Monday, December 19, 2022

DOCTOR G (2022) (ஹிந்தி) - திரை விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி மெலோ டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்


கொரானாவின் ஆதிக்கம் 2020ல் தான்  இந்தியாவில்  தொடங்கியது, ஆனால்   ஆயுஷ்மான் குரானாவின்  ஆதிக்கம் 2012ல்  விக்கி டோனார் படத்தில்  தொடங்கியது. மாறுபட்ட காமெடி  மெலோ டிராமா,  இது  தமிழில்  தாராளப்பிரபு  என  ரீமேக்  ஆனது /2018 ல்  ரிலீஸ்  ஆன  அந்தாதூன்  த்ரில்லர்  மூவி  இந்தியாவிலேயே  அதிக  மொழிகளில்    ரீமேக்  செய்யப்பட்ட  இரண்டாவது  படம்  என்ற  பெருமை  பெற்றது. தமிழில் அந்தகன்  என  பிரசாந்த்  நடித்து  வெளி  வர  இருக்கும்  படம் ,அதே  2018ல் ரிலீஸ்  ஆன  பதாய்  ஹோ  தான்  சத்யராஜ்- ஆர் ஜே  பாலாஜி   நடிப்பில்   வீட்ல விசேஷம்  என தமிழில் ரீமேக்  ஆனது  2019ல் வந்த  ஆர்ட்டிகிள்  15  எனும்  க்ரைம்  இன்வெஸ்ட்ஃபிகேஷன்  ஃபிலிம்  தான் உதய நிதி  நடிக்க  நெஞ்சுக்கு  நீதி  ஆனது   ஆயுஷ்மான் குரானா  பட்ங்கள்  என்றாலே  வித்தியாசமான  சப்ஜெக்ட்  இருக்கும்  என்ற  நம்பிக்கை  பிறந்தது 

நாயகனுக்கு  ஆர்த்தோ  டாக்டர்  ஆகத்தான்  ஆசை , ஆனால்  அவருக்குக்கிடைப்பது என்னவோ  கைனகாலஜிஸ்ட்  சீட் தான். அந்த  பேட்ஜில் எல்லோரும்  பெண்கள் , இவர்  மட்டும்  தான்  ஆண். அதனால்  எல்லாரும்  அவரைக்கலாய்க்கிறார்கள் . 


நாயகனுக்கு  பர்சனல்  லைஃப்ல  ஆல்ரெடி  ஒரு  பிரேக்கப்  ஆகப்போகும்  காதல்  உண்டு .  அவரது  காதலியிடம்  அடிக்கடி  இப்போ  யார்  கிட்டே  பேசிட்டு  இருக்கே?  போன்ற  பொசசிவ்னெஸ்  சந்தேகங்களால்  பிரேக்கப்  நடக்கிறது


இப்போ  காலேஜில்  ஒரு  பெண்ணுடன்  நட்பு  ஏற்படுகிறது,, ஆனால்  அவருக்கு  ஆல்ரெடி  ஒரு  காதலன்  இருக்கிறான், இருந்தாலும் இந்தப்பெண்  எப்போதும்  நாயகனுடன்  சுற்றிக்கொண்டு  இருப்பதால்  அவனுக்கு சந்தேகம்  வருகிறது . ஒரு  சந்தர்ப்பத்தில்  நாயகன்  அந்தப்பெண்ணுக்கு  இதழ்  முத்தம்  தந்து  விடுகிறான், அப்போதைக்கு  அதற்கு  உடன் பட்டாலும்  அடுத்த  நாளே  அவள்  நாம்  இருவரும்  நண்பர்கள்  மட்டுமே, அந்த  முத்த  சம்பவத்தை  மொத்தமாக  மறந்து  விடு  என்கிறாள்


நாயகனுக்கு  ஒரு  நண்பன்  உண்டு, திருமணம்  ஆனவன், ஆனாலும்  அவனுக்கு திருமணம்  தாண்டிய  ஒரு  உறவு  உண்டு . அவள்  மைனர்  பெண். அவள்  கர்ப்பம்  ஆகிறாள் , கருவைக்கலைக்க  வேண்டி  நாயகன்  உதவியை  நாடுகிறான், நேரடியாக  அவன்  அவள்  கூட  ஹாஸ்பிடல்  போனால்  அவன்  பெயர்  ரிப்பேர்  ஆகி  விடும், அதனால்  நாயகன்  பொறுப்பில்  அவளை  விட்டு விடுகிறான்


இந்த மூன்று  பெண்களும்  நாயகன்  வாழ்வில்  ஏற்படுத்திய  பாதிப்புகள்  என்ன ? என்பதே  திரைக்கதை 


 மேலோட்டமாகப்பார்க்கும் போது  மம்முட்டி நடித்த  அழகன்  படத்தின்  கதை  போல தோன்றினாலும் இதன்  திரைக்கதை  புதியது. 


வசூல்  ராஜா  எம் பி பிஎஸ்  படத்துக்குப்பின்  முழுக்க  முழுக்க  டாக்டர்கள் , ஹாஸ்பிடல்கள் , நோயாளிகள்  சம்பந்தப்பட்ட  படமாக  இது  அமைகிறது 


நாயகன் உதய்  ஆக  ஆயுஷ்மான்  குரானா  அபாரமான  நடிப்பை  வழங்கி  இருக்கிறார். இவரது  கெட்டப்  மைக்கேல்  மதன காமராஜன்  படத்தில்  வரும்  பணக்கார  மதன்  கேரக்டர்  போல  இருக்கிறது, சில  இடங்களில்  பேசும்  படம்  கமல்  கெட்டப்  போலவும்  உள்ளது . முதல்  காதலியிடம்  பொசசிவ்  ஆக  இருந்து  பிரேக்கப்  ஆகும்போதும்  சரி , இரண்டாவது  காதலியுடன்  பேசும்போதும்  சரி  அனாயசமாக  நடிக்கிறார். நண்பனின்  காதலியுடன்  இருக்கும்பொழுது  பொறுப்பான  அண்ணன்  போல  நடந்து  கொள்வது  சிறப்பு


நாயகனின்  சீனியர்  ஆக  டாக்டர்  ஃபாத்திமாவாக  ரகுல் ப்ரீத்தி  சிங்  கச்சிதமான  நடிப்பு . ஒரு  கட்டத்தில்  உணர்ச்சி  வசப்பட்டு  முத்தத்துக்கு  ஒத்துழைத்தாலும்  அடுத்த  நாளே  பதறிப்போய்  என்க்கு  ஆல்ரெடி  எங்கேஜ்   ஃபிக்ஸ்  ஆகி  விட்டது   என  சொல்லும் இடத்தில்  துடிப்பான  நடிப்பு 


நாயகன்  பணி  புரியும்  ஹாஸ்பிடலில்  ஹெச் ஓ டி  ஆக  ஷெஃபாலி ஷா  கம்பீரமான  நடிப்பு , டெல்லி  கிரைம்  வெப்  சீரிசில்  கமிஷனராக  அசத்தியவ்ர்தான் . இவரது  கண்களே  பாதி  நடிப்பை  வழங்கி  விடுகிறது , இவரது  உடல்  மொழி  கனகச்சிதம் 


நாயகனின்  மூன்று  தோழிகளுடனான  சம்பவங்களும் , ஹாஸ்பிடலில்  நடக்கும்  காமெடி  சம்பவங்களும்தான்  மெயின்  கதை  என்றாலும்  கிளைக்கதையாக  வரும்  நாயகனின்  அம்மாவின்  காதல்  கதை  அற்புதம் 


நாயகனின்  அம்மாவாக ஷீபா  ஷத்தா அட்டகாசமான  நடிப்பு ., சோசியல்  மீடியாக்களில்  அப்டேட்டாக  இருப்பது  என்ன?  தன்  ஃபேஸ்  புக்  நண்பருடன்  வீட்டில்  பார்ட்டி  கொண்டாடும்போது  மகன்  வந்து  முகம்  மாற  நண்பரை  அன் ஃபிரண்ட்  செய்வ்து  என்ன?  பின்  மகன்  மனம்  மாறியதும்  தாங்க்ஸ்  சொல்லும்  தொனி  என்ன? மொத்தப்படத்தின்  சுவராஸ்யத்தையும்  அசால்ட்டாக  ஓவர்  டேக்  செய்து  விடுகிறார்


நாயகனின்  முதல்  டெலிவரி  பார்க்கும்  காட்சியில்  இயக்குநர்  டச்  தெரிகிறது . முதன்  முதலாக  இரட்டைக்குழந்தைக்கு  டெலிவரி  பார்க்கும்போது  நாயகன்  முகத்தில்  தோன்றும்  பரவ்சம்  அட போட  வைக்கிறது நாயகனுக்கு  எதிராக   ஒரு  புகார்  வரும்போது   அவர்  பதை  பதைப்பது  திரைக்கதைக்கு  நல்ல  வலு  சேர்க்கிறது 


  இயக்குநர்   ஒரு  பெண் .  அனுபுதி கஷ்யாப்.  கச்சிதமாக  காட்சிகளை  அடுக்கி  கதை  சொல்லும்  பாணி  நன்றாக  உள்ளது . ஓப்பனிங்  காட்சிகளில்  நாயகனை  ரேக்கிங்  செய்யும்  சீனியர்கள்   சம்பந்தப்பட்ட  காட்சிகளில்  மட்டும்  கொஞ்சம்  சென்சார்  செய்திருக்கலாம்

கேதான்  சவ்தா  இசையில்  எட்டு  பாடல்கள் , எல்லாம்  சின்னச்சின்ன  பாடல்களே. பின்னணி  இசை  கனகச்சிதம் பிரேர்னா  கைகல்  எடிட்டிங்கில்  கச்சிதமாக  இரண்டு  மணி  நேரத்தில்  கட்  செய்து  இருக்கிறார்கள் 


குடும்பத்துடன்  பார்க்கத்தகுந்த  ஒரு  ஃபீல்  குட்  மூவி 


சபாஷ்  டைரக்டர்


1  திருடா  திருடா  க்ளைமாக்ஸில்  இயக்குநர்  மணிரத்னம்  ஒரு  புத்திசாலித்தனமான  எஸ்கேப்  நடத்தினார். ஹீரா  யாருக்கு  ஜோடி ?   என்ற  கேள்விக்கு  நேரடியாக  முடிவைச்சொல்லாமல்   ஹீரோயின்  இருவரையும்  துரத்துவது  போல  முடித்திருந்தார், அதே  போலத்தான்  இதன்  க்ளைமாக்சும்


2  அ,ம்மா  வேறொரு  ஆண்  நண்பருடன்  இருப்பதைப்பார்த்து  கோபப்படும்  நாயகன்  பின்  மனம்  மாறி   அம்மாவிடம்  சாரி  கேட்பதும்  அந்த  நண்பரிடம்  அம்மாவை சமாதானப்படுத்த  ஐடியா   தருவதும்  கச்சிதம்


3   நாயகனின்  முதல்  காதல்  பிரேக்கப்பை  காட்சியாக  விளக்காமல்  வசனமாகவே  விளக்கிய்து, இந்த  புத்திசாலித்தனத்தை  மணிரத்னம்  தன்  பம்பாய்  படத்தில்  லவ்  போர்சனைக்குறைத்து  ஓப்பனிங்கில்  டேக்  அஃப்  ஆவது  போல  காட்டி  இருந்தார்


4  மகப்பேறு  மருத்துவமனைக்காமெடிகள்  எல்லாம்  இந்திய  சினிமாவுக்கே  புதுசு 


ரசித்த  வசனங்கள் 


1   என்ன  லட்டு  சுட்டு  இருக்கே?   ஒரு  லட்டு  கூட  வட்டமாவே  இல்லை


 ல்ட்டு  ஸ்வீட்டா  இருந்தா  போதாதா?  ரவுண்டா  வேணுமா?


2  ஒரு  விவாதத்தில்  யார்  குரலை  உயர்த்துகிறார்களோ  அவங்க  தோற்கப்போறாங்கனு  அர்த்தம் 


3    ஒரு    பெண்  நோயாளியை  ஆண்  டாக்டர்  செக்கப்  செய்யனும்னா  பக்கத்துல  ஒரு  லேடி  நர்ஸ்  இருக்கனும், இது   ரூல் 


4  டாக்டர், எனக்கு  ஊசின்னா  அவ்ளோ  பயம் 


  ஏம்மா, இவ்ளோ  சின்ன  ஊசிக்கு   பயப்படறியே, ஹஸ்பெண்ட்  அவ்ளோ  பெரிய  ஊசி  போட்டப்ப  பயப்படலையே? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1   ஒரு  மைனர்  பெண்ணை  ஒரு  டாக்டர்  கருக்கலைப்புக்காக  கூட்டிட்டுப்போறார். ரகசியமா  கார்ல  கூட்டிட்டுப்போகாம  இப்படியா  பைக்ல  கூட்டிட்டுப்போவாங்க ? 


2   டைம்  தாண்டிடுச்சு , இனி  அபார்ஷன்  டேஞ்சர்னு  தெரிஞ்சும்  டாக்டர் , அந்த  சின்னப்பொண்ணு  இருவருமே  பயமே  இல்லாம  எப்படி  ரிஸ்க்  எடுக்கறாங்க ? 


3   நாயகனின்  அம்மாவின்  ஃபேஸ்புக்  நண்பர்  அவ்ர்  வீட்டில் தனியாகத்தான்  இருக்கிறார் . அங்கே  சந்திக்காமல்  மகன்  இருக்கும்  தன்  வீட்டில்  சந்திப்பது  ரிஸ்க் இல்லையா? 



சிபிஎஸ்   ஃபைனல்  கமெண்ட்  -  ஆயுஷ்மான்  ரசிக்ர்கள்  அவசியம்  கான  வேண்டிய  காமெடி  கம் செண்ட்டிமெண்ட்  ஃபிலிம்   ரேட்டிங்  3 / 5 


Doctor G
Doctor G film poster.jpg
Theatrical release poster
Directed byAnubhuti Kashyap
Written bySumit Saxena
Saurabh Bharat
Vishal Wagh
Anubhuti Kashyap
Story bySaurabh Bharat
Vishal Wagh
Produced byJunglee Pictures
Starring
CinematographyEeshit Narain
Edited byPrerna Saigal
Music byKetan Sodha
Production
company
Distributed byAnand Pandit Motion Pictures
PVR Pictures
Viacom18 Studios
Release date
  • 14 October 2022
Running time
124 minutes[1]
CountryIndia
LanguageHindi
Budget₹35 crore[2]
Box officeest. ₹41 crore[3]

Sunday, December 18, 2022

விட்னஸ் (2022) (தமிழ்) -திரை விமர்சனம்( கோர்ட் ரூம் டிராமா) @ சோனி லைவ் ஓடி டி


 நாயகி ஒரு  துப்புறவுப்பணியாளர். ஒற்றைத்தாய்.(சிங்கிள் மதர்) அவருக்கு  கல்லூரி  இறுதி ஆண்டில்  படிக்கும்  மகன்  உண்டு கணவன்  இறந்து விட்டதால்  தன் ஒரே  ஆதரவான  தன்  மகனைப்படிக்க  வைத்துப்பெரிய  ஆள் ஆக்க  வேண்டும்   என்ற  அவர்  கனவு  கானல்  நீர்  ஆகிறது

ஒரு  அபார்ட்மெண்ட்டில்  செஃப்டிக்    டேங்க்   அடைத்து  விடுகிறது. அதை  நீக்க  நாயகியின்  மகன்  நிர்ப்பந்திக்கப்படுகிறான். மனிதக்கழிவுகளை  மனிதனே  அகற்ற  சட்டத்தில்  தடை  இருந்தும்  நடைமுறை வாழ்வில்    அது  நீடிக்கிறது. விஷ வாயு தாக்கி  மகன்  இறக்கிறான்


அபார்ட்மெண்ட்  செகரட்டரி  இந்த  கேசை  நைசாக  ஒன்றும்  இல்லாமல்  ஆக்க  முயற்சி  செய்ய  நாயகி  ஒரு  கம்யூனிஸ்ட்  தோழரின்  உதவியோடு  வழக்கு  தொடுக்கிறாள் 


நாயகியின்  மகன்  குடி  போதையில்  இருந்ததால்  மூச்சுத்திணறி இறந்ததாக  பொய்யாக  போஸ்ட்  மார்ட்ட்ம்  ரிப்போர்ட்  ரெடி  ஆகிறது


அந்த  அபார்ட்மெண்ட்டில்  குடி  இருக்கும்  ஒரு  பெண் நாயகியின்  மகனின்   தோழி . அவளுக்கு  நீச்சல்  பயிற்சியாளராக  இருந்தவன்  . அபார்ட்மெண்ட்டில்  இருக்கும்  சிசிடிவி  கேமரா  க்ளிப்பிங்க்ஸ்  அந்தப்பெண்ணின்  மூலம்  கிடைக்கிறது 

அந்த  சாட்சியை    வைத்து  நாயகி  கோர்ட்டில்  அந்தக்கேசை  வென்றாரா? என்பது  தான்  திரைக்கதையின்  சாராம்சம் 


நாயகியாக  ரோகினி  அந்தப்பாத்திரமாகவே  வாழ்ந்திருக்கிறார் கே பாக்யராஜின்  பவுனு  பவுனு தான்  படத்துக்குப்பின்  அவருக்குக்கிடைத்திருக்கும்  அழுத்தமான  பாத்திரம்  இது . உயிர்ப்புடன்  வாழ்ந்திருக்கிறார். சூப்பர்வைசர்  தன்னிடம்  தகாத  முறையில்  பேசும்போது  பளார்  என  அறை  கொடுக்கும்போது  அவரது  துணிச்சல்  அசத்துகிறது 


சாட்சியை கொண்டு  வந்து  தரும்  அபார்ட்மெண்ட்  பெண்ணாக  ஷ்ரத்தா  ஸ்ரீநாத்  கச்சிதமான  நடிப்பு . நேர்  கொண்ட  பார்வை  படத்துக்குப்பின்   வலுவான  கதாபாத்திரம்  அவருக்கு . அபார்ட்மெண்ட்  வாசிகள்  அனைவரும்  அவரை  எதிர்க்கும்போது  தனி  ஒரு  ஆளாய்  துணிச்சலாய்  எதிர்ப்பதெல்லாம்  பிரமாதம். அம்மாவுடனான  உரையாடலில்   நெகிழ  வைக்கிறார்


கேசை  ஏற்று  நடத்தும்  வக்கீலாக  சண்முகராஜன் அசத்தலான  வாதங்கள். வழக்கமாக  அவ்ரை வில்லனாகவே  பார்த்து  இதில்  நல்லவராகப்பார்ப்பதில்  மகிழ்ச்சி 


ஒரு  காட்சியில்  வந்தாலும்  உயர்  அதிகாரியாக  வரும்  அழகம்பெருமாள்  தெனாவெட்டாக  நடித்திருக்கிறார்


மகனாக  வரும் ஜி  செல்வாவின்  நடிப்பு  கனகச்சிதம்


ஜட்ஜ்  ஆக  நடித்தவர்  கலக்கி  விட்டார் . நா தான்  கேஸ்  கொடு  எனும்  மலையாளப்படத்தில்  இப்படித்தான்  ஒரு  ஜட்ஜின்  நடிப்பு  மிகவும்  சிலாகிக்கப்பட்டது


ரமேஷ்  தமிழ்  மணியின்  இசையில்  பாடல்கள்  ஓக்கே  ரகம், பின்னணி  இசை  கச்சிதம்  பிலோமின்  ராஜ்  எடிட்டிங்கில்  கச்சிதமாக  2  மணி  நேரத்தில்  கட்  செய்திருக்கிறார்

ஒளிப்பதிவு , இயக்கம்  இரண்டையும்  செய்திருப்பவர்  தீபக்,  சமூக  விழிப்புணர்வுக்கான  கதையை  துணிச்சலாக  கோர்ட்  ரூம்  டிராமாவாக படைத்திருக்கிறார்.படத்தின்  க்ளைமாக்ஸ்  எதிர்பாராத  ஒன்று., அது  பற்றி  இரு  வேறு  கருத்துகள்  இருக்கக்கூடும், ஆனால்  இதுதான்  நிதர்சனம்


நாயகி  தன்  கடைசி  மாத  ச்ம்பளம் , பிஎஃப்  பணத்துக்காகப்போராடும்  காட்சி  தீர்ப்பு  வரும்  நேரத்தில்  காட்டப்படுவதால்  சரியாக அந்தக்காட்சியுடன்  ஒன்ற  முடியவில்லை , அதே  போல்  ஷ்ரத்தா  ஸ்ரீநாத்  தன்  அம்மாவின்  ஃபிளாஸ்பேக்  கதை  பற்றி  அம்மாவிடம்  உரையாடும்  காட்சி  மெயின்  கதைக்கு  தேவைப்படாதது


அனைவரும்  காண வேண்டிய  சமூக  விழிப்புண்ர்வுப்படம். சோனி  லைவ்  ஓடி டி  யில்  காணக்கிடைக்கிறது 


ரசித்த  வசனங்கள் 

1  பீச்சுக்குப்போனியே? என்ன  விசேஷம் ?


 கடல்  மட்டும்  தான்  காசு  கொடுக்காம  பார்க்க  முடியுது 


2   எப்போ  அவங்க  வருமானம்  தடை  படுதோ  அப்போதான்  நாம  அவங்க  கண்ணுக்குத்தெரிவோம்


3  செஃப்டிக்  டேங்க்  க்ளீன்  பண்ண  எக்யூப்மெண்ட்ஸ்  உள்ள  வண்டி  வ்ந்தா  5000  ரூபா  செலவு  ஆகும்,  தனி ஆள்னா  1500 ரூபா  செல்வில்  வேலையை  முடிச்சுடலாம்’’ 


அடப்பாவிகளா,  3500  ரூபா   மிச்சம்  பிடிக்க  ஒரு  உயிரைப்பலி  கொடுத்துட்டீங்களா? 


4    நாங்க  பண்ண  வேண்டிய  வேலைகளை  எல்லாம்  நீங்களே  பண்ணிட்டா  அப்புறம்  போலீஸ்  நாங்க  எதுக்கு ?


 யாராவது  ஒருத்தர்  வேலை  செய்யனுமில்ல? 


5  என்னம்மா  உன்  வாய்  ரொம்ப  நீளுது ?

 உன்  கை  நீளும்போது  என்  வாய்  நீளக்கூடாதா?


6  தனக்கான  பொறுப்பைத்தட்டிக்கழிக்க  அடுத்தவங்க  மீது  பழிபோடும்  அதிகாரிகள்  தான்  இங்கே  அதிகம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1   சிசிடிவி  கேமராவில்  பதிவான  தன்  மகன்  சம்பந்தப்பட்ட  காட்சி  பற்றி  நாயகி  ரோகினி  ஆர்வமாகக்கேட்கும்போது  ஷ்ரத்தா    தன்  மொபைல் ஃபோனில்  மெமரி  கார்டில்  ஏற்றி  ஏன் அதைக்காட்டவில்லை ? அதே  போல்  வக்கீல்  ஆஃபீசில்  அதை ஒப்படைக்கும்போது  அவராவது    லேப்டாப்பில்  தான்  பார்த்த  காட்சியை  அவருக்குக்காட்டி  இருக்கலாம் 


2  அப்போலோ  ஹாஸ்பிடல்  அட்மின்க்கு  இருக்கும்  அறிவு  கூட  அப்பார்ட்மெண்ட்  செகரட்ரிக்கு  இல்லை ., பிரச்ச்னை  வந்ததும்  அந்த  சிசிடிவி  ஃபுட்டேஜை  அழித்திருக்கலாம், அல்லது  இது   கட்ந்த  சில  நாட்களாக  ரிப்பேர்  என  சாணக்கியத்தனமாய்  பதில்  சொல்லி  இருக்கலாம் 


3   அபார்ட்மெண்ட்  வாசிகள்  ஷ்ர்த்தாவை  காலி  பண்ணிடுங்க  என  சொல்லாமல்  உங்க  அபர்ட்மெண்ட்டை  யாருக்காவது  விற்று  விட்டு  நீங்க  கிளம்புங்க  எனத்தானே  மிரட்டனும் ? அவர்  என்ன  வாடகைக்கா  இருக்கார் ?  காலி  பண்ண ?


4  நாயகியின்  மகன்  தனக்கு  தோழன் ,  நீச்சல் பயிற்சியாளன்  என்பதை  ஷ்ரத்தா   சொல்லும்போது   நமக்கு  சரியாக  கனெக்ட்  ஆகவில்லை . முதலிலேயே  அந்தக்காட்சிகளைக்காட்டி  இருக்க  வேண்டும். அதே  போல   ஓப்பனிங்  சீனிலேயே  மகன்  இறப்பதாகக்காட்டும்  முன்  மகனைப்பற்றி  சில  காட்சிகள்  காட்டனும், அப்போதான்  நமக்கு  அந்த  கேரக்டர்  இறக்கும்போது  ஒரு  பரிதாபம்  பிறக்கும் . இல்லாவிட்டால்  யாரோ இறந்துட்டாங்க, நமக்கு  என்ன  ? என்றுதான்  ஆடியன்சுக்கு  தோன்றும் 


 சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  - ட்விஸ்ட்  அண்ட்  டர்ன்ஸ்  எல்லாம்  எதுவும்  இல்லாத  ஆனால்  சமூக  விழிப்புணர்வு  ஊட்டக்கூடிய  கோர்ட்  ரூம்  டிராமா ., ஆனந்த  விகடன்  மார்க்  44    ரேட்டிங்  3 / 5 

Saturday, December 17, 2022

YASODA (2022) ( TELUGU)-யசோதா ( தமிழ்) - திரை விமர்சனம் ( மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம்


 ஒரு  அழகிப்போட்டில ஒரு  மினிஸ்டர்  சீஃப்  கெஸ்ட்டாக கலந்துகொள்கிறார்.போட்டியில்  கலந்து  கொள்ள  வந்த  அழகிகளில் ஒருவரைப்பார்த்து  அவர்  மீது  ஆசைப்படுகிறார். அதே  அழகி  மீது  ஒரு சயிண்ட்டிஸ்ட்டும்  ஆசைப்படுகிறார். ஆனால்  அழகி  தேர்ந்தெடுத்தது  மினிஸ்டரை, காரணம்  பணம்


சில  மாதங்களில்  திடீர்  என  ஏதோ  நோயினால்  அந்த  அழகி  ஐ  பட  நாயகன்  விக்ரம்  போல  சின்ன  வயதிலேயே  முகம்  மூப்படைந்து  போகும்  வியாதிக்கு  ஆளாகிறாள், அழகு  போனதால்  மினிஸ்டர்  அந்த  அழகியை  விட்டு  விலக  முற்படுகிறார், ஆனால்  அந்த  சயிண்ட்டிஸ்ட்  அழகியை  பழையபடி  அழகாக்க  தன்  ஆராய்ச்சி  மூலம்  முயற்சி  செய்து  வெற்றி  அடைகிறார்


இந்த  அழகாக்கும்  ஃபார்முலாவை  வைத்து  பணம்  சம்பாதிக்க  அழகி , மினிஸ்டர் , சயிண்ட்டிஸ்ட்  மூவரும்  கூட்டணி  சேருகிறார்கள்.அந்த  ஆராய்ச்சிக்கு  முக்கியத்தேவை  கர்ப்பத்தில்  இருக்கும்  சிசு. அந்த  சிசுவின்  பிளாஸ்மா  செல்களை  வைத்துத்தான்  அழகாக்கும்  ஃபார்முலா  வெற்றி  அடையும் 


 அதற்காக  அவர்கள்  செய்யும்  திட்டம்தான்  வாடகைத்க்தாய்  திட்டம்., அதன்படி  ஏழைப்பெண்களுக்கு  அதிக  பணம்  தருவதாக  ஆசை காட்டி  வாடகைத்தாயாக  பணிபுரிய  சம்மதிக்க  வைத்து  அவர்களை  உபயோகிக்க  முடிவு  செய்கிறார்கள் 


 நாயகி  ஒரு  போலீஸ்  ஆஃபீசர்  ஆக  முயற்சி  செய்பவர், அவருக்கு  ஒரு  தங்கை  உண்டு . போலீஸ்  ஆஃபீசர்  ஆக  லஞ்சமாக  ஏகப்பட்ட  பணம்  கேட்கிறார்கள். அந்தப்பணத்துக்காக  நாயகியின்  தங்கை  வாடகைத்தாய்  ஆக  சம்மதிக்கிறாள்நாயகிக்கே  தெரியாமல்  அவள்  தங்கை  வாடகைத்தாய்  ஆக  அந்த  ஹாஸ்பிடல்  செல்கிறாள் 


காணாமல்  போன  தங்கையைத்தேடி  நாயகி  தானும்  வாடகைத்தாய்  ஆக  உள்ளே  நுழைகிறாள். அந்த  ஹாஸ்பிடலில்  நுழைந்து  அவர்  எப்படி  தன்  தங்கையை  காப்பாற்றி  வில்லன்கள், வில்லியை  சட்டத்தின்  பிடியில்  சிக்க   வைக்கிறார்  என்பதே  திரைக்கதை ‘’

 


 நாயகியாக  சமந்தா. நீதானே  என்  பொன்  வசந்தம்  படத்துக்குப்பின்  சமந்தா  செய்த  பெஸ்ட்  ரோல்  இதுதான். முதல்  பாதி  முழுக்க  அப்பாவி  கர்ப்பிணி  பெண்  போல  நடந்து  கொள்ளும்  பாங்கு  ஆகட்டும், பின்  பாதியில்  ஆக்சன்  அவதாரம்  எடுக்கும்  துணிச்சல்  ஆகட்டும் , கலக்கலான  நடிப்பு 


வில்லி  ஆக    அழகி  ஆக  வரலட்சுமி  சரத்குமார் . தாரை  தப்பட்டை  படத்துக்குப்பின்  அவர்  ஏற்று  நடித்திருக்கும்  பிரமாதமான  ரோல்  இது


 போலீஸ்  ஆஃபீசராக  வரும்  சம்பத் ராஜ்  கவனம்  ஈர்க்கிறார். , வில்லியின்  காதலனாக  , சயிண்ட்டிஸ்ட்  ஆக  வரும்  உன்னி  முகுந்தன்  நல்ல  நடிப்பு 


பின்னணி  இசை  மணி  சர்மா, பல  இடங்களில்  சுவராஸ்யத்தைக்கூட்டுகிறது சுகுமாரின்  ஒளிப்பதிவு  கண்களுக்கு  இதம் மார்த்தாண்ட்  கே   வெங்கடேஷின்  எடிட்டிங்  கனகச்சிதமாக  ரெண்டே  கால்  மணி  நேரத்தில்  ஷார்ப்பாக  கட்  செய்திருக்கிறது 


  நிறை  மாத  கர்ப்பிணியான  படத்தின்  நாயகி  அத்தனை  பேரை  ஆக்சன்  அவதாரம்  எடுத்து  வீழ்த்துவது  எல்லாம்  நம்ப  முடியவில்லை ., சிசிடிவி  கேமராவை  ஏமாற்ற  நாயகி  சமந்தா  ஒளிந்து  ஒளிந்து  செல்வதெல்லாம்  லாஜிக்கே  இல்லை 


வாடகைத்தாய்   என்ற  வார்த்தை  நயன் தாரா  திருமணத்துக்குப்பின்  ஃபேமஸ்  ஆகி  விட்டது . அந்த  சமயம்  பார்த்து  ப்டம்  வெளி  வந்தது  ஒரு  கூடுதல்  விளம்பரம் .  பெண்களுக்கான  விழிப்புணர்வுப்படமாக  பெண்களும், ஆண்களுக்கான  மெடிக்கல்  க்ரைம்  த்ரில்லராக  ஆண்களும்  இந்தப்படத்தைப்பார்க்கலாம்.


ரசித்த  வசனங்கள் 


1    ஒரு  பெண்  தன்  அழகுக்காக  தன்  கடைசி பைசா  வரை  செலவு  பண்ணத்தயாரா  இருப்பா 


2 ராஜா  ஆகனும்னா  யுத்தத்துல  ஜெயிக்கனும், ராணி  ஆகனும்னா  ராஜாவை  ஜெயிச்சாலே ( வளைச்சுப்போட்டாலே )  போதும் 


3  அரசியல்வாதியான  என்  கிட்டே  பணம் மட்டும்  தான்  கறுப்பா  இருக்கும் ( பிளாக்  மணி )  ஆனா  லைஃப்  கலர் ஃபுல்லா  இருக்கும் 


4  நாம  வணங்கற  கடவுள்  கூட  அழகானதா  இருக்கனும்னுதான்  விரும்பறோம், அதனால  நாம  மேக்கப்  போட்டு  அழகா  காட்டிக்கொள்வதில்  தப்பில்லை 


5   ஷாரூக்  கான் , அமீர்  கான் , ஷில்பா  ஷெட்டி ,சன்னிலியோன் இவங்க  எல்லாருமே  வாடகைத்தாய்  வயிற்றில்  பிறந்தவங்க தான் 


6  பையன்  இருந்தைருந்தா  கடனை  அடைச்சிருப்பான்னு  அப்பா  வருத்தப்பட்டார் , பெண்ணா  இருந்தும்  பையனால்  செய்ய  முடியாத  ஒரு  வேலையைச்செஞ்சு  கடனை  அடைக்கப்போறேன், அதுதான்  வாடகைத்தாய்  ஃபார்முலா 


7  மிஸ் 1  உன்க்கு  பொட்டு  அழகா  இருக்கு 


  ஸோ,  நீ டெய்லி  என்னை  வாட்ச்  பண்றே.  நான்  பொட்டு  வெச்சிருக்கேனா? இல்லையா?  என்பதை  நோட்  பண்றே!


8   என்னோட  டேப்  காணோம்


 டேப்லெட்  பற்றிப்பேசும்போது  டேப்  பற்றி  பேசறே 


9  இந்த  ஆப்பத்தைப்பார்த்தா  மாசமா  இருக்கும்  தோசை  மாதிரி  இருக்கு 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1  நிறை  மாத  கர்ப்பமா  இருக்கும்  நாயகி  க்ளைமாக்ஸ்  காட்சிகளில்  வயிறு  உப்பாமல்  நார்மலாக  இருப்பது  எப்படி ?


2  ஒரு  தனி  நபர்  ஒரு  மாபெரும்  கூட்டத்தையே  எதிர்த்து  வெற்றி  பெறுவது  எப்படி ? அர்னால்டு  ஸ்வார்செனேகர் , ரஜினி  படங்கள்  போல  லாஜிக்கே  இல்லை 


3  நம்ம  ஊர்  நடிகைகள்   அவுட்டோர்  போனாலே  கூட  செக்யூரிட்டிக்கு  அம்மா,  உட்பட  பல  செக்யூரிட்டிகள்  கூடப்பாறாங்க , பிரபல  ஹாலிவுட்  ஹீரோயின்  தனியா  துணை  இல்லாம  ஸ்விம்மிங்  பூலில்  இருப்பதும்  அவரது  கூல்டிரிங்க்சில்  அசால்ட்டா  மருந்து  கலந்து  மயக்கமடைய  வைத்து  ரேப்  பண்ண   ட்ரை  பண்ணுவதும்  காட்சிப்படுத்திய  விதத்தில்  நம்பும்படி  இல்லை 


4  வில்லியின்  கையாளான  ஒரு  பெண்  தான்  கர்ப்பிணி  அல்ல  என்பதை  நாயகியிடம்  சொல்வதே  ஓவர், ஆனால்  இடம்  சுட்டிப்பொருள்  விளக்குவது  போல   அந்த  கர்ப்பிணிபேடை  எடுத்துக்காட்டுவது  எல்லாம்  ஓவரோ  ஓவர் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்

  போன  மாதம்  திரைக்கு  வந்த  படம்  இப்போது  அமேசான் பிரைம்ல  கிடைக்கிறது . பெண்களுக்கு  மிகவும்  பிடிக்கும், வரலட்சுமி  ரசிகர்கள்  பார்க்கலாம்  , ரேட்டிங் 2.75 / 5 

Friday, December 16, 2022

ரத்த சாட்சி (2022) - திரை விமர்சனம் ( மெலோ டிராமா ) @ஆஹா தமிழ் ஓ டி டி


 எழுத்தாளர்  ஜெயமோகன்  எழுதிய கைதிகள்  என்ற  சிறுகதையை  மையமாகக்கொண்டுதான்  இந்தப்படம்  உருவாக்கப்பட்டு  இருக்கிறது. ஏற்கனவே  மணிரத்னம், வெற்றி மாறன், பாலா  போன்ற இயக்குநர்கள் இந்தக்கதையைப்படமாக்க  முனைந்த  போது  அதன்  உரிமையை  உதவி   இயக்குநராக  பணியாற்றிக்கொண்டிருந்த  ரஃபீக்  இஸ்மாயில்  என்பவருக்கு முன் கூட்டியே   தந்து  விட்டதாக  சொல்லி  இருக்கிறார்   எழுத்தாளர்  ஜெயமோகன் 

தர்மபுரியில்  நடந்த  உண்மைச்சம்பவம்  தான்  இந்தக்கதை .1980 களில்  கதை  பயணிக்கிறது. புரட்சி  எண்னங்கள்  கொண்ட  தீவிர    கம்யூனிஸ்ட்    நக்சல்  பார்ட்டியான  ஒரு  இளைஞன், மனசாட்சி  கொண்ட  அபூர்வமான  ஒரு  போலீஸ்காரர்  இருவருக்கும்  இடையே  நிகழும்  மனப்போராட்டாங்கள்  தான்  கதைக்களம் 


நாயகனாக அப்பு  என்னும்  ரோலில்  கண்ணா ரவி. கைதி  படத்தில்  வில்லனின்  கூட்டத்தில்  போலீஸ்  இன்ஃபார்மராக  வருபவர் , இடுங்கிய  கண்கள் , தாடி  என   பாத்திரத்துக்கு  ஏற்ற  தோற்றம்.  கச்சிதமான  நடிப்பு 


 மனசாட்சி  உள்ள  போலீஸாக  இளங்கோ  குமாரவேல் , அபியும் நானும்  படத்தின்  மூலம்  மக்களுக்கு  நன்கு  பரிச்சயம்  ஆனவர் . பொன்னியின்  செல்வன் திரைக்கதை  உருவாக்கத்துக்கு  மிக்வும்  உதவியவர். சினிமாவிலும் சரி , நிஜ  வாழ்விலும்  சரி . நல்ல  போலீசை பார்ப்பதே  அபூர்வம்  ஆகி  விட்டதால்  இவரது  கேரக்ட்ர்  டிசைன்  நமக்கு  ஆறுதல்  அளிக்கும்  விதமாக  உள்ளது 


படத்தின்  திரைக்கதை  நமக்கு  ஏற்கனவே  மிகவும்  பழக்கமான  மலையூர்  மம்பட்டியான் , கரிமேடு  கருவாயன் , சீவலப்பேரி  பாண்டி  போன்ற  படங்களை  நினைவுபடுத்துகிறது. படத்தின்  புரட்சிகரமான  வ்சனங்கள்  வாட்டாக்குடி  இரணியன்  போல்  உள்ளது 


ஒரு  சொம்பு  வெல்லாப்பாகை  திருடிய  குற்றத்துக்காக  அதே  சுடு  வெல்லப்பாகில்  அவளை  அடித்துத்தூக்கிப்போடுவது  கொடூரம், ஆனால்  அந்த  நிகழ்வில்  அந்தப்பெண்ணின்  மீதும்  பிழை  இருப்பதால்  முழுமையான இரக்கம்  வரவில்லை. சிறிய  குற்றத்துக்கு  இவ்வளவு  பெரிய  தண்டனையா? என்ற  கேள்வி  மட்டும்  எழுகிற்து


காட்டில்  முள்  விறகு வெட்டி  கட்டிக்கொண்டு போகும்  பெண்ணை  போலீஸ்  பிடித்து  அடிப்பதும், அதைத்தொடர்ந்து  இரக்கமுள்ள  ஒரு  போலீஸ்  வாட்டர்  கேனில்  தண்ணீர்  தருவதும்  அதை  கேனில்  வாங்கிக்குடிக்காமல்  கையேந்திக்குடிக்க  தயார்  ஆகும்  பெண்ணின்  நிலையும்  மனதை  கனக்க  வைக்கிறது 



விஷ்  முள்  கையில்  பட்டு  போலீஸ்  துடிக்கும்போது  இன்னொரு  போலீஸ்  இதே  முள்  செடியால்தானே   அந்தப்பெண்ணை  அடித்தாய்? அவளுக்கு  எப்படி  வலித்திருக்கும்,? வலி  என்பது  எல்லோருக்கும்  பொதுதானே? என  கேட்பது  உருக்கம்


நாயகனின்  காதல்  சம்பந்தப்பட்ட  காட்சி  ஒரே  ஒரு  இடத்தில்  தான்  வருகிறது. அதே  போல  போலீஸ்  குடும்பப்பின்னணியும்  மனதில்  ஒட்டவில்லை 


 மக்கள்  மனதில்  முதலில்  நாயகனின்  பின்  புலம்  நன்கு   பதியும்படி  காட்சிகள்  இருக்க  வேண்டும். அபோதுதான்  ஒரு  கனெக்ட்டிவிட்டி  கிடைக்கும்


மற்றபடி  இது  போலீஸ்  - புரட்சியாளர்கள்  சேசிங்  ஆடுபுலி  ஆட்டம்  போல்  தான்  போகிறது 


மக்களை  போலீஸ்  சித்ரவதை  செய்வதால்  நாயகன்  சரண்டர்  ஆக  முடிவு  எடுப்பது  நல்ல  திருப்பம், ஆனால்  மீடியா  முன்  அல்லது  கோர்ர்ட்டில்  சரண்டர்  ஆகாமல்  ஏன்  போலீசிடம்  சரண்டர்  ஆகி  வீணாக  உயிர்ப்பலி  ஆகிறார்  என்ற  கேள்விக்கு  விடை  இல்லை 



 ஆந்திரா கர்நாடகா  தமிழக  பார்டர்  ஆன  சக்கரக்கல்  ஃபாரஸ்ட்  ஏரியாவில்  இல்லீகல்  விஷயங்கள்  எப்படி  நடக்கிறது  என்பதை  தெளிவாகக்காட்டி  இருக்கிறார்கள் 


ஜாவேத்  ரியாஸ்  இசையில்  பாடல்களில்  புரட்சிக்கருத்துகள்  பலம், பின்னணி  இசை  பல  இடங்களில்  திகில்  ஊட்டுகிறது.  வனப்பிரதேசங்களில்   ஒளிப்பதிவு  கச்சிதம் 


திரைக்கதை  அமைத்து  இயக்கி  இருக்கும்  ரஃபீக்  இஸ்மாயில்  நம்பிக்கை  ஊட்டும்  இயக்குநராகத்தெரிகிறார்.    காமெடி  டிராக், கமர்ஷியல்  அம்சங்கள்  சேர்க்காமல்  எடுத்துக்கொண்ட  கதைக்கு  நியாயம்  செய்த  வகையில்  பாராட்டத்தோன்றுகிறது 


ஆஹா  தமிழ்  ஓ டி டி  யில்  இது  காணக்கிடைக்கிறது


ரசித்த  வசனங்கள் 

1   நம்ம  ஒவ்வொருவருக்குள்ளேயும்  நெருப்பு  இருக்குது. அதை  அணையாம  பார்த்துக்கனும்


2  மதம்  பிடிக்காதவரை  நாம  எல்லோரும்  கோயில்  யானைகள்  தான். நம்ம  பலம்  நமக்கே  தெரியாது 


3  பாவப்ப்ட்ட  ஜனங்களை  வஞ்சிக்காதீங்க், உங்க  வம்சமே  அடியோட  அழிஞ்சிடும்


4  கம்யூனிஸ்ட்டோட  வேலை  புரட்சி  ப்ண்றது  ரவுடித்தனம்  பண்றது  இல்லை 


5  புரட்சி  என்பது  அடிதடில  இறங்குவது  அல்ல , மக்களின்  உரிமைக்காகப்போராடுவது 


6  நம்மை  ஒருத்தன்  அடிச்சான்னா  நாம  திருப்பி  அடிக்கனும், இல்லைன்னா  அழிஞ்சு  போய்டுவோம்


7  வியாபாரி  என்னைக்கும்  வியாபாரிதான், அவனோட  லாபத்துக்கு ஒரு  பிரச்சனைன்னா  எந்த  நிலைக்கும்  இறங்குவான்


8  ஒரு  மரத்தில் இருந்து   பல  மலர்கள்  உதிர்வ்தைப்போல  ஒரு  புர்ட்சி இளைஞனின்  மரணத்தில்  இருந்து  பல  புரட்சிகள்  உருவாகும்


9  சதைல  அடிப்பதற்கும் , எலும்புல  அடிப்பதற்கும்  வித்தியாசம்  இருக்கு, சதைல்  அடிக்க  அடிக்க  எதையும்  தாங்கும்  அளவுக்கு  ரெடி  ஆகிடும், ஆனா  எலும்பு  அப்படி  இல்லை , அடிக்க  அடிக்க  வலு  குறையு,ம், அதனால  போலீஸ்  அடி  எப்பவும்  எலும்பை  குறி  வெச்சுதான்  இருக்கும்


10  கவர்மெண்ட்னு  ஒண்ணு  இருந்தா ஆண்ட்டி  கவர்மெண்ட்டுன்னு  ஒண்ணு  இருந்தே  தீரும், இது  சோசியல்சயின்ஸ் 


11   மரணம்  என்பது  ஒரு  ஹீரோவின்  முடிவு  அல்ல , அவன்  தன்னை  மாதிரி  1000  ஹீரோக்களை  உருவாக்கிச்செல்கிறான்


12    தனக்காக  வாழ்ந்து  மரணிக்கிறவன்  இறப்பில்  எந்தப்பெருமையும்  இல்லை , ஆனால்  மக்களுக்காக  வாழ்ந்து  மடிபவனுக்கு  ஒரு  பேரு  இருக்கு , அதுதான்  ரத்த  சாட்சி 


13   பல  தியாகங்களுக்குப்பிறகுதான்  நமக்கு வெற்றி  கிடைக்கும்


 எது  தியாகம் ? ஒருத்தன்  உயிருக்காக  அப்பாவி  மக்கள்  உயிரைப்பணயம்  வைபபதா? 


14  போராட்டம்னா  மக்களோடு மக்களா  நின்னு  போராடுவது. காட்டுக்குள்ளே  ஓடி  ஒளிவது  அல்ல


15   அரசாங்கத்துக்கு  எதிரா  போடனும்னா  அதுக்கு   ஒரே  வழி  மக்கள்  போராட்டமா  அது  மாறனும், இல்லைனா  அரசாங்கம்  நம்மை  நசுக்கிடும் 


16  நம்ம  எல்லார்க்குள்ளேயும்  ஒரு  மனுசத்தன்மை   ஒளிந்திருக்கிறது , அது  எப்போதாவதுதான்  வெளி வரும். அப்படி  வெளி  வர  நினைக்கும்போது  நாம  அதைப்போட்டு  அமுக்கிடறோம் 




லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1  ஒரு  போலீஸ்  ஆஃபீசர்  ஒரு  யானை  முன்  5  அடி தூரத்தில்  நின்று  துப்பாக்கியால்  சுடுகிறார். 2  நாட்களாக  உணவு  இல்லாமல்  பசியாக  இருக்கும்  யானை  இது, இப்படி  எல்லாம்  அசால்ட்டா  சுட  வாய்ப்பே  இல்லை .யானை  மிரண்டு  தாக்க  வாய்ப்பிருக்கு, இப்படி  எல்லாம்  அமைதியா  சாகாது


2  ஒரு  சொம்பு  வெல்லப்பாகு  வீணாப்போனதுக்கே  பதறும்  அந்த  ஆள்  ஒரு  கொப்பரை  வெல்லப்பாகு  வீணாகும்படி  அந்தப்பெண்னை  அந்த  கொப்பரையில்  தள்ளுவாரா? 


3 போலீசின்  கொடுமைகளைப்பற்றி  நன்கு  அறிந்த  ஹீரோ  கோர்ட்டில்  சரண்  அடையாமல்  ஏன்  போலீசில்  சரண்டர்  ஆகிறார்?


4 ஹீரோவின் குடும்பப்பின்னணி , காதலி  பற்றிய  டீட்டெய்லிங்  எதுவும்  சொல்லப்படாமல்  எப்படி  அந்தக்கேரக்டர்  மீது  ஆடியன்சுக்கு  ஒரு  அட்டாச்மெண்ட்  வரும் ?


சி பி  எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  பெண்களுக்குப்பிடிக்காது , கம்யூனிஸ்ட்களூக்குப்பிடிக்கும் .  ரேட்டிங் 2.25 / 5  ஆனந்த  விகடன்  எதிர்பார்ப்பு  மார்க் - 40 

Wednesday, December 14, 2022

MONSTER(2022) -மான்ஸ்டர் -(மலையாளம்) - திரை விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) @ டிஸ்னி ஹாட் ஸ்டார் பிளஸ்


 கேரளா மாநிலம்  இடுக்கி  மாவட்டம்  தொடுபுழா  என்னும்  ஊரில் ஆசீர்வாத் சினி  காம்பெளெக்ஸ்  எனும்  மல்ட்டிபிளக்ஸ்  காம்ப்ளெக்ஸ்  மோகன்லாலுக்கு  சொந்தமாக  உண்டு . அதே  பேரில்  ஒரு  பட  நிறுவனமும்  உண்டு. அவரது  சொந்தப்படம்  தான்  இது.

 டைட்டிலைப்பார்த்து  யாரும்  பயப்பட வேண்டாம், ஒரே  ஒரு  கேங்க்ஸ்டரை  அடிச்சு  மேலே  வந்த  மான்ஸ்டர்  நான்  இல்லைடா, நான்  அடிச்ச  10   பேருமே  கேங்க்ஸ்டர் தான்  அப்டினு  பஞ்ச்  டயலாக்  பேசற  மான்ஸ்டர்  தாதா  கதை  எல்லாம்  இல்லை 


கேரளா - மலையாளப்பட உலகில்  முதன்  முதலாக 100  கோடி  வசூல்  சாதனையை  செய்த  கமர்ஷியல்  ஹிட்  படமான  புலி  முருகன்  படக்கூட்டணி  தான்  இந்தப்படத்திலும்  என்பதால்  எதிர்பார்ப்பு  கூடுகிறது


நாயகி  ஒரு  டாக்சி  டிரைவர் , அவரது  கணவர்  முன்னாள்  ஐ டி  ஊழியர், ஆனா இப்போ  வேலையில்  இல்லை., ஒரு  விபத்தில்  காலில்  அடிபட்டதால்  நாயகி தான்  குடும்பத்தை  காப்பாற்ற  பணிக்கு  செல்ல  வேண்டிய  நிர்ப்பந்தம்.  நாயகியின்  கணவருடைய  முதல்  மனைவிக்குப்பிறந்த  குழந்தையும்  அவர்களுடன்  இருக்கிறது.


ஒரு  நாள்  நாயகிக்கு  கொடுக்கப்பட்ட  பணி  லக்கி சிங்  என்பவரை  பிக்கப்  பண்ணிக்கொண்டு  வர  வேண்டும். அந்தப்பணியை  நிறைவேற்ற  நாயகி  ஏர்போர்ட்  போகிறாள். அங்கே  நாயகன்  ஆன  லக்கி  சிங்கை  சந்திக்கிறாள்


நாயகன்  லக்கிசிங்  தொண  தொண  என  பேசிக்கொண்டே  வருகிறான், இது  நாயகிக்குப்பிடிக்கவில்லை, எங்கே  டிராப்  பண்ண  வேண்டுமோ  அங்கே  டிராப்  பண்ணி  விட்டு  கிளம்ப  வேண்டும்,  இன்று  எங்கள்  திருமண  நாள் , கொண்டாட  வேண்டும்,  வீட்டில்  பார்ட்டி  என்கிறாள், உடனே  நாயகன்  அழையா  விருந்தாளியாக    நாயகி  வீட்டுக்கு  வருகிறான்


 வீட்டுக்கு  வந்ததும்   குழந்தையுடன்  நன்றாகப்பழகுகிறான். நாயகியை  ஒரு  வேலை  சொல்லி  வெளியே  அனுப்பி  விட்டு  நாயகியின்  கணவனை  நாயகன் துப்பாக்கியால்  சுட்டு  விட்டுச்சென்று  விடுகிறான். கொலைப்பழி  நாயகி  மீது  விழுகிறது 


போலீஸ்  விசாரணை  நடக்கிறது. இதற்குபின்  ஏற்படும்  திடுக்கிடும்  திருப்பங்களும் ,   தெரிய  வரும்  புதிய  உண்மைகளும்  தான்  திரைக்கதை 


 நாயகன்   லக்கி  சிங்  ஆக   மோகன்  லால் . முதல்  பாதியில்  தொண  தொண  பேச்சுக்காரராக  எரிச்சல்  ஏற்படுத்தும்  நடிப்பு ,  பின்  பாதியில்   ஆக்சன்  அவதாரம்  என  அவரது  ரசிகர்கள்  கொண்டாடும்  நடிப்பை  வழங்கி  இருக்கிறார்


நாயகி  பாமினியாக   ஹனி ரோஸ்  நாயகனை  விட  வெயிட்டான  கதாபாத்திரம் , நாயகனை  விட  அதிகக்காட்சிகள்  வருகிறார்.  பச்சைக்கிளி  முத்துச்சரம்  படத்தில்  ஜோதிகா  ஏற்று  நடித்த  ரோல்  போல  மாறுபட்ட  ரோல்,  இடைவேளைக்குப்பின்  ஆன  ட்ரான்ஸ்ஃபர்மேஷன்  காட்சிகளில்  கலக்குகிறார்

நாயகியின் தோழி  மஞ்சு  துர்காவாக  லட்சுமி  மஞ்சு .  முதல்  பாதி  முழுக்க  வசனம்  அதிகம்  பேசாமல்  அமைதியாக  வருபவர்  பின்  பாதியில் ஆர்ப்பாட்டமான  நடிப்பை  அள்ளி வழங்கி  இருக்கிறார்


நாயகியின்  கணவர்  ஆக  சுதேவ்  நாயர்  அதிக  வாய்ப்பில்லை  என்றாலும்  வந்தவரை   கச்சிதமான  நடிப்பு 


நாயகன் , நாயகி ,  நாயகியின்  தோழி  இந்த  மூன்று  கேரக்டர்களுக்குமே  ட்ரான்ஸ்ஃபர்மேஷன்  காட்சிகள்  உண்டு  , அவை  எல்லாம்  ரசிக்க  வைத்தாலும்  மொத்தக்கதையையும்  உணர்ந்த  பின்  தலையைச்சுற்றி  மூக்கைத்தொட்ட  உணர்வைத்தான்  கொடுக்கிறது . திடுக்கிடும்  திருப்பங்கள்  இருந்தாலும்  இவ்ளோ  தூரம்  அலைக்கழித்து  இருக்கத்தேவை  இல்லையே? என  தோன்றுகிறது 


சதீஷ்  க்ரூப்பின்  ஒளிப்பதிவு  கச்சிதம், க்ளைமாக்ஸ்  சண்டைக்காட்சியைப்படமாக்கிய  விதம்  அருமை , ஷமீர்  முகமதுவின் எடிட்டிங்கில்  ரெண்டே கால்  மணி  நேரத்தில்  சுருக்கமாக  முடித்த  விதம்  ஓக்கே  ரகம் , தீபக்  தேவின்  இசை  ரசிக்க  வைக்கிறது ,  ஒரு  ஆக்சன்  ஹீரோவுக்கு  எந்த  எந்த  இடங்களில்  தீம்  மியூசிக்  போட  வேண்டும் ? ரசிகர்களை  கூஸ்பம்ப்  மொமெண்ட்ஸ்  உணர  வைப்பது  எப்படி? என்பதில்  தேறி  இருக்கிறார்


 இயக்கம்  வைஷக் , புலி  முருகன்  அளவுக்கு  கமர்ஷியல்    கலக்கல்  அம்சங்கள்  இல்லை  என்றாலும்  ஒரு  சராசரி  க்ரைம்  த்ரில்லர்  படம்  கொடுத்திருக்கிறார்  என  பாராட்டலாம் .


 இந்த  வருடம்  அக்டோபர்  21ம்  தேதி  திரையரங்குகளில்  வெளியான  இந்தப்படம்  இப்போது  டிஸ்னி  ஹாட்  ஸ்டாரில்  காணக்கிடைக்கிறது 


ரசித்த  வசனங்கள் 


1  பாமினி , டிக்கியை   ஓப்பன்  பண்ணு 


 வாட் ?


  நானே  பஞ்சர்  பார்த்துடறேன்னு  சொல்ல  வந்தேன் 


3   சார்,  எங்க  கம்பெனி  மேலிடத்துக்கு  இந்த  விஷயம்  தெரிஞ்சா  என்னை  திட்டுவாங்க  சார் 


 சரி, இந்த  ஸ்டெப்னி  விஷயம்   நமக்குள்ளேயே  இருக்கட்டும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் ,  திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1   ஒரு  சீன்ல  போலீஸ்  நாயகி  வீட்டுக்கு  அவரைக்கைது  செய்ய  வருது , அப்போ  நாயகி  ஃபுல்லா  கவர்  பண்ற  மாதிரி  டீசண்ட்ட்டா  சுடிதார்  போட்டிருக்கார். போய்  டிரஸ்  மாத்திட்டு  வாங்க, உங்களை  வெளில  கூட்டிட்டுப்போறோம்  என  போலீஸ்  சொன்னதும்  அந்த  அழகான , கண்ணியமான  சுடிதாரை  கழட்டிட்டு  ஸ்லீவ்  லெஸ்  டிரஸ்  ஒண்ணு  கிளாமரா  போட்டுட்டு  வர்றார்.  எந்த  ஊர்ல பொண்ணுங்க  வீட்டுல  இருக்கும்போது  ஃபுல்  கவர்  டிரஸ் , வெளில  போறப்ப  ஓப்பன்  யுனிவர்சிட்டி  டிரஸ்  போடறாங்க ? 


2  பல  ஊர்களில்  வேவ்வேறு  சூழல்களில்  நான்கு  கொலைகள்  நடக்குது. ஒவ்வொரு  கொலையும்  திருமண  நாள்  அன்று  தான்  நடக்குது, அதுவும்  கேக்கில் தான்  விஷம்  கலக்கனுமா? ஒவ்வொரு  முறையும்  பேட்டர்ன்  மாற்றி  கொலை  செஞ்சாதானே  கணடு   பிடிக்க  முடியாது ?


3   பொதுவா ஒரு  சம்சாரம்  தன்  புருசனைக்கொலை  பண்ணனும்னு  முடிவு  பண்ணிட்டா  அவன்  தூங்கிட்டு  இருக்கும்போது  தலையணையால  அமுக்கிக்கொல்வதுதான்  ஈசி .  இப்படி  பார்ட்டில  கேக்  கொடுத்து  கொல்றது  ரிஸ்க்


4  போலீஸ்  டிபார்ட்மெண்ட்ல  ஒரு    சீக்ரெட்  ஆபரேஷன்   நடக்குதுன்னா  சம்பந்தப்பட்ட  ஆஃபீசர்களுக்கு  தகவல்  சொல்ல  வேண்டாமா?  அவங்க  பாட்டுக்கு  விபரம்  தெரியாம  செயல்பட்டு  யாரையாவது  சுட்டு  இருந்தா  என்ன  ஆவது ? 


5  இன்சூரன்ஸ்ல  நாமினிக்கு  இழப்பீடு  தொகை  இவ்ளோ  ஈசியா  எல்லாம்  கொடுத்துட  மாட்டாங்க,  டியூ  கட்டுவது  ஈசி ,  செட்டில்மெண்ட்    தொகையை  கொடுக்க  அலைக்கடிப்பாங்க , 1009  ஃபார்மாலிட்டீஸ்  இருக்கும் 


 சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் -  படம்  பிரமாதம்னும்  சொல்ல  முடியாது  , மொக்கைனும்  சொல்ல  முடியாது , பாஸ்மார்க்   ரேஞ்ச்  தான் . ரேட்டிங்  2.25 / 5 


Monster
Monster (2022 film) poster.jpg
Theatrical release poster
Directed byVysakh
Written byUdaykrishna
Produced byAntony Perumbavoor
StarringMohanlal
CinematographySatheesh Kurup
Edited byShameer Muhammed
Music byDeepak Dev
Production
company
Distributed byAashirvad Release
Release date
  • 21 October 2022 (India)
Running time
135 minutes[1]
CountryIndia
LanguageMalayalam

Tuesday, December 13, 2022

KUMARI(2022)-குமாரி ( மலையாளம்) - திரை விமர்சனம் ( ஃபேண்ட்டசி த்ரில்லர் ) @ நெட் ஃபிளிக்ஸ்


நாயகி அம்மா, அப்பா  இல்லாத  அனாதைப்பெண். ஒரு  சகோதரனும், மாமாவும்  மட்டும்  உண்டு. பக்கத்து  ஊர்  தம்புரான்  குடும்பத்தில்    சம்ப்ந்தம்  வைத்துக்கொள்கிறார்கள் . நம்ம  ஊர்  நாட்டாமை  மாதிரி  அந்த  ஊரில்  தம்புரான். மந்திரம்  எல்லாம்  தெரிந்தவர் , ஊர்  தலைவர்  மாதிரி  , அவருக்கு  இரண்டு மகன்கள் , முதல்  மகனுக்கு  திருமணம்  ஆகி  சில  ஆண்டுகள்  ஆகியும்  குழந்தை  பாக்கியம்  இல்லை .  இரண்டாவது  மகனுக்குத்தான்  நாயகியைக்கல்யாணம்  கட்டிக்கொடுகிறார்கள் 

நாயகியின்  கணவன்  ஒரு  விசித்திரமான  கேரக்டர். யாருடனும்  அதிகம்  பேசுவதில்லை. ஏன்  இப்படி  பெக்கூலியர்  கேரக்டரா  இருக்கிறீர்கள்  என  நாயகி  கேட்கும்போது  சிறு  வயதிலிருந்தே  என்னை  தனிமைப்படுத்தி  வளர்த்து  விட்டார்கள் . அண்ணனுக்குத்தான்  அதிக  முக்கியத்துவம், என்னை  யாரும்  கண்டு  கொள்வதில்லை  என்கிறார். நாயகிக்கு  அந்தக்குடும்ப்த்தில்  சரியாக  பொருந்திப்போக  முடியவில்லை 


நாயகி  கர்ப்பம்  ஆகிறாள்.  இது  நாயகியின்  கணவனின்  அண்ணன்  மனைவிக்குப்பிடிக்கவில்லை . ஏன்  எனில்  ஆண்  வாரிசு  யாருக்கு  அமைகிறதோ  அவர்களுக்குத்தான்  தம்பிரான்  பதவியும்  போய்ச்சேரும்., தன்  கணவனுக்குக்கிடைக்காத  அந்த  பதவியும்  கவுரமும்  கணவனின்  தம்பிக்குக்கிடைப்பதை  அவள்  விரும்பவில்லை 


நாயகி  திருமணம்  ஆகி  காரில்  ஊருக்குக்கிளம்பும்போதே  ஒரு  பாட்டி  அவளை  எச்சரித்திருந்தாள் . அங்கே  போக  வேண்டாம், அது  சபிக்கப்பட்ட  பூமி  என்கிறாள்.


நாயகி  வாழ்க்கைப்பட்ட  குடும்பத்தில்  12  தலைமுறைகளுக்கு  முன்  ஒரு  சம்பவம்  நடந்திருந்தது. தம்பிரான் குடும்பத்தைச்சார்ந்த  ஒருவர்  அவர்கள்  வீட்டுக்குளத்தில்  குளித்ததற்காக  ஒரு மலைவாழ்  சிறுவனைக்கொலை  செய்து  விடுகிறார். அந்த  சிறுவன்  இல்லிமலை  சாத்தானுக்கு  இஷ்டப்பட்டட்வன். அவன்  இறந்ததும் சாத்தானுக்குக்கோபம்,சபிக்கிறது.இதனால்  தம்பிரான்  உடல்  நலம்  குன்றுகிறார். அவர்  உடல்  முழுக்க  கொப்புளங்கள் . தன்  முடிவுக்காலம் நெருங்கியதை  உணர்ந்த  தம்பிரான்  அவர்கள்  குலத்து  சாத்தானை  வேண்டுகிறார். என்னை  குணப்படுத்து , என்ன  காணிக்கை  வேண்டுமானாலும் தருகிறேன்  என்கிறார்


 உங்கள்  குடும்ப  ஆண்  வாரிசை  எனக்கு  இரையாகத் தா  என்கிறது  சாத்தான். தன்  சுயநலத்துக்காக   அந்த  தம்பிரான்  தன்  மகனை  பலி  கொடுக்கிறான். 


இது  பரம்பரை  பரம்பரையாகத்தொடர்கிறது. சாத்தானின்  ஆசி  பெற்றதால்  அந்த  தம்புரான்  பதினைந்து  தலை  முறை  தாண்டியும்  இன்னும்  உயிர்  வாழ்கிறார். 


இப்போது  நாயகியின்  குழந்தை  பலி  கொடுக்கும்  முறை. நாயகியின்  கணவன்  தனக்குக்கிடைக்க  இருக்கும்  தம்பிரான்  பதவிக்காக  குழந்தையை  பலி  கொடுக்கத்தயார்  ஆகிறார். 


 நாயகி  என்ன  முடிவு  எடுத்தாள்  என்பதே   திரைக்கதை 


நாயகியாக ஐஸ்வர்யா  லட்சுமி , பொன்னியின்  செல்வன்  படத்தில்  பூங்குழலியாக , அர்ச்சனா  31  நாட்  அவுட்  படத்தில்  டீச்ச்ராக , அம்மு  படத்தில்  குடும்பத்தலைவியாக  பிரமாதமான  நடிப்பை  வெளிப்படுத்தியவருக்கு  இந்தப்படத்திலும்  நல்ல  ரோல் . மணிச்சித்திர  தாழ்  படத்தில்  ஷோபனா ,  சந்திரமுகி  படத்தில்  ஜோதிகா  ஆகியோருக்குக்கொடுக்கப்பட்ட  முக்கியத்துவம்  இந்தப்படத்திலும்  இவருக்கு  டைட்டில்  ரோலாக  வாய்த்திருக்கிறது , வாய்ப்பை  அருமையாகப்பயன்ப்டுத்தி  இருக்கிறார்   ஆனந்தம், அதிர்ச்சி , பயம், குழப்பம்  என  பல  உணர்வுகளை  முகத்தில்  அசால்ட்டாக  கொண்டு  வருகிறார்.


கணவராக  ஷைனி டாம்  சாக்கோ . இஸ்க் (2018),  எனும்  மலையாளப்படத்தில்  பிரமாதமான  சைக்கோ  கேரக்டரில்  நடித்து  கைதட்டல்  வாங்கியவர்  .விஜய்  நடித்த  பீஸ்ட்  படத்தில்  தீவிரவாதியாக  வந்தவர். இவர்   அமைதியாக    முன்  பாதியில்   இருந்து  விட்டு  ஆர்ப்பாட்டமாக  பின் பாதியில்  ஆர்ப்பரிக்கிறார். மன நலம்  பாதிக்கப்பட்டவராக  மாறி  விட்டார்  எனலாம் 


திரைக்கதை  எழுதி இயக்கி  இருப்பவர்  நிர்மல்  சகாதேவ்.  நாட்டில்  இப்போதும்  மூட  நம்பிக்கை  காரணமாக  நரபலி  கொடுக்கும்  சம்பவ்ங்கள்  ஆங்காங்கே  நடந்து  கொண்டுதான்  இருக்கின்றன. இந்தப்படம்  மூட  நம்பிக்கையை  எதிர்க்கும்  படமாக  அல்லாமல் அதை  எல்லாம்  நம்பும்  தொனியில்  தான்   எடுக்கப்பட்டுள்ளது


ஓப்பனிங்  ஷாட்டில்  பாட்டி  தன்  பேத்திக்கு  சாத்தானின்  கதை  சொல்லும்  13  நிமிடக்காட்சி  உலகத்தரம்,  ஒளிப்பதிவில்  ஹாலிவுட்  படத்துக்கு  சவால்  விடுகிறது 


உயர்  ஜாதி  மக்கள் ,  பிறபடுத்தப்பட்ட  மக்கள்  இருவருக்கிடையேயான  சண்டை  போல  இதில்  இரு  வேறு  தரப்பு  சாத்தான்களின்  போராக  இருக்கும்  என க்ளைமாக்ஸில்  எதிர்பார்த்தால்  க்ளைமாக்ஸ்  மட்டும்  ஏமாற்றம்


ஆப்ரஹாம்  ஜோசஃப் ஒளிப்பதிவில்   மிகுந்த  கவனம்  கொண்டு  காட்சிகளை  படம்  பிடித்து  இருக்கிறார், ஜாக்ஸ்  பேஜாய்  பின்னணி  இசையில்  மிர்ட்டி  இருக்கிறார்.  5  பாடல்களில்  3  இனிமை . ஸ்ரீஜித் தின்  எடிட்டிங்  கன  கச்சிதம் 


நெட்  ஃபிளிக்சில்  காணக்கிடைக்கிறது. இது  குடும்பத்துடன்  பார்க்கத்தகுந்த  ஃபேண்டசி  த்ரில்லர்  வகையைச்சேர்ந்தது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ்  , திரைகக்தையில்  சில  நெருடல்கள் 


1    குடும்பத்தின்  முதல்  ஆண்  குழந்தை  பலி  என்ற  கண்டிஷனில்  வயது  பற்றிய  கட்டுப்பாடு  இல்லையா?  முதல்  பலி  ஆன  குழந்தை 5  வயது, 12வது  தலைமுறை  குழந்தை   பலி  ஆகும்போது 70வயசு , அப்புறம் 35  வயசு. அப்போ  இதுக்குப் பேரு  நரபலி  அல்ல , நரை  பலி.. 70  வயசு  ஆனபின்  அவரே  சாகத்தான்  போறாரு 


2   என்னதான்  மனநலன்  பாதிக்கப்பட்ட  ஆணாக  இருந்தாலும்  சிப்பிக்குள்  முத்து , மீண்டும்  ஒரு  காதல்  கதை ஹீரோ  மாதிரி  இதுல  நாயகன்  ஒரு  சீன்ல  கூட  சிரிக்கவே  இல்லை  ஓப்பனிங்ல  அதே  போல்  மனைவியுடன்  கொஞ்சும்  காட்சி  அல்ல்து  ரொமாண்டிக்காக  பேசும்  காட்சியே  இல்லை , ஆனா  சொல்லி  வெச்ச  மாதிரி  மேரேஜ்  ஆன  அடுத்த  மாசமே  மாசம்  ஆகுது  நாயகி 


3 நாயகியின்  கணவனின்  அண்ணன்  மனைவி  கேரக்டர்  டிசைனில்  ஒரு  குழப்பம் . அவர்  தான்  தன்  கணவன்  பலி  ஆகக்காரணம்  ஆகிறார். அவர்தான்  நாயகியை  குழப்புகிறார், அவர் தான்  தன்  கணவனின்  தம்பியிடம்  சிரித்துப்பேசுகிறார். அவரோட  மோட்டிவ்  என்ன? சரியாப்புரியல , அந்தக்கேரக்டரை  நீலாம்பரி  மாதிரி  வில்லி  ரோலா  டெவலப்  பண்ணி  எடிட்டிங் ல  விட்டுட்டாங்களோ?னு டவுட்


4  சாத்தான்  சர்வ  பலம்  பொருந்தியது . மே  ஐ  கம்  இன்  அப்டினு  பர்மிஷன்  கேட்டுட்டு  உள்ளே  வர  அது  மனுசன்  இல்லை , நரபலி  கொடுனு  கிட்டத்தட்ட  கெஞ்சிதான்  கேட்குது 


5  நாயகி  கர்ப்பம்  ஆனதும்  ஸ்கேனிங்  எதுவும்  செய்யலை , பிறக்கப்போவது  பெண்  குழந்தையாகவும்  இருக்கலாம், ஆனா  எல்லாருமே  அது  ஆண்  குழந்தைதான்னு  3  வது  மாசத்துல  இருந்தே  நம்பறாங்களே, எப்படி ? 7  வது  மாசத்தில்  தான்  வயிறின்  வடிவம்  கண்டு  என்ன  குழந்தையாக  இருக்கும்?னு  யூகிக்க  முடியும் 


ரசித்த  ஒரே  ஒரு  வசனம் 


1  அதிகாரம்  நம்ம  கைல  இருந்தா  மக்கள்  மனசுல  நம்மைப்பற்றிய  பயம்  தன்னால  வரும் 


~சிபிஎஸ் ஃபைனல்  கமெண்ட் -  மிஸ்ட்ரி  த்ரில்லர்  ரசிகர்கள் , பேய்ப்படம்  , திகில்  பட  ரசிகர்கள், ஐஸ்வர்யா  லட்சுமி  ரசிகர்கள்  பார்க்கலாம். பார்க்க  டைம் இல்லாதவர்கள்  முதல்  13  நிமிட  பாட்டி  கதை  சொல்லும்  ஜால  வித்தைக்காட்சியை  மட்டுமாவது  பார்க்கவும் . ரேட்டிங்  3 / 5 

நன்றி - கல்கி  வார  இதழ், ஆன் லைன்  கல்கியில் 13/12/2022   3.33 pm  ஆன்  லைன்  பதிப்பில்  வெளியானது ,


Kumari
WorldOfKumari.jpg
Theatrical release poster
Directed byNirmal Sahadev
Written by
  • Nirmal Sahadev
  • Fazal Hameed
Produced by
Starring
CinematographyAbraham Joseph
Edited bySreejith Sarang
Music byJakes Bejoy
Production
company
The Fresh Lime Sodas
Distributed byMagic Frames
(in association with Prithviraj Productions)
Release date
28 October 2022
CountryIndia
LanguageMalayalam

Monday, December 12, 2022

LADY CHATTERLY'S LOVER (2022) - சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் மெலோ டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்

 


டி ஹெச்  லாரன்ஸ்  எழுதிய  லேடி  சாட்டர்லீஸ்  லவ்வர்  எனும்  நாவலை  அடிப்படையாகக்கொண்டு  எடுக்கப்பட்ட  படம்  தான்  இது. நாவல்  டைட்டிலையே  படத்துக்கும்  வைத்திருக்கிறார்கள் . இந்த  வருடம்  அக்டோபர்  மாதம்  திரையரங்குகளில்  வெளியான  படம்  இப்போது  நெட்  ஃபிளிக்ஸில்  ரிலீஸ்  ஆகி  உள்ளது 


நாயகிக்கு  ஒரு  மிலிட்ரி  ஆஃபீசருடன்  திருமணம்  நடக்கிறது . திருமணம்  ஆன  அடுத்த  நாளே  கணவன்  போருக்குபோக  வேண்டிய  சூழல் . போர்க்களத்துக்குபோய்  மீண்டும்  வீட்டுக்குத்திரும்பி  வரும்போது  போரில்  காயம்  பட்டு  வீல்  சேரில்  அமர்ந்த  நிலையில்  தான்  வருகிறான். கணவனால்  நடக்க  முடியாது 


கணவன்  ஒரு  எழுத்தாளன். தான்  எழுதிய  ஒரு  சிறுகதையை  மையமாக  வைத்து  ஒரு  நாவல்  எழுத  ஆசைப்படுகிறான்,  அதற்கு  நாயகி  உதவி  செய்கிறாள்


  அவர்கள்  தங்கி  இருக்கும்  மிகப்பெரிய  பங்களா  மற்றும்  பண்ணையை  பராமரிக்க  இண்ட்டர்வ்யூ  வைத்து  ஆட்களை  எடுக்கிறார்கள் . அப்படி  வேலைக்கு  வந்த  ஒரு  ஆளுடன்  நாயகிக்கு  காதல்  ஏற்படுகிறது. 


 கணவனைக்கவனிக்க  ஒரு  நர்ஸ்  ஏற்பாடு  செய்யப்படுகிறார். நாயகிக்கு  சுதந்திரமாக  சுற்ற  ஆசை, ஆனால்  கணவன்  தன்னைக்கவனித்தால்  போதும்  என  சுயநலமாக  இருக்கிறான் 


  ஊரில்  இருந்து  நாயகியின்  உறவினரான  ஒரு  பெண்  வருகிறாள் , நாயகியின்  காதல்  விஷயம்  அறிந்து  நாயகிக்கு  அறிவுரை  சொல்கிறாள் . காதலனுக்கு  வேலை  போய்  விட்டால்  பொருளாதார  நிலை  அவனுக்கு  சரி  இல்லை , அதனால்  காதலுக்கு  நல்லா  இருந்தாலும்  நடைமுறைக்கு  இது  சாத்தியம்  இல்லை  என்கிறாள் 


நாயகியின்  காதலனுக்கும்  ஏற்கனவே  திருமணம்  ஆகி  விட்டது, ஆனால்  அவன்  மனைவி  வேறு  ஆண்  நண்பர்களுடன்  சுற்றுவதால்  தனிமையில்  இப்போது  இருக்கிறான்


நாயகியின்  க்ணவன்  நாயகியின்  காதலனை  அழைத்து  உன்னை  டிஸ்மிஸ்  செய்கிறேன், நீ ஊரை  விட்டுப்போய்  விடு  என்கிறான்


 இதற்குப்பின்  நாயகியும் , அவள்  காதலனும்  இணைந்தார்களா? என்பதை  திரையில்  காண்க 


நாயகியாக  எம்மா  காரின்  அற்புதமான  முக  அழகு , பிரமாதமான  நடிப்பு  என  ரசிகர்களைக்கவர்ந்திழுக்கிறார்.  நீ  ஒரு  சுயநலக்காரன்  என  கணவனிடம்  வாதிடும்  காட்சியில்  எரிமலை  நடிப்பு 


நாயகியின்  காதலனாக  ஜாக் . என்னை  உன்  சுயநலத்துக்காக  உபயோகித்துக்கொண்டாய்  என  சீறும்போது  அனலாகக்கொதிக்கிறார். நாயகியுடனான  கெமிஸ்ட்ரி  நன்கு  ஒர்க்  அவுட்  ஆகி  இருக்கிறது 


 நாயகியின்  கணவனாக   மாத்யூ  கச்சிதமான  நடிப்பு , படம்  பூரா  வீல்  சேரில்  வரும்  கேரக்டர் 


 ப்டத்தின்  மிகப்பெரிய  பலம்  ஒளிப்பதிவு .  தொட்டு  பொட்டு  வைத்துக்கொள்ளலாம்  போல  கண்ணாடி  போன்ற  ஒளி  ஓவியங்கள்  படம்  முழுக்க


ஒரு  காதல்  கதைக்கு  மிக  முக்கியத்தேவைகள்  கண்ணுக்கு  அழகான  நாயகி  , பிரமாதமான  லொக்கேஷன்கள்  ,  ஒளிப்பதிவு , இசை , இவை  அனைத்தும்  நலமாய்க்கூடி  வந்திருக்கிறது  இந்தப்படத்தில் 


இந்தப்படத்தில்  அடல்ட்  கண்ட்டென்ட்ஸ்  இருப்பதால்  18+  ரேட்டிங்  கொடுக்கப்பட்டுள்ளது 

திரைக்கதை  எழுதியவர் டேவிட் மேகி , இயக்கம்  லார் டே  கிளமண்ட்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1  பொதுவாக   ஏழைகள் தான்  மிலிட்ரில  சேருவாங்க, ஏன் எனில்  எபோது  வேண்டுமானாலும்  போரில்  இறக்கலாம்  என்பதால்  உய்ருக்கு  பயந்து  யாரும்  ம்லிட்ரில  சேர  மாட்டாங்க, நாட்டுக்காக  பாடுப்டும்  சிலர்  விதி விலக்கு . ஆனால்  தேச்த்தின்  மீது  எந்த  பற்றும் இல்லாதவரான  நாயகன்  மிகப்பெரும்  பணக்காரனாக  இருந்தும்  மிலிடிரில  சேர்வதற்கான  காரணங்கள்  சரியா  சொல்லப்படலை


2    நாய்கியின்  காதலன்  முன்னாள்  லெஃப்டினெண்ட்  கர்னல் , அவ்ளோ  பெரிய  பதவி  வகித்து  விட்டு  சாதா  சோல்ஜரிடம்  பணியாளாக  வேலைக்கு  சேர  ஈகோ  தடுக்குமே? .


3   நாயகியின்  கணவனால்  ஒரு  குழந்தைக்கு  அப்பா  ஆக  முடியாத  சூழல், ஆனால்  குழந்தை  மீது  கணவனுக்கு  ஆசை, நியாயமாக  ஒரு  கணவன்  செய்ய  வேண்டியது  ஆதரவற்ற  குழந்தையை  தத்து  எடுத்துக்கொள்வது , அல்லது  டெஸ்ட்  ட்யூப்  பேபி   ரெடி  பண்ணுவது. இந்த  இரண்டையும்  முயற்சிக்காமல்  ஒரு  கணவன்  தன்  மனைவியை  மிஸ்கைடு  பண்ணுவது  ஏற்புடையதாய்  இல்லை 


4  நாயகி  தன்  காதலனிடம்  பின்  பாதியில்  சில  ரொமாண்டிக்  டயலாக்   எல்லாம்  அள்ளி  விடறாரு, ஆனா  காதலனை  முதல்  முறை  சந்திக்கும்போதோ  முதல்  பாதி  திரைக்கதையிலோ கண்ணுக்கு  எட்டிய  தூரம்  வரை  காதல்  தென்படவே  இல்லை , காமம்  தான்  தெரியுது 


5  நாயகியின்  காதலனுக்கு  தன்  மனைவி  எங்கே  இருக்கிறாள்  என்பதே  தெரியாது,  டைவர்ஸ்  வாங்க  முடியலை  என்கிறான், ஆனா  மனைவியின்  காதலன்  வந்து  பென்ஷன்  பணம்  கேட்டு  அனுப்பினாள்  என  சொல்லும்போது  அவ  கிட்டே  என்னைக்கூட்டிட்டுப்போ, தர்றேன்  என  சொல்லி    அட்ரஸ்  கண்டு  பிடிச்சிருக்கலாமே? 


6   குழந்தைக்காகத்தான்  என்னை  யூஸ்  பண்ணிக்கிட்டியா? என  காதலன்  நாயகியிடம்  ரொம்ப  வருத்தமாக்கேட்பது  நமக்கு  சிரிப்பு  தான்  வரவைக்குது , ஓ சி ல  திருப்ப்தி  ல்ட்டு  சாப்ட்டுட்டு  அதுல  திராட்சை  கம்மியா  இருக்கே?னு  குறை  சொல்ற  மாதிரி .. வந்த  வரை  லாபம்னு  போகாம  என்னமோ  ஒரு கோடி  ரூபா  முதலீடு  போட்டு  செஞ்ச  தொழில்ல  நட்டம்  வந்த  மாதிரி  ஃபீலிங்  எதுக்கு ? 


ரசித்த  வசனங்கள் 

1   புத்தகங்கள் இருக்கும்  அறையில்  தூங்குவதுதான் ஒரு  ரைட்டருக்கு  பெரிய  இன்ஸ்பிரேஷனாக  இருக்கும் 


2  வாழ்க்கையை  வாழப்பழகுவது  என்பது  வாழ்வின்  வெறுமையை  ஏற்றுக்கொள்வதுதான்


 சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - நாவலாக  இது  பெஸ்ட்  செல்லர்  வரிசையில்  ஏகப்பட்ட  புக்ஸ்  வித்துச்சாம், சாரு  நிவேதிதா  எழுதுன  சில  நாவல்கள்  கூடத்தான்  செம  சேல்ஸ்,  அதுக்காக   அதை  சிலாகிக்க  முடியுமா? குடும்பப்பாங்கான  , கண்ணியமான  ஆண்கள்  மட்டும்  பார்க்க  வேண்டிய  காலைக்காட்சிப்படம்   , ரேட்டிங்  2 / 5 


Lady Chatterley's Lover
Lady Chatterley's Lover (2022 film).png
Official release poster
Directed byLaure de Clermont-Tonnerre
Screenplay byDavid Magee
Based onLady Chatterley's Lover
by D. H. Lawrence
Produced by
Starring
CinematographyBenoît Delhomme
Edited byGéraldine Mangenot
Music byIsabella Summers
Production
companies
Distributed byNetflix
Release dates
  • 2 September 2022 (Telluride)
  • 25 November 2022 (United Kingdom/United States)
  • 2 December 2022 (Netflix)
Running time
127 minutes
Countries
  • United Kingdom
  • United States
LanguageEnglish