Thursday, April 21, 2016

அய்யய்ய்யோ திருடன் திருடன்.. கொல்லைப்பக்கம் வந்திருக்கான்

1  பக்தியோட இருப்பவர்கள் கூட

இந்த சாமி ஆகாது.,அந்த சாமி பிடிக்காது சொல்வது ஏன்?


சுப்ரமணியம் சாமி,நித்யானந்தா சாமி எல்லாம் ஆபத்தானவங்க.அதான்



==========

2 மிஸ்! உங்க முகம் ஏன் எண்ணெய் வழிஞ்சது போல் இருக்கு?



எனக்கு ஆயில் ய நட்சத்திரம் சார்


==============


3 டீச்சர் கூட ஓடிப்போன பையன் கடைசியாப்பார்த்த படம் என்னவா இருக்கும்?



குரு என் ஆளு


==============


4 த்லைவரே! டெய்லி காலை ல எந்திரிச்சதும் ஐ டெக்ஸ் மை நல்லதுனு சொல்றீங்களே ஏன்?



பெண் மை யைப்போற்றுவோம் என்பது கழகத்தின் கொள்கை


=============

5 பரணி நட்சத்திரம் தரணி ஆளும்.



ஜோசியரே! சும்மா அடிச்சு விடாதீங்க.இருப்பது ஒரு உலகம். எப்டி எல்லா பரணி நட்சத்திரக்காரங்களும் ஆள முடியும்

=============


6 முள்ள முள்ளால தான் எடுக்கனும்!! னு முயற்சி செஞ்சேன்.

என்ன ஆச்சு?

2 வது முள்ளும் உள்ளே போய்டுச்சு.இப்போ 3 வது முள்

==============

7 ட்விட்டர் : = நானா போய் ஃபாலோ பண்ண... ஏளனமா பார்க்குதுக



மிஸ்."poor"na னு இருப்பதாலோ என்னவோ.RICH NA னு மாத்திப்பாருங்க


=============


8 டாக்டர். பெரிய வெங்காயம் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்குமா?



யோவ்.அப்போ சின்ன வெங்காயம் சாப்ட்டா கம்மி ஆகிடுமா?அடிச்சு விடக்கூடாது

=============


9 காலை டிபனை காலை 8 டூ 9 சாப்பிட்ரனும்.



டாக்டர்.10 பூரியை 10 நிமிசத்தில் சாப்ட்ருவேன்.மீதி 50 நிமிசம் என்ன சாப்பிட?

=============


10 அய்யய்ய்யோ திருடன் திருடன்.. கொல்லைப்பக்கம் வந்திருக்கான்



ஏம்மா நான் உன் ஃபேஸ்புக் ஃபாலோயர்தான் டி எம் க்கு ஏன் ரிப்ளை பண்ணல? டி எல் ல ரிப்ளை பண்ணலைன்னா வாசல் பக்கம் வந்திருப்பேன்


====================
11 டியர், நான் எவ்ளோ கோவமா பேசினாலும் நீ என்கிட்ட கோவமா பேசக்கூடாது

இது என்னம்மா கேப்டன் ஃபார்முலாவா இருக்கு?

=============

12 உங்க பையன் செல்லாக்குட்டி யா? அப்டின்னா செல்லம்னு அர்த்தமா?

 இல்லை  ரேஷன் கடைக்குப்போகச்சொன்னா, இண்ட்டர்வ்யூக்கு போகச்சொன்னா எங்கேயுமே செல்லா குட்டி


=================

13 

தலைவரே! உங்க தலைமையை ஏற்க மாட்டோம்னு அவர் சொல்லிட்டாரே? அது ஏன்?


 ஏன்னா நான்  தலைக்கு சிவப்பு டை அடிக்கறேன், அவரு கறுப்பு  டை அடிக்கறாரு


================

14

டியர், 5 வருசமா லவ் பண்றேன், இன்னும் என் லவ்க்கு  OK சொல்லலையே?

அப்பா கிட்டே பேசிப்பாருங்க
பேச்சு வார்த்தை நடத்த நான் என்ன அரசியல் கட்சியா?


===========


15 டியர், ஆர்ட் ஆஃப் லிவ்விங்க்னா  என்னா?


 ஆர்ட்ஸ் காலேஜ்ல ஃபிகருங்க நல்லாருந்தா  வீட்டுக்கே போகாம  அங்கனயே குடி இருப்போம், அதான்


=================

16 

உங்க ஆஃபீஸ் HRO  மேடம் உன்னை லவ் பண்ணுதுன்னு எப்படி யூகிக்கறே?

 எனக்கு எந்த மெயில் அனுப்பினாலும் டியர் சார்னு தான் அனுப்புது,அப்போ இது லவ் தானே ஜெஸ்ஸி


==================

17   டியர், எக்சாம் கிட்டே  வருது,  பசங்களுக்கு எதுனா புத்தி சொல்லுங்க

 ம்க்கும், எலக்சன் கூடத்தான் கிட்டே வருது, அரசியல்வாதிக்கு புத்தி சொல்ல முடியுமா?

=============


18  தலைவரே! கூட்டணிப்பேச்சுவார்த்தைக்கு கார்த்திக்கை ஏன் இன்னும் சந்திக்காம இருக்கீங்க?

 அவரு வந்தா முதல்ல குஷ்பூ எங்கே?ன்னு தான் கேட்பாரு



================

19  டாக்டர்! இப்பலாம் 3 சப்பாத்தியே சாப்பிட முடியல ? ஒருவேளை வயசாயிடுச்சோ?

வயசானா ஒரு சப்பாத்தியே மெல்ல முடியாதே


==============

20 டாக்டர்,இடுப்புல மச்சம் உள்ள பொண்ணை காதலிக்கிறவன் அதிர்ஷ்டசாலியாமே நிஜமா? யோவ்,ஒரு பொண்ணோட காதல் கிடைச்ச எல்லாருமே அதிர்ஷ்டசாலிகள் தான்


=================



டீச்சருடன் வாழ்ந்த வாழ்க்கை மிகவும் கசப்பானவை - மாணவன் பேட்டி

இந்தியாவிலேயே அதிகமாக குப்பையை உருவாக்கும் நகரம் சென்னை. இங்கு தினமும் 6500 டன் குப்பை வீசப்படுகிறது- அன்புமணி # குறிப்பா கோடம்பாக்கம், ஏகப்பட்ட குப்பைபடம்



===============




2 டீச்சருடன் வாழ்ந்த வாழ்க்கை மிகவும் கசப்பானவை - மாணவன் பேட்டி # ஏன்? டெய்லி பாகற்காய் குழம்பு வெச்சுதா?அல்வா கொடுத்துட்டு பேட்டி குடுக்கறான் பாரு




===============




3  பா ஜ க வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் - தமிழிசை் # 2 தொகுதி ல ஜெயிச்சாலே 3 லோகமும் 4 பக்கமும் திரும்பிப்பார்க்கும் மேடம்




==========



4 திமுக - காங் கூட்டணி வலுவானது-பழ.கருப்பையா # ஆமா.கூடா நட்பு ன்னு திட்டினாக்கூட தேர்தல் நேரத்தில் சேர்ந்து கொள்ளும் அளவு வலுவானது




===========



5 மக்களிடையே எங்களுக்கு ஆதரவு பெருகி வருகிறது; - அன்புமணி # இதே டயலாக்கைத்தான் எல்லாத்தலைவர்களும் சொல்லிக்கறாங்க.




========




6 சட்டசபை தேர்தலில் ஜெ வுக்கும், அன்புமணிக்கும் இடையே தான் போட்டி: ராமதாஸ் காமெடி நல்லா.வருது.ஆனா 4% க்கு மேல ஓட்டு வரமாட்டேங்குது




==========



7 பாஜக கூட்டணிக்கு தேமுதிக வரும் ் காத்திருக்கும் முரளிதர் ராவ் # சினிமாலயும் சரி அரசியல்லயும் சரி முரளி ன்னா காத்திருக்கனும் போல



===========



8 சமூக வலைத்தளத்தில் மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது- வைகோ" # ட்விட்டர்ல எல்லா கட்சியையும் பாலோ பண்ணலாம் எல்லாரும் , ஆனா ஓட்டு ஒருத்தருக்குத்தானே போட முடியும்?




================




9 அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 32 தொகுதிகள் கேட்க வாசன் திட்டம் # 3+2 =  5  தொகுதி கொடுப்பாரு





=====================

10  முதல்வர் வேட்பாளராக ஏற்கும்படி விஜயகாந்த் கேட்டால் பரிசீலிப்போம்- பாஜக  முரளிதர ராவ்  # நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா?



================


11 

அவசரப்படாதீர்கள். பலமான கூட்டணி அமைப்போம்:  விஜயகாந்த் #தேடி வந்தத விட்டுட்டா தேடிப்போவது துரத்தி விடும் 



===============


12 கனிமொழியின் பிறந்த நாளன்று நேரில்  வாழ்த்துச் சொன்னார் ஷகிலா.ஆனால் கட்சியில் இணையவில்லை #அப்டி இணைஞ்சுட்டா பிரம்மாண்டமான கூட்டம்கூடுமே மேடைல


================

13 தேர்தலைஅமைதியாக நடத்த17,350 ரவுடிகளை வெளியேற்ற திட்டம் -தேர்தல் ஆணையம் #  எல்லா ரவுடிகளையும் வெளியேற்றிட்டாஜனங்கயாருக்கு ஓட்டுப்ப்போடுவாங்க?


=============

14 

நான் சீட் கேட்டு விண்ணப்பிக்கவே இல்லை: உதயநிதி ஸ்டாலின் #  ஏன்? உங்களுக்கே நம்பிக்கை உதயம் ஆகவில்லையா?



===============


15 
திமுக "ஐஸ்கிரீம்"தேமுதிக "செர்ரி".விஜயகாந்த் எங்களுக்குத் தேவையில்லை- துரைமுருகன் # மேலிடத்துக்கு நல்லா ஐஸ் வைக்கறீங்க,ஜனங்க காதில் பூ வைக்கறீங்க


================

16 இந்திய கிரிக்கெட் அணியின் தோல்விக்கு சீருடை கலரை மாற்றியதுதான் காரணம்: வீரர்கள் புகார் # ஆடத்தெரியாத நாட்டியக்காரி மேடை கோணல்னாளாம்


============

17 முரசுக்கு வில்லனாகும் கூடை... தேர்தல் கமிஷனிடம் தடை கேட்க தேமுதிக முடிவு # முரசுக்கு விஜய்காந்த்தான் வில்லன்னு சிலர் பேசிக்கறாங்களே?


================


18 ஓட்டு போட பணம் வாங்கும் வாக்காளர்களுக்கு ஓராண்டு சிறை: தேர்தல் ஆணையம் அதிரடி # ஜூஜூபி சட்டம், தமிழன் செக்கா, டிடியா வாங்கிக்குவான்


=============


19 மல்லையாவின் கிங்பிஷர் ஹவுஸ்... ரூ. 150 கோடி யாரும் வாங்க முன் வரவில்லை # ஜனங்க என்ன பேங்க் ஆஃபீசர்சா? நம்பி வாங்கி ஏமாற?


===============


20 சமூக வலைத்தளத்தில் எங்களுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது
- வைகோ # அதெல்லாம் ஃபேக் ஐடிகளா இருக்கும்.இங்கன அன்வர்களும் ஹசீனாபானுகளும் அதிகம்

 


=============

Wednesday, April 20, 2016

பாரத் பிதா கே கலைஞர்.பாரத் மாதா கி ஜெ

தலைவரே! பாரத் மாதா கி ஜெ சொல்லாதவங்க நாட்டை விட்டுப்போய்டனுமாம்

 இதான் சாக்கு. பாரத் பிதா கே கலைஞர்னு சொல்லியே ஆகனும்னு சொல்லிடுவோமா?


==================


2  சார், உங்க  ஜோக்க படிச்சு சிரிச்சத விட இதெல்லாம் ஜோக்குனு சொல்லி எழுதுறாரேனு நெனச்சு சிரிச்சது தான் அதிகம் :P


அப்டியா? தேங்க்ஸ் மிஸ். எப்டியோ என்னை நினைக்கறீங்களே அதுவே போதும்

================


3 தலைவரே! பாரத் மாதா கி ஜெ சொல்ல மாட்டீங்களா? ஏன்?



நான் பாரத் மாதா கி கலைஞர்னு தான் சொல்வேன்.

=============

4 பொண்ணு கிளி மாதிரி இருக்கும்னு சொன்னீங்க.முகம் எல்லாம் வெட்டுக்காயமா இருக்கு?



சரி.வெட்டுக்கிளி மாதிரி னு வெச்சுக்கோங்க



============

5  டியர், கிளிப்பச்சைக்கலர்ல சர்ட் எடுத்து கிஃப்ட் பண்றியே? என்னை என்ன ராமராஜன்னு நினைச்சியா?

இதுதாங்க இப்போ ஃபேஷன், தெறி லுக் வந்திடுச்சு  பாருங்க


================



6  ஓட்டுக்குப்பணம் வாங்கினா ஜெயில் தண்டனையாமே?

 ஆமா, பணம் கொடுத்தா அவங்களுக்கு பதவியும் சல்யூட்டும்


=============


  தலைவரே!  திருவள்ளுவர் சிலையை தெரியாத்தனமா மூடிட்டோம், சமாளிங்க,

ம்ம், வாசுகிக்கு அவர் எதுவுமே செய்யலைன்னு புகார் வந்ததால் கண்டனம் தெரிவிக்க அப்டி செஞ்சோம்


============

 டாக்டர்,  நைட் பெட்ரூம்ல லைட் ஆஃப் பண்ணிட்டா என் கணவர் வாசல் திண்ணைல போய் படுத்துக்கறார்

அடடா, ஏன்?

 யோக்கியனுக்கு இருட்டுல என்ன வேலை?ங்கறார்

===============

9  டாக்டர்! மீன் குழம்புல முருங்கைக்காய் போடலாமா?

என்னய்யா இது? மீனம்மா கைல வளையல் போடலாமா?ங்கற மாதிரி,உனக்குப்பிடிச்சிருந்தா ஓக்கே


=================


10 மேனேஜர் சார், இண்ட்டர்வ்யூக்கு வந்தவங்கள்ல பர்சனாலிட்டி இல்லாத பசங்களா செலக்ட் பண்றீங்களே? ஏன்?

அதுக்கு பரிகாரமா பர்சனாலிட்டி பொண்ணுங்களை செலக்ட் பண்றேனே?


================

11 நான் ஒரு பச்சை மண்ணுங்க

 ஹீரோ சார், அதுக்கு கிளிப்பச்சை  சர்ட் போட்டு தான் நிரூபிக்கனுமா?


================


12  தலைவரே! அவங்க வளையல் கொடுத்ததுக்குப்போட்டியா நீங்க கொலுசு தர்றீங்களா?


 ஆமா, கொலுசை மாட்டி விடும் சாக்கில் கால்ல விழுந்த மாதிரி ஆச்சில்ல

================


13  சார், உங்க ஜோக்ஸ் எல்லாம் மொக்கையா இருக்கே?

 தெரியும்யா , சமைச்சவனுக்குத்தெரியாதா சமையலோட லட்சணம்


===============


14   தலைவரே! ஒரு கோடி ரூபா சம்பாதிச்சிருந்தாலும் அது முறைகேடுதானே?னு வக்கீல் கிழிக்கறாரு, என்ன பண்ண?

 டி வி யை ஆஃப் பண்ணிடுங்க


===================


15   டெய்லி  ஒரு கேரட் பச்சையா சாப்பிடனும், அப்போதான் உங்க கண்ணுக்கு நல்லது

 டாக்டர் , எல்லா கேரட்டும் ரோஸ் கலர்ல தான் இருக்கு


================



16   நீங்க சொன்னபடி டெய்லி30பழம் சாப்பிட்டேன், வயித்தால போகுது
யோவ், நான் எப்போ அப்டி சொன்னேன்?
ஆரஞ்சுப்பழம் சாப்பிடுன்னீங்களே? 6*5 = 30 தானே?



================


17 மிஸ்! எதிர் வீட்டுப்பையன் டக்ளசைப்பிடிக்குமா?

ம்ஹூம், நெக்லஸ்னா பிடிக்கும்


===============


18 எந்தப்பாவமுமே பண்ணாத நீ எதுக்கு தினமும் பாவ மன்னிப்புக்கேட்க சர்ச்க்குப்போறே?

அங்கே இருக்கும் கன்யாஸ்த்ரீயை லவ் பண்றதால


===============


19 சார். எதிர் வீட்ல ஃபிகர் இருந்தும் நல்ல பாட்டா போடாம ஏன் மொக்கைப்பாட்டா போடறீங்க?

நல்ல பாட்டு போட்டா பாட்டை ரசிக்கும், என்னை ரசிக்காதில்ல?


==============


20 போன வாரம் குறைச்ச பெட்ரோல் விலையை இந்த வாரம் ஏன் ஏத்துனீங்க?

விஜய் மல்லைய்யா கிட்டே விட்ட காசைப்பிடிக்கனுமில்ல?


===============


சத்ரியன் + சேதுபதி + தங்க மீன் கள் = தெறி

தோல்வியை சந்திக்காத வெற்றி வீரன் உலகில் இல்லை.வீறுகொண்டு எழ வைப்பதே தோல்விதான்

===========

2 சத்ரியன் + சேதுபதி + தங்க மீன் கள் = தெறி # ஸ்டில்ஸ் சொல்லும் சேதி

=============

3 கன்னிப்பருவத்திலே படம் ரீமேக் செய்யப்பட்டா டைட்டில் பை பாரதிராஜா

கடல் கன்னிப்பருவத்திலே

=============

4 தேங்காய் சட்னி கொழுப்பு.பொதினா சட்னி ,கொத்துமல்லி சட்னி ,கறிவேப்பிலை சட்னி உடலுக்கு நல்லது

============

5 மிளகு தக்காளிக்கீரை ( கறிஞ்சிக்குட்டிக்கீரை) யில் இலைகளை ஆய்ந்த பின் அந்த சிறு சிறு காய்களை தனியாக உதிர்த்து பின் கழுவி சுண்டைக்காய் குழம்பு போல்  வைக்கலாம், உடலுக்கு நல்லது


===============


6  தினசரி  ஏதோ ஒரு கீரை உன் உணவில் இருக்கட்டும். குளிர்ச்சி. ஊரை ஒதுக்கினாலும் கீரை ஒதுக்காதே



================


  கடைந்த கீரைக்குழம்பில் நல்லெண்ணெய் சேர்த்து நீ தினம்  சாப்பிட்டால் நீ ஆரோக்யத்தின் கரையில் நிரந்தரமாய் இருப்பாய்


=================


 பூண்டு சேர்க்காமல் ரசம் வைக்க மாட்டேன் என நீ உறுதி பூண்டு இருந்தால் கொழுப்புச்சத்து உன் உடலில் தங்காது


=================

9  

தினமும் காலை /மாலை  ஒரு பூவன் பழம் ( பூம்பழம்) சாப்பிட்டால் மலச்சிக்கல் , வாழ்க்கைச்சிக்கல் இல்லாமல் உன் பொழுது கழியும்



=================


10  கோடை காலம் முழுக்க  தினமும் கோஷாப்பழம் ( தர்பூசணி) ஒரு துண்டு சாப்பிடவும், நீர்ச்சத்து , தாக நிவாரணி, சிறந்த  நோய் எதிர்ப்பு சக்தி  மூன்றும் ஒருங்கே கொண்ட ஒரே பழம்


=====================


11 புகழ் பெற்ற கலைஞர் னு நடிகர் ஜெய் யை சொல்லிட முடியார்து.புகழ் பட ஹீரோவ இருந்தும்



=============



12 கொடூரமான குற்றங்கள் புரிந்தோர்க்கு அவர்கள் எதிர்கால நலன் கருதி நீதிமன்றங்கள் அளிக்கும் சலுகைகள் தேவையற்றவை.வாழ்நாள் முழுக்க அனுபவிக்கட்டுமே,



==============



13 நெட் தமிழன் அடிக்கடி டிபி/பயோ மாத்திட்டு இருக்கற ஆளா இருந்தா ஆளையும் மாத்திடுவானாம், சைக்காலஜி மிஸ் ஷைலஜாவின் டைரியிலிருந்து

================

14  தெறி  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் கலக்கல், ஆனா இப்போ வரும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் சொதப்பல்


=============


15 ஃபேஸ்புக்ல ஒரு பொண்ணு துப்பட்டா போடாம சுடி மட்டும் போட்டு ஃபோட்டோ அப்டேட்டுது. நெட் தமிழன் நீங்க ரொம்ப போல்டான டைப்ங்க:ங்கறான் . அடேய் ;-)


===============


16  இயற்கை அன்னை அளித்த சிறந்த பானங்கள் 1 தண்ணீர்  2 இளநீர் 3 பதநீர் ( தெளுவு- பனை மரத்தில் இருந்து இறக்கப்பட்டு சுண்ணாம்பு  கலந்து தெளிய வைக்கப்பட்டது)


================


17  நீண்ட நாள் கெடாமல் இருக்க உப்பு சேர்த்து பதப்படுத்தப்பட்ட ஊறிய காய் ஆன ஊறுகாய் எல்லாமே உடல் நலனுக்கு ஊறுவிளைவிக்கக்கூடியவை


=================



18  இயற்கைக்கு மாறாக  குளிர்சாதனப்பெட்டியில் ( ஃபிரிட்ஜ்) வைத்து  பின் உபயோகிக்கப்படும் காய்கறிகள் எல்லாமே  தன்  இயற்கை சத்தை இழந்திருக்கும், எனவே ஃபிரிட்ஜ் தவிர்ப்பீர் 

=================


19 மண் பானையில் சேமிக்கப்பட்ட நீர் தான் எந்த வித பின் விளைவும் இல்லாத ஜில் நீர்


==============



20

  தினமும் காலையில் ஒரு கேரட் பச்சையாக கடித்து சாப்பிட்டால் உன் ஆரோக்யம் , உடல் சருமம் 24 கேரட் தங்கம் போல் மின்னும். விழி ஈர்ப்பு விசை கூடும்


=================