Friday, January 27, 2023

MISSION MAJNU (2023) (ஹிந்தி) - சினிமா விமர்சனம் ( ஸ்பை ஆக்சன் த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ்


நாயகன்  இந்தியா சார்பாக  பாகிஸ்தானில்  பணி ஆற்றும்  ஒரு ரா ஏஜெண்ட். நாயகனோட  அப்பா  பணத்துக்காக  இந்திய  ரகசியங்களை  பாகிஸ்தானுக்கு  விற்ற  ஒரு  துரோகி. இதனால  இந்த  பாவத்துக்குப்பரிகாரமாக  இந்தியாவுக்கு  விசுவாசமா  இருக்க வேண்டும் என  நாயகன்  நினைக்கிறார். பாகிஸ்தானில்  விழி  ஒளி  இழந்த  நாயகியைக்காதலித்து மணம்  முடிக்கிறார்.


1970 களில்  கதை  நடக்கிறது . நியூக்ளியர்  பாம்  சோதனை  வெற்றி என   அதிகாரப்பூர்வமாக  இந்தியா  உலகத்துக்கு  அறிவித்தது. அந்த  விஷயத்தில்  இந்தியாவை  எதிர்த்து  உலக  அரங்கில்  குரல்  கொடுத்த  பாகிஸ்தான்  அதே  வேலையை   ரகசியமாக  சட்டத்துக்கு  விரோதமாக  ஒரு  இடத்தில்  செய்து  வருவது  இந்தியாவுக்குத்தெரிய  வருகிறது 


பாகிஸ்தான்  நியூக்ளியர்  பாம்  தயாரிக்கும்  இடம்  எது ? என்பதைக்கண்டு பிடித்துத்தகவல்  சொல்ல  வேண்டிய  பணி  நாயகனிடம்  ஒப்படைக்கப்படுகிறது . அப்போது  இந்திரா காந்தி  பிரதமராக  இருந்தார். ஆனால்  நெருக்கடி  நிலை  பிரகடனம் காரனமாக  ஆட்சி மாற்றம்  நிகழ்ந்த  பின்  புதிய  பிரதமர்  பொறுப்பேற்ற  பின்  இந்த  ரா  ஏஜெண்டுக்கு  இடப்பட்ட  பணி  வாபஸ்  பெறப்படுகிறது . இந்தியப்பிரதமர்  பாகிஸ்தானுடன்    நட்புறவு  பாராட்ட  விரும்புவதால்  அந்தப்பணிக்கு  தடை  விதிக்கிறார். ஆனால்  இந்திய  பிரதமருக்குத்தெரியாமலேயே  இந்தப்பணி  தொடர்கிறது .இந்த  ஆபரேஷனுக்குப்பெயர் தான்  மிஷன்  மஜ்னு 


 நாயகன்  அந்த  பாம்  தயாரிக்கும்  இடத்தைக்கண்டு பிடித்தாரா?  உயிருட்ன்  இந்தியாவுக்குத்திரும்பினாரா? என்பதுதான்  க்ளைமாக்ஸ்


நாயகனாக சித்தார்த்  மல்ஹோத்ரா  சாக்லெட்  பாய்  போன்ற  தோற்றத்துடன்  வருகிறார். காதல்  காட்சிகள் ,  அன்பு  செலுத்தும்  காட்சிகளில்  சோபித்த  அளவு  ஆக்சன்  காட்சிகளில்  அதகளம்  செய்யவில்லை . தன்  மனைவியிடம்  தான்  யார்  என்பதை  மறைக்கிறோமே? தன்  மாமனார்  இறப்புக்கு   தான்  ஒரு  காரணம்  ஆகி    விட்டோமே  என்ற  குற்றா  உணர்ச்சியில்  துடிக்கும்போது  கச்சிதமான  நடிப்பு 


நாயகியாக  விழி  ஒளி  இழந்த  பெண்ணாக   ராஷ்மிகா  மந்தனா , மெழுகு  பொம்மை  போல  இருக்கிறார், ஆனால்  இவர்  வரும்  காட்சிகள்  எல்லாம்  படத்துக்கு  ஒரு  ஸ்லோனெஸ்  கொடுத்து  விடுகிறது . விறுவிறுப்பாக  செல்லும்  ஆக்சன்  கதையில்  இவரது  காட்சிகள்  மட்டும் ஸ்பீடு  பிரேக்கர்ஸ் 


129  நிமிடங்கள்  ஓடும்  படத்தில்   கடைசி  30  நிமிடங்கள்  செம  விறு விறுப்பு . நாயகன்  வந்த  வேலை  முதல்  2  மணி  நேரத்தில்  முடிகிறது  , கடைசி  30  நிமிடங்களில்  தான்  நாயகன்  பாகிஸ்தானை  விட்டு  தப்பிக்க  முயலும்  காட்சிகள் . அது  ஆங்கிலப்படத்துக்கு  இணையாக  பரபரப்பாக  படம்  ஆக்கப்பட்டுள்ளது 


இந்தப்படம்  உண்மை  சம்பவத்தை  அடிப்படையாக்கொண்டு  எழுதப்பட்ட  திரைக்கதை  என்பதால்  படத்தில்  ஆங்காங்கே  வரும் லாஜிக்  மிஸ்டேக்ஸ்  எல்லாம்   பெரிய  அளவில்  நம்  மனதில் பாதிப்பை  ஏற்படுத்தவில்லை 


பார்க்கத்தக்க  இந்தப்படம்  நெட்  ஃபிளிக்ஸில்  ரிலீஸ்  ஆகி  உள்ளது . 2023 ஆம்  ஆண்டின்  முதல்  படம்  ஒரு  தேச  பக்தியைப்பேசும்  படம்  என  அமைந்ததில்  மகிழ்ச்சி 

 ரசித்த  வசனங்கள்


1  போரில்  ஜெயிக்க  ஆயுதம் மட்டும்  முக்கியம்  இல்லை , இண்ட்டலிஜென்ஸ்  முக்கியம்


2  சிறையில்  அடைந்து  கிடந்த  என்  உணர்வுகளுக்கு  அவர்  சிறகுகளைக்கொடுத்திருக்கிறார், அவர்  எனக்குக்கொடுக்கும்  சந்தோசத்தை  ஒரு  அப்பாவா  உங்களால  கூடக்கொடுக்க  முடியாது 


3  எப்போதுமே  தோல்வியை  சந்திப்பவர்கள் தான்  போர்  பற்றி  பயப்படுவார்கள் 


4   அடுத்தவங்க  வீட்டில்  எப்போதும்  அளவோடு  சாப்பிடுவதுதான்  நல்லது


5   அப்பா  ஒரு  தேச  துரோகி, ஆனா  மகனை  நாடு  நம்புது , எப்படி ?

 அப்பா  செஞ்ச  பாவத்துக்கு  மகன்  பரிகாரம்  செய்யலாம்  இல்லையா? 


6   இந்தியாவின்  பார்டருக்கு  அருகிலேயே  பாகிஸ்தான்  ஏன்  இந்த  கேம்ப்  போட்டிருக்காங்க ?


 திருடன்  கைக்குள்ளேயே, ஆனா  தேடறது  ஊர்  முழுக்க 


7   ஆண்டவன்  நமக்குன்னு  அளிக்க  இருக்கும்  துன்பங்களை நாம்  மாற்ற  முடியாது 


8 நாம  ரெண்டு  பேரும்  பிரச்சனையே  இல்லாத  நிம்மதியான  ஒரு  இடத்தில்  வாழ  நீ  ஆசைப்படறியா?


 என்னோட  நிம்மதியே  நீங்கதான் 


9   தேச  பக்தி  என்பது  ரத்தத்தில்  இல்லை , ஆன்மா  வில்  கலந்திருக்கு 


10  நாம  பேச  வேண்டிய  விஷயம்  நிறைய  இருக்கு , உன்னை  உயிருக்கு  உயிரா  நேசிக்கிறேன்


எனக்குத்தெரியாத  விஷயம் ஏதாவது  இருந்தா  சொல்லுங்க 


11  ரெய்டு  நடக்கும்போது  அடையாளத்துக்கு நாம  கேள்வி  கேட்கும்போது  யாரெல்லாம்  அவங்க  அம்மா , அப்பா  செத்துப்போய்ட்டதா  சொல்றாங்களோ  அவங்களை  எல்லாம் சுட்டுத்தள்ளுங்க, அவங்க  தான்  ரா  ஏஜெண்ட்ஸ்


12   இந்தியாவின்  மூவர்ணக்கொடி  வெறும்  காற்றினால் பறக்கவில்லை , தியாகிகளின்  மூச்சுக்காற்றினால்  பறக்கிறது 


சபாஷ்  டைரக்டர்


1   பாகிஸ்தான்  பாம்  தயாரிப்பதற்கு  பிசிக்கல்  எவிடன்ஸ்  வேண்டும்  என  கேட்டதும்  நாயகன்  அங்கே  பணி  புரியும்  ராணுவ  வீரர்கள்  சலூனில்  முடி வெட்டும்போது   அதை  சாம்ப்பிள்ஸ்  கலெக்ட்  பண்ணும்  ஐடியா  அருமை ., அதை  லேபில்  கொடுத்து  செக்  செய்தால்  ரேடியோ  ஆக்டிவ்  அலைகள்  அதிக  அளவில்  காணப்படுமாம் 


2  உளவு  பார்க  நாயகன்  டெய்லராக  வேடம்  பொடுவது  நல்ல  ஐடியா. ராணுவ  வீரர்கள்  தங்கி  இருக்கும்  இடத்துக்கு  யூனிஃபார்ம்  டெலிவரி  பண்ணி  உளவு  பார்க்க  ஏதுவாக  இருக்கும் 


3    இந்திரா  காந்தி , மொராஜ்ஜி  த்ஜேசாய் , வாஜ் பாய்  சம்பந்தப்பட்ட  வலாற்று  நிகழ்வுகளை  கச்சிதமாக  திரைக்கதையில்  பயன்படுத்திய  விதம் 


4  ஒரு  அரசியல்வாதிக்கோ,  போலீஸ்  ஆஃபீசருக்கோ  கிடைக்கும்  பேரும்  புகழும்  சீக்ரெட்  ஏஜெண்ட்டுக்குக்கிடைக்காது  அவர்களைக்காப்பாற்ற  அரசு  எந்த  நடவடிக்கையும்  எடுக்காது  , தியாக  வாழ்வு  தான்  என்பதை  உணர்த்தும்  விதம் குட்


5   விழி  ஒளி  இழந்த  நாயகியை  காதலிப்பது , திருமணம்  செய்வது  எல்லாமே  ரா  பிரிவின்  திட்டம்  தான்  என்றாலும்  நாயகன்  நிஜமாகவே  நாயகியைக்காதலிப்பது , காப்பாற்றுவது   டச்சிங் 


  லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1  க்ளைமாக்சில்  ஏர் போர்ட்டில்  நாயகன்  நாயகி  இருவர்  புகைப்படங்களையும்  அனுப்பிதான்  எல்லோரும்  தேடுகிறார்கள் , இதில்  நாயகனை  மட்டும்  பிடிபட்டு   நாயகி  தப்பிப்பது  நம்பும்படி  இல்லை 


2  நாயகன்  செல்லும்  இடங்கள்  எல்லாம்  அவருக்கு  அனுகூலமாக  இருப்பது  எந்த விதமான இடரும்  வராமல்  இருப்பது  சந்தேகமாக  இருக்கிறது பாகிஸ்தான்  வீரர்கள் அவ்வளவு  டம்மியா?


3   படத்தில்  வரும்  மிலிட்ரி  வீரர்கள்  எல்லாம்  ஃபங்க்  கட்டிங் , டிஸ்கோ  கட்டிங்கில்  வருகிறார்கள் 


4  நாயகன்  பாஸ்போர்ட்டில்  சீக்கியர்  போல்  தலைப்பாகை  அணியவில்லை , ஆனால்  ஏர்போர்ட்டில்  சீக்கியர்  போல்  கெட்டப்பில்  வரும்போது  செக்யூரிட்டி  அது  பற்றி  சந்தேகம்  கிளப்பும்போது  நாயகன்  செய்யும்  சினிமாத்தனம்  நம்பும்படி  இல்லை 


5  க்ளைமாக்சில்  பாகிஸ்தான்  ராணுவம்  இந்திய  ரா  ஏஜெண்ட்கள்  எல்லோரையும் சுட்டுத்தள்ளுகிறது , ஆனால்  நாயகனை  மட்டும்  கன்  பாயின்ட்டில்  மிரட்டிட்டு  மட்டும்  இருக்கிறது  


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்-  உண்மை  சம்பவம்  என்பதால்  ஆர்வமாகப்பார்க்கலாம்.  சராசரி   ஸ்பை  த்ரில்லர். போர் அடிக்காமல்  போகிறது , rரேட்டிங் 2.75 /5 

Mission Majnu
Mission Majnu.jpg
Official release poster
Directed byGovind Bhana
Written byScreenplay:
Govind Bhana
Parveez Shaikh
Aseem Arrora
Dialogues:
Sumit Batheja
Story byParveez Shaikh
Aseem Arrora
Produced by
Starring
CinematographyBijitesh De
Edited by
  • Nitin Baid
  • Siddharth S. Pande
Music byKetan Sodha
Production
companies
Distributed byNetflix
Release date
  • 20 January 2023
Running time
129 minutes[1]
CountryIndia
LanguageHindi

Thursday, January 26, 2023

KAAPA (2022) மலையாளம் - சினிமா விமர்சனம் ( கேங்க்ஸ்டர் ரிவஞ்ச் த்ரிலல்ர்) @ நெட் ஃபிளிக்ஸ்


Spoiler alert

நாயகன்  பெங்களூரில்  ஒரு ஐ டி  ஊழியராகப்பணி  புரிகிறார். இப்போ  மாற்றல்  ஆகி  கேரளா- திருவனந்தபுரம்  வருகிறார். கூடவே  அவர்  மனைவியும், மனைவியான  நாயகி  இப்போது  கர்ப்பமாக  இருக்கிறார். ஒரு  போலீஸ்  ஆஃபீசர்  நாயகனை  சந்தித்து  ஒரு  அதிர்ச்சியான  தகவலை  சொல்கிறார். கேரளாவில்  குண்டர்  தடுப்பு  சட்டத்துக்கு  காப்பா  என்று  பெயர் , அந்த  காப்பா  பட்டியலில்  போலீஸ்  தேடும்  நபராக  நாயகனின்  மனைவி  பெயர்  இடம்  பெற்றிருக்கிறது 

நாயகன்  அந்த  பட்டியலில்  இருந்து  தன்  மனைவி  பெயரை  அகற்ற  முயல்கிறார். அப்போது  போலீஸ்  சொல்லும் தகவல்  சில  ஆண்டுகளுக்கு  முன்  அதாவது  நாயகி  பள்ளியில்  12  வது  படிக்கும்போது  கேங்க்ஸ்டர்  க்ரூப்பில் அடியாளாக   இருந்த  நாயகியின்  அண்ணன்  நடு  ரோட்டில் இன்னொரு  கேங்க்ஸ்டர்  க்ரூப்பால்  கொலை  செய்யப்பட்டான். அதற்குப்பழி வாங்க  நாயகி முயற்சிக்கலாம்  என  சந்தேகம்  இருப்பதாகக்கூறுகிறார்


நாயகியின்  அண்ணனைக்கொலை  செய்த  கேங்க்ஸ்டர்  லீடரை  அவரின்  மனைவியை  தனித்தனியே  நாயகன்  சந்தித்து   இந்தப்பிரச்சைனைக்கு  தீர்வு  காண  முயல்கிறார். அவரது  முயற்சி  வெற்றி  பெற்றதா? என்பதுதான்  மீதி  திரைக்கதை 


நாயகனாக ஆஷீஃப்  அலி  பதட்டமான  இளைஞனாக  அருமையாக  நடித்துள்ளார். மனைவிக்கு  விஷயத்தை  சொல்லாமல்  மனைவியைக்காப்பாற்ற  அவர்  எடுக்கும்  முயற்சிகள்  அபாரம் 


 நாயகியாக  ஹெலன்  பட நாயகி அன்னாபென். படம்  முழுக்க  அண்டர்  ப்ளே  ஆக்டிங்கில்  கமுக்கமாக  அமைதியான  தோற்றத்தில்  வருபவர்  க்ளைமாக்ஸில்  ட்ரான்ஸ்ஃபர்மேஷன்  சீனில்  பின்னிப்பெடல்  எடுக்கிறார்


நாயகியின்  அண்ணனைக்கொலை  செய்த  கேங்க்ஸ்ட்ர்  லீடராக  பிருத்விராஜ் , கிட்டத்தட்ட  வில்லன்  ரோல்  தான், ஆனால்  நாயகனை  விட  காட்சிகள்  இவருக்குத்தான்  அதிகம் 


வில்லனின்  மனைவியாக  அபர்ணா  பால  முரளி, க்ளைமாக்ஸ்சில்  இவர்  எடுக்கும்  புதிய  அவதாரம்  ரசிக்க  வைக்கிறது 


திலீஷ் போத்தன் , மஞ்சு  வாரியர்  இருவர்  திறம்பட  அவரவர்  கேரக்டர்களை    கையாண்டிருக்கிறார்கள் 


ஷாஜி  கைலாஷ் தான்  இயக்கம் ., நாயகன் , தளபதி  ஆகிய  பட்ங்களின்  காட்சிகள்  நம்  கண்  முன்  வந்து  போகின்றன. கேங்க்ஸ்டர்  படம்  என்றாலே  இது  தவிர்க்க  முடியாததாகி  விடுகிறது 


ஜி ஆர்  இந்து  கோபன்  தான்  திரைக்கதை( ஷண்முகி  என்ற  நாவலின்  திரை வடிவம் )  விறு விறுப்ப்பாக  காட்சிகளை   நகர்த்துகிறார்


ஜோமன்  ஜான்  ஒளிப்பதிவில்  கண்  முன்  காட்சிகளை  நிறுத்துவதில்  வெற்றி  பெறுகிறார். 134  நிமிடங்கள்  ஓடும்  படத்தின்  எடிட்டிங்  ஒர்க்கை ஷமீர்  முகமது  செய்திருக்கிறார் ஜான் வின்செண்ட் , ஜேக்ஸ்  பிசாய்   இருவரும்  இசை.  பிஜிஎம்  கவனிக்க  வைக்கிறது 


விறுவிறுப்பான  இந்தப்படம்  நெட்  ஃபிளிக்சில்  நேற்று  வெளியாகி  உள்ளது 

ரசித்த  வசனங்கள் 


1  நாம்  எதிர்பார்க்காத  நிகழ்வுகள்  நம்ம  வாழ்க்கையில்  வந்து  போகும், அப்படி  வந்தால்தான்  அது  சுவராஸ்யமான  வாழ்க்கை 


2  காபபா  என்றால்  கேரளாவில்  உள்ள  குண்டர்  தடுப்பு  சட்டம் ( kerala anti social activities (prevention) act)

3  திருவனந்தபுரம்  அப்போ  திரு பயந்த  புரமா  இருந்தது 

4  என்  மனைவி  ஒரு  கேங்க்ஸ்டரா? அவ  பூனையைபார்த்தாலே பயப்படுவா


 ஹிட்லருக்குக்கூடத்தான்  பூனையைப்பார்த்தா  பயம் 


5  பொதுவா  ஒரு  கேங்க்ஸ்டர்  கொலை  செய்யப்பட்டா  கொலை  செய்யப்ப்ட்டவனோட  தம்பி , அண்ணன்  யாரையாவது  எதிர்  கோஷ்டி  கேங்க்ஸ்டர்  க்ரூப்ல  சேர்த்துக்குவாங்க , கொலை  செய்யப்பட்டவனோட  மரணத்துக்குப்பழி  வாங்க , அந்த மாதிரி  இந்த  கேஸ்ல  தங்கச்சி .. அதாவது  உன்  மனைவி 


6  மேடம்  இப்போ  எங்கே  இருக்காங்க ?


 லீவ்ல


 எப்போ  லீவ்  முடிஞ்சு  வருவாங்க ?


  மேடம்  வரும்போது  லீவும்  முடிஞ்சிடும்


7   நீ  உன்  அப்பாவுக்கு  ஒரே  பிள்ளை , மறந்துடாத 


 அப்பன்  வித்தைக்காரன்னா  ஒத்தைப்பிள்ளை  போதும் 



8  மறக்க  வேண்டியதை  எல்லாம்  மறந்துதான்  ஆகனும், இல்லைன்னா  பைத்தியம்  ஆகிடுவோம்


9  வெளிச்சத்தை  நோக்கி  வ்ரனும்னுதான்  போராடுறேன், ஆனா  யாரோ  இருட்டை நோக்கியே  என்னை  இழுக்கறாங்க

10  சில  தடவை  மரணம்  வழி  மாறி  தடம்  மாறிப்போகலாம், நாம  தான்  முயற்சி  பண்ணி  அதை  சரி  ஆக்கனும் 


11 பெரிய  யுத்தங்கள்  மட்டும் தான்  வரலாறில்  இடம்  பிடிக்கும்


சபாஷ்  டைரக்டர்


1  ஒரு  சிறுவனிடம் பந்து  மாதிரி  தோற்றத்தில்  உள்ள  வெடிகுண்டைக்கொடுத்து  எறியச்சொல்லி அவனை  பயன்படுத்திக்கொள்ளும்  வில்லன்  பின்  குற்ற  உணர்ச்சியில்  புலம்புவதும்  க்ளைமாக்ஸில்  அதே  சிறுவன்  வாலிபன்  ஆகி  பூமாரங்  போல  தன்  மேல்  குண்டு  எறிவதை  இயலாமையுடன்  பார்க்கும்  சீன்  நாயகன்  படத்தை  நினைவுபடுத்தினாலும்  டச்சிங்  சீன்


2   நாயகி  அன்னாபென் , வில்லி  அபர்ணா  பால  முரளி  இருவரின் கேரக்டர்  டிசைன் , இருவரது  ட்ரான்ஸ்ஃபர்மேஷன்  க்ளைமாக்சில்  வெளிப்படும்  தருணம்


3  ஆக்சன்  சீக்வன்ஸ்  கச்சிதம்.


லாஜிக்  மிஸ்டேக்ஸ்


1  கேங்க்ஸ்டர்களின்  விரலில்  அணியும்  மோதிரம்  ஒரு அடையாளமாக  இருப்பதால்  அதைக்கைப்பற்றப்போட்டி  இடுவது  ஓக்கே , ஆனா  ஒரே  மோதிரம்  ஒல்லியாக  இருக்கும்  நாயகி , அவரை  விட  குண்டாக  இருக்கும்  வில்லன் , வில்லனை  விட  குண்டாக  இருக்கும்  இன்னொரு  கேங்க்ஸ்டர்  என  மூன்று  மாறுபட்ட  உருவங்கள்  கொண்டவர்களின்  மோதிர  விரலில்  கச்சிதமாகப்பொருந்துவது  எப்படி ?


2   வெடிகுண்டு  எறிந்து  உடல்  தீப்பிடித்து  கருகிய  நிலையில்  மோதிரம்  எப்படி  உருகாமல்  அப்படியே  இருக்கிறது ? 


3  நாயகனுக்கு  ஃபோன்  போடும்  வில்லி  உன்  மனைவி  கிட்டே  ஃபோனைக்கொடு  என்றதும்  கொடுத்துட்டு  அந்த  இடத்தை  விட்டு  நாயகன்  விலகிச்செல்வது ஏன்?  இருவரும்  என்ன  பேசிக்கறாங்க? என  பார்க்க  மாட்டாரா? 


சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் -  கேங்க்ஸ்டர்  ட்ராமா  படங்களை  விரும்பிப்பார்ப்பவர்களுக்கு  பிடிக்கும் ,  முதல்  பாதி  ஸ்லோவாதான்  நகரும் . ரேட்டிங் 2.5 / 5 


Kaapa
Kaapa.jpg
Theatrical release poster
Directed byShaji Kailas
Written byG. R. Indugopan
Based onShankumukhi
by G. R. Indugopan
Produced byDolwin Kuriakose
Jinu V. Abraham
Dileesh Nair
Vikram Mehra
Siddharth Anand Kumar
StarringPrithviraj Sukumaran
Asif Ali
Aparna Balamurali
Anna Ben
CinematographyJomon T. John
Edited byShameer Muhammed
Music byDawn Vincent
Jakes Bejoy
Production
companies
Fefka Writers Union
Theatre of Dreams
Saregama India
Release date
  • 22 December 2022
Running time
134 minutes[1]
CountryIndia
LanguageMalayalam
Box office₹17 crore[2]

Wednesday, January 25, 2023

SAUDI VELLLAKKA (2022) - சவுதி வெள்ளக்கா - மலையாளம் - சினிமா விமர்சனம் ( கோர்ட் ரூம் டிராமா) @ சோனிலைவ்


 இந்தப்படம்  ரிலீஸ்  ஆகும்  முன்பே  பல  திரைப்பட  விழாக்களில்  திரையிடப்பட்டு  மக்களின் ஏகோபித்த  வரவேற்பையும், பல  விருதுகளையும்  குவித்த  படம், படத்தின்  இயக்குநர்  தயாரிப்பாளரிடம்  என்ன  மாதிரி  கதை  சொல்லி  இந்த  ஸ்க்ரிப்ட்டுக்கு  ஓக்கே  வாங்கி  இருப்பார்  என்பது  கற்பனைக்கும்  எட்டாதது. அவ்வளவு  சாதாரணமான  ஒன்  லைன் தான், ஆனால்  யதார்த்தமான , சுவராஸ்யமான  திரைக்கதை  படத்தை  உலக  சினிமா  அந்தஸ்துக்கு  தூக்கி  நிறுத்துகிறது 

2021ல்  ரிலீஸ்  ஆகி  மிகப்பெரும்  வெற்றி  பெற்ற  ஆபரேஷன் ஜாவா  எனும்  சைபர்  க்ரைம் த்ரில்லர்  படத்தை  இயக்கிய இயக்குநர்  தருண்  மூர்த்தியின்  இரண்டாவது  படம் தான்  இது. இது ஒரு  கோர்ட்  ரூம்  டிராமா, சோஷியல்  டிராமா , ஃபேமிலி  மெலோ  டிராமா  என  எப்படி  வேண்டுமானாலும்  சொல்லலாம் 


சவுதி அரேபியாவில்  நடக்கும்  கதை  அல்ல. கேரளா  வில்  கொச்சின்  ( எர்ணாகுளம்)  மாவட்டத்தில்  சவுதி  எனும்  காலனியில்  நடக்கும்  கதை


spoiler alert

 . ஓப்பனிங்  ஷாட்டில்   ஒரு  போலீஸ்  வீடு  தேடி  வந்து  சம்மன்  கொடுப்பது  போல  காட்சியைப்பார்த்ததும்  ஏதோ  ஒரு  க்ரைம்  த்ரில்லர்  கதை  என  நிமிர்ந்து  உட்காருகிறோம், ஆனால்  ஒரு  பத்து  பைசாவுக்கு  பிரயோசனம் இல்லாத  சாதா  கேஸ்  என  உணரும்போது  இரண்டு மணி நேரத்துக்கு  மேல் இந்தக்கதையை  எப்படிக்கொண்டு போக  முடியும்  என  கேள்வி  எழுகிறது , ஆனால்  ஆங்காங்கே  நகைச்சுவை  கலந்து  போர்   அடிக்காமல்  ஒரு யதார்த்தமான  படம்  தந்திருகிறார்கள் 


மாடியில்  சின்னப்பசங்க  விளையாடிக்கொண்டு  இருக்கும்போது  அந்த  வழியே  வந்த  ஒரு  பாட்டியின்  தலையில்  அவர்கள்  வீசிய பந்து  பட்டு  லேசாக  காயம்  ஏற்படுகிறது , கோபத்துல  அந்த  பாட்டி  அந்தப்பையனை  அடித்து  விட  அந்தப்பையனின்  பல்  ஒன்று  உடைந்து  விடுகிறது. பிள்ளையின்  பெற்றொருக்கும்  அந்தப்பாட்டிக்கும்  ஏற்கனவே  சில  தகறாரு  இருக்கிறது, பாட்டி  போலீஸ்  கேஸ்  கொடுக்கும்  முன்  நாம்  முந்திகொள்வோம்  என  அவர்கள்  பாட்டி  மீது  கேஸ்  போடுகிறார்கள் இந்தக்கேஸ்  பல  வருடங்களாக  நடக்கிறது


 பல்  விழுந்த  பையன்  பெரிய  பையன்  ஆகி வெளிநாடு போய்  வேலைக்குப்போக  இந்தக்கேஸ்  தடையாக  இருக்கிறது . அதனால்  முதலில்  கொடுத்த  புகாரை  மாற்றி  சாட்சிகளை  மாற்றி இந்தக்கேசை  ஒன்றுமில்லாமல் ஆக்க  நினைக்கிறான். இதற்குப்பின்  என்ன  நடந்தது  என்பதே  திரைக்கதை 


நடித்தவர்கள்  அனைவரும்  புதுமுகங்கள்  என்றாலும் அந்தந்த கதாபாத்திரமாகவே  மாறி  இருக்கிறார்கள், குறிப்பாக  அந்த  பாட்டியின்  நடிப்பு  பிரமாதம், தனக்காக  தன்   மகனும், மரும்களும்  சண்டை  போட்டுக்கொ:ள்வதை  வருத்தமாகப்பார்ப்பது, தன்னிடமிருந்து  பணத்தை  கறக்க  நினைக்கும்  வக்கீலை  நக்கலாகப்பார்ப்பது  என  அவ்ளோ  பாந்தமான  நடிப்பு


 கோர்ட்  படி ஏறி  விட்டால்  நம்  வாழ்க்கை  எவ்வளவு  சிக்கல் நிறைந்ததாக  மாறி விடும் , அலைக்கழித்து  விடும்  என  யதார்த்தமான  உண்மையை  காமெடி  கலந்து  சொன்ன  விதத்தில்  இயக்குநர்  ஜெயித்திருக்கிறார்


சரண்  வேலாயுதம்  நாயர்  கச்சிதமான  ஒளிப்பதிவு ,பாலிஸ்  ஃபிரான்சிஸ்  மெல்லிய  இசை நிசாத்  யூசுப்பின் எடிட்டிங்  படத்திற்கு  மேலும்  வலு  கூட்டுகின்றன 


ரசித்த  வசனங்கள் 


1  நான்  எல்லாம்  படிக்கிற  காலத்துல  ஒரு  பையனைக்கூட காதலிச்சது  இல்ல 


 படிச்சது  ஆறாவது  வரை , அப்புறம்  எப்படி  லவ்  வரும் ?


2 இது  தாலி கட்ற  நேரம் 


ஓஹோ,  கெட்டிமேளம்  சீரியலா?


3   மனுசங்களை  உன்னால  மனசால  மட்டும்  தான்  நேசிக்க  முடியும்  ( செயலால்  அல்ல) 


4  மழை  இல்லாதப்ப  குடை  இருக்கறது  கூட  பாரமாத்தான்  தெரியும் 


5  சம்மன்  வந்திருக்கு 


 டெட் பாடிக்கா? 


 புரியல


 அவரு  செத்துப்போய்ட்டாருங்க 


6   வக்கீலைப்பொறுத்தவரை  நல்லவன், கெட்டவன்னு  யாரும்  கிடையாது , விபரமானவனா?னு  பார்த்தா  போதும் 


7  குடும்பத்தோட  இருப்பதுதான்  பெரிய  விஷயம் , சம்பாதனையை  விட 


8   உங்க  மகன்  எங்கே  போய்  இருப்பான் ? ஏன்  திரும்பி  வரவே  இல்லை ?


 போன  இடம்  இதை  விட  நல்ல  இடமா   நிம்மதியான  இடமா  இருந்திருக்கும் 



9  இந்த  கேஸ்  முடியற  வரை  நான்  உயிரோட  இருப்பேனா?


10  கேசை  நடத்துவதில்  இருக்கும்  ஆர்வத்தில்  கொஞ்சமாவது  கேசை  முடித்து வைப்பதில்  இருக்க  வேண்டாமா?


11  டென்ஷனா  இருக்கா?


 அது  ம்ட்டும்  தான்  இருக்கு 


12   வாழ்க்கை  அவ்வளவு  தானா?னு  கேட்டியே? இப்போப்புரிஞ்சிருக்குமே? வாழ்க்கை  அதுக்கும்  மேல 


சபாஷ்  டைரக்டர்


1  தன்  அம்மாவால்  போலீஸ் , கோர்ட் , கேஸ்  என  அலைய  நேரிடுதே  என  அம்மாவைத்திட்டும்  மகன்  பின்  தனிமையில்  அம்மாவிடம்  மன்னிப்புக்கேட்கும்  சீன்  செம  டச்சிங் 


2   மனைவி , அம்மா  இருவரையும்  பேலன்ஸ்  பண்ண  முடியாமல்  வீட்டை  விட்டு  ஓடிப்போக   மகன்   எடுக்கும்  முடிவு  கண்  கலங்க  வைக்கிறது 


3     அத்தனை  வருடங்கள் இழுத்த  கேஸ்  தீர்ப்பு  வரும் நாளில்  வரும்  க்ளைமாக்ஸ்   ட்விஸ்ட் 


 சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  குடும்பத்தோடு  காணத்தக்க  இந்தப்படம்  சோனி  லைவ்  ஓ டி டி  தளத்தில்  காணக்கிடைக்கிறது  ரேட்டிங் 3/ 5 




Saudi Vellakka
Saudi Vellakka first look poster.jpg
First look poster
Directed byTharun Moorthy
Written byTharun Moorthy
Produced bySandip Senan
Starring
CinematographySharan Velayudhan Nair
Edited byNishadh Yusuf
Music byPalee Francis
Production
company
Urvasi Theatres
Release date
CountryIndia
LanguageMalayalam

Tuesday, January 24, 2023

செத்தும் ஆயிரம் பொன் (2020) தமிழ் --சினிமா வி,மர்சனம் ( மெலோ டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்


 1985ல்  நதியா-பத்மினி  நடிப்பில் , ஃபாசில் இயக்கத்தில்  வெளியான  பூவே  பூச்சூடவா பாட்டி - பேத்தி  பாசப்பிணைப்பை  மையமாக்கொண்டு  திரைக்கதை  அமைக்கப்பட்டு  மாபெரும்  வெற்றிப்படமாக  அமைந்தது  ஏ  செண்ட்டர்  ரசிகர்கள்  கொண்டாடிய  கிளாசிக்கல்  மூவியான  பூவே  பூச்சூடவா  போலவே  பாட்டி - பேத்தி  பாசத்தை  வெறொரு  பரிமாணத்தில்  கிராமியக்கதைக்களத்தில்  பி , சி   செண்ட்டர்  ரசிகர்கள்  கூட  ரசிக்கும்  விதத்தில்  வந்த  படம்தான் இது. 2019ம் ஆண்டில்  தியேட்டரிலும் 2020ல்  நேட்  ஃபிளிக்சிலும்  ரிலீஸ்  ஆகியுள்ளது 

நாயகி  23  வயது  நிரம்பிய  ஒப்பனைக்கலைஞர். சினிமாவில்  மேக்கப் விமனாக  இருக்கிறார். ஐந்து  வயதாக  இருக்கும்போதே  தனக்கு  பால்ய  விவாகம்  செய்ய  முற்பட்ட  பாட்டியிடம்  கோபித்துக்கொண்டு  நகரத்துக்கு  வந்தவர்  18  வருட  இடைவெளிக்குபின்  தன்  சொந்த  கிராமத்துக்கு  வேண்டா  வெறுப்பாக  ஒரு  நிர்ப்பந்தம் காரணமாக  வருகிறார்


நாயகியின்  பாட்டி ஒப்பாரிப்பாட்டு  பாடுபவதைத்தொழிலாகக்கொண்டுள்ளார். ஊரில்  எந்த  வீட்டில்  சாவு  வந்தாலும்  இவர்  போய்  ஒப்பாரிப்பாட்டு  பாடுவார். அந்த  கிராமத்து வழக்கப்படி ஒருவருக்கு  மரணம் நேர்ந்தால்  அவருக்கு  நல்ல  ஒப்பனை  செய்து  அடக்கம்  செய்வதே  அவருக்குத்தரும்  மரியாதை  என  நினைக்கிறது , நாயகியின்  முறைப்பையன்  பிணத்துக்கு  ஒப்பனை  செய்யும்  தொழிலில்  இருக்கிறார்


கிராமத்துக்கு  வந்தபின்  நாயகி  தன்  பாட்டியையும் , மாமன்  மகனையும்  எப்படி  எதிர்  கொள்கிறார்? அவர்களுக்குள்  இருந்த  பிணக்குகள்  தீர்ந்தனவா?  என்பதை  வெறும்  மூன்று  நாட்களில்  நடக்கும்  சம்பவங்கள்  மூலம்  சொல்லி  இருக்கிறார்  அறிமுக  இயக்குநர்  ஆனந்த  ரவிச்சந்திரன்


 கதைக்களத்தைப்பார்த்து  இது  ஏதோ  சோகபடமோ? அழுகை  ஓவர்  டோசாக  இருக்குமோ? என  பயப்படத்தேவை  இல்லை . இழவு  விழுந்த  வீட்டில்  நிகழும்  சம்பவங்களை  நகைச்சுவை  கலந்து  சொல்லிய  விதத்தில்  கவனிக்க  வைக்கிறார். நாட்டுப்புறப்பாடல்கள் , கிராமிய  வட்டார  வழக்கு பேச்சுகள் என  மாறுபட  பதிவாக  இது  அமைகிறது 


நாயகியாக நிவேதிதா  சதீஷ்.இவரது  முகத்தில்  ஆரம்பத்தில்  எள்ளும்  கொள்ளும்  வெடிக்கிறது.பாத்திரத்தை  உள்வாங்கி  நடித்திருக்கிறார். பாட்டியுடன்  பிணக்கு  தீர்ந்து  பாசத்தை  உள்ளே  வைத்து  அழும்  காட்சியில்  கலங்க  வைக்கும்  நடிப்பு 


 பாட்டியாக   ஸ்ரீ  லேகா  ராஜேந்திரன்.  அவரது  தெனாவெட்டான  உடல்  மொழி  அபாரம். கச்சிதமான  நடிப்பு 


 ,முறைமாமனாக  அவினாஷ்  ரகுதேவன்  ஆரம்பத்தில்  முரட்டுத்தனமானவாரகவும் , பிறகு  நல்லவாரகவும் இரு  முகம்  காட்டுகிறார்


நாயகியின்  தோழியாக   கேப்ரியலா  அட்டகாசமான  பங்களிப்பை  செய்திருக்கிறார். மொத்தக்கதையுமே  பாட்டி - பேத்தி -  முறை  மாமன்  என  பயணித்தாலும்  இவர்  தனித்துத்தெரிகிறார். பிரமாதமான  நடிப்பு


 ஏடாகூடமான  சமயத்தில்  ஹார்ட்  அட்டாக்  வந்து  இறந்து  போகும்  நபரின்  இறுதிச்சடங்கு  கலாட்டாவில்  காமெடி  கலக்கலாக  அமைந்திருக்கிறது . தமிழ்  சினிமா  வரலாற்றிலேயே  முழுக்க  முழுக்க  இறுதிச்சடங்கு  ஒப்பனை  பற்றி  பதிவு  செய்து  நாம் இதுவரை  அறியாத  பல  சுவராஸ்யங்களை  தந்த  விதத்தில்  இயக்குநர்  கவனிக்க  வைக்கிறார். சர்வதேச  அரங்கில்  பல  விருதுகளைக்குவித்த  இந்தப்படம் நெட்  ஃபிளிக்சில்  காணக்கிடைக்கிறது 


102  நிமிடங்கள்  மட்டும்  ஓடும்  விதத்தில்  கச்சிதமாக  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்  எடிட்டர்  பிரகாஷ்.சமந்த்நாக்  இசையும், மணிகண்டன்  ஒளிப்பதிவும்  கனகச்சிதம் 


எச்சரிக்கை 1  -  இதில் அடல்ட்  கண்ட்டென்ட்  எதுவும்  இல்லை , ஆனால்  கிராமிய  வட்டார  வழக்கில்  பேசும்  சில  கொச்சையான  பச்சையான  வசனங்கள்  உண்டு , குடும்பத்துடன்  பார்க்கும்போது  சில  சங்கடங்கள்  வரலாம்


 எச்சரிக்கை 2  - இதில்  கமர்ஷியல்  விஷய்ங்களான  காமெடி  டிராக் , டூயட் , ஃபைட்  எதுவும்  இல்லை . எனவே  மசாலாப்பட  பிரியர்கள்    பார்ப்பதைத்தவிர்க்கவும் 



ரசித்த  வசனங்கள் 


1   விட்ட  உறவு  எட்டு  நாளைக்காம் , நக்கின  உறவு  நாலு  நாளைக்காம் 


2 அப்புறம்  பண்ணுன சப்பரம்மாதிரி  மினுமினுனு  இருக்கியே?


3  பனை  மரத்துக்கு  துணை  மரமா  உன்  கூடவே  இருக்கேனே? 


4  காது  குடையற  குச்சி  மாதிரி  இருக்கியே ? உனக்கு  மாப்ளை  கிடைக்குமா?


5   ராணி  பக்கத்துல  இருந்தாதான்  ராஜாவுக்கு  மதிப்பு   செஸ்லயும்  சரி , வாழ்க்கைலயும்  சரி 


6  அக்கால ( தொலைவில் )  இருந்தா  நிக்கல  உறவு , கிட்டக்க  ( அருகில் )  இருந்தா  முட்டிக்கும்  உறவு 


7  ஒரு  கலைஞன்  இன்னொரு  கலைஞனுக்கு  ம்ரியாதை  செய்யனும்


8 பொய்  என்னைக்கும்  பள பளனுதான்  இருக்கும் 


9 ஊருக்கே  ஒப்பாரி  வைக்கும்  ஆத்தா  பெத்த  புள்ள  சாவுக்கு  வர  முடியல ., யாரும்  சொல்லியும்  விடல  தகவல்  கிடைக்கலை 


10 நினைச்ச  உடனே  கோழி  முட்டை  போட  முடியுமா?


11  வயித்தை  பசியில்  காயப்போட்டா  கோபம்  அதிகமாத்தான்  ஆகும் 


12 உன்னைத்தான்  கேட்டுட்டு  இருக்கேன் , வாய்ல  என்னத்தை  சமைச்சுட்டு  இருக்கே? 


13  அடி  நாக்குல  நஞ்சும்  நுனி  நாக்குல   அமுதமும்  இருக்கனும் 


14  திறமை  இருக்கும்  மீன்வனுக்கு  தூண்டில்  தேவை  இல்லை . வெறும்  குச்சி  போதும் 


15  சாவு  மட்டும்  இல்லைன்னா  , மனுசன்  சோம்பேறி  ஆகிடுவான் , இருக்கற  இடத்தை  விட்டு  நகர  மாட்டான் 


சபாஷ்  டைரக்டர் 


1  இழவு  விழுந்த   வீட்டில்  இறந்தவனுக்கு  கடைசி  மரியாதை  செய்வது  யார்? மனைவியா? கீப்பா? என  ந்டக்கும்  சுவராஸ்ய  சண்டையை  படமாக்கிய  விதம் 


2  மெயின்  க்தைக்கு  சம்பந்தம்  இல்லாமல்  போனாலும்  படத்தில்  வரும்  அனைத்து  இழவுக்காட்சிகளையும்  காமெடி  ட்ரீட்மெண்ட்டில்  காட்டியது 


3  தன்  அப்பாவின்  சாவுக்கு  வராத  பாட்டியின்  வில்லி  இமேஜை  காலி  பண்ணும்  அந்த  முன்  கதையை  பேத்தி  தெரிந்து  கொள்ளும்  இடம் 


4   நாயகிக்கும், தோழிக்கும்  இடையிலான  எமோசனல்  பாண்டிங் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1   பாட்டி  மீது  கோபம்  காட்டும்  நாயகியின்  ந்டிப்பு  சில  இடங்களில்  ஓவர்  ஆக்டிங்  போல  தோன்றுவது  பலவீனம் 


2  தன்  அழைப்பின்  பேரில்  வந்த  பேத்தியை  வரவேற்காமல்  ஒரு  வார்த்தை  கூடபேசாமல்  பின்  அதற்கான  காரணமாக  இழவு  வீட்டுக்குப்போய்ட்டு  குளிக்காம  எப்படிப்பேச? என  பாட்டி  சமாளிப்பதும்  பொருந்தவில்லை 


3   சொத்து  விஷயமாக  உயில்  விஷ்யமாக  கிராமத்துக்கு  வரும்  நாயகி  அந்த  ஒப்பனைப்பெட்டியை  எதற்குக்கொண்டு  வருகிறார் ? 


4  பெண்  சுதந்திரம் , முற்போக்கான  பெண்  என்பதைக்காட்ட  நாயகி  தம்  அடிப்பது , தண்ணி  அடிப்பது  என  காட்டனுமா? 

 

5  நாயகியிடம்  முறைப்பையன்  ப்ரப்போஸ்  செய்யும்  காட்சியில்  அந்த  ஆள்  கண்களில்  காதல்  இல்லை . முரட்டுத்தனம்  தான்  தெரிந்தது 


சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  மாறுபட்ட  படங்களைக்காணும்  ஆர்வலர்கள்  மட்டும்  பார்க்கலாம். ரேட்டிங்  3/ 5 


செத்தும் ஆயிரம் பொன்
படிமம்:Sethum Aayiram Pon poster.jpg
Release poster
இயக்கம்ஆனந்த் ரவிச்சந்திரன்
தயாரிப்பு
  • அனுசிலிக்கா துபே
  • பிரியங்கா அகர்வால்
  • சஸ்வத் சிங்
கதைஆனந்த் ரவிச்சந்திரன்
இசைசமந்த் நாக்
நடிப்பு
ஒளிப்பதிவுமணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி
படத்தொகுப்புபிரகாஷ் கருணாநிதி
கலையகம்விஸ்பரி பிலிம்ஸ்
வெளியீடுமே 8, 2019 (நியூயார்க்கு இந்தியத் திரைப்பட விழா)
1 ஏப்ரல் 2020 (Worldwide)
ஓட்டம்102 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

Monday, January 23, 2023

MUMBAI MAFIA -POLICE VS UNDER WORLD (2022) ஹிந்தி - திரை விமர்சனம் ( க்ரைம் டாக்குமெண்ட்ரி ) @ நெட் ஃபிளிக்ஸ்

 


1990 களில்  மும்பை  நகரமே  கேங்க்ஸ்ட்ர்  பிடியில்  சிக்கித்தவித்த்து. என்கவுண்ட்டர்கள்  நடந்தது . தாவூத்  இப்ராஹிம்  உட்பட  பல  கேங்க்ஸ்டர்கள்  பற்றியும், அவர்களை  அடக்கிய  போலீஸ்  ஆஃபீசர்கள்  பற்றியும், அவர்கள்  மீது  தொடுக்கப்பட்ட  போலி  என்கவுண்ட்டர்  கேஸ்  பற்றியும்  அலசி  ஆராயும்  ஒரு  க்ரைம்  ட்ராமா  இது . டாக்குமெண்ட்ரி  ஃபிலிம் 



இது  பெரும்பாலும்  ரிட்டையர்  ஆன  போலீஸ்  ஆஃபீசர்களின்  பேட்டிகளின்  தொகுப்பாகவே  இருக்கிறது. மேலும்  சில  மீடியா  ரிப்போர்ட்டர்களின்  பேட்டியும்  உள்ளடக்கம் 

1974ல்  தன்  முதல்  கொள்ளையை  ஆரம்பித்தான்  தாவுத் இப்ராஹிம். திலீப்  புவா  என்பவன்  தான்  தாவூத்  கேங்க்ல  அபாயகரமான  ஆள் மயா  தோழாஸ்  என்பவன்  அவனோட  கூட்டாளி 

1993  ல  நடந்த  வெடிகுண்டு சம்பவம்  இந்தியாவை அதிர  வைத்தது, அபுசலீம்  க்கு  மரண  தண்டனை  தர  மாட்டொம்  என  உறுதி  அளித்த  பின்  தான்  இந்தியா  அழைத்து  வர  முடிந்தது 


அபுசலீம்  வெடிகுண்டு  சம்பவத்தில்  மட்டுமல்ல இசை  அமைப்பாளர்  குல்சன்  குமார் கொலை  வழக்கும்  அவன்  மீது  உண்டு 


பிரதீப்  சர்மா  என்ற  என்கவுண்ட்டர்  ஸ்பெஷலிஸ்ட்  மேல  போலி  என்கவுண்டர்  பண்ணதா  ஒரு  வழக்குஅதில் அவருக்கு  ஜெயில்  தண்டனை  கிடைத்தது . லகன்  பையா  என்பவரை  கொன்றார்  என  குற்றம்  சாட்டப்பட்டு  மூன்றரை  வருடங்கள்  ஜெயிலில்  இருந்து  பின்  குற்றச்சாட்டு  நிரூபிக்கப்படாததால்  ரிலீஸ்  ஆனார் 

தாவூத் தின்  தம்பி இக்பால்  காஸ்கர்  என்பவனை  கைது  செய்தது  பர பரப்பாக  பேசப்பட்டது 

ரசித்த  வசனங்கள்


 1  ஒரு  வெளியூர்க்காரனுக்கு  மும்பைல  என்ன  பெரிய  கஷ்டம்னா  இங்கே  பயங்கரமா  வேர்த்துக்கொட்டும் 


2   ஒரு  போலீஸ்  ஆஃபீசரின்  வாழ்வில்  வன்முறைகள்  அதிகமா  இருக்கும், இது வலிகள்  நிறைந்த  வாழ்க்கை, ஆனா  நாம  இதை  ஏத்துக்கொண்ட  பின்  அதை செஞ்சுதான்  ஆகனும் 


3 இந்தியாவோட  க்ரைம்  கேப்பிடல்  மும்பைதான் 


4  யாரையாவது  கொல்றதா  இருந்தா 10  அல்லது 20  புல்லட்களை  யூஸ்  பண்ணுங்கனு  அடியாட்களிடம்  சொல்வான், அப்போதான்  மக்கள் மனதில்  பயத்தை  உருவாக்க  முடியும் 


5  power flows from the nazzle of the gun


6   தாவுத் க்கு  அவன்  ஏரியாவில்  இன்னொரு  பேரு  டெரர்


7  எந்த  ஒரு  மனிதனுக்கும்  இன்னொரு  மனிதனின்  உயிரைக்கொல்வது  பிடிக்காது , ஏன் எனில்   மனித  நேயம்  மதிக்கப்பட  வேண்டும் என  சின்ன  வயதில்  இருந்தே  ந,மக்கு  போதிக்கப்பட்டு  வருகிறது 


8   கேங்ஸ்டர்  செத்துப்போவதைப்பார்க்க  எல்லோருக்கும்  ஆசை 


9  இந்த  மாதிரி  சாவுகளை  என்கவுண்ட்டர்னு  இந்த  சம்பவங்களுக்குப்பின் தான்  சொல்ல  ஆரம்பிச்சாங்க 


10  யாராவது  உங்களைக்கொல்ல  முயற்சி  செஞ்சா  அவங்க  கைல  நீங்க  ஃபிளவர்  பொக்கேவா  தர  முடியும் ? 


11  தாவூத்  பல  தலை  கொண்ட  ஹைட்ரா  மாதிரி ,  ஒரு  தலையை  வெட்டுனா  பல  தலைகள்  உயிர்த்தெழுவது  போல  அவன்  மேலே  வந்தான்  


12  யாருமே  பிறக்கும்போதே  தலை  எழுத்தோட  பிறப்பதில்லை.


13  1993ல்  இவ்வளவு  பெரிய  வெடிகுண்டு  சம்பவம்   பண்ணப்போறோம்னு  தாவூத்  பிளான்  பண்ணியா  செஞ்சிருப்பான்? திடீர்னு எடுத்த  முடிவுதான்  அது 


14   ஒரு போலீஸ்  ஆஃபீசரா  என்ன  பண்ணனும்னு  எனக்குத்தெரியும். என்கவுண்ட்டர்  பற்றி  எனக்குப்பாடம்  நடத்த  வேண்டாம்,  ஒரு  அப்பா  கிட்டே  பிள்ளை  எப்படி  பெற்றுக்கொள்வதுனு  யாராவது  பாடம்  நடத்துவாங்களா?


15  தீவிரவாதிகள் , கேங்க்ஸ்டர்ஸ்  எல்லாரும்  கைல  ஏ கே 47  கன்  வெச்சிருப்பாங்க, ஆனா  போலீஸ்  கைல  ஒரு  ரிவால்வர் தான்  இருக்கும், அப்போ  ஒரு  போலீஸ்  ஆஃபீசர்  எப்படி  தனக்குக்காயமே  இல்லாம  86  என்கவுண்ட்ட்ர்  பண்ணி  இருக்க  முடியும் ?


16  மோசமான  சூழ்நிலைகளில்  மோசமான  முடிவுகளை  எடுத்துத்தான்  ஆகனும் 


17   போலீஸ்  ஆஃபீச்ர்களில்  என்கவுண்ட்டர்  ஸ்பெஷலிஸ்ட்களில்  ஒரு  போட்டி உருவாச்சு  சச்சின் - ஷேவாக்  சாதனை  போல  நீ  இத்தனை  பேரை  போட்டுத்தள்ளுனே, நான்  இத்தனை  பேரை  என்கவுண்ட்டர்  பண்ணினேன்  அப்படினு  பெருமை  பேச  ஆரம்பிச்சாங்க 


18   பதவியிலிருந்து   விரட்டப்பட்ட  முதல்  என்கவுண்ட்டர்  ஸ்பெஷலிஸ்ட்  பிரதீப்  குமார், அவர்  செஞ்ச  தப்பு  ஓப்பனா  மீடியாக்களுக்கு  பேட்டி  கொடுத்தது 


19  ஒரு  ஜூனியர்  அதிகாரிக்கு  பாராட்டும் , புகழும்  கிடைப்பதை  அவரது  சுப்பீரியர்  ஆஃபீசர்சே  விரும்ப  மாட்டாங்க 


20  போலீஸ்  ஆஃபீசர்ட்ட  ஒரு  குணம்  இருக்கு, எந்த்  நிலையிலும்  தோல்வியை  ஏத்துக்க  மாட்டோம், நீங்க  எவ்ளோ  கீழே  தள்ளினாலும்  பவுன்ஸ்  பேக்  ஆகிடுவோம் 


சி பி எஸ் ஃபைனல்  கமெண்ட் -  டாக்குமெண்ட்ரி  படம்  பார்த்துப்பழகப்பட்டவ்ர்களுக்குத்தான்  பிடிக்கும்,  ட்விஸ்ட்  எதுவும்  இல்லாமல்  ஒரே  நேர்கோட்டில்  செல்லும்   படம்  ரேட்டிங் 2 / 5 

Wednesday, January 18, 2023

முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்-MUKUNDAN UNNI ASSOCIATES- (2022) ( மலையாளம்) -சினிமா விமர்சனம் ( க்ரைம் டிராமா) @டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓ டி டி


சதுரங்க வேட்டை , மங்காத்தா , கண்ணும்  கண்ணும்  கொள்ளையடித்தால், அமைதிப்படை   போன்ற  படங்கள்  எல்லாம்  ஹீரோ மற்றவர்களை  ஏமாற்றி  சம்பாதிக்கும்  மனப்பான்மை  உள்ளவராக  வருவார். வழக்கமாக  நீதி , நேர்மை  என  டயலாக்  பேசும் ஹீரோக்களையே  பார்த்து  சலித்த  ரசிகர்களுக்கு  இந்த  நெகடிவ்  ஷேடு  திரைக்கதை  நாயகன்  மிகப்புதிதாகத்தெரிந்ததால்  அவைகள்  மாபெரும்  வெற்றிப்படங்கள்  ஆகின. அந்த  வழியில்  சீட்டிங்  ஃபெலோவாக  ஹீரோ  நடிக்கும்  இன்னொரு  நெகடிவ்  ஷேடு  படம் தான் இது 


Spoiler  alert

நாயகன்  சட்ட,ம்  படித்த  வக்கீல், ஆனால்  பெரிய  கேஸ்  எதுவும்  கிடைக்காமல்  டம்மியாக  இருக்கிறார். ஒரு நாள் அவரது  அம்மாவுக்கு வீட்டில்  ஒரு சின்ன  விபத்து  ஏற்பட்டு  கால்  முறிவு  ஏற்படுகிறது. ஹாஸ்பிடலில்  சேர்த்து  விட்டார், ஆனால்  ஃபீஸ்  கட்ட  கைவசம்  பணம்  இல்லை . அப்போது  ஒரு  வக்கீல்  உதவுகிறார். இது  சாலை  விபத்து  போல்  ஜோடித்து  அதன்  மூலம்  ஹீரோவுக்கு  பணம்  கிடைக்க  வழி  செய்கிறார். அந்த  டெக்னிக் நல்லா  இருக்கே? நாமும்  முயற்சிப்போம்  என  ஹீரோ  அதே  வழியில்  போக  முடிவெடுக்கிறார்


ஹாஸ்பிடல்  நிர்வாகத்தை  கையில்  போட்டுக்கொண்டு  யாருக்கு  எங்கே  என்ன  விபத்து  நடந்தாலும் அதில் ஹீரோ  ஆஜர்  ஆகி  அந்த  கேசை  நடத்தி அதில்  வெற்றி  பெற்று  அதில்  கிடைக்கும்  இன்சூரன்ஸ்  தொகையை  பாதிக்கப்பட்டவருக்கும்  தந்து  தானும்  கமிஷன்  எடுத்துக்கொள்கிறார்.

 நாளடைவில்  இதில்  மிகப்பெரிய  வெற்றி பெற்று  தனக்கு  ஆரம்பத்தில்  உதவிய  அந்த  வக்கீலுக்கே  தொழில்  முறை  போட்டியாளராக  மாறி  விடுகிறார்.தொழில்  போட்டி  காரணமாக  அந்த  வக்கீலை  திட்டமிட்டு  கொலையும்  செய்து  அதை  சாலை  விபத்து  போல  செட்டப்  பண்ணி  விடுகிறார்



நாயகன்  கூடவே  இருந்த  நண்பன்  நாயகனைப்போலவே  தொழில்  கற்றுக்கொண்டு  விடுகிறார். அவருக்குப்போட்டியாக  உருவெடுக்கிறார். 

 ஒரு  கட்டத்தில்  நாயகன்  ஒரு  சிக்கலில்  மாட்டிக்கொள்கிறார். அவருக்கு  ஒரு  ஜட்ஜே  எதிராகத்திரும்புகிறார். நாயகன்  செய்த  தவறுக்கு  அந்த  ஜட்ஜ்  தான்  சாட்சி . இதிலிருந்து  நாயகன்  எப்படித்தப்பிக்கிறார்? என்பதை  நகைச்சுவையாக  , விறு விறுப்பாக  தந்திருக்கின்றனர் 

நாயகனாக  வினீத்  சீனிவாசன் . இவர்  ஒரு  இயக்குநரும்  கூட  ஹிருதயம்  என்ற  லவ்  ஸ்டோரியை   சமீபத்தில்  இயக்கி  ஹிட்  ஆக்கியவர் . இதில்  பக்கத்து  வீட்டு  ஆள்  போன்ற  சாதாரணமான  உருவத்தில்  வந்து  காட்சிக்கு  காட்சி  கைதட்டலை  அள்ளிக்கொள்ளும்  நாயகனாக  கலக்கி  விட்டார் . படம்  முழுக்க  இவர்  தன்  மனசாட்சியோடு  பேசிக்கொள்ளும்  கவுண்ட்டர்  டயலாக்ஸ்  சீன்ஸ்  அட்டகாசம் 


போட்டி  வக்கீலாக  சுராஜ்  வெஞ்சார மூடு  கச்சிதமான  நடிப்பு . தனக்குப்போட்டியாக  உருவாகியவர்  ஒரு  வக்கீல்  என்பதை  உனர்ந்து   அவர் முகத்தில்  காட்டும்  அதிர்ச்சி  அருமை 

நாயகியாக அர்ஷா  அதகளம்.  ஹாஸ்பிடல்  ஓனரையே  ஒதுக்கி  விட்டு  ஒரு  வக்கீலைக்காதலித்து  மணக்க  அவர்  சொல்லும்  காரணம்  அருமை . நாயகனுக்கே  கிரிமினலாக  ஐடியா  கொடுப்பதும்  , பல  பிரச்சனைகளை  அசால்ட்டாக  தீர்ப்பதும்  சபாஷ்  நடிப்பு 


விஸ்வாஜித்தின்  ஒளிப்பதிவு  கனக்கச்சிதம், சிபி மேத்யூவின்  பின்னணி  இசை  படத்தின்  பெரிய  பலம். 

வாகன  விபத்து  சட்டம்  பற்றியும்,  விபத்தில்  சிக்கி  மருத்துவமனை  வந்து  காப்பீடு  பெறுவது  பெற்றியும்  மிகப்பெரிய  ஆர்ஃபாய்ச்சியே  செய்து  பிரமாதமாக  திரைக்கதை  அமைத்து  இருக்கிறார்  அபினவ்  சுந்தர்  நாயக்

இரண்டு  மணி  நேரம்  10  நிமிடங்கள்  ஓடும்   இந்தப்படத்தை  கச்சித மாக  ட்ரிம் பண்ணி  இருக்கிறார்கள்  நிதின் ராஜ் மற்றும்  அபினவ் சுந்தர்

 கேரளாவில்  வெளியாகி  மிகப்பெரும்  வெற்றி  பெற்ற  இந்தப்படம்  இப்போது  டிஸ்னி  பிளஸ்  ஹாட்  ஸ்டார்  ஓ டி டி  தளத்தில்  காணக்கிடைக்கிறது   

ரசித்த   வசனங்கள் 

1   வெற்றிக்குத்தேவையான  நான்கு  விஷயங்கள் 1  கடின  உழைப்பு ( ஹார்டு  ஒர்க்)2  அர்ப்பணிப்பு  ( டெடிகேஷன் ) 3  perseverance  விடா முயற்சி 4   ஒழுக்கம்  (டிசிப்ளின் )

2   இந்த  உலகத்துல  ரெண்டு  விதமான  நபர்கள்  தான்  இருக்காங்க  
1  ஏமாற்றுபவர்கள்  2  ஏமாற்றப்படுபவர்கள் 

3   சுயநினைவு  இல்லாதவங்க  கிட்டே  கையெழுத்து  வாங்குவது  மிக  சுலபம்

4   தேவை  இல்லாததை  உடனே  அழிச்சுடனும், அதுதான்  நமக்கு  மரியாதை 

5   நாம  செய்யற  வேலை  நமக்கு  சலிப்பைக்குடுக்கக்கூடாது 

6  தோற்பதை  விட  நல்லது  செத்துப்போவது 

7  ஏழு  நாய்கள்  அங்கே  இருக்கும்  ஐ  மீன்   7  ஏஜெண்ட்ஸ்

8   வேறுபட்ட  , மாறுபட்ட  மார்க்கெட்ல  இன்வெஸ்ட்  பண்ணுவதை  விட  மோனோபாலி  ல  இன்வெஸ்ட்  பண்ணுவது  அதிக  பாதுகாப்பு 


9   இறந்தவங்க  வீட்டில்  ஆதாயம்  பார்க்கலாமா?  

 ஏன்  கூடாது ?   எரியற  வீட்ல  பிடுங்கறவரை  லாபம் 


10  ஒருத்தன்  தன்  வாழ்க்கைல  மோசமான  நிலைல  இருக்கும்போது  அவனை  ஏமாற்ற  நினைக்கற  உன்னை  மாதிரி   ஒருவனை   காமன்சென்ஸ்  உள்ள  எந்தப்பெண்ணும்  விரும்ப  மாட்டா 

11  எல்லாரும்  என்னை  விட  முன்னேறிப்போய்ட்டே  இருக்காங்க 

12  உனக்கு  மரியாதை  தேவை  எனில்  நீ  முதலில்  மரியாதைக்கு  உரியவனாக  நடந்து  கொளளனும், குறிப்பா  நீ  உடுத்தும்  உடைகள் 


13   கஷ்டப்பட்டு  உழைப்பவனை  இவங்க  முன்னேற  விட  மாட்டாங்க 


14   மேரேஜ்  என்பது  எப்போதும்  ஒரு  இன்வெஸ்ட்மெண்ட் தான்


15 என்னோட  பேச்சைக்கேட்டுட்டு  இருந்தவன்  இப்போ  சொந்தமா  சிந்திக்க  ஆரம்பிச்சுட்டான். இது அபாயம், ஏத்துக்கவே  முடியாது , 

16   ஆக்சிடெண்ட்  கேஸ்ல  கிடைக்கற  பணம்  தான்  பிளட்  மணி 

17 தப்பு  யார்  செஞ்சாலும்  தண்டனை  கண்டிப்பா  அவனுக்கு  கிடைக்கும், இதுதான்  கர்மா 

18  எல்லா  பெரிய  தலைவர்கள் ,   புகழ்  பெற்ற  தொழில்  அதிபர்கள் , பெரிய  மனிதர்கள்  எல்லாரும்  வாழ்க்கைல  பலரை  ஏமாற்றி  இருப்பாங்க 



 சபாஷ்  டைரக்டர்

1   சுராஜ்    வெஞ்சார  மூட்  ஆக்டிவிட்டி  பார்த்து  தொழிலைக்கற்றுக்கொள்ளும்  ஹீரோ  தன்னைப்பார்த்துத்தொழில் கற்றுக்கொள்ளும்  நண்பனை  பொறாமையாகப்பார்ப்பது  வாழ்க்கை  ஒரு  வட்டம்  என  காட்டுது 

2   ஹாஸ்பிடல்  ஓனரையே  மேரேஜ்  பண்ணாம  ஒதுக்கும்  நாயகி  நாயகனை  மேரேஜ்  பண்ண  ஏன்  செலக்ட்  பண்றா  என  தோழியிடம்  சொல்லும்  காட்சி  பெண்ணின்  தொலை  நோக்கு  சிந்தனையைக்காட்டுகிறது 


3  கொலை  செய்யப்பட்ட  சுராஜ்  பின்  ஹீரோவின் கண்  முன்  ஹாலுசினேசனாக  அவ்வப்போது  தோன்றி   எச்சரிப்பது  மிரட்டுவது  கே  பாலச்சந்தர்  டச்


4   சுராஜைக்கொலை  செய்ய  ஹீரோ  பயன்படுத்தும்  கொலைக்கான  டெக்னிக்  பயங்கரம் 


5 தன்னிடம்  இருக்கும்  அசிஸ்டெண்ட் டை  மாதம்  ரூ 30,000  சம்பளம்  தர்றேன்  என  இழுக்க  முயற்சிக்கும் ஆள்  வெளியே  சென்றதும் அடுத்த  மாதம்  முதல்  உனக்கு  சம்பளம்  இவ்வளவு  என  பேரம்  பேசும்  இடம்  வாவ்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் 

1   ஹாஸ்பிடல்  ஓனர்  வைத்திருக்கும்  சொத்து  சட்டப்பூர்வமானது, பாதுகாப்பானது , ஆனால்  அவரை  மேரேஜ்  பண்ணாமல்  மொள்ள  மாரியும், கேப்பமாரியும்  ஆன  ஹீரோ வை  மேரேஜ்  பண்ண  ஹீரோயின்  சொல்லும்  காரணம்.... அய்யய்யோ


2   திருமணம்  முடிந்து  அன்று  இரவே  முதல்  இரவு . அப்போது  மனைவியைத்தொடாமல்  நான்  இப்போ  பிஸ்னெஸ்  மூடில்  இருக்கேன்  என    ஹீரோ  கிளம்பி  வெளியே  செல்வது  செயற்கை 


3    ஹீரோ  பாம்பு  வளர்ப்பவர்  என  பலருக்குஜ்த்தெரியும், அப்படி  இருக்க  தொழில்  போட்டியாளரை  பாம்பு  கடிக்க  விட்டு  கொலை  செய்வது  ஆபத்தாச்சே?


4    மெடிக்கல்  ஷாப் ல  தூக்க  மாத்திரை  10  கேட்கும்  ஹீரோ  2 மட்டும் தான்  கிடைக்கும்  என்றவுடனே  தற்கொலை  திட்டத்தை  மாற்றுகிறார். டாக்டர்  பிரிஸ்கி9ரிப்சன்  சீட்  இல்லாமல்  ஒரு  கடையில் 2  மாத்திரைதான்  கிடைக்கும்  என்றால்  ஐந்து  வெவ்வேறு  கடைகளில்  2  வாங்கிக்கலாமே?


5   டொரீனோ  2  லிட்டர்  பாட்டிலில்  10  தூக்க  மாத்திரை  போட்டு  டிரைவர்  சீட்டில்  ஹீரோ  வைக்கிறார். அது  அரை  குறையாகக்கரைந்த  நிலையில்  சும்மா  100  மிலி  குடித்தால்  அவ்ளோ   தூக்கம்  வந்து  டிரைவர்  விபத்தை  ஏற்படுத்தும்  அளவு  போவாரா? 


6   தற்செயலாக  ஒரு  தப்பு  செய்து  அதில்  இருந்து  தப்பிக்க  ஒரு  ஹீரோ திட்டம்  போட்டால்  ஓக்கே , ஆனா  பர்பசாகவே  ஹீரோ  பலரை  பலவிதமாக  ஏமாற்றுவதும்  எல்லாவற்றிலும்  அவர்  வெற்றி  அடைவது  போலக்காட்டுவதும்  ஏன் ?  


 சி பி  எஸ்  ஃபைனல்  கமெண்ட் - படம்  ஸ்லோவாகப்போகும்  மெலோ டிராமாதான் , க்ரைம்  ட்ராமா, பொறுமை  வேண்டும்,  திரைக்கதை  வசனம்  ரசிக்க  வைக்கிறது  ரேட்டிங்  3 / 5 


டிஸ்கி - இந்த  மாதிரி  கதை  அமைப்புள்ள  பட்ங்களை  பார்க்கும்போது  எப்படி  எல்லாம்  நாம்  ஏமாற்றப்படலாம்  என  உணர்ந்து  நாம்  ஜாக்கிரதையாக  இருக்கவேண்டும், மாறாக  இப்படி  எல்லாம்  ஏமாற்றலாமா? என  தவறான  பாதையை  தேர்வு செய்யக்கூடாது


 
Mukundan Unni Associates
Mukundan Unni Associates.jpg
Theatrical release poster
Directed byAbhinav Sunder Nayak
Written byVimal Gopalakrishnan
Abhinav Sunder Nayak
Produced byDr. Ajith Joy
StarringVineeth Sreenivasan
Suraj Venjaramoodu
Sudhi Koppa
Tanvi Ram
Jagadeesh
Edited byNidhin Raj Arol
Abhinav Sunder Nayak
Music bySibi Mathew Alex
Production
company
Joy Movie Productions
Distributed byJoy Movie Productions
CountryIndia
LanguageMalayalam

Tuesday, January 17, 2023

AUTORICKSHAWKARANTE BHARYA (2022) மலையாளம் - ஆட்டோ டிரைவரின் மனைவி - திரை விமர்சனம் ( மெலோ டிராமா) @ அமேசான் பிரைம்


நாயகிக்கு  ஒரு  ஆட்டோ  டிரைவருடன்  திருமணம்  நடக்கிறது. ஆட்டோ  அவருக்கு  சொந்தமானதுதான், ஆனால்  அவர்  ஒரு சோம்பேறி. காலையில்  அவர்  எழுவதே  மதியம்  12  மணிக்குத்தான். அதற்குப்பின்  ஆட்டோ  ஸ்டேண்டில்  வண்டியை  நிறுத்தி  விட்டு  தூங்கி  விடுவார். மாலையில்  எழுந்து  நண்பர்களுடன்  அரட்டை . வீடு  திரும்பும்போது  வெறும்  கையுடன்  வருவார் 

அது  போக  நாயகியின்  கணவனுக்கு  சில  கடன்கள்  இருக்கிறது , திருமண  செலவுக்காக  வாங்கியது . கடன்காரன்  வீட்டுக்கு  வருவது  நாயகிக்குப்பிடிக்கவில்லை . தனக்கு  கட்டப்பட்ட  தாலியை  விற்று  கடனை  அடைக்கலாம்  என்றால்  அந்தத்தாலியும்  தங்கம்  இல்லை , கவரிங்  என்பது  தெரிய  வர  அதிர்ச்சி  ஆகிறாள் 


நாயகி  நாயகனிடம்  தெளிவாகசொல்லி  விடுகிறாள்  . எல்லாக்கடன்களையும்  அடைத்து  விட்டு  தனக்கு  தங்கத்தில்  தாலி  கட்டிய  பின்  தான்  நமக்குள்  தாம்பத்யம், அது  வரை  தனித்தனியாக  ஒரெ  வீட்டில்  இருப்போம்  என்கிறார்


ஆனால்  நாயகன்  தன்  குணத்தை  மாற்றிக்கொண்டதாகத்தெரியவில்லை . எனவே  டிரைவிங்  ஸ்கூல்  போய்  டிரைவிங்  கற்றுக்கொண்டு  நாயகி   ஆட்டோ  ஓட்டி  குடும்பத்தை  நடத்த  முடிவெடுக்கிறாள் , ஆனால்  நாயகன்  அதற்கு  ஒத்துக்கொள்ளவில்லை 


ஒருவழியாக நாயகி  ஆட்டோ  டிரைவர்  ஆகி  சம்பாதிக்கத்தொடங்கியதும்  கொஞ்சம்  கொஞ்சமாக  கடன்  அடைபடுகிற்து.  எதிர்  பாராத  விதமாக  நாயகி  ஒரு  விபத்தில்  ஒரு  குழந்தை  மீது  மோதி  விட  குழந்தை  இறக்கிறது


இதற்குப்பின்  கதையில்  ஏற்படும்  திருப்பங்கள்  தான்  திரைக்கதை 


ஆட்டோ  டிரைவராக  நாயகனாக  சுராஜ்  வெஞ்சாரமூட் த  கிரேட்  இண்டியன்  கிச்சன்  மூலம்  தமிழ்  ரசிகர்களின்  மனம்  கவர்ந்தவர்  இதில்  அப்படியே  சோம்பேறி  ஆளை  பிரதி  எடுத்திருக்கிறார். அவர்  மீது  எரிச்சல்  வருவதே  அந்த  கதாபாத்திரவடிவமைப்புக்குக்கிடைத்த  வெற்றி 


நாயகியான  ஆன்  அகஸ்டின். மொத்தப்படத்தையும்  இவர்  தான்  தாங்குகிறார் . கோபம்  , பொறூமை ,இயலாமை   என  பல  விதமான  முக  பாவங்களில்  நன்கு  நடிப்பை  வெளிப்படுத்தி  இருக்கிறார்


டீச்சர்  உட்பட  படத்தில்  வரும்  அனைத்துக்கதாபாத்திரங்களும்  உணர்ந்து  நடித்திருக்கிறார்கள் 


எம்  முகுந்தன்  எழுதிய  சிறுகதையை  திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்   ஹரி  குமார் .  அழகப்பனின்  ஒளிப்பதிவில்  இயல்பான  காட்சி  அமைப்புகள்  கண்களைக்கவர்கின்றன.அயூப்கானின்  எடிட்டிங்கில்  இன்னும்  ட்ரிம்  பண்ணி  இருக்கலாம்,பல  காட்சிகள்  மெதுவாக  நகர்கின்றன், அவுசப்பேச்சன்  தான்  இசை . கச்சிதம் 



 பார்க்கத்தகுந்த  இந்தப்படம்  அமேசான்  பிரைமில்  கட்டணம் செலுத்திப்பார்க்கும்  விதத்தில்  ரிலீஸ்  ஆகி  உள்ளது 

Monday, January 16, 2023

உடன்பால் (2022) தமிழ் - திரை விமர்சனம் ( பிளாக் ஹ்யூமர் காமெடி மெலோ டிராமா) @ ஆஹா தமிழ் ஓடிடி


2022 ஆம்  ஆண்டின்  இறுதியில் (30/12/2022)  வெளியாகி  அந்த  ஆண்டின்  கடைசிப்படம்  என்ற  பெருமையைப்பெறும்  இந்தப்படம்  ஆரோக்யமான  திரைக்கதையுடன்  அனைவரும்  ரசிக்கும்படி  பிளாக்  ஹ்யூமர்  காமெடி  மெலோ டிராமாவாக  ஆஹா தமிழ்  ஓ டி டி தளத்தில்  வெளியாகி  உள்ளது . வெளியான  சில  நாட்களிலேயே  1 கோடி  பார்வையாளர்களைப்பெற்ற  பெருமைக்குரிய  படம்  இது

நாயகன்  தன்  சொந்த  வீட்டில்  வசித்து வருபவர் , அவருக்கு  இரு  மகன்கள் , ஒரு மகள் .  மகனுக்கு  திருமணம்  ஆகி  ஒரு  மகன் , ஒரு  மகள் உண்டு . அவருக்கு  தொழிலில்  சில  நட்டங்கள். அதனால்  பணத்தேவை  ஏற்படுகிறது அம்மா  இறந்த  தினத்தன்று  சாமி  கும்பிட  வீட்டுக்கு  வரும்போது  அண்ணன், தங்கை  இருவரும்    அப்பாவிடம்  இந்த  வீட்டை  விற்று  விடலாம்  என  வற்புறுத்துகின்றனர் . 


ஆனால்  நாயகன்  அதற்கு  ஒத்துக்கொள்ளவில்லை.நம்மிடம்  இருப்பதே அந்த  ஒரு  வீடுதான். அதையும்  விற்று  விட்டால்  எங்கே  வசிப்பது  என  மறுத்து  விடுகிறார்


 அப்பா   பணி  செய்யும்  ஷாப்பிங்  காம்ப்ளெக்ஸ்  இடிந்து  விழுந்ததாக  தகவல்  வெளியாகிறது .  டி வியில்  செய்தி  வெளியிடுகிறார்கள் . விபத்தில்  பலி  ஆனவர்களுக்கு  அரசு  தலா  ரூ 20 லட்சம் இழப்பீடுத்தொகை  தருவதாக  சொல்கிறார்கள்  ஆரம்பத்தில்  அப்பாவுக்கு  என்ன  ஆச்சோ?  என  பதறும்  வாரிசுகள்  ஒரு  கட்டத்தில்  அப்பா இறந்திருந்தால்  அந்த  20  லட்சத்தை  யார் யார்  எவ்வளவு  பங்கு  போட்டுக்கொள்ளலாம்  என  விவாதிக்கிறார்கள்


ஆனால்  ஒரு  அதிர்ச்சி  திருப்பம் , அப்பா  உயிருடன்  திரும்பி  வந்து  விடுகிறார். இதனால்  வாரிசுகளுக்கு   வருத்தம்,  ஆனால்  வீட்டுக்கு  வந்தவர்  மாரடைப்பால்  மரணம்  அடைகிறார். 


இந்த  இறந்து போன  அப்பாவின்  டெட்  பாடியை  அந்த  இடிந்து  விழுந்த  கட்டிடத்தில்  கொண்டு போய்  வைத்து  விட்டால்  இழப்பீடு  பணம்  கிடைக்குமே? என  திட்டம்  போடுகிறார்கள் , அதற்காக  அவர்கள்  படும்  பாடுதான்  மீதி  திரைக்கதை ., க்ளைமாக்ஸில்  ஒரு  எதிர்பாராத  ட்விஸ்ட்டும்  உண்டு 


சீரியசான  கதையைக்காமெடியாகக்கொண்டு  போவது  கத்தி  முனையில்    நடப்பது  போல  , அந்த  வித்தையைக்கச்சிதமாக  செய்திருகிறார்  இயக்குநர்  கார்த்திக்  சீனிவாசன்


 நாயகனாக  நகைச்சுவை  நடிகர்  சார்லி  குணச்சித்திர  நடிப்பில்  மிளிர்கிறார். அவர்  போக  மகளாக  வரும்  காயத்ரி , மகனாக  வரும் லிங்கா , மருமகளாக  வரும் அபர்ணதி  அனைவருமே  சிறப்பாக  நடித்திருக்கிறார்கள் . காமெடி  டிராக்கிற்காக  வரும்  விவேக்  பிரசன்னாவும்  சிரிக்க  வைக்கிறார்.

பெரும்பாலான  காட்சிகள் ஒரு  வீட்டுக்குள்ளேயே  நடப்பதால்  ஒளிப்பதிவாளருக்கு  சவாலான  வேலை . அதை  கச்சிதமாகச்செய்திருக்கிறர்  மதன்  கிறிஸ்டோபர். சக்தி  பாலாஜியி  பின்னணி  இசை  கச்சிதம் , பிஜிஎம்மில்  கலகலப்பு  கூடுதல் 


இன்னைக்கு  செத்தா  நாளைக்கு  பால்  என்பது  பழமொழி , இன்னைக்கு  செத்தா  இன்னைக்கே  கை  மேல்  பலன் , உடன்  பால்  என்பது  புது  மொழி 


ரேட்டிங் 3/5 

Sunday, January 15, 2023

ALLI (2022) அல்லி - மலையாளம் - திரை விமர்சனம் ( த்ரில்லர்) @ பில்மி ஓடிடி

a


spoiler alert

 ஒரு  ஃபார்ஸ்ட்  ஏரியாவில்  ஊருக்கு  ஒதுக்குப்புறமான  ஒரு  இடத்தில்  சிறிய  வீட்டில்  நாயகியும், அவள்  அப்பாவும்  குடி  இருக்கின்றனர். வீட்டுக்கு  அருகில்  உள்ள  கோயில்  பூசாரி  ஒருவ்ர்  நாயகி  மீது  பிரியப்பட்டு  தன்  காதலை  நாயகியிடம்  தெரிவிக்கிறார்.     எனக்கு  சம்மதம், ஆனால்  அப்பாவிடம்  பேசுங்கள்  என  நாயகி  சொல்லி  விடுகிறார். அப்பாவிடம்  பேசி  சம்மதம்  வாங்கிய  பூசாரி  திருமணம் செய்ய   சில  நாட்கள் அவகாசம்  கேட்கிறார். அவர்  ஊருக்குப்போய்  அம்மாவிடம்  தகவல்  சொல்லி  பின்  தனி  வீடு  வாடகைக்கு  எடுத்து  பின்  ஏற்பாடுகளைச்செய்ய  வேண்டும் 

நாயகியின்  தோழி  ஒருவர்  நீர்  நிலையில்  குளிக்கும்போது  இரு  ஆண்கள்  அவரிடம்  தகாத  முறையில்  நடக்கப்பார்க்க   நாயகி  அவர்களை  தட்டிக்கேட்கிறாள். இதனால்  அப்போதைக்கு  அவர்கள்  அங்கிருந்து  சென்று  விட்டாலும்  நாயகி  மீது  ஒரு  கண்  வைக்கின்றனர் . பழி  தீர்க்க  சமயம்  பார்த்துக்  காத்திருக்கின்றனர் 


 ஒரு  நாள்  நாயகியின்  அப்பா  நன்றாக  குடித்து  விட்டு  வீட்டுக்கு  வருகிறார். அன்று  இரவு  கதவு  தட்டும்  சத்தம்  கேட்டு  யார்  என  நாயகி  எட்டிப்பார்த்தால்  அந்த  வில்லன்கள்  இருவர். உடனே  அப்பாவை  எழுப்பப்பார்க்கிறார். ஆனால்  அவர்  போதையில் இருப்பதால்  எழவில்லை இதனால்  நாயகி  வீட்டின்  பின்  கதவு  வழியாக தப்பி  காட்டுக்குள்  சென்று  விடுகிறாள் 


 அடுத்த  நாள்  காலையில்  அப்பா  மனம்  வருந்தி    வீட்டின்  முன் , பின்  வாசல்  வழிகளை  அதிக  பாதுகாப்போடு  பலப்படுத்துகிறார் விரைவில்  மகளை அந்த  பூசாரிக்கு  மணம்  முடித்துக்கொடுத்து  விட்டால்  நிம்மதி  என்று நினைக்கிறார்


சில  நாட்கள்  கழித்து  மீண்டும்  நாயகி  ஒரு  நீர்  நிலையில்  குளிக்கச்செல்லும்போது  அந்த  வில்லன்கள்  இருவரும்  அவளை  வழி  மறிக்கின்றனர் . நாயகி  மீண்டும்  காட்டுக்குள்  தப்பி  ஓடுகிறாள் . இந்த  முறை  அவர்கள்  இருவரும்  நாயகியைத்துரத்தி  காட்டுக்குள்  அடி  எடுத்து  வைக்கின்றனர் . நாயகி  அவர்கள்  இருவரிடம்  இருந்து  தப்பித்தாரா? என்பதஒ  பரபரப்பான  மீதி  திரைக்கதையில்   காணலாம் 


நாயகி  அல்லியாக  மீனா குரூப்  பக்கத்து  வீட்டுப்பெண்  போன்ற   யதார்த்தமான  தோற்றத்தில்  வருகிறார். அதிக  ஒப்பனை  இல்லாத  அவர்  முகம்  கச்சிதம்


நாயகியின் அப்பாவாக  சஜி  வெஞ்சாரமூட்  நடித்திருக்கிறார், சிறந்த  குணச்சித்திர  நடிப்பு 


ஜெயந்தாஸ்   ஒளிப்பதிவில்  வனத்தின்  கொள்ளை  அழகை  எல்லாம்  கண்  முன்  பிடித்து  ஓவியம்  ஆக்குகிறார் அருண்  தாஸ்  எடிட்டிங்கில்  கச்சிதமாக  ஒன்றே  முக்கால் மணி  நேரம்  ஓடும்  விதமாக ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்

திரைக்கதை எழுதி  இயக்கி  இருப்பவர்   ராஜ் குமார்.   தளத்தில் , filmeஓ டி டி யில்  காணக்கிடைக்கிறது 

ரேட்டிங்  2 / 5