Thursday, October 13, 2022

உத்தம புத்திரன் (1958) (தமிழ்) - சினிமா விமர்சனம் ( டபுள் ஆக்சன் மசாலா)


 சிவாஜி  கணேசன்  ஓவர்  ஆக்டிங்  என  குறை  சொல்லும்  பலரும்  பார்க்க  வேண்டிய  இரு  படங்கள்  முதல் மரியாதை , உத்தம  புத்திரன். முன்ன்தில் முழுக்க  முழுக்க  இயல்பான  நடிப்பு . பின்னதில்   ஸ்டைலிஷ்  நடிப்பு , ஆனா  என்னதான்  சொன்னாலும்  எம்  ஜி ஆர்  ரசிகர்களால்  சிவாஜியை  ரசிக்கமுடிவதில்லை . அது  ஏன்னு  தெரியலை. எல்லா  நடிகர்களையும்  அவரவர்  பிளசை  ரசிக்கனும்  என்பதே  என்  கருத்து 

ஸ்பாய்லர்  அலெர்ட்


ம்காராணி  நிறை மாசமா  இருக்காங்க , நாம  கூட இருக்கனும்கற  பொறுப்பே  இல்லாம  மன்னன்  வேட்டையாட காட்டுக்குப்போய்டறான். பிரசவத்துல  இரட்டை  ஆண்  குழந்தைகள் 


மகாராணியின்  த்ம்பிதான்  நாட்டின்  தளபதி . அவன்  தான்  வில்லன். அவன்  சதித்திட்டம்  தீட்டி  ஒரு  குழந்தைதான்  பிறந்துதுனு  சொல்லிடறான். இன்னொரு  குழந்தையை   ஒரு  ஆள்ட்ட  கொடுத்து  கொன்னுடுங்கறான். அந்த  வேலையை  அவனே  செஞ்சிருந்தா  படமே  வந்திருக்காது 


வேட்டைக்குப்போய் திரும்பி  வந்த  மகாராஜா  வுக்கு  விஷம் வெச்ச  சாப்பாட்டைக்கொடுத்து  போட்டுத்தள்ளிடறான்   வில்லன். குழந்தையை  வளர்த்து  ஆளாக்கும்  பொறுப்பை  கரெக்டா  வில்லன்  கிட்டேயே  ஒப்படைக்கிறான்  மன்னன், ஆள் ஆவுட்


பசங்க  பெரியவ்ங்க  ஆகறாங்க . இளவரசனா  வளர்பவன்  சரக்கு , பொண்ணுங்க   அப்டினு  உல்லாசமா  வாழ்றான். ஏழையா  இருப்பவன் நல்லவனா  வீரனா  வாழ்றான்


 நாட்டின்  அமைச்சரின்  மகள்   ஏழையைப்பார்க்கறா. ரெண்டு  பேரும்  கண்டதும்  காதல் 


அங்கே  அரண்மனைல இளவர்சனுக்கும்  அதே  அமைச்சர்  மகளை  மேரேஜ்  பண்ணி  வைக்க  திட்டம்  தீட்றாங்க 


வழக்கமா  பெண்  பார்க்க  நாம  பொண்ணோட்  வீட்டுக்கோ  கோயிலுக்கோ  போவோம், ஆனா  மன்ன்ர்  குடும்பம்  ஆச்சே? பெண்ணை  அந்தப்புரத்துக்கே  வரவழைச்சு  பார்க்கறாங்க


 காதலன்  காதலியை  சந்திக்க  1008 வழிகள் , , இடங்கள் இருக்கு . அதை  எல்லாம்  விட்டுட்டு  அந்த  எழை  இளைஞன்  அரணமனைக்கே  வந்துடறான்


 உருவ  ஒற்றுமை  கண்டு  குழப்பம்  வ்ருது / இதுக்குப்பின்   இந்தக்கதையில்  நிகழும்  திருப்பங்கள் தான்  கதை 


 ஒரு  ஜனரஞ்சகமான  கதையை  ரெண்டே  முக்கால்  மணி  நேரம்  ஜாலியா  கொண்டு போனதால்  செம  ஹிட் சாங்ஸால்  இது  சூப்பர்  டூப்பர்  ஹிட்  படம்  ஆனது 

ஹீரோவா  டபுள்  ஆக்சனில்  சிவாஜி .   ஓப்பனிங்  சாங்கில்    யாரடி நீ மோகினி   ஹா  என  ஸ்டைல் காட்டும் போது அரங்கம்  அதிரும்  கைதட்டல் ( கிடைச்சிருக்கும்)  உடல்  மொழியில்  இருவருக்கும்  நல்ல  வித்தியாசம்  காட்டி  இருப்பார் . ( இவரது  உடல்மொழியை  சிலாகிக்க  சிறந்த  படம்  ராமன்  எத்தனை  ராமனடி ) 


ஹீரோயினா  பத்மினி , தில்லானா  மோகனாம்பாள் தான்  இவங்க  கெமிஸ்ட்ரி  பிரமாதமா  ஒர்க்  அவுட்  ஆன  படம், இதிலும்  நல்லாதான்  இருக்கு


வில்லனா  நம்பியார் ., இவரது  முக பாவனைகளும்  டயலாக்  டெலிவரியும்  செமயா  இருக்கும் 

அம்மாவா  கண்ணாம்பா. இவர்  நடிப்பைப்பற்றி  எல்லாம்  சொல்லவே  தேவை  இல்லை 


காமெடிக்கு  தங்க  வேலு . குட்  டைமிங் 

 திரைக்கதை  வசனம்  ஸ்ரீதர் /  அடேங்கப்பா. இவரு    அந்தக்காலத்துலயே  பெரிய  ஆள்  போல 



 செம  ஹிட்  பாடல்கள்  லிஸ்ட்


1  ஹா  , யாரடி  நீ  மோஹினி  , கூறடி  என்  கண்மணி  ஆசை  உள்ள  ராணி 

2 முல்லை  மலர்  மேலே  மொய்க்கும்  வண்டு  போலே   (  செம  மெலோடி )

3  அன்பே  அமுதே 

4  காத்திருப்பான்  கமலக்கண்ணன் 

5  புள்ளி  வைக்கிறான்

6  மண்ணுலகெல்லாம்

7  உன்ன்ழகை  கன்னியர்கள்  கண்டதினாலே 


இது  போக  2  பாட்டு  இருக்கு  , அவை சுமார்தான் 

இசை  ஜி  ராமநாதன் . பிஜிஎம்மும்  சரி  பாடல்  இசையும்  சரி 

செம 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் ,  திரைக்கதையில்  சில  நெருடல்கள்


1  கமல்  நடிச்ச  மைக்கேல் மதனகாமராஜன்ல  இருந்து  அந்தக்கால  ஆள் மாறாட்ட படங்கள்  வரை  எல்லாப்படத்துலயும்  வில்லன்   குழந்தையை  டைரக்டா  அவனே  கொல்லாம  அதுக்கு  ஏன்  ஆள்  வைக்கனும்? அல்லது  கண்  முன்  கொல்லச்சொல்லனும், இதை  எங்காவது  கொண்டு போய்  புதைனு  எதுக்கு  சொல்றாங்க ?


2   மன்னனிடம்  இரட்டைக்குழந்தைல  ஒண்ணு  தான் தப்பியது  . இன்னொண்ணு இறந்துடுச்சுனு  சொல்லும்போது  அந்த தத்தி  மன்னன்  இறந்த  குழந்தையின்  டெட்  பாடி  எங்கே?னு  கேட்கவே  இல்லை 


3  ஒரு பெரிய  அரசிய  செல்வாக்குள்ள  மந்திரியைக்கொல்ல  ஆள்  வைக்கலாம், தம்மாத்தூண்டு  குழந்தையைக்கொல்ல  ஒரு  ஆளை  நியமிப்பதும்  இந்த  வேலையைச்செய்தா  உனக்கு  லட்சக்கணக்கில்  ப்ணம்  தர்றேன்   என  சொல்வதும்  எதுக்கு ? 


4  மகாராணி  மந்திரி  மகளை  அந்தப்புரத்துக்கு  வரச்சொல்வது  பெண்  பார்க்க  ஒரு  10  நிமிசம்  ஆகுமா? ஆனா ஹீரோ   ஹீரோயின்  எங்கே?னு  கேட்கும்போது  அவர்  என்னமோ  அரண்மனைக்கே  குடியேறிப்போன  மாதிரி  அவரை  நீங்க  இனி  இங்கே  பார்க்க  முடியாது  , அரண்மனை  அந்தப்புரம்  போனா  பார்க்கலாம்  என சொல்வது  செம  காமெடி . அது  எவ்ளோ  பெரிய  ரிஸ்க் ? ஆனா  அசால்ட்டா  போய்ட்டு வந்துடறார்  ஹீரோ 


5 வில்லன்  நம்பியார்  பட்டாபிஷேக விழாவில்  மகாராஜா  14  வருடங்களுக்கு முன்  குழந்தையை  என்னிடம்  ஒப்படைத்தார்  என்கிறார். ஆனா  அந்தக்குழந்தை  பெரியவன்  ஆகி  இப்போ  25  வயசு  ஆளா  காட்றாங்க .


6   கிட்டத்தட்ட  20  வருடங்களாக  ஆட்சி  அதிகாரத்தை  தன் கையில் வைத்திருக்கும்  தளபதி  எப்படி  தன்  கையை  விட்டு  அதிகாரம்  போக  சம்மதிப்பார்?  ஜஸ்ட்  4  வ்ருடங்கள்  ஆட்சி  அதிகாரம்  இருந்தாலே  இப்போ  எல்லாம்  எல்லாத்தையும்  அவங்க  கண்ட்ரோலுக்கு  கொண்டு  வந்துடறாங்க 

7   மன்னர்  ஒரு  தத்தி  போல  குழந்தையை  அம்மா  கிட்டே  ஒப்படைக்காம  தாய்மாமா  கிட்டே  ஏன்  ஒப்படைக்கிறார்?பல  வருடங்கள்  கழித்து  தன்   தம்பியான  தளபதியிடம்  குழந்தையை  நீ  வளர்த்த  விதம்  சரியில்லைனு சொல்லுதே? நி   என்னம்மா  பண்ணிட்டு  இருந்தே? டி வி  சீரியலா  பார்த்துட்டு  இருந்தே?  நல்லா  வளர்த்திருக்கலாமே? அல்லது   அப்பவே  கண்டிச்சு  இருக்கலாமே? 


88 நல்லவனான குடிப்பழக்கம் இல்லாத ஹீரோ ஹீரோயினை வர்ணித்துப்பாடும் பாட;லில் மது குடித்த வண்டு போல் என்ற பாடல் வரி வருது. கெட்டவனான குடிகாரனான மன்னன் பாடுவது போல் இருந்தால்; அது ஓக்கே நல்லவன் தேன் குடித்த வண்டு போல் என்றுதானே வர்ணிக்க வேண்டும் ? ஒரு வேளை அவருக்கு போட்ட பாடலை இவ்ருக்கு மாத்திட்டாங்களா?

சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட்  =--  இந்தக்கால  ரசிகர்களும்  ரசித்துப்ப்பார்க்கும்படிதான்  கலகலப்பா  படம்  போகுது . எல்லாரும்  பார்க்கலாம்  ரேட்டிங்  3 / 5 


உத்தம புத்திரன்
இயக்கம்டி. பிரகாஷ் ராவ்
தயாரிப்புஎஸ். கிருஷ்ணமூர்த்தி
ஸ்ரீதர்
டி. கோவிந்தராஜன்
(வீனஸ் பிக்சர்ஸ்)
திரைக்கதைஸ்ரீதர்
இசைஜி. ராமநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
கே. ஏ. தங்கவேலு
எம். கே. ராதா
ஓ. ஏ. கே. தேவர்
பத்மினி
ப. கண்ணாம்பா
எம். எஸ். எஸ். பாக்கியம்
ராகினி
ஹெலன்
ஒளிப்பதிவுஅ. வின்சென்ட்
படத்தொகுப்புஎன். எம். சங்கர்
விநியோகம்சிவாஜி புரொடக்சன்சு (சென்னையில் மட்டும்)
வெளியீடுபெப்ரவரி 71958
நீளம்16044 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
முன்னர்உத்தம புத்திரன் (1940 திரைப்படம்)


Wednesday, October 12, 2022

பார்த்திபன் கனவு (1960) - சினிமா விமர்சனம் ( கல்கியின் நாவல் )


முன் ஜாமீன்  அறிக்கை -  அமரர்  கல்கி  எழுதிய  பார்த்திபன்  கனவு  நாவல் நான்  இன்னும்  படிக்கவில்லை. படமாக  என்ன  அவுட் புட்  வந்திருக்கோ  அதுக்கான  விமர்சனம்  தான்  இது. இதுல  ஏதாவது  கலாய்ப்புகளோ , கிண்டல்களோ இருந்தால்  அது  பட இயக்குநருக்கானது.  எனவே  கல்கி ரசிகர்கள்  பொறுமை  காக்கவும் 


1951ல்  ரிலிஸ்  ஆன  மர்மயோகி, 1960ல் ரிலீஸ்   ஆன பார்த்திபன்  கனவு   இரண்டு  படங்களுக்குமான  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட் ஒன்றுதான்  என்பதால்  யாரும்  மர்மயோகியைப்பார்த்துத்தான் பார்த்திபன்  கனவு    காபினு  நினைக்க  வேண்டாம்.   பார்த்திபன்  கனவு  நாவல்  ரிலீஸ்  ஆன  வருடம் 1942.  அதனால  இந்த  நாவலில்  இருந்துதான்  மர்மயோகி  க்ளைமாக்ஸ்  உருவி இருக்கனும்


ஸ்பாய்லர்  அலெர்ட்


ஒரு  காலத்தில்  சோழப்பேரரசு  பிரம்மாண்டமானதா  இருந்தது. ஆனா  அதன்  படை  பலம்  குறுகி  பல்லவ  அரசுக்கு  கப்பம்   கட்டும்  நாடாக    சிறுத்து  விட்டது 


  பல்லவ  மன்னன் மாமல்,லருக்கு  கப்பம்  கட்ட  மறுத்து  போருக்கு  தயார்  ஆகிறான்  பார்த்திபன்  எனும்  சோழ  மன்னன். போருக்குப்போகும்  முன்  பாலகனான  தன்  மகனை  அழைத்து   என்  க்னவு  யாருக்கும்  அடிபணியாம  சுதந்திரமா  இருப்பதே. என்  கனவை  நீ  நிறைவேற்றனும்  அப்டினு  உறுதி  வாங்கிட்டு  போருக்குக்கிளம்ப்றார்.


 போருக்குப்போகும்  முன்  ஒரு  சிவனடியார்  வந்து  மன்னா, உங்க  மகனை  என்  கிட்டே  கொடுங்க , நான்  அவனை வீரனாக்குகிறேன்  என  வாங்கிட்டுப்போய்ட்றார். அவரு  யாரு ? எவரு?னு  தெரியாம  ம்ன்னர்  எப்படிக்கொடுத்தார்னு  தெரில 


சந்திர  முகி  படத்தோட  சச்சின்  போட்டி  இட்டப்போ  என்ன  ஆச்சு ? தளபதி  படத்தோட  குணா  போட்டி  இட்டப்போ என்ன  ஆச்சு ? அந்த  மாதிரி தான்  பல  மடங்கு  படை  பலம்  மிக்க  பல்ல வ  ,மன்னன்  படை  முன்  சோழ  மன்னன்  பார்த்திபன்  போரில்  தோற்று  வீர  மரணம்  அடைகிறான் 


பார்த்திபன்  மகன்  விக்ரமன்  வளர்ந்து  பெரியவன்  ஆகிறான். அவன் தான்  ஹீரோ. ஹீரோ  ஓப்பனிங்  சீன்லயே  வீர  வசனம்  எல்லாம்  பேசறார். எனக்கென்ன? எனக்கென்ன?  இமய  மலையில்  உன்  கொடி  பறந்தால்  எனக்கென்ன? என  சும்மா  இருந்திருக்கலாம்.  சோழ  நாட்டுக்கொடியை  ஏத்தறேன்னு  வம்புக்குப்போய்  மாட்டிக்கறார். பல்லவ  மன்னனிடம்  கைதியா  அழைத்து  செல்லப்படுகிறார்


 போற  வழில  ஆன்  த  வே  பல்லவ  இளவரசியைப்பார்க்கறார். பாப்பாவும்  பார்க்குது. கண்டதும்  இருவ்ருக்கும்  காதல் . அப்பவே  பல்லவ  மகாராஜாட்ட  யாராவது  ஒருவர்  காதலைப்ப்ற்றிச்சொல்லி  இருந்தால் கதை  அங்கேயே  முடிஞ்சிருக்கும். மூன்றரை  மணி  நேரம்  ஓடி  இருக்காது . ஆனா  சொல்லலை \


பல்லவ  மன்னர்  விசாரணை முடிந்ததும்   விக்ரம  சொழனை  நாடு  கடத்துகிறார்.   விக்ரம  சோழன் செண்பகத்தீவுக்கு  மன்னர்  ஆகிறார். தன்  குல  சொத்தான  வாளை  எடுக்க  மீண்டும்  நாட்டுக்கு  வரு,ம்போது  காபாலிக ர்  கூட்ட்த்தில்  மாட்டிக்கறார். அவரை  பல்லவ  ஒற்றர்  படை  தலைவன்  காப்பாற்றுகிறான். பின்  காயம்  பட்ட  விக்ரம  சோழனை  பல்லவ  இளவரசி  காப்பாற்றுகிறார்


 படம்  போட்டு  ரெண்டே  முக்கால்  மணி  நேரம்  கழிச்சுதான்  ஹீரோ  ஹீரோயின் இருவரும்  பேசிக்கறாங்க . .இவங்க   ரெண்டு  பேரும்  காதலர்கள்  என்பதை  உணர்ந்த    பல்லவ  மன்னன்  எ ந்ன  ஆக்சன்  எடுத்தார்? அந்த  சிவனடியார்   யார்? என்ற  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டை  யூ  ட்யூப்ல  கண்டு  மகிழ்க


  ஹீரோவா , விக்ரம  சோழனா  காதல்  மன்னன்  ஜெமினி  கணேசன்.   நல்லாதான்  ட்ரை  பண்ணி  இருக்காரு , ஆனா  ஒரு  மன்னனா  எம்ஜியாரையோ ,  சி வாஜியையோ  நாம  ஏத்துக்கிட்ட  அளவு (  நாடோடி  மன்னன் , உத்தம புத்திரன் )  இப்வரை  ஏத்துக்க  முடியலை .,   வீர  வசனம் பேசும்போது சிரிபுதான்  வருது . 


ஹீரோவோட  அப்பாவா  பார்த்திபன்  சோழனாக  வரும்  அசோகன்  முதல்  20  நிமிடங்களில்  என்ன  விதமான நடிப்பைக்கொடுத்தாரோ  அந்த  வீரத்தில்  50%  கூட  ஜெமினியால்  கொடுக்க  முடியலை . அந்த ஓவியங்களை  எல்லாம்  காட்ட்  அசோகன்  பேசும்  டயலாக்ஸ்  கனல்  தெறிக்குது 


ஹீரோயினா  குந்தவியா வைஜயந்தி  மாலா. நல்ல  அழகு  .  நல்ல  நடிப்பு ., இருவருக்குமான  கெமிஸ்ட்ரி  நல்லா  ஒர்க் அவுட்  ஆகி  இருக்கு 


மாமல்லராக  ரங்காராவ்  நடிப்பு  அட்டகாசம் கபால  பைரவராக  பி  எஸ்   வீரப்பா  நடிப்பு  கம்பீரம் 


இசை  அருமை  . எட்டு  பாடல்களில் 2  பாட்டு  செம  ஹிட்  பாட்டு 


பாடல்கள்


1  கண்ணாலே  நான்  கண்ட  கனவு 


2  இதய  வானின்  உதய  நிலவே  எங்கே  போகிறாய்? நீ எங்கே  போகிறாய்?



 ரசித்த  வசனங்கள்


1  பெண்  புத்தி  பின்  புத்தி  என்பது  சரிதான், இதனால்தான்  ராஜ்ஜியம்  ஆளும்  உரிமையை  நம்  முன்னோர்கள்  பெண்களுக்குத்தரவில்லை 


தவறு, பெண்கள்  ராஜ்ஜியம்  ஆண்டிருந்தால்  உலகில்  போர்  என்பதே  நிகழ்ந்திருக்காது 


2   மனிதனைத்தவிர  வேறு   எந்த  ஜீவராசிக்கும்  சட்டம்  தேவை  இல்லை , ஆனா  காதல்  அப்படி  இல்லை  எல்லோருக்கும்  தேவையானது


3  வீரத்தால்   வாழ  வேண்டும்  சாகக்கூடாது


அடிமையாக  ஆயிரம்  ஆண்டுகள்  வாழ்வதை  விட   வீரனாக  ஒரு  நாள்  வாழ்வது  போது,ம் 


லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில்  சில  நெருடல்கள்


  1  க்ளைமாக்ஸ்ல  ஹீரோ  மாமனார்ட்ட  கேட்கறாரு ? எது வீரம் ? 10,000  பேர்  கொண்ட  படைகளை  20,000  பேர்  கொண்ட  படை  வீழ்த்தியதா  வீரம் ?   அப்டீங்கறாரு 


 அதையே  நான்  திருப்பிக்கேட்கறேன். எது  விவேகம் ?  20,000  பேர்  கொண்ட  படைனு  தெரிஞ்சும்  தோல்வி  உறுதினு  தெரிஞ்சும்  எதுக்கு  இந்த  வெட்டி  வீராப்பு ?  அத்தனை பேரின்  உயிர்களும்  போச்சே? 


2   ஆங்கிலேய்ர்களை  எதிர்த்து  வீர  பாண்டிய  கட்டபொம்மன்  வரி  கொடுக்க  மறுத்ததை ஏத்துக்க  முடியுது. ஒரு  சக  இந்தியனான  பல்லவ  மன்னனை  தன்னை  விட  பலம்  கொண்டவன்னு  தெரிஞ்சும்  எதிர்த்தது  வீரம்னு  மெச்ச  முடியலை 


3      சோழ  மன்னன்  பல்லவ  மன்னனை  முன்னே  பின்னே  பார்த்தே  இருக்க  மாட்டானா?  மாறு  வேசத்தில்  வ்ந்தா  தெரியாதா? 


4  மொத்தம்    மூணே  முக்கால்  மணி நேரம்  ஓடுது .  இதை  ரெண்டரை  மணி  நேரமா  தாராளமா  சுருக்கலாம் . போட்டு  இழுத்து  வெச்சுட்டாங்க 


  சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பிரமாதமான  கதை  எல்லாம்  இல்லை , சுமாரான  கதைதான் ,  படமும்  சூப்பர்  ஹிட் எல்லாம்  ஆகலை , மீடியமாதான்  ஓடுச்சு . பார்க்கனும்னா  பாருங்க  ரேட்டிங்  2.25 / 5 

பொன்னியின்  செல்வன்ல் வர்ற  குந்தவை  வேற  இதுல  வர்ற  குந்தவி  வேற 


Parthiban Kanavu
Parthiban Kanavu 1960 poster.jpg
Theatrical release poster
Directed byD. Yoganand
Screenplay byD. Yoganand
Based onParthiban Kanavu
by Kalki
Produced byV. Govindarajan
StarringVyjayanthimala
Gemini Ganesan
S. V. Ranga Rao
CinematographyK. S. Selvaraj
Edited byV. B. Natarajan
"Pazhani" R. Rajan
Music byVedha
Production
company
Jubilee Films
Release date
  • 3 June 1960
Running time
219 minutes
CountryIndia
LanguageTamil

Tuesday, October 11, 2022

நட்சத்திரம் நகர்கிறது(2022)(தமிழ்) - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா)@நெட் ஃபிளிக்ஸ்

 


எச்சரிக்கை - இது  ஜனரஞ்சகமான  படம்  அல்ல. தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆன  போது  சில  ஊர்களில் 2  நாட்களிலும் பல  ஊர்களில்  2  காட்சிகளிலும்  தூக்கப்பட்ட  அட்டர் ஃபிளாப்  பட்ம்,, சராசரி  ரசிகர்களுக்குப்பிடிக்காத நாடகத்தன்மை  கொண்ட  ஸ்லோவான  படம்  நெட்  ஃபிளிக்சில்  ரிலீஸ்  ஆனபின்  பார்த்தேன்.இந்தப்படத்தைப்பார்த்து  முடிக்க  18  நாட்க்ள்  ஆனது. டெல்லி  க்ரைம்  வெப் சீரிஸ்  ஒரே  சிட்டிங்கில்  பார்த்தேன்  அவ்ளோ  விறுவிறுப்பு .  இதை 10  நிமிசம்   5 நிமிச ம்  என   ஸ்கூல்  சப்ஜெக்ட்   போல   விட்டு விட்டு  பார்த்தேன் 


2012ல்  ரிலீஸ்  ஆன  இயக்குநர்  பா  ரஞ்சித்தின்  முதல்  படமான  அட்டக்கத்தி  பிரமாதமான  வரவேற்பையும்  விமர்சகர்களின்  பாராட்டையும்  பெற்ற  ஜனரஞ்சகமான  வெற்றிப்படம். 2014ல்  ரிலீஸ்  ஆன  மெட்ராஸ்   நுட்பமான  அரசியலை  கமர்ஷியலாகப்பேசிய  படம்/ 2016  ல் ரிலீஸ்  ஆன  கபாலி  ரஜினியின்  திரை  உலக  சரித்திரத்தில்   100  ரூபா  கவுண்ட்டர்  டிக்கெட்டை  ரூ  1000  என பிளாக்கில்  விற்கும்  அளவுக்கு  எதிர்பார்ப்பை  உண்டாக்கிய  படம்  என்றாலும்  சுமார்  ரகமே (  ரஜினியின்  இதற்கு  முந்தைய  ரெக்கார்டு  மணிரத்னம்  இயக்கிய  தளபதி. அப்போ  ஈரோடு  அபிராமில பால்கனி டிக்கெட்  ரூ  6.   பிளாக்ல  90  ரூபாக்கு  போச்சு . 2018ல்  ரிலீஸ்  ஆன  காலா  தோல்விப்படம்/2021ல்   ரிலீஸ்  ஆன சார்பட்டா  பரம்பரை  பிளாக் பஸ்டர் ஹிட்


ரஞ்சித்திடம்  உள்ள  பலமும்  பலவீனமும்  ஒன்றே. அது  ஜாதியை முன்னிறுத்துவது.  சின்னக்கவுண்டர் , எஜமான்,  தேவர்  மகன்  போன்ற  மெகா  ஹிட்  படங்களில்  ஹீரோ  வில்லன்  இருவரும்  ஒரே  ஜாதியாக  இருப்பாங்க .  அதனால்  ஜாதி  வெறி  தூண்டப்படவில்லை ., ஆனால்  இவரது  வருகைக்குப்பின் தான் ஹீரோ  தாழ்ந்த  ஜாதி  வில்லன் உய்ர்ந்த  ஜாதி  என  காட்டி  காட்சிகளில்  ஜாதி  ரீதியான  வன்முறைகளைத்தூண்டுகிறார்  என்ற  குற்றச்சாட்டு  இவர்  ,மீது  உண்டு  \


ஹீரோ வசதியான  குடும்பத்தைச்சேர்ந்தவர். அவரோட  குடும்பத்துல  இருக்கறவங்க  எல்லாம்  பாரம்பரியம்  மிக்க   எண்ணங்களைக்கொண்டவர்கள். ஹீரோவோட  பாட்டி   உடம்பு  சரி இல்லாம  சீரியசா  இருக்காங்க . அவங்க  க்டைசி  ஆசை பேரனின்  கல்யாணத்தைப்பார்ப்பது. இதனால  ஊர்ல  இருந்து  கிளம்பி  சொந்த  கிராமத்துக்கு  ஹீரோ வர்றார்


 ஹீரோவோட  முறைப்பெண்ணைக்கட்டி வைக்க  பேச்சு  நடக்குது /. அப்போ  அவர்  ஒரு  குண்டைத்தூக்கிப்போடறார்.நான்  ஒரு  பொண்ணை  லவ்  பண்றேன், அவளைத்தான்  கல்யாணம்  ப்ண்ணிக்குவேன்கறார்


 அப்பா  அடிக்கறார். அம்மா  அழுது ஆர்ப்பாட்டம்  பண்றாங்க . தற்கொலை  மிரட்டல்  விடுக்கறாங்க . வேற  வழி  இல்லாம  வேண்டா  வெறுப்பா  மேரேஜ்க்கு  ஓக்கே  சொல்றார். ஆனா  மேரேஜ்  அப்போ  ஒரு  ட்விஸ்ட்  



ஹீரோயின்   ஒரு  முற்போக்கு  எண்ணம்  கொண்டவர். அதாவது  அம்பேத்காரிஸ்ட் ,  பெரியாரிஸ்ட் ., ஏற்கனவே  ஒரு  காதலன்  உண்டு  அவனுடன்  கல்யாணத்துக்கு  முன்பே  கொண்ட  கூடலுக்குப்பின்னான  ஒரு  ஓய்வு  நேரத்தில்  ஜாதி  ரீதியான  தாக்குதலை   சந்தித்து  கோபம்  கொள்கிறாள். இவள்:  சிறு  வயதிலிருந்தே  ஜாதி  ரீத்யிலான  தாக்குதலை சந்தித்து  இருப்பதால்   மிகுந்த  மன  உளைச்சலுக்கு  ஆளானவள்  அ,ந்தக்காதல்  பிரேக்கப்  ஆகிடுடுச்சு 

ஹீரோ  ஹீரோயின்  இருவ்ருமே  ஒரு  நாடகக்குழுவில் சேர்ந்து  நடிக்கறாங்க . அந்தக்குழுவில்  பல  தரப்பட்ட  மனிதர்கள்  இருக்காங்க . லெஸ்பியன் ஜோடி  , ஹோமோ ஜோடி  ,  திருநங்கை இப்படி . ஹீரோக்கு  ஆல்ரெடி  ஒரு  காதலி  உண்டு . கிளாமரா  டிரஸ்  பண்றா  ,  ஸ்லீவ்லெஸ்    ஜாக்கெட் போடறா  என  அவர்  மீது  வாக்கு வாதம்  வளரும்போது  பிரேக்கப்  ஆகிடுது


 இப்படி  பிரேக்கப்  ஆன  தலா  ஒரு  காதல்  துணை கொண்ட  ஹீரோவும்  ஹீரோயினும்  சேர்ந்தாங்களா? இல்லையா? என்பது  க்ளைமாக்ஸ்


 இந்தப்படத்தை  ரெண்டரை  மணி  நேரம்  எடுத்து  வெச்சிருக்காங்க .  இதைப்பார்த்தே  ஆக  வேண்டும்  என  நினைப்பவர்கள்  முதல்  ஒன்றரை  மணி  நேரத்தை  கட்  பண்ணிட்டு  கடைசி  ஒரு மணி  நேரத்தை முதலில்  பார்த்து  விட்டு  பின்  முதல்  ஒன்ற்ரை  மணி  நேரத்தைப்பார்க்கவும். நான்  இயக்குந்ராக  இருந்தால் இந்தக்கதையை  அப்படித்தான் எடிட்  பண்ணி  இருப்பேன் . மேலே  நான்  கதை  சொன்ன விதமும்  அதே   வரிசைலதான்.


ஹீரோவா  கலையரசன் . நல்ல  நடிப்பு ., சராசரி  இளைஞர்களின்  வார்ப்பு .  அம்மா , பாட்டி  செண்ட்டிமெண்ட்  காட்சிகளில்  உருக்கமான  நடிப்பு

ஹீரோயினா  துஷாரா  (  இவர் சார்ப்பேட்டா  பரம்பரை  படத்துல  மாரியம்மாவாக  நடிச்சவர்)  ஃபி்ளாஸ்பேக்  சீனை  சொல்லும்போது  அனுதாபத்தை  அள்ளுகிறார், ஆனா  ஓப்பனிங்  சீனில்  கடுப்பைக்கிளப்புகிறார் . நெக்டிவ்  ஷேடில்  ஒரு  கேர்க்டரை  டிசைன்  பண்ணிட்டு  பின்  பாசிட்டிவாக  மாற்றுவது     கடினம்


ஹீரோயினின்  முன்னாள்  காதலனா  காளிதாஸ். வந்தவரை  ஓக்கே


மற்ற  நடிகர்  நடிகைகள்  எல்லாம்   புதுமுகம் 


பெரும்பாலான  காட்சிகள்  நாடக  ஒத்திகை  என்பதால்   ஸ்லோவா  போகுது 


சபாஷ்  டைரக்டர்


      1  வெரி  வெரி  லோ  பட்ஜெட்ல படத்தை  எடுத்தது . ஒரே  டிராமா  செட் ல  மொத்தப்படத்தையும் எடுத்தது .  3  பேரைத்தவிர  மீதி  எல்லாம்  புதுமுகங்கள்  என்பதால்  சம்பள  செல்வு  இல்லை . 


லாஜிக்  மிஸ்டேக்ஸ்


1     காதலை  பெற்றோர்  எதிர்க்கும்போது என்  காதலியை  நேரில்  பாருங்கம்மா  உங்களுக்குப்பிடிக்கும்  என்கிறார். சிரிப்பு வருது  அந்த  சீன்ல , இவரது  பெற்றோர்  கிராமம்.அந்தப்பொண்ணு  ஸ்லீவ் லெஸ்  டிஎரஸ்ல  கிளாமரா  இருக்குது  . எப்படிப்பிடிக்கும் ? எந்த  நம்பிக்கைல  சொல்றார் ?


2   முதல் காதலி  கிளாமரா  டிர்ஸ்  ப்ண்ணுனதுக்காக பிரேக்க்ப  ப்ண்ணவர்  இரண்டாவது  காதலி அதே  கிளாமர்  டிரஸ்  கூட  எக்ஸ்ட்ரா  தகுதியா  ஆல்ரெடி  ஒரு  ஆள்  கூட  தாம்பத்யம்  முடித்தவர். இதை  எப்படி  ஏத்துக்க  முடியுது  அவரால.  பக்குவப்பட்டுட்டேன்கறார். ஆனா  நம்ப  முடியல 


3  இயக்குநர்  அகத்தியன்  எடுத்த   விடுகதை  , கொகுலத்டில்  சீதை  படங்களில்  எல்லா கேரக்டர்களும்  தத்துவமா  பேசுவாங்க  அது  போல  இந்த  நாடகத்திலும்  சாரி  படத்திலும்  எல்லாருமே  செயற்கையான்  வசனம்  பேசறாங்க/ எல்லாருமே  அதிபுத்திசாலியா  இருக்காங்க     . எல்லாருமே  சொல்லித்தந்த  வசனத்தை  ஒப்பிக்கறாங்கனு  தெரியுது.அது  பலவீனம்       


சி பி  எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   எச்சரிக்கை , தொடாதே  அப்டினு  மின் வேலில  வார்னிங்  எழுதி  வெச்சிருப்பாங்க ., ஆனா  நம்மாளு  அதைப்போய்  தொட்டுப்பார்த்துதான்   தெரிஞ்சிக்குவான், அதனால  இதைப்பார்க்க  வேணா,ம்னு  நான்  சொன்னா  மட்டும்  கேட்கவா  போறீங்க ? ரேட்டிங் 1.75 / 5           நட்சத்திரம்  ரொம்ப  ரொம்ப  ஸ்லோவா நகர்கிறது(                                            

Friday, October 07, 2022

HOLY WOUND (2022) (மலையாளம்) -சினிமா விமர்சனம் ( சைலண்ட் மூவி) 18+

 


ஸ்பாய்லர்  அலெர்ட்


வாலிப  வயோதிக  அன்பர்களே!  ஒன்றரை  மணி  நேரம்  ஓடும்  இந்தப்படத்தில்  ஏன்  ஒரு  டயலாக்  கூட  இல்லை?னு  கேட்கறவங்களுக்கு  இயக்குநர்  டெடிகேட்  பண்ற  காமெடி  டிராக்  ஃபேமஸ்  டயலாக்  வசனமாடா  முக்கியம்?படத்தைப்பாரு  மேன்   . குடும்பப்பாங்கான , கண்ணியமான  ஆண்கள்  மட்டும்  பார்க்க  வேண்டிய படம். ஆனா  விமர்சனத்தை  எல்லாரும்  படிக்கலாம் 


ஆத்தோரமா  ஒரு  வீடு .அதுல  நாயகன்  நாயகி  தம்பதியா  ஒரு  ஓட்டு  வீட்டில்  குடி  இருக்காங்க ஆத்துல்   கிடைக்கும்  சிப்பிக்காளான்களை  சேகரித்து  அதைக்கடைகளில்  விற்று  ஜீவனம்  நடக்குது நாயகன்  ஒரு  குடிகாரன். எந்த  வேலை  வெட்டிக்கும்  போறதில்லை .  சம்சாரம்  சம்பாத்யத்துல  வீட்டோட  மாப்ளையா  இருக்கான்


மேலே    சொன்ன   சிச்சுவேஷன்ல  இப்போ  இருக்கும்  மாடர்ன்  உலகில்  எந்தப்பொண்ணும்  சகிச்சுக்கிட்டு  இருக்க மாட்டா. சாப்பாட்ல  எலி  மருந்தைக்கொடுத்து  புருசன்  ஜோலியை முடிச்சுக்கட்டிடுவா,   இல்லைன்னா  தூங்கிட்டு  இருக்கும்போது  பாறாங்கல்லை  எடுத்து தலைல  போட்டுட்டா  ஜோலி  முடிஞ்சுது 


 எதுக்காக  அவன்  பண்ற  டார்ச்சர்களை  எல்லாம்  தாங்கிட்டு  ஆக்கிப்போட்டு  அவஸ்தைப்பட்டுட்டு  இருக்கானு  தெரியல. அப்படியாவது  கூட்டுக்குடித்தனமா   இருந்தாலாவது  பெரியவங்க  ஏதாவது  சொல்லிட்டா  என்ன  பண்றதுனு  பயம்  இருக்கும், ஒதுக்குப்புறமான    வீடு  ., அருகில் ஆள்  நடமாட்டமே  இல்லை . அவ  நினைச்சா  என்ன  வேணா  பண்ணலாம், ஆனா  ஏன்  அடக்கி  வாசிக்கறானு  தெரில 


‘இது  ஒரு  அவார்டுப்படம்  எனப்தால்   முதல்  35  நிமிசம்  நாயகி  துணி  துவைப்பது , டீ  போடுவது .  சோறாக்குவது . குழம்பு  வைப்பது  இப்படியே  காட்டிக்கடுப்பேத்தறாங்க 


 36  வது  நிமிசத்துல  ஒரு  ஃபிளாஸ்பேக். நாயகி  டீன்  ஏஜ்   டைம்ல  ஒரு சினேகிதம்  இருக்கு .   அதை  நினைச்சுப்[பார்க்கறா. சும்மா  10  நிமிச காட்சிதான்


 அந்த  சினேகிதத்தைத்தேடி  நாயகி  போறா/. அந்த  சினேகிதி  அக்கரைல  ஒரு  சர்ச்ல  கன்யாஸ்த்ரீயா  இருக்கா 


 எதுக்கு  சாதா  நபரா  அந்த  கேரக்ட்ரை  டிசைன்  பண்ணாம  மத  அடையாளத்தைக்காட்றாங்கன்னா  அப்போதான்  சர்ச்சை  உருவாகும், அதை   வெச்சு   ஹிட்  ஆக்கலாம்


சினேகிதியைத்தேடி   நாயகி  போன  பின்  நாயகன்  செம  கடுப்பாகி  வீட்டை  துவம்சம்  பண்றான்.  நாயகி  வளர்த்த  நாயைக்கொன்னுடறான்


 மனைவியைத்தேடி  அந்த  சர்ச்க்கு  வ்ர்றான். இதுக்குப்பின்  என்ன்  நடந்தது  என்பதே க்ளைமாக்ஸ்


 படத்துல  பாராட்டும்படியான  அம்சங்கள்  ரெண்டே  ரெண்டு  தான் . ஒண்ணு  அருமையான  ஒளிப்பதிவு .  அடுத்தது    ஃபிளாஸ்பேக்  போர்சனில்  வரும்  நாயகியும், தோழியும் 


நாம  எந்தப்படத்தைப்பார்த்தாலும்  நாயகனோ  வில்லனோ  ஃபோட்டோஜெனிக்  ஃபிகராவே  இல்லாம  காண்டாமிருகம்  மாதிரி இருந்தா  அது  சாமி  சத்தியமா  படத்தோட  புரொடியூசராத்தான்  இருக்கும் 


 சபாஷ்  டைரக்டர் 


 1  20  நிமிசத்தில்  முடிக்க  வேண்டிய  குறும்படத்தை   90  நிமிடங்கள்  ஜவ்வு  இழுப்பு  இழுத்தது 


2   மூன்றே  மெயின்   கேரக்டர்களை  வெச்சுப்படத்தை  முடிச்சது 


ரசித்த  வசனங்கள் 


  படத்துலதான்  வசனமே  இல்லையே  எதை  ரசிப்பது? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1  இது  ஏதோ    சர்வ தேச  அளவில்  விருது  பெற்ற படம்னு   ந்ம்பி   டெலிகிராம்ல  டவுன்  லோடு  பண்ணிப்பார்த்ததுதான்  நம்ம  மிஸ்டேக்



 சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   இந்த  டப்பாப்படத்துக்கு  எதுக்கு  ரிவ்யூ?னு  கேட்பவர்களுக்கு  யாம்  பெற்ற  துன்பம்  பெறக்கூடாது  இவ்வையகம்  கான்செப்ட் தான் . ரேட்டிங்  மைன்ஸ்  2 / 5 



Tuesday, October 04, 2022

புதுமைப்பித்தன் (1957) (தமிழ்) - சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா)


ஸ்பாய்லர்  அலெர்ட்

 

நாயகன்  ஒரு  நாட்டின்  இளவரசன் .கடற்  பிரயாணம்  முடிந்து  நாட்டுக்குத்திரும்பும்போது மன்னரைக்காணோம்.மன்னரோட  தம்பி   அதாவது  நாயகனின்  சித்தப்பா தான்  சதி  செய்து  மன்னரைக்கடத்தி  மறைவிடத்தில்  வைத்து  ஆட்சியைக்கைப்பற்ற  நினைக்கிறார். பைத்தியம்  பிடிக்கும்  ;பித்த  மருந்து  தந்து  இளவரசரைப்பைத்தியம்  ஆக்கவும்  திட்டம்  போடறார். அந்தத்திட்டத்துக்கு  அரண்மனை  வைத்தியர்  உடந்தை . 


இந்தத்தகவல்கள்  எல்லாம்  அரண்மனை  வைத்தியர்  மகள்  மூலம்  நாயகனான  இளவரசனுக்குத்தெரிய   வருது . இந்த உண்மைகளை   எல்லாம்  சொன்னாலும் தன்  தந்தைக்கும்  இந்த  சதிக்கும்  தொடர்பில்லை  என  லாவகமாக தன்  தந்தையைக்காப்பாற்ற  நினைக்கிறார் வைத்தியர்  மகள் 


 நாட்டின்  இளவரசரான  நாயகனுக்கும், அரண்மனை  வைத்தியர்  மகளுக்கும்  காதல் 


அந்த  மருந்தை  சாப்பிடாமலேயே  பைத்தியம்  போல்  நடித்து  இளவரசன்  வில்லனை  ஏமாற்றுகிறார்.  இரவு  நேரத்தில்  அரண்மனையை  விட்டு  வெளியேறி  மாறு  வேடத்தில் ( அதாவது  ஒரு  கைக்குட்டையை  மாஸ்க்  போல  முகத்துல  அணிந்தால்  யாருக்கும்  அவரை  அடையாளம்  தெரியாது , முகமூடி  மனிதன்னு  சொல்லிடுவாங்க . இதை  நீங்க  நம்பனும்)


இளவரசர் அரண்மனையை  விட்டு  வெளில  போய்  என்னத்தை  சாதிச்சார்னு  எனக்குத்தெரியல. அவர்  பாட்டுக்கு  அரண்மனை  உள்ளேயே  அப்பாவைத்தேடி  இருக்கலாம். கண்டு  பிடிச்சிருக்கலாம், ஆனா  படம்  19  ரீல் ., எப்படி  திரைக்கதையை  இழுப்பது   அதனால  காதைச்சுத்தி  மூக்கைத்தொட்டிருக்காங்க 


 கதை  திரைக்கதை  வசனம்  டாக்டர்  கலைஞர். இவரது  வசனங்கள்  பிரமாதம்  என்பதை  மறுப்பதற்கில்லை , ஆனால் ஒருவரைப்பற்றிய  வர்ணனைகள்  முழம்  நீளத்துக்கு இழுத்து  சொல்லப்படுது . அதே  சமயம்  ஷார்ட்  அண்ட்  ஸ்வீட்டாகவும்  சில  இடங்களில்  எழுதி  இருக்கார் 


 ஹீரோவா  இளவரசர்  ஜீவகனாக புரட்சி  நடிகர்  எம் ஜி ஆர் . படத்துல  இவருக்கு  3  ஜோடிகள் . எம்  ஜி ஆர்  ஃபார்முலா  என்னான்னா  இவரு  ஒரே  ஒரு  பெண்ணைத்தான்  காதலிப்பார். ஆனா  இவரை  ரெண்டு  மூணு  பேரு  காதலிப்பாங்க . அவங்களோட  கனவில்  டூயட்  எல்லாம்  பாடிட்டு    கட்டிப்பிடிச்சு   ஜாலியா  சுத்திட்டு  கனவு  முடிஞ்சதும்  தங்கச்சி  அப்டினு  பல்டி  அடிப்பார் . காரணம்  அவர்  கட்டிக்காத்து  வந்த  இமேஜ் 


வாள்  சண்டை  போடும்போதும்  சரி , சிக்கலான  சூழ்நிலைகளிலும்  சரி  எம் ஜி ஆர்  எப்போதும்  சிரிச்ச  முகத்துடனே தான்  இருப்பார் . இந்த  ஃபார்முலா  அவருக்கு  நல்லா  ஒர்க்  அவுட்  ஆகி  ரசிகர்களை  தன்  வசம்  இழுத்தது 


வேல்விழியாக  நாயகியாக  பி எஸ்  சரோஜா . இவரை  இப்போதான்  முத  டைம்  பார்க்கறேன்


 காந்தக்கண்ணழகி  , வில் போன்ற  புருவ  அழகி டி ஆர்  ராஜகுமாரி  இன்னொரு   ஜோடி   இன்ப வல்லியாக  நல்ல  நடிப்பு  நளினமான  நடனம் 


அயல்  நாட்டு  நடன  பாணியை  தமிழ்  நாட்டுக்குக்கொண்டு  வந்த  முதல்  தமிழ்க்கலைஞன் சந்திரபாபு  நாயகனுக்கு  நண்பனாக  வர்றார். படத்தோட  ஓப்பனிங்  சாங்  ஹீரோவுக்குக்கூட  இல்லை .  சந்திர பாபுக்குத்தான்  .  அருமையான  நடனம் (  இவரோட  டான்ஸ்  மூவ்மெண்ட்சைத்தான்  பிரபு தேவா  ஃபாலோ  பண்றார்)


 வில்லனாக  டி எஸ்  பாலய்யா. கொடூரமான  வில்லனாக  காட்டாமல்  லைட்டா  காமெடி  கலந்து  கொண்டு  போய் இருக்காங்க




செம  ஹிட்  அடித்த  பாடல்கள் 


1  உள்ளம்   ரெண்டும்  ஒன்று  நம்  உருவம் தானே  இரண்டு ?

2  ஆராய்ச்சிக்கடலிலே.....  தில்லானா  பாட்டுப்பாடி  ( சந்திர  பாபு  ஓப்பனிங்  சாங் )


https://www.youtube.com/watch?v=aZiAwLdCY-k


3  அழகி  பார்  அவள்  நடையைப்பார்


4  மன  மோஹனா 


5  நாதர் முடி  மேலிருக்கும்  நல்ல  பாம்பே ... ஆடு  பாம்பே  நீ  ஆடு  பாம்பே 


6  குத்தும்  கொந்தளிக்கும் கும்பலைக்கண்டா  டபாய்க்கும் ( இந்தப்பாட்டுக்கு  டான்ஸ்  கொரியோகிராஃபி  கலக்கலா  இருக்கும்  , டோண்ட்  மிஸ்  இட் )

https://www.youtube.com/watch?v=Fk3RjsZMtCg


7  தேன்  மதுவை  வண்டினம்  தேடி  வரும்  இன்பமாய் (  பாம்பு  - மயில்  கெட்டப்பில்  ஆடை  அலங்காரம்  நடன  நாட்டியம்  பிரமாதமா  இருக்கும் 


https://www.youtube.com/watch?v=CLQ5alksY-w


8  அய்யா  யாருக்கு  வேணும்  இந்த  முல்லை  மொட்டு   


 ரசித்த  வசனங்கள்


1  இம்  என்றால்  சிறைவாசம், ஏன்  என்றால்  வனவாசம்


2  ஆண்டாண்டு  காலம்  அழுது  புலம்பினாலும் மாண்டோர்  திரும்பி  வருவதில்லை 


3  பட்டாபிஷேகம்  நடக்கும்  முன்பே  வாக்குறுதி  காற்றில்  பறக்கிறது 


 வாக்குறுதியைக்காற்றில்  பறக்க விடுவதுதான்  என்  அரசாங்கத்தின்  முக்கிய  லட்சியம் 


4  வாக்குறுதிக்கு  மதிப்பே  இல்லை 


5  முதலைகள்  கடலில்  ஆற்றில்  மட்டுமல்ல , நாட்டிலும்  இருக்கின்றன. பல  பண  முதலைகள்  நாட்டையே  கபளீக்ரம்  செய்து  விடும் ஆற்றல்  பெற்றவை





லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1  வில்லன்  அரண்மனை  வைத்தியரிடம்  உனக்கு  மந்திரி  பதவி  தர்றேன்னு ஆசை  காட்டி   சதிச்செயலுக்கு  உடந்தையாக  இருக்க  வைக்கிறார். இளவரசருக்கே  பித்த  மருந்து  தரும்  தைரியம்  மிக்கவர்  வில்லனுக்கு  விஷம்  வைக்க  எவ்ளோ  நேரம்  ஆகும் ?


2  தன்  அப்பா  எங்கே  எனக்கேட்டு  இளவரசர்  அரண்மனை  வைத்தியரிடம்  விசாரிக்கிறார். ஆனா  அவர்  சொல்லலை .  மாமா  உங்க  பொண்ணும்  நானும்  லவ்வர்ஸ். மேரேஜ்  ஆகிட்டா  நான்  மன்னன், உங்க  பொண்ணு  மகாராணி  . இப்போ  சொல்லுங்கனு  கேட்டிருந்தா  சொல்லி  இருப்பார்


3  அதே  போல  அரண்மனை  வைத்தியரிடம்  சதிச்செயலில்  ஈடுபட  வேணாம்னு  கெஞ்சிட்டு  இருந்த  டைம்ல  மகள்  அப்பாவிடம்  அப்பா   எதுக்காக  சிரமப்படறீங்க. இளவரசரை  நான்  மேரேஜ்  பண்ணிக்கப்போறேன்னு  சொல்லி  இருந்தா  அவ்ளோ  சுத்தல்  இல்லாம  ஈசியா  காரியத்தை  முடிச்சிருக்கலாமே?


4  இளவரசர்  மன்னரைத்தேட  அவ்ளோ  வேலை  செஞ்சதுக்கு  தன்  சித்தப்பாவை  அடி  வெளுத்திருந்தா  அப்பவே  உண்மை  வெளி  வந்திருக்குமே? அரண்மனை  வைத்தியரை  அடி  போட்டிருந்தா  அவர்  எல்லா  உண்மையையும்  கக்கி  இக்ருப்பாரே?


5  இளவரசர்   அரண்மனைலயே  இருக்கறதில்லை .  அப்போ  முக  முகமூடி  இளைஞன்  யார்னு  கண்டு  பிடிக்க  முடியாதா? இதுக்கு  தண்டமா  5000  பொற் காசுகள்  பரிசுனு  அறிவிப்பு  வேற 


6   நாயகியைப்பார்க்க  வரும்  இளவரசரிடம்  டி ஆர்  ராஜகுமாரி  முதுகில்  சாய்ஞ்சுக்கிட்டு  காதல்  வசனம்  பேசும்போது    எம் ஜி  ஆர்  இது  எல்லாம்  எனக்குப்பிடிக்காதுங்கறார். ஆனா  அவரை  விட்டு  விலகவே  இல்லை  அது  பாட்டுக்கு  சாஞ்சுக்கிட்டு  இருக்கட்டும், மெத் மெத்னு தானே  இருக்குனு  விட்டுட்டார்  போல 


7  அதிகாரம்  சித்தப்பா  கைல  இருக்கு , வீரர்கள்  எல்லாம்  அவர்  பக்கம், ஆனா  அந்த  சாசனத்தில்  மன்னர்  சிக்னேச்சர்  வேணும், இல்லைன்னா  மக்கள்  கேள்வி  கேப்பாங்க, என்னால  பதில்  சொல்ல  முடியாதுனு  வில்லன்  பம்முவது  நல்ல  தமாஷ் 

  சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  காதில்  பூச்சுற்றும்  கதை  தான்  என்றாலும் சந்திரபாபு  டான்ஸ் , கலைஞர்  வசனம் ,  சூப்பர்  ஹிட்  பாடல்களுக்காக  படம்  பார்க்கலாம், ரேட்டிங்  2.5 / 5 





புதுமைப்பித்தன்
இயக்கம்டி. ஆர். ராமண்ணா
தயாரிப்புகே.முனிரத்னம்
சிவகாமி பிக்சர்ஸ்
கதைகதை மு. கருணாநிதி
இசைஜி. ராமனாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
பாலைய்யா
சந்திரபாபு
சகாதேவன்
பாண்டியன்
பி. எஸ். சரோஜா
டி. ஆர். ராஜகுமாரி
ஈ. வி. சரோஜா
அங்கமுத்து
வெளியீடுஆகத்து 21957
நீளம்17833 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

Monday, October 03, 2022

THEERPPU (2022)-தீர்ப்பு ( மலையாளம்) - சினிமா விமர்சனம் ( த்ரில்லர்)@ டிஸ்னி ஹாட் ஸ்டார் பிளஸ்


யூகிக்காத  மாறுபட்ட  க்ளைமாக்ஸ்  சீன்  உள்ள  படங்கள்  3  இருக்கு 1  1  சொல்வதெல்லாம்  உண்மை 1997
2  OLD BOY 2003
3  THE SECRET IN THEIR  EYES *2009). 



இதுல  சொல்வதெல்லாம்  உண்மை  இயக்குநர்  நேதாஜி  விஜய்காந்த்தை  வெச்சு  எடுத்த  படத்தில்  எதிர்பாராத  ட்விஸ்ட்  வரும். உண்மை  செய்திகளை மட்டுமே  வெளியிடும்  ஒரு  செய்தி  நிறுவனம்  ஒரு  முறை எதிரியின்  சதியால்  அந்த  பத்திரிக்கை  எடிட்டரின்  மரணச்செய்தியையே  தவறுதலாக  வெளியிட்டு விடும். ஆனால்  ஆண்டாண்டு  காலமாய்  தன்  பத்திரிக்கை  உண்மையான  செய்திகளை  மட்டுமே  வெளியிடும்  என்ற  நல்ல  பெயரைக்காப்பாற்ற  அந்த  பத்திரிக்கை  எடிட்டர்  நிஜமாவே  அந்த  செய்தியை  உண்மையாக்குவார். ரொம்ப  அதிர்ச்சியா  இருந்தது ., இந்தப்படத்தோட  விமர்சனத்துல  இதைப்பற்றி  சொல்லக்காரணம்  இருக்கு , படம்  பார்த்தா  தெரியும் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


 சம்பவம் 1  = ஒரு  தம்பதி  பீச்  ஓரமா  நின்னு  பேசிக்கிட்டு  இருக்காங்க , பால்ய  கால  நண்பன்  வர்றான்  இங்கே , அவனுக்கு  உதவி  செய்யனும். பழசை  எல்லாம்  மறக்கக்கூடாது  ப்ளா ப்ளா  அப்டினு  புருசன்  சொல்றான், அதுக்கு  சம்சாரம்  நக்கலா  இந்த  மூஞ்சியைப்பார்த்தா  நண்பனுக்கு  உதவி  பண்றவன்  மாதிரி  தெரியலையே , உண்மையைச்சொல்லுங்க,  உங்க  நண்பர்  கூட  யார்  வர்றாங்க ? என  கேட்க  அவன்  பம்மறான், பதிலே  சொல்லலை 

 சம்பவம் 2  - வேற  ஒரு  தம்பதி  கார்ல  வந்துக்கிட்டு  இருக்காங்க , அப்போ  ஒரு  ஆள்  குறுக்கிடறார். தம்பி , என்னை  யார்னு  தெரியுதா?னு  கேட்க  புருசன்  பம்மறான். அவன்  அதீத  உரிமை  எடுத்துக்கிட்டு  என்னென்னமோ  பேசிக்கிட்டு  இருக்கான், சம்சாரத்துக்கு  புது  ஆள்  சகவாசம்  பிடிக்கலை , ஏங்க  காரை  எடுங்க  போலாம்கறா.  கிளம்பும்போது  புருசன்  சம்சாரம்  கிட்டே  சொல்றான்.. இப்போ  இவனைப்பார்த்தமே, அந்த  விஷயத்தை  இப்போ  நாம  யாரைப்பார்க்கப்போய்க்கிட்டு  இருக்கமோ  அவன்  கிட்டே  சொல்லாத, ஏன்? எதுக்கு  என்ன  விபரம்னு  எதுவும்  என்னைக்கேட்காத  அப்டீங்கறான்

சம்பவம்  3  -  சம்பவம் 2ல்  வந்த  ஜோடி  சம்பவம்  1ல்  வந்த  ஜோடியை  சந்திக்கறாங்க  அவங்க  பங்களாவில். அது  ஒரு  அபூர்வமான  கலெக்சன்  கொண்ட  மியூசியம். பழங்கால    பொருட்கள்  , விஐபிகள்  யூஸ்  பண்ணுன  பல  அபூர்வ  பொருட்களின்  கலெக்சன்  இருக்கு. இந்த  2  செட்  ஜோடிகளும்  ஒரு  பிஸ்னெஸ்  டீல்  பேசுதுங்க .


சம்பவம் 4  - சம்பவம் 1ல்  பேசிய  ஜோடியில்  உள்ள  புருசன்  காரன்  சம்பவம் 2ல்  உள்ள  ஜோடியில்  உள்ள  சம்சாரத்தை  ஆல்ரெடி  10  வருசம்  முன்னே  பழக்கம்  , சேட்டிங்  எல்லாம்  நடந்திருக்கு , இப்போதான்  முதல்  முறையா  நேரில்  சந்திக்கறாங்க . இவங்க  ரெண்டு  பேருக்கும்  ஒரு  இல்லீகல்  காண்டாக்ட்  உருவாகப்போகுதுனு  அவங்கவங்க  துணைக்கு  தெரிஞ்சிடுது 

சம்பவம் 5    சம்பவம்2ல்  ஒரு  ஜோடி  கிட்டே  ஒரு  ஆள்  தகறாரு  செஞ்சாரே  அவரு  இப்போ  இந்த  பில்டிங்க்  உள்ளே  நுழையறாரு .  அவரு  வந்ததும்  இந்த  2  ஜோடிகளும்  பம்மறாங்க  . அவரு  எல்லாரையும் மிரட்டிட்டு  இருக்காரு . அப்போ  யாருமே  எதிர்பாராத  சம்பவம்  ஒண்ணு  நடந்துடுது 

  மேலே  சொன்ன  அஞ்சு  சம்பவங்கள்  போக  ஆறாவதா  ஒரு  சம்பவம்  ஃபிளாஸ்பேக்ல  நடந்திருக்கு , அதைச்சொன்னா  சுவராஸ்யம்  போய்டும்  .  மேலே  சொன்ன  அஞ்சு  சம்பவங்கள்  ,  வேணும்னே  சொல்லாம  விட்ட  ஆறாவது  சம்பவம்  இவை  எல்லாவற்றையும் இணைக்கும்  கோடுதான்  திரைக்கதை 

 
சம்பவம் 2ல்  தகறாரு  செய்யும்  ஆசாமி  தான்  ஹீரோ  பிருத்விராஜ். இவர்  நடிச்ச  எல்லாப்படங்களும்  மாறுபட்ட  கதை  அம்சம்  உள்ள  ப்டங்களே. 90%  படங்கள்  ஹிட்  தான் . இதில்  ஒரு  ஹீரோவுக்கு  உண்டான  போர்சன்  இல்லை  இவருக்கு , ரொம்ப  கம்மியான  ஸ்பேஸ்  தான், கிட்டத்தட்ட  ரெண்ட்ரை  மணி  நேரப்படத்தில்  இவர்  வருவது  முக்கால்  மணி  நேரம்தான்

 ஆனா  நடிப்பு  அடிபொலி  .ஆரம்பத்தில்  அவர்  வில்லன்  மாதிரி  தெரியும்   ஆனா  போகப்போக  அவர்  தான்  ஹீரோ  என  உணர்வோம் ,ஆனாலும்  அவரது  ரசிகர்களுக்கு  கொஞ்சம்  ஏமாற்றமாகத்தான்  இருக்கும் 

சம்பவம் 1ல்  வரும்  ஜோடியாக   விஜய்  பாபு  அண்ட்   இஷா  தல்வார் . கிட்டத்தட்ட  படத்தில்  ஒரு  ஹீரோவுக்கு  உண்டான  அதிக  போர்சன்  விஜய்  பாபுக்குத்தான், ஆனா  இவர்  ஆன்ட்டி  ஹீரோ  கம்  ”ஆண்ட்டி ” ஹீரோவும்  கூட . படம்  பூரா  முகத்தைக்கடு  கடு  என்றே  வைத்திருக்க  வேண்டிய  சூழல் 

 

 சம்பவம்  2  ல்  வரும்  ஜோடியாக  சைஜூ  க்ரூப்  அண்ட்   ஹன்னா  ரெஜி இருவருக்குமே  நடிக்க  நல்ல  வாய்ப்பு   குறிப்பா  ஹன்னா ரெஜியின்  ஆஜானுபாவகமான  உருவம்   அலை  பாயும்  கூந்தல்  கணவன்  அருகில்  இருக்கும்போதே  இன்னொருவருடன்  நெருங்கிப்பழகும்  தெனாவெட்டு  நடிப்பு   பயங்கரம் 


ஒரு  கொலை  நடந்த  பிறகு  அங்கே  ஆஜர்  ஆகும்   போலீஸ்  ஆஃபீசர்  கம் ஆண்ட்டி  ஹீரோவின்  பிஸ்னெஸ்  பார்ட்னராக   இந்திரஜித்  சுகுமாரன்  கனகச்சிதமான  நடிப்பு . இவர்  பெரும்பாலும்  போலீஸ்  ஆஃபீசராகவே  ரோல்ஸ்  பண்றார்  அப்ளாஸ்  அள்றார்


மேலே  சொன்ன   2  செட்  ஜோடி ,  பிருத்விராஜ் , இந்திரஜித்  ஆக  மொத்தம்  ஆறு  பேர்  தான்  அதிக  பட்ச    மெயின் கேரக்டர்கள்.  கதையின் 80%  காட்சிகள்  ஒரே  ஒரு  மாளிகையில் 


படத்தில்  குறிப்பிட்டுச்சொல்ல  வேண்டிய  முக்கியமான  விஷயம்  ஆர்ட்  டைரக்சன் . அந்த  மியூசியம்  லைட்டிங்  , செட்டிங்க்ஸ்  எல்லாம்  பிரமாதம் .  படத்தைப்பார்க்க  விருப்பம்  இல்லாதவர்கள்  கூட  அந்த  ஆர்ட் டைரக்சன்  செட்டை  மியூசியத்தை  ரசிச்சுட்டுப்போயே  ஆகனும், பிரமாதமான  ஒர்க் 




 சபாஷ்  டைரக்டர் 

1   பொதுவாக  மலையாளப்படங்களில்  படம்  போட்டு  முதல்  40  நிமிடங்கள்  மெயின்  கதைக்கு  வர  மாட்டாங்க ,  பஸ்  ஏறுவாங்க  , மீன்  வாங்குவாங்க, கட்டஞ்சாயா  குடிப்பாங்க . 41  வது  நிமிசம்தான்  கதை  சொல்ல  ஆரம்பிப்பாங்க , இதில்  முதல்  சீன்லயே  கதைக்கு  நேரடியா  வந்துட்டாங்க 

2    இயக்குநர்  ஷங்கர்  தன்  படங்களில்  ஃபிளாஸ்பேக்  சீன்  ரொம்ப  அழுத்தமா  வைப்பார் ,  குறிப்பா  இந்தியன்  , ஜெண்டில்மேன்  படங்களில்  மனதை  உருக்குவதாக  இருக்கும்  படத்தின்  வெற்றிக்கு  அது  முக்கியக்காரணி  ஆகும், அது  போல  இதிலும்  ஒரு  ஃபிளாஸ்பேக்  சீன்  உண்டு   ஆனா  ஒரே  சிட்டிங்கில்  அதை  சொல்லாமல்  நான்  லீனியர்  கட்டில்  படம்   பூரா  பொடிமாஸ்  மாதிரி  ஆங்காங்கே   தூவி  விட்டிருக்காங்க 


3  கதை  ஓட்டத்தில்  ஏதோ  கள்ளக்காதல்  சம்பவம்  அரங்கேறப்போகுது  என்பது  மாதிரி  லீட்  குடுத்துட்டு  திடீர்னு  கொலை  நடப்பதாக  காட்டுவது  அதை  மறைக்கப்போடும்  திட்டங்கள்  என  கதையே  ஒரு  யூ  டர்ன்  அடிக்குது 


4   படத்தின்  கதை  த்ரில்லர்  ஸ்டோரி  , ஆனா   பல  அரசியல்  சட்டையர்  வசனங்கள் , சமூக  அவலங்களை சாடும்  காட்சிகள்  உண்டு , பல  ரசிக்க  வைத்தன



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1  பொதுவாக  மேரேஜ்  ஆன  ஆண்  தன்னை  விட  வசதியான  குறிப்பா  பல  மடங்கு  மேல்  தட்டு  ஆளை  சந்திக்க  தன்  மனைவியை  அழைத்துச்செல்ல  மாட்டான், அவனுக்கு  இருக்கும்  தாழ்வு  மனப்பான்மை  ஒரு  முக்கியக்காரணம், ஆனா  இதில்  அப்படி  நடக்கல 


2 திருமணம்  ஆன  ஒரு  பெண்  வேறொரு  ஆணிடம்  சேட்  பண்ணுவது  ஓக்கே   அவன்  கூட  மீட்டப்   வைக்கனும்னா  தனியா  அதை  பண்ணி  இருக்கலாம்,  புருசன்  கூடவே  வந்து  மீட்  பண்ணுவது  என்ன  வகை  துணிச்சல் ? 


3   கொலை  நடந்ததை  மறைக்க  போலீஸ்  ஆஃபீசரும், நண்பனும்  பேரம் பேசுவதும்  ஒரு  குறிப்பிட்ட  தொகை  கேட்பதும்  ஓக்கே , ஆனா  எந்த  பின்  புலமும்  இல்லாத  வீட்டு  வேலைக்காரன்  மாசா  மாசம்  50,000  ரூபாய்  தரனும்   என  மிரட்டுவது  என்ன  தைரியத்தில்? அதே  மாதிரி  தன்னையும்  போட்டுத்தள்ளிட்டா?  என  பயம்  இருக்காதா>?  அது  போக  பிளாக்  மெயில்  பண்ணும்போது  ஒரே  செட்டில்மெண்ட்டாதான்  பணம்  கேட்பாங்க . . தவணை  முறைல  கேட்கறாரே?  வசந்த்  அண்ட்  கோ  ஓனர்  ஃபிரண்டா? 


4   க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  ஒரு  சர்ச்சைக்குரிய  விஷயம்  ,  கான்  கேர்ள்  படத்தில்  வருவது  போல  ஒரு  கொலை யில்  மாட்டி  வைக்க  ஐடியா  பண்ணாம  இப்படி  செய்வது  நம்பும்படி  இல்லை 



  சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  இது  ஸ்லோவாகச்செல்லும்  த்ரில்லர்  மூவி . ஃபிளாஸ்பேக்  காட்சிகள்  அரை  மணி  நேரம்  கொஞ்சம்  ஜவ்வு  இழுப்பு  இழுக்கும். இதை  எல்லாம்  பல்லைக்கடிச்ட்டு  பொறுத்துக்கிட்டா  மாறுபட்ட  த்ரில்லர்  மூவி  கண்ட  திருப்தி  இருக்கும் . ரேட்டிங்  2.5 / 5 
Theerppu
Theerppu.jpg
Official Release Poster
Directed byRathish Ambat
Written byMurali Gopy
Produced byVijay Babu
Rathish Ambat
Murali Gopy
Starring
CinematographySunil K. S.
Edited byDeepu S. Joseph
Music bySongs:
Murali Gopy
Score:
Gopi Sunder
Production
companies
Friday Film House
Celluloid Maarg
Distributed byFriday Film House
Release date
  • 25 August 2022
CountryIndia
LanguageMalayalam