Saturday, October 22, 2022

AMMU (2022) (அம்மு) - (தெலுங்கு) - சினிமா விமர்சனம் ( டொமெஸ்டிக் வயலனஸ்) @ அமேசான் பிரைம்

 


ஒரு  திரைக்கதை வெற்றி பெறனும்னா  அதில்  உள்ள  வில்லன்  கேரக்டர்  டிசைன்  வலுவாக  அமைக்கனும், இப்பேர்ப்பட்ட  வில்லனை  ஹீரோ  எப்படி  ஜெயிக்கப்போறார்  என்ற  எதிர்பார்ப்பு  ரசிகர்கள்  மனதில்  எழனும். தமிழ்  சினிமாவில்   வில்லனின்  கேரக்டர்  வலுவாக  அமைக்கப்பட்டு  வெற்றி  கண்ட  படங்கள்  பட்டியல்  கேப்டன் பிரபாகரன்  (வீரபத்ரன் )    பாட்ஷா  (  மார்க்  ஆண்ட்டனி)  ,  வேட்டையாடு  விளையாடு   (  இளமாறன் , அமுதன் )  

ஸ்பாய்லர் அலெர்ட் 


நாயகன்  ஒரு  போலீஸ்  ஆஃபீசர். அவருக்கு  அவரோட  பக்கத்து  வீட்டுப்பெண்ணுடன்  திருமணம்  நடக்குது . கொஞ்ச  நாள்  திருமண  வாழ்க்கை  நல்லாதான்  போய்க்கிட்டு  இருக்கு . திடீர்னு  நாயகனின்  சுய  ரூபம்  நாயகிக்கு  தெரிய  வருது.  பணி  புரியும் இடத்தில்   ஏதாவது  பிரச்சனைன்னா  நாயகன்  தன்  கோபத்தை  மனைவி  மேல  காட்ட  ஆரம்பிக்கறார். ஒரு  கட்டத்துல  கை நீட்டி மனைவியை  பளார்னு அடிச்சுடறார்


  நாயகிக்கு  அதைத்தாங்கிக்கவே  முடியல, ஜீரணிக்கவும்  முடியல . இது  தொடர்கதை  ஆகுது .  முதல்ல நாயகி  தன் அம்மாவிடம் புகார்  ப்ண்றார்., ஆனா  அம்மா  சகித்துக்கொண்டு  வாழ், நான்  அப்படிதான்  வாழ்ந்தேன்  என்கிறார். இப்படிச்சொன்னது  நாயகிக்கு  பெரிய  அதிர்ச்சி 


தன்  மேல் கணவன்  பிரயோகிக்கும்  வன்முறை  பொறுக்க  முடியாமல்  போலீஸ்  உயர்  அதிகாரியிடம்  புகார்  கொடுக்க  நாயகி  டிஐஜி  ஆஃபிஸ்க்கு  போய்டறாங்க.,ஆனா  அங்கே  கணவன்   வந்து  சமாதானம்  பண்ணிக்கூட்டிட்டுப்போய்டறான்


இதுக்குப்பின்  நாயகி   எப்படி  தன்  கணவனை  சமாளிக்கிறாள்/ கணவனைப்பழி  வாங்க  அவர்  போடும்  திட்டம்  என்ன?  அதில்  வெற்றி பெற்றாரா? என்பது  திரைக்கதை 


நாயகன்  ரவியாக  போலீஸ்  ஆஃபீசராக   நவீன்  சந்திரா. புரியாத புதிர்  ரகுவ்ரன்  .  கல்கி  பிரகாஷ்  ராஜ் , நெஞ்சம்  மறப்பதில்லை  எஸ்  ஜே  சூர்யா போன்ற  சைக்கோ  கேரக்டர்  நடிப்பில்  பின்னிப்பெடல்  எடுத்த  நடிகர்கள்  பட்டியலில்      நவீன்  ச்ந்திராவும்  சேர்கிறார். பயமுறுத்தும்  நடிப்பு . எப்போ  இவர்  என்ன  செய்வாரோ  என  நடுங்க  வைக்கிறார். . துன்புறுத்தி  விட்டு திடீர்  என  நல்லவன்  போல் சாந்தமாக  உரையாடுவது   அருமை 


  நாயகியாக   அம்முவாக  ஐஸ்வ்ர்யா   லட்சுமி .இவரது  கேரக்டர்  பரிதாப  கொள்ள  வைக்கிறது   என்றால்  இவரது  அட்டகாசமான நடிப்பு  இதோ விருது  தேடி  வருது  என  சொல்ல  வைக்கிறது. கணவன்  முதன்  முதலாக  தன்னை  அடிக்கும்போது  காட்டும்  அதிர்ச்சி அபாரம் . அதே  போல் அம்மாவுடன்  நிக்ழும்  குளத்தங்கரை  உரையாடல்   பிரமாதம் 


நாயகிக்கு  உதவுபவராக ,  இரு கொலைகள்  செய்த  கைதியாக  பாபி சிம்ஹா  கனகச்சிதமான  நடிப்பு .போலீஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டரையே  தாக்கும்போது  ஆக்ரோசம்  காட்டுகிறார். 


நாயகியின்  அ ம்மாவாக  வரும் மாலா  பார்வதி    சில  காட்சிகளே  வ்ந்தாலும்  கவனம்  ஈர்க்கிறார். பிச்சைக்கரனாக  ஒரே  ஒரு காட்சியில்  வரும் ரகுபாபுவின்  நடிப்பும்  அருமை 


லேடி  போலீஸ்  கான்ஸ்டபிளாக வரும்  அ ஞ்சலி அமீர் , சத்யா க்ருஷ்ணா  இருவரு,ம்  தங்கள்  பாத்திரத்தை உணர்ந்து  நடித்திருக்கிறார்கள் 

சாருகேஷ்  சேகர்  இயக்கி  இருக்கிறார்.  ஆரம்பத்தில்  மெதுவாகப்போகும்  திரைக்கதை  பிற்பாதியில்  நாயகி  பழி  வாங்க  ஆரம்பிக்கும்போதுதான்  வேகம்  எடுக்கிறது . ஆனால்  அவ்ளோ  கொடுமை  செயத  கணவன்   அலுவலகத்தில்  சஸ்பென்ஸன்  வாங்கினாப்போதும்  என  நாயகி  நினைப்பது ஏனோ ? 


கணவன்  கொடுமை  செய்வதை  ஆதாரப்பூர்வமா  நிரூபிக்கனும் என  பாடம்  சொல்லித்தரும்  வகையில்  இந்த  கதைக்கருவைப்பாராட்டலாம்,


 இதே  க்தைக்கருவில்  முன்பு  வந்த  தப்பட்  ஹிந்திபடம் , நெட்ஃபிளிக்சில்  ரிலீஸ் ஆன  டார்லிங்க்ஸ்  போன்ற  படங்கள்  ஏற்படுத்திய  பாதிப்பை  விட  இந்தப்படத்தின்  திரைகக்தை  அதிக  பாதிப்பை  ஏற்படுத்தி  இருக்கிறது 


இரு  பாட;ல்கள்  நன்றாக  இருக்கிறது .அபூர்வாவின் ஒளிப்பதிவு கச்சிதம் . ராதா ஸ்ரீதரின்   எடிட்டிங்      ரெண்டே  கால்  மணி  நேரத்தில்   டைம்  ட்யூரேஷன்   கட்  பண்ணி  இருக்கு 



ரசித்த   வசனங்கள்


1    புண்ணிய்த்துக்கு  ஏத்த  பொண்டாட்டினு  சொல்வாங்க. போன  ஜென்மத்துல  நாம  எந்த  அளவு  புண்ணியம்  பண்ணி  இருக்கோமோ  அந்த  அளவு   நல்ல  பொண்டாட்டி  நமக்கு  இந்த  ஜென்மத்துல  கிடைக்கும் 


2   காமம்  ஒரு  வாரம்  இருந்தா  காதல்  ஒரு  மாசம்  இருக்கும்பாங்க , அதுக்குப்பின்  மரணத்துக்காக  காத்துட்டே  இருக்க  வேண்டியதுதான்


3    மாப்ளை  சொக்கத்தங்கம்


 அம்மா, அவரு  என்னை  அடிச்சாரு 


  நீ என்ன  தப்பு  பண்ணுனே?


 நாந்தான்  தப்பு  பண்ணி இருப்பேன்னு  நீயா  எப்படிம்மா  முடிவு  எடுத்தே?


4   நான்  இப்போ  என்ன  சொல்ல நும்னு  நீ  எதிர்பார்க்கறே? 


 இந்த  மாதிரி  நேரத்துல   ஒரு அ ம்மா  தன்  மக  கிட்டே  என்ன  சொல்லனும்னு  எனக்கு எப்படித்தெரியும் ?


 உங்கப்பா  என்னை அடிச்சப்போ  எங்க  அம்மா  எனக்கு என்ன  சொன்னாங்களோ  அதைதான் நான்  உனக்கு  சொல்லப்போறேன்


5   அப்பா  உன்னை   அடிச்சாரா?


 ஆமா,  ஒரே  ஒரு  தடவை, அதை  என்  அம்மா கிட்டே  சொன்னப்போ  புருசன்  கிட்டே  அடி  வாங்கற  முதல்  பெண்  நீ  இல்லை,  இது  எல்லாக்காலத்துலயும்  நடப்பதுதான்  , யாராலும்  மாத்த  முடியாது 


6  மொத்தக்காதலும்   எனக்குதான்  வேணும்னு  நீ  ஆசைப்பட்டா  மொத்த  வலியையும் நீதான்  ஏத்துக்கனும்


7  ஒரு  ஆம்பளை   தன்  பொண்டாட்டியை கை நீட்டி  அடிக்கக்கூடாது  , அப்படி  அடிச்சா  அவன்  கூட  வாழ  வேண்டிய கட்டாயம்  கிடையாது 


8   மாத  விலக்கு  முடிந்த  பின்  வ்ரும் 11,12,13   இந்த  மூன்று  நாட்களில்  தம்பதிகள்  சேர்ந்தா  குழந்தை  நிச்சய்ம்  உருவாகும்


9    யாரை  அடிச்சா  திருப்பி  அடிக்க  மாட்டாங்களோ  அவங்களைத்தான்  க்ரெக்டா  நீங்க  அடிக்கறீங்க,  ஏன்  மேடம்  நான்  சொல்றது  கரெக்ட்  தானே?


10 வாயை  வெச்சுட்டு  சும்மா  இருந்திருந்தா  இப்படி  நீ  அவர்  கிட்டே  அடி  வாங்கி  இருக்க  மாட்டே  இல்ல ?


  மேடம்,  நீங்க  அ மைதியா  தான்  இருக்கீங்க, ஆனா  அவர்  கிட்டே   அடி  வாங்கல? 




லாஜிக்   மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள்


1   நாயகி  தன்  அம்மாவிடம்   தன்  க்ணவனைப்பற்றி  புகார்  பண்றாங்க . அதை கணவன்  மீன்  வாங்க  மார்க்கெட்  போய்  இருந்தப்போ  பண்ணி  இருக்கலாமே?  மாப்ளை  வீட்ல  இருக்கும்போது  யாராவது  இப்படி  அவர்  காது பட  புகார்  பத்திரம்  வாசித்து மாட்டுவார்களா? 


2   அம்மா, அப்பாவுக்கு  பை  சொல்லும்போது  நாயகி  இடதுகையா;ல சொல்றாங்க.  அது   ஏன்?  வலது  கைல  பை  சொல்வதுதானே  பண்பாடு ? (  அவங்க  இடது  கை  பழக்கம்  உள்ளவங்க  இல்லை ) 


3  நாயகி  போலீஸ்  ஆஃபீசரான  தன்  கணவனைப்பற்றி  உயர்  அதிகாரியிடம்  புகார்  சொல்ல  டிஐஜி  ஆஃபீஸ்க்கு  கான்ஸ்டபிளுடன்  வருகிறார். அங்கே  தன்  கணவனும்  ட்யூட்டிக்காக  வருவார்  , தன்னைப்பார்ப்பார்  மாட்டிக்குவோம்  என  தெரியாதா?  எழுத்து  வடிவில்  புகார்  கடிதம்  எழுதி  கான்ஸ்டபிளிடம்  தந்து    விட்டிருக்கலாமே?  


4 நாயகி  தன்  கணவ்னிடம் நீ என்னைக்கொடுமைப்படுத்துனதை  ஒத்துக்கிட்டு  ஒரு  வீடியோ  வாக்குமூலம் ரெடி  பண்ணைத்தரனும்னு  கேட்கறாங்க.  செல்  ஃபோன்  கேமராவை  ஆன் பண்ணி  வீட்ல  வெச்சாலே  அடிக்கும்போது  ரெக்கார்டு  ஆகுமே? அதை  முயற்சிக்காம கணவன் கிட்டேயே  கெஞ்சுவது  ஏன்?



சி பி  எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பெண்களை  மிகவும்  கவரும்   திரைக்கதை  அமைப்பைக்கொண்ட்  படம்,   ஆனால்  ஆண்கள்  பார்த்துத்திருந்த  வேண்டிய  பட்ம் .  ரேட்டிங்  2. 75 / 5 

0 comments: