Wednesday, October 26, 2022

ALA VAIKUNDAPURRAMULOO (2020) (TELUGU) -சினிமா விமர்சனம் ( வாரிசு படத்தின் ஒரிஜினல் வெர்சன்)

 


ஸ்பாய்லர் அலெர்ட்


இரண்டு  நண்பர்கள் ஒரே  இடத்தில்  பணி  புரிகிறார்கள். அதில்  ஒருவர்  நன்றாக  டெவலப்  ஆகி  பணக்காரர்  ஆகி விடுகிறார்,இன்னொருவர்  அவரிடமே  வேலைக்குப்போகிறார்.  அந்த  பணக்காரரின்  மனைவி , ,  அவர்களிடம்  வேலை செய்பவரின்  மனைவி  இருவரும்  ஒரே  சமயத்தில்  கர்ப்பம்  ஆகி  ஒரே  நாளில்    ஒரே  ஹாஸ்பிடலில்  பிரசவம்  நடக்கிறது


பணக்காரரின்  மனைவிக்குப்பிறக்கும்  குழந்தை அசைவில்லாமல்  இருப்பதைப்பார்த்து  நர்ஸ்  இறந்து  விட்டதாக  தவறாக  நினைக்கிறார். அப்போது   அந்தப்பணியாள்  தன்  குழந்தையைக்கொடுத்து  ஆள்  மாறாட்டம்  செய்து  அங்கே  வைக்கச்சொல்கிறார். அதன் படி  நர்ஸ்  செய்த  பிறகு  இறந்ததாக  நினைத்த  குழந்தை  அசைகிறது .  அப்போ  குழந்தையை  உரியவரிடம்  சேர்த்து  விடலாம்  என  நர்ஸ்  நினைக்கும்போது   அநதப்பணியாள்  அதற்குத்தடை  போடுகிறார்


 இருவருக்கும்  நடக்கும்  தள்ளு முள்ளில்  நர்ஸ்  உயரமான  மாடியில்  இருந்து  கீழே  விழுந்து  கோமாவிற்குப்போகிறார்.  இப்போ  பணியாள்  தன்  குழந்தை  தன்  முதலாளியிடம் வளரட்டும்  வசதியாக , முதலாளியின்  குழந்தை  நம்மிடம்  வளரட்டும்  என  நினைக்கிறார்.


மேலே  நான்  சொன்ன  சம்பவம்  படத்தின்  முதல்  10  நிமிடங்களில்  நடக்கிறது 


20  வருடங்கள்  கழிகிறது 


 முதலாளியிடம்  வளரும்  பணியாளின்  குழந்தை   மக்குப்பிள்ளையாகவும் , தைரியம்  இள்லாதவராகவும்  வளர்கிறது. பணியாளிடம்  வளரும்   பிள்ளை   உண்மை  பேசும்  நல்லவராகவும், துணிவு  உள்ள வாரிசு ஆகவும்  வளர்கிறது


பணக்காரரின்  உண்மையான  வாரிசுதான்  ஹீரோ . 20  வருடங்களாக  கோமாவில்  இருக்கும்  நர்ஸ்  கண்  விழித்து  ஹீரோவிடம்  உண்மையை  சொல்கிறார். இதற்குப்பின்  ஹீரோ  நடத்தும் சாக்சங்கள்  தான்  கதை 


 ஹீரோவாக  பணக்காரரின்  வாரிசாக  அல்லு  அர்ஜூன்  அமர்க்களமான  நடிப்பு . டான்ஸ் , ஃபைட்  காட்சிகளில்  பட்டையைக்கிளப்புகிறார். செண்ட்டிமெண்ட்  காட்சிகளில்   உருக  வைக்கிறார்.  காதலியிடம்  வழிவதில்  அக்மார்க்  ஆண்  முத்திரை  பதிக்கிறார்


ஹீரோயினாக  பூஜா  ஹெக்டே .  பாடல்  காட்சிகள்  தவிர  அவருக்குப்பெரிதாக  வேலை  எதுவும்  இல்லை 


‘ ஹீரோவுக்கு  அடுத்து  அதிக  காட்சிகளில்  நடிக்க  வாய்ப்பு  ஹீரோவின்  அப்பாவாக  நடிக்கும் பணியாள்  தான்.முரளி  சர்மாவின்  நடிப்பு  அதகளம்.  காலை  ஒரு  மாதிரி  சாய்த்து  சாய்த்து  நடப்பது , முகத்தில்  பேராசை  கண்களில்  வெறுப்பு  அவர்    அட்டகாசமான  முக  பாவனை, உடல்  மொழி


அவருக்கு  இணையாக  ரோகினி  அதிக  காட்சிகள்  அவருக்கு  இல்லை 


ஹீரோவின்  உண்மையான  அப்பாவாக  ஜெயராம்  ஹேர்  ஸ்டைலில்  நடிப்பில்  வசீகரிக்கிறார்.  ஹீரோவின்  உண்மையான  அம்மாவாக  தபு . இவருக்கும்  அதிக  வாய்ப்பில்லை 


நர்சாக  வரும்  ஈஸ்வரிராவ்  குறை  சொல்ல  முடியாத  நடிப்பு . இவர்கள்  போக  நவ்தீப் , சுஷாந்த்,  சுனில், நிவேதா  பெத்து ராஜ்   என  நட்சட்திரப்பட்டாளமே  இருக்கிறது 


 சமுத்திரக்கனி  வில்லனாக  வருகிறார். குணச்சித்திர  நடிப்பில் அப்பாவாக, தத்துவம்  பேசும்  போராட்டக்காரராகவே  பார்த்த  நமக்கு  அவரது  வில்லத்தனம்  என்னவோ  போல்  உள்ளது


தமனின்  இசையில்  பாடல்கள்  எல்லாமே  ஹிட் தான் . அதற்கு  அமைக்கப்பட்ட  நடனங்கள்  அருமை 


முதல்  பாதியில்  விறுவிறுப்பாக  கலகலப்பாகப்போகும்  திரைக்கதை  பின்  பாதியில்  குறிப்பாக  கடைசி  20  நிமிடங்கள்  பாசப்போராட்டமாக  இழுவை  போல்  தோன்றுகிறது . எடிட்டிங்கில்  இன்னும்  ட்ரிம்  பண்ணி  இருக்கலாம் 


பி எஸ்  வினோத்  ஒளிப்பதிவு  கண்ணுக்கு  இதம் .  பல  காட்சிகளில்  பிரம்மாண்டம், ஆர்ட்  டைரக்சனும்  அருமை 


இந்தப்படம்  நெட் ஃபிளிக்சில்  கிடைக்கிற்து



ரசித்த  வசனங்கள் 


1   வீட்டில்  தீபம்  எரிந்தால்  அது  அந்த  வீட்டுக்கு  மட்டும்  தாம்  வெளிச்சம்  கொடுக்கும், ஆனா  அதே  தீபம்  கோவிலில்  இருந்தால்  அந்த  ஊருக்கே  வெளிச்சம்  கொடுக்கும்


2  நான்  பொய்  சொன்னா  எனக்குத்தலைவலி  வந்துடும், உண்மை  சொன்னா  மத்தவங்களுக்குத்தலைவலி  வந்துடும் 


3   நிஜத்தை  சொல்லும்போது  மட்டும்  தான்  பயமா  இ ருக்கும்,  சொல்லாம  விட்டுட்டா  ஒவ்வொரு  நிமிசமும்  பயமா  இருக்கும் 


4 குழந்தையைப்பெத்து  எடுக்கும்போது  மட்டும்தான்  அம்மாவுக்கு  வலி , ஆனா   அதுக்குப்பின்  வாழ்நாள்  முழுதும்  அப்பாவுக்கு  வலி 


5  யோவ், என்னய்யா  கீழேயே  பார்க்கறே?  மேலே  பாரு


 சாரி  மேடம், நான்  உங்களுக்குக்கீழேதானே  வேலை  பார்க்கிறேன், மேட்சுக்கு  மேட்ச்


6  கல்யாணம்  ஆன  புதுசுல  தம்பதி  பெட்ரூம்  கதவை  சாத்துனா  அவங்க  பேசறது  வெளில  கேட்கக்கூடாதுனு  நினைக்கறாங்கனு  அர்த்தம், கல்யாணம்  ஆகி  பல  வருடங்கள்  கழித்து பெட்ரூம்  கதவை  சாத்துனா  அவங்க  ரெண்டு  பேரும்  பேசிக்காம  இருப்பது  வெளில  தெரியாம  இருக்கனும்னு  அர்த்தம் 


7  சம்பாதிக்கனும்னு  சொல்ற  பொண்டாட்டில்  எல்லாருக்கும்தான்  கிடைப்பா, ஆனா  சம்பாதிச்சது  போதும்  அப்டினு  சொல்ற  பொண்டாட்டி  சிலருக்கு  மட்டும்தான்  கிடைப்பா 


8  மேலே  இருந்து  உன்னைக்கீழே  கொண்டு  வர  25  நிமிசம்  போதும் ஆனா  கீழே  இருந்த  உன்னை  மேலே  கொண்டு  வர  25  வருடங்கள் ஆகிடுச்சு 


9  பிரச்சனையை  அப்படியே  விட்டுட்டு  வந்துட்டா  எக்சாம்  ஹால்ல  ஆன்சர்  பேப்பரை  பிளாங்க்கா  குடுத்துட்டு  வர்ற  மாதிரி   இருக்கும் , மனசுக்கு  ஒரு  நிறைவைத்தராது 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ், திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


 1  பொதுவா   டெலிவரிக்கு  ஒரு  பொண்ணு  ஹாஸ்பிடல்  வருதுன்னா  அவங்க  கூட  பெண்  வீட்டு  சொந்தம்  புருசன்  வீட்டு  சொந்தம்னு  பலர்  இருப்பாங்க,  குறிப்பா  பெண்ணின்  அம்மாவோ  சகோதரியோ  கூடவே  இருப்பாங்க, ஆனா  பணக்காரப்பெண்ணான  தபுவின்  டெலிவரி  டைமில்  கண்ணுக்கு   எட்டின  தூரம்  வரை  யாரையும்  காணோம் (  அப்பதானே  குழந்தையை  மாத்த  முடியும்னு  டைரக்டர்  நினைச்ட்டார்  போல )


2    அவ்ளோ  பெரிய  ஹாஸ்பிடலில்  ஒரு  நர்ஸ்  கூட  ஃபைட்  பண்ணி  ஆள்   தள்ளிவிடறார்  அதை  யாரும்  பார்க்கலை 


3  20  வருடங்களாக  கோமாவில்  இருக்கும்  நர்சால்  நமக்கு  என்றாவது  ஆபத்து  வரலாம்  என  வில்லன்  நினைக்கவே  இல்லை , அசால்டா  நர்சை  விட்டுடறான் 


4   ஹீரோ  ஹீரோயின்  முகத்தைப்பார்த்துதான்  பொதுவா  லவ்  வர்ற  மாதிரி  காட்டுவாங்க , இதுல  ஹீரோ மிடி  போட்டுட்டு  வர்றாரு  அவரோட  தொடை  அழகைப்பார்த்து  ஹீரோ  லவ்வறாரு  என்ன  கொடுமை  சார்  இது ?  


5  மேஜர்  சுந்தர்ராஜன்  பாணில  ஜெயராம்  அடிக்கடி “  ஓக்கே   நான்  பேசறேன், ஐ  வில்  ஸ்பீக்   அப்டினு  2  மொழில  ஒரே  டயலாக்கை  எதுக்கு  பேசறாரு ?


6 ஹீரோவோட  தாத்தா  சர்ட்ல  கீழே  விழுந்த  கறை  இருக்கு , அப்படியே  சாக்கடை  மண்  எல்லாம்  ஒட்டி  சேறு  பூசி  இருக்கு, அதைப்பார்த்து  வெகுண்டு  10  நிமிசம்  ஃபைட்  போட்டுட்டு  வரூம்போது  சர்ட்  நார்மல்  ஆகிடுது , வாஷிங்  மிஷின்ல  போட்டு  டிரையர்ல    ஹாய  வெச்சு  அயர்ன்  பண்ணினாக்கூட  அவ்ளோ  குயிக்கா  ஆகாது 


சி பி எஸ்  ஃபைனல்  கமென்ட் -   ஜாலியான   கமர்ஷியல்  மசாலாவாதான்  படம்  போகுது ,  கடைசி  20  நிமிடங்கள்  மட்டும்  ஸ்லோ ,  பார்க்கலாம்  ரேட்டிங் 2.5 / 5


வாரிசு  படத்தின்  ஃபர்ஸ்ட்  லுக்  போஸ்டரில்  வந்த  போஸ்  படத்தில்   முதல்  பாதியில்  வருது  


Saturday, October 22, 2022

காதல் கவிதை (1998) (தமிழ்) - சினிமா விமர்சனம் ( ரொமான்ஸ்) @ ஜெ மூவிஸ்


 ஒரு  கே  பாலச்சந்தருக்கோ , பாரதிராஜாவுக்கோ  கிடைக்காத  பெருமை  இயக்குநர்  அகத்தியனுக்கு  உண்டு . இந்திய அரசின்  சிறந்த  இயக்குநருக்கான  தேசிய  விருதைப்பெற்ற    முதல்  தமிழ்  இயக்குநர்  என்ற  பெருமைதான்  அது . 1996ல்  ரிலீஸ்  ஆன  காதல்  கோட்டை  என்ற  படத்துக்குக்கிடைத்தது. அந்தப்படத்தின்  பிரம்மாண்ட  வெற்றி  1997-1998  ஆகிய  இரு  வருடங்களில்  டைட்டிலில்  காதல்  என்ற   சொல்லை  வைத்து  34  படங்கள்  ரிலீஸ்  ஆகக்காரணமாக  அமைந்தது . 


இவரது  முதல்  படம்  மாங்கல்யம்  தந்துனானே  சுமாராப்போனாலும்  அடுத்த படமான   வான்மதி  கமர்ஷியல்  சக்சஸ். மூன்றாவது  படமான  காதல் கோட்டை  அதிரி  புதிரி  ஹிட்  ஆகி  கமர்ஷியலாகவும்  கலெக்சன்  விமர்சனரீதியாகவும்  பாராட்டுக்களைக்குவித்தது. நான்காவதாக அதே  1996ல்  குறுகிய  கால  தயாரிப்பாக  கோகுலத்தில்  சீதை  ரிலீஸ்  ஆகி  ஹிட்  ஆனது . . ஐந்தாவது  படமான  விடுகதை  ஒரு  பரிசோதனை  முயற்சி . அட்டர்  ஃபிளாப். 


ஆறாவது  படம்  அவருக்கு  புக்  ஆகறப்போ  காதல்  கோட்டை  டைப்லயே  ஒரு  கதை  ரெடி  பண்ணுங்கனு  கேட்டிருப்பாங்க  போல 

ஸ்பாய்லர்  அலெர்ட்


ஹீரோ  ஒரு  பெரிய  தொழில்  அதிபர் , ஏகப்பட்ட  பிஸ்னெஸ்  பண்றவர்.  ஹீரோயினும்  வசதிதான்  , அசிஸ்டெண்ட்  கமிஷனரின்  மகள் . இருவரும்  அடிக்கடி  மீட்  பண்ணிக்கறாங்க . ஒவ்வொரு  சந்திப்பின்  இறுதியும்  மோதலில் தான்  முடியுது . 


ஹீரோ  லண்டன்  போறாரு , அங்கே  டயானா  கல்லறைக்குப்போறாரு. ஆனந்த  விகடன்  சொல்வனம் , கணையாழி  இந்த  இரண்டிலும்  கவிதை  வந்தா  அது  படைப்பாளிக்குப்பெருமை. நல்ல  நல்ல  கவிதைகள்  எல்லாம்  வரும். அதுல  வந்தாலே  ஒரு  கெத்துதான், ஆனா  தினத்தந்தி  குடும்ப  மலர்ல  மொக்கைக்கவிதைகள்  எல்லாம்  வரும்


அன்பே!  அன்னக்கொடி , உன்  இதயச்செடியில்  பூக்கும்  காம்பாக  நினைத்தேன் , நீ என்னை  வேம்பாக  நினைத்தாய்  அலட்சியம்  என்னும் அம்பால்  துளைத்தாய்... இந்த  மாதிரி  மொக்கைக்கவிதைகள்  எல்லாம்  வரும் . இதை  விட  மொக்கையா  டயானா  பற்றி  ஒரு  கவிதை  எழுதி  ஹீரோ  அந்த  சமாதில  வெச்சுட்டு  வர்றாரு. அதே  சமாதிக்கு  ஹீரோயின்   வந்து  கேவலமான  மொக்கைக்கவிதையைப்படிச்சுட்டு  ரொம்ப  சிலாகிச்சு  அதுக்கு  பதில்  கவிதை  எழுதி  வெச்சுட்டு  வருது 


அந்த  பதிலைப்பார்த்து  ஹீரோ மறுபடி ஒரு  கவிதை  எழுதி  வைக்க  என்ன  படம்  இப்படியே  இழுத்துக்குமா? என  நினைக்கும்போது    யூ டர்ன்  அடிக்குது


  காதல்  கோட்டை , மூன்றாம்  பிறை  இந்த  மாதிரி  மெகா  ஹிட்  காதல்  படங்களில்  எல்லாம்  திரைக்கதைல  ஒரு  பக்கம்  தெய்வீகக்காதல்  ஓடிட்டு  இருக்கும்  , இன்னொரு  பக்கம் ஹீரோவை  வாலண்ட்டிரியா  விரட்டி  விரட்டி  காதலிக்கும்  ஒரு  டிராக்  ஓடிட்டு  இருக்கும்


 ஆனா  நிஜ  வாழ்வில்  எனக்குத்தெரிஞ்சு  எந்தப்பெண்ணும்  ஆம்பளையைத்தேடிப்போய்  மேல  விழுந்து  விழுந்து  எல்லாம்  லவ்  பண்ணிட்டு  இருப்பதில்லை 


 ஹீரோ  ஆஃபீஸ் ல புதுசா  வேலைக்கு  சேர்ந்த  பெண்  ஹீரோவை  ஒருதலையா  லவ்வுது .ஆனா  ஹீரோ  கண்டுக்கவே  இல்லை 


ஹீரோயினும்  இந்த   ஆஃபீஸ்  பொண்ணும்  ஆல்ரெடி  தோழிகள் . ஹீரோ  கிடைக்காததால  அந்த  ஆஃபீஸ்  பொண்ணு  ஹீரோயின்  கிட்டே  இவன்  யாரையும்  காதலிக்க  மாட்டான் ,  அலைய  விடுவான்  அப்டினு  சர்ட்டிஃபிகேட்  தர்றா 


நிஜ  வாழ்வில்  நேருக்கு   நேர்  ஆல்ரெடி  சந்திக்கும்போது  எலியும்  பூனையுமா  அடிச்சுக்கிட்டு  இருக்கும்  இவர்கள்  இருவரும்  அந்த  மொக்கைக்கவிதையால   இவங்க  தான்  தான்  தேடும்  துணை  என்பது  தெரியாமல்  காதலிக்கறாங்க . இவங்க  காதல்  எப்படி  வெற்றி  பெற்றது  என்பதுதான்  திரைக்கதை 


 ஹீரோவா  பிரசாந்த் . வைகாசி  பொறந்தாச்சுனு  ஒரு  படம்  ஈரோடு  ரவில  ரிலீஸ்  ஆகி  75  நாட்கள்  ஹவுஸ்ஃபுல்லா  ஓடுச்சு . அப்பவே  பிரசாந்த்  பரபரப்பா  பேசப்பட்டாரு .  தமிழ்  சினிமாவில்  மீசை  இல்லாமல்  நடித்து  ஹிட்  படங்கள்  கொடுத்த  ஹீரோக்கள்  இருவர்தான்  1  கமல்  2  பிரசாந்த் 


  கண்டு  கொண்டேன்  கண்டு  கொண்டேன்  படத்தில்  அஜித்  ரோலில்  முதலில்  புக்  ஆனவர்  பிரசாந்த்தான்  ஆனா  ஐஸ்வர்யா ராய்  தான்  தனக்கு  ஜோடியா  வேணும்  தபு  வேணாம் என்றதற்காக  அந்த  வாய்ப்பை  இழந்தவர் (  எனக்கு  ஒரு  டவுட்  அதுதான்  ஆல்ரெடி  ஐஸ்  கூட  டூயட்  பாடிட்டமே  தபு  கூட  புதுசா    டூயட்  பாடலாம்கற  தொலை  நோக்கு  சிந்தனை  ஏன்  அவருக்கு  இல்லாம  போச்சு  தெரில , தட்  மொமெண்ட்  பெட்ரோமாக்ஸ்  லைட்டேதான்  வேணுமா? }


பிரசாந்த்  மீசை  இல்லாமல்  நடித்ததில்  மிக  அழகா  தோன்றிய  படங்கள் 3    தான்  கண்ணெதிரே  தோன்றினாள்  , ஜீன்ஸ்  ,  காதல்  கவிதை 


  ஹீரோ  நடிப்பு  நல்லாருக்கும் 


ஹீரோயினாக  இஷா  கோபிகர் . இவரது  அழகு  விசித்திரமானது . சைடு  போசில்  லாங்க்  ஷாட்டில் அழகாக  இருப்பார் , ஆனா  க்ளோசப்  ஷாட்டில்  என்னமோ  மாதிரி  இருப்பார் . இவரது    ஹேர்  ஸ்டைல்  நல்லாருக்கும் 


 ஆஃபீஸ்  லேடியாக  கஸ்தூரி . இவர்  பாடும்  தத்தோம்  தகதிமித்தோம்  பாட்டு  ரிலீஸ்  டைமில்  தியேட்டரில்  அதகளமான  ஆர்வாரத்துடன்   ஒன்ஸ்மோர்  கேட்கப்பட்ட  பாடல் . கண்ணியமாக  படமெடுக்கும்   அகத்தியன்  கிளாமரை  நம்பிய  பாடல்  அது 


ஹீரோவின்  அம்மா, அப்பாவாக  அம்பிகா  மணிவண்னன்  கச்சிதமான  நடிப்பு . அதில்  அம்பிகா  ஆரம்பத்தில்   ஹிஸ்டீரியா  வந்த  மாதிரி  கேரக்டராக  டிசைன்  பண்ணப்பட்டிருப்பார் .


 ஹீரோயின்  அம்மா  அப்பாவாக  ஸ்ரீவித்யா  - ராஜீவ் கச்சிதமான  நடிப்பு ‘’


 சார்லி  ஹீரோவுக்கு  நண்பனாக  வருகிறார் 


 படத்தில்  வில்லன்  , ஃபைட்  எதுவும்  கிடையாது 


ஓப்பனிங்கில்  ராஜூ  சுந்தரம்  -  ரோஜா  கெஸ்ட்  அப்பியரன்சில்  ஆளான  நாள்  முதலா  யாரையும்  நான்  தொட்டதில்லை  என  சூப்பர்  கிட்டான  பாடல்  உண்டு  அந்தப்பாடலில்  வரும்  “ உன்னை  நான்  கட்டிக்கிட  என்னைக்குமே  நினைச்சதில்லை  என்ற  வரி  மறைமுகமாக  அப்போது  ராஜூ  சுந்தரம்  காதலித்து  வந்த  சிம்ரனுக்கான  செய்தி  என்ற  கிசு  கிசு  உலா  வந்தது 


  ரவியாதவின்  ஒளிப்பதிவு  பிரம்மாண்டம் . இசை  இளையராஜா . 7  பாட்டில் 3  பாட்டு  செம  ஹிட்டு 



 சபாஷ்  டைரக்டர் 


1   இந்தக்கதையை  சென்னையிலேயே  எடுத்து  முடிச்சிருக்கலாம், ஆனா  லண்டன் , இத்தாலி  டோக்கியோனு    ஊர்  சுத்திப்பார்க்க  ஆசைப்பட்டு  தயாரிப்பாளர்  செலவில்  ஓ சி    டூர்  போன  சாமார்த்தியம், 


2   கதைக்கு  சம்பந்தமே  இல்லாத  ரோஜா -  ராஜூ  சுந்தரம்  சாங்கை  திரைக்கதையில்  இணைத்த  விதம் 

3  மொக்கைக்காமெடி  டிராக் ,  வில்லன் , ஃபைட்  எல்லாம்  எதுவும்  வைத்து  நம்மை  சோதிக்காமல்  இருந்தது 


ரசித்த  வசனங்கள் 


1   ஒருத்தர்  ஒரு  பிஸ்னெஸ்  பண்ணி  அதுல  நட்டம்  வந்துட்டா  வேற  யாரும்  அந்த  பிஸ்னெஸ்  பண்ண  முன்  வர்றதே  இல்லையா? அது  போலதான்  காதலும், சில  பேர்  காதலில்  தோத்துட்டாங்க  என்பதற்காக  காதலே  இல்லைனு  ஆகிடாது 


2   தங்கத்துல  செஞ்சாலும்  விறகு  விறகுதான். அது  மாதிரி  தான்  கோடிக்கணக்கா  சொத்து  வெச்சிருந்தாலும்  வீட்டுப்பெண்களை  வீட்டுலயே  அடைச்சு  வெச்சிருக்கக்கூடாது  . நாலு  இடத்துக்கு  வெளில  கூட்டிட்டுப்போகனும்


3  ஆண்கள்  பெண்களுக்கு  உதவி  பண்றப்போ  அவன்  ஜொள்ளு  கேஸ்னு  கிண்டல்  பண்றதை  எப்போ பெண்கள்  நிறுத்தறாங்களோ  அப்பதான்  உருப்படுவாங்க 


4   சில  நேரங்களில்  நாம்  சொல்வது  , செய்வது  இதெல்லாம்  பைத்தியக்காரத்தனமாத்தெரியும் , ஆனா  அதை  செஞ்சு  முடிச்ச  பின்  நம்ம  மனசுக்கு  ஒரு  திருப்தி  கிடைக்கும்   அதுதான்  ஜாப்  சேட்டிஸ்ஃபேக்சன்

 5  உங்க  கனவுல  நான்  வர  முடியாது , ஏன்னா  மத்தவங்களால  அடைய  முடியாத  கனவு நான் 


6   வீட்ல அழகான  பொண்டாட்டி  இக்ருக்கும்போது  நீங்க  இப்படி  தப்பு பண்ணலாமா? 


 ஏம்மா  மின்னல், நீ  வந்த  மேட்டரை  மட்டும்  சொல்லு , பொண்டாட்டி  அழகா? இல்லையா?னு  எங்களுக்குத் தெரியும் 


7   கடைக்காரரே   குடிக்கத்தண்ணி  கிடைக்குமா?  ‘


  பாக்கெட்ல  வேணா  வாங்கிக்குங்க 


  பாக்கெட்ல  தண்ணீர்  வாங்கினா  ஒழுகுமே?


  யோவ்  பாக்கெட்  வாட்டர்


8  சார்  நான்  வாழ்க்கைல  உயரனும்  ஹெல்ப்  பண்ணுங்க 


 உதவின்னா  ஒரு  எம் ஜி யார்  அளவு  வளர்த்து  விட்டா  போதுமா? 


9  அழகான  பொண்ணுங்களுக்கு  ரோட்ல  போற  எல்லா  வண்டிகளுமே  சொந்த  வண்டி தான்  லிஃப்ட்  கேட்டா  கிடைக்கும் 


10   அவ  காதலிக்கறது  உண்மையா  இருந்தா  இன்னைக்கு  நைட்  நல்லா தூங்க  முடியாது. அப்படி  இல்லாம  அவ  தூங்கிட்டா  அது  உண்மையான  காதலா  இருக்காது 


11  மிஸ் , இப்போ எதுக்கு  உங்க  பர்சை  வெளில  எடுக்கறீங்க > 


  யோவ்  அது  சாப்பாடு  , டிஃபன்  பாக்ஸ் 


12  தமிழ்  நாட்டோட  மக்கள்  தொகை  50  கோடி  இருந்தா  அதுல  49  கோடிப்பேரு  கவிதை  எழுதறவனாத்தான்  இருக்காங்க 


13  நான்  எப்பவோ  சொன்ன  ஒரு  பொய்க்காக  என்னை  வெறுக்கறீங்க , ஆனா  எப்பவுமே  பொய்  சொல்ற  கவிதைகளை  ரசிக்கறீங்க 


14  நான்  உங்களை  மாப்ளைனு  ஒரு  விளையாட்டுக்குத்தான்  கூப்பிட்டேன் , சீரியசா  எடுத்துக்காதீங்க 


நான்  ஒரு  பெண்ணை  ஆல்ரெடி  லவ்  பண்றதா  சொன்னேனே  அது  சீரியஸ்  தான்  விளையாட்டா  எடுத்துக்காதீங்க 


15 நான்  எழுதுன  கவிதைகளை  தர்றேன்  படிச்சுப்பாருங்க ‘


 அழகானதை  ரசிக்கலாம்  புத்திசாலித்தனம்  இருந்தா  பிரிண்ட்  பண்ணலாம் 


லாஜிக்  மிக்ஸ்டேக்ஸ்  , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1  ஹீரோயின்   லண்டன்ல  டயானா  சமாதில  தன்  கைப்பட  தான்  கவிதை  எழுதி  பேப்பர்ல  வைக்கறாங்க.  அதே  ஹீரோயின்  தன்  கவிதைகளைப்படிச்சுப்பாருங்கனு  குடுத்ததும்  அவர்  கைபப்ட  எழுதுனதுதான்  .  டைப்பண்ணதுனு  சமாளிக்க  வழி  இல்லை, ஏன்னா  க்ளோசப்  ஷாட்ல  சிக்னேச்சர்  தெரியுது , அப்போ  ஹீரோவுக்கு  இரண்டும்  ஒரே  ஆள்  தான்  என்பது  தெரியலையா? 


2  ஹீரோவுக்கு  கஸ்தூரியைப்பிடிக்கலை . அதை  அவர்  ப்ரப்போஸ்  பண்ணப்பவே  தேங்காய்  உடைச்ச  மாதிரி  சொல்லி  இருக்கலாமே?  ஹோட்டலுக்கு  வாங்கனு  நடக்கடிச்சு   ஒரு  பாட்டுப்பாடி  எதுக்கு  இழுக்கனும் ?


3    கஸ்தூரி  ஹீரோவை  லவ்  பண்றதா  சொல்ற  சிச்சுவேஷன்ல  லவ்  மூட்  சுத்தமா  இல்லை , சில்க்ஸ்மிதா  ஹஸ்கி  வாய்ஸ் ல  நேத்து  ராத்திரி  யம்மா  தூக்கம்  போச்சுடி  சும்மா  அப்டினு  விரகதாபத்துல  பேசற  மாதிரி தான்  ஐ  லவ்  யூ  சொல்லுது 


4   கவிதை  பேப்பர்  வைக்கும்  ஹீரோயின்  யார்  என  கண்டுபிடிப்பது  ஈசி ,  ஹீரோ  அங்கேயே  வெயிட்  பண்ணினா  ஹீரோயின்  வரும்  வைக்கும்  பார்த்து இருக்கலாம், அதை  விட்டுட்டு  50,000  ரூபா  செலவு  பண்ணி  பிரைவேட்  டிடெக்டிவ்  ஏஜென்சி  வெச்சு  அதுக்கு  தலைவாசல்  விஜயை  புக் பண்ணி  அவருக்கு  வேற  தண்டமா சம்பளம் 


5  டயனா  சமாதில  லட்சக்கணக்கான  பூ  பொக்கேக்கள்  கவர்கள்  எல்லாம்  வரிசையா  இருக்கு , இவங்க  வைக்கற  லவ்  லெட்டர்  கரெக்டா  எப்படி  அவங்க கைக்கு  சேருது?


6  ஹீரோ  ஹீரோயின்  ரெண்டு  பேர்  எழுதுன  மொக்கைக்கவிதைகளும்  இங்க்  பேனாவில் தான்  எழுதி  இக்ருக்காங்க  லண்டன்ல  எப்பவும்  மழை  அல்லது  பனி  இருக்கும், இங்க்  அழிஞ்சிடாதா?  லெட்  பேனாவில்  எழுதி  இருக்கலாம் 


 சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்=  சும்மா  கலாய்ப்புக்காக  கிண்டலா  சில  விஷயங்கள்  எழுதி  இருந்தாலும்  இது  ஒரு  ஹிட்  படம் , ஈரோடு  ஆனூரில் 40  நாட்கள்  ஓடிய  படம்,  பார்க்காதவங்க  பார்க்கலாம்  ரேட்டிங்  2.75  / 5   விக்டன்  மார்க்  43 







Kaadhal Kavithai
Kaadhal Kavithai poster.jpg
Poster
Directed byAgathiyan
Produced byMurali Manohar
Starring
CinematographyRavi Yadav
Edited byLancy-Mohan
Music byIlaiyaraaja
Production
company
Metro Film Corporation
Release date
  • 25 December 1998
Running time
145 minutes
CountryIndia
LanguageTamil

AMMU (2022) (அம்மு) - (தெலுங்கு) - சினிமா விமர்சனம் ( டொமெஸ்டிக் வயலனஸ்) @ அமேசான் பிரைம்

 


ஒரு  திரைக்கதை வெற்றி பெறனும்னா  அதில்  உள்ள  வில்லன்  கேரக்டர்  டிசைன்  வலுவாக  அமைக்கனும், இப்பேர்ப்பட்ட  வில்லனை  ஹீரோ  எப்படி  ஜெயிக்கப்போறார்  என்ற  எதிர்பார்ப்பு  ரசிகர்கள்  மனதில்  எழனும். தமிழ்  சினிமாவில்   வில்லனின்  கேரக்டர்  வலுவாக  அமைக்கப்பட்டு  வெற்றி  கண்ட  படங்கள்  பட்டியல்  கேப்டன் பிரபாகரன்  (வீரபத்ரன் )    பாட்ஷா  (  மார்க்  ஆண்ட்டனி)  ,  வேட்டையாடு  விளையாடு   (  இளமாறன் , அமுதன் )  

ஸ்பாய்லர் அலெர்ட் 


நாயகன்  ஒரு  போலீஸ்  ஆஃபீசர். அவருக்கு  அவரோட  பக்கத்து  வீட்டுப்பெண்ணுடன்  திருமணம்  நடக்குது . கொஞ்ச  நாள்  திருமண  வாழ்க்கை  நல்லாதான்  போய்க்கிட்டு  இருக்கு . திடீர்னு  நாயகனின்  சுய  ரூபம்  நாயகிக்கு  தெரிய  வருது.  பணி  புரியும் இடத்தில்   ஏதாவது  பிரச்சனைன்னா  நாயகன்  தன்  கோபத்தை  மனைவி  மேல  காட்ட  ஆரம்பிக்கறார். ஒரு  கட்டத்துல  கை நீட்டி மனைவியை  பளார்னு அடிச்சுடறார்


  நாயகிக்கு  அதைத்தாங்கிக்கவே  முடியல, ஜீரணிக்கவும்  முடியல . இது  தொடர்கதை  ஆகுது .  முதல்ல நாயகி  தன் அம்மாவிடம் புகார்  ப்ண்றார்., ஆனா  அம்மா  சகித்துக்கொண்டு  வாழ், நான்  அப்படிதான்  வாழ்ந்தேன்  என்கிறார். இப்படிச்சொன்னது  நாயகிக்கு  பெரிய  அதிர்ச்சி 


தன்  மேல் கணவன்  பிரயோகிக்கும்  வன்முறை  பொறுக்க  முடியாமல்  போலீஸ்  உயர்  அதிகாரியிடம்  புகார்  கொடுக்க  நாயகி  டிஐஜி  ஆஃபிஸ்க்கு  போய்டறாங்க.,ஆனா  அங்கே  கணவன்   வந்து  சமாதானம்  பண்ணிக்கூட்டிட்டுப்போய்டறான்


இதுக்குப்பின்  நாயகி   எப்படி  தன்  கணவனை  சமாளிக்கிறாள்/ கணவனைப்பழி  வாங்க  அவர்  போடும்  திட்டம்  என்ன?  அதில்  வெற்றி பெற்றாரா? என்பது  திரைக்கதை 


நாயகன்  ரவியாக  போலீஸ்  ஆஃபீசராக   நவீன்  சந்திரா. புரியாத புதிர்  ரகுவ்ரன்  .  கல்கி  பிரகாஷ்  ராஜ் , நெஞ்சம்  மறப்பதில்லை  எஸ்  ஜே  சூர்யா போன்ற  சைக்கோ  கேரக்டர்  நடிப்பில்  பின்னிப்பெடல்  எடுத்த  நடிகர்கள்  பட்டியலில்      நவீன்  ச்ந்திராவும்  சேர்கிறார். பயமுறுத்தும்  நடிப்பு . எப்போ  இவர்  என்ன  செய்வாரோ  என  நடுங்க  வைக்கிறார். . துன்புறுத்தி  விட்டு திடீர்  என  நல்லவன்  போல் சாந்தமாக  உரையாடுவது   அருமை 


  நாயகியாக   அம்முவாக  ஐஸ்வ்ர்யா   லட்சுமி .இவரது  கேரக்டர்  பரிதாப  கொள்ள  வைக்கிறது   என்றால்  இவரது  அட்டகாசமான நடிப்பு  இதோ விருது  தேடி  வருது  என  சொல்ல  வைக்கிறது. கணவன்  முதன்  முதலாக  தன்னை  அடிக்கும்போது  காட்டும்  அதிர்ச்சி அபாரம் . அதே  போல் அம்மாவுடன்  நிக்ழும்  குளத்தங்கரை  உரையாடல்   பிரமாதம் 


நாயகிக்கு  உதவுபவராக ,  இரு கொலைகள்  செய்த  கைதியாக  பாபி சிம்ஹா  கனகச்சிதமான  நடிப்பு .போலீஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டரையே  தாக்கும்போது  ஆக்ரோசம்  காட்டுகிறார். 


நாயகியின்  அ ம்மாவாக  வரும் மாலா  பார்வதி    சில  காட்சிகளே  வ்ந்தாலும்  கவனம்  ஈர்க்கிறார். பிச்சைக்கரனாக  ஒரே  ஒரு காட்சியில்  வரும் ரகுபாபுவின்  நடிப்பும்  அருமை 


லேடி  போலீஸ்  கான்ஸ்டபிளாக வரும்  அ ஞ்சலி அமீர் , சத்யா க்ருஷ்ணா  இருவரு,ம்  தங்கள்  பாத்திரத்தை உணர்ந்து  நடித்திருக்கிறார்கள் 

சாருகேஷ்  சேகர்  இயக்கி  இருக்கிறார்.  ஆரம்பத்தில்  மெதுவாகப்போகும்  திரைக்கதை  பிற்பாதியில்  நாயகி  பழி  வாங்க  ஆரம்பிக்கும்போதுதான்  வேகம்  எடுக்கிறது . ஆனால்  அவ்ளோ  கொடுமை  செயத  கணவன்   அலுவலகத்தில்  சஸ்பென்ஸன்  வாங்கினாப்போதும்  என  நாயகி  நினைப்பது ஏனோ ? 


கணவன்  கொடுமை  செய்வதை  ஆதாரப்பூர்வமா  நிரூபிக்கனும் என  பாடம்  சொல்லித்தரும்  வகையில்  இந்த  கதைக்கருவைப்பாராட்டலாம்,


 இதே  க்தைக்கருவில்  முன்பு  வந்த  தப்பட்  ஹிந்திபடம் , நெட்ஃபிளிக்சில்  ரிலீஸ் ஆன  டார்லிங்க்ஸ்  போன்ற  படங்கள்  ஏற்படுத்திய  பாதிப்பை  விட  இந்தப்படத்தின்  திரைகக்தை  அதிக  பாதிப்பை  ஏற்படுத்தி  இருக்கிறது 


இரு  பாட;ல்கள்  நன்றாக  இருக்கிறது .அபூர்வாவின் ஒளிப்பதிவு கச்சிதம் . ராதா ஸ்ரீதரின்   எடிட்டிங்      ரெண்டே  கால்  மணி  நேரத்தில்   டைம்  ட்யூரேஷன்   கட்  பண்ணி  இருக்கு 



ரசித்த   வசனங்கள்


1    புண்ணிய்த்துக்கு  ஏத்த  பொண்டாட்டினு  சொல்வாங்க. போன  ஜென்மத்துல  நாம  எந்த  அளவு  புண்ணியம்  பண்ணி  இருக்கோமோ  அந்த  அளவு   நல்ல  பொண்டாட்டி  நமக்கு  இந்த  ஜென்மத்துல  கிடைக்கும் 


2   காமம்  ஒரு  வாரம்  இருந்தா  காதல்  ஒரு  மாசம்  இருக்கும்பாங்க , அதுக்குப்பின்  மரணத்துக்காக  காத்துட்டே  இருக்க  வேண்டியதுதான்


3    மாப்ளை  சொக்கத்தங்கம்


 அம்மா, அவரு  என்னை  அடிச்சாரு 


  நீ என்ன  தப்பு  பண்ணுனே?


 நாந்தான்  தப்பு  பண்ணி இருப்பேன்னு  நீயா  எப்படிம்மா  முடிவு  எடுத்தே?


4   நான்  இப்போ  என்ன  சொல்ல நும்னு  நீ  எதிர்பார்க்கறே? 


 இந்த  மாதிரி  நேரத்துல   ஒரு அ ம்மா  தன்  மக  கிட்டே  என்ன  சொல்லனும்னு  எனக்கு எப்படித்தெரியும் ?


 உங்கப்பா  என்னை அடிச்சப்போ  எங்க  அம்மா  எனக்கு என்ன  சொன்னாங்களோ  அதைதான் நான்  உனக்கு  சொல்லப்போறேன்


5   அப்பா  உன்னை   அடிச்சாரா?


 ஆமா,  ஒரே  ஒரு  தடவை, அதை  என்  அம்மா கிட்டே  சொன்னப்போ  புருசன்  கிட்டே  அடி  வாங்கற  முதல்  பெண்  நீ  இல்லை,  இது  எல்லாக்காலத்துலயும்  நடப்பதுதான்  , யாராலும்  மாத்த  முடியாது 


6  மொத்தக்காதலும்   எனக்குதான்  வேணும்னு  நீ  ஆசைப்பட்டா  மொத்த  வலியையும் நீதான்  ஏத்துக்கனும்


7  ஒரு  ஆம்பளை   தன்  பொண்டாட்டியை கை நீட்டி  அடிக்கக்கூடாது  , அப்படி  அடிச்சா  அவன்  கூட  வாழ  வேண்டிய கட்டாயம்  கிடையாது 


8   மாத  விலக்கு  முடிந்த  பின்  வ்ரும் 11,12,13   இந்த  மூன்று  நாட்களில்  தம்பதிகள்  சேர்ந்தா  குழந்தை  நிச்சய்ம்  உருவாகும்


9    யாரை  அடிச்சா  திருப்பி  அடிக்க  மாட்டாங்களோ  அவங்களைத்தான்  க்ரெக்டா  நீங்க  அடிக்கறீங்க,  ஏன்  மேடம்  நான்  சொல்றது  கரெக்ட்  தானே?


10 வாயை  வெச்சுட்டு  சும்மா  இருந்திருந்தா  இப்படி  நீ  அவர்  கிட்டே  அடி  வாங்கி  இருக்க  மாட்டே  இல்ல ?


  மேடம்,  நீங்க  அ மைதியா  தான்  இருக்கீங்க, ஆனா  அவர்  கிட்டே   அடி  வாங்கல? 




லாஜிக்   மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள்


1   நாயகி  தன்  அம்மாவிடம்   தன்  க்ணவனைப்பற்றி  புகார்  பண்றாங்க . அதை கணவன்  மீன்  வாங்க  மார்க்கெட்  போய்  இருந்தப்போ  பண்ணி  இருக்கலாமே?  மாப்ளை  வீட்ல  இருக்கும்போது  யாராவது  இப்படி  அவர்  காது பட  புகார்  பத்திரம்  வாசித்து மாட்டுவார்களா? 


2   அம்மா, அப்பாவுக்கு  பை  சொல்லும்போது  நாயகி  இடதுகையா;ல சொல்றாங்க.  அது   ஏன்?  வலது  கைல  பை  சொல்வதுதானே  பண்பாடு ? (  அவங்க  இடது  கை  பழக்கம்  உள்ளவங்க  இல்லை ) 


3  நாயகி  போலீஸ்  ஆஃபீசரான  தன்  கணவனைப்பற்றி  உயர்  அதிகாரியிடம்  புகார்  சொல்ல  டிஐஜி  ஆஃபீஸ்க்கு  கான்ஸ்டபிளுடன்  வருகிறார். அங்கே  தன்  கணவனும்  ட்யூட்டிக்காக  வருவார்  , தன்னைப்பார்ப்பார்  மாட்டிக்குவோம்  என  தெரியாதா?  எழுத்து  வடிவில்  புகார்  கடிதம்  எழுதி  கான்ஸ்டபிளிடம்  தந்து    விட்டிருக்கலாமே?  


4 நாயகி  தன்  கணவ்னிடம் நீ என்னைக்கொடுமைப்படுத்துனதை  ஒத்துக்கிட்டு  ஒரு  வீடியோ  வாக்குமூலம் ரெடி  பண்ணைத்தரனும்னு  கேட்கறாங்க.  செல்  ஃபோன்  கேமராவை  ஆன் பண்ணி  வீட்ல  வெச்சாலே  அடிக்கும்போது  ரெக்கார்டு  ஆகுமே? அதை  முயற்சிக்காம கணவன் கிட்டேயே  கெஞ்சுவது  ஏன்?



சி பி  எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பெண்களை  மிகவும்  கவரும்   திரைக்கதை  அமைப்பைக்கொண்ட்  படம்,   ஆனால்  ஆண்கள்  பார்த்துத்திருந்த  வேண்டிய  பட்ம் .  ரேட்டிங்  2. 75 / 5 

Friday, October 21, 2022

சர்தார் (2022) (தமிழ்) - சினிமா விமர்சனம் ( ஸ்பை ஆக்சன் த்ரில்லர்)


 படத்தோட  ட்ரெய்லர்ல  ஹீரோ  பல  கெட்டப்ல  வர்றதைப்பார்த்துட்டு  பலரும்  இது  கோப்ரா டைப்போ என  கிண்டல்  பண்ணிட்டு  இருந்தாங்க . அது  போக  சர்கார்  ஓடலை . அப்போ  சர்தார் அப்படித்தானே  இருக்கும்? சுல்தான்  சுணங்கிடுச்சு , விருமன்  வெறும்  மண் . கார்த்தி  4  எழுத்து  அவர்  படங்கள்  4  எழுத்து அமையும்  டைட்டில்னா  ஓடாதோ? என  நேமாலஜி , நியூமராலஜி  எல்லாம்  பார்த்து  கிண்டல்  பண்ணவங்க  வாயை  அடைப்பது  போல்  ஒரு  ஹிட்  படம்  கொடுத்திருக்கிறார்  இரும்புத்திரை  இயக்குநர்   மித்ரன்


ஸ்பாய்லர்  அலெர்ட்


ஹீரோ  ஒரு  போலீஸ்  ஆஃபீசர் . எல்லா  தமிழ்  சினிமா  ஹீரோக்களைப்போலவே  இவரும்  யாராலும்  முடிக்க  முடியாத  பல  கேஸ்களை  திறம்பட  முடிக்கிறார். ஆனா  இவர்  என்னதான்  திறமையா  கேஸ்களை  டீல்  பண்ணினாலும்  இவரோட  அப்பா  ஒரு  தேச  துரோகிதானே?  என   லெஃப்ட்  ஹேண்ட்ல  இவரை  டீல்  பண்றாங்க. அதனால  இவருக்கு  அப்பா  மேல  வெறுப்பு 


வாட்டர்  பாட்டிலில்  இருக்கும்  தண்ணீர்  உடல்  நலனுக்கு  ஊறு  விளைவிப்பவை, அது  என்  மகனின்  உடலில்  பல  மாற்றங்களைக்கொண்டு  வந்திருக்கு  என  ஒரு  பெண்  போராடுகிறார்.  ஆரம்பத்தில்  ஹீரோ  இந்தப்பெண்ணை  தீவிரவாதியோ?  போராளிப்பெண்ணோ? என  தவறாக  நினைக்கிறார். ஆனால்  அந்தப்பெண்  வில்லனால்  கொல்லப்பட்ட  பின்  ஹீரோ  உஷார்  ஆகிறார்


  தன்  அப்பாவுக்கு  தேசதுரோகி  பட்டம்  அளிக்கப்பட்டது  ஏன்?  ஒன்  இண்டியா  ஒன்  பைப்  லைன்  திட்டத்தின்  மூலம்  வில்லன்  எப்படி  தண்ணீரை  வியாபாரப்பொருள்  ஆக்குகிறான்> தன்  அப்பா  மேல்  ஏற்பட்ட  பழியை  ஹீரோ  களைந்தாரா?  இவற்றை  வெண்  திரையில்  காண்க

 ஹீரோவா  அப்பா , மகன்  என  இரு  வேடங்களில்  கார்த்தி . அப்பா  ரோலில்  நடிக்கும்போது  செந்தூரப்பூவே  பட  விஜயகாந்த்  போல  கர கர  குரலில்  பேசி  கச்சிதமாக  நடித்தவர்  பாடி  லேங்வேஜில்  நட்புக்காக  சரத்குமார்  போல முதிய  தோற்ற  நடையைக்கொண்டு வரவில்லை . அதில்  கோட்டை  விட்டுட்டார். ஆனா  அப்பா  கார்த்தி  வரும்  இடங்களில்  தியேட்டரில்  கை தட்டல்  பறக்குது


போலீசாக  வரும்  ஹீரோ  ஹீரோயின்  லவ்  போர்சன் ,  இளம்  பிராயத்தில்  3    வெவ்வேறு  கால  கட்டங்களில்  லவ்  ப்ரப்போஸ்  செய்ய  முயன்று  முடியாமல்  பம்முவது  எல்லாம்  கலகலப்பான  நிகழ்வுகள்  தான்  ரசிக்கும்படியான  காதல்  காட்சிகள் ராஷிகா  கண்னா  இளமைப்பொலிவு  அழகு  நடிப்பும்  குட் 


போராடும்  பெண்ணாக  லைலா .  நீண்ட  இடைவெளிக்குப்பின்  ஒரு  கம் பேக்  மூவி .இவரது  கேரக்டர்  ஸ்கெட்ச்  நன்றாக  இருந்தாலும்  இன்னும்  இவருக்கு  ஸ்க்ரீன் ஸ்பெஸ்  கொடுத்திருக்கலாம். வந்தவரை  நல்ல  நடிப்பு 


 அந்த  சின்னப்பையன்  ரித்விக்  கலக்கல்  நடிப்பு க்ளைமாக்ஸ்  வரை  உயிரோட்டமான  துள்ளலான  நடிப்பு 


அப்பா  கார்த்திக்கு  ஜோடியாக  ரஜியாவிஜயன்  நல்ல  நடிப்பு .  முனீஸ்காந்த்  குணச்சித்திர  நடிப்பு 


 பின்  பாதியில்  வில்லன்  நடிப்பு  மிரட்டல் 


ஜி வி  பிரகாஷ்  இசையில் அந்த  தெருக்கூத்துப்பாட்டும்  , டூயட்  பாட்டும்  நல்லாருக்கு , பின்னணி  இசை  கனகச்சிதம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில நெருடலக்ள்


1  தேசதுரோகம்  சப்ஜெக்ட்  இப்போதான்  ராக்கெட்ரி , சீதாராமம்  போன்ற  படங்களில்  பார்த்தோம், அதே போல்தான்  காட்சி  அமைப்புகள்  இருப்பதால்  நமக்கு  பெருசா  இம்ப்பாக்ட்  கொடுக்கலை 


2 கிரிமினல்  ரெக்கார்டு  இருந்தால்  அரசுப்பணி  கிடைக்காது . ஒரு  தேசதுரோகியாக  அறிவிக்கப்பட்டவருக்கு  எப்படி  போலீஸ்  ஆஃபீசர்  பணி  கிடைத்தது ?


3   தேசதுரோகி  பட்டத்தால்  குடும்பமே  தற்கொலை  செய்து  கொள்ளும்போது அவரது ந் மகனான  ஹீரோ  லீவ்  ல  டூர்  போய்ட்டாரா? 


4   படம்  ரெண்டேமுக்கால்  மணி  நேரம்  ஓடுது , எடிட்டிங்கில்  இன்னும் ஷார்ப்பா  கட்  பண்ணி  இருக்கலாம் 


ரசித்த  வசனங்கள் 


1   தண்ணீரை  விற்காம  இருந்தாலே  போதும், அதைப்பாதுகாக்க  வழி  கிடைச்சிடும் 


2   உளவாளி  எந்த  வேலை  செய்தாலும்  அதுக்கு  ரெக்கார்டு  இல்லை 


3   மேலே  இருப்பவனை  யார்  கீழே  இழுக்கறாங்களோ  அவன்  மேலே  வருவான்


4   எதுக்குப்பா  இந்த  விளம்பரம் ?


 நாலு  பேருக்கு  நல்லது  பண்ணுனா  அது நாப்பாதாயிரம்  பேருக்கு  தெரியற  மாதிரி  பண்ணனும்


5   ரவுடி  பொய்  சொல்லலாம், ஆனா  ரவுடின்னே  பொய்  சொல்லக்கூடாது 


6  ஊருக்கு  ஒரு  ஆர்மி  வீரன்  கிடைப்பான் , ஆனா  உண்மையான  இளைஞன்  கிடைக்க  மாட்டான் 


7   காக்ரோச்  வில்  ரீச்  எனிவேர்


8  எதிரியைக்கண்டுபிடிப்பது  ரொம்ப  ஈசி   துரோகியைக்கண்டு பிடிப்பதுதான்  கஷ்டம்,


9   உண்மையை  சுமந்துட்டு  வாழ்வது  ரொம்ப  கஷ்டம் 


10  நாம்   யார்?ங்கறது  நாம்  செய்யும்  செயல்களில்  இருக்கு


11  ராணுவத்தில்  , உளவுத்துறையில்  வாழும்போது  இல்லறம்  கிடையாது  ,சாகும்போது  கல்லறை  கிடையாது 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சர்தார் - முதல் பாதி க்ரிஷ்ப்பான திரைக்கதை , பின் பாதி ஸ்பை ஆக்சன் த்ரில்லர், தீபாவளி ரேஸ் வின்னர், ஆல் செண்ட்டர் ரன்னர், கார்த்தி - ராசி கண்ணா கெமிஸ்ட்ரி குட் ,கதைக்கரு சமூக விழிப்புணர்வு அளிக்கக்கூடியது . விகடன் மார்க் 44 , ரேட்டிங் 3 / 5


Sardar
Sardar 2022 poster.jpg
Teaser poster
Directed byP. S. Mithran
Written byP. S. Mithran
Dialogue byPon Parthiban
Roju
Binpu Ragu
Geevee
Produced byS. Lakshman Kumar
Starring
Narrated byP. S. Mithran
CinematographyGeorge C. Williams
Edited byRuben
Music byG. V. Prakash Kumar
Production
company
Prince Pictures
Distributed byRed Giant Movies
Release date
  • 21 October 2022[1]
Running time
165 minutes[2]
CountryIndia
LanguageTamil

ப்ரின்ஸ்(2022) (தமிழ்) - சினிமா விமர்சனம் ( மொக்கைக்காமெடி மெலோ ட்ராமா)


சிவகார்த்திகேயனின் உச்சபட்ச  வெற்றி  ரஜினி முருகன்,அடுத்து வருத்தப்படாத வாலிபர்
சங்கம் .ஊதாக்கலரு  ரிப்பன்  பட்டி  தொட்டி  எல்லாம்  கலக்குச்சு . பின்  பாகுபலி  ஹிட்டைப்பார்த்து  சொந்தப்படமா  சீமராஜா  எடுத்து  அட்டர் ஃபிளாப்  ஆச்சு, அதுதான்  சி.கா  சினிமா  வாழ்வில்  மிக  மோசமான  தோல்விப்படம். அதுக்குப்பின்  மீண்டு  டாக்டர் , டாண்  என  2  ஹிட்  படங்கள்  கொடுத்துட்டார்.  ஹாட்ரிக்  ஹிட்  அடிப்பார்னு  பார்த்தா  ஒரு  தமிழனை  நம்பாம  தெலுங்கு  டைரக்டரை  நம்பி  மோசம்  போய்ட்டார் 

ப்ரொடியூசர்  டைரக்டர்  கிட்டே  நாடோடித்தென்றல் , மதராசப்பட்டிணம்,  இந்த  ரெண்டு  பட  டிவிடியையும்  கொடுத்து  சி கா  நடிச்ச  மிஸ்டர்  லோக்கல்  பட  டிவிடியையும்  குடுத்து  இந்த  மாதிரி  ஒரு  படம்  வேணும்னு  சொல்லிட்டாங்க  போல \எஃப் டி எஃப் எஸ்  ஷோ  100 ரூபா  டிக்கெட் 200  ரூபாக்கு  வித்தாங்க ,அநேகமா  இன்னைக்கு நைட்டே  100  ரூபா  டிக்கெட்டை  50  ரூபாக்கு  விக்கலாம்


ஸ்பாய்லர்  அலெர்ட்


ஹீரோ  ஒரு  ஸ்கூல்ல    வாத்தியார்.அதே  ஸ்கூலுக்கு  ஹீரோயின்  டீச்சரா  வர்றாங்க . இவங்க  ஃபாரீன்  லேடி .  பார்த்ததுமே  ஹீரோக்கு  லவ்  வந்துடுது . ப்ரப்போஸ்  பண்றாரு. என்ன  காரணத்துக்காக  என்னை  லவ்  பண்றே?னு  ஹீரோயின்  புத்திசாலித்தனமா  கேட்குது . படம்  முடியும்  வரை  ஹீரோ  அதுக்கு  பதில்  சொல்லவே  இல்லை 


ஒரு  சீன்ல  ஹீரோ  ஒரு  மக்கு  ஸ்டூடண்ட்க்கு  ட்யூஷன்  சொல்லித்தர்றாரு. அது  ஒரு  வாத்தியாரா  அவரோட  கடமை  தானே? அதைப்பார்த்ததும்  அந்த  பேக்கு  ஹீரோயினுக்கு  ஹீரோ  மேல  லவ்  வந்துடுது 


ஹீரோவோட  அப்பா  பிரிட்டிஷ்க்காரனைக்கண்டாலே  பிடிக்காதவர். காரணம்  அவரோட  அப்பாவை  அதாவது  ஹீரோவோட  தாத்தாவைக்கொன்றதே  ஒரு  பிரிட்டிஷ்  காரன் தான்


இவங்க  காதல்  என்ன  ஆச்சு ? என்பதுதான்  மிச்ச  மீதி  கதை 


 ஹீரோவா  சிவகார்த்திகேயன். அலட்ட்சிக்காம  வர்றார். கடந்த  2  படங்களின்  வெற்றி  அவர்  முகத்தில்  பொலிவையும், தன்னம்பிக்கையையும்  தந்திருக்கு . பிரமாதமா  புதுப்புதுன் டான்ஸ்  ஸ்டெப்ஸ்  எல்லாம்  போட்டுக்கலக்கறார். ஆனா  ஒரு  டவுட், இவரது  சொந்த  ஸ்டைல்  டான்ஸே  நல்லாதானே  இருக்கு ? ஏன்  விஜய்  டான்சை  அட்லீ  வேலை  பண்றாரு  தெரியல 

ஹீரோயினா  மரியா. இவங்க  நிஜமாலுமே  ஃபாரீன்  பொண்ணா? தெரியல, ஆனா  பார்க்க  நல்லாதான்  இருக்காங்க . டான்ஸ்  மூவ்மெண்ட்ஸ்  சிலது  ஒர்க்கவுட்  ஆகலை . லவ்  போர்சன்ல  பிரமாதமா  பண்றவங்க  செண்ட்டிமெண்ட்  சீன்களில்  கொஞ்சம்  டொக்கு  வைக்கறாங்க 


  ஹீரோவோட  அப்பாவா  சத்யராஜ். இவரோட  கேரக்டர்  டிசைன்  சீரியசா? காமெடியா?  சீரியஸ்  கலந்த  காமெடியா?னு  டைரக்டருக்கே  ஒரு  குழப்பம்


பிரேம்ஜி  அமரந்தான்  வில்லன். யாரும்  சிரிக்க  வேணாம், ஆள்  கொரானா    காய்ச்சல்ல  இளைச்ச  கொக்கி  குமார்  மாதிரி  இருக்கார் .மொக்கை  காமெடி  எடுபடலை. பல  சீன்கள்  கடுப்பைக்கிளப்புது . இயக்குநர்  வெங்கட்  பிரபு படங்களில்  மட்டும்  தான்  இவரால  சைன்  பண்ண  முடியுது


  இசை  தமன் .   3  பாடல்கள்  செம  ஹிட்டு . அதுக்கான  டான்ஸ்  எல்லாம்  கலக்கல் . ஒளிப்பதிவு  லொக்கேஷன் கள்  எல்லாம்  குட்   


ரசித்த  வசனங்கள்


1 ஜாதி  முக்கியம்  இல்லை  நமக்கு  , புரிஞ்சுதா?


ஆமாங்க , மதமும்தான்   முக்கியம் 


2  ஊர்  மக்கள்  நான்  சொல்றதை ஃபாலோ  பண்ணுங்க 


 ட்விட்டர்ல  இன்ஸ்டாகிராம்ல  ஃபாலோ  பண்ணச்சொன்னா  பண்ணலாம், நீங்க  சொல்றதை  எல்லாம்  ஃபாலோ  பண்ண  முடியாது 


3  எனக்கு  ஒரு  பிரச்சனை -னா  என்  ஃபிரண்ட்ஸ்  ஓடி  வருவாங்க , பிரச்சனையைத்தீர்க்க அல்ல,  அதைப்பார்த்து  எஞ்சாய்  பண்ண


4   காலைல  எந்திரிச்சாலே  உடனே  டிப்ரஷன்  ஸ்டார்ட்  ஆகிடுது, இதுக்கு  என்ன  தீர்வு ?


 காலைல  எந்திரிக்காத 


5   டேய் , இந்த  லவ்  லெட்டர்ல  அந்த  லைன்ஸ்  எல்லாம்  எங்கே  கத்துக்கிட்டே? துக்ளியூண்டு  பையனா  இருக்கே? 


 கொரியன்  மூவி  ஓ டி டி  ல  பார்த்தப்போ  சப்  டைட்டில்  ஓடுச்சு, அதுல  கத்துக்கிட்டது

6   பசங்களை  மதிக்கற  அப்பாக்கள்  லிஸ்ட்  எடுக்கச்சொன்னா    அதுல  என் பேருதான்   முதல்ல  வரும்  , ஏன்னு  சொல்லு பார்ப்போம் 


  ஏன்னா  அந்த  லிஸ்ட்டை  எழுதறதே  நீங்கதான்


7  ஏன்  என்னை  லவ்  பண்றே?னு  ரீசன்  கேட்கறா


 லவ்  அட்  ஃபர்ஸ்ட்  சைட்னு  சொல்லு 


 ஆனா  அஞ்சாவது  சைட்ல தானே  லவ்வே  வந்துச்சு  


8  உலகம்  பூரா  இந்த  பாய்  பெஸ்டி  தொல்லை  தாங்கலை . எல்லாப்பொண்ணுங்களுக்கும்  பாய்  பெஸ்டி  இருக்கானுங்க 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  அடுத்த  வாரம்  எப்படியும்  ஓ டி டி ல  ரிலீஸ்  ஆகிடும், அப்போப்பார்த்துக்கலாம்  அவசரம்  இல்லை 

ப்ரின்ஸ் - ராஜாவுக்கு மகன் தான் இளவரசன், சீம ராஜாவின் மகன் தான் இந்த பிரின்ஸ், புரிஞ்சவன் பிஸ்தா. திரைக்கதையை நம்பாம ஹீரோவை நம்புனா இப்படித்தான் ரிசல்ட் வரும் . 3 பாட்டு ஹிட்டு , ஹீரோயின் அழகு இவைதான்
ஓரளவு காப்பாத்துது. ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் 39 , ரேட்டிங் 2 .25 /5

Prince
Prince 2022 poster.jpg
Theatrical release poster
Directed byAnudeep KV
Written byAnudeep KV
Produced by
Starring
CinematographyManoj Paramahamsa
Edited byPraveen K. L.
Music byThaman S
Production
companies
Distributed bySuresh Productions
Gopuram Cinemas
Release date
21 October 2022
Running time
143 minutes
CountryIndia
Languages
  • Tamil
  • Telugu

Thursday, October 20, 2022

kokila -கோகிலா(1977) (கன்னடம்) - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா)


வெள்ளிவிழா  நாயகன்  மைக்  மோகன் புதுமுகமாக  அறிமுகம் ஆன  முதல்  படம் , பாலுமகேந்திரா  இயக்கத்தில்  கமல்+மோகன்+ஷோபா+ரோஜா ரமணி  இணைந்து  நடித்த  படம்  இத்தனை பெருமை  இருந்தும்  இதை  இத்தனை  நாட்களா  பார்க்காம  எப்படி  மிஸ்  பண்ணோம்?னு  நினைச்சுப்பார்த்தா  1981ல்  கமல் -ஸ்ரீதேவி  காம்போவில்  ரிலீஸ் ஆன மீண்டும்  கோகிலா-வும்  கோகிலாவும்  ஒரே  கதையோ  என்ற  சந்தேகத்தில்  பார்க்காம  விட்டுட்டேன்  போல , ஆனா இரண்டு கதைகளுக்கும்  எந்த  சம்பந்தமும்  இல்லை 

இப்போ  தான்   கேஜிஎஃப்  , காண்ட்டாரா  என  கன்னடப்படக்கள்  செம  ஹிட்  ஆகி  வருது . ஆனா  தமிழகத்தில்  சென்னையில்  100  நாட்கள்  ஓடிய  முதல்  கன்னடப்படம்  இதுதான்.  இது  ஹிட்  ஆனதும்  மலையாளத்தில் 1983ல்  ஊமைக்குயில்  என  ரீமேக்  செய்யபப்ட்டது , பின்  ஹிந்தியில்   அவுர்  ஏக்  ப்ரேம்  கஹானி   என 1996ல்  ரீமேக்  செய்யப்பட்டது . இந்தப்படத்துக்காக சிறந்த   ஒளிபதிவுக்கான  தேசிய  விருது  பெற்றார்  பாலுமகேந்திரா. மேலும்  மாநில   சிறந்த திரைக்கதைக்கான  கர்நாடக  மாநில  அரசின் விருது  பெற்றார்

ஸ்பாய்லர்  அலெர்ட்


ஓப்பனிங்  சீன்லயே  ஹீரோவுக்கு  உடம்பு  சரி இல்லை /  ஹாஸ்பிடல் போறார். அங்கே  ஒரு  லேடி டாக்டர் . அவரைப்பார்த்ததும்  ஹீரோவுக்கு  ஷாக்,  டாக்டர்  என்னடான்னா  அதிர்ச்சில  சீட்டை விட்டு  எழுந்திடறாங்க.  எதோ  ஃபிளாஸ்பேக்  இருக்கும்  போல 


அப்படியே  கட்  பண்ணி  ஃபிளாஸ்பேக்கை  ஓப்பன்  பண்னா.....


ஹீரோ ஒரு  பேங்க்ல ஒர்க்  பண்றார். புது  ஊருக்கு  ட்ரன்ஸ்ஃபர்  ஆகி வர்றார். அங்கே  குடி இருக்க  வீடு வேணும், ந்ண்பன்  கூட்டிட்டு வந்து ஒரு  வீட்டில் குடி  வைக்கிறார். ஹவுஸ்  ஓனர்  நாம  குடி இருக்கும்  வீட்டுக்குப்ப்க்கத்துல  இருந்தாலே  இம்சை தான்,  ஏதாவது  குறை  சொல்லிட்டே  இருப்பார். ஆனா  ஹீரோவுக்கு  அந்தக்கவலை  எல்லாம்  இல்லை 


அதே  காம்பவுண்டில்  நாயகியும் , தோழியும்   குடி  இருக்காங்க .   ஹீரோவுக்கு தேவையான  சாப்பாடு  சமையல்  பரிமாறல் எல்லாம்  நாயகி  தான் 


பொதுவா  காதல்  என்பது  அடிக்கடி  நீங்க  பார்க்கும்  நபர் மேல்  உண்டாகும்  சாத்தியக்கூறுகள்  கொண்டது. பெரும்பாலான  காதல்கள்  பக்கத்து வீடு , ஆஃபீசில்  கூட  ஒர்க்  பண்ணும்  நபர் , பஸ்சில்  ரெகுலராக  பயணம்  செய்யும்  நபர்  இந்த மாதிரி தான் கனெக்சன் ஆகும் 


  நாயகியும்  அதில் விதிவிலக்கு  இல்லை . ஹீரோவின் அப்பாவித்தனம், யதார்த்தம்   போன்ற  குணங்களில்  ஏதோ  ஒன்றைப்பார்த்து  காதலில்  விழுகிறார்


தோழியிடம்  அடிக்கடி  நாயகனைப்பற்றிப்பேசிக்கொண்டிருக்கிறாள் . இருவரும்  சேர்ந்து  அடிக்கடி  நாயகனை  கிண்டல்  பண்ணிட்டு இருக்காங்க 


ஒரு  நாள் தோழி  ஊர்ல  இல்லை . நாயகி  , நாயகன்  இருவரும் தனிமையில் . ஸ்பாஞ்ச்சும் , ஃபையரும்  பக்கத்துல  இருந்தா  என்ன ஆகுமோ  அது  ஆகிடுது \

\

ஆனா  அந்த  கூடல்  சம்பவத்துக்குப்பின்  நாயகன்  நடவடிக்கையில்  மிகப்பெரிய  மாற்றம், ஏதோ குற்ற  உணர்வில்  தவிக்கிறார்,சரியாப்பேசுவது  இல்லை 


 நாயகிக்கு  இது  பெரிய  அதிர்ச்சி.  முன்பிருந்த  காதலை  விட  இப்போ  நாயகிக்கு  கூடுதலா  ஒரு  அட்டாச்மெண்ட்


ஆனா  திடீர்னு  சொல்லாம  , கொள்லாம  ஹீரோ  வீட்டைக்காலி  பண்ணீட்டுப்போய்டறான்.,  சரி  பேங்க்ல  போய்  விசாரிக்கலாம்னு  நாயகி  தன் தோழியுடன்  போனா  அங்கே  இன்னொரு  அதிர்ச்சி.  அவரு  ரிசைன் பண்ணிட்டுப்போய்ட்டதா  ஹீரோவின்  நண்பர்  சொல்றார்


இதுக்கு  மேல ஒரு  பெண்ணால  என்ன  செய்ய  முடியும் ?ஹீரோயின்  படிச்சு  டாக்டர்  ஆகிடறா


  ஃபிளாஸ்பேக் முடியுது 


இப்போ  ஹீரோ  வீட்டுக்கு  வாங்கனு  இன்வைட்  பண்றான்


 ஹீரோயின் மனசுல    பட்டர் ஃபிளை  பறக்குது


 ஆனா  அவன்  குடுத்த  அட்ரஸ்ல  போனா  ஹீரோயினுக்கு  அதிர்ச்சி /  அங்கே  நாயகியின்  தோழி     ஹீரோவின்  , மனைவியா  இருக்கா. அவங்க  குழந்தைக்கு  கோகிலானு பேர்  வெச்சிருக்காங்க 


ஹீரோ   வீட்டுக்கு  வெளில  இருக்கும்போது  ஹீரோயின்  தன்  தோழி  கிட்டே  பேசறா.  ரெண்டு பேரும் என்ன  பேசிக்கிட்டாங்க  என்பதுதான்  க்ளைமாக்ஸ்


  ஹீரோவா  கமல். நல்ல  நாள்ல்யே  நம்மாளு   டாப்லெஸ்சாக ஒரு  சீன்லயாவது  வந்துடுவாரு , இந்தக்கதைல  கேட்கவே  வேணாம், இவருக்கு பாத்ரும்ல   குளியல்  சீன்  எல்லாம் உண்டு


  அந்தக்கால  மலையாளப்படங்கள்  எல்லாம்  பார்த்தா  கதைக்குத்தேவை  இருக்கோ , இல்லையோ  அதுல  ஷகீலா  குளிக்கற  சீன்  நிச்சயம்  இடம்  பெறும் .. கோடம்பாக்கத்தின்  ஷகீலா  என  கமல்  அந்தக்காலத்துலயே பேர்  வாங்குனவரு. நீங்க  அவர்  நடிச்ச  எந்தப்படம்  வேணா  பாருங்க   டாப்லெஸ்சாக  ஒரு  சீனில்  அவரோட  ஜிம்  பாடியைக்காட்டற  மாதிரி    வந்துடுவாரு 


 இவர்  காட்டிய  வ்ழியில்  பின்னாளில்  இதே  ஃபார்முலாவில்  டாப்லெஸ்  ஆக  ஒரு  சீனாவது  வருபவ்ர்கள் பட்டியல்  சரத்குமார் , அர்ஜூன்


ஆனா  நடிப்பில்  கமல்  வைரம். பல  முகபவனைகளை  அசால்ட்டா  காட்றார்.க்ளைமாக்ஸ்  சீனில்  குற்ற  உணர்ச்சியை  நல்லா  வெளிப்படுத்தி  இருக்கார். இதுல  இவருக்கு  டான்ஸ்  இல்லாதது  ஒரு  குறை


 இன்னொரு  ஹீரோவா , ஹீரோவுக்கு நண்பனா  மைக்  மோகன். யதார்த்தமான   நடிப்பு . கதையில்  இவருக்கு முக்கியத்துவம்  இல்லை . வந்தவரை  ஓக்கே 


 நாயகியா பாலுமகேந்திராவின்  ஆஸ்தான  நாயகி  ஷோபா. நல்ல  நடிப்பு, குறும்புத்தனம்  மிக்க  கண்கள் . டாக்டருக்கான கம்பீரம் மட்டும் ச ரியா  வரலை


நாயகியின்  தோழியா ரோஜா  ரமணி, இவர் நடிச்ச  படத்தை நான்  பார்ப்பது  இதுவே  முதல்  முறை.  குட்  ஆக்டிங் நல்ல  முகவெட்டு 


நான்கு  கேரக்டர்கள் தான்  பிரதானம்  என்பதால்   ஒரு  மெலோ ட்ராமா  எஃபக்ட்  உருவாவதை  த விர்க்க  முடியவில்லை 


சபாஷ்  டைரக்டர்


1   நாயகிக்கு  மட்டும்  தான்   நாயகன்  மேல்  அதீத  காதல், நாயகனுக்குக்காதல்  இல்லை  என்பதை  தெளிவாக  திரைக்கதையில்  கையாண்ட  விதம் 


2  ஹீரோ -  ஹீரோயின்  இருவரும்  சந்திக்கும்  ஒவ்வொரு  காட்சியுமே  ரசிக்கும்படி  எடுத்தது


3   க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட் 


லாஜிக்   மிஸ்டேக்ஸ், திரைக்கதையில்  சில  நெருடல்கள்


1  ஹீரோ  பாத்ரூம்ல  பாடிக்கிட்டே  குளிக்கறாரு.  ஹீரோயின்,  தோழி  இருவரும்  பாத்ரூம்  வெளியே  கதவுக்குப்பக்கம்  நின்னு  பாடலைக்கேட்டு  கிண்டல்  பண்ணிட்டு  இருக்காங்க... இதுவரை ஓக்கே.  அனா  ஷவர் நிறுத்தற  சத்தம்  கேட்டதும்  டக்னு  அவங்க  கிளம்பி இருக்கலாமே? ஹீரோ  துண்டால்  உடலை  துவட்டிட்டு வெளில  வரும்  வரை  அங்கேயெ  இருந்து  மாட்டிக்கறாங்க . பெண்கள்  அவ்ளோ  உஷார்  இல்லாதவங்களா? என்ன?  ஹீரோ  டக்னு  கதவைத்திறந்தார்னாலாவது  சால்ஜாப்  சொல்லலாம், 


2   ஒரு  பிரம்மச்சரியின்   வீட்டுக்குள்  அல்லது  ரூமுக்குள்  ஒரு பெண்  நுழையும்  முன்  ஒரு  அறீவிப்பு  கொடுத்துட்டுதான்  இந்தக்காலத்து மாடர்ன்  கேர்ள்சே  உள்ளே  போறாங்க . 1977  கால  கட்டத்தில்  ஹீரோயின்  அசால்ட்டா  உள்ளே  போறார். அப்போ  ஹீரோ  சரியா  டிரஸ்  பண்ணாம  அரைகுறையா  இருப்பதைப்பார்க்கறார். இது  முதல்  முறைன்னா  பரவால்லை , ஒவ்வொரு  முறையும்  இது  நடக்குது   


3    என்னதான் காதல்  மயக்கத்தில்  இருந்தாலும்  ஒரு  பெண்ணுக்கு  தான்  விரும்பும்  ஆண்  தன்னை  விரும்பறானா? இல்லையா?  என்பது  தெரியாமயா  இருக்கும்? ஒரு  முறை கூட  வாய்  விட்டு  ஐ லவ்  யூ  சொல்லாத  ஹீரோவிடம்  ஹீரோயின் தன்னை  அர்ப்பணிப்பது  எப்படி ?      


சி பி எஸ்   ஃபைனல்  கமெண்ட் -    மலையாளப்படங்கள்  , விருதுப்படங்கள்  பார்த்துப்பழக்கம்  உள்ளவர்கள்  பார்க்கலாம், யூ  ட்யூப்ல  கிடைக்குது    ரேட்டிங் 2.5 / 5                                                                                                                                                                                                            

 

Kokila
Kokila 1977.jpg
Theatrical release poster
Directed byBalu Mahendra
Written byBalu Mahendra
Produced byT. Motcham Fernando
Starring
CinematographyBalu Mahendra
Edited byUmesh Kulkarni
Music bySalil Chowdhury
Production
company
Commercial Films
Distributed byG.N. Films
Release date
  • 7 October 1977
Running time
140 minutes
CountryIndia
LanguageKannada