Tuesday, April 19, 2016

எல்லா”மே” “மே”ல இருக்கறவன் பார்த்துக்குவான்

1

பாரத் மாதா கீ ஜே' முழங்காதவர்கள் நாட்டை விட்டு வெளியேறட்டும்: பாஜக பொதுச் செயலர் கைலாஷ் # தீவிரவாதிகள் அப்டி சொல்லிட்டு உள்ளே ஊடுருவிடப்போறாங்க


=================


எல்லாருக்கும் ஆசை வந்துருச்சு.. என்ன பண்றது... இல.கணேசன் புலம்பல்!# ஆளாளுக்கு அல்டிமேட் ஆகனும்னு நினைக்கறாங்க.ஆலுமா டோலுமா.தமிழகம் தாங்குமா?



==========




3 சங்கர் கொலை - குற்றம்சாட்டப்பட்ட 5 பேரின் படம் வெளியானதற்கு ஹைகோர்ட் கண்டனம் # ஏன்? அந்த தியாகிகளுக்கு எந்த ஜாதிலயும் பொண்ணே இனி கிடைக்காதா?



===============



4 ஓட்டுக்கு பணம் வாங்கினா 'கம்பி எண்ண வேண்டும்': தேர்தல் கமிஷனர் எச்சரிக்கை # குழப்பாதீங்க, பணம் சரியா இருக்கா?ன்னு பணத்தைத்தானே எண்ணனும்?




===============



 காங்., அரசு தோல்வி அடைந்து விட்டது: வாய் குளறிய சோனியா # போச்சு , இனி மீடியாக்கள் இதை கிளறியபடியே இருப்பாங்களே?



============

அதிமுகவில், ஜெவின் அதிரடி OPS,நத்தம் விஸ்வநாதன் ஆதரவாளர்களின்  பதவி  பறிக்கப்பட்டுள்ளது.-செய்தி # நிமிர்ந்து நில், தனி ஒருவன் சினிமா பார்த்துட்டு இருந்தாங்களோ?



=============

கருணாநிதிக்கு இனி சறுக்கல்தான்: வைகோ கணிப்பு
#  தலைவருக்காவது ஜாண் ஏறினா முழம் சறுக்குது, நாம இன்னும் 1 செமீ கூட ஏறவே இல்லையே?


===============

திமுகவை தில்லுமுல்லு கட்சி என  பிரேமலதா விமர்சனத்து க்கு கலைஞர் பதில் அளிக்காதது ஏன்? - வைகோ # தில் லா இருக்கு ப”தில்”, மதில் மேல் பூனை முடிவா குதித்த பின்


=============


2020க்குள் அனைவருக்கும் வீடு திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துதல் மசோதா அவசியம்: வெங்கய்ய நாயுடு # இது என்னமோ 20- 20 மேட்ச் மாதிரி தோணுது



================

10 10ம் வகுப்பு மாணவி பலாத்கார வழக்கு... கோபி இளைஞருக்கு ஆயுள் தண்டனை!  # 10 பொருத்தமும் இருக்குனு 2 பேருக்கும் மேரேஜ் பண்ணி வைக்கல, நல்லவேளை

=============


11 பாஜகவில் சேர்ந்தார் நடிகர் விஜயக்குமார்  -செய்தி # ஒரே கட்சில பெரிய நாட்டாமை, சின்ன நாட்டாமை, சரி   வருமா?


===============


12 

விஜய் சேதுபதி அதிமுகவில் ஐக்கியமா? பரபரத்த கோடம்பாக்கம்! # நானும் ரவுடிதான் -னு படம் பண்ணப்பவே டவுட்டு



==============

13

சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி? ரகசிய சர்வே எடுக்கும் திமுக # அழகிரிக்கு ஒரு ஃபோன் அடிச்சுக்கேட்டா அழகா சொல்லிடுவாரே ரிசல்ட்டை?


===============



14

வருட வருமானம் ரூ. 10 லட்சமா.. அப்ப ஏப். 1 முதல் உங்களுக்கு காஸ் மானியம் கிடையாது! # ஒரு லட்சத்துக்கே வழியைக்காணோம்


==========


15

இந்தியாவின் கெடுபிடியால்... வங்கதேசத்தில் மாட்டுக் கறி விலை கிடுகிடு! # இப்போ பீப்-க்குதான் மவுசு, சாங்கா இருந்தாலும்


===========


16 ஏ வாய மூடுயா"..
மாநிலங்களவையில் ஆத்திரமடைந்த திமுகவின் திருச்சி சிவா ! # சி”வாய”நமஹ, சாந்தி நமஹ


==============

17

சட்டப் பேரவைத் தேர்தலில் பல கட்சிகள் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைக்கும் - நடிகர் விஜயகுமார் # தாமரை-ன்னா வண்டுகள் வந்து மொய்க்கத்தான் செய்யும்


===============

18 

சொத்துக்குவிப்பு வழக்கை ஜெயலலிதா தரப்பினர் இழுத்தடிப்பதாக ஆச்சாரியா குற்றச்சாட்டு # எல்லா”மே”   “மே”ல இருக்கறவன் பார்த்துக்குவான்


==============


19 

மார்க்சிஸ்ட் கட்சி நிதிஅளிப்பு கூட்டத்தில் வெறும் பையை அளித்த தொண்டர்கள் # காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா-ன்னு சொல்ல வந்தாங்களோ என்னவோ?



================


20  

தங்களின் வாக்குறுதிகளை பிற கட்சியினர் காப்பியடிப்பதாக ராமதாஸ் விமர்சனம் # இப்பவெல்லாம் படிச்சவங்க வாங்கும் மார்க்கை விட காபி அடிச்சவங்கதான் நெ1, நெ2 வர்றாங்க


================

டாக்டர். பொண்ணுங்க பக்கத்துல வந்தாலே கை காலெல்லாம் நடுங்குது..

1 டியர், பொண்ணு பார்க்க வந்தப்போ மிளகாய் பஜ்ஜி வெச்சியே செம டேஸ்ட், அந்தக்கைக்கு முத்தம் தான் தரனும்



அப்டியா? இருங்க எங்க அம்மாவைக்கூப்பிடறேன்




======================



2 நீங்க இனிமே எண்ணெய்ப்பலகாரம் கிட்டேயே போகக்கூடாது, ஆயில் டேஞ்சர்



ஓக்கே டாக்டர், என் சம்சாரம் பேரு ஆயில்யா. கிட்டே போலாமா?


===========

3

 டியர், நான் எழுதுன லெட்டர்ல உங்களுக்குப்பிடிச்ச வரி எது?

 உன் தங்கச்சி வீட்டு முக”வரி”

=================


4    டியர் , உனக்காக லட்சக்கணக்கில் செலவு பண்ணி இருக்கேன், நீ எனக்கு என்ன செஞ்சே? இப்டி பிளாட்ஃபார்ம்ல நிறுத்திட்டியே?

 சரி, இந்தாங்க 10 ரூபா, பிளாட்ஃபார்ம் டிக்கெட் எடுங்க


==================


5   டெய்லி உன்னை  ஏதாவது ஒரு பழம் சாப்பிடச்சொன்னேனே? ஏன் சாப்பிடலை?

 சாரி டாக்டர் , பழம் நழுவி பால்ல விழட்டும்னு பார்த்துட்டு இருந்தேன்


=================

6  டீச்சர், என் கட்டுரைல எதுனா எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை இருக்கா? பார்த்து  சொல்லுங்க

ம்ம், இலக்கணப்பிழை கில்மாப்பட  டிவிடி வேணும்னு சுத்தி வளைச்சுக்கேட்கறியா? இந்தா



================

7  

 இந்த ஜவுளி லோடை ஈரோட்டுக்கு கொண்டு போகனும்

 சரிங்க எஜமான். ரோஸி எங்கே வந்து லாரில ஏறிக்கும்

 டேய். அது ரோசி இல்லை ஏ சி. இன்னும் பரிசீலனையில் தான் இருக்கு


==================


8   டாக்டர்,திடீர் திடீர்னு ரெய்டு வந்துடுது எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. கையும் ஓடல,காலும் ஓடல!

தலைவரே! கால் தானே ஓடும்?


=============

9 தலைவரே! கூட்டணிக்கு ஓக்கே சொன்னா உங்களுக்கு  சிலை வைக்கறாராம்

 ஓக்கே சொல்லலைன்னா?

 உலை வைப்பாராம்,

================



10  யுவர் ஆனர் , காதலிச்சது போதும். நான் அம்மா கூட வே போறேன்

 உங்க அம்மா கூடவா? உன் குழந்தைக்கு அம்மா கூடவா?



=====================


11  ஆக்‌ஷன் படங்களை தடை பண்ணீட்டாங்களாமே?நாம எப்டி இனி குப்பை கொட்றது?

யோவ் அது விக்ஸ் ஆக்சன் 500 டேப்லட்

 



===================

12 மிஸ்! நாளைக்கு நீங்க  பச்சைக்கலர் சேலை தானே கட்டப்போறீங்க?
 யா, எப்டி தெரியும்?
நேத்து சிவப்பு, இன்னைக்கு மஞ்சள், ட்ராஃபிக் ரூல்ஸ் பிரகாரம்  அடுத்து பச்சை தானே?


================

13    டியர். நிஜமாவே என்னை லவ் பண்றீங்கதானே?
கிட்டத்தட்ட காதலன்
அதென்ன கிட்டத்தட்ட?
நீ என் கிட்டே இருக்கும்போது லவ்வுவேன்,தள்ளிப்போய்ட்டா டவுட்


=====================


14  சண்டே ஊற வெச்ச துணியை  நேத்து மண்டே துவைச்சதுக்கு அம்மா திட்னாங்களா? ஏன் மேடம்?

 ஊற வெச்சது போன வாரம் சண்டே



==================


15  டியர், என் காதுக்கு இனிப்பான ஒரு சேதி சொல்லுங்க பார்ப்போம்

 ம், 2 பவுன்ல ஜிமிக்கு வாங்கி கிஃப்ட் பண்றேன்


===============


16  டியர், கர்ச்சீஃபோ , பேனாவோ யாருக்காவது பரிசாக்குடுத்தா அவங்களுடனான தொடர்பு முறிஞ்சிடுமாம்

அடடா, இந்த டெக்னிக் எனக்கு இத்தனை நாளா தெரியாம போச்சே?


==================


17 டியர்.உங்க கனவுல நான் வர்றேனா?


நீயும்


==============

18 மிஸ் விலாசினி.உங்களுக்கு சுகர் இருக்கு.


டாக்டர்.இனி என்ன பண்ண?
சைன் பண்றப்ப விலா"சீனி"னு பண்ணுங்க.நினைவுபடுத்திட்டே இருக்கும்



=============

19 டாக்டர். பொண்ணுங்க பக்கத்துல வந்தாலே கை காலெல்லாம் நடுங்குது..


யோவ்.முதல்ல ஒரு பொண்ணு கிட்டே.சிங்குலர்
அப்புறம் ப்ளூரல்



===============

20

தலைவரே! பாரத் மாதா கி ஜெ சொல்ல  மாட்டீங்களா? ஏன்?


 நான் பாரத் மாதா கி கலைஞர்னு தான் சொல்வேன்.

====================

Monday, April 18, 2016

மித்ரா = ஆர்த்தி? !!

1  நெருங்கிய உறவினர் , நண்பர், தெரிந்தவர் என யார் இறந்தாலும் அந்த இறப்பு நமக்கு ஒரு பயத்தை , பாதுகாப்பின்மையை, கலக்கத்தை உண்டு பண்ணி விடும் 



=================




பாமக வின் திட்டங்கள் அறிவிப்புகள் எல்லாம் நல்லாருக்கு

இதுல சோகம் என்னான்னா இதை அறுவடை பண்ணப்போறது திமுக வும் அதிமுக வும் தான்
=============


3 நீங்கள்.கண்ணால் காண்பது உண்மை அல்ல.உதா மித்ரா என்பது எம் ஆர்த்தி ஆகவும் இருக்கலாம்.MITHRA = ARTHI M





===============




4 பிறந்ததில் இருந்து இன்று வரை எதுவும் சாதிக்கலை.


எந்த வேதமும் சாதிப்பற்று பற்றி போதிக்கலை.
பின் எதற்கு இந்த சாதிக்கொலை?


============

5 நெட் தமிழன்/தமிழச்சி ஸ்கூல் படிக்கும்போது சொல்லாம லீவ் போடுவான், ட்விட்டர்/FB ல எல்லாருக்கும் பத்திரிக்கை வெச்சு லீவ் சொல்றான்



==================




நெட் தமிழன் எதுனா ஒரு மொக்கை தத்துவம் சொல்லிட்டு ஊடால நைசா தன் வயசையும், தனக்கு மேரேஜ் ஆகலைங்கறதையும் பின் குறிப்பா சொல்லிடறான்



==============



7  வீட்டுச்சாப்பாடு = மனைவிக்கு தரும் கிஸ்

ஹோட்டல் சாப்பாடு = காதலிக்குத்தரும் கிஸ்


 பார்சல் வாங்கி வ்ந்து வீட்டில் சாப்பிடுவது-ஃபோனில்கிஸ்




=================




8  அரசியல்தலைவர்கள்புத்திசாலித்தனமாகதொண்டர்களை, மக்களைஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்தொண்டர்கள் அவர்களைமுட்டாள்தனமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். 



================



9  ஜாதிக்கட்சிகளின் வளர்ச்சி வீட்டுக்கு நாட்டுக்கு கேடு தரும்.உயிரைக்கொல்லும்.மது ,புகையை விட ஆபத்தானது ஜாதி வெறி




=============



10 வழக்கமாக வழமையாகப்பேசுவோர்

வழக்கத்துக்கு மாறாகப்பேசவில்லை எனில் வழக்கத்தை மீறி ஏதோ நிகழ்ந்திருக்கிறது என்று பொருள்


============

11 கவிதை ஏதாவது மனசுல தோணுச்சுன்னா உடனே அதை எழுதி போஸ்ட் பண்றவன் சாதாத்தமிழன், பொண்ணுங்க டி எல் வர்ற நேரமாப்பார்த்து போஸ்ட் பண்றவன் நெட் தமிழன்


===============

12 நான் எல்லாம் சின்னப்பையனா இருக்கும்போது இந்த மாதிரி கேனத்தனமான சிறார் சட்டம் இருக்கு-ன்னு தெரியலை. தெரிஞ்சிருந்தா......


============

13 கோழிப்பண்ணையோ, ஈமுப்பண்ணையோ அமலா பால் என்ன பண்ணை வெச்சாலும் இந்த உலகம் அதை அமலா”பால் பண்ணை”ன்னு தான் சொல்லும்


==================

14  பொண்ணுங்க யாராவது ஃபாலோ பேக் பண்ணினா  அடுத்த நொடியே நெட் தமிழன் டகார்னு டி எம்க்கு பாய்ஞ்சுடறான்., 10 நிமிசமாவது வெய்ட் பண்ணி போங்கப்பா, டவுட் வந்துடும்

===============
15  

நெட் தமிழன் பயங்கர புத்திசாலி. இது ஃபேக்  ஐடியா? ஒரிஜினலா?ன்னு ஆம்பளைங்க கிட்டே கேட்கவே மாட்டான். இதான் சாக்குனு பொண்ணு டிஎம்ல கேட்பான்



===================


16 ஒரு ஆக்சன் மூவி யின் ப்ரமோக்களில்  ஹீரோ வின் ஆக்சன் ஸ்டில்கள் மட்டுமே கெத்து காட்டும், செண்ட்டிமெண்ட் ஸ்டில்ஸ் போடுவது க்ரிப்பைக்குறைக்கும்


==================



17 நெட் தமிழன் எப்பவும் பூடகமானவன். ஜம்முன்னு இருக்கேன் மச்சின்னு சொன்னா ஜமுனா கூட கார்னர் சீட்ல உக்காந்து படம் பார்த்துட்டு இருக்கான்னு அர்த்தம்



=================




18   டி எம் வாங்க, ஃப்ரீயா பேசலாம்னு ஒரு பொண்ணு கிட்டே நெட் தமிழன் சொல்லிட்டு இருக்கான், டி எல் ல சார்ஜ் பண்றாங்களா?




================




19 கிரிக்கெட்ல ஃபினிஷிங்க் டச் க்கு மரியாதை அதிகம்

 வாழ்க்கைல ஓப்பனிங்க் டச்க்கு போட்டி அதிகம்


==================
20 அரட்டை ஒன்லி வித் பிரதர்ஸ்-னு  பொண்ணோட பயோ ல போட்டிருக்கறது தெரியாம/படிக்காம நெட் தமிழன் அரை மணி நேரமா  அரட்டை அடிச்ட்டு இருக்கான்


=================

விஜய் மல்லைய்யாவுக்கு பிடி வாரண்ட்

1

அன்பு மணி முதல்வர் ஆக ராம்தாஸ் யாகம் செய்ய முடிவு -செய்தி # யாகம் வளர்த்துனா யோகம்  வரும்னா யாகம் வளர்த்தும் புரோகிதர்கள் டைரக்டா சி எம் ஆகிடுவாங்களே?


==============

2  தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி ஏற்படாமல் போனதற்கு பா.ஜ.க. காரணம் என்று கூறுபவர்கள் காய்ச்சல் வந்தவர்களாக தான் இருப்பார்கள்-பொன்.ராதா # எலக்சன் முடியும் வரை பெரிய தலைவலிதான் எல்லார்க்கும்


==============



3  நீதித்துறை, அதன் நம்பகத் தன்மையை இழந்துவருகிறது' - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தாக்கூர் # நீதிபதியே நீதித்துறையை ”தாக்(கூர்)குறாரே?



================

4  மார்ச் 24 டூ27 வங்கிகளுக்கு 4  நாட்கள் தொடர் விடுமுறை: ஏடி.எம் சேவை முடங்கும் அபாயம் #  எப்படியும் மாசக்கடைசில பேலன்ஸ் இருக்காது,ஜீரோ பேலன்ஸ் தான்

================

5  ஜாதிவெறிக் கொலை.திராவிடக் கட்சிகளுக்கு ஏற்பட்ட தோல்வி.தமிழிசை # பஸ் சை எரிச்சா திராவிடம்.ரயிலை எரிச்சா தேசியம்



=========



6 விக்ஸ் ஆக்சன் -500 எக்ஸ்ட்ரா மருந்து நிறுத்தம்

.பக்கவிளைவு மருந்துகளுக்கு மத்திய அரசு தடை # டூ லேட்.பாரீன் ல எல்லாம் எப்பவோ தடை பண்ணியாச்


=============

7 டி20 போட்டியில் இந்தியாவை பாக் அணி தோற்கடித்தால் நிர்வாண நடனம் -பாக். நடிகை உங்களுக்கு அப்டி ஒரு தர்மசங்கடமான சூழலை தரமாட்டாங்க

============


8

அதிமுக அணியில் இடம் கிடைக்குமா?- ஜெ. அழைப்புக்காக காத்திருக்கும் தமாகா, மமக # ஆனா அதிமுக மடம், ஆகாட்டி தேமுதிக மடம்



===================

9 ஆசிரியை மாணவன் விவகாரம்
பெற்றோருடன் செல்வதாக மாணவன் கூறியதால் வழக்கு முடிந்தது #அடப்பாவி,காரியம் முடிஞ்சதும் காரிகையை கழட்டி விட்டுட்டியே?


============
10

கார்களில் கட்சி கொடியை கட்டக் கூடாது: கட்சியினருக்கு மதுரை ஆட்சியர் உத்தரவு  # அப்டியே  கார் மேல  போர்த்தி விட்ரபோறானுங்க



====================


11  

சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கை: லாரியில் ஓட்டுநருக்கு ஏசி வசதி,  - மத்திய அரசு அறிவிப்பு # அப்டியே ரன்னிங்க்லயே தூங்கிடப்போறாக



==============
12  

இந்த மூக்கை வைத்து கொண்டுதான் உத்தரப் பிரதேச முதல்வரானேன்: அகிலேஷ் யாதவ் நகைச்சுவை # யாரும் நோஸ்கட் பண்ணலையா? இதுவரை




==================


13 

மே.வங்க அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் லஞ்சம் வாங்கிய வீடியோ வெளியானதால் சர்ச்சை: திரிணமூல் காங்கிரஸ் மறுப்பு # பருப்பு  மாதிரி பேசப்படாது, அதான் வீடியோவிலேயே விளக்கமா தெரியுதே?



===================

14  தெலுங்கில் குஷி 2 ம் பாகத்தை ஆரம்பித்தார் எஸ் ஜே சூர்யா,.. தமிழில் விஜய் ஹீரோ! # டைட்டில் விசை?


================




15 ஜெ. வாங்கிய வங்கி கடன் விவரங்களை நாளைக்குள் தாக்கல் செய்ய கர்நாடகாவுக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவு # இதனால் ஜெ வின் வாக்கு வங்கி பாதிக்கும்னு வாதிட வழி இல்லை



==============



16 குதிரை காலை உடைத்த பாஜக எம்எல்ஏ நரகத்தில் எரிய கடவது: திரிஷா சாபம் # ரொம்ப “ஹார்ஸ்”ஷா பேசிட்டாரோ



==============


17 அது நான் கொடுத்த பேட்டி அல்ல.. நான் யாருக்கும் பேட்டி கொடுக்கவில்லை.... மல்லையா # நமக்கு எதையும் கொடுத்துப்பழக்கம் இல்லை, வாங்கிதான் பழக்கம்


=================

18     ஸ்டாலின் - அன்புமணி: இளைஞர்களுக்காக இறங்கி வரும் இணைய தலைவர்கள் # இருவருக்கும் இனி ( எதிர்காலத்தில் -2021) ஏறுமுகம் தான்

================


19 கோடையைத் தணிக்க மினி கேன்.. பெப்ஸி, கோக்க கோலா-வின் 'மெகா பிஸினஸ்' ஐடியா..! # இது மெகா ஃபிளாப் ஆகனும், கோஷாப்பழம், இளநீர், நுங்கு இருக்க கோக் எதுக்கு?


===============

20 விஜய் மல்லைய்யாவுக்கு பிடி வாரண்ட் - செய்தி # போலீஸ் எங்கயும் தேடிட்டு இருக்காதீங்க. அண்ணன் ட்விட்டர்ல தான் இருப்பார்.


================