Monday, April 25, 2016

மணல் கொள்ளையை யார் கண்டுக்காம இருக்காங்களோ அவர்களுக்கே ஆதரவு?

திமுக கூட்டணிக்கு விஜயகாந்த் வராத காரணத்தை வெளியில் சொல்ல இயலாது - EVKS இளங்கோவன் # சரி, வீட்டுக்கு உள்ளே வந்து தான் சொல்லுங்க



================




2 அதிமுக அமைச்சர்கள் நீக்கத்துக்கு விளக்கம் தேவை - கனிமொழி# இடம் சுட்டி பொருள் விளக்கு க போர்சனையே சாய்சில் விட்டவங்களாச்சே? அவுக



===============



3 எங்கள் கட்சி ராணுவம் போன்றது

- CR.சரஸ்வதி # சொந்த ஊருக்குப்போகும்போது மிலிட்ரி ரம்மோட போவாங்களோ?


===============

4  பாமக 200 இடங்களில் ஜெயிக்கும் - ராமதாஸ். # அந்த 34 சீட் மட்டும் ஏன் விட்டுட்டீங்க? சொல்றதுதான் சொல்றீங்க. செண்ட்டம் அடிப்போம் அடிச்சு விடுங்க


==========



5 அதிமுக கூட்டணியில் இணைகிறது தமாக.ஜி கே
வாசனுக்கு ஜெ அழைப்பு # ஜி கே வுக்கு ஓக்கே?இது கலைஞருக்கும் கேப்டனுக்கும் ஷாக்கே!



===============

தமிழக அமைச்சர்கள் மீதான நடவடிக்கை ஏன்? ஜெ. விளக்கம் தர கனிமொழி வலியுறுத்தல் # தப்பு பண்ணா கண்டுக்காம இருக்க அவர் என்ன கலைஞரா?

============

7   திமுக கூட்டணியில் தேமுதிக, தமாகா இணைய வேண்டும்- ஜவாஹிருல்லா அழைப்பு # வேற பக்கம் ஃபிக்ஸ் ஆன பொண்ணை இப்போ எதுக்கு பொண்ணு பார்க்க வரனும்?


===========

8 விவசாய மேம்பாடுதான் பொருளாதார வளர்ச்சி: - மோடி # அதனாலதான் நெட் தமிழன் டெய்லி கடலை சாகுபடி செஞ்சுட்டே இருக்கான்



============



9

மோடி உலகத் தலைவரானதற்கு டுவிட்டர் இணையதளமே காரணம்'-அமெரிக்க ஆய்வு முடிவு # அப்போ ட்விட்டர்ல இருந்தா உலகம் பூரா பரவலாம்?



===========

10

பாஜக அணிக்கு தேமுதிக நிச்சயம் வரும் -இல.கணேசன்  # வரும் வரும் வரும்னு குணா கமல் மாதிரி ஆகிடாதீங்க, வரமாட்டார் இனி நமக்கில்லை ன்னு திருவிளையாடல் தருமியின் தெளிவு பெறவும்


=============


11 

அதிமுக மதுவிலக்கு வாக்குறுதி அளித்தால் மக்கள் நம்ப மாட்டார்கள்: கலைஞர் # இந்த 5 வருசத்துல ஏன் மதுவிலக்கு கொண்டு வர்லை?னு கேட்பாங்க இல்ல?



===============

12

மக்கள் நலக்கூட்டணிக்கும்
மதுபான கூட்டணிக்கும் இடையேதான் போட்டி - வைகோ # மக்கள் தெளிவா இருந்தா தேவலை என்பதுதான் நடுநிலை ஆட்களின் கவலை



================

13
  • சிபிஐ வழக்கை எதிர்கொள்ளும் ,அன்புமணிக்கு

  • திராவிட கட்சியை குறை சொல்ல எந்த அருகதையும் இல்லை- கனிமொழி # 2 ஜி வழக்கில் சிக்கின நீங்க மட்டும் அவரை குறை சொல்லலாமா?


=======================



14

தி.மு.க.வின் வெற்றிச்சத்தம் என் காதில் கேட்கிறது- கருணாநிதி# காதும் காதும் வெச்சாப்டி ஒரு ரகசியம் சொல்றேன், அதுக்கு 1% கூட வாய்ப்பே இல்லை




==================


15

அதிகாரப் பசி கொண்ட கட்சி பா.ஜ., :கெஜ்ரிவால்  # அதி  கார பசின்னா அல்சர் வந்துடுமே




=================


16 

ஹோலி கொண்டாடினால் தாக்குங்கள்: ராஜ்தாக்ரே # இப்படிச்சொன்னதுக்காக உங்களைத்தான் எல்லாரும்  அறிக்கை விட்டு தாக்கப்போறாங்க ராஜ் ரோஜ் தாக்க ரே



================


17   மக்கள்நலகூட்டணி என்பது பிரிவினை வாத கும்பல் -Hராஜா  # இப்டி கெட்ட பேர் வரும்னு தான் எந்தக் கட்சியும் மக்கள் நலம் பற்றி சிந்திப்பது இல்லை போல


================

18 

கூட்டணி சேர யாருமே வராததால் விஜயகாந்த் விரக்தி # வேற வழி இல்லை ,ஏற்கனவே தமிழகத்தை “ ஆண்டவருடன்” கூட்டணி அமைக்க வேண்டியதுதான்


================


19 

எந்த கட்சிக்கு ஆதரவு? மணல் லாரி ஓனர்கள்  இன்று அறிவிப்பு # மணல் கொள்ளையை யார் கண்டுக்காம இருக்காங்களோ அவர்களுக்கே ஆதரவு?


================

20 

முஸ்லிம் ஓட்டுகளில், 95 சதவீதம் எங்களிடம் உள்ளது. எங்களை மதிச்சு யாரும் கூப்பிடலை':இஸ்லாமிய இயக்க கூட்டமைப்பு விரக்தி # இது தெரிஞ்சா கலைஞர் ஓடி வந்து கதவை தட்டுவாரே?


====================

அதிகம் சம்பளம் வாங்கும் பெண்ணைக்கண்டால்

தன்னை விட அதிகம் சம்பளம் வாங்கும் பெண்ணைக்கண்டால் ஆணுக்கு தாழ்வு மனப்பான்மை வந்து விடும்


===========

2 பெரும்பாலான பெண்களின் பெரும்பாலான அழுகை தனக்கானதாக இருக்கும்.ஒரு ஆணின் அழுகை பிரியமான பெண்ணுக்காக இருக்கும்

==========

3 ஒரு ஆணின் செல்வத்தை/பதவியைப்பார்த்து காதலித்த பெண்கள்.பலருண்டு.ஆனால் எந்த ஆணும் பணத்துக்காக எந்தப்பெண்ணையும் காதலித்தது இல்லை

==========


4 கோபம் ,எரிச்சல் ,ஆத்திரம் ் ஒருவர் மீது வந்த பின்பும் அவரை விட்டு விலக மட்டும் மனம் வர வில்லை எனில் அவரே உன் அன்புக்கு உரியவர் என்பதை உணர்

===========

5 நடிகர்கள் தன் மனம் கவர்ந்த பெண்ணை மணக்கிறார்.கள்.ஆனால் நடிகைகள் மட்டும் தொழில் அதிபர்களாகப்பார்த்து தேடி காதலித்து மணக்கிறார்கள்்

===========

6 நாம் சாப்பிட்ட வாழை இலையை நாமே எடுத்து விட்டால் அது வாழை இலை.அடுத்தவரை எடுக்க விட்டால் அது எச்சில் இலை

=========

7 தேர்தலில் வெற்றி பெற கட்சிக்கு கூட்டு முக்கியம்.வாழ்வில் ஆரோக்யம் தழைக்க உணவில் கூட்டு ,பொரியல் முக்கியம்.உணவின் அளவு 75% பொரியல் 25%

============

8 சனிக்கிழமை என்பது சின்ன ஞாயிறு.திங்கட்கிழமை என்பது பெரிய ஞாயிறு.மொத்தத்துல ஆபீஸ்ல வாரம் 3 நாள் ஒரு பயலும் வேலை செய்யறதில்லை


============

9 ஒரு படைப்பாளியின் படைப்பு வாசகர் இதை ஏற்றுக்கொள்வார்களா?என்ற பயமோ சந்தேகமோ கொள்ளாமல் தோன்றியதை அப்படியே படைக்கப்பட்டதாக இருக்க வேண்டும்

============

10 மொக்கையா எதுனா எழுதுனா நெட் தமிழன் ஓடி வந்து துக்கம் விசாரிக்கறான்.சுமாரா எதுனா எழுதிட்டா இது உங்களுதுதானா?னு சந்தேகப்படறான்

============

11 காலைல 8 மணிக்கு ஒரு நெட் தமிழன் நான் நல்லவன் னு சூடம் அணைச்சு சத்யம்செஞ்சான், இப்போ ஒரு பொண்ணு கிட்டே உம்மா குடுக்கறியா?ன்னு கேட்கான்


=============

12 ஒரு பூனை கிட்டேப்போய் இன்னைக்கு உங்க வீட்டம்மா  சவுமியா  வீட்ல என்ன சமையல்?ன்னேன் அது  சே”மியாவ்”னுச்சு- நன்றி - ராமராஜன்


==================

13  சிக்ஸ் பேக் வைத்திருக்கும் வீரர் சிக்சர் அடிப்பார் என எதிர்பார்ப்பதும் ஒரு வித மூட நம்பிக்கையே


===================


14  அன்பை வளர்க்கத்தெரிந்த எனக்கு அதை வெட்டியெறியவும் தெரியும்

வெட்டுதல் , எறிதல் இதுவெல்லாம் புரிதல் இல்லாதவர்கள் செய்யும் செயல்


===============

15 அன்பு எனப்படுவது யாதெனின் தனக்கு சாதகமாக இல்லாத போதும் தன் அன்புக்குரியவரை விலகி இருந்து எப்போதும் போல் நேசிப்பதே!


===============


16 தன்னை விரும்பியவரை விரும்பி வெறுக்கும்போது தானும் வெறுப்பவர் கண்ணாடி இதயம். விரும்பினாலும், வெறுத்தாலும் விரும்பிக்கொண்டே இருப்பவர் முன்னோடி இதயம்


============

17 உன் வெற்றியின் இலக்கு தூரம் குறைக்கப்பட்டால் உன் வேகம் ஆரம்பத்தில் இருந்தே அதிகரிக்கப்பட வேண்டும்


=================


18 திருடியது நீயாக இருந்தாலும் உன்னை போலீஸ் துரத்தினாலும் அய்யய்யோ திருடன் திருடன் என கத்திக்கொண்டே ஓடினால் நீ தப்பித்துக்கொள்ளலாம்



=================


19 கிரிக்கெட் ரசிகையை திருமணம் செய்தவன் மேட்ச் நடக்கும்போதெல்லாம் மேட்ச் இல்லாமல் திண்ணையில் தான் படுப்பான்


================

20  மழை வந்தால் காதலருக்கு , தம்பதியருக்கு , விவசாயிக்கு  சந்தோஷம். நடை பாதை வியாபாரிகளுக்கு , கிரிக்கெட் மேட்ச் ரசிகர்களுக்கு தர்மசங்கடம்


======================

Sunday, April 24, 2016

ஐஸ்வர்யாராய்க்கு பிரதமர் பதவியா? சல்மான் கான் அதிர்ச்சி

1
எங்கள் கூட்டணி விமானம் டேக்ஆப் ஆகி விட்டது - வைகோ # அதெப்டி பைலட் ( கேப்டன்) இல்லாம வண்டி கிளம்பும்?நமக்குதான் வழிநடத்தத்தெரியாதே?


================

2 எங்கள் கூட்டணி விமானம் டேக்ஆப் ஆகி விட்டது - வைகோ # மலேசியா விமானம் போல் காணாம போகாம இருந்தா சரிதான்


====================


3 அமிதாப்பச்சனுக்கு ஜனாதிபதி பதவி வழங்க வேண்டும்: சத்ருகன் சின்கா #நல்ல வேளை ஐஸ்வர்யாராய்க்கு பிரதமர் பதவி கேட்கலை


==========


4 கருணாநிதி எங்களை பார்த்து பயப்படுகிறார்
-தமிழிசை # காமாலைக்காரருக்கு கண்டதெல்லாம் மஞ்சள், மஞ்சள் துண்டுக்காரருக்கு யாரைப்பார்த்தாலும் பயம்

============

5 எங்க கூட்டணி விமானம் டேக் ஆப் ஆகிவிட்டது -வைகோ# வழக்கமா நமக்கு மானம் கப்பல் ஏறும்.இப்போ ஒரு சேஞ்சுக்கு விமானம் ஏறி இருக்கு



=========



6 கலைஞரின் வாழ்க்கை வரலாறு படமாகிறது- செய்தி

டைட்டில் நெ 420 ,மெட்ராஸ் மெயில்?


===========

7 தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா தனித்து போட்டி பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு # தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன்


===========

8 என் மனைவி தோழா படத்தில் நடிக்கவேண்டாம்னு சொன்னாங்க - நாகார்ஜுனா பேட்டி! # நாட்ல எந்தப்புருசன் பொண்டாட்டி சொல் பேச்சு கேட்டிருக்கான்?"

=========

9 நான் இங்கேயே இருந்துடுறேன் என்று தலைவர் பிரபாகரனிடம் சொன்னேன் - சீமான்
# யாரு?கேப்டன் பிரபாகரனா?புடனிலயே 1 போட்டிருப்பாரே?

==============

10 ஜெயலலிதாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு# அம்மா.நான் உங்க வீட்டு நாய் மா
நாய்னா.நன்றியைக்காட்டனும்.துரோகத்தை காட்டக்கூடாது

===============

11 எங்கள் கூட்டணி விமானம் டேக்ஆப் ஆகி விட்டது - வைகோ
# OFF ஆகிடுச்சு.குறியீடு


=============

12 லட்சுமண ரேகையை மீற வேண்டாம் " தலைமை தேர்தல் கமிஷனர் அறிவுரை # ஸ்டாலின் பேச்சை மீறவேண்டாம்னு அழகிரிக்கு சொல்றாரா?


==============

13 திமுக கூட்டணியில் சேரவிடாமல் சதி - 
நாமக கார்த்திக் #  கட்சி பேர்லயே நாம(ம்) இருக்கேன்னு பகுத்தறிவு பார்ட்டி பயந்திருப்பாப்டி


================


14 குதிரை காலை உடைத்த பாஜக எம்.பி கணேஷ் ஜோஷியின் ஜாமீன் மனு தள்ளுபடி! # ஜாமீன் கொடுத்தா ப்ளூ கிராஸ் அமைப்பு கிராஸ் கொஸ்டீன் கேட்கும்


================

15 "சிவகங்கை அதிமுக வேட்பாளராக  நடிகர் கஞ்சா கருப்பு -செய்தி #  உங்கள் வாக்கு கஞ்சா வுக்கே அப்டினு ஓட்டு கேட்பாங்களோ?


=================


16 விஜயகாந்த்  ஒரு குழப்பவாதி
கி.வீரமணி # குழம்புன குட்டைல தானே மீன் பிடிக்க முடியும்?னு நினைச்ட்டாரோ?


================


17 450 ஆண்டுக்கு முன்னரே மோடி ஆட்சியை கணித்த பிரான்ஸ் ஞானி  # நாடு தங்காத ஒரு பிரதமர் வருவார்னு அன்னைக்கே யூகிச்சாச்சா? அடடே! 


===============

18 நத்தம் விஸ்வநாதன் வீட்டில் மேலிடக்குழு சோதனை- செய்தி # ஸ்டிக்கர் பண்டல்கள் போக வேற எதுனா சிக்குச்சா?


===============

19 ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க தி.மு.க.,வில் யோசனை # இதுக்கு யார் ஒத்துக்கிட்டாலும் கலைஞர் ஒத்துக்க மாட்டார்


===============


20  வடிவேலுவை ஒரு கை பாக்க நான் ரெடி - கஞ்சா கருப்பு #  நீங்க என்ன கை ரேகை ஜோசியரா?



===============

கமல் , அமீர்கான் விஜய் மல்லைய்யா

காலைல 6 மணிக்கு ஒரு பொண்ணு FB வருது.நெட் தமிழன், இவ்வளவு ஏர்லியரா எந்திரிச்சு என்ன பண்றே டியர்?ங்கறான். இவன் எப்டி எந்திரிச்சான்ன்னு தெரில


===========



2 தினசரி 4 கிமீ நடப்பது நல்லது.பயிற்சிகளில் சிறந்தது நடைப்பயிற்சியே!சுகர் பேஷண்ட்கள் தான் நடப்பார்கள் என்பது மூட நம்பிக்கையே




============



3 வெறும் வயிற்றில் காலையில் சூடான பானங்கள் (டீ காபி பால்) பருகுவது தவறு.முதலில் குறைந்த பட்சம்.1 அதிக பட்சம் 4,டம்ளர் தண்ணீர் அருந்தனும்



===========



4 தினமும் இரவில் படுக்கப்போகும் முன் முகத்தில் பாலாடை/தயிர் தடவிக்கொண்டால் முகத்தில் மினுமினுப்பு கூடும் (எறும்பு கடிச்சிடாம பார்த்துக்கனும்)



==========



5 வாழை இலையில் பரிமாறி சாப்பிடுவது நல்லது.செம்புக்குடத்தில் சேமிக்கப்பட்ட தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது



===========



6 ஒரு நாள் FB வர்லைன்னா அடுத்த நாள் ஓ ட்டி பார்த்து அதை கரெக்ட் பண்ணுறாங்க பொண்ணுங்க




============



7 கமல் , அமீர்கான் எல்லாம் இந்தியாவை விட்டுப்போறேன்னு சும்மானாச்சிக்கு சொன்ன போது விஜய் மல்லைய்யா மனசுக்குள் நினைச்சிருப்பாரில்லை. செயல் வீரர்





=============



8  

நான் தாழ்ந்த சாதிப்பொண்ணுதான்,ஆனாஅந்தப்பொண்ணு உ
யர் சாதிப்பொண்ணு என பறை சாற்றிக்கொண்டதை வன்மையாக கண்டிக்கிறேன்னு யாரும் இன்னும் கிளம்பலையா?

================

9 இன்று 2 வெட்டித்தகவல்.சந்திரவதனாக்கு ஒரு அக்கா இருக்காம்.அதுக்கு ஒரு பொண்ணும் இருக்காம்



============



10 தேவதூதுவன் என்பவர் கடவுளின் மார்க்கெட்டிங் எக்ஸ்க்யூட்டிவ்.
தேவதை என்பவர் சொர்க்கத்தின் ரிசப்சனிஸ்ட்




========



11 காலைல எந்திரிச்சதும் நெட் தமிழன் ஒண்ணா ஃபேஸ்புக் /ட்விட்டர் எட்டிப்பார்ப்பான், இல்லை பக் வீட்டு ஃபிகர் காம்பவுண்ட் சுவரை எட்டிப்பார்ப்பான்




==================




12 நான் சின்னப்பையனா இருக்கும்போது பொண்ணுங்கதாவணி /துப்பட்டா விலகினா பதறுவாங்க. இப்பொ கவிதை எழுதறாங்க

காற்றில் பறக்கும் என் தாவணி தேவதை போலே ஒரு உணர்வு.

=================



13 நாளை பார்த்துக்கொள்வோம் என எந்த ஃபிகரையும் ஒதுக்காதே, அதுக்குள்ளே பச்சப்புள்ள, மழைக்காதலன் மாதிரி பாவிப்பசங்க வந்து தள்ளிக்கினு போய்டுவாங்க


==============


14 அணு அணு வா உன்னை ரசிச்சேன்னு அனு கிட்டே சொல்ல முடியாது




================



15  கேரளா ஃபிகர் கிட்டே அந்தக்காலத்துல ஏமாந்த எவனோ தான் கொலையாளிய நம்பினாலும் நம்பலாம்.. மலையாளிய நம்பக்கூடாதுன்னு சொல்லி வெச்சிருப்பான்




================



16 காலைல 8 மணிக்கு ஒரு நெட் தமிழன் நான் நல்லவன் னு சூடம் அணைச்சு சத்யம்செஞ்சான், இப்போ ஒரு பொண்ணு கிட்டே உம்மா குடுக்கறியா?ன்னு கேட்கான்




===============




17 ஏதோ ஒரு காரணத்துக்காக ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல நாம் எல்லோருமே ஒரு கணமாவது எங்காவது யாரிடமாவது நடித்திருப்போம்


================

18 எஸ்.சூர்யா = சின்ன வயசுல இருந்தே எங்க அம்மா நிலா வைக்காட்டி தான் சோறூட்னாங்க.அப்ப இருந்தே நிலா ன்னா ஒரு இது


===============

19 தன் மனசுக்குப்பிடிச்ச வேலை கிடைக்காதவன் ,தான் படிச்ச படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காதவன் தன் வேலை என்ன?ங்கறதை வெளில சொல்லிக்க மாட்டான்


============

20 நடுத்தர வர்க்க ஆண் தன் சம்பளம் என்ன என யாராவது ஒரு பெண் கேட்டால் 50% உயர்த்தி சொல்வான்

==============