Friday, October 21, 2022

சர்தார் (2022) (தமிழ்) - சினிமா விமர்சனம் ( ஸ்பை ஆக்சன் த்ரில்லர்)


 படத்தோட  ட்ரெய்லர்ல  ஹீரோ  பல  கெட்டப்ல  வர்றதைப்பார்த்துட்டு  பலரும்  இது  கோப்ரா டைப்போ என  கிண்டல்  பண்ணிட்டு  இருந்தாங்க . அது  போக  சர்கார்  ஓடலை . அப்போ  சர்தார் அப்படித்தானே  இருக்கும்? சுல்தான்  சுணங்கிடுச்சு , விருமன்  வெறும்  மண் . கார்த்தி  4  எழுத்து  அவர்  படங்கள்  4  எழுத்து அமையும்  டைட்டில்னா  ஓடாதோ? என  நேமாலஜி , நியூமராலஜி  எல்லாம்  பார்த்து  கிண்டல்  பண்ணவங்க  வாயை  அடைப்பது  போல்  ஒரு  ஹிட்  படம்  கொடுத்திருக்கிறார்  இரும்புத்திரை  இயக்குநர்   மித்ரன்


ஸ்பாய்லர்  அலெர்ட்


ஹீரோ  ஒரு  போலீஸ்  ஆஃபீசர் . எல்லா  தமிழ்  சினிமா  ஹீரோக்களைப்போலவே  இவரும்  யாராலும்  முடிக்க  முடியாத  பல  கேஸ்களை  திறம்பட  முடிக்கிறார். ஆனா  இவர்  என்னதான்  திறமையா  கேஸ்களை  டீல்  பண்ணினாலும்  இவரோட  அப்பா  ஒரு  தேச  துரோகிதானே?  என   லெஃப்ட்  ஹேண்ட்ல  இவரை  டீல்  பண்றாங்க. அதனால  இவருக்கு  அப்பா  மேல  வெறுப்பு 


வாட்டர்  பாட்டிலில்  இருக்கும்  தண்ணீர்  உடல்  நலனுக்கு  ஊறு  விளைவிப்பவை, அது  என்  மகனின்  உடலில்  பல  மாற்றங்களைக்கொண்டு  வந்திருக்கு  என  ஒரு  பெண்  போராடுகிறார்.  ஆரம்பத்தில்  ஹீரோ  இந்தப்பெண்ணை  தீவிரவாதியோ?  போராளிப்பெண்ணோ? என  தவறாக  நினைக்கிறார். ஆனால்  அந்தப்பெண்  வில்லனால்  கொல்லப்பட்ட  பின்  ஹீரோ  உஷார்  ஆகிறார்


  தன்  அப்பாவுக்கு  தேசதுரோகி  பட்டம்  அளிக்கப்பட்டது  ஏன்?  ஒன்  இண்டியா  ஒன்  பைப்  லைன்  திட்டத்தின்  மூலம்  வில்லன்  எப்படி  தண்ணீரை  வியாபாரப்பொருள்  ஆக்குகிறான்> தன்  அப்பா  மேல்  ஏற்பட்ட  பழியை  ஹீரோ  களைந்தாரா?  இவற்றை  வெண்  திரையில்  காண்க

 ஹீரோவா  அப்பா , மகன்  என  இரு  வேடங்களில்  கார்த்தி . அப்பா  ரோலில்  நடிக்கும்போது  செந்தூரப்பூவே  பட  விஜயகாந்த்  போல  கர கர  குரலில்  பேசி  கச்சிதமாக  நடித்தவர்  பாடி  லேங்வேஜில்  நட்புக்காக  சரத்குமார்  போல முதிய  தோற்ற  நடையைக்கொண்டு வரவில்லை . அதில்  கோட்டை  விட்டுட்டார். ஆனா  அப்பா  கார்த்தி  வரும்  இடங்களில்  தியேட்டரில்  கை தட்டல்  பறக்குது


போலீசாக  வரும்  ஹீரோ  ஹீரோயின்  லவ்  போர்சன் ,  இளம்  பிராயத்தில்  3    வெவ்வேறு  கால  கட்டங்களில்  லவ்  ப்ரப்போஸ்  செய்ய  முயன்று  முடியாமல்  பம்முவது  எல்லாம்  கலகலப்பான  நிகழ்வுகள்  தான்  ரசிக்கும்படியான  காதல்  காட்சிகள் ராஷிகா  கண்னா  இளமைப்பொலிவு  அழகு  நடிப்பும்  குட் 


போராடும்  பெண்ணாக  லைலா .  நீண்ட  இடைவெளிக்குப்பின்  ஒரு  கம் பேக்  மூவி .இவரது  கேரக்டர்  ஸ்கெட்ச்  நன்றாக  இருந்தாலும்  இன்னும்  இவருக்கு  ஸ்க்ரீன் ஸ்பெஸ்  கொடுத்திருக்கலாம். வந்தவரை  நல்ல  நடிப்பு 


 அந்த  சின்னப்பையன்  ரித்விக்  கலக்கல்  நடிப்பு க்ளைமாக்ஸ்  வரை  உயிரோட்டமான  துள்ளலான  நடிப்பு 


அப்பா  கார்த்திக்கு  ஜோடியாக  ரஜியாவிஜயன்  நல்ல  நடிப்பு .  முனீஸ்காந்த்  குணச்சித்திர  நடிப்பு 


 பின்  பாதியில்  வில்லன்  நடிப்பு  மிரட்டல் 


ஜி வி  பிரகாஷ்  இசையில் அந்த  தெருக்கூத்துப்பாட்டும்  , டூயட்  பாட்டும்  நல்லாருக்கு , பின்னணி  இசை  கனகச்சிதம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில நெருடலக்ள்


1  தேசதுரோகம்  சப்ஜெக்ட்  இப்போதான்  ராக்கெட்ரி , சீதாராமம்  போன்ற  படங்களில்  பார்த்தோம், அதே போல்தான்  காட்சி  அமைப்புகள்  இருப்பதால்  நமக்கு  பெருசா  இம்ப்பாக்ட்  கொடுக்கலை 


2 கிரிமினல்  ரெக்கார்டு  இருந்தால்  அரசுப்பணி  கிடைக்காது . ஒரு  தேசதுரோகியாக  அறிவிக்கப்பட்டவருக்கு  எப்படி  போலீஸ்  ஆஃபீசர்  பணி  கிடைத்தது ?


3   தேசதுரோகி  பட்டத்தால்  குடும்பமே  தற்கொலை  செய்து  கொள்ளும்போது அவரது ந் மகனான  ஹீரோ  லீவ்  ல  டூர்  போய்ட்டாரா? 


4   படம்  ரெண்டேமுக்கால்  மணி  நேரம்  ஓடுது , எடிட்டிங்கில்  இன்னும் ஷார்ப்பா  கட்  பண்ணி  இருக்கலாம் 


ரசித்த  வசனங்கள் 


1   தண்ணீரை  விற்காம  இருந்தாலே  போதும், அதைப்பாதுகாக்க  வழி  கிடைச்சிடும் 


2   உளவாளி  எந்த  வேலை  செய்தாலும்  அதுக்கு  ரெக்கார்டு  இல்லை 


3   மேலே  இருப்பவனை  யார்  கீழே  இழுக்கறாங்களோ  அவன்  மேலே  வருவான்


4   எதுக்குப்பா  இந்த  விளம்பரம் ?


 நாலு  பேருக்கு  நல்லது  பண்ணுனா  அது நாப்பாதாயிரம்  பேருக்கு  தெரியற  மாதிரி  பண்ணனும்


5   ரவுடி  பொய்  சொல்லலாம், ஆனா  ரவுடின்னே  பொய்  சொல்லக்கூடாது 


6  ஊருக்கு  ஒரு  ஆர்மி  வீரன்  கிடைப்பான் , ஆனா  உண்மையான  இளைஞன்  கிடைக்க  மாட்டான் 


7   காக்ரோச்  வில்  ரீச்  எனிவேர்


8  எதிரியைக்கண்டுபிடிப்பது  ரொம்ப  ஈசி   துரோகியைக்கண்டு பிடிப்பதுதான்  கஷ்டம்,


9   உண்மையை  சுமந்துட்டு  வாழ்வது  ரொம்ப  கஷ்டம் 


10  நாம்   யார்?ங்கறது  நாம்  செய்யும்  செயல்களில்  இருக்கு


11  ராணுவத்தில்  , உளவுத்துறையில்  வாழும்போது  இல்லறம்  கிடையாது  ,சாகும்போது  கல்லறை  கிடையாது 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சர்தார் - முதல் பாதி க்ரிஷ்ப்பான திரைக்கதை , பின் பாதி ஸ்பை ஆக்சன் த்ரில்லர், தீபாவளி ரேஸ் வின்னர், ஆல் செண்ட்டர் ரன்னர், கார்த்தி - ராசி கண்ணா கெமிஸ்ட்ரி குட் ,கதைக்கரு சமூக விழிப்புணர்வு அளிக்கக்கூடியது . விகடன் மார்க் 44 , ரேட்டிங் 3 / 5


Sardar
Sardar 2022 poster.jpg
Teaser poster
Directed byP. S. Mithran
Written byP. S. Mithran
Dialogue byPon Parthiban
Roju
Binpu Ragu
Geevee
Produced byS. Lakshman Kumar
Starring
Narrated byP. S. Mithran
CinematographyGeorge C. Williams
Edited byRuben
Music byG. V. Prakash Kumar
Production
company
Prince Pictures
Distributed byRed Giant Movies
Release date
  • 21 October 2022[1]
Running time
165 minutes[2]
CountryIndia
LanguageTamil

0 comments: