Friday, October 07, 2022

HOLY WOUND (2022) (மலையாளம்) -சினிமா விமர்சனம் ( சைலண்ட் மூவி) 18+

 


ஸ்பாய்லர்  அலெர்ட்


வாலிப  வயோதிக  அன்பர்களே!  ஒன்றரை  மணி  நேரம்  ஓடும்  இந்தப்படத்தில்  ஏன்  ஒரு  டயலாக்  கூட  இல்லை?னு  கேட்கறவங்களுக்கு  இயக்குநர்  டெடிகேட்  பண்ற  காமெடி  டிராக்  ஃபேமஸ்  டயலாக்  வசனமாடா  முக்கியம்?படத்தைப்பாரு  மேன்   . குடும்பப்பாங்கான , கண்ணியமான  ஆண்கள்  மட்டும்  பார்க்க  வேண்டிய படம். ஆனா  விமர்சனத்தை  எல்லாரும்  படிக்கலாம் 


ஆத்தோரமா  ஒரு  வீடு .அதுல  நாயகன்  நாயகி  தம்பதியா  ஒரு  ஓட்டு  வீட்டில்  குடி  இருக்காங்க ஆத்துல்   கிடைக்கும்  சிப்பிக்காளான்களை  சேகரித்து  அதைக்கடைகளில்  விற்று  ஜீவனம்  நடக்குது நாயகன்  ஒரு  குடிகாரன். எந்த  வேலை  வெட்டிக்கும்  போறதில்லை .  சம்சாரம்  சம்பாத்யத்துல  வீட்டோட  மாப்ளையா  இருக்கான்


மேலே    சொன்ன   சிச்சுவேஷன்ல  இப்போ  இருக்கும்  மாடர்ன்  உலகில்  எந்தப்பொண்ணும்  சகிச்சுக்கிட்டு  இருக்க மாட்டா. சாப்பாட்ல  எலி  மருந்தைக்கொடுத்து  புருசன்  ஜோலியை முடிச்சுக்கட்டிடுவா,   இல்லைன்னா  தூங்கிட்டு  இருக்கும்போது  பாறாங்கல்லை  எடுத்து தலைல  போட்டுட்டா  ஜோலி  முடிஞ்சுது 


 எதுக்காக  அவன்  பண்ற  டார்ச்சர்களை  எல்லாம்  தாங்கிட்டு  ஆக்கிப்போட்டு  அவஸ்தைப்பட்டுட்டு  இருக்கானு  தெரியல. அப்படியாவது  கூட்டுக்குடித்தனமா   இருந்தாலாவது  பெரியவங்க  ஏதாவது  சொல்லிட்டா  என்ன  பண்றதுனு  பயம்  இருக்கும், ஒதுக்குப்புறமான    வீடு  ., அருகில் ஆள்  நடமாட்டமே  இல்லை . அவ  நினைச்சா  என்ன  வேணா  பண்ணலாம், ஆனா  ஏன்  அடக்கி  வாசிக்கறானு  தெரில 


‘இது  ஒரு  அவார்டுப்படம்  எனப்தால்   முதல்  35  நிமிசம்  நாயகி  துணி  துவைப்பது , டீ  போடுவது .  சோறாக்குவது . குழம்பு  வைப்பது  இப்படியே  காட்டிக்கடுப்பேத்தறாங்க 


 36  வது  நிமிசத்துல  ஒரு  ஃபிளாஸ்பேக். நாயகி  டீன்  ஏஜ்   டைம்ல  ஒரு சினேகிதம்  இருக்கு .   அதை  நினைச்சுப்[பார்க்கறா. சும்மா  10  நிமிச காட்சிதான்


 அந்த  சினேகிதத்தைத்தேடி  நாயகி  போறா/. அந்த  சினேகிதி  அக்கரைல  ஒரு  சர்ச்ல  கன்யாஸ்த்ரீயா  இருக்கா 


 எதுக்கு  சாதா  நபரா  அந்த  கேரக்ட்ரை  டிசைன்  பண்ணாம  மத  அடையாளத்தைக்காட்றாங்கன்னா  அப்போதான்  சர்ச்சை  உருவாகும், அதை   வெச்சு   ஹிட்  ஆக்கலாம்


சினேகிதியைத்தேடி   நாயகி  போன  பின்  நாயகன்  செம  கடுப்பாகி  வீட்டை  துவம்சம்  பண்றான்.  நாயகி  வளர்த்த  நாயைக்கொன்னுடறான்


 மனைவியைத்தேடி  அந்த  சர்ச்க்கு  வ்ர்றான். இதுக்குப்பின்  என்ன்  நடந்தது  என்பதே க்ளைமாக்ஸ்


 படத்துல  பாராட்டும்படியான  அம்சங்கள்  ரெண்டே  ரெண்டு  தான் . ஒண்ணு  அருமையான  ஒளிப்பதிவு .  அடுத்தது    ஃபிளாஸ்பேக்  போர்சனில்  வரும்  நாயகியும், தோழியும் 


நாம  எந்தப்படத்தைப்பார்த்தாலும்  நாயகனோ  வில்லனோ  ஃபோட்டோஜெனிக்  ஃபிகராவே  இல்லாம  காண்டாமிருகம்  மாதிரி இருந்தா  அது  சாமி  சத்தியமா  படத்தோட  புரொடியூசராத்தான்  இருக்கும் 


 சபாஷ்  டைரக்டர் 


 1  20  நிமிசத்தில்  முடிக்க  வேண்டிய  குறும்படத்தை   90  நிமிடங்கள்  ஜவ்வு  இழுப்பு  இழுத்தது 


2   மூன்றே  மெயின்   கேரக்டர்களை  வெச்சுப்படத்தை  முடிச்சது 


ரசித்த  வசனங்கள் 


  படத்துலதான்  வசனமே  இல்லையே  எதை  ரசிப்பது? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1  இது  ஏதோ    சர்வ தேச  அளவில்  விருது  பெற்ற படம்னு   ந்ம்பி   டெலிகிராம்ல  டவுன்  லோடு  பண்ணிப்பார்த்ததுதான்  நம்ம  மிஸ்டேக் சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   இந்த  டப்பாப்படத்துக்கு  எதுக்கு  ரிவ்யூ?னு  கேட்பவர்களுக்கு  யாம்  பெற்ற  துன்பம்  பெறக்கூடாது  இவ்வையகம்  கான்செப்ட் தான் . ரேட்டிங்  மைன்ஸ்  2 / 5 0 comments: