம்மதிக்க  வைக்க கையாளும்  யுக்தியும்   அந்த  காட்சியில்  டைரக்சன்  டச்சும் 


5  ஹோட்டலில்  தமிழ்  தெரிந்த  பெண்ணை  நாயகி  பாத்ரூமில்  சந்திக்கும்  காட்சியும், அதற்கு  நாயகி  போடும்  பிளானும்



6  ஹோட்டலில்  நாயகி  தங்கி  இருக்கும்போது  தமிழ்  பாட்டு  கேட்க  ஒவ்வொரு  ரூமாக  செக்  செய்து  சரத்  பாபு  ரூமைக்கண்டுபிடித்து  அவரிடம்  பேச  முற்படும்போது  நாயகன்  அங்கே  வந்து  அவரை  இழுத்துச்செல்லும்  காட்சி 


7  க்ளைமாக்சில்  நாயகி  சரிதாவிடம்  சினிமாவிலாவது  என்  கேரக்டர்க்கு  கல்யாணம்  பண்ணி  வை  என  சொல்லும்  காட்சி 

செம  ஹிட்  சாங்க்ஸ்


1    மான்  கண்ட  சொர்க்கங்கள் .. காலம்  போகப்போக  யாவும்  வெட்கங்களே!ஏன்  இரண்டு  பக்கங்கள் ?


2  தொட்டுக்கட்டிய  மாப்பிள்ளை , நம்பி  வந்தது  பெண்  பிள்ளை


3  இவள்  உனை  நினைத்தபோதே  மடக்குவாளய்யா


  ரசித்த  வசனங்கள் (  சிவசங்கரி)


1   என்னது ? கல்யாணப்பொண்ணு  வெள்ளை  டிரஸ்  போட்டிருக்கா?


 கிறிஸ்டியன்ஸ் ல  வெள்ளை  டிரஸ்  போட்டாதான்  கல்யாணல்ப்பொண்ணுனு அர்த்தம் 


2  அதிர்ஷ்டம்   அனவுன்ஸ்  பண்ணிட்டா  வரும் ?  திடீர்னு வந்துதான்  கதவைத்தட்டும் 

3  நீ  படிக்கலை  என்பதுதான்  உன்னோட  மிகப்பெரிய  குவாலிஃபிகேஷன்., உனக்கு  இங்க்லீஷ்  கொஞ்சம்  கூடத்தெரியாது  என்பதுதான்  என்னோட  பெரிய  சந்தோஷம் 


4   இப்போ  ஷாப்பிங்  காம்ப்ளெக்ஸ்  போகப்போறோம்


 அப்டின்னா?


 இங்கே  உலகத்துல  உள்ள  எல்லாப்பொருட்களும்  கிடைக்கும், அம்மா, அப்பா  தவிர


5  நம்ம  ஊர்ல  ஒருத்தரை  ஒருத்தர்  பார்க்கும்போது  நமஸ்காரம்  பண்ணிக்கற  மாதிரிதான் இங்கே  ஃபாரீன்ல  ஒருவருக்கொருவர்  முத்தம் தருவதும்

6  அளவுக்கு  அதிகமா  கோபம்  வருதுன்னா உங்க  மனசுல  உள்ள  குற்ற  உணர்வை  மறைக்க ... 


7  சந்தோஷம்கறது  பணத்துல  இல்ல , மனசுல 


8  இந்தாங்க  சாக்லெட்  கிஃப்ட்


 நான்  ஒண்ணும்  குழந்தை  இல்லையே?


 நான்  சாக்லெட்  குடுக்கற  நேரம்  உங்களுக்கு குழந்தை  பிறக்கலாம், யார்  கண்டது ?


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஃபோர்ஜரி  மாப்பிள்ளை  கல்யாண  ஆல்ப  ஃபோட்டோ  ஃபிலிமை  வெளிச்சத்தில்  காட்டி  அதை  எரேஸ்  பண்ணுவது  ஓக்கே, அதை  ஆடியன்சுக்கு  புரிய  வைக்க  தனி  ரூமில்  செய்வது  போல்  காட்டி  இருக்கலாம், முதல்  இரவு  அறையில்  அதை  செய்து  ஒரு  பாக்சில்  வைப்பது  ஆபத்தாச்சே?  மணப்பெண்  அதைப்பார்த்து  உஷார்  ஆகிட்டா? டவுட்  வந்துட்டா?


2  நாயகன்  தன்  மனைவியை   தங்கை  என  பொய்  சொல்லி  பாஸ்போர்ட்  ரெடி  பண்ண   சில  வேலைகள்  செய்கிறான், அதுல  இனிஷியல்  காட்டிக்கொடுத்துடுமே? அண்னன்  , தங்கை  எனில்  ஒரே  அப்பா  ஒரே  இனிஷியல்  தானே  வரனும்? அதை  வெச்சு  மடக்கலாமே? ஏன்  சிக்கலை ?நாயகிக்கு  படிக்கத்தெரியாது  அதனால்  அவள்  அந்த  இனிஷியல்  மேட்டரை  பார்க்க  வழி  இல்லை , ஆனால்  பாஸ்போர்ட்  ஆஃபீசில்  அதை  கவனிப்பார்களே?


3  நாயகன்  தான்  வில்லன்  என்பது  படத்தின்  ஓப்பனிங்  சீனிலேயே ஆடியன்சுக்கு  தெரிந்து  விடுகிறது . முதல்  காட்சியிலேயே  என்  கல்யாண  வாழ்க்கை  வெறும்  47ன் நாட்கள்  தான்  என  நாயகி  சொல்லி  விடுகிறாள். இந்த  சீனும்  , டைட்டிலும் சஸ்பென்சை  உடைத்து  விட்டது .


4  நாயகியின்  கேரக்டர்  டிசைன்  நான்காவது  கூடப்படிக்காத  பட்டிக்காட்டுப்பெண், ஆனால்  ஜெயப்பிரதாவின்  லுக்  அப்படி  இல்லை , மாடர்ன்  கேர்ள்  போல  மேக்கப்  போட்டிருக்கறதை  த விர்த்திருக்கலாம்,  வழக்கமாக  கே  பி  படங்களில்  சரிதா  மேக்கப்  இல்லாமல்  வருவதைப்போல  ஜெயப்பிரதாவை  ரெடி  பண்ணி  இருக்கலாம் , அல்லது  சுலக்சனா, அர்ச்சனா  மாதிரி  கிராமிய  முகக்களை  உள்ளவரை நாயகி  ஆக்கி  இருக்கலாம்


5   நாயகனை  சந்திக்க  வரும்  வெள்:ளைக்காரி  அவருக்கு  முத்தம்  தருவது  ஏன்? என  நாயகி  சந்தேகப்பட்டு  கேட்கும்போது  நாயகன்  ஒரு  சமாளிஃபிகேசன்  பதில்  தருகிறான் ,  நம்ம  ஊர்ல  ஒருத்தரை  ஒருத்தர்  பார்க்கும்போது  நமஸ்காரம்  பண்ணிக்கற  மாதிரிதான் இங்கே  ஃபாரீன்ல  ஒருவருக்கொருவர்  முத்தம் தருவதும்.. அப்போ  நாயகி  ஏன்  அவனை  மடக்க  வில்லை? நாயகியை  சந்திக்க  வந்த  ஆண்  யாரும்  முத்தம்  தரவில்லையே? 


6  நாயகனின்  முதல்  மனைவியிடம்  தான்  உண்மையைக்கூறப்போவதாக  நாயகனிடம்  மிரட்டும்  நாயகி  அதை  சொல்லில்  சொல்லாமல்  செயலில்  காட்டி  இருக்கலாமே? 


7  அம்மா , அப்பாவின்  வற்புறுத்தலுக்காக  நாயகியைக்கல்யாணம்  செய்து  கொண்டதாக  நாயகன்  கூறுகிறான், தனது  விருப்பத்துக்காக  அந்த  வெள்ளைக்காரியைக்கட்டிக்கொண்டதாக  கூறுகிறான். இருவரையும்  ஒரே  வீட்டில்  வைத்துக்குடித்தனம்  செய்பவன்   அவனது  பெற்றோர்  வந்தால்  என்ன  சொல்லி  சமாளிப்பான்?


8  நாயகனின்  முதல்  மனைவியின்  டாக்டர்  நண்பர்  நாயகனின்  வீட்டுக்கு  வரும்போது சாக்லெட்  பரிசு  கொண்டு  வருகிறார், அதை  ஒரு  தமிழ்  நியூஸ்  பேப்பரில்  சுற்றித்தருகிறார். அதை  அப்படியே  நாயகியிடம்  கொடுத்தால்   உண்மையை  நாயகி  உணர்ந்து  விடுவார், டாக்டர்  தமிழர்  என்பது  தெரிந்து  விடும் , தனக்கு  ஆபத்து  என்பதை  நாயகன்  ஏன்  உணரவில்லை ? அந்த  நியூஸ்  பேப்பரை  எடுத்துட்டு  தந்திருக்கலாமே?


9  நாயகன்  நாயகியிடம்  ரூமை  விட்டு  வெளில  வரக்கூடாது  என  கண்டிசன்  போடுகிறான், அதற்குப்பதில்  ரூமை  வெளியில்  பூட்டி  விட்டுச்சென்றிருக்கலாமே?


10  நாற்பது  நாட்கள்  கர்ப்பம்  ஆக  இருக்கும்  நாயகியின்  கர்ப்பத்தைக்கலைக்க  ஏகபப்ட்ட  சுலபமான  வழிகள்  இருக்கும்போது  நாயகன்  அபார்ஷன்  பண்ண  டாக்டருக்கு  ஃபோன்  பண்ணி  அப்பாயிண்ட் மெண்ட்  கேட்பது  ரிஸ்க்  ஆச்சே?



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  இது  யூ  சர்ட்டிஃபைடு  ஃபிலிம்  தான், குடும்பத்துடன்  பார்க்கலாம், கண்ணியமான  காட்சி  அமைப்புகள் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - பெண்  பிள்ளைகளைப்பெற்றவர்களுக்கான  விழிப்புணர்வுப்படம்,  மசாலா

  அம்சங்களான  டூயட் , காமெடி  டிராக், ஃபைட்ஸ்  எல்லாம்  இல்லை, பெண்களுக்குப்பிடிக்கும். ரேட்டிங்  2.75 / 5 


டிஸ்கி - இந்தப்படம்  பற்றிய  ஒரு  விவாதம்  ஒரு  வாட்சப்  க்ரூப்பில்  நிகழ்ந்த  போது கருத்து  தெரிவித்த  எழுத்தாளர்கள்  தேவிகா  குலசேகரன் , வி ஜி  ஜெயஸ்ரீ  இருவரும்  தெரிவித்த  கருத்துகள் 


வி.ஜி . ஜெ =வெளிநாட்டில் இருக்கும் மணமகனுக்கு,  படிக்காத, அழகான orthodox family girl  யை திருமணம் முடிப்பார்கள். அவன் ஒரு fraud. Already married. மிக கொடுமைகளை அனுபவிக்கும் அந்தப் பெண் எப்படி தப்பிக்கிறாள் என்பது தான் கதை. சிவசங்கரி பிறந்த சமூகத்தை பற்றிய கதை என்பதால், write up ல புகுந்து விளையாடியிருப்பாங்க.  ஒரு காலத்தில், வெளிநாட்டு மணமகன்களை விரும்பி மணம் முடித்து வைத்த பெற்றோர்கள், இந்த கதை வந்தப் பின் ரொம்ப யோசித்து, விசாரித்து, பிறகே மணப்பேச்சை தொடங்குவர் என்பது செவி வழி செய்தி.



ஆமாம்! அப்போது நான் மயிலாப்பூரில் இருந்தேன். நிறைய பேருக்கு புத்தி வந்தது. எப்படியோ தள்ளிவிட்டால் போதும் என்று நினைத்தவர்களுக்கு!





எப்படியோ தள்ளி விடுவது என்று இல்லை. வெளி நாட்டு மாப்பிள்ளைகள் மேல் ஒரு மோகம். அப்படி திருமணம் செய்துக் கொடுத்து அதையும் ஒரு status symbol ஆக காண்பித்துக் கொண்டனர் சிலர்.




47 Natkal
47 Natkal.jpg
Poster of the Tamil version
Directed byK. Balachander
Screenplay byK. Balachander
Based on47 Natkal
by Sivasankari
Produced byR. Venkataraman
StarringChiranjeevi
Jaya Prada
Anne Patricia
CinematographyB. S. Lokanath
Edited byN. R. Kittu
Music byM. S. Viswanathan
Production
company
Premalaya Pictures
Release dates
  • 17 July 1981 (Tamil)
  • 3 September 1981 (Telugu)
CountryIndia
Languages
  • Tamil
  • Telugu

Friday, February 17, 2023

பகாசூரன் (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரிவஞ்ச் டிராமா)

 


2016ம்  ஆண்டு  பழைய  வண்ணாரப்பேட்டை என்னும்  சுமார்  ரக  அரசியல்  படம்  தந்தார் , நான்கு  வருட  இடைவெளிக்குப்பின் 2020 ல்   திரவுபதி  என்னும்  சாதி   ரீதியிலான படம்  தந்தார் , இது சமூக   வலைத்தளஙகளில்  பரபரப்பாக  பேசப்பட்டது . 2021ல்  இவரது  மூன்றாவது  படமாக  ருத்ர தாண்டவம் எனும்  ஆக்சன்  த்ரில்லர் வெளியானது .இதுவும்  சுமார்  ரகமே. . இவர்  மீது  விழுந்த  சாதி  ரீதியான  விமர்சனங்களுக்குப்பின்  (  பா  ரஞ்சித்  போலவே  இவர்  படங்களில்  சாதியை  வலுக்கட்டாயமாக  திணிப்பவர் என்னும்  விமர்சனம்  வந்தது)  இப்போது  2022 ல்  சாதியப்படமாக  இல்லாமல்  ஒரு  ரிவஞ்ச்  த்ரில்லராக  இந்தப்படத்தை  தந்திருக்கிறார். இது  எப்படி  வந்திருக்கிறது  என  பார்ப்போம் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் நெ1  முன்னாள்  ராணுவ  மேஜர். இப்போது  ஓய்வு  பெற்று ஒரு  யூ  ட்யூப்  சேனல்  நடத்தி வருகிறார். மொபைல்  ஆப்  மூலம்  நிகழும்   பாலியல் குற்றங்கள்  பற்றி  அப்டேட்டுவது  அவரது  யூ  ட்யூப்  சேனலில் செய்யும்  பணி . அவரது  அண்ணன்  மகளின்  தற்கொலைக்கு  காரணம்  ஆனவர்களை  தேடிக்கொண்டு  இருக்கிறார். அவரது  அண்ணன்  மகளின்  செல் ஃபோன்  அவருக்குக்கிடைக்கிறது , அதை  செக்  பண்ணிப்பார்க்கும்போது  சில  அதிர்ச்சியான  வீடியோக்கள்  கிடைக்கின்றன. அதன்  மூலம்  அவர்  குற்றவாளிகளை  அடையாளம்  காண  முடிகிறது 


 நாயகன்  நெ 2   ஒரு  சிவ  பக்தர் .கடலூரில்  இருந்து  சேலம்  வந்து  ஒரு  கோயிலில்  இறை  பணி , சேவை  செய்து  கொண்டிருப்பவர் . இவர்  தொடர்ந்து  மூன்று  கொலைகளை  கொடூரமாக  செய்து  வருகிறார். ஒரு  கல்லூரியின் பேராசிரியர் , விடுதியின்   லேடி  வார்டன் , காலெஜ்  வாட்ச்மேன்  என அடுத்ததுத்து  கொலைகள்  செய்கிறார். இவர்  எதற்காக  அநத  மூன்று  கொலைகளையும்  செய்தார்?நாயகன் நெ1  நாயகன்  நெ  2  இருவரும்  எந்தப்புள்ளியில்  இணைகிறார்கள்  என்பது  மீதி  திரைக்கதை 


நாயகன்  நெ 1  ஆக  சதுரங்க  வேட்டை  புகழ்  நட்டி  எனும் நட்ராஜ், துடிப்பான  நடிப்பு . கச்சிதமாக  நடித்திருக்கிறார்.


நாயகன் நெ 2  வாக  இயக்குநர்  செல்வராகவன்  அமைதியான  பக்தராகவும், ஆவேசமான  கொலைகாரராகவும்  மாறுபட்ட  நடிப்பை  தர  முயன்றிருக்கிறார். அண்டர்லைன்  த  வோர்டு  முயன்றிருக்கிறார். அவ்வளவே . சாணிக்காயிதம்  பாகம்  2  போலதான் அவரது  கேரக்டர்  டிசைன்  அமைந்திருக்கிறது 


கே  ராஜன்  வரும்போது  அவருக்கு  கை  தட்டல்  கிடைக்கிறது  , எல்லாம்  யூ  ட்யூப்  மகிமை .


கல்லூரியின்  தாளாளராக  ராதாரவி  வில்லத்தனம்  குட் . செல்வராகவனின்  மகளாக  ரிச்சா ,  புரோக்கராக  கூல்ஜெயந்த், ஹாஸ்டல்  வார்டனாக  சசி லயா  அனைவரும்  கச்சிதமாக  நடித்திருக்கிறார்கள் 

சபாஷ்  டைரக்டர்


1   உங்கள்  குழந்தைகளைக்கண்காணியுங்கள் ., செல் ஃபோனில்  அவர்கள்  என்ன  பார்க்கிறார்கள், என்ன  செய்கிறார்கள்  என    அறிந்து  கொள்ள  வேண்டும்   என்ற  கருத்து  பதிய வைத்த  விதம் 

2   வழக்கமான  அவரது  சாதி  ரீதியிலான  காட்சிகள் , வ்சனங்களை  தவிர்த்தது 


3  இந்தியன்  படத்தில்  நாயகனான  இந்தியன்  தாத்தா  வரிசையாக  கொலை  செய்வார். அந்த  பேடர்னில்  தான்  இந்த  திரைக்கதையிலும்  வருகிறது 



  ரசித்த  வசனங்கள் 

1  கணவனால்  திருப்தி  அடையாத  பெண்கள்  வேறு  உறவை  நாடினால்  அதை  கள்ளக்காதல்  என  கேவலப்படுத்துகிறார்கள் , ஆனால்  நாம் அதை  திருமணம்  தாண்டிய  உறவு என  கவுரவமாகச்சொல்ல  வேண்டும்  ( எக்ஸ்ட்ரா  மேரிட்டல் லைஃப்) 


2  இந்த  தப்பு  பண்ணுனவ்ங்க  எல்லாம்  சாக  வேண்டியதுதான், ஆனா  இப்படி  நார்மலா  சாகக்கூடாது , அசிங்கப்பட்டு  சாகனும் 


3 ஆண்கள்  மூளையை  வெச்சு  சம்பாதிக்கற  மாதிரி  பெண்கள்  உடம்பை  மூலதனம்  ஆக்கி  சம்பாதிப்பதில்  தப்பே  இல்லை 


4  வாழ்க்கைல  சோதனைகள்  வந்தா  இறங்கிப்போராடனுமே  தவிர  இப்படி  (நடத்தையில் ) இறங்கிப்போயிடக்கூடாது  , ஒழுக்கத்தை  விட்டா  எல்லாமே  நாசமாப்போயிடும் 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  செல்வராகவன்  நெருப்புடன்  பேசுவது  போல  ஒரு  காட்சி  வருகிறது. அதில்  ஏகப்பட்ட  தேவை  இல்லாத  குறியீடுகள்  எல்லாம்  இருக்கின்றது , அதைத்தவிர்த்திருக்கலாம்


2  முதல்  பாதியில்  இருந்த  பரபரப்பும்  , விறுவிறுப்பும்  பின்  பாதியில்  இல்லை 


3   தனது  காதலருடன்  லிப்  லாக்  செய்யும்  வீடியோ  வெளியாகி  அதை  வைத்து  அவரை  பாலியல்  தொழில்  தள்ள  வற்புறுத்தப்படுவது  நம்பும்படி  இல்லை . இது  எந்தக்காலம்  என  இயக்குநருக்குத்தெரியாதா?  ப்ரீ  வெட்டிங்  சூட்  என்ற  பெயரில்  அலங்கோலமாக  அணி  வகுக்கும் காலம், இப்போது  இத்ற்கெல்லாம்  பயப்படுவார்களா? 


4  திரைக்கதையில்  பெண்களைத்தான்  எல்லோரும்  குறை  சொல்கிறார்கள். காதலனுடன்  நெருக்கமாக  இருந்தது  தப்பு , முத்தம்  கொடுத்தது  தப்பு , அதை  வீடியோ  எடுக்க  உதவியது  தப்பு   என  எல்லா  தப்புக்களையும்  பெண்கள்  தலைல தான்  கட்டுகிறார்கள், ஏன்  ஆண்கள்  மேல்  தப்பு  சொல்லவே  இல்லை ? 


5  அறிவியல்  கண்டுபிடிப்புகளால்  நன்மையும்  இருக்கு , தீமையும்  இருக்கு , ஆனால்  இந்தக்கதையில்  செல்  ஃபோன்  தான் பகா சூரன்  என  அது  கெடுதல்  மட்டுமே  என்னும்  கருத்து  வலியத்திணிக்கப்படுகிறது 

6  காலேஜில்  படிக்கும்  ஒரு  பெண்ணுக்கு  மிரட்டல்  கால்  வருது . உடனே  அவர்  தன்  செல் ஃபோன்  எண்ணை  மாற்றி  விடலாமே? நெம்பர்  தெரிந்தால்தானே  மிரட்டல்  வரும் ?


7   காதலன்  உடல்  பாகங்களை   காட்டுவதாக  சொன்னதும்  உடனே  காலேஜ்  பெண்  அதற்கு  சம்மதித்து செல்  ஃபோன்  முன்  போஸ்  கொடுப்பாரா? அது  ரிப்பெருக்குப்போனால்  பரவிவிடும்  ஆபத்து  உள்ளது  என்ப்து  அவருக்கு  தெரியாதா? 


8   தெருக்கூத்துக்கலைஞனாக  வரும்  செல்வராகவன்  ஆக்சன்  ஹீரோ  மாதிரி  அனாயசமாக  அடித்து  வீழ்த்துவது  ஓவரோ  ஓவர்


9  பெண்  பிள்ளைகளை  வெளியே  அனுப்ப  வேண்டாம்  வீட்டிலேயே  பத்திரமாக  வைத்துக்கொள்ளுங்கள்  எனும் கருத்து  மறைமுகமாக  சொல்லபப்ட்டிருக்கிறது , அதற்கு  சாத்தியமே  இல்லையே? 


10  இயக்குநர்  தனது  முந்தைய  படங்களில்  டெக்னிக்கள்  அம்சங்கள்  மேக்கிங்கில்  நல்ல  தரம்  காட்டி  இருந்தார்  ஆனால்  அந்த  அளவுக்கு  இதில்  இல்லை , குறிப்பாக  ஒளிப்பதிவில்  பல  தவறுகள் . 

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  இது யு  ஏ  சர்ட்டிஃபிகேட்  படம்  தான். ஆனாலும்  மைனர்கள்  பார்க்கத்தேவை  இல்லை .



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - பகாசூரன் - தனது மகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியவர்களை பழி வாங்கும் அப்பாவின் கதை, இடைவேளையோடு படம் முடியுது, ஆனா பின் பாதி இழுவை.செல்வராகவன், நட்டி நடிப்பு குட். விகடன் மார்க் 40 , ரேட்டிங் 2/ 5

வாத்தி (2023) தமிழ் - சினிமா விமர்சனம்


  சிவகார்த்திகேயனின்  பிரின்ஸ் , விஜய்-ன்  வாரிசு  படங்களைத்தொடர்ந்து  ஒரு  முன்னணி  தமிழ்  ஹீரோ  ஒரு  தெலுங்கு  டைரக்டரை  நம்பி  ஏமாந்த  சம்பவம் இது.  . தமிழ் , தெலுங்கு  என  இரு  மொழிகளில்  உருவான  படம்  என  அறிவிக்கப்பட்டாலும் இது தெலுங்கு  நடிகர்களை  வைத்து  எடுக்கப்பட்ட  தெலுங்குப்படத்தின்  தமிழ் டப்பிங்  வெர்சன்  தான்


கடந்த  ஐந்து  ஆண்டுகளாக  தெலுங்கில்  எந்த  ஒரு  ஹிட்  படமுமே  தராத  இயக்குநர்  வெங்கி  அட்லூரியை  நம்பி  தனுஷ்  ஒரு  படம்  பண்ணத்துணிந்தமைக்கு  பாராட்டுக்கள் .. ஆக்சுவலா  இவர்  வழக்கமாக  ரொமாண்டிக்  சப்ஜெக்ட்களை  எடுப்பவர். அவருக்கு  இது  மாதிரி சப்ஜெக்ட்  புதுசு . தனது  பெயரிலேயே  அட்லீ இருப்பதால்  வெங்கி  அட்லூரி  ஏற்கனவே  கல்வித்திட்டத்தை  சாடிய  படங்களான  சமுத்திரக்கனியின்  சாட்டை , விமல் -ன்  வாகை  சூடவா ,ஜோதிகாவின்  ராட்சசி , ஷங்கரின்  ஜென்டில்மேன், நண்பன், கமலின்  நம்மவர் , ஷாருக்கானின்  ஸ்வதேஷ் ( 2004), ராணி முகர்ஜியின்  ஹிட்ச்கி(2018)  போன்ற  பல  படங்களில்  ஏற்கனவே  வந்த  காட்சிகள் , வசனங்களை  அப்படியே   கதம்ப  மாலை  ஆக்கி  படம்  தந்திருக்கிறார்


 அசுரன்  படத்தின்  க்ளைமாக்ஸில்  தனுஷ்  ஒரு  வசனம்  சொல்வார் , உன்  கிட்டே  சொத்து  பத்து , நகை  நட்டு  இருந்தா  அதை  யாராவது  களவாடிட்டுப்போய்டலாம், ஆனா  கல்வியை உன்  கிட்டே  இருந்து  யாராலும்  திருட  முடியாது.., இந்த  வசனம்  ஏற்படுத்திய  தாக்கத்தில் உருவான  படம்  தான்  இது , ஆனால்  அந்தப்படத்தில்  அந்த  வசனம்  ஏற்படுத்திய  தாக்கத்தில்  பாதி  கூட  இந்த  முழுப்படமும்  தரவில்லை 


ஸ்பாய்லர்  அலெர்ட்


கதை  நடக்கும்  காலகட்டம் 1998-1999. கதை  நடக்கும்  இடம்  தமிழக- ஆந்திர  எல்லையில்  உள்ள  சோழபுரம்  எனும்  கிராமம்


பிரைவேட்  ஸ்கூல்  அசோசியேசனின்  தலைவர்  தான்  வில்லன் . இவருக்கு  சொந்தமாக  ஒரு  தனியார்  பள்ளியும்  இருக்கிறது.   எவ்வளவு  செலவானாலும்  பரவாயில்லை , நம்ம  பிள்ளை  தனியார்  பள்ளியில்  தான்  படிக்கனும், அங்கே  தான்  தரமான  கல்வி  கிடைக்கும், அங்கே  படிச்சாதான்  டாக்டராகவோ, இஞ்சினியராகவோ  வர  முடியும்  என்ற  எண்ணம்  பெற்றோர்களுக்கு  ஏற்பட  வேண்டும்  என்ற  நினைப்பு  உள்ளவர்  வில்லன் . அரசாங்கப்பள்ளியில்  படிப்பது  இழுக்கு , அதில்  படிக்கும்  மாணவர்கள்  பெரிய  அளவில்  முன்னேறிவிட  முடியாது  என்ற  எண்ணம்  பெற்றோர்களுக்கு  வர  வேண்டும்  என்ற  எண்ணம்  உள்ளவர்  வில்லன் 


எல்லோருமே  தனியார்  பள்ளியிலேயெ  படித்து  விட்டால்  அரசுப்பள்ளிகளின்  நிலை  என்ன  ஆகும் ? எனவே  நாங்களே  அரசுப்பள்ளிகளை  தத்து  ஏடுத்துக்கொண்டு  எங்களிடம்  உள்ள்   ஆசிரியர்களை  வைத்து நடத்துகிறோம்  என  வில்லன்   சொல்லி  அரசுப்பள்ளிகளை கையகப்படுத்துகிறார். ஆனால்  அவர்  எண்ணம்  நல்ல    அனுபவம்  உள்ள  ஆசிரியர்களை  தனியார்  பள்ளிகளில்  நியமிப்பது , அதிகம் அனுபவம்  இல்லாத புதிய  ஆசிரியர்களை  அரசுப்பள்ளியில்  நியமித்து  டம்மி  ஆக்குவது தான்.


நாயகன்  வில்லனின்  தனியார்  பள்ளியில்  ஒரு  உதவி  ஆசிரியர். அவரை   ஒரு  கிராமத்து அரசுப்பள்ளியில்  ஆசிரியராக   வில்லன்  நியமிக்கிறார். இவரு  அங்கே  போய்  என்னத்தைப்பெருசா  பண்ணிடப்போறார்  என்ற  எண்ணத்தில்தான்  வில்லன்  நாயகனை  நியமிக்கிறார். ஆனால்  நாயகன்  அங்கே  போய்  என்ன  என்ன  தரமான  சம்பவங்களை  செய்கிறார்? வில்லனுக்கு  எப்படி  ஆப்பு  வைக்கிறார்  என்பதுதான்  மீதி  திரைக்கதை 



நாயகனாக  தனுஷ். அசுரன் , கர்ணன், திருச்சிற்றம்பலம்   போன்ற  படங்களீல்  மாஸ்  காட்டி  இருந்தார், அந்த  அளவுக்கு  இந்தப்படத்தில்  அவருக்கு  தீனி  இல்லை  என்றாலும்  அவர்  அந்த  கதாபாத்திரத்துக்கு  எந்த  அளவு  நியாயம்  செய்ய  முடியுமோ   அந்த  அளவு  செய்திருக்கிறார். அவரது  அரைக்கை  சட்டை   கை  மடிப்பு  கூட  வாத்தியார்  என்பதால்  எம் ஜி ஆர்  டிரசிங்  சென்சை  ஃபாலோ  பண்ணி  தான் இருக்கிறது . கதைப்படி  இவர்  வாத்தியாராக  வந்தாலும்  இவரது  ந்டை  உடை  பாவனைகள்  உடல்  மொழி  எல்லாம்  ஒரு  மாணவனைப்போலத்தான்  யூத்  ஃபுல்லாக  இருக்கிறது . பல  காட்சிகளில்  ரஜினியின்  பாதிப்பு  இருக்கிறது 


வில்லனாக  சமுத்திரக்கனி . இதுவ்ரை   அவரை  நாயகனாக , குணச்சித்திர கதாபாத்திரமாக  பார்த்த  நமக்கு  வில்லனாகப்பார்க்க  சங்கடமாக  இருந்தாலும்  நடிப்பில்  அவர்  எந்தக்குறையும்  வைக்கவில்லை . கார்ப்பரேட்  வில்லன்  போல கல்விக்கு  எதிரான  வில்லனாக  காட்டப்பட்டு  இருக்கிறார்


 நாயகியாக  சம்யுக்தா  அதிக  வாய்ப்பில்லை . வந்தவரை  ஓக்கே , அவருக்கு  ஆடை  வடிவமைப்பாளராக  பணி  புரிந்தவருக்கு  ஒரு  சபாஷ் . சேலையில்  வரும்  ஃபிளிட்டைக்கூட  கன  கச்சிதமாக  ஒரு  டீச்சருக்கு எப்படி  இருக்க  வெண்டுமோ  அதே  போல   வடிவமைத்த  விதம்  ;பிரமாதம் , ஆனால்  படத்தின்  பின்  பாதியில்  இவரது  சுவட்டையே  காணவில்லை


 பாரதிராஜா  ஒரே  ஒரு  சீனில்  கெஸ்ட்  ரோலில்  வருகிறார். அருமையான  நடிப்பு . , ஆடுகளம் நரேன்  நல்ல  குணச்சித்திர  நடிப்பு , ஊர்  தலைவராக  வரும் சாய்  குமார் , மாணவராக  வரும்  கென்  கருணாஷ்  அனைவரும்  கச்சிதம் 


நாயகன்  கணக்கு  வாத்தியாராக  வருகிறார், ஆனால்  நாயகியை  சரியாக  கணக்கு  பண்ணவில்லை , அதே  போல்  நாயகி  பயாலஜி  டீச்சராக  வருகிறார், ஆனால்  நாயகனுடனான கெமிஸ்ட்ரி  ஒர்க்  அவுட்  ஆகவில்லை 




சபாஷ்  டைரக்டர்

1  அரசுப்பள்ளியில்  மினிமம்  ஐந்து  மாணவர்களாவது  இருக்க  வேண்டும், இல்லையெனில்   பள்ளி  மூடப்படும்  எனும் நிலையில்  அந்த  ஐந்து  பேராவது  படிக்க  வர  வேண்டும்  என  மாணவர்களின்  பெற்றோரிடம்  நாயகி  கெஞ்சுவது  போல  ஒரு  காட்சி THE LITTLE BIG MASTER(2015) படத்தில் இருக்கும், அதை அப்படியே இதிலும் வைத்த லாவகம்


2 வண்டிக்கு  அச்சாணி  எப்படி  முக்கியமோ  அது  மாதிரி  குழந்தைகளுக்கு  கல்வி  மிக  முக்கியம் , என்ன தான்  நாம   ஆசிரியர்களை  கேலியும்  , கிண்டலும்  செய்தாலும்  நம்  வாழ்க்கையில்  மறக்க  முடியாத  நபர்களாக  நம்மை  மாற்றி   அமைக்கும்  டர்னிங்  பாயிண்ட் ஆக  ஆசிரியர்கள்  விளங்குகிறார்கள்  என்ற  கருத்தை  வலியுறுத்திய  விதம்


3  ஜாதி , மதம்,  ஏழை  , பணக்காரன்  என்ற  பாகுபாடு  இல்லாமல்  எல்லாரும்  சரிசமமாக  பழகக்கூடிய  இடம்  பள்ளிக்கூடம், ஆனால்  அங்கேயே  ஒரு  கட்டத்தில்  இவன்  நம்ம  ஆளு  , அவன்  பெரிய இடத்துப்பையன்  எனற  வித்தியாசம்  காட்டப்படும்போது  நாயகன்  அந்த  மாறுபாடான  எண்ணத்தை  வேரோடு  களைய  ஸ்பீடு , வெலாசிட்டி  என  இரு    சப்ஜெக்ட்  சம்பந்தமாக  பாடம்  நடத்தி  அவர்களுக்கு  உணர  வைக்கும்  மாஸ்  சீன் 


4  ஜிவிபியின்  இசையில்  ஒரு தலைக்காதலைத்தந்து  பாட்டு  செம  ஹிட்  அதை  படமாக்கிய  விதமும்  அருமை . வாத்தி  பாட்டு  தனுஷ்  ரசிகர்கள்  கொண்டாடலாம். பிஜிஎம்  ஓக்கே  ரகம் 


5  கல்வி  முறையில்  நிகழும்  அவலங்கள் , அரசியல்  ஆக்கப்ப்ட்ட  கல்வி  நிறுவனங்கள் , பெண்  கல்வியின்  அவசியம், அரசுப்பளிகள்  எப்படி  எதனால்  மூடப்படுகின்றது ? தனியார்  பள்ளிகள்  எப்படி  தனக்கான  பாதையைத்தேர்ந்தெடுத்து  வெற்றி  பெறுகின்றன, அரசுப்பள்ளிகளை  அரசாங்கம்  கை விடும்  நிலை , வியாபாரம்  ஆகி  விட்ட  கல்வி  போன்ற  விஷயங்களை  பெசிய  விதம் 

6  தனுஷின்  ஸ்க்ரீன் பிரசென்ஸ், க்ளீன்  ஷேவ்  லுக்  


7  அடல்ட்  கண்ட்டெண்ட்ஸ்  இல்லாத  , குடும்பத்துடன்  காணத்தக்க கண்ணியமான  காட்சிகள் 


8   1999 -2000  காலக்கட்டத்தை  கண்  முன்  நிறுத்தும்  ஆர்ட்  டைரக்சன் 


  ரசித்த  வசனங்கள் 


1  பணம்  எப்போ  வேணா  எப்படி வேணா  சம்பாதிச்சுக்கலாம், ஆனா  படிப்பு  தான்  மரியாதையை  சம்பாதித்துக்கொடுக்கும் 


2  யாருமே  இங்கே  தேவை  இல்லாத  ஆட்கள்  கிடையாது .ஒருத்தங்க  நமக்குத்தேவைப்படும்போது  அவங்க  என்ன  ஆளுங்க ( என்ன  ஜாதி ) என்பது  நம் கண்ணுக்கு  தெரியாது 

3  படிப்பை  பிரசாதம்  மாதிரி  கொடுங்க , அதை  ஃபைவ் ஸ்டார்  ஹோட்டல்  சாப்பாடு  மாதிரி  விற்காதீர்கள் 

4  குழந்தை  ஆசைப்பட்டதை  நாம  வாங்கிக்கொடுக்கலைன்னா  அந்தக்குழந்தை  அன்னைக்கு  மட்டும்தான்  அழும், ஆனா  அதை  வாங்கிகொடுக்க  முடியலையேனு   அவங்க  அம்மா, அப்பா  காலம்  பூரா  அழுதுட்டு  இருப்பாங்க 


5  தரமான  கல்வி  வேணும்னா  காசு  கொடுக்கனும்

6  படிக்கனும்கற  ஆசை எவனுக்கு  வந்தாலும்  பணம்  கட்டுனாத்கான்  நல்ல  கல்வி  கிடைக்கும்கற  எண்ணத்தை  விதைக்கனும்


7  நம்  நாட்டைப்பொறுத்தவரை  கல்வி  ஒரு நாந்பிராஃபிட்டபிள்  சர்வீஸ்


8    தயவு  செஞ்சு  நீ  அரசியலுக்கு  வந்துடாத 


 ம்ஹூம்,கல்வில  கிடைக்கற  காசு  அரசியலில்  கிடைக்காது 


9  ஜீரோ  ஃபீஸ்  ஜீரோ  எஜூகேஷன்  , மோர்  ஃபீஸ்  மோர்  எஜூக்கேஷன், இதுதான்  இப்போ  ட்ரெண்ட்



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  பல்லாண்டு  வாழ்க  படத்தில்  எம் ஜி ஆர் , இவண்  பட  க்ளைமாக்சில்  இரா  பார்த்திபன்  பேசியே  வில்லன்களை  திருத்துவது  போல  நாயகன்  ஓவராகப்பேசிப்பெசி  எல்லோரைய்ம்  திருத்துவது  ஓவர் 


2 நாயகனுக்குக்கொடுக்கப்படும்  ஓவர்  பில்டப் , கடவுள்  ரேஞ்சுக்கு  தூக்கி  வைப்பது  எல்லாம்  அய்யகோ 


3  தமிழ்ப்படத்துக்கான  சாயல்  கொஞ்சம்  கூட  இல்லாதது  பெரிய  மைனஸ் 


4  நாயகன் ஆசிர்யராக  பள்ளி  மாணவர்க்ளுக்கு  க்ளாஸ்  எடுக்கிறாரா? ஆடியன்சான  நமக்கு  பாடம்  நடத்தறாரா? என  அப்பப்ப  டவுட்  வரும்  அளவு  ஓவரோ  ஒவர்  பிர்சங்கங்கள் 


5 படத்தில்  காதல்  காட்சிகள் , காமெடி  டிராக்  எதுவும்  ஒர்க்  அவுட்  ஆகவில்லை , நமக்கு  ஒரு  கனெக்ட்டையும்  கொடுக்கவில்லை


6  பாரதியார் வேடம்  போட்டு  வரும்  நாயகன்  போடும்  ஒரு  ஃபைட்  சீன்  காமெடியாக  இருக்கிறது , அதை  தவிர்த்திருக்கலாம் 


7  பிரச்சாரப்படம்  போல , ஆர்ட் ஃபிலிம்  போல  பல  காட்சிகள்  படமாக்கப்பட்ட  விதம் 

8  பிள்ளைகளை  பள்ளிக்கு  அனுப்ப  மாட்டோம் என  அடம்  பிடிக்கும்  பெற்றோர்  பஞ்சாயத்தார்  முன்னிலையில் தனுஷ்  பேசும்  3  நிமிச  வசனத்தில்  மனம் மாறி  அனுப்புவது  நம்ப  முடியாத  நாடகத்தனம்

9  நாயகன்  ஊரை  விட்டு  விரட்டப்படும்  தருணம்  ஒரு  பையன்  பேசும்  சின்ன  வசனத்தால்  மொத்த  ஊரும்  மனம் மாறும்  காட்சி  நம்ப  முடியாத இடம் 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-  எதுவும்  இல்லை 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -வாத்தி (2023) தமிழ்- பி சி செண்ட்டர்களில் ஈசியாக ஹிட் ஆகக்கூடிய ,முன் கூட்டியே யூகிக்க முடிந்த திரைக்கதைதான்,ஹாங்க்காங் படமான . THE LITTLE BIG MASTER(2015) ஹிருத்திக் ரோஷன் நடித்த ஹிந்திப்படமான SUPER 30 ஆகிய படங்களின் அட்லி வெர்சன் பட்டி டிங்கரிங் கதை தான். தெலுங்கு டப்பிங் படம் போல படம் பூரா தெலுங்கு ஆர்ட்டிஸ்ட்கள், லிப் சிங்க் செட் ஆகவே இல்லை. ஆனந்த விகடன் மார்க் =41 , ரேட்டிங் 2.5 /5

Thursday, February 16, 2023

MONEY HEIST -2021 ( நேஷ்னல் பேங்க் ஆஃப் ஸ்பெயின்) - வெப் சீரிஸ் விமர்சனம் ( பேங்க் ராபரி த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ்


முதல்;  2  பாகங்களில்  நாயகன்  தன்  ஆட்களுடன் ராயல் மிண்ட்  எனும்  இடத்தில்  பணம்  அச்சடித்துக்கொள்ளை  அடித்து  விடுகிறான், வெற்றிகரமாக  அவன்  ஆட்கள்  தப்பி  விடுகிறார்கள் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


 கொள்ளைக்காரர்கள்  அனைவரும்  ஏற்கனவே  செய்து  கொண்ட  ஒப்பந்தப்படி   தனித்தனியே  வெவ்வேறு  இடங்களில்  வசிக்கிறார்கள் . போலீஸ்  இன்ஸ்பெக்டர்  ரக்கேல்  நாயகனைத்தேடி  அவன்  கொடுத்த  க்ளூவை  வைத்து  ஒரு  தீவுக்கு வந்து  இணைகிறாள் 


ரியோ வும் , டோக்கியோவும்  ஒப்பந்தத்தை  மீறி  சாட்டிலைட்  ஃபோனை  பிளாக்கில்  வாங்கி உபயோகிக்க   போலீஸ்  ட்ராக்  பண்ணி  ரியோவைப்பிடித்து  விடுகிறது , உடனே  டோக்கியோ நயகனான  ப்ரொஃபசருக்கு  தகவல்  சொல்ல  மீண்டும்  குற்ற  மேஜை மாநாடு  கூட்டபடுகிறது 


பேங்க்  ஆஃப்  ஸ்பெயினில்  90 டன்  தங்கக்கட்டிகள் இருக்கின்றன. அந்த  பொக்கிஷ  அறையைத்திறக்க  அங்கே  இருக்கும்  கவர்ன்ரால்தான்  முடியும், அங்கே  போய்  அவரைப்பிணயக்கைதியாகப்பிடித்து  வைத்து  தங்கத்தை  கொள்ளை அடித்து  ரியோவையும்  மீட்க  வேண்டும், இதுதான்  பிளான். நாயகனின்  இந்தத்திட்டம்  வெற்றி  அடைந்ததா? என்பதை  பாகம் 3 ( 10 எபிசோட்ஸ்)  பாகம் 4 ( 8 எபிசோட்ஸ்)  பாகம் 5 (10 எபிசோட்ஸ்) ஆக  மொத்தம் 28  எபிசோட்ஸ். ஒவ்வொரு  எபிசோடும்  50  நிமிடங்கள் கடைசி  எபிசோடு  மட்டும் 76  நிமிடங்கள் மொத்தம்  23  மணி  நேரம்  ஆகும்


முதல்  இரண்டு பாகங்களில்  நாயகனுக்கு  பெரிதாக  சவால்  இல்லை .  போலீஸ்  இன்ஸ்பெக்டரை  லவ்  பண்ணிவிடுவதால்  நேரடியான  வில்லன்  இல்லை ,,  இதில்  ஏகப்பட்ட  வில்லன்கள் 



1  பப்ளிக் ஸ்டண்ட்  பைத்தியம்  ராயல்  மிண்ட்  டைரக்டர்   ஆர்த்ரோ மிஷின்  கன்னுடன்  களம்  இறங்குவதால்


2  கவரனரின்  முதன்மை  பாதுகாப்பு  அதிகாரி  மாண்டியா 


3 இன்ஸ்பெக்டர்  அலிசியா

4  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட் வில்லன் +வில்லி 

5   போலீஸ்  இன்சார்ஜ்

6  மிலிட்ரி 


இத்தனை  தடைகளையும்  நாயகன்  எப்படி  எதிர்கொள்கிறார்  என்பதை  மிக  விறுவிறுப்பாக  கொண்டு  சென்றிருக்கின்றனர்


 விக்கிபீடியாவில்  இந்த  வெப்சீரிஸ்  பற்றி  விபரம்  எடுத்தால்  இது  வாங்கிய  விருதுகள்  மட்டும்  எக்கச்சக்கம்  என  காட்டுகிறது , உலக  மொழிகள்  பலவற்றிலும்  இது  டப்  செய்யப்பட்டு  வெளியாக  சூப்பர்  டூப்பர்  ஹிட்  ஆகி  உள்ளது 

 நம்ம  ஊர்  பிக்பாஸ்  வந்த  புதிதில்  ஓவியா  ஆர்மி  உருவானது  போல  இதில்  வரும்  கேரக்டர்களுக்கு   டோக்கியோ  ஆர்மி ,  நைரோபி  ஆர்மி  எல்லாம்  உருவானது  வரலாறு 


 பின்னணி  இசை  பட்டாசைக்கிளப்பி  இருக்காங்க . குறிப்பாக  பாகம்  5ல்  வரும்  கடைசி  5  எபிசோடுகள்  கூஸ்பம்ப்  மொமெண்ட்ஸ்  களப்பும் பிஜிஎம்  பிரித்து  மேய்ந்திருப்பார்கள் 


சபாஷ்  டைரக்டர் 


1  முதல்  இரு  பாகங்களிலும்  சைக்கோ  வில்லனாக  வந்த  இன்சார்ஜ்  பெர்லின்   அதில்  இறந்து  விட்டாலும்  சாமார்த்தியமாக பேங்க்  ஆஃப்  ஸ்பெயின்  பிளான்  போட்டதே  அவர்தான்  என  அவருக்கு  ஒரு  ஃபிளாஸ்பேக்  வைத்து  டெவலப்  பண்ணியிருந்த  விதம், கேரக்டர்  டிசைன்  எல்லாம்  பிரமாதம்,  போன  பாகத்தில்  அவரை  வெறுத்தவர்கள்  இந்த  பாகங்களில்  விரும்புவார்கள்


2  மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லாதது  போல ஆரம்பத்தில்  தோன்றினாலும்  நாயகனின்  அண்ணன்  தன்  மனைவியை  புதுக்காதலியை  தன்  மகனுக்கு  அறிமுகப்படுத்துவதும்  மகன்  சித்தி  முறையான  அவளிடம்  காதல்  கொள்வதும்  அதற்குபின்  நடக்கும்  சம்பவங்களும் உள்ளத்தை  கொள்ளை  கொள்பவை 


3  90  டன்  தங்கத்தை  அரிசி  போன்ற  வடிவில்  உருக்கி   சாக்கடை  பைப்  வழியாக  வாட்டர்  டேங்க்கில்  பெற்று  மீண்டும்  கட்டியாக  மாற்று,ம் ஐடியா  எல்லாம்  வேற  ரகம் 


4   வெப்சீரிஸின்  வசனங்கள்  பிரமாதம். பஞ்ச்  டயலாக்ஸ்  ஆகட்டும்  வாழ்க்கைத்தத்துவங்கள்  ஆகட்டும்   எல்லாமே  செம ,


5  திரைக்கதை  எழுதியவர்  அலல்து  இயக்குநர்  ஒரு  டாக்டராக  இருக்குமோ  என  சந்தேகம்  வரும்  அளவுக்கு  ப்டத்தில்  வரும் பெரும்பாலான  கேரக்டர்கள்  டாக்டரகளாகவே  மாறி  சிகிச்சை  செய்கிறார்கள்,  ஆபரேஷன்  செய்து  தையல்  போடுகிறார்கள் , அதை  நம்பும்  விதத்தில்   காட்சிப்படுத்தி  இருக்கிறார்கள்


6   உள்ளே  கேப்டனாக  பணி  ஆற்றும்  பல்ர்மோ  கண்ணில்  அடிபட்டு  சிகிச்சை  பெறுவதும்   சில  இடங்களில்  வில்லன்  போல்  நடந்து  கொள்வதும்  சுவராஸ்ய  திருப்புமுனைகள் 


7   கவர்னரின்  செக்யூரிட்டி  ஆஃபீசர்  மாண்டியா  ஆக்சன்  சீக்வன்ஸ்  எல்லாம்  அதகளம்.   செம  பர்ஃபார்மென்ஸ்


8  இன்ஸ்பெக்டர்  ரக்கேல் இப்போது  நாயகன்  பக்கம்  என்பதால்   கைது  செய்யப்பட்ட  அவரை  நாயகன்  மீட்கும் இடம்  கூஸ்பம்ப்  ரகம் என்றால்  அவரை பேங்க்  ஆஃப்  ஸ்பெயினுக்குள் ஹெலிகாப்டர்  மூலம்  உள்ளே  அனுப்பும்  சீன்  எல்லாம்  வேற  லெவல்


9   நிறை  மாத  கர்ப்பிணியான  இன்ஸ்பெக்டர்  அலீசியாவுக்கு  நாயகன்  பிரசவம்  பார்க்கும்  காட்சியும்  இருவரும்  போலீசிடம்  இருந்து  தப்பிக்க  கைக்குழந்தையுடன்  பரிதவிப்பதும்  செண்டிமெண்ட்  டச் 


10    தங்கம்  கொள்ளையடிக்கப்பட்ட  விபரத்தை  நாயகனே  வீடியோ  எடுத்து  மீடியாக்களில்  பரவ  விட்டு  ஸ்டாக்  மார்க்கெடை  ஸ்தம்பிக்கச்செய்வதும் ,  நாட்டின்  பொருளாதாரமே  கவிழும்  நிலையில்  நாயகன்  டீல்  பேசும்  இடம்  எல்லாம்  திரைக்கதையில்  தெறிக்க  வைக்கும்  அம்சங்கள் 


11  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டாக  திடீர்  என  தோன்று,ம்  வில்லன்  வில்லி  இருவரும்  90  டன்  தங்கத்தை  மறைக்க  வைக்க  எடுக்கும்  முயற்சிகளும் , இன்ஸ்பெக்டர்  அதைக்கண்டு  பிடிக்கும்  லாவகமும்  அபாரம் 


12   எடிட்டிங்  அட்டகாச,ம்.  எந்த  எந்த  இடத்தில்  எந்த  எந்த  ட்விஸ்ட்டை  ஓப்பன்  பண்ணனுமோ  அந்த  அந்த  இடத்தில்  அதைக்கச்சிதமாகக்கையாண்ட  விதம் சபாஷ்  போட  வைக்கிறது 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் ,  திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1    ஒவ்வொரு  திட்டத்திலும்  பிளான்  ஏ  பிளான்  பி  என  பலவித  திட்டங்களில்  யோசிக்கும்  நாயகன்  தான்  போலீசில் மாட்டிக்கொண்டாலோ, தான்  கமாண்டிங்  ப்ளேசில்  இல்லாமல்  போனாலோ  ஆல்ட்டர் நேட்டிவாக  என்ன  செய்ய   வேண்டும்  என  ரெடி  பண்ணாமல்  இருப்பது 


2   தங்கத்தை  உருக்க  கிட்டத்தட்ட  ஒரு  ஃபேக்டரியே  பேங்க்குக்குள்  உருவாகி  அத்தனை  எந்திரங்கள்  இருக்கின்றன, அவற்றை  எல்லாம்  எப்படிக்கொண்டு  வந்தார்கள் ?


3   டோக்கியோ  5  புல்லட்  உடலில் பாய்ந்து   கீழே  விழுந்து  கிடக்கிறாள் , ஒரு  பெரிய  அதிகாரியான  மாண்டியோ  முட்டாள் தனமாக  அருகே போய்  எதற்குப்பார்த்து  மாட்டுகிறான் ? மிலிட்ரி  ட்ரெய்னிங்கில்   அதை  எல்லாம்  கூடாது  என  சொல்லிக்கொடுத்து  இருப்பார்களே? 


4  போலீஸ் இன்ஸ்பெக்டரும் காதலியுமான  ராக்கெல்  ஒரு  கட்டத்தில் காட்டில் ஓடும்போது  மரங்கள்  மீது  ஏறி  72  மணி  நேரம்  பதுங்கி  இருக்க  வேண்டி  இருக்கும்  என  முன்  கூட்டியே  நாயகன்  சொல்லி  விடுகிறான், ஆனால்  அதற்கான  பயிற்சியை  காதலிக்கு கற்றுத் தரவில்லையே?  அது  போக  ஒரு  போலீஸ்  ஆஃபீசரான  அவர்  நார்மல்  மனிதனைப்போல் மரம்  ஏற  தடுமாறுகிறார்


5  நாயகனின்  அண்ணன்   திட்டத்தை  விபரிக்கும்போதே   கவர்னரின்  செக்யூரிட்டி  டேஞ்சரஸ்  ஃபெலோ  என  சொல்லி  விடுகிறான், அப்படி  இருந்தும்   அவனை  அசால்ட்டாக  விட்டு  மாட்டிக்கொள்வது  ஏன் ?  


6   ,  கவர்னரின்  செக்யூரிட்டி  ஆஃபீசரை  வெளியே  விட்டதே  தவறு.  உள்ளே  உள்ள  வீக்னெசை  காட்டிக்கொடுப்பார்  என  தெரியாதா? 


7  ஆர்த்ரோ  அத்து  மீறி  பேங்க்குக்குள் வந்தபோதே  அவனை  வெளியே  அனுப்பி  இருக்கலாமே? அதை  ஏன்  செய்யவில்லை ? 


8     டோக்கியோ , நைரோபி  இருவர்  இறந்ததை  மக்களுக்கு  தெரிவித்து  அனுதாபம்  அள்ளிக்கொள்ளும்  நாயகன்  மக்கள்  புரட்சி வெசிப்பதை  சிரிப்புடன்  ரசிக்கிறான், ஆனால் க்ளைமாக்ஸில் நாயகன்  உட்பட  எல்லாரும்  பிணங்களாக  வெளியேறும்போது  மக்கள்  அமைதியாகப்பார்த்துக்கொண்டு  இருப்பது  எப்படி ? போலீஸ்  ஒழிக  டயலாக்  என்ன  ஆச்சு ? 



ரசித்த  வசனங்கள்

  1   சொர்க்கத்துல  கூட இப்படித்தான்  நடக்கும்  போல , யாரோ  பண்ற  ஒரு  சின்னத்தப்பால  அது  நரகமா  மாறிடும் 


2   போர்ல  யார்  கட்சி  மாறுவாங்க  தெரியுமா? துரோகிகள் தான்


3   நேஷ்னல் பேங்க்  ஆஃப்  ஸ்பெயின்ல  இருந்து  தங்கத்தை  கொள்ளை  அடிக்கப்போறோமா? அது  ஒண்ணும்  அவ்வளவு  ஈசியான  விஷயம்  இல்லையே?


 ஈசியான  விஷயத்தை  நாம  எப்போ  செஞ்சிருக்கோம்?


4  எப்பவுமே  போர்  ஆரம்பிக்கற  அந்த  முதல்  நொடி  ரொம்ப  முக்கியமானது


5  வாழ்க்கையும்  ஒரு  செஸ்  கேம்  தான், யார்  அட்டாக்  பண்றாங்களோ அவங்களுக்கு  கிடைக்கற அளவு  டைம்  யார் டிஃபண்ட்  பண்றாங்களோ  அவங்களுக்கு   அந்த  அளவு  டைம்  கிடைக்காது

6  எப்போ  எல்லாம்  வெள்ளம்  வருதோ  அப்போ  எல்லாம்  வெளீல  இருக்கும்  எலிகள்  ஈசியா  தப்பிச்சிடும்


7   கடந்து விட்ட  காலத்தை  மீண்டும்  கொண்டு  வர  இசைக்கு  மட்டும் தான்  சக்தி  உண்டு 


8 ரத்தத்துல  வேகம்  இருக்கனும், புத்தில  விவேகம்  இருக்கனும்


9 மக்களுக்கு  பிரச்சனைகளை  உருவாக்கறது  ரொம்ப  சுலபம், யாராவது  அவங்களைக்காப்பாற்ற  வருவாங்கனு  நம்பி  இருப்பாங்க 


10 நம்மை  விட  எதிரி  பலசாலியா  இருந்தா   எதிரியோட  பலத்தை  நமக்கு  சாதகமா  உபயோகப்படுத்திக்கனும்


11  ஒவ்வொரு  சூழ்நிலைக்கும்  புரொஃப்சர்  எங்களைத்தயார்படுத்தி  இருந்தாரு, உண்மையைச்சொல்லனும்னா  தியரில  சொல்றதை எல்லாம் பிராக்டிகலா நடத்த  முடியாது 


12   பெத்தவங்களைப்பொறுத்தவரை  ஆண் குழந்தையோ  பெண்  குழந்தையோ  அன்பு  ஒரே  மாதிரிதான்  இருக்கும்


13   இந்த  உலகத்துல  எல்லாமே  ஒரு  தராசு  மாதிரிதான்  இயங்கிட்டு  இருக்கு , லாபம்  வந்தா  கூடவே  நட்டமும்  வரும் 


14  நம்ம  கிட்டே  இழப்பதற்கு  எதுவுமே  இல்லை  எனும்போதுதான்  பலம்  வரும் 


15    நீ  என்ன  கண்  டாக்டரா?  என்  கண்ல  விழுந்த  கண்னாடித்துகள்களை  நீ  எப்படி  எடுப்பே? பேசாம  டாக்டரைக்கூப்பிட்டுக்கலாம்


  கவலைப்படாத , ஒரு  சிற்பியோட  கையை  விட  லாவகமா  என்  கைகள்  செயல்படும்


16  ஒரு  பெயிண்ட்டர்  இன்னும்  மூணு  வருசம் தான்  உயிரோடு  இருப்பான்னு  தெரிஞ்சா  அவன்  பெயிண்ட்  ப்ண்றதையே  நிறுத்தச்சொல்றியா? ஹாஸ்பிடல்லியே  இறுகி  சாவதை  விட  வெளில  போய்  திருடி  சாகலாம்


17   ஒரு  நல்ல  அப்பா  எப்படி  இருக்கனும்? தெரியுமா?


தெரியலயே, நீயே  சொல்லிடு


 அப்பா  ஆகறதுக்கு  முன்னே  எப்படி  இருந்தானோ  அப்படியே  இருக்கனும், மாறக்கூடாது


18 காதலில் இருப்பவர்கள்  எப்போதும் சந்தோசமா  இருப்பாங்க, யார்  மீதும் கோபப்பட மாட்டாங்க


19  எல்லாத்துலயும்  ரிஸ்க்  இருக்கு , ரிஸ்க்கே  இல்லாத  வாழ்க்கை  போர்  அடிக்கும் 


20  இதெல்லாம்  அரசாங்கத்தோட  சொத்து 


 அதனால தான்  எதையும்  வேஸ்ட்  பண்ணாம  எல்லாத்தையும்  எடுத்துட்டு  இருக்கோம்


21   வாழ்க்கைல  பாடங்கள்  சும்மா  கிடைப்பதில்லை , நாம்  பண்ற  எல்லாத்துக்கும்  விளைவுகள்  இருக்கும்


22   நம்ம  இயக்கத்தோட  முதல்  விதி  ஒரு  பெண்ணால  நாம  பாதிக்கப்படக்கூடாது  என்பதுதான்


23  உனக்கு  எத்தனை  நாட்களா  அவளைத்தெரியும் ?


 காதலை  அளவு  காலம்  வெச்சு  அளக்கக்கூடாது


24  ஆபத்துல  இருந்து  தப்பிப்பது  ,முடியாத  காரியம், ஆனா  வாழ்க்கைல  நங்க  கத்துகிட்டது  முடியாத  காரியம்னு  எதுவும்  இல்லை  என்பதை 


25   சந்தோஷம்கறது  மின்னல்  மாதிரி  டக்னு  வந்துட்டு  டக்னு  போய்டும்


26    ஒரு  திறமையான  செஸ் ஆட்டக்காரன் கூட்  அவன்  பக்கத்துல  அவன்  காதலி  இருந்தா  அவனால  திறமையா  ஆட  முடியாது 


27  நாங்க  நெருக்கமா  இருக்கும்போது  உண்மையை  மட்டும் தான்  பேசிப்போம், ஆனா  எல்லா  நேரமும்  உண்மை  இனிப்பா  இருப்பதில்லை 


28  எந்த திட்டமா  இருந்தாலும்  அதுல  சொதப்பல்கள்  இருப்பது  சகஜம்தான் 

 29  வாழ்க்கைல  விபத்துகள்  எதார்த்தமானவை, அதைப்புரிஞ்சுக்காதவன் தான்  தன்னால  நீண்ட  நாட்கள்  உயிர்  வாழ முடியும்னு  முட்டாள்தனமா  யோசிக்கிறான்


30   வாழ்க்கைல  நமக்கு  எது  முக்கியம்கறதை  நாம  முடிவெடுக்கத்தெரிஞ்சுக்கனும் 


31 வாழ்க்கை  ஒரு  விளையாட்டு , திடீர்னு  தலைகீழாக்கூட  நம்  நிலை  மாறலாம், அப்போ  நம்மைக்குறை  சொல்லிக்கறது  பெரிய  தப்பு 


32  என்னதான்  திட்டம்  போட்டாலும்  சில  சமயம்  வாழ்க்கை  நம்ம  கட்டுப்பாட்டில்  இருக்காது 


33  வாழ்க்கை  என்பது  ஒரு அனுபவம், ஒரு  முறை  தான்  அது கிடைக்கும், அதைக்கொண்டாடு 


34  உலகத்துல  இரண்டு  விதமான  மக்கள்  இருக்காங்க

 1  பிரேக்கப்  ஆன்னாக்கூட  எங்கிருந்தாலும்  நல்லாருனு  வாழ்த்தற  டைப் 

2  பிரேக்கப்  ஆகிட்டா  தன் வாழ்க்கையே  அவ்ளோதான்  அப்படினு  உடைஞ்சு  போய்டுவாங்க 


35   காதல்  என்பது  சீசா  போல  , ஒரு  பக்கம்மேலே  போனா  இன்னொரு  பக்கம் கீழே  போகும், ரெண்டு  பக்கமும் பேலன்சா  இருப்பது  டெம்ப்பரவரிதான்


36    அன்பும், வலியும்,   என்கிட்டே  ஒருத்தர்  கொடுத்துட்டா  அதை  நான்  அதே  அளவு  திருப்பிக்கொடுத்துடுவேன் 


37 பயத்துல  இருக்கும்போது  காதுல  எது  விழுந்தாலும்  நம்பத்தோணும், அவங்களை  ஈசியா  ஏமாத்தலாம்


38  ஸ்டாக்  ஹோம்  சின்ட்ரோம்னா என்ன  தெரியுமா?  தன்னை  யார்  கடத்தி  வெச்சிருக்காங்களோ  அவஙளையே  லவ்  பண்ற்து


39  நம்ம  உடம்பில்  காயம்  ஏற்பட்டா  ரத்தத்தில் இருக்கும்  திசுக்கள்  தானாகவே  அதை  சரி  செய்யும் 


40  நம்ம  கிட்டே  இருக்கும் சின்ன் சின்ன  குறைகளோட்  ஸ்பெஷாலிட்டி  என்ன  தெரியுமா?  நம்மை  வேறுபடுத்திக்காட்டும்

‘41 ஒவ்வொரு  நிமிசமும்  நாம்  யார்?னு ப்ரூஃப்  பண்ணிக்காமிச்ட்டே  இருக்கனும் 


42   ஒரு குற்றத்தோட  முதல்  எதிரி  யார்  தெரியுமா?

போலீஸா?

ம்ஹூம், குற்றவாளி  காட்டும்  அவசரம்

43  ஒரே  ஆளைப்பற்றி  இரு  வேறு  நபர்கள் ஒரே  காரணத்துக்காக  ஒரே  சமயத்தில்  நினைப்பது  ஆச்சரியகரமானது 

44  உலகத்தையே  இயங்க  வைப்பது, ஈர்ப்பது   காதல் .அது  சில  சமயம்  எதிர்திசையில்  இயங்கும் 

45 சின்ன  வயசுல  உன்  அம்மா  அப்பா  உன்னைக்கண்டிச்சு  ஒழுங்கா வளர்த்தலைனு  நினைக்கிறேன் , தொட்டதுக்கெல்லாம்  மத்தவங்களை  குறை  சொல்லிட்டே  இருக்கே ?

46  நான்  என்னைத்தவிர  வேறு  யார்  பேச்சையும்  கேட்க மாட்டென்  , அவ்ளோ  ஈகோயிஸ்ட்

47 பாதியிலேயே  நிறுத்தப்பட்ட  கவிதை  மாதிரி  இந்த  திட்டம்  பாதியிலேயே  இருக்கு , நீதான்  ஃபினிஷ்  பண்ணனும்

‘48  அவள்  இன்னேரம்  அவனை  அடிச்சுட்டு  இருப்பா

ஆனா  சத்தமே  கேட்கலையே? 

அதிக  பட்ச  வன்முறைல  சத்தமும்  கேட்காது  ரத்த்மும்  வராது 

49  எல்லாத்தையும்  ஒரே  இடத்தில்  இன்வெஸ்ட் பண்ணனும்னா  அது  கோல்டு  தான் 

50  கண்ணுக்குத்தெரிந்த  விஷயத்தை  விட்  கண்ணுக்குத்தெரியாத  விஷயத்தால்தான்  ஆபத்து 

51 கண்ணுக்குத்தெரியாத  விஷயத்தை  நாம்  தேடிக்கிட்டு  இருக்கோம், அது  நம்மை  கவனிச்சுட்டு  இருக்கலாம்  என்பது  நமக்குத்தெரியாது 

32   வேலையையும், பர்சனல்  லைஃபையும் போட்டுக்குழப்பிக்கக்கூடாது 

53  கண்மூடித்தனமான  காதல்  எல்லாம்  தற்கொலைலதான்  போய்  முடியும் 

54   நீ  இந்த  பிளானைக்காதலிக்கறே , அவன்  உன்னைக்காதலிக்கிறான், அதனால  அவன்  உன்னையும், உன்  பிளானையும்  குறையே  சொல்ல  மாட்டான் 

55 எமோஷனல்  ஷாக் மூளையை  செயல்படாத  நிலைக்குக்கொண்டு  போயிடும் 

56   சில  நேரங்களில்  பிரிவு  ,மட்டும் தான்  மனசில்  உள்ள  காயங்க்ளுக்கு  மருந்தாக  அமையும் 

57  காலம்  எல்லாத்துக்கும்  நல்ல  மருந்து  வெச்சிருக்கும் 

58   உன்  வலியை  நான்  க்டன்  வாங்க  முடியாது .  அதை  யாருக்கும்  திருப்பிக்கொடுக்கவும்  முடியாது 

59   ஒருத்தரோட  நம்பிக்கையை  அடையனும்னா  உண்மைகளை  சொல்லனும், எதையும்  அவங்க  கிட்டே  மறைக்கக்கூடாது 

60 பொதுவா கர்ப்பிணிப்பெண்களுக்கு  மோப்ப  சக்தி  அதிகம், அதை  ப்ரொஃபசர்  எதிர்பார்க்காததால  பிரச்ச்னை 

61  ஒருத்தரால  அதிகபட்சம்  50  நிமிடம்  தான்     வாக்குமூலம்  கேட்க  முடியும் , அதுக்குப்பின்  அவங்க  கவனம்  சிதற  ஆரம்பிக்கும்

62  வாழ்க்கை  என்பது  நமக்கு  அளிக்கப்பட்ட வ்ரம் , இருக்கும்  ஒவ்வொரு  வினாடியையும்  நாம  அனுபவிக்கனும்

63  குழப்பங்கள்  நிறைந்த்துதான்  வாழ்க்கை 

64 மரணம்  என்பது  நம்  மூச்சு  நிற்பது  மட்டுமே  இல்லை, நாம  நினைச்ச  வாழ்க்கையை  வாழ  முடியாமல்  போவதும்தான் 

65  முக்கியமான  சில  விஷயங்களை  நாம  அலட்சியப்படுத்திட்டா  அதுக்கான  விலையைக்கொடுத்துதான்  ஆகனும் 

66   நடக்கிற  எல்லா  விஷயமுமே  நல்லது  எது ? கெட்டது  எது?னு  நாம  தெரிஞ்சுக்கத்தான் 

67   ஒரு  அம்மாவோ , அப்பாவோ  தங்கள்  குழந்தைக்கு  நல்லது  ப்ண்ணனும்னுதான்  நினைப்பாங்க , ஆனா  குழந்தை  அவங்களைப்புரிஞ்சுக்காது 

68 பெற்றோர்க்ள்  நம்மை  நல்லா  வாழ  வெச்சாங்களா? என்பதை  மட்டும்  பார், எந்த  வழில  அதை  செஞ்சாங்க  என்பது  அனாவசியம் 

69   ரிஸ்க்  ஜீரோன்னா  அதுக்கான  வேல்யூவும்  ஜீரோதான் 

70   நாம  ஜெயிக்கறதுக்கு  வாய்ப்பு  இல்லைன்னா  மெதுவாதான்  தோற்கனும், ஒரு  வேளை  திடீர்னு  ஜெயிக்க  ஒரு  ஐடியா  உருவாகலாம், அதுக்கான  கேப்  தேவைப்படும் 

71  வாழ்க்கைல  ஒரு  தடவை  நடந்ததே  மீண்டும்  நடக்கும்னு  சொல்லிட  முடியாது 

72   டியர் , நான்  மீண்டும்  உனக்கு  ஒரு  முதல்  முத்தம்  தரனும்

 ஹலோ, முதல்  டைம்  தர்றதுதான்  முதல்  முத்தம் 

73   உனக்கான  கடைசி  முத்தம்  தர  எனக்கு விருப்பம்  இல்லை , பிரிந்த  தம்பதி  மீண்டும்  சேரும்போது  ஒரு  முத்தம்  தருவாங்களே  அது  மாதிரி 

74   நாம  வாழ்க்கைல  ஆசைப்படறது  எல்லாம்  யாருக்கும்  சொந்தமாது இல்லை, யாரோ  யாரு  கிட்டேயோ   எப்பவோ கடனா  வாங்குனதுதான்

75   எனக்குப்பிரச்சனை  வரும்போதெல்லாம்  வாழ்வின்  சந்தோஷ தருணங்களை  நினைச்சுப்பார்த்துக்குவேன் 

76  மங்களகரமான  விஷயங்களுக்குப்பயன்பட்ட  தங்கம்தான்  பல  கொலைகளுக்கும் காரணமா  அமைஞ்சது

77   தன்னை  சுத்தி  இருக்கறதை  அழிச்சாலும்   தங்கம்  அழியாம  அப்படியே  உயிரோட்  இருக்கும் 

78   மனசுல  இருக்கறதை  சொல்ல  நேரம் , காலம்  தேவை  இல்லை 

79 உண்மையான  காதல்  என்பது வாழ்க்கைல ஒருவ்ர்  மீது  ஒரு  முறைதான்  வரும்னு  மக்கள்  நம்பிக்கிட்டு  இருக்காங்க 

80  எனக்கு ஏழு  குழந்தைகள் 

அப்போ  நீ  ஃபேக்டரில  வேலை  பார்க்கலை , பெட்ரூம்ல  உன்  பொண்டாட்டி  கூட வேலை  பார்த்திருக்கே?

அதுல  ட்விஸ்ட்  என்னான்னா  ஏழு  குழந்தைகளும்  ஏழு  வேற  வேற  பொண்டாட்டிக்குப்பிறந்தவை 

81   நாம  நல்லவங்களா  இருக்க  முயற்சி  பண்றோம், ஆனா போர்ல  நல்லவங்களுக்கு  வேலை இல்லை 

82  தம்  அடிக்கிறயா?

செத்துடக்கூடாதுனு  9  மாசம்  முன்னே  அந்த  பழக்கத்தை  விட்டேன், இப்போதான்  வாழ்வதற்கான  ஆப்சனே  இல்லையே?

83   வாழ்க்கை  என்பது  முரண்பாடுகள்  நிறைந்தது , அமைதியை  உருவாக்க  சில  சமயம்  துப்பாக்கியைக்கையில்  எடுக்க  வேண்டி  வரும்

84 எல்லாரும்  சொர்க்கம்  போகத்தான்  ஆசைப்படுவாங்க, ஆனா  டோக்கியோ  சொர்க்கம்  போர் அடிச்சதாலதான்  நம்மை  விட்டுப்போய்ட்டா 

85    ஏழு  குழந்தைகளையும்  வானவில்  மாதிரி  வெவ்வெற  கலர்ல  பெத்திருக்கே, அனேகமா  அவங்க  அம்மா  சாயல்  போல 

86  பரவால்லியே , தங்கமான  மனுசனா  இருக்காரு , இவருக்கு ஒருதங்கச்சி  இருக்கா?னு  கேளு

87  பெரியவங்க  எதையும்  யோசிச்சு  யோசிச்சு  சீரியசா  பண்றதாலதான்  கடைசி  வரை  எதையும்  பண்றதில்லை , ஆனா  குழந்தைங்க  அவங்க  நினைச்சதைப்பண்ணும், அந்த  குழந்தைத்தனம்  தான்  என்னை  ஜெயிக்க  வைக்கப்போகுது 

88 நம்ம  கிட்டே  இருக்கும்  குழந்தைத்தனம்  தொலைஞ்சிடாம  பார்த்துக்கனும்

89 சயின்ஸ் என்பது  ஃபார்முலாவும், கால்குலேஷனும்  மட்டும்  இல்லை , நம்பிக்கையும்  இருக்கனும் , அதைக்காதலிக்கனும்

90   ஜெயில்ல சுதந்திரம்  பறி  போவது  பெரிய  விஷயம்   இல்லை , தனிமை  தான்  பெரிய  பாதிப்பைத்தரும் 

91 வாழ்க்கைல  நீ  கத்துக்க  வேண்டிய  முதல்  விஷயம்  உன்  பிரியமானவ  கிட்டே  உன்   துரோகத்தைப்பத்தி  சொல்லாம  இருக்கறது

92  ஒரு  தடவை  உன்  தப்பை  ஒத்துகிட்டா  அது  கல்வெட்டு  மாதிரி  அவ  மனசுல  பதிஞ்சிடும்

93  உன்  ஆள்  உன்னை  சந்தேகப்பட்டா  தப்பே  உன்  மேல  இருந்தாலும் ஒத்துக்காதே , எல்லாம்  அவ்ளோட  கற்பனைனு நம்ப   வை 

94   ப்ரொஃபசரைபொறுத்தவரை  மாயை  என்பது  அசாதாரணமான  ஒரு  விஷயத்தை  சாதாரண  விஷயத்தில்  ஒளித்து  வைப்பது , ஆனா  பெர்வின்  தியரில  நம்ப  முடியாத  விஷயத்தை  நடக்கும்னு  நம்பறது 

95   உன்  குரல்  தொனியே  சரி  இல்லையே? சாதரரணமா  பிரியப்போகும்  தம்பதிகள்  தான்  இந்த  தொனில  பேச்சை  ஆரம்பிப்பாங்க 

96  காதல்  ஒரு  சின்ன  நம்பிக்கைல  தான்  ஆரம்பிக்குது , ஆரம்பத்துல  இருக்கும்  க்வர்ச்சி  போகப்போக குறைஞ்சிடுது  இல்ல?

97  உண்மையைத்தவிர  வேற  எதையும்  உன் கிட்டே  நான்  எதிர்பார்க்கல், அதுக்கு  விலையா  எதை  வேணா  தரத்தயாரா  இருக்கேன்

98 எலிகன்ஸ்னா  என்ன? ஒரு  ஆஃபீசரோட  நடை  உடை  பாவனைகள் தோற்றத்தை  வைத்துஅவ்ரோட  மனைவி  இப்படித்தான்  இருப்பாங்கனு  நாமளா  கற்பனை  செய்து  கொள்வது 

99   ஏமாற்ற்ம்  என்பது  தற்காலிகமானது, ஆனா  நமக்கு  ஏற்ப்டும்  தோல்விகள்  நாம்  யார்  என்பதைக்காட்டிக்கொடுத்துடும் 

100  வாழ்க்கையைப்புரட்டிப்போடும் மோசமான சம்பவங்கள்  வாழ்க்கையில் ஒரு  முறை தான்  நிகழும், மரணம்  மாதிரி

101  ஒருவர்  ஒரு  த்டவை தான்  சாக  முடியும்,  உயிருக்கு  உயிரான  காதல்  ஒரு முறைதான்  தோற்றுப்போகும் 

சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  பார்த்தே  தீர வேண்டிய  பிரமாதமான  விறுவிறுப்பான  ஆக்சன்  த்ரில்லர் . அடல்ட்  க்ண்ட்டெண்ட்  உள்ளது ,  நெட்  ஃபிளிக்ஸில்  கிடைக்கிறது , ரேட்டிங்  4 / 5